ஞாயிறு, 6 அக்டோபர், 2019

19:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

                19:ஸ்ரீ வித்யா கேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-II
                                 (கி.பி. 385 -கி.பி.398 வரை)
ஸ்ரீ வித்யா கேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-II.இவரும் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவரே.தந்தையின் பெயர் உமேசசங்கரர்.பெற்றோர்கள் இவருக்கு இட்ட நாம தேயம் ஸ்ரீகண்டர்.சிறு வயதில் இவர் தேகத்தை வெண் மேக நோய் பற்றிக் கொண்டது.அதனால் இவரைத் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யச் சொன்னார் ஒரு பெரியவர்.இவரும் தினமும் 1008 சூரிய நமஸ்காரம் செய்தார்.நோய் பறந்து போயிற்று.ஆனாலும் இவர் சூரிய நமஸ்காரம் செய்வதை நிறுத்தவில்லை.எனவே இவர் சூரியதாசர் எனவும் மார்த்தாண்ட வித்யாகனர் என்றும் அழைக்கப்பட்டார்.பதினெட்டாவது வயதில் இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியாய் பொறுப்பேற்று பல திக்விஜய யாத்திரைகள் மேற்கொண்டார்.பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே பீடத்தை அலங்கரித்தார்.கி.பி. 398-ஆம் ஆண்டு,ஹே விளம்பி வருஷம்,புரட்டாசி மாதம்,தேய்பிறை நவமியில்,கோதாவரி நதி தீரத்தில் சித்தியுற்றார்.

கருத்துகள் இல்லை: