புதன், 7 மே, 2014

சென்னையில் பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் - 1

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்

மூலவர்    :அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு,
உற்சவர்    :அஷ்டலட்சுமி
அம்மன்   :ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி
தீர்த்தம்    :சமுத்திர புஷ்கரணி (வங்கக் கடல்)
பழமை    :500 வருடங்களுக்குள்
ஊர்    :பெசன்ட் நகர்
மாவட்டம்    :சென்னை
மாநிலம்    :தமிழ்நாடு
   
திருவிழா:புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.    
           
தல சிறப்பு:கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. (ஓம்கார சேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்   
         
முகவரி:அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்-600 090, சென்னை.போன்:+91- 44-2446 6777, 2491 7777, 2491 1763   
          
பொது தகவல்:ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.    
           
பிரார்த்தனை;இங்கு அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம். தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது.உடல்நலம்பெற ஆதிலட்சுமியையும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியையும், தைரியம் பெற தைரியலட்சுமியையும், சவுபாக்கியம் பெற கஜலட்சுமி யையும், குழந்தைவரம் வேண்டுமெனில் சந்தானலட்சுமியையும், காரியத்தில் வெற்றி கிடைக்க விஜயலட்சுமியையும், கல்வி ஞானம் பெற வித்யாலட்சுமியையும், செல்வம் பெருக தனலட்சுமியை வணங்குதல் நலம்.
   
நேர்த்திக்கடன்:வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் இத்தலத்தில் அபிஷேக ஆராதனைகள்,புடவை சாத்துதல் ஆகியவையும், பிரசாதம் செய்து விநியோகிப்பதும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது   
          
தலபெருமை:அஷ்டலட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.
   
தல வரலாறு:சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது.அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது. இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் "பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
   
சிறப்பம்சம்:கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது.(ஓம்கார சேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.








 
  

சனி, 3 மே, 2014

நட்சத்திரப்படி படிகள்!

மோகனூர் அருகேயுள்ள காந்த மலையில் பாலசுப்ரமண்யர் திருக்கோயிலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் சேர்ந்து 39 படிகளாக அமைந்துள்ளன. மைசூருக்கு அருகிலுள்ள சாமராச நகர், பெனிஸ் கிரகங்கள் மலையில் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு சபாரிக்குப் பதில் இரண்டடி நீளம் ஓரடி அகலமுள்ள தோல் செருப்புகளைத் தலை மீது வைத்து பக்தர்களை ஆசீர்வதிக்கிறார்கள். அம்பர் மாகாளத்தில் காளி மூன்று முகங்களுடன் அருள்பாலிக்கிறாள். முடிவுக்கு மேல் ஒரு முகமும், வடபுறம் நோக்கி ஒரு முகமும், கிழக்கு நோக்கி ஒரு முகமும் கொண்டு விளங்குகிறாள். இது ஓர் அபூர்வ அமைப்பாகும்.
Sri Tiru Magaral Easwarar temple

Moolavar :Tiru Magaral Easwarar
Urchavar :Somaskandar, Natarajar
Amman:Tiri Bhuvana Nayaki
Thala Virutcham :Lime tree
Theertham :Agni
Old year :2000 years old
Historical Name :Tirumagaral
City :Tirumagaral
District :Kanchipuram
State :Tamil Nadu

Singers:Saint Gnanasambandar has sung 11 verses in his Thevaram in praise of the Lord of the temple. One verse goes thus, “For those aspiring relief from various bonds of life and attain their heavenly life, can do so very easily if they worship Magaral Lord surrounded by sages and vedic scholars. My Lord’s hair style is like lightning rays on which Ganga flows with flowers falling. The crescent moon is an added beauty on the Lord’s hair.” This is the 7th shrine in Thondaimandalam region praised in Thevaram hymns.

Festival:10 day Masi Brahmmotsavam in February-March is grandly celebrated in the temple.

Temple's Speciality:Lord Shiva graces in the temple as a swayambumurthi. The vimana (tower above the sanctum sanctorum) is of Gajabrushta (the hip of the elephant) design. Indira the king of Devas presented his white elephant as wedding gift to Lord Muruga and Deivanai that took place in Tiruparankundram. He placed the divine couples on the elephant and enjoyed the procession. When Lord Maha Vishnu desired to have this darshan of His nephew, he granted it at this place, goes a story.

Opening Time:The temple is open from 7.00 a.m. to 12.00 a.m. and from 6.00 p.m. to 8.00 p.m.

Address:Sri Tiru Magaral Easwarar Temple,Tirumagaral, Kancheepuram.Phone:+91-94435 96619.

General Information:The temple has a 5 tier Rajagopuram studded with beautiful sculptures and two prakaras-corridors. Lords Ganapathy, Muruga Nataraja, Bhairava and Navagrahas (9 planets) are in the prakaras. Lord Dakshinamurthy graces with His Veena in the tower.

Prayers:It is believed that consuming the abishek theertha serves as an effective medicine reducing the impact of blood related illnesses, fractures, impaired vision, paralysis etc.

Thanks giving:Devotees perform pujas here for unity among the couples, for relief from planetary inflictions and those seeking child boon do Angapradakshinam –rolling around the prakara.

Greatness Of Temple:A demon Makkiran was doing Shiva Puja when Lord Muruga destroyed Surapanma and other demons, thus escaped the wrath of the Lord. He came to this place, named the Lord Makkiran, his own name. In the years followed, it changed as Magaraleesar.

Temple History:Lord Brahmma, after performing puja to the Lord in this place, planted a miracle jack tree that would yield one fruit each day. King Rajendra Chola struck by the wonder ordered that one person from each family should carry this fruit on their head to Chidambaram to be offered as nivedhana to the Lord. After the pujas, it will be sent to the king.

One day it was the turn of a Brahmin boy. He thought that the king ought to have appointed his own men for the job instead of burdening the public. He told the people of the village that he was a boy and could not bear the weight of the fruit and requested them to do the job and offered to take care of their houses till their return. All the people left the place together to help the boy. The boy thought that this problem will continue only if the tree existed and he simply burnt it. He told the people that the tree caught fire some how and was reduced to ashes. When the king enquired the boy, he said, “You made no facility for us to carry the fruit to Chidamabaram, hence, I burnt it.” The king replied that the boy ought to have demanded the facility and ordered him to be exiled tying his eyes.

The king accompanied the boy while being taken for exile. He saw a golden chameleon on the way which hid into an anthill when the king tried to catch it. While demolishing the anthill, it began to bleed and a voice condemned the action of the king. The king fainted. The voice sounding again said that the chameleon was none other than Lord Shiva and ordered him to build a temple. It may be noted that the size of the Linga in the sanctum sanctorum is just the size of the tail of the creature.


 

 

 

 

அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :திருமாகறலீஸ்வரர்
உற்சவர் :சோமாஸ்கந்தர், நடராஜர்
அம்மன்/தாயார் :திரிபுவனநாயகி
தல விருட்சம் :எலுமிச்சை
தீர்த்தம் :அக்னி
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :திருமாகறல்
ஊர் :திருமாகறல்
மாவட்டம் :காஞ்சிபுரம்
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர் 11 பதிகம் பாடியுள்ளார்.

தேவாரப்பதிகம்:மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய் இன்னவகை யால்இனிது இறைஞ்சி இமை யோரிலெழு மாகறலுளான் மின்னை விரி புன்சடையின் மேல்மலர்கள் கங்கையொடு திங்களெனவே உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே. (திருஞானசம்பந்தர்)

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 7வது தலம்.

திருவிழா:மாசி மாதம் பத்துநாள் பிரம்மோற்ஸவம்.

தல சிறப்பு:இத்தல இறைவனுக்கு அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு.இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின் பகுதி) அமைப்பில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப்பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளையானையில் அமரச்செய்து அக்காட்சியை கண்ணாற கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப, முருகன் இத்தலத்தில் வெள்ளையானை மீது அமர்ந்து காட்சி தந்தார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 239 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4:30 முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல் -631603,காஞ்சிபுரம் மாவட்டம்.போன்: +91- 94435 96619.

பொது தகவல்:அழகிய சுதை சிற்பங்களோடு 5 நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் உள்ளது.

பிரகாரத்தில் கணபதி, ஆறுமுகன், அறுபத்து மூவர், நடராஜர், பைரவர், நவக்கிரக சன்னதி உள்ளது. விமானத்தில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தியைக் காணலாம்.

பிரார்த்தனை:இத்தலத்தின் அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் ரத்தம் சம்பந்தப்பட்டவை, எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் விலகவும் பூஜை செய்யலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அங்க பிரதட்சணம் செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:சுவாமி, அம்மன் இருவருக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபடுதல்.

தலபெருமை:முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்த போது, தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான். அவன் இத்தலம் வந்த போது இங்குள்ள இறைவனுக்கு தன் பெயரால் மாக்கிரன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி "மாகறலீசர்' என்று மாறியது.

தல வரலாறு:முன்னொரு காலத்தில் பிரம்மா இத்தலத்தில் சிவபூஜை செய்து விட்டு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசயப்பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள்தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து, அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் தலைச்சுமையாக இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம்.ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. "இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன், வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே' என எண்ணிய அவன் ஒரு தந்திரம் செய்தான். அந்த ஊர் மக்களிடம், ""நான் சிறுவன். பழத்தை சுமக்க சிரமப்படுவேன். நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன்,'' என்று கூற, அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால், நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன், அந்த மரத்தை எரித்து விட்டான்.ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பிவிட்டனர். மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன்,""பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன்,'' என்றான்.அதற்கு மன்னன், ""தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன்.'' என்றான்.காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது, மன்னனும் உடன் சென்றான். ஊர் எல்லையில் அவனை விட்டு விட்டு திரும்பிய போது, ஓரிடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி, சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி, சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும், அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும்படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன்படியே செய்தான். இன்றும் கூட உடும்பின் வால் அளவிலுள்ள லிங்கம் தான் மூலஸ்தானத்தில் உள்ளது.

சிறப்பம்சம்:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மனதில் உறுதி வேண்டும்

* நாம் அனைவரும் இறைவனைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். பரம்பொருளைத்தவிர, வேறெதுவுமே உலகில் நிலையானது அல்ல என்பதை உணர்வதே ஞானம்.

* வாழ்வில் இன்பங்களை எல்லாம் வெளியுலகில் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் நம்மை மயக்கக் கூடியவை. என்றென்றும் பூரண இன்பம் தருபவர் கடவுள் மட்டுமே.

* குழந்தைப் பருவத்தில் இருந்தே தியானம் செய்யப் பழகினால், பாவ எண்ணங்கள் நம் மனதில் உற்பத்தியாவதைத் தடுத்து உயர்ந்த நிலையை அடையலாம்.

* உலகில் யாரும் பாவியாக இருக்க விரும்புவதில்லை. ஆனால், பாவச்செயல்களையே நாம் செய்து வருகிறோம். பலன் மட்டும் புண்ணிய பலன்களை பெற விரும்புகிறோம். மன உறுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பாவங்களில் இருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.

* அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகின்றபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல்வந்து மூடிக்கொள்வது போல, உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் இன்பம் தலைகாட்டிவிட்டு ஓடிவிடுகிறது. காஞ்சிப்பெரியவர்
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

25. கோடிகோடி மக்கள் வீணாகப்போனாலும் ஒருவன் பூர்ணத்வம் அடைந்து விட்டால் அதுதான் நம்முடைய மதத்தின் ப்ரயோஜனம். அவன் ஒருவன் அனுக்ரஹகத்தாலேயே உலகம் க்ஷேமமடையும். அப்படிப்பட்ட ஒருவன் உண்டாவதற்காகத்தான் நாம் பிரசாரங்களைச் செய்கிறோம்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

24. சூர்ய கிரணம் இருக்கிறது. ஒவ்வொரு கிரணமும் நெருப்பே. ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் அதில் தீப்பற்றிக் கொள்கிறது. பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது. அப்படியே எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய ஆலயம் அவசியமாக இருக்கிறது.