கோவில் மணி ஓசையும், அதன் பின்னணி அறிவியலும் பற்றி உங்களுக்கு தெரியுமா ?
கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. சில கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அது அல்ல உண்மை. பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பதை கடந்து, இதன் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. ஆகம சாஸ்திரங்களின் படி கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஒழி எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது. இது, உங்களுள் நல்ல ஆற்றல் பெருக செய்கிறது.
கோவில் மணி ஒலியின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமும் இருக்கிறது. ஆம் கோவில் மணி மனிதனின் மூளை செயற்திறன் மேலோங்க செய்யும் ஒரு அறிவியல் பின்னணி இருக்கிறது.
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கிறது. கோவில் மணிகள் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களால் ஆனவை ஆகும். இதில் இருந்து வெளிவரும் ஒலி மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றன.
கோவில் மணியை அடித்தவுடன், அதிலிருந்து ஒரு கூர்மையான சப்தம் உற்பத்தியாகிறது, இந்த எதிரொலி குறைந்தபட்சம் 10 - 15 நொடி வரை நீடிக்கும். இந்த எதிரொலியின் காலம், உங்கள் உடலில் உள்ள ஏழு குணப்படுத்தும் மைய்ய புள்ளிகளை செயல்பட வைக்க போதுமானதாக இருக்கிறது. மேலும் இந்த ஒலி உங்களுள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றியும், உங்கள் கவன குவியல் சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
கோவில் மணி ஒலி, கவன குவியலை மேம்படுத்தி உங்களை விழிப்புடன் இருக்க செய்கிறது. மேலும், மூளையின் செயற்திறனை இதன் மூலம் அதிகரித்து, உங்கள் வேலையில் நேர்மறையாக செயல்பட செய்கிறது. இதன் மூலம் மனம் அமைதி அடையும், நிம்மதி பெறும்.
--------------------------
அரைகுறை வீட்டில் கிரகப்பிரவேசம் கூடாது
குடியிருக்கும் வீட்டை க்ருஹ லட்சுமி என்று தெய்வத்திற்கு ஒப்பிடுவர். நல்லநாள் பார்த்து, வாஸ்துபூஜை நடத்தி, பூமி பூஜையோடு கட்டிடப்பணி தொடங்க வேண்டும். முழுவதும்கட்டிய பிறகு, நல்லநாளில் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும். புதுவீட்டில் எல்லா பணிகளும் முடிந்த பிறகு, குடிபுகுவதே உத்தமம் என்று சாஸ்திரம் சொல்கிறது. குறிப்பாக, வீட்டின் நிலை, பிரதான கதவு, மேல்கூரை அமைக்காமலும், வாஸ்துபலியிடாமலும், உறவினருக்கு உணவிடாமலும் கிரகப்பிரவேசம் செய்வது கூடாது. தற்காலத்தில் நவீன வேலைப்பாடுகள் அமைந்த புதுவீட்டில் ஹோமப்புகை பட்டால் பளபளப்பு குறைந்து விடும் என்ற எண்ணத்தில், அரைகுறையாக வேலை முடிந்திருக்கும் போதே ஹோமம் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட வீடுகளில் புகுந்தால் சோதனைகள் வர வாய்ப்புண்டு. எனவே, கிரகப்பிரவேச விஷயத்தில் கவனமாய் இருங்கள்!
--------------------------
குணம் தருள்வாள் பணம் தருவாள்!
எந்த தெய்வத்திற்குரிய ஸ்தோத்திரத்தைப் படித்தாலும், அதன் இறுதிப் பகுதியில் அதைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள் பலச்ருதி என்னும் ஸ்லோகமாக இருக்கும். சவுந்தர்ய லஹரி ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா என்னும் ஸ்லோகத்தில் அம்பிகையை வணங்குவோருக்கு உண்டாகும் பலன் பட்டியலாக இடம் பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள், சரஸ்வதி கடாட்சத்தால் உயர்ந்த அறிவும், நல்ல குணமும், லட்சுமி கடாட்சத்தால் செல்வ வளமும், நல்ல அழகும் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. புத்தி இல்லாதவனிடம் பணம் சேர்ந்தால் தீமையே உண்டாகும். அதனால், பராசக்தியான அம்பிகை, தன்னை வழிபடுவோருக்கு முதலில் நல்ல புத்தியைக் கொடுத்து, அதன்பின் செல்வ வளத்தை அருள்கிறாள்.
--------------------------
சந்தேகம் தான் தீயை வைக்கும்!
எந்தப் பொருளைப் பார்த்தாலும், மெய்ப்பொருளான கடவுளையே பார்க்கப் பழகுங்கள். இதனால், நான் என்னும் சிறிய எண்ணம் அற்றுப் போய் விடும்.அன்பும் தெய்வமும் ஒன்றே. தெய்வமாகிய இறைநிலையை உணர்ந்தால், மனம், அன்பு நிலையில் மலரத் தொடங்கும். உலகில் நிகழும் ஒவ்வொன்றும் கடவுளின் செயலே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் இயற்கை, நீதி, தர்மம் இவற்றுக்கு முரண்படாமல் வாழ முடியும்.கடமையை உணர்ந்துசெயலாற்றினால், சமுதாயத்தில் எல்லா மக்களின் உரிமையும், நலமும் காக்கப்படும்.கடமையில் சிறந்தவன் கடவுள் நாட்டமுடையவனாக இருப்பான். கடவுளை உணர்ந்தவன்கடமையில் ஈடுபாட்டுடன் இருப்பான்.உள்ளத்தில் கருணை,உடையில் ஒழுக்கம், நடையில் கண்ணியம் இவையேநல்லோரின் அடையாளங்கள்.ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். வாழ்வில் உயர்வு அடைவீர்கள்.கடவுளே எல்லாமுமாக இருக்கிறார். நமக்கும்கடவுளுக்கும் ஒரு சங்கிலிப்பிணைப்பு இருக்கிறது.
வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வில் துன்பமே அதிகமாகும். இன்பம்பெற வேண்டுமானால், உணவு, உறக்கம், உழைப்பு, எண்ணம் என ஒவ்வொன்றையும் சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.இனிய மொழி பேசுபவர்கள், உலகையே வசப்படுத்துவதோடு, வெற்றிகரமான வாழ்வு நடத்தும் ஆற்றல் பெற்றிருப்பர்.பிறக்கும் போது யாரும் எதுவும் கொண்டு வந்ததில்லை. போகும் போதும் கொண்டு போவதும் இல்லை. இந்தசமுதாயமே நமக்கு வாழ்வு அளித்துக் கொண்டிருக்கிறது. அறிவாற்றல், உடல் ஆற்றல் இரண்டாலும் முடிந்த செயல்களை, சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டியது மனிதனின் கடமை.வாழ்க வளமுடன் என்று ஒருவருக்கொருவர் வாழ்த்தும் போது, பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப் படுகிறது.பிறருக்கு நன்மையைச் செய்வதும், பயன் பெற்றவர்கள் நிறைவோடு வாழ்த்துவதும் தான் உண்மையான புகழாகும். உண்மையில் மனிதனுக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்றால், அது அவன் உள்ளத்தில்எழுகின்ற ஒழுங்கற்ற எண்ணங் களும் சந்தேகமும்தான். சந்தேகம் வாழ்வில் தீயை வைக்கும். எண்ணத்தில் உறுதியும், ஒழுக்கமும், நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டால், எண்ணிய அனைத்தையும் எண்ணிய படியே பெற்று மகிழலாம்.
நம்பிக்கை வாழ்வில் தீபமேற்றும். மனதை அடக்க நினைத்தால் அலையும். அதையே அறிய நினைத்தால் அடங்கத் தொடங்கி விடும்.உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் நம்மனதில்தான் இருக்கிறது. தன்னை தானே சீர்படுத்திக் கொண்டு விட்டால், இந்த மண்ணிலுள்ள எல்லா இன்பமும் பெற்று நல்வாழ்வு வாழலாம். வாழ்வில் வெற்றி பெற விரும்பினால் எதிர் வரும் பிரச்னையை நேருக்கு நேர் துணிவுடன் மோதும் அணுகுமுறை வேண்டும். ஆசையை அடியோடு ஒழித்து விடுவது இயலாத காரியம். ஆசையை சீர்படுத்திக் கொண்டால் வாழ்வில் துன்பம் குறைந்து விடும். எந்தச் சூழ்நிலையிலும் ஒருவரை கோபம் அணுகாவிட்டால், அவரது மனம்பக்குவம் அடைந்து விட்டதாக கொள்ளலாம்.
--------------------------
பக்கத்திலே நான் இருக்கேன்!
கவுரவர் சபையில் திரவுபதி நிறுத்தப்பட்டாள். துரியோதனன், தன் தம்பி துச்சாதனனை அழைத்து இவளது ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்து என்று உத்தரவிட்டான். துச்சாதனனும் அவ்வாறே செய்ய முற்பட்டான்.கணவன்மாரோ, பீஷ்மர், துரோணர் போன்றமகானுபவர்களோ உதவி செய்ய முன்வராத நிலையில், அபலையாய் நின்று கதறினாள் பாஞ்சாலி. வேறு யாரும்கதியில்லை என்ற நிலையில், கிருஷ்ண பரமாத்மாவை அழைத்துக் கதறினாள். கண்ணா! மதுசூதனா!திரிவிக்கிரமா! பத்மநாபா! கோவிந்தா! புண்டரீகாக்ஷா, கிருஷ்ணா, கேசவா, சங்கர்ஷணா, வாசுதேவா,புருஷோத்தமா, அச்சுதா, வாமனா, தாமோதரா, ஸ்ரீதரா... என்றெல்லாம் அழைத்தாள். அடுத்து துவாரகா வாசா என்று கூப்பிட்டாள். கண்ணன் வந்தான். ஆடையை வளரச் செய்தான். அவளது மானம் காப்பாற்றப்பட்டது. பின்னொரு நாளில் இது பற்றி திரவுபதி கண்ணனிடம் கேட்டாள். அண்ணா! நான் அன்று அப்படி கதறினேனே! நீ ஏன் வருவதற்கு தாமதித்தாய்? என்றாள். கண்ணன் சிரித்தான். திரவுபதி! எனது எல்லா நாமங்களையும் சொல்லி அழைத்த நீ துவாரகாவாசா என்றும் சொன்னாய் அல்லவா! நான் துவாரகையில் இருந்து வரவேண்டாமா! அதனால் தான் தாமதம் ஆகி விட்டது. அதற்குப் பதிலாக இருதய வாசா என்று அழைத்திருந்தால் உன் இதயத்திலிருந்து உடனே வெளிப் பட்டிருப்பேன் என்றார். பார்த்தீர்களா! இறைவனை நம் நெஞ்சில் குடியமர்த்த வேண்டும். அப்படி அமர்த்தி விட்டால் எந்தக் கஷ்டம் வந்தாலும் அவன் உடனே வருவான்.
--------------------------
முழு மனதுடன் கொடுங்கள்!
பாரசீக மன்னர் ஒருவர் ஆண்டுதோறும் தன் நாட்டு வீரர்களுக்கு போட்டி ஒன்றை நடத்துவார். ஆனால், கஞ்சப்பிரபுவான அவருக்கு பரிசு கொடுக்க மனம் வராது. ஒருமுறை, நவரத்தினங்கள் பதித்த மோதிரம் ஒன்றை ஒரு கயிற்றில் கோர்த்து, அரண்மனை மேலுள்ள மினாரில் தொங்கவிட்டார். அந்த மோதிரம் யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவ்வாறு செய்தார்.மோதிரத்தை எடுக்க வேண்டும் என்பதே போட்டி! அதை எடுக்க பல வீரர்கள் வந்தனர். அதன்மீது அம்பை எய்தனர். ஊஹும்... யாருக்கும் மோதிரம் கிடைக்கவில்லை. அரசருக்கு சந்தோஷம். இன்னும் ஒரே ஒருநாள் தான் பாக்கி! அதற்குள் யாருக்குமோதிரம் கிடைத்து விடப்போகிறது! என்ற நினைப்பில் இருந்தார். அரண்மனையின் எதிரே ஒரு சிறுவன் விளையாட்டு வில் அம்பை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவன் விட்ட அம்பு நேராக மோதிரத்தை அறுத்துத் தள்ளியது. பிறகென்ன! சிறுவனுக்கே மோதிரத்தைபரிசாகக் கொடுக்க வேண்டியதாயிற்று! ஒன்றைக் கொடுக்க நினைப்பவர்கள், நிறைந்த மனதுடன்பிறருக்குக் கொடுக்க வேண்டும். கொடுப்பது போல் நடித்து தாங்களே வைத்துக் கொள்ள நினைத்தால், அந்தப் பொருள் ஏதோ ஒரு வழியில் போய்விடும்.
--------------------------