ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

14: ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 {கி. பி. 272 - கி. பி. 317 வரை}

 நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

14: ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 {கி. பி.  272 - கி. பி. 317 வரை}

ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 ஆந்திர தேசத்தவர். 'பாபண்ண ஸோமயாஜி' என்பவரின் புதல்வர். இவருக்கு பெற்றோர் இட்ட நாமதேயம் 'நாயனா'. இவர் மந்திர சாஸ்திரத்தில் வல்லமையுடையவர். ஒரு முறை மலைய மலைப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் இவர் தங்கியிருந்த சமயம் அங்குள்ள மக்கள் அவரை வணங்கி 'பைரவ மூர்த்தி அப்பகுதியிலுள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருப்பதாகவும் அதன் உக்கிரத்தைத் தணிக்க வேண்டும் என்றும் வேண்டினார்களாம். இவரும் மந்திரப் பிரயோகம் செய்து பைரவரை சாந்தப்படுத்தி மக்களின் பீதியைப் போக்கினார். இவர் கி. பி. 317ஆம் ஆண்டு, தாது வருடம், மார்கழி மாதம் அமாவாசையன்று மலைய மலைத்தொடரில் உள்ள அகஸ்திய கிரியில் சித்தியடைந்தார்.


கருத்துகள் இல்லை: