வெள்ளி, 20 செப்டம்பர், 2019

"ஸ்வஸ்தி வாசனம்"
|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார- த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித- ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத- ஸ்ரீமதேகாம்ரநாத- ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத- ஸாக்ஷாத்கார- பரமாதிஷ்ட்டான- ஸத்யவ்ரத நாமாங்கித- காஞ்சீ திவ்யக்ஷேத்ரே- சாரதாமட ஸுஸ்த்திதாநாம்- அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ- ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த- துந்துலித- மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத- சாந்தி தாந்தி பூம்நாம்- ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக- ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம்- நிகில பாஷண்ட ஷண்ட- கண்டகோத்காடநேந- விசதீக்ருத வேத வேதாந்த மார்க- ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய- ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே- ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம்- அந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம்- ததந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

நம் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யர்களை இந்த ஸ்வஸ்தி வாசன ஸ்லோகம் பாராயணம் செய்து வணங்குதல் என்பது நம் பாரம்பரியம் என்கின்றனர் நம் பெரியோர்கள். வாழ்வில் ஒருமுறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.
12:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

12:ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-1
                   (கி.பி.172-கி.பி.235)

ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-1, பாலாற்றங்கரையிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். இவருக்கு வாத்ஸ்யாயன கோத்திரம். தந்தை பெயர் ஸ்ரீ வத்ஸபட்டர். பெற்றோர் இவருக்கு வைத்த நாமதேயம் ஹரி. இவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதியிடம் ஸ்ரீ மட நிர்வாகத்தை ஒப்படைத்து 'சார்வ பௌம' என்னும் சிறப்பான யோக நிஷ்டையைக் கடைபிடித்தவர். கி.பி.235 ஆம் ஆண்டு ஆனந்த வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷ நவமியன்று சேஷாசலத்திலுள்ள ஒரு குகையில் மறைந்தருளி அழியாப் பேரானந்தம் அடைந்தவர்.

வியாழன், 19 செப்டம்பர், 2019

இந்த சம்பவம் சுமார் எழுபத்தைந்து வர்ஷங்களுக்கு முன் நடந்தது.

பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர் காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து சில விஷயங்களை சொல்லும் போது தான் ஒருவரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார்.அப்போது மகனுக்கே 62 வயது.கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.சம்பளமோ 15 ரூபாய்தான்.அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வர்ஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார்.இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பாவுக்கு கடன் குடுத்தவர் யாரென்றே தெரியாது!சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது?

மஹாபெரியவா-திக்கற்றவருக்கு தெய்வமே துணை!ஓடினார் பெரியவாளிடம்!விவரத்தை சொன்னார்.

“மடத்ல ஒரு நாள் தங்கு”உத்தரவானது.மறுநாள் காலை பெரியவா அவரிடம்“இங்கேர்ந்து நேரா…நீ ஆலத்தம்பாடி கிராமத்துக்கு போ!அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா இருக்கும் வீட்ல இருக்கறவர்கிட்டதான் ஒங்கப்பா கடன் வாங்கினார்.ஆலத்தம்பாடி அக்ரஹாரத்தில் பெரியவா சொன்ன வீட்டுக்கு சென்றால்..ஆச்சர்யம்!அந்த வீட்டுப் பெரியவர் காலகதி அடைந்துவிட்டார். அவருடைய மகனிடம் விஷயத்தை சொன்னதும் அவருக்கு ஒரே வியப்பு!“எங்கப்பாவும் செத்துப் போகும்போது சில விஷயங்கள்லாம் சொன்னார்...ஆனா உங்கப்பாவுக்கு குடுத்த கடன் பத்தின விஷயத்தை சொல்லவேயில்லையே!அதுனால இந்த பணத்தை நான் வாங்கிக்க மாட்டேன்” திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.அவரையும் அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தார். ரெண்டுபக்கத்து ஞாயத்தை கேட்டதும் பெரியவா முகத்தில் புன்னகை.“இங்கதான் தர்மம் இருக்கு. இன்னொர்த்தர் சாமானை வாங்கறப்போ…நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.ஆனா அதை திருப்பித் தரணும்னா…யோசிப்போம்!அதுனால கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை. இங்க, ஒங்க ரெண்டு பேரோட விவகாரம் எப்டி?வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்…குடுத்தவரோட பிள்ளையோ அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால வாங்கிக்க மாட்டேங்கறார்…ஆனா தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா?அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான்.ரெண்டு பேரும் காமாக்ஷி கோவிலுக்கு போய் இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ!அது அவளோட பணம்”ஆசீர்வாதம் பண்ணினார்.
ஸ்வாமினாத இந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் {பாலு அண்ணா }

ஸ்ரீ பெரியவாளுக்கு அடிக்கடி மார் வலி வரும். அதற்காக நான் ஐயப்ப ஸ்வாமியிடம் வேண்டிக்கொண்டேன். ஐயப்பன் என்ற ஸ்வாமியை பற்றி ஒன்றுமே தெரியாது எனக்கு. ஆனால் மயிலை கபாலி கோவிலில் நிறைய பக்தர்கள் கறுப்பு வேஷ்டி கட்டிக் கொண்டு ஸ்ரீ ஐயப்பனை தரிசனம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஐயப்ப தரிசனத்தால் உடல் உபாதை நீங்கும் என்ற படியால் சபரி மலை செல்ல நினைத்து பெரியவாளிடம்  அனுமதி பெற்று புறப்பட்டேன். முதலில் பெரியவா சத்தம் போட்டார் உனக்கு என்ன தெரியும்?அப்பா,தாத்தா யராவது போயிருக்காளா என்று கோபமாக கேட்டார். இல்லை உங்களுக்கு உடம்பு தேவலையாவதற்காக என்றதும் சரி என அனுமதி அளித்தார். தன் கழுத்தில் இருந்த மாலை ஒன்றை கழற்றிக் கொடுத்தார். ஒரு துண்டு ஒன்றையும் கொடுத்தா பெரியவா. நீ ப்ரம்மச்சாரி இந்த வெள்ளை வேஷ்டியோடேயே போகலாம் என்றும் அருளினார். மலையில் சத்தம் போடுவார்கள். மலை ஏறியதும் இந்த சிகப்புத் துண்டை கட்டிக் கொள் என்று ஒரு துண்டையும் கொடுத்தா. வெறுங்கையுடன் போகக் கூடாது தேங்காயும் நெய்யும் எடுத்துக்கொண்டு போ என அருளினார். நாகராஜ ஐயர் காரில் நான் ஏறும் சமயம் ஏய் பாலு என்ன சாப்பிட எடுத்துண்டாய்? என ஒரு தாய் அன்புடன் கேட்டார். பெரியவா என்ன சொல்றேளோ எடுத்துக்கறேன் என்றேன்.
நூறு எலுமிச்சம் பழம் பையில் போட்டு எடுத்துண்டு அதையே  அப்பபோ சாப்பிடு. ஸ்வாமி தரிசனம் முடியும் வரை இது தான் உன் ஆகாரம். முதலில் இரண்டு நாள் பல் கூசும் அப்பறம் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி அனுப்பினார்.
நானும் அவர் சொன்ன மாதிரியே செய்து அங்கு தேங்காய் உடைத்து தரிசனம் செய்தேன். அங்கு மேல்சாந்தி என்ற தலைமை பூசாரிக்கு எல்லாரும் ஐந்து, பத்து தக்ஷிணை போட்டு நமஸ்கரித்தார்கள். நான் மட்டும் நூறு ரூபாய் போட்டதால் என்னை அவர் ஸ்வாமி எந்த ஊர் என்று கேட்டார். நான் காஞ்சீபுரம் என்றதும் பெரிய திருமேனி எப்படி இருக்கார். எனக் கேட்டார். கேட்டது பெரியவாளை பத்தி..நான் சௌக்யமாக  இருப்பதாகக் கூறவும் அவரால் தான் நாம் இப்போ வெள்ளமோ, பூகம்பமோ இல்லாமல் சுபிட்க்ஷமாக இருக்கோம் என்றார். பெரியவாளுக்கு ப்ரசாதம் கேட்டேன். அவர்பெரிய பாட்டிலில் இருந்த இரண்டு கிலோ நெய்யை அபிஷேகம் செய்து கூடவே விபூதியையும் வைத்து பெரியவாளுக்குக் கொடுத்தார். என் நமஸ்காரத்தை அவருக்கு சொல் என்றார். நீ அந்த பெரியவா திரு மேனியை விடாதே அவர் ஈச்வர அவதாரம் அவர் சன்னிதியிலே இரு நகராதே அவருடன் இருப்பதாக சத்யம் செய்து கொடு என்று என்னிடம் சத்யம் வாங்கிக் கொண்டார்.

திரும்பி வருகையில் எர்ணாகுளம் வந்து ஒரு வக்கீல் வீட்டில் தங்கி சாப்பிட்டு விட்டு நாங்கள் அவருடைய அம்மா வீட்டுக்குப் சென்றோம். பெரியவாளிடமிருந்து வந்திருப்பதால் என்னைப்  பார்க்க விரும்பியதால் அங்கும் சென்றேன். அந்த அம்மா என்னிடம் பெரியவா பற்றி நிறைய பேசி ஏய் நீ ராம ஐய்யர் மாமாவைப் பார்க்காமல் போகக் கூடாது என்று சொன்னதால் அங்கும் சென்றேன். அவருக்கு தொண்ணூறு வயசிருக்கும். அங்கு போனதும் யாரு பாலுவா? யார் அவன்? என்று கேட்டார். நான் பெரியவா கிட்டேருந்து வந்திருக்கேன் என்று சொன்னதும் ஆஹா! பெரியவாகிட்டேர்ந்தா? என்று துள்ளி என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தார். நான் எனக்குப் போய் நமஸ்காரம் செய்கிறீர்களே என பதைப்புடன் கேட்டவுடன் டேய் இது உனக்கு இல்லை...அந்த பகவானுக்குச் செய்தேன் என்றார். பெரியவா நம்மை போல்  சாப்பிட்டுத் தூங்கிர ஒரு மனுஷன்னு நினைக்காதே. அவர் சாக்ஷாத் பரமேச்வரன்...டா என்றார். அவர் கையில் சங்கு,சக்கரம், பாதத்தில் சக்கரம், சிரஸில் சந்திரன் எல்லாம் இருக்கு... பாத்தியா? ஸ்ரீ சக்கரவர்த்திரேகை
பார்த்திருக்கியா? என்றார். இல்லை பார்த்ததில்லை நீ தஞ்சாவூர் காரனாச்சே...பார்த்ததில்லையா? நான் பார்த்திருக்கேன்... இது வரை யாரிடமும் சொல்லாத விஷயம் சொல்றேன்...கேட்டுக்கோ...பெரியவா இங்கு நாற்பது நாள்கள் தங்கியிருந்தார். தினசரி விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்திருந்து அனுஷ்டான ஜபம் முடித்து ஸ்னானம் செய்து பூஜை செய்து...பிக்ஷை முடிந்து சாயரக்ஷை கோவில்  சென்று உபன்யாஸம் நிகழ்த்தி இரவு 12 மணிக்குத்தான்
படுக்கப் போவார். இப்படி 40 நாட்கள். எனக்கு தாள் வில்லை. ஒரு நாள் கைகூப்பி அவர் முன் நின்றேன். நான் ஒன்று சொல்லணும் ஆனால் சொல்ல தயக்கமாக இருக்கு என்றேன். நான் சிங்கம் புலி இல்லை சொல் தைரியமாக என்றார். பெரியவா தினம் மூணு மணிக்கு எழுந்து படுக்க இரவு பன்னெண்டு மணி ஆகிவிடுகிறது. உங்களுக்கு ஒரு நாள் மங்கள ஸ்னானம்  செய்து வைக்க ஆசை எனக்கு... நீங்கள் குருவாயூரப்பன் அவதாரம்... உங்களுக்கு அபிஷேகம் பண்ண எனக்கு ஆசை என்றேன். ஒஹோ உனக்கு அப்படி ஒரு ஆசையா... சரி
சனிக்கிழமை எண்ணை கொண்டு வா என்றார். அதன் படி சென்றேன். மிளகு துளசி போட்டுக் காய்ச்சிய எண்ணையை தலையில் வைத்த போது தான் தெரிந்தது சிரஸில் சக்கர ரேகை. கையில் காலில் சக்கரவர்த்தி ரேகை... பார்த்து விட்டு அப்படியே நமஸ்காரம் செய்தேன். அவர் ஈச்வரன்தான் என்பதில் சந்தேகம் இல்லை... நீ அவருடனேயே இரு... இதை எல்லாம் நான் ஊர் திரும்பியதும் பெரியவாளிடம் சொன்னேன். உடனே பெரியவா தண்டத்தை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டுஎழுந்து நின்ற கோலம் சாக்ஷாத் பரமேச்வரன் சூலம் தாங்கி நின்றது போல் இருந்தது! இன்னும் என்ன சொன்னார்? என்றார் பெரியவா?
பெரியவா நடக்க வேண்டாம் காலில் இருக்கும் ரேகைகள் அழிந்து விடும் என்றும் சொன்னார். உங்களுக்கு எண்ணை தேய்த்து விடுபவர்களுக்கு நீங்கள் ரேகைகள், சக்கரங்களைக் காண்பிக்கிறீர்கள் எங்களுக்கும் அருளக்கூடாதா? (சதா தாங்களே கதி  என்றிருக்கும் எங்களுக்கு )என்று நான் கேட்டதும் எனக்கும் அந்த பாக்யம் கிட்டியது! தலையை நன்றாகப் பார்த்துக்கொள் மூன்று சுழி சிரஸின் மேல் ! சரி நீங்கள் இனி நடக்கக் கூடாது என்றதும் சின்னக் குழந்தை போல் சரி என்று கலவையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். நடக்க வேண்டாம்  என்றால் 30 கிலோ மீட்டர் நடந்து வருகிறீர்களே? என் குரு நாதர் பிறந்த நாள் அதனால் வந்தேன்... இனி நீ சொல்லும் வரை இங்கேயே இருப்பேன் என்று அதன் படி மூன்று வருஷம் அங்கேயே தங்கினார்.

ஸ்வாமினாத இந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {பாலு அண்ணா }
சொன்னது தாயுமானவன் மூன்றாம் பகுதியில்...

ஜய ஜய சங்கரா....
சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே
கூறிவிட்டது.  நன்றி மணிகண்டன் சிவராமன்
|| ஶ்ரீக₃ணேஶப்ராத:ஸ்மரணம் ||

ப்ராத: ஸ்மராமி க₃ணனாத₂மனாத₂ப₃ந்து₄ம்ʼ
ஸிந்தூ₃ரபூரபரிஶோபி₄தக₃ண்ட₃யுக்₃மம் |
உத்₃த₃ண்ட₃விக்₄னபரிக₂ண்ட₃னசண்ட₃த₃ண்ட₃-
மாக₂ண்ட₃லாதி₃ஸுரனாயகவ்ருʼந்த₃வந்த்₃யம் || 1||

ப்ராதர்னமாமி சதுரானனவந்த்₃யமான-
மிச்சா₂னுகூலமகி₂லம்ʼ ச வரம்ʼ த₃தா₃னம் |
தம்ʼ துந்தி₃லம்ʼ த்₃விரஸனாதி₄பயஜ்ஞஸூத்ரம்ʼ
புத்ரம்ʼ விலாஸசதுரம்ʼ ஶிவயோ: ஶிவாய || 2||

ப்ராதர்ப₄ஜாம்யப₄யத₃ம்ʼ க₂லு ப₄க்தஶோக-
தா₃வானலம்ʼ க₃ணவிபு₄ம்ʼ வரகுஞ்ஜராஸ்யம் |
அஜ்ஞானகானனவினாஶனஹவ்யவாஹ-
முத்ஸாஹவர்த₄னமஹம்ʼ ஸுதமீஶ்வரஸ்ய || 3||

ஶ்லோகத்ரயமித₃ம்ʼ புண்யம்ʼ ஸதா₃ ஸாம்ராஜ்யதா₃யகம் |
ப்ராதருத்தா₂ய ஸததம்ʼ ய: படே₂த்ப்ரயத: புமான் || 4||

|| இதி ஶ்ரீக₃ணேஶப்ராத:ஸ்மரணம் ||
॥ श्रीगणेशपञ्चरत्नस्तोत्रम् ॥

मुदाकरात्तमोदकं सदाविमुक्तिसाधकं
कलाधरावतंसकं विलासिलोकरञ्जकम् ।
अनायकैकनायकं विनाशितेभदैत्यकं
नताशुभाशुनाशकं नमामि तं विनायकम् ॥ १॥

नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरं
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम् ।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् ॥ २॥

समस्तलोकशङ्करं निरस्तदैत्यकुञ्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम् ।
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् ॥ ३॥

अकिञ्चनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनं
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम् ।
प्रपञ्चनाशभीषणं धनञ्जयादिभूषणं
कपोलदानवारणं भजे पुराणवारणम् ॥ ४॥

नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम् ।
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम् ॥ ५॥

महागणेश्पञ्चरत्नमादरेण योऽन्वहं
प्रगायति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम् ।
अरोगतामदोषतां सुसाहितीं सुपुत्रतां
समाहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात् ॥ ६॥

।। इति श्रीमच्छङ्करभगवद्पाद कृतं श्रीगणेशपञ्चरत्नस्तोत्रं सम्पूर्णम् ॥
॥ शिवापराध क्षमापनस्तोत्र ॥

आदौ कर्मप्रसङ्गात्कलयति कलुषं मातृकुक्षौ स्थितं मां
विण्मूत्रामेध्यमध्ये कथयति नितरां जाठरो जातवेदाः ।
यद्यद्वै तत्र दुःखं व्यथयति नितरां शक्यते केन वक्तुं
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ १॥

बाल्ये दुःखातिरेको मललुलितवपुः स्तन्यपाने पिपासा
नो शक्तश्चेन्द्रियेभ्यो भवगुणजनिताः जन्तवो मां तुदन्ति ।
नानारोगादिदुःखाद्रुदनपरवशः शङ्करं न स्मरामि
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ २॥

प्रौढोऽहं यौवनस्थो विषयविषधरैः पञ्चभिर्मर्मसन्धौ
दष्टो नष्टोऽविवेकः सुतधनयुवतिस्वादुसौख्ये निषण्णः ।
शैवीचिन्ताविहीनं मम हृदयमहो मानगर्वाधिरूढं
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ३॥

वार्धक्ये चेन्द्रियाणां विगतगतिमतिश्चाधिदैवादितापैः
पापै रोगैर्वियोगैस्त्वनवसितवपुः प्रौढहीनं च दीनम् ।
मिथ्यामोहाभिलाषैर्भ्रमति मम मनो धूर्जटेर्ध्यानशून्यं
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ४॥

नो शक्यं स्मार्तकर्म प्रतिपदगहनप्रत्यवायाकुलाख्यं
श्रौते वार्ता कथं मे द्विजकुलविहिते ब्रह्ममार्गेऽसुसारे ।
ज्ञातो धर्मो विचारैः श्रवणमननयोः किं निदिध्यासितव्यं
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ५॥

स्नात्वा प्रत्यूषकाले स्नपनविधिविधौ नाहृतं गाङ्गतोयं
पूजार्थं वा कदाचिद्बहुतरगहनात्खण्डबिल्वीदलानि ।
नानीता पद्ममाला सरसि विकसिता गन्धधूपैः त्वदर्थं
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ६॥

दुग्धैर्मध्वाज्युतैर्दधिसितसहितैः स्नापितं नैव लिङ्गं
नो लिप्तं चन्दनाद्यैः कनकविरचितैः पूजितं न प्रसूनैः ।
धूपैः कर्पूरदीपैर्विविधरसयुतैर्नैव भक्ष्योपहारैः
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ७॥

ध्यात्वा चित्ते शिवाख्यं प्रचुरतरधनं नैव दत्तं द्विजेभ्यो
हव्यं ते लक्षसङ्ख्यैर्हुतवहवदने नार्पितं बीजमन्त्रैः ।
नो तप्तं गाङ्गातीरे व्रतजननियमैः रुद्रजाप्यैर्न वेदैः
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ८॥

स्थित्वा स्थाने सरोजे प्रणवमयमरुत्कुम्भके (कुण्डले) सूक्ष्ममार्गे
शान्ते स्वान्ते प्रलीने प्रकटितविभवे ज्योतिरूपेऽपराख्ये ।
लिङ्गज्ञे ब्रह्मवाक्ये सकलतनुगतं शङ्करं न स्मरामि
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ९॥

नग्नो निःसङ्गशुद्धस्त्रिगुणविरहितो ध्वस्तमोहान्धकारो
नासाग्रे न्यस्तदृष्टिर्विदितभवगुणो नैव दृष्टः कदाचित् ।
उन्मन्याऽवस्थया त्वां विगतकलिमलं शङ्करं न स्मरामि
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ १०॥

चन्द्रोद्भासितशेखरे स्मरहरे गङ्गाधरे शङ्करे
सर्पैर्भूषितकण्ठकर्णयुगले (विवरे) नेत्रोत्थवैश्वानरे ।
दन्तित्वक्कृतसुन्दराम्बरधरे त्रैलोक्यसारे हरे
मोक्षार्थं कुरु चित्तवृत्तिमचलामन्यैस्तु किं कर्मभिः ॥ ११॥

किं वाऽनेन धनेन वाजिकरिभिः प्राप्तेन राज्येन किं
किं वा पुत्रकलत्रमित्रपशुभिर्देहेन गेहेन किम् ।
ज्ञात्वैतत्क्षणभङ्गुरं सपदि रे त्याज्यं मनो दूरतः
स्वात्मार्थं गुरुवाक्यतो भज मन श्रीपार्वतीवल्लभम् ॥ १२॥

आयुर्नश्यति पश्यतां प्रतिदिनं याति क्षयं यौवनं
प्रत्यायान्ति गताः पुनर्न दिवसाः कालो जगद्भक्षकः ।
लक्ष्मीस्तोयतरङ्गभङ्गचपला विद्युच्चलं जीवितं
तस्मात्त्वां (मां) शरणागतं शरणद त्वं रक्ष रक्षाधुना ॥ १३॥

वन्दे देवमुमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं
वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे पशूनां पतिम् ।
वन्दे सूर्यशशाङ्कवह्निनयनं वन्दे मुकुन्दप्रियं
वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवं शङ्करम् ॥१४॥

गात्रं भस्मसितं च हसितं हस्ते कपालं सितं
खट्वाङ्गं च सितं सितश्च वृषभः कर्णे सिते कुण्डले ।
गङ्गाफेनसिता जटा पशुपतेश्चन्द्रः सितो मूर्धनि
सोऽयं सर्वसितो ददातु विभवं पापक्षयं सर्वदा ॥ १५॥

करचरणकृतं वाक्कायजं कर्मजं वा
श्रवणनयनजं वा मानसं वाऽपराधम् ।
विहितमविहितं वा सर्वमेतत्क्ष्मस्व
शिव शिव करुणाब्धे श्री महादेव शम्भो ॥ १६॥

॥ इति श्रीमद् शङ्कराचार्यकृत शिवापराधक्षमापण स्तोत्रं सम्पूर्णम् ॥
------------------------------------------------------------------
|| ஶிவாபராத⁴ க்ஷமாபனஸ்தோத்ர ||

ஆதௌ³ கர்மப்ரஸங்கா³த்கலயதி கலுஷம்ʼ மாத்ருʼகுக்ஷௌ ஸ்தி²தம்ʼ மாம்ʼ
விண்மூத்ராமேத்⁴யமத்⁴யே கத²யதி நிதராம்ʼ ஜாட²ரோ ஜாதவேதா³: |
யத்³யத்³வை தத்ர து³:க²ம்ʼ வ்யத²யதி நிதராம்ʼ ஶக்யதே கேன வக்தும்ʼ
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 1||

பா³ல்யே து³:கா²திரேகோ மலலுலிதவபு: ஸ்தன்யபானே பிபாஸா
நோ ஶக்தஶ்சேந்த்³ரியேப்⁴யோ ப⁴வகு³ணஜனிதா: ஜந்தவோ மாம்ʼ துத³ந்தி |
நானாரோகா³தி³து³:கா²த்³ருத³னபரவஶ: ஶங்கரம்ʼ ந ஸ்மராமி
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 2||

ப்ரௌடோ⁴(அ)ஹம்ʼ யௌவனஸ்தோ² விஷயவிஷத⁴ரை: பஞ்சபி⁴ர்மர்மஸந்தௌ⁴
த³ஷ்டோ நஷ்டோ(அ)விவேக: ஸுதத⁴னயுவதிஸ்வாது³ஸௌக்²யே நிஷண்ண: |
ஶைவீசிந்தாவிஹீனம்ʼ மம ஹ்ருʼத³யமஹோ மானக³ர்வாதி⁴ரூட⁴ம்ʼ
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 3||

வார்த⁴க்யே சேந்த்³ரியாணாம்ʼ விக³தக³திமதிஶ்சாதி⁴தை³வாதி³தாபை:
பாபை ரோகை³ர்வியோகை³ஸ்த்வனவஸிதவபு: ப்ரௌட⁴ஹீனம்ʼ ச தீ³னம் |
மித்²யாமோஹாபி⁴லாஷைர்ப்⁴ரமதி மம மனோ தூ⁴ர்ஜடேர்த்⁴யானஶூன்யம்ʼ
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 4||

நோ ஶக்யம்ʼ ஸ்மார்தகர்ம ப்ரதிபத³க³ஹனப்ரத்யவாயாகுலாக்²யம்ʼ
ஶ்ரௌதே வார்தா கத²ம்ʼ மே த்³விஜகுலவிஹிதே ப்³ரஹ்மமார்கே³(அ)ஸுஸாரே |
ஜ்ஞாதோ த⁴ர்மோ விசாரை: ஶ்ரவணமனனயோ: கிம்ʼ நிதி³த்⁴யாஸிதவ்யம்ʼ
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 5||

ஸ்னாத்வா ப்ரத்யூஷகாலே ஸ்னபனவிதி⁴விதௌ⁴ நாஹ்ருʼதம்ʼ கா³ங்க³தோயம்ʼ
பூஜார்த²ம்ʼ வா கதா³சித்³ப³ஹுதரக³ஹனாத்க²ண்ட³பி³ல்வீத³லானி |
நானீதா பத்³மமாலா ஸரஸி விகஸிதா க³ந்த⁴தூ⁴பை: த்வத³ர்த²ம்ʼ
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 6||

து³க்³தை⁴ர்மத்⁴வாஜ்யுதைர்த³தி⁴ஸிதஸஹிதை: ஸ்னாபிதம்ʼ நைவ லிங்க³ம்ʼ
நோ லிப்தம்ʼ சந்த³னாத்³யை: கனகவிரசிதை: பூஜிதம்ʼ ந ப்ரஸூனை: |
தூ⁴பை: கர்பூரதீ³பைர்விவித⁴ரஸயுதைர்னைவ ப⁴க்ஷ்யோபஹாரை:
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 7||

த்⁴யாத்வா சித்தே ஶிவாக்²யம்ʼ ப்ரசுரதரத⁴னம்ʼ நைவ த³த்தம்ʼ த்³விஜேப்⁴யோ
ஹவ்யம்ʼ தே லக்ஷஸங்க்²யைர்ஹுதவஹவத³னே நார்பிதம்ʼ பீ³ஜமந்த்ரை: |
நோ தப்தம்ʼ கா³ங்கா³தீரே வ்ரதஜனனியமை: ருத்³ரஜாப்யைர்ன வேதை³:
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 8||

ஸ்தி²த்வா ஸ்தா²னே ஸரோஜே ப்ரணவமயமருத்கும்ப⁴கே (குண்ட³லே) ஸூக்ஷ்மமார்கே³
ஶாந்தே ஸ்வாந்தே ப்ரலீனே ப்ரகடிதவிப⁴வே ஜ்யோதிரூபே(அ)பராக்²யே |
லிங்க³ஜ்ஞே ப்³ரஹ்மவாக்யே ஸகலதனுக³தம்ʼ ஶங்கரம்ʼ ந ஸ்மராமி
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 9||

நக்³னோ நி:ஸங்க³ஶுத்³த⁴ஸ்த்ரிகு³ணவிரஹிதோ த்⁴வஸ்தமோஹாந்த⁴காரோ
நாஸாக்³ரே ந்யஸ்தத்³ருʼஷ்டிர்விதி³தப⁴வகு³ணோ நைவ த்³ருʼஷ்ட: கதா³சித் |
உன்மன்யா(அ)வஸ்த²யா த்வாம்ʼ விக³தகலிமலம்ʼ ஶங்கரம்ʼ ந ஸ்மராமி
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 10||

சந்த்³ரோத்³பா⁴ஸிதஶேக²ரே ஸ்மரஹரே க³ங்கா³த⁴ரே ஶங்கரே
ஸர்பைர்பூ⁴ஷிதகண்ட²கர்ணயுக³லே (விவரே) நேத்ரோத்த²வைஶ்வானரே |
த³ந்தித்வக்க்ருʼதஸுந்த³ராம்ப³ரத⁴ரே த்ரைலோக்யஸாரே ஹரே
மோக்ஷார்த²ம்ʼ குரு சித்தவ்ருʼத்திமசலாமன்யைஸ்து கிம்ʼ கர்மபி⁴: || 11||

கிம்ʼ வா(அ)நேன த⁴னேன வாஜிகரிபி⁴: ப்ராப்தேன ராஜ்யேன கிம்ʼ
கிம்ʼ வா புத்ரகலத்ரமித்ரபஶுபி⁴ர்தே³ஹேன கே³ஹேன கிம் |
ஜ்ஞாத்வைதத்க்ஷணப⁴ங்கு³ரம்ʼ ஸபதி³ ரே த்யாஜ்யம்ʼ மனோ தூ³ரத:
ஸ்வாத்மார்த²ம்ʼ கு³ருவாக்யதோ ப⁴ஜ மன ஶ்ரீபார்வதீவல்லப⁴ம் || 12||

ஆயுர்னஶ்யதி பஶ்யதாம்ʼ ப்ரதிதி³னம்ʼ யாதி க்ஷயம்ʼ யௌவனம்ʼ
ப்ரத்யாயாந்தி க³தா: புனர்ன தி³வஸா: காலோ ஜக³த்³ப⁴க்ஷக: |
லக்ஷ்மீஸ்தோயதரங்க³ப⁴ங்க³சபலா வித்³யுச்சலம்ʼ ஜீவிதம்ʼ
தஸ்மாத்த்வாம்ʼ (மாம்ʼ) ஶரணாக³தம்ʼ ஶரணத³ த்வம்ʼ ரக்ஷ ரக்ஷாது⁴னா || 13||

வந்தே³ தே³வமுமாபதிம்ʼ ஸுரகு³ரும்ʼ வந்தே³ ஜக³த்காரணம்ʼ
வந்தே³ பன்னக³பூ⁴ஷணம்ʼ ம்ருʼக³த⁴ரம்ʼ வந்தே³ பஶூனாம்ʼ பதிம் |
வந்தே³ ஸூர்யஶஶாங்கவஹ்னினயனம்ʼ வந்தே³ முகுந்த³ப்ரியம்ʼ
வந்தே³ ப⁴க்தஜனாஶ்ரயம்ʼ ச வரத³ம்ʼ வந்தே³ ஶிவம்ʼ ஶங்கரம் || 14||

கா³த்ரம்ʼ ப⁴ஸ்மஸிதம்ʼ ச ஹஸிதம்ʼ ஹஸ்தே கபாலம்ʼ ஸிதம்ʼ
க²ட்வாங்க³ம்ʼ ச ஸிதம்ʼ ஸிதஶ்ச வ்ருʼஷப⁴: கர்ணே ஸிதே குண்ட³லே |
க³ங்கா³பே²னஸிதா ஜடா பஶுபதேஶ்சந்த்³ர: ஸிதோ மூர்த⁴னி
ஸோ(அ)யம்ʼ ஸர்வஸிதோ த³தா³து விப⁴வம்ʼ பாபக்ஷயம்ʼ ஸர்வதா³ || 15||

கரசரணக்ருʼதம்ʼ வாக்காயஜம்ʼ கர்மஜம்ʼ வா
ஶ்ரவணனயனஜம்ʼ வா மானஸம்ʼ வா(அ)பராத⁴ம் |
விஹிதமவிஹிதம்ʼ வா ஸர்வமேதத்க்ஷ்மஸ்வ
ஶிவ ஶிவ கருணாப்³தே⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 16||

|| இதி ஶ்ரீமத்³ ஶங்கராசார்யக்ருʼத ஶிவாபராத⁴க்ஷமாபண ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ||
आदित्यस्य नमस्कारान् ये कुर्वन्ति दिने दिने | जन्मान्तरसहस्रेषु दारिद्र्यं नैव जायते |

ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வந்தி  தினே தினே
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு  தாரித்ரியம் நைவ ஜாயதே.

எவர்கள் ஒவ்வொரு நாளும் ஸுர்யனுக்கு நமஸ்காரம் செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த ஜன்மாவிலும் மறு ஜன்மாவிலும் தரித்ரமே ஏற்படாது, நிறைய செல்வம் உண்டாகும் என்கிற படி ஆண்கள் பெண்கள் எல்லோரும் தினமும் அதிகாலையில் கீழ் கண்ட வாறு ஸூர்யனை நோக்கி நமஸ்காரம்  செய்யலம் நல்ல கண் பார்வை, நோயற்ற வாழ்வுநிறைவான செல்வம்  உண்டாகும்.

ममोपात्त समस्त दुरित क्षयद्वार श्री परमेश्वर प्रीत्यर्त्तम् छाया संज्ञा समेत श्री सूर्यनारायण प्रसादेन सर्वाभीष्ट सिद्यर्थं सूर्य नमस्कारान् करिष्ये

மமோபாத்த ஸமஸ்த துரிதயத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சாயா ஸம்க்ஞா ஸமேத ஶ்ரீ ஸூர்ய நாராயண ப்ரஸாதேன ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஸூர்ய நமஸ்காரான் கரிஷ்யே.

என்று ஸங்கல்பித்து கீழ் கண்ட ஒவ்வொன்றையும் சொல்லி தனி தனியே
நமஸ்காரம் செய்யவும்.

1. अगजानन पद्मार्कं  गजाननं अहर्निशम्, अनेकदंतं भक्तानां एकदन्तं उपास्महे ।।
श्री महागणाधिपतये नमः ।।
1.அக ஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
அநேக தம்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே.।
ஶ்ரீ மஹாகணாதிபதயே நம:।।

2. उमा कोमल हस्ताब्ज सम्भावित ललाटकम् । हिरण्य कुण्डलम् वन्दे कुमारम् पुष्करस्रजं ।।
श्री वल्ली देवसेना समेत सुब्रह्मण्यस्वामिने नमः ।।
2.உமா கோமள ஹஸ்தாப் ஜ ஸம்பாவித லலாடகம்।
ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம்।।
ஶ்ரீ வல்லி தேவஸேனா ஸமேத ஸுப்ரஹ்மண்யா ஸ்வாமினே நம: ।।

3. द्रुत पद्मद्वयं भानुं तेजोमण्डल मध्यकम् । सर्वादि व्याधि शमनं छायाश्लिष्ट तनुं भजे ।।
3.த்ருத பத்மத்வயம்  பாநும் தேஜோமண்டல  மத்யகம் ।
ஸர்வாதி வ்யாதி சமனம் சாயாஷ்லிஷ்ட தனும் பஜே ।।
ஶ்ரீ ஸூர்யாய நம: ।।

4.सौरमण्डल मध्यस्तं सांबं संसार भेषजं ।
नीलग्रीवं विरूपाक्षं नमामि शिवमव्ययं ।।
4.ஸெளரமண்டல மத்யஸ்தம் ஸாம்பம்  ஸம்ஸார பேஷஜம்।
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம் ।।
ஶ்ரீ ஸூர்யாய நம: ।।
1. ॐ मित्राय नमः
2. ॐ रवये नमः
3. ॐ सूर्याय नमः
4. ॐ भानवे नमः
5. ॐ खगाय नमः
6. ॐ पूष्णे नमः
7. ॐ हिरण्यगर्भाय नमः
8. ॐ मरीचये नमः
9. ॐ आदित्याय नमः
10.ॐ सवित्रे नमः
11. ॐ अर्काय नमः
12. ॐ भास्कराय नमः

1.ஓம் மித்ராயநம:
2.ஓம் ரவயே நம:
3.ஓம் ஸூர்யாய நம:
4.ஓம் பாநவே நம:
5.ஓம் ககாய நம:
6.ஓம் பூஷ்ணே நம:
7.ஓம் ஹிரண்யகர்பாய நம:
8.ஓம் மரீசயே நம:
9.ஓம் ஆதித்யாய நம:
10.ஓம் ஸவித்ரேநம:
11.ஓம் அர்காய நம:
12.ஓம் பாஸ்கராய நம:

मित्र रवि सुर्य भानु खग पूष्ण हिरण्यगर्भ मरीच्यादित्य सवित्रर्क भास्करेभ्यो नमो नमः
மித்ர ரவி ஸூர்ய பாநு கக பூஷ்ண  ஹிரண்யகர்ப
மரீச்யாதித்ய ஸவித்ரார்க்க பாஸ்கரேப்யோ நம:

இவ்வாறு நமஸ்காரம் செய்து கீழ் கண்டவாறு ப்ரார்த்தனைசெய்து கொள்ளவும்.

भानो भास्कर मार्ताण्ड चण्डरश्मे दिवाकर। आयुरायोग्यमैश्वर्यं विद्यां देहि  श्रियं बलं॥
பாணோ பாஸ்கர மார்தாண்ட சண்டரஸ்மே திவாகர ।
ஆயுராரோக்கியம் ஐஸ்வர்யம் வித்யாம் தேஹி ஸ்ரியம் பலம். ।।

।। शुभम् ।।
சாதுர்மாஸ்யம்

ஒவ்வோர் ஆண்டும் ச்ராவண பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரையில் உள்ள காலம் நான்கு மாதத்தில் சாதுர்மாஸ்யம் வரும். அதாவது ஸ்ராவண ஏகாதசி துவாதசி முதல் கார்த்திகை ஏகாதசி துவாதசி வரையில் உள்ளவைகள் சாதுர்மாஸ்யங்கள். நாலு மாசம் சாதுர்மாஸ்யம் என்றால் சாதுர்மாஸ்யம் ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை நான்கு மாதம். அந்த ஆவணி மாதத்தில் ஏகாதசியில் விஷ்ணு பகவான் சயனித்துக் கொள்கிறார்.இதற்கு சயன ஏகாதசி என்று பெயர்.  கார்த்திகை மாத ஏகாதசியில் விஷ்ணு பகவான் விழித்துக் கொள்கிறார். இதற்கு உத்ஸான ஏகாதசி என்று பெயர். அந்த ஆவணி மாத ஏகாதசி முதல் கார்த்திகை மாத ஏகாதசி வரை உள்ள காலங்களை நான்கு மாதங்களை சாதுர்மாஸ்யம் என்று சொல்லுவார்கள். பொதுவாக அந்தக் காலத்திலே மழை காலம் கூட இருக்கும். ஆகவே அந்தக் காலத்தில் ஒரே இடத்தில் தங்கி சத்சங்கங்கள், பஜனைகள், வேதாந்த காலட்சேபங்கள் முதலியவைகள் எல்லாம் பெரியோர்கள் எல்லாம் செய்வார்கள். ரிஷிகள் எல்லாம் செய்வார்கள். நாரத மஹரிஷிகூட அவர் பிறப்பதற்கு முன்பு இது போன்று சாதுக்கள், மஹரிஷிகள் சன்யாசிகள் சாதுர்மாஸ்ய காலத்தை நான்கு மாதம் ஓரிடத்தில் அனுஷ்டானம் செய்த பொழுது அவருடைய தாயார் அவர்களுக்கு சேவை செய்து அந்த ப்ரஸாதத்தினால் நாரத மஹரிஷி பிறந்ததாக வரலாறு உண்டு.

இந்த சாதுர்மாஸ்யம் மொத்தம் இரண்டு வீதம். ஒன்று, இல்லறத்தார்கள். ப்ரஹ்மச்சாரிகள் க்ரஹஸ்தர்கள் ஆண் பெண் அனைவரும் நான்கு மாதங்கள் வீட்டை விட்டு வெளியே உட்கார்நது கொண்டு ஒரு பந்தலிலோ கோயிலிலோ அல்லது பொது இடத்திலோ நதி தீரத்திலோ உட்கார்நது கொண்டு இறைவனைப் பற்றி பாடல்கள் ஜபங்கள் பாராயணங்கள் ஸ்தோத்ரங்கள் த்யானங்கள் இவைகளிலேயே காலத்தை கழிப்பது பகவத் சிந்தனையைத் தவிர வேறு ஒன்றும் செய்வது இல்லை. அது ஒரு விதமான சாதுர்மாஸ்யம். சன்யாசிகள் போன்றவர்கள் நான்கு மாத காலங்களிலும் பன்னிரெண்டு மாதங்களில் எட்டு மாதம் யாத்திரை செய்து விட்டு இந்த நான்கு மாத காலம் எந்தவித யாத்திரையும் செய்யாமல் ஒரே இடத்தில் தங்க வேண்டும். பொதுவாக சன்யாசிகளுடைய விதி ஒரு நாளைக்கு மேல் ஒரு ஊரில் தங்கக்கூடாது.பெரிய ஊராக இருந்தால் மூன்று நாள் தங்கலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. க்ராமைக ராத்ரம் ஒரு க்ராமத்துக்கு க்ராமம் ஒரு ராத்ரம் தான் தங்கலாம் என்று நியதி. சன்யாசிக்கு மூன்று நாட்கள் பெரிய ஷேத்ரங்களில் தங்கலாம் இப்படி எப்போதுமே போய்க்கொண்டிருக்கும் ஒரு இடத்தில் விச்ராந்தியாக இருந்து சில சாதனைகளை செய்வதற்கும் அதே சமயத்தில் அஹிம்சையை அடிப்படையாக கொண்ட சன்யாசிகளும் ஆனதினால் இந்த சாதுர்மாஸ்ய காலத்தில் அதாவது மழைக்காலத்தில் அந்தக் காலம் அப்பொழுது சில புழுக்கள் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும். அவைகளை காலில் மிதிபட்டோ மற்றவை மூலமாகவோ ஹிம்சையாகும். அந்த ஹிம்சைகூட செய்யாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அஹிம்சையை அடிப்படையாக வைத்துக் கொண்டு நான்கு மாதம் சுற்ற வேண்டாம் என்பதற்காகவும் சாதுர்மாஸ்யம் சன்யாசிகள் அனுஷ்டிப்பார்கள். அதே நான்கு மாதங்களில் அவர்களும் த்யானங்களை செய்து கொண்டு சாதனை செய்து கொண்டு இருப்பார்கள்.

இதைத் தவிர இந்த சாதுர்மாஸ்ய காலத்திலேயே ஆகாவரண சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. முதல் மாதத்திலே பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். இரண்டாம் மாதத்திலே தயிர் சாப்பிடக் கூடாது. மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். மூன்றாவது மாதத்திலே கறிகாய்கள் சாப்பிடக்கூடாது. மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். நான்காவது மாதத்திலே இரண்டாகப் பிளக்கக் கூடிய பருப்புகளை சாப்பிடக்கூடாது மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். கார்ததிகை மாதம் த்வாதசி அன்று அனைத்தையும் கலந்து வைத்து பகவானுக்கும் படைத்து விட்டு அந்த கார்த்திகை ஏகாதசி அன்று கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் கல்யாணம் செய்து விட்டு துவாதசி அன்று பாராயணம் செய்வது வழக்கம். பாரணை என்று சொல்லுவார்கள் பாரணை என்றால் உபவாசம் இருந்து மறுநாள் செய்வது பாரணை. அப்படி கார்த்திகை மாதம் ஏகாதசிக்கும் உபவாசம் இருந்து இந்த சாகா வ்ரதம் ப்ரகாரம் ஒவ்வொரு மாசம் ஒன்றை ஒன்றை விட்டு விட்டு கார்த்திகை மாசம் துவாதசி அன்று கிருஷ்ணனுக்கு கல்யாணம் செய்து வைத்து அன்றைய தினம் எல்லா விதப் பொருட்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து பிறகு தாம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு. இது சன்யாசிகள் க்ரஹஸ்தர்கள் ப்ரஹ்மச்சாரிகள் வானப்ரஸ்தர்கள் அனைவரும் செய்யக்கூடியது. பிராமணர்கள் மாத்திரம் அல்ல அனைத்து வகுப்பினரும் கூட செய்வார்கள். இது மஹாராஷ்டிரத்திலும் ஆந்திராவிலும் மிகவும் பிரசித்தமாக நடைபெற்று வருகிறது. கன்னட தேசத்திலும் சில பேர் செய்கிறார்கள். தமிழ் நாட்டிலே மிகவும் குறைந்த பேர்கள் தான் இந்த சாகா விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

இந்த சாதுர்மாஸ்யத்தை கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவு.

சன்யாசிகள் மாத்திரம் தான் சாதுர்மாஸ்யம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ் நாட்டிலே கடைப்பிடிக்கிறார்கள். அதுவும் நாலு மாசத்திற்கு முடியாததினால் இரண்டு மாசத்திலே செய்யலாம் என்று ஒரு வேத வாக்கியம் இருப்பதினால் நான்கு மாசத்திற்கு பதிலாக நான்கு பட்சமாக வைத்துக்கொண்டு நான்கு பட்சங்களிலே இரண்டு மாசங்களிலே இந்த சாதுர்மாஸ்ய வ்ரதத்தை முடித்து விடுகிறார்கள். அப்படி நான்கு மாதத்தில் நான்கு பட்சங்களை வைத்துக் கொண்ட இரண்டு மாசத்தில் முடிக்கக் கூடிய சன்யாசிகள் கூட சிலர் சாகா வ்ரதத்தை கடைப்பிடிப்பார்கள் நான்கு மாசமும்.அதாவது பால் சேர்க்காமல் இருப்பது தயிர் சேர்க்காமல் இருப்பது காய்கறிகள் சேர்க்காமல் இருப்பது இரண்டாக பிளக்கக்கூடிய பருப்பு வகைகளை சேர்க்காமல் இருப்பது இந்த விரதத்தை மாத்திரம் நான்கு மாதம் எங்கு இருந்தாலும் கடைப்பிடிப்பார்கள்.இப்படி இந்த வகையிலும் உண்டு. இப்படி சாதுர்மாஸ்யம் என்பது பழங்காலம் தொட்டு வருகிறது. அன்றைய தினம் பூஜையில் முதல் முதல் இந்த சாதுர்மாஸ்ய ஆரம்பம் ஆவணி மாசம் ஏகாதசி அன்று(க்ராவண ஏகாதசி அன்று)முடிவு கார்த்திகை ஏகாதசி த்வாதசி அன்று. ஆனால் சாதர்மாயஸ்த்தைத் தவிர சன்யாசிகள் செய்யகக கூடிய சாதுர்மாஸ்யம் வ்யாஸ பூஜை என்பது பௌர்ணமியிலிருந்து ஆரம்பிக்கும் ச்ராவண பௌர்ணமியிலிருந்து கார்த்திகை பௌர்ணமி வரையில் நடைபெறும். அன்றைய தினம் அவர்கள் நான்கு மாதம் வெளியேபோக மாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு இந்த கார்யங்களை எல்லாம் செய்வார்கள். இது ச்ராவண மாத பௌர்ணமியிலிருந்து கார்த்திகை மாதம் பௌர்ணமி வரையில் இருக்கும். பௌர்ணமிக்கு பௌர்ணமி அவர்களுக்கு விசேஷம். அது போன்று சாதுர்மாஸ்ய்தைப் பற்றி விசேஷம் உண்டு. அந்த சாதுர்மாஸ்யத்தை முதன் முதலாக அந்தக்காலம் முதல் கடைப்பிடித்து வந்தவர் வேதவியாசர். ஆகவே அந்த சாதுர்மாஸ்ய ஆரம்பத்தை வேதவியாச பூஜை என்றும் குறிப்பிடுவார்கள்.ஆகவே வியாச பூஜையைத்தான் சன்யாசிகள் சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் கைக் கொள்வது.
---------------------------------------------------------------------------------‐--
தியாகராஜர்!

தியாகராஜர் மன்முறுகித் தொழுது வணங்கும் ராமர், சீதை பெயர்களே அவருடைய பெற்றோருக்கும் இருந்ததுதான் அதிசயம். 'சீதம்ம மாயம்ம,  ஸ்ரீராமுடு நாதன்றி 'என்ற பாடலில், சீதம்மா என் தாய், ஸ்ரீ ராமர் என் தந்தை என்ற பொருள் பட அவர் பாடியிருப்பது இரட்டை அர்த்ததில் அழைத்தது.

சரபொஜி மகாராஜா தன்னைப் போற்றிப்பாட அழைத்த போது போகாத தியாகராஜர், 'மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா? என்ற அர்த்தம் கொண்ட'நிதி சால சுகமா' கீர்த்தனையைப் பாடினார். கோபமடைந்த அவரது தமையனார்,தியாகராஜர் பூஜித்து வந்த சீதா, ராம, லஷ்மண விக்ரகங்களைத் தூக்கி காவிரியில் எறிந்துவிட்டார். அதில் வேதனையுற்ற தியாகராஜர்  'உன்னை எங்கெல்லாம் தேடுவேன்?' என்ற வேதனை ஒலிக்கும் தே' நெந்துவெத குதுரா' கீர்த்தனையைப் பாடினார்.  பின்னர் ராமபிரான் அருளால் அந்த விக்ரகங்களைக் கண்டுபிடித்து மகிழ்ச்சியடைந்தார்.
---------------------------------------------------------------------------------‐--