RUINED TEMPLES AROUND THIRUKAZHUKUNDRAM
முற்காலத்தில் பெரிய கோயிலாக திகழ்ந்த சிவாலயம் விஷ்ணு ஆலயம் இவைகள்
பராமரிப்பு இல்லாமலும் இட ஆக்கிரமிப்பாலும் முற்றிலுமாக மறைந்துபோய்
தற்போது சில இறை வடிவங்களே எஞ்சியுள்ளன. இவ்விதம் எஞ்சியுள்ள இறை வடிவங்களை
சில கிராமங்களில் ஆர்வமுள்ள பக்தர்கள் விடாமல் பூஜை நிகழ்த்தி
வருகிறார்கள். பல கிராமங்களில் இவற்றின் நிலை பரிதாபமாக உள்ளன. சுற்றிலும்
புதர்கள் மண்டி கவனிப்பார் இன்றி பரிதாப நிலையில் காணப்படுகின்றன. இந்த அவல
நிலை என்று மாறுமோ அந்த இறைவனுக்குத்தான் வெளிச்சம்.
இறைவன் நாமம் ஸ்ரீ மௌலீஸ்வரர்
அம்பாள் நாமம் தெரியவில்லை ஒரு கல் மட்டும் உள்ளது
தினசரி பூஜை உண்டு. திரு மாரி நாயக்கர் என்பவர் பூஜை
செய்கிறார்.
கிராமத்தின் பெயர் முள்ளிகொளத்தூர்
எப்படி போவது திருக்கழுகுன்றத்திலிருந்து 5 கி.மி
சென்னை-செங்கல்பட்டு-கல்பாக்கம்
பேருந்து 108
இறைவன் நாமம் யோக நரசிம்மர்,விநாயகர்,சிவன்
அம்பாள் நாமம் இல்லை
தினசரி பூஜை இல்லை
கிராமத்தின் பெயர் மேற்காண்டை
எப்படி போவது கல்பாக்கத்திலிருந்து 5 கி.மி.
சென்னை-செங்கல்பட்டு-கல்பாக்கம்
பேருந்து 108C, 212V,212M(from chenglepet)
தொடர்புக்கு திரு ஜானகிராமன்-044-27495017
திரு சசிகுமார்-9994351768
இறைவன் நாமம் தெரியவில்லை
அம்பாள் நாமம் இல்லை
தினசரி பூஜை உண்டு.
.
கிராமத்தின் பெயர் குடிபேரம்பாக்கம்
எப்படி போவது திருக்கழுகுன்றத்திலிருந்து 9 கி.மி
தொடர்புக்கு திரு ரமேஷ் -9092697401
திரு வாசுதேவன் 9094627645
தற்போது திரு ரமேஷ் அவர்கள் முயற்சியால் கோயில் கட்டப்பட்டு முடியும்
தருவாயில் உள்ளது. இறைவன் கனவில் தோன்றி கோயில் கட்டச்சொல்லி ஆணை இட்டதாக
திரு ரமேஷ் கூறுகிறார்.
இறைவன் நாமம் தெரியவில்லை
அம்பாள் நாமம் இல்லை
தினசரி பூஜை பிரதோஷம் மட்டும் நடைபெறுகிறது
.
கிராமத்தின் பெயர் வசுவசமுத்திரம்
எப்படி போவது கல்பாக்கத்திலிருந்து 3 கி.மி.
சென்னை--கல்பாக்கம் -பாண்டி ECR
பேருந்து 188,188A,108,118,119
பேருந்து நிறுத்தம் -புதுபட்டிணம்
தொடர்புக்கு திரு நாகமுத்து 9443990298
இறைவன் நாமம் தெரியவில்லை 16 பட்டை லிங்கம்
அம்பாள் நாமம் இல்லை
தினசரி பூஜை இல்லை .பிரதோஷம் பள்ளி சிறுவர்கள்
. செய்கிறார்கள்.
கிராமத்தின் பெயர் கடம்பாடி
எப்படி போவது மாமல்லபுரத்திலிருந்து 8 கி.மி.
இறைவன் நாமம் ஸ்ரீ சொக்கநாதர்
அம்பாள் நாமம் இல்லை
தினசரி பூஜை இல்லை
.
கிராமத்தின் பெயர் ஆனூர் மதுர ஆலவாய்
எப்படி போவது
செங்கல்பட்டு-புதூர்
பேருந்து 129C,T12,T4,T6
தொடர்புக்கு திரு ஸ்ரீதரன் 9444327224
திரு ராஜசேகர் 9994176535
எச்சூர் கிராமம்
முர்புதர்களுக்கு இடையில் சிவலிங்கமும் நந்திகேஸ்வரர் திருவுருவும்
காணப்படுகின்றன. இறைவன் திருநாமம் தெரியவில்லை. அம்பாள் இல்லை.பூமியில்
தோண்டிப் பார்த்தால் மற்ற சிலைகள் கிடைக்கும் என்று ஊர்மக்கள்
சொல்கிறார்கள்.சமீபத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ விஜயேந்திர
சரஸ்வதி சுவாமிகள் இங்கு விஜயம் செய்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை
செய்தார்கள். தற்சமயம் ஊர்மக்களால் புதர்கள் அகற்றப்பட்டு
சீர்செய்யப்பட்டது.
சுவாமிகளின் ஆக்ஞைபடி சென்னையிலுள்ள திரு கணேசன் என்ற அன்பரால் வெகுவிரைவில் கோயில் கட்டப்பட உள்ளது.
தொடர்புக்கு திரு வேணுகோபால் 9444608918, திரு பாலக்ருஷ்ணன் 9380110120
திருக்கழுகுன்றத்திலிருந்து 6 கி.மி. தொலைவில் உள்ளது இக்கிராமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக