அருள் மிகு ரத்தினகிரீஸ்வரர் கோயில், கரூர்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. சுவாமிக்கு காலையில் பால் அபிசேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 64 வது தேவாரத்தலம் ஆகும்.
இறைவன் 9 ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையை சுற்றி அமைந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் பூமிக்கடியில் பச்சை கற்கள், சிவப்பு கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன. சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம் இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை. மணிமுடி இழந்து தேடி வந்த ஆரிய மன்னனுக்கு இரத்தினமும், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பொற்கிழியும் இறைவன் கொடுத்ததும் இத்தலத்தில்தான்.
வைராக்கிய பெருமாள் :
காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் தனக்கு குழந்தை பிறந்தால் தன் சிரசை தருவதாக வேண்டினார். அது படியே நடக்க வைராக்கிய பெருமாள் தன் சிரசை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்தார். மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் வந்தது. தேனும் தேங்காய்ப்பாலும் மட்டும்தான் இவருக்கு அபிசேகம். பூஜை முடிந்த பிறகு சுவாமியின் மாலை இவருக்குத்தான் போடப்படும். இத்தலத்தில் இவர் மிகவும் விசேசமானவர்.
காகம் பறவா மலை :
ஆயர் ஒருவர் அபிசேகத்துக்காக கொண்டு வந்து வைத்திருந்த பால் காகம் கவிழ்த்ததால் அது எரிந்து போயிற்று. அப்படி கவிழ்ந்த எல்லைக்கு மேல் காகம் இப்போதும் இந்த மலையின் மீது ஒரு காகம் கூட பறப்பதில்லை என்பது சிறப்பான அதிசயம்.
தீர்த்தசிறப்பு :
காவேரித் தீர்த்தம் தினமும் கால்நடையாகவே 8 கி.மீ., நடந்து எடுத்துக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிசேகம் செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்கள் :
★ இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது.
★ சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது.
★ பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வியாழன், 19 நவம்பர், 2020
அருள் மிகு ரத்தினகிரீஸ்வரர் கோயில், கரூர்
நவ பிருந்தாவனம்
ஸ்ரீ மதாநந்த குருப்யோ நமஹ
ஸ்ரீ ராகவேந்திராய நம
கர்நாடக மாநிலத்தில், கொப்பல் மாவட்டத்தில், கங்காவதி தாலுக்காவில் ஆனேகுந்தியில் துங்கபத்ரா ஆற்றின் நடுவில் உள்ள ஒரு திட்டில் அமைந்துள்ள நவ பிருந்தாவனம் நினைத்தாலும், துதித்தாலும் மனக்குறைகளை நீக்கி நன்மைகளை வழங்கி பிரார்த்தனைகள் நிறைவேற செய்யும் அற்புதமான ஸ்தலமாகும்.
மத்வாச்சார்யரின் குரு பரம்பரையில் உள்ள ஒன்பது ஆசார்ய குருமார்களின் ஜீவ சமாதி அமைந்து உள்ள மிகவும் புனிதமானதும் சக்தி வாய்ந்த ஸ்தலமாகவும் திகழ்கின்றது.
இந்த ஒன்பது ஜீவ சமாதிகளில் அந்த மகான்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
இந்த இடம் தான் ஸ்ரீமத் ராமாயணத்தில் சொல்லப்படும் கிஷ்கிந்தா.
சுக்ரீவரும் அவரது வானர சேனையும் இங்கு தான் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த ஒன்பது குருமார்களின் பெயர்கள்
கீழே !!
ஸ்ரீ பத்மநாப தீர்த்தர்,
ஸ்ரீ ஜய தீர்த்தர்,
ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர்,
ஸ்ரீ வாகீச தீர்த்தர்,
ஸ்ரீ வியாசராஜர்,
ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர்,
ஸ்ரீ ராமதீர்த்தர்,
ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர்,
ஸ்ரீகோவிந்த தீர்த்தர்
ஒன்பது த்வைத மடாதிபதிகளின் பிருந்தாவனம் இருப்பதால் நவ பிருந்தாவனம் என்று அழைக்கப்படுகிறது.
இது மிகவும் சிறப்பு மிகுந்த ஆலயமாகும்
மத்வ மதத்தில் மிகவும் தொன்மையான பீடாதிபதி ஸ்ரீ வியாசாராஜர் பாரதம் முழுக்க இந்து சமய கருத்துகளையும் பல க்ரந்தங்களையும் பரப்பியவர்.
இந்த ஸ்ரீ வியாச ராஜரின் மறுபிறவியே மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள்.
ஸ்ரீ வியாசாராஜர் கிருஷ்ண தேவராயர் அரசருக்கு அலோசகராகவும் இருந்தவர்.
ஒருநாள் கிருஷ்ண தேவராயரை குஹ பீடையில் இருந்து காப்பாற்றி அரச பதவி ஏற்று வியாசராய தீர்த்தராக இருந்தவர் வியாசராஜர் ஆனார்.
இந்தியாவில் பல மாநிலங்களில், நம் தமிழ் நாட்டில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆஞ்சநேய விக்ரஹங்கள் உட்பட 700 ஆஞ்சநேயர் விக்ரஹங்களை ப்ரதிஷ்டை செய்தவர்.
நவ பிருந்தாவனத்தை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்
ஒரு முறை நவ பிருந்தாவனம் சென்று பாருங்கள் வாழ்வில் ஒரு திருப்பம் கண்டிப்பாக ஏற்படும்.
ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.
எண்ணிக்கை 108 மகத்துவம்
எண்ணிக்கை 108 மகத்துவம்.
ருத்திராட்ச மாலை அல்லது வேறு எந்த மணி மாலைகளனாலும் 108 மணிகளால் கோர்க்கப்பட்டிருப்பது ஏன் என்று பார்ப்போம்.
நமது இந்திய மண்ணில் தோன்றிய எந்த கலாச்சாரமானாலும் சரி அது இந்து கலாச்சாரமானாலும், புத்த கலாச்சாரமானாலும் அல்லது ஜெயின் கலாச்சாரமானாலும் அல்லது சீக்கிய கலாச்சாரமானாலும் சரி அவற்றிலும் இந்த 108 மணிகளே பின்பற்றப் படுகின்றன.
எந்த மந்திரத்தையும் 108 முறை ஓதினால் தான் அதன் பலன் தெரியும் என்பார்கள் ஏன்?
ஏன் ஜப்பானில் கூட ஜென் கோயில்களில் 108 முறை கோயில் மணியை ஒலிக்கச் செய்வார்களாம்.
நமது முன்னோராகிய சித்தர்கள் கணித வல்லுனர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதற்க்கு இது ஒரு உதாரணம். அதாவது 108 என்கிற எண் ஒரு முழுமையான மொத்த பிரபஞ்சத்தையும், அதன் ஆற்றலையும், அறிவையும் குறிக்கும். அதாவது கடவுள் தன்மையை குறிக்கும்
இந்த 108 என்கிற எண் முழுமையை குறிக்கிறது என்பதற்க்கு சில உதாரணங்கள்.......
1) எண் 9 முழுமையை குறிக்கும் எண், எண் 108ஐ கூட்டினால் 1+8=9 வரும், 108ம் முழுமையை குறிக்கிறது. அதே போல் 9துடன் எந்த எண்னை பெருக்கினாலும் வரும் விடையை கூட்டிபார்த்தால் 9 வரும் 1x9=9. 2x9=18. 1+8=9. 285x9=2565 2+5+6+5=18 1+8=9. 8543x9=76887 7+6+8+8+7=36 3+6=9. அதாவது 9 என்கிற எண் கடவுள் நிலையை ஒரு முழுமையை குறிக்கும் எண்.
2) 9 கிரகங்கள்12 ராசிகளில் பயணிக்கும் நிலை இருப்பை ஒரு முழுமையை குறிக்கிறது 9 x 12 = 108.
3) மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்கும் 4 பாதம் வீதம் மொத்தம் நட்சத்திரங்களுக்கு 108 பாதங்கள் 27 x 4 = 108.
4) வேதகால புத்தகங்களின் படி பிரபஞ்சத்தில் உள்ள கணிமங்களின் எண்ணிக்கை 108. இப்பொழுது இன்னும் சில கணிமங்கள் உள்ளதாக கண்டு பிடித்திருக்கிறார்கள்.
5) கணிததில் 1,2 மற்றும் 3 ஆகிய எண்களின் ஆற்றல் பற்றிய உண்மை எண் 1க்கு ஆற்றல் 1. எண் 2க்கு ஆற்றல் 4 (2x2). எண் மூன்றிர்க்கு ஆற்றல் 27 (3x3x3). இந்த மூன்றையும் (1x4x27) பெருக்கினால் வரும் மொத்த ஆற்றல் 108. இது தான் பிரபஞ்ச ஆற்றல். எண் 1 ஒரு பரிமான ஆற்றலையும், எண் 2 இரண்டு பரிமான ஆற்றலையும், எண் 3 முப்பரிமான ஆற்றலையும் குறிக்கிறது
6) சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 108 சந்திரன்களை வரிசையாக அடுக்கி வைத்தால் எவ்வளவு துரம் வருமோ அவ்வளவு தான்.
7) சூரியனின் விட்டம் சரியாக பூமியின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம்.
சோளிங்கர் யோக நரசிம்மர்
சோளிங்கர் யோக நரசிம்மர்
11மாதங்கள் யோக நிலையில் இருந்து கார்த்திகை மாதம் மட்டும் யோக நரசிம்மர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்!
ராம அவதாரம் முடிந்ததும் ராமபிரான் வைகுண்டம் எழுந்தருளும் வேளையில், தாமும் உடன் வருவதாக கூறினார் ஆஞ்சநேயர்.
ஆனால் ராமபிரான், ‘கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் சப்த ரிஷிகளுக்கும், காலன் மற்றும் கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்.
அவர்களை என்னுடைய சங்கு, சக்கரத்தால் அழித்து கலியுகம் முடியும் வரை நீயும் கடிகாசலத்தில் சங்கு, சக்கரத்துடன் இருந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு அருள்பாலித்து கலியுகம் முடியும் வேளையில் எம்மை வந்தடைவாய்’ என்று கூறிவிட்டார்.
இதனால்தான் யோக நிலையில் சங்கு, சக்கரத்துடன் அமர்ந்த நிலையில் தனி மலையில் .நரசிம்மர் அமர்ந்திருக்கும் மலை அருகே யோக ஆஞ்சநேயராக அருள் பாலிக்கிறார்..
கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீகம். எனவேதான் இன்றும் பக்தியோடு, ராமாயணம் படிக்கும் இடம் தோறும் ஆஞ்சநேயர் அருவமாகவோ, உருவமாகவோ வந்து கலந்துகொள்வதாக ஐதீகம்.
பக்த பிரகலாதனுக்காக தூணில் இருந்து அவதரித்தவர் நரசிம்மர்அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜா, விஸ்வாமித்ரர் என சப்த ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நரசிம்மப் பெருமாள் சோளிங்கபுரம் தலத்தில் சாய்ந்த நிலையில், யோக முத்திரையோடு தியானக் கோலத்தில் காட்சியளிக்கிறார்
இங்குள்ள பெரிய மலையின் உச்சியில் வடக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனைக் கடந்தால் சாளக்கிராம மாலை அணிந்து மூலவராய் யோக நரசிம்மர் கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலித்து வருகிறார்.
அம்ருதவல்லித் தாயார்...
தனிச்சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் உற்சவர் பக்தவச்சலப் பெருமாள் என்பதாகும். தாயார் திருநாமம் சுதாவல்லி.
குறிப்பு.... ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கிய பிறகு ஸ்ரீஆஞ்சநேயரை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்...
சரியை, கிரியை என்றால் என்ன?
சரியை, கிரியை என்றால் என்ன?
இறைவனை அடைவதற்கான உபாயமாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களை வரையறுத்துள்ளனர் பெரியோர்.
இதில் சரியை என்பது உழவாரப்பணி முதலாக சிவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் செய்யும் தொண்டு. அதோடு சிவனடியார்களை அன்பாக உபசரிப்பதும் ஆகும்.
பெரிய புராணத்தில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதன் மூலமே இறையருளைப் பெற்ற எண்ணற்ற நாயன்மார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்து கிரியை எனப்படுவது, உள்ளத்தாலும் புறத்தாலும் பூஜிப்பது.
நெஞ்சகமே கோயில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூசை கொள்ள வாராய் பராபரமே - என்னும் தாயுமானவர் வழியில் பூஜிப்பது கிரியை ஆகும்.
சிவம் ஒன்றையே ஒருமுகப்படுத்தி வழிபடும் நிலை யோகம்.
புலன்களின் வழியாக வேறு எந்த சிந்தனைகளும் நமக்குள் தோன்றாதவாறு, நாம், இறைவனாகிய பரம்பொருளை தியானிக்கிறோம் என்னும் வேறுபாடு மறைந்து, நாமும் தியானமும் இரண்டறக் கலக்கும் நிலையே யோகம்.
இறைவனைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தெரிவிக்கும் நூல்களைக் கற்று பெரியவர்களின் உபதேசங்களைப் பெற்று இறைவனின் அருளைப் பெறுவதற்கான ஞானத்தைப் பெறுவது.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இந்த நான்கு வழிகளின் மூலமாக இறைவனின் அருள் கிடைக்கும்.
சிவன் அடியார்களைப் போற்றி சிவன் ஆலயங்களில் செய்யும் தொண்டால், சாலோகம் (சிவன் உலகம்), உள்ளும் புறமும் பூஜிப்பதால் சாமீபம் (சிவன் அருகில் இருத்தல்), பரிபூரண யோகத்தால் சாரூபம் (சிவ ஸ்வரூபமும்) கிடைக்கும். சிவ சிந்தனையை ஞானத்தில் தேக்கி இருப்பதால் முக்தி எனும் பலன் கிடைக்கும்.
ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்
ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்
இந்த துதியை பாராயணம் செய்து வந்தால் இல்லத்தில் பொன் பொருள் சேரும். அன்னப்பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். ஞானமும், ஆரோக்கியமும், புத்திர லாபமும் உண்டாகும்.
ஓம் ஸ்ரீகணேஶாய நமஹ:
(1)
ஷண்முகம் பார்வதீபுத்ரம்
க்ரெளஞ்சஶைல விமர்தநம் ।
தேவஸேநாபதிம் தேவம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥
ஆறுமுகனும், பார்வதியின் புத்ரனும், மலை உருவமெடுத்த கிரௌஞ்சா அசுரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும், தேவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.
(2)
தாரகாஸுர ஹந்தாரம் மயூராஸநஸம்ஸ்திதம் ।
ஶக்திபாணிம் ச தேவேஶம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥
தாரகாஸூரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞான வேலை கையில் தரித்தவனும், சிவபுத்ரனுமான
ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்,
திருப்பாதங்களில்
சரணமடைகிறேன்.
(3)
விஶ்வேஶ்வர ப்ரியம் தேவம்
விஶ்வேஶ்வர தநூத்பவம் ।
காமுகம் காமதம் காந்தம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥
எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீபரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவனும், தேவனும், ஸ்ரீவிஸ்வேஸ்வரனின் புத்ரனும், வள்ளி தேவசேனையிடத்தில் விருப்பம் கொண்டவனும், பக்தர்களின் மன விருப்பங்களை நிறைவேற்றுபவனும், மனதைக் கவருகின்றவனும் சிவ புத்ரனுமான ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்,
திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.
(4)
குமாரம்
முநிஶார்தூலமாநஸாநந்தகோசரம் ।
வல்லீகாந்தம் ஜகத்யோநிம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥
குமரக் கடவுளும், சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும்,
வள்ளியின் கணவனும், உலகங்களுக்கு காரணமானவனும்,
சிவ புத்ரனுமான
ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.
(5)
ப்ரலயஸ்திதிகர்தாரம்
ஆதிகர்தாரமீஶ்வரம் ।
பக்தப்ரியம் மதோந்மத்தம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥
அழித்தல் காத்தல் இவற்றைச் செய்கிறவரும், முதலில் உலகங்களைப் படைத்தவரும், யாவருக்கும் தலைவனும், பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவனும், ஆனந்த வடிவினை கொண்டவனும், சிவபுத்ரனுமான
ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.
(6)
விஶாகம் ஸர்வபூதாநாம்
ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம் ।
ஸதாபலம் ஜடாதாரம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥
விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கிருத்திகையின் புத்ரனும், எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும் ஜடையை தரித்தவனுமான,
சிவபுத்ரனுமான
ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.
(7)
ஸ்கந்த ஷட்கம் ஸ்தோத்ரமிதம்
ய:படேத் ஶ்ருʼணுயாந்நர: ।
வாஞ்சிதாந் லபதேஸத்ய
ஸ்சாந்தே ஸ்கந்தபுரம்வ்ரஜேத் ॥
ஆறு சுலோகமுள்ள இந்த ஸ்ரீஸ்கந்தனின் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர்கள், அவர்கள் கோரிய பொருளை உடன் அடைவார்கள். முடிவில் ஸ்ரீஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பார்கள்.
இதி ஶ்ரீஸ்கந்த ஷட்கம் ஸம்பூர்ணம்
இவ்வாறாக ஸ்ரீ ஸ்கந்த ஷட்கம் நிறைவுபெற்றது.
கந்தபுராணம் பகுதி நான்கு
கந்தபுராணம் பகுதி - 4
ஒம் சரவணபவ
முதியவராய் வந்தவர், வானத்ததில் எழுந்தருள ரிஷப வாகனம் ஓடோடி வந்து அவரைத் தாங்கியது. ஆம்... முதியவராக வந்து கங்கையைச் சிந்தி, யாக குண்டத்தை அணைத்தது சிவபெருமான் தான். அங்கே உமையவளும் வந்து சேர, இருவரும் ரிஷபத்தில் அமர்ந்து அசுரர்களுக்கு காட்சி தந்தனர்.அசுரக்குழந்தைகளே என்னைக் குறித்த உங்களது யாகத்தின் மதிப்பு அளவிட முடியாதது. நீங்கள் கேட்கும் வரங்களைத் தர நான் காத்திருக்கிறேன், என்றார் சிவன்.அசுரத்தலைவன் பத்மாசுரன் சிவனிடம், கருணைக்கடவுளே ! தங்கள் தரிசனம் கண்டு அகம் மகிழ்ந்தோம். எங்களது பக்தி உண்மையானதென்றால், ஆயிரத்து எட்டு அண்டங்களையும் எங்களுக்குத் தர வேண்டும். அவற்றை நாங்களே அரசாள வேண்டும். மேலும் எங்களுக்கு திருமால், பிரம்மா உள்ளிட்ட எந்த தேவராலும் அழிவு ஏற்படக்கூடாது. தேவர்கள் தங்கள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எங்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். எல்லா அண்டங்களுக்கும் சென்று வரும் ஆற்றலை தாங்கள் தர வேண்டும், என்றான். சிவன் அவன் கேட்டதையெல்லாம் மட்டுமல்ல, கேட்காததையும் கொடுத்தார். சூரபத்மனே ! இந்த அண்டங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். அவற்றை மேற்பார்வை செய்ய இப்போது உன்னிடமிருக்கும் பலம் போதாது. எனவே உன் சகோதரர்களுக்கும், சகல அண்டங்களுக்கும் , சகல அண்டங்களுக்கு செல்லும் வரம் திருகிறேன். இன்னும் பல கோடி பேர் அடங்கிய நான்கு வகை சேனைகளையும் தருகிறேன். இந்திர விமானம், சிங்க வாகனம், பாசுபதாஸ்திரம் போன்றவற்றையும் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை நீ 108 யுககாலம் தான் ஆட்சி செய்ய முடியும், அதன் இறுதியில் மரணமடைவாய், என்றார். மிக மிக நீண்ட காலம் இந்த பூமியில் வாழப்போவது பற்றி சூரபத்மன் மகிழ்ந்தாலும், தன் மரண எச்சரிக்கையைக் கேட்டு வருந்தி, ஈசனே ! தங்கைளத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது என்ற தங்கள் வரம் நிலைத்தாலே போதும். இந்த அண்டங்கள் உள்ளளவும் நாங்கள் வாழ்வோம், என்றான் சூரபத்மன்.அசுரத்தலைவனே ! என்னாலோ, என் சக்தியாலோ தவிர வேறு எதனாலும் உனக்கு மரணமில்லை, என்றார் சிவன். சூரபத்மன் இது கேட்டு மகிழ்ச்சி கூத்தாடினான். இதற்குள் சிவன் மறைந்து விட்டார். அசுரக்கூட்டம் ஆரவாரத்துடன் சிவனால் தங்களுக்கு அருளப்பட்ட படைகளுடன் கிளம்பியது. கிட்டத்தட்ட ஐம்பது கோடி அசுரர்களுடன் புறப்பட்ட அப்படை நேராக காஷ்யபரிடம் சென்றது. தந்தையே ! நாங்கள் பல்லாண்டுகளாக தவமிருந்து 1008 அண்டங்களையும் ஆளும் சக்தியைப் சிவபெருமான் மூலம் பெற்றோம். இனி தங்கள் வழிகாட்டுதல் படி நடப்போம் என்றான் சூரபத்மன். நல்ல பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பற்றி பெற்றவர்கள் பெருமைப்படுவார்கள் இங்கோ அரக்கி மீது ஆசைப்பட்டு, அசுரப் பிள்ளைகளைப் பெற்ற இந்த தந்தையோ மனம் வருந்தினார். சிவனாரே வரம் கொடுத்த பிள்ளைகளை தன்னால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்துடன் மகனே ! நீ இந்த வீரர்களுடன் குலகுரு சுக்ராச்சாரியாரை போய்ப்பார். அவரது வழிகாட்டுதல் படி நடந்து கொள் என்று சொல்லி அனுப்பி விட்டார். அனைவரும் சுக்ராச்சாரியாரைச் சென்று சந்தித்தனர். சுக்கிராச்சாரியார் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் அன்பு சீடர்களே ! இந்த உலகம் சிவனுக்கு கட்டுப்பட்டது. உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும், பாவம் செய்தாலும், புண்ணியம் செய்தாலும் இறுதியில் பரமாத்மாவான அந்த சிவனின் உடலில் தான் கலக்கிறது. எனவே, பாவ, புண்ணியம் பற்றி நீங்கள் யாரும் கவலைப்படக்கூடாது. உங்களைக் கண்டு எல்லாரும் நடுங்க வேண்டும். அப்படியானால் தான் அசுர ராஜ்யம் பல்லாண்டு வாழும், நீங்கள் அந்த சிவனை மறக்காமல் தினமும் பூஜிக்க வேண்டும். அதே நேரம் எல்லா லோக அதிபதிகளையும் ஓடஓட விரட்டி அண்டங்களை உங்கள் பிடிக்குள் கொண்டு வர வேண்டும்.கொலை செய்யுங்கள்; தேவப் பெண்ணிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளுங்கள். கொள்ளையடியுங்கள்; போரிடுங்கள்; இப்படி செய்ய உங்களுக்கு சிவனே அதிகாரம் கொடுத்திருக்கிறார். அண்டமெல்லாம் உங்களுக்கு என வாக்களித்த பிறகு யாரோ ஒருவன் அதில் இருந்து ஆள என்ன தகுதி இருக்கிறது ? இவற்றைச் செய்யத் தயங்கினால், உங்களை எவனும் மதிக்கமாட்டான். புறப்படுங்கள் இப்போதே, என்றார். சூரபத்மன் அவரது காலில் விழுந்து பணிந்து புறப்பட்டான். அவர்களின் வாகனம் வித்தியாசமாக இருந்தது. சிவனால் சூரபத்மனுக்கு அருளப்பட்ட இந்திர விமானம் பறக்கும் சக்தியுடையது. அதை கோடி குதிரைகள் இழுத்துச் சென்றன. கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டதாக அது விளங்கியது. சிங்கமுகன் ஏறிச் சென்ற தேரை பத்து லட்சம் யானைகள், பத்துலட்சம் குதிரைகள், பல பூதங்கள் இழுத்துச் சென்றன என்றால், அந்த ரதத்தின் வேகத்தைக் கேட்கவா வேண்டும். தாரகாசுரன் பத்தாயிரம் குதிரைகள் பூட்டப் பட்ட மற்றொரு பறக்கும் விமானத்தில் ஏறிச் சென்றான். இதர படையினர் கோவேறு கழுதை, ஒட்டகம், யானை, குதிரை என பல மிருகங்களை வாகனமாக்கி ஏறிச் சென்றனர். இந்த படைகள் பறந்து சென்ற தூரம் மட்டும் மூன்றுகோடி யோஜனை அளவுக்கு இருந்ததாம். (அதாவது கிட்டத்தட்ட 40 கோடி கிலோ மீட்டர் தூரம்.) அந்தளவுக்கு பரந்திருந்தது இந்த உலகம். ஒருவனுக்கு முதல் தேவை செல்வம். அது இருந்தால் தான் எவ்வளவு மக்கள் இருந்தாலும் வயிறார சாப்பிட முடியும். இந்த செல்வத்தைச் சம்பாதிப்பதில் முதலில் அக்கறை காட்டியது அசுரப்படை. எனவே அவர்கள் செல்வத்தை முழுமையாகக் கொள்ளையடிக்க சென்ற இடம் அளகாபுரி. இந்த பட்டணத்தின் தலைவன் தான் குபேரன். குபேரனின் ஊருக்குள் அத்துமீறி புகுந்தது ராட்சதப் படை.
தொடரும்
கந்தசஷ்டி விரதம்
கந்தர் சஷ்டி விரதம் ஸ்பெஷல் !
➖➖➖➖➖➖➖
வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம் செய்து வந்தார்.
இருந்தாலும் வறுமை நீங்கவில்லையே... என வருந்தினார். செல்வ வளம் பெற, லட்சுமி குறித்த வேறு நுாலை பாராயணம் செய்ய வேண்டுமோ? என்ற சந்தேகம் எழுந்தது.
அதை தீர்க்க விரும்பிய அடியவர், காஞ்சிபுரம் புறப்பட்டார். பரமாச்சாரியாரை தரிசித்தார்.
''சுவாமி.... எனக்கு இப்போது, முதல் தேவை பணம் தான். கடன் சுமையால் கஷ்டப்படுகிறேன். வட்டி கட்டமுடியவில்லை. கந்தர் அனுபூதி பாராயணம், வறுமை போக்கும் என எனக்கு தோன்றவில்லை.
லட்சுமி கடாட்சம் பெற ஏதேனும் ஸ்லோகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்'' என்றார்.
பரமாச்சாரியார் அவரிடம், '' முன்ஜென்ம வினைப்பயன் நீங்கும் வரை நம்பிக்கைஉடன் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பின் பலன் கிடைக்கும். இன்னின்ன பலன் பெற இன்னின்ன பாராயணம் என்று அதில் இருக்கிறது. கந்தர் அனுபூதி நிச்சயம் செல்வ வளம் தரும்.''
கந்தர் அனுபூதியில் இதற்கு சான்று இருக்கிறதா சுவாமி?
சுவாமிகள் புன்முறுவலுடன், ''வெளியில் ஏன் தேட வேண்டும். பாட்டுக்குள்ளே சான்று இருக்கிறதே? கந்தர் அனுபூதியின் கடைசி அடியைச் சொல்லேன் பார்க்கலாம்''
அடியவர் கடைசி அடியை ராகத்துடன் 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்றார்.
'அதற்கு என்ன பொருள்?'
'குருவாய் வந்து அருள்புரிவாய் குகனே என்று பொருள்'
பரமாச்சாரியார் சிரித்தபடி விளக்க ஆரம்பித்தார். ''வருவாய் அருள்வாய் என்றால் 'வா, வந்து அருள்புரிய வேண்டும்' என்பது ஒரு பொருள். இது தவிர, 'வருவாய் தா' என்றும் ஒரு பொருள் உண்டு இல்லையா? கந்தர் அனுபூதி பாராயணம் செய்தால் 'வருவாய் பெருகும்' என்பதில் இன்னுமா சந்தேகம்? வேறு ஸ்லோகம் தேவையில்லை. கந்தர் அனுபூதியை தொடர்ந்து பாராயணம் செய்ய செல்வ வளம் பெருகும்.
நன்றியுடன் விடைபெற்ற அடியவருக்கு கந்தரனுபூதியின் மகிமை புரிந்தது.
ஹர ஹர ஸங்கர.!
ஜய ஜய ஸங்கர....
புதன், 18 நவம்பர், 2020
தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம்
👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்
👉ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –கங்காரு,எலி.
👉துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு கரடி.
👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
👉சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
👉ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
👉குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
👉சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.
👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.
👉நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
👉தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.
👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.
👉இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.
👉காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.
👉குளிர் காலத்தில் குயில் கூவாது.
👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.
👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும்.ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
👉கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு–இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு–இதயம்.
👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.
👉வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
👉ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
👉பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
👉ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
👉சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
👉யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
👉நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
👉டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.
👉புழுக்களுக்கு தூக்கம கிடையாது.
👉நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
பரமாச்சாரியார்
நடைமுறையில் நாம் தவராக பயன்படுத்தும் விவாகத்தில் தவிர்க்க வேண்டியவை {1966 இல் பரமாச்சார்யாள் உத்தரவு}
1. மாப்பிள்ளை அழைப்பு : முன் காலத்தில் மாப்பிள்ளை வெளியூரிலிருந்து வரும் போது ஊரின் எல்லையில் சென்று மேளத்தாளத்துடன் குதூகலமாக அழைத்து வருவது வழக்கம் தற்போது முதல் நாள் அன்றே மாப்பிள்ளை சத்திரத்திற்கு வந்து விடுகிறார். தங்கி டிபன் முதலியன சாப்பிட்டு இளைப்பாறுகிறார். பிறகு இரவு {ஏற்கனவே வந்து விட்ட வரை} வெளியில் அனுப்பி ஓரிடத்திலிருந்து அழைப்பது அர்த்தமற்றது. இது சத்தியத்திற்குப் புறம்பானது. தவிர்க்கப்பட வேண்டும்.
2. காசியாத்திரை : முன் காலத்தில் பிரம்மச்சாரிகள் காசிக்குப் படிக்கச் செல்வார்கள். வழியில் பெண் வீட்டார். தங்கள் பெண்ணை ஏற்றுக்கொண்டு கிரஹஸ்தாஸ்ரமம் நடத்தச் சொல்வார்கள். சரி என்று பையனும் சம்மதித்துத் திரும்புகிறான். இது தான் தற்போது நடக்கிறது. ஆனால் முதல் நாளே நிச்சயதார்த்தம் செய்து லக்னப் பத்திரிகை படித்து ஏற்பாடாகிறது. பிறகு காசிக்குப் போவது முரண்பாடான ஏற்பாடு தவிர்க்க வேண்டும் {நம்பிக்கை மோசடி என்றுகூடச் சொல்லலாம்}
3. ஊஞ்சல் : சாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய்ச் சேர்ந்த பிறகு தான் அவர்களை ஊஞ்சலில் வைத்துக்கொண்டாட வேண்டும். பகவான் கல்யாண உற்சவங்களில் விவாஹம் ஆன பிறகு தான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம். கல்யாணத்திற்கு முன்னால் தம்பதிகளைச் சேர்த்து வைப்பது நல்லது இல்லை. ஏதாவது ஏற்பட்டு விவாஹம் தடைபட்டால் அவர்கள் வாழ்வு பாதிக்கப்படும்.
4. பாணிக்ரஹணம் : சுபமுகூர்த்தம் வைத்து நல்ல லக்னத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை க்ரஹிக்க வேண்டும். இப்பொழுது முதலிலேயே {ஊஞ்சல் பிறகு} கையைப் பிடித்து அழைத்து மணமேடைக்கு வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் இருக்கலாம். சுப லக்னத்தில்தான் கைப் பிடிக்க வேண்டும்.
5. கைகுலுக்குதல் : மாப்பிள்ளை பெண் இருவரும் விரதம் செய்து, கையில் ரக்ஷா பந்தனம் செய்து கொள்கிறார்கள். கைகள் புனிதமாகி இருவரும் விவாதச் சடங்குகள். ஹோமம், சப்தபதி முதலியன செய்யத் தகுதி அடைகின்றன. இந்தப் புனிதத்வத்தைக் கெடுத்து எல்லாரும் வந்து பெண், மாப்பிள்ளை இருவரும் சடங்குகள் முடியும் முன் கைகுலுக்குகிறார்கள். கைகள் சுத்தம் இழக்கின்றன. ஆகையால் விவாஹச் சடங்கு, சப்தபதி முடியும் முன் யாரும் தம்பதிகளைக் கை குலுக்கக் கூடாது. இதைப் பத்திரிகைகளில் (NB) என்று போட்டுக் குறிப்பிட்டுவிட்டால். விவாஹத்திற்கு வருபவர்கள் தக்கபடி நடந்துகொள்வார்கள்.
6. பட்டுப்புடவை : விவாஹம் செய்யும் போது பாவம் சேரக் கூடாது. ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால் பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது. தம்பதிகள் க்ஷேமத்திற்கு உதந்ததல்ல இதற்காகத்தான் பரமாச்சார்யாள் இதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அஹிம்ஸா பட்டு உடுக்கலாம்.
7. விவாஹப் பணம் {Dowry} : மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்துகொண்டுதான் கல்யாணத்திற்கு வர வேண்டும். அவர்கள் பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.
8. வரவேற்பு : முதல் நாள் வரவேற்பு கொடுப்பது தவறு. தம்பதிகளாகச் சேரும் முன் இருவரையும் ஒன்றாய் உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் {கிழமை பார்க்க வேண்டாம்} செய்யலாம். சிலவு குறையும்.
9. திருமங்கல்ய தாரணம் : விவாகம் என்பது திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம் தான். மந்த்ர பூர்வமான விவாகம் தான் முக்கியம் உதாரணமாக 9 -10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்து விடுகிறார்கள். எல்லாரும் எழுந்து போய் விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகு தான் நடக்கின்றன. சாட்சிக்கு யாரும் இருப்பதில்லை. மேலும் முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்து விட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்.
10. கூரைப்புடவை : மாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில் தான் முகூர்த்தப் புடவை செய்வது வழக்கம். கொறை நாடு புடவை என்பதைக் கூரப்புடவை என்கிறோம். நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். உண்மையான கூரப்புடவை என்றால் நூல் புடவை என்று அர்த்தம். நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.
NB : 1966 இல் பரமாச்சார்யாள் உத்தரவு : ?என் நிபந்தனைகளுக்கு
உட்படாமல் செய்யப்படும் விவாஹப்
பத்திரிகைகளில் என் பெயரைப் போடுவது தவிர்க்கப்பட வேண்டும்?
சட்டம்பி
சட்டம்பி
கேரளத்தில் வாழ்ந்த சட்டம்பி சுவாமிகள் பெரும் மஹான். இவரது மேன்மைகளைப்பற்றி அறிந்த ஓர் அரசு அதிகாரி அவரைத் தனது இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்தார். அந்த அதிகாரி லஞ்ச லாவண்யத்துக்குப் பெயர் போனவர். அவரைப் பற்றி சட்டம்பி சுவாமிகள் நன்கு அறிந்திருந்தார். இருந்தாலும் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டார். விருந்துக்கு அவரது சீடர்களும் வருவார்கள் என்ற ஒரு நிபந்தனையுடன். அதிகாரி சம்மதித்தார். குறிப்பிட்ட நாளன்று சட்டம்பி சுவாமிகள் தனியாக அந்த அதிகாரியின் வீட்டிற்குச் சென்றார்.
அதிகாரி சஸ்வாமி ஜி, சீடர்கள் எங்கே? என விசாரித்தார். அவர்கள் வெளியே உள்ளார்கள், உணவு பரிமாறியதும் வருவார்கள். உணவு பரிமாறப்பட்டதும் சுவாமிகள், அருமைச் சீடர்களே உள்ளே வாருங்கள் என்று உரக்க அழைத்தார். உடனே அந்த அதிகாரிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், பல தெருநாய்கள் வரிசையாக வந்து ஒவ்வோர் இலையிலும் அமர்ந்து பரிமாறப்பட்டிருந்த உணவுகளை உண்டன. அந்த நாய்கள் சத்தம் ஒன்றும் செய்யாமல், உண்டு விட்டு வந்தது போலவே வரிசையாகத் திரும்பிச் சென்றன. வீட்டிலிருந்த யாவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர். அட நாய்களுக்கு இவ்வளவு அடக்கமும், அமைதியுமா! சிரித்தவாறே ஸ்வாமிகள் அவர்களிடம், இவை இப்போது சாதாரண நாய்களாக இருக்கலாம்; ஆனால் போன ஜன்மாவில் ஊழல் பேர்வழிகளாக இருந்தவர்கள். செய்த ஊழல்களின் பயனாக இந்த நாய்ப் பிறவியைப் பெற்று அவை செய்த தீயவினைகளை அனுபவிக்கின்றனர். என்றார். இதைக் கேட்டதும் அந்த அதிகாரி கலங்கினார். அவரது அகக்கண் திறந்தது. அன்று முதல் தனது ஊழல் செயல்களை விட்டு நல்ல வாழ்க்கையை மேற்கொண்டார். ஸ்ரீநாராயண குருவின் குருவான சட்டம்பி சுவாமிகள் சுவாமி விவேகானந்தரின் பாரத யாத்திரையின் கேரள பகுதி பயணத்தில் சுவாமிஜியைச் சந்தித்து உரையாடி உள்ளார்.