புதன், 22 ஜனவரி, 2014

கல்வியில் மேன்மை பெற

ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந: ஸ்ரீநிகேதந:
குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர:
இதைக் கூறினால் கல்வி வளரும்.
இன்பமாய் வாழ

அநந்தாநந்த ஸுகத: ஸுமங்கள ஸுமங்கள:
இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:
ஸுபகா ஸம்ஸ்ரிதபத: லலிதா லிதாஸ்ரய:
காமிநீ காமந: காம: மாலிநீ கேளிலாலித:

இதை காலையில் 10 முறை மனனம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.
எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஸ்ரீவல்லப மஹா கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா

வ்ராத கணபதி மந்திரம்

ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

சக்தி விநாயக மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

சர்வ வித்யா கணபதி மந்திரம்

தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா

சகல காரிய சித்திக்கான எளிய முறை:

செய்யும் காரியங்களில் தடைகள் விலக
மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.
கொளத்தூர் சிவாஆலயம்

இறைவன் திருநாமம்:ஸ்ரீ சோமநாதேஸ்வரர்

இறைவி திருநாமம்:ஸ்ரீ அமுதாம்பிகை

ஆலய அமைவிடம்:குளத்தூர் கிராமம்

எப்படி செல்வது ?

வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் மாம்பாக்கம் என்ற ஊரில் உள்ள சந்திப்பில் தென்திசையில் செல்லும் சாலையில் 1.5 கி.மி. சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். பேருந்து தடம் : தி.நகர் -கொளத்தூர் (M51V) தாம்பரம்-மாம்பாக்கம் (55K, 55T, 55V, 115, 555) மாம்பாக்கத்தில் இறங்கி 1.5 கி.மி. கால்நடையாக வரலாம்.

தல வரலாறு

ஸ்ரீ பிரும்ம தேவரின் மானச புத்திரனான தக்கன் அளித்த சாபத்தால் சந்திரன் எழில்குன்றி ஒரு கலையாக உருமாறினான். மனம் வருந்திய சந்திரன் தன பூரண அமுத கலையை அடைய வேண்டி அதனை அளிக்க வல்லவர் ஈசனே என உணர்ந்து இத்தலத்தில் சிவபெருமான் லிங்க திருமேனியை பிரதிஷ்டை செய்து அருகிலேயே சந்திர புஷ்கரணி என்ற குளம் அமைத்து அதில் நீராடி இறைவனை மனமுருகி பூஜித்து வந்தான். இதனால் சிவபெருமான் மகிழ்ந்து, இன்றுமுதல் உன் கலைகள் வளர்ந்தும் தேய்ந்தும் மாறி மாறி தோன்றும் அழியா நிலையினை பெறுவாய் என்ற வரம் தந்தருளி, ஒருகலைசந்திரனை தன சிரசில் சூடிக்கொண்டு பிறைசூடி என்ற திருநாமத்தையும் பெற்றார். சோமனுக்கு அருள் செய்ததால் சோமநாதேஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார்.

தேவ அசுரர்கள் அமுதம் வேண்டி மந்திர கிரியை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பினை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைய, வாசுகி கக்கிய விஷத்தின் வெம்மை தாங்காது தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானை தஞ்சம் அடைந்தனர். ஈசனும் கருணை கொண்டு ஆலகால விஷத்தினை உண்டு எல்லோரையும் காத்தருளினார். அம்பிகை ஈசன் கண்டத்தில் கை வைத்து விஷம் உள்ளே செல்லாமல் கண்டத்திலேயே நிறுத்தி விஷத்தையும் அமுதமாக்கி அமுதாம்பிகை என்ற திருநாமம் பெற்றாள்.

அறுபத்திமூவரில் ஒருவராக விளங்கிய திரு கலிய நாயனார் திருமரபில் வந்த திரு ராஜு செட்டியார் என்பவர் 1917ஆம் ஆண்டு முட்புதர்களுக்கு இடையில் சிதிலமடைந்த ஒரு கோயிலில் சிவலிங்கம் மற்றும் அம்பாள் திருவடிவமும் இருப்பதைக்கண்டு ,. இடத்தை சுத்தம் செய்து தினந்தோறும் பூஜை செய்து வரலானார். அருகில் உள்ள பழைய கிணற்றை தூர்வாறி ஆழப்படுத்த தொடங்கிய போது, நந்தி தேவர், விநாயகர், முருகன், வள்ளி, தேவசேனா, துர்கை, சண்டிகேஸ்வரர், மற்றும் சாஸ்தா திருஉருவ சிலைகள் கிடைத்தன.

திரு ராஜு செட்டியாரின் அருமை நண்பராக விளங்கிய ஸ்ரீ கி.வா. ஜகந்நாதன் அவர்கள் திருப்பணி குழு தலைவராக இருந்து 1957ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கிழக்கு பார்த்த சுவாமி சன்னதி. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. கோஷ்டத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, துர்கை சன்னதிகள். புதிதாக நவக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. க்ஷேத்ர பாலபைரவராகிய மகா சாஸ்தா மிக பழமையான பெரிய கோயில்களில் இருப்பது வழக்கம். மகா சாஸ்தா திருவடிவம் இங்கிருப்பது ஆலயத்தின் தொன்மைக்கு சான்றாக விளங்குகிறது. கிணற்றுக்கு அருகில் இருந்த கல்வெட்டின் மூலம் இக்கோயிலுக்கு அளிக்கப்பட தானங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.

திரு கி.வா. ஜகந்நாதன் அவர்கள் ஸ்ரீ அமுதாம்பிகை பேரில் பல பாடல்கள் பாடி உள்ளார். அவரது சீடரான திரு மயிலம் சிவசுப்பிரமணியன் அவர்கள் அமுதாம்பிகை பதிகம் என்ற நூலை படைத்துள்ளார்.

பரிகார தலம்

பிரதி வெள்ளி கிழமை நாகபிரதக்ஷிணம் நடைபெறுகிறது. திருமண தடை உள்ளவர்கள் நாகபிரதக்ஷிணம் செய்து இத்தலத்தில் வழிபட்டால் திருமணம் கூடி வருகிறது. பௌர்ணமி பூஜை, சோமவார பூஜை இங்கு விசேஷமாக நடைபெறுகிறது. பூர்வ ஜன்ம தீவினையால் ஏற்படும் கொடிய நோய்கள் தீர பிரதி திங்கள்கிழமை வந்து ஸ்ரீ சோமநாதேஸ்வரரையும் ஸ்ரீ அமுதாம்பிகை அம்மையையும் அர்ச்சித்து வழிபாட்டு வந்தால், நல்ல பலன் ஏற்படும்.

இக்கோயில் திருப்பணி தொடங்கப்பட்டு ஸ்ரீ காஞ்சி மடத்து ஆஸ்தான புலவர் மகாவித்வான் வே. சிவசுப்பிரமணியன் அவர்களை தலைவராக கொண்டு ஸ்ரீ சோமநாதேஸ்வரர் திருப்பணிக்கமிட்டி ஒன்றை நிறுவி நடைபெற்று வருகிறது. இந்த அரிய ஆன்மீக தொண்டில் பங்குகொள்ள விரும்பும் அன்பர்கள் பணமாகவோ, காசோலையாகவோ கீழ்கண்ட விலாசத்துக்கு அனுப்பலாம்.

திரு ஜெயவேல், பொருளாளர், ஸ்ரீ சோமநாதேஸ்வரர் திருப்பணிக்கமிட்டி, 6/20,
சிவராமன் தெரு, மந்தைவெளி, சென்னை - 600 028. தொலைபேசி 9841081482,
044 249306910 (Cheque in favour of ARULMIGU AMUDHAMBIGAI WITH SRI SOMANATHESWARAR TEMPLE) OR REMIT THROUGH ONLINE WITH DHANALAKSHMI BANK LTD. A/C NO. 0068001000047299.
(6 photos)
SRI PARVATHAVARDHINI SAMETHA SRI RAMALINGESWARAR TEMPLE

இந்த ஆலயம், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள மாரங்கியூர் எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஏராளமான கல்வெட்டுகள் மூலம் இவ்வாலயம் 10ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது என்ற விவரம் தெரிய வருகிறது. புராண காலம் தொட்டே இத்தலம் சிறப்பாக விளங்கி வந்துள்ளது.

புராண வரலாறு:ஸ்ரீ ராமபிரான் வனவாசத்தில் ஸ்ரீ சீதா தேவியை இழந்து எங்கும் அலைந்து தேடி வரும் வேளையில் இவ்விடம் வந்து பெண்ணை ஆற்றின் கரையில் ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத சுவாமியை ச்மரித்து ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அதோடு அமாவாசை அன்று பித்ரு தர்பணமும் செய்து வந்தார். இதை அறிந்து பின்நாளில் இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் , வருட திதி கொடுப்பது விசேஷமாக கருதப்பட்டது. ராமேஸ்வரம் சென்று செய்யும் பலன்கள் இததலத்திலேயே கிட்டுகிறது என்பது திண்ணம். எனவே மாரங்கியூர் வந்து அமாவசை அன்றோ அல்லது வருட திதி அன்றோ மூதாதயருக்கான திவச தர்பணங்கள் செய்தால் பித்ருக்களின் ஆசி கிட்டுவது உண்மை. இவாலயத்தில் அம்பாள் ஸ்ரீ பர்வதவர்த்தினி, காமகோட்ட நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறாள். இவ்வம்பிகையை வழிபட்டால் காஞ்சி காமாக்ஷி தேவியை வழிபட்ட பலன் வந்து சேருகிறது.

சங்க காலத்து தேவி:சங்க காலத்தில் ஸ்ரீ கொற்றவை தேவி வழிபாடு இருந்ததை சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. எட்டு கரங்களில் ஆயுதம் ஏந்தி சிம்ம மற்றும் மான் வாகனத்துடன் காட்சி அளிக்கும் தேவியை போரில் வெற்றி அருளும் தேவியாக வழிபட்டுள்ளனர். இந்த தேவியின் வடிவம் இங்கிருப்பது இத்தலத்தின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஆலயத்தின் தொன்மை:ஆதியில் பல்லவ அரசர்களால் கட்டப்பட்டு, பிறகு ராஜராஜ சோழன் முதல் பிற்கால சோழ அரசர்கள்,பாண்டியர்கள் மற்றும் சிற்றரசர்கள் வரை திருப்பணிகள் செய்யப்பட்டு தற்போது முழுதும் சிதிலமாகி காண்போர் மனதை வருத்த வைக்கிறது. இக்கோயிலில் இருந்த விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், பிக்ஷாடனார், சப்தகன்னி மாதாக்கள் மற்றும் பைரவர் திருஉருவ சிலைகள் இவ்வூர் மக்களால் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஜேஷ்டா தேவி(மூத்த தேவி) வழிபாடு:பல்லவர் காலத்தில் வழிபடபட்ட ஸ்ரீ ஜேஷ்டா தேவி திருவடிவம் இங்கு இருப்பது சிறப்பான அம்சம். இத்தேவியை வழிபடுவதினால் எல்லாவித செல்வங்களும் வந்து சேரும். முக்கியமாக செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் இத்தேவியை வழிபடுவது சிறப்பாகும். தாமரை மலரில் வீற்றிருக்கும் இத்தேவியை இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாதது ஓன்று.

கல்வெட்டுக்கள் ஏராளம்:இக்கோயிலில் உள்ள 27 கல்வெட்டுக்கள் தொல்பொருள் துறையினரால் 1936 ஆம் ஆண்டு படி எடுக்கப்பட்டு விவரங்கள் அறியப்பட்டன. அக்காலத்தில் ராஜேந்திரசிங்க நல்லூர் என்று இவ்வூர் அழைக்கப்பட்டதாகவும், கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றியும், கோயில் திருவிழா போன்றவைகளுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றியும் அறிய முடிகிறது. மேலும் இதுதவிர ஸ்ரீ ரா மலிங்கேஸ்வரர் என்ற மூலவருக்கு திருவிராமீச்வரர் என்ற திருநாமமும் இருந்ததை அறிய முடிகிறது.

ஆலய திருப்பணி:இத்தகைய சிறப்பு வாய்ந்த பழமையான ஆலயம் முழுவதும் சிதிலமடைந்த நிலையில் மாரங்கியூர் மக்கள் ஓன்று சேர்ந்து தங்களால் முடிந்த அளவு உதவி செய்து திருப்பணி தொடக்கி உள்ளனர். இதற்காக அறக்கட்டளை ஒன்றை ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் அறக்கட்டளை என்ற பெயரில் நிறுவி உள்ளனர். இந்த தெய்வீக கைங்கர்யத்தில் பங்கு கொள்ளும் அடியவர்கள் பணமாகவோ காசோலையாகவோ கீழ் கண்ட இந்தியன் வங்கி கணக்கில் செலுத்தி விடலாம்.மேலும் விவரங்களுக்கு 9751966768-9159428289, 9843356682-9443538498 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். அவனருளாலே அவன்தாள் வணங்கி இந்த தெய்வீக பணி இடையூறு இன்றி விரைவில் நிறைவேற பணிவோமாக.

இந்தியன் வங்கி கணக்கு எண் 6184761697-ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் அறக்கட்டளை
(1737) T புதுப்பாளையம்
IFSC CODE IDIB000T134
(7 photos)
கோயில் கருவறையில் மின்சார விளக்கு ஏன் போடுவதில்லை?

விளக்கில் எண்ணெய் ஊற்றி திரியோடு தீபம் ஏற்றுவது என்பது எவ்வளவோ தத்துவங்களை உள்ளடக்கியது. திரி எரிந்து தீபம் பிரகாசிக்கிறது. நம்மிடத்தில் உள்ள தீய குணங்களும், பாவங்களும் விலகி நல்லறிவும், புண்ணியமும் வெளிப்படவேண்டும் என்பது தான் தீபத்தத்துவமாகும். தீபஸ்ஸத் விஷயா: என ஆகமம் கூறுகிறது. மின்சார விளக்கு ஒளியில் பார்ப்பதை விட தீபஒளியில் சுவாமியைத் தரிசிப்பதே ஆனந்தம். சாஸ்திரம் தோன்றிய காலத்தில் மின்சாரம் கிடையாது. எனவே, அதைப் பற்றி சாஸ்திரங்களில் இல்லை.
காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சக்கரத்தாள்வார் சன்னதியின் எதிரே உள்ள அனந்தசரஸ் குளத்தில், நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் துவங்கியது. மூன்று நாட்களாக நடை பெற்று வரும் உற்சவத்தில், முதல் நாளான நேற்று முன்தினம் வரதராஜபெருமாள், பெருந்தேவி தாயாருடன் அனந்தசரஸ் குளத்தில் உள்ள தெப்பலில் இரவு 7:00 மணிக்கு, எழுந்தருளினார். மேலும், இண்டாம் நாளான நேற்று தெப்பலில் எழுந்தருளிய சுவாமி, குளத்தை 5 முறை வலம் வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், மூன்றாம் நாளான இன்றும் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் ஏற்பாடு செய்திருந்தார். இதேபோல், திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ரிஷப தீர்த்தக் குளத்தில் தைபூசத்தன்று தெப்பல் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக கோவில் திருப்பணி நடைபெற்றதினால் தெப்பல் திருவிழா நடைபெறவில்லை. கடந்த செப்டம்பரில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தைபூசத்தில் தெப்ப உற்சவம் நடத்த இந்து அறநிலையத்துறையினர் முடிவுசெய்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் ரிஷப தீர்த்த குளத்தில் தெப்பத்தி்ல் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தெப்பத்தில் திருமுறை இசை, நாதாஸ்வர இசை முழங்க குளத்தில் மூன்றுமுறை தெப்பத்தில் உலா வந்தார். நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
விரத நாட்களில் அரிசி உணவு ஏன் சாப்பிடக் கூடாது?

விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள். நாள் முழுக்க தெய்வசிந்தனை மாறாமல் பசியோடு இருப்பது விரதம். பசி என்ற நினைப்பு வரும்போதெல்லாம் தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோம் என்ற நினைவும் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் விரதத்திற்கு உபவாசம் (கடவுளின் அருகில் வசித்தல்) என்ற பெயரும் உண்டு. அரிசி உணவை உண்டால் தூக்கம் வந்துவிடும். பால், பழம் போன்ற மென்மையான உணவுகளை உண்டு தெய்வ சிந்தனையுடன் நாளை கழிப்பதே முழுமையான விரதம்.
அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:கொற்றவாளீஸ்வரர்
அம்மன்/தாயார்:நெல்லையம்மன்
பழமை:500 வருடங்களுக்குள்
ஊர்:கோவிலூர்
மாவட்டம்:சிவகங்கை
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி

தல சிறப்பு:மகாமண்டபத்தில் ஆடல்வல்லான் சிலை அமைந்திருப்பது சிறப்பு.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில் கோவிலூர், சிவகங்கை.போன்:+91 94892 78792, 94424 39473, 90435 67074.

பொது தகவல்:இக்கோயிலில், வீணை சரஸ்வதி, சர்வ அலங்கார சாரதாம்பிகை, ஊர்த்துவ தாண்டவ நடராஜர், மீனாட்சி திருக்கல்யõணம், ரிஷபவாகனத்தில் சிவபார்வதி, மயில் மீது சண்முகர், வீரசேகர பாண்டியன் ஆகிய சிற்பங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:வேலைக்கோ, படிக்கவோ செல்லும் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:காவல் அம்பிகை: சிவபக்தரான சிவகுப்தன், சுதன்மை தம்பதியரின் வயல் அறுவடைக்குத் தயாரானது. சுதன்மை, தன் மகள் அரதனவல்லிøயக் காவலுக்கு அனுப்பினாள். விளையாட்டுப் பெண்ணான அரதனவல்லி வயலுக்குப் போகமால் அருகிலிருந்த மலர்ச்சோலைக்கு சென்று விட்டாள். மகளுக்கு சுதன்மை தயிர்ச்சோறு கொண்டு சென்றாள். அங்கே, அவளது மகள் வடிவில், இக்கோயிலின் அம்பாள் காவல் செய்து கொண்டிருந்தாள். அன்புடன் சுதன்மை கொடுத்த சோறை சாப்பிட்டாள். சுதன்மை வீட்டுக்கு வரவும், அரதனவல்லியும் உள்ளே வந்து, அம்மா! பசிக்கிறது, சோறு போடு என்றாள். அதன் பின் அவளை விசாரிக்க, அம்பாளே மகள் வடிவில் வந்தது புரிந்தது. நெல் வயலில் காட்சி தந்தவள் என்பதால், இந்த அம்பிகைக்கு நெல்லையம்மன் என்று பெயர் வந்தது. இவளை வழிபட்டால் நம்மைச் சேர்ந்த பொன், பொருள்,பெண்குழந்தைகள் என அனைத்திற்கும் காவலாக துணை நிற்பாள்.

சிறப்பம்சம்: கோயில் முன்புறம் சதுரவடிவில் உள்ள தெப்பம் அனைவரையும் கவரும். நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் உள்ளது. தெப்பக்குளத்தை வெளிப்புறமாகச் சுற்றிவந்தால் ஒரு கி.மீ., தூரம் இருக்கிறது. கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவர் முத்துராமலிங்கதேசிகர். இவரே கோயிலைப் புதுப்பித்து திருப்பணிகளைச் செய்தவர். இவருக்குப் பின் வந்த சிதம்பரதேசிகரின் காலத்தில், ÷காவிலூர் புராணத்தை மீனாட்சி சுந்தரனார் எழுதினார்.

தல வரலாறு:திருக்கானப்பேர் என்னும் காளையார்கோவில் பகுதியை வீரபாண்டியன் ஆண்டு வந்தான். இக்கோயிலில் உள்ள காளீசர் அருளால் வாள் ஒன்றை, அந்த மன்னன் பெற்றிருந்தான். அதற்கு கொற்றவாள் என்று பெயர். கொற்றவாளுடன் போர்புரிந்து பகை மன்னர்களை வென்றான். ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது சிவன் மன்னனோடு விளையாடல் புரியத் தொடங்கினார். காட்டில் மாயமான் ஒன்று எதிர்ப்பட்டது. துரத்திச் சென்ற பாண்டியனின் கையிலிருந்த வாளைச் சிவன் காணாமல் போகச் செய்தார். வாளைத் தேடி மன்னன் அலைந்த போது, அங்கு ஒரு அந்தணனையும், புலியையும் சிவன் அவன் முன்னால் வரச்செய்தார். புலிக்குப் பயந்த அந்தணர், அபயம் அபயம் என்று அலறினார். அவர் மீது இரக்கம் கொண்ட மன்னன், புலியுடன் சண்டையிட்டு தன்னுயிரைக் கொடுக்கவும் முன்வந்தான். அப்÷பாது புலியும், அந்தணனும் அந்த இடத்திலிருந்து மறைந்தனர். அங்கிருந்த வன்னிமரத்தடியில் சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கம் தென்பட்டது. மன்னனின் கொற்றவாள் அதன் முன் இருந்தது. இது சிவனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்து கொண்ட மன்னன், மனம் மகிழ்ந்து அந்த லிங்கத்தையே மூலவராக்கி, ஒரு கோயில் எழுப்பினான். கொற்றவாளை வழங்கிய சிவன் என்பதால், ராஜகட்க பரமேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. கொற்றவாளீஸ்வரர் என்றும் குறிப்பிடுவர். மதுப்பிரியன் என்ற முனிவரின் தவத்திற்கு அருள்புரிந்த இந்த சிவனுக்கு திரிபுவனஸ்வரர் என்றும் பெயருண்டு.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: மகாமண்டபத்தில் ஆடல்வல்லான் சிலை அமைந்திருப்பது சிறப்பு.
(9 photos)
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்

மூலவர்:காசி விஸ்வநாதர்
அம்மன்/தாயார்:விசாலாட்சி
தல விருட்சம்:வேப்பமரம்
தீர்த்தம்:மகாமக குளம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்: கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடத்தப்படும். ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் நடக்கிறது.

தல சிறப்பு:வேப்ப மரத்தின் கீழ் இங்கு சிவலிங்கம் உள்ளது சிறப்பாகும்.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்.

பொது தகவல்:சண்டிகேஸ்வரரின் எதிரே துர்க்கை இருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம். இவர்களைத் தவிர சப்த மாதர்கள் பைரவர், சூரியன் சந்திரன் , ஜேஷ்டாதேவி லிங்கோத்பவர் ஆஞ்சநேயர், மகிஷாசுரமர்த்தினி தெட்சிணாமூர்த்தி ஆகியோரும் காட்சிளிக்கின்றனர்.

பிரார்த்தனை:பெண்கள் ருதுவாகவும், திருமணத் தடை நீங்கவும், பாவங்கள் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:சில பெண்கள்வயது அதிகமாக இருந்தும் ருதுவாகாத நிலைமை ஏற்படும் சிலருக்கு எவ்வளவோ வைத்தியம் செய்தும் புத்திர பாக்கியம் இருக்காது. சில பெண்களுக்கு காரணமே இல்லாமல் திருமணம் தள்ளிப்போகும் . இப்படி பெண்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே மகாமக குளத்தின் கரையில் ஸ்பெஷல் கோயில் ஒன்று இருக்கிறது. விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தந்து நவகன்னியரை வழிபட்டால் இந்த பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

நவகன்னியரை 12 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்து பூஜித்து வந்தால் வயது அதிகமாகியும் ருதுவாகாத பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும். சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகும் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.

இத்தலத்தில் உள்ள க்ஷத்திரலிங்கம் அதிக உயரம் உள்ளதாகும் .ஒரு வேப்ப மரத்தின் கீழ் இது அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக வேப்பமரத்தின்கீழ் அம்பிகை அல்லது விநாயகர் சிலைகளே அமைக்கப்படும். இங்கு சிவலிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நவகன்னியர்களின் பாவம் போக்க காசியிலிருந்து இறைவன் இங்கு வந்து குடிகொண்டதால் காசி விஸ்வநாதர் என பெயர் பெற்றார் அம்பாள் விசாலாட்சியும் இறைவனுடன் இங்கு தங்கியுள்ளார்.

தல வரலாறு:அயோத்தி மன்னன் ராமன் தன் மனைவி சீதையை பிரிந்து தவித்தார். ராவணனை கொல்வதற்காக இலங்கை செல்லும் வழியில் தனது இயல்பான குணம் மாறி ருத்ராம்சம் பெற இத்தலத்திற்கு வந்து அகத்திய மாமுனிவரை வேண்டினார். குடந்தையில் சில நாட்கள் தங்கியிருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என அகத்தியர் மொழிந்தார் ராமனும் இங்கு தங்கி ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றார் எனவே இத்தலம் காரோணம் என்றும் அழைக்கப்படுகிறது.

நவ கன்னியர்களான கங்கா, யமுனா, நர்மதா சரஸ்வதி காவேரி கொதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா சரயு ஆகியோர் தங்களிடம் மக்கள் தொலைத்த பாவங்களை போக்கிக் கொள்ளும் வழி தெரியாமல் கயிலை சென்று சிவபெருமானை வணங்கினர் மகாமக தினத்தன்று கும்பகோணம் சென்று புனிதநீராடினால் உங்கள் பாவம் நீங்கும் என சிவன் கூறினார். அவ்வாறே ஒன்பது கன்னிகளும் மகா மக குளத்தில் புனித நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்து அங்கேயே அமர வேண்டும் என வேண்டினர். இறைவனும் அதற்கும் அனுமதித்தார். இப்போதும் ஒன்பது கன்னிகளின் பிரம்மாண்டமான சிலைகள் இத்தலத்தில் உள்ளன.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: வேப்ப மரத்தின் கீழ் இங்கு சிவலிங்கம் உள்ளது சிறப்பாகும்.
 
அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:அபிமுகேஸ்வரர்
அம்மன்/தாயார்:அமிர்தவள்ளி
தல விருட்சம்:நெல்லிமரம்
தீர்த்தம்:மகாமக குளம்
பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்:கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் விழா நடக்கும். தினமும் சுவாமியும் அம்பாளும் எழுந்தருள்வர்.

தல சிறப்பு:இந்த கோயிலில்தான் மிக உயரமான பைரவர் சிலைஉள்ளது. நவக்கிரக சன்னதியில் இதுமிகவும் வித்தியாசமானது. எட்டு கிரகங்கள் ஒரே உயரத்தில் இருக்க சனி கிரகம் மட்டும் உயரம் கூடுதாக இருக்கிறது.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்.போன்:+91 435-2420187

பொது தகவல்:இது ஒரு நோய் தீர்க்கும் தலம் ஏனெனில் இங்கு நெல்லி மரமே தல விருட்சம் நெல்லிக்காய்க்கு பல நோய்களை நீக்கும் சக்தி உண்டு. இக்கோயிலில் நெல்லிக்காய் படைத்து தானம் செய்தாலே நோயற்ற வாழ்வு வாழலாம்.

பிரார்த்தனை:சனி தோஷம் மற்றம் பிற தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:சனி கிழமைகளில் இங்கு நெய் தீபம் ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:கும்பகோணம் மகாமகத்தின் போது குளக்கரையில் காட்சி தரும் 12 தெய்வங்களுள் ஒருவர் அபிமுகேஸ்வரர். இவர் தேங்காயாக இருந்தது லிங்கமாக மாறியவர்.

சிறப்பம்சம்: இந்த கோயிலில் பைரவர் சிலை முக்கியமானது மகா மக கோயில்கள் பனிரெண்டிலும் உள்ள பைரவர்களைவிட இவர் உயரமானவர்கள். யோக தெட்சிணாமூர்த்தி ஒரு கால் மடித்த நிலையில் அமர்ந்துள்ளார்.. சனி தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் வழிபடுவதன் மூலம் பிற தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை சனிக்கிழமைகளில் இவருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றுவதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். அம்பாள் அமிர்தவள்ளி நினைத்த காரியத்தை நடத்தித் தரக் கூடியவள். அபிமுகேஸ்வரர் சன்னதியின் முன்பு உள்ள துவாரபாலகர்கள் நடராஜரைப் போல நடனமிடும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.

தல வரலாறு:முன்னோரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார் , சிவபெருமான் அவரிடம் நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத் தோடு சேர்ந்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய் அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயைவை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில்நூல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய், அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன், என்றார்.

இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது கும்பம் மிதந்தது. கும்பத்திலிருந்த அந்த தேங்காய் சிதறி விழுந்தது. அந்த தேங்காய் லிங்கமாக மாறியது. இவரே அபிமுகேஸ்வரர் ஆவார். அபிமுகம் என்றால் நேர்கொண்ட பார்வை என பொருள். கும்பகோணம் மகாமக குளத்தைப் பார்க்கும் வகையில் இவரது கோயில் குளக்கரையிலேயே அமைந்துள்ளது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இந்த கோயிலில்தான் மிக உயரமான பைரவர் சிலைஉள்ளது. நவக்கிரக சன்னதியில் இதுமிகவும் வித்தியாசமானது. எட்டு கிரகங்கள் ஒரே உயரத்தில் இருக்க சனி கிரகம் மட்டும் உயரம் கூடுதாக இருக்கிறது.