சனி, 14 செப்டம்பர், 2013

சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?

ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது. ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால்தான், கர்ப்பகிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோயில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவது கூடாது என்கின்றனர். சன்னதியைவிட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்று சொல்வதும் இதன் விளைவாக வந்தது தான்.
காகத்திற்கு உணவிடுவது ஏன்?

நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர். காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம். இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை "ஆகாயத்தோட்டி என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும்
இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.
கீதையின் பொருள் தெரியுமா?

பகவத்கீதையை "பகவத்கீதா என்று சொல்வதும் வழக்கம். "பகவத் என்றால் "இறைவன். "கீதா என்றால் "நல்ல உபதேசம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. "கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது "தாகீ என்று மாறும். "தாகீ என்றால் "தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். "துறவு கொள்ளுங்கள்,  எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் "கீதா விற்குரிய ஆழமான பொருளாகும். அர்ஜுனன் தன்  உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது.
கும்பாபிஷேகம் : சில தகவல்கள் ...

கும்பாபிஷேகத்தின் போது என்னென்ன சடங்குகள் நடத்தப்படும் என்பதை பார்த்திருப்பீர்கள். அவற்றிற்குரிய விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆவாஹனம்
ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பது பொருள். கும்பத்தை முதலில் கோயிலில் உள்ள தெய்வத்திருவின் அருகில் வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். தர்ப்பையின் மூலம் கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.

கும்பம்
யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம் ஆகியவற்றுடன் வளர்க்கப்பட்டு எழும் புகையுடன் வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி ஆகியவற்றுடன் பக்தர்களின் நல்ல எண்ணங்களும், எங்கும் நிறைந்திருக்கின்ற திருவருள் சக்தியை தூண்டிவிட்டு கும்பத்தில் விளங்கச் செய்யும். அப்போது கும்பம் தெய்வீக சக்தி பெறும். இந்த கும்பத்தை சிவனின் வடிவமாக ஆகமங்கள் கூறுகின்றன.

பாலாலயம்
கும்பத்தை கோயிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைப்பார்கள். தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் ஓதி, தெய்வ வடிவில் விளங்கும் மூர்த்தியை கும்பத்திற்கு மாற்றுவார்கள். பின்பு அதை வேறிடத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். இதை  பாலாலய பிரவேசம் என்பர்.

கிரியைகள்
கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு காலத்தில் 64  கிரியைகள் செய்யப்பட்டன. காலப்போக்கில் 55 கிரியைகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது எல்லா கிரியைகளும் செய்யப்படுவதில்லை. 64ல் முக்கியமான 13 கிரியைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.

ஆசாரியவர்ணம்
கும்பாபிஷேகத்திற்கென கிடைக்கும் பொருளுக்கு பூஜை செய்ய வேண்டும். இதை தன பூஜை என்பர். பூஜை செய்த பணம் அல்லது பொருளில் ஒரு பகுதியை கட்டட வேலைக்கும், ஒரு பகுதியை நித்திய, மாதாந்திர, விசேஷ நட்சத்திர பூஜை உற்சவத்திற்கும், மூன்றாவது பாகத்தை ஆபரணங்கள் வாங்கவும் ஒதுக்குவார்கள். இப்படியே கோயில் காரியங்கள் சம்பந்தப்பட்ட 11 பாகமாக இந்த செல்வத்தை பிரிப்பார்கள். கும்பாபிஷேகத்தை நடத்தும் பிரதான ஆசாரியரை வணங்கி, இந்த செல்வத்தைக் கொண்டு குடமுழுக்கு நடத்தி தாருங்கள் என கேட்டுக்கொள்ள வேண்டும். இதையே ஆசாரியவர்ணம் என்பர்.

அனுக்ஞை
கோயில் பழுது பார்க்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, ஒரு நல்ல நாளில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வைப்பதற்கு தகுதியான ஒருவரை தேர்ந்தெடுப்பதையே அனுக்ஞை என்கிறார்கள். விநாயகர் சன்னதி முன்பு இந்த நிகழ்ச்சி நடக்கும். சம்பந்தப்பட்டவரே கும்பாபிஷேகத்தை நடத்தித் தர அனுமதி தரவேண்டும் என விநாயகரிடம் வேண்டி கேட்டுக்கொள்வதே அனுக்ஞை ஆகும்.

பிரவேசபலி
கும்பாபிஷேகம் செய்யும் இடத்திலிருந்து எட்டு திசைகளிலும் வசிக்கின்ற ராட்சதர் முதலான தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி, அவர்களை கடல், மலை, காடு, ஆறு, மயானம் ஆகிய இடங்களில் சென்று இருங்கள் என திருப்திப்படுத்தி வழி அனுப்புவதே பிரவேச பலி ஆகும். கும்பாபிஷேகங்களில் மட்டுமின்றி, கோயில்களில் திருவிழா நடக்கும்போதுகூட இதை செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் கூறுகின்றன.

வாஸ்துசாந்தி
ஆகமங்களிலும், சிவமகா புராணத்திலும் வாஸ்து பற்றி கூறப்பட்டுள்ளது. அந்தகாசுரன் என்பவனை கொல்வதற்காக தேவர்கள் சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தனர். சிவபெருமான் தனது வியர்வைத் துளியிலிருந்து ஒரு பூதத்தை உருவாக்கி அந்தகாசுரனை வதைத்தார். அந்த பூதம் சிவனிடம் பல வரங்கள் பெற்று உலகத்தை வருத்தியது. சிவபெருமான் பூதத்தை அடக்க அதிபவன் என்பவரை சிருஷ்டித்து அனுப்பினார். அதிபவன் அந்த பூதத்தின் உடலின்மீது 53 தேவதைகளை வசிக்க செய்து, மாயக்கயிறுகளால் கட்டினார். இதனால் இவர் வாஸ்துபுருஷன் என பெயர் பெற்றார். வாஸ்து புருஷனால் குடமுழுக்கு கிரியைக்கு இடையூறு நேராதபடி 53 தேவதைகளுக்கும் பூஜை, பலி, ஹோமம் ஆகியவற்றால் சாந்தி செய்ய வேண்டும். இதுவே வாஸ்துசாந்தி ஆகும்.

ரக்ஷா பந்தன்
காப்பு கட்டுதல் என இதற்கு பொருள். சிவாச்சாரியார்கள் நாகராஜனுக்கு பூஜை செய்து, மந்திரித்த மஞ்சள்கயிறை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள். கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் சிவாச்சாரியார்களின் குடும்பத்தில் எதிர்பாராதவகையில் ஏதாவது தீட்டு ஏற்பட்டால் காப்பு அவிழ்க்கப்படும்வரை அந்த தீட்டு அவர்களை பாதிக்காது. 

கடஸ்தாபனம்
கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமானது கடஸ்தாபனம்.  கலசம் நிறுவுதல் என்பது இதன் பொருள். தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதாவது ஒன்றில் கும்பங்கள் செய்யப்படும். கும்பங்களை இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட கும்பங்களை குறைகள் இல்லாமல் மந்திரித்து, அக்னியில் காட்டுவார்கள். சிவப்பு மண்ணை கும்பத்தின் மீது பூசி, நூல் சுற்றி ஆற்றுநீர் அல்லது ஊற்று நீரால் நிரப்புவார்கள். கும்பத்தின் மேல் வாய் பகுதியில் மாவிலைகளை செருகி, தேங்காய் வைப்பார்கள். கும்பத்திற்குள் நவரத்தினம், தங்கம், வெள்ளி, நவதானியம் ஆகியவற்றை பரப்புவார்கள். எந்த மூர்த்திக்கு குடமுழுக்கு நடக்கிறதோ அந்த மூர்த்தியின் உடலாக அந்த கும்பம் கருதப்படும்.

அஷ்டபந்தனம்
கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் என சொல்வதுண்டு. பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே அஷ்ட பந்தனம் என பெயர்.

மிகுத்சம்கிரஹணம்
இதற்கு மண் எடுத்தல் என பொருள். கும்பாபிஷேகத்தின்போது அங்குரார்ப்பணம் எனப்படும் முளையிடுதல் நிகழ்ச்சி நடக்கும். மண்ணைத்தோண்டி பாலிகைகளில் இட்டு, நவதானியங்களை தெளித்து, முளைப்பாலிகை அமைப்பார்கள். இதுவே மிகுத்சம் கிரகஹணம் எனப்படும்.





சிவாய நம - விளக்கம்!

சி என்றால் சிவனையும் வா என்றால் சக்தியையும் என்றால் உயிரையும் என்றால் மறைக்கும் தொழிலையும் என்றால் ஆணவம் முதலான கர்வங்களை ஒழிப்பதையும் குறிப்பதாகும். இப்படி இறையருள் பெறுவதையே சிவாயநம என்கிறோம். 
சாளக்கிராமம் என்பது என்ன?

சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும். 

சிறப்பு: சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம். சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம். நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம், இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம். இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம். வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம். விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம். மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம். விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம். பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம். சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம்.
ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம். மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம். துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம். சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம். விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம். இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும்.  சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர்.  12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன.  வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.
நீலநிறம்     - செல்வத்தையும், சுகத்தையும் தரும்
பச்சை          - பலம், வலிமையைத் தரும்
கருப்பு          - புகழ், பெருமை சேரும்
புகைநிறம் - துக்கம், தரித்திரம்.

யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (ஒலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதினா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் 1200ம் ஆண்டில் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.  

மகிமை: ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து கி.பி.1163 ம் ஆண்டு மத்தியில் இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள். 

மக்பராக்கள்: ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அழத்தாகிர் (ஒலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும், ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா, துணைவியர் சைய்யிது அலிபாத்திமா என்னும் ஜைனப், தங்கை சையிது ராபியா, மைத்துனர் சையிதுஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர்களின் சமாதிகளும் காணமுடியும்.

நோய் தீர்க்கும் தலம்: ஏர்வாடி தர்கா வளாகத்தில் ஜாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கிசெல்கின்றனர். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமாரசுவாமி ரகுநாதசேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்து வந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்துவிஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்துவிஜயன் நோய் முற்றிலுமாக நீங்கியுள்ளது. ஏர்வாடி தர்காவின் மகிமையை தனது மருமகனான மன்னர்சேதுபதியிடம் கூறியுள்ளார்.  மன்னரும் தனது மனைவிக்கு ஆண்வாரிசில்லை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதிமுன் முறையிட்டுள்ளனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண்வாரிசு கிட்டியது. இதற்கு பகரமாக ராமநாதபுரம் மன்னர் ஏர்வாடியை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு இதைவிட சான்று தேவையில்லை. 

சந்தனக்கூடு திருவிழா: சேதுபதி மன்னர் இணைந்து ஆரம்பித்து வைத்ததுதான் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் துல்கஃதா பிறை 1 ல் புனித மௌலீது ஷரீப் ஆரம்பித்து அடிமரம் ஏற்றுதல், கொடியேற்றம், சந்தனக் கூடு திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழா அன்று புனித மௌலீது நிறைவடைந்து சிறப்பு துஆ ஓதப்படும். சந்தனக்கூடு ஊர்வலத்துடன் பாதுஷா நாயகம் மக்பராவிற்கு (சமாதிக்கு) சந்தனம் பூசும் புனித நிகழ்ச்சிநடைபெறும், துல்கஃதா பிறை 30 அன்று புனிதகுர்ஆன் ஷரீப் ஓதி தமாம் (நிறைவு) செய்து கொடி இறக்கப்படும். இந்த ஆண்டின் சந்தனக்கூடு வைபவம் வரும் 31ம் தேதி நடக்கிறது.  சந்தனக்கூடு செய்வதில் இந்து மதத்தினருக்கு பங்களிப்பு உள்ளது. யார்வாடி நின்றாலும் ஏர்வாடி வந்தால் நலம் பெறலாம் என்று ஏர்வாடி தர்கா அருகில் உள்ள கடல் அலைகள் முழங்கிக் கொண்டே இருக்கின்றன.

கணபதி ஹோமத்தின் சிறப்பு!

எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது மரபு. விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்கவேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடத்தை இப்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கிறார்கள். செங்கல்பட்டு அருகே இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரையும் அச்சிறு விநாயகர் என்றே அழைக்கிறார்கள். கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா,  பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது மிகச்சிறந்த பலனைத்தரும். நமது சக்திக்கு ஏற்றபடி செலவு செய்து இந்த பூஜையை நடத்தலாம். தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை 5 ஆயிரம் ரூபாய்வரை இதற்கு செலவாகும். வீடுகளில் ஆயிரம் ரூபாய்க்குள் இந்த பூஜையைச் செய்து முடிக்கலாம். கணபதி ஹோமத்தை ஒருமணி நேரத்திற்குள் செய்து முடித்துவிடலாம்.
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள்

சித்திரை :மாதம் தமிழ் புத்தாண்டின் துவக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்களையும், அனைவரும் விரும்புவது உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். ஏதாவது ஒரு லட்சியத்தை மனதில் கொண்டு அதை நறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள். எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக அறிவியல் மற்றும் காவல் துறைகள் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்றவை. உங்கள் முயற்சியில் மின்னல் வேகம் இருக்கும். எதற்கும் கலங்காத மனம் உண்டு. இந்த வேகத்தை செயல்படுத்தும்போது மற்றவர்களை பகைத்துக்கொள்ள வேண்டி வரும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால் சக தொழிலாளர்களை விரட்டி வேலை வாங்க வேண்டியிருக்கும். அப்போது அவர்கள் உங்களை அக்னி போல நனைத்து ஒதுங்கிப்போவார்கள். உங்களை  திட்டுவார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும். வேலை செய்யாமல் ஏதாவது ஒரு மூலையில் முடங்கி இருப்போம் என்ற எண்ணமே உங்களுக்கு  பிடிக்காது. சூரியனின் பலத்தால் உங்களிடம் ஆற்றல் அதிகம். செவ்வாய் உங்கள் சக்தியை வெளிப்படுத்தும். சுக்கிரன் உங்களை எதிர்ப்பவர்களை விரட்டியடிக்கும்  தன்மையைக் கொடுப்பார். இன்னும் கொஞ்சநிõள் கழித்து ஒரு காரியத்தை செய்வோமே என்று ஒதுக்கிவைக்கும் பழக்கம் உங்களிடம் இல்லை. பெரிய துணிவைப் பெற்றுள்ள நீங்கள், உங்கள் மனதிற்குள் கோழை என்றே உகளை எண்ணிக்கொள்வீர்கள். இதற்கு காரணம் அவசரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரபரப்புடனும், ஆத்திர உணர்வுடனும், உணர்ச்சி கிளர்ந்தெழுவதாலும் ஏற்படும் நிரம்புத்தளர்ச்சியால் யாரைப் பார்த்தாலும் கத்தத் தொடங்கிவிடுவீர்கள். இந்த கோபத்தை அடக்க நீங்கள் பழகிக்கொண்டால் உங்கள் வாழ்க்கை சித்திரை சூரியன் போல பிரகாசமாக அமையும். பொதுவாகவே சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிக அதிகமாக இருக்கும். சூரியனின் வெப்ப சூழலில் பிறந்ததால் ஏற்படும் ஆத்திரமே இது. இதற்கு உடல் நிலத்தையும் பேணிக்கொள்வதன் முலம் ஆத்திரத்தை அடக்கலாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். வாரம் ஒரு முறைய õவது குளிர்ந்த நீரில் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். திருத்தலங்களுக்கு சென்று அங்கு ஓடும் ஆறுகளில் மூழ்கி நீராடவேண்டும். சித்திரை மாதத்தில் பிறந்த பெண்கள் நிடை, உடை, பாவனைகளில்கூட கவர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இந்த கவர்ச்சியின் காரணமாக மற்ற மாதங்களில் பிறந்தவர்கள் உங்களிடம் பொறாமை கொள்வார்கள். ஆனால் உங்கள் உள்மனதை புரிந்துகொண்டால் அவர்கள் உங்களிடம் ஆயுள் முழுவதும் நிட்புடனும் உறவுடனும் இருப்பார்கள். மொத்தத்தில் உங்கள் முன்கோபத்தை மட்டும் தவிர்த்துவிட்டால் உங்களை வெல்ல யாராலும் முடியாது. உங்கள் இளம் வயதில் நீங்கள் கோபக்காரராக இருப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் திருமணமான பிறகு இந்த கோபத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.

 வைகாசியில்: பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெறுவார்கள். இதை மற்றவர்களிடம் சொல்லி, எனது அனுபவத்தில் நான்இன்னின்ன துன்பங்களையும் இன்பங்களையும் சந்தித்திருக்கிறேன். என்னை முன் உதாரணமாகக் கொண்டு நடந்துகொள்ளுங்கள் என கூறுவர். இதனால் துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக பாவிக்கும் பழக்கம் இவர்களிடம் உண்டு. இவர்கள் திடகாத்திரமான உடலமைப்பு கொண்டவர்கள். இவர்களுக்கு நோய் ஏற்பட்டாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் டாக்டரிடம் போகக்கூட வேண்டாம் என நினைத்து தங்கள் பணியை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதேநேரம் இவர்களிடம் பொறுமை அதிகம் என்பதால் வேலையை முடிக்க அதிகநேரம் எடுத்துக் கொள்வார்கள்.  இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்பதுபோல் இந்த மாதத்தில் பிறந்த தொழிலதிபர்களாக இருந்தாலும் சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவரவர் துறையில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை வேலைகளை தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பு வராவிட்டாலும் அதைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள். தங்கள் அனுபவ அறிவால் படித்தவர்களை விட சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். ஆனால் யாராவது இவர்களிடம் சண்டை போட்டால் கடைசிவரை விடாப்பிடியாக நின்று அதில் வெற்றி பெறும்வரை போராடுவார்கள். ஆனால் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு என்னதான் பொருள் வந்தாலும் அது கையில் நிற்காத அளவிற்கு செலவழிந்து போவதுண்டு. செலவுகளை கட்டுப்படுத்த முயன்றாலும், வீட்டில் உள்ள மற்றவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு செலவழிக்க வேண்டிய அவசியம் வந்துவிடும். இவர்கள் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள். சிறு குடிசையாக இருந்தாலும் கூட அதனுள் நுழைந்தால் பெரிய மாளிகைக்குள்ளோ அல்லது புனிதமான கோயிலுக்குள்ளோ வந்ததுபோன்ற உணர்வு ஏற்படும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் யாரிடமும் லேசாக பழகமாட்டார்கள். பழகியவர்கள் இவர்களுக்கு துரோகம் நினைத்தால் காலம் முழுவதும் அவர்கள் முகத்தில் விழிக்கமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சோம்பல் அதிகம். வேகமாக வேலை செய்துகொண்டிருக்கும்போதே திடீரென சோம்பல் தலைதூக்கி அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். பணம் இவர்களிடம் சேராமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான்.  இவர்களுக்கு லேசில் கோபம் வராது. கோபம் வந்தால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல கடுமையான கோபம் வரும். இந்த குணத்தை மட்டும் நீங்கள் மாற்றிக்கொண்டால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. இதுபோல சோம்பல் ஏற்படும் நேரங்களில் மட்டும் அதை எப்படியாவது விடுத்து பணியில் தீவிரம் காட்டினால் வாழ்வில் வருத்தம் என்பதே இருக்காது. 

  ஆனி :மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள் வாழ்க்கையில் மிகவும் முன்னேறத் துடிப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை, தானும் சிரித்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணுபவர்கள். இவர்களிடம் சிந்திக்கும் சக்தி அதிகம். சிந்தித்ததை செயல்படுத்த வேண்டும் என்றும் கருதுவார்கள். அதேநேரம் இவர்களுக்கு குணம் அடிக்கடி மாறுபடும். ஒரு வேலையை துவங்கி அதை செய்து கொண்டிருக்கும்போதே இன்னொரு வேலையில் கால் வைப்பார்கள். இதனால் பழைய வேலை கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டு. எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எடுத்த வேலையை முடித்துவிட்டு, அடுத்த வேலைக்கு செல்வது நலம் பயக்கும். இவர்கள் மற்றவர்களை மயக்கும் வகையில் பேசுவார்கள். இந்த பேச்சைக்கொண்டு இவர்கள் எழுத்து மற்றும் மேடைப்பேச்சில் ஈடுபட்டால் எதிர்காலம் சிறக்கும். இவர்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் சந்தேகப்படுவதும் உண்டு. இதை தவிர்க்க முயல வேண்டும். ஆரம்பிக்கும் முன்பே தீர ஆலோசித்து ஒரு வேலையை தொடங்கினால் இந்த பிரச்னைக்கு இடம் இருக்காது. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஞாபகசக்தி மிக்கவர்கள். ஆனியில் பிறந்தவர்கள் நகைச்சுவை பிரியர்கள். இவர்கள் ரோஷக்காரர்கள். மற்றவர்கள் ஏதாவது தங்களுக்கு இடையூறு செய்தால் அதற்காக வருத்தப்படவும் செய்வார்கள். எரிந்தும் விழுவார்கள். இவர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களில் யாரையாவது தொழில் காரணமாகவோ பிற காரணங்களாலோ பிரிய வேண்டி வந்தால் அதனால் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி அற்றவர்கள். இவர்கள் கட்டட வேலை, வண்டி இழுத்தல் போன்ற வேலைகளை செய்ய தயங்குவார்கள். இவர்களைப் பொறுத்தவரை கிளார்க் தொழில் செய்யவே அதிகமாக விரும்புவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பணக்காரர்கள் தொழிலதிபர்களாக இருக்கவே விரும்புவார்கள். சிறு சிறு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு பைனான்ஸ் தொழில் சரியாக வராது. இவர்கள் வட்டி வாங்கும் குணம் உடையவர்கள் அல்ல. அதே போல பிறரிடம் கடன் வாங்கினாலும் உடனே திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அரக்கப் பரக்க வேலை பார்ப்பார்கள். இவர்களில் சிலர் கெட்டவர்களுடன் சகவாசம் வைத்து அதனால் வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தீயவற்றில் இருந்து மீண்டு நல்லதையே செய்து பழகினால் மீண்டும் தீமைகள் இவர்களை அணுகாது. இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இவர்களுக்கு அதிகமான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதே நேரம் குழந்தைகளால் சிறிது காலம்வரை கஷ்டப்படுவார்கள். 

ஆடி: மாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். எதிர்காலத்தை திட்டமிடுவதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அந்த கற்பனைகளை செயல்படுத்துவதற்காக என்னென்ன வித்தைகளை செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால் இவர்கள் காட்டும் பாசத்தை வேறு யாராலும் காட்ட இயலாது. குடும்பத்தின் மீதுள்ள பாசத்தை மனதிற்குள் வைத்துக்கொண்டு, பெற்றவர்களிடமோ மற்றவர்களிடமோ காட்டமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் மொழி மீது அதிக விருப்பம் இருக்கும். தமிழில் அதிக மார்க் வாங்குவார்கள். இந்த மாதத்தை கடக மாதம் என சொல்வதுண்டு. கடகத்திற்குரிய சின்னமான நண்டைப்போல இவர்கள் மற்றவர்களை பேச்சில் கடித்தும் விடுவார்கள். அதே நேரம் முன்னெச்சரிக்கையாக ஒதுங்க வேண்டிய நேரத்தில் நண்டு ஓடி ஒளிந்துகொள்வது போல மறைந்தும் கொள்வார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பணம் ஈட்ட வேண்டுமென்று திட்டமிட்டு அதை மட்டும் செயல்படுத்துவதில் இறங்கிவிட்டால் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அதேநேரம் பணம் நம்மைத் தேடி வரட்டும் என இருந்துவிட்டால் பிற்காலத்தில் மிகவும் நொந்துகொள்ள வேண்டி வரும். இவர்கள் அரசியலில் ஈடுபட்டால் பழைய தலைவர்களுக்கு சிலை எடுத்தே சம்பாதித்துவிடுவார்கள். இவர்களை யாராவது திட்டினால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே நேரம் யானையைப் போல மனதில் வைத்துக்கொண்டு மறக்கமாட்டார்கள். இவர்களிடம் ஞாபகசக்தி அதிகம். இவர்களுக்கு ஒரே ஒரு அறிவுரையை சொல்லியாக வேண்டும்.  இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் மிக அதிகமான நட்பு கொண்டுவிடுவார்கள். அதே நேரம் அவர்களால் இடையூறு ஏற்பட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல விரக்தியின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள். இவ்வாறு செய்யாமல் நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேறுவதை யாராலும் தடுக்கமுடியாது. ஆடி மாதத்தில் பிறந்த பெண்களால் பெற்றோர்கள் மகிழ்ச்சி குறைந்தே இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் பெற்றவர்கள் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள்.

 ஆவணியில்: பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதிப்பவர்களாக இருப்பார்கள். எதையும் உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும் என்ற குணமுடையவர்கள். இதன் காரணமாக இவர்களிடம் பிடிவாத குணமும் இயற்கையாகவே அமைந்திருக்கும். இவர்கள் செய்வது மட்டுமே சரி, மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்ற எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள். இந்த மாதத்தில் பிறந்த கடைக்குட்டி குழந்தைகளின் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தை பார்த்து இவர்கள் பிறந்த சிம்ம ஸ்தானத்தில் இருந்து சூரியனின் இருப்பைப் பொறுத்து எந்த அளவுக்கு கவுரவமாக வாழலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தர்களாக மாறுவார்கள். ஏனெனில் இந்த மாதங்களில் பிறந்தவர்களின் கொள்கைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இவர்களிடம் நிதான புத்தி இருக்கும் அளவிற்கு அவசரமும் இருக்கும் என்பதால் சில காரியங்களில் தடுமாற்றம் ஏற்படும். எனவே அவசர குணத்தை மட்டும் விட்டுவிட்டால் நல்லது. இவர்களிடம் சிக்கனம் அதிகம். அதேநேரம் வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரிப்பார்கள். இவர்களின் உபசரிப்பை பொறுத்தே உறவினர்களும் நண்பர்களும் இவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுவார்கள். இவர்களுக்கு கடன் வாங்குவது பிடிக்காது. அதுபோல கடன் கொடுக்கவும் பிடிக்காது. யாரிடமாவது கடன் வாங்கும் நிலைமை ஏற்பட்டால் அதற்கு பதிலாக ஏதாவது கடன் கொடுத்த நபருக்கு உபகாரம் செய்துவிட முயற்சி செய்வார்கள். அதிகாரம் செய்யும் சுபாவம் இவர்களிடம் அதிகம். இவர்களுக்கு ஏற்ற மனைவி அமைவது மிகவும் கடினம். இதன் காரணமாக வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டதாக கருதி மனம் உடைந்து போவார்கள்.  எனவே திருமணத்தின்போது தகுந்த மணமகளையோ, மணமகனையோ தேடிக்கொள்வது நல்லது. ஆரம்பகாலத்தில் நாத்திகராக இருக்கும் இவர்கள் காலப்போக்கில் மிகப்பெரிய ஆத்திகராக மாறிவிடும் சூழல் ஏற்படும்.

 புரட்டாசி: மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்களின் எதிர்பாராத முன்னேற்றத்தால் மற்றவர்கள் இவர்களைக் கண்டு பொறாமைப்படுவதுண்டு. இவர்களுக்கு தொழில் ரீதியாக பின்னால் என்ன நடக்கும் என்பதை கிரகிக்கும் சக்தி உண்டு. எனவே தொழில் மற்றும் வியாபாரத்தில் இவர்களை வெற்றிகொள்ள யாராலும் முடியாது. கல்வியிலும் இவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அறிவியல் துறையில் ஈடுபட்டால் இவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புத்தகம் படிப்பதில் இவர்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். யாராவது தவறு செய்தால் அவர்களை தட்டிக்கேட்கும் குணம் இவர்களிடம் உண்டு. அத்துடன் திரும்பவும் அந்த தவறை செய்யாமல் இவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கு சென்று வருவதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களிடம் சில குறைகளும் உண்டு.  இயற்கையாகவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருந்தும்கூட ஒரு லட்சியத்தை மேற்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டுமென நினைக்கமாட்டார்கள். இவர்களுக்குரிய திறமை இவர்களுக்கே தெரியாமல் போய்விடுவது தான் பெரிய குறையாகும். இவர்கள் சந்தேக மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள். இப்போதைக்கு கிடைத்ததுபோதும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கும். எனவே பின்னால் வரப்போகும் பெரிய லாபத்தை விட்டுவிடுவார்கள்.  இதையெல்லாம் தவிர்த்து ஒரு லட்சியத்துடன் வாழ்ந்தால் இந்த மாதத்தில் பிறந்தவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். இவர்களுக்கு கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் விருப்பம் அதிகம். இதைத் தவிர்த்து சத்துள்ள உணவை அளவோடு சாப்பிட்டால் இவர்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை கணவன்மாருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இவர்கள் தங்கள் கணவன் வீட்டு வேலை உட்பட அனைத்தும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களில் பலருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். எனவே தக்க பரிகாரம் செய்து இவர்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.

 ஐப்பசி :மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள். இந்த மாதத்தில்தான் ராஜராஜசோழன் பிறந்தான். அவர் கட்டிய தஞ்சை கோயில் காலத்தால் அழியாத ஒன்று. அவரைப் போலவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரிய திட்டமாகவே போடுவார்கள். இதனாலேயே இவர்கள் அரசியல்வாதிகளாக ஆவதற்கு தகுதி 
கொண்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். பெண்களிடம் பழகுவதில் இவர்களைப் போல் வல்லவர்களை காணமுடியாது. ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களின் நட்பை பெண்களும் விரும்புவார்கள். இவர்களிடம் பொறுமை அதிகம். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. இவர்களில் சைவத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூட அசைவம் சாப்பிட வேண்டும் என விரும்புவார்கள். பிறரது தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதில் இவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்களிடம் உணர்ச்சிவசப்படும் பழக்கம் அதிகம். பிறர் முன்னிலையில் கவுரவமாக வாழவேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மனைவிக்கு பயப்படமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு மூத்த சகோதரர்கள் இருப்பது அபூர்வமான ஒன்றாகும். நீதித்துறையில் நுழைந்தால் இவர்கள் ஜொலிப்பார்கள்.இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எந்த வேலையையும் தாமதமாகவே செய்வார்கள். தெய்வபக்தி அதிகமாக இருந்தாலும் இவர்களிடம் கர்வமும் அதிகமாக இருக்கும். கல்லூரிக்கு சென்று படிக்காவிட்டாலும் சாதாரண கல்வி அறிவு உள்ளவர்கள்கூட ஏதாவது வேலை செய்துவாழ்க்கையை நடத்தவேண்டும் என எண்ணுவார்கள்.  இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நகைகள், உடைகள் மீது ஆர்வம் அதிகம். ஆனால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் வாழ்நாள் முழுவதும் சிரமம் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடந்துவிடும். அவ்வாறு நடக்காவிட்டால் மிகவும் தாமதமாகிவிடும்.

 கார்த்திகை :மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த பயத்தைப் போக்கி துடிப்புள்ளவர்களாக விளங்க இவர்கள் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரை வணங்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளும் வல்லமை உடையவர்கள். எனவே இவர்கள் செய்யும் செயல்கள் நல்லதாகவே அமையும். ஜோதிடம் கற்றுக்கொள்ளும் தகுதி இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளின் காதுகளை டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. கார்த்திகை இடியும் மின்னலும் உடைய மாதம் ஆதலால் இந்த சத்தத்தைக் கேட்டு குழந்தைகளின் காதுகள் பாதிக்கப்படலாம் என கூறுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இளமையிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள். அந்த சோதனைகளால் ஆத்திரம் ஏற்பட்டு செய்யக்கூடாத செயல்களை செய்து விடுவதும் உண்டு. எனவே பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது. இவர்கள் இயற்கையிலேயே தாகம் உடையவர்களாக இருப்பார்கள். ஆத்திரக்காரர்களாக இருப்பதால் இவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு அடிக்கடி கோயிலுக்கு செல்வார்கள். இப்படியே சென்றுகொண்டிருக்கும் இவர்கள் பெரும் பக்தர்களாக மாறி ஞான மார்க்கத்திற்கே சென்றுவிடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்குரிய மாதம் இது. எனவே முருகனை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் வணங்கிவந்தால் சகல சவுபாக்கியங்களுடன் விளங்குவார்கள். இவர்கள் குழந்தையைப் போல மற்றவர்களிடம் பழகுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு சகல பாக்கியங்களும் உண்டாகும். இந்த பெண்கள் பெரியவர்களிடம் மரியாதையாக நடப்பார்கள். விரதங்கள், தானம், தர்மம் செய்வதில் வல்லவர்கள். இந்த பெண்களுக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் ஏராளமாக செலவு செய்வார்கள். இதனால் கணவன் மனைவி இடையே சிறு மனஸ்தாபங்கள் வரலாம். இதைத் தவிர்த்துவிட்டால் இந்தப் பெண்களை அசைக்க யாராலும் முடியாது. இவர்களுக்கு அரசு துறைகளில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். லாட்டரி விஷயத்தில் ஆர்வம் கூடுதலாக இருக்கும். இதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும்.

 குளிர்ந்த மாதமான மார்கழியில் :பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். ஒரு காரியத்தை துவங்கினால் அதை முடிக்காமல் தூங்க மாட்டார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம், அரசு பணிகளில் நிர்வாகம் போன்ற உயர்பணிகள் ஏற்றவை. இதில் ஈடுபட்டால் இவர்களால் செல்வத்தை குவிக்கமுடியும்.  ஆடம்பரத்தில் இவர்கள் விருப்பம் கொண்டவர்கள். சம்பாத்தியம் குறைவாக இருந்தாலும் அதிகமாக செலவழிக்க வேண்டும் என விரும்புவார்கள். இதன் காரணமாக இவர்கள் வாழ்க்கையின் பின்பகுதியில் சிரமப்படுவார்கள். எனவே இவர்கள் இந்த குணத்தை மாற்றிக்கொண்டு எதிர்காலத்தைப் பற்றி யோசித்து நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு சைக்கிளில் சென்றால்கூட வேகமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதே நேரம் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் அப்படியே இடிந்து போவார்கள்.  இந்த நேரத்தில் இறைவனை வணங்கி அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். சிறந்த எழுத்தாளர்களாகவும் இவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் முக்கியமான எதைப்பற்றியாவது எழுதினால் அது உலகின் தலைவிதியையே மாற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கெட்ட சிநேகிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கெட்டவர்களுடன் சேர்ந்து மோசமான உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் வாய்ப்பு அதிகம்.  கெட்டவர்களுடன் சேர்ந்து மோசமான உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் வாய்ப்பு அதிகம்.  இதற்காக பின்னால் மிகவும் வருத்தப்படுவார்கள். அதே நேரம் படிப்பில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு திருமணத்தில் அதிக விருப்பம் இருக்காது. அதேநேரம் ஆண்கள் பெண் நண்பர்களுடனும், பெண்கள் ஆண் நண்பர்களுடனும் வாழ்வதற்கு பிரியப்படுவார்கள். மொத்தத்தில் சுதந்திரமான வாழ்க்கையை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் விரும்புவர். எனவே பொருத்தமான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும்.  

தை: மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசு செலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்து செலவு செய்வார்கள். கடமையில் கெட்டிக்காரர்கள். உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு பணம் கொடுத்தாவது காரியத்தை சாதித்துக் கொண்டு விடுவார்கள். இதன்மூலம் ஏராளமான வருமானம் பெறுவார்கள். தை மாதத்தில் பிறந்தவர்களை நம்பி மற்றவர்கள் எந்தக் காரியத்திலும் இறங்கக்கூடாது. இவர்களுக்கு விவசாயம் மற்றும் மனைகள் வாங்கி விற்பது ஏற்ற தொழிலாக இருக்கும். இந்த மாதமே விவசாய மாதம் என்பதால் இவர்கள் முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுவது பெரும் லாபம் தரும். அதே நேரம் இவர்கள் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றிகள் பெருகும்.  இவர்கள் ஒரு அழகிய அல்லது பயனுள்ள பொருளைப் பார்த்தால் அந்தப் பொருளைவிட அதை செய்தவரையே பாராட்டுவார்கள். அப்படிப்பட்டவர்களை சென்று பார்த்து தாங்களும் அந்த தொழிலில் இறங்கினால் என்ன என்று நினைப்பவர்கள். தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். வயதான காலத்தில் கூட மேக்கப் போட விருப்பப்படுவர். மற்ற பெண்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். இவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் இருப்பது அபூர்வமான விஷயம். திருமணமான பிறகு கணவர் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசிப்பதைவிட தனது பொறுப்பில் எவ்வளவு உள்ளது என்று கணக்குப்போடும் குணம் இவர்களிடம் உண்டு.  காதல் விஷயத்தில் இவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. காதல் திருமணம் இவர்களுக்கு ஒத்துவராது. குழந்தைகளை வளர்க்க தை மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். அவர்களது முன்னேற்றத்தில் மிக மிக கவனமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதில்லை. இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு திரும்பத்திரும்ப விஷயங்களை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் என்ன சொன்னாலும் தங்கள் இஷ்டம் போலவே நடந்து கொள்வார்கள். அதே நேரம் படிப்பிலும் விளையாட்டிலும் குழந்தைகள் அதிக கவனம் செலுத்துவார்கள்.  

மாசி: மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். குழந்தைகள் அதிகம் பிறக்காது. இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை உடையவர்கள். விஞ்ஞானத்தில் ஆர்வம் உண்டு. எதை எந்த வேளையில் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து திட்டமிட்டு காரியம் செய்யக்கூடியவர்கள். இவர்களில் சிலர் பிறந்த ஊரில் சிலகாலம் தான் இருப்பார்கள். பின்பு பிழைப்புக்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று விடுவார்கள். கஷ்டப்பட்டு பொருள் சம்பாதிப்பார்கள். இவர்கள் தங்களைத் தாங்களே அழகில் சிறந்தவர்களாக எண்ணிக்கொண்டு கர்வத்துடன் நடப்பார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் திருமணத்தில் ஆர்வம் உள்ளவர்கள். புகுந்த வீட்டில் இவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். கணவனை கைக்குள் வைத்திருப்பார்கள். இவர்கள் அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள். எனவே ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்களை நேசிப்பார்கள்.  அடிக்கடி வீட்டிற்கு உறவினர்களும் நண்பர்களும் வருவார்கள் என்பதால் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் ஆடம்பர பொருட்களை வாங்கவும் ஆசைப்படுவார்கள். இதனால் அதிகச் செலவுகள் ஏற்படும். இதைத் தவிர்த்து தங்கள் வருமானத்திற்கு ஏற்றவகையில் பொருட்களை வாங்கிக் கொள்வது எதிர்கால சேமிப்புக்கு உதவும். தங்கள் இஷ்டப்படிதான் எதுவும் நடக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து இவர்கள் மாறுபட்டவர்கள். அடுத்தவர்களை அனுசரித்து செல்வார்கள். தொழிலில் அதிக அக்கறை காட்டும் குணம் இவர்களிடம் உண்டு.  இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வெங்கடாசலபதியையும், பத்ரகாளியையும் வணங்கிவந்தால் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் விலகும். இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளிடமும் புத்திசாலித்தனமும் ஆரோக்கியமும் உண்டு. கல்வியில் ஆர்வம் இருக்கும். தங்களுக்கு சம அந்தஸ்தில் உள்ள குழந்தைகளிடமே பழகுவர்.  

பங்குனி: மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் விரைவில் போதைப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகமான மனக்கஷ்டங்கள் ஏற்படும் என்பதால் இந்த பழக்கம் உருவாக வாய்ப்புண்டு.  எனவே போதைக்கு அடிமையாகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் திரைப்படத் தொழிலுக்கு ஏற்றவர்கள். சிற்பக்கலையிலும் ஆர்வம் உண்டு. இயற்கைக் காட்சிகளை ரசிப்பார்கள்.  கலையை தெய்வமாக கருதி வழிபடுவார்கள். முன்கோபம் அதிகமாக வரும். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு உழைப்பை மறந்துவிடும் குணமுண்டு. தெய்வ பக்தி அவசியமே எனினும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் படபடப்புடன் பேசுவார்கள். நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. சினிமா கவர்ச்சி அதிகம். எனவே இவர்கள் ஏமாந்து போகும் நிலையும் வரலாம். கலைத்துறைக்கு செல்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.  இந்த பெண்களில் சிலர் இளவயதில் வறுமையில் வாடும் வாய்ப்பு உண்டு. இவர்களில் பலருக்கு பெண்குழந்தைகளே பிறக்கும். எழுத்து தொழிலுக்கு இவர்கள் ஏற்றவர்கள். எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். சுற்றிவளைத்துப் பேசும் குணமுடையவர்கள். எதிலும் முன்ஜாக்கிரதையாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை பாராட்டி பேசினால் அதில் மயங்கி விடுவார்கள். ஆன்மிகத் துறையில் ஈடுபட்டால் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பசிதாங்கும் சக்தி இவர்களிடம் அதிகம். பங்குனியில் பிறந்த குழந்தைகளிடம் பொய்சொல்லும் வழக்கம் அதிகமாக இருக்கும். பெற்றோருக்கு கட்டுப்படாமல் தங்கள் இஷ்டப்படி நடப்பார்கள்.  இந்த குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்கு சிறு வயதிலேயே தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது நல்லது.


இந்தியாவின் ஒரே பாம்பு கோயில்!

இறைவழிபாட்டில் ஒருவகை இயற்கை வழிபாடு. அன்பின் அடிப்படையிலும், அச்சத்தின் அடிப்படையிலும் இந்த வழிபாடு ஏற்பட்டது. இயற்கை வழிபாட்டிலும் பலவகை உள்ளது. இதில் ஒரு பிரிவுதான் விலங்கு வழிபாடு. நடப்பவை, ஊர்பவை, பறப்பவை என்ற இனங்களில் சிலவற்றை மக்கள் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். பசுவை கோமாதாவாக வழிபடுகின்றனர். கருடனை திருமாலின் வாகனமாக வழிபடுகின்றனர். பாம்பை தெய்வத்தின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர்.  இதில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவெனில் பசுவை மனிதன் அன்பால்  வழிபட்டான். பாம்பை அச்சத்தால் வணங்கினான். பாம்பு மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் பாம்பை கொல்வது பாவம் என்ற கருத்து இன்றும் நிலவுகிறது.  பாம்பு புற்றை அகற்றுவது
பாவம் என்று இன்றும் முன்னோர்கள் கூறி வருகின்றனர். பாம்புகளில் நல்லது என அழைக்கப்படும் நாகபாம்புதான் இன்று மக்களால் வழிபடப்படுகிறது. விலங்குகளில் நல்லது என அழைக்கப்படுவது நாகப்பாம்பு மட்டும்தான்.  உலகம் முழுவதும் நாக வழிபாடு பிரபலமாக உள்ளது. உலகத்தை கடலில் ­மூழ்காமல் தாங்கி பிடித்திருப்பது பாம்புதான் என ஆப்பிரிக்கா மக்கள் நம்புகின்றனர்.  எகிப்து, ரோம், பாபிலோனியா, கிரேக்கம் போன்ற நாடுகளில் நாகவழிபாடு சிறப்பாக நடந்து வருவதற்கான சான்றுகள் உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் நாகவழிபாடு உள்ளது. ஆப்பிரிக்காவில் உயிர் உள்ள மலைபாம்பை இன்றும்  வணங்குகின்றனர். நாகர் வழிபாடு சைவம், வைணவம், சமணம், பவுத்தம் என்ற நான்கு சமயத்துக்கும் பொதுவானது. சிவபெருமான் நாகத்தை தனது கழுத்தணியாக கொண்டுள்ளார். திருமால் ஆதிசேடன் என்ற பாம்பை படுக்கையாக கொண்டுள்ளார்.  சமண, சமய தீர்த்தங்கர் பார்சுவநாதரின் திருஉருவம் படமெடுத்த பாம்பின் அடியில் காணப்படுகிறது. புத்தசமய துறவிகள் நாகத்துக்கு கோயில் அமைத்து வணங்கி வந்ததாக ஆதாரங்கள் கூறுகிறது. இலங்கையில் பாம்பின் மேல் அமர்ந்த நிலையில், புத்தர் பெருமான் திருஉருவ சிலையை காணலாம். இந்தியாவில் பழங்காலம் தொட்டே நாக வழிபாடு சிறப்புற்று விளங்குகிறது. இந்திய வரலாற்றில் நாக வழிபாடு பற்றி விரிவாக உள்ளது. கன்னியாகுமரி  காஷ்மீர் வரை நாக வழிபாடு சிறப்பாக நடந்து வருகிறது. கோயில்களிலும், அரசமரம் மற்றும் வேம்பு மரங்களின் அடியிலும், பாம்பு புற்றிலும், தோட்டங்களிலும் நாக வழிபாடு நடக்கிறது. வடநாட்டில் நாகத்தின் பெயரால் நாகபஞ்சமி என்ற விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இப்படி நாடு முழுவதும் நாக வழிபாடு நடை பெற்றாலும் இந்தியாவில் பாம்பையே ­மூலவராகக் கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில் தான்.  மற்ற கோயில்களில் நாகராஜா சிலைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும். நாக பிரதிஷ்டையும், சர்ப்பக்காவும் கேரளாவிற்கு உரிய சிறப்பம்சங்களாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கேரளாவில் 15 ஆயிரம் சர்ப்பக்காவுகள் இருந்தன.  இன்று மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன் மேக்கோடு ஆகியவை பிரசித்தி பெற்ற சர்ப்பக்காவுகளாகும். மன்னார்சாலையில் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து நாகபூஜை செய்யும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.  தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு கருமாரியம்மன் ஐந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். திருச்செங்கோடு மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர். இப்படி நாக வழிபாட்டுக்காக பல கோயில்கள் இருந்தாலும் நாகர்கோவில் நாகராஜா கோயில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இந்த கோயிலின் பெயரை கொண்டுதான் மாவட்ட தலைநகரான நாகர்கோவில் விளங்குகிறது. மிக பழமையான இந்த கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பது பற்றி தகவல் இல்லை. எனினும் ஒரு பழமையான கதை இந்த கோயில் பற்றிய தோற்றம் பற்றி கூறப்படுகிறது. கோயில் இருக்கும் இடம் பண்டைய காலத்தில் புல்லும், புதரும் நிறைந்த இடமாக இருந்தது. இங்கு இளம்பெண் ஒருவர் புல் அறுத்து கொண்டிருந்த போது அவரது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.  இதை கண்டு அஞ்சிய பெண் கிராம வாசிகளை அழைத்து வந்தார். மக்கள் உடனே அங்கு கோயில் கட்டி வணங்கியதாகவும், பிற்காலத்தில் களக்காடு மன்னரின் தீராத தொழு நோய் இந்த கோயில் வழிபாட்டின் ­லம் குணம் அடைந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த கோயிலின் உள்ளே செல்லும் போது உள்வாசலின் இருபுறமும் அமைந்திருக்கும் ஐந்து தலை நாகத்தின் படம் எடுக்கும் வடிவிலான சிலை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இவை தர்னேந்திரன் என்ற நாகராஜன் என்றும், பத்மாவதி என்ற நாகராணி எனவும் நம்பப்படுகிறது.  இந்த கோயிலின் கருவறை இன்றும் ஓலை கூரையின் கீழ்தான் உள்ளது.  இந்த கூரையில் ஒரு பாம்பு காவல் புரிவதாக நம்பப்படுகிறது. இந்த ஓலைக்கூரை மாற்றி கட்டும் போது ஒரு பாம்பு வருவது வழக்கமாக உள்ளது.  ­மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். ­மூலவர் இங்கு தண்ணீரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்தான் இக்கோயிலின் முக்கிய பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இது ஆறு மாதகாலம் கறுப்பாகவும், ஆறு மாதகாலம் வெள்ளையாகவும் காட்சி தருகிறது. இங்கிருந்து மண் எடுக்க எடுக்க குறையாமல் இருப்பது அதிசயமாகும். திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும்  பெண்கள் இங்கு நாகருக்கு பால் அபிஷேகம் நடத்துகின்றனர்.  பால் பாயாச வழிபாடு இங்குள்ள முக்கிய வழிபாடு ஆகும். பால், உப்பு, நல்லமிளகு, மரப்பொம்மைகள் போன்றவற்றையும் பக்தர்கள் இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.  ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பெண்கள் கூட்டம் அலை மோதும். ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையாக நன்று நாகருக்கு பால் ஊற்றுவதை காணமுடியும்.  ஆண்டு தோறும் தை மாதம் பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. எல்லா மாதமும் ஆயில்ய நாளில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நாகராஜனுக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதப்படுகிறது.  திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை விழாவும், கந்தசஷ்டி விழாவும் இங்கு நடக்கும் இதர முக்கிய விழாக்களாகும்.

இளைஞர்களும் காசிக்கு போகலாம்!

வீட்டில் பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கருத்து வேறுபாடு வந்தால், இந்த வயசான காலத்தில் காசி, ராமேஸ்வரம்னு போக வேண்டியதுதானே என்று சொல்வது வழக்கம். ஆனால் காசி தலம் இளைஞர்களுக்கும் உரியது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  காசி என்றால் ஒளி நகரம் என பொருள். வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற இளைஞர்கள் காசிக்கு இளம் வயதிலேயே சென்று விஸ்வநாதரையும் அன்னபூரணி தாயையும் வணங்கிவருவது நலம் பயக்கும். காசியில் இறந்துபோவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்துபோகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் அவற்றின் காதுகளில் தாரக மந்திரத்தை ஓதுகிறார் என்பது ஐதீகம்.  இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிமுக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. காசி மிகவும் பழமை வாய்ந்த நகரம். இங்கு வாரணா என்ற நதியும் ஹசி என்ற நதியும் ஓடுகின்றன. இரண்டு ஆறுகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்ததால் வாரணாசி என்ற பெயர் வந்தது. ஆங்கிலத்தில் இவ்வூரை பனாரஸ் என்று சொல்வார்கள்.  இவ்வூரில் விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது அவர்களை எரித்து அழித்த இடமும் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே இவ்வூருக்கு மகாமயானம் என பெயர்  வீட்டில் பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கருத்து வேறுபாடு வந்தால், இந்த வயசான காலத்தில் காசி, ராமேஸ்வரம்னு போக வேண்டியதுதானே என்று சொல்வது வழக்கம். ஆனால் காசி தலம் இளைஞர்களுக்கும் உரியது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  காசி என்றால் ஒளி நகரம் என பொருள். வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற இளைஞர்கள் காசிக்கு இளம் வயதிலேயே சென்று விஸ்வநாதரையும் அன்னபூரணி தாயையும் வணங்கிவருவது நலம் பயக்கும். காசியில் இறந்துபோவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்துபோகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் அவற்றின் காதுகளில் தாரக மந்திரத்தை ஓதுகிறார் என்பது ஐதீகம்.  இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிமுக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. காசி மிகவும் பழமை வாய்ந்த நகரம். இங்கு வாரணா என்ற நதியும் ஹசி என்ற நதியும் ஓடுகின்றன. இரண்டு ஆறுகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்ததால் வாரணாசி என்ற பெயர் வந்தது. ஆங்கிலத்தில் இவ்வூரை பனாரஸ் என்று சொல்வார்கள்.  இவ்வூரில் விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது அவர்களை எரித்து அழித்த இடமும் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வேண்டும். இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன. இந்த 12 லிங்கங்களுக்கும் காசி விஸ்வநாதரே முதன்மையானவர் என சொல்லப்படுவதுண்டு. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இதை கட்டினார்.  இந்த கோயில் மிக சிறிய கோயில்தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும்.
லிங்க ரூபத்தில் இங்கு காசி விஸ்வநாதர் இருக்கிறார். நமது பூஜை பொருட்களைக் கொண்டு நாமே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த கோயிலில் சுவாமிக்கு ஆறு தட்டுகளில் வெள்ளை அன்னமும் ஆறு தட்டுகளில் ரொட்டி, கூட்டு, குழம்பு ஆகியவையும் வைத்து நைவேத்தியம் செய்கிறார்கள். அந்த நேரத்தில் விஸ்வநாதரை மறைத்து சிறு வேலி அமைக்கப்படுகிறது. விஸ்வநாதர் கோயிலின் அருகிலேயே அன்னபூரணி அம்பாள் கோயில் உள்ளது.  இந்த கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக் கும். அன்று அம் பாளின் முன்பு பலவகை அன்னங்கள், பலகாரங்கள், ஏராளமான அளவில் படைக்கப்படுகிறது. தீபாவளி அன்று தான் அன்னபூரணி தங்க அன்னபூரணியாக பவனி வருவது வழக்கம். அன்று ஒருகையில் கரண்டியையும் மற்றொரு கையில் அன்ன பாத்திரத்தையும் ஏந்தி பவனி வருவதுண்டு. தங்க அன்னபூரணியை தீபாவளி அன்று மட்டுமே தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காசி தலத்தில் ஒரு விசேஷ அம்சம் உண்டு.  இவ்வூரில் பல்லிகள் சத்தமிடுவதில்லை. கருடனும் பறக்காது.  பாம்பன் சுவாமிகள் ஒருமுறை காசிக்கு சென்றிருந்தார். அவரை அங்குள்ள சந்நயாசி ஒருவர் காவி உடை கொடுத்து துறவியாக மாற்றினார். அன்று முதல் அவர் அங்கேயே தங்கியிருந்து காசி யாத்திரை என்ற நூலை எழுதினார்.காசிக்கு முதியோர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் சென்று வரலாம்.வடமாநிலத்தில் உள்ள காசிக்கு செல்ல முடியாதவர்கள் அதற்கு நிகரான தமிழகத்தில் உள்ளகீழ்கண்ட  தலங்களுக்கு சென்று வரலாம்.
தமிழகத்தில் காசிகள்
திருவையாறு: சப்த ஸ்தானம் என்று போற்றப்படும் ஏழு தலங்களில் திருவையாறு முதன்மையானது. இங்கு மூலவர் - ஐயாறப்பர்; அம்பாள் - தர்மசம்வர்த்தினி. ஈசனிடம் இரண்டு நாழி நெல் பெற்று 32 அறங்களையும் குறைவின்றி செய்தவள் ஆதலால், இந்த அம்பிகையை அறம்வளர்த்த நாயகி என்று போற்றுவர். மேலிரு கரங்களில் சங்கு சக்கரத்துடன் திகழ்வதால், இந்த தேவி விஷ்ணு அம்சத்தினளாக அருள்புரிகிறாள் என்கின்றனர் பக்தர்கள். திருநாவுக்கரசருக்கு, இறைவன் கயிலாய தரிசனம் தந்த இந்தத் தலத்தைத் தரிசிக்க, காசியம் பதியை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

ஸ்ரீவாஞ்சியம்: கங்காதேவியே, தனது பாவங்கள் நீங்கி புனிதம் பெறுவதற்காக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம்  தலத்துக்கு வந்து முனி தீர்த்தத்தில் நீராடி, வாஞ்சிநாதரை வழிபட்டு அருள் பெற்றாளாம். இங்கு வந்து வாஞ்சிநாதரையும், மங்கள நாயகியையும் பிரார்த்தித்து வழிபட, சகல பாவங்களும் தொலையும். இங்கு அருள்பாலிக்கும் எமதர்மனை வழிபடுவதால் மரண பயம் நீங்கும்; வாழ்வு சிறக்கும்.

திருச்சாய்க்காடு: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற திருச்சாய்க்காடு திருத் தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காட்டில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. எம பயத்தை நீக்கி உயிர்களுக்கு முக்தி தரும் ÷க்ஷத்திரம் என்பதால், காசி தலத்துக்கு நிகரானதாகப் போற்றப்படுகிறது. இங்கு சாயவனேஸ்வர ஸ்வாமியும், கோஷாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். இதே தலத்தில், வித்தியாசமான திருக்கோலத்தில் அருள்கிறார் முருகன். கையில் வில்லுடன் காட்சி தரும் திருச்சாய்க்காடு வேலவனை தரிசிக்க நம் வினைகள் யாவும் நீங்கும் !

மயிலாடுதுறை: அம்பிகை, மயிலாக வந்து ஈசனை வழிபட்ட திருத்தலங்களில் ஒன்று மயிலாடுதுறை.  மாயூரம் எனப் புராணங்கள் போற்றும் இந்தத் தலத்து ஈசனிடம், கங்கையைவிட புனிதமான நதியில் தீர்த்தமாடி, சிவனை வழிபட வேண்டும். ஆக, இந்தத் தலத்துக்கு வந்து இடப தீர்த்தமாகிய காவிரியில் நீராடி, மாயூர நாதரையும் அபயாம்பிகையையும் தரிசிப்பவர்களுக்கு, காசியில் வழிபட்ட புண்ணியம் உண்டு. மேலும், இந்தத் தலத்துக்கு வடக்கே உள்ள வள்ளலார் கோயிலில் மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார் ஈசன்.