மரணம் நமது உற்ற நண்பனா?
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ. மரண பயம் என்பது திக்கற்ற நிலையில் இருக்கும் மனிதர்களை நிலை குலைய வைக்கும் உணர்வாகும்.
உலகின் அனைத்து விஷயங்களையும் பட்டிமன்றம் போட்டு பேசும் அறிஞர்கள் மரணத்தை பற்றி பேச அஞ்சுகின்றனர்.
நமக்கு மரணத்தைப் பிடிக்காமல் இருந்தாலும் நாம் மரணத்தைப் பற்றி பேசாமல் இருந்தாலும், மரண தேவன் தகுந்த நேரத்தில் பாரபட்சமின்றி நம் அனைவரையும் தழுவிக் கொள்ள காத்துக் கொண்டிருக்கிறான்.
மரணம் என்கிற சூட்சும புதிருக்கு விடை காண்பதே மனித வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
மரணத்தை தவிர்க்க முடியுமா
கைரேகை ஜோதிட நிபுணர் ஒருவர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஆவல் காரணமாக அப்பெட்டியில் இருந்த பலரும் அவர் முன்பு கையை நீட்டினர்.
கைரேகைகளை பார்த்த அவருக்குக் கடும் அதிர்ச்சி: காரணம், அவர்கள் அனைவருக்கும் அற்ப ஆயுளின் அறிகுறி தென்பட்டது. அவர் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தாலும், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அடுத்த நிலையத்திலேயே சில நிமிடங்களில் இறங்கி விட்டார்.
அவர் பயணித்த இரயில் வண்டியோ, அடுத்த அரை மணி நேரத்தில் சரக்கு வண்டியுடன் நேருக்கு நேர் மோதி அப்பெட்டியில் பயணம் செய்த பலரும் இறந்து போயினர்.
தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்ட அவரது செயல் சரியா? தவறா? என்பதை பின்வரும் புராணக் கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஒருமுறை எமராஜர் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அஃது அந்த குருவியின் கேடு காலம் என்பதை உணர்ந்த கருடர் உடனடியாக குருவியைத் தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரத்தின் பொந்தில் பத்திரமாக வைத்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த பொந்தில் வசித்த பாம்பு அந்த குருவியை விழுங்கி விட்டது. குருவி இறந்து போன துக்கத்தில் கருடர் மீண்டும் எமராஜரின் இடத்திற்கே வந்தார்.
அப்போது எமராஜர் கருடரை கூர்ந்து பார்க்க, கருடரோ, “நான் பகவான் விஷ்ணுவை முதுகில் சுமந்து செல்வதால் என்னை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது,” என்றார்.
இதைக் கேட்ட எமராஜர் கருடரிடம், “நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். அந்த குருவியை நான் உற்று நோக்கியதற்கான காரணம், அக்குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது. அஃது எவ்வாறு நடக்கப் போகிறது என்பதை நான் யோசித்துக் கொண்டிருந்தேன்,” என்றார்.
அதாவது, மரணம் எப்போது நிகழுமோ, அஃது அப்போது நிகழ்ந்தே தீரும். அதனை யாராலும் தடுக்க இயலாது.
மரணம் என்றால் என்ன?
ஆத்மாக்களான நம் அனைவருக்கும் இரண்டு உடல்கள் இருக்கின்றன: ஸ்தூல உடல், சூட்சும உடல்.
நாம் நமது கண்களால் பார்க்கக் கூடிய ஸ்தூல உடலானது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது.
மனம், புத்தி, மற்றும் அஹங்காரத்தினால் ஆன சூட்சும உடலை நம்மால் நேரடியாக பார்க்க முடியாவிட்டாலும், அதன் இருப்பை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
இந்த இரண்டைக் காட்டிலும் நுண்ணியதாக விளங்கும் ஆன்மீக உடல் அல்லது ஆத்மாவானது முடி நுனியின் பத்தாயிரத்தில் ஒரு பங்கு அளவு கொண்டது என்பதையும், அஃது இதயத்தில் இருக்கும் ஐந்து விதமான பிராண வாயுக்களில் மிதந்து கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் சாஸ்திரங்களிலிருந்து அறிகிறோம்.
ஸ்தூல உடலைப் பிரிந்து ஆத்மாவும் சூட்சும உடலும் வெளியே செல்வதே மரணம் என்பதை நாம் பகவத் கீதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஆத்மாவானது ஸ்தூல உடல், சூட்சும உடல் ஆகிய இரண்டையும் பிரிந்து தனது இயற்கையான ஆன்மீக ஸ்வரூபத்தை ஏற்கும்போது, அது வைகுண்டம் அல்லது மோட்ச நிலையை அடைந்து விட்டது எனலாம்.
பகவானின் அசிந்திய சக்தியினால் கடுகளவு விதையிலிருந்து மாபெரும் ஆலமரம் எவ்வாறு உருவாகின்றதோ, அதுபோல முக்தி பெற்றவர்கள் உடலை விடும்போது அவர்கள் தங்களது இயற்கையான வைகுண்ட உடலை ஏற்கின்றனர்.
ஸ்தூல உடலின் தன்மை, அது ஒருநாள் அல்லது மறுநாள் அழிக்கப்பட வேண்டும் என்பதே. அஃது எரிக்கப்படும்போது சாம்பலாகிவிடும், புதைக்கப்படும்போது மண்ணாகிவிடும், கழுகினால் உண்ணப்படும்போது மலமாகிவிடும். ஆனால், நாம் அந்த சாம்பல் அல்ல, மண் அல்ல, மலமும் அல்ல என்பதை உணர வேண்டும்,
நமது அடையாளம் “ஆத்மா.” இந்த உடலினுள் ஆத்மா இருக்கும்போது, அதனை எரித்தால் அது மாபெரும் குற்றம்; ஆனால் இதே உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பின்னர், அதனை எரிக்காமல் வைத்திருந்தால் அதுவே குற்றம்.
உடல் மாற்றம் ஏற்படுவது ஏன்?
ஒரே உடலில் அனைத்து ஆசைகளையும் அனுபவிக்க முடியாது என்பதால் வெவ்வேறு ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இயற்கை 84 இலட்சம் வகையான உடல்களைப் படைத்திருக்கின்றது. இயற்கையானது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றது.
இப்பிறவியில் ஒருவர் செய்யும் செயல்களுக்கும் ஆசைகளுக்கும் தகுந்தவாறு மறுபிறவியில் அவருக்கு உடல் கொடுக்கப்படுகின்றது. இறக்கும் நேரத்தில் யார் எதை நினைக்கின்றாரோ அதை நிச்சயம் அடைவர் (பகவத் கீதை 8.6).
நீரில் விளையாட வேண்டும் என்கிற ஆசையில் உடலை விட்டால், அவனுக்கு ஒரு மீனின் உடலை இயற்கை வழங்குகின்றது. மிகுதியாக உறங்குபவனுக்கு கரடியின் உடலும், மாமிசம் உண்பவனுக்கு புலியின் உடலும், அரைகுறை உடையுடன் திரிபவர்களுக்கு மரத்தின் உடலும் (மரம் ஆடை அணியத் தேவையில்லை), வேகமாக ஓட நினைப்பவனுக்கு கங்காருவின் உடலும், பெண்ணை நினைத்து உடலை விடுபவனுக்கு பெண்ணின் உடலும், இனிப்பு உண்ண வேண்டும் என்கிற ஆசையில் உடலை விடுபவன் மீண்டும் மனிதனாகப் பிறப்பதற்கு புண்ணியம் இல்லாத பட்சத்தில் அதே வீட்டில் எறும்பாகப் பிறப்பதற்கும் இயற்கை வழிவகை செய்து கொடுக்கிறது.
ஜீவன்களின் பல்வேறு ஆசைகளின் வெளிப்பாட்டை நாம் பல்வேறு உடல்களில் காண்கிறோம். கிருஷ்ணரை நினைத்து உடலை விடுபவன் கிருஷ்ணரிடமே செல்கிறான். (பகவத் கீதை 8.5)
பத்ம புராணத்தில் 84 இலட்சம் வகையான உடல்களைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றது: 9 இலட்சம் நீர் வாழ்வன, 20 இலட்சம் தாவர வகைகள், 11 இலட்சம் ஊர்வன, 10 இலட்சம் பறவை இனங்கள், 30 இலட்சம் மிருக இனங்கள், மற்றும் 4 இலட்சம் மனித இனங்கள்.
நான்கு இலட்சம் மனித வகை என்பது, தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரர்கள், மனிதர்கள், யக்ஷர்கள் என பலரைக் குறிக்கும். எந்த உடலை ஏற்றாலும், அந்த உடலில் வசிப்பதற்கு உகந்தாற் போன்ற ஒருவிதமான இன்பத்தை இயற்கை கொடுத்து விடுகின்றது.
உதாரணமாக, மாமிசம் உண்பவன் இறந்த பிறகு நேராக புலியின் உடலுக்குச் செல்வதில்லை. புலியின் உடலில் வசிப்பதற்குத் தேவையான மனப் பயிற்சியை நரக லோகத்தில் மேற்கொண்ட பின்னரே செல்கிறான். எமதூதர்களின் நேரடி கண்காணிப்பில் பல்வேறு சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்ற பிறகே அவன் புலியின் உடலுக்கு அனுப்பப்படுகின்றான்.
கண்டதை உண்பவன் பன்றியின் உடலுக்கு தகுதி பெறுகிறான்; அவன் நரக லோகத்தை அடைந்த பிறகு, மலத்தை உண்பதற்கான பயிற்சியைப் பெறுகிறான். எமதூதர்களின் சித்ரவதையில் மலத்தைச் சாப்பிடுவதற்கு நன்கு பயிற்சி எடுத்த பின்னர், அவன் பன்றியின் உடலுக்கு அனுப்பப்படுகிறான்.
பாவச் செயல்களைச் செய்பவர்கள் நரகத்தில் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் இம்மாதிரியான இழிந்த உடல்களைப் பெறுகின்றனர். பாவகரமான ஆசைகளை பூர்த்தி செய்வதற்கான பயிற்சிக் கூடமாக நரக லோகம் திகழ்கிறது.
இந்த உடலினுள் ஆத்மா இருக்கும்போது, அதனை எரித்தால் அது மாபெரும் குற்றம்; ஆனால் இதே உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பின்னர், அதனை எரிக்காமல் வைத்திருந்தால் அதுவே குற்றம்.
துர் மரணம் என்றால் என்ன?
ஒருவருடைய ஆயுள் அவரது சுவாசத்தை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவதால், குழந்தை பருவத்தில் இறப்பவர்கள், சாலை விபத்தில் இறப்பவர்கள் போன்றவர்களை துர் மரணம் அடைந்தவர்கள் என்று உறுதியாகக் கூற முடியாது. தற்கொலை செய்தவர்களை நிச்சயம் துர்மரணம் என கூறலாம்.
எண்பது வருடம் வாழ வேண்டியவர்கள் முப்பது வயதில் தற்கொலை செய்து கொண்டால், அந்த இடைப்பட்ட ஐம்பது வருடங்களுக்கு அவர்கள் வெறும் சூட்சும உடலுடன்தான் அலைந்து கொண்டிருப்பர்.
நூறு ரூபாயை தொலைத்தாலே வேதனைக்கு உள்ளாகும்போது, பல வருடங்கள் உபயோகித்த உடலை தொலைக்க நேரும்போது, எவ்வளவு வேதனையை நாம் அனுபவிக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
நாற்பதாயிரம் தேள்கள் ஒருநேரத்தில் கொட்டினால் என்ன வலி ஏற்படுமோ, அந்த வலியை மரணத்தின்போது அனுபவிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பக்தர்கள் அத்தகு வேதனைகளுக்கு உட்படுவதில்லை. அவர்கள் பௌதிக உடலைக் கைவிட்ட உடனேயே ஆன்மீக உடலை அடைகின்றனர். அத்தகு உடல் மாற்றம் தூய பக்தர்களுக்கு மின்னல் வேகத்தில் நடைபெறுகின்றது.
பக்தித் தொண்டை வாழ்க்கையின் ஒரே நோக்கமாக வைத்து செயல்படுபவர்கள், பாம்பு கடித்து இறந்தாலும், உச்சியில் இருந்து கீழே விழுந்து இறந்தாலும், விபத்தில் இறந்தாலும், நீரில் மூழ்கி இறந்தாலும், நெருப்பினால் இறந்தாலும், நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தாலும், அனைத்தும் மங்களகரமானதாகவே கருதப்படுகிறது.
உயிர்வாழிகளின் பல்வேறு ஆசைகளுக்குத் தகுந்தாற் போல, ஜட இயற்கை 84 இலட்சம் வகையான உடல்களைத் தருகின்றது.
வாழ்வின் முக்கியமான தருணம்
மரணம் என்பது வாழ்வின் முக்கியமான தருணம், அதனைச் சூழ்ந்துதான் ஆன்மீக வாழ்க்கை தொடங்கப்படுகின்றது. பகவத் கீதையானது மரணம் நிறைந்த போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உபதேசிக்கப்பட்டது.
ஏழு நாள்களில் பாம்பு தீண்டி இறக்க நேரிடும் என்கிற சாபத்தை பரீக்ஷித் மஹாராஜர் பெற்ற பிறகே ஸ்ரீமத் பாகவதத்தை சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து அவர் கேட்டார்.
இறக்கும் தருவாயில் இருப்பவன் செய்ய வேண்டிய கடமை என்ன என்கிற கேள்வியை அடிப்படையாக வைத்தே ஸ்ரீமத் பாகவதம் உபதேசிக்கப்பட்டது. சாணக்கிய பண்டிதரோ, ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமெனில், நாளைக்கே தான் இறந்து விடுவேன் என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
அத்தகைய மனோநிலையில் நாம் இன்றைக்கு செய்யக்கூடிய பக்தியானது சீரும் சிறப்புமாக இருக்கும். மனித உடலை அடைவது அரிது என்றாலும், அத்தகு பாக்கியம் பெற்றவர்கள் அதனை உயர்ந்த நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும்.
மரண பயத்திலிருந்து விடுபடுதல்
அறியாமையே பயத்திற்கு அடித்தளமாக விளங்குகின்றது. மூன்று முடிச்சுகளைப் போட்டு பந்தத்திற்குள் நுழைபவன் அதிலிருந்து வெளிவர விரும்புவதில்லை, எவ்வாறு வெளியேறுவது என்பதும் அவனுக்குத் தெரிவதில்லை. மரண பயம் ஏற்படும்போது, அவனது எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறிவிடுகின்றது.
முகலாய மன்னன் ஔரங்கசீப் இந்தியா முழுவதும் பல்வேறு கோயில்களை இடித்துத் தள்ளியவன், மதுராவில் மட்டும் ஆயிரம் கோயில்களை இடித்தவன். அவனுக்கும் மரண பயம் வந்தது.
இறுதி காலக் கட்டத்தில் தன் பாவச் செயல்களை எண்ணிப் பார்த்தபோது, அவனது மனதில் மரண பயம் ஏற்பட்டது. அதனால் தனது சொத்தில் ஒரு பகுதியை புரி ஜகந்நாதரின் கோயிலுக்காக எழுதி வைத்தான். ஔரங்கசீப் எழுதிக் கொடுத்த பத்திரம் இன்றும் ஒடிசா மாநில அரசிடம் உள்ளது.
மரண பயத்திலிருந்து விடுபட விரும்புவோர் பக்தித் தொண்டினை சிறு வயதிலிருந்தே தொடங்க வேண்டும், அல்லது அதன் முக்கியத்துவத்தை அறிந்த பின், எந்த நிலையில் இருந்தாலும் உடனடியாக தொடங்க வேண்டும்.
பக்தித் தொண்டில் ஈடுபடுவதையும் அதன் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதையும், நாம் நமது அவசர கடமையாக மேற்கொள்ள வேண்டும்.
எமராஜன் கிருஷ்ணரின் தூய பக்தராக இருப்பதால், அவர் பக்தர்களை ஒருபோதும் தண்டிப்பதில்லை, பக்தர்கள் என்றும் பாதுகாக்கப்படுகின்றனர். தனது பக்தன் என்றும் அழிவதில்லை என்பதை உரக்கக் கூறுமாறு கீதையில் (9.31) கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார்.
மரணத்தை வெல்வது எப்படி?
கிருஷ்ணருக்கு சேவை செய்வதே வாழ்க்கையாகவும், புலனுகர்ச்சியில் ஈடுபடுவது மரணமாகவும் கருதப்பட வேண்டும். சொந்தமாக பெரிய வீட்டைக் கட்டி அந்த வீட்டில் தனது உடலை விட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.
ஆனால் எந்த வீட்டில் மரணமடைகிறோம் என்பது முக்கியமல்ல, எந்த உணர்வில் மரணமடைகிறோம் என்பதே கணக்கிடப்படுகிறது. கிருஷ்ணருடைய நினைவில் உடலை விடும் பக்தர்களைப் பொறுத்தவரையில், மரணம் என்பது அவர்களது நித்தியமான வாழ்க்கையின் துவக்கம். மற்றவர்களுக்கோ அவர்களது பாவ வாழ்விற்கான தண்டனையின் துவக்கம்.
ஸ்ரீமத் பாகவதத்தில் (2.3.17) பின்வருமாறு கூறப்படுகிறது:
ஆயுர் ஹரதி வை பும்ஸாம்
உத்யன்ன் அஸ்தம் ச யன்ன் அஸௌ
தஸ்யர்தே யத்-க்ஷணோ நீத
உத்தம-ஷ்லோக-வார்தயா
சூரியன் தினந்தோறும் உதித்து மறையும்போது அனைவரின் ஆயுட்காலமும் குறைகிறது. ஆனால் பகவான் கிருஷ்ணர் சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பேசி தங்களது நேரத்தைச் செலவிடுபவர்களின் ஆயுளை சூரியன் குறைப்பதில்லை. கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை நிரந்தரமானது என்பதை இதிலிருந்து உணரலாம்.
இறக்கும் நேரத்திலும் கிருஷ்ணர் தன்னைக் காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கை பக்தர்களிடம் குடிகொண்டிருப்பதால், மரணத்திற்குப் பின்னர் கிருஷ்ணருடன் வாழப்போகும் பக்தர்கள் அந்த மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. செல்வந்தர்கள், பலசாலிகள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் என யாருமே ஆத்மா அணிந்திருக்கும் ஆடையே இந்த உடல் என்னும் அடிப்படை ஞானத்தைப் புரிந்து கொள்வதில்லை.
நிரந்தரமாக வாழ வேண்டும் என்கிற ஆசை மட்டும் அனைவரிடமும் தென்படுகிறது, அதற்குரிய பாதையோ பக்தர்களுக்கு மட்டுமே தென்படுகிறது. பக்திப் பாதையை ஏற்பதற்கு பணம், உடல்பலம், படிப்பு, தவ வலிமை போன்ற எந்தவொரு பௌதிகத் தகுதியும் தேவையில்லை.
ரூப கோஸ்வாமியின் போதனை
ஒரு சாது குளக்கரையோரம் நடந்து சென்றபோது மீன்கள் நீரின் மேல் துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருப்பதை கண்டார். திடீரென்று அங்கு வந்த கழுகு கண் இமைக்கும் நேரத்தில், நீர் மட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு மீனை கவ்விக் கொண்டு செல்வதை அவர் பார்த்தார்.
அந்த மீனைப் போன்று பக்தி என்னும் கடலில் மேலோட்டமாக நீந்திக் கொண்டிருந்தால், தனக்கும் அதே கதிதான் ஏற்படும் என்பதை உணர்ந்து, ஆழமான பக்திக்குச் சென்று அடைக்கலம் பெற்று கொள்ள வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.
பக்திக் கடலில் ஆழமாகச் செல்ல வேண்டுமானால், பக்தித் தொண்டை அழிக்கக்கூடிய ஆறு விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என ரூப கோஸ்வாமி அறிவுறுத்துகிறார்:
(1) அளவிற்கு அதிகமாக உண்ணுதல் அல்லது அதிகமாக பொருள் சேகரித்தல்,
(2) அடைவதற்கு மிகவும் கடினமான பௌதிக விஷயத்தை அடைவதற்காக பெருமுயற்சி செய்தல்,
(3) வெட்டிப் பேச்சு பேசுதல்,
(4) ஒழுக்கக் கட்டுப்பாடு விதிகளை அதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுதல், அல்லது எதையும் பின்பற்றாமல் விட்டுவிடுதல்,
(5) அபக்தர்களிடம் நெருங்கிப் பழகுதல், மற்றும்
(6) பௌதிக பேராசை.
துச்சாதனன் துகில் உரிய முயற்சி செய்தபோது திரௌபதி தனது இரு கைகளையும் உயர்த்தி கோவிந்தனிடம் முழுமையாக அடைக்கலம் கொள்ளுதல்.
மரணம் நமது உற்ற நண்பனா?
மரண பயத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு பக்தித் தொண்டில் ஆழமாகச் செல்ல கிருஷ்ணரிடம் சரணடையுங்கள். இந்திரனின் கடும் மழையின்போது விருந்தாவனவாசிகள் கிருஷ்ணரிடம் சரணடைந்தனர், துச்சாதனன் துகில் உரிய முயற்சி செய்தபோது திரௌபதி தனது இரு கைகளையும் உயர்த்தி கோவிந்தனிடம் முழுமையாக அடைக்கலம் கொண்டாள்.
அதுபோல நாம் ஒவ்வொருவரும் கிருஷ்ணரிடம் முழுமையாக அடைக்கலம் பெற வேண்டும், அப்போது எந்தவித அச்சமும் இன்றி, விருந்தாவனவாசிகளைப் போல, திரௌபதியைப் போல மகிழ்ச்சியாக வாழ முடியும்.
இன்றைய மக்கள் (சூதாட்டத்தில் ஈடுபடாவிட்டால்கூட) பணத்திற்காக கிரிக்கெட் விளையாடுவோரையும், சினிமா சண்டையில்கூட டூப் போட்டு நடிப்பவர்களையும் ஹீரோக்களாக ஏற்று இதயத்தைப் பறி கொடுக்கின்றனர்.
உண்மையான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் செயலாற்றியவரும், மிகப்பெரிய கோவர்தன மலையை டூப் போடாமல் இடது கை சுண்டு விரலால் தூக்கியவருமான கிருஷ்ணரிடம் ஏன் இதயத்தைப் பறி கொடுக்கக் கூடாது?
கிருஷ்ணரிடம் நமது மனதை பறி கொடுத்துவிட்டால், நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடலை விடலாம், அது புகழத்தக்கதாக அமையும், எந்த பயமும் நமக்கு அவசியமில்லை.
அவரிடம் மனதை பறி கொடுப்பதற்கான சிறந்த வழிமுறை, அவரது திருநாமங்களை ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று தினமும் உச்சரிப்பதே. இந்த நாமங்களை தொடர்ந்து உச்சரித்து சேவை செய்து வந்தால், நிச்சயம் மரணத்தை வென்று கிருஷ்ணருடைய திருநாட்டிற்குச் செல்ல முடியும்.
எப்படிப் பார்த்தாலும், அனைவரும் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும், யாரும் மரணத்தை ஒதுக்கிவிட முடியாது. மரணம் எந்த உருவில் வந்தாலும், அது கிருஷ்ணரின் பிரதிநிதி என்பதை நாம் உணர வேண்டும்.
எனவே, மரணம் என்பது ஒருவரிடமிருந்து அனைத்தையும் பறித்து அவரை நரகத்திற்குக் கொண்டு செல்லும் விரோதியாகவும் அமையலாம், அல்லது பிறப்பு இறப்பின் சுழற்சியிலிருந்து அவரை விடுவித்து கிருஷ்ணரிடம் கொண்டு செல்லும் நண்பனாகவும் ஆகலாம்.
மரணம்–நண்பனா, விரோதியா? முடிவு, நமது கையில்...
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 12 அக்டோபர், 2020
மரணம் நமது உற்ற நண்பனாக?
மருதாணி
மருதாணியை
ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்
கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.
ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார்.
அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
“எங்களுக்கு எதுவும் வேண்டாம்.
இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது.
உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன்.
உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும்.
அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.
அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள்.
இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.
மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.
மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.
ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்
===மருதாணியை
ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.
ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார்.
அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
“எங்களுக்கு எதுவும் வேண்டாம்.
இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது.
உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன்.
உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும்.
அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.
அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள்.
இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.
மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.
மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.
ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
காமதேனு
*பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா?*
*தலை* - சிவபெருமான்
*நெற்றி* - சிவசக்தி
*வலது கொம்பு* - கங்கை
*இடது கொம்பு* - யமுனை
*கொம்புகளின் நுனி* - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.
*கொம்பின் அடியில்* - பிரம்மன், திருமால்
*மூக்கின் நுனி* - முருகன்
*மூக்கின் உள்ளே* - வித்யாதரர்கள்
*இரு காதுகளின் நடுவில்* - அஸ்வினி தேவர்
*இரு கண்கள்* - சூரியன், சந்திரன்
*வாய்* - சர்ப்பாசுரர்கள்
*பற்கள்* - வாயுதேவர்
*நாக்கு* - வருணதேவர்
*நெஞ்சு* - கலைமகள்
*கழுத்து* - இந்திரன்
*மணித்தலம்* - எமன்
*உதடு* - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
*கொண்டை* - பன்னிரு ஆதித்யர்கள்
*மார்பு* - சாத்திய தேவர்கள்
*வயிறு* - பூமிதேவி
*கால்கள்* - வாயு தேவன்
*முழந்தாள்* - மருத்து தேவர்
*குளம்பு* - தேவர்கள்
*குளம்பின் நுனி* - நாகர்கள்
*குளம்பின் நடுவில்* - கந்தர்வர்கள்
*குளம்பின் மேல்பகுதி* - அரம்பெயர்கள்
*முதுகு* - ருத்திரர்
*யோனி* - சப்த மாதர் (ஏழு கன்னியர்)
*குதம்* - லட்சுமி
*முன் கால்* - பிரம்மா
*பின் கால்* - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
*பால் மடி* - ஏழு கடல்கள்
*சந்திகள்* - அஷ்ட வசுக்கள்
*அரைப் பரப்பில்* - பித்ரு தேவதை
*வால் முடி* - ஆத்திகன்
*உடல்முடி* - மகா முனிவர்கள்
*எல்லா அவயங்கள்* - கற்புடைய மங்கையர்
*சிறுநீர்* - ஆகாய கங்கை
*சாணம்* - யமுனை
*சடதாக்கினி* - காருக பத்தியம்
*வாயில்* - சர்ப்பரசர்கள்
*இதயம்* - ஆகவணியம்
*முகம்* - தட்சரைக் கினியம்
*எலும்பு, சுக்கிலம்* - யாகத் தொழில்
*அனைத்தும் பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.* *ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள். அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள். எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.*
*கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது.*
*லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள். லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.
செவ்வாய், 6 அக்டோபர், 2020
விளக்கு ஏற்றுவதின் சிறப்பு
விளக்கு ஏற்றுவதைப்பற்றி விளக்கம்
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!
“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?
தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.
அவ்வாறு ஈர்க்கும் போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.
இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே
மயானம் போல் தோன்றும்.
எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.
அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய் விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.
நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷும்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.
சுஷும்னா நாடி அந்த பரம் பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.
நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.
நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.
பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.
திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்.
இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை ஆறு மணிக்கு ஏற்றுவதே நமது மரபு.
சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது.
ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது. அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள். ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். ஒரு நாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான். அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது. இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர். அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச் சொல்கிறார். இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர். பின் கண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.
குறிப்பு:-
மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும். ஆஸ்துமா, மார்பு புற்று நோய் இவைகளுக்கு மெழுகுவர்த்தி தான் தாய். மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம். வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும் படி கேட்டுக்கொள்ளவேண்டும்.
இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.
விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
எங்கு விளக்குகள் நிறைய எரிகிறதோ அங்கு தோஷங்கள் விலகி செல்வங்கள் பெருகும் உதாரணம் திருமலையில் தினமும் ஆயிரம் தீபங்கள் ஏற்றி ஸஹஸ்ர தீபாலங்கரண ஸேவா நடை பெறுகிறது. கேரளாவில்
கோவிலைச்சுற்றி விளக்கு ஏற்றுகிறார்கள். இங்கு லட்ச தீபம்
ஏற்றுகிறார்கள். கேரளாவில் எந்த காரியத்திற்கும் ஸிரார்த்தத்திற்கு கூட விளக்கேற்றாமல் செய்யமாட்டார்கள்.
கோவிலில் கூட மூலஸ்தானத்தில் விளக்கேற்றாமல் வணங்கக் கூடாது என்று உள்ளது. விளக்கேற்றுவதன் மூலம் விலக்குவோம் தோஷங்களை
விளக்குவோம் இதை பிறருக்கு இப்பொழுது இருக்கும் பயங்கரமான சூழ்நிலையில் பூஜையறையில் விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தால் அதிலிருந்து வரும் சுடர் ஓளியானது எப்பேற்பட்ட விஷக்கிருமிகளையும் அழித்து விடும். இதை அனைவருக்கும் பகிரவும்.
திங்கள், 5 அக்டோபர், 2020
அருள் தரும் அன்னை
அருள்தரும் அன்னை ஶ்ரீ முப்பிடாதி அம்மன் திருவரலாறு
அனைவருக்கும் வணக்கம்.
மக்களை காப்பவன் மன்னன். மழை, வெள்ளம், புயல், வெயில் மற்றும் நோய், நொடி என அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்து மனமகிழ்ச்சியோடு வைத்து இருந்து அழகு பார்ப்பவள் அனைத்துலகிற்கும் அன்னையான அம்மன்.
மண்ணுலக மக்கள் வணங்கும் அம்மன் அவதாரங்கள் எத்தனையோ என்றாலும் நெல்லைச் சீமையில் 'முப்பிடாதி’ என்ற பெயர் மிகப் பிரசித்தம். எண்ணற்றோருக்கு குலதெய்வமாகத் திகழும் இந்த அம்மன், அசுரர்கள் மூவருக்கு காவல் தெய்வமாக திகழ்ந்தவள். அந்த மூன்று அசுரர்களின் இரும்பு, பொன், வெள்ளியாலான மூன்று கோட்டைகளுக்கும் காவலாக இருந்தவள் இந்த அம்மன் என்கிற ஒரு தகவல் உண்டு.
முப்புரங்களையும் காத்ததால், முப்புராரி என்று பெயர். அதுவே பிறகு முப்புடாதி, முப்பிடாரி என்றும் மாறியதாகச் சொல்வர். இது தவிர, நெல்லைச் சீமையில் பல்வேறு பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அந்தந்த பகுதிகளுக்கே உரிய தனிக்கதைகளும் உண்டு.முப்பெரும் சக்தி அன்னைகளான சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி எனும் தெய்வங்களை திருநெல்வேலி பகுதி மக்கள், தங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப முப்பிடாரி என்று பெயரிட்டு வணங்கி வருகிறார்கள் என்றும் கூறுவது உண்டு. நெல்லை வட்டார பகுதிகளில் முப்பிடாரி, முப்பிடாத்தி, முப்புடாதி என்கிற பெயர்கள் ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுப்பெயராகி இன்றும் வழங்கி வருகிறது.
ஸ்ரீ முப்பிடாதி அம்மன் காயத்ரி மந்திரம்
“ஓம் த்ரிவதனாயை ச வித்மஹே
த்ரிஸூல ஹஸ்தாயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்”
அருள்மிகு ஶ்ரீ முப்பிடாதி அம்மன் திருவரலாறு
அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி. பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால் முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படலானார். இதுவே மருவி முப்பிடாதி என்றானது. இந்த அம்மனுக்கான கோயில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ளன.
கயிலாயம் விட்டு வந்த அஷ்ட காளியர்கள் பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து ஒவ்வொருவரும் பூலோகத்தில் பல்வேறு இடங்களுக்குப் பெயர்ந்தனர். விரும்பிய இடத்தில் அமர்ந்துகொண்டு தான் வந்ததை அப்பகுதி மக்களுக்கு உணர்த்தி கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றனர். மகிசாசுரனை அழிக்க அம்பிகை எட்டு பெண் குழந்தைகளாக நாகலோகத்தில் பிறந்தாள். அவர்களில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைதான் முப்பிடாதி.
அசுரர் குலத்துப் பெண் தானாவதி தனக்கொரு ஆண் வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித் தவம் இருந்தாள்.தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மதேவன் அவள் முன் தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக மகிஷாசுரன் பிறந்தான். வேதங்களையும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த மகிஷாசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். மகிஷாசுரனின் தவத்தைக்கண்டு சிவபெருமான் அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். வரங்களைபெற்ற மகிஷாசுரன், " ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. பெண் வயிற்றில் பிறக்காத பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் " என்று வரம் கேட்டான். அதனைக் கேட்ட சிவபெருமான், " அப்படியே ஆகட்டும் " என்றார்.
வரங்களை பெற்ற மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லை. என்ற ஆணவத்தில் தான் ஆண்டு வந்த மகேந்திர கிரிபர்வதம் (தற்போதைய மைசூர், மகிஷன் ஆண்டு வந்த ஊர் என்பதால் மகிஷா ஊர் என்று அழைக்கப்பட்டது. அது மருவி மைசூர் என்றானது) பகுதியில் தான் எண்ணியபடி ஆட்சி புரிந்தான். தனது சுயநலத்திற்காக கொடுஞ் செயல்கள் புரிந்து வந்தான். தேவர்களை துன்புறுத்தினான். மகிஷாசுரனின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.
இதனிடையே ஒருநாள் கயிலாய மலையில் பார்வதிதேவி, விநாயகர், முருகன் சகிதமாக வந்தபோது சிவபெருமான் இருகண்களும் திறந்திருந்த நிலையில் ஆழ்ந்த தியானநிஷ்டையில் இருந்ததைக் கண்ட விநாயகப் பெருமான், அன்னை சக்தியிடம், “ தாயே, தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்கிறார். தியானம் என்றாலே கண்களை மூடித்தானே செய்ய வேண்டும் என்று வினா தொடுத்தார்.” அதற்கு பார்வதி தேவி, “தந்தையின் கண் ஒளியினால் தான் அண்ட சராசரங்கள் இயங்குகிறது. அவர் கண்களை மூடினால் அகிலமும் இருட்டாகும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட முருகன், “தாயே, அப்படியென்றால் தந்தை ஒரு முறை கண்களை மூடிக்காட்டட்டும் பார்ப்போம்” என்றார். “இதை எப்படி தந்தையிடம் கூற, என்று விநாயகர் கேட்க, அவரிடம் சொல்ல வேண்டாம், அதை நானே செய்கிறேன் என்று கூறியபடி, பார்வதி தேவி, சிவபெருமானின் கண்களை, தனது கரங்களால் மூடினார். மறு கணமே அகிலமும் இருளில் மூழ்கியது. உடனே சக்தியின் கரங்களை விலக்கிக் கொண்டு கண்ணை திறந்தார் சிவன். “என்ன விளையாட்டு இது” சினம் கொண்டார், சிவன். பணிந்தார் பார்வதிதேவி, “சுவாமி, பிள்ளைகள் கேட்டதற்காக செய்தேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும்.” என்றார்.
இந்த செயலுக்காக நீ வருந்தியே ஆக வேண்டும் என்ற சிவன், " நாகக்கன்னியின் வயிற்றில் அஷ்ட காளியாக பிறக்க வேண்டும் " என்று சபித்தார். " இந்தச் சிறிய தவறுக்கு மானிடப் பிறப்பா, அதுவும் நாகத்தின் வழியாகவா " என்று வருத்தமுற்ற பார்வதி தேவி, அவ்விடத்திலிருந்து எழுந்து நகர முற்பட்டார். அப்போது சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியின் மேனியை எட்டு பிண்டங்களாக்கின. அந்த எட்டு பிண்டங்களையும் கையில் எடுத்துக்கொண்டார் சிவன். பாதாள லோகத்தில் நாகக்கன்னி பிள்ளை வரம் வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன் தோன்றிய சிவன், தன்னிடமிருந்த எட்டுப்பிண்டங்களையும் சாப்பிடுமாறு கொடுத்தார். அதை உண்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது எட்டு முட்டைக்களாக உருமாறி வெளி வந்தன. நாகக்கன்னி அந்த எட்டு முட்டைகளையும் அடைகாத்து வந்தாள்.
நான்காவது நாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எட்டு முட்டையிலிருந்து எட்டு பெண் குழந்தைகள் பிறந்தன. முதலாவதாக பிறந்தாள் முத்துமாரி என்ற மாரிமுத்தாரம்மன், இவளை முத்தாரம்மன் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. இரண்டாவதாக பிறந்தாள் மாகாளி என்ற பத்திரகாளி, மூன்றாவதாக மூன்று முகத்துடன் பிறந்தாள் முப்பிடாதி (பிடாரி, பிடதி - என்றால் தலை என்று பொருள்). மூன்று தலைகள் இருந்ததால் முப்பிடதி, முப்பிடரி என்று அழைக்கப்பட்டது, இதுவும் மருவி முப்பிடாரி என்றும் முப்பிடாதி என்றும் அழைக்கப்படலாயிற்று. நான்காவதாக பிறந்தாள் உலகளந்தாள் என்ற உலகமாதா, இவளை உலகநாயகி என்றும் அழைப்பதுண்டு. ஐந்தாவதாக பிறந்தாள் அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி, அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள். ஆறாவதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி, இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். ஏழாவதாக பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். கடைசியாக பிறந்தாள் காந்தாரி.
பிள்ளைகள் எட்டுபேரையும் நாகக்கன்னி, அன்போடும், அரவணைப்போடும் வளர்த்து வந்தாள். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆகினர். " அம்மா, எங்கள் முகமும் உங்க முகமும் வேறுபட்டு உள்ளதே " என்று கேள்வி எழுப்ப, " எல்லாம் அந்த சிவனார் செயல் " என்றாள் நாகக்கன்னி. உடனே, " நம்மை ஏன், தாயைப்போல் நாககன்னிகளாக படைக்காமல் மனிதகுல பெண்களாக படைக்க வேண்டும். இந்த நாகலோகத்தில் மனித பிறப்பு எடுத்து என்ன பயனைப் பெறப் போகிறோம். அதை அந்த சிவனிடமே கேட்போம் " என்று கூறி, அக்காள் தங்கை எட்டு பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவனை நோக்கி தவமிருந்தனர்.
அவர்களின் தவத்தைக் கண்ட சிவன் அவர்கள் முன் தோன்றினார். அஷ்ட காளிகள் சிவனிடம் தங்களின் பிறப்பு குறித்து கேட்க, " மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் மகிஷாசுரனை வதம் செய்யவே உங்கள் படைப்பு " என்று சிவனும் பதில் கூறினார். அஷ்டகாளிகளும், " தங்களின் வேண்டுகோளை ஏற்று மகிஷாசுரனை நாங்கள் அழித்து வந்த பின் எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணமுடிக்க வேண்டும் " என்றனர். அதற்கு சிவனும் ஒப்புதல் அளித்தார். மேலும் மகிஷாசுரனை அழிக்கும் வகையில் அனைத்து வரங்களையும் நல்கினார் சிவபெருமான்.
சிவபெருமான் ஆணைப்படி மகேந்திரகிரி பர்வத மலைக்கு வந்த அஷ்டகாளிகளுக்கும், மகிஷாசுரனுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடக்கிறது. தனித்தனியாக நிற்பதை விட, ஒரு சேர நின்றால் தனது வலிமை அதிகம் என்பதை உணர்ந்து அஷ்ட காளிகள் எட்டுபேரும் ஒருசேர அமைந்து சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர். இறக்கும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன், " தாயே என்னை மன்னித்து விடுங்கள். வாழும் வரை மனித குலத்தில் ராஜாவாக இருந்தேன். இனி கானகத்தில் வாழும் உயிர்களுக்கு ராஜாவான சிங்கமாக மாறி, தாயே உம்மை சுமக்கும் பாக்கியம் தந்தருள வேண்டும் " என்றான். ஆங்கார ரூபினியாக இருந்த அன்னை சாமுண்டீஸ்வரி, சாந்த ரூபினியாக மாறினாள். மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக்கி, தனது வாகனமாக்கிக் கொண்டாள். அன்றிலிருந்து அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு சேர நின்ற கோலத்தில் உள்ள தேவி மகிஷாசுரமர்த்தினி என்ற நாமத்தில் அழைக்கப்பட்டாள்.
கொஞ்சம் படியுங்கள்
கொஞ்சம் படிங்க
உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.
நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.
போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை
ஆகவே சிக்கனமாக
இருக்காதீர்கள்.
செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!
எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!
நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.
உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.
உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.
அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!
சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.
பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!
ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.
அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!
ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!
யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.
நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !
உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.
நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!!
அதற்கு மேல் என்ன வேண்டும்இ சொல்லுங்கள்?
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!
60,70,80 வயதில் ஆணும் & பெண்ணும்
ஆணும் பெண்ணும் எவ்வளவு உயர் பதவி, பொருளாதரத்தில் மேலோங்கி இருந்தாலும் அவர்களின் 60 - 70 - 80 வயதுக்கு மேல் எப்படி இருப்போம் என்பது தான் . இது ஒரு கண்ணோட்டம் எனவே மனதை இப்போது தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
*ஒருவரின் பணி ஓய்வுக்குப் பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர் கொள்ள உதவும்.*
1. *முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடை பெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகி விட்டது போல் உணர்வீர்கள்.*
*அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்*
2. *காலப் போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.*
*நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும் முதுமை உங்களை ஒரு சராசரி*
*வயதான மனிதராக மாற்றி விடும். நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப் பட்டு மறக்கப் படுவீர்கள்.*
*உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நீங்கள் பொறாமைப் படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் உங்களை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ வேண்டும்*
3. *அழையா விருந்தாளியாக பல வகை நோய்களும் உடல் உபாதைகளும் உங்களை அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும். உங்கள் உடல் இளமைக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கனவு காணாதீர்கள். அதற்காக அதைப் பற்றியே நினைத்து கவலைப் பட்டுக் கொண்டே இருக்காமல், எல்லாமே சரியாகவே நடக்கும் என்ற மனப்பக்குவம் பெறுங்கள். ஒரு இடத்தில் முடங்கி விடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள் நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள்.*
4. *இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம். நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம் நாம் குழந்தையாய் இருந்த போது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் அன்னை இருந்தாள். ஆனால் இந்த படுக்கை சீசன்- 2 வில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நர்சுகள் தான் அனேகமாக இருப்பார்கள்.*
*அவர்களை நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் தங்கள் பணியினை செய்து முடிக்க உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்.*
5. *கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க சிலர் முயற்சிக்கலாம். அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும். உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்*.
*மிக முக்கியமாக, பற்றற்று வாழப் பழகுங்கள்.*
*வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகத் தோன்றும்.*
*ஆகவே 60ஐத் தாண்டியவர்கள் வாழ்க்கை என்றால் என்ன என்று இந்நேரம் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.*
*உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு ஏற்று அனுபவியுங்கள்.*
*நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள் எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக் கவலைப் படாதீர்கள்.*
*ஊரில் ஊழல் மலிந்து விட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம் பண்றாங்களே என்றெல்லாம் நினைத்து மனதை வருத்திக் கொள்ளாதீர்கள்*.
*இனி நீங்கள் வாழப் போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு வாழுங்கள்.* *மற்றவர்களை மதியுங்கள்.*
*பணிவோடு நடந்து கொள்ளுங்கள்.* *உங்கள் வயதைக் காரணம் காட்டி உங்களை உயர்த்திக் கொள்ள எண்ணாதீர்கள். யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.*
*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து சஞ்சலமற்ற மனநிலையையும் அமைதியையும் தேடுங்கள்.*
*வாழ்க்கை வாழ்வதற்கே.*
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 22
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 22
தஞ்சம்மாளின் பிரிவிற்குப் பின் இளையாழ்வான் என்ன செய்தார்? இன்று உலகமே போற்றும் 'இராமானுஜர்' எனும் பட்டம் யாரால் கிடைக்கிறது?
துறவறம் மேற்கொள்ளுதல்
சன்னியாசஆஸ்ரமத்தை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தார் இளையாழ்வான். வேதசரஸ் புஸ்கரணிக்குச் சென்றார். அங்கு நீராடினார். அங்கிருந்து பேரருளாளனை நோக்கி பிரார்த்தித்தார்.
'தான் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசி ஆகிவிடுவோம். இனி அதைக்கொண்டு தான் சம்பிரதாயத்தை வளர்க்க வேண்டும்' என்று திருவுளம் கொண்டு தேவராஜப்பெருமாளை பிரார்த்தித்தார்.
பேரருளாளன் சன்னிதிக்குச் சென்று "இவ்வளவு நாள் தாய், தந்தை, மக்கள் என்று இருந்தேன். இனி எனக்கு எந்த உறவும் இல்லை. இந்த பிறவியும் வேண்டாம்" என்று பிரார்த்தித்தார்.
காஞ்சி பேரருளாளனே ஆச்சாரியனாக வந்து விண்ணப்பம் செய்ய, தேவனே - காஷாயம், திரிதண்டம் - இரண்டையும் இளையாழ்வானுக்குக் கொடுத்தார். ஒருவர் சன்னியாசனம் ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஆச்சாரியானிடத்திலேதான் திரிதண்டம் - காஷாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இளையாழ்வானோ எங்கே, யாரைப் போய்த் தேடுவார்? அதனால்தான் காஞ்சி தேவப்பெருமாளே ஆச்சாரியானாக வந்துவிட்டார் இளையாழ்வானுக்காக.
ஆச்சாரியானாக வந்த தேவப்பெருமாளை இளையாழ்வான் சேவிக்க, அவரோ திரிதண்டத்தை அர்ச்சகர் மூலம் கொடுத்து, "இனி நீர் உள்ளவரையும் தரிசிக்கப்படுவீர். உமக்கு 'இராமானுஜ முனி' என்று திருநாமம் உகந்தருளினோம்!" "இனி இராமானுஜரை மடத்திலேயே வைத்து வாரும்" என்று திருக்கச்சி நம்பிகளுக்கும் அருளினார்.
காஞ்சி தேவப்பெருமாளே ஆச்சாரியானாக உகந்தருளிய 'இராமானுஜர்' என்ற திருநாமமே இன்று உலகம் முழுவதும் அனைவராலும் போற்றப்படுகிறது.
இளையாழ்வான் திரிதண்டத்தைப் பெற்றுக்கொள்ளும் பொழுது நம் மருமகன் முதலியாண்டானைத் தவிர மற்ற அனைத்து சொந்தங்களையும் இழந்தோம் என்றார். முதலியாண்டானைப் பற்றி பிறகு பார்க்கலாம்.
🌻🍁 ஸ்ரீ வைஷ்ணவ சன்னியாசம்
சாதாரணமான சன்னியாசம் மேற்கொள்பவர்கள் வைத்திருக்கும் தண்டத்தில் ஒரு கொம்பு தான் இருக்கும். ஆனால், வசிஷ்டாத்வைதத்தில் சன்னியாசி வைத்திருப்பதில் மூன்று கொம்புகள் இருக்கும்.
'சத்தியம் ஒன்று' என்பது ஆதிசங்கரருடைய கொள்கை. அதனால் ஏக தண்டம்.
'தத்துவங்கள் மூன்று' என்பது இராமானுஜரின் கொள்கை. சித்து, அசித்து, ஈஸ்வரர்கள் என்பது மூன்று கொம்பின் தத்துவமாகும். திரிதண்டத்தை எப்பொழுதும் கையிலிருந்து நழுவ கூடாது. காஷாயத்தை எப்பொழுதும் நிலையிலிருந்து மாற்றக்கூடாது.
சிகை - குடுமி உண்டு. யக்ஜோபவீதம் - பூணூல் உண்டு. இடுப்பில் காஷாய வஸ்திரம் உண்டு. கையில் எப்பொழுதும் திரிதண்டத்தைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இவற்றைதான் இராமானுஜர் பெற்றுக் கொண்டார். இப்பொழுது இராமானுஜரை சேவித்துப் பார்த்தால் உயர்ந்த சூரியன் பளபளவென்று விடிவதெற்குத் தயாராக இருப்பது போல் இருக்கிறார்.
இளையாழ்வான் என்று இதுவரை அழைத்தோம். இப்பொழுதிருந்து இளையாழ்வானை "இராமானுஜர்" என்று அழைப்போம்!
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை விரிவாக்க இராமானுஜர் எடுக்கும் முயற்சிகளை இனிவரும் பதிவில் காணலாம்.
இன்னும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