ஞாயிறு, 27 டிசம்பர், 2020

ருத்திராட்ச மகிமை


ருத்திராட்ச மகிமை
ருத்திராட்சத்தின் மகிமையை விளக்குகிறது இந்தப் புராணக் கதை:

முன்னொரு காலத்தில் சார்வாங்கன் என்பவன் தன் கடமைகளை மறந்து, தான் செய்த வியாபாரத்தில் பல தவறுகள்  புரிந்து, கூடா ஒழுக்கம் கொண்டு வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்து களவுத்  தொழிலிலும் ஈடுபட்டான்.

இறுதியாக விந்திய மலைச் சாரலில் உயிர் துறந்தான். அவனை யமகிங்கரர்கள்  பாசக்கயிற்றால் பற்றி இழுத்து யமலோகத்திற்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது, சிவகணங்கள் அவர்களைத் தடுத்தனர்.

‘இவ்வுயிரை  கைலாயத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம்’ என்றனர். ஆனால், யமனின் தூதுவர்களோ  ‘இவன் மகாபாவி’ என்றனர். அதற்கு சிவகணங்கள், ‘இவன் வாழ்ந்த முறை ஒழுங்கீனமானதாக இருக்கலாம்.

ஆனால்,  இவன் இறந்த இடத்திலிருந்து பத்து முழ தொலைவில் ஒரு ருத்திராட்ச மரம் உள்ளது. அந்த மரத்தின் அதிர்வலைகள்  இவனை புண்ணியவனாக்கிவிட்டது. எனவே, இவனுக்கு சிவலோகப் பதவி கிட்டியது’ என்றனர். ருத்திராட்சத்திற்கு  அவ்வளவு சிறப்பு உண்டு!

கருத்துகள் இல்லை: