*தூங்கும் போது பக்கத்தில் எலுமிச்சை துண்டுகளை வையுங்கள்! நடக்கும் அதிசயம் இதோ!*
🔳எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அல்லவா?
🔳அந்த வகையில் அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் நடக்கும் அதிசயங்கள் இதோ!
🔳எலுமிச்சை துண்டுகளை தூங்கும் போது வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
🔳► சிலருக்கு இரவில் தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை தடுக்க, இரவில் படுக்கும் போது, ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்கி, சுவாசிக்கும் திறன் மேம்படும்.
🔳► எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவுகிறது.
🔳► இரவில் படுக்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்துக் கொண்டு தூங்கினால், அதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால் உடல் மற்றும் மனம் அமைதியாகி, மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும்.
🔳► எலுமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணம் நமது உடம்பில் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீராக்குகிறது. எனவே படுக்கும் போது எலுமிச்சை துண்டுகளை வைத்திருப்பது மிகவும் நல்லது.
🔳► எலுமிச்சை ஒரு நல்ல இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. ஏனெனில் இந்த எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால், அதிலிருந்து வரும் நறுமணம், பூச்சிகள் நம்மை அண்டாமல் தடுக்கிறது.
🔳► இரவில் படுக்கும் போது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால், இரவு முழுவதும் அதன் காற்றினை சுவாசித்து, மறுநாள் காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதை உணரக்கூடும்.
🔳► எலுமிச்சை பழத்தில் இருந்த வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, மனநிலையை சந்தோஷமாகவும், நேர்மறையான எண்ணங்களுடனும் இருக்க உதவுகிறது.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வியாழன், 10 செப்டம்பர், 2020
எலுமிச்சை
ருத்ராஷம்
ருத்ராட்ச மாலையை எப்போது அணியக் கூடாது?
நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது.
மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும்
தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக
தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.
துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.
இன்றைய சமுதாயத்தில் உலகசுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம் - உலக சுகம் இரண்டையும் ஏற்றுக் கொண்டு தான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால்,
ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின் போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம்
காப்பாற்றப்படும்.காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ,கூட்டியோ அணியக்கூடாது.
ருத்ராட்ச மாலையை அணியும் முறை:-
குடுமியில் அணியவேண்டியது - 1
தலை உச்சியில் அணியவேண்டியது - 13
தலையில் அணியவேண்டியது - 36
காதில் அணிய வேண்டியது 1அல்லது 6
கழுத்தில் அணியவேண்டியது - 32
புஜத்தில் (கை 1க்கு) அணியவேண்டியது - 16
ஒரு மணிக்கட்டில் அணியவேண்டியது - 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்கவேண்டியது - 25
இம்மை மறுமை பலன்களைஅடைய உதவும்
ஜெபமாலையில் (கையில்வைத்துக் கொள்ள) கட்டவேண்டியது 27,53 அல்லது 108.
ருத்ராட்ச வடிவங்கள்:-
ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன்
கொடுக்கிறது. சிவபுராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும்
ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு முகம் - சிவ வடிவம்
இரு முகம் - தேவி வடிவம்
மூன்று முகம் - அக்னி சொரூபம்
நான்கு முகம் - பிரம்ம வடிவம்
ஐந்து முகம் - ருத்ர வடிவம்
ஆறு முகம் - சண்முக வடிவம்
ஏழு முகம் - அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் - கணபதி வடிவம்
ஒன்பது முகம் - பைரவர் வடிவம்
பத்து முகம் - திருமால் வடிவம்
11 முகம் - ஏகாதச ருத்திரவடிவம்
12 முகம் - துவாதச ஆதித்யவடிவம்
13 முகம் - முருகன் வடிவம்
14 முகம் - சிவ வடிவம்.
ருத்ராட்சையின் பிற பெயர்கள்:-
ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி,அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என
ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன.
ஸ்ரீலக்ஷ்மியும் வில்வமும்
ஓம் ஸ்ரீ மஹாலெட்சுமியே போற்றி
ஸ்ரீலக்ஷ்மியும் வில்வமும்
=================
1.ஸ்ரீலக்ஷ்மி தாயார் நித்யவாசம் செய்யுமிடமாக ஸ்ரீநாராயணரின் ஹ்ருதயம்,தாமரைப்பூ,வில்வம்,யானையின் மஸ்தகம்,பசுவின் குறி,குதிரை முகம்,சுமங்கலி வகிடு எனக்கூறுவர்
2.வில்வமே ஸ்ரீலக்ஷ்மியின் ஸுரூபம்,நித்யவாசஸ்தலம் "வில்வதவ்யம் மஹாலக்ஷ்மி ரூபஸ்தே வில்வநாயகம்"
3.ரைவத மன்வந்திரத்தில் ஸ்ரீலக்ஷ்மி தாயார் வில்வமரத்திலிருந்து வெளிவந்ததாக புராணம் கூறுகிறது.
4.வாமனபுராணம் ஸ்ரீலக்ஷ்மியின் கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாக காத்யாயனர் கூறுகிறார்
5.காளிகாபுராணம் ஸ்ரீலக்ஷ்மி தாயார் வில்வக்காட்டில் தவம்
செய்ததாக கூறுகிறது
6.பில்வ மஹிம்ன ஸ்தோத்ரம் ஸ்ரீலக்ஷ்மி தாயாரின் ஸ்தனங்களிலிருந்து வில்வம் தோன்றியதாக கூறுகிறது
7.ஸ்ரீசூக்தம்
. "ஆதித்யவர்ணே தப(அ)ஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோ(அ)த பில்வ:
தஸ்யபலானி தபஸாநுதந்து மாயாந்தராச்ச பாஹ்யா லக்ஷ்மி:"
சூரியனைப்போல் ப்ரகாசிப்பவளே உன்னுடைய தவத்தால் வனத்திற்கு அதிபதியான வில்வவிருக்ஷம் உண்டாயிற்று.
அதனுடைய பழங்கள் உள்ளேயுள்ள அவித்தைகளையும்
,வெளியேயுள்ள அசுபங்களை போக்கட்டும்.
. அக்ஞானம் அகல ஒரே வழி ஞானம் பெறுவது ஞானம் வந்துவிட்டால் அது நம்மை மோக்ஷபாதையில் அழைத்துச்செல்லும்
வில்வபழம் அக்ஞானத்தை அகற்றி ஞானத்தை கொடுக்கட்டும்.ஞானம் அடைந்தால் அகமும்,புறமும் சுத்தமாகி மோக்ஷலக்ஷ்மி அருள்கிட்டும்.அதாவது மோக்ஷம் கிட்டும்
8.பில்வ பழத்திற்கு ஸ்ரீபலம் என்றுபெயர்.
9.வில்வ விருக்ஷத்திற்கு "ஸ்ரீவிருக்ஷம்" என பெயருண்டு
10.சௌபாக்ய சஞ்சீவினி வில்வக்காட்டில் ஸ்ரீலக்ஷ்மிதாயார் தவம் செய்பவளாக வர்ணிக்கிறது
11.திருவஹந்திபுரம் தாயாருக்கு வில்வார்ச்சனை நடைபெறுவதாகவும், கூறுவர்
12.ஸ்ரீவெங்கடேச அஷ்டோத்த சதநாமாவளியில் "ஓம் பில்வ பத்ரார்ச்சன ப்ரியாய நம: என நாமம் உள்ளது.(வருடத்திற்கு ஒருநாள்
பில்வார்ச்சனை ஸ்ரீபெருமாளுக்கு நடைபெறும் க்ஷேத்ரங்கள் சில கேள்விபட்டிருக்கிறேன் )
13.திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில்
"கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முன்னார் முனரியும் ஆம்பலும் முன்கண்டக்கால் " என்கிறார்
கூவிளை=வில்வம்
ஓம் நமோ நாராயணா
ஓம் ஸ்ரீ மஹாசாஸ்தா தாஸன்
பா. சிவகணேசன்
ஓம் ஸ்ரீ மஹாசாஸ்த்ரு பரபிர்ம்ம ஸ்தானம்
திருகாடந்தேத்தி
வேதம்
ஒரு சுவாரஸ்யமான ஆனால் ஆராய்ச்சிக்கான விஷயம்....
வேதத்தில் ருத்ரம் எனும் பகுதி மிக ப்ரபலம் மற்றும் மிக உயர்ந்த அர்த்தங்களை கொண்டது..
இதின் இறுதியில் சமகம் என்பதாகும்.
11 ப்ரஸ்னங்களை கொண்டது.
11 வது ப்ரஸ்னம்..
ஏகா' ச மே
திஸ்ரஷ்ச' மே
பஞ்ச' ச மே
ஸப்த ச' மே
நவ' ச ம ஏகாதச ச மே
த்ரயோதச ச மே
பஞ்சதச ச மே
இப்படியாக ஆரம்பித்து.. 1,3,5,7,9,11,13,15... 33 வரை சென்று முடியும் அதற்கு மேலெழுந்த வாரியாக பல பொருள் இருந்தாலும்.. யோசித்து பார்க்கையில்.. மனித உடற்கூறு செல்லின் மைடொ காண்ட்றியா எனப்படுவது மிக முக்கிய பகுதியாகும். செல் பயாலஜி அறிந்தோர்க்கு இதன் முக்கியத்துவம் புரியும். மனித
டி என் ஏ வில் இந்த மைடோ காண்ட்ரியா என்பது மிகச்சரியாக 16500 அடிப்படை ஜோடிகளைக் கொண்டது (33 thaousadan bases pair). ஆக அத்தனையும் கூட்டினால் சரியாக 33000
சமகம் 33அடிப்படையாக எண்ணை நிறுத்துகிறது. இதில் இந்த 33 க்கும் 33 ஆயிரத்துக்கும் என்ன தொடர்பு என யோசித்தால்..
ருத்ரமானது பொதுவாக #ஏகாதச_சத_ருத்ரம் என கூறுவதுண்டு.
அதாவது 11 பேர் சேர்ந்து நூறு முறை கூறுவார்கள்.... 33 × 100 ×11 = 36300 தடவை வந்து விடும்..
((சற்றேறக்குறைய 33 ஆயிரத்தை தாண்டி 300 வரை கணக்கு வரும்...காரணம்.எங்கேயாவது தவறுதலாக விட்டு போயிருந்தாலும் 33000 க்கு குறையக்கூடாது என்பதற்காக இருக்கும்))
இது அதற்கு அடுத்தது மேம்பட்ட கணக்கு முறை.. அதாவது ஒன்றை இன்னும்( fine tune) துல்லியமாக செய்வது..
த்வேச மெ
சதுஸ்சமே.
ஷஷ்ட ச.மே
.அஷ்ட சமே
.தச ச மே.
த்வாதச ச மே. ..என்று
2,4, 6 81ல் 10 12 15 16...என 48ல் இரட்டை என .இலக்கை நிறுத்துகிறது...
மனித டி என் ஏ வில் நியூக்ளியர் அடிப்படை எண்ணிக்கை.அடிப்படையாக base.. #48மில்லியன்..
(அதிக பட்சம் 250 மில்லியன் வரை)..
சஹஸ்ர ருத்ரம் என்பது 1000 பேர் சேர்ந்து 1000 முறை சொல்வது..
சரியாக 48 மில்லியன் வரும்.
வேதம் வேண்டுதல்களை டி எம்.ஏ வரை வைக்கிறது..அதில்தான் தலைமுறைகள் தொடர்பு உள்ளது. நம்ம டிசைன்.. சங்கிலித்தொடர் போன்று அமைக்கப்பட்டு அடுத்த தலைமுறை க்கு எடுத்துச் செல்லப்படுவது இவற்றால்தான்.. ஆக சமகம் நமக்கு செல் பயாலஜியை கூறவறுகிறது..
சுவாரஸ்யமான விஷயமாக உள்ளதல்லவா.!
7:ஸ்ரீ அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (கி.மு.124-55)
நமது ஏழாவது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்துகொள்வோம்!!!
ஏழாவது ஆச்சார்யர் ஸ்ரீ
அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
(கி.மு.124-55)
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.
ஸ்ரீ அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சேர நாட்டில் வாழ்ந்த சூரிய நாராயணமஹி என்பவரின் தவப் புதல்வர். பெற்றோர் இவருக்கு இட்ட நாமம் சின்னையா சக்தி உபாசகர். அஷ்டமி, பௌர்ணமி வெள்ளிக்கிழமைகளில் கௌரி தேவிக்கு விசேஷ பூஜை செய்வார். அம்பிகையின் அருளால் அளவிட முடியாத படி இலக்கிய ஆற்றல் பெருகியது. ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ சங்கர பாஷ்யங்களுக்கும், ஸ்ரீ சுரேஸ்வரர் அருளிய வார்த்திகங்களுக்கும் எளிய நடையில் குறிப்புரை எழுதினார். அதற்கு "ஆனந்த கிரி டீகா" என்று பெயர். இவர் வட நாடெங்கும் விஜயயாத்திரை புரிந்து திரும்பும் போது நடுவழியில் ஆந்திராவிலுள்ள ஸ்ரீ சைலத்தில் கி.மு.55 ஆம் ஆண்டு, குரோதனவருஷம், வைகாசிமாதம், கிருஷ்ணபக்ஷம், நவமியன்று சித்தியடைந்தார்.
6:ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி.மு.205 -124}
நமது ஆறாவது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்துகொள்வோம்!!
6:ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
{கி.மு.205 -124}
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.
ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தஞ்சை மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் மருத்துவராகப் பணியாற்றிய பார்வு பண்டிதர் என்பவரின் திருமகனாவார். இவரும் திராவிட அந்தணர். தந்தை இவருக்கு வைத்த நாமதேயம் விஸ்வநாதர். ஹிந்து மதம் வளர பெரும் பாடு பட்டவர். ஸ்ரீசந்திர மௌலீஸ்வர பூஜையை பெரும் ஈடுபாட்டோடு செய்து வந்த ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கி.மு.124ல் நாளாம் வருடம் சித்திரை மாதம் சுக்லபக்ஷம், சஷ்டி திதியில் காஞ்சியில் சித்தியுற்றார்.
5:ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் (கி.மு.268-205)
5:ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள்
(கி.மு.268-205)
சோழ நாட்டிலுள்ள மங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் அவதரித்தார். திராவிட அந்தண குலத்தவரான நாகேசன் என்பவரின் புதல்வர். ஞானோத்தமன் என்பது இவறது இயற்பெயர். தர்க்க சாஸ்திரத்தில் நிபுணர் ஸ்ரீகாமகோடி பீடத்தின் 2வது ஆச்சார்யரான ஸ்ரீசுரேஸ்வரர் இயற்றிய 'நைஷ்கர்ம்ய சித்தி'என்ற நூலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். அதன் பெயர் சந்திரிகை. அந்நூலில் இவர் ஸ்ரீசுரேஸ்வரரையும் அடுத்து வந்த குருவையும் போற்றியிருக்கிறார். இவர் மன்மத ஆண்டு, மார்கழி மாதம், சுக்லபக்ஷ பஞ்சமியில் (கி.மு.205)காஞ்சியில் சித்தியடைந்தார்.
செவ்வாய், 8 செப்டம்பர், 2020
ஒரு மன்னனின் கதை
ஒரு மன்னன் தினமும் கிருஷ்ணரை வணங்காமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டான். காலையில் எழுந்ததும் "ஹரி ஹரி' என்று ஏழு தடவை சொல்லுவான். அரண்மனைக்கு கிளம்பும் முன் கேசவா கேசவா என்பான். சாப்பிடும் முன் கோவிந்தா என்பான். தூங்கச்செல்லும் முன் மாதவா என்பான். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒன்று வீதம் பரந்தாமனின் பதினாறு திருநாமங்களையும் ஏழு தடவை சொல்வது அவனது வழக்கம்.
என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும் முன் வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டால் அதை யாரானாலும்
அனுபவித்து தான் தீர வேண்டும். பாவத்திற்குரிய தண்டனையை கடவுள் தந்தே தீருவான். மன்னனுக்கும் அந்த நேரம் வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு படுத்த படுக்கையாக கிடந்தான். அந்நிலையிலும் அவனுக்கு கிருஷ்ணரின் பெயர் மட்டும் மறக்கவில்லை.
கிருஷ்ணா கிருஷ்ணா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள் என புலம்பிக் கொண்டிருந்தான். ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரிடம் ஸ்வாமி நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் வாழ்வை முடிக்க விரும்புகிறேன். உயிர் பிரிய மறுக்கிறதே என அழுதான். முனிவர் அவனைத் தேற்றி மன்னா! நீ அன்னதானம் செய்தாயா? என்றார். ஆமாம் சுவாமி! இப்போது கூட தினமும் என் நாட்டு சத்திரங்களில் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன் என்றான். இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. உன் உயிர் பிரிந்து விடும் என்றார். ஏன் இப்படி சொல்கிறீர்கள் ஸ்வாமி! இது மேலும் எனக்கு பாவத்தை சேர்த்து நோய் தீவிரமாகுமே! என்று கேட்டான் மன்னன்.
மன்னா! அரைகுறை உணவிட்டால் சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய் என்றார் முனிவர். அவர் சொன்ன படி பிடிக்காவிட்டாலும் பெரியவர் சொல்கிறாரே என ஏற்றுக் கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான். சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும் மன்னனின் உயிர் பிரியவில்லை. இதென்ன ஆச்சரியம் என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில் முனிவர் மீண்டும் வந்தார். ஸ்வாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே என்றான் மன்னன். மன்னா! வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது அச்சுதா அச்சுதா' என கிருஷ்ணரின் இன்னொரு பெயரைச் சொல்லி அன்னம் இடுகின்றனர். அச்சுதன்' என்று பெயர் சொன்னால் உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கை விடுவதில்லை. இனி நீ இறைவன் பெயரைச் சொல்வதையும் நிறுத்து என்றார். ஆனால் மன்னன் மறுத்து விட்டான்..என் கிருஷ்ணரின் பெயரைச் சொல்வதால், எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். அவர் பெயர் சொல்வதை மட்டும் நிறுத்தவே மாட்டேன் என சொல்லி விட்டான் மன்னன்.
அவனது மன உறுதி கண்ட கிருஷ்ணர் அவனுக்கு காட்சியளித்து
சுகமடையச் செய்தார். பார்த்தீர்களா! கிருஷ்ண நாமத்துக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது என்பதை! இனி உங்கள் குழந்தைகளுக்கும் கிருஷ்ணா, கண்ணா, அச்சுதா என்று பெயர் வைத்து அழையுங்கள். புண்ணியத்தை தேடிக் கொள்ளுங்கள்...!!
நான்காவது ஆச்சார்யர் ஸ்ரீ சத்ய போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்! கி.மு.364 - 268
4 : ஸ்ரீ சத்ய போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்!
கி.மு.364 - 268
காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம் குரு ரத்தினமான ஸ்ரீ சத்ய போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கேரளத்தில் அமராவதி நதிக்கரையில் வாழ்தவர். இவர் தந்தையின் பெயர் தண்டவசர்மன். வேதமோதும் அந்தண மரபினர். பெற்றோர் இவருக்கிட்ட பெயர் 'பலிந்யாசர்'. ஸ்ரீ சங்கர பாஷ்யங்களுக்கு வார்த்திகங்கள் இயற்றிய இவர் பதகசதகம் என்னும் நூலையும் அருளியிருக்கிறார். கால வெள்ளத்தில் இவற்றைப் பாதுகாக்க முடியாமல் போய் விட்டது.
இவர் கி.மு.268 ல் நந்தன ஆண்டு வைகாசி மாதம் க்ருஷ்ண பக்ஷம் அஷ்டமியன்று காஞ்சியில் சித்தியடைந்தார்.
