திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

ஆபத்து காலத்திலும், வழக்குகளின் வெற்றிக்காகவும் கடன் உபாதை நீங்கவும், தோஷபரிஹாரமாகவும் சௌபாக்கியங்களை அடையவும் பாராயணம் செய்யலாம். மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த இம்மந்திரம் மஹாசக்தி வாய்ந்தவை என்று ஸ்காந்தம் தேவீ பாகவதத்தில் சொல்லப்படுகிறது. முதலில் ருத்திரனும் பின் அங்காரக பகவானும் மங்களன் என்ற பேரரசனும் பூஜித்து, நினைத்த காரியத்தை அடைந்தனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்) தோறும் பூஜித்தலும், 108 முறை பாராயணமும் மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது. கன்னிகைகளுக்கு மங்களத்தை கொடுப்பது விவாஹாதி சோபனம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ராகுகாலத்தில் துர்காதேவியை வழிபட பலன் கிடைக்கும். ஒன்பது செவ்வாய் கிழமைகளில் ராகுகால நேரத்தில் விடாது வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். நவக்ரக தோஷங்கள் குறிப்பாக செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.

மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா

 

கருத்துகள் இல்லை: