செவ்வாய், 22 அக்டோபர், 2013

மணக்கோலம் காணும் மணமேடையில் மறைந்துள்ள ரகசியங்கள்

மணக்கோலம் காணும் மணமக்கள், மணமேடையில் தாலிகட்டிக் கொள்வர். அந்த மணமேடை தத்துவார்த்த ரீதியாக அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரியாது. தாலி கட்டி முடிந்ததும் மணமேடையை மூன்று முறை வலம் வரச் சொல்வது வழக்கம். ஆலயத்தை வலம் வருவது போல மணப்பந்தலை வலம்வர காரணம் மணப்பந்தலில் அமைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் யாவும் தெய்வ வடிவங்களாகும். பந்தலில் ஊன்றப் பட்டிருக்கும் நான்கு கால்களும், நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. திருமணம் விக்னேஷ்வரர் சாட்சியாகவும், அக்னிசாட்சியாகவும் நடைபெறுகிறது. அரசன் ஆணைக்கால் என்று அரசானிக்கால் வைக்கப்படுகிறது. குபேரனுக்குரிய நவதானியமும் வைக்கப்பட்டுள்ளது. மணப்பந்தலை வலம் வரும் பொழுது தெய்வத்தை, திருவிளக்கை, அக்னியை, மரத்தை வலம் வந்து, அவற்றின் அருளையும் பெறுகின்றோம்.
வாசலில் கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள். சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறும் போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.சுபகாரியங்களின் போது இரண்டைக்கோடு வருவது போலவும் அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் போட வேண்டும்.

பயன்கள்: தமிழர்கள் இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் வாசல் தெளித்து பெருக்கும் போது பிராண வாயு, அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. மேலும் குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி வருவதாக ஐதீகம் இருக்கிறது. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக, எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம், தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது. அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது. நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம் மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.
சண்டிகேஸ்வரர் சன்னதியில் மட்டும் கை தட்டி வணங்குவது ஏன்?

பெரும்பாலான சிவன் கோயில்களில் சிவனை வணங்கி விட்டு பிரகாரம் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். இவரை வணங்கும் பக்தர்கள், சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ வணங்குவார்கள். ஆனால் அப்படி வணங்க கூடாது. சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். சிவனிடமே ஈஸ்வர பட்டம் பெற்றவர். இவர்  கோயிலுக்கு வரும் பக்தர்கள், என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம். எனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது, மிக மெதுவாக மூன்று முறை கைதட்டி, வந்தேன்...வந்தேன்...வந்தேன்... சிவனின் தரிசனம் கண்டேன்... கண்டேன்.. கண்டேன்...என கூற வேண்டும். அப்படி வணங்கினால் சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து, நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்வார். உடனே நமது கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
உங்கள் கனவில் பாம்பு தோன்றினால் நன்மையா? தீமையா?

ஒரு சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டேயிருக்கும். காரணம் அவர்களுக்கு ராகுதிசை, கேதுதிசை அல்லது ராகுபுத்தி, கேதுபுத்தி நேரமாக இருக்கலாம். கனவில் பாம்பு வந்தால் அவர்களைப் போன்றவர்களுக்கு நன்மை தான். ராகு-கேதுக்குரிய பரிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் உடனடியாகச் செய்வது நல்லது. கனவில் பாம்பு கடித்து விட்டுச் சென்றால் தோஷம் விலகியதாக அர்த்தம். கனவில் ஜோடி நாகங்கள் ஒன்றுடன் ஒன்று கூடி பின்னப் பிணைந்த காட்சியைக் கண்டால் புத்திர பாக்கியம் உண்டாகக் கூடிய வாய்ப்பு உருவாகும்.
தெய்வம் நின்று கொல்லும் என்பதன் காரணம் என்ன?

இறைவனின் பரமகருணையே இதற்குக்காரணம். எப்படியும் ஒருவன் நல்வழிக்கு திரும்பவேண்டும் என்பது தான் இறைவனின் திருவுள்ளம். இரணியனைக் கூட, நரசிம்மப்பெருமான், இருகூறாக்குவதற்கு முன், துவேஷ உணர்வு உதட்டளவில் இருந்தால் விட்டு விடலாம். உள்ளத்து அளவில் இருந்தால் தான் கொல்ல வேண்டும் என்று எண்ணினாராம். தீர்ப்பு நியாயமானதாக இருக்கவேண்டும் என்பதற்காக நாம் திருந்துவதற்கு தரும் வாய்ப்பு தான் காலம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார்களே! அதுபோல, காலம் உள்ளபோதே நல்வழியை நாடி வரவேண்டும் என்பது தான் இறைவன் திருவுள்ளம். அதனால் தான், தெய்வம் நின்று கொல்கிறது.
உங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்!

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி, நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்களின் நட்சத்திரம் எதில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.

அசுவினி, மகம், மூலம்

 நட்சத்திர அதிபதி கேது ஆவார். கேது திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் விநாயகர். எப்போதும் விநாயகரை வழிபட்ட பின் பணிகளைத் துவக்குங்கள். சதுர்த்திநாளில் விநாயகர் கோயிலுக்குச் செல்ல மறக்காதீர்கள். அதிர்ஷ்டநிறம் சிவப்பு. சிவப்போடு பல நிறமும் கலந்த ஆடைகள் அணிவது யோகம் தரும். அதிர்ஷ்ட எண் 5,7,9. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். நவரத்தினத்தில்
வைடூர்யத்தை அணிந்து கொள்வது நன்மை தரும். மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.

பரணி, பூரம், பூராடம்

சுக்ரனே உங்களின் நட்சத்திர அதிபதி. சுக்ர திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் மகாலட்சுமி. காலையில் கண் விழிக்கும் போதே மகாலட்சுமி படத்தை பார்த்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமையில் லட்சுமி சந்நிதியில் நெய்தீபமிடுங்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவது யோகம் தரும். அதிர்ஷ்டம் தரும் எண்கள் 3,6,8. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் எளிதில் முடியும். அதிர்ஷ்டக்கல் வைரம். எல்லோராலும் வாங்கமுடியாது. வைரத்திற்குப் பதிலாக, ஸ்படிக மாலை வாங்கி அணிவதும் நல்லது. மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ராசியினரோடு நல்ல நட்பு மலரும்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம்

சூரியனே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். நீங்கள் சூரிய திசையில் பிறந்தவர். சிவபெருமானைத் தொடர்ந்து வழிபடுவதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பிரதோஷ நாளில் சிவாலய தரிசனம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பு நிற ஆடை அணிவது யோகம் தரும். 1,5,7 ஆகிய எண்கள் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு வரவழைக்கும். இந்த தேதிகளில் ஆரம்பிக்கும் செயல்களில் கிடைக்கும். அதிர்ஷ்டக்கல் மாணிக்கம். கடகம், விருச்சிகம், தனுசு, மீனராசியினர் நண்பர்களாக அமைந்தால் நட்பு நீண்ட காலம் தொடரும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம்

உங்களின் நட்சத்திர நாதனாக சந்திரன் இருக்கிறார். சந்திரதிசையில் பிறந்த நீங்கள், அம்பிகையை வழிபடுவதால் நன்மை பெறுவீர்கள். பவுர்ணமியில் அம்மனுக்கு தீபமேற்றி வழிபட யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவதன் மூலம் வெற்றி வந்து சேரும். அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் தொடங்கும் செயல் எதுவானாலும் வெற்றி உங்களுக்கே. முத்து பதித்த
ஆபரணங்கள் அணிய நன்மை உண்டாகும். மிதுனம், சிம்மம், கன்னி
ராசியினரோடு பழகினால் நட்பு வாழ்வில் வளம் சேர்க்கும்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய நட்சத்திரம் உங்களுடையது. செவ்வாய்திசையில் பிறந்த உங்களுக்கு, அதிர்ஷ்டதெய்வம் முருகன். செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்டநிறம் இளஞ்சிவப்பு. சிவப்புநிற ஆடை அணிவதால் நலம் பெருகும்.  அதிர்ஷ்ட எண்கள் 3,6,9. இந்த தேதிகளில் தொட்ட செயல்கள் யாவும் இனிதே முடியும். அதிர்ஷ்டக்கல் பவளம். பவளத்தை மோதிரமாகவோ, டாலராகவோ அணிந்துகொள்ளலாம். சிம்மம், தனுசு, மீனராசியினர் நண்பராக அமைய அனுகூல பலன்கள் உண்டாகும்.

திருவாதிரை, சுவாதி, சதயம்

ராகுவிற்குரிய இந்த மூன்று நட்சத்திரங்கள் இவை. ராகுதிசையில் பிறந்த நீங்கள் வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் துர்க்கை. ராகுவேளையில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது நன்மைதரும். அதிர்ஷ்டநிறம் கருமை. ஆடையில் கருப்பு புள்ளிகள், கோடு இருந்தாலும் போதுமானது. அதிர்ஷ்ட எண்கள் 1,4,7. இந்த தேதிகளில் தொடங்கும் விஷயம் எளிதில் நிறைவேறும். அதிர்ஷ்டக்கல் கோமேதகம். கோமேதகத்தை மோதிரத்தில் பதித்தும், டாலராக அணிந்து கொள்ளலாம். மிதுனம், கன்னி, தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

நவகிரகங்களில் பூரணசுபரான குரு உங்களுக்கு நட்சத்திராதிபதியாவார். குருதிசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்டதெய்வம் தட்சிணாமூர்த்தி. வியாழனன்று இவருக்கு நெய்தீபம் ஏற்றி, கொண்டல்கடலை மாலை சாத்தி, வழிபட்டு வந்தால் சுபபலன் உண்டாகும். அதிர்ஷ்டநிறம் மஞ்சள். இந்நிறத்தில் கைக்குட்டையாக வைத்துக்கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் புதிய பணிகளைத் துவங்குவது நன்மை தரும். அதிர்ஷ்டக்கல் புஷ்பராகம். மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிக ராசியினரின் நட்பு கொள்வதால் நற்பலன் உண்டாகும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி

உங்களின் நட்சத்திராதிபதியாக இருப்பவர் சனி. முதல் திசையாக சனியில் பிறந்த நீங்கள், வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் சாஸ்தா. காலையில் எழுந்ததும் இவரை தரிசிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடும் உங்களுக்கும்  அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இயன்ற போதெல்லாம் சாஸ்தா கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது நன்மை தரும். அதிர்ஷ்டநிறம் கருநீலம். அதிர்ஷ்டஎண்கள் 5,6,8. இத்தேதிகளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும். அதிர்ஷ்டக்கல் நீலம். ரிஷபம், மிதுனராசியினரிடம் நட்பு கொண்டால் நன்மை ஏற்படும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி

கிரகங்களில் புதன் உங்களின் நட்சத்திராதிபதி. புதன்திசையில் பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டம் அருள்பவர் மகாவிஷ்ணு. சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகம் தரும். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பு. அதிர்ஷ்டநிறம் பச்சை. அதிர்ஷ்டஎண்கள் 1,5,8. இத்தேதிகளில் செய்யும் செயல்கள் அனைத்தும் நற்பலன் தரும். அதிர்ஷ்டக்கல் மரகதம் என்னும் பச்சைக்கல். ரிஷபம், சிம்மம், துலாம் ராசியினரிடம் உண்டாகும் நட்பு உண்மையானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும்.
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்!

குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானை சஷ்டி விரதமிருந்து வழிபடுகிறார்கள். இதற்கான காரணத்தை புராணங்கள் விளக்குகிறது. கஷ்யப முனிவருக்கு அதிதி என்னும் மனைவி மூலம் தேவர்கள் பிறந்தனர். இவர்கள் ஆதித்யர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். திதி என்னும் மனைவி மூலம் அசுரர்களாகிய தைத்தியர்கள் பிறந்தனர். தேவர்கள் நற்குணம் உள்ளவர்களாகத் திகழ்ந்தனர்.  சித்தியின் பிள்ளைகளான தைத்தியர்கள் மீது
@தவர்கள் பாசம் கொண்டிருந்தனர். ஆனால், தைத்தியர்களோ, தங்கள் தேவ சகோதரர்களை வெறுத்தனர். இருவருக்கும் கடும் போர் ஏற்பட்டது. அசுரர்கள் நல்லவர்களான தேவர்களைத் தாக்கவே, திருமால் கோபம் கொண்டார். பாற்கடலைக் கடைந்து கிடைக்கும் அமிர்தத்தைக் குடித்தால், இறப்பே இல்லாத சூழல் அமையும் என்று தேவர்களுக்கு சொன்னார். இந்தத் தகவல் சுரர்களின் காதுக்கும் போகும்படி செய்தார். இருதரப்பாரும், கிடைப்பதில் பாதியைப் பகிர்ந்து கொள்வதென ஒப்பந்தம் செய்து கடைந்தனர். மாயங்கள் செய்யும் திருமாலோ, மோகினி வடிவமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தம் முழுவதையும் கொடுத்து விட்டார். சக்தியிழந்த அசுரர்களை தேவர்கள் அடித்து நொறுக்கினர். அசுர வம்சமே அழிந்து விட்டது. இதனால் திதி வருத்தமடைந்தாள். தன் கணவர் காஷ்யபரிடம்,அன்பரே! எனக்கு பிள்ளைகளே இல்லை என்ற நிலை இருக்கிறது. புத்திர பாக்கியம் அருளுங்கள், என வேண்டிக்கொண்டாள்.

கஷ்யபரும் அவளது தாயுள்ளத்தைப் புரிந்து கொண்டு புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முடிவெடுத்தார். சிவனுக்கு 274, பெருமாளுக்கு 108 தலங்கள் என்று இருப்பது போல, முருகனுக்கு 64 முக்கியத்தலங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அதில் சிறந்ததான கதிர்காமம் என்ற இடத்துக்கு அவர் சென்றார். யாகத்தைத் துவங்கினார்.  திதிக்கு மீண்டும் குழந்தைகள் பிறந்தால், நிலைமை என்னாகுமோ என்று தேவர்கள் பயந்தனர். யாகத்தை அழிப்பதற்காக பல இடையூறுகளைச் செய்தனர். இதனால், வருத்தமடைந்த காஷ்யபர், அத்தலத்தில் இருந்த சுப்பிரமணியப் பெருமானை வேண்டினார். சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் என்று மும்முறை சொல்லவே முருகப்பெருமான் அங்கு எழுந்தருளினார். கஷ்யபரே! கவலை வேண்டாம். தேவர்களால் இனி தங்களை ஏதும் செய்ய முடியாது. இதோ, எனது வல்லபம், வேல் ஆகிய ஆயுதங்களை தங்கள் யாகசாலையை சுற்றி நிறுத்துகிறேன். அவற்றை மீறி எந்த சக்தியாலும் தங்களை அழிக்க முடியாது, என அருள்பாலித்தார். கஷ்யபர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. யாகத்தை தடையின்றி நடத்திக் கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த தேவர்கள், சுப்பிரமணியப் பெருமானிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லாமல், மிகுந்த ஆணவத்துடன் தங்களால் எல்லாம் முடியும் என்ற தைரியத்தில் அவர்களும் ஒரு யாகத்தை துவங்கினர். அந்த யாக குண்டத்தில் இருந்து மாரன், மலையன் என்ற அசுரர்கள் தோன்றினர். அவர்களிடம், மார மலையர்களே! நீங்கள்  புத்திரகாமத்தில் யாகம் செய்து கொண்டிருக்கும் கஷ்யபருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஆயுதங்களை தகர்ப்பதுடன், அவரது வேள்விக்குண்டத்தையும் அழித்து விடுங்கள், என உத்தரவிட்டு அனுப்பினர்.

மாரனும் மலையனும் புத்திரகாமத்தை வெகு விரைவில் அடைந்தனர். ஆனால், அவர்களை முருகப்பெருமானின் ஆயுதங்கள் தடுத்து விட்டன. அவர்கள் தூரத்தில் நின்றபடியே வேள்விகுண்டத்தை அழிக்க முற்பட்ட போது, கஷ்யபர் மீண்டும் குமரப்பெருமானை உருக்கமாக வேண்டி அழைத்தார். முருகப்பெருமானும் அங்கு தோன்றி, மார மலையர்களைக் கொன்றார். கஷ்யபரே! தங்கள் யாகம் வெற்றி பெறட்டும். தங்களுக்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களுக்கு சிவஞானத்தை ஊட்டி முக்திக்கு வழி காட்டுங்கள், என்று அருள் செய்தார். கஷ்யபர் அந்த இடத்தில் முருகன்சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போலவும் உண்பது முறையாகும். வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது. கண்ட திசைகளுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இருத்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும். ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.
விஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?

விஷ்ணு கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கிய பின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். அதன்பின் லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், சரஸ்வதி, ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. அவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோயிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோயிலில்  இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புவான். அவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?

சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும். சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போட வேண்டும். அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.

கடைசியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று "வந்தேன் வந்தேன் வந்தேன், இறைவனின் தரிசனம் கண்டேன், கண்டேன், கண்டேன் என மெதுவாக கூறி,  இரு கைகளையும் மெதுவாக தட்டி,  நன்றி சொல்லி வெளியே வர வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. அவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோயிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோயிலில்  இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புவான். அவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
இறைவனோடு உறையாடிய உத்தமர்கள்!

அவ்வைப் பாட்டி: வைணவத்துக்கு ஒரே ஒரு ஆண்டாள். சைவத்துக்கோ காரைக்காலம்மையார்,  மங்கையர்க்கரசியார், குலச்சிறையாரும் தான். கௌமாரத் தெய்வமான முருகனையும், காணாபத்ய கணபதியையும் அவ்வைப் பாட்டி ஒருத்தியே அதிகம் நெருங்கியுள்ளாள். சௌரத்தின் வழிக்கு திரௌபதியை சொன்னாலும் அவளை தீயிலே பூத்த ஒரு தெய்வப்பெண், வைணவக் கண்ணனை அண்ணனாகவே பெற்று விட்டவள். எனவே திரௌபதியை இந்த தெய்வப்பிறவிகளின் கணக்கில் சேர்க்கவும் நீக்கவும் நெருடுகிறது. கூட்டிக் கழித்தால் நான்கு பேர்தான் தேறி நிற்கிறார்கள். இவர்களில் ஆண்டாளும் சரி,  அவ்வையும் சரி, தங்கள் சிந்தனைகளை பாடல்களாக்கி, இந்த சமுதாயத்துக்குத் தந்து விட்டுச் சென்றுள்ளதுதான் சிறப்பு. இதில் ஆண்டாளின் வழி வேறானதாக, காதல்மிக்கதாய் உள்ளது. ஓர் எழிலார்ந்த பெண்மகளாய் அந்தத் திருமால் மேல் காதல் கொண்ட, அந்தக் காதலில் வெற்றியும் பெற்றவளாய்த் திகழ்கிறாள். அதனால் இல்வாழ்வில் ஈடுபட விரும்புவோர்க்கு இவள் பெரிய  வழிகாட்டியாகவும் விளங்குகிறாள்.

இவளது திருப்பாவைப் பாடல்கள் நம்பாவையர்களை, அவர்களின் வினைப்பாடுகளிடம் இருந்து, மீட்டுக் கரை சேர்ப்பதாக உள்ளது. இவளுக்கு நேர் எதிர்த்திசையில் நிற்கிறாள் நம் அவ்வைப் பாட்டி! ஆண்டாள் தெய்வக் காதலினால் கவர்ந்தாள். அவ்வையிடம் சமுகப் பார்வையும் அறக்கோட்பாடுகளும் மிகுந்து காணப்படுகிறது. இவளும் இறைவனை அடைய விரும்புகிறாள்... அது காதல் வழி அல்ல. தவத்தின்  வழி...! அவ்வைப் பாட்டியின்  பூர்வீகம் சோழ நாட்டு உறையூர். அந்தண குலத்திலே ஒருதாய் தகப்பனுக்கு மூத்த பெண்ணாகப் பிறந்தவர். எப்படி குழந்தைப் பருவத்திலேயே ஞானசம் பந்தர் கோபுரத்து தெய்வசிலையைப் பார்த்து தோடுடைய செவியன் என்று தொடங்கும் பாடலைப் பாடி தன் ஞானத்தை உலகறியச் செய்தாரோ அதே போலவே அவ்வையும் பிள்ளையாக இருந்தபோதே தான் ஒரு தெய்வக்குழந்தை என்பதை  உணர்ந்து விட்டாள்- இட்டமுடன் என் தலையில் இன்னபடியென்று எழுதிவிட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? முட்டமுட்டப் பஞ்சமேயானாலும் பாரம் அவனுக்கன்னாய்! நெஞ்சமே அஞ்சாதே நீ என்று அவ்வை பாடியதைக் கேட்டு வியக்காதவர்கள் இல்லை. குறிப்பாக அவ்வையின் தாய் தந்தையர்கள் இவரைப் பற்றிய கவலையை விட்டொழித்தனர்.

குழந்தைப் பிராயத்திலேயே, அவ்வையின் மனம் கவர்ந்த கடவுள் பிள்ளையார்தான். யானை உம்மாச்சி என்று நம் பிள்ளைகளின் மனங்களையும் வேகமாகக் கவர்பவர் இந்த கணபதிதானே? இந்தப் பிள்ளையார் ஆகமத்துக்கு அடங்குவது போலவே வெறும் அன்புக்கும் அடங்குபவர். நல்ல நிலம் பார்த்துக் கோவில் கட்டிக் அங்கேதான் இவரை குடியமர்த்த வேண்டும் என்றில்லை. கட்டிக் களிமண்ணை எடுத்துக் கையாலே உருவம் அமைத்து ஒரு மரத்தடியில் உட்கார்த்தி வைத்து இரண்டு அருகம்புல்லைக் கிள்ளிப் போட்டாலே போதும். அகம் மகிழ்ந்து அருளை வாரி வழங்கிவிடுபவர் இவர். அவ்வை வாழ்ந்த உறையூரிலும் இவருக்குத் திரும்பிய பக்கமெல்லாம் வானம் பார்த்த கோவில்கள். ஆற்றுப்பக்கமாய் குடம் எடுத்துச் செல்லும்போதெல்லாம் அவ்வையின் பார்வையில் படும் இவர்தான் முதல் இஷ்ட தெய்வம். ஆற்று நீரை குடத்தில் கொண்டு வந்து அபிஷேகம் செய்து விட்டு அப்படியே பிரதட்சணமாய் வந்து மனமுருக வணங்கிடும்போது அவ்வைக்குள்ளே  இனிய தமிழில் பல துதிப் பாடல்கள் தோன்றின. அதில் ஒன்றுதான்-

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ
 எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா...

என்னும் பாடல். அவ்வையின் காலம் மதுரையின் கடைச்சங்கம் இருந்த காலம். இந்த கால்த்தில்தான் சோழநாட்டில் கம்பரும், ஒட்டங்கூத்தரும், புகழேந்தியார் என்னும் புலவரும் வாழ்ந்து வந்தனர். இவர்களில் கம்பருக்கும், ஒட்டங்கூத்ருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.  புகழேந்தியார் வழியோ தனிவழி. இப்படிப் பெரும் புலவர்கள் வாழ்ந்த நாளில்தான் காலம் அவர்களோடு அவ்வையையும் கொண்டு சேர்த்தது.

முன்னதாக அவ்வைத் தன் வாழ்வில் ஓர் அதிசயத்தையும் கேட்டு நிகழ்த்திக் கொண்டதை அனைவரும் அறிந்து கொண்டாக வேண்டும். அவ்வை ஒரு பெண்ணாக இருந்தும் பெண்களுக்கேயுரிய அழகுணர்ச்சிக்கும் அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் தரவேயில்லை. வாலிபப் பிராயத்தை எட்டும் நிலையில் தானொரு ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு இல்வாழ்வு எனும் இல்லறத்தில் செல்ல விரும்பவில்லை. இல்லறத்தில் செல்ல விரும்பாத நிலையில் நல்லறமாக அவ்வை கருதியது இறையறத்தைத்தான். அதாவது தவத்தை... குழந்தைப் பிராயத்திலேயே சிவபெருமான் மேல் பாரத்தைப் போட்டு விட்டேன் என்று பாடிய மனம், இல்லறம் எனும் பெரும்பாட்டை, பிள்ளைகள் உறவுகள் என்று வழிவழி யாய்த் தொடரும் ஒரு பந்தத்தை எப்படி விரும்பும்? அதையே விரும்பாதபோது இளமைதான் எதற்கு? இந்த இளமை, பெண்கள் வரையில் சற்று போகமும் மோகமும் சார்ந்தது. நாம் அதைக் கொண்டாடாவிட்டாலும் பிறர் கண்களுக்கு அது விருந்தாகி விடும் ஆபத்தும் அதிகம். தோற்றம் என்பது ஏற்றம் தருவதாக இருக்க வேண்டும். எனவே அவ்வை தனது மனதிற்கிசைந்த கணபதியிடம் தனக் கேற்ற விதமான உடம்பைக் கேட்கிறாள். கணபதியும் அந்த இளமையான தெய்வக்குழந்தைக்கு முதிர்ந்த வைரம் பாய்ந்த ஞானம் மிக்க தேகத்தை வழங்கி அருளுகிறான். உலகிலேயே இளமையைத் துறந்து முதுமையை வேண்டிப் பெற்றவர்கள் இருவர். ஒருவர் காரைக்காலம்மையார், அடுத்து, அவ்வைப் பாட்டி மட்டுமே. இங்கேயிருந்து தொடங்குகிறது அவ்வையின் பவித்ரமான பயணம்...