வியாழன், 11 ஜூலை, 2019

திருச்சி உறையூர் தில்லை காளி குங்கும அலங்காரம் திரு உருவம் இன்று 10:07:19 புதன்கிழமை பதிவு செய்துள்ளோம். திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். வ்வொரு மாதப் பிறப்பை முன்னிட்டு இங்குள்ள தில்லை காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகளும் பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்தடியில் பதுவாக (உருவமற்ற நிலையில்) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கலிட்டு, சில பலிகள் இட்டு வழிபட்டு வந்தனர். நாளடைவில் காலச் சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது. ஓம் சக்தி ஓம்

ஒவ்வொரு வருடமும் தைமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மாதமாக இருக்கும் பெண்ணிற்கு என்னென்ன திருச்சடங்குகள் சம்பிரதாயங்கள் உள்ளனவோ அனைத்தையும் தான்தோன்றீஸ்வரர் உடனுறை குங்குமவல்லிக்கு செய்வித்து, பொன், காப்பு, வெள்ளிக் காப்பு, வேப்பிலை காப்பு மற்றும் ஐந்து விதமான சித்ரான்னங்கள் நிவேதனம் செய்வார்கள்.    லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, என மங்கல பொருட்களை அம்பிகைக்குச் சாத்தி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகளும், திருமணத்தடை அகல கன்னிப் பெண்களும், மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இந்த பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர்.



 லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, என மங்கல பொருட்களை அம்பிகைக்குச் சாத்தி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகளும், திருமணத்தடை அகல கன்னிப் பெண்களும் மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இந்த பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர். முதல் நாள் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி பிரசாதம் வழங்கப்படும். இரண்டாம் நாள் சந்தான பாக்கியம் வேண்டி வருபவர்களுக்கு அம்பாள் குஹாம்பிகையாக காட்சியளிக்கின்றாள். சந்தான பாக்கியம் வேண்டி வரும் அன்பர்களுக்கும் வளையல் பிரசாதமாக வழங்கப்படும் மூன்றாம் நாள் அம்பாள் கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். அவளை தரிசனம் செய்தால் மணமாகாத (ஆண்-பெண்) இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் வேண்டிக்கொண்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர்.

இங்குள்ள தில்லை காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகளும் பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்தடியில் பதுவாக (உருவமற்ற நிலையில்) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கலிட்டு சில பலிகள் இட்டு வழிபட்டு வந்தனர். நாளடைவில் காலச் சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது.

அதன்பிறகு அதற்கு பாதாளத்தில் கோயில் கட்டி பாதாள காளி என பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேற்பரப்பில் தில்லை காளி அமர்ந்துள்ளார். இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் கோபுரத்தில் ஆகாச காளி எழுந்தருளியிருக்கிறாள். இவளை அமாவாசையன்று மட்டுமே தரிசிக்கலாம். (அமாவாசை அன்று இரவு 8.30 - 10.00 மணி) இதுவரை எந்தவொரு ஆலயத்திலும் இல்லாத வகையில் பாதாள காளி, தில்லை காளி, ஆகாச காளி என மூன்று வகையான காளிகள் எழுந்தருளியுள்ளார்கள். பாதாளம் முதல் ஆலயம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்த ஆலயம் இதுவேயாகும். இக்காளியை வழிபாடு செய்வது பெரும் பாக்கியமாக மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் இப்பிரபஞ்சத்தில் காளி சக்தியை மொத்தமாக வழிபாடு செய்யும் ஒரே இடம் இக்காளி ஆலயம்தான். இக்காளியை வழிபட்டால் எல்லாவிதமான பெண் தெய்வங்களையும் வழிபாடு செய்த பெரும் புண்ணியம் கிடைக்கும். அமாவாசையன்று மட்டும்தான் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியும்.

ஜெயகாளி: தில்லை காளிக்கு அருகில் ஜெயகாளி சந்நதியும் உள்ளது. ஜெயகாளியின் கோஷ்டத்தில் பிரத்யங்கரா, தக்ஷண காளியும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அமாவாசையன்றும் காளிக்கு வரமிளகாய் தீபம் ஏற்றப்படுகிறது. மிளகாய் தீபம் ஏற்றுவதால் பங்காளி சண்டை, பில்லி சூன்யம் நிவர்த்தி, குடும்பத்தில் அமைதி, தீராத வியாதிகள் நிவாரணம் அடைதல், வராத கடன் திரும்ப வருதல், செய்வினை கோளாறு, கண் திருஷ்டி ஆகியவற்றுக்கு சிறந்த பரிகாரம் என மிளகாய் தீபத்தை ஏற்றிக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இந்த தீபம் ஏற்றப்படும். மேலும் ஜெயகாளிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராகு காலத்தில் வாய் பேச இயலாத குழந்தைகள் சரளமாகப் பேசவும், கல்வியில் சிறக்கவும் இஞ்சி, தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனைத்து சிவாலயங்களில் பைரவர் விக்ரகம் காணப்படும். பைரவர் ஆலயத்திற்கு காவலாக இருக்கக் கூடியவர்.

 இந்தக் கோயில் கி.பி. 871ல் ராசகேசரிவர்மன் என்ற சிறப்பு பெயர் பெற்ற ஆதித்த சோழனால் கட்டப்பட்டிருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் தான்தோன்றீஸ்வரர். இறைவி குங்குமவல்லி. அன்னைக்கு காந்திமதி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தக் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் இவற்றுடன் கூடியதாக உள்ளது. அர்த்த மண்டபத்திற்குள் நுழையும்முன்பு வாயிலின் இருபுறமும் மிகப்பெரிய இரண்டு துவாரபாலகர் சிலைகள் உள்ளன. கருவறையில் இறைவன் பெரிய உருவில் சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார்.

மகாமண்டபத்தில் அம்மன் சந்நதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். உட்பிராகாரத்தில் இறைவனின் எதிரே நந்தியும் தென்புறம் தட்சிணாமூர்த்தியும் செல்வ விநாயகரும், மேல்புறம் தண்டாயுதபாணியும், வடக்கே சண்டிகேஸ்வரும், வடகிழக்கு மூலையில் நவகிரக மண்டபமும், தேவகோட்டத்தின் மேல்புறம் பிரம்மா மற்றும் துர்க்கையின் திருமேனிகளும் அழகுற அமைந்துள்ளன. உறையூரை ஆட்சி செய்த சூரவாதித்த சோழன் என்ற மன்னன் சாரமா முனிவரின் செவ்வந்தி மலர் நந்தவனத்தில் ஆதிசேஷனின் மகள்களாகிய ஏழு நாக கன்னியரைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்தில் மோகம் கொண்டான். அவன் அவர்களை மணம் செய்துகொள்ள ஆசைப்பட்டான். ஆனால், அந்த கன்னிகையர் மறுத்துவிட்டனர். அரசன் நாகலோகம் சென்று ஆதிசேஷனின் அனுமதி பெற்று அந்த கன்னிகையரில் ஒருத்தியான காந்திமதியை மணந்தான்.

காந்திமதி சிவபக்தி மிகுந்தவள். அந்த பக்தியுணர்வு காரணமாக திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவரை நாள்தோறும் சென்று வணங்கி வந்தாள். அவள் கர்ப்பவதியானபோதும் தினந்தோறும் நடந்து சென்று இறைவனை வழிபட்டு வந்தாள். ஒருநாள் கொடிய வெப்பம் காரணமாக வழியில் மயங்கி விழ அன்று இறைவனை வழிபட இயலவில்லையே என வருந்தினாள். இந்தப் புராணச் சான்றாகவும் கர்ப்பவதியான காந்திமதி அம்மையின் நினைவாகவும் ஒவ்வொரு வருடமும் தைமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மாதமாக இருக்கும் பெண்ணிற்கு என்னென்ன திருச்சடங்குகள் சம்பிரதாயங்கள் உள்ளனவோ அனைத்தையும் தான்தோன்றீஸ்வரர் உடனுறை குங்குமவல்லிக்கு செய்வித்து, பொன், காப்பு, வெள்ளிக் காப்பு, வேப்பிலை காப்பு மற்றும் ஐந்து விதமான சித்ரான்னங்கள் நிவேதனம் செய்வார்கள்.

லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, என மங்கல பொருட்களை அம்பிகைக்குச் சாத்தி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகளும், திருமணத்தடை அகல கன்னிப் பெண்களும், மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இந்த பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர். முதல் நாள் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி பிரசாதம் வழங்கப்படும். இரண்டாம் நாள் சந்தான பாக்கியம் வேண்டி வருபவர்களுக்கு அம்பாள் குஹாம்பிகையாக காட்சியளிக்கின்றாள். சந்தான பாக்கியம் வேண்டி வரும் அன்பர்களுக்கும் வளையல் பிரசாதமாக வழங்கப்படும் மூன்றாம் நாள் அம்பாள் கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். அவளை தரிசனம் செய்தால் மணமாகாத (ஆண்-பெண்) இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் வேண்டிக்கொண்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர்.

இந்த ஆலயமானது ராஜகேசரிவர்மா என்ற சிறப்புப் பெயர் பெற்ற ஆதித்த சோழன் காலத்தில் கி.பி. 871-907ல் கட்டப்பட்டது. தேவகோட்டத்தின் மேற்புறம் லிங்கோத்பவர் காணப்படுகிறது. இக்கோயிலில் அம்மையப்பர் திருஉருவம் காணப்படுவதால் இக்கோயிலிலும் ஆதித்த சோழன் காலத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஒவ்வொரு மாதப் பிறப்பை முன்னிட்டு இங்குள்ள தில்லை காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகளும் பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்தடியில் பதுவாக (உருவமற்ற நிலையில்) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கலிட்டு, சில பலிகள் இட்டு வழிபட்டு வந்தனர். நாளடைவில் காலச் சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது.

அதன்பிறகு அதற்கு பாதாளத்தில் கோயில் கட்டி பாதாள காளி என பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேற்பரப்பில் தில்லை காளி அமர்ந்துள்ளார். இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் கோபுரத்தில் ஆகாச காளி எழுந்தருளியிருக்கிறாள். இவளை அமாவாசையன்று மட்டுமே தரிசிக்கலாம். (அமாவாசை அன்று இரவு 8.30 - 10.00 மணி) இதுவரை எந்தவொரு ஆலயத்திலும் இல்லாத வகையில் பாதாள காளி, தில்லை காளி, ஆகாச காளி என மூன்று வகையான காளிகள் எழுந்தருளியுள்ளார்கள். பாதாளம் முதல் ஆலயம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்த ஆலயம் இதுவேயாகும். இக்காளியை வழிபாடு செய்வது பெரும் பாக்கியமாக மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் இப்பிரபஞ்சத்தில் காளி சக்தியை மொத்தமாக வழிபாடு செய்யும் ஒரே இடம் இக்காளி ஆலயம்தான். இக்காளியை வழிபட்டால் எல்லாவிதமான பெண் தெய்வங்களையும் வழிபாடு செய்த பெரும் புண்ணியம் கிடைக்கும். அமாவாசையன்று மட்டும்தான் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியும்.

ஜெயகாளி: தில்லை காளிக்கு அருகில் ஜெயகாளி சந்நதியும் உள்ளது. ஜெயகாளியின் கோஷ்டத்தில் பிரத்யங்கரா, தக்ஷண காளியும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அமாவாசையன்றும் காளிக்கு வரமிளகாய் தீபம் ஏற்றப்படுகிறது. மிளகாய் தீபம் ஏற்றுவதால் பங்காளி சண்டை, பில்லி சூன்யம் நிவர்த்தி, குடும்பத்தில் அமைதி, தீராத வியாதிகள் நிவாரணம் அடைதல், வராத கடன் திரும்ப வருதல், செய்வினை கோளாறு, கண் திருஷ்டி ஆகியவற்றுக்கு சிறந்த பரிகாரம் என மிளகாய் தீபத்தை ஏற்றிக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இந்த தீபம் ஏற்றப்படும். மேலும் ஜெயகாளிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராகு காலத்தில் வாய் பேச இயலாத குழந்தைகள் சரளமாகப் பேசவும், கல்வியில் சிறக்கவும் இஞ்சி, தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனைத்து சிவாலயங்களில் பைரவர் விக்ரகம் காணப்படும். பைரவர் ஆலயத்திற்கு காவலாக இருக்கக் கூடியவர்.

இன்றும் கடைசியாக பைரவர்க்கு பூஜை நடத்தி ஆலயத்தின் சாவியை வைத்து பூஜித்து எடுத்துச் செல்வது சிவாலயங்களில் நடைபெறுவது வழக்கம். ஏனைய ஆலயங்களில் ஒரு பைரவர் மட்டும்தான் இருப்பார். இவ்வாலயத்தில் மட்டும்தான் சிறப்பாக அஷ்ட பைரவர் தமது மனைவி மற்றும் வாகனத்துடன் சிறப்பாக காட்சி தருகின்றார். பைரவர் திருவுருவத்தை பழங்காலம் தொட்டு அறிந்திருந்தாலும் இந்த சொர்ண பைரவர் திருவுருவத்தைக் கண்டறிவது அரிது. குறிப்பிட்ட சில ஆலயங்களில் இந்த சொர்ண பைரவரின் திருமேனி உள்ளது. இவ்வாலயத்தில் மட்டும்தான் நான்கரை அடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் பொன்குடம் ஏந்திச் சொர்ண தேவியை அணைத்தவாறு, மக்கள் கேட்கக்கூடிய வரங்களையும், பொன் பொருள் தரக்கூடிய நிலையில் சொர்ண பைரவர் எழுந்து அருளியுள்ளார். இவ்வாலயத்தில் தேய்பிறை அஷ்டபூஜை சிறப்பு வாய்ந்தது. தில்லை காளிக்கு இடதுபுறம் கருடவராகியின் திருமேனி உள்ளது. நாமும் ஒருமுறை இறைவன் தான்தோன்றீஸ்வரரையும், அன்னை குங்குமவல்லியையும் தரிசித்து நற்பயனைப் பெறுவோம்.


108 திவ்ய தேசங்கள் : 19
அருள் மிகு பக்தவத்சல பெருமாள் கோவில்

மூலவர் : பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
உற்சவர் : பெரும் புறக்கடல்
தாயார் : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)
ஸ்தல விருட்சம் : மகிழ மரம்
தீர்த்தம் : தர்ஷன புஷ்கரிணி
பழமை : 3000 வருடங்களுக்கு மேல்
புராண பெயர் : லட்சுமி வனம்
ஊர் : திருக்கண்ண மங்கை
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்
   
 
மங்களாசாசனம் : பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்களாரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன். திருமங்கையாழ்வார்

திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
   
முகவரி : அருள் மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில்  திருக்கண்ணமங்கை : 610104 திருவாரூர் மாவட்டம். போன் : +91 4366 278 288, 98658 34676

பொது தகவல் : தரிசனம் கண்டவர்கள், வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள்.
   
ஸ்தலபெருமை : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்', "ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால்- திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள். இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள் பாலிப்பதால் பக்தர் ஆவி என்றாகி "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.

தர்ஷன புஷ்கரிணி : மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன)புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி (தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.

திருக்கண்ண மங்கையாண்டான் : நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ணமங்கையாண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒரு நாள் இவர் வேதபாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்துவிட்டது.

ஸ்தல வரலாறு : பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது. லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும் இங்கேயே திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.


புதன், 10 ஜூலை, 2019

108 திவ்ய தேசங்கள்-20

அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்

மூலவர் : நீலமேகப்பெருமாள்
உற்சவர் : சவுரிராஜப்பெருமாள்
தாயார் : கண்ணபுரநாயகி
தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி
ஆகம பூஜை : வைகானஸம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கிருஷ்ணபுரம்
ஊர் : திருக்கண்ணபுரம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார்
மங்களா சாஸனம் : இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே. நம்மாழ்வார்

திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
   
முகவரி : அருள் மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம் - 609 704. நாகப்பட்டினம் மாவட்டம். போன்:  +91- 4366 - 270 557, 270 718, 99426 - 56580.

திருவிழா : வைகாசியில் 15 நாள், மாசியில் 15 நாள் பிரம்மோற்ஸவம்.
   
ஸ்தல சிறப்பு : இத்தலத்தில் உள்ள உற்சவர் "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும் போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும், "அழகு' என்றும் பொருள்கள் உண்டு.
   
பொது தகவல் : இங்குள்ள பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் உத்பலாவதக விமானம் எனப்படுகிறது.
   
ஸ்தலபெருமை : சவுரிராஜப் பெருமாள் ஒரு சமயம் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாத்திய மாலையை தன் காதலிக்கு சூடிவிட்டார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்து விடவே, அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே, தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு போட்டு விட்டார். அதில் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக்கண்ட மன்னர் மாலையில் முடி எப்படி வந்தது? என கேட்டார். அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது என பொய் சொல்லிவிட்டார். மன்னனுக்கு சந்தேகம் வரவே, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். சுவாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்துவிட்டுச் சென்றார் மன்னர். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார்.மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயரும் பெற்றார். இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும், "அழகு' என்றும் பொருள்கள் உண்டு.

சுவாமி சிறப்பு : இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார்.அமாவாசைதோறும் உச்சிகால பூஜையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இத்தலத்தை நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.

கர்வம் அழிந்த கருடன் : தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி அவர் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது சுவாமியை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். மாசி பவுர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது பக்தர்கள் சுவாமியை "மாப்பிள்ளை!' என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனர்.

முனையதரையன் பொங்கல்: முன்னொரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். தினசரி பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக பணத்தை எல்லாம் செலவழித்ததால் வறுமையில் வாடிய அவர் மன்னனுக்கும் வரி கட்டவில்லை. எனவே, மன்னன் அவரை சிறைப்பிடித்துச் சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் மனைவி. அவர் பெருமாளுக்கு மானசீகமாக (மனதில் நினைத்து) நைவேத்யம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டியிருந்ததைக் கண்டார். இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்படவே அவர்கள் முனையதரையன் படைத்த பொங்கலை சுவாமி உண்டதை அறிந்து கொண்டனர். அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை "முனையதரையன் பொங்கல்' என்றே சொல்கின்றனர். இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கி றார்கள். தோஷத்தால் பாதிக்கப் பட்ட இந்திரன் இங்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இத்தலம் பூலோக வைகுண்டம் என கருதப்படுவதால் இங்கு சொர்க்கவாசல் இல்லை. திவ்யதேசங்களில் கீழை வீடாக இருக்கும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.

திருநெற்றியில் தழும்பு : உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம். முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி, "பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ' என்று கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது. "தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்' என்ற பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார். (சந்தேகம்)

"ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம். இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.
இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது. உற்சவ பெருமாளுக்கு சவுரி முடி வளர்ந்ததால் சவுரி ராஜ பெருமாள் என்று பெயர். சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது. திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ (ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே. நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார். கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்.

திருப்புற்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை(பால் பாயாசம்) அது போல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம். 108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம், வடக்கு வீடு திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு திருமாலிருஞ் சோலை (அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் ஆகும்.

ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர். மகாவிஷ்ணுவிடம் "அஷ்டாட்சர மந்திரம்' கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர். முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.
அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்

மூலவர் : வையம்காத்த பெருமாள்
உற்சவர் : ஜெகத்ரட்சகன்
தாயார் : பத்மாசனவல்லி
ஸ்தல விருட்சம் : பலா
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
ஆகமம்/பூஜை : வைகானஸம்
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : சங்கமாபுரி, தர்ப்பாரண்யம்
ஊர் : திருக்கூடலூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
பாடியவர்கள்: திருமங்கையாழ்வார்
   
கூற்றேரு ருவிற் குறளாய் நிலநீ ரேற்றா னெந்தை பெருமானூர் போல் சேற்றேர் உழவர் கோதை போதூண் கோற்றேன் முரலுங் கூடலூரே. திருமங்கையாழ்வார்.
திருவிழா : வைகாசி விசாகத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.
   
ஸ்தல சிறப்பு: பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று . கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான பலா மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றியிருக்கிறது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
   
திறக்கும் நேரம்: காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி: அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர் - 614 202. தஞ்சாவூர் மாவட்டம். போன்:
+91- 93443 - 03803, 93452 - 67501.
 
தகவல்  : இத்தல பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக் கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சுத்தஸத்வ விமானம் எனப்படுகிறது.
   
ஸ்தல பெருமை : பிரயோக சக்கரம்: இத்தலத்தில் பெருமாள் தன் கையில், கிளம்புவதற்கு தயார் நிலையில் இருக்கும் "பிரயோகச் சக்கரத்துடன்' இருக்கிறார். அம்பரீஷன் எனும் மன்னனர் பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டிருந்தான்.  தன் படைகள் மீது அதிகம் கவனம் செலுத்தாமல் பக்தியிலேயே திளைத்திருந்தான். இதனால் எதிரிகளிடம் தன் நாட்டையும் இழந்தார். ஆனாலும் கவலைப்படாத அம்பரீஷன், எப்போதும் மகா விஷ்ணுவின் திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டு, அவருக்காக விரதங்கள் இருப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருசமயம் அவர் ஏகாதசி விரதம் இருந்தபோது துர்வாச மகரிஷி அவரைப் பார்ப்பதற்கு வந்தார். விரதத்தில் மூழ்கியிருந்ததால் மன்னர் துர்வாசரை கவனிக்கவில்லை. அம்பரீஷன் தன்னை அவமதிப்பதாக எண்ணிய துர்வாசர், அவனை சபித்தார். மகரிஷியின் கோபத்திற்கு ஆளான அம்பரீஷன் மனம் வருந்தி மகா விஷ்ணுவை வேண்டினான். தன் பக்தனை காப்பதற்காக மகாவிஷ்ணு துர்வாசர் மீது சக்கராயுதத்தை ஏவினார். சக்கரம் துர்வாசரை விரட்ட அவர் மகாவிஷ்ணுவை சரணடைந்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். மகாவிஷ்ணுவும் மன்னித் தருளினார். பின் அம்பரீஷன் இத்தலத்தில் பெருமாளுக்கு கோயில் கட்டி வழிபட்டான். அவனது பெயரால் சுவாமிக்கு "அம்பரீஷ வரதர்' என்ற பெயரும் ஏற்பட்டது. இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு பெருமாளின் சக்கரமே பாதுகாப்பாக இருந்து அவர்களை வழிநடத்தும் என்பது நம்பிக்கை.

பாவம் போக்கும் பெருமாள் : உலகில் உள்ள புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பர். அந்த நதிகள் எல்லாம் காவிரியில் சேர்ந்து தங்கள் மீது சேர்ந்த பாவங்களை போக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். இவ்வாறு மொத்த பாவங்களும் சேரப்பெற்ற காவிரி, தன் பாவங்கள் தீர பிரம்மாவிடம் வழி கேட்டாள். அவர் பூலோகில் இத்தலத்தில் உள்ள பெருமாளை வழிபட பாவங்கள் நீங்கும் என்றார். அதன்படி காவேரி இத்தலத்தில் பெருமாளை வேண்டி தன் பாவங்களை போக்கிக் கொண்டாளாம். முன்னொருகாலத்தில் இக்கோயில் வளாகத்தில் வசித்த கிளியொன்று அருகில் உள்ள நாவல் மரத்தில் இருந்து ஒரு பழத்தை பறித்து வந்து அதனை பெருமாள் முன் வைத்து "ஹரிஹரி' என்று சொல்லி அவரை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது. ஒருநாள் அந்த கிளி நாவல் பழம் பறித்துக் கொண்டு வந்தபோது, வேடன் ஒருவன் அதன் மீது அம்பை எய்தான். அம்பு தைத்த கிளி "ஹரிஹரி' என்று சொல்லியபடியே தரையில் வீழ்ந்தது. அருகில் சென்ற வேடன், கிளி பெருமாள் நாமத்தை சொல்லியதைக் கேட்டு பயந்து ஓடிவிட்டான். அப்போது மகாவிஷ்ணு அக்கிளிக்கு காட்சி கொடுத்தார். அதனிடம், ""நீ முற்பிறவியில் கற்றிருந்த கல்வியால் செருக்குடன் இருந்தாய். எனவே, கிளியாக சாபம் பெற்ற நீ இப்பிறவியில் என் திருநாமத்தை மட்டும் உச்சரிக்கும் பணியை செய்தாய்'' எனச் சொல்லி சாபவிமோசனம் கொடுத்தார். எனவே, இங்கு வழிபடுபவர்களின் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பம்சம் : கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான பலா மரம் உள்ளது. இம்மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றியிருக்கிறது. பெருமாளின் சக்கரம் துர்வாசரை விரட்டி சென்றபோது, இங்கு சங்கு பிரதானமாக இருந்ததாம். இதனை உணர்த்தும்விதமாக இம்மரத்தில் சங்கு வடிவம் இருக்கிறது. பிரயோக சக்கரம், சுயம்புவாக வெளிப்பட்ட சங்கு இவ்விரண்டையும் இங்கு தரிசிப்பது மிகவும் அரிய பலன்களைத் தரக்கூடியது. நவக்கிரக தலங்களில் கேது தலமான இங்கு பவுர்ணமியில் 108 தாமரை மலர்களுடன் "ஸ்ரீ ஷீக்த ஹோமம்' நடக்கிறது. பெருமாள் இத்தலத்தில் வராக அவதாரம் எடுத்து உட்சென்றவர் என்பதால் கருவறையில் சுவாமியின் திருப்பாதங்களுக்கு மத்தியில் இருக்கும் இடமே உலகின் மையப்பகுதி என்கிறார்கள். நந்தக முனிவர் தேவர்களோடு கூடி வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர். எனவே, இவ்வூர் "கூடலூர்' என்ற பெயர் பெற்றது.

ஸ்தல வரலாறு : இரண்யாட்சகன் எனும் அசுரன் ஒரு சமயம் பூமாதேவியுடன் சண்டையிட்டு பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். எனவே பெருமாள் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று அவளை மீட்டு வந்தார். பெருமாள் இத்தலத்தில் தரையைப் பிளந்து பூலோகம் சென்று, அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டு வெளியில் வந்தார் என தலவரலாறு கூறுகிறது. இதனை உணர்த்தும் விதமாக திருமங்கை யாழ்வார் இத்தலத்தை "புகுந்தானூர்' என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார். வையகத்தை (பூமியை) காத்து, மீட்டு வந்தவர் என்பதால் இவர் "வையங்காத்த பெருமாள்' எனப்படுகிறார்.


யஜுர் வேதத்தின் நல் உபதேசங்கள்

QUOTES FROM YAJUR VEDA

1. அன்னத்தை உட்கொள்ளும் அக்னியை நான் அன்ன ஸம்ருத்திக்காக வளர்த்து வருகிறேன்.

I rear Agni which consumes food for the availability of sufficient food.

2. ஓ அக்னியே!யஜமானனுக்கு மிகுந்த சக்தியை அளிப்பாயாக!

Oh Agni - grant strength to the Master .

3. இந்த யஜ்ஞம் உலகத்தின் மையமாகும்

This Yagna is the centre point of the world.

4. யஜ்ஞத்தின் மூலம் ஆத்மிக பலம் வளரட்டும்.

Let the inner strength g row through Yagna.

5. ஓ அக்னியே கெட்டவர்களை என்னிடமிருந்து விலக்குவாயாக!

Oh Agni - seperate me from bad company.

6. ஒளிமயமான அக்னியை வளர்த்துக் கொண்டு நாம் நூறு வருஷங்கள் ஒளி பெறுவோமாக!

Let me live for hundred years rearing the bright Agni .

7. ஓ அக்னியே! யஜமானனுக்கு உணவையும், பலத்தையும் கொடு!

Oh Agni - give strength and food to the Master.

8. நெய்யினால் ஒளிர்கிற அக்னியே! இந்த யஜமானனை உயர்ந்த பதவிக்கு அழைத்துச் செல்!

Oh Agni - which is bright of ghee - lead the Master to high status.

9. தேவலோகமும், பூலோகமும் நெய் நிரம்பியதாகட்டும்!

Let this world and the heavenly world be full of ghee.

10. யஜ்ஞத்தால் கண் பார்வை மிளிரட்டும்!

Let the eye sight be perfect and bright through Yagna.

11. கார்ய நிர்வாஹ சக்தியும், பலமும் எனக்கு உண்டாகட்டும்.

Let the strength and ability to administer perfect be best owed on me.

12. அந்த பரமாத்மா உங்களை மிகச் சிறந்த கர்மாவான யஜ்ஞ்த்தைச் செய்ய அவகாசம் அளிக்கட்டும்.

Let the Paramathma grant me the oppurtunity to perform the Yagna, the grea test of the rites.

13. யஜ்ஞம் செய்வபவன் மனித இனத்தில் ஒளிமிக்கவனாய் பிரகாசிக்கறான்.

One who performs Yagna shines well in the humanity.

14. பெரிய விண்ணுலகும், பூவலகும் எங்கள் இந்த யஜ்ஞத்தைப் பயனுள்ளதாகச் செய்யட்டும்!

Let the heavenly world amd this world make this Yagna fruitful.

15. ஓ அக்னியே!யோகக்ஷேமம் நன்கு அமையப் பெற்று, தனதான்யங்களால் நாங்கள் மகிழ்ச்சி பெறுவோமாக!

Oh Agni - let us all feel happy in life with all the materials available to us and our welfare made perfect .

16. அறிவுடையோர், ஜலமும், சூர்யனும் சந்திக்குமிடத்தில் தியானத்தின் மூலமாக ஆத்ம தத்வம் பெறுகிறார்.

The learned get the inner realisation by meditation at the confluence of water and sun.

17. ஓ அக்னியே!அறிவுடையோர் புத்தி என்ற குகையில் இருக்கின்ற உன்னை பெற்றார்கள்.

Oh Agni. the wise people got you at the cave of intelect (Budhi) .

18. ஐந்து நதிகள் (ஐந்து அறிவுக்கரணங்கள்) தங்கள் கிளைகளுடன் சேர்ந்து ஸரஸ்வதீயை (புத்தியை) சேர்ந்து விடுகின்றன.

The five rivers (the five organs of knowledge ) with their branch es, merge with saraswathi (intelect) .

19. ஓ ஜீவனே!நீ மனித படைப்புக்கு சுகம் விளைப்பவனாக ஆகு!

Oh Jiva - Let you be the giver of happiness to the human creation.

20. ஓ ஜீவனே! c ஈஸ்வரனை நோக்கிய மனதுடன் தியானம் செய்!

Oh Jiva - turn your mind towards the almighty and meditate.

21. இந்த உடலாகிய தேர் புத்தி, ப்ராணன், அபானன் என்பவற்றால் சுமந்து செல்லப்படுகிறது.

The body chariot is driven by Buddhi, Prana and Apana.

22. அந்த ஓளி மிக்க பரமபுருஷனிடமிருந்து காலத் துளிகள் அனைத்தும் உண்டாயின.

Time came out of the bright and shining Paramapurusha.

23. ஜ்ஞானி எல்லா பிராணிகளிடத்தும் பரமாத்மாவைகாண்கிறான்; அதனால் அவனுக்கு எதிலும் சந்தேகமில்லை.

The wise see god in all living beings and hence has no doubts in any thing.

24. வியாபகனான அந்த ப்ரபு எல்லா பிராணிகளிடத்திலும் இரண்டறக் கலந்துள்ளார்.

The omni present lord is merged in all the living beings.

25. புத்தியென்ற குகையில் வீற்றிருக்கும் அந்த பரம்பொருளை அறிவுடையோரே கண்டறிவர்.

Only wise could find the Paramathma who is in the cave of Buddhi.

26. அவர் ஸ்தோத்ரம் செய்கின்ற நண்பர்களை-உபாஸகர்களை-காக்கின்றார்.

He protects those who praise and befriendly.

27. அந்த ஈசனே இப்புவலகையும் மேலுகையும் தாங்குகிறார்.

The almighty alone bears this world and the heavenly world.

28. உனது கண்களும், முகமும் எத்திசையிலும் உள்ளது.

Your eyes and face are on all sides.

29. அந்த ஆளும் கடவுளின் தோழமையை அனைத்து மக்களும் விரும்புகின்றனர்.

All people desire the friendship of the ruling god.

30. அவர் தேவர்களின் பல பெயர்களுடையவராயினும் ஒருவரே.

Even though he has the various name s of the Devas, he is only one.

31. நீர் எங்கள் தீய பாபங்களைப் போக்குவீராக.

Please absolve us from severe sins.

32. அவருது கருணையே அம்ருதமென்ற மோக்ஷம்; கருணையின்மையே மரணம்.

His compassion is the salvation called nector,His noncompassion is the death.

33. அவர் ஆத்ம சக்தியையும் உடல் பலத்தையும் அளிக்கிறார்; அனைவரும் ஆணையை ஏற்கின்றனர்.

He grant s inner strength and physical strength for all who obey his order s.

34. எவர் பரம் பொருளை அறிந்து வைத்துள்ளனரோ அவருக்கு தேவர் வசப்படுகின்றனர்.

To one who has realised the Paramathma, all the Devas become friendly.

35. பரம் பொருளை அறிவதன்றி மோக்ஷத்திற்கு வேறு வழி இல்லை.

There is no other way to attain salvation without kno wing the Paramathma.

36. ஐஸ்வர்யம் மிக்கவரான ஈஸ்வரனே!உன்னைத் தவிர வேறு கருணையுள்ளவர் இல்லை.

Oh wealthy Eashwara. None is there who is compassionate like you.

37. ஸ்தோத்ரம் செய்யும் நாங்கள் வலிமை வேண்டி உன்னையே அழைக்கிறோம்.

We praise and invite you to get strength from you.

38. தத்வஞானிகள் கெட்டவர்களின் பழிச்சொல்லைப் பொறுத்துக் கொள்கிறார்கள்.

Philosophers do not care the defaming words of others.

39. அந்த கடவுள் எல்லார் உள்ளும் நிரம்பியுள்ளார்;வெளியிலும் பரவியுள்ளார்.

That God is prevailing in and out of all the living beings.

40. ஒன்றே தான் என்ற உண்மை அறிந்த பின் மோஹமேது, துக்கமேது?

When realised that there is only one, where is confusion or sor row ?

41. இந்த அனைத்துலகமும் நோயின்றியும், மனமகிழச்சி கொண்டு இருக்க வேண்டும்.

Let this world be without Disease and full of happiness.

42. இந்த மங்களகரமான வேதவார்த்தையை உலக மக்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

I give out this words of Veda which are auspicious to the people of the world.

43. இந்த யஜமானனுக்கு பிறக்கும் மகன் பண்பாடுள்ளவனாகவும் வீரனாகவும் இருக்கட்டுமே!

Let the Son born to this Master be of character and valour.

44. மரம், செடி, கொடிகள், காய் கனிகளுடன் மிளிர்ந்து உறைவதாக!

Let the trees, plants and creepers be full of fruits.

45. எங்கள் வேண்டுகோளுக்கு இசைந்து மேகம் மழை பொழிவதாக!

Let the clouds pour down rain conceeding to our prayers.

46. ஓ அன்னபதியே!எங்களுக்கு நோய் தடுப்பதும், வலிமை கொடுப்பதுமான உணவை ஈந்தருள்வாயாக!

O Lord of food - give us the food that would protect us from disease and give us strength.

47. எனக்கு விவசாயம் மூலமான உணவும், நல்ல மழையும் கிடைப்பதாக!

Let me get good food out of agriculture and good rain.

48. ஓ விவசாயிகளே! கலப்பையை கட்டுங்கள்; நுகத்தடியை பூட்டுங்கள்!

Oh agriculturists - put in to use the ploughs, yoke them.

49. ஓ பெண்ணே! c உறுதியான எண்ணங்களுடன் முன்னேறுவாயாக!

Oh girl - proceed forward with strong thoughts.

50. c (மனைவி) நெய் பால் முதலியவற்றோடு செழித்து, மக்களைப் பெற்று இங்கு மகிழ்ந்திடு!

you (Wife) be happy here with wealth of ghee and milk and bear good children.

51. மனைவி நற்செயல்களை பாதுகாக்கிறாள்!

The wife protects the good deeds.

52. c (மனைவி) அமைதியாக இருந்து குடும்பத்தை தாங்குவாயாக!

You (wife) be calm and run the family with responsibility.

53. ஓ அக்னியே!பதி - பத்னியரை நல்லொழுக்கம் அன்பு கொண்டவராக்கச் செய்!

Oh Agni. make the couple (the husband and wife) of good character and affectionate.

54. தம்பதியர் அன்பு கணிந்தவராய், ஓளிமிக்கவராய் நல்லெண்ணம் கொண்டவராய் இருக்கக்கடவது!

The couple shall be of loving, prosperous, and good thinking.

55. நம் தாம்பத்ய வாழ்க்கை நூறு வருஷங்கள் வரை முறிவுபடாமல் தொடரட்டும்.

Let our married life continue for hundred years without break.

56. மற்றவரின் விருப்பம்போல் இசைந்திருக்கிற தம்பதிகள் பெறும் செல்வம் பெறுவர்.

The couples those adjust to the wish of others lead a prosperous life .

57. நமது அம்பு எப்பொழதும் வெற்றி பெறட்டும் நமது வீரர்கள் மேம்பட்டு விளங்கட்டும்

Let our ar row s al way s succeed. Let our warriors reach exalted positions.

58. எங்கெங்கே நமக்கு குறைவு நேருமோ அங்கெல்லாம் அச்சமின்மையை அளித்திடிவீர்.

wherever we may get dishonour, let us be grant ed fearlessness.

59. நாம் ஒருவருக்கொருவர் நட்புறவு கொண்ட கண்ணுடன் பார்ப்போம்.

Let us each look at each other with friendly eyes.

60. எல்லா பிராணிகளும் என்னை நட்புக் கண்ணோடு காணட்டும்.

Let all living beings see me with friendly eyes.

61. ஓ அக்னியே!நீ உடலை காப்பவனாயிருக்கிறாய்;என் உடலைக் காப்பாயாக!

Oh Agni - you are the protector of this body : protect my body .

62. ஓ ஈசனே!நீ நண்பர்களாகிய எங்களுக்கு செல்வம், புத்தி இவற்றை கொடுத்து புஷ்டியடையச்செய்!

Oh Eashwara - you grant us the friends, good intellect and wealth and make us happy.

63. என்னிடம் புகழ் செல்வம் இடங்கொள்ளட்டும்.

Let fame and wealth stay with me.

64. நாம் நன்மை பயக்கும் திவ்ய ஞானத்தை எங்கள் விருப்பம் நிறைவேற பிரார்த்திக்கிறோம்.

We pray for the good result bearing intellect for the fullfilment of our desires.

65. எங்கள் மனித இனத்திற்கும், பிராணிகளுக்கும் சுபம் உண்டாகட்டும்.

Let there be prosperity for the mankind and animal kingdom.

66. தேவர்களே!காதுகளால் நல்லதையே கேட்போம்!

Oh Devas. Let us hear only good tidings.

67. நாம் கண்களால் நல்லவற்றையே காண்போம்.

Let us see only good sights.

68. இந்த உலகில் கர்மாக்களைச் செய்து கொண்டே நூறு வருஷங்கள் ஜீவத்திருக்க விரும்ப வேண்டும்.

One should wish to live for hundred years doing their duty .

69. உனது நாக்கு நெய்போல் இனிமையை உமிழட்டும்.

Let your tongue al way s spillout sweet things as ghee.

70. மனிதனை நல்ல செய்தியைச் சொல்லவே கடவுள் அனுப்பியுள்ளார்.

God has sent men to propagate good news.

71. ஹ்ருதயத்தைப் பினக்கும் படி பேசுபவரை வருணன் வெறுக்கிறார்.

Varuna hates those who speak to heartbreak others.

72. விழித்துக் கொண்டோ, உறங்கிக்கொண்டோ செல்ல எங்கள் பாபத்தை சூர்யன் விலக்குவாராக!

Let Surya eliminate our sins done while wakeful and sleeping.

73. அக்னி தேவன் என்னை எல்லா பாபங்களிலிருந்தும், கஷ்டங்களிலிருந்து விடுபடச் செய்ய வேண்டுமே!

Agni should releive me from all sins and difficulties.

74. பசுவதை செய்யாதே;ஏனெனில், பசு அதிதி தேவதை, எங்கும் வியாபித்தது.

Do not kill cows. They are athithi Devathas and omni present.

75. நெய், பால் இவற்றை கொடுக்கும் பசுவை துன்புறுத்தாதே!

Do not torture cows which give milk and ghee.

76. ஊக்கத்தினால் ஸத்யரூபமான பிரம்மத்தையடையலாம்.

By your perseverance you will attain the Brahma which is the personification of truth .

77. உண்மை பேசுவோரின் உண்மைப் பேச்சு ஐஸ்வர்யத்தைக் கருதியே இருக்கட்டும்.

Let the speech of those who talk only truth , be for the prosperity.

78. ஓ அக்னியே உன்னை உபாஸிப்பவர் எப்போதும் துன்பமடைய வேண்டாம்.

Oh Agni, Let not those who worship you encounter any hardship.

79. யாகம் செய்பவரின் விருப்பங்கள் நிறைவேறடடும்.

Let the desires of the performer of Yaga be fulfilled.

80. அக்னி நம்மை பாபங்களிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் விலக்கி காக்கக்கட்டும்!

Let the Agni protect us releiving us from the sins and difficulties.

81. அக்னி ரூபயமான ஈசனே! c ஐஸ்வர்யத்திற்காக எங்களை நல்வழியில் இட்டுச் செல்வாயாக!

Oh Esahwara in the form of Agni. Lead us in the right path for our prosperity.

82. ஓ அக்னியே! உனது பாதுகாப்பில் நாங்கள் எங்கள் விருப்பத்தை அடைவோமாக!

Oh Agni . Let us get our desires fulfilled under your protection.

83. ஓ அக்னியே எங்களுக்கு அன்னைத்தையும் பலத்தையும் கொடு.

Oh Agni. grant us the food and strength.

84. ஓ அக்னியே! c நன்கு விழித்தெரு;ஜாக்ரதையாக இரு.

Oh Agni - you be wakeful and be beware.

85. ஓ அக்னி c எங்களுக்கு நன்மை கொடுப்பவனாக இரு.

Oh Agni - you be our benefactor.
“தர்பையின் மகிமை”

  க்ருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகள்
(வேதபாஷ்ய ரத்னம்,வேதாந்த மீமாம்ஸா சிரோமணி)

நமது வாழ்க்கைக்கு உணவு, ஜலம், காற்று எல்லாம் தேவை. உணவு என்பது தான்யங்களின் மூலம் கிடைக்கிறது. பசி என்ற நோயை குணப்படுத்துவதால் தான்யங்களுக்கு ஓஷதிகள் என்று வைத்து தைத்திரீய உபநிஷத்தில் “ஓஷதீப்யோ அன்னம்” எனப்படுகிறது.

உணவினால் உயிருக்கு பலம் ஏற்படுதல் மட்டும் போதாது. பல நோய் எதிர்ப்பு சக்தியையும் நாம் பெற வேண்டும். அதற்காக விசேஷமாக ரத்த ஸுத்திக்காக அருகம்புல் மிகவும் பயன் படுவது போல தர்பை எனப்படும் புல்வகையானது சில சூழ்நிலைகளில் உள்ள கெடுதல்களை போக்கடிக்கும் தன்மை பெற்றது என்று வேதத்திலேயே கூறப்படுகிறது.

1.பவித்ரம் வை தர்பா : தர்பையானது புனித தன்மையைத்தருகின்றன. நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது. எனவே தான் நாம் எந்த ஒரு செயல் (வைதீககார்யங்கள்) செய்ய ஆரம்பிக்கும் போதும் தர்பத்தில் உட்கார்ந்து கையிலும் தர்ப்ப பவித்ரத்தை அணிகிறோம்.

2.“தர்பையின் உத்பத்தி”: வேதத்தில் பல முறை இந்த கதை வருகிறது. இந்திரன் வ்ருத்ராஸுரனை கொன்ற பொழுது வ்ருத்ராஸுரனின் தலை நதியில் விழுந்தது. அப்போது ஜலத்தில் இயல்பாக உள்ள ஒரு விசேஷமான சக்தி தெய்வத்தன்மை இரண்டும் நதியின் கரையோரத்தில் வெளிவந்து மண்டியது. அந்த இடத்தில் உடனே தர்பை முளைத்தது. எனவே யாகாதிகளான செயல்களுக்கு தேவையான சக்தியும் தெய்வத்தன்மையும் தன்னுள்ளே கொண்டுள்ளதாக தர்பையானது கருதப்படுகிறது.”இந்த்ரோ  வ்ருத்ரமஹன்………தே தர்பா அபவன்” (6.1.1)இதே ஸந்தர்பம் ப்ராம்ஹணத்திலும் (3.2.4)வருகிறது.

3.“அக்னியின் ப்ரதிநிதி”: கடைந்து எடுக்கும் அக்னி உற்பத்தியாகா விடில் மற்ற தீக்ஷிதரின் அக்னியை எடுத்து கொள்ளலாம். அதுவும் கிடைக்காவிடில் தர்பஸ்தம்பத்தில் ஹோமம் பண்ணலாம். தர்பஸ்தம்பத்தில் அக்னியின் ஸாந்நித்யம் உள்ளது. ”தர்பஸ்தம்பே ஹோதவ்யம். அக்னிவான் வை தர்பஸ்தம்ப:”(3.7.3)

4.“தீயகதிர்களைத்தவிர்ப்பது”: சந்திர ஸூர்ய க்ரஹணகாலங்களில் வீடுகளில் பெரியவர்கள் தொன்று தொட்டு ஊறுகாய் போன்ற நீடித்து பயன்படுத்தும் உணவு பொருட்களில்(ஜாடி பாட்டில்) தர்பையைக்கிள்ளி அதன் துண்டை உள்ளே போடுகிறார்கள். ஏனெனில் வெளியிலே அந்த நேரத்தில் வரும் தீயகதிர்கள் வாயிலாக உணவு பொருட்களில் கெடுதல் ஏற்படாதவாறு தர்பை தடுக்கும் தன்மை வாய்த்தது. இவ்வாறு நமது மூதாதையர்கள் பயன் படுத்தி வரும் தர்பைக்கு பலப்பல விசேஷங்கள் உள்ளன.உடல் வலிமையும் புத்தி கூர்மையும் கூட அவற்றால் ஏற்படும் என்று ஊகிக்க முடிகிறது. ஏனெனில் பாணிணி முனிவர் கௌமுதியை எழுதும் போது “பவித்ர பாணியாக உட்கார்ந்து ஆலோசித்து எழுதினார்” என்று மஹாபாஷ்யத்தில் கூறப்படுகிறது. ஒரு புனிதச்செயல் செய்யும் நேரத்தில் நமது சக்தி தடைபடாமலிருக்க நாம் கையில் தர்பத்தினாலான பவித்ரத்தை தரிக்கிறோம். முழுமையாக அந்த வேலை பூர்தியாகும் வரை கழற்றாமலிருப்பது நம் செயலுக்கு உதவுகிறது.

5.“சக்தியை பரிமாறுவது”: இந்த விதத்திலும் தர்பை உபயோகிக்கப்படுகிறது. யஜமானன் தனக்கு பதிலாக புரோஹிதரை கார்யங்கள் செய்யுமாறு அதிகாரத்தை மாற்றித்தரும் போதும். ஸ்த்ரீகளே சில கார்யங்கள் (பித்ருகார்யங்கள்) செய்ய நேரிடும் போதும் தர்பங்களை மற்றவருக்கு கொடுத்து தன் அதிகாரத்தை மாற்றுவதும் வழக்கத்தில் உள்ளது.
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய

மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய

த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய

நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய

ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.

சிங் சிங் சிவாய ஓம் எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.

ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.

லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
அத்தி வரதர் தரிசனம் - ஒரு சிறப்புப் பார்வை

ஒரு மாதமாக அத்தி வரதர் புராணம், ஒரு வாரமாக அத்தி வரதரை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சி, இரண்டு நாளாக அதைப் பற்றிதான் அனைவரிடமும் பேச்சு..நாங்கள் 30 பேர் சேர்ந்து விட்டதால் மூன்று வேன்கள் புக் பண்ணிக் கொண்டோம். முகநூலிலும், வாட்ஸ்ஸப்பிலும் அத்தி வரதரை வசதியாக பார்க்க சிறந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதை அறிந்து எந்த சிபாரிசும், ஏற்பாடுகளும் இல்லாமல் பொது தரிசனத்திலேயே கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். இன்று விடிகாலை நாலு மணிக்கே எழுந்து கிளம்பி வழியில் குடிக்க கொஞ்சம் கஞ்சியை எடுத்துக் கொண்டு என் அம்மாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

எல்லோரும் வந்த பின் 6.20க்கு கிளம்பி காஞ்சி புரம் சென்று 8 மணிக்கு பச்சையப்பா பார்க்கிங்கை அடைந்தோம். அங்கு கஞ்சியை குடித்து இயற்கை உபாதைகளை (மிக சுத்தமாக இருந்தது) முடித்துக் கொண்டு ஷட்டில் சர்வீஸ் சிற்றுந்தில் ஏறி (பத்து ரூபாய் டிக்கெட்) கோவில் ஏதோவொரு கோபுர வாசலில் இறங்கினோம். நிறைய செல்ஃபி எல்லாம் எடுத்துக் கொண்டு  பந்தாவாக வரிசையில் சேர்ந்து கொள்ள ஆயத்தமானோம்.

 நடந்தோம்..நடந்தோம்..நடந்தோம். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் நடந்து க்யூவில் இணைந்தோம். க்யூவிற்கு தடுப்போ கயிறோ கம்பியோ ஒன்றும் இல்லை.நெறிப் படுத்த கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போலீஸும் இல்லை. க்யூ நகரவே இல்லை. கால் மணிக்கு ஒரு தடவை நாலு அடி வைத்து பூப்போல நகர்ந்தோம். நேரம் ஆக ஆக சூரியனார் தன் வேலையைக் காட்டத் துவங்கினார். க்யூவின் நடுவில் மக்களும் கூட்டம் கூட்டமாக இஷ்டத்திற்கு நுழைந்து தங்கள் உரிமையை நிலை நாட்டினர். ஆங்காங்கே செருப்புக் குவியல் வேறு.  கட்டுப் படுத்ததான் யாரும் இல்லையே.
ஆனாலும் அத்தி வரதர் மேல் கொண்ட காதலில் எல்லோரும் மெதுவாக ஊர்ந்து சென்றோம்.

முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னர்கள் ஆண்ட தமிழ் மண்ணில் இந்த பாமர மக்களுக்கு  நிழல் கொடுக்க ஒரு பந்தல் போட வேண்டும் என்று யாருக்கும் தோணவில்லையே என்று புலம்பினேன்.   சுட்டெரிக்கும் வெயிலில் நாவறண்ட மக்களுக்கு தாகம் தீர்க்க ஒரு தண்ணீர் பந்தல்?? அதுவும் வள்ளல் பச்சையப்பர் வாழ்ந்த ஊரில்??  ம்ஹும்..

வழி நெடுக கடைகளில் தண்ணீர்,குளிர் பானம் விற்றனர். சாதாரண தண்ணீர் 20 ரூபாய்..குளிர்ந்த நீர் 25 ரூபாய். அவர்களும் பாவம். சமயம் வரும்போது கொஞ்சம் பணம் பார்க்க வேண்டாமா? திருச்சி, சேலம், கோயமுத்தூர் எல்லா ஊர்களிலிருந்தும் நிறைய செலவழித்துக் கொண்டு குடும்பத்தோடு வந்த மக்களுக்கு மேலும் செலவுதான். சரி.செலவையும் பார்க்காமல் அத்தி வரதர் தரிசனம் ஒன்றே குறிக்கோளாய் இந்த வெகுளிக் கூட்டம் இன்ச் இன்ச்சாக முன்னே நகர்ந்தது. இரண்டரை மணி நேரத்தில் கோவில் வாசல் கிட்டே கூட போக முடிய வில்லை. உள்ளே நுழைந்த பின் இன்னும் நிறைய தூரம் போக வேண்டுமாம்.

மனம் வலிமையானாலும் உடல் வலிமை வேண்டாமா? இப்போது தண்ணீர் கடைகளும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக சூரியனுக்கும் தாகமோ என்னவோ எல்லோர் உடலிலிருந்தும் தண்ணீரை உறிஞ்ச ஆரம்பித்தான். முன்னே ஒரு பெண்,பின்னே ஒரு சின்ன பையன்,இந்தப் பக்கம் ஓரு பாட்டி அந்த பக்கம் ஒரு அம்மா என்று ஒருவர் ஒருவராக தலை சுற்றி சாய்கிறார்கள். யார் அங்கே?? முதலுதவிக்கு யாராவது??? கூட்டம் எல்லா பக்கத்திலிருந்தும் நெருக்க பயம் வந்து பாதி பேர் க்யூவிலிருந்து வெளியே போக முடிவெடுக்கிறார்கள். என் அம்மாவிற்கு வயது எண்பது. வயதானவர்களுக்கு பேட்டரி கார் இருக்கு என்றார்களே.. எங்கே? யாருக்கும் தெரியவில்லை.

அத்தி வரதர் பற்றிய எண்ணம் மறைந்து கணவரும் குழந்தைகளும் கடமைகளும் ஞாபகம் வர நாங்களும் ஒருவர் ஒருவராக வெளியேற ஆரம்பித்தோம். எங்கே போவது? எப்படி போவது? எல்லோரிடமும் கெஞ்சி நிறைய பேரிடம் திட்டு வாங்கிக் கொண்டு பல பேரை சிரமப் படுத்தி ஒரு வழியாக அந்த தகர தடுப்பினுள் நுழைந்து வெளியே வந்து சுதந்திரமாக.மூச்சு விட்டோம். நாங்கள்தான் அப்படியென்றால் அங்கங்கு பிரிந்திருந்த எங்கள் க்ரூப் மக்கள் எல்லோரும் ஃபோன் பண்ணி நானும் வந்துட்டேன், நீ எங்க இருக்க? என்று குசலம் விசாரித்துக் கொண்டு சேர்ந்து கொண்டனர்.

எங்கள் உறவினர் ஓருவர் கீழே விழுந்து விட்டார். உதவிக்கு  ஒரு போலீஸோ முதலுதவிக்கு எதாவது மருத்துவ வசதியோ இல்லை. தாகம் பசி தீர்க்க தண்ணீர் பந்தலோ ஒரு உணவு விநியோகமோ நடத்த ஒரு வாலன்டியர் கூட கண்ணில் தென்படவில்லை. நாம் பல வீடியோக்கள்,வாட்ஸ் அப் மெஸேஜில் பார்த்தது போல் பாட்டரி கார்???? எனக்குத் தெரிந்து யாருமே எங்குமே பார்க்க வில்லை. செருப்பு ஒரு வாசலில் போட்டால் இன்னொரு வாசலில் கலெக்ட் பண்ணிக் கொள்ளலாம் என்று ஓரு செய்தி. ஆனால் ஒரு செருப்பு போடும் இடம் கூட எங்கள் கண்ணில் பட வில்லை.

பார்க்கிங் ஏரியா போக ஆட்டோ காரர்கள் வாய்க்கு வந்த ரேட் கேட்டார்கள். ஒரு வழியாக அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து பார்க்கிங் ஏரியாவிற்கு வரும்போது மணி இரண்டு. அத்தி வரதர் எங்களுக்கு எட்டாத அதிசய வரதராக ஆனதை நினைத்து வருந்திக் கொண்டே வேனில் உட்கார்ந்த வேளையில் வி.ஐ.பி பாஸ் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்து போலீஸார் உதவியோடு உள்ளே நுழைந்து சர்வ சாதாரணமாக தரிசனம் செய்து திரும்பியவர்கள் ஏராளம் என்ற நிதர்சனத்தை நினைக்கையில் மனம் வலித்தது.

நான் சென்னையில் இருக்கிறேன். நிறைய பெரிய மனிதர்களை தெரியும். விஐபி பாஸ் வாங்கிக் கொண்டு போய் மீண்டும் ஒரு முறை போய் தரிசனம் செய்து விடலாம். ஆனால் தனக்கு வசதியான தரிசனத்தை இந்த அரசு மற்றும் காஞ்சிபுரம் நகராட்சி ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழகத்தின் பல மூலைகளிலிருந்து வந்த அப்பாவிக் கூட்டம் என்ன செய்யும்??

அவர்களுக்கு ஏன் இந்த சிரமம்??

நாற்பது வருடங்களுக்கு ஓருமுறை வரும் இந்த அபூர்வ நிகழ்வை அற்புதமாக நடத்தும் வாய்ப்பை ஏன் காஞ்சிபுரம் கோட்டை விட்டது??

மாவட்ட கலெக்டர் என்ன செய்கிறார்??

விஐபிக்களை அழைத்துச் செல்வதை தவிர இதில் போலீஸாரின் பங்கு என்ன??

ஏன் எந்த கார்பொரேட் கம்பெனிகளோ இந்த பட்டு நகரத்தின் பண முதலைகளோ எந்த வித ஆதரவும் கொடுக்க வில்லை?

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நிகழ்வைப் பற்றி ஏன் தப்புத்தப்பாக செய்திகள் வெளியிட்டு அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள்??

ஏன்??ஏன்??ஏன்??

பதில்....கேள்விக் குறி மட்டுமேதான்.

பி.கு. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தை எங்கள் கும்பகோணம் மிக மிக சிறப்பாக நடத்தியதை நினைத்து பெருமைப் படாமல் இருக்க முடிய வில்லை.

