படலம் 23: நிர்வாண தீட்சை!
23 வது படலத்தில் நிர்வாண தீட்சை கூறப்படுகிறது. முதலில் உயர்ந்த நற்கதியை கொடுக்க கூடிய நிர்வாண தீட்சையை கூறுகிறேன் என்று உத்தரவு இடுகிறார். பிறகு ஆசார்யன் நித்ய அனுஷ்டானங்களை முடித்து மந்திர தர்பணம் செய்து சூர்யபூஜை செய்து அங்கந்யாஸ கரன்யாசங்களை செய்த சரீரங்களை உடையவனாகவும் சாமாந்யார்க்ய கையுடன் திவாரத்தில் திவாரதேவர்களை பூஜித்து மேற்கு வாயில் வழியாக யாகசாலையில் நுழைந்து பிரம்மாவை பூஜித்து முறைப்படி ÷க்ஷத்ர பாலர்களை காக்கும்படி வேண்டி பூதசுத்தி முதலியவைகளை செய்து விசேஷார்க்யம், ஞானகட்கம், பஞ்சகவ்யம் இவைகளை தயாரித்து விகிரம் இரைத்து பூமிபூஜை செய்து சிவகும்பம் வர்த்தனி பூஜித்து லோகபாலகர்களுக்கு சிவனின் உத்தரவை தெரிவித்து அஸ்திரகும்ப பிரதட்சிணம் செய்து ஞானகட்கம் பூஜித்து மண்டலத்தில் தேவனை பூஜித்து அக்னியில் மந்திரதர்ப்பணம் செய்து பகவானே உன் தயவால் என்னுடைய சரீரத்தில் சிஷ்யர்களின் பாவிதாத்மாக்களுக்கு உன்னால் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என்று தேவனை வேண்டி உத்தரவு அடைந்தவராக சிஷ்யனுடைய சிரஸில் தலைப்பாகை வைத்து தனக்கும் சிவனுக்கும் ஒன்று சேர்ந்த பாவனையை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அதிவாஸ கிரியைக்காக சிவனின் கட்டளைப்படி நடக்கும் விதம் கூறப்படுகிறது. பிறகு சிஷ்யனை தனக்கு வலது பாகத்தில் அழைத்து சிவாதி மந்திரங்களுக்கு தீபனத்தை நன்கு செய்ய வேண்டும். என கூறி மந்திரதீபனம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பின்பு சிஷ்யனுக்கு பாச சூத்தர பந்தன முறையையும் பாச சூத்ரத்தில் ஸூஷும்னாநாடீ சேர்க்கையும் அதே சூத்திரத்தில் சேர்ப்பதும், மந்திர அத்வாதிகளின் வியாப்ய, வியாபக தன்மை சொல்வதும் ஆகிய இந்த விஷயங்கள் கூறப்படுகின்றன. இது பற்றி விளக்குவதில் மந்திரங்கள் முதலிய ஜந்துகளின் அத்வாக்கள் பரம வியாப்திகமாக ஐந்து கலையும் அந்த கலைகளால் கலைகளே தீட்சையால் பாவித்து சோதிக்க தக்கதுமாகும். அந்த சுத்தியாலே அதற்கு உள் அடங்கியவையாகிற ஐந்து அத்வாக்களின் சுத்தி ஏற்படுகிறது என விளக்கப்படுகிறது.
பஞ்சகவ்யம் அருந்துதல் சருப்ராசனம், தந்தசுத்தி, இவைகள் கூறப்படுகின்றன. இதில் பல்குச்சி விழுவதால் நன்மை தீமை என்கிற அடையாளம் தெரிவிக்க படுகிறது. சிஷ்யன் சயனம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு குருவானவர் பல் குச்சி விழுந்ததால் தெரிவிக்கப்பட்ட பிரதிகூல சாந்திக்காக செய்ய வேண்டிய பிராயச்சித்தம் செய்து தானும் பஞ்சகவ்ய, சருப்பராஸநம், பல்துலக்குதல் முடித்து முயற்சியோடு சயனம் செய்யவும் இவ்வாறு நிர்வாண தீட்சை என்கிற கிரியை தொகுப்பு காணப்படுகிறது. அனுஷ்டானங்களை செய்த குரு, சிஷ்யர்களை, இரவில் காணப்பட்ட சொப்பனங்களை கேட்டு சுபசொப்பனமாக இருப்பின் முன்பு போல் சிஷ்ய பிரவேசம் முதலியவைகள் செய்ய வேண்டும். கெட்ட சொப்பனமாக இருப்பின் பரிகாரம் செய்து பிறகு சிஷ்ய பிரவேசம் செய்ய வேண்டும். சிஷ்யனை அழைத்து சமீபத்தில் தன்வலப்பக்கத்தில் அமர்த்தி அதிவாசம் செய்யப்பட்ட அந்த சூத்திரத்தை சிஷ்ய சரீரத்தில் தொங்கும்படி செய்து இந்த சிசுவுக்கு அனுக்ரஹம் செய்கிறேன் என்று பகவானை பிரார்த்தனை செய்து பகவானிடம் இருந்து உத்தரவு பெற்றவனாக ஆதார சக்தியை அக்னியில் பூஜிக்க வேண்டும். பின்பு முதலாவதாக, நிவிருத்தி கலாசுத்தி முறை நிரூபிக்கப்படுகிறது. அதில் நிவிருத்தி கலாசுக்தியில் பூஜிக்கக் கூடிய தத்வ, வர்ண, மந்திர, புவன பதங்களில் விளக்கம் கூறப்படுகிறது. செய்ய வேண்டிய ஹோமம் முதலிய கார்யங்களும் விளக்கப்படுகிறது. இவ்வாறகவே பிரதிஷ்டை வித்யா, சாந்தி, சாந்த்ய தீத கலைகளின் சுத்திகிரமம் முறைப்படி விளக்கப்படுகிறது. பிறகு சிகையை கத்தரிக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு சிவனிடம் சேர்க்கும் முறையும் ஸர்வக்ஞம் முதலிய ஆறுகுணம் உண்டாகும் முறையும் கூறப்படுகிறது. பிறகு நிர்வாண தீட்சையில் யோக்யமானவர்கள் விளக்கப்படுகின்றனர். முடிவில் பிற்பட்டவர்களுக்கு அவுத்ரீ என்ற தீட்சையானது செய்யக்கூடாது. சாக்க்ஷúவி தீட்சையை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 23வது படலகருத்து தொகுப்பாகும்.
1. நிர்வாண தீøக்ஷ பற்றி சொல்லுகிறேன். இது பரமமோக்ஷத்தைத் தருவதாகும். ஆசார்யர் நித்யானுஷ்பானங்களை செநய்து மந்திர தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
2. சூர்ய பூஜை செய்து சுத்தனாக சகளீகரண வடிவமாக ஸாமான்யார்க்யம் கற்பித்து நான்கு திவராங்களிலும் திவாரதேவதைகளை பூஜித்துக் கொள்ள வேண்டும்.
3. மேற்கு வாசல் வழியாக யாகசாலையினுள் பிரவேசிக்க வேண்டும். வாஸ்த்து பிரம்மாவை பூஜித்து சுத்தனாக பூமியில் தங்கியுள்ள இடையூறுகளை போக்கி ÷க்ஷத்ர ரøக்ஷ செய்து யாகசாலா ஸ்தானங்களை காத்துவர வேண்டும்,
4. பூதசுத்தி மந்திரந்யாஸங்கள் செய்து விசேஷார்க்யம் கல்பித்து ஞானகட்கம் பஞ்சகவ்யம் ஆகிய பூஜைகளை முறைப்படி செய்து கொள்ள வேண்டும்.
5. விகிரங்களை அபிமந்திரித்து பூமி சுத்தி செய்தும் விகிரங்களை தர்பங்களாலும் தெளித்தும் ஈசான திக்கிலுள்ள யாகேச்வர கும்பபூஜைக்கு தயாராகி
6. பாசுபதாஸ்த்ர கும்பத்தையும் வர்த்தனியையும் பூஜைசெய்க. குருவானவர் எட்டுதிக்குகளிலும் லோகபாலர்களை பூஜைசெய்து அவர்களிடம் அனுமதியை கேட்டு கொள்ள வேண்டும்.
7. அஸ்திரகும்பங்களால் யாக மண்டபத்தை சுற்றிவந்து யாக யாகேஸ்வர கும்பத்தை க்ஞானகட்கத்தையும் நன்கு பூஜிக்க வேண்டும். மண்டலத்தில் சிவபெருமானை பூஜித்து ஹோமாக்னியில் மந்த்ர தர்ப்பணம் செய்ய வேண்டும்.
8. ஹே பரமேஸ்வர; உன் கருணையுடன் என் சரீரத்தில் நுழைந்து தத்வாத்மாக்களான சிஷ்யர்களுக்கு உம்மால் அருள்பாலிப்பது செய்யவேண்டும்.
9. இவ்வாறு விக்ஞாபித்து சிவாக்ஞை பெற்று பரிவட்டம் தலையில் கட்ட வேண்டும். எல்லா காரியங்களுக்கு சாக்ஷியாக உள்ளவர் மண்டலத்தில் உள்ள ஸதாசிவரே.
10. யக்ஞத்துக்கு ரக்ஷகராக கும்பத்திலும் ஹோம காரணமாக அக்னியிலும் இருக்கிறார். சிஷ்யனின் சரீரத்தில் பாச நாசகராவும், என் சரீரத்தில் பாசமோசகராகவும் சதாசிவன் இருக்கிறார்.
11. மண்டலம், கும்பம், அக்னி, சிஷ்யன், ஆசார்யன் ஆகிய ஐந்து இடங்களிலும், ஆதாரமாக நீ பரமேஸ்வரனாக இருக்கிறாய். நானேசதாசிவன் எந்த சிவனுடைய ஹ்ருதயாதி மந்திரங்கள் கரணங்களில் இருந்து தோன்றியதாகுமோ
12. அவ்வாறே என்னிடத்தில் அந்த மந்திரங்கள் உள்ளன. எனது ஆத்மாவிலும் ஈஸ்வரன் சுதந்திரமாக இருக்கிறார் என்று உள்ளும் புறமும் உள்ள வாயுக்களால் தேவனை பாவனை செய்து ஈஸ்வரனை பிரார்த்திக்க வேண்டும்.
13. நிர்வாண தீøக்ஷக்காக வந்தடைந்த சிஷ்யனின் தகுதியை சோதிக்கப்பட்டவன். உயர்ந்த ஜாதி தெய்வாம்சம் சமயங்களின் தராதரம் அறிந்தவனாக சிஷ்யன் இருக்கிறான்.
14. அதே சமயம் சிவ அனுக்ரஹத்திற்காக எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள். முழுமையான உறுதி உடையவனாக வேண்டும் சிவாகமானுஷ்டானங்களை கடைபிடிப்பவனாக இருந்துகொண்டு
15. யாகசாலையில் பிரவேசித்து அக்னிகார்யம் ஆரம்பித்து தனது வலது பாகத்தில் சிஷ்யனுக்கு இடம் தந்து
16. நாடீ சந்தன மார்க்கத்தை அறிந்தவர் பூர்ணாஹுதியுடன் கூடி மந்திரதர்பணம் ஸமர்ப்பிக்க வேண்டும். சிவாதி மந்திரங்களோடு தீபநம் என்ற ஹோம விசேஷங்களை செய்து நிர்வாண தீøக்ஷ செய்யவேண்டும்.
17. அகோராஸ்திரத்தை ஸம்புடமாக ஜெபித்து சிவத்தை ஸாங்கமாக பட் என்ற சொல்லை முடிவில் உள்ளதாக நன்கு பூஜை ஹோமங்களை செய்ய வேண்டும். வளைந்த நெற்றி, புருவம், கைகள், முகம் இவற்றோடு கூடிய அகோர மந்திரத்தை
18. மூன்று முறை ஹோமமும் மந்திர தீபநாஹுதியும் செய்க. கன்னிகா பெண்ணால் தயாரிக்கப்பட்ட நூலை முப்பிரியாகவும் அதை மும்மடங்காகவும் செய்து கொள்ள வேண்டும்.
19. அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷணமும் கவசத்தினால் அவகுண்டனமும் மூல மந்திரத்தினால் நன்கு பூஜையும் செய்து ஆத்மாவின் (சிசுவின்) சிரசின் மேலே இருக்கும் சிகையில் சூத்ரத்தை
20. வலது கால் கட்டைவிரல் நுனிவரை அந்த நூலை தொங்கும்படி கட்ட வேண்டும். இந்த நூலை கஷும்நா நாடியாக தியானித்து சிஷ்யனுடைய தேஹத்திலிருக்கிறதாக பாவிக்க வேண்டும்.
21. சுஷும்நாயை நம: என்று கிரஹித்து அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சந்தனம் புஷ்பம் இவற்றாலும் நன்கு பூஜித்து கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்க.
22. மூலத்தால் சன்னிதானத்திற்காக மூன்று முறை ஆஹுதி செய்ய வேண்டும். சிஷ்யனுடைய ஹ்ருதய பிரதேசத்தை அஸ்திரமந்திரத்தினால் பிரோக்ஷித்து புஷ்பத்தால்
23. ஹ்ருதயத்தை தட்டி ரேசகத்தால் அவனுடைய ஹ்ருதயத்தை அடைந்து நக்ஷத்ர காந்தியான அவன் சைதன்யத்தை ஹும் என்ற மந்திரத்தைக் கூறிக்கொண்டு
24. அஸ்திர மந்திரத்தால் ஹ்ருதய முடிச்சை மூலமந்திரத்தால் சேதனம் செய்து எடுத்து சிஷ்யனின் ஜீவன ஹ்ருதய ஸம்புடமாக த்வாத சாந்தத்தில் சேர்க்க வேண்டும்.
25. ஸகாரத்தின் முடிவான ஹகாரத்தை சொல்லி சம்ஹார முத்ரையால் அந்த சூத்ரத்தில் சேர்க்க வேண்டும். கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும்.
26. மூலமந்திரத்தினால் ஸன்னிதானத்திற்காக மூன்று ஆஹூதி செய்து ஆத்மாவின் போகசரீரத்திலிருந்து உண்டான ஆணவமலம், கர்ம மலர், மாயை ஆகியவைகளையும்
27. சாந்த்ய தீதை முதலிய கலைகளை அந்தந்த மந்திரங்களால் ஸூத்ரத்தில் சேர்க்க வேண்டும். சிவத்தன்மை வாய்ந்த சாந்த்யதீதையை நான்காம் வேற்றுமை ஹும்பட் என்ற சப்தத்துடன் கூடியதாக சொல்லி
28. சாந்த்யதீத கலாயை ஹும்பட் என்று அஸ்திர மந்திரத்தினால் புஷ்பத்தால் அடித்து சிஷ்யனின் சிரஸில் இருக்கும் சிவனைப் பிரணவத்துடன் கூடியதாக ஸம்ஹார முத்ரையால் எடுத்து
29. சாந்த்ய தீத கலாயை நம: என்று புருவ மத்தி ஸமீபம் உள்ள ஸூத்ரத்தில் சேர்க்க வேண்டும்.
30. இந்த முறைப்படி பூத சுத்தியில் கூறியபடியும் நான்கு கலைகளிலும் புஷ்பதாடனம் செய்து எடுப்பது, சேர்ப்பது
31. கழுத்து முதல் ஹ்ருதயம் வரை அவ்விடமிருந்து நாபி அங்கிருந்து முழந்தாள் அதிலிருந்து கால் கட்டைவிரல் வரை சேர்ந்து இருப்பது, சேர்க்கப்படுவது என்ற பாவத்தை அறிந்து செய்ய வேண்டும்.
32. மந்திரங்கள், பதங்கள், வர்ணங்கள், தத்வங்கள், புவனங்கள், வ்யாப்யமாகவும், வ்யாபகமாகவும் இருப்பதோடு கர்மம், ஆணவமலம், மாயை ஆகிய பாசங்களால் கட்டப்பட்டிருக்கின்றதாக அறிய வேண்டும்.
33. ஆணவாதி மலங்கள் வ்யாப்யங்கள் வ்யாபகங்களாக கலைகள் ஐந்தும் கருதப்படுகின்றன. ஆகையால் இவ்விடத்தில் கலைகளை ஸம்ஹரித்தால் ஸ்வீகரித்ததாக ஆகும்.
34. சுத்தமான மந்திரவாதிகளால் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், இங்கு மறுபடியும் உண்டான சமயத்தில் சுத்தங்களாக ஆகின்றன. ஆகையால் எல்லாவற்றும் அதன் சுத்தி வெளிப்படுகின்றன.
35. அவைகளுக்காக ஓம், முதலாகவும் பட் என்ற முடிவோடும் கூடியதீபனத்தை செய்ய வேண்டும். அகோர மூலமந்திரம் சாந்த்யதீத கலை முதலியவற்றை
36. நான்காம் வேற்றுமை முடிவில் இருக்கும்படி உச்சரித்து ஹும்காரத்தையும் உச்சரித்து மூலத்தால் ந்யாஸம் செய்தபின் அதனதன் பீஜாக்ஷரத்தை நினைத்து கிளைகளை அடைய செய்ய வேண்டும்.
37. மும்முறை ஆஹுதி செய்து பாச பந்தனம் செய்து அஸ்திர மந்திரத்தால் சிஷ்யனின் சிரஸை தட்டி சிவமந்திரத்தை மூன்றுமுறை நினைக்க வேண்டும்.
38. பகவானே மலகர்ம மாயையுடன் கூடிய வ்யாபகமான சாந்த்யதீத கலையை சாந்தி கலையில் உள்ள தத்வம் வரையில் வ்யாபகமான பாசத்தை கட்டுப்படுத்துங்கள். (பகவன் சாந்த்ய தீத மலகர்ம ஸமந்விதம், சாந்தி தத்வா தே: வ்யாபகம் பாசம் பந்தபந்த) என்றும்
39. ஹும்பட் என்று முடிவாக மந்திரத்தை உச்சரித்து சூத்திர முடிச்சை செய்ய வேண்டும். அந்தந்த பீஜாக்ஷரத்தை சிவத்தோடு சம்புடிதமாக சிவபெருமானின் பதத்தில் வைக்க வேண்டும்.
40. சாந்தி கலையிலுள்ள ஆணவமலம், தத்வாதி, வ்யாபகம் உடைய பாசத்தை கட்டுப்படுத்துங்கள் என்பதாகக் கூறி சாந்தி கலா, மலதத்வாதி வ்யாகம், பாசம், பந்தபந்த ஹூம்பட் என்பதாக கூறி
41. இவ்வாறாக தனித்தனியாக மேற்கூறியவாறு பாசக்கயிற்றை முடிச்சு போடவும் அந்த சூத்ரத்தை எடுத்து சராவம் என்ற 2 மடக்கால் மேலும் கீழுமாக மூடி
42. சம்பாத ஹோமம் செய்து அந்த சூத்ரத்தை மண்டலத்தில் உள்ள ஈசனிடம் தெரிவித்து ஆத்மாவை ரக்ஷிப்பதாக சிவகும்ப ஸமீபம் வைக்க வேண்டும்.
43. சிவனுடன் கூடிய சிவகும்பத்தில் சிஷ்யனை நமஸ்காரம் செய்வித்து சிஷ்யனுடன் கூடிய ஆசார்யன் யாகசாலையிலிருந்து வெளியேவந்து
44. சிஷ்யர்களுக்கு ஹவிஸையும் பஞ்சகவ்யத்தையும் கொடுத்து பல்துலக்கும் படி செய்து நல்ல பிரதேசத்தில் தனித்தனியாக மெழுகப்பட்ட பூமியில்
45. போகத்தையும் மோக்ஷத்தையும் அனுசரித்து தனித்தனியாக மண்டலத்தின் அருகில் போகத்திற்காக கிழக்கு முகமாகவும் மோக்ஷத்திற்காக வடக்குமுகமாகவும்
46. அடக்கமான கால் கைகளை முயற்சியுடன் அடக்கி முறைப்படி முழங்கால்களையும் மடக்கியவாறு அமர்ந்தவர்களின் வலது கையில் தர்பத்தை எடுத்து
47. உயரே தூக்கிய பவித்ரம் தரித்த வலது கையினால் சிறிதளவு பஞ்சகவ்யத்தை ஹ்ருதய மந்திரத்துடன் ஓர்முறை கொடுக்க வேண்டும்.
48. அதை பருகியபின் மறுபடியும் முயற்சி உடையவர்களுக்கு அவ்வாறே இரண்டாவதுமுறை சிறிதளவு பஞ்ச கவ்யத்தையும் ஹவிஸ்ஸையும் கொடுக்க வேண்டும்.
49. எட்டுப்பிடி அளவு அரச இலையில் ஹவிஸ்ஸை வைத்து முமுக்ஷúகளுக்கும் போகத்தை விரும்புபவர்களுக்கு பிப்பல வ்ருஷ இலை பாத்திரத்திலும் வைத்து கொடுக்க வேண்டும்.
50. அந்தணர் அல்லாதவர்களின் தொடர்பு இருந்தால் போஜனத்திற்கு பிறகு சுத்திக்காக பாலுல்ளமரத்திலுள்ள குச்சியை
51. சுண்டுவிரல் அளவுள்ள பருமனும் நேர்மையானதும் பூச்சி அரிக்காததும் ருசி உள்ளதாகவும் தயார் செய்து மோக்ஷத்தை விரும்புபவன் எட்டு அங்குல அளவாகவும், போகத்தை விரும்புபவன் பனிரெண்டு அங்குல அளவாக வேண்டும்
52. கடவாய்பல் வரை வெளுப்பாக இருக்கும்படி நன்கு சுத்தி செய்து குச்சியையும் கொப்பளிப்பதையும் எந்த திசையில் செய்கிறார் என்பதை அறிந்து சுபஅசுபத்தை அறிக.
53. கொப்பளிப்பது, ஆக்னேயம், தெற்கு, நிருருதி வாயு திக்குகளில் கொப்பளிப்பதை செய்தால் அசுபமாகும். முகத்திற்கு நேர்பகுதி மற்றும் வேறு திசைகளில் கொப்பளித்தால் கர்மவசத்தால் சுபமென்று அறிக.
54. இவ்வாறு அறிந்து ஆசமனம் செய்து சமாதானமடைந்து சிஷ்யர்களை ஸ்வப்னங்கள் அதன் பலன்களை அறிய இரவில் ரøக்ஷயோடு கூடி படுக்க வைக்க வேண்டும்.
55. சயனம் செய்விக்கும் இடத்தை சாணத்தால் மெழுகி தர்ப்பையாலும் விபூதியாலும் ஸம்ஸ்கரிக்கப்பட்ட கிழக்கு தெற்கு ஆகிய திசைகளில் தலையை வைத்து படுப்பதற்கான படுக்கைகளை
56. ஒருவருக்கொருவர் ஸம்பந்தம் இன்றி இருபக்கங்களிலும் தலையணைகளை வைத்து நான்கு தண்ட அளவு இடைவெளியுடன் மறைவாகவும் இருட்டில் இல்லாமலும் ஆக
57. அஸ்திர மந்திரத்தால் நூறுமுறை அபிமந்திரித்து ஜபிக்கப்பட்ட படுக்கைகளில் ஹ்ருதய மந்திரத்தால் முடியப்பட்ட சிகைகளை உடையவர்களாக படுக்க வைத்து கவச மந்திரத்தினால் அபிமந்திரிக்கப்பட்ட
58. வஸ்திரங்களால் சிஷ்யர்களை போர்த்தி எள், கடுகு இவைகளால் அஸ்திரமந்திரத்தால் அபிமந்திரிக்கப்பட்டதாக சயனத்திற்கு வெளியே மூன்று கோடுகளை போட வேண்டும்.
59. ஸ்வப்னம் கண்ட சிஷ்யனின் பலனை அனுசரித்து அவனை பரிகாரமந்திரத்தை ஜபிக்க கூறி எட்டு திக்குகளிலும் இந்திராதிகளுக்கு முறைப்படி பலி கொடுக்க வேண்டும்.
60. சரு போஜனம், பல்துலக்குதல் இவைகளை செய்து ஸ்வப்ன பலத்தை அனுகூலப்ரதிகூல பலனை அறிந்து ஒவ்வொரு ஜாமத்திற்கு நூறு ஆஹூதி செய்ய வேண்டும்.
61. மூலமந்திரத்தால் நூற்றியெட்டு ஆஹுதி பிராயச்சித்தமாக செய்ய வேண்டும். கை கால் சுத்தி செய்து ஆசமனம் செய்து நல்ல தீர்த்தத்தால் ஸ்நானம் செய்து பிறகு ஆசமனம் செய்ய வேண்டும்.
62. பஸ்ம ஸ்நானமாவது செய்து வெள்ளை வஸ்திரம் தருவித்து உடலை சிவமாக செய்யப்பட்டதாக பாவித்து சமஸ்த வழிகளிலும் உள்ள தேகத்தை சிவமாக செய்ய வேண்டும்.
63. சருபோஜனம் பஞ்சகவ்யம் அருந்துதல், பல்துலக்குதல் இவைகளை தானும் செய்து சுத்தனாக ஆசார்யன் உறங்க வேண்டும்.
64. பிறகு மறுதினம் காலையில் செய்யப்பட்ட நித்ய அனுஷ்டானங்கள் உடையவனாக ஆசார்யன் இரவில் கண்ட ஸ்வப்னங்களை சிஷ்யர்களிடம் கேட்டு கெட்ட ஸ்வப்னமாயிருப்பின் பரிகாரம் செய்ய வேண்டும்.
65. காராம்பசுவின் பால், நெய், தேன், அருகம்பில் இவைகளால் நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும். சுபஸ்வப்னமாயிருப்பின் முன்புபோல் யாக சாலைக்கு சிஷ்யர்களை பிரவேசிக்க செய்ய வேண்டும்.
66. சிஷ்யனை அழைத்து குண்டத்திற்கு அருகில் தன்னுடைய வலது பாகத்தில் அமரச்செய்து அதிவாஸம் செய்யப்பட்ட பாச சூத்ரத்தை சிஷ்யனின் சரீரத்தில் தொங்கும்படி செய்ய வேண்டும்.
67. ஹேபரமேஸ்வரா இந்த குழந்தைக்கு அனுக்ரஹம் செய்கிறேன் என்று பிரார்த்தித்து சிவனிடம் அனுமதி பெற்றவனாக அக்னியில் ஆதார சக்தியை பூஜிக்க வேண்டும்.
68. நிவ்ருத்தி கலையில் அடங்கிய கலைகள் தத்வங்கள் முதலியவைகளையும் ப்ருத்வீதத்வம் க்ஷகாரம் ஹ்ருதய மந்திரம், ஸத்யோஜாதம்
69. காலாக்னி புவனம் கூஷ்மாண்டம், ஹாடகம், பிராம்மம் வைஷ்ணவம் இவைகளையும் ரவுத்ர புவனம் முடிய உள்ள பிரம்மாண்டத்தினுடைய ஆறு புவனங்கள் ஆச்ரிதமாக இருக்கின்றன.
70. கபாலீசர், அஜர், புத்தர், வஜ்ரதேஹர், பிரமர்தனர், விபூதி, அவ்யயர், சாஸ்தா, பீனாகி, த்ரிதசாதிபர் ஆகிய பத்தும் கிழக்கு திக்கிலும்
71. அக்னிருத்ரர், ஹுதாசனர், பிங்களர், காதகர், ஹரர், ஜ்வலநர், தஹநர், பப்ரு, பஸ்மாந்தகர் க்ஷயாந்தகர் ஆகிய பத்துபேர்களும் ஆக்னேய திக்கிலும்
72. யாம்யர், ம்ருத்யுஹரர், தாதா, விதாதா, கர்தரு சம்ஞகர், சம்யோக்தா, வியோக்தா தர்மா, தர்மபதி ஆகிய பத்து பேர்கள் தெற்கு திக்கிலும்
73. நிருருதி மாரணர், ஹந்தா, க்ரூர த்ருஷ்டி, பயாநகர், ஊர்த்துவகேசர், விரூபாக்ஷர், தூம்ர, லோஹிதர், தம்ஷ்ட்ரிணர் ஆகிய பத்து பேரும் நிருருதி திக்கிலும்
74. பலர், அதிபலர், பாசஹஸ்தர், மஹாபலர், ஸ்வேதர், ஜயபத்ரர், தீர்க்கபாகு ஜலாந்தகர் திக்கிலும்
75. மேகநாதர், சுநாதர், இந்த பத்துபேரும் மேற்கு பாகத்திலும் சீக்ரர், லகு, வாயுவேகர், தீக்ஷ்ணர், சூக்ஷ்மர், க்ஷயாந்தகர்,
76. பஞ்சாந்தகர், பஞ்சசிகர், கபர்த்தி, மேகவாகனர் ஆக பத்துபேர் வாயுதிக்கிலும் நிதீசர், ரூபவான், தன்யர், சவும்ய தேஹர், ஜடாதரர்.
77. லக்ஷ்மீத்ருக், ரத்னத்ருக், ஸ்ரீத்ருக், ப்ரஸாதர், ப்ரகாமதர் ஆக பத்துபேர் வடக்கிலும் வித்யாதிபர், ஈசர், ஸர்வக்ஞர், ஞானபுக், வேதபாரகர்
78. சுரேசர், சர்வர், ஜ்யேஷ்டர், பூதபாலர் பலிப்ப்ரியர் ஆகிய பத்துபேர் ஈசானத்திலும், வ்ருஷர், வ்ருஷதரர், அனந்தர், க்ரோதனர், மாருதாசனர்,
79. க்ரசநர், உதும்பரர், ஈசர், பணீந்த்ரர், வஜ்ர தம்ஷ்ட்ரிணர் ஆக பத்துபேர் அதோபுவனம் சம்பு, விபு: கணாத்யக்ஷர், த்ரியக்ஷர், த்ரிதசேஸ்வரர்
80. ஸம்வாஹர், விவாஹர், நபர், லிப்ஸு த்ரிலோசனர் ஆக பத்துபேர் ஊர்த்துவபுவனம். வீரபத்ரர், பத்ரகாளி, இந்தருத்ரர்கள் மேல் உள்ள பிரம்மாண்டத்தில் உள்ள ருத்ரர்கள் ஆவார்கள்.
81. கபாலீசர் முதலான பத்து ருத்ரர்கள் கிழக்கு திக்கிலும், அக்னி முதலான பத்து ருத்ரர்கள் ஆக்னேய திக்கிலும், யாம்யர் முதலான பத்துபேர் தெற்கு திக்கிலும், நிருருதி முதலான பத்து பேர் நிருருதி திக்கிலும்
82. பலர் முதலானவர்கள் மேற்கு பாகத்திலும், சீக்ரர் முதலானவர்கள் வாயு திக்கிலும் நிதீசர் முதலானவர்கள் வடக்கு பாகத்திலும் வித்யாதிபர் முதலானவர்கள் ஈசான திக்கிலும் இருப்பார்கள்.
83. வ்ருஷர் முதலிய ருத்ரர்கள் கீழ்பாகத்திலும் சம்பு முதலான ருத்ரர்கள் ஊர்வத்திலும் இருப்பார்கள். இவ்வாறு நூற்றிஎட்டு புவனங்களுக்கும் நூற்றி எட்டு ருத்ரர்.
84. எண்பத்தி ஒரு பதமுள்ள வ்யோமவ்யாபி பதந்யாஸத்தில் முடிவில் உள்ள பதத்திலுள்ள ஓம் முதலாக கீழிருந்து மேல் என்றமுறையாக நியாஸிக்க வேண்டும். அதில் நிவ்ருத்தி கலையில் கடைசியில் ஓம் நமோ நம: சிவாய நம: ஓம் என்றும்
85. பத மந்திரங்களில் சர்வத என்ற பதம் பின் சர்வ, சிவ, சூக்ஷ்ம சூக்ஷ்ம, சப்த சப்த, க்ஞானக்ஞான, பிங்க பிங்க என்றும்
86. பதங்க பதங்க, துரு துரு, ஸாக்ஷி ஸாக்ஷி, பூர்வ ஸ்தித பூர்வஸ்தித என்றும்
87. அஸ்துத அஸ்துத, அநர்ச்சிதாநர்ச்சித, ப்ரம்ம விஷ்ணுருத்ரபர, ஸர்வஸாந்தித்யகர என்ற பதங்களையும்
88. ஸர்வ பூத சுகப்ரத, பவோத்பவ, பவ பவ, சர்வ சர்வ, ப்ரதம ப்ரதம என்ற பதங்களையும்
89. முஞ்சமுஞ்ச, யோகாதிபதே, மஹாதேஜ:, ஸத்பாவேச்வர என்ற பதங்களையும்
90. மஹாதேவ என்ற பதம் வரையில் இருபத்தி எட்டு பதங்கள் உள்ளன. நிவ்ருத்தி கலையுடன் தத்வாதிகளுடன் கூடிய புவனங்களை வ்யாபித்துள்ளதாக அறியலாம்.
91. ஓம் ஹ்லாம் நிவ்ருத்தி கலாயை நம: என்று உச்சரித்து நிவ்ருத்தி கலையை பாசசூத்ரத்தில் இருந்து எடுத்து சிவாக்னியில்
92. ஆவாஹநம் செய்து மேற்கூறிய மந்திரபத வர்ணங்களுக்கு மூன்று முறை ஆஹூதி செய்ய வேண்டும். ஆணவம், மாயை, கர்மம் என்ற மூன்று மலங்களுக்கும் இன்ப துன்ப அனுபவம் சரீரத்திலிருந்து தோன்றுகின்றதாக
93. பாவித்து தேவிகர்பத்தை அடைந்த முடிவில்லாத உற்பத்தி ஸ்தானங்களாக கற்பித்து அதில் வியாபித்துள்ள வாகீஸ்வரியை ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.
94. ஓம் ஹாம் வாகீச்வர்யை நம: என்று பூஜித்து, பிறகு ஸ்வாஹாந்தமான மந்திரத்தால் ஓம் வாகீச்வர்யை ஸ்வாஹா என்று மூன்று ஆஹூதி செய்து
95. ஹே தேவேசீ பசு அனுக்ரஹ கார்யத்தில் சான்னித்யமாக இருங்கள். இவ்வாறு பிரார்த்தனை செய்து சிஷ்யனை அஸ்திரமந்திரத்தால் பிரோக்ஷித்து ஹ்ருதய மந்திரத்தினால் தடானம் செய்ய வேண்டும்.
96. ஓம் அஸ்த்ராய பட் என்ற மந்திரத்தால் தன்னுடைய ரேசகத்தால் சிஷ்யனுடைய சரீரத்தில் பிரவேசித்து
97. அஸ்திர மந்திரத்தால் ஹ்ருதயத்தை சேதித்து அங்குச முத்ரையால் ஆகர்ஷணம் செய்து மூல மந்திரத்தால் மூன்று ஆஹுதிகளை செய்ய வேண்டும்.
98. புல்லின் நுனியில் உள்ள பிந்து கட்டுப்பட்டிருப்பது போல பிரணவத்தால் சம்புடிதமாக செய்து ஹாம் என்று உச்சரித்து குழந்தையான சிஷ்யனை சம்ஷார முத்ரையினால்
99. பூரகத்தால் தன் ஸ்ருதயத்தில் வைத்து இருக்கும்படியாக கும்பகம் செய்து மூலமந்திரத்தை ஜபித்து தன்னுடைய த்வாத சாந்தத்தில் சேர்க்க வேண்டும்.
100. சிஷ்ய சைதன்யத்தை உத்பவ முத்ரையால் எடுத்து சிசுவாகிய சிஷ்யனுக்கு எல்லா யோநிகளிலும் தொடர்பு சேர்க்கை உண்டு என்றறிந்து சேர்க்க வேண்டும்.
101. ஸ்வாஹாந்தமான மூல மந்திரத்தால் மூன்று ஆஹூதி செய்து பகவானே எல்லா உற்பத்தி ஸ்தானங்களில் (பகவன் தேவதேவேசசிசோ: ஸர்வாஸு யோநிஷுஸம் யோகம் குருகுரு)
102. தொடர்பு உண்டாக்குவது போல் தீக்ஷõ காலத்தில் மோக்ஷத்தை கொடுங்கள். அனைத்து கர்பத்தின் நிஷ்பத்தியின் பொருட்டு மூலமந்திரத்தால் மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.
103. ஹே பகவானே இந்த சிஷ்யனுக்கு கர்பத்திலிருந்து விடுபடும் தன்மையை அப்பொழுதே எல்லா யோனிகளிடமிருந்து விடுபடச் செய்து எப்பொழுதும் சிவத்தை அடைந்திருக்க வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.
104. பின்நல்ல ஜனனத்திற்காக மூன்று முறை ஆஹுதி செய்ய வேண்டும். ஹே பகவானே எல்லா கர்பங்களுக்குள்ளும் ஜனனத்தை சிஷ்யனுக்கு செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.
105. இவ்வாறு ஜனனத்திற்காகவும் பசுக்களுடைய வளர்ச்சிக்காகவும் மூல மந்திரத்தால் மூன்று ஆஹூதி செய்து சிவனை குறித்து இவ்வாறு சொல்ல வேண்டும்.
106. ஹே பகவானே சிஷ்ய தேஹங்களுக்கு ப்ரவ்ருத்தியை செய்யுங்கள் என்று கர்மாக்களை சேமிப்பதற்கு மூலத்தால் ஆஹூதிசெய்ய வேண்டும். (பகவந் சிஷ்ய தேஹாநாம் ப்ரவ்ருத்திம் குருகுரு)
107. ஹே பகவானே! ஆத்மாவிற்கு பலவித போகங்களை செய்யுங்கள் செய்யுங்கள். லோக தீøக்ஷயில் கர்மாவின் சேமிப்பை இவ்வாறு படித்து (பகவன் ஆத்மன: நாநா போகதம் குருகுரு)
108. முன் செய்த வினைகள் தர்ம வடிவமான கர்ம சேமிப்பை செய்யுங்கள். தேசத்தாலும் காலத்தாலும் உடம்பாலும் விஷயத்தாலும்
109. சஞ்சிதம் ஆகாமி பேதத்தால் பலவகை போகங்களை எண்ணி போகங்களை அனுபவித்தலை அடையாளமுள்ள, ஆத்மாவினிடத்தில் சுக துக்கானுபவங்களை தெரிவித்து
110. மூலத்தால் மூன்று ஆஹுதி தந்து சிவனை பிரார்த்திக்கவும் என்று ஹே பகவன் அனோ: போக நிஷ்பத்திம் ஸர்வத்ர குருகுரு என்று
111. பரம ப்ரீதியோடு உருவத்தை போகங்களில் லயமடைந்ததாக நன்றாக நினைத்து பரமப்ரீதி வடிவமாக மூன்று சிவாஹூதிகள் செய்ய வேண்டும். (பரமப்ரீதி ரூபகம் லயம் குருகுரு)
112. நிர்வாண தீøக்ஷயில் லயத்தை செய்யுங்கள் என்று பிராத்தித்து ஜாதி, ஆயுள், போகம் இம்மூன்றின் சம்ஸ்காரத்திற்காக சுத்திக்காக (ஆத்மாவிற்கு) அணுவிற்கு நிஷ்க்ருதியில் லயத்தை செய்யுங்கள்.
113. ஹ்ருதய மந்திரத்தினால் நூறு ஹோமமும் மூலமந்திரத்தால் மூன்று ஆஹுதியும் செய்ய வேண்டும். எல்லா கார்யங்களையும் சுத்தியையும் தெளிவையும் பிராயச்சித்தமாக செய்ய வேண்டும் (ஹேபகவன் அணோ: யோகாபாவாத் நிஷ்க்ருத்யா ஸர்வகர்மஸுசுத்தம் குருகுரு.
114. ஹே பகவானே என்ற வாக்யத்தை முன்புள்ள பதத்தில் சேர்க்க வேண்டும். இங்கு ஆத்மாவிற்கு போகமில்லாததாலும் மாயை என்ற பாசத்திற்கு வெளியில் விடுபட்டதாக பாவிக்க வேண்டும்.
115. மூலத்தால் மூன்று ஆஹுதிக்கு பின் மலத்தைப் போக்க கூடிய கர்மாவை செய்ய வேண்டும். அனுபவிக்கும் தன்மையையுடைய மலகார்யத்தை நினைத்து அதன் சுத்திக்காக ஆஹுதிகளை
116. ஹ்ருதய மந்திரத்தால் பத்து எண்ணிக்கைகளாக செய்ய வேண்டும். மூலமந்திரத்தால் மூன்று ஆஹூதி செய்ய வேண்டும். இவ்வாறு மலத்தை வெளியிடுதல் கூறப்பட்டு கர்மங்களின்விடுபாடு கூறப்படுகிறது.
117. கர்மாக்களின் விடுபாட்டுத் தன்மை மிகவும் குறைவு உள்ளதாக நினைத்து மூலமந்திரத்தை கூறி மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.
118. பகவானே ஆத்மாவின் மாயாமல கர்மங்களின் விடுபாட்டுச் செயலை நிர்வாண தீøக்ஷயில் செய்வாயாக என்று கேட்டு பகவன் மலமாயா கர்மாத்மகம் விச்லேஷம் குருகுரு என்பதாகக் கூறி
119. ஆணவாதி மலங்களில் வியாபித்துள்ள நிவ்ருத்திகலா பாசத்தினுடைய சுத்திக்காக அதன் மூலமந்திரத்தினால் மூன்று ஆஹுதி செய்து
120. ஹே பகவானே இங்கு நிர்ருத்தி கலா சேதனத்தை செய்வாயாக என்று பிரார்த்தித்து இவ்வாறு செய்ய வேண்டும். (ஹே பகவந் இஹ நிவ்ருத்திச் சேதநம் குருகுரு)
121. எல்லா சரீரங்களின் அழிவிலும் ஆத்மாவின் ஒருமைப்பாட்டை அறிந்து அவுஷட் என்று முடிவுள்ள சிவாய அவுஷட் என்று பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.
122. ஓம் ப்ரம்மணே நம: என்று ஆவாஹணம் செய்து பூஜைகள் தர்ப்பணங்கள் செய்க, ஹேப்ரம்மன் சப்த ஸ்பர்சவு க்ரஹாண ஸ்வாஹா என்ற மந்திரத்தால்
123. மூன்று ஆஹுதிகள் செய்து சிவாக்ஞையை கேட்க வேண்டும், அனாமயமான பதத்தை அடைந்துள்ள காரணேச! உங்களால் இந்த சிஷ்யனுடைய அனாமயமான பிரம்மாவின் பதத்தை
124. தடையாக உள்ளதாக பாவித்து உன் ஆக்ஞையானது பரமேஸ்வரியினிடமிருந்ததாகும். உங்களின் இந்த ஆக்ஞையால் சுத்த தத்வ முகப்பில் உள்ள பிரம்மாவினிடத்தில் விட்டுவிட்டு
125. நிவ்ருத்தி கலாபாசம் விடுபட்டதால் சுத்த ஸ்படிகம் போன்ற ஆத்ம ஸ்வரூபத்தை தியானித்து மூலமந்திரத்தை உச்சரித்து மூன்று ஆஹுதிகள் கொடுக்க வேண்டும். (ஹே பகவன் அஸ்ய ஆத்மன: நிவ்ருத்தி பாசா துத்தாரம் குருகுரு)
126. அந்த ஆத்மாவிற்கு நிவ்ருத்திகலா பாசத்திலிருந்து விடுபாட்டு தன்மையை ஹே பகவானே செய்வாயாக என்று பூரகத்தால் ஸம்ஹார முத்ரையால்
127. ஆத்மாவை அடைந்து பின் சிஷ்யனின் பாச சூத்ரத்தில் கவச மந்திரத்தினால் வைத்து விட வேண்டும். சிஷ்யனின் ஸ்திதிக்காக சிவமூலமந்திரங்களால் மூன்று ஆஹூதிகள் கொடுக்க வேண்டும்.
128. வாகீச்வர்யை நம: என்று பூஜித்து தர்பணமும் மூன்று ஆஹூதியும் செய்ய வேண்டும். வாகீச்வரியை விஸர்ஜநம் செய்ய வேண்டும்.
129. இதன் பிறகு சிஷ்ய தேஹத்திலிருக்கும் பாச சூத்ரத்தில் பிரதிஷ்டா கலையை சுத்தி செய்வதற்காக பார்க்க வேண்டும். இருபத்தி மூன்று தத்வங்களான ஜலம், நெருப்பு, காற்று, ஆகாயம்
130. கந்தம், ரஸம், ரூபம், ஸ்பர்சம், சப்தம், உபஸ்தம், பாயு, பாதம், பாணி, வாக்கு, நாசி, ஜிஹ்வா, சக்ஷú, தீவக், ஸ்ரோத்ரம் ஆகியவையும்
131. மனம், அஹங்காரம், புத்தி, ப்ரக்ருதி வரை மேலாக இருபத்தி மூன்று தத்வங்கள். இவ்வாறு உள்ள தத்வங்கள் பிரதிஷ்டா கலைக்கு உரிய தத்வங்கள் ஆகும் (பிராம்மண ச்ரேஷ்டர்களே)
132. ள முதல் ட வரையிலான இருபத்தி நான்கு எழுத்துக்களும், சிரோமந்திரம் வாமதேவ மந்திரம், அகோரமந்திரம் இந்த மந்திரங்களும் ஐம்பத்தி ஆறு புவனங்கள் பிரதிஷ்டா கலையில் உள்ளன.
133. அமரேச புவனம், ப்ரபாசன், நைமிசன், புஷ்கரன், அவதி, ஆஷாடி, டிண்டி, முண்டி அவ்வாறே பார பூதியும் லகுலீச்வரர்
134. ஹரிச்சந்திரன் ஸ்ரீசைலம், ஜல்பேசன், ஆம்ராதகேஸ்வரன் மத்யமேசன், மஹாகாளர், கேதாரம், பைரவம் அப்படியே
135. கயா, குரு÷க்ஷத்ரம், நாகலம், நகலம், விமலேசம், அட்டஹாசம்மஹேந்திரன் பீமன் (ஸம்ஞகன்)
136. வஸ்திரா பதம், ருத்ர கோடிம், அவி முக்தம், மஹாலயம், கோகர்ணம், பத்ரகர்ணம், ஸ்வர்ணாக்ஷம், ஸ்தானு
137. சலகண்ட, த்வீரண்டம், மாகோடம், மண்டலேச்வரம் காலஞ்சரன், சங்கு கர்ணன், ஸ்தூலேச் வரன், ஸ்தலேச்வரர்
138. பைஸாசம், ராக்ஷஸ, யாக்ஷம், காந்தர்வம், இந்திரன் ஆகிய புவனங்கள் சவும்யம், ப்ராஜேசம், ப்ரம்மனம் இந்த புவனங்களும்
139. அக்ருதம், க்ருதம், பைரவம், ப்ராம்மம் வைஷ்ணவம், கவுமாரம், அவுமம், ஸ்ரீகண்டம் என ஐம்பத்தி ஆறு புவனங்களாகும்.
140. அமரேசம் முதலிய எட்டு புவனங்கள் அப்தத்வத்திலும், அரிச்சந்திர முதலிய எட்டு புவனங்கள் தேஜஸ்தத்வத்திலும், கயா முதலிய எட்டு புவனங்கள் வாயுதத்வத்திலும் வஸ்திர பதா முதலியவைகள் ஆகாச தத்வத்திலும்
141. சலகண்ட முதலிய எட்டு புவனங்கள் அஹங்கார தத்வத்திலும், பைசாசம் முதலிய எட்டு புவனங்கள் மனஸ் தத்வத்திலும், அக்ருதம் முதலிய எட்டு புவனங்கள் ப்ருக்ருதி தத்வத்திலும், இவ்வாறு ஐம்பத்தி ஆறு புவனங்கள் ப்ரதிஷ்டாகலையுள் அடங்கியுள்ளன.
142. மஹேச்வர முதல் அரூபின் வரை இருபத்தி ஒன்று பதம் பிரதிஷ்டாகலையில் அடங்கியவன ஆகும் முதலில் மஹேச்வர பதம்இரண்டாவது பரமாத்மன்
143. சர்வ, சிவ, நிதநோத்பவ, நிதன என்ற பதங்களையும்
144. அநிதந, ஓம் ஸுவ: ஓம் புவ: ஓம் பூ: என்ற பதங்களும்
145. தூ தூ தூ தூ, நாநா நாநா, அநாதே, அபஸ்ம என்ற பதங்களும்
146. அதூம, அநக்னே, அரூப, ஜ்யோதி: ஜ்யோதி: என்ற பதங்களும்
147. தேஜ: தேஜ: ப்ரதம ப்ரதம, அரூபின் அரூபின் என்ற பத மந்திரங்களும் இருபத்தி ஒன்று பதங்களாக பிரதிஷ்டாகலையில் அடங்கி உள்ளன.
148. பிரதிஷ்டா கலையில் இவ்வாறு எல்லாம் வியாபித்து இருப்பதை பாவித்து கொள்ள வேண்டும். இவ்வாறு சொல்லப்பட்ட எண்ணிக்கை உடைய தத்வம், வர்ணம் பதம், மந்திரங்கள் பிரதிஷ்டாகலாதிபதியான விஷ்ணுவால்
149. உள்ளடங்கியதாக அந்த கலையை நினைத்து உபாங்கங்களோடு சேர்க்க வேண்டும். குருவானவர் லகுவாக வேண்டும் சுத்தமானதாகவும் பாசத்தை சோதிப்பதாகவும் எண்ண வேண்டும்.
150. பாசத்தையும் பாசசுத்தியாக உள்ள பிரதிஷ்டா கலையில் இருக்கின்ற வர்ண பத தத்வ புவன மந்திரங்களை அப்படியே உச்சரித்து சோதிப்பதில் சுத்தியை நன்றாக செய்ய வேண்டும் என எல்லா போக சேர்க்கைகளும் அடைவதற்காக உபதேசம் செய்யப்பட்டது.
151. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் என்று நான்காம் வேற்றுமையுடன் கூடிய இரண்டு கலைகளையும் நம: என்ற வாக்யத்துடன் கூடி பூஜித்து மூலமந்திரத்தால் மூன்று ஆஹூதி செய்ய வேண்டும்.
152. பிரதிஷ்டாகலையின் உபஸ்நானம் முதலியவைகளையும் மற்றும் எல்லாக்ரியைகளையும் முன்பு போல் ஆசார்யன் செய்யவேண்டும். சிரோமந்திரத்தினால் பிராயச்சித்தமாக நூறு ஆஹுதி செய்ய வேண்டும்.
153. மஹா விஷ்ணுவிற்கு கப்பம் கொடுப்பது போல் ரசத் தன்மையை கொடுத்து விட்டு வித்யா கலையை சுத்திக்காக அடைய வேண்டும். புருஷ தத்வம் வித்யா கலையில் அடைந்ததாகவும் முதல் தத்வமாகவும் ஆகிறது.
154. ராகம், நியதி, வித்யை, கலா, காலமும், மாயா தத்வமும், ஞ முதல் த வரை உள்ள எழுத்துக்கள் ஏழும் வித்யா கலையில் அடங்கியுள்ளன.
155. சிகாமந்திரம் இருபத்தி ஏழு எண்ணிக்கை உள்ள புவனங்கள் வித்யாகலையில் அடக்கம். வாம புவனம், பீம, உக்ர, பவ, ஈசான, ஏக, வீர இவைகளும்
156. ப்ரசண்ட, உமாபதி, அஜ, அனந்த, ஏகசிவ, க்ரோதேச, ஸம்வர்த்த, ஜ்யோதி, பிங்க இவைகளும்
157. பஞ்சாந்தக, ஏகவீர, சிகேத, மஹாத்யுதி, வாமதேவ, பவ, உத்பவ, ஏக பிங்கள இவைகளும்
158. ஏகேக்ஷண, ஈசான, அங்குஷ்ட மாத்ரக ஆகிய இருபத்தி ஏழு புவனங்கள் வித்யாகலையில் உள்ளன. புருஷ தத்வத்தில் ஆறுபுவனமும், ராகதத்வம், நியதிதத்வம், வித்யாதத்வம், கலா, காலம் ஆகிய தத்வங்களின் முறையே இரண்டு இரண்டு புவனங்களும்
159. மாயா தத்வத்தில் எட்டு புவனமும் இவ்வாறாக புருஷன் முதல் மாயை வரை இருபத்தி ஏழு புவனங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளன. பதமந்திரங்கள் இருபது உள்ளன. அதில் வ்யாபின், வ்யாபின் என்ற பதமும்
160. வ்யோமின், வ்யோமின், அசேதந அசேதந, பரமேஸ்வர பராய
161. ஜ்யோதி ரூபாய, சர்வ யோகாதிக் க்ருதாய, அநிததாய, கோப்த்ரே என்றும்
162. குஹ்யாதி குஹ்யாய ஓம் நமோ நம: ஸத்யோ ஜாத மூர்த்தயே வாமதேவ குஹ்யாய அகோர ஹ்ருதயாய, தத்புருஷவக்த்ராய, ஈசான மூர்த்தாய
163. சிவாய, சர்வ ப்ரபவே ஓம் நம: சிவாய
164. த்யானா ஹாராய என்பதுமாக வித்யா கலையில் உள்ள பதங்கள் கூறப்பட்டுள்ளன. முன்பு கூறப்பட்ட முறைப்படி வர்ணம் தத்வம், புவனம், பதம், மந்த்ரம் இவைகளின் சேர்க்கையை செய்து வித்யா கலையை ஹோமம் செய்ய வேண்டும்.
165. பிராயசித்தமாக சிகா மந்திரத்தால் நூறு ஆஹுதி செய்ய வேண்டும். ருத்ரனிடத்தில் ரூபத்தையும், கந்தத்தையும் எடுத்துக் கொள்ளும் என்று கப்பம் கட்ட வேண்டும்.
166. மூன்று கலைகளுக்கும் உட்பட்ட பவம் என்ற பதத்தை அறிந்து ஆத்மாவை ஸம்சாரத்திலிருந்து கரையேறியவனாக நினைத்து ஆத்ம தத்வத்திற்கு மேல் இருப்பவனாகவும் அறிந்து
167. ஆசார்யன் ஆத்மாவை அனுபவிக்கும் தன்மை உடையவனாகவும், அதிகாரம், மலம் விஷ்டை இவைகளால் கூடியதும் ஐஸ்வர்யத்திற்கு இருப்பிடமானதும் சுத்த இந்திரிய ஸாதனமான போகத்தை உடையவனாகவும் அறிந்து
168. ஒத்துழைப்பு, கலப்பற்ற தன்மை, அடக்கமான ஆற்றல் இவற்றை பரிக்ஷித்து சாந்தி கலையையும் அதற்கு உட்பட்டதான
169. தத்வங்கள் சுத்த வித்யா, ஈச்வர ஸதாசிவ முதலான மூன்று தத்வங்களாகும். க எழுத்துக்கள் மூன்றும், மந்திரங்கள் தத்புருஷம், கவசம் இரண்டுமாகும்.
170. வாமா, ஜ்யேஷ்டா, ரவுத்ரீ, காளீ, கலவிகரனீ, பலவிகரணீ, பலப்ரமதனி மேலும்
171. சர்வபூததமநீ, மனோன்மனீ என்று ஒன்பது புவனங்கள் சுத்த வித்யா தத்வத்தில் இருக்கின்றன. இதே போல் ஈச்வர தத்வத்தில் அனந்த, சூக்ஷ்ம என்ற குறிப்புள்ள புவனமும் மேலும்
172. சிவோத்தம, ஏகநேத்ர, ஏகருத்ர, த்ரிமூர்த்தி, ஸ்ரீகண்ட, சிகண்டர் என்ற எட்டு புவனங்கள் ஈச்வர தத்வத்தில் சாந்தி கலையினுள் அடங்கி உள்ளன.
173. சதாசிவ தத்வத்தில் சாதாக்யம் என்ற புவனம் ஆக சாந்தி கலைக்குரிய பதினெட்டு புவனங்கள் இவ்வாறு அமைந்துள்ளன. அதில் பதினோரு பதமந்திரங்கள் உள்ளன அவையாவன நித்யம் யோகினே என்ற பதமும்
174. யோக பீடஸம்ஸ்தியாய, சாஸ்வதாய, த்ருவாய, அனாச்ரிதாய என்றும்
175. அநாதாய, அனந்தாய, சிவாய, சர்வ வ்யாபிநே என்றும்
176. வ்யோமரூபாயவ்யோம வ்யாபினே என்ற சாந்தி கலையில் பதினொன்று பதங்கள் உள்ளன. நிஷ்க்ருதியாகிய சாந்தியின் பொருட்டு கவச மந்திரத்தால் நூறு ஆஹூதிகள் கொடுக்க வேண்டும்.
177. எல்லாவற்றையும் முன்புபோல் உணர்ந்து புத்தி, அஹங்காரம் இந்த இரண்டையும் காரணேசரான ஈச்வரரிடம் கொடுக்க வேண்டும். பிறகு சாந்த்யதீத கலையினுள் அடங்கிய தத்வம், வர்ணம், மந்திரம், புவனம் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும்.
178. சாந்த்ய தீதகலையில் சிவதத்வம் மட்டும் சொல்லப்படுகிறது. பதினாறு மந்திரங்கள். ஈசான மந்திரம், அஸ்திர மந்திரம், சிவ மந்திரம் ஆக மூன்று மந்திரங்கள்
179. ஓம் என்ற பதம் சாந்த்ய தீதகலையில் சொல்லப்படுகிறது. புவனங்கள் பதினைந்து அவையாவன: நிவ்ருத்திபுவனம், ப்ரதிஷ்டா புவனம், வித்யா சாந்தி, சாந்தி சாந்த்யதீதம் ஆக ஐந்தும்
180. பிந்துவாகிய சக்தி தத்வத்தில் இந்த ஐந்து புவனங்கள் சொல்லப்படுகின்றன. இதன் பிறகு இந்திகா, ரோசிகா, மோசிகா அவ்வாறே
181. ஊர்த்துவ காமிநீ என்று நாதத்திலிருந்து மேலெழும்பிய புவனங்கள். அவ்வாறே வ்யோமின், வ்யோமரூபா, அனந்தா இதன் பிறகு
182. அநாதா, அனாச்ரிதா என்ற ஐந்து புவனங்களும் சாக்தங்கள் ஐந்தாகவே கருதப்படுகின்றன.
183. இவ்வாறு தத்வமந்திர, பத வர்ண புவனங்கள் கர்ப்பிதமாக உள்ளடங்கி இருப்பது அறிந்து ஓம் ஹ்யைம் ஹெளம் சாந்தி சாந்த்ய தீதாப்யாம் நம: என்று மந்திரத்தை உச்சரித்து
184. மனசால் பூஜைசெய்து மூல மந்திரத்தால் மூன்று ஆஹுதிகள் செய்ய வேண்டும். சாந்த்ய தீத கலையை தன் இருப்பிடத்திற்கு செல்லச் சொல்வதை முன்புபோல செய்ய வேண்டும்.
185. பிராயச்சித்தமாக சிவமந்திரத்தால் நூறு ஆஹுதி செய்ய வேண்டும். அஸ்திர மந்திரத்தால் பூர்ணாஹுதியை பாச சேதத்துக்காக ஹோமம் செய்ய வேண்டும்.
186. பின் நிர் பீஜ தீøக்ஷயில் பூர்ணாஹுதியின் முடிவில் இதை செய்ய வேண்டும். சமயம், சமயாசாரம் இவற்றை பாசாத்மகமான திரோதான சக்தியிடம் கொடுக்க வேண்டும்.
187. ஹே மகேச்வரா ஸமயம், சமயாசார பாச சுத்திம் குருகுரு ஹே மகேச்வரா சமயத்தையும் சமயாசார பாசசுத்தியையும் சிஷ்யனுக்கு செய்யுங்கள் செய்யுங்கள் என்று சொல்லி மஹேச்வரினிடம் கப்பத்தை ஸமர்பிக்க வேண்டும்.
188. சிவ பீஜத்தை உச்சரித்து சதாசிவ பதத்தை மறுபடியும் அடைந்து ஓம் ஹாம் சதாசிவ மனோ க்ருஹாண ஸ்வாஹா என்று மூன்று ஆஹுதிகள் செய்ய வேண்டும்.
189. முன்பு போல் சதாசிவரை விசர்ஜனம் செய்து நிர்மலமான சிஷ்ய ஆத்மாவாக பாச சூத்ரத்தை எடுத்து சிஷ்ய தேஹத்தில் ரேசகத்தால் புகுந்து ஆத்மாவில் வைக்க வேண்டும்.
190. சிஷ்யனுடைய சிரசில் நீரால் பிரோக்ஷணம் செய்து பிறகு சிவாக்னியில் வாகீர்வரியை பூஜித்து தர்ப்பணாஹுதி செய்து பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
191. சிஷ்யனுக்காக ஹேதேவீ நீர் என்னால் சிரமமடைந்து இங்கு வந்து இருக்கிறீர்கள். தங்களுடைய மூல இடத்திற்கு செல்ல வேண்டும் விக்ஞாபிக்க வேண்டும். சாந்த்யதீத கலையை சக்தி தத்வத்தில் ஒடுங்கியதாக பாவித்து
192. மாயா தத்வம் முடிய உள்ள ஆத்ம தத்வத்தை ஓம் ஹாம் ஆத்மதத்வாய நம: என்று உத்தம ஆசார்யன் எழுந்தருளச் செய்து
193. நம: ஓம் என்ற பிரணவத்தோடும் உச்சரித்து பூஜித்து சன்னிதியில் குறை குற்றங்களின் சுத்தத்திற்காக ஓம் ஹாம் சிவாய ஸ்வாஹா என்று
194. அந்த சப்தத்தை உச்சரித்து நூறு முறை ஹோமம் செய்து மெதுவான உச்சரிப்பால் வித்யா தத்வத்தை அதன் அதிபதியுடன் கூறி நூற்றியெட்டு ஹோமம் செய்து அந்த இடத்திற்குள் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
195. மந்தி ரோச்சாரண குற்றங்கள் விகல்பங்கள் மந்திர உச்சாரணத்தால் சுத்தமாகின்றதினால் சிவதத்வத்தை எழுந்தருள செய்து சக்தி தத்வத்தை மனசால் தியானிக்க வேண்டும்.
196. மனக் குழப்பங்கள் மாற நூற்றியெட்டு ஆஹூதிகள் செய்க. பிறகு சிவ மந்திரத்தால் சீகாச்சேதம் செய்து விடுவிக்க வேண்டும்.
197. அத்வாக்களினுள் இருந்து சர்வவ்யாபி யாகிற வழிக்கு காரணமான சக்தியை தியானித்து சிகையின் நுனியில் இருக்கிற சுத்தஸ்படிகமான
198. சிஷ்ய சைதன்யத்தை எடுத்து கர்த்தரியை கொண்டு சிகையை எடுத்து சிகா மந்திரத்தால் வைத்து சேதித்த பிறகு சிகாமந்திரத்தால் சிஷ்யனை ஸ்நானம் செய்வித்து
199. குருவானவர் ஆசமநம், சகளீகரணத்தை குருவானவர் செய்து பசுஞ்சாணியால் மூடி ஸ்ருக்கின் நுனியில் வைத்து, சிகையை சிவாக்னியில் ஹோமம் செய்து பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.
200. பிறகு வெளியே வந்து ஸ்ருக்ஸ்ருவம், கர்த்தீரி இவைகளை அலம்பி சுத்தம் செய்து ஆசமனம் செய்து சிவனை பார்த்து இவ்வாறு சொல்ல வேண்டும்.
201. ஹேபகவானே அத்வசுத்தி சிகோச்சேதம் இவற்றை உங்கள் அனுக்ரஹத்தால் என்னால் செய்யப்பட்டது. சிஷ்யன் மேன்மை அடைய ரக்ஷியுங்கள் என்று சிவபெருமானிடம் தெரிவிக்க வேண்டும்.
202. சிஷ்யனை சேர்த்துக் கொள்ள போகிறேன். இப்போதே விதிப்படி ஆக்ஞை இடுங்கள் அன்றும் இவ்வாறே செய்க என்று அனுமதி பெற்ற குரு மன சந்தோஷத்தோடு அனுக்ரமமாக செய்ய வேண்டும்.
203. சிசுவாகிய சிஷ்யனை அழைத்து சிவாக்னிக்கு முன்பாக சிஷ்யனுக்கு ப்ரோக்ஷணம் சகளீகரணம் செய்து
204. அந்தர்யாகம் நாடீ சந்தானம் மந்திர தர்ப்பணம் இவைகளை செய்ய வேண்டும். சகளீ கரண மந்திரங்களால் ஒவ்வொரு ஆஹுதி கொடுக்க வேண்டும்.
205. சகளீகரண சுத்தியும் செய்து சிவத்திடம் சேர்ப்பிக்க வேண்டும். வித்யாதத்வத்தை காரணமாக கொண்ட ஆசார்யர் பிந்து தத்வத்தை ஆசனத்திலிருந்து கொண்டு
206. இந்திகா, தீபிகா, ரோசிகா, மோசிகா, ஊர்த்துவகாமிநீ சூக்ஷ்மா, சூக்ஷ்மாம்ருதா என்ற கருத்துள்ள பிராசாத மந்திரங்களை நினைத்து பாவித்து
207. பிந்து சக்தி, நாத சக்தி ஆகிய கலைகளினால் இணைக்கப்பட்ட தேஹத்தை உடைய ஆசார்யனாக குருவானவர்.
208. வ்யாபிநி, வ்யோமரூபா, அனந்தா, அநாதா, அநாச்ரிதா என்ற வெளிக்கரணத்தோடு கூடியது.
209. அந்த கரணத்தோடு கூடி சமானமாக இவ்வாறு கற்பித்ததாக ஆத்மதத்வம், உன்மநா ஆகிய எல்லாம் சமமாக நிரம்பிய தேஹத்துடன் கூடியதாக
210. பூரக, கும்பங்களை செய்து நாக்குடன் தொடர்புள்ள இரண்டு உதடுகளை மெல்ல திறந்த முகத்துடன் பற்களை தொடாதராறு (ப்ராசாத மந்திரங்களை உச்சரித்து)
211. நல்ல உயர்ந்த காத்ரமுள்ள குரு தன் ஆத்மாவில் சிசுவாகிய சிஷ்யனைக் கொண்டு ப்ராண வாயுவினால் சுஷும்னாநாடியை ஒன்றாக செய்து சிவ ப்ராசாதத்தை ஜபித்து
212. மந்திரத்துடன் கூடிய சிஷ்யனுடைய சைதன்யத்தை சுத்தஸ்படிக ஸந்நிபமாக நிறைவு செய்து காரணேச்வரர்களை விட்டு யோகத்தால் மந்திரங்களை உச்சரித்து நன்றாக பாவிக்க வேண்டும்.
213. சிஷ்யனை பூரக கும்பத்தால் சிவனிடத்தில் சேர்க்க வேண்டும். வெளியே சென்றுவரும் மனஸை பிராணன், நாதம், சக்தி, கலாத்மகமாக செய்து
214. ஸம்ஹார முத்ரையால் இறந்ததான அழிவை விட்டு ச்ருக் ச்ருவ சமீபத்தில் சுத்தமாக உயர்வாக சிகை கல்பத்தை சிவாக்னியிலிருந்து எடுத்து பரிசுத்தமானதாக அந்த விபூதியை சேர்க்க வேண்டும்.
215. சிஷ்யனின் சரீரத்தில் அஸ்திர மூலமந்திரத்தால் முன்பு போல் சிஷ்யனுக்கு சேர்க்க வேண்டும். அங்கே சிவஸ்வரூபமாக இருந்தாலும் சிவ சமான குணமாக செய்யப்பட்டாலும் அதனால் அனாதி பாசசேர்க் கையால் சர்வக்ஞத்வாதி குணங்கள் சிஷ்யனிடம் இருப்பதற்கு இல்லை.
216. எதுவரை முயற்சியையுடைய சிஷ்யனுக்கு தத்வப்ராப்தியோ அதுவரை பரமேஸ்வர அனுக்ரஹம் உண்டு. சாம்ராஜ்யத்தை அடைந்த உயர்ந்த அரசனுடைய குமாரனுக்கு எப்படி கடமைகள் ஏற்படுகின்றதோ அவ்வாறே சிஷ்யனுக்கும்
217. தன் ஆறு குணங்களை அறியாததால் நூறு வருடமிருந்தும் பிரகாசிப்பதில்லை. வ்யாஹ்ருதி மந்திரத்தால் சிஷ்யனுக்காக ஸ்ருவத்தால் தன் குணத்தையுள்ளதாக ஆறு ஆஹூதிகள் செய்ய வேண்டும்.
218. புத்தி உள்ள ஆசார்யன் கீழ்வரும் இந்த முறைப்படி செய்யவேண்டும். ஸர்வக்ஞன் நித்திய ஸம்போதம், ஸ்வதந்த்ரன் த்ருப்திமான பவ என்றும்
219. அலுப்த ஆனந்த சக்தி இவைகளும், ஹ்ரஸ்வப் ரசாத என்ற ஹாம் எழுத்தை ஆத்மன் என்ற பதத்தையும் ஸ்வாஹா என்ற பதத்தையும் கூடியதாகவும் சொல்ல வேண்டும். ஆத்மன் ஸர்வக்ஞோபவ, ஹிம் ஹாம் ஆத்மன் பரித்ருப் தோபவ, ஹ்ரூம் ஆத்மன் அனாதி போதோபவ, ஹைம் ஆத்மன் ஸ்வதந்த்ரோ பவ, ஹளம் ஆத்மன் அலுப்த சக்திர்பவ ஹ: ஆத்மன் அனந்த சக்திர்பவ என்பதாக ஹோமம் செய்ய வேண்டும்.
220. இவ்வாறு சர்வ பாபங்களையும் போக்கும் நிர்வாண தீக்øக்ஷ சொல்லப்பட்டது. பிறகு நான்கு பிரிவினரான ப்ராம்மணர், க்ஷத்ரியர், வைச்யர், சூத்ரர் இவர்களும் அனுலோமர்களும் இந்த தீக்øக்ஷ செய்து கொள்ள சாஸ்திர சம்மதம் உண்டு.
221. இதற்கு மாறான தவறான பிறப்பினர் தீøக்ஷ செய்து கொள்ள அதிகாரமுள்ளவர்கள் மாப்பிள்ளை, தகப்பனார், மனைவி மோக்ஷத்தை விரும்பும் அனைவரும் தீøக்ஷ பெற யோக்யதை உள்ளவர்கள் ஆகின்றனர்.
222. தீøக்ஷயின் கர்த்தா சிவனாக ஆகிறான். அவர்களுக்கு புத்ரத்வம் என்பது இல்லை. கீழ்தரப்பட்ட வர்ணத்தவர்களுக்கு அவுத்ரீ தீøக்ஷ என்ற மண்டலம் பூஜையுடன் கூடிய தீøக்ஷ இல்லை. ஆனால் அவர்களுக்கு சாக்ஷúஷதீøக்ஷ மட்டும் செய்யலாம்.
இவ்வாறு உத்திரகாமிகாகம மஹாதந்திரத்தில் நிர்வாண தீக்ஷõ முறையாகிய இருபத்திமூன்றாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக