வியாழன், 15 ஜூன், 2017

அகத்தியர்

பெயர் : அகத்தியர் () அகஸ்தியர் () குடமுனி () கும்பயோகி () கும்பமுனி () பொதிகைமுனி
பிறந்த மாதம் : மார்கழி
பிறந்த நட்சத்திரம் : ஆயில்யம்
குரு : சிவன்
சீடர்கள் : போகர், மச்சமுனி
மனைவி : லோப முத்திரை (விதர்ப நாட்டு மன்னனின் மகள்)
மகன் : இத்மலாகன் () சங்கரன்
சமாதி : அனந்தசயனம் (திருவனந்தபுரம்), கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவில் என்றும் கூறுவார்.
வாழ்நாள : 4 யுகம் 48 நாட்கள்

தமிழ் தந்த அகத்தியர்….
தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் அகத்தியர். இவர் பொதிகையில் தவம் செய்ததால்பொதிகைமுனிஎன்றும், கும்பத்தில் பாய்ந்ததால்கும்பமுனிஎன்றும், அகத்தினுள்ளே ஈசனைக் கண்டதால்அகத்தியர்என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பற்றித் தமிழிலும், வடமொழியிலும் புராணக் கதைகள் பல உள்ளன. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட சாத்திரங்களும் உள்ளன. இவர் முருகக் கடவுளின் ஆணைப்படி முத்தமிழுக்கு இலக்கணமாக இயற்றியதுஅகத்தியம் என்பர். இதனைப் பேரகத்தியம் என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள் இருந்தன என்பர். சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் என்றும் அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார்
வடக்கே இமயமலையும் தெற்கே பொதிகை மலையும் இவருக்கு ஒன்றே. தமிழும், மருத்துவமும், ஜோதிடமும், இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின.
பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர் தான். தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர்.
தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரான இவர், பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் சரி, இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படும் அகத்தியர் குறித்து எண்ணற்ற செவிவழி கதைகளும் கூறப்படுகின்றன. இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர். இவர் எழுதிய சமரச ஞானம்என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
அகத்தியரின் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது.
இந்திரனின் சாபத்திற்கு ஆளாகிய ஊர்வசி பூலோகத்திற்கு வந்த சமயம் அவள் அழகில் மயங்கி மித்ரர் என்பவரும், வருணர் என்பவரும் காதல் வயப்பட்டனர். இதன் காரணமாக மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றனமுருகேசன். சி. எஸ். 2002, பக்கம் : 128
தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்து, சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றவர்.
கைலையில் நடந்த சிவபெருமான்பார்வதி திருமணத்தின் போது, முப்பது முக்கோடி தேவர்கள், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகள் என பலரும் வருகையில், பாரம் தாங்காமல் பூமி சாய்ந்து வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். அவ்வாறு செல்லும் பொழுது மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.கமலக்கண்ணன், பா 1993, பக்கம் 10
ராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர். சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து, அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படிஅகத்தியம்என்னும் நூலை இயற்றினார். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் ஆட்டுக் கறியாக சமைத்து விருந்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர்வாதாபே ஜீர்ணோ பவஎன்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்முருகேசன். சி. எஸ். 2002, பக்கம் : 131

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர்காக உருகொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார். புதுச்சேரிக்கு அருகிலுள்ளஉழவர் கரையில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதிஅகத்தீஸ்வரம்என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர். சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம். அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.


வல்லப சித்தர்

தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள் மட்டுமே இருந்தன. பெண்கள் திறமைசாலிகள். தங்களுக்கு கணவனோ, பிறரோ கொடுக்கும் பணத்திலோ, தாங்கள் உழைத்து சம்பாதித்ததிலோ சிறிதளவாவது மிச்சம் பிடித்து வெள்ளியிலோ, தங்கத்திலோ சிறுநகைஒன்றாவது வாங்கி விடுவார்கள். பொன்னனையாளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபக்தையான அவள், கூடல் மாநகராம் மதுரை அருகிலுள்ள திருப்புவனம் என்ற ஊரில் வசித்தாள். அங்குள்ள பூவன நாதர் அவளது இஷ்ட தெய்வம். அவரது ஆலயத்தில் சேவை செய்தது மட்டுமின்றி, ஆலயத்துக்கு வரும் சிவனடியார்களுக்கு, தான் ஆடிப்பிழைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவர் களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை யும் கொண்டிருந்தாள். அவளது கண்ணீருக்கு காரணம் தெரிய வேண்டுமே. அவளுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. திருப்புவனநாதர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அவருக்கு உற்சவர் சிலை இருந்தால், அதைக்கொண்டு திருவிழா நடத்தலாம். திருவிழா நடந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர் நோக்கி வருவார்கள். கோயிலின் வருமானம் பெருகும். கோயில் விருத்தியாகும். ஆனால், சிலை செய்ய யார் முன்வருவார்கள்? தானே செய்யலாம் என்றால் அதற்கு அந்தளவுக்கு பணமில்லையே! என்ன செய்வது? இதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தபடியே, தன்னையறி யாமல் உறங்கி விடுவாள். நடனமாடும் நேரத்தில் கூட, இந்த சிந்தனை அவளை வாட்டிக் கொண்டிருந்தது.

ஒருநாள், அவளது ஊருக்கு சில சிவனடியார்கள் வந்தனர். அவர்களை தனது இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள் பொன்னனையாள். அடியார்களும், அவளது பக்தியைப் பற்றி ஊரார் சொல்லக் கேள்விப் பட்டு, அவளது இல்லத்துக்கு சென்றனர். அங்கு அனைவருக்கும் உணவு படைத்தாள். சம்பாதிக்கும் பணமெல்லாம், அடியவர்களுக்கு உணவளிப்பதிலேயே செலவழித்து விடுவாள். அவர்கள் சாப்பிட்டது போக மீதமிருந்தால், அதை மட்டுமே சாப்பிடுவது பொன்னனை யாளின் வழக்கம்.அன்று வந்திருந்த அடியவர் களில் ஒரு அடியவர் மிகுந்த தேஜஸுடன் இருந்தார். அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பொன்னனையாளுக்கு உதவியாக இருந்த மற்ற கணிகைகளும், அவளுடன் இணைந்து அடியவர்களுக்கு உணவு பரிமாறினர். அழகாக இருந்த அடியவர் மட்டும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தார். அதற்கான காரணம் புரியாத கணிகைகள், பொன்னனையாளிடம் அதுபற்றிக் கூறினர். பொன்னனையாள் அவரருகில் சென்று, சுவாமி! மற்றவர்கள் நான் அளித்த இந்த எளிய உணவை சாப்பிடும்போது, தாங்கள் மட்டும் சாப்பிடாமல் இருக்கிறீர்களே! உணவு சுவையாக இல்லையா? தங்களுக்கு வேறு ஏதாவது கொண்டு வர வேண்டுமா? தாங்கள் கேட்பதை நொடியில் சமைத்து தருகிறேன், என்றதும், அந்த அடியவர் சிரித்தார்.

அவரது சிரிப்பில் சொக்கிப் போனாள் பொன்னனையாள். அவரது சிரிப்பு அந்த இடத்தையே ஆனந்தமயமாக்கியது. அம்மையே! உலகுக்கே படியளக்கும் எனக்கு, நீ இன்று படியளந்திருக்கிறாய். அதை நினைத்தேன், சிரித்தேன், என்ற அடியவரின் பேச்சில் இருந்த சூட்சுமம், பொன்னனையாளுக்கு புரியவில்லை. உடனே அடியவர் அவளிடம், வருந்தாதே, மகளே! நீ தந்த உணவின் மணம் என்னைச் சாப்பிடத் தூண்டுகிறது. ஆனால், உணவளிக்கும் போது, பெண்கள் மகிழ்ச்சியான மனநிலையைக்காட்ட வேண்டும். அது முகத்தில் எதிரொளிக்க வேண்டும். உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது. ஏதோ, சோகத்தை மனதில் தாங்கிய நீ தரும் உணவை எப்படி என்னால் மகிழ்ச்சியுடன் சாப்பிட முடியும். நான் சொல்வது சரிதானே! உன் மனதை ஏதோ ஒரு கவலை வாட்டுகிறது என்பது உண்மை தானே! என்றதும், அவளது கண்களில் கண்ணீர் வைகை நதியின் கரை புரண்ட வெள்ளம் போல் பெருகியது. ஐயனே! தாங்கள் என் மன நிலையைப் புரிந்து கொண்டீர்கள். ஆனால், இந்த வருத்தம் என் சுயநலம் கருதியது அல்ல. எம்பெருமானுக்கு, ஒரு சிலை வடிக்க வேண்டும். அதைக் கொண்டு உற்சவம் நடத்தி, மக்களை எனது ஊருக்கு ஈர்க்க வேண்டும். இங்கிருக்கும் பூவனநாதர் கோயில் பெரிய அளவுக்கு உயர வேண்டும்.

மன்னாதிமன்னர்களும், பிரபுக்களும் இங்கு வந்தார்கள் என்றால், அவர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு கோயிலை பெரிதாக்குவேன். உற்சவர் சிலையை வடித்து முடிப்பேன். இதெல்லாம், எப்படி நடக்கப் போகிறதோ என்ற கவலை தான், என் முகவாட்டத்துக்கு காரணம். இருப்பினும், தங்கள் முன்னால் கனிந்த முகம் காட்டாமைக்கு வருந்துகிறேன். அடியவர், இந்தச் சிறியவளின் தவறை புறந்தள்ளி, அமுது செய்ய வேண்டும், என அவரது பாதத்தில் விழுந்து வேண்டினாள். அடியவர் அவளைத் தேற்றினாள்.


அகப்பேய் சித்தர்

திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் நடத்தி வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளைத் தேடி அலைந்தது.

மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் தரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக் கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரியபல மந்த்ர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்திரைவாழ்த்தி விட்டு வியாசர் மறைந்தார், மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும் தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் அகப்பேய் சித்தர் பாடல்கள் 90 என்ற நூலை எழுதினார்.

அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நங்சுண்ணவும் வேண்டாம் நாதியற்று திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான் என்பது இவரின் வாக்கு.

இவர் இயற்றிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை

அகப்பேய் சித்தர் பாடல் 90
அகப்பேய் பூரண ஞானம்
சித்தி அடைந்த திருத்தலம்- திருவையாறு
இலை உடையுடன் கலை உருவாய்
காட்சி தரும் காரியசித்தி ஸ்வாமியே
மாறாத சித்தியை மரப்பொந்தினில்
பெற்ற மங்காச் செல்வரே
அசைகின்ற புத்தியை
இசைகின்ற சித்தியால்
இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே

அகப்பேய் சித்தர் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் அகப்பேய் சித்தர் ஸ்வாமியின் படத்தை வைத்து, அப்படத்திற்கு முன்பு மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை மனமுருகக்கூற வேண்டும். பின்பு பின்வரும் பதினாறு போற்றிகளை வில்வம் அல்லது பச்சிலைகள் அல்லது துளசி அல்லது கதிர்பச்சை அல்லது விபூதி பச்சை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி!
2. பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி!
3. பித்ருப்ரியரே போற்றி!
4. உயிர்களை காப்பாற்றுபவரே போற்றி!
5. சாந்தமாக இருப்பவரே போற்றி!
6. சந்தான தோஷத்தை போக்குபவரே போற்றி!
7. சங்கீதப்பிரியரே போற்றி!
8. சூரியன், சந்திரன் போன்று பிரகாசம் உடையவரே போற்றி!
9. ரத்தினங்களை அணிபவரே போற்றி!
10. ஹஸ்த தரிசனம் செய்பவரே போற்றி!
11. கஜபூஜை செய்பவரே போற்றி!
12. முனிவர்களுக்குக் காட்சி அளிப்பவரே போற்றி!
13. உலகரட்சகரே போற்றி!
14. சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி!
15. முக்தி அளிப்பவரே போற்றி!
16. ஸ்ரீ சக்ர ஸ்வாமியாகிய அகப்பேய் சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான, ஓம் அகப்பேய் சித்தரே போற்றி என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.

பின்பு நிவேதனமாக இளநீர்(வடிகட்டி வைக்க வேண்டும்) அல்லது பால் பழம் வைத்து படைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக்கூறி வேண்ட வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ அகப்பேய் சட்டமுனி ஸ்வாமிகள் பூஜை பலன்கள்:

இவர் நவக்கிரஹத்தில் குரு பகவானால் பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்

1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அகலும்
2. பணப்பிரச்சனை, புத்திரபாக்கியம் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சனை போன்றவை அகலும்.
3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும். வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
4. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,
5. கொடுக்கல், வாங்கல் பிரச்சனை வழக்குகள் அகலும்.
6. அரசாங்கத்தால் பிரச்சனை, அரசாங்க அதிகாரிகளுக்குள்ள பிரச்சனை நீங்கும்,
7. வறுமை அகன்று வாழ்க்கை வளம் பெறும்.
8. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்

இவரை பூஜிக்க சிறந்தநாள் வியாழக்கிழமை ஆகும்.




தன்வந்திரி

தன்வந்திரி  முனிவர் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 32  நாள் ஆகும்.

மச்சமுனி

மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ஆகும்.

நந்தீஸ்வரர்

நந்தீஸ்வரர்
முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 நாள் ஆகும்.
ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்ர நாமாவளி

ஓம் நமஸ் த்ரிபுரஸுந்தரி நம
ஓம் ஹ்ருதய தேவி நம:
ஓம் சிரோ தேவி
ஓம் சிகா தேவி
ஓம் கவச தேவி
ஓம் நேத்ர தேவி
ஓம் அஸ்த்ர தேவி
ஓம் காமேஸ்வரி
ஓம் பகமாலினி
ஓம் நித்ய க்லிந்தே 10

ஓம் பேருண்டே
ஓம் வஹ்நி
ஓம் வாஸிநி
ஓம் மஹா வஜ்ரேஸ்வரி
ஓம் சிவ தூதி
ஓம் த்வரிதே
ஓம் குல ஸுந்தரி
ஓம் நிதயே
ஓம் லபதாகே
ஓம் விஜயே  20

ஓம் ஸர்வ மங்களே
ஓம் ஜ்வாலா மாலினி
ஓம் சித்ரே
ஓம் மஹா நித்யே
ஓம் பரமேஸ்வர பரமேஸ்வரி
ஓம் மித்ரேச்மயி
ஓம் ஷஷ்டீசமயி
ஓம் உட்டீசமயி
ஓம் ஸர்வநாதமயி
ஓம் லோபாமுத்ராமயி  30

ஓம் அகஸ்தபமயி
ஓம் காலதாபநமயி
ஓம் தர்மாசார்யமயி
ஓம் முக்தகேசீச்வரமயி
ஓம் தீபகளாநாதமயி
ஓம் விஷ்ணுதேவமயி
ஓம் ப்ரபாகரதேவமயி
ஓம் தேஜோதேவமயி
ஓம் மநோஜதேவமயி
ஓம் கல்யாணதேவமயி  40

ஓம் வாஸூதேவமயி
ஓம் ரத்னதேவமயி
ஓம் ஸ்ரீ ராமாநந்தமயி
ஓம் அணிமா ஸித்தே
ஓம் லகிமா ஸித்தே
ஓம் கரிமா ஸித்தே
ஓம் மஹிமா ஸித்தே
ஓம் ஈசித்வ ஸித்தே
ஓம் வசித்வ ஸித்தே
ஓம் ப்ராகாம்ய ஸித்தே  50

ஓம் புத்தி ஸித்தே
ஓம் ஸித்தி ஸித்தே
ஓம் இச்சா ஸித்தே
ஓம் ப்ராப்தி ஸித்தே
ஓம் ஸர்வகாமி ஸித்தே
ஓம் ப்ராம்ஹி
ஓம் மாஹேஸ்வரி
ஓம் கெளமாரி
ஓம் வைஷ்ணவி
ஓம் வராஹி  60

ஓம் மாஹேந்திரி
ஓம் சாமுண்டே
ஓம் மஹாலெக்ஷ்மி
ஓம் ஸர்வ ஸம்க்ஷோபிணி
ஓம் ஸர்வ வித்யாவிணி
ஓம் ஸர்வாகர்ஷிணி
ஓம் ஸர்வ வசங்கரி
ஓம் ஸர்வோந்தமாதிநி
ஓம் ஸர்வ மஹாங்குசே
ஓம் ஸர்வ கேசரி  70

ஓம் ஸர்வ பீஜே
ஓம் ஸர்வ யோநே
ஓம் ஸர்வ த்ரிகண்டே
ஓம் த்ரைலோக்ய மோஹன சக்ர ஓம் ஸ்வாமிநி
ஓம் ப்ரகட யோகிநி
ஓம் காமாகர்ஷிணி
ஓம் புத்யாகர்ஷிணி
ஓம் அஹங்காராகர்ஷிணி
ஓம் சப்தாகர்ஷிணி  80

ஓம் ஸ்பர்சாகர்ஷிணி
ஓம் ரூபாகர்ஷிணி
ஓம் ரஸாகர்ஷிணி
ஓம் கந்தாகர்ஷிணி
ஓம் ஸித்தாகர்ஷிணி
ஓம் தைர்யாகர்ஷிணி
ஓம் ஸ்ம்ருத்யாகர்ஷிணி
ஓம் நாமாகர்ஷிணி
ஓம் பீஜாகர்ஷிணி
ஓம் ஆத்மாகர்ஷிணி  90

ஓம் அம்ருதாகர்ஷிணி
ஓம் ஸரீராகர்ஷிணி
ஓம் ஸர்வாசபரிபூரக சக்ர
ஓம் ஸ்வாமிநி
ஓம் குப்த யோகிநி
ஓம் அநங்க குஸுமே
ஓம் அநங்க மேகலே
ஓம் அநங்க மதநே
ஓம் அநங்க மதநாதுரே
ஓம் அநங்க ரேகே  100

ஓம் அநங்க வேகிநி
ஓம் அநங்காங்குசே
ஓம் அநங்க மாலிநி
ஓம் ஸர்வஸம்பக்ஷோ பணசக்ர ஸ்வாமிநி
ஓம் குப்ததர யோகிநி
ஓம் ஸர்வ ஸம்க்ஷோபிணி
ஓம் ஸர்வ வித்யாவிணி
ஓம் ஸர்வாகர்ஷிணி
ஓம் ஸர்வாஹ்லாதிநி
ஓம் ஸர்வ ஸம்மோஹிநி  110

ஓம் ஸர்வ ரஞ்ஜநி
ஓம் ஸர்வோந் மாதிநி
ஓம் ஸர்வார்த ஸாதிகே
ஓம் ஸர்வ ஸம்பத்தி பூரணி
ஓம் ஸர்வ மந்த்ரமயி
ஓம் ஸர்வ த்வந்த்வ க்ஷயங்கரி
ஓம் ஸர்வ ஸெளபாக்யதாயக சக்ர ஓம் ஸ்வாமிநி
ஓம் ஸம்ப்ரதாய யோகிநி
ஓம் ஸர்வ ஸித்திப்ரதே  120

ஓம் ஸர்வ ஸம்பத்ப்ரதே
ஓம் ஸர்வ ப்ரியங்கரி
ஓம் ஸர்வ மங்களகாரிணி
ஓம் ஸர்வ காமப்ரதே
ஓம் ஸர்வ துஃக்க விமோசநி
ஓம் ஸர்வ ம்ருத்யு ப்ரசமநி
ஓம் ஸர்வ விக்ந நிவாரணி
ஓம் ஸர்வாங்க ஸுந்தரி
ஓம் ஸர்வ ஸெளபாக்யதாயிநி
ஓம் ஸர்வார்த்த ஸாதக ஸ்ரீசக்ர  130
ஓம் ஸ்வாமிநி
ஓம் குலோத்தீர்ண யோகினி
ஓம் ஸர்வஜ்ஞே
ஓம் ஸர்வசக்தே
ஓம் ஸர்வைச்வர்ய ப்ரதாயிநி
ஓம் ஸர்வஜஞாமயி
ஓம் ஸர்வ வியாதி விநாஸிநி
ஓம் ஸர்வாதார ஸ்வரூபே
ஓம் ஸர்வ பாபஹரே
ஓம் ஸர்வநந்தமயி   140

ஓம் ஸர்வரக்ஷா ஸ்வரூபிணி
ஓம் ஸர்வேப்ஸித பலப்ரதே
ஓம் ஸர்வரக்ஷாகர சக்ர ஸ்வாமிநி
ஓம் நிகர்பயோகிநி
ஓம் வசிநி
ஓம் காமேஸ்வரி
ஓம் மோதிநி
ஓம் விமலே
ஓம் அருணே ஜயினி   150

ஓம் ஸர்வேஸ்வரி
ஓம் கெளளிநி
ஓம் ஸர்வ ரோகஹர சக்ர
ஓம் ஸ்வாமிநி
ஓம் ரஹஸ்ய யோகிநி
ஓம் பாணிநி
ஓம் சாபிநி
ஓம் பாசிநி
ஓம் அங்குசிநி
ஓம் மஹா காமேஸ்வரி   160

ஓம் மஹா வஜ்ரேஸ்வரி
ஓம் மஹா பகமாலிநி
ஓம் ஸர்வ ஸித்தி ப்ரத சக்ர
ஓம் ஸ்வாமிநி
ஓம் அதி ரஹஸ்ய யோகிநி
ஸ்ரீ ஸ்ரீ மஹாபட்டராரிகே
ஓம் ஸர்வாநந்தமய சக்ர
ஓம் ஸ்வாமிநி
ஓம் பராபர ரஹஸ்ய யோகிநி
ஓம் த்ரிபுரே   170

ஓம் த்ரிபுரேசி
ஓம் த்ரிபுரஸுந்தரி
ஓம் த்ரிபுரவாஸிநி
ஓம் த்ரிபுராஜஸ்ரீ
ஓம் த்ரிபுரமாலிநி
ஓம் த்ரிபுராஸித்தே
ஓம் த்ரிபுராம்பா
ஓம் மஹா த்ரிபுரஸுந்தரி
ஓம் மஹா மஹேஸ்வரி
ஓம் மஹா மஹா ராக்ஜ்ஞி  180
மஹா மஹா ஸக்தே
மஹா மஹா குப்தே
மஹா மஹா லப்தே
மஹா மஹா ஜ்ஞப்தே
மஹா மஹா நந்தே
மஹா மஹா ஸ்கந்தே
மஹா மஹா ஸாந்தே
மஹா மஹா சயே
மஹா மஹா ஸ்ரீசக்ர நகர ஸாம்ராஜ்ஞி
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமோ நமோ நமோ நம: 
16 லட்சுமிகளும் அவர்களின் சிறப்புக்களும்...!!!

எட்டு வகையான லட்சுமிகளைத்தான் நாம் கேள்விப்பட்டிருப் போம். உண்மையில் பதினாறு (16) வகை லட்சுமிகள் உண்டு. அந்த பதினாறு (16) வகையான லட்சுமிகளின் பெயர்களும், அவர் களின் சிறப்புக்களும்!

1. ஸ்ரீ தனலட்சுமி :- நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமி யின் அருளை பரிபூரணமா கப் பெறலாம்.

2. ஸ்ரீ வித்யாலட்சுமி :- எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப் பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண் டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதை யும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

3. ஸ்ரீ தான்யலட்சுமி :- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசி யோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீ வரலட்சுமி :- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ் வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்ட வர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்யமாட்டேன் என்ற மன உறுதி யுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீ சவுபாக்யலட்சுமி :- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கவேண்டும். பிறர் மனது நோகா மல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழ லாம்.

6. ஸ்ரீ சந்தானலட்சுமி :- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய் மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீ காருண்யலட்சுமி :- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர் வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமி யின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீ மகாலட்சுமி :- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறு தியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகா லட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

9. ஸ்ரீ சக்திலட்சுமி :- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதை யும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீ சாந்திலட்சுமி :- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சம மாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொ ழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீ சாயாலட்சுமி :- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போ ல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார் க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீ த்ருஷ்ணாலட்சுமி :- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறரு க்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணா லட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீ சாந்தலட்சுமி :- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறு மையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீ கிருத்திலட்சுமி :- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப் படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீ கீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீ விஜயலட்சுமி :- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொ ழுதும் நம்முடன் இருப்பாள்.

16. ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி :- நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறு மை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகு ந்துவிடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.