ராமகிருஷ்ணர் பகுதி மூன்று
காளிதேவியை பணிந்து வணங்கினார் ராம்குமார். அவள் ராம்குமாரின் நாவில் ஏதோ எழுதினாள். இதன்பிறகு ராம்குமாரின் ஒவ்வொரு வார்த்தையும் பலிக்க ஆரம்பித்தது. தனக்கு முதல் குழந்தை பிறந்தவுடன், தன் மனைவி இறந்து விடுவாள் என ராம்குமார் சொல்லியிருந்தார். அதுபோலவே நடக்கவும் செய்தது. மூத்தமகன் குடும்பப் பொறுப்பைச் சுமந்ததால், சுதிராமுக்கு ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபட அதிக நேரம் கிடைத்தது. எப்படியேனும் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று வர முடிவு செய்தார். கமார்புகூருக்கும், ராமேஸ்வரத்துக்கும் 2,400 கி.மீ., தூரம். அந்தக்காலத்தில் இந்த தூரத்தைக் சுதிராம் நடந்தே கடந்தார். வழியிலுள்ள எல்லா தலங்களையும் தரிசிக்கவும் செய்தார். 1824ல் இந்தப் பயணம் நிகழ்ந்தது. ராமேஸ்வரம் தரிசனம் முடிய அவருக்கு ஒரு ஆண்டு ஆகிவிட்டது. ஊர் திரும்பியதும், சந்திராதேவி கர்ப்பமானார். 1826ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ராமேஸ்வரம் ராமநாதரின் பெயரையே குழந்தைக்கு சூட்டினார். ராமேஸ்வர் என்பது இரண்டாவது மகனின் பெயர்.இதன்பிறகு பதினொரு ஆண்டுகள் சுதிராமின் வாழ்வில் எந்தப்புயலும் இல்லை. அமைதியாக அவரது வாழ்க்கை கழிந்தது. நிறைந்த செல்வமும் கிடைத்தது. ஆயினும், அவர் தனது நண்பர் கோஸ்வாமி கொடுத்த குடிசை வீட்டில் தான் வசித்தார். வயதும் அதிகமாகி விட்டது. கயாவுக்கு தீர்த்த யாத்திரைக்கு செல்ல விரும்பினார் சுதிராம். கயாவில், முன்னோர்களை எண்ணி பிண்டம் கரைத்தால், அவர்கள் பேரின்பம் பெறுவர் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில், தன் முன்னோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கயாவுக்கு புறப்பட்டார் சுதிராம். கமார்புகூருக்கும், கயாவுக்கும் 320 கி.மீ., தூரம். இந்த தூரத்தையும் நடந்தே கடந்தார் சுதிராம். 1835 ஜனவரியில் புறப்பட்ட அவர், மார்ச்சில் அங்கு போய் சேர்ந்தார். மூன்று மாதம் நடந்தாலும் களைப்பேதும் தெரியவில்லை.
ராமேஸ்வரத்துக்கே நடந்தவருக்கு இது பெரிய காரியமில்லை என்றாலும், முதுமையிலும் மனம் தளரவில்லை என்பதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக முதியவர்கள் தாங்கள் தளர்ந்து விட்டது போன்ற உணர்வுக்கு ஆளாகக்கூடாது. சுதிராமின் வாழ்க்கையை தங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். கயாவில் கதாதரர் என்ற பெருமாள் கோயில் இருந்தது. விஷ்ணுவை வழிபட்டு கோயிலிலேயே தங்கியிருந்தார் சுதிராம். பிண்டம் கரைத்தார். விஷ்ணுவின் பாதங்களில் பிண்டங்கள் இட்டு வழிபட்டார். ஒருநாள் மாலையில், விஷ்ணுவை வழிபட்டு, இரவில் கோயிலிலேயே படுத்து அயர்ந்துறங்கி விட்டார். நள்ளிரவு வேளையில் ஒரு கனவு.அந்தக் கோயிலினுள் இருந்து ஒளிவெள்ளம் பாய்நது எங்கும் பரவியது. ஒரு குரல் கேட்டது.ஹே சுதிராம்! நான் சொல்வதைக் கேள். உலக நன்மைக்காகவும், அநியாயங்களை ஒடுக்கவும் நான் பூவுலகில் அவதரிக்கப் போகிறேன். அதுவும் உன் மகனாகப் பிறக்கப் போகிறேன். நீ வசிக்கும் குடிசை எனக்கு போதுமானது, குரல் அடங்கி விட்டது. விஷ்ணுவின் பாதங்களில் சுதிராம் இட்ட பிண்டங்களை அந்த ஒளி ஏற்றுக் கொள்வது போல் தெரிந்தது. ஒரு ஆசனத்தில் ஏதோ ஒரு தெய்வம் அமர்ந்திருப்பது போல் தோன்றியது.சுதிராம் மகிழ்ச்சிக்கடலில் மிதப்பது போன்ற ஒரு காட்சி. அதே நேம் முக வாட்டத்துடன், வேண்டாம் பிரபு. தாங்கள் என் குடிசையில் அவதரிப்பதா? என்னிடம் என்ன இருக்கிறது, உங்களை வளர்க்க. போயும் போயும் ஒரு பரதேசியின் வீட்டிலா பிறக்க வேண்டும். உங்களுக்கு சேவை செய்யும் போது, ஏதேனும் குறை நிகழ்ந்தால் என்னால் தாங்க முடியாது, என்றார். அந்த தெய்வ ஒளி, அவரைத் தேற்றியது.சுதிராம்! கவலை கொள்ளாதே. அனைத்தும் நல்லதாகவே நடக்கும்,.கனவு கலைந்து விட்டது. சுதிராம் திடுக்கிட்டு எழுந்தார்.
அந்த பரமாத்மாவே என் வீட்டில் அவதரிக்கப் போகிறாரா? இறைவா! உன் கருணையை என்னென்பேன்,. அவர் மகிழ்ச்சியுடன் உறங்கிப் போனார்.இதே நேரத்தில், கமார்புகூரிலும் சில அதிசயங்கள் நிகழ்ந்தன. சந்திராதேவி வீட்டில் தனித்து படுத்திருந்த போது, வீட்டினுள் ஜல்...ஜல்...ஜல்...என சலங்கை ஒலி கேட்டது. அருகில் சுதிராம் அமர்ந்திருப்பது போன்ற ஒரு உணர்வு. ஆனால், அவர் ஒளிப்பிழம்பாகக் காணப்பட்டார். திடுக்கிட்ட சந்திராதேவி விளக்கை ஏற்றி சுற்றுமுற்றும் பார்த்தார். எதுவுமே இல்லை.விடியவிடிய இதே நினைவில் இருந்த அவர் மறுநாள் தன் தோழிகள் பிரசன்னமயி, தனி ஆகியோரிடம் இதைச்சொன்னார். அவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சின்னக்குழந்தையாக இருக்கிறாயே! ஏதேனும் கனவு கண்டிருப்பாய். கவலை கொள்ளாதே. இதற்கு போய் பயப்படலாமா? என சிரித்துக் கொண்டே கூறினர். மறுநாள் அவர், தன் தோழி தனியுடன் சிவாலயத்திற்கு சென்றார். அப்போது பேரொளி ஒன்று புறப்பட்டு வந்தது. சிவாலய வாசலில் நின்ற சந்திராதேவியை நோக்கி அந்த ஒளி வெள்ளம் பாய்ந்தது. சந்திராதேவி வியப்போடு அந்த ஒளியை நோக்கினார். அந்த ஒளிக்கற்றைகள் சிவலிங்கத்தில் இருந்து கிளம்பி பாய்ந்து கொண்டிருந்தது.ஐயோ தனி! இங்கே பார். இது என்ன ஒளி, என்னை நோக்கி வருகிறதே, என அவர் சொல்ல, தனி அதைப் பார்க்க முயல்வதற்குள் அந்த ஒளி சந்திராதேவியாரின் வயிற்றில் ஐக்கியமாகி விட்டது. அவர் மூர்ச்சையாகி விட்டார். தனி பதறிப் போனார். தண்ணீர் தெளித்து தோழியை எழுப்பினார். மலங்க மலங்க விழித்த தோழிக்கு விசிறியால் வீசி, ஆசுவாசப்படுத்தினார். சந்திரா! உன்னிடம் ஏனிந்த மாற்றம். எதைக் கண்டு இப்படி பயப்படுகிறாய். நீ தைரியமாய் இருக்க வேண்டும். நாங்கள் இருக்கிறோம், என ஆறுதல் சொன்னார். சந்திராதேவியார் தான் கண்ட காட்சியை தோழியிடம் சொன்னார்.அட பைத்தியக்காரி! மீண்டும் இதே கதையைச் சொல்கிறாயா? நீ சொல்வது போல ஒளியோ எதுவுமோ தோன்றியிருக்காது. ஏதோ மவ பிரமையில் இவ்வாறு சொல்கிறாய், என்று தேறுதல் சொன்னார். ஆனால், வீடு திரும்பிய சந்திராதேவியின் உடலில் மாற்றங்கள் தெரிந்தன. வயிற்றில் ஏதோ மாறுதல்.நான் கர்ப்பம் தரித்திருக்கிறேனா? சந்திராதேவி ஆச்சரியத்தில் மூழ்கினார்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வியாழன், 3 டிசம்பர், 2020
ராமகிருஷ்ணர் பகுதி மூன்று
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....
1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...
2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ....
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......
4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....
5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...
காலப்போக்கில்....
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற
உபயோகிக்கிறோம்....
புதன், 2 டிசம்பர், 2020
Sri Thiruvikrama swamy temple
Sri Thiruvikrama swamy temple
Moolavar : Trivikramar
Urchavar : Aayanar, Kovalan
Thayar : Poongoval Nachiar
Thala Virutcham : Punnai tree
Theertham : Pennai River, Krishna and Sri Chakra Theerthas
Old year : 1000 years old
Historical Name : Tirukovilur
City : Thirukovilur
District : Viluppuram
State : Tamil Nadu
Vaishnavite Saints Poigai Azhwar, Bhoodhathazwar, Peyazhwar and Tirumangai Azhwar had sung the glory of Lord Trivikrama in their celebrated hymns of Nalayira Divya Prandam.
Festival : 15 day Panguni Brahmmotsavam in March-April with Sri Pushpavalli Thayar Oonjal on Friday drawing huge crowd and Masi Magam in February-March, Lord visiting Cuddalore carried on the shoulders of devotees are the main festivals of the temple. Other festivals are Purattasi Pavithra Utsav and Navarathri in September-October; Chithirai Sri Rama Navami, Sri Ramanuja Jayanthi and Vasanth Utsav in April-May; Vaikasi Visaka Garuda Seva, Nammazhwar Sattrumurai in May-June; Aani Periazhwar Sattrumurai in June-July; Aadi Thiruvadipooram, Andal Utsav in July - August; Avani Sri Jayanthi, Uriyadi utsav in August-September; Aipasi Mudalazwar Sattrumurai, 10 day Sri Manavala Mamunigal utsav in October-November; Karthikai Kaisika Ekadasi; Tirukarthikai in November - December; Margazhi Rapathu, Pagal Pathu, Vaikunda Ekadasi in December - January. Besides the above, important days as Pongal-Makar Snkranti, Deepavali, Tamil and English New Year days are also observed with special pujas to Lord Trivikrama.
Temple's Speciality : This is one of the 108 Holy Divya Desas of Perumal. Presiding deity Perumal is made of Tharu - wood. So tall a Perumal is no where in Tamilnadu temples. Lord Krishna made of Salagrama stone is gracing devotees from a separate shrine.
Opening Time:The temple is open from 6.30 a.m. to 12.00 a.m. and from 4.00 p.m. to 8.30 p.m. Address:Sri Trivikramaswami Temple, Tirukovilur-605 757; Villupuram district.Phone:+91- 94862 79990
General Information : Lord Trivikrama Perumal graces the devotees from the sanctum under the Sri Chakra Vimana. Lord Venugopala plays the Kshetra Balaka role. There are shrines in the prakara for Lords Venugopala, Lakshmi Narayana, Lakshmi Raghava, Lakshmi Narasimha, Sri Rama and Sri Veera Anjaneya, Mother Sri Andal and Shukracharya, the Guru of Asuras.
The tower of the temple is the third tallest in the state, the first at Sri Rangam, the second at Srivilliputhur. This is a 11 tier 192 feet tall tower. The temple area covers 5 acres. Even after crossing the main tower, there are residential parts. The place is praised as Nadu Nadu Tirupathi. There is a temple for Lord Vamana Murthy in Tirukakarai in Kerala. Vamanamurthi graces here from behind the presiding deity.
Prayers : Devotees strongly believe that Lord Trivikrama would respond their prayers seeking high positions, promotions and regaining the positions they have lost. Devotees are blessed with happy wedding, children and freedom from enemies. Lord Chakarathzhwar frees the devotees from the evil effects of spells and witchcrafts.
Thanks giving : Offering Vastras and Tulsi garlands to Lord and Mother, lighting ghee lamps, performing turmeric abishek to Mother, Kumkum abishek to Mother Durga and feeding the devotees - Annadhanam- are the prayer commitments followed by devotees.
Greatness Of Temple : The object of Lord in His Vamanavatara - Trivikrama Avatara was to teach that wealth of even great kings should not land them pride and arrogance. He took the Vishwarupa, measured the space with His right Leg and the Earth with the right. He stood too tall touching both earth and sky. In His extreme delight to bless Emperor Mahabali, the illustrious grandson of Prahladha who was instrumental for His Narasimha Avtar, Lord appears here with the conch in the right hand and the discus in the left - vice - versa. This is described as His teaching wisdom to devotees. His posture-left leg on the earth and the right in the sky - appears as if He is asking where to place His foot for the third foot of land due from Mahabali as promised to Him. Lord Brahmma is worshipping the foot in the sky.
This is a very popular story of Lord Vishnu as a Vamana seeking three foot step land from Mahabali, which he could not afford as Lord had covered both earth and sky with two feet itself leaving no space for the third.
Sage Mrigandu wanted to have this Vishwarupa Darshan of Lord and approached Lord Brahmma for His advice. Brahmma suggested that the sage go to Krishna Kshetra (now Tirukovilur) on the banks of Krishnabadra River to realize his wish. The sage along with his wife Mitravathi came to this place and performed severe penance for the darshan of Lord.
Lord came to their abode in the guise of an old Brahmin and begged for food. They didn’t have even a single grain of rice to offer. The sage turned to his wife. Mitravathi went in, took a bowl in hand and prayed to Lord Narayana to fill the bowl with food if she was the chaste wife of the sage. The bowl was full of delicious food. Pleased with their penance, Perumal granted His Vishwarupa darshan to the sage couple.
This is the holy place where the first three Azhwars - Poigai Azhwar, Boodhathazhwar and Peyazhwar- met together incidentally by the grace of Lord. It was night raining heavily. Poigai Azhwar sought a place in the Ashram of Sage Mrigandu. He was shown a place to rest down. After a little while, Boodhathazwar came to the same place for a space. The first Ahwar shared the space just sufficient for two to sit. The third Azhwar - Peyahwar too came there. The two shared the space with him sufficient only for standing. Suddenly, they were pressed due to the presence of a fourth comer who was but Perumal Himself granting His darshan.
The songs sung by the three Azhwars how they were blessed with darshan of Lord as lighting a lamp to dispense the rainy darkness, is chanted even now by the devotees while lighting lamps in their houses in mornings and evenings.
The Three Azhwars attained salvation in this holy land. Lord Perumal is praised as Ulagu Alanda Perumal - Ulagalanda Perumal as He sought a small piece of land measuring just three feet. The idol is made of wood in a standing posture, the tallest in the country. Against the tradition, Perumal is holding the conch in the right hand and the discus in the left. Of the 108 Divya Desas of Perumal, this is the only temple with Swayambu Vishnu Durga. This is an important kshetra for the Vishnavas and Hindus in general in the Nadu Nadu region. The tower of the temple is third tallest in the state scaling 192 feet. Shukracharya, (Venus in the zodiac sign) Guru of the Asuras, has a place in the temple.
It is noteworthy that the holy scriptures Nalayira Divya Prabandam containing 4000 verses in praise of Lord Vishnu sung by 12 Alzhwars from time to time at various places, began from Tirukovilur.
It is mostly in Shiva temples, we see Mother Vishnu Durga in the prakaras. In Tirukovilur temple, Lord and His beloved Sister Durga (Maya the feminine form of Lord Vishnu) are in shrines nearby to each other. Tirumangai Azhwar who generally praises Lord alone in his hymns had made a devotional line to Mother Durga in one of his verses. People pray to Mother Vishnu Durga during Rahu Kalams on Tuesdays and Fridays for relief from the adverse aspects of planets.
There is a 40 feet tall Garuda Pillar with a small temple built on it opposite Perumal shrine. It is believed that Garuda Bhagwan is worshipping Lord from this temple. Of the Pancha Krishna Sthalas – Five great temples of Lord Krishna- 1)Tirukovilur, 2) Tirukannapuram, 3) Tirukannangudi, 4) Tirukannamangai and 5) Kabisthalam, Tirukovilur is the first. Lord Krishhna in this temple, made of Salagrama stone, graces the devotees from a shrine on the right side of the Gopuram entrance. The devotees must begin the worship from this shrine and pass to the presiding Perumal only then. Great Vaishnava Acharya Manavala Mamunigal also had rendered many hymns in praise of Lord Perumal.
According to scriptures and Tamil literatures. Sage Parasurama and Sage Agasthya had performed penance at Tirukovilur. The puranic age Krishnabadra River is flowing now in the name of Thenpennai. Before butter (Vennai in Tamil) melts, Pennai (the name of the river) melts, is an old saying.
Temple History : Emperor Mahabali, though good natured, ever helpful to those in need, had a desire that none should exceed him in status and fame. To realize this aim, he conducted a great yajna headed by his Guru Shukracharya. Lord thought to bring down his pride. He took the form of dwarf, came to the Yajna field and sought three foot steps of land (three steps by His foot) as dhan (charity). Guru Shukracharge sensed some mischief in the dwarf and understood that the visitor was none other than Lord Vishnu. He vehemently warned Mahabali and did his best to prevent his promise. Mahabali did not relent. He was only keen to keep up his word to dwarf and offered His wish. Lord took His Vishwarupa, measured the earth by one foot step and the Akasha by the second step and there was no place for the third step and asked Mahabali for the third. Mahabali gracefully accepted his inability and offered his head for the third. Lord placed his head on Mahabali and demanded that he solemnize the dhan with water from his right hand. Mahabali took the water bowl to confirm his promise but Shuracharya took the form of a bee and blocked the hole of the bowl from releasing the water. Lord Vishnu took a grass piece, put it on the bowl hole that blinded the Guru. Mahabali was pressed by the Lord to the Padala Loka and taken later with Him, goes the story.
Any devotee who would indeed like to read and enjoy this Vamanavathara-Trivikrama story of Lord, should read Sriman Narayaneeyam by Narayana Pattadri and Srimad Bhagavatha by Sage Veda Vyasa. They will have to close the book only unwillingly.
அருள் மிகு அகஸ்தீஸ்வரர் திருக் கோவில்
மூலவர் : அகஸ்தீஸ்வரர் {அக்ஞீசரம் உடையவர்}
அம்மன் : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : வன்னி மரம்
தீர்த்தம் : அக்னி, கன்வ தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கிளிஞனூர், திருக்கிளியன்னவூர்
ஊர் : கிளியனூர்
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞான சம்பந்தர்
தேவாரப்பதிகம்:தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின் சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர் பேர் சிறக்கும் பெருமொழி உய்வகை ஏர் சிறக்கும் கிளியன்ன வூரனே!-திருஞானசம்பந்தர்
இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் 276வது தலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவிழா:மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை
சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்தும், அம்மன் கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கிளியனூர், திண்டிவனம்- 604001. விழுப்புரம் மாவட்டம்.போன்:+91 - 94427 86709
பொது தகவல்:இக்கோயில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.
கல்வெட்டுச் செய்திகள் ஆதாரம் : சிதம்பரம் தொல்லியல் அலுவலர் அறிக்கை. அகஸ்தீஸ்வரர் கோயில் தென்புறக் கருவறைச் சுவர் கல்வெட்டு - சோழ மன்னன் பெயர் சிதைவடைந்துள்ளது. தங்கள் அம்பலவன் கண்டராதித்தன் என்ற குவாலம் - கங்கரைசர் தானம் செய்துள்ள விவரம் போன்றவை தெரியவருகின்றன.
தெற்கு வடகிழக்கு சுவர் கல்வெட்டு - இராசேந்திர சோழன் கல்வெட்டு முழுமையில்லை. 13ம் ஆட்சி ஆண்டு கிளியனூர் என்ற கேரளாந்தக சதுர்வேதி மங்கலம் இடம் பெறுகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாட்டு பிரம்மதேயத்தில் இந்த ஊர் இருக்கிறது.
கிழக்குச் சுவர் கல்வெட்டு - பரகேசரி 10-ம் ஆட்சியாண்டு ஆறுங்களத்தைச் சேர்ந்த தீயன், சாத்தன் ஆகிய பராசரன் என்பவன் அக்னீஸ்வரமுடையார் கோயிலுக்கு அமாவாசை மற்றும் சங்கராந்தி நாட்களில் வழிபாட்டுக்கு உதவியுள்ளார். இராசேந்திரன் 3ம் ஆட்சியாண்டு பிராமணப் பெண் விளக்கு வைத்த 90 ஆடுகள் அளித்துள்ளாள். கல்வெட்டு சேதமாக உள்ளது.
வடபுறச் சுவர் கல்வெட்டு - விக்ரமசோழ தேவன் 10ம் ஆட்சியாண்டு. கல்வெட்டு முழுமை பெறவில்லை. பூமாதுரை தொடக்கம் காண்கிறோம். திருவக்னீஸ்வரமுடைய மகாதேவர் பூஜைக்காக கிளியனூர் என்ற உலகுய்ய கொண்ட சோழ சதுர்வேதி மங்கல ஊரவர் நிலத்தானம் செய்துள்ளனர். ஒய்மா நாடு விஜயராஜேந்திரன் வளநாடு எனவும் வழங்கப்பட்டுள்ளது.
முன்மண்டபம் வடக்கு கிழக்கு கல்வெட்டு : இராஜாதி ராஜன் 28ம் ஆட்சியாண்டு கல்வெட்டு திங்களேர்தரு என்று தொடங்குகிறது. கேரளாந்தக சதுர்வேதி மங்கல ஊரவர் திருவக்னீஸ்வரமுடைய பெருமானுக்கு திருவமுது நிலம் விற்ற விபரம் அறிகிறோம்.இராஜாதி ராஜன் 29ம் ஆட்சியாண்டு வேறொரு நிலம் கோயில் திருவமுதுக்காக விற்ற விபரம் தெரிகிறது.கிழக்குச் சுவர் கல்வெட்டு - குலோத்துங்கச் சோழன் 3ம் ஆட்சியாண்டு உலகுய்ய வந்த சோழ சதுர்வேதி மங்கலமாகிய கிளியனூர் சபை சில நிலங்களுக்காக வரி விலக்கு அளித்தது. கருவூலத்தில் விடப்பட்ட முதலுக்குரிய வட்டி திருவக்னீஸ்வரத்தைச் சேர்ந்த பிச்சதேவர் கோயில் போன்ற விபரம் காண்கிறோம்.
கோயில் தணிக்கல் கல்வெட்டு : மடைப்பள்ளியில் உள்ளது. மல்லிகார்ச்சுவராயர் சக 1372 பிரமோதூத சித்திரை 15 சேதம் விருப்பராய காங்கேயன் மகன் விஜய.. ராய காங்கேயன் மதகு கட்டியது. புயலின்போது சிதலமடைந்த ஏரியைப் புதுப்பித்தது. கிளிவளநல்லூர் என ஊர்ப் பெயர் உள்ளது. மேலும் புதிதாகக் கிடைத்துள்ளது 276 திருக்கிளியன்னவூர்.
பிரார்த்தனை:திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து அதை சாப்பிட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:காளவ மகரிஷி தனது இரு பெண் குழந்தைகளின் தீராத மிக கொடிய நோய் நீங்க இத்தலம் வந்து பல ஆண்டுகள் வழிபாடு செய்தார். சிவனின் திருவருளால் அவரது குழந்தைகளின் நோய் நீங்கியது. சுகப்பிரம்ம மகரிஷி இத்தல சிவனை வழிபட்டு தனது வயிற்று வலி நோய் நீங்கப்பெற்றார்.
திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரத் திருப்பதிகத்தில் கிளியன்னவூர் பெருமானுடைய திருவடிகளை வழிபடும் அடியவர்கள் தீங்குகளிலிருந்து விடுபட்டுப் புகழுடன் வாழ்வர். வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே, தன்மை இல்லவர் சார்பு இருந்தாலும், புன்மைக் கன்னியர் பூசல் உற்றாலுமே, நன்மை உற்ற கிளியன்னவூரனே மிகக்கடினமான வறுமை, இயல்பற்றவர்களின் தொடர்பு, மகளிரால் ஏற்படும் பூசல் இவற்றிலிருந்து விடுபடுவர்.
கொடியவர் நெஞ்சில் ஒருபோதும் தங்காத இறைவன் அடியவர் துயரைப் போக்கி அவர் வேண்டியதை அருள்பவன். அடியவர்கள் இவ்வுலகில் மறுபிறப்பு எடுப்பினும் முழுச் செல்வத்துடன் நல்வாழ்வு அளிப்பவர். இத்தல தேவாரப் பதிகத்தை ஓதுபவர்கள் இவ்வுலகக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு ஒரு குறையும் இல்லாது நல்வாழ்வு வாழ்வர்.
மதுரை கொண்ட பரகேசரி வர்மனாகிய முதல் பராந்தகன் காலத்திலேயே இவ்வூர்க்கோயில் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. (ஆதாரம் : இம்மன்னனுடைய 10 -ம் ஆண்டு கல்வெட்டு) இவ்வூர் ஒய்மா நாட்டுப் பிரம்மதேயமான கிளிஞனூர் எனவும், இங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமான் திரு அக்ஞீசரம் உடையவர் எனவும் கல்வெட்டில் காணப்படுகின்றது.
கல்வெட்டுகளில் பராந்தகனுடைய ஆட்சியில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் அமாவாசை, மாதப் பிறப்பு தினங்களில் சிறப்பான நிவேதனங்களுக்கு மான்யம் வழங்கியதாக செய்தி உள்ளது. (ஏ.ஆர்.இ.1919, நெ.148) முதல் குலோத்துங்கன் ஆட்சியில் இக்கோயில் கருவறையின் மேற்குப்புறம் வெளிச்சுற்றில் பிச்சாண்டவருக்காக பூஜைக்கு மான்யம் வழங்கியுள்ள செய்தி (ஏ.ஆர்.இ1919, நெ.153)யும், நந்தா விளக்கு தொடர்ச்சியாக எரியவிட மான்யம், கோயில் பூஜைகள் தினந்தோறும் நடக்கவும், கோயில் திருப்பணிக்கும் பல மான்யங்கள் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நன்மக்கள் பலரால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட செய்திகள் என தெரிய வருகிறது.
1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் அடியவர்களுக்கு அருள்பாலித்துவரும் இக்கோயிலைப் போற்றிப் பாதுகாப்பதும், கோயில் வழிபாட்டை நாளும் தவறாமல் கடமையாகக் கொண்டு வாழ்வதும் நன் மக்கள் கடமையாகும்.
தல வரலாறு:இன்று சிற்றூராகக் காட்சி அளிக்கும் கிளியனூர் கி.பி.6-ம் மற்றும் 7-ம் நூற்றாண்டில் சிறப்புற்ற ஊராக இருந்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். கிள்ளி என்பது பழங்காளச் சோழர்களின் பொதுப் பெயர். உதாரணமாக -நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னர் பெயர்கள் நம் பழைய சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன.
சோழர் காலத்தில் தோன்றிய கிள்ளியநல்லூர் என்ற ஊர்ப்பெயர் நாளடைவில் கிளியனூர் என்று மருவியிருக்கலாம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் இவ்வூர் திருக்கிளியன்னவூர் என்று வழங்கி வந்துள்ளதை இவர் பாடி அருளியுள்ள தேவாரத் திருப்பதிகம் மூலம் நாம் அறிய முடிகின்றது.
திருஞானசம்பந்தர் காலத்தில் செங்கற்கோயிலாக இருந்திருக்கக்கூடிய இத்திருக்கோயில் இடைக்காலத்துச் சோழநாட்டையாண்ட மன்னர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் இக்கற்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தல பெருமான் அகத்திய முனிவருக்கு அருள்பாலித்தவர். ராகு, கேது என்ற கிரகங்களுக்கும் அருள்பாலித்தவர்.
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
உத்தரப் பிரதேசத்தில் கங்கைக் கரையோரம் அமைந்த கிராமம் நரதரா. அங்கு வாழ்ந்த ராம்தத் குன்வர், குஸும்தேவி தம்பதிக்கு 1918ல், இரண்டாவது மகனாக பிறந்தவர் ராம்சுரத் குன்வர். ராமர் மீது அன்பு கொண்டவர் என்பது இதன் பொருள். குழந்தைப் பருவத்திலேயே ராம்சுரத்துக்கு பக்தி இயல்பாக இருந்தது. கங்கை நதி மீது தணியாத ஆர்வத்துடன் இருந்தார். தினமும் கங்கையில் நீராடி மகிழ்வது அவரது வழக்கம். காட்டுப்பூக்களைப் பறித்துக் கொண்டு கோயிலில் வழிபட்ட பின்னரே காலை சாப்பாடு. பள்ளிக்குச் சென்றாலும், மனதில், கங்கையின் பிரவாகமே ஓடிக் கொண்டிருக்கும். பள்ளி முடிந்ததும், புத்தகப்பையை வீட்டில் போட்டுவிட்டு கங்கையை நோக்கி ஓடிவிடுவார். நதிக்கரையில் இருக்கும் துறவிகளைக் கண்டால் அவர் மனம் சந்தோஷத்தில் ஆழும். அம்மாவிடம் ரொட்டி வாங்கி வந்து அவர்களுக்குக் கொடுப்பார். இரவில், அம்மாவிடம் ராமர், கிருஷ்ணர் பற்றிய கதைகளைக் கேட்காமல் தூங்க மாட்டார். ராம்சுரத்துக்கு 16 வயதானது. கபாடியா பாபா என்ற துறவி அவனிடம், காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வரும்படி கூறினார். அவரின் தூண்டுதல் படியே, காசி சென்று விஸ்வநாதரைத் தரிசித்தபோது, எல்லையில்லா பரவசம் ஏற்பட்டது. துறவு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ராம்சுரத்திற்கு பெற்றோர் திருமணம் நடத்த ஆயத்தமாயினர்.
தல்கீரியா தேவி என்ற பெண்ணைப் பேசி முடித்தனர். விஷயமறிந்த ராம்சுரத், கங்கையில் குதித்து நீந்தி மறு கரையை அடைந்தார். மாப்பிள்ளை காணாமல் போனதால் அந்த பெண்ணை ராம்சுரத்தின் தம்பியான ராம்தஹீனுக்கு மணம் செய்து வைத்தனர். திருமணம் கழிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, வீட்டுக்கு வந்தான் ராம்சுரத். சில மாதங்களுக்குப் பிறகு, 1938ல் மீண்டும் வீட்டில் திருமணப் பேச்சு எழுந்தது. ராம்ரஞ்சனிதேவி என்ற பெண்ணை தங்கள் வீட்டு மருமகளாகப் பெற்றோர் தேர்ந்தெடுத்தனர். கட்டாயத் திருமணமாக ராம்சுரத்தின் கல்யாணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகும் படிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. 1940ல் கடுமையான மழைபொழிந்ததால் கங்கையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நரதரா கிராமமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ராம்சுரத் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. அந்தக் கவலை யிலேயே ராம்தத்குன்வர் காலமாகி விட்டார். ஒருவழியாக பி.ஏ. பட்டத்தோடு, ஆசிரியர் பயிற்சியையும் முடித்திருந்த ராம்சுரத் 1943ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். யசோதா, அமிதாப் என்னும் இரு குழந்தைகள் பிறந்தனர். ஆனால், வேலையிலோ, குடும்பத்திலோ அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. கபாடியாவில் வசித்த பாபாவைச்சந்தித்தார். புதுச்சேரி, திருவண்ணாமலை சென்று அரவிந்தரையும், ரமணரையும் தரிசிக்கும்படி அவர் அறிவுறுத்தினார். அதன்படி திருவண்ணாமலை வந்த ராம்சுரத், ரமணரை தரிசித்தார்.
அரவிந்தரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஊருக்குத் திரும்பினார். பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியரானார். குடும்ப வாழ்வில் இருந்தாலும், உப்பு, காரத்தை விடுத்து பழ உணவுகளை உண்ண ஆரம்பித்தார். 1949ல் மீண்டும் திருவண்ணாமலை ரமணாசிரமத்தை அடைந்தார். புற்றுநோயால் அவதிப் பட்ட ரமணரைக் கண்டு கண்ணீர் விட்டார். புதுச்சேரி சென்று அரவிந்தரை தரிசித்தார். அங்கிருந்த துறவி ஒருவர் ராம்சுரத்திடம், கேரளத்திலுள்ள குன்னங்காட்டு ராம்தாஸ்சுவாமியை தரிக்கும்படி கூறினார். அங்கு சென்ற ராம்சுரத், ராமதாசரின் ஆடம்பரநிலையை கண்டு ஊர் திரும்பி விட்டார். 1950ல் மாயா என்னும் பெண் குழந்தைக்குத் தந்தையானார். அந்த சமயத்தில் அரவிந்தர், ரமணரின் இறப்புச் செய்தி ராம்சுரத்தை எட்டியது. சொல்ல முடியாத துயரத்தில் மனம் வாடினார். பள்ளிக்கோடை விடுமுறையில் ஆறுதல் தேடி கேரளாவிலுள்ள குன்னங்காடு புறப்பட்டார். ஒருமாதம் தங்கினார். ஊர் திரும்பும்போது, புனித நதிகளில் நீராடி திருத்தலங்களைத் தரிசித்தார். 1952ல் மனைவி ரஞ்சனி நான்காவது கருவைத் தாங்கினார். இந்த சமயத்தில் கேரளாவிற்கு சுவாமி ராமதாசரைக் காண வந்தார். அவரை குருவாக ஏற்று, ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் என்ற மந்திரத்தை உபதேசம் பெற்றார். அங்கிருந்து திருவண்ணாமலை வந்த ராம்சுரத், மூன்று வாரம் தங்கியிருந்தார். பக்தி பரவசத்தில் இருந்த அவர், மீண்டும் கேரளா புறப்பட்டார். ஈரோடு ரயில்நிலையத்தில் இன்ஜின் மோதி இடது கை எலும்பு முறிந்தது. விஷயம்அறிந்த உறவினர்கள் அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின், யாருடனும் பேசாமல் ராம மந்திரத்தை ஜெபித்து வந்தார். மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கேரளா வந்தார். ஆனால், ராமதாசர் ராம்சுரத்தை தன்னோடு சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார். எனவே சொந்த ஊருக்குச் சென்று, குடும்பத்தினரை விட்டு விட்டு துறவியாகத் திரிந்தார். இறுதியாக திருவண்ணா மலையை இருப்பிடமாக்கிக் கொண்டார். தேங்காய் சிரட்டையை கையில் ஏந்தி உணவு ஏற்றார். பனை ஓலை விசிறியையும் வைத்துக் கொண்டார். குளிப்பதை நிறுத்தி விட்டார். பெற்றோர் இட்ட பெயரான ராம்சுரத் குன்வர் யோகி ராம்சுரத் குமார் என்றானது. மக்கள் அன்போடு விசிறி சாமியார் என்று அழைத்து மகிழ்ந்தனர். அவரின் புகழ் உலகெங்கும் பரவியது. வெளிமாநிலம், வெளிநாட்டு பக்தர்களும் கூட அவரைத் தரிசிக்க வந்தனர். 1993ல் ஆஸ்ரமம் ஒன்றை கட்டி அவரைத் தங்க வைத்தனர். ரமணரைப் போலவே, இவருக்கும் புற்றுநோய் உண்டானது. 2001, பிப்.20ல் இறைவனோடு கலந்தார்.
ராமகிருஷ்ணர் பகுதி இரண்டு
ராமகிருஷ்ணர் பகுதி இரண்டு
அந்த அன்புக்கரத்திற்கு சொந்தக்காரர் கமார்புகூரில் வசித்த சுகலால் கோஸ்வாமி. அவர் சுதிராமின் நெருங்கிய நண்பர். தன் நண்பனின் கஷ்டகாலத்தில் உதவுவது தனது கடமை என நினைத்தார். தனது ஊருக்கே வந்துவிடும்படி நண்பரை அழைத்தார். சுதிராமிற்கு வேறு வழியில்லை. மனைவி, இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கமார்புகூரில் குடியேறினார். தேரேய்பூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் இருந்தது. கமார் என்ற வங்காள சொல்லுக்கு கொல்லர்கள் என்பது பொருள். புகூர் என்ற சொல்லுக்கு குளம் என்பது பொருள். இவ்வூர் செழிப்புமிக்க கிராமம். தண்ணீர் வசதி அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் வயல்வெளிகளில் தாவரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. தாமரைப்பூக்கள் நிறைந்த குளங்கள், ஆறு இக்கிராமத்தில் இருந்தது. கோஸ்வாமி தனது நண்பருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்தார். அதில் சில குடிசைகளும் இருந்தன. அந்த இடத்திற்கு லட்சுமிஜாலா என பெயர். பல கஷ்டங்களை அனுபவித்தாலும் நடப்பதெல்லாம் பகவான் செயல் என உணர்ந்து இறைநம்பிக்கையை விடாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். துன்பங்கள் தொடரும் வேளையில் சுதிராமின் மனைவி சந்திராதேவி மிகுந்த பதட்டத்திற்கு ஆளானார். அவர் படும் வேதனையைக் கண்டு பொறாத சுதிராம் ஆறுதல் சொல்வார். சந்திரா! இவை சாதாரண துன்பங்கள். நாம் பட்டினி கிடக்கிறோம். பட்டினி என்பது ஒரு நோயல்ல. அதைக்கண்டு கலங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனையோ பேர் செல்வம் இருந்தும் பகவானுக்காக நோன்பிருக்கிறார்கள். அவர்களே பட்டினி கிடக்கும்போது ஏழைகளான நாம் பட்டினி கிடந்தால் என்ன? இறைவன் நம்மை நோன்பிருக்கச் செய்துள்ளார். அது அவரது விருப்பமாக இருக்கிறது. சற்று காலத்தில் நாம் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புவோம். கவலைப்படாதே! என்பார்.
காலப்போக்கில் நண்பர் கோஸ்வாமி தந்த நிலம் விளையத் தொடங்கியது. சுதிராமின் குடும்பத்தில் பட்டினிக்கு இடமில்லாமல் போனது. எஞ்சிய உணவுப் பொருளை ஏழைகளுக்கு அவர் அளித்துவந்தார். ராமபக்தரான சுதிராம் வயலுக்கு சென்றதும், ஹே.. ராமா! ரகுவீரா! என்று அழைப்பார். அதன்பிறகே கூலியாட்களை வயலுக்குள் இறக்குவார். நடுகையின்போது ராமனின் பெயரை உரக்கச்சொல்லி முதல் நாற்றை நடுவார். தொடர்ந்து பணியாட்கள் வேலை செய்வார்கள். ஒருமுறை பக்கத்து ஊருக்கு ஏதோ பணி நிமித்தமாக சென்றிருந்த சுதிராம் அதை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரால் நடக்கக்கூட முடியாமல் தளர்வு ஏற்பட்டது. அங்கிருந்த மரத்தடியில் படுத்தார். காற்று இதமாக இருந்தது. மரம் தந்த நிழலின் சுகத்தில் அப்படியே கண்ணயர்ந்துவிட்டார். அப்போது கனவு ஒன்று தோன்றியது. சுதிராம்! நான் சொல்லும் இடத்திற்கு செல். அங்கே கவனிப்பாரின்றி நான் கிடக்கிறேன். என்னை உன் வீட்டிற்கு எடுத்துச்செல், என ஒரு சிறுவனின் வடிவில் தோன்றிய ராமர் சொன்னார். சுதிராம் திடுக்கிட்டு விழித்தார். சற்று தூரம் சென்றார். ராமர் கனவில் சொன்னதுபோலவே ஒரு இடம் தென்பட்டது. அங்கே ஒரு பாம்பு படமெடுத்து நின்றது. அதன்கீழ் ஒரு சாளக்கிரம ராமர்சிலை கிடந்தது. அதை எடுப்பதற்காக சுதிராம் விரைந்தார். பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது. சிலையை எடுத்துக்கொண்டு கண்களில் நீர் மல்க வீடு திரும்பினார் சுதிராம். ராமரே தந்த சிலை என்பதால் அவரது பக்தி உணர்வு மிகவும் அதிகரித்தது. அந்தச்சிலையை வீட்டில் வைத்து பூஜித்து வந்தார். அவரது குலதெய்வமான சீதளாதேவி ஒரு சிறுமியின் வடிவில் வந்து தினமும் பூ பறித்து தருவாள். அவளுடன் சுதிராம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருப்பார். அந்தக்குழந்தை அவரோடு தோட்டத்திற்கு சென்று மரக்கிளைகளை வளைத்துக் கொடுப்பாள். சுதிராம் இலகுவாக மலர்களை பறித்துக்கொள்வார்.
தெய்வத்தை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கொண்டவரான சுதிராமின் வாழ்வில் மற்றொரு அதிசயமும் நிகழ்ந்தது. கமார்புகூரில் இருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள மேதினிப்பூர் என்ற ஊருக்கு சுதிராம் சென்றுகொண்டிருந்தார். வழியில் வில்வ மரம் ஒன்று நின்றது. பொதுவாக அந்தக்காலத்தில் மரத்தில் இலைகள் உதிர்ந்திருக்கும். ஆனால் இந்த மரத்தில் மட்டும் இலைகள் ஏராளமாக இருந்தது சுதிராமிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது சிவபெருமானின் கருணை என்றே நினைத்தார். வில்வ இலைகளை பறித்தார். மேதினிப்பூருக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டில் இருந்த சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டார். வெளியூருக்கு புறப்பட்ட காரணத்தையே மறந்துவிட்டார். மறுநாள்தான் அவருக்கு அந்த நினைவே வந்தது. அந்த அளவிற்கு மிகப்பெரிய ராமபக்தராகவும், சிவபக்தராகவும் விளங்கினார் சுதிராம். எந்தச் சூழ்நிலையிலும் அவர் நேர்மை மாறவே இல்லை. யாரிடமும் கடனாகவோ, இலவசமாகவோ எதையும் பெறமாட்டார். ஒழுக்கமற்ற மனிதர்களைக் கண்டாலே ஒதுங்கிப்போவார். அவர் காயத்ரி ஜெபம் செய்யும்போது ஒரு தெய்வீக ஒளி வீசும். கன்னங்களில் கண்ணீர் வழியும். ராமசேவையிலேயே அவரது காலம் கழிந்தது. இதனிடையே மூத்த மகன் ராம்குமாருக்கும், மூத்த மகளுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. ராம்குமார் ஜோதிடக்கலையில் வல்லவர். தந்தையாரின் தொழிலில் உதவியாக இருந்தார். இதனால் குடும்பத்தில் மீண்டும் செல்வவளம் செழித்தது. ராம்குமாரிடமும் தெய்வீகசக்திகள் இருப்பதாக ஊரார் நம்பினர். அவரது ஜோதிடம் சரியாக இருந்ததால் கூட்டம் மொய்த்தது. காளிதேவியை ராம்குமார் வழிபட்டு வந்தார். ஒருமுறை காளி கோயிலுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அதிபயங்கர வடிவத்தில் காளிதேவி அவர் முன்பு தோன்றினாள்.
செவ்வாய், 1 டிசம்பர், 2020
ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?
ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?
மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.
தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.
ஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?
வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.
ஏகாதசியன்று செய்யக்கூடாதது
ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
ஏழு பிரகாரம்
இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா <உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.
துவாதசிக்கு அகத்திக்கீரை
வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.
பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்!
பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்!
கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள். பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும். பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!
சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை!
சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும்கூட, பாதரச லிங்கத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்! வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி பாதரச லிங்கத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலியையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!
சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் பாதரசத்தை திடப்பொருளாக்கி, அதை லிங்கமாக்கி பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை பாதரசலிங்கத்தை பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.
ரசசமுச்சயம் என்ற நூலில், பாதரசலிங்கத்தைத் தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்தத் தரவரத்திற்கோ, உலோகத்திற்கோ சக்தியில்லை. ஏனெனில் அவை எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியவை; வெப்பத்தால் காய்ந்து போகக்கூடியவை. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.
பாதரசத்தை விசேஷச் செயல்பாடுகள் மூலம் திடபதார்த்த மாக்குவதால், அது அமிர்தமாகி விடுகிறது. அப்படி திடப்படுத்தப்பட்ட பாதரசத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. பாதரசம் நோய்களை அகற்றி புத்துயிரும் புது இளமையையும் கொடுக்கிறது. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. சாதாரணமாக பாதரசத்தில் அழுத்தங்கள் நிறைய இருக்கும். அதை புடம் போட்டு அசுத்தங்களை அகற்றிய பிறகுதான் அது திடபதார்த்தமாக்கப்படுகிறது. அதிலிருந்து வடிவமைக்கப்படும் சிவலிங்கம் முழுப் பலன்களையும் அளிக்கவல்லது. விதிமுறைப்படி தினந்தோறும் அனுஷ்டானங்கள் செய்து பூஜை, அர்ச்சனை, ஆரத்தி முதலிய சேவைகள் செய்து ஆராதிக்கக்கூடியவர்கள் மட்டும் பாதரச லிங்கத்தை வீட்டில் ஸ்தாபிக்க வேண்டும். வெறும் லிங்கத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுவதால் மட்டும் பலன் கிடைப்பதில்லை!
14 உலகங்களில் வசிப்பவர்கள் யார் தெரியுமா?
14 உலகங்களில் வசிப்பவர்கள் யார் தெரியுமா?
இறைவன் ஏழு உலகங்களை உருவாக்கி இருக்கிறாராம். சத்தியலோகத்தில் பிரம்மன், தபோலோகத்தில் தேவதைகள், ஜனோலோகத்தில் பித்ருக்கள், சொர்க்கத்தில் இந்திரன் முதலான தேவர்கள், மஹர்லோகத்தில் முனிவர்கள், புனர்லோகத்தில் கிரகங்கள், நட்சத்திர தேவதைகள், பூலோகத்தில் மனிதர்கள், விலங்குகள் வசிக்கின்றனர். இவையெல்லாம் பூமிக்கு மேலிருப்பவை. பாதாளத்திலும் இதே போல ஏ ழு லோகங்கள் உண்டு. இதனால் தான் அசுரர்கள் ஈரேழு 14 லோகங்களையும் அடக்கியாண்டதாக புராணங்களில் சொல்லப்படும். கீழுள்ள அதல, விதல லோகங்களில் அரக்கர்கள், சுதல லோகத்தில் அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, தலாதல லோகத்தில் மாயாவிகள், மகாதல லோகத்தில் புகழ்பெற்ற அசுரர்கள், பாதாள லோகத்தில் வாசுகி முதலான பாம்புகள், ரஸாதல லோகத்தில் அசுர ஆசான்கள் வசிப்பதாக நம்பிக்கை.
பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்
பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. அவற்றின் தொகுப்பே இது.
01. மச்சாவதாரம்
சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காண்கிறோம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் எனப்படுகிறார். கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம் முன்னாளில் சேலூர் (சேல் - மீன்) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
02. கூர்மாவதாரம்
திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர் களும் கடைந்தபோது, மத்தாக இருந்த மந்திரமலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார் திருமால். ஆமை வடிவம் கொண்ட பெருமாள், மலையை தாங்கும் வல்லமையை தர சிவபெருமானை வேண்டினார். இதற்காக, காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சூர் சிவன் கோயிலில் ஆமைமடு என்ற தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள விநாயகர் சன்னதி விதானத்தில் திருமால் ஆமை வடிவில் சிவபூஜை செய்வது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. முருங்கை மரத்தின்கீழ் ஜோதி வடிவாக விளங்கும் சிவலிங்கத்தை பெருமாள் ஆமை வடிவத்தில் வழிபட்டதால் இந்த சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் (கச்சபம் - ஆமை) என்ற பெயர் ஏற்பட்டது.
03.வராக அவதாரம்
இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாள லோகத்தில் இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமியை தோண்டி அங்கு சென்று அவனை அழித்தார். கோபம் நீங்காத அவரை சிவபெருமான் சாந்தப்படுத்தினார். சிவ தரிசனத்தால் சினம் தணிந்த பெருமாளுக்கு சிவபெருமான் அருள் புரிந்த தலமே திருப்பன்றிக்கோடு (வராகம் - பன்றி) ஆகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
04.நரசிம்மஅவதாரம்
தன் பக்தனான பிரகலாதனை இரண்யனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள் வெளிப்பட்டார். இரண்யனைக் கொன்றார். அவரது உக்கிரத்தைத் தணிக்க, அதனினும் மேற்பட்ட உக்கிரத்துடன் சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவெடுத்தார். காஞ்சிபுரத்தில் தாமல் என்ற பகுதியில், நரசிம்மர் வழிபட்ட நரசிம்மேஸ்வர சிவாலயம் உள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் தலத்தில் நரசிம்மர் வழிபட்ட காமீஸ்வரர் என பெயர் கொண்ட சிவபெருமானை தரிசிக்கலாம்.
05.வாமன அவதாரம்
மலை நாட்டை ஆண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க அவனை குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார். அவனை காலால் அழுத்தி பாதாள லோகம் அனுப்பிய பாவம் தீர பெருமாள் வழிபட்ட சிவத்தலம் கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியாகும்.
06.பரசுராம அவதாரம்
ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த, தன் தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்ட அவதாரம் பரசுராம அவதாரம். இந்த அவதாரத்தில் மன்னர்களின் செருக்கையும் அடக்கினார் திருமால். திருமால் பரசுராமராய் பூஜித்த சிவத்தலங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள பழுவூர் மற்றும் மயிலாடுதுறை அருகே உள்ள திருநின்றியூர் ஆகும்.
07.ராமாவதாரம்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும், பெற்றவர் சொல் கேட்டு நடக்கவும், அநியாயத்தை எப்பாடுபட்டேனும் வேரறுக்கவும், சிவ பக்தனாயினும் காமத்திற்கு அடிமைப்பட்ட அரக்கனை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ராம நாமத்தை சிவனே உச்சரிக்கிறார் என்பதும் வரலாறு. அவரே அனுமானாக உருவெடுத்து, ராவணனை அழிக்க திருமாலுக்கு உதவினார் என்பதும் செவிவழிச் செய்தி. திருமால், ராமாவதார காலத்தில் சிவனுக்காக சேதுக்கரையில் ஒரு தலமே உருவாக காரணமாக இருந்தார். சிவலிங்கம் சமைத்து பூஜித்தார். அதுவே ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலாகும். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலுள்ள சிவனை ராமர் வழிபட்டதாக கூறப்படுவதால் அவர் ராமலிங்கேஸ்வரர் எனப்படுகிறார்.
08. பலராம அவதாரம்
திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக் கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு. காஞ்சிபுரத்தில் பலராமர் வழிபட்ட சிவன் கோயில் பலபத்ர ராமேஸ்வரம் என பெயர் கொண்டதாகும். திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) அருகிலுள்ள கோடியக்கரை குழகர்கோயில் பலராமர் வழிபட்ட தலமாகும்.
09.கிருஷ்ண அவதாரம்
கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்து, குரு÷க்ஷத்ர யுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை செய்ததாக பாகவதம் கூறுகிறது. மேலும் கண்ணன் தன் வினைகள் தீர, திருவீழிமலை (திருவாரூர் மாவட்டம்) மற்றும் திருவிடை மருதூர் (தஞ்சாவூர் மாவட்டம்) சிவபெருமானை பூஜித்த தலங்களாக கூறப்படுகிறது.
ராமகிருஷ்ணர் பகுதி ஒன்று
ராமகிருஷ்ணர் பகுதி ஒன்று
சத்தியம் தவறாத சுதிராமிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ்வூரில் மிகப்பெரிய ஜமீன்தார் ராமானந்தர். அவரைப் பகைத்துக்கொண்டு யாராலும் வாழ இயலாது. அவ்வாறு பகைத்துக்கொண்டால் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சொத்துக்களைப் பறித்துக்கொண்டு ஊரைவிட்டே விரட்டிவிடுவார். இதே நிலைமைதான் இப்போது சுதிராமிற்கு ஏற்பட்டிருந்தது. சத்தியம் தவறாத உத்தமரான சுதிராம் கோல்கட்டாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த தேரேய்பூர் கிராமத்தில் வசித்தார். அவரது முன்னோர்கள் புகழ்பெற்று விளங்கினர். ராமபிரான் அவர்களின் குலதெய்வம். இருந்தாலும் சிவபெருமானையும் வழிபடத் தவறுவதில்லை. 50 ஏக்கர் நிலத்திற்கு சுதிராமும், அவரது இரண்டு தம்பிகளும் சொந்தக்காரர்கள். ஏழைகளுக்கு இரக்கத்துடன் உதவுவார்கள். பிறர் துன்பம் கண்டு மனமுருகும் தன்மை கொண்டவர்கள். இக்குடும்பத்தின் புகழ் பக்கத்து கிராமங்களில்கூட பரவியிருந்தது. மாணிக்ராம் சட்டர்ஜி என்பவர்தான் இக்குடும்ப தலைவராக இருந்தார். அவரது மகன்தான் சுதிராம். சுதிராமிற்கு பிறகு நிதிராம், கனைராம் என்ற தம்பிகளும், ராம்சிலா என்ற தங்கையும் பிறந்தார்கள். இவர்களில் சுதிராம் பக்தியில் மிகுந்த நாட்டமுள்ளவர். ராமபிரானைத் துதித்துக்கொண்டே இருப்பார். காலையில் ராமனை வணங்கிய பிறகுதான் தண்ணீர்கூட குடிப்பார். தியாக உணர்வு மிக்கவர். உண்மை மட்டுமே பேசுவார். அவருக்கு இயற்கையாகவே ஆசைகள் மனதில் இல்லை. ஒழுக்கம் தவறி நடப்பவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போய் விடுவார். அவர்களைப்பற்றி வேதனையோடு பேசுவார். சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக நாட்டம் கொண்டவர்.
அக்கால அந்தணர் மரபுப்படி, இளமையிலேயே அவருக்கு ஒரு சிறுமியை மணம் செய்து வைத்தனர். ஆனால், அச்சிறுமி மனைவி சில நாட்களில் இறந்து போனார். மீண்டும் இருபத்தைந்தாம் வயதில் சந்திரமணிதேவி என்னும் நற்குண மங்கையை மணம் செய்துகொண்டார். சந்திராவும் தன் கணவரைப் போலவே பக்திப்பிழம்பாக இருந்தார். கள்ளம் கபடமற்றவர். பிறரது துன்பங்களை வலியச்சென்று ஏற்றுக்கொள்வார். ஒரு சுமைதாங்கியாக அவர் திகழ்ந்தார். 1805-ல் இத்தம்பதியருக்கு ராம்குமார் என்ற மகன் பிறந்தான். 1810-ல் காத்யாயனி என்ற மகள் பிறந்தாள். இதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்து ராமேஸ்வர் என்ற மகன் பிறந்தான். மூத்தவர் என்ற முறையில், குடும்பப் பொறுப்பு சுதிராமின் கைவசம் இருந்தது. உழைப்பில் வல்லவரான அவர் குடும்பத்திற்காக ஏராளமான சொத்துக்களைச் சேர்த்தார். செழுமைக்கு பஞ்சமில்லை. ஆனால், இந்த அழகிய குடும்பத்தின் மீது யார் கண்பட்டதோ; அல்லது சுதிராம் ராமனின் பக்தர் என்பதால், இயற்கையாகவே துன்பம் ஆட்கொண்டதோ தெரியவில்லை. அவரது குடும்பத்திற்கு வந்தது சோதனை. அப்போது தேரேய்பூர் கிராமம் ஜமீன்தார்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தது. அவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு மொத்தமாக வரியை கட்டிவிட்டு கிராமத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வருவார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம். அவர்கள் விதித்தது தான் வரி. தேரேய்பூர் கிராமம் ராமானந்தராய் என்ற ஜமீன்தாரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அவர் பெரும் கொடுமைக்காரர்.
அவ்வூரில் வசித்த ஏழை ஒருவன் அவரது கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான். அவன்மீது பொய்வழக்கு தொடர்ந்தார் ராய். தனது வழக்கிற்கு சாட்சிகளை அவர் தேடவேண்டி வந்தது. அவ்வூரிலேயே சத்தியவான் என கருதப்பட்டவர் சுதிராம். எனவே அவரை சாட்சிசொல்ல அனுப்பினால், அந்த சாட்சியம் நியாயமானதாகக் கருதப்பட்டு, ஏழைக்கு தக்க தண்டனை கிடைக்கும் என அவர் நம்பினார். சுதிராமிற்கு ஆள் அனுப்பினார். நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். அந்த ஏழைக்கு எதிராக நீ நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் நான் உனக்கு வேண்டிய வசதி செய்து தருகிறேன் என்றார். சத்தியம் தவறாத சுதிராம் இதற்கு மறுத்தார். ஏய் சுதிராம்! நீ சாட்சி சொல்ல மறுத்தால் அந்த ஏழையின் கதிதான் உனக்கும் ஏற்படும். உன்மீதும் பொய் வழக்கு போட்டு உன் சொத்துக்களைப் பறிப்பேன். உன் குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிடுவேன். நீ மட்டுமின்றி உனது சகோதரர்களும் அவர்களது குடும்பமும் தெருவிற்கு வந்துவிடும், ஜாக்கிரதை, என மிரட்டினார் ராமானந்தர்.
சுதிராம் அவரது மிரட்டலுக்கு பணியவில்லை. என்னால் ஒரு ஏழையின் குடும்பம் அழியக்கூடாது. என் குடும்பம் வேண்டுமானால் அழிந்து போகட்டும், என ஆணித்தரமாகச் சொல்லி விட்டார். தன் குடும்பமே அழியப்போகிறது என தெரிந்தும் சத்தியம் தவறக்கூடாது என்பதில் உறுதியாக நின்று விட்டார். ஆனால், அந்த ஜமீன்தாரின் செல்வாக்கின் முன் சாதாரண பணக்காரரான சுதிராமின் சத்தியம் எடுபடவில்லை. ராமானந்தர் நினைத்ததை சாதித்துவிட்டார். சுதிராம்மீது பொய்வழக்கு தொடுக்கப்பட்டது. அவரது வீடு, 50 ஏக்கர் நிலம் அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ராமானந்தருக்கு சொந்தமாகிவிட்டன. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வீட்டை விட்டு குடும்பத்தினர் கண்ணீருடன் வெளியேறினர். ஊர்மக்கள் அவர்கள்மீது பரிதாபப்பட்டார்களே தவிர, ஜமீன்தாருக்கு பயந்து எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. சுதிராமின் இரண்டு சகோதரர்களும் அவரவர் மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டனர். 40 வயதே நிரம்பிய சுதிராம் மனைவி, குழந்தைகளுடன் நட்ட நடுரோட்டில் தத்தளித்து நின்றார். அப்போது ஒரு கரம் அவரது தோளைப் பற்றியது..