வெள்ளி, 20 நவம்பர், 2020

சந்தியாவந்தனம்

அதிசய பிராமணன்; பிராமண அதிசயம்

உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.

அது என்ன பழைய சடங்கு?

சந்தியாவதந்தனம்!

அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான். தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான்.

அவ்வளவு கடவுள் பெயரையும் சொல்லிவிட்டு அனத முழுமுதற் கடவுளான பிரம்மனும் நானும் ஒன்றே என்றும் சொல்லுகிறான். இது உபநிஷத மந்திரம் (அஸாவாதித்யோ பிரம்ம, பிரம்மைவாஹமஸ்மி)
சங்கத் தமிழர்கள் அதிகமாகப் புகழும் கபிலன், ஒரு பிராமணன். அவரை ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று புலவர் பெருமக்கள் போற்றுவர். அவர்தான் சங்கத்தமிழ் புலவர்களில் அதிக கவி மழை பொழிந்தவர்.

அந்தக் காலத்தில் பிராமணர்கள் ஒழுக்க சீலர்களாகவும், தன்னலமற்ற ரிஷி முனிவர்களாகவும் விளங்கினர்.

 இதனால் பார்ப்பனரையும் கடவுளையும் ஒன்றாகப் பார்த்தனர். ( இன்று அவர்கள் த்ரிகால சந்தியா வந்தனம் செய்யாததால் அவர்கள் மதிப்பிழந்து விட்டனர்)

திரி கால சந்தியா வந்தனம்= முக்கால சந்தியா வழிபாடு
சந்தியா= தேவியின் பெயர், சந்தி/அந்தி நேரத்தின் பெயர்0.
நான் யஜூர் வேத ஆபஸ்தம்ப சூத்திர முறைப்படியுள்ள சந்தியாவந்தனத்தை இங்கே பயன்படுத்துகிறேன். மற்றவர்கள் சில மாறுபாடுகளுடன் செய்வர்.

 சிலர் இ தைவிடக் கூடுதலான மந்திரங்களைச் சொல்லுவர். ஆயினும் முக்கியச் சடங்குகள் மாறாது
பிராமணர்களை பூசுரர்கள், அதாவது பூவுலகில் நடமாடும் தேவர்கள், என்று மனு ஸ்மிருதி முதலிய நூல்கள் விதந்து ஓதுகின்றன.

சங்கத் தமிழ் நூல்களோவெனில் பிரமணர்களை பசுக்களுடன் ஒப்பிடுகின்றன. கண்ணகியோவெனில் பார்ப்பனர்களையும், பத்தினிகளையும் விட்டுவிட்டு மதுரையை எரி! என்று அக்கினி தேவனுக்குக் கட்டளை இடுகிறாள்.

முதுகுடுமிப் பெருவழுதியோ பார்ப்பனர்களுக்கும் சிவன் கோவிலுக்கும் மட்டும் தான் தலை சாய்ப்பான் என்று புற நானூறு செப்பும். மாவீரன் சேரன் செங்குட்டுவனோவெனில் மன்னனைக் கண்டித்த பார்ப்பனன் மாடல மறை யோனுக்கு துலாபரம் செய்து தன்னு டைய எடையான 55 கிலோ தங்கத்தை அளித்ததாக சிலப்பதிகாரம் முழங்குகிறது.

பிராமணர்களின் சந்தியா வந்தனம் மாக்ஸ்முல்லர் (Max Muller) வகையறாக்களின் மண்டையில் சுத்தியல் அடி கொடுக்கிறது. அதுகள், ‘ஆரியர்கள்’ என்று வேதத்தில் இல்லாத ஒரு இனத்தை கற்பித்து அவர்கள் ஐரோப்பாவிலிருந்தோ, மத்திய ஆசியாவிலிருந்தோ நுழைந்ததாக கதை கட்டின.

அப்படி ஒரு குளிர்ப் பிரதேசத்தில் இருந்து வந்திருந்தால் தண்ணீர் சம்பந்தமான சடங்குகளே இராது. பிராமணர்களோ தண்ணீர் இல்லாமல் வாழ மாட்டார்கள்.

 பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் தண்ணீர்தான் முக்கியம்; உலகிலேயே தண்ணீருக்கு அதிகமான சொற்களை உடைய மொழி-சம்ஸ்கிருதம்! பிராமணர்கள் வாழும் அக்கிரஹாரம் எப்போதும் நதிக்கரையில்தான் இருக்கும்
பிராமணர்கள் நாள் தோறும் நதிக்கரைக்குச் சென்று சூரிய உதயத்துக்கு முன்னரும், நடுப்பகலிலும், சூரிய அஸ்தமனத்துக்கும் முன்னரும் அந்தி நேரச் சடங்குகளைச் செய்வர்.

 இதற்கு அவர்களுக்குத் தேவையாநது தண்ணீர் ஒன்று மட்டுமே.
(சூரியனைக்) காணாமல், (நிழல்) கோ ணாமல், ( சூரியனை) கண்டு கொடு என்பது பிராமணப் பழமொழி)
சுருங்கச் சொன்னால், இது நீரைக் கொடுத்து, சூரியனின் அருளை வேண்டுவது.

உலகில் நமக்குக் கண்ணுக்குத் தெரியும் சக்திகளில் மிகப் பெரியது சூரியன். அதற்கு ஒப்பிட உலகில் வேறு ஒரு பொருளும் இல்லை. ஒவ்வொரு நிமிடமும் அதற்குள் பல கோடி ஹைட்ரஜன்  குண்டுகள் வெடிப்பதால் நமக்கு சக்தி கிடைக்கிறது.

 சூரியன் அழிந்தால் எட்டாவது நிமிடத்தில் பூமி இருண்டு விடும்; சில தினங்களுக்குள் உயிர் இனங்கள் அழியத் தொடங்கும்.

இதனால் கடவுளுக்கு நிகராக ஒரே ஒரு பொருளை மட்டுமே – ஒளியை – சூரிய ஒளியை ஒப்பிட்டனர். அதற்குப் பின் சக்தியின் வடிவான காயத்ரீ தேவியை வழிபடுவதே சந்தியா வந்தனத்தின் முக்கிய கட்டம்.

இதைச் செய்ய பத்து நிமிடம்தான் ஆகும். அதற்குள் 100 முதல் 150 பெயர்களை அவர்கள் சொல்லுவர். தனது கோத்திரம், குலம் சூத்திரம், அவர்களுக்கு மூலமான ரிஷிகளின் பெயர்க ளைப் பகருவர்.

 நவக்கிரகங்களின் பெயர்களையும் மொழிவர். திசைகள், “கை தொழு எழுவர்” என்று சங்க நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களை வழிபடுவர்.

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பழங்குடி மக்கள் ( கோண்டுகள் – கோண்ட்வானா லாண்ட்= காண்டவ வனக் காட்டு மக்கள்) வாழும் காண்டவ இனக் காடுகளை அழித்தபோது, நாகர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய பகைமை மூண்டது.

 அதற்கு சமாதனம் செய்ய ஜரத்காரு, ஆஸ்தீகர் ஆகியோர் வந்தனர். நர்மதை நதிக்கரையில் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம் (நாகர் படுகொலை) நிறுத்தப்பட்டது. பரீக்ஷித் மஹாராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இது நடத்தப்பட்டது.

அப்பொழுது மயன் தலைமையில் சென்ற ஒரு குழு தென் அமெரிக்காவில் மாயன் (MAYAN) நாகரீகத்தை நிறுவியது; இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவமும் பிராமணர்களின் சந்தியா வந்தனத்தில் இடம் பெறுகிறது.

  அதுவும் தொல்காப்பியர் சொல்லும் கடவுளர் பெயர்கள் அதில் இருப்பதும், உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் சொல்லும் காயத்ரி மந்திரம் அதில் இருப்பதும் வியப்பை ஏற்படுத்தியது. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதி தீரத்தில் நம்மவர் செய்த ஒரு சடங்கை இன்று வரை கடைப்பிடிப்பதால் என்னை நானே படிம அச்சு (FOSSIL) — பழங்காலச் சுவடு– என்று நினைத்து பெருமை..
சந்தியா வந்தனத்தைச் செய்யும் பிராமணர் ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத் தகுதி உடையவர்களே.


கருத்துகள் இல்லை: