செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மை

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.டயட்டீசியன்களுக்கு இப்போது நிறையவே வேலை. எந்த வகை உணவு உண்ணலாம், எது கூடாது என்று இருதயவியல் நிபுணர்கள் நமக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இதைத் தான், நமது முன்னோர் விரதம் என்றார்கள்.ஆயுர்வேதம் என்பது அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இதில் லங்ஙனம் பரம ஒளஷதம் என்று சொல்லப்பட்டுள்ளது. லங்ஙனம் என்றால் உணவு. ஒளஷதம் என்றால் மருந்து. உணவே சிறந்த மருந்து என்பது வேதவாக்காகும். நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங் களை நம் முன்னோர் வகுத்தனர்.விரதமாவது.. ஒன்றாவது... மனுஷன் செவ்வாயிலே வெள்ளம் வந்துச்சான்னா ஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கான், இதிலே விரதம் கிரதமுனு பாடாபடுத்துறா எங்க அம்மா! என்று இனியும் சொல்ல மாட்டீர்கள் தானே!
வடக்கே தலை வச்சா என்னாகும்?
இந்த காலத்துப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லை. வடக்கே பார்த்து தலை வைத்து படுப்பவர்களை, பெரியவர்கள் கண்டித்தால், நீ பழைய பஞ்சாங்கம்! எங்கே தலை வைத்தால் உனக்கென்ன!என்று குரலில் கேலியைக் குழைத்து பேசுகிறார்கள்.  பிள்ளையார் மனித முகத்துடன் இருந்த காலத்தில்,சிவனுடன் போர் புரிந்தாராம். போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன், வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ, அவரது தலையை வெட்டி வரும்படி கூறினாராம். ஒரு யானை வடக்கே தலை வைத்து படுத்திருந்ததாம். அதன் தலையைக் காண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம். இதெல்லாம் புராணக்கதை என்று நம் பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால், இந்தக் கதைக்கு அறிவியல் பின்னணியே காரணம். பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம். அதனால், வடக்கு நோக்கி படுத்தால் காந்தசக்தி மூளையைத் தாக்கும். இதனால், குழம்பிய மனநிலை உருவாகும். ஆழ்ந்த தூக்கம் உண்டாகாது. தூக்கம் கெடும்போது உடல்நலம் பாதிக்கும். உயிர் பிரிந்ததும் வடக்கு நோக்கி படுக்க வைப்பது நம் மரபு. சமண சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் உயிரை விட எண்ணினால்,வடக்கிருத்தல் என்ற விரதத்தை மேற்கொள்வர். இதற்குசள்ளேகனம் என்றும் பெயருண்டு. நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தியை பழந்தமிழ் இலக்கியம் கூறுகிறது.  அறிவியல் செய்தியை படித்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள். பாமரர்கள் புரிந்து கொள்ளவே, பிள்ளையார் பற்றிய புராணக்கதையை பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். புரிகிறதா!
அரோகரா என்றால் என்ன?

ஹர என்ற சொல்லுக்குப் பாவங்களைப் போக்குவது என்று பொருள். ஹ என்ற எழுத்து தமிழில் அ என்று வரும். ஹரஹர என்ற சொல் தமிழில்அரோகரா என்று வந்தது. சிவபெருமானுடைய திருநாமங்களில் அர என்ற சொல் உயர்ந்தது. அரஹரா என்று இடைவிடாமல் உச்சரித்தால், நம் பாவங்கள் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல் எரிந்து ஒழியும்.  -வாரியார் உரையிலிருந்து ..
சன்னியாசிகள் ஏன் பிட்சை வாங்க வேண்டும்?

சன்னியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிட்சை எடுத்து உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள். மானம், அவமானம் இவற்றைக் கடந்து எந்தவித விருப்பு, வெறுப்பும் இல்லாமல் பிட்சை எடுக்க வேண்டும். பிட்சை போட்டாலும், போடாவிட்டாலும், அது ருசித்தாலும், ருசிக்காவிட்டாலும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருவதற்காகவே பிட்சை உள்ளது. பிட்சை போடாத மனிதர்களை வெறுப்பது கூடாது. அவர்களையும் சமமாக நினைக்க வேண்டும். உண்மையான ஞானிக்கு சாப்பிடாமல் கூட இருக்க முடியும். அவர்களுக்கு பசி கிடையாது. ஞானிகளுக்கு நாம் உணவு அளிக்கும் பொழுது நம்முடைய பாவத்தை போடுகிறோம். ஞானிகள் தங்களுடைய புண்ணிய பலத்தை நமக்குத் தருகிறார்கள். எவ்வளவு உயர்ந்த தத்துவம் !

ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் ஒரு வாரம் முழுவதும் பிட்சைக்குப் போகாமல் மவுன விரதமிருந்தார். சீடர்கள் தாங்கள் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ என வருந்தி பெரியவரிடம் கேட்டனர். உங்கள் யாரிடமும் எனக்குக் கோபமோ, வருத்தமோ இல்லை. போன முறை பிட்சைக்குச் சென்ற பொழுது ஓர் அகத்தில் இட்ட கீரை மிகவும் சுவையாக இருந்தது. மறுநாளும் அதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் விரும்ப ஆரம்பித்தது. சுவையில் நாட்டம் சென்றதும் மனதைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருக்கத் தீர்மானித்தேன். ஆதலால்தான் பிட்சைக்குப் போகவில்லை. இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை. நீங்கள் யாரும் வருந்த வேண்டாம்! என்றாராம். எப்பேர்ப்பட்ட மகான் ! இது ஞானிகளின் மனப்பக்குவத்திற்கு உதாரணம். ஆதிசங்கரர் பிட்சை கேட்ட சமயம் ஓர் ஏழைப் பெண்மணி தனக்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை (வேறு உணவு எதுவுமே இல்லாததால்) பிட்சை இட்டதால் அவர் வீட்டில் மகாலட்சுமி பொற்காசுகளை மழையாகப் பெய்வித்தாள் என்பது வரலாறு.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

வல்லிதேவயநிகாச முல்லஸந்தமீஷ்வரம்
மல்லிகாதி திவ்ய புஷ்பமாலிகா விராஜிதம்
ஜல்லரி நிநாதசங்கவாதனப்ரியம் ஸதா
பல்லவாருணம் குமார சைலவாஸினம் பஜே.
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ
நல்ல வேலை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடத்துக்கு இட மாற்றம், அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடம் அங்கீகாரம், நல்ல பெயர், பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியம் முதலானவை தாமதம் இல்லாமல் கிடைத்தல் ஆகிய பலாபலன்களைப் பெற:

மனைப் பலகை ஒன்றைச் சுத்தம் செய்து அதன் மீது, படத்தில் உள்ளது போன்று குரு யந்திரக் கட்டத்தை அரிசி மாவால் வரைந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு கட்டத் திலும் உள்ள எண்களின் மீது நான்கு கொண்டைக்கடலை வைத்து, கட்டத்தின் மையத்தில் நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். குருபகவான் திருவுருவப் படம் இருந்தால், பூ-பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பிப்பது விசேஷம்! அதேபோன்று சந்தனம், மலர்கள் சாற்றப்பட்ட குரு யந்திரத்தையும் மனைப் பலகையின் ஓரத்தில் சாய்த்து வைத்துக் கொள்ளவும்.

முதலில், 'ஓம் கம் கணபதயே நம:’ என மூன்று முறை கூறி விநாயகரை வழிபட வேண்டும். பிறகு

'ஓம் நம ப்ரணவார்த்தாய சுத்த ஜ்ஞானைக மூர்த்தயே
நிர்மலாய ப்ரசாந்தாய தட்சிணாமூர்த்தயே நம:

’ என்ற ஸ்லோகத்தையும் மூன்று முறை கூறி துதிக்க வேண்டும். பின்னர்...

ஓம் அறிவுறுவே போற்றி
ஓம் அடைக்கலமே போற்றி
ஓம் அருளாளனே போற்றி
ஓம் ஆதி பகவனே போற்றி
ஓம் ஆதாரனே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் பணிக்குருவே போற்றி
ஓம் பாதுகாப்பாளனே போற்றி
ஓம் கலைக் குருவே போற்றி
ஓம் மஞ்சள் பிரியனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் தியான மூர்த்தியே போற்றி
ஓம் தென் முக நாயகனே போற்றி
ஓம் நான்மறைப் பொருளே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் காவலாய் இருப்பவனே போற்றி
ஓம் தனுர் நாதனே போற்றி
ஓம் தயை புரிவாய் போற்றி

- என போற்றி நாமாவளிகள் கூறி வணங்கி, மஞ்சள் மலர்களால் புஷ்பாஞ்சலி செய்து, ஆரத்தி காட்டிய பிறகு, உத்தியோக குரு மூல மந்திரத்தை 32 முறை படிக்க வேண்டும். அதன் பிறகு, பிரகஸ்பதி விசேஷ கவசத்தை ஒருமுறை படிப்பது விசேஷம்!

இந்த பூஜையை வியாழக்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் செய்யவும். அத்துடன் மூலமந்திரத்தை யும் தியானத்தையும் தினமும் சொல்லி வர வேண்டும். விரைவில் வேலையில் அமர வேண்டும் என்று கருதுபவர்கள், ஐந்து மஞ்சள் வண்ண மலர்கள் வைத்து வெற்றிலை- பாக்கு, பழம் நிவேதனம் செய்து, 45 தினங்கள் இந்த பூஜையைத் தொடரலாம்.

மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கும் நமோ பகவதே ஸ்ரீத்யான ரூபிணே
சிந்முத்ராங்கித ரூபே உத்யோக குரவே ஸ்ரீம் கும்
மம நட்சத்திர ராசௌ மம ஜென்ம ஸ்திர உத்யோகம்
குரு குரு ஸ்வாஹா

பிரஹஸ்பதி கவசம்:

ப்ருஹஸ்பதி சிர:பாது லலாடம் பாதுமே குரு
கர்ணௌ சுரகுரு: பாது:நேத்ரேமே அபீஷ்ட தாயக:
நாசாம்பாது சுராசார்ய ஜிஹ்வாமே வேதபாரக:
முகம் மே பாது ஸர்க்ஞா:புஜவ்பாது சுபப்ரத
கரௌ வஜ்ரதர: பாது பªக்ஷளமே பாதுகிஷ்பதி
ஸ்தனௌமே பாதுவாகீச குஷிம்மே சுபலக்ஷண:
நாபிம்பாது அநீதிக்ஞ கடிம்மே பாதுசர்வத:
ஊரூமே பாது புண்யாத்மா ஜங்கேமே ஜ்ஞாநத ப்ரபு:
பாதௌமே பாதுவிஸ்வாத்மா ஸர்வாங்கம் ஸர்வதா குரு
ஸ்ரீவாராஹியின் மூலமந்திரம்.

தேஹி மே சகலான் காமான் வாராஹி ஜகதீஸ்வரி
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:
இது, ஸ்ரீவாராஹியின் மூலமந்திரம். இதனை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மனம் ஒருமித்து, முடிந்தவரைக்கும் சொல்லி வழிபட்டால், வீட்டில் உள்ள பிரச்னைகள் காணாது போகும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழலாம்!
நவமாருதி ஸ்லோகங்கள்:

நவமாருதியையும் ஒவ்வொரு கிழமைகளில், அவர்களுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டால், எல்லா வளங்களும் பெறலாம்.

எதிரியின் தொல்லை நீங்க...

ஸ்ரீதீர மாருதி!
புத்திர்பலம் யசோ தைர்யம் நிப்பயத்வம் அரோகதா:
அஜாத்யம் வாக் படுத் வம்ச ஹனூமத் ஸ்மரணாத்பவேத்


இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, செவ்வாய்க்கிழமையன்று ஸ்ரீதீர மாருதிக்கு வெற்றிலை மாலை அணிவித்து, செந்தூர அர்ச்சனை செய்து வணங்கினால், எதிரிகள் தொல்லைகள் யாவும் நீங்கும். வழக்கில் வெற்றி நிச்சயம்!


மனோ பலம் தரும் ஸ்ரீயோக மாருதி!
குசலம் சாஹ சித்தராத் தோஹதச்த்ருர நிந்தம:
விபிஷேந ஸஹாயந ரமென ஹரிபி: சஹ
நிஹதோ ராவணே தேவி லஷ்மணஸ்ய நாயதச

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, திங்கட்கிழமையன்று ஸ்ரீயோக மாருதியைத் தரிசித்தால், மனக் கிலேசங்கள் அகலும். சந்திர கிரகத்தின் அருள் கிடைக்கும். மன அமைதி, மனத் தூய்மை அடைவோம். குடும்பத்தில் உள்ள குழப்பம் நீங்கும்.



பாவம் போக்கும் ஸ்ரீபஜனை மாருதி! யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்:

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷ சாந்தகம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீபஜன மாருதியை புதன் கிழமையன்று வணங்கினால், பாபங்களும் தோஷங்களும் விலகும்.


தைரியம் தரும் ஸ்ரீவீர மாருதி!

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபக் கணமாருதம்!
அபார கருணா மூர்த்திம் ஆஞ்சநேயம் நமாம்யஹம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, வியாழக்கிழமையன்று ஸ்ரீவீர மாருதியைத் தரிசித்து எலுமிச்சை மாலை அணிவித்தால், கல்வியும் செல்வமும் கிடைக்கும். எதிலும் தைரியம் பிறக்கும். கை விட்டுப்போன பொருள் நம்மை வந்து அடையும்.


தம்பதி ஒற்றுமைக்கு..

. ஸ்ரீதியான மாருதி!
ப்ரிய மாக்யதே தேவீ த்வாம்துபூப: ஸபாசநேய
திஷ்ட யா சீவஸி தர்மஞ்நே ஜயமெப்ரதி க்ருஹ்யதாம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீதியான மாருதியை வெள்ளிக்கிழமைகளில் வணங்கினால், தம்பதி வேற்றுமை நீங்கும். மனத்துள் அமைதி நிலவும்.


சனியிடம் இருந்து காக்கும் ஸ்ரீபக்த மாருதி!

உல்லங்கிய ஹிந்த்தோ:ஸலிலம் ஸலீலம்
யஸ்ஸோக வஹ்ணிம் ஜனகாத்மஜாயா
ஆதாயதே நைவ ததாஹ லங்காம்
நமாமி ப்ராஜ்ஜலிம் ஆஞ்சநேயம்.
சனிக்கிழமைகளில் இங்கு வந்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீபக்த மாருதிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி, வன்னி இலையால் பூஜித்து வணங்கினால், சனி பகவானின் தொல்லையில் இருந்து காத்தருள்வார், ஸ்ரீபக்த மாருதி.


ராகு தோஷம் நீக்கும் ஸ்ரீபால மாருதி!

ஸர்வ கல்யாண தாதாரம் குமாரம் ப்ரும் ஹசாரினம்
துஷ்ட க்ரஹ விநாசய ஹனுமந்தம் உபாஸ்மஹே!
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்தின்போது இங்கு வந்து வணங்கி வழிபட்டால், தேக ஆரோக்கியம் கூடும். ராகு மற்றும் கிரக தோஷங்கள் விலகும்.


லாபம் தரும் ஸ்ரீபவ்ய மாருதி!

அஸாத்ய ஸாதக ஸ்வாமி அஸாத்யம் தவகிம்வத
ஸ்ரீராமதூத க்ருபா ஸிந்தோ மத் கார்யம் சாதகப்ரபோ!
என்ற ஸ்லோகத்தை எல்லா தினங்களிலும் சொல்லி, ஸ்ரீபவ்ய மாருதிக்கு சிவப்பு நிற புஷ்பங்களைச் சார்த்தி மனதார வழிபட, தொழிலில் வெற்றி உண்டாகும்.


நோய் நீக்கும் ஸ்ரீசஞ்ஜீவி மாருதி!

மனோஜவம் மாருத துல்யவேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸாம் நமாமி
என்ற ஸ்லோகத்தை, பிரதோஷ வேளையில் சொல்லி, ஸ்ரீசஞ்ஜீவி மாருதியைத் தரிசித்து, கருநீல புஷ்பம் சார்த்தி, வடைமாலை சார்த்தி வணங்கினால், சகல நோய்களும் நீங்கும்.


நவக்கிரகங்கள் அமைந்திருப்பது போல், திண்டுக்கல் ராம்நகர் பகுதியில், ஸ்ரீவல்லப மகா கணபதி கோயில் அமைந்துள்ள நவ மாருதிகளையும் வணங்கினால், சகல வளமும் கிடைக்கப் பெறலாம்.
லிங்காஷ்டகம்:

ப்ரஹ்மமுராரி ஸுரார்சித லிங்கம்
னிர்மலபாஸித ஶோபித லிங்கம் |
ஜன்மஜ துஃக வினாஶக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 1 ||

தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம் |
ராவண தர்ப வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 2 ||

ஸர்வ ஸுகம்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம் |
ஸித்த ஸுராஸுர வம்தித லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 3 ||

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஶோபித லிங்கம் |
தக்ஷ ஸுயஜ்ஞ னினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 4 ||

குங்கும சம்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஶோபித லிங்கம் |
ஸஞ்சித பாப வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 5 ||

தேவகணார்சித ஸேவித லிங்கம்
பாவை-ர்பக்திபிரேவ ச லிங்கம் |
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 6 ||

அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் |
அஷ்டதரித்ர வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 7 ||

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் |
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 8 ||

லிங்காஷ்டகமிதம் புண்யம் யஃ படேஶ்ஶிவ ஸன்னிதௌ |
ஶிவலோகமவாப்னோதி ஶிவேன ஸஹ மோததே ||
ஸ்வஸ்தி வாக்கியம்
( குரு பாரம்பரியத் துதி)

ஓம் ஸ்ரீ ஸர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ
ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீ வெங்கடராம சித்த
ஈச மஹராஜ் கீ ஜெய்
ஓம் ஸ்ரீ ஸர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ
ஸர்ப்ப இரட்சக ஸ்ரீ அஸ்தீக சித்த
ஈச மஹராஜ் கீ ஜெய்

ஓம் ஸ்ரீ ஸர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ
காளஹஸ்தீஸ்வர ஸ்ரீ சதா தப சித்த
ஈச மஹராஜ் கீ ஜெய்
ஓம் ஸ்ரீ ஸர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ
மஹரிஷி மஹேஸாய கௌஸ்துப புருஷாய ஸ்ரீ இடியாப்ப சித்த
ஈச மஹராஜ் கீ ஜெய்