ஏழரை சனிக்கு அறிவியல் பரிகாரம்!
எனக்கு ஏழரைச்சனி எனக்கு அஷ்டமத்து சனி அர்த்தாஷ்டம சனி கண்டச்சனி என்றெல்லாம் பலரும் நடுக்கம் கொள்கிறார்கள்.இவை தங்கள் வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள்.இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள்.அதில் தவறில்லை.ஆனால் செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.கோள்களின் நகர்வுகளை அறிந்து கொண்டால் பரம்பொருளான கடவுளின் நிலையை அடையமுடியும் என வானவியல் அறிஞர் ஆர்யபட்டா கூறியுள்ளார்.கோள்களின் நகர்வு பற்றி அறிந்தவர்கள் நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என யஜுர் வேத ஜோதிடம் கூறுகிறது.
நாசா விஞ்ஞானி கார்ல் சாகன் நாம் கிரகங்கள் நட்சத்திரங்களில் இருந்து தான் பிறந்திருக்கிறோம்.நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான்.அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும் என்று குறிப்பிடுகிறார்.கிரகம் நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும்.வானத்தில் கிரகங்கள் எந்த இடத்தில் சுற்றுகின்றன என்பது பற்றி யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.அதனைத் தெரிந்து கொள்வதால் நமக்கு உண்டாகும் பலனையும் யாரும் அறிந்து கொள்ளவில்லை.பொதுவாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் கிரகம் செல்வதை பெயர்ச்சி என குறிப்பிடுகிறோம். அந்த வகையில் குரு சனி கிரகங்களின் பெயர்ச்சிகளை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். மெதுவாக நகர்வதால் சனியை மந்த கிரகம் என்பர்.9 கோடி மைல் துõரத்தில் இருக்கும் பூமி சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது.ஆனால் சூரியனை விட்டு 85 கோடி மைல் தள்ளியிருக்கும் சனி அதற்கான சுற்றுப்பாதையில் ஒரு முறை சுற்றி வர 30 வருடம் ஆகிறது.மிக நீண்ட தொலைவில் இருப்பதால் சனி ஒரு ராசியைக் கடக்க உத்தேசமாக இரண்டரை ஆண்டு காலம் ஆகிறது.
தற்போது சனி கிரகம் தீர்க்க ரேகை 209ல் இருந்து 210 ஐ அடைகிறது.அதாவது 209 டிகிரியில் உள்ள துலாமை விட்டு210 டிகிரியிலுள்ள விருச்சிக ராசியை அடைவதையே துலாம்- விருச்சிக ராசி மாற்றம் என்கிறோம்.சரி இனி அறிவியல் ரீதியாக சனி பரிகாரம் தேடுவது பற்றி பார்ப்போம்.பஞ்சாங்கம் அல்லது எபிமரிஸ் அளிக்கும் கிரக நிலைகளை ஒரு வரைபடத்தில் சுற்றுப்பாதைகளில் அமைத்துக் கொண்டால் சனி உள்ளிட்ட எல்லா
கிரகங்களையும் அதன் இருப்பிடத்திலேயே பறவைப் பார்வையாக மனதாலேயே நம்மால் பார்க்க முடியும்.அதாவது கிரகங்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.தற்போதைய சனிப்பெயர்ச்சியில் சூரியனுக்கு மிகவும் அருகில் அதாவது 15 டிகிரி அளவு வித்தியாசத்தில் சனி இருக்கும்.எனவே இந்த முறை ஏற்படும் சனிப்பெயர்ச்சியை நேரில் பார்ப்பது கடினம்.எனவே சூரியனுக்கு சற்று மேலாக சனி இருப்பதாக நம் மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.முதலில் பூமியின் வடதுருவத்தை மனதில் வரவழைக்க வேண்டும்.அங்கிருந்து பல லட்சம் கோடி மைல் தூரம் மனதாலேயே கடந்து செல்ல வேண்டும்.
அப்போது சூரிய மண்டலத்தையும் அதனைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பார்வையாக நம் மனதால் காண முடியும்.சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து சனீஸ்வரா!எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று என மனதால் தியானம் செய்ய வேண்டும்.இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம்.சனி மட்டுமல்ல!பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்னை இருந்தாலும் சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன் அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம். கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களைநம்மால் ஈர்க்க முடியும்.10 அல்லது 15 நிமிடம் இந்த தியானத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன் கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ அல்லது அதற்கும் மலானதாகவோ இருக்கும்.உங்கள் பிறந்த நட்சத்திர நாளில் உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும்.கிரகங்கள் ஒன்பதும் நம் உடம்பில் ஒவ்வொரு பாகத்தைக் குறிக்கும்.சூரியன்,எலும்பு,சந்திரன்,ரத்தஓட்டம், செவ்வாய்,மஜ்ஜை, புதன்,தோல், வியாழன்,மூளை, சுக்கிரன்,உயிர்ச்சக்தி,சனி,நரம்பு மண்டலம்.அந்தந்த உறுப்புகள் நலம் பெற அந்த கிரகத்தை நோக்கி தியானம் செய்யலாம். மொத்தத்தில், இரவு நேரத்தில் மட்டுமே கிரகம்,நட்சத்திரங்களைக் கண்டுகளிக்கலாம் என்ற நிலையை மாற்றி பிரமிப்பூட்டும் பறவைப்பார்வை மூலம் பகல்,இரவு பாகுபாடு இல்லாமல் எந்த நேரத்திலும் மனதை செலுத்தி உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை அடையலாம்.இதை நடைமுறையில் கொண்டு வர நாம் எதையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. வீட்டிலேயே அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கிரகங்களின் இருப்பிடம் அறிந்து மனம் செலுத்தி தியானம் செய்வதே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து செய்பவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவது உறுதி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக