ஞாயிறு, 15 செப்டம்பர், 2019


                         ஸ்ரீகாமாக்ஷி துனண
                                   பல்லவி
காணக்கண் கோடி வேண்டும் காஞ்சி குருநாதரின்
தினசரி பூஜையைக் காணக் கண் கோடி வேண்டும்.
                                    
                                 சரணம்

வெள்ளியினால் பூஜை மண்டபம் அமைத்து         ( 1)
சுவர்ணத்தினால் அதில் ஊஞ்சலைக்கட்டி
சந்தண மேருவில் சக்தியை அழைத்து
சந்திர மௌளி ஸ்வாமியை பக்கத்தில் வைப்பதை
                                                        (காணக்கண் கோடி)

வேதத்தின் ஒலியுடன் வேதியர் கூட்டம்               (2)
பாதத்தை நாடி வந்து பக்தர்கள் கூட்டம்
சில முள்ள தெய்வம் சிவக்கோலம் கொண்டு
பால் அபிஷேகத்தை பாங்குடன் செய்வதைக்
                                                        (காணக்கண் கோடி)

மாணிக்க வைரம் மரகத மிழைத்து புடம் போட்ட (3)
பொன்னால் பூஷணங்கள் பூட்ட
மஞ்சள் குங்குமம் மணமுள்ள மலர்கள்
அட்க்ஷதை கொண்டு அர்ச்சிக்கும் அழகை
                                                        (காணக்கண் கோடி)

வில்வத்தால் அர்ச்சனை வேதத்தின் பின்னனி     (4)
குவலயம் காத்திட குங்கும அர்ச்சனை
சக்கரைப் பொங்களும் பலவித அண்ணமும்
வித வித மாகவே அன்னைக்கு அளிப்பதை
                                                        (காணக்கண் கோடி)

தீங்கையெல்லாம் களைய தீபத்தின் அடுக்குகள்  (5)
கர்ப்பூர ஹாரத்தி மங்கள தீபங்கள்
ஓம் ஓம் ஓம் என மணிகள் ஒலித்திட
சங்கத்தின் நாதமே பூம் பூம் என்பதைக்
                                                        (காணக்கண் கோடி)

தாமரைக் கையால் தங்கக் குடை பிடித்து              (6)
சாமரம் விசிட சாம காணம் ஒலித்திட
மாணிக்க வீணையை மாதேவர் வாசித்து
மாதாவின் மடியினில் பணிவுடன் வைப்பதைக்
                                                        (காணக்கண் கோடி)

பிரதட்சணம் செய்து பூஜையை முடித்து                (7)
தியானத்தில் ஆழ்ந்து தன்மயமாகி
"தன்னலம்"மறந்து பிறர் நலம் வேண்டி
தெய்வத்தை தெய்வமே வணங்கிடும் கோலத்தைக்
                                                        (காணக்கண் கோடி)

                               பெரியவா சரணம்
ஹர ஹர சங்கர                                  ஜய ஜய சங்கர
  காஞ்சி சங்கர                                    காமகோடி சங்கர

கருத்துகள் இல்லை: