பரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்...
தமிழகச் சிவாலயங்களில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலைக் கருவறையாகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள கோயில்களை பரிவாரத் தலங்களாகக் கொள்ளும் மரபு நிலவுகிறது.
விநாயகர் - திருவலஞ்சுழி
முருகன் - சுவாமிமலை
நந்தி தேவர் - திருவாடுதுறை
சண்டிகேசுவரர் - திருச்சேய்ஞ்ஞலூர்
நடராஜர் - சிதம்பரம்
தியாகராஜர் - திருவாரூர்
தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி
பைரவர் - சீர்காழி
அம்பிகை - திருக்கடவூர்
சூரியன் - - சூரியனார் கோயில் ஆடுதுறை
சனி - திருநள்ளாறு
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 7 அக்டோபர், 2024
பரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்...
அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்...
அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்...
கோயில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோயில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம். புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோயில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து செல்வாராம். இக்கோயில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார். மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன் வாசுகி சிலைகள் உள்ளன. ஒவ்வொர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோயிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோயில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோயிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.
மயிலம் முருகன் கோயிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள். அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோயில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரமாக இருக்கிறது. இக்கோயில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முற்பட்ட கோயிலாகும். நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோயிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சன்னதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோயில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோயிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து வருகிறது. கோயிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.
1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.
2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.
3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.
4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.
6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.
7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.
8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.
9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.
10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.
11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.
12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.
13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.
14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.
15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.
16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.
17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.
18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.
19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.
20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.
21. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.
அரவானின் தியாகம்!
அரவானின் தியாகம்!
பாண்டவர்களின் தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்! அரவானின் தியாகம் தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார். பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன். சகாதேவா! இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஓலைச்சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன், சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்றான். சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன் யோசித்தார். அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர் தான். ஒருவன் அர்ச்சுனன்; மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது. ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன்.
வெற்றிவாகை சூடக்கூடிய திறமையும் அர்ச்சுனனிடம் மட்டுமே உள்ளது.மேலும் கண்ணனின் தங்கையான சுபத்ராவின் கணவன் அவன். எனவே, அரவாணைத் தேர்ந்தெடுத்தார் கண்ணபிரான். அரவான் இளைஞன்; அழகன்; அனைத்து அம்சங்களும் பொருந்தியவன். அரவானைச் சந்தித்த கண்ணபிரான் தன் நிலையைச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் களப்பலிக்குத் தயார் என்று சம்மதம் தெரிவித்தவன், அதே சமயம் இரண்டு நிபந்தனைகளும் விதித்தான். நான் திருமணமாகாதவன். பெண் சுகம் என்றால் என்னவென்று அறியாதவன். ஆகவே, என்னை எவளாவது ஒருத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடன் நான் ஓரிரவாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்கு போர் முடியும் வரை போர்க்காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார் என்றான். கண்ணன் யோசித்தார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றி விடலாம். ஆனால் முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? நாளை சூரிய உதயத்தில் போர் ஆரம்பமாகப் போகிறது. விடியற்காலையில் களப்பலியாகப் போகும் அரவானை எந்தப் பெண் மணப்பாள்? ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு அவனிடம், உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ காந்தர்வ விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இரு. அதோ, அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை. அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம் என்றார். அரவானும் மகிழ்ச்சியுடன் அந்த மாளிகையை நோக்கிச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு மெள்ள மெள்ள தலை காட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி ஒரு அழகிய பெண் சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்த அரவான் அவளை நெருங்கினான். கைகோர்த்தான்; சந்தனத்தின் சுகந்தம் அவன் மனதை நிலை தடுமாறச் செய்தது. அங்கேயே மாளிகைக்கு முன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டு, அவளை அழைத்துக் கொண்டு மாளிகைக்கு சென்றான். இரவு இதமான தென்றல் வீசியது. மாளிகையில் விளக்குகள் அணைந்தன.
அரவான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அரவானை காந்தர்வ விவாகம் செய்து கொண்ட அந்த அழகி யார்? அரவானின் ஆசையை நிறைவேற்ற கண்ணன் தன் மாய சக்தியால் ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி அனுப்பினார் என்றும்; கண்ணனே பெண்ணாக மாறினார் என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் அரவான் முழுமையாக மகிழ்ச்சியடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நீராடி, தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயாரானான் அரவான். முறைப்படி அவளை களப்பலி கொடுத்தனர். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்திற்கும் போர் ஆரம்பமாயிற்று. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரினைத் தான் பாரதப் போர் என்று வரலாறு சொல்கிறது. பாரதப் போருக்காக களப்பலியான அரவானின் தலை, போர் முடியும் வரை உயிருடன் இருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு மகிழ்ந்தான். போர் முடிந்து பாண்டவர் வெற்றி பெற்றதும் கண்ணன், அரவானை உயிர்ப்பித்தான் என புராணம் கூறுகிறது. இதனை நினைவூட்டும் வகையில் சித்திரை மாத பவுர்ணமி அன்று விழுப்புரம் அருகிலுள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் அரவாணிகள் (திருநங்கையர்கள்) திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் அரவாணிகள் பலரும் கூத்தாண்டவர் கோயிலை நோக்கி வருவது வழக்கம். பாரதப்போரில் களப்பலியான அரவான் தான் தங்கள் கணவன் என்றும்; களப்பலிக்கு முன் அழகிய பெண்ணாக மாறிய கண்ணனின் வாரிசுகள் தான் தாங்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
பகவான் பாடிய பகவத் கீதை!
பகவான் பாடிய பகவத் கீதை!
பகவத் கீதா என்பதற்கு பகவான் பாடியது என்று பொருள். கீதம் என்றால் பாட்டு. கீதம் என்று சொல்லாமல் கீதா என்று சொன்னதன் காரணம் என்ன? கீதை உபநிஷத்துகளின் சாரம். உபநிஷத் என்பது பெண்பாலாக உள்ள வட சொல். ஆகவே, கீதா என்பதும் பெண் பாலில் இருப்பது; உபநிஷத்துகளின் மாற்று உருவமே கீதை என்பதைக் காட்டுகிறது. பாண்டவர்களை துரியோதனன் நாடு கடத்திவிட்டான். அவர்கள் வனவாசமும் அஞ்ஞாத வாசமும் செய்து திரும்பினார்கள். பிறகு, தம் ராஜ்ஜியத்தைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கிருஷ்ண பகவானைத் துரியோதனனிடம் தூது அனுப்பினார்கள். ஆனால், பேராசை கொண்ட துரியோதனன், பாண்டவர்களுக்கு ஊசிமுனை இடம் கூட தரமாட்டேன் என்றான். இனி, யுத்தம் செய்தே நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று பாண்டவர்கள் முடிவு செய்தார்கள். துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர். பகவான், நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா? என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான்.
யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகுத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்; என்றெல்லாம் பலவாறு வருந்தினான். அர்ஜுனனின் அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, பகவத்கீதையின் முதல் அத்தியாயமாக உருவெடுத்தது. இந்த அர்ஜுன விஷாத யோகமே, அடுத்துப் பதினேழு அத்தியாயங்களில் பகவான் சொல்லிய உபதேசமான பகவத் கீதைக்கு வித்து போன்றது. வித்து என்றால் விதை. வித்தினால் வித் (ஞானோபதேசம்) உண்டாயிற்று. அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு பகவான் உபதேசித்த ஆத்ம ஞானத்தையே பகவத் கீதை என்ற பெயரால் நாம் போற்றுகிறோம். பகவத் கீதை என்பது தனிப் புத்தகமாக எழுதப்பெறவில்லை. மகாபாரதத்தில் பீஷ்ம பர்வம் 25-ஆம் அத்தியாயம் தொடங்கி 42-ஆம் அத்தியாயம் வரையிலான ஒரு பகுதியாகவே பகவத் கீதை அமைந்திருக்கிறது. பாரத: பஞ்சமோ வேத என்றபடி, பாரதம் ஐந்தாவது வேதம். வேதமோ ஞான காண்டம், கர்ம காண்டம் என்று இரு வகையாகப் பிரிந்திருக்கிறது. வேதத்தில் உள்ள ஞான காண்டம் போலவே, பாரதத்திலுள்ள பகவத் கீதை என்பதும் ஞான காண்டமாகும். வேதத்தில் அந்த பாகத்தை உபநிஷத் என்கிறார்கள்.
ஆகவே, பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி. பகவத் கீதைக்கு அன்று முதல் இன்று வரை எத்தனையோ உரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றை ஓரளவு மட்டுமே கணக்கிட்டு, மூவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் இருக்கின்றன. பகவத்கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியார் என்ற ஆசார்யர்கள் முறையாக எழுதிய பாஷ்யங்களையே உயர்ந்தவையாகவும் குருமூலமாக உபதேச முறையில் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியவையாகவும் கருதிப் போற்றுகிறார்கள். ஸ்ரீ சங்கராசாரியர் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீராமானுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீமத்வாசாரியர் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும் கீதைக்கு பாஷ்யங்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்களுக்குப்பின் இந்த ஆச்சார்ய பரம்பரையில் வந்த சில மகான்கள், இந்த ஆச்சார்யர்களின் கீதா பாஷ்யங்களுக்கு டீகா என்ற விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். இந்த வைதீக சம்பிரதாய முறையிலான உரைகளைத் தவிர, சமஸ்கிருதத்திலும், கிரீக், ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்யன் முதலிய பல வெளிநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி போன்ற நம் நாட்டு மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். லோகமான்ய பால கங்காதர திலகர் எழுதிய கர்ம யோகம், மகாத்மா காந்தி எழுதிய அநாஸக்தி யோகம், ராஜாஜி எழுதிய கை விளக்கு ஆகிய கீதை உரைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பகவத் கீதையின் மகிமையைப் பறைசாற்றுகின்றன.
ராமர் பட்டாபிஷேகம் எப்படி நடந்தது?
ராமர் பட்டாபிஷேகம் எப்படி நடந்தது?
ஸ்ரீராமபிரானுக்கு பட்டாபிஷேகம் எப்படி நடந்தது? எத்தனையோ ராமயணங்கள் இருந்தாலும், அதில் வால்மீகி ராமாயணத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காவியத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்ததை வால்மீகி எப்படி வர்ணிக்கிறார்?
அதிகாலையின் அற்புதம் திவ்யமாக இருக்கிறது. மதுரமான இசையாலும், கருவிகளின் ஒலிகளாலும், தங்க ஆபரணங்கள் அணிந்து உத்தமப் பெண்களின் நாட்டியங்களாலும், தாங்கள் எழுப்பப்டுவதைக் கண்டு நாங்கள் சந்தோஷம் கொள்கிறோம். வானவீதியில் முழுமையான ஒளிக்கிரணங்களுடன் அனைத்து உலகுக்கும் தேஜஸையும் ஆயுளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நடுப்பகல் சூரியன் போன்று, தாங்கள் பட்டாபிஷேகப் பெரும் வைபவத்தோடு, சிம்மாசனத்திலிருந்து எங்கள் அனைவருக்கும் அருள்பாலித்து நலம் புரிவதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறோம். பூமி உள்ள வரையிலும் தாங்கள் பரிபாலனம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை! இவ்வாறாக பரதன், தலைமீது கரங்களைக் கூப்பியவண்ணமாக ஸ்ரீராமனிடம் வேண்டினான்.
பூஜிதா மாமிகா மாதா
தத்தம் ராஜ்யம் இதம் மம
தத் ததாமி புனஸ் துப்யம்
யதாத்வம் ததா மம
முன்பு எனக்கு அரசு தந்து என் தாயைப் போற்றினாய். அதை அப்படியே உனக்குத் தருகிறேன். பரதனின் சரணாகதியை அயோத்தி ராமனும் ஏற்றார். ஆசனத்தில் அமர்ந்தார். பட்டாபிஷேகத்துக்குரிய பணிவிடைகள் எல்லாம் சீராகத் தொடங்கின. ராம லக்ஷ்மண பரத சத்ருக்னார்களுடைய அலங்காரம் நடந்தேறியது. சீதாதேவிக்கு, தசரத பத்தினிகளே அலங்காரம் செய்தனர். வந்திருக்கும் வானரப் பெண்களுக்கும் அழகு செய்கிறாள் கௌசல்யை.
ததோ வானர பத்னீனாம்
ஸர்வாஸாமேவ சோபனம்
சகார யத்னாத் கௌஸல்யா
ப்ரஹ்ருஷ்டா புத்ரவத்ஸலா
சத்ருக்னருடைய ஆணையின் பேரில் இஷ்வாகு குலத்தின் தேரோட்டியான சுமந்திரர், கம்பீரமான குதிரைகள் பூட்டிய ரதத்தைக் கொணர்ந்தார். கதிரவன் போன்று ஒளிமயமாகக் காட்சிதரும் அந்த ரதத்தில் ஸ்ரீராமன் ஏறி அமர்ந்தார். சுக்ரீவனும் அனுமனும் உடன் சென்றனர். சுக்ரீவன் மனைவியும் சீதாபிராட்டியும், திவ்யமான அலங்காரத்துடன் அவர்களுடனே சென்றனர். ஸ்ரீராமனுக்கு சகல நலங்களும் சுகமும் தனமும் பெருகுவதற்கும், அயோத்தி நகரமும் அந்த நாடும் என்றும் மங்கலம் பெறுவதற்கும் உரிய சுப காரியங்களைச் செய்யுமாறு அனைவரும் வசிஷ்டரிடம் வேண்டினர். அமைச்சர்கள் பின்தொடர ஜய விஜயபீவ என்ற முழக்கம், ஜயகோஷமுமாகக் காற்றுடன் அலை மோதியது. ரகுராமனான, கல்யாண ராமனான, சீதா ராமனான, தசரத ராமனான, கல்யாண குனோஜ்வலனான, பித்ருவாக்ய பரிபாலனான, ஏக பத்னி விரதனான, சர்வஜன ரக்ஷகனான ஸ்ரீராமன் அயோத்தி நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். மஞ்சள் கலந்த அட்சதையுடன் பிராமணர்களும் உடன் சென்றனர். பசுக்களும் கோலாகலத்தில் கலந்து சென்றன. குடிமக்களின் குதூகலம் பொங்க, ஸ்ரீராமன் அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்து, கௌசல்யாதேவி, சுமித்ரா தேவி, கைகேயி தேவி மூவரையும் நமஸ்கரித்தார். சத்ருக்னர், ராமருடைய அபிஷேகத்துக்காக சுக்ரீவனிடம் வானரர்களை அனுப்பப் பணித்தார். பொழுது புலரும் முன் வானரர்கள், ரத்னமும் தங்கமும் இழைத்த குடங்களில், கடலிலிருந்தும் நதிகளிலிருந்தும் புண்ணிய தீர்த்தத்தைக் கொணர்ந்தார்கள். ஜாம்பவான், அனுமன், வேகதர்சீ, சிஷபன் ஆகியோர் ஐந்நூறு நதிகளிலிருந்து புண்ணிய தீர்த்தத்துடன் வந்தார்கள். ஸுஷேணன், ரிஷபன், கவயன், நளன் நால்வரும் முறையே நாலா திசை சமுத்திரங்களிலிருந்தும் புனித நீரைக் கொணர்ந்தார்கள்.
பேரருள் பெற்றவரும் தசரத குல குருவுமான வசிஷ்ட மகரிஷி, புலன்களையும் புத்தியையும் சமன் செய்து, பிராமணர்களின் சம்மதத்துடன் ஸ்ரீராமனை ரத்தின ஒளிவீசும் சிம்மாசனத்தில் அமரும்படி செய்தார்.
ராமம் ரத்னமயே பீட
ஸஹஸுதம் ந்யவேசயத்
பட்டாபிஷேக வைபவம் பவித்திரமாகத் திகழ்ந்தது. வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயநர், ஸுயஜ்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய எட்டு மகா ஞானியர்களும் நிகழ்த்திய பட்டாபிஷேகம். எண்மரும் வேதச் சீர்மையுடன் மந்திரங்களை உச்சாடனம் செய்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மணமிகுந்த திரவியங்கள் கலந்த புண்ணிய தீர்த்தத்தால் நெறிமுறைகளின்படி பட்டாபிஷேகத்தை நிறைவேற்றினார்கள். வானத்தில் திக்பாலர்களும் தேவகணங்களும் பேருவகை கொண்டார்கள். சத்ருக்னர் வெண்குடை பிடித்தார். சுக்ரீவன் வெண் சாமரம் வீசினார். வாயுபகவான் தங்கத் தாமரைகளாலான ஒளி கூடிய மாலைகளையும், ஒன்பது ரத்தினம் சேர்ந்த முத்து மாலையையும் கொணர்ந்தார். பூமி செழித்தது. மரங்களில் கனிகள் நிறைந்தன. பசுக்களையும், கன்றுகளையும், தங்க நாணயங்களையும், ஆபரணங்களையும் ஸ்ரீராமன் தானமாக வழங்கினார். சுக்ரீவனுக்குத் தங்க மாலையையும், அங்கதனுக்குத் தங்கத்தோள் வளைகளையும் வழங்கினார். சீதாதேவியிடம் சந்திரன் போன்று பிரகாசமான முத்துமாலையை வழங்கினார். பிராட்டியும் மணாளனின் விருப்பத்தை ஜாடையால் அறிந்து, அம்மாலையை அனுமனுக்கு அளித்தாள். விபீஷணர், ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்று லங்காபுரி சென்றார். தசரத குமாரனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, குடிமக்கள் அனைவரையும் தமது குழந்தைகளாக நினைத்து பரிபாலனம் நடத்தி வந்தார். லக்ஷ்மணனை இளவரசாக இருக்கக் கோரினார். லக்ஷ்மணர் இசையவில்லை. பரதனுக்கு இளவரசுப் பட்டம் நிகழ்ந்தது. சிம்மாசனத்தைத் தாங்கி நிற்கிறான் அனுமன். அங்கதன் வாள் ஏந்த, பரதன் வெண்குடை தாங்க, மற்ற இரு சகோதர்களும் சாமரம் வீச, சீதையின் உவகை ஓங்க, வசிஷ்டர் மகுடம் சூட்டுகிறார். அச்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்களைப் புரிந்து, ஸ்ரீராமன் ஆட்சி ராமமயமாகவே இருந்தது.
சித்ரகுப்தனின் அருள்பெற...
சித்ரகுப்தனின் அருள்பெற....
உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர் ஆவார். என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். தேவ ஸ்வரூபர். பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன! சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.
உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்! பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! சித்ரகுப்தருக்கு பட்டுப் பீதாம்பரத் தலைப்பாகை வந்து சேர்ந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உண்டு! ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை? இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.
தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். பரந்தாமன் மனமிரங்காமல் இருப்பாரா? சித்ரகுப்தர் முன் தோன்றினான் கேசவன்! சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது. தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.
பூஜை இல்லாவிடில்...
15. 1. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன; 1. படைத்தல் - அபிஷேகம்.
2. காத்தல் - நைவேத்யம்
3. ஸம்ஹாரம் - பலி போதல்
4. திரோபாவம் - தீபாராதனை
5. அனுக்ரஹம் - ஹோமம், பூஜைகளைச் செவ்வனே செய்யவிடின் ஐயன் ஐந்தொழில் புரிந்து நமக்கேன் அருள வேண்டும் ?
15.2. பூஜை இல்லாவிடில் ரோகமும், புஷ்பம் இல்லாவிடில் குல நாசமும், சந்தனம் இல்லாவிடில் குஷ்டிரோகமும், ஜலம் இல்லாவிடில் துக்கமும், தூபம் இல்லாவிடில் சுகத்தின் நாசமும், தீபம் இல்லாவிடில் பொருள் நாசமும், நைவேத்யம் இல்லாவிடில் பஞ்சமும், மந்திரம் இல்லாவிடில் தரித்திரமும், வஸ்திரம் இல்லாவிடில் மகா ரோகமும், ஹோமம் இல்லாவிடில் குல நாசமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும், வில்வம்-அறுகு-அக்ஷதை இல்லாவிடில் பகைவர் பயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத்தன்மையும், முத்திரை இல்லாவிடில் அசுர பயமும், நித்திய அக்கினி இல்லாவிடில் அரசர்க்கும் நாட்டுக்கும் தீங்கும், மற்ற திரவியங்கள் இல்லாவிடில் தேவதைகளுக்குக் கோபம் ஏற்பட்டு அதனால் ஒவ்வா விளைவுகளும் உண்டாகும்.
15.3. 1. சந்தனம் இல்லையென்றால் பயம் உண்டாகும்.
2. ஆபரணம் இல்லையென்றால் தரித்ரம் உண்டாகும்.
3. புஷ்பம், தூபம் இல்லையென்றால் ராஜ்யம் க்ஷீணிக்கும்.
4. தீபம் இல்லையென்றால் தனம் இல்லாதொழியும்.
5. நைவேத்தியம் இல்லையென்றால் க்ஷõமம் (பஞ்சம்) உண்டாகும்.
6. அக்நிகார்யம் இல்லையென்றால் சங்கடங்கள் உண்டாகும்.
7. பலி இல்லையென்றால் ஆள்பவர்களுக்குக் கெடுதல் உண்டாகும்.
8. ந்ருத்தம் (கலை நிகழ்ச்சிகள்) இல்லையென்றால் துக்கம் உண்டாகும்.
9. மந்திரங்கள் இல்லையென்றால் மரணபயம் உண்டாகும்.
10. கிரியைகள் இல்லையென்றால் வியாதிகள் உண்டாகும்.
படலம் 5: நித்யோத்ஸவ விதி
படலம் 5: நித்யோத்ஸவ விதி
ஐந்தாவது படலத்தில் நித்யோத்ஸவ விதி பிரிதிபாதிக்கப்படுகிறது. முதலில் நித்யோத்ஸவம், நித்ய பூஜாங்கங்களில் உத்தமம் என ப்ரஸஸ்தி கூறப்படுகிறது. பிறகு சிவனுக்கு முன்போ அதின் இடப்பாகம் பிரஸாத மண்டங்களிலேயோ கோசாணம் மெழுகி விட்டதான ஸ்தலத்தில் லக்ஷணமுடைய பாத்ரம் ஸ்தாபிக்க வேண்டும் என கூறி அன்னலிங்க அக்ஷதலிங்க பாத்ரநிர்மாண பிரகாரம் அன்னலிங்க அக்ஷதலிங்க நிர்மாண பிரகாரமும் கூறப்படுகிறது. இவ்வாறாக புஷ்பலிங்க நிர்மாண பிரகாரமும் சூசிக்கப்படுகிறது. பிறகு நித்யோத்ஸவ விஷயத்தில் அன்னலிங்க, அக்ஷதலிங்க, புஷ்பலிங்கத்தின் உபயோக காலம் நிரூபிக்கப்படுகிறது. பின்பு புஷ்பாக்ஷத லிங்க அன்னலிங்கத்தில் சந்திரசேகர யுக்தம், தத்விஹீநமாகவோ பாசுபதாஸ்திரம் பூஜிக்க வேண்டுமென கூறி அந்த விஷயத்தில் தியானத்திற்கு மிச்ராசாந்தி உக்ரமூர்த்திகளின் ரூபம் நிரூபிக்கப்படுகிறது. அல்லது பாசுபதாஸ்திரமூர்த்தி, சந்திரசேகர மூர்த்தியும் கல்பனீயமென கூறப்படுகிறது. பிறகு பாதுகாநிர்மாண பிரகாரம் கூறப்படுகிறது. பாதுகைகளில் விருஷபரையோ அநந்தரையோ பூஜித்து சுற்றி லோகபாலர்களை பூஜிக்க வேண்டும் என்கிறார். பின்பு நித்யோத்ஸவ விதி பிரகாரம் கூறப்படுகிறது. அதில், லிங்க, பாசுபதாஸ்திர சந்திரசேகரமூர்த்தி, பாதுகம் முதலிய நான்குடன் கூடியதாகவோ பாசுபதாஸ்திரத்துடன் மட்டுமே நித்யோத்ஸவம் செய்ய வேண்டுமென விகல்பிக்கப்படுகிறது. பிறகு உத்ஸவ காலத்தில் கூறிய ராகதாளத்தின் நிரூபணம் பிரதட்சிண பிரகார நிரூபணம், பிரதட்சிணத்திற்குப்பின் செய்ய வேண்டிய கிரியைகளின் நிரூபணம் முடிவில் ஸகளமூர்த்த தேவதேவிகளின் விஷயத்தில் நித்யோத்ஸவ கரண பிரகார சூசனம் இவ்வாறாக ஐந்தாம் படல கருத்து தொகுப்பாகும்.
1. நித்யபூஜைக்கு அங்கமானதும், உத்தமமானதுமான நித்யோத்ஸவ விதியை சொல்கிறேன். சிவனுக்கு எதிரில் அல்லது இடது பாகத்தில் வலது பாகத்தில் சுத்தமான இடத்தில்
2. ஆலயத்தின் முன்போ அல்லது மண்டப ஆரம்பத்திலோ கோமயத்தினால் மெழுகப்பட்ட இடத்தில் எல்லா லக்ஷணங்களோடு கூடியதும் அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷிக்கப்பட்டதுமான பாத்திரத்தில்
3. ஸ்வர்ணம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் இவைகளில் ஒன்றினால் பதினைந்து அங்குலம் முதல் ஓர் அங்குல அதிகரிப்பால்
4. முப்பத்திரண்டு அங்குலம் வரையில் அளவுடையதாக பாத்திரம் இருக்க வேண்டும். விருப்பமுள்ள கனமுடையதாகவும் வட்ட வடிவமாகவும் கர்ணிகை தளங்களோடு கூடியதாகவும் இருக்க வேண்டும்.
5. அந்த பாத்திரத்தில் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று என்பவைகளாக பிரிக்கப்பட்டு இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்ற பகுதிகளால் கர்ணிகை இருக்கும்.
6. மற்றவைகளால் எட்டு தளமும், பத்து தளமும் ஆகும். அரைபாகம், முக்கால்பாகம், இரண்டு மாத்திரை அளவினாலோ கர்ணிகையின் உயரமாகும்.
7. அவ்வாறே ஓரத்தோடு கூடியதும் அல்லது சாதாரணமானதுமான பாத்திரத்தில் 2 ஆழாக்கு என்ற அளவு முதல் ஓர் ஆழாக்கு வரையிலும் குருணி என்ற அளவுள்ள (3 மரக்கால்) வரை
8. அன்னலிங்கத்திற்காக அன்னமும் அக்ஷதை லிங்கத்திற்காக அரிசியையும் கல்பிக்க வேண்டும். தேன், நெய், இவைகளோடு கலந்து அன்னத்தை பாத்திரத்தின் நடுவில் வைக்க வேண்டும்.
9. அதனால் அன்ன லிங்கம் செய்ய வேண்டும். லிங்கம் ஐந்து மாத்திரை அளவு, உடையதாகவும் ஒரு அங்குலம் முதல் பதினெட்டு அங்குலம் வரை நீளமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
10. மூன்று அங்குலம் முதல் பதினைந்து அங்குலம் வரையில் பரப்பு உடையதாகவும், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்து அல்லது ஆறுவரை நுனியின் அளவுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
11. சிறப்பு, பொது என இருவகைக்கும் அன்னலிங்கம் சொல்லப்படுகிறது. மூன்று காலத்திற்கும் அல்லது, காலை, மதியம் என்ற முறையிலோ செய்யலாம்.
12. மதியம் அல்லது காலையில் புஷ்பலிங்கம் சொல்லப்படுகிறது. பிரதோஷ காலத்தில் மாலையில் அக்ஷதையிலான லிங்கமும் அதில் பாசு பதாஸ்ரத்தையும் பூஜிக்க வேண்டும்.
13. சந்திரசேகருடன் கூடியதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். பாசுபதம் மிச்ரம், சாந்தம், உக்ரஹேதுகம் என்று மூவகைப்படும். அழகாகவும் கருணைக் கண்களோடு கூடியதாகவும் இரண்டு அல்லது நான்கு கைகளோடு கூடினவராகவும்,
14. மின்னல் போல் வெண்ணிறமும் ஜடை மகுடம் இவைகள் தரித்தவராகவும், வலது பாகத்தில் அபயம் அக்ஷமாலை இவைகளுடனும் இடது பக்கம் வரதம், பாசம் இவைகளை உடையவராகவும்
15. வரதம், அபயம் முதலிய கைகளோடு கூடியவராகவுமோ, அல்லது அக்ஷமாலை, பாசம், இவைகளை விடுத்து பத்மம், மணி, இவைகளை உடையவராகவுமோ எல்லா லக்ஷணங்களோடு கூடியவராகவும்.
16. அழகுடன் கூடிய சவும்ய மூர்த்தியின் உருவம் சொல்லப்பட்டது. உக்ரமூர்த்தி என்றால் சூலத்தின் அடிபாகமும், அபயமும் வலது பாகத்திலும் சூலத்தில் நுனி, வரதம் இடது பாகத்திலும்
17. கோரமான பார்வையும் மேல் நோக்கிய ஜ்வாலா கேசங்களும் கையில் உள்ள சூல திரிசூலமும் மாறுபட்டதாகவும் அசுமாலையும்கையில் உள்ளதாகவும் ரவுத்திர உருவத்தை மூன்றாக வழிபடலாம்.
18. இவ்விதம் ரவுத்ரம் மிச்ரமானதாகவும் பரசு, சூலம் இவைகளை தரித்து வலது பாகத்தில் பாசம் இடது கையில் மிருகம் இவைகளை உடையதாகவும் மற்றொரு முறை சொல்லப்படுகிறது.
19. வலது பாகத்தில் திரிசூலம், அபயம், பாசம், வரதம் இடது பாகத்தில் என்று இரண்டாக சொல்லப்பட்டது. பிறகு மிஸ்ரம் என்றும் பாசுபதாஸ்திரம் மூன்று விதமாக கூறப்பட்டுள்ளது.
20. புஷ்பம், அக்ஷதை, அன்னம், முதலிய லிங்கங்களிலும் அந்தந்த மந்திரங்களால் பூஜிக்க வேண்டும். அல்லது அந்த அளவிற்கு பிம்ப உருவமைக்கலாம்.
21. வட்ட வடிவமான பீடத்தோடு கூடியதாகவும் பீடமின்றியும் பூஜிக்கலாம். அன்னலிங்க அளவில் அடியும் நுனியும் சமமான அளவுள்ளதாக இருக்க வேண்டும்.
22. கை அளவோடு கூடியதும் எல்லா லக்ஷணங்களோடு கூடியதும் ஸ்தாலிகையின் அளவு கோலோடு கூடியதுமாகவோ பூஜிக்கலாம்.
23. பிரதிமைக்கு உரிய இலக்கணங்களோடு இந்துசேகர மூர்த்தி (சந்திரசேகரமூர்த்தி) இருக்க வேண்டும். பாதுகை 3 அங்குலம் முதல் ஒவ்வொரு அங்குலம் பெரியதாக
24. பதினைந்து அங்குலம் வரை உள்ளதாக கனம் சொல்லப்பட்டிருக்கிறது. கனத்திற்கு தகுந்த அகலமும் அகலத்திற்கு அரைபாகம் நீளமுமாக அமைக்க வேண்டும்.
25. எட்டு அம்சத்திற்கு அதிகமான நடுஅளவைக்காட்டிலும் ஒன்பது அங்குலம் அதிகமாக இருக்கவேண்டும். அதில் விருஷபத்தை பூஜை செய்ய வேண்டும் அல்லது அனந்தனையும் பூஜை செய்யலாம்.
26. சுற்றிலும் லோக பாலகர்கள் பூஜிக்கப்படவேண்டும். பூஜை ஆரம்பம் அல்லது முடிவு இவைகளில் பூஜித்தாலும் புதிய அன்ன லிங்கத்தோடு கூடியதாக நித்யோத்ஸவம் செய்ய வேண்டும்.
27. இப்படி எல்லாவற்றோடும் கூடியதாக நித்யோத்ஸவம் செய்ய வேண்டும். இரண்டு மூன்று, அல்லது நான்கு என்ற காலகணக்கு முறையில் முற்பகலிலோ அல்லது மாலை வேளையிலோ
28. மதிய வேளையிலோ பாசுபதன் என்ற நித்யோத்ஸவ தேவன் பூஜிக்கப்படுபவனாவான். மஞ்சத்திலே, பல்லக்கிலோ, பரிசாரகன் சிரஸிலோ
29. எழுந்தருளச்செய்து அலங்காரம் முடித்து விதானத்துடன் கூடியதாகவும் குடை சாமரம் பலவித கொடிகளோடு கூடியதாக வேண்டும்
30. பாட்டு ஆடல் இவைகளோடும், வாத்யம், கீதம், இவைகளோடும் தூபம் தீபம், இவைகளோடும் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.
31. முதல் பிரதட்சிணம் மங்கிணி தாளத்தோடு கூடியதாக செய்ய வேண்டும். விருஷபத்திற்கு பிரம்மதாளமும் அக்னிக்கு பிருங்கிணீ தாளமும்
32. பெண் தெய்வங்களுக்கு சண்டவாத்யமும் விநாயகருக்கு டக்கரி வாத்யமும் ஷண்முகருக்கு உத்கடவாத்யமும் ஜேஷ்டா தேவிக்கு குஞ்சித தாளமும்
33. துர்கா தேவிக்கு தடபிரஹாரமும் சண்டேஸ்வரர்க்கு விஷமதாளம் செய்ய வேண்டும். கிராமத்திலோ அல்லது நகரத்திலோ அல்லது பிரகாரத்திலோ
34. இரண்டாவதுசுற்று பெரிய பீடத்தின் வரையிலான பிரதட்சிணமாகும். ஒன்றோ இரண்டோ அல்லது மூன்றோ சபரீதாளத்துடன் கூடியதாகவோ பிரதட்சிணம் செய்யலாம்.
35. அல்லது பலிபீடத்துடன் பிரம்ம தாளத்தோடோ அல்லது கணதாளத்துடனோ இரண்டுடனோ பிரதட்சிணம் செய்ய வேண்டும்.
36. பைசாசங்களுக்கு மட்டுமே ஓர் பிரதட்சிணத்துடன் சபரீதாளமாகும். கோபுரத்தில் வாத்யமில்லாமலோ அல்லது சங்கத்வனியோடு கூடவோ செய்யலாம்.
37. இந்திரனுக்கு சமதாளமும் காந்தாரஸ்வரமும் ஆகும். அக்னிக்கு பத்தாபணம் தாளமும் பண்கொல்லியும் ஆகும்.
38. தெற்கில் (யமதிக்கில்) பிருங்கிணி தாளம் பண் கவுசிகம். நைருதியில் மல்லதாளமும் பண் நட்டபாடையும் ஆகும்.
39. மேற்க்கில் (வருணதிக்கில்) நவதாளமும் பண்காமரம். வாயுதிக்கில் பலிதாளமும் பண் தக்கேசியும் ஆகும்.
40. வடக்கில் (குபேரதிக்கில்) கோடிகதாளமும் பண் தக்காராகமும், ஈசானத்தில் டக்கரி தாளமும் பண் சாலாபாணியும் ஆகும்.
41. இவ்வாறு பிரதட்சிணம் செய்து மூன்றாவது சுற்றில் உள்ளே நுழைய வேண்டும். கால்களை அலம்பி கொண்டு சிவாலயத்தில் நுழைய வேண்டும்.
42. அல்லது மண்டபத்தின் முகப்பில் பீடத்தில் உள்ள மூர்த்திகளுக்கு பாத்யம் முதலிய உபசாரங்கள் செய்து பிரவேசிக்க வேண்டும்.
43. அன்னம் முதலிய லிங்கத்திலிருந்து தேவனை லிங்கத்தின் வலது பக்கத்தில் பாவிக்க வேண்டும். சிவனுடைய பாதங்கள் (பாதுகைகள்) வலது, இடது பக்கங்களில் பூஜிக்க தகுந்தவைகள்.
44. மற்ற தெய்வங்களுக்கும் தேவியர்களுக்கும் மூலபிம்பம் போல அந்தந்த பிரதிஷ்டா படலங்களில் கூறியபடி வேறு உருவ பிம்பங்களை, நித்யோத்ஸவம் செய்வதற்காக தயார் செய்யலாம்.
45. அதன் மூலமாக நித்யோத்ஸவத்தையும் நடத்தலாம். அந்த அன்னலிங்கம், முதலியவைகளில் அஸ்திரத்தை பூஜிக்க வேண்டும் வாஹனத்தை (விருஷபம் முதலியவைகளை)
46. பாதுகை இரண்டிலும் பூஜிக்கப்பட வேண்டும். மற்றவை எல்லாம் பொதுவானதாகும்.
இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் நித்யோத்ஸவ முறையாகிற ஐந்தாவது படலமாகும்.
படலம் 4: ஸ்நபன விதி
படலம் 4: ஸ்நபன விதி
நான்காம் படலத்தில் ஸ்நபன விதி கூறப்படுகிறது. அதில் முதலில் அஷ்டமி முதலான திதிகள், விஷுவ அயந ஸங்க்ரமணாதி கால விசேஷங்களிலும் துர்பிக்ஷம், பூகம்பாதி துர்நிமித்தத்திலும், ஜ்வர மார்யாதி ரோக பீடத்திலும், பஞ்சமேற்பட்ட காலத்திலும் அந்ததோஷ நிவ்ருத்திக்காகவும், பிரதிஷ்டா முடிவிலும், உத்ஸவாந்தத்திலும், நித்ய, நைத்திக, காம்ய காலங்களில் ஈசனுக்கு ஸ்நபனம் செயற்பாலது என்று ஸ்நபனத்தின் நிமித்தத்தை சொல்லி உள்ளார். அதில் ஸ்நபனம் அநேக விதமாக விதிக்கப்படுகிறது. மஹாஸ்நபநகர்மாக்களில் அங்குரார்பணம் செய்யுமாறு சூசிக்கப்படுகிறது. பின்பு மண்டப விதாநம், அதன் ஸம்ஸ்காரமும் வர்ணிக்கப்படுகிறது. அதில் சூத்ர ந்யாஸம் முதலாக பஞ்சகலச, நவகலச, பஞ்சவிம்சதிகலச, நான்பத்தொன்பது கலச ஸ்நபனங்களில் கலச ஸ்தாபன விதி நிரூபிக்கப்படுகிறது. இங்கு பஞ்சகலசஸ்நபனம் முதல் ஒவ்வொரு ஆவரணத்தின் அதிக கல்பனத்தால் 49 கலச ஸ்நபனாந்தம் கலச ஸ்தாபன பிரகாரம் கூறப்பட்டுள்ளதாக சூசிக்கப்படுகிறது. பிறகு அஷ்டோத்தர ஸ்நபனவிஷயத்தில் முதல் முறை கூறப்படுகிறது. அதில் முதலில் எட்டு கிரமமாக ஆவரணத்ரயம் கல்பநீயம் என கூறப்படுகிறது. பின்பு ஆயிரத்தெட்டு ஸ்நபன விதியில் பிரதமபிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதில் சூத்ரந்யாஸ முதலாக சதுரமண்டலத்தில் 40 வியூஹங்கள் கல்பிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு வ்யூஹத்திலும் இருபத்தைந்து கலசங்கள் ஸ்தாபிக்கபடவேண்டுமென கூறப்பட்டுள்ளது. பின்பு அஷ்டோத்திர ஸ்நபன விஷயத்தில் இரண்டாம் விதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் நான்கு திவாரம் கல்பித்து மத்தியில் இருபத்தைந்து கலசம், கோணங்களில் இருபத்தியொரு கலசங்கள் ஸ்தாபிக்கவேண்டும் என்று கலசஸ்தாபனம் சூசிக்கப்படுகிறது. பிறகு ஆயிரத்தெட்டு ஸ்நபன விஷயத்தில் இரண்டாவது விதி கூறப்படுகிறது.
அதில் சூத்ரந்யாஸம் முதலாக சதுரஸ்ர மண்டலத்தில் பதினான்கு ஆவரணத்தில் கலச ஸ்தாபன பிரகாரம் கூறப்படுகிறது. பிறகு கும்பஸ்தாபனத்தின் ஸ்தண்டில கல்ப விஷயத்தில் நெல் அளவு நிரூபணம், அதன் அனுசாரமாக எள், அரிசி அளவு விஷயம், கும்ப அளவு, தோண்டி அளவு விஷயம் கும்பத்தில் சூத்ரவேஷ்டந கூர்ச்சந்யாஸ பிரகாரம் த்ரவ்ய ந்யாஸ, ரத்னந்யாஸ பிரகாரம் இம்மாதிரியான விஷயங்கள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு இருபத்தைந்து கலச ஸ்நபனத்தில் சொல்லிய ஆவரணத்யாகத்தால் ÷ஷாடசஸ்நபன கலச ஸ்தாபனவிதி சித்திக்கிறது. என ÷ஷாடசஸ்நபனவிதி கூறப்படுகிறது. ÷ஷாடசஸ்நபன விஷயத்தில் த்ரவ்ய நிரூபணம் சொல்லப்பட்டுள்ளது. பின்பு நாற்பத்தொன்பது கலச ஸ்நபன விஷயத்தில் த்ரவ்யங்கள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பஞ்சகலச நவகலச. பஞ்சவிம்சதி நாற்பத்தொன்பது கலசஸ்நபன விஷயங்களில் தேவதாந்யாஸ பிரகாரம் வர்ணிக்கப்படுகிறது. அதில் குறிப்பாக முப்பத்தி இரண்டு கலசபிரகாரம் கூறப்படுகிறது. 108 ஸ்நபன விஷயத்தில் த்ரவ்ய நிரூபணம் மூன்று விதமாக கூறப்படுகிறது. அஷ்டோத்தர ஸ்நபன விஷயத்தில் குறிப்பாக தேவதைகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு எண்பத்தி ஒரு ஸ்நபன விதி நிரூபிக்கப்படுகிறது. ஒன்பது வ்யூஹம் கல்பிக்கவும், பிரதிவ்யூகத்திலும் ஒன்பது கலசம் ஸ்தாபிக்கவும் எட்டுதிவாரங்கள் உண்டென்று கூறப்படுகிறது. அஷ்டோத்திர ஸஹஸ்ரஸ்நபன விஷயத்தின் த்ரவ்ய நிரூபணம் குறிப்பாக த்ரவ்ய நிரூபண விஷயத்தில், ரத்னோதக லோஹோதக, தாதூதக, பீஜோதக, கந்தோதக, ம்ருதூதக மார்ஜனோதக, பத்ரோதக, புஷ்போதக, மான்யோதக, அஸ்திரோதக, பலோதக, கஷாயோதக, ஆட்யோதக, காந்தோதக, மூலோதக, பிரம்மகூர்ச்ச, வல்கலோதகம், முதலிய உதகங்களின் லக்ஷணம் கூறப்பட்டுள்ளது. பின்பு அஷ்டோத்தர ஸஹஸ்ரஸ்நபன விஷயத்தில் மூன்றாவது பிரகாரம் விருத்த மண்டலத்தால் கல்பிக்கவும் என பிரதிபாதிக்கப்படுகிறது.
அதில் பதினான்கு ஆவரணங்களில் கலசஸ்தாபனபிரகாரம், கலசசங்க்யை நிரூபணத்துடன் திரவ்யம் கூறப்படுகிறது. ஆயிரத்தி எட்டு ஸ்நபனத்தில் தேவதான்யாஸ பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. ஐநூற்றி எட்டு ஸ்நபனம், இருநூற்றி எட்டு ஸ்பனத்திலும் வியூஹக்ரமமாக கலச விந்யாச பிரகாரம் கூறப்படுகிறது. திரவ்யங்களின் அளவு நிரூபிக்கப்படுகிறது. பிறகு கூறிய திரவ்யா பாவத்தில் கிரஹிக்ககூடிய திரவ்ய நிரூபணம் பிறகு த்ரவ்யந்யாஸ பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஹோம நிரூபணம் அங்கு குண்டம் அல்லது ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்யவும் என்று விகல்பிக்கப்படுகிறது. ஹோம த்ரவ்யங்களின் அளவுமுறை, அவ்வாறே அஷ்டகுண்ட, பஞ்சகுண்ட நான்கு குண்டாநுஸாரமாக ஸமித்நிர்தேசம் ஹோம கர்மபிரகாரம் காணப்படுகிறது. பிறகு லிங்க விஷயத்தில் ஸ்நபன கலசாபிஷேகவிதி கூறப்படுகிறது. பிறகு ஸகல விஷயத்தில் ஸ்நபன கலசாபிஷேகபிரகாரம் சூசிக்கப்படுகிறது. அதில் சித்ராதி ஸகள பிம்பங்கள் விஷயத்தில் தர்பணாதிகளில் ஸ்நபனம் செய்யவேண்டுமென கூறப்படுகிறது தேவிஸ்நபனத்தில் த்ரவ்ய பேதமில்லை தேவாதாபேதம் மட்டும் கூறப்படுகிறது. தேவதா நிரூபணத்தில் விசேஷம் பிரதிபாதிக்கபடுகிறது. ஸர்வாபீஷ்ட சித்திக்கும், க்ஷீராதிகளால் ஸர்வதோஷ நிவ்ருத்திக்கும் ஸ்நபன விசேஷங்களால் பரமனை ஸ்நபனம் செய்க என கூறி அவைகளின் ஸ்நபன விசேஷமும் வேறு பயனும் கூறப்படுகிறது.
அந்தஸ்நபனங்களின் செய்யக்கூடிய கால நிர்தேசம். ஸ்நபன முடிவில் விசேஷதர்சனம் கூறப்படுகிறது. நித்ய கர்மாவில் இருபத்தைந்து கலச ஸ்நபனம் பிரசஸ்தியாகும். உத்தமோத்தம பூஜையில் அஷ்டோத்திரசதம் வரைஸ்நபனம் செய்தல் வேண்டும். நைமித்திக கர்மாவில் பஞ்சவிம்சதி சங்க்யை முதல் ஆயிரத்தெட்டு ஸ்நபனம் வரை செய்தல் வேண்டும். என்ற விஷயங்கள் ஸ்நபன விஷயத்தில் சூசிக்கப்படுகிறது. இவ்வாறு ஸ்நபன விஷயத்தில் நித்யம், நைமித்திகம், காம்யம் என்று மூன்று விதம் பிராயச்சித்த நிவாரணத்திற்காக நித்ய நைமித்திகத்திற்காக ஸ்நபனம் செய்யவேண்டும் காம்யத்திற்காக காம்ய ஸ்நபனம்சூசிக்கப்படுகிறது கிரியா மந்த்ராதி பேதத்தால் தந்திர பேதமும் ஏற்படுகிறது. அதில் சைவ வசனமே செய்ய வேண்டும், வேறு சாஸ்திரத்தால் செய்யக்கூடாது என்று சூசிக்கப்படுகிறது. பிறகு ஸ்நபனாதிகர்ம நிர்வஹிப்பதற்கு கிரஹிக்க வேண்டிய குரு நிரூபணம் விசேஷ பூஜையும் அப்பேற்பட்ட ஆசார்யனாலேயே நிர்வாஹிக்க வேண்டுமென கூறி விசேஷ பூஜாவிதியும் கூறப்படுகிறது. பின்பு நித்ய நைமித்திக கர்மா சரணத்தில் செய்யவேண்டியது நிரூபிக்கப்பட்டுள்ளது அதில் நைமித்திக கர்மாசாரண காலம் இரண்டு விதம் என கூறி அதன் காலவிசேஷம் பிரதிபாதிக்கப்படுகிறது. ஆசார்ய பூஜாவிஷயம் கூறப்படுகிறது. அதில் யாகசாலைக்கு உபயோகிக்கப்பட்ட ஸ்வர்ணாம் பராதிகம் ஆசார்யனுக்கு தரவேண்டும். மற்ற போகத்திற்கு உபயோகிக்க கூடாது என்பதாக நான்காவது படல கருத்து சுருக்கமாகும்.
1. பிறகு பரமேஸ்வரனுக்கு அனுஷ்டிக்கப்படவேண்டிய ஸ்நபனத்தை பற்றி சொல்லப்போகிறேன். அஷ்டமியிலோ சதுர்தசியிலோ விஷுவ புண்யகாலத்திலோ அல்லது அயன சங்க்ரமண காலத்திலோ மாதப் பிறப்பிலுமோ.
2. கிரஹணத்தில் மாஸத்தின் நக்ஷத்திரத்தில் திருவாதிரை, இரண்டு பர்வங்கள், பூர்ணிமா, அமாவாசை, நல்ல யோகத்தில் ஞாயிற்றுக்கிழமை அல்லது உத்ஸவத்தின் முடிவில் மூன்று நாட்கள்.
3. யஜமானனின் பிறந்த நாள், இறந்தநாள், அல்லது அதற்கு தொடர்ந்த நாள், அரசன் பட்டாபிஷேக நக்ஷத்திரம், வறுமை, தீமை நிமித்தம் தோன்றிய காலங்களில்
4. பூகம்பம், தீபற்றுதல், ஜ்வரம், வைசூரி முதலிய துன்பங்களாலும் துன்புறுத்தப்பட்டபொழுதும் பிரதிஷ்டையின் முடிவிலும், நோய்கள் ஏற்படும் காலத்திலும் அத்புத சாந்தி காலத்திலும், பஞ்சமேற்படும்பொழுதும்
5. நித்யம், நைமித்தியம், காம்யம் என்ற மூன்று வகைகளிலும் சிவனுக்கு உரிய முறைப்படி ஸ்நபன பூஜை செய்து அபிஷேகம் செய்யவேண்டும். அது பலவகைப்படும். ஸ்னபன பூசை அபிஷேகத்தின் பொருட்டு கலசங்களை வைத்து பூசிப்பது ஆகும்.
6. (அங்குரார்ப்பணம் செய்து) மஹா ஸ்நபனம் கார்யத்தில் முதலில் அங்குரார்ப்பணம் செய்யவேண்டும் முன்பு சொன்ன மண்டபத்திலோ வேதிகை இல்லாமலுமோ செய்யலாம். அல்லது அளவை நோக்காமல் ஸ்நனத்திற்காக முன்பே ஏற்படுத்தபட்ட இடத்தில்
7. ஐந்து முழத்திலிருந்து ஆறு ஏழு முழ அழவுள்ள தாகவும் நான்கு முதல் எட்டு வரையுள்ள காத்ர அளவுள்ளதுமான (காத்ரம் என்பது தேஹம் என்பதாகும்) (தேஹ ஸப்தம் என்பது சுமாராக ஒன்பது தாள அளவாகும். ஒரு தாள அளவு பனிரெண்டு அங்குலம்)
8. எல்லா அலங்காரங்களோடும் கூடியதும் தோரணங்களோடு கூடியதும் நிருத்தம் வாத்யம் முதலியவைகறோடு கூடியதும் இசை ஒலி முதலியவைகளோடு கூடியதும் ஆன மண்டபத்தில்
9. அஸ்திர மந்திரத்தால் பூமியை சுத்திசெய்து வாமதேவ மந்திரத்தால் மெழுகி அகோர மந்திரத்தால் தாள மாத்ர இடைவெளிப்படி (தாளம் என்பது 9 அங்குலமாகும் என்றும் ஓர் அளவு கூறப்படுகிறது) சூத்ர நியாஸம் செய்யவேண்டும்.
10. இரண்டு தாள அளவு சிவ கும்பத்திற்கும், வர்த்தனீ கும்பத்திற்கு ஒரு தாள அளவும், மூன்று தாளம் கர்ணிகைக்கும் உள்ளது ஸாதாரண அளவாகும்.
11. அல்லது கும்பஸ்தாபனம் வடக்கிலுள்ள வீதியில் இருக்குமேயானால் அப்பொழுது கும்பஸ்தாபன நிலை ஏற்றாற்போல இரண்டு தாள அளவு கர்ணிகை யின் அளவாக ஆகும்.
12. நான்கு திக்குகளில் உள்ள தாளங்களில் வைக்கப்படும் ஒவ்வோர் கலசங்களோடு நடுவில் ஓர் கலசமாக பஞ்ச கலச அமைப்பும் மூல திசைகளிலும் ஒன்றாக சுற்றியும் எட்டு வைக்கும் முறையும் நவகலச ஸ்னபனமாகும்.
13. இருபத்தி ஐந்து எண்ணிக்கை வரையில் சுற்றிலும் உள்ளதாக வைக்கப்படுவதும், நாற்பத்தி ஒன்பது கலசங்கள் மற்றும் நூற்றி எட்டு கலசங்களின் அமைப்பும் உண்டு.
14. இரண்டு சுற்றாக வெளியில் வைக்க வேண்டும். நடுவில் உள்ள இருபத்தி ஐந்து கலசங்களை
15. விடுத்து மற்றவைகளை இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ சுற்றிலும் வைத்துவிட வேண்டும். எட்டு வாயில்களை உடையதாகவும் மூன்று வெளி சுற்று உடையதாகவும் வைக்க வேண்டும்.
16. கோணங்களில் ஒன்பது சூத்திரத்திலும் மத்தியில் பதினைந்து சூத்திரத்திலும், கும்பங்களை வைக்க வேண்டும். நடுவில் பதினைந்து என்றால் நடுவில் உள்ள மூன்றை விட்டுவிட வேண்டும்.
17. நூற்றி எட்டின் முறை இது. ஆயிரமாக இருந்தால் நாற்பது வியூஹம் ஆகும். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக இருபத்தி ஐந்து பதம் போட வேண்டும்.
18. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்ற முறையிலும் வியூஹம் உண்டு. நடு வியூஹத்தை சுற்றியும் நான்கு அல்லது எட்டு குண்டங்களை
19. அந்தந்த எண்ணிக்கைக்கு இணையாக வியூஹத்தில் ஹோமத்திற்கு வசதி செய்து கொள்ள வேண்டும். நடுவில் வழி அமைத்து பாதை அமைத்து கொள்ள வேண்டும்.
20. சிவவியூஹத்தை சுற்றிலும் பதினாறு சூத்திர அளவு விட்டுவிடவேண்டும். சூத்திரமுறையில் வைப்பது இதுவரை சொல்லப்பட்டது மற்றொரு முறையும் உண்டு.
21. நூற்றி எட்டின் முறையே நடுவில் இருபத்தி ஐந்தும், வெளியில் ஆக்னேய கோணங்களில் இருபத்தியொன்று என்ற பாதையின் முறையிலிருக்க வேண்டும்.
22. நான்கு திக்குகளிலும் நான்கு வாயில்களாகும். ஆயிரம் முறையில் மீண்டும் சொல்லப்படுகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்ற திக்குகளில் இரண்டு சூத்திரங்கள் வைக்கவேண்டும்.
23. ஒன்றரை முழ அளவு அல்லது ஓர்முழ அளவுள்ளதாக பதினான்கு எண்ணிக்கையில் முறைப்படி வெளிவீதியாக அமைக்கப்படவேண்டும்.
24. அதன் வெளியில் நான்கு பக்கங்களிலோ அல்லது எட்டு பக்கங்களில் ஹோமம் செய்யலாம். தத்புருஷ மந்திரத்தால் ஸ்தண்டிலம் அமைத்து நெல் நான்கு படி அளவுள்ளதாக செய்வது சிறந்ததாகும்.
25. மூன்றுபடி அளவுள்ளது மத்யமமாகும். அதற்கு அடுத்தது இரண்டுபடி குறைவான அளவாகும். அதை காட்டிலும் மிகவும் தாழ்ந்து ஒருபடி நெல் அளவாகும்.
26. நெல்லின்அளவு இதுவே என்ற காரணத்தால் இதற்கு குறைவாக போடக்கூடாது. அப்படி செய்தால் ஆபிசாரதோஷம் ஏற்படும். இது நிச்சயம்!
27. இரண்டுபடி பிடிக்கும் அளவுடைய குடம் முதல் பத்துபடி பிடிக்கும் அளவு வரை சிவகும்பத்தின் அளவு ஆகும். அதற்கு மேற்பட்டது கரகம் எனப்படும்.
28. நெல்லின் பாதி அளவு அரிசி ஆகும். அதில் பாதி எள். அதில் பாதிஅளவு பொறி இருக்கவேண்டும். ஸஹஸ்ர கலசத்தில் எட்டு மரக்கால் என்று சொல்லப்படுகிறது.
29. எட்டுக்கு அதிகமான சிவவியூஹத்தில் நெல்லின் அளவு சொல்லப்பட்டது. ஹ்ருதய மந்திரத்தால் ஸ்வர்ணம் முதலியவைகளினால் ஆன கும்பங்களை வைக்கவேண்டும்.
30. சிவம் என்ற அளவு முதல் ஒவ்வொருபடி அளவாக இருபத்திஏழு வரை அளவுள்ள தன்மை சிவகும்பத்திற்கு ஆகும். அதில் பாதி (தோண்டி) கரகம் எனப்படும்.
31. நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற அளவில் உடைய கலசங்களில் மூன்று, இரண்டு, ஒன்று என்ற முறையில் நூலை சுற்றவேண்டும்.
32. இல்லாவிட்டால் ஒரு நூலால் மூன்று முறை கவச மந்திரத்தினால் சுற்றிய பிறகு கும்பங்களை ஹ்ருதய மந்திரத்தால் வைக்கவேண்டும்.
33. ஈசான மந்திரத்தால் முப்பத்தாறு தர்பங்களை உடைய கூர்ச்சங்களை மூன்றாக பிரித்தவாறு வைக்க வேண்டும். திரவ்யத்தை மூல மந்திரத்தால் வைக்க வேண்டும்.
34. மாணிக்கம், இந்திரநீலம், வைடூர்யம், பவழம், முத்து என்ற ஐந்து ரத்தினங்கள், இல்லாவிடில் தங்கமும் போடலாம்.
35. நிஷ்கம் என்ற அளவில் ஸ்வர்ணத்தை கால் பங்கு அல்லது அதில்பாதி பத்துஉளுந்து அளவோ அல்லது எட்டு உளுந்து அளவோ ஐந்து, நான்கு அளவோ இரண்டு உளுந்து அளவோ மிகவும் குறைந்ததான பட்சத்தில் ஓர் உளுந்து அளவோ ஸ்வர்ணம் போடவேண்டும்.
36. மேற்கூறிய அளவிலிருந்து பாதி அளவு கரகங்களில் போடவேண்டும். திரவ்யங்கள் இருக்க வேண்டிய கலசங்களாவன, பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம் ஆகியவை நான்கு திசைகளிலும் இருக்க வேண்டும்.
37. சந்தனம் கலந்த தீர்த்தம் அல்லது சுத்தமான தண்ணீர் முதலில் சொல்லப்பட்டது. தர்ப்பை தண்ணீர், பால், தயிர், சிறிது சூடான நெய் இவைகளுமாகும்.
38. சந்தனம் கலந்த தீர்த்தம் முதலில் மூலைகளில் முறையாக எட்டு இடங்களிலும் ஆகும். இரண்டாவது ஸ்தாபன முறை சொல்லப்பட்டது. மூன்றாவது முறை சொல்லப்படுகிறது.
39. தேன், பொறி, சாணத்தூள், மஞ்சள் மற்றும் சத்துமாவு, மஞ்ச்பொடி போன்றவைகள் விபூதி, கரும்புச்சாறு, வாழைப்பழம், எள், பலா, கடுகு முதலியனவும்.
40. விபூதி, நல்லெண்ணை, வாழை, எள், கடுகு, தேங்காய், இருவிதமான நார்த்தம்பூ மாதுளை முதலியவைகளை வைக்கலாம்.
41. மாதுளை மற்றும் பக்கத்தில் பலா, மா, இஞ்சி, வாழை, வரகு, பாக்கு மற்றும் இளநீர் கடுகு இவைகளும்
42. எள், பில்வம் அதற்கு பிறகு நார்த்தை இரண்டு (எலுமிச்சை, நார்த்தை) யவை, நீவாரம், பொறி
43. ஸத்துமாவு, முதலிலோ அல்லது கடைசியிலோ மற்றும் தேன் கீழாநெல்லி, வெல்லம், பால் பிறகு கடுகு, கிராம்பு இவைகளும்.
44. தக்கோலம், தயிர், தண்ணீர், எள், விளாமிச்சை வேர், நெய், சாணத்தூள் ஸத்துமாவு, தேங்காய், மஞ்சள் பொடி இவையும்
45. இவ்விதம் மும்முறையிலும் மூறு, இருபத்தி ஐந்துகளாகும் இருபத்தி ஐந்தின் நடுவில் நடுவரிசைகளை விட வேண்டும்.
46. இவ்விதம் செய்த ஸ்தாபனத்தில் கலசங்கள் பதினாறு ஆகும். நான்கு திக்குகளிலும் நான்கு கோணங்களிலும், பாத்யம் முதலியவைகள் எட்டு ஆகும்.
47. இவைவெளிகளில் நடுவிலிருந்து எட்டு எண்ணிக்கை உடையதாகவும் மேலும் நாற்பத்தி ஒன்பது கும்பங்கள் முறையாக சொல்லப்படுகின்றன.
48. வெல்லம், சந்தனம், உலோகம் கீழாநல்லி கச்சோலம், புஷ்பம், பத்ரம், பச்சை கற்பூரம் மற்றும் தண்ணீர் ஜடாமாஞ்சி, மரிக்கொழுந்து சிற்றேலம் அருகம்பில்
49. வன்னி, அருகு, வெள்ளெருக்கு பில்வம், செண்பகம், சங்கங்குப்பி என்ற திரவ்யம், நாயுருவி, விஷ்ணுகிராந்தை, ஊமத்தை.
50. நந்தியாவட்டை, வெண்தாமரை, நாற்பத்தி ஒன்பதாகும் அல்லது வேறு வழியிலும் சொல்லப்படுகிறது.
51. பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம், கிழக்கு முதலான திக்குகளிலும் பால், தயிர், நெய், தேன் முதலியவைகள் அக்னி முதலிய திக்குகளிலும்
52. தக்கோலம், விபூதி, சாம்பிராணி, மஞ்சரி, தேங்காய் பில்வம், நாவல் பாதிரி, வெட்டிவேர், பூங்கொத்து கச்சோலம்
53. புண்ணை பூ, சங்கு புஷ்பம், பில்வம் புலிநகக் கொன்றை, ஊமத்தை ஆகிய பதினாறும் இங்கு சொல்லப்பட்டது.
54. அருகு, கடுகு, மா, நார்த்தை, பலா, வாழை, தாமரை, தாழை, வெண்லோத்ரம் (வெள்ளொளுத்தி)
55. கரும்புச்சாறு, பொறி, சண்பகம், சந்தனாதி வாசனைத் தைலம், நீவாரம், குங்குமம், எள், ஸத்துமாவு ஜடாமாஞ்சி, சிற்றேலம்.
56. மாதுளை, சந்தனம், அகில், விளாமிச்சை, மஞ்சள்பொடி இவை கலந்த திரவ்யங்களாகும். ஐந்து கலச ஸ்னபநத்தில் பஞ்ச பிரம்மங்களை ஈசானத்தை விட்டு மற்ற பிரம்ம மந்திரங்களை பூஜிக்க வேண்டும்.
57. எட்டுகலசங்களில் வித்யேசர்களை பூஜிக்க வேண்டும். வெளியில் மூர்த்தீச்வரர்கள், நடுவில் வாம தேவர் முதலியவர்களையும் பூஜிப்பது இருபத்தி ஐந்து எண்ணிகையுள்ள கலச பூஜையாகும்.
58. எட்டு கணேச்வரர்கள் வெளியில், அங்குஷ்ட மாத்ரர் முதலான எட்டு புவனாதிபதிகளையும் கிரோதனன் முதலான எட்டு எண்ணிக்கையுள்ள சத்ருத்ராதிபர் களையோ பூஜிக்க வேண்டும்.
59. ஸ்நபனத்தில் நாற்பத்தி ஒன்பது கலசத்திற்கு தேவதாபூஜை முறை சொல்லப்பட்டது. முப்பத்தி ஆறு பதங்கள் செய்து நடுவில் உள்ள நான்கு அம்சத்தை விட்டுவிட வேண்டும்.
60. முப்பத்தி இரண்டு பதங்களில் பாத்யம் முதலியவைகளை வைக்கவேண்டும். தெற்கில் அரைபாக அளவு ஆரம்பித்து, வடக்கில் அரை பாகம் அளவு வரையில்
61. இங்கு சொல்லப்படாததை நாற்பத்தி ஒன்பது கலச பூஜையைப் போல் சமமாக எண்பத்தியோரு கலச ஸ்னபநமுறை அறிவிக்கப்படுகிறது.
62. நூற்றி எட்டு கலச பூஜை முறைக்கும் மூன்று வகைகள் உள்ளன. சந்தனம், அகில், கீழாநெல்லி, கச்சோலம், புஷ்பம், பத்ரங்கள்.
63. கற்பூரம், வெட்டிவேர், மரிக்கொழுந்து, ஜடாமஞ்சி, சிற்றேலம் அருகம்பில் ஆவரண திரவ்யங்கள் 12 ஆகும்.
64. சண்பகம், சிறுகுறிஞ்சி, தாமரை, கோரோசனை, பில்வம், யவை, வன்னி அருகு தக்கோலம் துங்குமுஸ்தை.
65. நெல்லிப்பழம், வாழைப்பழம், பில்வம், நிலத்தாமரை, சித்தரத்தை செவியம், பொரசு, வெள்ளெருக்கு, அரளி.
66. தாழம்பூ, தும்பப்பூ, ஊமத்தை, லோத்ரம், நாயுருவி, அர்ஜுநம், இச்சி, யானை திப்பிலி, விஷ்ணுகிராந்தை.
67. அரசு, நாகபுஷ்பம் நான்காவது ஆவரண திரவ்யமாகும். துளசி, ஆணைவணங்கி, பெருங் குரும்பை, தேஜநீ என்ற திரவ்யமும்.
68. வாயு விளங்கம், சீரகம், கருப்பு ஜீரகம், தக்கோலம், தேவதாருபிசின், சந்தனக்குழம்பு, குப்பமேனி, செஞ்சந்தனம்
69. கலப்பை மண், புலிநகம், கொன்றை, வல்லகீ என்ற கொடி, தங்கபுஷ்பம், வெண்டைக்காய், சிப்பி, சங்க நகமென்கிற கந்த திரவ்யம், சர்க்கை பெருங்கோரை கிழங்கு.
70. குங்குலியம், திராøக்ஷ, சர்க்கரை, விஷ்ணுக்ராந்தை, ஆல், விருஷபா என்ற ஒஷதி கிடாரங்காய், நாவல், மனச்சிலை.
71. சங்ககுப்பி, கையாந்தரை, செந்நெல், சிவப்பான சிலாவிகாரம் மாம்பழம், வாழைப்பழம், ஜாதி, பாதிரி வெள்ளொளுத்தி முதலியவைகளை
72. இது ஐந்தாவது ஆவரணதிரவ்யமாகும். வேறுவிதமாக கூறப்படுகிறது. வன்னி, அருகு, எருக்கு, பில்வம், சம்பகம் சங்கு புஷ்பம்.
73. நாயுருவி, விஷ்ணுகிராந்தி, கருவூமத்தை, நந்தியாவட்டை, வெண்தாமரை.
புன்னாகம், ஜாதி புஷ்பம், பாதிரி, சிறு குறிஞ்சித் தாழை
74. தாமரை பில்வம், தரைத்தாமரை, தாழம்பூ, துளசி, (அரளீ) மல்லிகை மற்றும் கருப்புக்கொடி நாயுருவி புஷ்பம், விஷ்ணுகிராந்தி, கருவூமத்தை, நந்தியாவட்டை, வெண்டாமரை இவைகளும்.
75. நெரிஞ்சல், தண்ணீர்முட்டான், நீர் வணங்கி, பெருந்தும்பை, தும்பை, பெருங்குமிழிஞ் செடி, குமிழிஞ் செடி
76. இந்த்ரவல்லி, பில்வம், நெல்லிக்காய், கடுக்காய், புலிநகக் கொன்றை, மஞ்சமெழுக்கு, சிவதை என்ற திரவ்யம் (மஞ்சள் கீழாநெல்லி)
77. வெண்ணெய், கச்சோலம், தக்கோலம், ஆடாதொடை, என்ற திரவியங்களில் சஞ்சலா, அதிபலா, பலா என்ற தேவர்களை பூஜிக்க வேண்டும், மேலும் சிம்மம், தினை
78. வெள்ளொளுத்தி மரம், மகிழம், புன்னை மரம், நாகபுஷ்பமரம், நாவல் விளாமரம், அரசு, குங்குலியம், கருப்பு ஜீரகம், சத்துமாவு.
79. எள்ளுடன் கூடிய குங்குமம், துங்க முஸ்தை என்ற திரவ்யம், கருப்பு கோரோஜனை, அகில், பில்வம், சந்தன குழம்பு, திப்பிலி, யானை திப்பிலி.
80. கருப்பு அகில், மனஸ்சிலை, செஞ்சந்தனம், கிராம்பு மஞ்சள்பொடி, தகரம் என்ற கந்தகப்பொருள்.
81. கஷாயோதகம், மார்ஜநோதகத்தை ஹ்ருதய மந்திரத்தால் முடிவில் ஸ்தாபிக்க வேண்டும். கஷாயோ தக மாவது: நான்கு பாலுள்ள மரப்பட்டையால் நீரூடன் கலந்து ஸ்தாபித்து பூஜிப்பதாகும்.
82. மா, நாவல், மரப்பட்டை அதன் சாரமும் சொல்லப்படுகிறது. அருகு, எள், தர்ப்பை நுனி இவைகளுடன் தீர்த்தத்துடன் கலந்து பூஜிப்பது மார்ஜநோதகமாகும்.
83. எண்பத்தி ஒரு குடங்களில் அதிபலர்வரை பூஜிக்க வேண்டும், பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம் திக்குகளிலும், விதிக்குகளில்
84. தயிர், நெய், தேன் பால் இவைகøளை ஆக்னேய திக்கில் வைக்க வேண்டும். எள், வில்வம், சந்தனம், துங்க முஸ்தம் என்ற திரவ்யம்.
85. சண்பகம், வெட்டிவேர், கடுகு, தக்கோலம், பழம், கீழாநெல்லியையும், லோகம் என்ற பெயருள்ள கச்சோலம்.
86. லவங்கம், லவங்க பத்ரம், பச்சை கற்பூரம், வெளியில் பதினாறு திரவ்யங்களை வைக்க வேண்டும். மூன்றாவது ஆவரணத்தில் ஸத்துமாவை அக்னி பாகத்தில் ஐந்து கடங்களில் ஸ்தாபிக்க வேண்டும்.
87. நெல்லிமுள்ளி, விபூதி, மஞ்சள்பொடி, கோசாணத்தூள், இவைகளையும் தேங்காய், எலுமிச்சை மாதுளை.
88. அதன் வெளியில் அக்னி முதலிய கோணங்களில் ஏழு கலசங்களில் வைக்கவேண்டும். வில்வம், சிறுகுறிஞ்சித்தாழை, விஷ்ணுகிராந்தை முதலியவைகளை முறையாக வைக்கப்படவேண்டும்.
89. வில்வத்தோடு கூடியதாக நான்கு ஒன்பது கலசங்களில் வைக்க வேண்டும். குந்துமணி முதல் நிஷ்க அளவுவரை பாத்யம் முதலியவற்றிற்கு தேவையான திரவ்யங்களின் பிரமாணமாகும்.
90. ஒன்று, இரண்டு, மூன்று நான்குபடி வரை பஞ்சகவ்யம் முதலியவைகளுக்கு அளவாகும். முன்கூறிய அளவில் கால் அளவு அல்லது அதில் பாதி மத்யமமாகும்.
91. நெய், எண்ணை அளவும் அவ்விதமே செய்ய வேண்டும். கற்பூரம் குங்குமம் இவைகளுக்கு அளவு விருப்பம்போல் ஆகும்.
92. நடுவில் அஷ்டவித்யேச்வரர்கள் பூஜிக்கதக்கவர்கள். நூறு ருத்திரர்கள் வெளியில் பூஜிக்க வேண்டும். இவ்விதம் மூன்று வகையில் நூற்றி எட்டு கலச முறை வந்துள்ளது.
93. ஒன்பது எண்ணிக்கைகளால் ஒன்பது வியூகங்களோடு இரு திசைகளில் நடுவில் இடைவெளி உடைய இவைகள் எட்டு வாயில்களோடு கூடியதாகவும் எண்பத்தி ஒன்று பூஜிக்கப்படுகிறது.
94. ஆயிரத்தி எட்டு கலச முறை இப்பொழுது சொல்லப்படுகிறது. ஜாதிக்காய், சிற்றேலம், பச்சைக் கற்பூரம், மரப்பட்டைகள், ஏலக்காய், விளாமிச்சை வேர்.
95. இவைகளுடன் கூடியதும் சிவ மந்திரத்தால் அபி மந்திரிக்கப்பட்டதுமான சிவ தீர்த்தத்தால் கும்பங்களையும் வர்த்தனி கலசங்களையும் நிரப்ப வேண்டும்.
96. பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்சகவ்யம், தர்ப்பை தண்ணீர், பால், தயிர், நெய் இவைகளை முதல் ஆவரணத்தில் வைக்க வேண்டும்.
97. தேன், யவை, வெல்லம், தர்ப்பை, வாழைப் பழம், கடுகு, தேங்காய், மஞ்சள், மாதுளை.
98. பொறி, மாதுளை, ஸத்து, மா, பலா, விபூதி இவைகள் நடுவில் உள்ள இருபத்தி ஐந்துக்கும் இந்த திரவ்யங்கள் பதினாறு ஆகும்.
99. ரத்னோதகம் லோஹோதகம், தாதூதகம் இவைகள் மற்றும் கந்தோதகம் (சந்தனதீர்த்தம்) முன்பு சொல்லப்பட்ட இவைகள் முறையாக கிழக்கில் உள்ள வியூஹங்களில் இரண்டு கோணங்களில் விடப்பட்டதாக ஸ்தாபிக்க வேண்டும்.
100. மிருதோதகம், மார்ஜனோதகம், பரிமார்ஜனோதம், பத்ரோதகம், புஷ்போதகம் இவைகளை தெற்கிலும், மேற்கில் மான்யோதகம் அஸ்த்ரோதகம், பலோதகம்
101. கஷாயோதகம், ஆட்யோதகம் என்று வைத்தல் வேண்டும். வடக்கில் காந்தம், மூலோதகம் பிரம்ம கூர்ச்சம், சாந்த்யோதகம், வல்கலோதகம் என்பனவாகும்.
102. மாணிக்கம், இந்த்ர நீலம், முத்து, வைடூர்யம், வைரம், புஷ்பராகம், பவழம், ஸ்படிகம், மரகதம் இவைகளையும் சேர்த்து நவரத்னமென்றும் அதில் ஐந்தை
103. உடையது பஞ்சரத்னமென்று சொல்லப்படுகிறது. முதலில் கூறப்பட்ட நவரத்னமோ அல்லது பஞ்சரத்துடனோ கூடிய ஜலம் ரத்னோதகம் எனப்படும். அடுத்து லோஹோதகம் கூறப்படுகிறது. பஞ்சரத்னம் : மாணிக்கம், இந்தரநீலம், வைடூர்யம், பவழம், முத்து இவைகளாகும்.
104. தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, தகரம், ஈயம் பித்தளை வெண்கலம் இவைகளுடன் தீர்த்தம் சேர்ந்தது லோஹோதகம் எனப்படும்.
105. சவுராஷ்டிரம், அஞ்சனம் என்ற கருப்புப் பொடி, மை, மஞ்சள் ஹரிதாளம், மனச்சிலா, கோரோஜனை இவைகளுடன் நீர் கலந்து தாதூதகம் எனப்படும்.
106. நெல், வரகு, செந்நெல், திணை, எள், கடுகு, சாமை, யவை இவை எட்டும் பீஜோதகம் எனப்படும்.
107. வெண்ணை, பச்சை கற்பூரம், அகில், ஏலக்காய், நாகப்பூ, கீழாநெல்லி, விளாமிச்சைவேர், ஜாதிக்காய், கோரைக்கிழங்கு.
108. குங்குமப்பூ வெட்டிவேர், கோரோஜனை, கச்சோலம், ஜாதிக்காய் இவைகளை பொடிசெய்து கலக்கப்பட்ட ஜலம் கந்தோதகம் எனப்படும்.
109. மலை மண் ஆற்றுகரை மண், புற்றுமண், நண்டுவளைமண், காளை முட்டிய மண், ஸமுத்திர மண், நல்ல இடத்திலுள்ள மண், யானை தந்த மண்.
110. இந்த எண்வகை மண் கலந்த நீர்,மிருதோதகம் என்று கூறப்பட்டுள்ளது. நெரிஞ்சில், சிறு குறிஞ்சித்தாழை, விஷ்ணுகிராந்தம், யானை வணங்கி
111. கருநெய்தல், வாகை, மஞ்சள் இவைகளுடன் கூடியது மார்ஜனோதகமாகும். அருகு, தளிர், தாமரை, தர்ப்பை நுனி, வெண் கடுகு இவையும்
112. குமிழஞ்செடி, யானை வணங்கி ஆகியவைகளுடன் கூடியது பரிமாணோதகம் என்று கூறப்பட்டுள்ளது. துளசி, வில்வம், தமாலவிருக்ஷ புஷ்பம், ஜடாமாஞ்சி
113. நாயுருவியோடு கூடியது பத்ரதோயம் எனப்படும். தாமரை, செந்தாமரை, பாதிரி, சண்பகம் இவைகளும்
114. புன்னை, மருதாணி, நார்த்தை, நந்தியா வட்டை, மல்லிகை, வெள்ளெருக்கு, மகிழம்பூ இவைகளோடு கூடியது (புஷ்பதோகம்) புஷ்போதகம் எனப்படும்.
115. கீழாநெல்லி, பெருங்கோரை, தங்கம், சந்தனம், குங்குமம் (பூ) பச்சை கற்பூரம், விளாமிச்சை வேர், இவைகளுடன் கூடியது மாந்யோதகம் எனப்படும்.
116. சூலம், கபாலம், மான், வில் கோடாரி, பாசம், அக்ஷமாலை இவைகளை தங்கத்தால் செய்யப்பட்டதாக தீர்த்தத்துடன் சேர்ப்பது அஸ்திரோதகமாகும்.
117. பலா, தேங்காய், மாதுளை இரண்டு வகை, நார்த்தை இரண்டு வகை, வாழை முதலியன பலோதகம் எனப்படும்.
118. பொரசு, அத்தி, அரசு நாயுருவி, இச்சி, பாதிரி, நாவல் ஆகிய இந்த பட்டைகளோடு கூடியது கஷாய உதகம் ஆகும்.
119. தகடு சம்பந்தப்படுத்த மூன்று திரவ்யங்கள் மூன்று வகை மெழுக்கு, மூன்று சந்தன திரவ்யங்களுடன் கூடியது ஆட்யோதகம் எனப்படும்.
120. சூர்ய காந்தம், சந்திர காந்தம், அயஸ் காந்தம், பிராமகம், நிகுந்தம் என்ற காந்தம் ஆகிய ஐந்தும் காந்தோதகம் என்று சொல்லப்படும்.
121. விளாமிச்ச வேர், வெட்டிவேர், பீவரி என்ற ஒரு வகையான வேர் தாமரை புஷ்பம் சந்தனம் இவைகளுடன் கூடியது மூலோதகமாகும்.
122. கோமூத்ரம், கோமயம், பசும்பால், பசுந் தயிர், நெய் தர்ப்பை - தண்ணீர் இந்த ஆறு பொருட்களோடு கூடியது பிரம்ம கூர்ச்சம் எனப்படும்.
123. மயில்தோகை, பூவரச மரப்பட்டை, கோரோ சனை, கையாந்தகரை ஆனை வணங்கி இவை ஐந்தும் சேர்ந்தது வல்க லோதகம் எனப்படும்.
124. அக்னி மூலையிலிருந்து முறையாக எண்ணெய், பால், தயிர், நெய் இவைகளை வைக்க வேண்டும். நடுவில் உள்ள கலச திரவ்யம் நாற்பது வியூஹங்களுக்கு ஆகும்.
125. பில்வம், குமிழஞ்செடி, தர்பம், மரிக்கொழுந்து, செந்நெல், சம்பகம் விபீதை, நெரிஞ்சில் இவைகள் எட்டும் கர்பாவரண திரவ்யங்களாகும்.
126. சிவப்பு தாமரை, வன்னி, தாமரை, நந்தியாவட்டை, நாயுருவி, அருகு, அரளி, ஸுரஸம் என்ற புஷ்பம்
127. யவை, தும்பைப்பூ, விஷ்ணுகிராந்தை மல்லிகை, ஜாதிபுஷ்பம், பில்வம், வெள்ளெருக்கு, ஓரிதழ் தாமரை.
128. இந்த திரவ்யங்கள் பதினாறும் ஒவ்வொரு வியூகத்திற்கும் மூன்றாவது வரிசையாக வரும். அடுத்து விருத்த கிரமம் சொல்லப்படுகின்றது. சிவகும்பத்தை (வட்டவடிவமாக) நடுவிலும்
129. இதற்கு இடதுபக்கம் வர்த்தனியாகும். ரத்னங்களை எட்டிலும் போடவேண்டும். மாணிக்கத்துடன் கூடிய பஞ்ச ரத்னங்கள் சிவகும்பத்தில் போடவேண்டும்.
130. கர்ணிகையின் வெளியிடத்திலும் தள மத்யத்தில் எட்டு திக்குகளிலும் பாத்யம் முதலியவைகள் ஆயிரம் கலச ஸ்நபனத்தின் வெளியில் வைக்க வேண்டும்.
131. பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம், தர்ப்பை ஜலம், பால், தயிர், நெய் இவைகளை முதல் சுற்றில் வைக்க வேண்டும்.
132. இரண்டாவது ஆவரணத்தில் பதினாறு எண்ணிக்கையுள்ள பதங்களில் தங்கமும், இருபத்தி நான்கு எண்ணிக்கையுள்ள மூன்றாவது ஆவரணத்தில் தேங்காயையும் வைக்க வேண்டும்.
133. நான்காவது ஆவரண முப்பத்தி இரண்டு கடங்களில் கரும்புச்சாறு ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும். ஐந்தாவது ஆவரண ஐம்பத்தி ஆறு கடங்களில் தேனை ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும்.
134. அறுபத்தி நான்கு வெளியில் பலமலர்களோடு கூடியதாகவும் ஆறாவது ஆவரணத்தில் பூஜிக்க வேண்டும். எழுபத்தி இரண்டு கலசங்களில் எல்லா விதைகளையும் போட்டு ஏழாவது ஆவரணத்தில் பூஜிக்க வேண்டும்.
135. எட்டாவது ஆவரணத்தில் எண்பத்தி நான்கு கும்பங்களில் வாழைப்பழத்தையும் ஒன்பதாவது ஆவரணத்தில் தொண்ணூற்றி ஆறில் விபூதியையும்
136. பத்தாவது ஆவரணத்திலுள்ள நூறு கலசங்களில், பஞ்சகவ்யமும், நூற்றி நான்கு கலசங்களில் பஞ்சகவ்யமுமாக பதினொன்றாவது ஆவரணத்திலும்
137. 12 ஆவது ஆவரண வெளி நூற்றிஎட்டில் கஷாய உதகமும், பின் உள்ள பதிமூன்றாவது ஆவரணத்திலுள்ள நூற்றி பதினாறில் தாதூதகமும், லோஹோதகமும்
138. வெளியில் உள்ள பதினான்காவது ஆவரணத்தில் உள்ள நூற்றி இருபதில் மிருதோதகம் ஆகும். எல்லா வாசனைகளும், சந்தனம் மற்றும் பொருட்களும் எல்லாவற்றிலும் போடவேண்டும்.
139. நாற்பது வியூஹத்தில் ஒவ்வொர் வியூஹத்திலும் இருபத்தைந்து கலசங்களையோ கடங்களையோ உள்ள வியூஹமாக அமைக்கவேண்டும்.
140. இங்கு வர்த்தனி, சுவர்ணம், கூர்ச்சம், இவைகளோடு கூடியதாக அந்த அந்த திரவ்யங்களுடன் கூடியதாகவும் வைக்க வேண்டும்.
141. திரவ்யங்கள் கலசங்களில் போடும் விஷயத்தில் சதுரம், வட்ட வடிவம் இரண்டுமே சிறந்ததாகும். விஷயத்தில் கூறப்பட்ட திரவ்யங்கள் எல்லாம் கிடைத்து சேர்ப்பது சிறந்த தன்மையை தரும்.
142. பாதியாக இருந்தால் மத்யமம், அதில் பாதி அதாவது கால்பாகம் அதமமாகும். நடுவில் தேவர்கள் வித்யேசர்கள் அதற்குமேல் மற்றகும்பங்களில் மந்திர மஹேச்வரர்களை பூஜிக்க வேண்டும். மத்தியில் சிவனை பூஜிக்க வேண்டும்.
143. அவரே ஆயிரம் நாமங்களால் சிறப்பிக்கப்படுகிறார்கள். ஆகையால் சிவனுடைய பல்வேறு பெயர்களாலேயே பூஜிக்கவேண்டும்.
144. மந்திரம் பொருள் மறைவான அக்ஷரங்களுடன் கூடியதாயும் நான்காம் வேற்றுமையுடனும் பிரணவத்தை முன்னிட்டும், நம: என்ற பதத்தை முடிவில் உள்ளதாயும், ஹோமங்களில் ஸ்வாஹா என்ற பதத்தையும் உபயோகிக்க வேண்டும்.
145. ஆயிரத்தெட்டு என்ற முறையில் ஆசார்யன் வெளிச்சுற்றைவிட வேண்டும். அங்கு தென்கிழக்கு முதலிய நான்கு மூலைகளில் நான்கு வியூகம் ஏற்படுத்த வேண்டும்.
146. உள்ளே உள்ள நாற்கோணங்களில் இவ்வியூ கத்திற்கு வெளியில் இவைகளுக்கு இடைவெளியில் ஹோமத்திற்காக ஸ்தாபிக்க வேண்டும்.
147. அதற்கு வெளியில் பதினாறு வியூஹங்கள் முன்போலவே செய்யவேண்டும். மற்றவை எல்லாம் சமானமாகும். இவை ஐநூற்றி எட்டு ஸ்தானத்தில் ஆகும்.
148. இருநூற்றி எட்டு நடுவில் உள்ள எட்டும் அதன் வெளியில் இருபத்தி ஐந்து கும்பங்கள் திக்குகள், மற்றும் விதிக்குகளில் வைக்க வேண்டும்.
149. வெளியில் பதினாறு எண்ணிக்கை உள்ள தாக திக்கு விதிக்குகளில் வைக்கவேண்டும். எட்டு வியூகங்களாக இருப்பின் இவ்விதம் சொன்ன முறைப்படி ஆகும்.
150. திரவ்யங்களின் அளவு மறுபடியும் விரிவாக சொல்லப்படுகிறது. ரத்னங்கள் உயர்ந்தவைகளாக அதன் தன் அளவால் சொல்லப்படுகிறது.
151. பத்து உளுந்தின் அளவு முதல் நிஷ்கம் என்ற அளவு வரை அதிகரித்ததாக உலோகத்தின் அளவாகும். உலோகத்தின் அளவு எவ்வளவோ அதுவே பாஷாணத்தின் அளவாகும்.
152. நிஷ்கத்தின் கால்பாக அளவிலிருந்து பலம் வரையில் விதை யளவு சொல்லப்படுகிறது. அது வரை அரிசியின் அளவும் சர்க்கரையின் அளவுமாகும்.
153. ஆனால் ஏழு பலம் அளவின் இரண்டு மடங்கு வெல்ல அளவும் வாசனை பொருள் அளவு தாதுக்களை போல் அளவுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
154. பழங்கள், பத்ரசூர்ணங்கள், அதேபோல் பொறி, சத்துமாவு, எள், கடுகு, மஞ்சள் மற்றும் சாணத்தூள் இவைகள் விபூதி அளவுப்படியாகும்.
155. பஞ்சகவ்யம், தயிர், பால் இவைகள் விபூதியை போன்ற அளவாகும். பாலை போலுள்ள அளவையும் அல்லது பாதி அளவிலுமோ நெய்யின் அளவும் பாலின் கால் பாக அளவோ பலம் என்ற அளவினாலோ தேனின் அளவுமாகும்.
156. பழம் இல்லையானால் கிடைத்ததை வைத்து மீதியை தண்ணீரால் நிரப்ப வேண்டும்.
157. நெய்யை போல எண்ணெயின் அளவாகவோ எல்லாம் பாத்திர அளவை பொறுத்தோ சிறந்தது. அரை, கால், அல்லது அதில் பாதி அளவாகவோ ஆகும். புஷ்பம் கை அளவாகும்.
158. மூலிகைகள் அதற்கு இணையாகவும் மருந்துகளில் அதன் உருவ அளவேயாகும். அதேபோல் அதன் பாத்திர அளவுமோ ஆகும். வேர் அளவு சந்தனத்தை போல ஆகும்.
159. காய்ந்த புஷ்பம், பழம், இவைகளின் அளவும் சந்தனத்தை போலாகும். மண் அளவும் முன் போலவே சந்தனத்தை போல் என்று மற்றவையும் இப்படியே என ஊகிக்கலாம்.
160. வைரம் எல்லா ரத்தனங்களுள்ளும் உலோகங்களுக்கும் ஸ்வர்ணமுமாகும். யவை எல்லா விதைகளுக்கும் தாதுக்களுக்குள் ஹரிதாளமும் சிறந்தது ஆகும்.
161. மூலிகைகள் இல்லாவிட்டால் (ஸஹதேவி) நற்குறிஞ்சிதாழை சிறப்பாக சொல்லப்படுகிறது. பழங்கள் இல்லையெனில் வாழைப்பழம் பத்திரங்கள் இல்லை யானால் பில்வ பாத்திரங்கள் ஆகும்.
162. புஷ்பங்களில் நீலோத்பலம் அல்லது தாமரையையோ சொல்லலாம். எல்லா வாசனை பொருட்களின் சந்தனம் சிறந்தது. மண்களில் தர்ப்பையடிமண் சிறந்ததாகும்.
163. மரப்பட்டைகளில் அரசமரப்பட்டை, கிழங்குகளில் பெருங்கோரை கிழங்கும், சர்க்கரை இல்லையெனில் வெல்லத்தையும், கரும்பு தேன் இவையில்லாவிடினும் வெல்லத்தை கிரஹிக்கலாம்.
164. பழம், புஷ்பம், இவைகள் கிடைக்காவிட்டால் அந்த பத்ரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த திரவ்யங்கள் எல்லாவற்றையும் மூலமந்திரத்தால் போட வேண்டும்.
165. பீஜமந்திரத்தினால் மடக்கினாலோ (பாத்திரம்) மாந்தளிர்களாலோ மூடி, ஹ்ருதய மந்திரத்தினால் பலவித வஸ்திரங்களை அணிவிக்க வேண்டும்.
166. வஸ்திரங்களை மிகுந்த கருப்பானவைகளையும் குறைவான வஸ்திரங்களையும் விடுத்து அஸ்திர மந்திரத்தினால் சந்தனம் புஷ்பம், தூபம் இவைகளை அந்தந்த மந்திரங்களாலும் கொடுக்க வேண்டும்.
167. தீபத்தை காண்பித்து லிங்க முத்திரையையும் காண்பித்து கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹோமம் ஆரம்பிக்க வேண்டும்.
168. எல்லா லக்ஷணங்களோடும் கூடிய குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ ஆயிரம் கவச விதானத்தில் ஐநூறு முறை ஹோமம் செய்ய வேண்டும்.
169. குண்டத்திற்கு உரிய முறையில் சொல்லப்பட்டபடி அக்னி ஸம்ஸ்காரங்கள் செய்து சமித், ஆஜ்யம், அன்னம், பொறி இவைகளை முறையாக ஹோமம் செய்ய வேண்டும்.
170. பொரசு, அத்தி, அரசு, ஆல் இவைகளை கிழக்கு முதலான திசைகளிலும், வன்னி, கருங்காலி, நாயுருவி வில்வம் இவைகளை அக்னி பாகத்திலிருந்து முறையாக சமித்துக்களை உபயோகிக்க வேண்டும்.
171. எட்டு பக்ஷத்தில் கூறிய ஸமித்துக்களில் முன்பு கூறப்பட்ட பக்ஷத்தில் கோணங்களை விட்டு விட வேண்டும். முதல் ஐந்து சமித்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வன்னி முதலான சமித்துக்களை விட்டு விடவேண்டும்.
172. நான்கு ஹோம விதானத்தில் பிரதானத்திலோ அல்லது கிழக்கிலோ நூறு அல்லது அதில் பாதி மூலமந்திரத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.
173. மூலமந்திர ஹோமத்தில் பத்தில் ஒரு பங்கு பஞ்ச பிரம்ம மந்திரங்களால் நேத்ரமந்திரங்களால் அதே போல் ஆறு அங்க மந்திரங்களாலும் ஹோமம் செய்து திவார பூஜை செய்து உள்ளே செல்ல வேண்டும்.
174. கர்ப்பகிருஹத்தில் நுழைந்து லிங்கத்தை சுத்தி செய்து ஸங்கல்பம் செய்து பீடத்தை அர்ச்சித்து மூர்த்தியை ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.
174. பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஸகளீ கரணம் செய்து பிறகு வித்யா தேஹ கல்பனை செய்ய வேண்டும்.
175. பாத்யம், அர்க்யம், ஆசமனம் இம்மூன்றையும் கொடுத்து சந்தனம் புஷ்பம், தூபம், தீபம் இவைகளை மூல மந்திரங்களினால் கொடுத்து எல்லா வாத்யங்களோடும்
176. நடனம், பாட்டு இவைகளோடும் சங்க வாத்ய சப்தத்தோடும் வேதம் ஸ்தோத்திரம் இந்த பாராயணத்தோடும் மணி சப்தத்தோடும்
177. ஜய சப்தத்தோடு கூடியதாகவும் சிவ கும்பம் வர்த்தனி இரண்டையும் எடுத்து இறைவனுக்கு எதிரே முக்காலியின் மேல் வைக்க வேண்டும்.
178. கடத்தில் உள்ள இறைவனுக்கும் தேவிக்கும் பாத்யம் முதலியவைகளையும் சந்தனம் புஷ்பம் தூபம், தீபம் இவைகளையும் கொடுத்து
179. ஆசார்யன் வலது கையால் கும்பத்தை மூடியுள்ள மடக்கு அல்லது மாவிலைகளை எடுத்து கூர்ச்சம் புஷ்பம் இவைகளை சிவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு
180. எடுத்து தத்வ சித்தத்தோடு லிங்கத்தின் தலையில் வைக்க வேண்டும். தேவியையும் இறைவனுக்கு இடது பாகத்தில் பூஜிக்க வேண்டும்.
181. சிவமந்திரத்தை நினைத்துக் கொண்டு கும்பதண்ணீரால் இறைவனை (ஸ்தாபனம்) அபிஷேகம் செய்ய வேண்டும். தேவியை பிண்டிகை ரூபினியாக நினைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
182. ஸத்யோஜாத மந்திரத்தினால் பாத்யத்தை இரண்டு பாதங்களிலும் ஈசானமுதல் ஸத்யோஜா தம் வரையிலான ஐந்து மந்திரங்களால் ஐந்து முகங்களில்
183. ஆசமனத்தையும் சிகையில் அர்க்யத்தையும் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்ய அபிஷேகம் முதலிய ஆரம்பத்திலும் பெரிய மணி சப்தத்தோடு சிரசில் அர்க்யம் கொடுக்க வேண்டும்.
184. எழுப்புதலோடு கூடிய தூபத்தை வைக்கலாம். ஆவரணபூஜை முடிவில் கட்டாயம் தூபத்துடன் கூடியதாக உபஸ்தானம் செய்ய வேண்டும்.
185. பல்வேறுவகையான பழங்கள், பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம் இவைகள் இருப்பின் அவைகளால் பரமேஸ்வரனை அபிஷேகம் செய்ய வேண்டும்.
186. வாசனாதி (பன்னீர்) சந்தன தீர்த்தத்தால் பிரோக்ஷித்து சந்தனத்தால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து அர்ச்சனை விதியில் கூறப்பட்டபடி செய்து ஹோமத்துடன் நிறைவு செய்ய வேண்டும்.
187. ஸகள ஸ்நபனம் என்றால் ஸகளஸ் தாபன முறையில் கூறியபடி ஆஸனம் முதலியவைகளை செய்து கும்பத்தில் மூர்த்தியை தியானிக்க வேண்டும்.
188. பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஸகளீகரணம் செய்து அந்த கலைகளை அங்கு வைக்கவேண்டும். (நியாஸம் செய்ய வேண்டும்)
189. வித்யா தேஹத்தை கல்பனை செய்து அந்தந்த உருவத்தோடு கூடியதாக இறைவனை தியானம் செய்து ஆசார்யன் பாத்யம் முதலியவைகளை ஹ்ருதயமந்திரத்தினால் கொடுக்க வேண்டும்.
190. சந்தனம் தூபம், தீபம், அர்க்யம் இவைகளை செய்து லிங்க முத்திரையையும் காண்பித்து கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும்.
191. கவுரியை வர்த்தினியில் பூஜை செய்து யோனி முத்திரை காண்பித்து கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து ஆவரண தேவதைகளான ருத்ரர்களை பூஜிக்க வேண்டும்.
192. முன்பு சொன்ன முறையினாலும் முறையாக ஸகளமூர்த்தியின் அருகில் சென்று ஆசனம், மூர்த்தி இவைகளால் பூஜை செய்ய வேண்டும்.
193. சகளீகரணம் செய்து வித்யாதேஹ சரீரத்தை கல்பனை செய்துகொண்டு ஸ்நபனம் முதலியவைகளை செய்து பிறகு பாத்யம், ஆசமனம் அர்க்யம் இவைகளையும் கொடுக்க வேண்டும்.
194. சந்தனம், புஷ்பம், தூபம், தீபத்துடன் மற்றும் இவைகளால் உபசாரம் செய்ய வேண்டும். முன்பு போல் குடத்தையும் எடுத்து சென்று சிவனின் ஹ்ருதயத்தில் மந்திரத்தை ஸமர்ப்பிக்க வேண்டும்.
195. அந்தந்த தேவதையின் மந்திரத்தை அந்த தேவியின் ஹ்ருதயத்தில் ஸமர்ப்பணம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்த பிறகு பாத்யம் முதலியவைகளை கொடுக்க வேண்டும்.
196. ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து மீதமுள்ள கடதீர்த்தங்களை ஈச்வரியிடமும் அபிஷேகம் செய்யலாம் அம்பாளுக்கு தனியாகவும் இருக்கும்போது தேவிக்கும் ஸ்தாபித்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
197. சித்திரத்தில் கண்ணாடி முதலியவைகளான ஸ்வாமிக்கு அதன் பாதத்தின் அடியில் சந்தனம் முதலியவைகளால் ஸ்நபனத்தில் கூறியபடி செய்ய வேண்டும்.
198. தேவியினிடத்தில் ஸ்நபனத்தில் கும்பத்தையோ கரகத்தையோ வைக்க வேண்டும். திரவ்யங்களில் பேதம் இல்லை. தேவதைகளில்தான் பேதம் உண்டு.
199. சாந்தி கலை முதலியவைகள் ஐந்து கும்பம் என்ற தன்மையிலும், ஒன்பதாக இருந்தால் வாமை முதலியவர்களும், தாரிகா முதலியவர்களையும் திக்குகளிலும் பூஜிக்க வேண்டும்.
200. அனந்தன் முதலியவர்களை விதிக்குகளின் கோணங்களில் பூஜிக்க வேண்டும். இது 25 கலச பூஜா முறையாகும். பிருத்வி முதலிய முக்கிய தேவர்களை இடது புறத்திலிருந்து பூஜிக்க வேண்டும்.
201. மேற்படியுள்ள தேவர்களை பெண்பால் உடையதாக பூஜிக்க வேண்டும். இங்கும் பால் முதலியவைகளால் ஸ்நபனம் (அபிஷேகம்) சொல்லப்படுகிறது பிராம்மணர்களே.
202. பால், தயிர், நெய், தேன் பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், கரும்புச்சாறு பழங்கள் எல்லா தான்யம் பொறி சத்துமாவு மற்றும் எல்லாவகை பொருட்களாலும்
203. மஞ்சள் பொடியாலும், பல்வேறு புஷ்பங்களாலும் இளநீர்களாலும் நல்ல பழங்களாலும் சிறந்த இடங்களில் இருக்கின்ற தண்ணீர்களாலும்
204. சந்தனம் மூலிகைகளோடு கூடியதாகவும் சுத்தமான தண்ணீராலும் சந்தனாதி தைலத்தாலும் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களாலும் முன் சொன்ன முறையில்
205. எல்லா தோஷங்கள் அகலவும் நினைத்தது நடக்கவும் அரசர்களுக்கு வெற்றி ஏற்படவும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
206. நீண்ட ஆரோக்யம் பெறவும், நீண்ட ஆயுள் பெறவும் எல்லா நலன்களையும் பெறவும் பலம், காந்தி இவைகள் பெற வேண்டும்.
207. நாட்டின் வறுமை போக்கவும், அதன் துஷ்டர்களை அழிக்கவும் நாட்டின் கலகமேற்பட்ட போதும் ஆச்சர்யமான சமயத்திலும் கெட்ட சகுனங்களிலும்
208. எல்லா உலகங்களையும் வசப்படுத்துவதற்கும் யானை, குதிரை, இவைகளின் வளர்ச்சிக்காகவும் அவைகளின் ரோகங்கள் போவதற்காகவும் நோய் உண்டாகமல் இருப்பதற்கும்.
209. சண்டைகளின் முயற்சிக்கும் தன் ஸேனையின் பலத்திற்கும் இறப்பின்மைக்கும் எதிரி சேனையின் குறைவிற்காகவும் பயத்திற்காகவும் மயக்கத்திற்காகவும்.
210. ஆண் பெண் விலங்குகள் மற்றும் அனைத்தின் நலனிற்காகவும் பிறந்த நாளிலோ அரசன் பட்டாபிஷேக நாளிலோ
211. அந்தந்த சந்திராஷ்டம தினங்களிலோ வைநாசிக நக்ஷத்திரத்திலுமோ அந்த கிரஹண காலங்களிலோ மற்றும் அயன விஷுவகாலங்களிலும் பிரதிஷ்டாகாலங்களிலுமோ
212. உத்ஸவம், பவித்ரோத்ஸவம், மரிக்கொழுந்து சாத்துதல், கிருத்திகா தீபம் மற்றும் மாச நக்ஷத்திரங்களிலும்
213. அஷ்டமி அல்லது சதுர்தசி அல்லது (அமாவாசையை) பவுர்ணமி மார்கழி மாதத்தில் சிறப்பான திருவாதிரையிலும்
214. பிராயச்சித்தமாக செயல்களிலும் நவநைவேத்ய கர்மாவிலும் மக்களுக்கு நன்மை தரும் காலங்களிலும் மக்களை காப்பாற்ற வேண்டிய சமயத்திலும்
215. சிறப்பு பூஜை காலங்களிலும் பக்த உத்ஸவ சமயங்களிலும் ஸ்வாமி வீதி யுலா காலங்களிலும் சிறப்பான வேட்டை உற்சவ நிகழ்ச்சிகளிலும்
216. தினமும் மூன்று வேளைகளிலுமோ அல்லது இரண்டு அல்லது ஒன்று என்ற முறையில் ஆசார்யர்கள் இறைவனுக்கு ஸ்நபனம் செய்ய வேண்டும்.
217. முன்பு சொன்ன முறையிலும் சில சிறப்புக்கள் சொல்லப்படுகின்றன. ஓர் கும்பத்தையோ அல்லது ஐந்து கலசங்களை ஸ்தாபித்து
218. முன் சொன்ன திரவ்யங்களுடனோ அல்லது வர்த்தனீ கும்பத்துடனோ பஞ்ச பிரம்மம் கூடிய ஐந்து கலசங்களுடனோ
219-220. ஒரு திரவ்யத்துடனோ அல்லது வர்த்தனி யோடும் இஷ்டமான பொருள்களை நடுவிலும் குறைந்த பொருட்களுடனோ ஓர் திரவ்யத்தை நான்கு திசைகளிலுமோ வெவ்வேறு திரவ்யங்களையுமோ பாத்யம், ஆசமனம், அர்க்யம் பஞ்சகவ்யம் இவைகளை வைத்தோ செய்யலாம்.
221. ஒன்பது கும்ப விதானத்திலும் இந்த முறை சரியானதே முன்பு கூறியவைகளில் குறைந்தாலும் திக்குகளில் பாத்யம் முதலியவைகளை செய்தாலும் செய்யலாம்.
222. தங்கம் முதலிய பாத்திரங்களில் செய்வது மிகவும் சிறந்ததாகும். முன் சொன்ன பாத்யாதி கர்மாக்களிலும் நித்யகர்மாவில் பாத்யாதிகர்மாக்களை செய்வது சிறப்புற்றதாகும்.
223. இருபத்தி ஐந்து கலசபூஜை முறையிலும் தினச்செயல் முறைகளில் சிறப்பு பெற்றதாகும் மிகச் சிறந்த பூஜையில் நூற்று எட்டு வரையில் செய்யலாம்.
224. தினபூஜைக்கு ஸ்நபனம் செய்தாலும் செய்யலாம். சிறப்பு பூஜைக்கு முன்பு சொன்ன முறையும் சிறந்தது.
225. இருபத்தி ஐந்து முதல் ஆயிரத்தெட்டு வரையில் இடையில் சில சிறப்புக்கள் சொல்லப்படுகின்றன.
226. நாற்கோணங்களை சேர்த்தாவது விட்டாவது இறைவனை தண்ணீரால் முன் சொன்ன முறைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும்.
227. சிரேஷ்டமான பூஜை செய்யுமிடத்தில் ஸ்நபன பூர்வமாக செய்தல் ஆகும். அது சிறந்த பலனை கொடுக்கும். உத்ஸவம் முதலியவைகளில் கார்ய குறைவை விட வேண்டும்.
228. குறைவான பூஜாகாலங்களில் நல்ல கிரியைகள் உயர்ந்ததல்ல. நித்யம், நைமித்திகம், காம்யம் என்று மூன்று விதமாக ஸ்நபனம் படிக்கப்படுகிறது.
229. நித்ய நைமித்திக கார்யங்களில் அனுசரித்து பாபங்கள் போவதற்கு செய்ய வேண்டும். உலக நன்மைக்காக வேண்டும் தான் விரும்பிய பலனுக்காகவும் காம்ய பூஜை செய்ய வேண்டும். தாழ்ந்ததை ஒரு பொழுதும் செய்யக்கூடாது.
230. அவச்யம் செய்ய வேண்டியதை செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற சந்தேகம் வருமே யானால் செய்ய வேண்டியதை செய்தால் மேன்மையும் செய்யாத பொழுது குற்றமும் ஏற்படும்.
231. லோகம், சாஸ்த்ரம் இரண்டிற்கும் சமமாக இருக்குமானால் அதை செய்வது நியாயமாகும். லோக சாஸ்திரங்களால் அதற்கு பொருத்தமில்லையானால் சந்தேகத்தை விட்டு விடலாம்.
232-233. கிரியை மந்திரம் இவைகள் சாஸ்திர பேதமாக இல்லாமலிருந்தாலும் கிரியை மந்திரம் இவைகள் பேதங்களுடன் தந்த்ர பேதமும் இருந்தால் ஆகையால் இவை மூன்றுமே சைவசாஸ்த்ரத்தில் செய்ய வேண்டும். மற்ற சாஸ்திரங்களை கூடாது உரிய முறைப்படி சைவ சாஸ்திரத்தில் உயர்வாக கூறாததை வேறு சாஸ்திர உயர்வை ஏற்கலாம்.
234. சாஸ்த்ர விதிக்கும் அனுபவத்தியிருக்குமேயானால் மற்ற சாஸ்திரத்தினால் உபபத்தி கூற வேண்டும். சாஸ்திரத்தில் பிராயசித்தம் முதலியவைகள் விரிவாக சொல்லப்படவில்லை என்றால் பிற சாஸ்த்ரங்களில் இருந்து எடுத்து கொள்ளலாம்.
235. சாஸ்த்ர முறையில் பொருள் நன்கு இருக்கும் பொழுது அதற்கு அங்கமாக ஸ்ருக் ஸ்ருவம் முதலியவைகள் தன் சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு சாஸ்தரங்களில் இருந்து கூறப்பட்டவைகளை எடுத்து கொள்ளக்கூடாது.
236. இவ்விதம் எல்லாவற்றையும் ஆராய்ந்து எந்த அரசன் செய்கிறானோ அவன் வெகுநாட்கள் சக்ரவர்த்தி யாக இருப்பான்.
237. அவருக்கு நீண்ட ஆயுள் நோயின்மை மனதில் நினைத்த கார்யம் வெற்றி, சந்தோஷம் சிவனிடத்தில் நிலையான பக்தி உடையவராக இருப்பான்.
238. மாறுபட்ட செய்கைகளை கண்டு யார் அலட்சிய படுத்துகிறானோ அந்த அரசன் நிச்சயம் அழிவை அடைவான் இதில் சந்தேகமில்லை.
239. புலன்களை வென்றவரும் ஐந்து கோத்ரத்தினால் பிறந்தவரும் சைவாகமத்தின் ஞானத்தை கரை கண்டவரும் ஆன சிறந்த அனுஷ்டானமுடையவராக ஆசார்யரைக் கொண்டு
240. தன் நாட்டு மக்கள் நன்மைக்காக செயல்களை நிறைவேற்ற செய்ய வேண்டும். ஆசார்யர்களிலே சிறந்த ஆசார்யனை சிவசாஸ்த்ரத்தில் தேர்ச்சி பெற்ற வரை கரஹிக்க வேண்டும்.
241. அவர் மூலமாகவே ஸ்நபனம் முதலியவைகளையும் செய்ய வேண்டும். சிறப்பு பூஜை அவராலேயே நினைத்ததை நிறைவேற்றுவதற்கு அனுஷ்டிக்க பட வேண்டும்.
242. பால், தயிர், நெய், தேன், நெல்லி மாவு, முதலியவைகளால் இறைவனை நன்கு ஸ்நான வேதிகையின் மேல் வைத்து அபிஷேகம் செய்விக்க வேண்டும்.
243. சந்தனம் மற்றும் வாஸனை தீர்த்தத்தால் சிவனை அபிஷேகம் செய்து சுத்த துனியால் ஒத்தி எடுக்க வேண்டும். சந்தனம் முதலியவைகளால் பூசி பட்டு முதலியவைகளால் சிவனை அலங்கரிக்க வேண்டும்.
244. சந்தனம் புஷ்பம், மாலைகள் இவைகளுக்கு பிறகு தூபம் தீபம் முதலிய உபசாரங்களும் கற்பூர ஹாரத்தி தீபாராதனை முதலியவைகளை செய்ய வேண்டும்.
245. ஐந்து வகையான சாதங்கள், பாயசம், சுத்தான்னம் இவைகளுடன் பலவகை காய்கறி பக்ஷணங்கள் மற்றும் பலவித பழங்களுடன் காய்கறிகளுடன் கொடுத்து
246. இவைகளை கொடுத்து தாம்பூலம் முகவாஸம் முதலியவை கொடுக்க வேண்டும். ஏலக்காய், லவங்கம், கற்பூரம், ஜாதிபத்திரி தக்கோல சூர்ணம் மற்றும் வாசனை பொருட்கள்
247. சுண்ணாம்புடன் சேர்ந்தது முகவாஸம் எனப்படும். வணங்கி அனுமதி பெற்று ஹோமத்திற்காக குண்டத்தின் அருகில் செல்ல வேண்டும்.
248. ஸ்மித், நெய், ஹவிஸ், எள், இவைகளால் நூற்றிஎட்டு முறை ஹோமம் செய்து நிறைவாக பூர்ணாஹுதி செய்ய வேண்டும்.
249. அதிலிருந்து விபூதி ரøக்ஷ எடுத்து எஜமானருக்கு கொடுக்க வேண்டும். வேண்டியதை பிரார்த்தித்து மீண்டும் மீண்டும் வணங்க வேண்டும்.
250. ஒரு நாள் முதல் ஆரம்பித்து ஏழுநாள் வரை செய்ய வேண்டும். இருமுறை அல்லது மூன்று அல்லது நான்கு ஐந்து என்ற முறைகளினாலோ செய்யலாம்.
251. ஆறு ஏழு என்ற எண்ணிக்கையானது செயலின் பலன் கிடைப்பதற்கு ஆகும். முன்பு கூறப்பட்ட பலனை கொடுக்க கூடியதானது விசேஷமான பூஜையாகும்.
252. நித்யத்தின் முடிவில் விரோதமின்றி நைமித்திகமாகும். நித்யம் செய்து கொண்டு இருக்கும்பொழுது நைமித்திகம் செய்ய வேண்டி இருந்தால்
253. நித்யத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டு நைமித்திகத்தை செய்ய வேண்டும். நித்ய சந்த்யாபூஜை அதன் பூஜா காலத்தின் முன்பு நைமித்திகமும் நித்ய பூஜையும் ஏற்பட்டால்
254. நைமித்திகம் தன்னுடைய காலத்தில் நிச்சயமாக செய்யவேண்டும். ஸந்தியை கூட குறுகிய காலத்தில் மற்றொரு கிரியை பகுதியில் செய்ய வேண்டும்.
255. இரு இடங்களிலும் தந்திரங்களாலேயே அனுஷ்டானம் செய்ய வேண்டும். தூபம் நைவேத்யம் வரை உள்ள நித்ய கர்மாவை செய்யவேண்டும்.
256. உரிய காலத்தில் செய்து நைமித்திக செயல்களை பிறகு செய்ய வேண்டும் நைமித்திக பூஜை பெரியதாக இருப்பின் அதன் காலத்தில் ஆரம்பித்து
257. ஒன்று முதலான ஆவரணத்துடன் கூடியதாகவே ஸந்த்யை பூஜை முதலியவைகளை முடித்து ஸந்தியாபூஜை முடிவில் எல்லா கலசங்களாலும் கூறிய முறைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும்.
258. நைமித்திகம் இரண்டு வந்தால் பெரியதை முதலில் செய்ய வேண்டும். சிறியதை பிறகு செய்ய வேண்டும் அல்லது இரண்டுமே சமமாக இருந்தால் விருப்பப்படி செய்யலாம்.
259. நைமித்திக காலமும் இரண்டு வகைப்படும். சிறியது பெரியது என்ற பிரிவில் அயனம் முதலியவைகள் சிறியவை ஆகும்.
260. கிரஹணம் முதலியவைகள் பெரிய காலங்கள் ஆகும். சூர்யகிரஹணத்தின் ஆரம்பத்திலும் சந்திர கிரஹணம் விடும் பொழுதும் விசேஷ பூஜை செய்ய வேண்டும்.
261. தட்சிணாயனம் வருவதற்கு முன்பும் உத்தராயனம் வந்த பின்பும் விஷுவம் போன்ற காலங்களில் நடுவிலும் ஸ்நபனம் முதலியவைகள் செய்ய வேண்டும்.
262. கன்னி, மிதுனம், மீனம், தனுசு இவைகளில் கடைசியிலும் சிம்மம், விருச்சிகம், கும்பம், விருஷபம் இவைகளில் முதலிலும் ஸ்நபனம் செய்யலாம்.
263. பாதி, ஒன்று அல்லது இரண்டு என்ற முடிவான யாமங்களிலோ அல்லது அரை ஒன்று அல்லது இரண்டு என்ற நாழிகை கணக்கிலோ ஆரம்பத்திலோ முடிவிலோ ஸ்நபனம் முதலிய செயல்களில் எடுத்து கொள்ள வேண்டும்.
264. ஆசார்யனை தங்க அணிகலன்கள் வஸ்திரங்கள் கொடுத்து உபசரிக்க வேண்டும். யாகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தங்கம் ஆடைகள் முதலியவைகளை
265. ஆசார்யனுக்காக கொடுக்க வேண்டும். வேறு ஒன்றுக்கும் உபயோகபடுத்தக் கூடாது. யாகத்தில் உபயோகிக்கப்பட்ட பொருள் அணிகலன் மற்றும் யாக மண்டபத்தில் உள்ள
266. ஸ்தண்டிலம் ஆடை, தங்கம், கும்பமோ, அல்லது கலசமோ முதலியவைகள் தோரணம், ஸ்ருக்ஸ்ருவம் அஷ்டமங்களம் நவரத்னங்கள்
267. ஹோமத்திற்கு செய்த ஹவிஸ், நைவேத்யம் மற்றும் கொட்டகை வலயங்கள் அங்கு உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள்
268. ஐந்து கோத்ரத்தில் பிறந்த ஆசார்யனுக்கே இவைகளை கொடுக்க வேண்டும். ஓர் நிஷ்கம் முதல் பத்து மடங்கு தட்சிணை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும்.
269. எட்டின் ஒரு பகுதி நிஷ்கதானம் ஹீனமாகும். அதில் பாதி அதமமாகும். ஒன்பது விதமாக தட்சிணை க்ஷீத்ரக்ரமமாக கூடி இறைப்பது கீழ்பட்ட செயலாக கூறப்படுகிறது.
270. தினமும் செய்து வந்தால் அபிவ்ருத்தியையும் மனஸ் சந்தோஷத்தையும் கொடுக்கும்.
இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் ஸ்நபன முறையாகிற நான்காவது படலமாகும்.
படலம் 3: ஸகளார்ச்சனா விதி!
படலம் 3: ஸகளார்ச்சனா விதி!
மூன்றாம் படலத்தில் ஸகளார்ச்சன விதி கூறப்படுகிறது. ஸகளார்ச்சனம் ஸர்வாபீஷ்டமென கூறப்படுகிறது. ஆசார்யன் சவுசாசமனஸ்நான ஸந்தியாவந்தன தர்பணம் முடித்து ஆலயம் நுழைந்து பாத பிரக்ஷõளன ஆசமன பஸ்மதாரணம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஆத்மசுத்தி விஷயத்தில் செய்யவேண்டிய கிரியைகள் நிரூபிக்கப்படுகிறது. பின்பு கரந்யாஸபூர்வம் ஆத்மாசிவயோஜநம் பூதசுத்தி, ஆத்மா சைவதநுகல்பன பிரகாரம் இவ்வாறான விஷயங்கள் பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் கரன்யாஸம் அனுஷ்டிக்கப்படுகிறது. பிறகு ஸ்தான சுத்தி, த்ரவ்ய சுத்தி மந்திர சுத்தி பிரகாரம் ஸம்÷க்ஷபமாக நிரூபிக்கப்படுகிறது. பின்பு த்வாரபூஜை, பேரசுத்தி பிரகாரம் கூறப்படுகிறது. பிறகு ஆஸந கல்பன பிரகாரம் மூர்த்தி கல்பனம் நிரூபிக்கப்படுகிறது. வித்யா தேஹகல்பனம் விசேஷமாக பிரதிபாதிக்கப்படுகிறது. ஸதாசிவன், மஹேசன், ருத்ரன் என மூன்றுவிதமாக சிவதேஹம் கூறப்பட்டுள்ளது. இதுவே வித்யாதேஹமென கூறப்படுகிறது. சிவனுடைய சமயவாயிநியான விமலாசக்தி ஸதாசவ சரீரமாக கூறப்படுகிறது. மஹேச்வரி மூர்த்தி சவும்யரூபிணி, ரவுத்ரீ மூர்த்தி, உக்ரஸ்வரூபிணி, பிரம்மா, விஷ்ணு ருத்ர, மஹேச சதாசிவர் ஆகியவர்கள் காரண தேவர்கள் ஆகும். ஸதாசிவ தேஹத்திற்காக அஷ்டத்ரிம்சத்கலாந்யாஸம் செய்யவேண்டும். ருத்ர ஈசர்களுக்கு சரீரசித்திக்காக ஏகத்ரிம்சத் கலாந்யாஸம் செய்யவேண்டும் என்று ஸ்தான விஷயங்கள் வித்யாதேஹவிஷயத்தில் பிரதிபாதிக்கப்படுகிறது.
இவ்வாறு காலாந்தக கஜாரிமூர்த்திகளின் த்யான விஷயமும் கூறப்படுகிறது. பின்பு முன்பு கூறிய மூர்த்திகளின் ஆவாஹநபிரகாரம் ஸம்÷க்ஷபமாக சூசிக்கப்படுகிறது. பிறகு ஸ்தாபனாதிகம், பாத்யாதிகம், கந்த புஷ்பப தூபதீப நைவேத்யமும் எல்லாமும் லிங்கார்ச்சனை விதிப்படி செய்யவும் என சூசிக்கப்படுகிறது. பிறகு பஞ்சமாவரணம் அல்லது நான்கு, மூன்று, இரண்டு, ஒன்றாவது ஆவரணங்களில் இஷ்டப்பட்ட ஆவரணார்ச்சனம் முன்பு கூறியபடி உள்ள விதியாகும் என்று ஆவரணார்ச்சனை சூசிக்கப்படுகிறது. பிறகு பரிவாராலய, ஸ்வதந்த்ராலயத்தில் பலி அர்ப்பணிக்க வேண்டும். இதில் ஹோமம் நித்யோத்ஸவமாவது செய்ய வேண்டும். இங்கு கூறப்படாத சுத்த ந்ருத்தாதிகள் எல்லாம் லிங்கார்ச்சனைபடி செய்ய வேண்டும். சுத்த ந்ருத்தமின்றி எல்லா கர்மாவும் செய்யலாம் என்று கல்பிக்கப்படுகிறது. நடராஜருக்கு பிரதோஷாதிகளில் நீராஜன விதி விதிக்கப்படுவதாக சூசிக்கப்படுகிறது. உத்ஸவ ஸ்நபன தமநாரோபண பவித்ராரோஹண க்ருத்திகா தீப, வசந்தோத்ஸவ, மாஸோத்ஸவ நவநைவேத்ய கர்ம, பிராயச்சித்த ஜீர்ணோத்தாரண கர்மாக்களில் தேவருக்கு செய்யக்கூடிய விஹிதமான எல்லா கர்மாக்களும் தேவிக்கும் செய்தல் வேண்டும் என்று சூசிக்கப்படுகிறது. தேவி விஷயத்தில் பூரநட்சத்திரத்துடன் கூடிய ஆடி மாதத்திலும் ஐப்பசி மாதத்திலும் பூர கர்மவிதி செய்யவேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறு ஸகளார்ச்சனை விஷயம் கூறப்பட்டு மஹேச்வர விஷயத்தில் கவுரி. அவ்வாறே சதாசிவ விஷயத்தில் மனோண்மணியையும் அந்தந்த சக்தி மந்திரத்தினால் பூஜிக்கக் கூடிய கவுரியின் ந்யாஸ விஷயத்தில் ஷட்விம்சதி கலாந்யாஸத்தில் மூர்த்தி கல்பனம் செய்தல் வேண்டுமென சூசிக்கப்படுகிறது. இவ்வாறாக மூன்றாவது படல கருத்து தொகுப்பு ஆகும்.
1. எல்லா நன்மைகளையும் அளிக்கக்கூடிய (உருவ) ஸகள பிம்பங்களின் பூஜை முறைகளை கூறுகிறேன். சவுசம், ஆசமனம், ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், தர்பணம் முதலியவைகளைச் செய்துவிட்டு
2. கோயிலை அடைந்து கால்களை அலம்பி ஆசமனம் செய்து விபூதியை தண்ணீரோடு கலந்து பூசிக்கொள்ள வேண்டும்.
3. உரிய முறைப்படி திருபுண்ட்ரம் விபூதி தரித்துக் கொண்டு கரன்யாசம் செய்து சிவபாவனை செய்ய வேண்டும்.
4. பூதசுத்தி செய்து அம்ருதாப்லாவனை செய்து ஆத்மாவில் சிவனை ஆவாஹனமும் செய்து ஈசான மந்த்ரம் முதலான பிரம்ம மந்திரங்களால் கரநியாஸம் செய்ய வேண்டும்.
5. தன் உடலில் கலாநியாசம் செய்து ஈசான மந்திரத்தை சிரசிலும் தத்புருஷ மந்த்ரத்தை முகத்திலும் மாலாமந்திரத்தை தியானித்து
6. மற்றதை முன்போல் செய்து முப்பத்தோறு கலாசக்திகளோடு கூடிய நியாஸம் செய்து, அந்தர்யாகம் செய்து பிறகு ஸ்தான சுத்தியை செய்ய வேண்டும்.
சந்தனம், புஷ்பம், அக்ஷதைகள் சேர்த்து விசேஷார்க்யம் தயார் செய்து கொண்டு
7. நிரீக்ஷணம் முதலிய நான்கு ஸம்ஸ்காரங்களால் திரவயசுத்தி செய்துகொண்டு முன்புபோல் தன்னையும் பூஜை செய்துகொண்டு மந்த்ர சுத்தி செய்துகொள்ள வேண்டும்.
8. அஸ்திரமந்திரத்தால் வாயிலை ஜலத்தினால் தெளித்து (பிரோக்ஷணம் செய்து) விருஷபத்தை எதிரில் பூஜை செய்து வாயிலின் இரண்டு பக்கங்களிலும் மேல் பாகத்தில் வினாயகரையும், ஸரஸ்வதியையும்
9. நந்தி, மஹாகாளர், கங்கை, யமுனை முதலியவைகளை பூஜை செய்து கீழே அஸ்திரத்தையும், பூஜை செய்து உள்ளே செல்ல வேண்டும்.
10. வாஸ்து பிரம்மாவிற்கு புஷ்பங்களை அணிவித்து அர்க்யம் கொடுத்து ஈசான மந்திரத்தால் சிவனுடைய மாலை முதலியவைகளை எடுத்து
11. வஸ்திரத்தினாலோ அல்லது தண்ணீராலோ சுத்தம் செய்து ஆதார சக்தி முதல் அனந்தன், தர்மம், அதர்மம் முதலியவைகளை வணங்கி பூஜை செய்து
12. அதச்சதனம், ஊர்த்வச்சதனம், என்ற இவைகளின் மேல் தாமரையின் கர்ணிகையில் ஹ்ருதய மந்திரங்களோடு கூடிய வாமாதி(களை) சக்திகளை பூஜித்து சிவாஸனம் பூஜை செய்ய வேண்டும்.
13. அங்கு மூர்த்தியை ஆவாஹணம் செய்து வித்யாதேஹம் கல்பிக்க வேண்டும், ஸதாசிவன், மஹேசன், ருத்திரன் என்ற மூன்றாகச் செல்லப்படும் மூர்த்தியின் பெயர்களே
14. சிவதேஹம் என்று சொல்லப்படுவதாகும். அதுவே வித்யாதேஹம் என்று சொல்லப்படுகிறது. எந்த குற்றமற்ற பரிசுத்தமான சக்தி சிவனோடு இணைந்து ஒன்றாகவே இருப்பதாக உள்ளதோ
15. அந்த உருவமே செயல் மாறுபட்டால் ஸதாசிவ சரீரமாக எண்ணப்பட்டது ஆகும். அப்படியே மஹேச்வரியின் உருவம் அழகான உருவமானதாக மஹேச்வரீ என்பதாகும்.
16. அப்படியே உக்ரவடிவத்துடன் உடையவள் ரவுத்திரி எனப்படுகிறாள். இந்த கிரியாசக்திகளுக்கு குண்டலினி சக்திதான் காரணமாக இருக்கிறாள்.
17. பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மஹேஸ்வரன், ஸதாசிவன், ஆகிய காரண தேவர்கள் ÷க்ஷத்திரக்ஞர்கள் என்று கூறப்படுகிறார்கள்.
18. பிரம்மா, விஷ்ணு இவர்களின் உருவமானது மாயையின் காரணம் என கூறப்படுகிறது. ருத்திரன், ஈஸ்வரன், ஸதாசிவன் இவர்களின் மூர்த்தி அமைப்பு கிரியா வடிவமாக கூறப்படுகிறது.
19. இவ்வாறாக ருத்திரன், ஈஸ்வரன், ஸதாசிவனுக்கு மூன்றுவிதமாக கூறப்பட்டுள்ளன. அவ்வாறாக சிவனுடைய சரீரத்தை ஞானமயமாக கூறப்பட்டுள்ளது.
20. அந்த மூன்று வகையான சரீரங்களின் சித்தியின் பொருட்டு மூர்த்தியை கல்பிக்க வேண்டும். ஹ்ருதய மந்திரமான ஹாம் என்ற பீஜங்களைக் கொண்டு அந்த மூர்த்தியில் பஞ்சப்ரும்மங்களை சேர்க்க வேண்டும்.
21. பிறகு சாந்தியதீத கலை முதலான கலாந்நியாசத்தை சிவனுக்கு செய்ய வேண்டும். அதன் முறை கூறப்படுகிறது. ஈஸ்வரனுடன் கூடிய சரீரத்தில் சித்தி ஏற்படுவதற்காக 38 கலைகளுடன் கூடிய நியாஸம் கூறப்படுகிறது.
22. ருத்திரன், ஈஸ்வரன் இவர்களின் சரீர சுத்தியின் பொருட்டு 31 எண்ணிக்கையுள்ள கலாந்நியாஸம் செய்ய வேண்டும். 38 எண்ணிக்கையுள்ள கலாந்நியாச மானது முன்பே சொல்லப்பட்டுள்ளது.
23. 31 எண்ணிக்கையுள்ள கலாந்நியாஸத்தில் விசேஷம் சிறிது கூறப்படுகிறது. மஹேஸ்வர விக்ரகத்திற்கும், ருத்திர மூர்த்திக்கும் ஒரு சிரசும், ஒரு முகமும் ஆகும்.
24. அங்கு ஈசானமுக மந்திரத்தினால் ஸகள விக்ரகத்தில் மாலா மந்திரத்தினாலும் விசேஷமாக முன்பு போல் நியாஸம் செய்யவேண்டும்.
25. ஸதாசிவஸ்வரூபத்தை தியானம் செய்து பதினான்காவது ஸ்வரமான ஒள என்ற எழுத்தையும் ஆறாவது எழுத்தான ஊ என்ற எழுத்தையும்
26. சாந்தம் என்றதான ஹ என்ற எழுத்தையும் ஹ்ருதயத்திற்கு உட்பட்டதான ஹாம் என்ற எழுத்தையும் சேர்த்து வித்யாதேகம் கல்பிக்க வேண்டும் (ஓ ஹாம் ஹளம் வித்யாதேகாய நம:) இவ்வாறாக ஸதாசிவ பிம்பம், லிங்கம் இவைகளில் பூஜிக்க வேண்டும்.
27. மஹேசன், நிருத்த மூர்த்தி, முதலியவைகளின் தியானத்தை அமைதி உருவமாக தியானித்து மஹேஸ்வரனுடைய மந்திரத்துடன் கூடியதாக பிம்பம் அமைக்கும் முறைப்படி தியானிக்க வேண்டும்.
28. காலாரிமூர்த்தி, கஜஸம்ஹாரமூர்த்தி இவைகளை ரவுத்ர சொரூபமாக தியானித்து அந்தந்த மூர்த்தி மந்திரத்தோடு வித்யாதேகம் கல்பிக்க வேண்டும்.
29. மஹேசன் ருத்திரமூர்த்தி இவர்களுக்கு ஸதாசிவனை பூஜிக்க வேண்டும். இவர்களுடைய வித்யாதேஹ கல்பனையிலும் மந்திரம் ஸதாசிவனுக்கு போல எல்லா இடங்களிலும் சிவனேதான் ஆகும்.
30. அந்த ஆவாஹண மந்திரம் மந்திரோத்தார விதியில் சொல்லப்பட்டுள்ளது. அந்த முறையிலேயே ஆவாஹணம் செய்ய வேண்டும். முன்பு கூறப்பட்டபடியே சிவனுடைய மூன்று தேஹங்களிலும் ஆவாஹணம் செய்து
31. ஸ்தாபனம் முதலியவைகளையும் பரமேஸ்வரனுக்கு செய்து பிறகு பாத்யம், (ஆசமனம்) சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் முதலியவைகளையும் கொடுத்து
32. தாம்பூல ஸமர்பணம் வரையில் அனைத்தும் நிஷ்களார்ச்சளையில் போல் செய்ய வேண்டும். ஐந்து ஆவரணம், நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று ஆவரணத்தோடு
33. இஷ்டமான ஆவரணத்தோடு கூடியதாக முன் சொன்ன முறையில் ஆசார்யன், பூஜை செய்ய வேண்டும் பரிவாரங்களோடு கூடியிருந்தால் அதில் பலியிட வேண்டும்.
34. ஹோமமும், நித்யோத்ஸவமும் ஸ்வப்ரதான ஆலயத்தில் செய்யவேண்டும். சுத்த நிருத்தம் முதலியவைகள் எவை எவை சொல்லப்படவில்லையோ, அவைகளை நிஷ்கள சிவனுக்கு சொன்னதுபோல் செய்யவேண்டும்.
35. திவார பாலார்ச்சனையோடும், பலி ஹோமம் இவைகளோடு கூடியதாகவும், சுத்த நிருத்தத்தை தவிர்த்தோ எல்லா செயல்களையும் செய்ய வேண்டும்.
36. பிரதோஷம் முதலியவைகளில் நடராஜருக்கு நீராஜநம் செய்யவேண்டும். உத்ஸவம், ஸ்னபநம், மரிக்கொழுந்து சாத்தும் விழா முதலியவைகளிலும்
37. பவித்ரோத்ஸவம், கிருத்திகாதீபம், ஸம்வத்ஸர உத்ஸவம் வஸந்த உத்ஸவம், முதலியவைகள்
38. அந்தந்த மாஸத்தில் மாஸோத்ஸவம், பிராயச்சித்தம், நவநைவேத்யம் (தைபொங்கல்) ஜீர்ணோத்தாரணம், முதலியவைகளை (ஆசார்யர்கள்) செய்ய வேண்டும்.
39. ஸ்வாமிக்கு கூறப்பட்ட எல்லா பூஜை முறைகளையும் தேவிக்கும் செய்யவேண்டும். மேலும் ஆடி மாத பூரநக்ஷத்திரத்திலும் ஐப்பசி மாத பூரநக்ஷத்திரத்திலும்
40. ஆதிசக்திக்கு அன்னம், பழம், புஷ்பமிவைகளால் பிம்பம் முழுவதும் நிரப்பி செய்யப்படும் பூஜையான பூரகர்மாவையும் செய்யவேண்டும். மஹேச்வரனின் சக்தி, கவுரி என்றும் ஸதாசிவனின் சக்தி மனோன்மணி என்பதுமாகும்.
41. மனோன்மணீ மந்திரத்தால் மனோன்மணியில் பூஜை செய்யவேண்டும். கவுரி மந்திரத்தால் கவுரியை இருபத்தாறு கலைகளோடு கூடியவைளாய் பூஜை செய்ய வேண்டும்.
42. ஆதி சக்தியின் மந்திரத்தினால் ஆதி சக்தியை பூஜை செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தர காமிக மஹாதந்திரத்தில் உருவ பிம்ப பூஜை முறையாகிய மூன்றாம் படலமாகும்.
52. ஸ்ரீ சங்கரானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
52. ஸ்ரீ சங்கரானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
ஐம்பத்தா இரண்டாவது ஆச்சார்யர் [கி.பி.1385 - 1417]
ஸ்ரீ சங்கரானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் பிறந்தார். தந்தையின் பெயர் "பால சந்திரன்". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''மஹேசர்".
இவர் ஸ்ரீ வித்யாரண்யருக்கு உதவியாக இருந்தார். இவர் "பகவத்கீதைக்கு" பேருரை எழுதி இருக்கிறார். ''ஆத்ம புராணம்'' என்கிற நூலையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கி.பி.1417 ஆம் ஆண்டு, துர்முகி வருடம், வைகாசி மாதம், வளர்பிறை, காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 32 ஆண்டு காலம் பீடத்தை அலங்கரித்துள்ளா
ர்.