செவ்வாய், 8 அக்டோபர், 2024

படலம் 17: ஆடிமாத பூர நட்சத்ர பூஜா முறை...

படலம் 17: ஆடிமாத பூர நட்சத்ர பூஜா முறை...

பதினேழாவது படலத்தில் ஆடிமாத பூரநட்சத்ர விளக்கப்படுகிறது. முதலில் ஆடிமாத பூர நட்சத்ரம் கூடிய தினத்திலோ ஐப்பசிமாத பூரநட்சத்திரத்திலோ இங்கு பூஜை செய்க என விளக்கமாக காலம் கூறப்படுகிறது. பிறகு தேவிக்கும், அல்லது ஸ்வாமி, அம்பாளுக்குமோ ரக்ஷõபந்தனம் செய்க. காலையில் கன்னிகைகளுக்கு ஸ்வர்ணங்கள் வஸ்திரம் உணவு இவைகளை கொடுத்து தேவிக்கு பால் நிவேதனம் செய்யவும், எல்லா அலங்கார ஸஹிதமாக தேவியை கிராம பிரதட்சிணம் செய்து ஆஸ்தான மண்டபம் சேர்க்கவும், கிராம பிரதட்சிண சமயத்தில் உப்புடன் கூடிய முளைப்பயறு நிவேதனம் செய்ய வேண்டும். ஆஸ்தான மண்டபத்தில் வலம் வருதல் விதிக்கப்படுகிறது. பிறகு சூர்ணோத்ஸவம் இன்றி அரிசி முதலிய தானம் மட்டுமே செய்க என சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு அஸ்த்ரதேவனுடன் கூடி தேவியை நதி முதலான தீர்த்தங்களுக்கு அழைத்து சென்று தீர்த்தவாரி உத்ஸவபடி செய்ய வேண்டும். தீர்த்த விழாவிற்கு பிறகு தேவியை ஆலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தீர்த்தோத்ஸவம் இன்றி கிராம பிரதட்சிணம் மட்டும் செய்க என வேறுவிதமாக கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமிக்கும், தேவிக்கும் கிராம பிரதட்சிண பூர்வமாக தீர்த்தோத்ஸவம் செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது. தீர்த்தோத்ஸவத்திற்கு பிறகு ஆலயம் அமைத்து அங்கு ஸ்நபனம் செய்து வாசனையுடன் கூடிய தாம்பூலத்துடன் மஹாஹவிஸ் நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஆசார்ய பூஜை செய்க என சுருக்கமாக விளக்கப்படுகின்றது. முடிவில் தேவியின் திருப்தி காரணத்திற்காக இந்த பூர நட்சத்திர பூஜா விதானம் எல்லா தீங்கு நிவிருத்திக்காகவும் எல்லா பாப அழிவிற்காகவும் எல்லா கார்ய சித்திக்காகவும், எல்லா விருப்ப பூர்த்திக்காகவும் செய்ய வேண்டும் என பலஸ்ருதி காணப்படுகிறது. இவ்வாறாக 17வது படல கருத்து தொகுப்பாகும்.

1. ஆஷாடம் என்கிற ஆடிமாதத்தில் பூர நட்சத்திரத்திலோ, ஐப்பசி மாத பூர நட்சத்திரத்திலோ இந்த பூரநட்சத்திர பூஜையை செய்யவும்.

2. தேவிக்கு முன்பு கூறிய முறைப்படி இரவில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். தேவனுக்கும் தேவிக்குமாவது ரக்ஷõபந்தனம் செய்து கன்னிகைகளுக்கு தங்கம் முதலியவைகளையும்

3. வஸ்திரம், உணவு முதலியவைகளை கொடுத்து தேவிக்கு பாலை நிவேதனம் செய்ய வேண்டும். எல்லா அலங்காரத்துடன் கூடியதாக தேவியை கிராம வீதி வலம் செய்ய வேண்டும்.

4. அந்த ஸமயத்தில் முளையிட்ட பாசிபயிரை உரிய இலக்கணமுடையதாக அர்ப்பணிக்க வேண்டும். கிராம பிரதட்சிணத்திற்கு முன்பு நைவேத்யம் கொடுத்தோ கொடுக்காமலோ பூஜிக்க வேண்டும்.

5. ஆஸ்தான மண்டபத்தையடைந்து தட்டி சுற்றுதலை செய்க. சூர்ணோத்ஸவ முறைப்படி மஞ்சட் பொடியையும், நல்லெண்ணையையும்

6. தேவனுக்கும், தேவிக்கும் கொடுத்து பிறகு ஜனங்களுக்கும் கொடுக்க வேண்டும். தாம்பூலம், பலவித காய்கறிகள் அரிசி முதலியவைகளுடன் மஞ்சட் பொடியையும் கொடுக்க வேண்டும்.

7. சூர்ணோத்ஸவமின்றியும் அரிசி முதலியவைகளை அளிப்பதுமின்றியுமாக சக்த்யஸ்திரத்துடன் தேவியை நதி முதலான தீர்த்தங் களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

8. நெல் முதலானவைகளால் இரண்டு ஸ்தண்டிலம் அமைத்து அதில் முன்னதாக சூலாஸ்திரத்தையும் தேவியையும் ஸ்தாபித்து அதற்கு முன்பாகத்தில்

9. ஸ்நபன முறைப்படி அந்த குடங்களை முறைப்படி ஸ்தாபித்து ஹ்ருதய மந்திரத்தினால் ஸத்துமாவு, பழங்களுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

10. பிறகு அந்த கும்ப தீர்த்தங்களால் அந்த சக்தியஸ்திரத்தை அபிஷேகம் செய்வித்து தீர்த்த மத்தியில் ஜனங்களுடன் கூடி சூலத்துடன் ஸ்நானம் செய்து ஆலயத்தை அடைய வேண்டும்.

11. தீர்த்தவாரி கார்யமின்றி, கிராமவீதி வலம் வரையில் அந்த தினத்தில் அணையா விளக்கு, வாடாதமலை இவைகளுடன் கூடியதாகவும் செய்யலாம்.

12. பலியை கொடுப்பதுடன் கூடியதாக ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். அல்லது இரவிலோ பகலிலோ பலி ஹோமமிவைகளுடன் சேர்ந்ததாகவும்

13. எல்லா அலங்காரத்துடன் பிம்பத்தை வீதிவலம் வரச் செய்து எல்லா ஜனங்களுடன் கூடியதாக செய்ய வேண்டும். பலவகையான இனிமையான பழங்களையும்

14. வெல்லக்கட்டியுடன் கூடிய ஸத்துமாவையும் கொடுக்க வேண்டும். பலவித அப்பங்களுடனும் பலவகையான பழங்களையும்,

15. வெல்லம், பழம் ஸத்து மாவையும் தீர்த்தக் கரையில் ஈசனுக்கு நிவேதித்து, தேவதேவிக்கு முன்பாக புதியதீர்த்தத்தில் தீர்த்தவாரி செய்து

16. அல்லது திரிசூலத்துடன் கூடியாவது தீர்த்தவாரி செய்து பின் ஆலயத்தையடைந்து, பூஜையுடன் கூடியதாக ஸ்நபனம் செய்ய வேண்டும்.

17. பிரபூதஹவிஸ் என்ற பாவாடை நிவேதனம் செய்து, முக வாசனையோடு தாம்பூலத்தையும் நிவேதித்து ஆசார்யனை பூஜிக்க வேண்டும்

18. வஸ்திரம், ஸ்வர்ணம், மோதிரமிவைகளோடு தட்சிணையையும் குருவிற்கு கொடுக்க வேண்டும். எல்லா பாபங்களின் அழிவிற்கும், எல்லா கெட்ட கிரியைகளின் நிவ்ருத்திக்கும்

19. எல்லா விருப்ப பயனை அடைவதற்கும் எல்லா செயலும் சித்திப்பதற்காகவும் தேவிக்கு மகிழ்ச்சியையளிக்கக்கூடிய இந்த ஆடிப்பூர பூஜையை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகமஹா தந்திரத்தில் ஆடிமாத பழ பூஜா முறையாகிற பதினேழாவது படலமாகும்.

படலம் 16 : ஆனி மாத பழ பூஜை...

படலம் 16 : ஆனி மாத பழ பூஜை...

பதினாறாவது படலத்தில் ஆனிமாதத்தில் செய்யவேண்டிய பழ பூஜாவிதி நிரூபிக்கப்படுகிறது. ஆனிமாத மூல நட்சத்ரம் கூடிய தினத்தில் பழபூஜைசெய்ய வேண்டும் என காலநிரூபணம் ஆகும். பஞ்சாம்ருத ஸஹிதம் விசேஷ ஸ்நபனம் செய்து பாயசநைவேத்யத்துடன் விசேஷ பூஜை செய்து சமித், நெய், அன்னம். இவைகளால் விசேஷ ஹோமம் செய்து பலவித பழத்துடன் கூடிய திரவியங்களால் பூர்ணாஹூதி செய்ய வேண்டும். பிறகு பீடத்திலிருந்து லிங்க சிரஸ்வரை பழங்களால் நிரப்பவேண்டும். அதற்கு முன்பாக இரண்டு வஸ்த்ரத்தால் லிங்கத்தையும் பீடத்தையும் மூடவேண்டும், அடுத்த பூஜா காலத்திலும் அல்லது மறுதினத்திலோ பழங்களை வெளியில் கொண்டு வரவேண்டும் பழபூஜை முடிவில் தேசிகனுக்கு வஸ்த்ரஸ்வர்ணங்களால் பூஜை செய்க என பழ பூஜாவிதியில் செய்யவேண்டிய கார்யங்கள் விளக்கப்படுகிறது முடிவில் பழபூஜா விதானத்தில் கர்த்தாவின் மனோபீஷ்டம் சீக்ரம் ஏற்படும் என பலன் கூறப்படுகிறது. இவ்வாறாக 16வது படலகருத்து தொகுப்பாகும்.

1. ஜ்யேஷ்ட மாதமென்கிற ஆனிமாதத்தில் மூல நட்சத்திரத்தில் இனிமையான பழங்களால் பூஜை செய்ய வேண்டும். ஸ்நபநம் பஞ்சாம்ருதத்துடனும்

2. பாயஸ நிவேதனத்துடன் விசேஷ பூஜையுடனும், சமித்து, நெய், அன்னம் இவைகளுடன் கூடிய விசேஷ ஹோமத்துடனும்

3. பலவிதமான பழங்களுடன் கூடிய பொருட்களால் ஹோமம் செய்து பூர்ணாஹூதி செய்து லிங்கத்தின் தலைபாகம் வரை பழங்களால் நிரப்ப வேண்டும்.

4. பழங்களால் லிங்கம் முழுவதும் மூடியதாகவோ, அல்லது லிங்கம் (பாணம்) தவிர மற்ற இடங்களில் பழங்களை நிரப்பி, கவச மந்திரத்தினால் வஸ்திரத்தினால் லிங்கம் பீடம் இவற்றை போர்த்த வேண்டும்.

5. அடுத்த ஸந்தியா பூஜா வேளையிலோ அடுத்த தினத்திலோ அந்த பழங்களை எடுத்து வெளிக் கொணரவும். பூஜை முடிவில் யஜமானன் ஆச்சார்யனை வஸ்திர தட்சிணைகளால் பூஜிக்க வேண்டும்.

5.5. யஜமானனுக்கு எந்த பயன் விருப்பத்தையளிக்க வல்லதாக உள்ளதோ அந்த பயனை சீக்ரம் அடைவான்.

இவ்வாறு உத்தரகாமிகமஹா தந்திரத்தில் ஆனிமாத பழ பூஜா முறையாகிற பதினாறாவது படலமாகும்.

படலம் 15 : வைகாசி மாத சீத கும்ப விதி...

படலம் 15 : வைகாசி மாத சீத கும்ப விதி!

பதினைந்தாவது படலத்தில் வைகாசி மாசத்தில் செய்யவேண்டிய சீத கும்பவிதியை கூறுகிறார். வைகாசி மாசத்தில் விசாக நட்சத்தரம் கூடிய தினத்தில் சீத கும்ப விதி செய்யவேண்டும் என்று காலம் நிரூபிக்கப்படுகிறது. பின்பு கிராமங்கள் தீயினால் நஷ்டமானாலும் கிரஹங்கள் வக்ரமாக நிற்கும் சமயத்திலும், பிராணிகள் வியாதியால் பீடிக்கப்பட்டாலும், காய்ச்சல் வைசூரி போன்றவைகள் சம்பவித்தாலும், அந்த தோஷங்களின் நிவர்த்திக்காக உத்பாதம் முதலிய தோஷ எல்லா அத்புதகாலங்களிலும் எல்லா அசுப நிவிருத்திக்காகவும் பிராயச்சித்த விஷயத்திலும் சீதகும்பவிதி அனுஷ்டிக்கப்படுகிறது. பிறகு சிவலிங்கத்தின் சிரஸ்ஸுக்கு மேல் முக்காலியை வைக்கவும் என கூறி முக்காலி செய்யவேண்டிய விதியையும் தேவதைகளை பூஜிக்கும் பிரகாரத்தையும் வர்ணிக்கப்படுகிறது. பிரதான கும்ப உபகும்பத்தில் அளவு, லக்ஷணம் கூறப்படுகிறது. பின்பக்கத்தில் திவாரத்துடன் கூடியதுமானபிரதான கும்ப உபகும்பத்திலும் செய்யவேண்டிய ஹோமவிதியும் விளக்கப்படுகிறது. ஹோமகாலத்தில் பசுவின் காம்பில் இருந்து விசேஷமாக பாலை கறக்கவும் என கூறப்படுகிறது. அபிஷேகவிதி நிரூபிக்கப்படுகிறது. அபிஷேகத்திற்கு பிறகு செய்யவேண்டிய நைவேத்யவிதி நிரூபிக்கப்படுகிறது. பலவித வாத்யகோஷங்கள் ஜயசப்தங்கள் ஸ்தோத்ரங்கள் நாட்யவிசேஷங்கள் இவைகளால் ஈசனை சந்தோஷிக்க செய்ய வேண்டும் என கூறப்படுகிறது விருப்பப்பட்ட பயனை அடையும் வரை தினம் தோறும் ஈசனை பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு முதல் தினத்தில் செய்யவேண்டிய விசேஷபூஜையை வர்ணிக்கப்படுகிறது. முடிவில் ஏழுதினம் 14 தினம், 21 நாள், 1 மாதம், இரண்டு, மூன்றுமாதமாகவோ, இவ்விதியை அனுஷ்டிக்க வேண்டும். என கூறப்படுகிறது. பிறகு ஆசார்யர்களுக்கு தட்சிணை கொடுக்கும் விதியும் அவர்களின் உணவிற்காக காய்கறிகளுடன் கூடிய அரிசி முதலியவைகளின் தானவிதியும் கூறப்படுகிறது. தினம்தோறும் பக்தர்கள், முனிவர்கள், ஏழை ஆதரவு அற்றவர்கள், ஆகிய ஜனங்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 15வது படலத்தின் கருத்து தொகுப்பாகும்.

1. பிறகு விசேஷமாக சீதகும்பவிதியை கூறுகின்றேன். வைகாசி மாதத்தில் வருகின்ற விசாக நட்சத்திரத்திலும் பஞ்ச மேற்பட்டபொழுதும் இந்த பூஜை செய்யவேண்டும் என்று கூறப்படுகின்றது.

2. ஸகலவிதமான கெடுதல் நாசமடையவும், எல்லா விதமான வால்நட்சத்ரம் முதலியவைகளின் போக்குவதலின் பொருட்டும் பிராயச்சித்தம் முதலிய கார்யங்களிலும், தீவிபத்துகள் ஏற்படுகின்ற காலத்திலும்

3. ஆடு, மாடு, குதிரை முதலிய நாற்கால் பிராணிகளுக்கு வியாதி, ஜ்வரம், அம்மை முதலியன ஏற்பட்ட காலங்களிலும், அந்தந்த கெடுதல்களை போக்குவதற்காக சீத கும்ப முறையானது கூறப்பட்டது.

4. வேள்விகளுக்கு கூறப்பட்ட மரங்களில் முக்காலியானது எட்டு அங்குலம் முதல் ஒவ்வொரு அங்குலமாக கூட்டி ஓர் முழம் வரையில் செய்து லிங்கசிரஸில் வைக்க வேண்டும்.

5. ஆசார்யன் எப்படி இடைவெளி இருக்க வேண்டுமோ அப்படியே அமைத்து ஜலத்தினால் அலம்பி கால்களை வஸ்த்திரத்தினால் மூடி தென்பாகத்தில் பிரம்மாவை பூஜிக்க வேண்டும்.

6. இடது பக்கத்தில் விஷ்ணுவையும் பின்பக்கத்தில் விருஷப தேவரையும் மூன்று கால்களில் இந்த தேவதைகளையும் பலகையின் மேல் பக்கத்தில் எங்கும் பரவலாக மஹாமாயையும் பூஜிக்க வேண்டும்.

7. இதுபோல் முக்காலியை அமைத்து லிங்கத்தின் தலையில் வைக்கவேண்டும். மண்டபத்தில் எட்டு மரக்கால் நெல் போட்டு ஸ்தண்டிலம் அமைத்து

8. அரிசி எள்ளு பொறி இவைகளை போட்டு கும்பத்தை வைக்கவேண்டும். நான்கு மரக்கால் சிரேஷ்டம் மூன்று மரக்கால் மத்யமம்

9. இரண்டு மரக்கால் அளவு அதமமும் ஆகும். நூல் சுற்றியுள்ளதாயும் வஸ்த்திரமாக கூர்ச்சத்தோடு கோவைப்பழம் ஆக்ருதியோடு

10. தங்கத்தாமரை பஞ்சரத்னங்களோடு சுபமாக பின் பாகத்தில் துவாரம் உடையதாய் தங்க (தண்டுடன்) ஓட்டை உடையதாய்

11. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு நிஷ்க மென்ற அளவினால் நான்கு அங்குல நீளத்தினால் ஊசியின் நுனி துவாரத்தோடு கூடியதாகவும் ஓர் பாத்ரத்தை

12. தேங்காய் முதலிய மூடியோடு கூடியதாக இருப்பதாகவும், மாவிலை வஸ்த்திரம் தங்கம் முதலியவைகளோடு கூடியதாகவும் அதன் முன்பாக உபகும்பமும்

13. அடிப்பாகத்தில் துவாரம் இல்லாததாக திவார பாத்ரத்திற்கு தெற்குபக்கத்தில் வைக்கவேண்டும். பிறகு ஆஸனம் மூர்த்தி பூஜையாக கும்பத்தில் ஆவாஹனம் செய்யவேண்டும்.

14. பஞ்சபிரும்ம மந்திரத்தோடும் கலாமந்திரத்துடன் வித்யா தேகத்தை கல்பித்து ஓங்காரத்துடன் சிவனை ஆவாஹனம் செய்து சந்தனம் முதலியவைகளால் அர்ச்சிக்கவேண்டும்.

15. பிரதான கும்பத்திலும் உபகும்பத்திலும் இந்த கார்யங்களை செய்யவேண்டும், சந்தன குழம்பு அல்லது தேன், பால், இவைகளை எல்லா நன்மைகளின் பொருட்டு சேர்க்க வேண்டும்.

16. பிராயச்சித்தம், அத்புத சாந்தி, பாபங்களை நாசம் அடைய செய்வதற்காக சுத்த ஜலமோ பஞ்ச கவ்யமோ நிரப்ப வேண்டும்.

17. வாஸனையுடன் கூடிய சந்தனம் விபூதியோடு கூடவோ கல்பிக்கவேண்டும். அல்லது சந்தனம் மாத்ரம் ஆசமனீயத்திற்காக கல்பிக்க வேண்டும்.

18. முடி இல்லாததும் ஐந்துக்களற்றதுமான திரவியத்தை உப கும்பத்தில் சேர்க்கவேண்டும். சந்தனம் முதலானவைகளை ஹ்ருதயமந்திரத்தினால் பூஜித்து பிறகு அக்னிகார்யத்தை ஆரம்பிக்கவேண்டும்.

19. ஒன்பது, ஐந்து, ஓர் குண்டங்களில் ஸமித், நெய், அன்னத்தோடு கூடிய எள், பொறி, தேன் ஓஷதிகளோடும்

20. அசோக மரத்தின் ஸமித் இவைகளால் வாருண மந்திரத்தினாலும் அமிருத பீஜத்துடன் கூடிய சிவமந்திரத்தினால் ஸம்புடீகரணம் செய்து

21. ஆப்யதாரண மந்திரத்துடன், ஆயிரம், ஐநூறு, நூற்றெட்டு ஒவ்வொரு திரவியங்களையும் ஹோமம் செய்யவேண்டும்.

22. ஆப்யாணுமந்தர ஸம்புடிதமான மூல மந்திரத்தை முன்கூறிய எண்ணிக்கைப்படி செய்யவும், ஜபம் செய்கின்றவர்களான எண்மர்களால் வாருண மந்திரம் ஜபிக்கத்தகுந்தது.

23. ரிக், யஜுஸ், ஸாம, அதர்வண, என்ற நான்கு வேதக்காரர்களும் ஆப்யாயஸ்வ, என்ற மந்திரத்தை ஜபிக்கவேண்டும், ஸ்நானம் செய்தவர்களாயும் (அடக்கமுள்ளவர்களையும்) ஹவிஸ் அன்னத்தை சாப்பிடுபவர்களுமான பிராமணர்களால்

24. ஒரே மனதை உடையவர்களாயும் சாந்தர்களாயும், ஆசார்யருடைய கட்டளையை செயல்படுபவர்களாயும் சிவ தீøக்ஷயுடன் கூடியவர்களும் மழையை விரும்புவர்களுமான (பிராமணர்களால்)

25. திருக்கோயில் முழுமையும் ஜலத்தினால் மெழுகுவதினால் இரவுபகலாக ஜலமயமாக்க செய்ய வேண்டும். அந்த காலத்தில் பசுவின் மடியிலிருந்து விசேஷமாக பாலை கறக்கவும் செய்யவேண்டும்.

26. ஆயிரம், ஐநூறு, நூறு எண்ணிக்கை அளவாக பாலின் கறவை விழுமானால் நல்ல புஷ்டியான மழை பெய்யும்.

27. ஹோம காலத்தில் தினந்தோறும் பிராமண சிரேஷ்டர்கள் இவ்வாறு செய்யவேண்டும். பூஜாகாலத்திலும், வாருணீதாரணாமந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

28. அமிருதமயமான மூல மந்திரத்தை தியானித்து பிறகு வவுஷட் என்பதை முடிவாக கூறி பூர்ணாஹுதி செய்யவேண்டும். தினந்தோறும் சங்கவாத்ய மங்கள கோஷத்துடன் இவ்வாறு செய்யவேண்டும்.

29. நித்ய பூஜை முடிவில் நைமித்திக பூஜையை ஆரம்பிக்கவேண்டும். நைமித்திகம் பெரியதாக இருப்பின் முதலில் நைமித்திகத்தை செய்யவேண்டும்.

30. அனேகவிதமான வாஸனைகளோடு கூடியதும் குளிர்ச்சியான ஜலத்தோடு கூடியதுமாக ஸ்தாபனம் செய்து தேவ தேவனை அமிருதாப்லாவனத்தை நினைத்துக்கொண்டு

31. சந்தனம் அகில் குங்குமப்பூ பச்சைகற்பூரம் இவைகளை அதிகமாகவும் அந்த க்ஷணத்தில் உண்டான சந்தனம் புஷ்பங்கள் இவைகளால் பூஜித்து

32. காரகிலால் உண்டான தூபங்களாலும் இஷ்டமான நெய்யினால் கல்பிக்கப்பட்ட கற்பூரதிரியோடு கூடிய தீபங்களாலும், உடன் தயார் செய்யப்பட்ட பாயாஸ நிவேதனத்தினாலும்

33. மண்பாண்டத்தில் தயார் செய்த சால்யன்னமும் நூதன பாண்டத்தில் உயர்ந்த நைவேத்யமும் குடிப்பதற்கு யோக்யமான வாஸனையுடன் கூடிய குளிர்ச்சியான தீர்த்தமும்

34. வெள்ளையான வெற்றிலையும் வாசனையோடு கூடிய பாக்கும் கூடிய தாம்பூலங்களினாலும் தாம்பூலத்தோடு கூடிய பாட்டு வாத்யங்கள் நாட்டியங்கள்

35. புதிய நடன சிறப்போடும் ஸ்வரத்தோடு கூடிய வேதங்களாலும் ஸ்தோத்ரங்களாலும் ஜபம்செய்பவர்களால் ஜயஜய சப்தங்களாலும் அனேக நமஸ்காரங்களாலும்

36. விரும்பிய பலனை அடையும்வரை தினந்தோறும் ஈச்வரனை பூஜிக்கவேண்டும். அதன் முடிவில் தினந்தோறும் ஹோம கார்யம் செய்யவேண்டிய முறையும் கூறப்பட்டது.

37. முதல் நாள் பூர்ணாஹுதிக்கு பிறகு இரண்டு குடத்தையும் எடுத்து தோளிலோ, தலையிலோ வைத்துக் கொண்டு வலம் வந்து

38. ஆலயத்தில் நல்லநாளில் நல்ல கிழமையில் ஆசார்யன், யஜமானன் இருவருடையவும் அனுகூல நட்சத்திரத்தில்

39. நல்ல திதியில் நல்ல லக்னத்திலோ சிவமந்திரத்தை சொல்லிக்கொண்டு துவாரமுள்ள குடத்தை வைத்து அதில் ஒன்பது கும்பத்தில் இருக்கின்ற ஜலத்தை

40. சிவமந்திரம் சொல்லி அமிர்த தாரணையை திரியோடு கூடிய தீபங்களாலும், உடன் தயார் செய்யப்பட்ட பாயாஸ நிவேதனத்தினாலும்

41. கூறியுள்ள காலம் வரையில் தினந்தோறும் மீதி ஜலத்தை விடவும் ஏழுதினம், பதினான்கு தினம் இருபத்து ஓர்நாள், ஓர் மாதம்

42. இரண்டு மாதமோ மூன்று மாதமோ இந்த முறையை செய்யவேண்டும். முதலில் ஆசார்யனை வஸ்த்திரங்கள் பஞ்சாங்க பூஷணங்களால் பூஜிக்கவேண்டும்.

43. அரசன் முதலில் பத்து நிஷ்கம் முதலான தட்சிணையை கொடுக்கவேண்டும். முடிவில் இரண்டு மடங்கு பூஜையையும் தட்சிணையையும் கொடுக்க வேண்டும்.

44. மற்றவர்களான எல்லோருக்கும் பொன் வஸ்திரம் மோதிரங்கள் ஓர் நிஷ்க தட்சிணையோடு கூட சிரத்தையோடு கொடுக்கவேண்டும்.

45. தினந்தோறும் சாப்பாட்டிற்காக அரிசி காய்கறிகளுடன் அரசன் சிரத்தையோடு வெற்றிலை பாக்கும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

46. பக்தர்கள், யோகிகளுக்கும் தினமும் சாப்பாடு போடவேண்டும். பிறகு ஏழைகள் ஜனனங்களுக்கு தினந்தோறும் சாப்பாடு செய்யவேண்டும்.

47. முடிவில் ஸ்னபனம் செய்து மஹாஹவிஸ் நிவேதனம் செய்யவேண்டும்.

இவ்வாறு வைகாசி மாத சீதகும்ப விதியாகிற பதினைந்தாவது படலமாகும்.

திங்கள், 7 அக்டோபர், 2024

யார் யாருக்குச் சொந்தம்...

யார் யாருக்குச் சொந்தம்...

கோவிலில் மந்திரம் சொல்லும் போது நம: என்ற சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் அர்த்தம் என்ன தெரியுமா? சமஸ்கிருதத்தில் நம: என்றால் என்னுடையது என்று பொருள். அதோடு ந என்பதைச் சேர்த்து நம: என்று சொன்னால் என்னுடையது இல்லை என்று அர்த்தம் உண்டாகும். நம: என்பதே நம: என்றானதாகச் சொல்வர். எல்லாம் கடவுளுக்கே சொந்தமானது என்று அறிவிப்பதற்காகவே அர்ச்சனையின் போது நமஹ என்று உச்சரிக்கின்றனர்.கடவுளுக்கு அர்ச்சிக்கும் தேங்காய்,பழம் மட்டுமில்லாமல் வழிபடும் நாமும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் குறிக்கவே நமஹ என்கின்றனர்.

சரஸ்வதி பூஜை...

சரஸ்வதி பூஜை...
 

சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம். அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம், படை‌க்க‌ப்பட வே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இ‌டவு‌ம். பட‌த்‌தி‌ற்கு பூ‌க்க‌ள் வை‌த்து அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். அன்னையின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும். சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவ‌ற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாகப் படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும். எதற்கும் விநாயகரே முதலானவர். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும். பூஜையின்போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விஜயதசமி...

விஜயதசமி...

விஜயதசமி கொண்டாடுவது ஏன்: பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒரு பெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக் கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் "மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித் திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

சக்தியின் நான்கு வடிவங்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல்) அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதால் அவளை "ஆதிபராசக்தி என்பர். அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது "பவானி என்றும், அவளே ஆண் தன்மையை ஏற்கும் போது "மகாவிஷ்ணு என்றும், அசுரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும்போது "காளி என்றும், வெற்றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது "துர்கா என்றும் பெயர் பெறுகிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.

அம்பாள் வழிபாடு அங்கும் இங்கும்..: முதல்வேதமான ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் பராசக்தியைப் பற்றிய குறிப்புகள் "தேவி சூக்தம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அம்பிகையை மட்டுமே வழிபடும் முறைக்கு "சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இருவித வழிபாடு உண்டு. தேவியை வாமாசாரமாக வழிபடுவது கடினமானது. இம்முறை வடமாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அசாமில் வாமாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். மந்திரதீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகும். இது தென்னிந்தியப் பகுதியில் பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதில்லை.

விஜயதசமி மரம்: சாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.

முக்குண தேவியர்: ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான். மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.

ஒழுக்கத்திருநாள்: சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

வெற்றிக்குரிய தசமி திதி: எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை "அட்சர அப்யாசம் என்பர். கூத்தனூர் சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

படலம் 14 : சித்திரை மாத வஸந்தோத்ஸவ முறை...

படலம் 14 : சித்திரை மாத வஸந்தோத்ஸவ முறை...

பதினான்காம் படலத்தில் சித்திரை மாதத்தில் செய்யக் கூடிய வஸந்தோத்ஸவ விதி கூறப்படுகிறது. முதலில் சித்திரை மாசத்தில் வஸந்தோத்ஸவம் செய்ய வேண்டும். அது இஷ்டத்தை (பலத்தை) கொடுக்க கூடியதாகும் என்று சூசிக்கப்படுகிறது. அதில் முதலில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். சூரியன் அஸ்தமன சமயத்தில் ஸ்வாமியை வலம் வரச்செய்து ஸர்வாலங்கார ஸஹிதமாக கிராம பிரதட்சிண பூர்வம் நந்தவனத்தை அடையவும் என்று நந்தவன அலங்காரவர்ணனை கூறப்படுகிறது. நந்தவனத்திலும் செய்ய வேண்டிய உத்ஸவ விதி நிரூபணம் அங்கே வணங்குவதற்காக வஸந்தனும், மன்மதனும் வந்து இருப்பதாக பாவித்து அவ்விருவர்களுக்கும் பூஜை செய்யவேண்டும் என கூறி அந்த பூஜாவிதி வர்ணிக்கப்படுகிறது. பிறகு நாட்யம் வாத்யம் இவைகளால் திவ்யமான பாட்டுகளாலும் காலத்தை போக்கி தேவாலயத்தை அடைந்து ஸ்நபனம் செய்து விசேஷ பூஜை செய்க என்று வஸந்தோத்ஸவத்தில் பூஜை விவரம் கூறப்படுகிறது. உத்ஸவம் செய்பவனுக்கு எல்லா விருப்ப பூர்த்தியும் உத்ஸவ பலனாக ஆகும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 14 வது படல கருத்து தொகுப்பாகும்.

1. இந்த மாதமான சித்திரை மாதத்தில் இஷ்டமான வஸந்தோத்ஸவம் விதிக்கப்பட்டது. முதல் நாள் காப்புக்கட்டி பலவிதமான மரங்களோடு கூடியதும்

2. பலவிதமான மாலைகளோடு கூடியதும் பல விதமான பழங்களோடு கூடியதும், பலவிதமான வாத்யங்களோடும் பலவிதமான பாட்டுக்களோடும் கூடிய

3. பலவிதமான நடனங்களோடும் கூடிய பலவித வாகனங்களோடும் கூடிய பலவித மணத்தோடும் கூடிய பலபூக்களை வாரி இறைக்கப்பட்டதும்

4. கொடிகளோடு கூடியதும் ஜ்வாலையோடு கூடிய தீபங்களால் பிரகாசிப்பதும் ஆஸ்தான மண்டபத்தோடு கூடியும் ஜலக்ரீடா செய்ய வேண்டிய இடத்துடன் கூடியதுமான

5. ஸகலவிதமான அலங்காரத்தோடு கூடிய தேவர்களின் உத்யானவனத்திற்கு கிராமத்தை வலம் வந்து மாலை வேளையில் ஈசனை சேர்ப்பிக்க வேண்டும்.

6. விசேஷமாக ஈச்வரனை அதில் பிரதட்சிண கிரமமாக செய்து சந்தனம், தூபம், மாலைகள் முதலிய உபசாரங்களால் பூசிக்கவேண்டும்.

7. புஷ்ப பாணத்தையுடைய வஸந்தனை தர்சனம் செய்ய வந்திருப்பதாக பாவித்து ஈச்வரனுடைய இடது வலது பக்கம் அனேகவிதமான வாசனை யோடு கூடியதாக முறையோடு

8. தங்கமயமான வஸ்த்திரங்களை உடையவராக அவ்விருவரையும் பூஜிக்கவேண்டும். இரண்டாவது ஸ்தண்டிலத்தில் எல்லாவிதமான புஷ்பங்களோடு கூடியும்

9. நைவேத்யமான பாயஸத்தை வஸ்த்திரத்தினால் மூடி நிவேதனம் செய்யவும் முடிவில் தாம்பூலத்தை நிவேதித்து விசேஷமாக அவர்களை சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

10. நாட்டியம் இவைகளோடு தேவகானத்தினால் பூசை முடித்து மறுபடி ஈச்வரனை தேவாலயத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

11. சிவனை ஸ்நபனம் செய்து விசேஷமாக பூசை செய்யவேண்டும். இவ்வாறு விசேஷமாக பூசித்து சிரத்தையுடன் சிவாராதனம் செய்யவேண்டும்.

12. இந்த பிரகாரம் எந்த மனிதன் செய்கின்றானோ அவன் எல்லா நன்மைகளையும் இஷ்டங்களையும் அடைகின்றான்.

இவ்வாறு சித்திரை மாத வஸந்தோத்ஸவ முறையைக் கூறும் பதினான்காவது படலமாகும்.

படலம் 13 : சித்திரைமாத மரிக்கொழுந்து பூஜா விதி...

படலம் 13 : சித்திரைமாத மரிக்கொழுந்து பூஜா விதி...

பதிமூன்றாவது படலத்தில் சித்திரை மாதம் தமனபூஜாவிதி பிரதிபாதிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக மரிக்கொழுந்து தோட்டத்தின் அவதாரம் பற்றி விளக்குவது, பூர்வமாக அந்த பூஜா பலனை நிரூபிக்கிறார். பிறகு தமனம் சேகரிப்பது பற்றி கூறுகிறார். ஸாயங்காலத்தில் அதிவாஸ விதியானது விதிக்கப்படுகிறது. காலையில் அனுஷ்டிக்க வேண்டிய விதியும் நிரூபிக்கப்படுகிறது. பவித்ராரோபண விதிப்படி சிவனை பூஜிக்கவும் என்று அனுஷ்டான கிரமம் சூசிக்கப்படுகிறது. முடிவில் ஹே பகவானே அதிகமானதாகவோ குறைவானதாகவோ என்னால் எந்த தமனார்ப்பண கர்மா செய்யப்பட்டதோ அது ஸம்பூர்ணமாகுக என்று பிரார்த்திக்கவும் என கூறுகிறார். தமநபூஜாவிதிக்கு பிறகு சந்தோஷிக்க படுவதான குருபூஜை, தீட்சிதர்களின் திருப்தியையும் செய்ய வேண்டும். கிருஹஸ்தரோ, பிரம்ம சாரியோ யார் இந்த விதியை ஆசரிக்கிறாரோ அவன் சித்திரை மாத ஜபாதி பலசித்தியையும் அடைவான் என நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறாக 13வது படல கருத்து தொகுப்பாகும்.

1. சித்திரை மாதத்தின் நல்ல பலனையளிக்கக் கூடிய தமனாரோபணம் என்னும் மரிக்கொழுந்து சாற்றும் முறையைக் கூறுகிறேன். முன்பு ஒரு சமயம் சிவனின் கோபத்திலிருந்து தமனன் என்ற பைரவர் தோன்றினார்.

2. அவனால் எல்லா தேவர்களும் அரக்கர்களும் பலசாலிகளும் தன்னடக்கம் உடையவர்களாக ஆனார்கள். திருப்தியடைந்த சிவனால் ஸம்ஸாரமாகிய பூமியில் செடியாக ஆவாய் என்று கூறப்பட்டது.

3. தாந்தநுத்வம் என்கிற மரிக்கொழுந்து வடிவத்தையடைந்து என்னுடைய உபயோகத்திற்காக ஆகப்போகிறாய். எந்த தேவர்கள் உன்கொழுந்துகளால் பூஜிக்கப்போகிறார்களோ

4. அவர்கள் மரிக்கொழுந்து மஹிமையால் உயர்ந்த நிலையை அடையப்போகிறார்கள். எந்த மனிதர்கள் மறுபடியும் குறிப்பிட்ட அளவில் மரிக்கொழுந்து சாற்றும் முறையை செய்யப்போகிறார்களோ

5. அவர்களுக்கு சித்திரை மாதத்தின் பூஜா நற்பயன் என்னால் கொடுக்கப்பட்டதாகும். சப்தமீ திதியிலோ திரயோதசீ திதியிலோ மரிக்கொழுந்து சமீபம் சென்று

6. அஸ்திர மந்திரத்தினால் சுத்தம் செய்து, ஸம்ஹிதா மந்திரத்தால் பூஜித்து சிவவாக்யத்தினால் ஹே தாம! என்பதாக விளிவேற்றுமையோடு கூறி

7. நீ பரமேஸ்வரனின் திருவருளால் இங்கு தயாராயிருப்பாய், சிவனின் உத்தரவால், பரமேச்வரனின் பூஜைக்காக கொண்டுவரப்பட்டிருக்கிறாய்.

8. என்று மரிக்கொழுந்தை அபி மந்திரித்து, ஸம்ரக்ஷணம் செய்து ஆலயத்தை அடைய வேண்டும். மரிக்கொழுந்து இருக்குமிடம் வெகுதொலைவில் இருப்பின் வேர் மண்ணுடன் கூடியதாக எடுத்து வந்து

9. மண் நிரப்பிய பாத்ரத்தில் வைத்து நீர் விட்டுக் கொண்டுவர வேண்டும். பிறகு முன்பு கூறிய முறைப்படி வீட்டிலேயே மந்திரங்களை கூறி அபிமந்திரிக்க வேண்டும்

10. மாலை வேளையில் அதிவாஸம் என்னும் முறையை செய்ய வேண்டும். ஸ்நானம் முதலான கடமைகளை முடித்துக்கொண்டு யாகத்திற்கு உபயோகமாக பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு

11. முறைப்படி சூர்யன், சிவன், அக்னி இவர்களை நன்கு பூஜித்து பரமேஸ்வரனுடைய மேற்கில் வேருடனும், மண்ணுடனும் சேர்ந்த தானமருக் கொழுந்தை

12. ஸத்யோஜாதம் அல்லது ஹ்ருதய மந்திரத்தினால் பூஜித்து வடக்கில் வாமதேவம் அல்லது சிரோமந்திரத்தினால் காம்புடன் கூடிய நெல்லிக்கனியை பூஜித்து

13. தெற்கு பக்கத்தில் அகோரம் அல்லது சிகை மந்திரத்தினால் விபூதிக் கிண்ணத்தையும் தத்புருஷம் அல்லது கவச மந்திரத்தினால் கிழக்கில் புஷ்பத்துடன் கூடியதாக பற்குச்சியை வைத்து பூஜித்து

14. வடகிழக்கு பாகத்தில் மூல மந்திரம், காயத்ரி மந்திரத்தினால் பழத்தை சந்தனத்துடன் சேர்ந்ததாக ஸ்தாபித்து ஐந்து பிரிவுகளை உடைய மருக்கொழுந்தை புஷ்பம் அக்ஷதையிவைகளுடன் சேர்ந்ததாக வணங்கி

15. மரிக்கொழுந்து சாற்றுதலுக்காக பரமேஸ்வரனிடன் தெரிவித்து ஹே! பரமேஸ்வரா என்னால் காலையில் நீவிர் அழைக்கப்பட்டுள்ளீர்!

16. உன்னுடைய உத்தரவினால் மரிக்கொழுந்து திருநாள், மிகுந்த பயனை முழுமையுள்ளதாக செய்யவேண்டும் என்று ஈசனின் தலையில் புஷ்பாஞ்சலியை செய்து வணங்கி

17. சிவமந்திரத்தினால் சேர்த்து ஜபம் முதலியவைகளை செய்ய வேண்டும், மீதமுள்ள மருக்கொழுந்து திரவ்யங்களை பாத்ரத்தில் வைத்து அதை தத்புருஷ மந்திரத்தினால் மூடி

18. பவித்ரோத்ஸவ முறைப்படி கவச மந்திரத்தினால் அவகுண்டநம் செய்ய வேண்டும். இவ்வாறு பாதுகாக்கப்பட்டதாக செய்து பரமேச்வரனிடம் தெரிவிக்க வேண்டும்.

19. பிறகு உணவின்றியோ அல்லது ஹவிஸ்ஸைமட்டுமோ, உண்ண வேண்டும். சிவாலயத்தின் முன்பு தியானம், பாட்டு, ஜபம் முதலியவைகளால் விழித்திருந்து

20. காலை ஸ்நானம், காலை கடமைகளை முடித்து அஷ்ட புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும். விசேஷமாக நித்ய, நைமித்திக பூஜையையும் செய்து

21. மீதமானதும், ஐந்து பிரிவுகளையுடையதுமான மருக்கொழுந்துகளால் தேவனை பூஜிக்கவும், அதிலும் மீதமானதை அருகம்புல், புஷ்பம் அக்ஷதை இவைகளுடன் சேர்ந்ததாக அஞ்சலி ஹஸ்தத்தால் எடுத்து

22. ஐந்து முகமுள்ள ஸதாசிவனை எதிர்நோக்கியுள்ளவராக தியானித்து, ஆத்மதத்வ, வித்யாதத்வ, சிவதத்வங்களாலும் அதன் அதிபதிகளான ஈச்வரர்களாலும்

23. பவித்ரம் சேர்ப்பிக்கும் முறைப்படி பரமேச்வரனை பூஜிக்கவும். முன்கூறிய ஆத்ம தத்வங்களுடன், இரண்டு, நான்கு, ஆறு என்ற தான உயிரெழுத்துக்களோடும் (ஆ,ஈ,ஊ,ஒள) ஓம் ஹளம் ஆத்ம தத்வாயநம: ஓம்ஹளம் ஆத்மதத்வாதிபதயே சிவாயநம: என்று

24. ஷ என்ற எழுத்து வரிசையின் முடிவான ஹவும், ம் என்ற எழுத்தும் சேர்ந்ததாக பவித்ர மந்திரத்தினால் அஞ்சலி கொடுக்கவும் நான்காவது அஞ்சலி மந்திரமாவது ஓம் என்றும், சிவ மந்திரத்துடனும்

25. விருப்பத்தைக் கொடுக்கக்கூடிய யாகம் யாகேஸ்வரனின் பொருட்டு பூர்த்தி செய்து சூலபாணி என்ற பதத்தை நான்காம் வேற்றுமை நம: என்ற பதத்துடன் கூடியதாக கூறவும் சூலபாணயே நம: எறு அர்ச்சிக்க வேண்டும்.

26. சிவனை பூஜித்து நமஸ்கரித்து முறைப்படி ஹோமம் செய்து பிறகு விருப்பப்பயனை தெரிவிக்க வேண்டும்.

27. ஹே பகவானே, என்னால் செய்யப்பட்ட இந்த பூஜை குறைவுபட்டோ, கூடுதலாகவோ இருப்பின், என்னுடைய பர்வ அளவு மருக்கொழுந்து சாற்றும் திருவிழா எல்லாவற்றிலும் நிறைவுள்ளதாக ஆகட்டும்.

28. என்று இவ்வாறு மருக்கொழுந்து பூஜையை செய்து ஆசானை பூஜித்து, திருப்தி செய்வித்து, ஆசார்யர்களையும் சிவதீøக்ஷ பெற்றவர்களையும் திருப்தியடைய செய்ய வேண்டும்.

29. மனைவி மக்களுடையவனாக இருந்தாலும் பிரம்மசாரியாக இருந்தாலும் இந்த பூஜையை முறைப்படி செய்கிறானோ அவன் சித்திரை மாதத்திற்கு உண்டான ஜபம் முதலியவைகளின் நற்பயனை அடைகிறான்.

இவ்வாறு சித்திரை மாத மரிக்கொழுந்து சாற்றும் முறையாகிற பதிமூன்றாவது படலமாகும்.

கொலுமேடைக்கு பூஜை செய்வது எப்படி?

கொலுமேடைக்கு பூஜை செய்வது எப்படி?

நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.

எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?

எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?

கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்
என்பதைக் குறிக்கிறது.

இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு, கரையான் புற்றையும், சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.

நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.

ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.

ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.

ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது . வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.

எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள்,பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.

ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும். தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?

நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?

நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை. மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன், கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன் குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.