ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

பார்க்க வேண்டிய பத்து கோவில்கள் விழுப்புரம்-2

அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :பக்தஜனேசுவரர் (ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்)
உற்சவர் :பக்தஜனேசுவரர்
அம்மன்:மனோன்மணி (நாவலாம்பிகை, சுந்தர நாயகி)
தல விருட்சம் :நாவல்மரம்
தீர்த்தம் :கோமுகி தீர்த்தம், கருட நதி
ஆகமம்/பூஜை  :காமிக ஆகமம்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர்
ஊர் :திருநாவலூர்
மாவட்டம் :விழுப்புரம்
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:சுந்தரர், அருணகிரிநாதர்

அஞ்சுங் கொண்டு ஆடுவார் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார் தஞ்சங் கொண்டார் அடிச் சண்டியைத் தாமென வைத்துகந்தார் நெஞ்சங் கொண்டார் வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டு நஞ்சங் கொண்டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.  சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 8வது தலம்.
 
விழா:திருநாவலூர் சிவாலயத்தில் காமிக ஆகமத்திலுள்ள விதிமுறைகளுக்கேற்ப வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுந்தரர் ஜனன விழா - ஆவணி மாதம் - உத்ர நட்சத்திரம் நாளன்று - 1 நாள் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். சுந்தரரின் குருபூஜை விழா - ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா - 15 நாட்கள்- சித்திரைப் புத்தாண்டு நாளில் பஞ்சமூர்த்திகளுக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் உபயதாரர்களின் உதவியுடன் அபிசேக ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று மனோன்மணியம்மனுக்குச் சிறப்பு வழிபாடும் உற்சவருக்கு ஊஞ்சல் உற்சவமும் நிகழும். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் துர்க்கை , மனோன்மணியம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கைக்கு ராகுகால வழிபாடு நிகழும். இவ்வைபவங்களில் மகளிர் அதிக அளவில் பங்கேற்பர் வெள்ளி கிழமைகளில் சுக்கிரனுக்கும் அவர் தாபித்த லிங்கத்திற்கும் சிறப்பு பூஜைகள் நிகழும். வெண்ணெய் வெண்மை நிறமுடைய நெய், மொச்சை, வெண் பட்டாடை ஆகியவற்றுடன் வழிபாடு சிறப்பாக நடத்தப்படும். வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற ஆடை மஞ்சள் மலர்கள் மஞ்சள் நிறக் கடலை ஆகிய பொருட்களுக்களை ப் படைத்து சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுகின்றன. தவிர பிரதோச நாட்களின் போதும் ,விசேச நாட்களின் போதும் கோயிலில் பக்தர்கள் நிரம்ப அளவில் வருகின்றனர்.  
      
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. சுந்தரர் அவதரித்த தலம் சுக்ரன் வழிபட்ட சிவதலம் இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.இவர் பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர். இவர் சுந்தரருக்கு காட்சியளித்தவர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 219 வது தேவாரத்தலம் ஆகும்.  
      
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர் - 607 204, விழுப்புரம் மாவட்டம், போன்: +9-9486150804,9443382945, 04149-224 391. 
     
தகவல்:இந்த பக்தஜனேசுவரர் ஆலயம் மிகவும் பழமையானது. சுந்தர மூர்த்தி சுவாமிகளை நமக்கு தந்த அரிய தலம். அம்பாள் விரிசடை கோலத்தில் தியான சொரூபமாக உள்ளார் என்பது சிறப்பு. பிரம்மா, விஷ்ணு, பார்வதி, சண்டிகேஸ்வரர், இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள், சூரியன், சுக்கிரன், கருடன், சப்தரிஷிகள் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.ஐந்தடுக்கு ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் கொண்ட இக்கோயிலின், முதல் பிரகாரத்தின் வலது பக்கத்தில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் சுந்தரருக்கு தனி சன்னதி உள்ளது. பொதுவாக நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் கிழக்கு நோக்கி இருப்பார். ஆனால், இங்கு சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். இவர் இறைவனை தரிசிப்பதாக ஐதீகம்.இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்த ஜனேசுவரரை வணங்கி தரிசித்த இறைவியாகிய மனோன்மணியை வணங்கி அம்பிகையின் சொல்படி சுக்ரபகவான் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோசம் நிவர்த்தி பெற்ற தலம்.கோயிலை அடுத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரம் செய்த இடத்தில் திருமடம் ஒன்றை எழுப்பி உள்ளனர்.
 
பிரார்த்தனை:சைவ சமயத்தின்பால் அதீத பற்றும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய அருமையான சிறப்பு பெற்ற கோயில் இது.சுக்ரனுக்கு வக்ரம் தோசம் பரிகாரம் பெற்ற தலம். சுக்ர தோசம்,திருமண வரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற விரும்புவோர் அவசியம் சென்று வழிபட வேண்டிய தலம்.இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும் , வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.
 
நேர்த்திக்கடன்:வெள்ளிக்கிழமைகளில் வெண்தாமரைப்பூவினாலும் வெண்பட்ட வஸ்திரம் அணிவித்து வெண்மொச்சை நிவேதனம் செய்து வெண்நெய்யால் தீபம் போட்டு வழிபாடு செய்யும் பக்தர்கள் தங்கள் எண்ணப்படி எண்ணங்கள் தடங்கலின்றி நிறைவேறப் பெறுவார்கள். 3 மஞ்சள் 3 எலுமிச்சம் பழம் வைத்து குங்கும அர்ச்சனை செய்து பழத்தை பெற்றுச் சென்றால் மங்கல காரியம் நிறைவேற வாய்ப்புண்டு. சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 
     
பெருமை:பிரம்மா, விஷ்ணு . சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர்,சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்ட தலம்.ஈசனை மூலையில் நவகிரகங்களுக்கு அருகிலேயே சுக்கிரனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்மார்த்த பூஜை செய்த லிங்கமான பார்க்கவீசுவரர் லிங்கம் உள்ளது. பார்வதிதேவி இங்கு எழுந்தருளி சிவனை பூஜித்து, அவர் மனம் மகிழ மணம் புரிந்தார். இரணியனை கொல்வதற்காக மகாவிஷ்ணு இங்குள்ள சிவனை பூஜித்து நரசிம்ம அவதாரம் எடுக்கும் ஆற்றலை பெற்றார்.சிவப்பிரியர் என்பவர் சிவனை பூஜித்து சண்டிகேஸ்வரர் பதவி பெற்றதும், ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சினால் கருநிறமடைந்த கருடன், சிவனை பூஜித்து விஷம் நீங்கியதுமான தலம். கிருதயுகத்தில் விஷ்ணு வழிபட்ட லிங்கம், திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரர் வழிபட்ட லிங்கம், துவாபரயுகத்தில் பிரம்மா வழிபட்ட லிங்கம், கலி யுகத்தில் சுந்தரர் வழிபட்ட லிங்கம் இங்குள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை பாடியுள்ளார்.

சுக்கிரன் வழிபட்ட லிங்கம் : சுக்கிரன் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை தாபித்து அதற்கு முறைப்படி பூஜைகள் நடத்தி இறையருள் பெற்றார்.சுக்கிரன் நிறுவிய லிங்கம் நவகிரகங்களுக்கருகே அமைந்துள்ளது. வெள்ளிக் கிழமைகளில் இந்த லிங்கத்துக்கு விசேச வழிபாடுகள் நடக்கின்றன.நவகிரகங்களுள் சூரியன் மேற்கு நோக்கியவாறு இங்கு காட்சியளிக்கிறார்.பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன.இத்தலத்தின் சிறப்பை பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார்.
 
ஸ்தல வரலாறு:அமிர்தத்தை கடைந்த காலத்தில் வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை இறைவன் சாப்பிட்டு நஞ்சு விந்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில் இறைவன் தானாக தோன்றப் பெற்று 4 யுகங்களுக்கு முன்பே இங்கு இறைவன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கர்ப்ப கிரகம் மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.இது மிகப் பழமையான கோயில் ஆகும்.ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில் சுந்தரர் ஜம்பு என்ற வடமொழி பெயரை நாவல் என்று அழைத்து திருநாவலீசன் என்று ஈசனையும் திருநாம நல்லூர் என்று ஊர்ப்பெயரையும் பாடலில் அழைத்துள்ளார்.இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்த இத்திருத்தலம் ஒவ்வொரு சைவ சமய அன்பர்களும் சென்று தரிசிக்க வேண்டிய தலம். ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் "சஞ்சீவினி' மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவ, அசுர போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால், இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் "சஞ்சீவினி' மந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து, அவரை விழுங்கி விட்டார்.சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள், இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரகம் தொடர்பான தோஷம் விலகி, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.
----------------------------------------------------------------------------------------
பார்க்க வேண்டிய பத்து கோவிகள் விழுப்புரம் மாவட்டம்-1

அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :சந்திரமவுலீஸ்வரர்
அம்மன்:அமிர்தாம்பிகை
தல விருட்சம் :வில்வம்
தீர்த்தம் :சூரியபுஷ்கரிணி
பழமை :1800 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :வக்ராபுரி
ஊர் :திருவக்கரை
மாவட்டம் :விழுப்புரம்
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், சுந்தரர்

ஏனவெண் கொம்பினொடும் இளவாமையும் பூண்டுகந்து கூனிள வெண்பிறையும் குளிர்மத்தமும் சூடிநல்ல மானன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 30வது தலம்.

விழா:சித்ரா பவுர்ணமி - வக்ரகாளியம்மன் வீதியுலா உற்சவம் - 1நாள் திருவிழா சித்திரை வருடபிறப்பு - சந்திர மௌலீசுவரர் தெப்ப உற்சவம் காணும் பொங்கல்,ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, தைபூசம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கார்த்திகை தீபம், ஆகிய விசேச நாட்களில் கோயிலில் வக்கிர காளியம்மனுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடக்கின்றன. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு , அஷ்டமி நவமி நாட்களில் கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் இருக்கும்.  

சிறப்பு:மூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது.இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும்.இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 263 வது தேவாரத்தலம் ஆகும்.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். அருள்மிகு சந்திர மௌலீசுவரர் திருக்கோயில், திருவக்கரை போஸ்ட்-604 304, விழுப்புரம் மாவட்டம்.போன்:+91 - 413 2688949 
     
தகவல்:இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். சுவாமியின் பிறபெயர்கள்: சந்திரசேகரர், பிறைசூடிய எம்பெருமான் அம்பாளின்  பிறபெயர்கள்: அமிர்தாம்பிகை,வடிவாம்பிகை

பிரார்த்தனை:இங்கு மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க சிவனை பிரார்த்திக்கிறார்கள். வக்ர தோசங்கள் , ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர். நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

நேர்த்திக்கடன்:திருமணத்தடை உள்ளவர்கள் தாலி காணிக்கை, புடவை சாத்துதல், மாலை சாத்துதல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். குழந்தை வரம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டுதல், எடைக்கு எடை காசுபோடுதல்(துலாபாரம்) ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாபார விருத்தி வேண்டுவோர் திருப்பணிகள் செய்தல், மண்டபம் கட்டித்தருதல், ஆகியவற்றையும் செய்கிறார்கள். தவிர சந்தன காப்பு, பால், தயிர், இளநீர்,விபூதி, சந்தனம்,பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றால் ஆன அபிசேகங்கள் நடக்கின்றன. சந்தன அலங்காரமும் வக்கிர காளிக்கு செய்கின்றனர். இந்த தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவோர் மொட்டை போடுதல், காதணி விழா நடத்துதல், அங்கபிரதட்சணம்செய்தல், குத்து விளக்கு சரவிளக்கு வாங்கி வைத்தல், நெய்தீபம் ஏற்றுதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமிக்கு 1008 சகஸ்கர கலச அபிசேகம், வக்ர காளிக்கு 1008 சங்காபிசேகம் மற்றும் சித்ரா பவுர்ணமியின் மறுநாள் 1008 பால் குட அபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகின்றது. வஸ்திரம் சாத்துதல், மஞ்சள் தூள், கதம்ப பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம்செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்கள் மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள். 
     
பெருமை:இந்தியாவில் பஞ்ச முக லிங்கம் கொண்ட சிவதலம் வடக்கில் நேபாளத்திலும், தெற்கில் ஆந்திராவில் உள்ள காளஸ்திரியிலும் உள்ளது. மும்முகத்தில் காட்சி அளிப்பது அருள் சொரியும் திருவக்கரையில் மட்டுமே. இம்முகலிங்கத்திற்கு கிழக்கில் தட்புருட முகமாகவும் வடக்கே வாதேவ முகமாகவும் தெற்கே அகோர முகமாகவும் காட்சி தருகிறார்.தெற்கே உள்ள அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் இரு கோரை பற்கள் உள்ளன.இதை பால் அபிசேகம் செய்யும் போது மட்டுமே தெளிவாக பார்க்க முடியும்.

எல்லாமே வக்கிரம்: கருவறைக்கும் துவஜஸ்தம்பத்திற்கும் நேராக இல்லாமல் வடபுறமாக சற்று விலகி வக்கிரமாக உள்ளது.பொதுவாக எல்லாக் கோயில்களிலும் நாம் கோபுர வாசலில் இருந்தே சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆனால் இந்த திருவக்கரை கோயிலிலோ இராஜகோபுரம், கொடிக்கம்பம், நந்தி, திருவக்கரையில் இருக்கும் சுவாமி முதலியன ஒரே நேர்கோட்டில் இல்லாமல் ஒன்றைவிட்டு விலகி, வக்கிர நிலையில் இருக்கிறது.எனவே இங்கு எல்லாமே வக்கிரமாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.பவுர்ணமி இரவு 12 மணிக்கு - அம்மாவாசை பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் - வக்கிரகாளியம்னுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேசம். வக்ர காளியின் இடது பாகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது.வரதராஜ பெருமாளுக்கு பிரயோக சக்கரம் வழக்கப்படி இருக்காமல் சக்கரத்தின் அமைப்பு மாறி இருக்கும். குண்டலினி சித்தர் இங்கு ஜீவ சமாதி அடைந்துள்ளார். இங்கு அவரின் சமாதி கோயிலுக்குள்ளேயே உள்ளது. வக்ர காளியின் வலது காதில் சிசு(குழந்தை)குண்டலம் உள்ளது. வக்ர காளி இங்கு சாந்த சொரூபமாக அருள்பாலிக்கிறாள்.

வக்ர சனி: பொதுவாக எல்லாக் கோயில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம்.ஆனால் இங்கு வழக்கத்திற்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து வக்கிரமாக காட்சி தருகிறது.  அந்த வக்கிர சனியை வணங்குபவர்களுக்கு துன்பம் நீங்கும், இன்பம் பொங்கும். கி.மு.756 ல் கட்டப்பட்ட கோயில் இது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் மயான பூமி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு: வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம்.எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம்.வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின் படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம்.

வக்ரகாளியம்மன்: வக்கிரகாளி சந்நிதியினால்தான் இத்திருத்தலம் தற்போது பலருக்கும் தெரிந்திருக்கிறது. இத்தலம் புகழ் பெறக் காரணமே இந்த வக்ரகாளியம்மனே ஆகும். வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்திற்கு பெயர். பட்டீசுவரம் துர்க்கை, சிதம்பரம் பிரம்ம சாமுண்டீசுவரி, தில்லை காளி போன்ற அற்புதமான சிற்பங்களைப் போலவே வக்கிரகாளி அம்மனின் திருவுருவமும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.பொதுவாக காளி கோயில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது.சுடர் விட்ட பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம் வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருத்தலங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம் , பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடத் தோளிலிருந்து இறங்கி பருத்த தனங்களூடேவந்து படிந்து கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது.முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள்.இக்கோயிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.
----------------------------------------------------------------------------------------
15. சந்த்யாந்ருத்த மூர்த்தி

தேவர்கள் சிவபெருமானின் உதவியில்லாமல் பாற்கடலைக் கடைந்தனர். அதில் மந்திரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு கடைந்தனர்.  இதில் வாசுகியின் வாயையும் வாலையும் தேவர்களும், அசுரர்களும்  இழுக்கும் பொருட்டு  வாசுகி கொடிய ஆலகால விஷத்தைத் துப்பியது அவ்விஷம் அனைவரையும் எதிர்த்தது, எதிர்ப்பட்ட திருமாலும் அதன் முன் உடல் கருகினார். இதனைக் கண்ட தேவர்கள் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் தேவர்களின் துயரைப் போக்க அவ்விஷத்தை உண்டார். அதனால் அவர்க்கு ஒன்றும் நேரவில்லை எனினும் ஒரு விளையாட்டை நிகழ்த்தினார். அவ்விஷம் அவரைத் தாக்கியது போல், மயங்குவது போல் உமா தேவியின் முன்பு மௌனமாய் உறங்குவது போல் இருந்தார்.  இதனைக் கண்ட தேவர்கள் அவரை அர்ச்சித்து அன்று முழுவதும் உறக்கம், உணவின்றி இருந்தனர்.  அந்தத் திதியை நாம் ஏகாதசி என்போம். மறுநாளாகிய துவாதசியில் தேவர்கள் பாராயணஞ் செய்தனர். அதற்கு மேற்ப்பட்ட திதியான திரயோதசியில் சிவயபெருமான் சூலம், உடுக்கை சகிதம் ஒரு சாமகாலம் திருநடனம் செய்தார். அந்த காலத்தை நாம் பிரதோஷம் என்போம். அதாவது பதினைந்து தினங்களுக்கொருமுறை வரும் திரயோதசியை நாம் மாத பிரதோஷம் என்றும், வருடத்திற்கொருமுறை வரும் மகா சிவராத்திரியை வருடப் பிரதோஷம் என்றும், தினசரி மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தையும் நாம் பிரதோஷ காலமாகக கொள்ளலாம்.

சிவபெருமான் நிருத்தம்(நிருத்தம் - நடனம்) செய்வதைக் கண்ட தேவர்கள் மனம் மகிழ்ந்தனர். தனது கரங்களை சிரத்திற்கு மேல் தூக்கி சிவசிவ என்று   ஆர்ப்பரித்தனர்.  ஆடினர், பாடினர், தேவர்கள் அவர் நடனத்திற்கு ஏற்றவாறு வாத்தியங்களும், விஷ்ணு மிருதங்கமும் வாசித்தனர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நடனம்  ஆடியதால் அவரது பெயர் சந்த்யாந்ருத்த மூர்த்தி என்றானது. அவரை தரிசிக்க  மதுரை செல்ல வேண்டும்.  சதாசிவமூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான  முகத்திலிருந்து தோன்றிய வடிவமே நடராஜமூர்த்தி யாவார். அவரது வடிவமே சந்த்யாந்ருத்த மூர்த்தி போன்ற பல வடிவமாகப் பறந்து விரிந்தது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ள இவரை வணங்குவோமானால் நம் தொழில்களை காப்பதுடன் பலகலைகளில் சிறப்பு பெற உதவுவார்.  செந்தாமரையால் அர்ச்சனையும், தேங்காய் சாத நைவேத்தியமும் திங்கள், புதன் கிழமை மாலையில் செய்ய தடங்கள் அகழும், விரோதிகள்  ஒழிவர். நன்மை பாராட்டுவர்.  மதுரை நடராஜ பெருமானுக்கு பன்னீரால் அபிசேகம் செய்தால் கல்வியறிவு  மேன்மையடையும் என்பது ஐதீகம்.
----------------------------------------------------------------------------------------
14. புஜங்கத்ராச மூர்த்தி

தாருவனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவரது துணைவியர்களோ  கற்பே சிறப்புடையது என்றும் வாழ்ந்து வந்தனர். இவர்களை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். பிட்சாடண கோலத்தில் சிவபெருமானும், மோகிணி கோலத்தில்  திருமாலும் அவ்வனம் சென்று  முனிவர்களின் தவத்தையும், துணைவியரின்  கற்பையும் சோதித்தனர்.  இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தவத்தை அழித்தது மோகிணி அவதார மெடுத்த திருமால் என்றும், கற்பை பரிசோதித்தது  பிட்சாடண ரூபம் கொண்ட சிவபெருமான் என்றும்   தங்களது தவ வலிமையால் அறிந்தனர்.  அதனால் கோபம் கொண்டு விஷ மரங்களை குச்சிகளாக்கி  அதை நெய்யில் நனைத்து ஹோமம் வளர்த்து வந்தனர்.  அதிலிருந்து வந்த பல கொடியப் பொருள்களை சிவனின் மீது ஏவினர். சிவனே அவற்றையெல்லாம்  உடை, சிலம்பு, ஆயுதம், சிரோ மாலை, சேனை என்று உருமாற்றி தன்னிடம் வைத்துக்கொண்டார். தாங்கள் ஏவிய பொருள்கள் அனைத்தும் அவருக்கு ஆபரணமாகவும், படையாகவும் மாறியதை அறிந்த  முனிவர்கள்  பெரும் கோபம் கொண்டனர். மேலும் அதிக விஷமுள்ள பாம்புகளை சிவனின் மீது ஏவினர். அந்த பாம்பு  உலகை நாசமாக்கும் பொருட்டு தன்னுடைய  நான்து பற்களில்  கடும் விஷத்துடன்  சிவபெருமானை அடைந்தது  அவரும் அதற்கு சிறிது பயப்படும் படி நடித்து விட்டு தன்னுடலில்   ஏற்கனவே ஆபரணமாக உள்ள பாம்புகளுடன்  சேர்ந்து விடும்படி  கூறி சேர்த்தார். அப்பாம்புகள் அவருடலில் கங்கணம்(கைவளை, காப்பு) காலணி அரைஞான் கயிறு ஆகியவையாக அணிந்து  கொண்டு காட்சிக்  கொடுத்தார்.  தாருவனத்து  முனிவர் ஏவிய பாம்புகள் அவரை அச்சுருத்தியமையால் அவரை புஜங்கத்ராச மூர்த்தி என்றனர். (புஜங்கள் - பாம்பு, திராசம் - பயப்படுதல்)

புஜங்கத்ராச மூர்த்தி யை தரிசிக்க நாம் செல்ல வேண்டி தலம் பெரும்புலியூர் ஆகும். இந்த சிவபெருமான் கோயிலில் தான் சிவன் தன்னுடைய  ஆடையாக  பாம்புகளை அணிந்த படி  காட்சிக் கொடுக்கின்றார். இந்த வடிவத்தையே  நாம் புஜங்கத்ராச மூர்த்தி என்கின்றோம்.  இவரை வணங்கினால்  ராகு தோஷம் நிவர்த்தியடையும்.  இவருக்கு சோமவாரம் அல்லது குருவாரத்தில்  வில்வார்ச்சனையும், சம்பா அன்ன நைவேத்தியமும் கொடுக்க கடன் தொல்லை தீரும். இங்குள்ள சிவபெருமானை மஞ்சள் நீரால் அபிசேகம் செய்ய ராகு கால தோஷம், சர்ப்ப கால தோஷம்  விலகும்.
----------------------------------------------------------------------------------------
13. புஜங்கலளித மூர்த்தி

காசிப முனிவரின்  மனைவியரான  கத்துருவிற்கும், வினந்தைக்கும்  தங்களில்  அடிகானவர்  யார் என்றப் போட்டி ஏற்பட்டது. அப்படி அழகானவள்  மற்றவளை சிறையில்  அடைக்க  வேண்டும் என்ற  முடிவுடன்  கணவரான  காசிபரை  நாடினார். கணவரோ கத்துருவே  அழகி  என்றுக்கூறினார், இதன் விளைவாக வினத்தை சிறையில்  அடைக்கப்பட்டார். தன்னை விடுவிக்கும் படி கத்துருவை  வேண்டினாள். கத்துருவோ தனக்கு  அமிர்தம்  கொடுத்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்றார். உடன்  வினந்தை தன் மகனான கருடனின் வனத்திற்கு இதைக் கொண்டு சென்றார். கருடனும் தேவலோகம் சென்று போரிட்டு  அமிர்தத்துடன் செல்லும் போது திருமால் கருடனுடன் போரிட்டு வெல்ல முடியாமல் பறவை ராஜனே உன் பெருமைகளைப் போற்றினோம், உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் என்றார். கருடனே பதிலுக்கு திருமாலே உன் வலிமையை கண்டுகளித்தேன் நீ உனக்கு வேண்டிய இரண்டு வரங்களை கேள் என்றார். திருமாலும் இதுதான் சந்தர்ப்பமென  தனக்கு வாகனமாக இருக்க வேண்டியும், அரவங்களுக்கு அமுதம் கொடுக்காதிருக்கவும் வரம் வாங்கினார்.

கருடனும் அதற்கிசைந்து கொடுத்து விட்டு  அமுதத்துடன் சிறைக்கு வந்து தாயிடம் கொடுத்தார். பின்னர் சிவபூஜை செய்து சிவபெருமானிடம் பலவரங்களைப் பெற்றுப் பின்னர் அன்று முதல் திருமாலின் வாகனமானார். மேலும் கருடன் திருமாலிடம் பெற்ற வரத்தினால் மற்றொரு தாயான கத்துருவின் கட்செவிகளைக் கொன்று கொடுமைப் படுத்தினார். இதனால் கோபம் கொண்ட நாகங்கள் சிவபூஜை செய்து தங்களுக்கு இறவாபுகழும், கருடனிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும் வேண்டினர். உடன் சிவபெருமானும் வேண்டிய வரத்தைக் கொடுத்து விட்டு நாகங்களை தன்னுடலில்  ஆபரணமாக  அணிந்து கொண்டார். இதனையே நாம் என்ன கருடா சௌக்கியமா  என நாகங்கள் கூறுவதாக கொள்வோம். அதற்கு என்ன பொருளெனில் சிறியோரை கூடுதலைவிட  பெரியோரைச் சேருதலே சிறந்தது என்பதாகும்.  பாம்புகளுக்கு அபயமளித்ததால் சிவபெருமானுக்கு புஜங்கலளித மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது. ( புஜங்கம் - நாகம், லளிதம்- அழகு, ஆபரணம்) புஜங்கலளித மூர்த்தியை நாம் தரிசிக்க கல்லனை அருகேயுள்ள திருப்பெரும்புலியூர் செல்ல வேண்டும். சிவபெருமான் நாகங்களின் மீது நடனமாடிய திருக்கோயில் என்பதால் சிறப்பு பெற்றது. ராகுவின் அதிதேவதையான பாம்புவின் தலமென்பதால் இத்தல மூர்த்தியை வழிபட ராகு கிரகத் தொல்லைகள் விலகும், அவரது பார்வை நம்மீது பட்டு நற்பலன்களைக் கொடுக்கும். இவருக்கு நீலமலர் அர்ச்சனையும், பால், பழம், தேன் கொண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில் கொடுக்க  சர்ப்ப கால தோஷம் விலகும். பாம்பு பயம் நிவாரணம் பெறும்.  இங்குள்ள இறைவன் பெயர் வியாக்கிரபுரிஸ்வரர் இறைவி பெயர் சௌந்திரநாயகி என்பதாகும். இவர்களுக்கு மஞ்சள் நீரால் அபிசேகம் செய்தாலும் சர்ப்பகால, ராகு தோஷம் விலகும் என்பது கண்கூடாகும்.
----------------------------------------------------------------------------------------
12. இடபாந்திக மூர்த்தி

சதுர்யுகங்கள் இரண்டாயிரம் நான்முகனுக்கு ஒரு நாளாகும். அது நூறு கொண்டது நான்முகனது ஆயுட்காலமாகும், நான்முகனின் ஆயுட்காலமே விஷ்ணுவிற்கு ஒரு நாள் ஆகும். ஆக விஷ்ணுவிற்கு நூறு வயது கழிந்தால் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அழியும் என்பது  கணக்கு, அழியும் ஊழிகாலத்தில்  உமையுடன் சேர்ந்து திருநடனம் புரிவார் சிவபெருமான். இக்கணக்கினால் தர்மதேவதை வேதனை கொண்டது. தானும் அழிய வேண்டி வருமே என்ன செய்வது  சிவபெருமானிடம்  சரணடைவதுத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று சிவனை சரணடைந்தது. இடபமாக மாறி தர்மதேவதை  சிவனின் முன்பு நின்றது. ஐயனே நான் இறவாமலிருக்க வேண்டும். எப்பொழுதும் தங்கள் வாகனமாக நானிருக்கவும் ஆசி கூறுங்கள் என்றது.கேட்ட வரம் கொடுக்கும் அருட்கடலான சிவபெருமானும் இடபத்தில் தலை மேல் தனது கை வைத்து  தர்மதேவதையே உன் விருப்பம் நிறைவேற்றப்படும்.

 ஆகவே தருமத்தினை உலகிற்கு  உணர்த்த கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் இரண்டு கால்களுடனும் கடைசியாக  கலியுகத்தில் ஒரு காலுடனும் தோன்றி தர்மத்தினை நிலைநாட்டுவாய். மேலும்  எப்பொழுதும் என்னை நீ பிரியாமல் இருப்பாய் எனது வாகனமாகும் பேற்றையும் நீயேப் பெறுவாய் என்று திருவாய் எழுந்தருளினார்.தனது அடியார்களுக்கு காட்சியளிக்கும் சிவபெருமானின்  இடப வாத்திக தரிசன ரகசியம் இதுவேயாகும், இனி இடப வாத்திக மூர்த்தியை சரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருவாவடுதுறையாகும். இத்தலம் மயிலாடுதுறையருகே  அமைந்துள்ளது. இங்குள்ள மாசிலாமணிஸ்வரர்  கோயிலில்  அமைந்துள்ள இடபாந்திக மூர்த்தியை வணங்குவோமானால் ஊழிக்காலத்தில் நம்முடைய ஆன்மா சிவபெருமானை   தஞ்சமடையும்  என்பது  ஐதீகம்.  இவருக்கு திங்கள்,வியாழக்கிழமைகளில் வெண்தாமரை அர்ச்சனையும், பசுவின் பால் நைவேத்தியமும் கொடுக்க குரு தோஷ நிவர்த்தியுண்டாகும். மேலும் சிவபெருமானுக்கு வில்வ நீரால் அபிசேகம் செய்தால் மறுபிறவியிலும் சிவனருள் கிடைக்கும்.
----------------------------------------------------------------------------------------
11. இடபாரூட மூர்த்தி

திரிபுர அசுரர்களின் தொல்லை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேயிருந்தது. இனி பொருக்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று நந்தி தேவரின் அனுமதியிடன் சிவபெருமானை தரிசித்தனர். சிவனும்  போரிற்கு வேண்டிய ஆயுதங்களை தயார் நிலையில் வைக்கும் படி ஆணை இட்டார். ஆயுதங்கள் தயாரானதும்  சிவபெருமானும், உமாதேவியும்  தருமதேவதையாகிய வெண்ணிற இடப வாகனத்தில் கைலாய மலையை விட்டு இறங்கி வருகின்றனர்.  இதனைக் கண்ட அனைவரும் சிவதுதி சொல்லத் துவங்கினர். பின்னர் தேவர்களால் செய்யப்பட்ட தேரினைக்கண்ட சிவபெருமான்  இடபவாகனத்தை விட்டு இறங்கி மேருமலையை வில்லாகக் கொண்டு தேர் ஏறியவுடன் தேரின் அச்சு முறிந்தது. இதனைக் கண்ணுற்ற விஷ்ணு சிவன் பால் கொண்ட அன்பினால் இடப உருவமாகி சிவனைத் தாங்கினான். இதனால் விஷ்ணுவிற்கு  தலைகனம் ஏற்பட்டது. தன்னைத் தவிர வேறொருவருக்கும் சிவனைத் தாங்கும் சக்தி இல்லை என்ற எண்ணம் வலுப்பெற்றது.

இதனை அறிந்த சிவபெருமான்  விஷ்ணுவிற்கு பாடம் புகட்ட எண்ணி, தன்கனத்தை அதிகப்படுத்தினார். இதனைத் தாங்காத இடப வாகணமாகிய  விஷ்ணு, இரு செவி, இரு கண்கள், மூக்கு போன்றவை பிதுங்கியும், இரத்தம் வடிந்தும் செயலிழந்து தரையில் வீழ்ந்தார். இதனால் தேவர்கள் பயத்துடன் சிவதுதிகளை சொல்லி அவரை சாந்தப்படுத்தினர். விஷ்ணுவும் மனம்  வருந்தி மன்னிப்பு கேட்டார்.  விஷ்ணு தலைகனம் அழிந்தது. மனம் மகிழ்ந்த சிவபெருமான் பூமியில் இறங்கினார். பின்னர் விஷ்ணுவின் வலிமைகளை மறுபடியும் அழித்தார். விஷ்ணுவிடம் என்ன வரம் வேண்டுமென்றுக் கேட்க, விஷ்ணுவும் சிவபெருமான் வாமபாகத்திலிருந்து அவரைத் தாங்கும் சக்தியை தனக்கு கொடுக்க வேண்டும் என வேண்டினார். அதனை நிறைவேற்றிய சிவபெருமான் விஷ்ணுவின் விருப்பப்படி  அரியாகிய இடத்தை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏறியமர்ந்தார். எனவே சிவபெருமானுக்கு  இடபாரூட மூர்த்தி என்று திருநாமம் உண்டாகிற்று.

இடபாரூட மூர்த்தியை சரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் மயிலாடுதுறையருகேயுள்ள திருவாவடுதுறையாகும். இறைவனது திருநாமம்  கோமூத்திஸ்வரர், மாசிலாமணிஸ்வரர்  என்பதாகும். இங்குள்ள கோமூத்தி தீர்த்தத்தால் இடபாரூடரை அபிசேகம் செய்ய உடல் நோய் தீரும், குழந்தை பாக்கியம் உண்டாகும், திருமந்திர பொருள்  விளங்கும். அருகம்புல் அர்ச்சனையும், தாம்பூல நைவேத்தியமும் பிரதோஷ காலங்களில் கொடுக்க நினைத்தது நடைபெறும். உயர்பதவி கிட்டும். இங்குள்ள சிவனை வில்வ நீரால்  அபிசேகம் செய்ய அடுத்த பிறவியிலும் சிவனின்  அருள் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சந்திர கிரகணம்

⭐ சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்க படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும் போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

⭐ பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

⭐ சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது
பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மிது படுவதிலிருந்து மறைத்து விடுவதால் ஏற்படுவது ஆகும்.

⭐ சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும் அரை குறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும் கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

⭐ கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.

சந்திர கிரகணம் பற்றி புராணக் கதை :

⭐ சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்து விடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார்.

⭐ ஆனால் சந்திரன், பகவானை பிரார்த்தித்து ஸ்லோகங்கள் சொல்லவும் இறைவன் சந்திரனுக்கு அருள சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது.

⭐ இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனை பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.

⭐ கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் என புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர் வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

⭐ கிரகணம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ள கூடாது.

⭐ கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது.

⭐ ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

⭐ செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

⭐ கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அது போலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

⭐ கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

⭐ ஆலய தரிசனம் செய்து விட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

⭐ கிரகணம் முடியும் பதினைந்து நிமிடங்கள் முன் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

⭐ சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளை கொடுக்கும்.
--------------------------------------------------------------------------------------
ஶ்ரீது₃ர்கா₃ஸப்தஶ்லோகீ ||

| அத₂ ஸப்தஶ்லோகீ து₃ர்கா₃ |ஶிவ உவாச
தே₃வி த்வம்ʼ ப₄க்தஸுலபே₄ ஸர்வகார்யவிதா₄யினீ |
கலௌ ஹி கார்யஸித்₃த்₄யர்த₂முபாயம்ʼ ப்₃ரூஹி யத்னத: ||

தே₃வ்யுவாச ஶ்ருʼணு தே₃வ ப்ரவக்ஷ்யாமி கலௌ ஸர்வேஷ்டஸாத₄னம் |
மயா தவைவ ஸ்னேஹேனாப்யம்பா₃ஸ்துதி: ப்ரகாஶ்யதே ||

ஓம்ʼ அஸ்ய ஶ்ரீது₃ர்கா₃ஸப்தஶ்லோகீஸ்தோத்ரமஹாமந்த்ரஸ்ய நாராயண ருʼஷி: | அனுஷ்டுபா₄தீ₃னி ச₂ந்தா₃ம்ʼஸி | ஶ்ரீமஹாகாலீமஹாலக்ஷ்மீமஹாஸரஸ்வத்யோ தே₃வதா: |
ஶ்ரீதூ₃ர்கா₃ப்ரீத்யர்த₂ம்ʼ ஸப்தஶ்லோகீ து₃ர்கா₃பாடே₂ வினியோக₃: ||

ஜ்ஞானினாமபி சேதாம்ʼஸி தே₃வீ ப₄க₃வதீ ஹி ஸா |
ப₃லாதா₃க்ருʼஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்ச₂தி || 1||

து₃ர்கே₃ ஸ்ம்ருʼதா ஹரஸி பீ₄திமஶேஷஜந்தோ:
ஸ்வஸ்தை₂: ஸ்ம்ருʼதா மதிமதீவ ஶுபா₄ம்ʼ த₃தா₃ஸி |
தா₃ரித்₃ர்யது₃:க₂ப₄யஹாரிணி கா த்வத₃ன்யா
ஸர்வோபகாரகரணாய ஸதா₃(அ)(அ)ர்த்₃ரசித்தா || 2||

ஸர்வமங்க₃லமாங்க₃ல்யே ஶிவே ஸர்வார்த₂ஸாதி₄கே |
ஶரண்யே த்ர்யம்ப₃கே கௌ₃ரி நாராயணி நமோ(அ)ஸ்து தே || 3||

ஶரணாக₃ததீ₃னார்தபரித்ராணபராயணே |
ஸர்வஸ்யார்திஹரே தே₃வி நாராயணி நமோ(அ)ஸ்து தே || 4||

ஸர்வஸ்வரூபே ஸர்வேஶே ஸர்வஶக்திஸமன்விதே |
ப₄யேப்₄யஸ்த்ராஹி நோ தே₃வி து₃ர்கே₃ தே₃வி நமோ(அ)ஸ்து தே || 5||

ரோகா₃னஶேஷானபஹம்ʼஸி துஷ்டா ருஷ்டா து காமான் ஸகலானபீ₄ஷ்டான் |
த்வாமாஶ்ரிதானாம்ʼ ந விபன்னராணாம்ʼ த்வாமாஶ்ரிதா ஹ்யாஶ்ரயதாம்ʼ ப்ரயாந்தி || 6||

ஸர்வாபா₃தா₄ப்ரஶமனம்ʼ த்ரைலோக்யஸ்யாகி₂லேஶ்வரி |
ஏவமேவ த்வயா கார்யமஸ்மத்₃வைரி வினாஶனம் || 7||

|| இதி து₃ர்கா₃ஸப்தஶ்லோகீ ஸம்பூர்ணா ||
--------------------------------------------------------------------------------------
உருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை!

உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர்.பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான்.இதைக் கண்டிகை என்றும் தாழ்வடம் என்றும் கூறுவர்.உருத்திராட்சத்தை தாசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம்.அணிந்தால் நூறு கோடி புண்ணியம்.ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம்.இலந்தைப்பழ அளவு மத்திபம்.கடலை அளவு அதமம்.புழுக்கள் குடைந்ததும் நசுக்கியதும் நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள் ஆகும்.ஒரே அளவுள்ளதும் உறுதியானதும் பெரியதும் சம முத்துகள் போன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து பின் உடலில் அணிய வேண்டும். உருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை.

*இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரிஸ்வரர் உருவம் உடையது.இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.

*மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது.இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.

 *நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம்.இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.

*ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது.இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.

*ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர்.இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன் பக்தியும் அறிவும் செல்வமும் கிடைக்கும்.

*அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.

*ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா.இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும் செல்வமும் கிடைக்கும்.

*எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்ரிதி அடையும்.அதிதேவதை அஷ்டவசு.

*இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும்.இதன் அதிதேவதை நவசக்தி.

*பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன்.இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படும்.

*பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர்.இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.

*பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம்.இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.

*பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும் சித்தியையும் சுகத்தையும் கொடுக்கிறது.இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.

*உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

* 108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.

* உருத்திராட்சத்தின் அடி பிரம்மா.நாளம் விஷ்ணு.முகம் உருத்திரர்.பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம் அதிக புண்ணியம்.தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம் பதினொரு முகம் பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூஜித்து அணிகின்ற மானிடர்கள் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம்.உருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும்.தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும்.குவிக்கும்.பிறப்பு இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் கண்டிப்பாக அணியக்கூடாது.சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்போரும் புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர் பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால் தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர் என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.
--------------------------------------------------------------------------------------
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹ ருண விமோசன ஸ்தோத்ரம்

1:தேவதா- கார்ய ஸித்யார்த்தம் - ஸபா - ஸ்தம்ப ஸமுத்பவம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

2:லக்ஷ்ம்யா - லிங்கித வாமாங்கம் பக்தானாம் வர - தாயகம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மா வீரம் நமாமி - முக்தயே!!

3:ஆந்த்ர - மாலா - தரம்,சங்க சக்ராப்ஜா - யுத தாரிணம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

4:ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம் கத்ருஜ விஷ நாசனம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

5:ஸிம்ஹ நாதேன மஹதா திக் தந்தி பய நாசனம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

6:ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யேச்வர விதாரிணம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

7:க்ரூர க்ரஹை:பீடிதானாம் பக்தானாம் அபய ப்ரதம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

8:வேத வேதாந்த யக்ஞேசம் ப்ரம்ம ருத்ராதி வந்திதம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

9:ய இதம் படதே நிதய்ம் ருணமோசன ஸம்க்ஜிதம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!!
--------------------------------------------------------------------------------------