மேலும் ஒரு பின் குறிப்பு: பொது தரிசனத்தில் போக விரும்பினால் விடிகாலை ஆறு மணிக்குள் க்யூவில் நின்றால் இரண்டு மணி நேரத்தில் தரிசனம் கிடைக்கும். குறைந்த பட்சம் வெயிலிலிருந்து தப்பிக்கலாம்.
விநாயகரை பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்கள்

நமக்கெல்லாம் தெரிந்து (வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர்) மற்றும் விநாயகரைப்பற்றி தெரியாத ரகசியமும் தொடர்பான அரிய பதிவு

ஆன்மீகத்தில் இருக்கும் விநாயகர் வழிபாடு தொடர்பான மிக ரகசியமான ஒரு விஷயத்தை இங்கே உங்களுக்காக பதிவிடுகிறேன். நமது மூளை வலப்பகுதி, இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக இருப்பது நம்  அனைவருக்கும் தெரிந்திருக்கும். மூளையின் இடது, வலது பாகங்கள் தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடப்பக்க மூளை உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறது விஞ்ஞானம். இதையே நம் சாஸ்திரம் பிங்கலை இடங்கலை நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது, இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. நமது வலது பக்க மூளை செயல் படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும்.
அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.

நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்
இனி கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள். விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய இரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளவும். வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும் இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.

வலது நாசிக் காற்று (சூரிய கலை)
**************************************

* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.

* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.

* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.

* உடலின் வலிமை அதிகரிக்கும்.

* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.

* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)
*************************************

* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.

* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.

* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.

* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.

* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.

* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.

விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள். பிராணன் (சுவாசம்) இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அவரை வழிபடுவதன் மூலம் அரசமரம் நாளொன்றுக்கு வெளியிடும் 2400 கிலோ பிராண வாயுவை சுவாசித்தும் கருப்பை கோளாறுகளை போக்கியும்  அரசமரக் காற்றினால் மூளையின் செயல் பாடுகளை தூண்டி மன அமைதியை பெறுகின்றோம்.

விநாயகரின் விக்ரஹ மகிமையை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை. அதனால் தான் நாம் விநாயகர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை. விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம்...

ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுகிறோம்.

எனவே வாருங்கள்! விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும்  ஆற்றல் இருப்பதால் அவரை வணங்கி  ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.




ஹிரண்ய சிரார்த்தம் தவிர்ப்போம்
அன்ன சிரார்த்தம் அளிப்போம்.

அந்த நாட்களில் வசதி இல்லாதவர் கூட ஹிரண்ய சிரார்த்தம் செய்ய யோசிப்பார்கள். ஆனால் தற்போது வசதியானவர்கள் கூட ஹிரண்ய சிரார்த்தமாக செய்கிறார்கள்.
அதையும் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் செய்கிறார்கள்.

அன்ன சிரார்த்தத்தில் தான் விசேஷமாக ஐந்து விதமாக பித்ருக்களுக்கு திருப்தி செய்யப்படுகிறது.

1.தேவரூபத்தில் இருப்பவர்களுக்கு ஹோமத்தில் அன்னம்.

2. மனுஷரூபத்திற்கு பிராமணாளுக்கு
போஜனம்.

3.கிருமி ஊர்வன ரூபத்திற்கு பிராமணாள் இலைக்குமுன் உதிரி அன்னம்.

4.பறவைகளுக்கு பெரிய வாயஸபிண்டம்.

5.மூன்று தலைமுறை பித்ருக்களுக்கு
ஆறு பிண்டம். எவ்வளவு விதம்!!!!!

தற்போது பல இடங்களில் அன்ன சிரார்தம் செய்து வைக்க வசதிகள் வந்து விட்டன. எனவே வருடத்திற்கு ஒருமுறை/இரு முறை வரும் தெவசங்களை அங்கு செய்யலாம். என்ன அதிகபட்சம் ரூ 10000 ஆகலாம். மனம் இருந்தால் முடியாதா என்று ஒன்று உண்டா.
ஆடி

* ஆடித் தென்றல் நாடு நடுங்கும்.

* ஆடிக் கீழ்க்காற்றும் ஆவணி மேல்காற்றும் அடித்தால் சொற்பனத்தாலும் மழையில்லை.

* ஆடி அமாவாசையில் மழை பெய்தால் அடுத்த அமாவாசை வரை மழை இல்லை.

* ஆடிப்பட்டம் தேடி விதை

*ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

*ஆடிப்பால் சாப்பிடாத மாப்பிள்யை தேடிப்பிடி 

* ஆடிக்கூழ் அமிர்தமாகும்

* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்

* ஆடி அரவெட்டை போடி ஆத்தா வீட்டில்

* ஆடி அமர்ந்தது ஒரு நாழிகையில்

* ஆடி அறவெட்டை, அகவிலை நெல்விலை

* ஆடிக்கரு அழிந்தால் மழை குறைந்து போம்

* ஆடிக்காற்று எச்சில் கல்லைக்கு வழியா? 

* ஆடிக்காற்றிலே அம்மியே மிதக்கும் போது இலவம் பஞ்சுக்கு என்ன சேதி?

* ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடிச்சு செருப்பாலடி

* ஆடிக்கொரு தடவை, அமாவாசைக் கொரு தடவையா?

* ஆடி மாதத்தில் குத்தின குத்து, ஆவணி மாதத்ததில வலி எடுத்த தாம்

* ஆடி விதை தேடிப் போடு

* ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி

* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்

* ஆடி வாழை தேடி நடு

* ஆடி வாழை தேடிப்போடு

* ஆடி அவரை தேடிப்போடு

* ஆடி அடி அமுங்கினால் கார்த்திகை கமறடிக்கும்

* ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்

* ஆடி கழிந்த எட்டாம் நாள் கோழி அடித்துக் கும்பிட வந்தான்

* ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற் தை பிறந்தால் உப்புப் பானையைத் திற

* ஆடி மாதம் அடியெடுத்து வைக்காதே

* ஆடி முதல் பத்து. ஆவணி நடுப்பத்து. புரட்டாசி கடைப்பத்து. ஐப்பசி முழுதும் நடவு செய்யாதே

* ஆடியில் ஆனை ஒத்த கடா. புரட்டாசியில் பூனை போல் ஆகும்

*ஆடி மாதத்தில் குத்தின குத்து ஆவணி மாதத்தில் வலி எடுத்ததாம்

சகுனம் - மழையும், ஆற்று பெற்றமும்

* ஆடிக்கரு அழிந்தால் மழை குறைந்து போகும்

* ஆனி அடைச்சாரல். ஆவணி முச்சாரல். ஆடி அரை மழை; ஆடி அடிக்கரு; ஆடிக்கருச் சிதைந்தால் மழை குறையும். ஆடி அமாவாசையில் மழை பெய்தால், அடுத்த அமாவாசை வரை மழை இல்லை. ஆடிக் காற்றில் உதிரும் சருகு போல் வனவளம்

ஆடி, ஆவணி

* கச்சான் பெண்களுக்கு மச்சான் (கச்சான் - ஆடி, ஆவணியில் வீசும் வறண்ட காற்று) 

மடமை 

* ஆடி மாதம் பிறந்த நரி ஆவணி மாத வௌ்ளத்தைப் பார்த்து, ‘என் ஆயுளில் இவ்வளவு வௌ்ளத்தைக் கண்டதில்லை!’ என்றது இந்தியா பழமொழி.

காற்று - இடி - மின்னல்

* ஆடி, ஆவணி, கீழ்க்காற்றும் ஐப்பசி மேல் காற்றும் அடித்தால் சொற்பனத்திலும் மழை இல்லை.

* ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை

வானவில் 

* ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசியில் வில் போட்டால் பஞ்சம்.

* ஆடிப்பட்டம் தேடி விதை.

* ஆடிப்பிள்ளை தேடிப் புதை.

* ஆடிக் கொரு விதை போட்டால் கார்த்திகைக்கொரு காய் காய்க்கும். 

உழவியல்

* ஆடிமழையில் நாற்று நட்டால் காற்றோடு போகும். 

* ஆடி வாழை தேடி நடு,

* ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு. 

* ஆடிப் பருவத்தைத் தேடி விதை.

* ஆடி வாழை தேடி சூடு. 

* ஆடிக்காற்றில் இலவம் பஞ்சு பறந்தது போல. 

* ஆடிப் பனங்காய் தேடிப் பொறுக்கு.

* ஆடிப்பட்டம் தேடி விதை. 

* ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு.

* ஆடிப்புழுதி ஆவணிச்சேறு.

* ஆடிக்கொரு விதை போட்டால் கார்த்திதைக்குக் காய் காய்க்கும்.

* ஆடி வாழை, தேடி நாடு.

* ஆடிப்பிள்ளை தேடி விதை. (வாழை, தென்னை)

* ஆடி மாதம் அடி மின்னலைப் பார்த்துப் பட்டறை திற