JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
ஞாயிறு, 30 டிசம்பர், 2012
வியாழன், 9 ஆகஸ்ட், 2012
RUINED TEMPLES AROUND THIRUKAZHUKUNDRAM
முற்காலத்தில் பெரிய கோயிலாக திகழ்ந்த சிவாலயம் விஷ்ணு ஆலயம் இவைகள்
பராமரிப்பு இல்லாமலும் இட ஆக்கிரமிப்பாலும் முற்றிலுமாக மறைந்துபோய்
தற்போது சில இறை வடிவங்களே எஞ்சியுள்ளன. இவ்விதம் எஞ்சியுள்ள இறை வடிவங்களை
சில கிராமங்களில் ஆர்வமுள்ள பக்தர்கள் விடாமல் பூஜை நிகழ்த்தி
வருகிறார்கள். பல கிராமங்களில் இவற்றின் நிலை பரிதாபமாக உள்ளன. சுற்றிலும்
புதர்கள் மண்டி கவனிப்பார் இன்றி பரிதாப நிலையில் காணப்படுகின்றன. இந்த அவல
நிலை என்று மாறுமோ அந்த இறைவனுக்குத்தான் வெளிச்சம்.
இறைவன் நாமம் ஸ்ரீ மௌலீஸ்வரர்
அம்பாள் நாமம் தெரியவில்லை ஒரு கல் மட்டும் உள்ளது
தினசரி பூஜை உண்டு. திரு மாரி நாயக்கர் என்பவர் பூஜை
செய்கிறார்.
கிராமத்தின் பெயர் முள்ளிகொளத்தூர்
எப்படி போவது திருக்கழுகுன்றத்திலிருந்து 5 கி.மி
சென்னை-செங்கல்பட்டு-கல்பாக்கம்
பேருந்து 108
இறைவன் நாமம் யோக நரசிம்மர்,விநாயகர்,சிவன்
அம்பாள் நாமம் இல்லை
தினசரி பூஜை இல்லை
கிராமத்தின் பெயர் மேற்காண்டை
எப்படி போவது கல்பாக்கத்திலிருந்து 5 கி.மி.
சென்னை-செங்கல்பட்டு-கல்பாக்கம்
பேருந்து 108C, 212V,212M(from chenglepet)
தொடர்புக்கு திரு ஜானகிராமன்-044-27495017
திரு சசிகுமார்-9994351768
இறைவன் நாமம் தெரியவில்லை
அம்பாள் நாமம் இல்லை
தினசரி பூஜை உண்டு.
.
கிராமத்தின் பெயர் குடிபேரம்பாக்கம்
எப்படி போவது திருக்கழுகுன்றத்திலிருந்து 9 கி.மி
தொடர்புக்கு திரு ரமேஷ் -9092697401
திரு வாசுதேவன் 9094627645
தற்போது திரு ரமேஷ் அவர்கள் முயற்சியால் கோயில் கட்டப்பட்டு முடியும்
தருவாயில் உள்ளது. இறைவன் கனவில் தோன்றி கோயில் கட்டச்சொல்லி ஆணை இட்டதாக
திரு ரமேஷ் கூறுகிறார்.
இறைவன் நாமம் தெரியவில்லை
அம்பாள் நாமம் இல்லை
தினசரி பூஜை பிரதோஷம் மட்டும் நடைபெறுகிறது
.
கிராமத்தின் பெயர் வசுவசமுத்திரம்
எப்படி போவது கல்பாக்கத்திலிருந்து 3 கி.மி.
சென்னை--கல்பாக்கம் -பாண்டி ECR
பேருந்து 188,188A,108,118,119
பேருந்து நிறுத்தம் -புதுபட்டிணம்
தொடர்புக்கு திரு நாகமுத்து 9443990298
இறைவன் நாமம் தெரியவில்லை 16 பட்டை லிங்கம்
அம்பாள் நாமம் இல்லை
தினசரி பூஜை இல்லை .பிரதோஷம் பள்ளி சிறுவர்கள்
. செய்கிறார்கள்.
கிராமத்தின் பெயர் கடம்பாடி
எப்படி போவது மாமல்லபுரத்திலிருந்து 8 கி.மி.
இறைவன் நாமம் ஸ்ரீ சொக்கநாதர்
அம்பாள் நாமம் இல்லை
தினசரி பூஜை இல்லை
.
கிராமத்தின் பெயர் ஆனூர் மதுர ஆலவாய்
எப்படி போவது
செங்கல்பட்டு-புதூர்
பேருந்து 129C,T12,T4,T6
தொடர்புக்கு திரு ஸ்ரீதரன் 9444327224
திரு ராஜசேகர் 9994176535
எச்சூர் கிராமம்
முர்புதர்களுக்கு இடையில் சிவலிங்கமும் நந்திகேஸ்வரர் திருவுருவும்
காணப்படுகின்றன. இறைவன் திருநாமம் தெரியவில்லை. அம்பாள் இல்லை.பூமியில்
தோண்டிப் பார்த்தால் மற்ற சிலைகள் கிடைக்கும் என்று ஊர்மக்கள்
சொல்கிறார்கள்.சமீபத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ விஜயேந்திர
சரஸ்வதி சுவாமிகள் இங்கு விஜயம் செய்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை
செய்தார்கள். தற்சமயம் ஊர்மக்களால் புதர்கள் அகற்றப்பட்டு
சீர்செய்யப்பட்டது.
சுவாமிகளின் ஆக்ஞைபடி சென்னையிலுள்ள திரு கணேசன் என்ற அன்பரால் வெகுவிரைவில் கோயில் கட்டப்பட உள்ளது.
தொடர்புக்கு திரு வேணுகோபால் 9444608918, திரு பாலக்ருஷ்ணன் 9380110120
திருக்கழுகுன்றத்திலிருந்து 6 கி.மி. தொலைவில் உள்ளது இக்கிராமம்.
வியாழன், 19 ஜூலை, 2012
ஹர ஹர சங்கர ஸ்ரீ குருப்யோ நம ஜய ஜய சங்கர
முன்னுரை
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசாரய சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரய சுவாமிகள் இருவரின் பெரும் முயற்சியாலும் அருளாசியுடனும் திருக்கோயில்கள் வழிபாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழு முதன்முதலில் காஞ்சி மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் 1000 க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள புராதானமான சிவன் கோவில், விழ்ணு கோயில், அம்மன் கோயில், கிராம தேவதை, பஜனை மடம் ஆகியவைகளை சேகரிக்க 4 நபர்களை கொண்ட குழுவினை நிறுவியுள்ளனர். இக்குழுவின் தலைவராக பம்மல் சங்கரா கண் மருத்துவமனை செயலாளர் திரு. சே. விஸ்வநாதனை தேர்தெடுத்துள்ளார்கள்.இவரின் கீழ் திரு. கோ. கண்ணன் அவர்கள் கிராமக் கோயில்களுக்குச் சென்று கோயில்களின் விவரங்களை அந்த கிராமத்தில் உள்ளவர்களிடம் விவரத்தை சேகரித்து எழுதுவார். பின்னர் அந்த ஊரில் உள்ள மக்களை கொண்டு 5 நபர் முதல் 10 நபர் கொண்ட ஒரு குழுவை உருவாக்குவார். திரு. முரளிதரன் அவர்கள் கோயிலில் ருத்ரம் மற்றும் அர்ச்சனைகளை செய்வார். திரு. பா. ஹரிஹரன் அவர்கள் அபிஷேகம், அலங்காரம், மற்றும் போட்டோ, வீடியோ எடுத்து கணினியில் சேகரிக்க உதவுவார்கள். இவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்களை காஞ்சிபுரம் வரவழைத்து காமாஷி அம்மனை தரிசனம் செய்து வைக்கப்படும்.பின் பின் கிராமமக்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டு மேள தாளத்துடன் வீதியில் பஜனை செய்தவாரே ஸ்ரீ மடம் அழைத்துச்சென்று இரு பெரியாவளின் முன்னிலையில் கணினி மூலம் (Power point) கிராமக் கோயில்களை பெரியவாளிடம் காண்பித்து அந்தந்த கிராம மக்களை பெரியவாளிடம் அறிமுகம் செய்துவைக்கபடுகிறது.பெரியவா கிராம மக்களுக்கு ஆசி வழங்கி பை, நோட்டுப்புத்தகம்,பெரியவா படம், ருத்ராஷம் , ஆலயவழிபாடு புத்தகம், பிரதோஷ வழிபாடு புத்தகம் , உண்டியல், புஷ்ப்ச்செடி, வில்வக்கன்று ஆகியவைகள் வழங்கப்படுகிறது. கிராம மக்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் பஜனை செய்வதற்கு வாத்தியங்கள் (ஸ்ருதிபெட்டி, ஜால்ரா,டோல்கி, ஆர்மோனியம்) ,பூஜை மணி வழங்கப்பட்டது. பின்னர் சந்திர மௌளீஸ்வரர் ,ஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவாளின் பிருந்தாவன பிரசாதம் வழங்கப்பட்டது.
அதன்பின் கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் கோயில்களுக்கும் ஸ்ரீ ஸ்ரீ பெரியவர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து ஆசி வழங்குவார்.இவ்வாறாக இக்குழு காஞ்சி மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் உள்ள 4 வட்டங்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறாக கண்டெடுக்கப்பட்டுள்ள 4 வட்டங்களில் உத்திரமேரூர் 96, அச்சிறுபாக்கம் 64, திருக்கழுக்குன்றம் 74, காஞ்சிபுரம் 99 புராதனமான கோயில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கோயில்கள் அனைத்தும் 300 வருடம் முதல் 5000 வருடங்கள் பழமையானவை. பல ஊர்களில் கோயில்கள் பராமரிக்கப்படாமலும் , இடிந்த நிலையிலும் , கோயில்கள் இருந்த சுவடே தெரியாமலும் உள்ளது.சுவாமி சிலைகள் குப்பைமேட்டிளும் , வயல்வெளியிலும்,முட்புதர்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமாக சிவபானங்களே காணப்படுகிறது. பலக்கோயில்களில் விமான கலசங்கள் களவாடப்பட்டுள்ளதை பார்க்கும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. இதற்கெல்லாம் நாம்தான் முக்கிய காரணம்.நம் பாரத தேசத்தை ஆண்ட அரசர்களால் காலத்தால் அழிக்க முடியாத கோயில்களை நாம் அழித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை நன்கு உணரமுடிகிறது.நாம் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்ததால் நம்முடைய புராதனமான கோயில்கள் அழிந்து கொண்டும், களவாடப்பட்டும் வருகிறது.இந்தநிலை மாறவேண்டும் என்ற மிக உயர்ந்த எண்ணத்தில் ஸ்ரீ ஸ்ரீ பெரியவர்கள் இருவரும் திருக்கோயில்கள் வழிப்பாட்டுக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இக்கோயில்களில் வழிபாடு நடத்த பிரதி ஞாயிற்றுக்கிழமை கிராமக்கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்த நான்கு குழுக்களை உருவாக்கியுள்ளோம் . முதல் ஞாயிற்றுக்கிழமை தியாகராயாநகர் ஸ்ரீ. ராஜகோபால் ( 93810 26967), இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ. சட்டநாதன் (94440 64374), மூன் றாவது ஞாயிற்றுக்கிழமை பழவந்தாங்கல் ஸ்ரீ .ஸ்ரீனிவாசன் ( 98840 14569) நான்காவது ஞாயிற்றுக்கிழமை சிட்ல பாக்கம் Dr. ரவிசர்மா (94440 22129) இவர்களின் தலைமையில் கிராமக் கோயில்களுக்கு சென்று சுத்தம் செய்து ருத்ரம் சொல்லப்பட்டு சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது.கிராமமக்கள் மற்றும் குழந்தைகளை வரவழைத்து இராமாயணம் ,மகாபாரத, இதிகாச கதைகள் ,பஜனை பாடல்கள், தேவாரம்,திருவாசகம் , ஸ்லோகம் ஆகியவைகளை கற்றுத்தருகிறோம் . அது போல தாய்மார்களுக்கு கோலப்போட்டி,திருவிளக்கு பூஜை கோயில்களை சுற்றி உள்ள சுவாமிக்கு விளக்கேற்றி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கோயில்களில் கிராம மக்களைக் கொண்டு எளிமையான முறையில் திரு விளக்கு பூஜை செய்ய ஏரபாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சஷ்டியப்த பூர்த்தி (60 வயதுக்கு மேற்பட்ட), பீமரதசாந்தி (70 வயதுக்கு மேற்பட்ட), சதாபிஷேகம் (80 வயதுக்கு மேற்பட்ட) தம்பதிகளுக்கு அவர்களின் வாரிசுகளால் பாத பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ மடத்தின் சார்பாக பெரியவாளின் ஆசியுடன் வழங் கப்பட்ட புடவை,வேஷ்டி,மஞ்சள், குங்குமம்,சந்தனம், வளையல்,சோப்பு, 3சீப்பு, கண்ணாடி, மருதாணி, பெரியவாபடம், ருத்ராஷ மாலை,புஷ்பமாலை,பிரசாதம் ஆகியவை வழங்கப்படுகிறது. பெரியவாளின் ஆணைப்படி மிகவும் சிதிலமடைந்துள்ள திருக்கோயில்களை புனருதாரணம் செய்ய கிராம மக்களை ஊக்குவிப்பதுடன் பாலாலயம் மற்றும் கும்பாபிஷேகம் ஸ்ரீ மடத்தின் மூலமாக நடத்தித்தரவும் ஏற்பாடு செய்துதரும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)