படலம் 21: ஸ்தாலீபாகம் முறை...
21வது படலத்தில் ஸ்தாலீபாகம் முறை கூறப்படுகிறது. முதலில் (ஸ்தாலியை) நைவேத்ய பாத்ரத்தை தாமிரம் அல்லது மிருத்பாத்ரம் லட்சணத்துடன் கூடினதாக அமைத்துக் கொள்ளவும். என்று பாத்ர அமைப்பு கூறப்படுகிறது. நைவேத்ய பாத்ரத்தின் ஸம்ஸ்கார முறைப்படி சருபாகம் செய்ய லட்சணம் கூறப்படுகிறது. அதில் நெல், அரிசி இவைகளின் அளவு அமைப்பு தயார் செய்யும் முறை அதிக உஷ்ணத்திற்காக நெய் சேர்த்தல், உஷ்ணம் இல்லாததற்கு நெய் சேர்த்தல் ஆகிய சம்பாத ஹோமங்களின் செய்யும் முறை ஆகிய விஷயங்கள் கூறப்படுகின்றன. இவ்வாறு சம்பாத ஹோமம் செய்யப்பட்ட சருவால் ஹோமம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு சருவில் முதல் பகுதி தேவர்களின் நிவேத்யத்திற்கும் 2ம் பகுதி ஹோம கர்மாவிற்கும் 3ம் பகுதி பரிவார தேவதைகளுக்கும் 4ம் பகுதி ஆசார்யனுக்கும் என்று பிரித்து கூறப்படுகிறது. சரு என்றால் எல்லாவற்றையும் ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்யவும் என்று சரு பிரிக்கும் முறை முடிவில் பலனை விரும்பும் சாதகர்களில் பிராணாக்நிஹோத்ரம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறாக 21 வது படல கருத்து தொகுப்பாகும்.
1. நைவேத்ய சருகல்பன முறையில் ஸ்தாலீபாகம் செய்யும் முறையை கூறுகிறேன். தாம்ரம் அல்லது மண்மயமானதும் லக்ஷணத்தோடும் கூடிய நைவேத்ய பாத்திரத்தை (ஸ்தாலி)
2. (பாத்திரத்தை) அஸ்த்ர மந்திரத்தினால் அலம்பி சுத்தி செய்து கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து, நீரீக்ஷணம் பிரோக்ஷணம் அப்யுக்ஷணம், ஸந்தாடனம் செய்து சந்தனத்தை பூசி
3. கவச மந்திரத்தினால் பட்டு நூலை கழுத்தில் சுற்றி சாணத்தால் மெழுகிடப்பட்டதும் அஸ்தர பிரோக்ஷணம் செய்யப்பட்டதுமான மண்டலத்தில்
4. கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்த பாத்திரத்தை மந்திர நியாஸம் செய்த தர்ப்பத்தில் ஷடுத்தாஸனம் பூஜித்து அதன் மேல் மந்திர ரூபமான பாத்திரத்தை வைத்து
5. ஆவரண ஸஹிதமான சிவனை ஆவாஹித்து பூஜை செய்து, புஷ்பம் முதலிய வஸ்துக்களை எடுத்துவிட்டு நெய்பூசி வடிகட்டிய (சுத்தமான) பாலை ஊற்ற வேண்டும்.
6. அடுப்பை அஸ்திரமந்திரத்தால் உல்லேகனம் (கோடிட்டு) செய்து, அஸ்திரத்தால் பிரோக்ஷணம் அவகுண்டனம் செய்து துடைத்து மெழுகி அடுப்பில் தர்மனையும், அதர்மனையும் பூஜை செய்ய வேண்டும்.
7. (அடுப்பின்) வலது இடது பக்கத்தின் மத்தியில் சிவாக்னியை நியஸித்து பிரணவத்தால் ஆஸனம் கற்பித்து பாத்திரத்தை அடுப்பின் மேல் வைக்க வேண்டும்.
8. துவரையை இரண்டு படி அளவிலோ அல்லது ஐந்து உள்ளங்கை அளவிலோ நான்கு படி அளவு அரிசி முதலான திரவ்யங்களை எடுத்து
9. அஸ்த்ரமந்திரம் ஸ்மரித்து தீர்த்தத்தால் கலைந்து சுத்தி செய்து, அகோர மந்திரத்தை ஸ்மரித்து கிழக்கு முகமாக பக்வம் செய்து மத்ய பக்வம் ஆகும் வரை செய்ய வேண்டும்.
10. ஹவிஸ் மிக உஷ்ணமாயிருப்பின் உஷ்ண சமணத்தின் பொருட்டு நெய்யை விடுதலும், குளிர்ச்சியாக இருப்பின் அதைபோக்குவதற்கு நெய்யை விடுதலும் செய்து அன்னத்தை குண்டத்தின் சமீபம் கொண்டு சென்று சிவாக்னியில் ஸம்ஹிதா மந்திரத்தினால் ஸ்வா என்ற பதத்தை முடிவாக கொண்டதாக ஹோமம் செய்து
11. ஹவிஸில் ஹா என்று ஸம்பாத ஹோமம் செய்து ஸுஸ்விந்நோபவ என்று தப்தாபிகாரமும் இரண்டாவது மண்டலத்தில்
12. பிரோக்ஷணம்செய்து பூஜித்து சருபாத்ரத்தை வைத்து சுசீதளோபவ வளஷட் என்ற மந்திரத்தினால் என்று ஆஹுதியை
13. சீதாபீகாரமாகவே செய்து சம்ஹிதா மந்திரத்தினால் ஸம்பாதஹோமம் செய்து, மண்ணாலும் ஜலத்தாலும் பாத்திரத்தை தேய்த்து (சுத்தி செய்து) தேனுமுத்ரையால்
14. அம்ருதீ கரணம் செய்து குண்டத்திற்கு பூர்வ மண்டலத்தில் மேற்கு திக்கில் ஹ்ருதயாதி மந்திரங்களால் பூஜித்து
15. சிவமந்திரத்தால் நூற்றியெட்டு ஆஹுதி ஸம்பாத ஹோமம் முன்பு போல் செய்யவும். இவ்வாறு ஸம்பாதஹோமம் செய்யப்பட்ட சருவால் ஹோமம் செய்ய வேண்டும்.
16. அரிசி, ஜலத்தினாலும் நித்யம் (தினந்தோறும்) சருபாகம் செய்யவும். ஹவிஸ்ஸின் நான்கிலொருபாகம் ஹோம கர்மாவிற்காக ஆகும்.
17. ஹோம சேஷத்தை ஆசார்யனுக்கு கொடுக்கவும். ஐந்து கோத்ரத்தில் தோன்றியவர்களுக்கும் எல்லா ஆகமமும் அறிந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
18. ஹோம சேஷத்தை இதரர்களுக்கு கொடுத்தால் ஹோமமானது (நிஷ்பலமாகும்) பலனளிக்காது. சருசேஷமின்றி ஹோமம் செய்தால் அந்த ஹோமம் இஷ்டத்தை பூர்த்தி செய்யாது.
19. ஹோம கர்மாவிற்கு ஹவிஸ் மூன்றாவது அம்சம் ஆகும். முதல் பாகம் தைவிகம் (சுவாமி) இரண்டாவது பாகம் ஹோமகர்மாவிற்கும்
20. பரிவாரத்திற்கு மூன்றாவது பாகமும், ஆசார்யனுக்கு நான்காவது பாகமும் தனித்தனியாக பாகம் செய்தாலும் எல்லாவற்றையும் ஈசனுக்கு நிவேதிக்கவும்.
21. பலன் அடைய விரும்பும் சாதர்களால் பிராணாயஸ்வாஹா முதலான மந்திரங்களால் பிராணாக்னி ஹோத்ரம் செய்யவேண்டும். வேறு விதமாக இந்த ஸ்தாலீபாக ஸம்ஸ்காரங்கள் செய்தால் செய்யப்பட்ட ஸம்ஸ்காரங்களின் பலன் மாறுபட்டதாக ஆகும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸ்தாலீபாக முறையாகிற இருபத்தியொன்றாவது படலமாகும்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
செவ்வாய், 8 அக்டோபர், 2024
படலம் 21: ஸ்தாலீபாகம் முறை...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக