கந்த சஷ்டி தந்த தேவராயர்
வல்லூரில் வீராசாமி என்பவருக்கு பிள்ளையில்லாத குறையை நீக்க பிறந்தவர் தேவராசர். இவர் பெங்களூரில் வசிக்கும் போது, தீராத கொடிய வயிற்று வலியால் அவதிப்பட்டார். அப்போது அவர் முருகனின் அருளைநாடி திருச்செந்தூர் அடைந்தார். அன்று கந்தசஷ்டித் திருவிழாவில் முதல்நாள். முருகனின் முன்வந்தவுடன் வலி குறையத் துவங்கியது. அதனால் தேவராசர், முருகன் மீது கவசம் பாடலானார். 6 நாட்களும் முருகனைத் துதித்துப் பாடியதே கந்த சஷ்டி. (ஆறு) கவசம், சஷ்டி விழாவில் பாடியதாலும் சஷ்டி கவசம். கவசம் ஆறாயினும் ஒவ்வொன்றும் தனிப்படை வீட்டுக்கு உரியதல்ல. ஒவ்வொன்றிலுமே மற்ற படை வீடுகள் சிறப்பு தெரிகிறது. அதுமட்டுமின்றி, படைவீடு அல்லாத தலங்கள் பலவும் வர்ணிக்கப்படுகின்றன. கந்த சஷ்டி கவசங்களை முருகனின் எண்ணில்லா தன்னிகரிலா உலகத்திலுள்ள அனைத்துத் தலங்களுக்கும் உரியனவாகக் கருதுவதே முறை எனத் தோன்றுகிறது. எல்லா கவசமும் ஒரே ராகத்தில் பாடலாம். தினமும் படிக்கலாம். இயலாதவர்கள் செவ்வாய். கார்த்திகை, சஷ்டி தினங்களில் மட்டுமாவது படிப்பது மிகவும் நல்லது. இதில் குன்று தோறாடல் என்பது திருத்தணிக்கு மட்டுமின்றி எல்லா குன்று மீது உள்ள முருகனுக்கும் உகந்தது.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 14 டிசம்பர், 2020
கந்த சஷ்டி தந்த தேவராயர்
பானுதாசர்
பானுதாசர்
பயிர் பச்சைகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த நகரம் பைடனிபுரம். இந்நகரத்து மக்கள் தெய்வ பக்தியில் சிறந்தவர்கள். இங்கு சூரிய நாராயணர் என்ற பெரியவர் வசித்தார். இவர் தினமும் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தபின்னரே தமது வேலைகளைச் செய்வார். இவருக்கு சூரிய பகவானின் அருளால் ஒரு மகன் கிடைத்ததால், பானு என பெயரிட்டார். பானுவுக்கு ஏழு வயது ஆனதும், உபநயனம் செய்வித்து வேத அத்யனத்தை கற்பித்தார். ஆனால், தந்தையின் அடிக்குப் பயந்து ஒப்புக்குப் படிப்பான் பானு. இதனால் பெற்றோர் மிக வருந்தினர். ஒருநாள் தந்தைக்கு கோபம் உச்சிக்கு ஏற, மகனை நன்றாக அடித்துவிட்டார். இனி இங்கு இருந்தால் தந்தையார் நம்மை அடித்தே கொன்றுவிடுவார் என்று எண்ணிய பானு வீட்டைவிட்டு நகரை அடுத்துள்ள காட்டிற்கு சென்று விட்டான். பசி, தாகம் கண்ணை இருட்டிக்கொண்டு ஒரு மண்டபத்திற்குள் நுழைந்தான். அது சூரியதேவன் கோயில். சூரியதேவனைப் பார்த்ததும் துதிக்க வேண்டும் என்று மனதில் தோன்ற, இரு கரம் தூக்கி, பகவானே ! வீட்டில் பெற்றோர் அடிக்கும் அடிக்குப் பயந்து உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றும், என்று மனமுருக வேண்டி நின்றான். கதிரவன் ஓர் அந்தணர் வேடம் புனைந்து அவன் முன் காட்சிதந்தார். ஒளிவீசும் அவரின் முகமலரைக் கண்டு வியந்த சிறுவன் அவர் பாதங்களில் பணிந்து, ஐயனே ! எனக்கு வேதங்கள் வரவில்லை. தாங்கள்தான் காக்க வேண்டும் என்றான்.
கதிரவன் அவனை அணைத்து, குழந்தாய் ! இனி உன்னை யாரும் அடிக்கமாட்டார்கள். இன்றுமுதல் உனக்கு எல்லாவிதக் கலைகளும், வித்தைகளும் வரும். ஸ்ரீ பாண்டுரங்கனின் புகழ்பாடி அவரை பக்திசெய், என்று கூறி மகாமந்திரத்தை உபதேசித்தார். அறிவு ஒளி வீச பானு வீடு திரும்பினான். பானுவின் கண்களில் வீசி அறிவு ஒளிரக்கண்டு பெற்றோர் வியந்தனர். அவர்களிடம் காட்டில் நடந்தவற்றைக் கூறினான். காலம் உருண்டோடியது, பானு இளைஞன் ஆனான். அவனின் பக்தியையும் அறிவையும் கண்டு மக்கள் அவனை பானுதாசர் என அழைக்கலாயினர். தக்க வயதில் பானுதாசருக்கு மணம் முடித்தனர் பெற்றோர், அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குத் தன் தந்தையின் பெயரான சூரியநாராயணன் என்ற பெயரை வைத்தார். பானுதாசரின் மனம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவில்லை. இறைவனைப் போற்றிப்பாடுவதே தன் கடமை என்று நினைத்தார். இதனால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. உறவின வியாபாரிகள் சிலர் பானுதாசரின் குடும்பம் கஷ்டப்படுவதைக்கண்டு அவருக்கு, சிறிய ஜவுளிக்கடை வைத்துக் கொடுத்தனர். அத்துடன் வியாபார நுணுக்கங்களான உண்மையைச் சொல்லி விற்றால் லாபம் கிடைக்காது. பொய் சொல்லிவிற்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். பானுதாசர் ஜவுளிக்கடையை ஏற்றுக்கொண்டார். வியாபார நுணுக்கங்களை காற்றில் பறக்க விட்டார். பதிலாக கடைக்கு வருபவர்களிடம் நல்ல கருத்துக்களை கூறுவார். இதனால் இவர் பெருமை எங்கும் பரவியது. மக்களும் இவர் கடையில் குவிந்தனர். விற்பனையும் பெருகிற்று. மற்ற கடைகளின் வியாபாரம் மந்தம் அடையத் தொடங்கியது. இதனால் எல்லோரும் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது போல் நாமே நம்மைக் கெடுத்துக்கொண்டோமே என்று பொறாமையும், கலக்கமும் கொண்டனர். இதற்கு ஒரு முடிவு கட்ட ஏற்பாடு செய்தனர்.
ஒருநாள் எல்லா வியாரிகளும் குதிரைகளின் மேல் சரக்குகள் ஏற்றி வெளியூர் சென்றனர். பானுதாசரும் தம் சரக்குகளுடன் புறப்பட்டார். வியாபாரம் முடிந்து ஊர் திரும்பும்போது இருட்டத் தொடங்கவே நடுவில் உள்ள ஒரு சிற்றூரில் உள்ள கோயில் மண்டபத்தில் மீதி சரக்குகளுடனும், விற்ற பணத்துடனும் தங்கினர். கோயிலுக்குள் ஹரிதாசர் என்னும் உபன்யாசர், பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த பானுதாசர் மற்றவர்களிடம் தம் பொருள்களைப் பார்த்துக் கொள்ளும்படியும், பிரசங்கம் கேட்டுவிட்டு வருவதாகவும் கூறி கோயிலுக்குள் சென்றுவிட்டனர். மற்ற வியாபாரிகள், கடவுளே நமக்கு நல்ல வாய்ப்பு அளித்துள்ளார் என்று நினைத்தனர். பானுதாசரின் பொருள்கள் அனைத்தையும் ஒரு பாழும் கிணற்றில் போட்டனர். குதிரையை அவிழ்த்து விரட்டி விட்டனர். பானுதாசரிடம், பொருள்கள் களவு போய்விட்டது என்று சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தனர். நள்ளிரவில் கொள்ளையர் கூட்டம் மண்டபத்தைச் சூழ்ந்தது. அவ்வளவுதான் என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். அப்போதுதான் தாங்கள் செய்த தவறை உணர்ந்தனர். பானுதாசரின் பொருள்களை அபகரிக்க நினைத்தோம். நமது பொருள்கள் பறிபோயின. உயிர்பிழைத்ததே கடவுள் புண்ணியம். பானுதாசர் தெய்வ பக்தி மிக்கவர். அவர் பொருள்கள் பத்திரமாக கிணற்றில் இருக்கின்றன. நமது பொருள்கள்தான் போய்விட்டன என்று மனம் வருந்தினர். பானுதாசர் ஹரிதாசரின் பிரசங்கத்தைப் பற்றி அசைபோட்டபடி மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வழிப்போக்கன், ஐயா ! இந்தாருங்கள் உங்கள் குதிரை, என்று அவரிடம் கடிவாளத்தைக் கையில் கொடுத்துச் சென்றான்.கட்டி வைத்த குதிரை எப்படி இங்கே வந்தது ? கொடுத்துச் சென்ற மனிதர் யார் ? என்ற சிந்தனையுடன் அந்த மனிதனிடம் கேட்பதற்குள், வந்தவரைக் காணவில்லை. குழப்பத்துடன் அவர் மண்டபத்திற்கு வந்தார். அங்கே எல்லோரும் அழுதுகொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தனர். எல்லோரும் நடந்ததைக்கூறி வருந்தினர். அவர்களிடம், ஐயா ? நீங்கள் தான் எனக்கு வியாபாரம் செய்ய வழி செய்தீர்கள். இவை உங்களின் உடைமை. கிணற்றில் கிடப்பவற்றை நீங்களே பகிர்ந்து கொள்ளுங்கள், என்றார். இதன்பின் பானுதாசர் தெய்வ பக்தியில் மனம் செலுத்தினார். இறைவனைப் பற்றிப் பாடுவதையே தன் கடமையாகக் கொண்டார். யாராவது நண்பர்களோ, உறவினர்களோ ஏதாவது கொடுத்தால்தான் சாப்பாடு. சில சமயங்களில் கையில் கிடைத்ததையும் தானம் செய்து விடுவார். பஜனை, தியானம், நாம சங்கீர்த்தனம். இதுவே பானுதாசரின் உயிர் மூச்சாக இருந்தது. தக்க தருணத்தில் இறைவன் அவரை ஆட்கொண்டார்.
தர்மத்தின் சட்டம்
தர்மத்தின் சட்டம்
மாதவ முனிவரான மாண்டவ்யர் இமயமலையில் அடர்ந்த காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது தவம் ஈடு இணையற்றது. சிவனை வணங்கி அவரது உயரிய அருளைப்பெற்றிருந்தார். உலகிலுள்ள அனைத்து முனிவர்களும் மாண்டவ்யரின் தவத்திற்கு முன்னால், தங்களது தவம் மிகவும் சாதாரணமானது என்பதை உணர்ந்திருந்தனர். எனவே அவர்கள் மாண்டவ்யருக்கு மிகவும் மரியாதை கொடுத்து வந்தனர். அந்த மாமுனிவருக்கும் ஒரு சோதனை வந்தது. ஒரு முறை சாலவ தேசத்தில் கள்வர்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. அவர்கள் பொதுமக்களை கொன்று பொருள்களை திருடிச் சென்றனர். காவலர்களால் இவர்களை பிடிக்கவே முடியவில்லை. கொள்ளளையர்களின் தலைவன் ஒரு திட்டமிட்டான். தன் கூட்டாளிகளை அழைத்து, இப்படி சிறிய திருட்டை செய்வதை விட்டு விட்டு, அரண்மனை கஜானாவை கொள்ளையடித்து விட்டால் சொகுசான வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறினான். தலைவனின் திட்டப்படி கொள்ளையர்கள் அரண்மனைக்குள் புகுந்து காவல் காத்த அத்தனை வீரர்களையும் கொன்று கஜானாவை கொள்ளையடித்து குதிரைகளில் தப்பியோடினார். இவைகளை கவனித்த காவலர்கள் அவர்களை விரட்டினர். களைந்து போன திருடர்கள் கொள்ளையடித்த பொருட்களை தவம் செய்து கொண்டிருந்த மாண்டவ்யரின் ஆசிரமத்திற்குள் போட்டு விட்டனர். அங்கே வந்த காவலர்கள் ஒளிந்திருந்த திருடர்களை பிடித்தனர்.
தவத்தில் இருந்த மாண்டவ்யரை எழுப்பிய போது அவர் அசையவே இல்லை. எனவே அப்படியே மன்னனிடம் தூக்கி சென்றனர். மன்னன் எப்படி கேட்டும் மாண்டவ்யர் அசையவே இல்லை. இதனால் கோபம் கொண்ட மன்னன் முனிவரை கழுவில் ஏற்றும் படியும், மற்ற திருடர்களை கொன்றுவிடும் படியும் உத்தரவிட்டான். முனிவர் கழுவில் தொங்கிவிடப்பட்டார். அவரது உடல் முழுவதும் ஊசி குத்தப்பட்டிருந்தது. நெஞ்சில் ஆணி அடிக்கப்பட்டிருந்தது. அப்போது வானத்தில் சென்று வசிஷ்டர் முதலான முனிவர்கள் இந்த செயலை பார்த்து வந்து முனிவரை வணங்கி மாண்டவ்யர் என்ற பட்டத்தை வழங்கினார். அப்போது தான் மாண்டவ்யர் கண்விழித்தார். இதைப்பார்த்த காவலர்கள் மன்னனிடம் தெரிவித்தனர். மன்னன் வந்து, அறியாமல் தான் செய்த தவறிற்கு முனிவரிடம் மன்னிப்பு கேட்டான். பின் எமலோகம் சென்ற முனிவர் எமதர்மராஜனிடம், இந்த பிறவியில் தான் செய்யாத பாவத்திற்கு ஏன் தண்டனை கொடுத்தாய் என கேட்டார். நீ சென்ற பிறவியில் சிறு வயதில் ஒரு தட்டான் பூச்சியை பிடித்து அதன் நெஞ்சில் ஒரு முள்ளை செருகி விளையாடினாய் அந்த வினைப்பயன் தான் இது என்றார் எமன். அதற்கு முனிவர், எமதர்மராஜனே ! நான் சிறுவயதில் அறியாமல் செய்த தவற்றுக்கு, என்னை நல்வழிப்படுத்தாத பெற்றோர்கள் காரணம். எனவே அறியாமல் சிறுவயதில் செய்யும் தவறுக்கு தண்டனையை பெற்றோர்களுக்கும் பிரித்து தர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டு கொண்டார். எமனும் சம்மதித்தார். உடனே முனிவர், தர்மராஜா, நீ எப்படியேனும் எனக்கு தண்டனை கொடுத்து விட்டாய். எனவே மகாபாரதத்தில் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் சகோதரன் விதுரனாக பிறந்து துரியோதனன் அவையில் வேலைக்காரி மகன் என அவமானப்படுத்தப்படுவாய் என கூறினார்.எனவே, குழந்தைகளை எதற்கும் தீங்கு செய்ய விடாமல் அன்பின் வழி நடத்தி செல்ல வேண்டும்.
ஹரி அனந்தர்
ஹரி அனந்தர்
வடநாட்டில் உள்ள ஒரு சிற்றூரில் ஹரி அனந்தர் என்பவர் வாழ்ந்து வந்தார். வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர். இவரிடம் பல மாணவர்கள் படித்தாலும் ஒரு மாணவன் அளவில்லாத அன்பு வைத்திருந்தான். குருகுல முறைப்படி, நாள்தோறும் பிச்சைக்குச் சென்று ஒரு படி ரொட்டிமாவு கொண்டு வருவான். அதை குருவின் திருவடிகளில் சமர்ப்பித்து பின்பு ரொட்டி செய்வான். அந்த ரொட்டிகளில் தாம் சாப்பிட்டது போக மீதியை மற்றவர்களுக்கு கொடுப்பான். ஒரு சமயம் கபீர்தாசின் குருவான சாது ராமானந்தர் அவ்வூரிலுள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். பிச்சைக்குச் சென்ற மாணவன் அவரை வணங்கினான். அகத்தின் அழகு முகத்திலே தெரியும் என்பது போல, இவ்வளவு அன்பும், பரிவும், நல்ல குணங்களும் கொண்ட இந்த சிறுவன் நாளை காலையோடு ஆயுள் முடிந்து இறந்து போகப்போகிறானே என வருத்தப்பட்டு அந்தோ ! அடடா ! என்றார் ராமானந்தர். இப்படி ஒரு வார்த்தை அவரது வாயிலிருந்த வருமானால் அது ஆபத்துக்கு அறிகுறி என பொருள். இதைக்கேட்டு மாணவனுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குருவே ! நான் நீங்கள் சொன்னதைக் கேட்டு எவ்வித அச்சமும் கொள்ளவில்லை. மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லø. எனது மரணத்திற்கு முந்தைய தினமான இன்று உங்கள் தரிசனம் கிடைத்தது நான் செய்த பாக்கியத்தையே குறிக்கிறது என்று சொல்லி மீண்டும் ஒரு முறை வணங்கினான்.
அங்கிருந்து புறப்பட்டு குருவிடம் சென்றான். தனது ஆயுள் முடியப்போகும் விஷயத்தை குருவிடம் விளக்கினான். ஹரி அனந்தர் மாணவனை அருகில் அழைத்து, இன்றைய வேலைகளை வழக்கம் போல செய்துவிட்டு, தியானம் முடித்து தூங்கு. நாளை காலையில் அருணோதயத்திற்கு முன்னதாக என்னை எழுப்பு, என்றார். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்னதாக குருவை எழுப்பினான் மாணவன். இருவரும் நீராடி தியானம் செய்யும் சமயத்தில் மாணவனை அருகில் அழைத்த ஹரி அனந்தர், பத்மாசனத்தில் அமர்ந்தார். தனது புலன்களை ஒவ்வொன்றாய் ஒடுக்கி, சமாதி நிலைக்கு சென்றார். மாணவனும் அதே முறையில் தியானத்தில் ஆழ்ந்தான். இப்படி இருவரும் ஒரே விதமாக தங்கள் இதயத்தில் வாழும் இறைவனை தியானிக்கலாயினர். இறைவன் இவர்களது ஒப்பற்ற தியானத்திற்கு கட்டுப்பட்டவராய், சங்கு, சக்கரங்களுடன் அங்கே எழுந்தருளினார். சக்கரத்தாழ்வாரை குரு, சிஷ்யன் ஆகியோரின் தலைக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும்படி பணித்து, தானும் அங்கேயே அமர்ந்து விட்டார்.
உரிய நேரம் வந்தது. நீலவண்ணத்தில் உலகம் இருளில் மூழ்க, எருமையின் மீதேறி வந்து நின்றான் எமன். இறைவன் புன்முறுவலுடன் வீற்றிருக்க, எதிரில் குருவும், மாணவனும் மெய்மறந்து தியான நிலையில் அமர்ந்திருப்பதையும், தலைக்கு மேல் வெண்கொற்றக்குடை போல சக்கரம் கம்பீரமாக சுழல்வதையும் கண்டு நடுநடுங்கிப் போனான். இறைவனே இங்கு வந்து அமர்ந்திருப்பதால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என கருதிய அவன், வந்த வழியே திரும்பிப்போனான். எமன் சென்றதும் குருவும் மாணவனும் கண்விழித்தனர். இருவரையும் நெஞ்சாரத்தழுவி ஆசி கூறி மறைந்தார் கிருஷ்ண பரமாத்மா. அடுத்தநாள் வழக்கம்போல் பிச்சைக்கு, சென்றான் மாணவன். ராமானந்தரின் பாதத்தைத் தொட்டு வணங்கினான். அடடா ! பிழைத்து விட்டாயே ! என்று ஆச்சரியப்பட்டவர். நடந்தவற்றை தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்தார். உன்னைக் காப்பாற்றிய சக்திமிக்க குருவை நான் காணவேண்டும் என்றார். இருவரும் ஹரி அனந்தரின் இருப்பிடத்திற்கு வந்தனர். எமனையே வென்ற உமது பக்தி அற்புதம் ! அற்புதம் ! என பாராட்டிய ராமானந்தர் ஹரியை கண்ணால் கண்ட ஹரி அனந்தரின் பாதங்களில் விழுந்து கண்ணீர் பெருக போற்றினார்.
அவுர்வர்
அவுர்வர்
அவுர்வர் என்ற சொல்லுக்கு தொடையிலிருந்து பிறந்தவர் என்று பொருள். இவரைப் பெற்ற தாய் தியாகத்தின் சின்னமாகத் திகழ்ந்தவள். எல்லாரும் வயிற்றில் பத்து மாதம் தான் கருவை சுமப்பார்கள். ஆனால், இந்த தாய் இவரை சில வருடங்கள் சுமந்தார். வயிற்றில் இருந்தால் ஆபத்து என்பதால் தனது தொடையில் வைத்து கருவை காப்பாற்றினார் என புராணங்கள் சொல்கின்றன. அவுர்வரின் தந்தை அப்நவாநர். பிருகு மகரிஷியின் வம்சத்தில் தோன்றியவர். மிகப்பெரிய ரிஷி. அப்நவாநர் பற்றிய தகவல்கள் புராணங்களில் அதிகமாக கிடைக்கவில்லை. பெரும்பாலும் இவர் தனிமையையே விரும்புவார். தவவலிமை அதிகம் உள்ளவர். ஆயினும், மிகுந்த பொறுமை உள்ளவர் என்பதால் தன் தவவலிமையை தவறான வழியில் பயன்படுத்துவதில்லை. யாரையும் சபித்ததும் இல்லை. இவர் மீது எல்லா ரிஷிகளும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இந்த சமயத்தில் தங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்த பிருகு வம்சத்தாரை க்ஷத்திரியர்கள் கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். அப்நவாநரும் பிருகு வம்சத்தை சேர்ந்தவர் என்பதால் அவரைத் தேடி அலைந்தனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. பிருகு வம்ச பெண்கள் கருவுற்றிருந்தால் அவர்களை கொல்லவும் க்ஷத்திரியர்கள் தயங்கவில்லை. அவுர்வரின் தாயும் கர்ப்பமானாள். அவளைக்கொல்ல க்ஷத்திரியர் படை அலைந்தது. மறைந்து வாழ்ந்த இந்த பெண்மணி தனது வயிற்றில் இருந்த கருவை தனது சக்தியாலும், பதிபக்தியாலும், குழந்தை பாசத்தாலும் தொடைக்கு கொண்டு வந்துவிட்டாள். க்ஷத்திரிய படையினரும் இவளைக் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் வயிற்றில் கர்ப்பம் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. உடையால் தொடையை மறைந்திருந்ததால் அங்கு கர்ப்பம் தங்கியிருப்பதை அவர்களால் அறிந்தகொள்ள முடியவில்லை. அவர்களிடம் தப்பித்த அந்த பெண் அவுர்வரை பெற்றெடுத்தாள்.
அவுர்வர் இளவயது முதலே வேத சாஸ்திரங்களில் சிறந்து விளங்கினார். தனது மூதாதையர் பலர் க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்டதை அறிந்து ஆவேசம் கொண்டார். அவர்களை பழிவாங்க முடிவெடுத்தார். உலகில் ஒரு மனிதன் கூட உயிர்வாழ முடியாத அளவிற்கு அவர் தவம் செய்தார். அந்த தவத்தின் வலிமையால் பிரபஞ்சமே நடுங்கியது. க்ஷத்திரியர்கள் தங்கள் கண்பார்வையை இழந்துவிட்டனர். இதைப்பார்த்த அவுர்வரின் முன்னோர்கள் மொத்தமாக வந்து சேர்ந்தனர். குழந்தை அவுர்வா ! நீ இந்த உலகத்தின் மீது கோபப்படுவதில் அர்த்தமில்லை. இந்த உலக வாழ்க்கை வேண்டாமென நாங்கள்தான் முடிவெடுத்தோம். எனவே க்ஷத்திரியர்கள் மூலமாக எங்களை நாங்களே அழித்துக் கொண்டோம். அதற்குரிய முன்னேற்பாடுகளை நாங்களே செய்து கொண்டோம். திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த செயலுக்காக நீ கோபமோ, வருத்தமோ அடையவேண்டாம். இதற்கு க்ஷத்திரியர்களை பொறுப்பாளிகள் ஆக்கமுடியாது. எங்கள் ஆசை எல்லாம் இந்த பூலோகத்தை துறந்து புண்ணிய லோகத்திற்கு செல்ல வேண்டும்என்பதே ஆகும். ஒருவன் தற்கொலை செய்துகொண்டால் அவன் புண்ணியலோகத்தை அடைய முடியாது. எனவே தற்கொலை முடிவுக்கு வராமல் நாங்களே அழிந்துபோகும்படியாக க்ஷத்திரியர்களின் மனதில் எங்களை அழிக்க வேண்டும் என்ற விபரீத எண்ணத்தை உருவாக்கினோம். அதன்படியே இது நடந்தது, என்றனர். இதைக்கேட்ட பிறகுதான் அவுர்வருக்கு ஓரளவு கோபம் தணிந்தது.
அவர் தனது முன்னோர்களிடம், ஒருவனுக்கு கோபம் வந்துவிட்டால் அதை நியாயமான காரணங்களால்கூட அடக்கிவிட முடியாது. தனது கோபத்தை அவன் வெளிப்படுத்தியே தீருவான். க்ஷத்திரியர்கள் மீது தவறு இல்லை என உங்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டாலும், அவர்கள் மீதான கோபம் முழுமையாக தீரவில்லை. எனவே என் கோபத்தை எந்த இடத்தில் சென்று தணிப்பது ? என்று கேட்டார். அதற்கு முன்னோர்கள், இங்கிருந்து சில மைல் தூரம் செல். பெரிய கடலை பார்ப்பாய். அந்த சமுத்திர வெள்ளத்தில் உனது கோபத்தை விட்டுவிடு. உனக்கு தெளிந்த மனம் கிடைக்கும் என்றனர். அதன்படியே அவுர்வர் சமுத்திரத்திற்கு சென்று தனது கோபக்கனலை அதில் செலுத்தினார். அவரது மனம் தெளிவடைந்தது. இப்போதெல்லாம் அமாவாசை காலங்களில் கடலில்சென்று நீராடுகிறோம். இதற்கு காரணம் நமது பித்ருக்களை மனம் குளிர வைக்கத் தான். அவுர்வரும் தனது பித்ருக்கள் சொன்னபடி கடல் நீராடி மனத்தெளிவு பெற்றார். அவரது கோபம் தணிந்தபிறகு பார்வை இழந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் அவர் முன்னால் வந்தனர். தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். அவர்களிடம், அவுர்வர், மனதில் கெட்ட எண்ணங்களே உருவாகக்கூடாது. எதிரியாக இருந்தாலும் அவனை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். தவறு செய்பவர்களை திருத்துவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், கொல்வதற்கு தெய்வ சட்டத்தில் இடம் இல்லை என்றார். அவரது அறிவுரையை க்ஷத்திரியர்கள் ஏற்றனர். இந்த அவுர்வர்தான் ரிசீகர் என்று சொல்லப்படுகிறார். இவரது மகன்தான் ஜமதக்னி முனிவர். ஜமதக்னியின் மகன் தான் பரசுராமர். மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டவர் அவுர்வர். அவுர்வரின் வரலாற்றைப் படித்த நாம் எதிரிகளுக்கு கூட துன்பம் செய்யாமல் வாழக் கற்றுக்கொள்வோம்.
துவாரகா ராமதாசர்
துவாரகா ராமதாசர்
புண்ணிய க்ஷத்திரமான துவாரகா அருகிலுள்ள டாங்கேர் நகரில் வாழ்ந்தவர் ராமதாசர். கிருஷ்ணரை தெய்வமாக ஏற்ற இவர், அப்பெருமானுக்கு அடிமையாகவே வாழ்ந்து வந்தார். பிச்சைப் பாத்திரம் ஏந்தி வீடுவீடாகச் செல்வார். கிடைக்கும் அரிசியை சமைத்து, அடியவர்களுக்கு உணவிட்ட பிறகே சாப்பிடுவார். ஊர்மக்கள் அவருக்கு மகிழ்ச்சியோடு தானம் அளித்து வந்தனர். ஏகாதசி நாளில் துளசி, தீர்த்தம் மட்டும் எடுத்துக் கொள்வார். ஆடி மாத ஏகாதசியன்று, துவாரகை நாதனை தரிசிக்க செல்வது வழக்கம். டாங்கேரில் இருந்து நாம சங்கீர்த்தனம் இசைத்தபடியே, பாதயாத்திரையாக அங்கு செல்வார். கோமதி நதியில் நீராடி ஏகாதசி விரதத்தைத் தொடங்குவார். மறுநாள் துவாதசியில் துவாரகை நாதனை தரிசிப்பார். கண்ணனைக் கண்ட கண்கள் வேறொன்றினைக் காணாது என்பது போல, அவருக்கு அப்பெருமானை விட்டுப் பிரிய மனமிருக்காது. முதுமையை எட்டிய பிறகு, அவரது உடல்நிலை தளர்ந்தது. இருந்தாலும், மனம் தளராமல் தள்ளாடியபடியே துவாரகை சென்றார். அங்கிருந்து கிளம்பும்போது துக்கம் தொண்டையை அடைத்தது.
ஹே! துவாரகநாதா! அடுத்த ஆண்டு ஆடி ஏகாதசியன்று உன் தரிசனத்தை காண்பேனா! ஆயிரமாயிரம் கோபியரிடம் பிருந்தாவனலீலை செய்ய மாயக்கிருஷ்ணனாய் வந்தாயே! இந்த ஏழைக்காக, நான் குடியிருக்கும் டாங்கேருக்கு வரக்கூடாதா?, என்று பொலபொலவென கண்ணீர் சிந்தினார். இதைப் பொறுக்காத துவாரகாநாதன் நேரில் காட்சி அளித்தான். ராமதாசா! கவலையை விடு! என்னையும் உன்னுடன் அழைத்துச் செல். உங்கள் ஊரிலும் எழுந்தருள யாம் சித்தமாக உள்ளோம்!, என்று திருவாய் மலர்ந்தார். பகவானே!உன் கருணையே கருணை. நாம் எப்படி செல்வது? என்று கேட்டார். இன்று ஜாமத்தில் கோமதி நதிக்கரையோரம் வந்துவிடு. இருவரும்தேரில்சென்றுவிடுவோம், என்று சொல்லி மறைந்து விட்டார் துவாராகாநாதன். நாமசங்கீர்த்தனம் பாடியபடியே, கோமதி நதிக்கரைக்குச் சென்ற தாசர், ஒரு தேரைக் கண்டார். துவாரகாநாதன் அதில் தங்கச்சிலை வடிவில் அமர்ந்திருந்தான். ராமதாசரும் அதில் ஏறிக்கொள்ள, தேர் தானாகவே டாங்கேர் வந்தடைந்தது.
மறுநாள் பொழுது புலர்ந்ததும், துவாரகாநாதரின் மூலவரின் தங்கச்சிலை காணவில்லை என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. அர்ச்சகர்களும், அதிகாரிகளும் பதைபதைப்புடன் ஆலோசித்தனர். இரவு பூஜைக்குப் பிறகும் சந்நிதியில் நின்றிருந்த ராமதாசர் மீது சந்தேகம் வலுத்தது. உடனடியாக, அனைவரும் டாங்கேருக்கு புறப்பட்டனர். அதிகாரிகள் வீட்டுக்கு வருவதை அறிந்த தாசர், சிலையைத் தூக்கிக் கொண்டு கிணற்றடிக்கு ஓடினார். சிலையை வாளிக்குள் வைத்து கிணற்றுக்குள் தள்ளினார். ஆனால், வாளி தண்ணீருக்குள் மூழ்காமல் பாதி கிணற்றிலேயே நின்றதைஅவர் கவனிக்கவில்லை. அர்ச்சகர்கள் அவரது வீடு முழுக்க தேடிமுடித்தனர். பின் கிணற்றை சோதனையிட்ட போது, அங்கே சிலை மினுமினுத்ததைக் கண்டு தூக்க ஆயத்தமாயினர். தாசருக்கு பகவானை விட்டுப் பிரிய மனமில்லை. குழந்தையைப் போல அழத் தொடங்கினார். அர்ச்சகர்களோ, செய்வதையும் செய்து விட்டு பக்திமான் போல் அழுகிறீரா? எனச்சொல்லி அவரை உதைக்கவும் தயங்கவில்லை.
அவ்வூர் மக்களோ, ஐயா! இப்பெரியவரை துன்புறுத்தாதீர்கள். உங்களுக்கு தேவை சிலை தானே! அதை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக கிளம்புங்கள்!, என்றனர். இந்தக் கிழம் செய்த காரியத்துக்கு இதற்கு ஆதரவாக வேறு பேசுகிறீர்களா! சாமான்யபட்ட சிலையா இது! சொக்கத்தங்கத்தால் ஆனது ! என்று ஆவேசமாக கத்தினர். தாசர் அவர்களிடம், உங்களுக்குப் பொன் தானே வேண்டும். வேண்டுமளவுக்கு நான் தருகிறேன். சிலையை என்னிடம் கொடுத்துவிடுங்கள், என்று கெஞ்சினார். ஊர் மக்களும் தாசரின் பேச்சை ஆமோதித்தனர். தங்கம் தான் பெரிதென்று எண்ணும் உங்களுக்கு தங்கம் கொடுத்தால் போதாதா? தங்கத்தை வாங்கிக் கொண்டு சிலையை இங்கே விட்டு செல்லுங்கள்!, என்று வாதம் செய்தனர். பிச்சை எடுத்து பிழைக்கும் இவரிடம் தங்கம் ஏது என்ற எண்ணத்தில், தராசில் இச்சிலையை வைத்து எடைக்கு எடை தங்கம் கொடுத்தால் போதும். நாங்கள் கிளம்பிவிடுகிறோம். சிலையை நீங்களேவைத்துக் கொள்ளுங்கள், என்று அர்ச்சகர்கள் நிபந்தனை இட்டனர்.
தராசில் சிலை வைக்கப்பட்டது. தாசரின் வீட்டில் தங்கம் ஏதுமில்லை. மனைவியின் ஞாபககார்த்தமாக ஒரு மூக்குத்தியை மட்டும் வைத்திருந்தார். அதை எடுத்து வந்தார். அதைக் கண்ட அர்ச்சகர் ஒருவர், இந்த கிழத்திற்கு பைத்தியம் பிடித்துவிட்டது போலும், என்று சொல்ல அனைவரும் சிரித்தனர். மறுதட்டில் மூக்குத்தியை வைத்த தாசர் கண்ணை மூடி பகவானை வணங்கினார். தராசின் இருதட்டுகளும் சரிசமமானது. தாசரின் பக்திக்கு கட்டுப்பட்டு தராசு நிற்பதைக் கண்ட அர்ச்சகர்களும், அதிகாரிகளும் சிலையாயினர். சிலையை தாசரிடம் கொடுத்து விட்டு, துவாரகை கிளம்பினர். அதன்பின், அந்த இல்லமே கோயிலாக மாறியது. ராமதாசரும் சங்கீர்த்தனம் பாடி துவாரகைநாதனை தினமும் வணங்கி மகிழ்ந்தார்.
ஹரி வியாசர்
ஹரி வியாசர்
வடமதுரை திருத்தலத்தில் ஹரிபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது நா எப்பொழுதும் ஹரிசரணம் என்று உச்சரித்துக் கொண்டே இருக்கும். இதனால் இவரை ஹரி வியாசர் என்று அழைத்தனர். ஒரு சமயம் இவர் பூரி ஜெகந்நாதப் பெருமான் தலத்திற்கு யாத்திரையாகப் புறப்பட்டார். வழியிலே ஓர் அழகிய வனத்தைக் கண்டார். அந்த வனத்தையடுத்து ஒரு சிற்றாறு ஓடியது. அதன் கரையிலிருந்த பிரமாண்டமான கோயிலில் புகுந்தார். புகுந்த உடனேயே அது காளிகோயில் என்பது புலனாயிற்று. அங்கே ஒரு குடியானவன் ஆடு ஒன்றை பலியிட்டுக் கொண்டிருந்தான். அதன் பரிதாபகரமான அலறல், அந்தக் கோயில் முழுமையும் எதிரொலித்தது. இதைப் பார்த்ததும், ஹரி வியாசர், சீ, சீ ! இதென்ன பேதமை ? என்று கோயிலை விட்டு வெளியே வந்தார். காளிதேவிக்கு இவர் வருத்தத்துடன் செல்வது தெரிந்தது. பரமபாகவதரான ஓர் அந்தணர் பசியோடு தனது இருப்பிடம் வந்து அருவருப்புடன் எழுந்து செல்வது பழிக்கிடமாயிற்றே, என்று நினைத்தவளாய், தன் உருவுடன் அவரை வழிமறித்து, பக்தரே ! நீர் இவ்விதம் பசியோடு செல்வது சரியன்று. உச்சிக்காலம் முடிந்ததும் அமுது உண்டு செல்லலாம் என்றாள். ஹரி வியாசர், அம்மணி ! தங்களது கோயிலில் ஜீவிப்பிராணிகள் வதை செய்யப்படுவதை தாங்கள் ஏற்று மகிழ்கிறீர்கள். ஆகவே, அந்தக் கொலைக்களத்திலே படைக்கும் நிவேதனம் தங்களுக்கு உகந்ததாக இருந்தாலும் என்மனம் ஒப்புக்கொள்ளாது என்றார். தேவி மிகவும் கனிவுடன் கூடிய குரலில், இவர்கள் பலியை ஏற்கிறேன் என்பது தவறு. நாம் விரும்பவே இல்லை. இவர்கள் தங்களது நாவின் ஆசையைத் தீர்த்துக் கொள்ளவே இவ்வாறு செய்கின்றனர் என்றாள்.
நீங்கள் விரும்பவில்லையானால், அவர்கள் செய்வதை ஏன் தடுக்கவில்லை ? தடுக்காமல் பார்த்திருப்பதும், ஏற்று மகிழ்வதும் ஒன்றுதானே ! நீங்கள் விரும்பியே தான் இந்த உயிர்ப்பலி நடக்கிறது. நான் இங்கே உண்ணமுடியாது என்றார் ஹரிவியாசர். தேவி மீண்டும் புன்முறுவலுடன், பக்தா ! மக்களுக்கு அறிவைக் கொடுத்து, நன்மை தீமைகளைத் தெரிந்து நடக்க வழியும் வகுத்துக் கொடுத்தோம். அவர்கள் அதைத் தவறான வழியிலே பயன்படுத்தி நரகிற்கு ஆளாகின்றனர். அறிவைக் கொடுப்பதும், அதை நல்ல முறையிலே பயன்படுத்துபவர்களுக்கு அருள் செய்வதும், தவறான வழியிலே செல்ல வேண்டாமென்று போதிப்பதும் உன் போன்ற அறிவாளர்களின் கடமை, பலியை நிறுத்த நீயே முயற்சி செய் என்றாள். உயிர்ப்பலி நாடு முழுவதும் உங்கள் பெயரால் இடப்படுகிறது. இதை நிறுத்துவது என்பது பெரிய செயல். என்றாலும், நீங்களே ஏன் இதை ஏற்காமல் மறுக்கக்கூடாது ? என்றார். அதற்கு தேவி, இனி இந்தக் கோயிலில் பலியிடாமல் செய்துவிடுகிறேன் என்று சொல்லி, அரசனது கனவில் தோன்றி, இனி இம்மாதிரி உயிர்ப்பலி இடுதல் வேண்டாம். நான் இதை ஏற்கவில்லை என்று கூற, அன்று முதல் கோயிலிலே உயிர்ப்பலி நின்றது. இதன்பின் அரசன், தானே கோயிலுக்கு சென்று பால் பொங்கலிட்டு நிவேதனம் செய்தான். அரசனே பலிநிறுத்தம் செய்ததும், தேவியே மனமுவந்து தன் விருப்பு வெறுப்புகளைத் தெரிவித்ததும் கண்டு ஹரிவியாசர் மேலும் சில நாட்கள் அந்த ஊரிலும், பக்கத்து ஊர்களுக்கும் சென்று கொல்லாமை பற்றியும், இறைவனுக்கு உகந்த பூசனை எது என்பதைப்பற்றி விளக்கியும் தன் யாத்திரையை தொடங்கினார். இப்படி ஹரிவியாசர் என்ற விஷ்ணு பக்தரின் வரவால் நாட்டில் உயிர்பலி குறைந்தது கண்டு அறிவாளிகள் பேரானந்தம் கொண்டனர். பாமர மக்கள் இது காலங்காலமாக இருந்து வரும் வழக்கம் நிறுத்தினால் தேவி கோபித்து எரித்து விடுவாள் என்றும் அங்கலாய்த்தனர். நாட்கள் செல்ல செல்ல அந்த பகுதியில் புலால் உண்பது குறைந்து விட்டது. ஹரி வியாசரின் திறமையை அனைவரும் பாராட்டினர்.
பவுரிதாசர்
பவுரிதாசர்
நின்றால் ஜெகந்நாதன், நடந்தால் ஜெகந்நாதன், அமர்ந்தால் ஜெகந்நாதன்.... ஜெகன்னாதனின் நாமத்தை தவிர அவரது வாய் வேறு சொற்களையே உச்சரிக்காது. கார்மேனி வண்ணனான கண்ணனை பூரி ஜெகந்நாதரை கண்ணாரக் கண்டுகளிக்க வேண்டும் என விரும்பியவர் பவுரிதாசர். இவரது பெற்றோர் நெசவுத்தொழிலை செய்துவந்தன. இந்த தொழில் மூலம் ஏதோ அவர்களுக்கு வயிற்றுக்குப் போதுமான அளவு வருமானம் கிடைத்தது. இந்த குடும்பத்தினரின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் பூரி ஜெந்நாதர்தான். இவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து 3 மைல் தொலைவில் ஜெகந்நாதர் கோயிலுக்கு வந்து ஜெகந்நாதரை அந்த குடும்பத்தினர் வணங்கி செல்வார்கள். அதன்பிறகே அன்றாட பணிகள் தொடங்கும். ஜெகந்நாதர் கோயிலில் பெருமாளின் மகிமையை விளக்கி ஹரிகதை சொல்லப்படுவதுண்டு. இந்தக் கதையைக் கேட்க பவுரிதாசர் தவறாமல் சென்றுவிடுவார். இந்த வகையில் ஹரி கதையில் சொல்லப்படும் நல்ல கருத்துக்கள் புவுரிதாசரின் மனதில் நின்றன. குறிப்பாக, பெருமாளின் பெருமையை பாகவதர்கள் சொல்லும்போது, அதில் அப்படியே லயித்துவிடுவார் பவுரிதாசர். பெருமாளின் மீதான பக்தியை இந்தக்கதைகள் மென்மேலும் வளர்ந்தது. காலப்போக்கில் பக்தியின் வேகம் அதிகரித்தது. அவர் நிம்மதியாக சாப்பிடுவதில்லை. கண்கள் விழித்தபடியே இருக்கும். வாய் எந்நேரமும் ஜெகந்நாதன் பற்றி மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கும்.
அந்த பக்தனை மேலும் சோதிக்க விரும்பவில்லை பெருமாள். தனக்காகவே வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கும் பவுரிதாசரின் முன்பு தோன்றினார். பவுரிதாசர் ! நீ என்மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக அனைத்து பெண்களையும் தாயாராகவே கருதினாய். இந்த மனப்பக்குவம் உலகில்யாருக்கும் வருவதில்லை. நீ என்ன கேட்டாலும் கொடுத்து வரவேண்டும் என்பது உன் தாயார் எனக்கு இட்ட கட்டளை. அதன்படி உனக்கு வேண்டும் வரம் தருகிறேன், கேள் என்றார். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த பவுரிதாசர் என்ன கேட்டிருந்தாலும் இறைவன் கொடுத்திருப்பான். ஆனால், அவர் பொன்னோ, பொருளோ கேட்கவில்லை. இறைவா ! நான் எப்போது அழைத்தாலும் நீ வரவேண்டும். உன் திருக்காட்சியை எனக்கு காட்ட வேண்டும். உனது நினைவாகவே இருக்கும் நான். உன்னைத்தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன். நீயே என் அருகில் இருக்கும்போது, வேறென்ன எனக்கு வேண்டும் ? மற்றவை தானாகவே வந்து சேரும், என்றார். பவுரிதாசரின் பற்றற்ற நிலையை அறிந்து மகிழ்ந்த பெருமாள், அவர் கேட்ட வரத்தையே அருளினார். அன்றுமுதல் ஜெகந்நாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் பவுரிதாசர் ஆண்டவனுக்குரிய காணிக்கைகளை கொடுத்து அனுப்பினார். ஒருமுறை இளநீர் ஒன்றை ஒரு பக்தர் மூலம் அனுப்பிவைத்தார். கர்ப்பகிரகத்தில் இருந்து இரு கைகளையும் நீட்டி அந்த இளநீரை பெற்றுக்கொண்டார் பகவான்.
இதைக்கண்ட அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அந்த பக்தர் ஓடோடிச்சென்று பவுரிதாசரிடம் இந்த அதிசயத்தை விவரித்தார். இதுகேட்டு பவுரிதாசர் ஆனந்தக்கூத்தாடினார். ஒரு முறை கூடை நிறைய மாங்கனிகளை கொடுத்து அனுப்பினார். கோயிலுக்குள் சென்றதும், கூடை மாயமாகிவிட்டது. சற்று நேரத்தில் கூடை கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே வந்து அமர்ந்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் அதை பார்த்தனர். கூடைக்குள் கொட்டைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. பக்தன் பக்தியுடன் கொடுத்த உணவை பகவான் ஏற்றுக்கொண்டார். இதைக்கண்டு பரவசமடைந்த கோயில் அர்ச்சகர், பவுரிதாசர் தங்கியிருக்கும் இடத்திற்கு ஓடினார். பகவானுக்கு அணிவித்த மாலையை அவரது கழுத்தில் அணிவிக்க முயன்றார். பவுரிதாசர் அதை ஏற்க மறுத்துவிட்டார். பகவானுக்குரிய பொருட்களை நாம் எடுக்கக்கூடாது. பகவானுக்கு நம்மால் முடிந்த பொருளை கொடுக்க வேண்டும். இதுவே உண்மையான பக்தி என்றார். நீண்ட நெடுங்காலம் பகவானுக்கு உணவளிக்கும் கைங்கர்யத்தை அவர் செய்துவந்தார். பகவான் முன்பு சென்றாலே அதைக்கொடு; இதைக்கொடு என கேட்கும் இக்காலத்தில், பவுரிதாசரின் வாழ்க்கை வரலாறு ஆசையற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. பவுரிதாசரின் பக்தியை பின்பற்றி அனைவரும் நடப்போம்.
சுதீட்சணர்
சுதீட்சணர்
சுதீட்சணர் அகத்தியரின் சீடர். அகத்தியர் தந்த சிலையை பாதுகாக்க தவறியதால் அவரிடம் சாபம் பெற்றவர். ஐந்து வயதில் பெற்ற சாபம் ஐம்பது ஆண்டுகள் கடந்துதான் தீர்ந்தது. சுதீட்சணர் என்றால் கூர்மையான புத்தி உடையவர் என பொருள். சிறுவயதில் பெற்றோரை இழந்துவிட்ட சுதீட்சணர், அகத்தியரின் சீடரானார். அகத்தியர் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். சிறு குழந்தை என்பதால் மிகவும் குறும்புத்தனம் செய்வான் சுதீட்சணன். ஆனால் அவனை நல்லமுறையில் வளர்ப்பதற்காக இளம் வயதிலேயே பூஜை, புனஸ்காரங்கள் பற்றி கற்றுக்கொடுத்தார் அகத்தியர். ஒருமுறை அவர் தலயாத்திரை கிளம்பினார். அப்போது தன்னிடமிருந்த சாளக்கிராமம் என்ற மூலிகைகளால் செய்யப்பட்ட நாராயணனன் சிலை ஒன்றை சுதீட்சணனிடம் கொடுத்து அதை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும், அதற்கு தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்யும்படியும் கூறினார். சுதீட்சணனும் அதை வாங்கிக்கொண்டான். ஆனால் அகத்தியர் சொன்னதை விளையாட்டுப்பிள்ளையான அவன் கடைபிடிக்க வில்லை. ஏனோதானோவென சிலையை கண்ட இடத்தில் வைத்துவிடுவான். அகத்தியர் கிளம்பும்போது அந்த சிலைக்கு நதியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து அபிஷேகம் செய்யும்படி சொல்லியிருந்தார். ஆனால் சுதீட்சணன் அதைக் கேளாமல் நதிக்கே சிலையை எடுத்துச் சென்று அங்கு வைத்து அபிஷேகம் செய்தான். நதியிலிருந்து குடத்தில் தண்ணீர் எடத்துவர சோம்பல்பட்டு இப்படி செய்து வந்தான். அந்தச்சிலையை ஒரு பெட்டியில் வைத்து நதிக்கரைக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்தான்.
நதிக்கரையில் ஒரு நாவல்மரம் இருந்தது. மிகப்பெரிய பழங்கள் பழுத்துக்கிடந்தன. ரிஷிகுமாரர்கள் அந்த பழங்களை பறிப்பதற்காக நதிக்கரைக்கு கூட்டமாக வருவார்கள். சிறுவனான சுதீட்சணனுக்கும் நாவல்பழங்களை தின்பதில் விருப்பம் அதிகம். அவனும் ரிஷிகுமாரர்களுடன் சேர்ந்து கல்லெறிந்து பழங்களை பறிப்பான் . ஒருநாள் இவ்வாறு பழம் பறித்துக்கொண்டிருந்தபோது மரத்தின் உச்சியில் மாம்பழம் அளவுக்கு பெரிதான நாவல்பழம் ஒன்று தொங்கியது. அதை எப்படியாவது பறித்துவிடவேண்டும் என்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது. சுற்றும்முற்றும் பெரிய கல் ஏதாவது கிடக்கிறது எனதேடிப்பார்த்தான். கல் கிடைக்கவில்லை. எனவே தன்கையில் இருந்த சாளக்கிராம சிலையை மரத்தின்மீது வீசினான். பழம் கீழே விழுந்தது. ஆனால் சிலை மரத்தின் கிளையில் சிக்கிக் கொண்டது. சுதீட்சணனுக்கு பயம்தொற்றிக் கொண்டது. அகத்தியர் வந்தால் என்ன பதில் சொல்வது ? என தெரியாமல் திண்டாடினான். மரத்தின் மீது ஏறி சிலையை எடுக்க ரிஷிகுமாரர்கள் பயந்தனர். அந்த மரத்திலிருந்த பொந்தில் ஒரு பாம்பு வசித்தது. மரத்தில் ஏறினால் பாம்பு கடித்துவிடும் என்ற பயத்தில் யாரும் ஏற மறுத்துவிட்டனர். சுதீட்சணன் கவலையுடன் ஆசிரமத்திற்கு திரும்பினான். அவன் எதிர்பாராத விதமாக அகத்தியர் அன்று வந்து சேர்ந்து விட்டார். நாராயணன் சிலைக்கு தினம்தோறும் அபிஷேகம் செய்தாயா ? அதை எங்கே வைத்திருக்கிறாய் ? உடனே எடுத்துவா, பூஜை செய்ய வேண்டும், என்றார். சுதீட்சணன் விழித்தான். ஒரு சிலையை எடுத்துவந்தான். அது முன்னம் கொடுத்த சிலைபோல இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.தொட்டுப்பார்த்தபோது நசுங்கியது. தான் பறித்த நாவல் பழத்தில் நாராயணன் போல் சித்திரம் எழுதி, அதை அகத்தியரிடம் கொடுத்துவிட்டான். அகத்தியர் அதை கண்டுபிடித்து விட்டார். அதன்பிறகு மரத்தில் சிலை சிக்கிக்கொண்டது பற்றி சுதீட்சணன் பயத்துடன் சொன்னான். அகத்தியருக்கு கோபம் வந்த விட்டது. உண்மையைச் சொல்லாமல் தன்னை ஏமாற்றிய சீடனுக்கு, சிறுவன் என்றும் பாராமல் சாபம் கொடுத்து விட்டார். எப்போது நீ நாராயணன் சிலையுடன் வருகிறாயோ, அப்போது இங்கு வந்தால் போதும் அதுவரை உனக்கு இடமில்லை. என சொல்லி விரட்டி விட்டார்.
சுதீட்சணன் மீண்டும் மரம் இருக்கும் இடத்திற்கு சென்றான். மரத்தில் ஏறினான். ஆனால் பாம்பு அவனை விரட்டியது. பயந்துபோன சுதீட்சணன் அருகிலிருந்த காட்டுக்குள் ஓடி விட்டான். அவனுக்கு 50 வயதை எட்டிவிட்டது. அகத்தியரின் சீடன் என்பதால் காட்டிலிருந்த மற்ற முனிவர்கள் சுதீட்சணனுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தனர். காட்டில் காலத்தை வீணாக கழிக்காமல் தன் குருவின் விருப்பப்படி மீண்டும் நாராயணன் சிலை கிடைக்கவேண்டும் என, அந்த நாராயணனை நினைத்தே தவம் இருந்தான். இதனால் சுதீட்சணன் சுதீட்சண முனிவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். அவரும் சாளக்கிராமத்தில் பல வணங்கி வந்தார். அந்த சிலைகளை சில குரங்குகள் எடுத்துச் சென்று அருகிலுள்ள ஏரியில் வீசி வந்தன. சுதீட்சணரும் மீண்டும் மீண்டும் சிலைகள் செய்து வணங்கிவந்தார். அகத்தியருக்கு பிடித்தமான சிலையை தொலைத்துவிட்டதால் தான் குரங்குகள் இவ்வாறு தனக்கு துன்பம் செய்வதாக சுதீட்சணர் நினைத்தார். மனம் தளராமல் பல சிலைகளை செய்து நாராயணனை வணங்கிவந்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் குரங்குகள் அவற்றை ஏரியில் வீசிவந்தன. இதைக்கண்டு மனம் பொறுக்காத சுதீட்சணர், நளன், நீலன் என்ற அந்த குரங்குகளிடம், நீங்கள் இனிமேல் எந்த பொருளை தண்ணீரில் வீசினாலும் அவை மிதக்கும் என சாபம் கொடுத்தார். பிற்காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு சென்றபோது அனுமானுடன் சென்ற நளன், நீலன் என்ற இந்த குரங்குகள் தான் கடலில் பாறைகளை தூக்கி வீசி பாலம் அமைத்தன. அந்த பாறைகள் தண்ணீருக்குள் மூழ்காமல் கடலில் மிதந்ததால் பாலம் அமைப்பது எளிதாக அருந்தது. இதனால் சுதீட்சணர் அளித்த சாபம்கூட ராமனுக்கு உதவியது. இதைக்கேள்விப்பட்ட ராமன். சுதீட்சணர் இருக்கும் இடத்திற்கு வந்து, இலங்கைக்கு செல்ல உங்களது சாபம்தான் எனக்கு மிகவும் பயன்பட்டது, எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார். நாராயணனே ராம அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தவர் என்பதை உணர்ந்த சுதீட்சணர், அவரை அழைத்துக்கொண்டு தனது குருவான அகத்தியரிடம் சென்றார். ராமனே தன் ஆசிரமத்திற்கு வந்ததும் மகிழ்ச்சியடைந்த அகத்தியர் அவரை வணங்கினார். சுதீட்சணர் அகத்தியரிடம், தாங்கள் நாராயணன் சிலை இல்லாமல் உங்களை பார்க்கக்கூடாது என சொன்னீர்கள். ஆனால் நான் நாராயணனையே இங்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டேன். உங்கள் சாபம் இன்றோடு தீர்ந்தது. என்னை மீண்டும் உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் என்னை வெளியே அனுப்பாமல் இருந்திருந்தால் நாராயண தரிசனம் எனக்கும் கிடைத்திருக்காது. என்மீது கொண்ட உண்மையான பாசத்தால், ராம தரிசனம் கிடைக்க எனக்கு தாங்கள் உதவியதை இப்போது புரிந்து கொள்கிறேன். உங்கள் சீடனாக இருக்க இனியாவது அனுமதிப்பீர்களா என கேட்டார். அகத்தியர் அவரை மகிழ்வோடு அணைத்து மீண்டும் தன் சீடனாக்கி கொண்டார்.
கணேச பஞ்சரத்னம்
கணேச பஞ்சரத்னம்
1.முதாகராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதேபதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநயகம்.
2.நதேதராதிபீகரம் நவோதிதார்கபாஸ்வரம்
நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்.
3.ஸமஸ்தலோகதங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்.
4.அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்த்திபாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வசர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷனம் தநஞ்ஜாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜே புராணவாரணம்.
5.நிதாந்த காந்ததந்த காந்தி மந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்த ஹீநமந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்.
6.மஹாகணேசபஞ்சரந்தமாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதி ஸோசிராத்
.....கணேசபஞ்சரத்நம் ஸம்பூர்ணம்
இந்த கணேச பஞ்சரத்னத்தை எவர் தினமும் காலையில் ஸ்ரீ கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறாற்களோ, அவர் நோயின்றி குறை யேதுமின்றி, நல்ல கல்விகளையும் நன்மக்களையும், அஷ்டைச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
ராமகிருஷ்ணர் பகுதி இரண்டு
ராமகிருஷ்ணர் பகுதி இரண்டு
அந்த அன்புக்கரத்திற்கு சொந்தக்காரர் கமார்புகூரில் வசித்த சுகலால் கோஸ்வாமி. அவர் சுதிராமின் நெருங்கிய நண்பர். தன் நண்பனின் கஷ்டகாலத்தில் உதவுவது தனது கடமை என நினைத்தார். தனது ஊருக்கே வந்து விடும் படி நண்பரை அழைத்தார். சுதிராமிற்கு வேறு வழியில்லை. மனைவி இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கமார்புகூரில் குடியேறினார். தேரேய்பூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் இருந்தது. கமார் என்ற வங்காள சொல்லுக்கு கொல்லர்கள் என்பது பொருள். புகூர் என்ற சொல்லுக்கு குளம் என்பது பொருள். இவ்வூர் செழிப்புமிக்க கிராமம். தண்ணீர் வசதி அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் வயல் வெளிகளில் தாவரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. தாமரை பூக்கள் நிறைந்த குளங்கள் ஆறு இக்கிராமத்தில் இருந்தது. கோஸ்வாமி தனது நண்பருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்தார். அதில் சில குடிசைகளும் இருந்தன. அந்த இடத்திற்கு லட்சுமிஜாலா என பெயர். பல கஷ்டங்களை அனுபவித்தாலும் நடப்பதெல்லாம் பகவான் செயல் என உணர்ந்து இறைவனிடம் நம்பிக்கையை விடாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். துன்பங்கள் தொடரும் வேளையில் சுதிராமின் மனைவி சந்திராதேவி மிகுந்த பதட்டத்திற்கு ஆளானார். அவர் படும் வேதனையைக் கண்டு பொறாத சுதிராம் ஆறுதல் சொல்வார். சந்திரா! இவை சாதாரண துன்பங்கள். நாம் பட்டினி கிடக்கிறோம். பட்டினி என்பது ஒரு நோயல்ல. அதைக்கண்டு கலங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனையோ பேர் செல்வம் இருந்தும் பகவானுக்காக நோன்பிருக்கிறார்கள். அவர்களே பட்டினி கிடக்கும்போது ஏழைகளான நாம் பட்டினி கிடந்தால் என்ன? இறைவன் நம்மை நோன்பிருக்கச் செய்துள்ளார். அது அவரது விருப்பமாக இருக்கிறது. சற்று காலத்தில் நாம் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புவோம். கவலைப்படாதே! என்பார். காலப்போக்கில் நண்பர் கோஸ்வாமி தந்த நிலம் விளையத் தொடங்கியது. சுதிராமின் குடும்பத்தில் பட்டினிக்கு இடமில்லாமல் போனது. எஞ்சிய உணவுப் பொருளை ஏழைகளுக்கு அவர் அளித்து வந்தார். ராமபக்தரான சுதிராம் வயலுக்கு சென்றதும் ஹே.. ராமா! ரகுவீரா! என்று அழைப்பார். அதன் பிறகே கூலியாட்களை வயலுக்குள் இறக்குவார். நடுகையின் போது ராமனின் பெயரை உரக்கச்சொல்லி முதல் நாற்றை நடுவார். தொடர்ந்து பணியாட்கள் வேலை செய்வார்கள். ஒரு முறை பக்கத்து ஊருக்கு ஏதோ பணி நிமித்தமாக சென்றிருந்த சுதிராம் அதை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரால் நடக்கக்கூட முடியாமல் தளர்வு ஏற்பட்டது. அங்கிருந்த மரத்தடியில் படுத்தார். காற்று இதமாக இருந்தது. மரம் தந்த நிழலின் சுகத்தில் அப்படியே கண்ணயர்ந்து விட்டார். அப்போது கனவு ஒன்று தோன்றியது. சுதிராம்! நான் சொல்லும் இடத்திற்கு செல். அங்கே கவனிப்பாரின்றி நான் கிடக்கிறேன். என்னை உன் வீட்டிற்கு எடுத்துச்செல் என ஒரு சிறுவனின் வடிவில் தோன்றிய ராமர் சொன்னார். சுதிராம் திடுக்கிட்டு விழித்தார். சற்று தூரம் சென்றார். ராமர் கனவில் சொன்னதுபோலவே ஒரு இடம் தென்பட்டது. அங்கே ஒரு பாம்பு படமெடுத்து நின்றது. அதன் கீழ் ஒரு சாளக்கிரம ராமர்சிலை கிடந்தது. அதை எடுப்பதற்காக சுதிராம் விரைந்தார். பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. சிலையை எடுத்துக்கொண்டு கண்களில் நீர் மல்க வீடு திரும்பினார் சுதிராம். ராமரே தந்த சிலை என்பதால் அவரது பக்தி உணர்வு மிகவும் அதிகரித்தது. அந்தச்சிலையை வீட்டில் வைத்து பூஜித்து வந்தார். அவரது குலதெய்வமான சீதளாதேவி ஒரு சிறுமியின் வடிவில் வந்து தினமும் பூ பறித்து தருவாள். அவளுடன் சுதிராம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருப்பார். அந்தக்குழந்தை அவரோடு தோட்டத்திற்கு சென்று மரக்கிளைகளை வளைத்துக் கொடுப்பாள். சுதிராம் இலகுவாக மலர்களை பறித்துக்கொள்வார். தெய்வத்தை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கொண்டவரான சுதிராமின் வாழ்வில் மற்றொரு அதிசயமும் நிகழ்ந்தது. கமார்புகூரில் இருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள மேதினிப்பூர் என்ற ஊருக்கு சுதிராம் சென்று கொண்டிருந்தார். வழியில் வில்வ மரம் ஒன்று நின்றது. பொதுவாக அந்தக்காலத்தில் மரத்தில் இலைகள் உதிர்ந்திருக்கும். ஆனால் இந்த மரத்தில் மட்டும் இலைகள் ஏராளமாக இருந்தது சுதிராமிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது சிவபெருமானின் கருணை என்றே நினைத்தார். வில்வ இலைகளை பறித்தார். மேதினிப்பூருக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டில் இருந்த சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டார். வெளியூருக்கு புறப்பட்ட காரணத்தையே மறந்து விட்டார். மறு நாள் தான் அவருக்கு அந்த நினைவே வந்தது. அந்த அளவிற்கு மிகப்பெரிய ராமபக்தராகவும், சிவபக்தராகவும் விளங்கினார் சுதிராம். எந்தச் சூழ்நிலையிலும் அவர் நேர்மை மாறவே இல்லை. யாரிடமும் கடனாகவோ இலவசமாகவோ எதையும் பெற மாட்டார். ஒழுக்கமற்ற மனிதர்களைக் கண்டாலே ஒதுங்கிப்போவார். அவர் காயத்ரி ஜெபம் செய்யும் போது ஒரு தெய்வீக ஒளி வீசும். கன்னங்களில் கண்ணீர் வழியும். ராமசேவையிலேயே அவரது காலம் கழிந்தது. இதனிடையே மூத்த மகன் ராம்குமாருக்கும், மூத்த மகளுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. ராம்குமார் ஜோதிடக்கலையில் வல்லவர். தந்தையாரின் தொழிலில் உதவியாக இருந்தார். இதனால் குடும்பத்தில் மீண்டும் செல்வவளம் செழித்தது. ராம்குமாரிடமும் தெய்வீகசக்திகள் இருப்பதாக ஊரார் நம்பினர். அவரது ஜோதிடம் சரியாக இருந்ததால் கூட்டம் மொய்த்தது. காளிதேவியை ராம்குமார் வழிபட்டு வந்தார். ஒருமுறை காளி கோயிலுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அதிபயங்கர வடிவத்தில் காளிதேவி அவர் முன்பு தோன்றினாள்.
மீண்டும் சந்திப்போம் நண்பர்களே