பொடி வைகைகள்
1. சாம்பார் பொடி
அரை கிலோ தனியா, கால் கிலோ மிளகாய் , கால் கிலோ துவரம் பருப்பு, கால் கிலோ கடலை பருப்பு, 50 கிராம் சீரகம், 50 கிராம் மிளகு, 50 கிராம் வெந்தயம், 20 கிராம் துண்டுகளாக்கிய பெருங்காயம், 25 கிராம் மஞ்சள் பொடி, 50 கிராம் பச்சை அரிசி, ஒரு கொத்து கருவேப்பிலை எல்லாம் ஒவ்வொன்றாக கொஞ்சம் கை பொருக்கும் சூடு வரை வறுத்து எடுத்து நன்றாக ஆற வைக்கவும், ஆறியதும் இரண்டு ஈடாக மிக்ஸியில் போட்டு ரொம்பவும் நைஸாக அரைக்கவும் அல்லது மிஷினில் அரைத்து, ஆற வைத்து Air tight container ல் வைக்கவும்
2. ரசப்பொடி
ஒரு கப் துவரம் பருப்பு, ஒரு கப் தனியா, அரை கப் மிளகு, அரை கப் சீரகம், 15-20 மிளகாய், 10 கிராம் பெருங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, 10-15 கருவேப்பிலை
எல்லாம் ஒவ்வொன்றாக வாசனை வரும் வரை வறுத்து ( தனியா வறுக்கும் போது பெருங்காயம், மஞ்சள் தூள், கருவேப்பிலை போட்டு கொள்ளளாம் ) இறக்கி நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு கற கறவென்று பொடித்து ஆறியதும் Air tight container ல் எடுத்து வைக்கவும்
3. கறி பொடி
ஒரு கப் தனியா, ஒரு கப் கடலை பருப்பு, ஒரு கப் உளுத்தம் பருப்பு, 15-20 மிளகாய், எல்லாம் தனி தனியாக எண்ணை ஊற்றாமல் ( dry fry ) சிவக்க வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும்
சின்ன நெல்லிகாய் அளவு பெருங்காய கட்டியை வானலியில் போட்டு பிரட்டினால் சூடானதும் புஸ் என்று உப்பி வரும் அதையும் எடுத்து ஆற வைக்கவும்
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு கற கறவென்று பொடித்து நன்றாக ஆறியவுடன் Air tight container ல் எடுத்து வைக்கவும்
4. இட்லி மிளகாய் பொடி
வானலியில் ஒரு கப் உளுத்தம் பருப்பு , அரை கப் கடலை பருப்பு , ஒரு பெரிய கட்டி பெருங்காயம் , 100 கிராம் மிளகாய் , அரை ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி நன்றாக சிவக்க வறுத்து ஆற வைக்கம்
அதே வானலியில் கால் கப் கருப்பு எள் போட்டு பட படவென்று பொரித்து இறக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் பருப்புகளையும் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சம் கற கறவென்று அரைத்து ஒரே ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு ஒரு சுத்து சுத்தி எடுத்து ஆறியதும் ஏர் டைட் கண்டெய்னரில் வைக்கவும்
5. பருப்பு பொடி
ஒரு கப் துவரம் பருப்பு, அரை கப் கடலை பருப்பு, பாசி பருப்பு, பொட்டு கடலை, கால் கப் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் சீரகம் , 8-10 வர மிளகாய், 2 சின்ன கட்டி பெருங்காயம் 10 கருவேப்பிலை எடுத்து அடுப்பில் வானலி வைத்து மேல் சொன்னதை எல்லாம் தனி தனியாக சிவக்க வறுத்து எடுத்து ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்தால் சுவையான கம கமவென்ற பருப்பு பொடி ரெடி
6. கருவேப்பிலை பொடி
வானலியில் ஒரு 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு , 2 ஸ்பூன் கடலை பருப்பு , ஒரு சின்ன கட்டி யெருங்காயம் , 4 மிளகாய் , 1 ஸ்பூன் மிளகு , கால் ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி நன்றாக சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போடவும்
அதே வானலியில் 2 கைபிடி அலம்பி சுத்தம் செய்து ஈரப்பதம் இல்லாத கருவேப்பிலை , நெல்லிக்காய் அளவு புளியை சிறு சிறு துண்டுகளாக போட்டு , கருவேப்பிலையை அமுக்கினால் உடையும் அளவு
வறுத்து ஆறியதும் அதையும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சம் கற கறவென்று அரைத்து ஆறியதும் ஏர் டைட் கண்டெய்னரில் வைக்கவும்
7. எள்ளு பொடி
வானலியில் ஒரு கை பிடி வெள்ளை எள்ளு, அரை கை பிடி உளுத்தம் பருப்பு 10 மிளகாப், போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு கோர்ஸாக அரைத்தால் மணக்கும் எள்ளு பொடி ரெடி
8. அங்காய பொடி
அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து 4-5 ஸ்பூன் வேப்பம் பூ, 10-15 சுண்டைக்காய், 3-4 ஸ்பூன் மணதக்காளி வத்தல் ஒவ்வொன்றாக போட்டு சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்
அதே வானலியில் ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு, 2 மிளகாய், ஒரு சின்ன துண்டு சுக்கு, சின்ன கட்டி பெருங்காயம், அரை ஸ்பூன் சீரகம், 7-8. கருவேப்பிலை, தேவையான உப்பு எல்லாம் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் வேப்பம் பூ, சுண்டைக்காய், மணதக்காளி எல்லாம் போட்டு நைஸாக அரைத்தால் கம கமவென்ற மருத்துவ குணம் கொண்ட அங்காய பொடி ரெடி
9. தேங்காய் பொடி
வானலியில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி, ஒரு கப் உளுத்தம் பருப்பு , கால் துவரம் பருப்பு, 10 - 12 வர மிளகாய் போட்டு சிவக்க வறுத்து அதில் ஒரு நெல்லிக்காய் சைஸ் புளியை பிச்சு போட்டு, ஒரு ஸ்பூன் பெருங்காய பொடி, தேவையான உப்பு பபோட்டு நன்றாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைக்கவும்
ஒரு முழு முத்திய தேங்காயை உடைத்து சன்னமாக துறுவி அதை வானலியில் போட்டு நன்றாக சிவக்க வறுத்து ஆறிதும் அதையும் மக்ஸியில் போட்டு கொஞ்சம் விட்டு விட்டு அரைத்து மூடி திறந்து நன்றாக கிளறி மறுபடியும் மூடி 2-3 சுத்து சுத்தி இறக்கி திறந்தால் மணக்க மணக்க தேங்காய் பொடி ரெடி
10. தனியா பொடி
வானலியில் ஒரு கப் தனியா போட்டு வாசனை வரும் வறுத்து ஒரு அகலமான தட்டில் போடவும்
ஒரு கப் உளுத்தம் பருப்பு, அரை கப் கடலை பருப்பு, 8-10 வரமிளகாய் போட்டு சிவக்க வறுத்து தனியாவுடன் போடவும்
வானலியில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு ஒரு கட்டி பெருங்காயம், அரை ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் சீரகம், நெல்லிக்காய் அளவு புளியை பிச்சு போட்டு , தேவையான கல் உப்பு போட்டு நன்றாக வறுத்து அதையும் தனியாவுடன் போட்டு நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு கற கறவென்று அரைத்தால் தனியா பொடி ரெடி
11. வேப்பல கட்டி
தளிர் நார்த்த இலை ஒரு கைபிடி ( இலையின் நடுவில் இருக்கும் காம்பை எடுத்து விட வேண்டும் , இலையை நீள வாக்கில் இரண்டாக மடித்து வெத்தலை காம்பு கிழிப்பது போல் கிழித்தால் காம்பு வந்து விடும் ) , தளிர் எலுமிச்சம் இலை ஒரு கைபிடி , கருவேப்பிலை ஒரு கைபிடி ( கிராமங்களில் வீட்டு தோட்டத்திலேயே கிடைக்கும் = நகரங்களில் வீதியில் வரும் கீரை விற்பவர்களிடம் சொல்லி வைத்து வாங்லாம் ) எல்லா இலைகளையும் நன்றாக அலம்பி சுத்தம் செய்து ஒரு யெரிய தாம்பாளத்தில் பரப்பி அரை மணி நேரம் வெய்யிலில் வைத்து ஈரப்பதம் இல்லாமல் எடுத்து அப்படியே மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து தனியே வைக்கவும் ( அரைக்கும் போது 10-15 செகன்டுக்கு ஒரு முறை மிக்ஸி ஆஃப் செய்து மூடி திறந்து கிளறி விட்டு , கிளறி விட்டு அரைத்ததால் சீக்கிரம் நைஸ் பொடியாக வரும் )
அதே மிக்ஸியில் 10-12 மிளகாய் , ஒரு ஸ்பூன் ஓமம் , ஒரு ஸ்பூன் பெருங்காய தூள் , தேவையான கல்உப்பு அப்படியே போட்டு கொற கொறவென்று அரைத்து அதனுடன் தனியே அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக அரைத்து எடுத்தால் சூப்பரான வேப்பல கட்டி ரெடி
12. ஊறுகாய் பொடி
வானலியில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி ,
ஒரு ஸ்பூன் கடுகு , கால் ஸ்பூன் வெந்தயம், 10-12 மிளகாய் , 2 சின்ன கட்டி பெருங்காயம் போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்
13. வெத்த குழம்பு பொடி
வானலியில் ஒரு கப் துவரம் பருப்பு, கால் கப் கடலை பருப்பு, கால் கப் தனியா, 2 ஸ்பூன் வெந்தயம், 2ஸ்பூன் கடுகு , அரை ஸ்பூன் மிளகு, சீரகம், 7-8 மிளகாய் வத்தல் எல்லாம் போட்டு சற்று சூடாகும் வரை பிரட்டி ஆறியதும் கற கறவென்று அரைத்து ஏர் டைட் கன்டெய்னரில் வைக்கவும்