ஞாயிறு, 22 மார்ச், 2020

ருக் வேதிகளின் பங்குனி மாத அமாவாஸ்யை   தர்பபணம்

23.03.2020 திங்கட்கிழமை           

ஆசமனம்.

அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

கேசவா + தாமோதரா

வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.

ஶூக்லாம் + ஸாந்தயே,

ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்

மமோபாத்த + ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே

விகாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே  சிசிர   ருதௌ  மீன   மாஸே  க்ருஷ்ண  பக்ஷே அமாவாஸ்யாயாம்  புண்யதிதௌ இந்து வாஸர  யுக்தாயாம் பூர்வப்ரோஷ்டபதா நக்ஷ்த்ர யுக்தாயாம், சுப  யோக, சகுனி கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ

ப்ராசீனாவீதி

தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

........கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீணாம்

தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

…............கோத்ராணாம் வஸூருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மது, ஸமத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஶபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்

அமாவாஸ்ய புண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும்.

பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால் துடைத்துக்கொள்ளவும்.

பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும்.

கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்

ஆவாஹந மந்த்ரம்

உஶந்தஸ்த்வா நிதீமஹி உஶந்த : ஸ்மிதீமஹி உஶந்நுஶத ஆவஹ பித்ருந் ஹவிஷே அத்தவே அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்.

ஆஸன மந்த்ரம்

ஆயாந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான் வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.

ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் //

பித்ருவர்க்கம்

......கோத்ரான் ........ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

......கோத்ரான் ........ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

......கோத்ரான் ........ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் இல்லாதவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாத்ருஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாதாமஹவர்க்கம்

.....கோத்ராணாம்........ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

.....கோத்ராணாம்........ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

.....கோத்ராணாம்........ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: மாதுப் பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஞாதாக்ஞாத, வர்க்கத்வய, பித்ரூன், ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3தடவை)

கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளத்திற்குள் அப்ரதிஷிணமாக சுற்றிவிடவும்

மந்த்ரம்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

ப்ரதக்ஷிண மந்த்ரம்

தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம: யாநிகாச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே

ப்ராசீனாவீதி

யதாஸ்தான மந்த்ரம்

உஶந்தஸ்த்வா நிதீமஹி உஶந்த : ஸ்மிதீமஹி உஶந்நுஶத ஆவஹ பித்ருந் ஹவிஷே அத்தவே// அஸ்மாத், கூர்ச்சாத், வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்

மந்த்ரம்

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

மந்த்ரம்

ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர - ஸாத்குன்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததேநமம

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து

பவித்ரத்தை பிரித்துபோட்டுவிட்டு ஆசமனம் செய்யவும்

ஶுபம்
#16_செல்வங்களும்
#அவைகளைப்
#பெரும்_வழிகளும்

16 வகையான செல்வங்கள்

1. புகழ்
2. வெற்றி
3. பணம் (பொன்)
4. இரக்கம்
5. அறிவு
6. அழகு
7. கல்வி
8. நோயின்மை
9. வலிமை
10. நல்விதி
11. உணவு
12. நன் மக்கள்
13. பெருமை
14. இனிமை
15. துணிவு
16. நீண்ட ஆயுள்
16 செல்வங்களைப் பெரும் வழிகள்:

1. #புகழ்

யாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.

2. #வெற்றி

வெற்றி என்பது பிறரை தோற்கடித்து நாம் வெற்றி பெறுவது அல்ல. நம்மை நாமே வெற்றி கொள்வதாகும்.

இன்றைய நிலையை விட நாளைய நிலைமை உயர்த்துவதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

3. #பணம்  (#பொன்)

செழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவைகளில் பணமும், பொன்னும் ஆகும்.அவற்றைப் பெறுவதற்குச் சிறந்த வழிகள் தொழில் செய்வது அல்லது நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பது.

4. #இரக்கம்

இருப்பவர்களுக்கு கொடுக்கிற மனமில்லை. மனமிருப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு ஏதுமில்லை. இது தான் இன்றைய நிலை. அன்பு காட்டுவது, அரவணைப்பிற்கு கூட பணம் கேட்கும் காலம். இருப்பினும் வெகு சிலர் இரக்கம் காட்டி பல ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனைப்போல் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றனர்.

5. #அறிவு

கல்வியும், அறிவும் வேறு வேறு என்று உணர வேண்டும். படித்துத் தெரிந்து கொள்வது கல்வி. அறிவோ பார்த்து, கேட்டு, அனுபவப்பட்டு வருவது. அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும்.

6. #அழகு

பார்த்தவுடன் கவருகின்ற தன்மையை அழகு என்று பெரும்பாலோர் எண்ணிக்கொண்டு சற்று கருப்பாக, குண்டாக இருப்பவர்கள் ‘தாங்கள் அழகில்லையே’ என்று தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்குள் பலவகையான அழகுகள் இருப்பதை தெரிந்துகொண்டால் இந்த மாதிரி தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் வரவே வராது.

சில வகை அழகுகள் இதோ ! குரல் இனிமை, கவரும் பேச்சு, தாளம் போட வைக்கும் பாட்டு, நளினமான நடனம், உடை அழகு, அறிவு, அன்பு, கருணை காட்டுதல் இன்னும் பல.

7. #கல்வி

கல்வி பெரிதாக தேவைபடாவிட்டாலும் அடிப்படை கல்வி மிகமிக அவசியம்.

அதுவும் படித்து மனப்பாடம் செய்யும் ஏட்டுக் கல்வி வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது.

அதோடு செய்முறை பயிற்சி வளமான துணையோடு கையும் கொடுக்கும். வளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.

8. #நோயின்மை

நல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும். ‘நோயின்மை’ ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத பொக்கிஷமாகும். எங்கே நோய் இல்லையோ அங்கே மகிழ்ச்சி பொங்கி வழியும்.

9.  #வலிமை

உடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். வலிமை பெற அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. வெறும் 5 முதல் 10 நிமிடங்களே போதுமானது.

10. #நல்விதி

நல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது.’விதி’ என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல.

நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பது கூட விதியாகும். ஆக விதி என்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதை நமக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொள்வது நமது புத்திசாலித்தனத்தில் இருக்கின்றது.

11. #உணவு

உடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் வேளா வேளைக்கு நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும். உணவு , உடலும் அருவும் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகும்.

12. #நன்_மக்கள்

பொதுவாக குழந்தையாக இருக்கும்போது சூது, வாது ஏதும் தெரிவதில்லை.

தீ ஜுவாலை கூட கவர்ச்சி மிக்க பொருளாகத் தெரியும்.

தீ கங்கு கூட சாப்பிடும் பழமாகத் தெரியும்.

ஆனால் அவர்களை நன்மக்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும் , அவர்களை நன்றாக உபயோகித்துக் கொள்வது மக்கள் கைகளிலும் இருக்கின்றது.

13. #பெருமை

பிறர் பெருமைபட வாழ்தல் ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் சாதனையாகும்.

ஆனால் ‘தற்பெருமை’ என்பது அறவே விரும்பத் தகாததாகும்.

பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்களைச் சுற்றிலும் ஒரு கூட்டம் வெறும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் வேறு பல எதிர்பார்ப்போடும் இருப்பார்கள்.
உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாக தேடி வரும்.

14. #இனிமை

பேச்சில் இனிமை, நன்மைக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

15. #துணிவு

துணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்த செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம்.

16. #நீண்ட_ஆயுள்

மேற்கூறிய எல்லா (16) செல்வங்களை பெற்று விட்டால் நீண்ட ஆயுளுக்கு துணையாய் இருக்கும். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க..

செவ்வாய், 28 ஜனவரி, 2020

யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்
நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.

ஆசமனம் : அச்யுதாய நமஹ: அனந்தாய நமஹ: கோவிந்தாய நமஹ: கேசவா, நாராயண, மாதா, கோவிந்தா, விஷ்ணு, மது ஸுதன, த்ரிவிக்ரம, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ரீஷீகேசா, பத்மநாபா, தாமோதரா..

சுக்லாம், பரதரம், விஷ்ணும், சசி வர்ணம், சதுர்புஜம், ப்ரஸன்ன வதநம், த்யாயேத், ஸர்வ விக்ன உபஷாந்தயே..

ஓம் பூ, ஓம் புவஹ, ஓகும் ஸுவஹ, ஓம் மஹஹ, ஓம் ஜனஹ, ஓம் தபஹ, ஓகும் சத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ, தி யோயோனஹ ப்ரசோதயாத், ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்‌ ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே. ப்ரம்ஹ யக்ஞேன யக்‌ஷயே. வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
ஓகும் ஸுவ: தியோயோந: ப்ர்சோதயாத்.

ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத் ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.

ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம், யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம், ஹோதாரம், ரத்ன தாதமம், ஹரி:ஓம் ஹரி:ஓம் இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம். ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம். ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு. கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி. இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம: ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும்.

வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.

உப வீதி -------- பூணல் வலம். கட்டைவிரல் வழியாக ஒரு முறை தீர்த்தம் விடவும்.

ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.
ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.

நிவீதி … பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.
சுண்டி விரல் பக்கமாக உள்ளங்கையை சாய்த்து இரண்டு முறை ரிக் சொல்லி தீர்த்தம் விடவும்.

க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி, தான் ரிஷீம்ஸ் தர்பயாமி
ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி, ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி, ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி, ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி, ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி
ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி, ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி, ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி
அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி, அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி, விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி

உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் ஒரு முறை தீர்த்தம் விடவும்.

ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.
வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
ஹவ்ய வாஹம் தர்பயாமி.

நிவீதி ----- பூணல் மாலை. சுண்டி விரல் பக்கமாக கையை சாய்த்து இரண்டு முறை தீர்த்தம் விடவும்.

விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.

உபவீதி பூணல் வலம். நுனி விரலால் ஒரு முறை தீர்த்தம் விடவும்.

விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி
அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
ஸதஸஸ்பதீம் தர்பயாமி
ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி
அதர்வண வேதம் தர்பயாமி
இதிஹாஸ புராணம் தர்பயாமி
கல்பம் தர்பயாமி

ப்ராசீணாவீதி --------- பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் மூன்று முறை தீர்த்தம் விடவும்.

ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி, தான் பித்ரூன் தர்பயாமி, தான் பித்ரூன் தர்பயாமி

ஸர்வான் பித்ரூன் தர்பயாமி, ஸர்வான் பித்ரூன் தர்பயாமி, ஸர்வான் பித்ரூன் தர்பயாமி

ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி, ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி, ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி,

ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி, ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி, ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி

ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி, ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி,
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி

ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..

உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..

ஓம் தத்ஸத்... 

திங்கள், 27 ஜனவரி, 2020

*68 - ஸ்ரீ ராமபிரானும் - ஸ்ரீ  மஹாபெரியவாளும்*
 #ராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா

1. பிரம்மாவின் மகன் - மரீசீ
2. மரீசீயின் மகன் - கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் - விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன் - மனு
5. மனுவின் மகன் - இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் - விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன் - புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா
9. அணரன்யாவின் மகன் - ப்ருது
10. ப்ருதுவின் மகன் - விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் - ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் - யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் - ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் - வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் - குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் - ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன் - ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் - நிகும்ப்
20. நிகும்பின் மகன் - சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் - ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் - யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் - மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் - அம்பரீஷா
26. அம்பரீஷாவின் மகன் - ஹரிதா
27. ஹரிதாவின் மகன் - த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் - ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன் - அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் - ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் - வஸுமான்
33. வஸுமாவின் மகன் - த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் - த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் - திரிசங்கு
36. திரிசங்கு வின் மகன் - ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் - ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் - ஹரித்
39. ஹரித்தின் மகன் - சன்சு
40. சன்சுவின் மகன் - விஜய்
41. விஜயின் மகன் - ருருக்
42. ருருக்கின் மகன் - வ்ருகா
43. வ்ருகாவின் மகன் - பாஹு
44. பாஹுவின் மகன் - சாஹாரா
45. சாஹாராவின் மகன் - அசமஞ்சன்
46. அசமஞ்சனின் மகன் - அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் - திலீபன்
48. திலீபனின் மகன் - பகீரதன்
49. பகீரதனின் மகன் - ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் - நபக்
51. நபக்கின் மகன் - அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் - சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன் - ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் - ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் - சர்வகாமா
56. சர்வகாமாவின் மகன் - ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் - மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன் - சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் - அனன்ரண்யா 3
60. அனன்ரண்யாவின் மகன் - நிக்னா
61. நிக்னாவின் மகன் - ரகு
62. ரகுவின் மகன் - துலிது
63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு 2
65. ரகுவின் மகன் - அஜன்
66. அஜனின் மகன் - தசரதன்
67. தசரதனின் மகன் 
68. **ஸ்ரீ ரகு ராமன்**

இப்படி 68 பரம்பரை கொண்டது.

ஸ்ரீராமரின் குல வம்சத்தை பற்றி அறிவதே  பெரும் புண்ணியம்!!! #ஜெய் ஶ்ரீராம்

நமக்கெல்லாம் மூன்று தலை முறை தெரிந்தாலே பெரிசு.
இதில் விசேஷம் - ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா 68வது பீடாதிபதியாக மடத்தை அலங்கரித்தார்.

ஸ்ரீ ராமபிரான் சிவனின் அம்சமும் கூடிய பரம புருஷோத்தமன்... பரமேஸ்வரன் பரம வைஷ்ணவன். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா அடிக்கடி கூறியதோ ராம நாம மஹிமையை பற்றி. என்ன ஒரு திருவிளையாடல்..
✌ ராம் ராம் ✌

புதன், 22 ஜனவரி, 2020

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்;

1. அஸ்வினி

ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம:
கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

செவ்வாய், 21 ஜனவரி, 2020

*நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்கனுமா மயிலாப்பூருக்கு வாங்க!*

சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவக்கிரகத்தோடு தொடர்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது இதன் விசேஷமாகும். *இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும்.* இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை.

இந்த ஏழு கோயில்களுமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

*1. ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர்கோயில் (சூரியன் ஸ்தலம்)*

மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் முதலில் வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சன்னிதியும் சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்தபோது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது. இத்தலத்து இறைவன் ஆத்ம காரகன் சூரியனின் அம்ஸமாக திகழ்கிறார்.

*2. ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் (சந்திரன் ஸ்தலம்)*

மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.

*3. ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் (செவ்வாய் ஸ்தலம்)*

'மயிலாப்பூரின் காவல் தெய்வம்' என்று கூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். இராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்திலிருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். ஸ்ரீ ராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுச் சென்றதாக கருத்து நிலவுகிறது.

*4. ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம்)*

மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலையில்) காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்திருக்கோயில் இறைவனான மரகதவல்லி சமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை புதன் கிழமைகளில் வழிபட புத கிரக தோஷங்கள் விலகும்.

*5. ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் (குரு ஸ்தலம்)*

இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது. வசிஷ்ட முனிவர் வழிப்பட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார் அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து ஈசன் நவக்கிரகங்களில் தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாகத் திகழ்கிறார், இவரை வியாழக் கிழமைகளில் வணங்கிவரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். மேலும் செல்வச் செழிப்பு ஏற்படும்.

*6. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் (சுக்கிர ஸ்தலம்)*

மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரியத் திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.

வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாகத் தலவரலாறு. எனவே, ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். *வெள்ளீஸ்வரரை 'கண் டாக்டர்' என்றே கொண்டாடுகிறார்கள்.* மேலும் சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும்.

*7. ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் (சனி ஸ்தலம்)*

மயிலையின் சப்த சிவதலங்களில் மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் முதலில்  தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாகத் தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. நவக்கிரகங்களில் ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சமாக கபாலீஸ்வரர் அமைந்திருக்கிறார். 

எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான். இத்தலத்து ஈசன் கபாலம் மற்றும் எலும்பிற்கு அதிபதியாக இருக்கிறார். மேலும் அஸ்தியிலிருந்து பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழாவில் எட்டாம் நாளில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி எலும்பில் இருந்து பூம்பாவை எனும் பெண்ணை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. உலகில் கலிதோஷம் பெருகிவிட்டதனாலோ என்னவோ தற்போது திருமயிலையின் சிவதலங்களில் முதன்மையாகத் திகழ்வது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சனி கிழமைகளில் வணங்கி வர ஆயுள் தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஸ்தலம் திருக்கடையூர் மற்றும் திருபைஞ்ஞீலி ஸ்தலங்களைப் போல் ஆயுள் வளர்க்கும் ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

நவக்கிரக ஸ்தலங்கள் என கூறிவிட்டு ராகுவையும் கேதுவையும் விட்டுவிட்டீர்களே எனக் கேட்பது காதில் விழுகிறது! ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் தானே. அவர்களுக்கு தனி வீடு கிடையாதல்லவா?

*8. அருள்மிகு முண்டக கண்ணியம்தான் (ராகு ஸ்தலம்)*

திருமயிலையின் மருத்துவச்சி எனப் போற்றப்படும் முண்டகண்ணியம்மனே ராகுவின் அம்சமாக திகழ்கிறாள். கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்துசென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணலாம். அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால் மாதவ பெருமாள் திருக்கோயிலின் பின்புறம் அமைந்திருக்கிறது. இங்குள்ள புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது மருத்துவத்திற்கு ராகுவின் அருள் இருக்க வேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

*9. அருள்மிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்)*

துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் கூறப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாக திகழ்கிறாள். காரணீஸ்வரர், விருபாக்‌ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம். இந்த அம்மனை வணங்கி வர அனைத்து தடைகளும் நீங்கும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.

10. சென்னையின் சிறப்பு மிக்க  திருமயிலையில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ளது தன்னிகர் இல்லா திருத்தலம் அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயில். அடியார்கள் எல்லோரும் மக்கள் நன்மை பெற்றிட வேண்டும் என்று எண்ணற்ற தத்துவங்களை இறைவனிடம் பெற்று மக்களுக்கு வழங்கி உள்ளனர். அவற்றுள் ஞான தெளிவு பெற்றிடல் என்பது மிகவும் தனிப்பெருமை வாய்ந்தது அவ்வாறு ஞானவைராக்கிய அடைந்திட சித்தர்களை வழிபட வேண்டியது அவசியம் ஆகின்றது.

சைவ அடியார்களுள் ஒருவரான  ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில்  பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம சீடரான  திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம் அண்டு அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார். பிறகு அவற்றைத் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். பொதுவாக ஜீவ சமாதிகள் பிரம்ம சமாதிகள் பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் மூர்த்திகளுக்கு விஸ்வநாதர், என்னும் அம்பாள் சன்னதிகளில் இருக்கும் அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள் விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள்பாலித்து வருகின்றார். காசியைப் போன்றே இத்தலத்திலும் பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், *"மயிலையே கயிலை கயிலையே மயிலை"* என்ற சிறப்பைப் பெற்றது போலும். வரும் திங்கள் கிழமை சிவராத்திரி நாளில் ஏழு சிவன் கோயில்கள் மற்றும் இரண்டு அம்மன் கோயில்கள் இவற்றோடு அப்பர் ஸ்வாமி கோயிலுக்கும் சென்று தரிசித்து நவக்கிரகங்களை மட்டுமல்லாது சப்த விடங்க ஸ்தலங்கள், அட்ட வீரட்டான ஸ்தலங்களை தரிசித்த பலனைப் பெறுவோம்.*நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்கனுமா மயிலாப்பூருக்கு வாங்க!*

இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், *"மயிலையே கயிலை கயிலையே மயிலை"* என்ற சிறப்பைப் பெற்றது போலும். வரும் திங்கள் கிழமை சிவராத்திரி நாளில் ஏழு சிவன் கோயில்கள் மற்றும் இரண்டு அம்மன் கோயில்கள் இவற்றோடு அப்பர் ஸ்வாமி கோயிலுக்கும் சென்று தரிசித்து நவக்கிரகங்களை மட்டுமல்லாது சப்த விடங்க ஸ்தலங்கள், அட்ட வீரட்டான ஸ்தலங்களை தரிசித்த பலனைப் பெறுவோம்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

கணுப்பிடி வைத்தேன் காக்காப்பிடி வைத்தேன்...

கணுபிடியும் காக்கப்பிடியும் கலந்து நான் வைத்தேன்.

மஞ்சள் இலையை விரிச்சு வைத்தேன்.

பார்த்து வைத்தேன் நிரப்பி வைத்தேன்.

பச்சை இலையில் பரப்பி வைத்தேன்.

மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வைத்தேன்.

காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம் சொல்லி வைத்தேன்.

கலர் கலராகசாதம் வைத்தேன்.

கரும்பு துண்டு கலந்து வைத்தேன்.

வகைவகையாக சாதம் வைத்தேன்.

வத்தலை பாக்கு சேர்த்து வைத்தேன்.

வாழைப்பழம் சேர்த்து வைத்தேன்.

அண்ணன் தம்பி குடும்பமெல்லாம் அமோகமாய் வாழ அழகாக வைத்தேன்.

கூட்டு பொரியல் அவியல் வைத்தேன்.

கூட்டு குடும்பமாய் வாழ வைத்தேன்.

தூபம் தீபம் காட்டி வைத்தேன்.

கற்பூரம் ஏந்தி வைத்தேன்.

கடவுளை வணங்கி வைத்தேன்.

ஆண்டவனை வேண்டி வைத்தேன்.

குருவை நம்பி நினைத்து வைத்தேன்.

ஆர்த்தி எடுத்து காட்டி வைத்தேன்.

காக்கை கூட்டம் போல் எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க கணுப்பிடி வைத்தேன்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்,திருவல்லிக்கேணி
பகுதி – 2

பக்தியோடு திருவல்லிக்கேணி திருத்தல வரலாற்றை படித்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஓம் தமிழ் நாள்காட்டி அன்பர்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள். அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி தோன்றிய அற்புதங்களை சென்ற பகுதியில் நாம் அறிந்து கொண்டோம். இனி இத்தலத்தில் உள்ள சன்னதிகளில் காலத்தால் முற்பட்ட அருள்மிகு மனநாதன் சுவாமி (அரங்கநாதர்) தோன்றிய வரலாற்றை இனி காண்போம்.

திருவல்லிக்கேணி திருத்தலத்தில் பரந்தாமனான திருமால் ஐந்து வடிவங்களில் ஐந்து சன்னதிகளில் தனித்தனியாக சேவை சாதிக்கிறார். அருள்மிகு வேங்கடகிருஷ்ணன் (பார்த்தசாரதி)அருள்மிகு மனநாதர் (அரங்கநாதர்),அருள்மிகு இராமபிரான்,அருள்மிகு கஜேந்திர வரதர், அருள்மிகு தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்).அதில் மனநாதராகிய அரங்கநாதர் சன்னதி மட்டுமே மிகப் தொன்மையானது.

தலைக்குறிப்பு

மூலவர் :மனநாதன் சுவாமி
உற்சவர் :மனநாதன் சுவாமி
தாயார் :வேதவல்லி தாயார்
ஆகமம் :வைகானசம்
தீர்த்தம் :கைரவணீ புஷ்கரணி
புராணப்பெயர் :விருந்தாரன்ய செத்திரம்
ஊர் :திருவல்லிக்கேணி

ஒரு சமயம் திருப்பாற்கடலில் பரந்தாமனுக்கும் திருமகளுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டது.இதன் காரணமாக திருமகள் பரந்தாமனைப் பிரிந்து பூலோகம் வந்தாள். அப்பொழுது விருந்தாரண்யத்தில் தவம் செய்து கொண்டிருந்த பிருகு,அத்திரி, மரீசி,மார்க்கண்டேயன்,சுமதி, சப்தரோமா,சாலி ஆகிய முனிவர்களுக்கு எதிரே ஒரு சந்தன மரத்தின் அடியில் குழந்தை வடிவில் தோன்றினாள்.அந்த தெய்வீக குழந்தையைக் கண்ட பிருகு முனிவர் திருமகளே குழந்தை வடிவில் வந்துற்றாள் என்பதை அறிந்து, அக்குழந்தையை தனது குடிலுக்கு எடுத்துச்சென்று பரிவுடன் வளர்த்து வந்தார்.வேதவல்லி என்று முனிவரால் பெயர் சூட்டப்பெற்ற அக்குழந்தை வளர்ந்து கன்னிப் பருவத்தை அடைந்தாள்.வேதவல்லியாகிய திருமகள் தன்னை வந்தடையும் காலம் நெருங்கியதை உணர்ந்த பரந்தாமன் பேரழகோடு ஒரு அரசகுமாரனின் வடிவில் பூமியில் அவதரித்தார்.பிருகு முனிவரின் குடிலுக்குச் சென்று பெண் கேட்கவே வந்திருப்பவர் பரந்தாமனான நாராயணனே என்பதை பிருகு முனிவர் ஞானத்தால் உணர்ந்தார்.அவரும் இதை மனமார ஏற்றுக்கொள்ள ஒரு மாசிமாதம் சுக்லபட்ச துவாதசியன்று திருமாலுக்கும் வேதவல்லித் தாயாருக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்போது பிருகு முனிவர் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருக்கோலத்தில் வேதவல்லித் தாயாரோடு இத்தலத்திலேயே நிரந்தரமாக காட்சி தரும்படி வேண்டினார்.திருமாலும் அவ்வாறே செய்ய திருவுள்ளம் கொண்டார்.இதைக்கண்டு மனம் மகிழ்ந்த அன்னை வேதவல்லித் தாயார் திருமாலை மனநாதன் என்று அழைத்ததால் இத்தல இறைவனுக்கு மனநாதன் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.மனநாதன் என்பதற்கு வடமொழியில் என் நாயகன் என்று பொருள்.மனநாதன் என்ற பெயர் மருவி மந்நாதர் என்று ஆனது.

இவ்வாலயத்தில் அருள்மிகு மனநாதன் சுவாமியின் பிராட்டியான அருள்மிகு வேதவல்லித் தாயார் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்.கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்ற கோயில்களில் தாயாருக்கென்று தனி சன்னதி அமைக்கும் வழக்கம் இல்லை.மேலும் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் ஐந்து மூர்த்திகளின் சன்னதிகளையும் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் தாயாரைப் பற்றி பாடாமல் விடுகிறார்.ஆகையால் தாயார் சன்னதி கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு பின்னரே அமைக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

வரலாற்றுத்தொன்மை:இத்திருக்கொவிலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.இக்காலத்தில் உள்ள கோயில் அமைப்புக்கும் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் கோயில் அமைப்புக்கும் வேறுபாடு இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.பேயாழ்வாரின் பாசுரங்கள் மற்றும் கல்வெட்டுச் சான்று ஆகியவற்றைக் கொண்டு ஆராய்ந்ததில் மந்நாதராகிய அரங்கநாதர் சன்னதி மட்டுமே பழமையானது என்பது அறிய முடிகிறது.மேலும் பேயாழ்வாரின் சீடரான திருமழிசை ஆழ்வாரும் அருள்மிகு மந்நாதர் சுவாமியை மட்டுமே மங்களாசாசனம் செய்துள்ளார்.கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஐந்து சன்னதிகளும் இடம் பெற்று சிறந்திருந்துள்ளன.அக்காலத்தில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் ஐந்து சன்னதிகளையும் மங்களாசாசனம் செய்துள்ளார்.மேலும் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் தொண்டை நாட்டை ஆண்ட தந்திவர்மப் பல்லவன் இக்கோவிலுக்கு பலதிருப்பனிகள் செய்துள்ளான் என்பதும் கல்வெட்டுச் செய்தி மூலமாக அறிய முடிகிறது.

திருவல்லிக்கேணி தலத்தைப் பற்றி பேயாழ்வார் திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரும் பாசுரம் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்.அவர்களில் காலத்தால் முற்பட்ட பேயாழ்வார், மூன்றாம் திருவந்தாதியில் 16ம் பாசுரத்தில் பாடியுள்ளார்.

வந்துதைத்த வெண்திரைகள் செம்பவளம் வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்
திருவல்லிக்கேணியான் சென்று.
(பேயாழ்வார்)

இப்பாசுரத்தில் தாமரை மலரில் உறையும் திருமகளை மார்பில் தரித்துள்ளார் என்று மட்டும் குறிப்பிடுகிறாரே தவிர ஐந்து மூர்த்திகளில் யாருடைய திருநாமத்தையும் சொல்லாமல் விடுகிறார்.ஆனால் தலத்தின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.எனவே பேயாழ்வார் ஐவரில் யாரைப் பற்றி பாடியுள்ளார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பேயாழ்வாருக்குப் பின் வந்த திருமழிசையாழ்வார் இத்தலத்தை நான்முகன் திருவந்தாதியில் 35ம் பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

தாளால் உலகம் அளந்த அசைவேகொல்
வாளாகிடந்துருளும் வாய்திறவான்
நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்
ஐந்தலைவாய் நாகத்தணை?
(திருமழிசையாழ்வார்)

இப்பாசுரத்தில் ஐந்து வாய்களை உடைய நாகத்தில் கிடந்து அருள்கின்றான் என்று குறிப்பிட்டுள்ளத்தால் அருள்மிகு அரங்கநாதர் கோலத்தில் சயனித்துள்ள மனநாதர் என்று பாடியுள்ளதால் அருள்மிகு மனநாதன் சுவாமி சன்னதியே காலத்தால் முற்பட்டது என்பதை அறிய முடிகிறது.திருமழிசையாழ்வார் சயனத் திருக்கோலத்தை மட்டும் பாடியுள்ளதால் அவர் இவ்வாலயத்திற்கு தரிசிக்க வந்தபோது மற்ற நான்கு சன்னதிகள் இல்லாமல் இருந்திருக்கலாம்.பின்னாளில் வந்த திருமங்கையாழ்வார் அனைவரையும் பாடியுள்ளதால் மற்ற சன்னதிகள் பின்னாளில் தான் தோன்றி யிருக்கக்கூடும் என்பது உறுதியாகிறது.

திருமால் கோவில் கொண்டுள்ள அணைத்து திருத்தலங்களிலும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று பரந்தாமனான நாராயணன் பரமபதவாசல் செவை தந்தருள்வது வழக்கம்.அவ்விழாவில் உற்சவமூர்த்தி பரமபதவாசல் வழியாக எழுந்தருளி நம்மாழ்வாருக்கு எதிர் சேவை தந்தருள்வார்.இவ்வைபவம் இவ்வாலயத்திலும் ஆண்டுதோறும் மிகச்சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.

பரமபதவாசல் சேவை என்பது வாசல் திருக்கும் போது சேவிப்போம்.பிறகு மூலவரை சேவித்து பின் பரமபதவாசல் வழியாக வந்து உற்சவரை சேவிப்போம்.ஆனால் இவ்வாலயத்தில் மற்றொரு சிறப்பும் உண்டு. பரமபதவாசல் திறந்திருக்கும் போதெல்லாம் அருள்மிகு மணநாதர் சுவாமியை செவிக்கும் வண்ணம் ஆலயம் அமைந்துள்ளது.

பரமபதவாசலுக்கு நேர் எதிரில் பலகணி எனப்படும் கல் ஜன்னல் வழியாக ஆதிசேசன் மீது பள்ளி கொண்டிருக்கும் அருள்மிகு மனநாதன் சுவாமியை செவிக்கும் வண்ணம் ஆலயம் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.இவ்வாறு பல பெருமைகளை உள்ளடக்கிய பார்த்தசாரதி திருக்கோயில் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமெனில் சற்று காத்திருக்கத்தான் வேண்டும்
சப்த கந்த கோட்பாடுகள்

ஏழு கந்த கோட்பாடுகள்:

நாதகந்தம்

பிரவேஷகந்தம்

பூரிதகந்தம்

அந்தர் சுஷூம்னா கந்தம்

அபிலாட்ச சங்கம கந்தம்

கிரகபதார்த்த கந்தம்

அனலேஷூ கந்தம்

மேற்சொன்ன இந்த சப்தகந்தங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் உன்னதமானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றன. மனிதனின் ஆற்றல், சக்தி போன்றவைகளை இவை குறிப்பதோடு அவற்றால் பல சமயங்களில் மனிதனுக்கு ஏற்படும் பலமாறுதல் நிலைகளையும் சுட்டிக்காட்டுகிறது. அவைகள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்வோம்.

நாதகந்தம் : இது மனிதனை மனிதனாக்கக் கூடியது. அவன் பெற வேண்டிய பரிபூரண, பக்குவ உயர்ந்த நிலைகளுக்கு இறைப் பகுத்தறிவு ஒன்றே மூல காரணம்.

பிரவேஷ கந்தம்: இது ஜீவன்களின் அறிவை ஐந்தறிவு நிலைவரை மேம்படுத்தி நுண்புல உணர்வுகளை நிலைபெறச் செய்வதாகும். மனித சக்தியால் செய்ய முடியாத காரியங்களை எல்லாம் மிக அற்புதமாக செய்து முடிக்கும் ஆற்றல் உடையது இது.

பூரித கந்தம்: நியாயமான, முறையான மனித விருப்பங்களை இந்தச் சக்தியின் மூலம் பெறலாம்.

அந்தர்ஷூம்னா கந்தம்: இது மனித உள்ளத்தில் எழும் ஆசைகளை முறைப்படுத்தி, நிலைப்படுத்தி, தயாராக்கித் தரக்கூடியதாகும்.

அபிலாட்ச சங்கம கந்தம்:  இது மனிதனின் அபிலாக்ஷைகளை (விருப்பங்களை) முறையாகப் பரிணமிக்கச் செய்து அதனைக் காரியசித்தியாக்க உதவுகிறது.

கிரகபதார்த்த கந்தம்: ஊழ்வினை காரணமாக மனிதன் செயலற்றிருப்பதைத் தக்க பரிகாரம், பிராயச்சித்தம் மூலம் சீர்ப்படுத்திக் காரிய சித்திக்குத் துணை புரிகிறது இது.

அனலேக்ஷூ கந்த கந்தம்:  பகைமை, விரோதம், குரோதம், பொறாமை காரணமாக வாழ்வின் லட்சியம் சீர்குலையாமல் பாதுகாத்து சமய சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மனிதனைச் செயல்பட வைக்கிறது இது.

சனி, 4 ஜனவரி, 2020

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்,திருவல்லிக்கேணி
                                             {பகுதி:1}

திருவரங்கம் திருவேங்கடம் காஞ்சிபுரம் திருஅயோத்தி திருஅகோபிலம் ஆகிய ஐந்து திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வண்ணம் அமையப்பெற்ற அற்புதத்தலம்.108 வைணவ திவ்ய தேசங்களில் பெருமாள் மீசையுடன் காட்சியளிக்கும் அழகியத் திருத்தலம். கிழக்கு, மேற்கு ஆகிய இரண்டு வாயில்களில் இரண்டு மூர்த்திகள் முதல் மூர்த்தியாக சேவை சாதிக்கும் புண்ணியத் தலம். ஸ்ரீபெரும்புதூர் மாமுனி உடையவர் இராமானுஜர் என்னும் எதிராஜரை இந்த பூமிக்கு தந்தருளிய பெருமாள் குடிகொண்டுள்ள ஒப்பற்ற தலம்.108 வைணவ திவ்ய தேசங்களில் 60வது திருத்தலம். பேயாழ்வார் திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்த திருத்தலம். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் போலவே ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும் சிறந்ததொரு திருத்தலம். இவ்வாறு ஏராளமான பெருமைகளையும் மகிமைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும்.

திருவட்டாறு திருசிற்றாறு ஆகிய தலங்களைப் போலவே தீர்த்தத்தின் பெயரால் பெருமை பெற்ற தலங்களில் திருவல்லிக்கேணியும் ஒன்று.இத்தல தீர்த்தத்திற்கு கைரவணீஎன்று பெயர்.கைரவம் என்பதற்கு செவ்வல்லி என்பது பொருள்.புராண காலத்தில் இத்தீர்த்தத்தில் செவ்வல்லி மலர்கள் பூத்துக் குலுங்கிய காரணத்தால் தமிழில் அல்லிக்குளம் என்றும் வடமொழியில் கைரவணி என்றும் குறிப்பிட்டனர்.பிற்காலத்தில் அல்லிக்கேணி என்ற பெயரில் இத்தலம் அழைக்கப்பட்டது.திருமால் குடிகொண்டுள்ள அல்லிக்கேணி என்பதால் இவ்விடம் திருவல்லிக்கேணி எனப் பெயர் பெற்றது.

திருவல்லிக்கேணி திருத்தலத்தில் பரந்தாமனான திருமால் ஐந்து வடிவங்களில், ஐந்து சன்னதிகளில் தனித்தனியாக சேவை சாதிக்கிறார்.

அருள்மிகு வேங்கடகிருஷ்ணன் (பார்த்தசாரதி),
அருள்மிகு மனநாதர் (அரங்கநாதர்),
அருள்மிகு இராமபிரான்,
அருள்மிகு கஜேந்திர வரதர்,
அருள்மிகு தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்).

இந்த ஐந்து மூர்த்திகளின் கருவறைகள் மீதும் ஆனந்த விமானம் பிரணவ விமானம் புஷ்பக விமானம் சேஷ விமானம் தைவீக விமானம் ஆகிய ஐந்து விமானங்கள் அமைந்துள்ளன. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வண்ணம் அமையப் பெற்றது மிகச்சிறந்த ஒன்றாகும். அதில் மனநாதராகிய அரங்கநாதர் சன்னதி மட்டுமே மிகப் தொன்மையானது.

தலைக்குறிப்பு:
மூலவர் :வேங்கடகிருஷ்ணன்
உற்சவர் :பார்த்தசாரதி
தாயார் :ருக்மணி தாயார்
ஆகமம் :வைகானசம்
தீர்த்தம் :கைரவணீ புஷ்கரணி
புராணப்பெயர் :விருந்தாரன்ய செத்திரம்
ஊர் :திருவல்லிக்கேணி

பார்த்தசாரதி வரலாறு:பகவான் கண்ணன் துவாபரயுகத்தின் முடிவில் கிருஷ்ணாவதாரம் எடுத்த நோக்கம் முடிவுற்றதும் வைகுண்டம் செல்கிறார்.அப்போது கலியுகம் தோன்றுவதற்கான தூர்நிமித்தங்கள் ஏற்படுகின்றன.கலியின் கொடுமையால் பூமியில் அதர்மங்கள் தழைத்தோங்கும் என்பதை அறிந்த ஆத்ரேய மகரிசி தனது குருவான வியாச மகரிசியை சந்தித்து, நல்லவர்கள் கலியின் கொடுமையிலிருந்து விடுபட்டு உய்யும் வகையைக் கூறுமாறு வேண்டினார்.

அப்போது வியாசர் அதுவரை தாம் ஆராதித்து வந்த "பார்த்தசாரதி பெருமாளின்" திருமேனி உருவத்தைத் தந்து தென் பாரதத்தில் துளசிவனம் நிறைந்து காணப்படும் விருந்தாரன்யத்தில் உள்ள (ரங்கநாதர்)மனநாதன் திருக்கோயிலில் வைத்து ஆகம முறைப்படி வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் ஏற்படும் என்றார்.திருவல்லிக்கேணி தலம் அமைந்துள்ள பகுதி புராண காலத்தில் விருந்தாரண்யம் என்று அழைக்கப்பட்டது.அதன்படியே ஆத்ரேய மகரிசியும் விருந்தாரண்யம் வந்து அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியின் திருவுருவத்தை வைத்து வழிபாடு செய்து வந்தார்.கலியின் கொடுமையிலிருந்து பூமியைக் காக்கும் பொருட்டு பார்த்தசாரதி சுவாமியை இங்கு வைக்கப்பட்டதால் அன்றுமுதல் இக்கோவிலில் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியே முதன்மையான கடவுளாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர்.

வேங்கடவன் திருநாமம்:பிற்காலத்தில் துண்டீரம் என்ற நாட்டை சுமதி என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான்.துண்டீரம் என்பதே துண்டீர மண்டலம் என ஆகி அதுவே திரிந்து பிற்காலத்தில்"தொண்டை மண்டலம்"ஆயிற்று என்பர்.அரசன் சுமதி திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள திருவேங்கடமுடையான் மீது தீவிர பக்தி கொண்டு வழிபட்டு வந்தான்.

இவ்வரசனுக்கு பார்த்தனுக்கு
(அர்ச்சுனனுக்கு) சாரதியாக
(தேரோட்டியாக) விளங்கிய கிருஷ்ணன் திருக்கோலத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனவே சுமதி தனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு ஏழுமலையானான திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டினான்.அவன் பக்திக்கு மனமிறங்கிய "ஏழுமலையான் வெங்கடேசர்" அவன் கனவில் தோன்றி விருந்தாரண்யம் சென்றால் விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார்.அதன்படியே மன்னன் சுமதி விருந்தாரண்யம் வந்து ஆத்ரேய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டு வந்த அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோலத்தைக் கண்டு மனம் குளிர சேவித்தான்.திருமலையில் உள்ள வேங்கடநாதனே இங்கு கிருஷ்ணனாக காட்சி தருவதைப்போல உணர்ந்தான். எனவே "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தான். அன்று முதல் இன்று வரை இத்திருக்கோயில் மூலவருக்கு "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் இத்தளத்தின் மீது பத்து பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். திருமங்கையாழ்வார் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியை பெரிய திருமொழி பகுதியில், இரண்டாம் பத்து, மூன்றாம் திருமொழியில் அழகாக பாடியுள்ளார்.

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை புரமெரி செய்த
சிவனுரு துயர்களை தேவை பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்
திருவல்லிக்கேணி கண்டேனே.
(திருமங்கையாழ்வார்)

திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சுவாமி தமது குடும்பத்துடன் காட்சியளிக்கிறார். ஒரே கருவறையில் பகவான் தமது உறவினர்களுடன் காட்சியளிக்கும் திருக்கோலத்தை "பஞ்ச வீர வழிபாட்டு மரபு" என்று அழைப்பது வழக்கம். இதுபோன்ற அமைப்பு திருத்தங்கல் (89வது திவ்யதேசம்)திருநறையூர் என்னும் நாச்சியார்கோவில்(14வது திவ்யதேசம்)தேரழுந்தூர் (23வது திவ்யதேசம்)ஆகிய திவ்யதேசங்களில் காணப்படுகின்றன.

கருவறையில் மூலவர் அருள்மிகு வேங்கட கிருஷ்ணன், நின்ற திருக்கோலத்தில் இரண்டே திருக்கரங்களுடன் வலது கரத்தில் "பாஞ்ச சன்யம்"என்னும் சங்கை ஏந்தி இடதுகரம் வேங்கடவனைப் போன்று கீழ் முகமாக நோக்கி தான முத்திரையைக் காட்டுகிறது. மேலும் இடுப்பின் மேல்புறம் பேரொளி வீசும் வாள் ஒன்று தொங்குகிறது.

மகாபாரதத்தில் கண்ணபிரான் யுத்தத்தின் போது ஆயுதம் எடுப்பதில்லை என்று துரியோதனனிடம் சபதம் செய்தார். பிறகு வாள் ஏன் உள்ளது? என்ற கேள்வி எழக்கூடும்.இதற்கு வைணவப் பெரியவர்கள் பகவத்கீதையில் நான்காம் அத்தியாயம் 42வது சுலோகத்தில் உள்ளதைக் கொண்டு விளக்கம் அளிக்கின்றனர்.

அஞ்ஞானத்தின் பிடியில், அதாவது உலகப் பற்றில் அடைபட்டுக் கிடந்த பார்த்தனிடம் அஞ்ஞானத்திலிருந்து பிறந்ததும் உள்ளத்தில் உறைவதும் ஆகிய இந்த பற்றிலிருந்து விடுபட ஞானமென்னும் வாளால் வெட்டி, யோகத்தில் நிலைபெறுக! பார்த்தா எழுந்திரு! என்று கூறுகிறார். நம்மைப் போன்ற சாதாரண மக்களிடம் ஏற்படக்கூடிய அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுவதரற்க்காகவே பகவான் இத்தலத்தில் ஞானவாளுடன் சேவை சாதிப்பதாக வைணவப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

பெருமாளுக்கு வலதுபுறம் "ருக்மணி பிராட்டி" அழகிய திருமேனியோடு காட்சி தருகின்றார்.

பெருமாளுக்கு இடதுபுறம் தம்பி சாத்தகி கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகின்றார். சாத்தகி தனது வலது கரத்தில் கட்கம் என்ற குறுவாளை ஏந்தியும், இடது கரத்தில் வரத முத்திரையை காட்டியும் சேவை சாதிக்கிறான்.

சாத்தகி எவ்வாறு கண்ணனுக்கு தம்பி முறை ஆகவேண்டும் என்பதற்கு மகாபாரதத்தில் சில குறிப்புகள் உள்ளன. கண்ணனின் தாயார் தேவகியின் சுயம்வரத்தின் போது ஏராளமான அரசர்கள் வந்தனர். மதுராபுரியின் அரசகுமாரரான வசுதேவருக்காக அவரது சகோதரன் “சினி” என்பவன், சுயம்வரத்தில் கலந்து கொண்ட அணைத்து அசுரர்களையும் வென்று வசுதேவரை தேவகிக்கு மனம் முடித்து வைத்தான். இந்த சினியின் மகனே சத்யகன். சத்யகன் மகனே சாத்தகி. எனவே விருட்னி குலத்து வீரனான சாத்தகி கண்ணனுக்கு தம்பிமுறை ஆகிறான்.

ருக்மணி பிராட்டிக்கு வலதுபுறமாக கண்ணனின் தமையனான பலராமர் கலப்பையுடன் வடக்கு நோக்கியவாறு காட்சி தருகின்றார்.

சாத்தகிக்கு அடுத்ததாக மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோர் தெற்கு நோக்கியவாறு காட்சி தருகின்றனர்.

ஒருமுறை சிவபெருமான் மன்மதனை தனது நெற்றிக்கண்ணால் எரித்து விடுகிறார். இந்த மன்மதன் கண்ணனுக்கும், ருக்மணி பிராட்டிக்கும் மகனாகப் பிறக்கின்றான். பேரழகு வாய்ந்த பிரத்யும்னன், சம்பராசுரனின் அரண்மனையில் வசித்து வந்த ரதிதேவியின் அம்சமான மாயாவதி என்பவளைத் திருமணம் செய்கிறான். பிரத்யும்னன் மாயாவதி தம்பதியர்கட்கு பிறந்தவனே அநிருத்தன்.இவன் கண்ணனின் பேரன் ஆவான்.

இதுவரை நாம் திருவல்லிக்கேணி திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள ஐந்து மூர்த்திகளில் ஒருவரான அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி தோன்றிய வரலாற்றை மட்டுமே ஆரிந்துள்ளோம். முழு வரலாற்றையும் அறிந்துகோள்ள இன்று ஒரு நாள் போதுமா?

தொடரும்
தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம்

ஶ்ரீ தேவீ ப்ரார்தன
ஹ்ரீம்காராஸனகர்பிதானலஶிகாம் ஸௌஃ க்லீம் களாம் பிப்ரதீம்
ஸௌவர்ணாம்பரதாரிணீம் வரஸுதாதௌதாம் த்ரினேத்ரோஜ்ஜ்வலாம் |
வம்தே புஸ்தகபாஶமம்குஶதராம் ஸ்ரக்பூஷிதாமுஜ்ஜ்வலாம்
த்வாம் கௌரீம் த்ரிபுராம் பராத்பரகளாம் ஶ்ரீசக்ரஸம்சாரிணீம் ||

அஸ்ய ஶ்ரீ ஶுத்தஶக்திமாலாமஹாமம்த்ரஸ்ய, உபஸ்தேம்த்ரியாதிஷ்டாயீ வருணாதித்ய றுஷயஃ தேவீ காயத்ரீ சம்தஃ ஸாத்விக ககாரபட்டாரகபீடஸ்தித காமேஶ்வராம்கனிலயா மஹாகாமேஶ்வரீ ஶ்ரீ லலிதா பட்டாரிகா தேவதா, ஐம் பீஜம் க்லீம் ஶக்திஃ, ஸௌஃ கீலகம் மம கட்கஸித்த்யர்தே ஸர்வாபீஷ்டஸித்த்யர்தே ஜபே வினியோகஃ, மூலமம்த்ரேண ஷடம்கன்யாஸம் குர்யாத் |

த்யானம்
ஆரக்தாபாம்த்ரிணேத்ராமருணிமவஸனாம் ரத்னதாடம்கரம்யாம்
ஹஸ்தாம்போஜைஸ்ஸபாஶாம்குஶமதனதனுஸ்ஸாயகைர்விஸ்புரம்தீம் |
ஆபீனோத்தும்கவக்ஷோருஹகலஶலுடத்தாரஹாரோஜ்ஜ்வலாம்கீம்
த்யாயேதம்போருஹஸ்தாமருணிமவஸனாமீஶ்வரீமீஶ்வராணாம் ||

லமித்யாதிபம்ச பூஜாம் குர்யாத், யதாஶக்தி மூலமம்த்ரம் ஜபேத் |

லம் – ப்றுதிவீதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை கம்தம் பரிகல்பயாமி – னமஃ
ஹம் – ஆகாஶதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை புஷ்பம் பரிகல்பயாமி – னமஃ
யம் – வாயுதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை தூபம் பரிகல்பயாமி – னமஃ
ரம் – தேஜஸ்தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை தீபம் பரிகல்பயாமி – னமஃ
வம் – அம்றுததத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை அம்றுதனைவேத்யம் பரிகல்பயாமி – னமஃ
ஸம் – ஸர்வதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை தாம்பூலாதிஸர்வோபசாரான் பரிகல்பயாமி – னமஃ

ஶ்ரீ தேவீ ஸம்போதனம் (1)
ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌஃ ஓம் னமஸ்த்ரிபுரஸும்தரீ,

ன்யாஸாம்கதேவதாஃ (6)
ஹ்றுதயதேவீ, ஶிரோதேவீ, ஶிகாதேவீ, கவசதேவீ, னேத்ரதேவீ, அஸ்த்ரதேவீ,

திதினித்யாதேவதாஃ (16)
காமேஶ்வரீ, பகமாலினீ, னித்யக்லின்னே, பேரும்டே, வஹ்னிவாஸினீ, மஹாவஜ்ரேஶ்வரீ, ஶிவதூதீ, த்வரிதே, குலஸும்தரீ, னித்யே, னீலபதாகே, விஜயே, ஸர்வமம்களே, ஜ்வாலாமாலினீ, சித்ரே, மஹானித்யே,

திவ்யௌககுரவஃ (7)
பரமேஶ்வர, பரமேஶ்வரீ, மித்ரேஶமயீ, உட்டீஶமயீ, சர்யானாதமயீ, லோபாமுத்ரமயீ, அகஸ்த்யமயீ,

ஸித்தௌககுரவஃ (4)
காலதாபஶமயீ, தர்மாசார்யமயீ, முக்தகேஶீஶ்வரமயீ, தீபகலானாதமயீ,

மானவௌககுரவஃ (8)
விஷ்ணுதேவமயீ, ப்ரபாகரதேவமயீ, தேஜோதேவமயீ, மனோஜதேவமயி, கள்யாணதேவமயீ, வாஸுதேவமயீ, ரத்னதேவமயீ, ஶ்ரீராமானம்தமயீ,

ஶ்ரீசக்ர ப்ரதமாவரணதேவதாஃ அணிமாஸித்தே, லகிமாஸித்தே, கரிமாஸித்தே, மஹிமாஸித்தே, ஈஶித்வஸித்தே, வஶித்வஸித்தே, ப்ராகாம்யஸித்தே, புக்திஸித்தே, இச்சாஸித்தே, ப்ராப்திஸித்தே, ஸர்வகாமஸித்தே, ப்ராஹ்மீ, மாஹேஶ்வரீ, கௌமாரி, வைஷ்ணவீ, வாராஹீ, மாஹேம்த்ரீ, சாமும்டே, மஹாலக்ஷ்மீ, ஸர்வஸம்க்ஷோபிணீ, ஸர்வவித்ராவிணீ, ஸர்வாகர்ஷிணீ, ஸர்வவஶம்கரீ, ஸர்வோன்மாதினீ, ஸர்வமஹாம்குஶே, ஸர்வகேசரீ, ஸர்வபீஜே, ஸர்வயோனே, ஸர்வத்ரிகம்டே, த்ரைலோக்யமோஹன சக்ரஸ்வாமினீ, ப்ரகடயோகினீ,

ஶ்ரீசக்ர த்விதீயாவரணதேவதாஃ காமாகர்ஷிணீ, புத்த்யாகர்ஷிணீ, அஹம்காராகர்ஷிணீ, ஶப்தாகர்ஷிணீ, ஸ்பர்ஶாகர்ஷிணீ, ரூபாகர்ஷிணீ, ரஸாகர்ஷிணீ, கம்தாகர்ஷிணீ, சித்தாகர்ஷிணீ, தைர்யாகர்ஷிணீ, ஸ்ம்றுத்யாகர்ஷிணீ, னாமாகர்ஷிணீ, பீஜாகர்ஷிணீ, ஆத்மாகர்ஷிணீ, அம்றுதாகர்ஷிணீ, ஶரீராகர்ஷிணீ, ஸர்வாஶாபரிபூரக சக்ரஸ்வாமினீ, குப்தயோகினீ,

ஶ்ரீசக்ர த்றுதீயாவரணதேவதாஃ அனம்ககுஸுமே, அனம்கமேகலே, அனம்கமதனே, அனம்கமதனாதுரே, அனம்கரேகே, அனம்கவேகினீ, அனம்காம்குஶே, அனம்கமாலினீ, ஸர்வஸம்க்ஷோபணசக்ரஸ்வாமினீ, குப்ததரயோகினீ,

ஶ்ரீசக்ர சதுர்தாவரணதேவதாஃ ஸர்வஸம்க்ஷோபிணீ, ஸர்வவித்ராவினீ, ஸர்வாகர்ஷிணீ, ஸர்வஹ்லாதினீ, ஸர்வஸம்மோஹினீ, ஸர்வஸ்தம்பினீ, ஸர்வஜ்றும்பிணீ, ஸர்வவஶம்கரீ, ஸர்வரம்ஜனீ, ஸர்வோன்மாதினீ, ஸர்வார்தஸாதிகே, ஸர்வஸம்பத்திபூரிணீ, ஸர்வமம்த்ரமயீ, ஸர்வத்வம்த்வக்ஷயம்கரீ, ஸர்வஸௌபாக்யதாயக சக்ரஸ்வாமினீ, ஸம்ப்ரதாயயோகினீ,

ஶ்ரீசக்ர பம்சமாவரணதேவதாஃ ஸர்வஸித்திப்ரதே, ஸர்வஸம்பத்ப்ரதே, ஸர்வப்ரியம்கரீ, ஸர்வமம்களகாரிணீ, ஸர்வகாமப்ரதே, ஸர்வதுஃகவிமோசனீ, ஸர்வம்றுத்யுப்ரஶமனி, ஸர்வவிக்னனிவாரிணீ, ஸர்வாம்கஸும்தரீ, ஸர்வஸௌபாக்யதாயினீ, ஸர்வார்தஸாதக சக்ரஸ்வாமினீ, குலோத்தீர்ணயோகினீ,

ஶ்ரீசக்ர ஷஷ்டாவரணதேவதாஃ ஸர்வஜ்ஞே, ஸர்வஶக்தே, ஸர்வைஶ்வர்யப்ரதாயினீ, ஸர்வஜ்ஞானமயீ, ஸர்வவ்யாதிவினாஶினீ, ஸர்வாதாரஸ்வரூபே, ஸர்வபாபஹரே, ஸர்வானம்தமயீ, ஸர்வரக்ஷாஸ்வரூபிணீ, ஸர்வேப்ஸிதபலப்ரதே, ஸர்வரக்ஷாகரசக்ரஸ்வாமினீ, னிகர்பயோகினீ,

ஶ்ரீசக்ர ஸப்தமாவரணதேவதாஃ வஶினீ, காமேஶ்வரீ, மோதினீ, விமலே, அருணே, ஜயினீ, ஸர்வேஶ்வரீ, கௌளினி, ஸர்வரோகஹரசக்ரஸ்வாமினீ, ரஹஸ்யயோகினீ,

ஶ்ரீசக்ர அஷ்டமாவரணதேவதாஃ பாணினீ, சாபினீ, பாஶினீ, அம்குஶினீ, மஹாகாமேஶ்வரீ, மஹாவஜ்ரேஶ்வரீ, மஹாபகமாலினீ, ஸர்வஸித்திப்ரதசக்ரஸ்வாமினீ, அதிரஹஸ்யயோகினீ,

ஶ்ரீசக்ர னவமாவரணதேவதாஃ ஶ்ரீ ஶ்ரீ மஹாபட்டாரிகே, ஸர்வானம்தமயசக்ரஸ்வாமினீ, பராபரரஹஸ்யயோகினீ,

னவசக்ரேஶ்வரீ னாமானி த்ரிபுரே, த்ரிபுரேஶீ, த்ரிபுரஸும்தரீ, த்ரிபுரவாஸினீ, த்ரிபுராஶ்ரீஃ, த்ரிபுரமாலினீ, த்ரிபுரஸித்தே, த்ரிபுராம்பா, மஹாத்ரிபுரஸும்தரீ,

ஶ்ரீதேவீ விஶேஷணானி – னமஸ்காரனவாக்ஷரீச மஹாமஹேஶ்வரீ, மஹாமஹாராஜ்ஞீ, மஹாமஹாஶக்தே, மஹாமஹாகுப்தே, மஹாமஹாஜ்ஞப்தே, மஹாமஹானம்தே, மஹாமஹாஸ்கம்தே, மஹாமஹாஶயே, மஹாமஹா ஶ்ரீசக்ரனகரஸாம்ராஜ்ஞீ, னமஸ்தே னமஸ்தே னமஸ்தே னமஃ |

பலஶ்ருதிஃ
ஏஷா வித்யா மஹாஸித்திதாயினீ ஸ்ம்றுதிமாத்ரதஃ |
அக்னிவாதமஹாக்ஷோபே ராஜாராஷ்ட்ரஸ்யவிப்லவே ||

லும்டனே தஸ்கரபயே ஸம்க்ராமே ஸலிலப்லவே |
ஸமுத்ரயானவிக்ஷோபே பூதப்ரேதாதிகே பயே ||

அபஸ்மாரஜ்வரவ்யாதிம்றுத்யுக்ஷாமாதிஜேபயே |
ஶாகினீ பூதனாயக்ஷரக்ஷஃகூஷ்மாம்டஜே பயே ||

மித்ரபேதே க்ரஹபயே வ்யஸனேஷ்வாபிசாரிகே |
அன்யேஷ்வபி ச தோஷேஷு மாலாமம்த்ரம் ஸ்மரேன்னரஃ ||

தாத்றுஶம் கட்கமாப்னோதி யேன ஹஸ்தஸ்திதேனவை |
அஷ்டாதஶமஹாத்வீபஸம்ராட்போக்தாபவிஷ்யதி ||

ஸர்வோபத்ரவனிர்முக்தஸ்ஸாக்ஷாச்சிவமயோபவேத் |
ஆபத்காலே னித்யபூஜாம் விஸ்தாராத்கர்துமாரபேத் ||

ஏகவாரம் ஜபத்யானம் ஸர்வபூஜாபலம் லபேத் |
னவாவரணதேவீனாம் லலிதாயா மஹௌஜனஃ ||

ஏகத்ர கணனாரூபோ வேதவேதாம்ககோசரஃ |
ஸர்வாகமரஹஸ்யார்தஃ ஸ்மரணாத்பாபனாஶினீ ||

லலிதாயாமஹேஶான்யா மாலா வித்யா மஹீயஸீ |
னரவஶ்யம் னரேம்த்ராணாம் வஶ்யம் னாரீவஶம்கரம் ||

அணிமாதிகுணைஶ்வர்யம் ரம்ஜனம் பாபபம்ஜனம் |
தத்ததாவரணஸ்தாயி தேவதாப்றும்தமம்த்ரகம் ||

மாலாமம்த்ரம் பரம் குஹ்யம் பரம் தாம ப்ரகீர்திதம் |
ஶக்திமாலா பம்சதாஸ்யாச்சிவமாலா ச தாத்றுஶீ ||

தஸ்மாத்கோப்யதராத்கோப்யம் ரஹஸ்யம் புக்திமுக்திதம் ||

|| இதி ஶ்ரீ வாமகேஶ்வரதம்த்ரே உமாமஹேஶ்வரஸம்வாதே
   தேவீகட்கமாலாஸ்தோத்ரரத்னம் ஸமாப்தம் ||