திங்கள், 7 செப்டம்பர், 2020
மூன்றாவது ஆச்சார்யர் ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (கி.மு. 407 முதல் 364 வரை)
(கி.மு. 407 முதல் 364 வரை)
ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் தந்தை பெயர் வர்த்தனர். தந்தை இவருக்கிட்ட நாமம் மஹாதேவர். ஸ்ரீ ஆதிசங்கரர் சர்வக்ஞ பீடமேறியபின் நெல்லை மாவட்டத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள் வாதிட வந்தனர். வாதிட்ட சில நாழிகைகளிலேயே அவர்கள் ஒவ்வொருவராய் தோற்க, மூன்று நாள் தொடர்ந்து தளராமல் வாதிட்டார் ஏழு வயதே ஆன மஹாதேவர். நான்காம் நாள் பகவத்பாதரின் கருத்தை ஏற்றுச் சரணடைந்தார். இளம் வயது மஹாதேவரின் விசாலமான ஞானத்தைக் கண்டு அவரை சிஷ்யராக ஏற்று தமது வாரிசாக்கத்திருவுளம் கொண்டார் குரு சங்கரர். அப்பாலகனின் பெற்றோரை வரவழைத்து தமது விருப்பத்தை தெரிவித்தார். அவர்கள் மகிழ்வுடன் சம்மதித்தனர். குருநாதரே மஹாதேவனுக்கு சந்யாச தீக்ஷை அளித்து சர்வக்ஞாத்மர் என்ற தீக்ஷா நாமத்தை சூட்டினார். இப் பால சந்யாசி சுரேஸ்வராச்சாரியரின் பொருப்பில் விடப்பட்டு சகல சாஸ்திர பண்டிதரானார். 'இந்திர ஸரஸ்வதி' என்ற பட்டம் இவரிலிருந்து தான் தொடங்கியது. தேவேச்வரர் என்றே இவர் சுரேஸ்வரரைக் குறிப்பிடப்படுவார். இவர் ஸ்ரீ சங்கர சூத்ரபாஷ்யத்திற்கு அழகு மிளிரும் நடையில் 1267 பாசுரங்கள் கொண்ட விரிவான விளக்க உரை எழுதி உள்ளார். இந்த விளக்க உரை'சம்க்ஷேபசாரீரகா' எனப்படுகிறது. அத்துடன் கவிதை நடையில் 'சர்வக்ஞவிலாச' எனும் நூலையும் இவர் இயற்றி உள்ளார். அப்போதைய துவாரகா மடத்தின் ஆசார்யரான பிரம்ம ஸ்வரூபருக்கு குருவாக இவர் இருந்தார். இவர் காலத்துச் சோழ மன்னன் மனுகுலாதித்த சோழன் இம்மன்னனைப் பற்றித் தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இவர் காஞ்சியில் கி.மு.364ல் நள ஆண்டு வைகாசி மாதம் கிருஷ்ண பஞ்சமியில் சித்தியடைந்தார்.
இரண்டாவது ஆச்சார்யர் ஸ்ரீ சுரேஸ்வரர்( கி.மு.491முதல் 407
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்யர் மற்றும் ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர். அவர்களின் முதலாமானவர் ஆதிசங்கரர் ஆவார். இவரை அனேகமாக அனைவருக்கும் தெரிந்தவர். மற்ற ஆச்சார்யர்களை பற்றி இனி வரும் நாட்களிள் நாம் தெரிந்துகொள்வோம். ஆதிசங்கருக்கு அடுத்தபடியாக பீடத்தை அளங்கரித்தவர் ஸ்ரீ சுரேஸ்வரர் ஆவார்.
2: ஸ்ரீ சுரேஸ்வரர்( கி.மு.491முதல் 407)
ஸ்ரீ சுரேஸ்வரருடைய பூர்விக நாமம் மண்டனமிச்சர். இவர் நர்மதா நதிக்கரையில் மாகிஷ்மதி என்ற சிற்றூரில் வசித்து வந்தார். இவரை பிரம்மாவின் அம்சம் என்பர். இவருடைய மனைவி ஸரசவாணி ஸரஸ்வதி அம்சம். இவளும் தன் கணவரைப் போலவே வேத வேதாங்களில் புலமை மிக்கவள். மிச்ரரின் ஞானத்தை அறிந்த ஆதிசங்கரர் தனக்குப் பிறகு அவரே பீடத்தை அலங்கரிக்கக் கூடியவர் என தீர்மானித்து இல்லறத்தில் இருக்கும் அவரை துறவு வாழ்க்கைக்குத் திருப்ப அவர் இல்லம் தேடி வந்தார். அந்த காலங்களில் ஒருவர் ஒருவரை தன்பால் ஈர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் வாதத்துக்கு அழைப்பது வழக்கம். அவ்விதமே மிச்ரரை வாதத்திற்கு அழைத்தார் ஆதிசங்கரர். தோற்றவர் வென்றவர் மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமென்பது நிபந்தனை. இரண்டு மலர்களைக் கொண்டு வந்து இருவர் கழுத்திலும் சூட்டி எவர் மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர் என்று கூறி அவர்களுக்கு நடுவராக இருந்தாள் மிச்ரரின் மனைவி. இருவரும் சளைக்காமல் பலநாள் வாதப்போர் நடத்தினர். மிச்ரர் கழுத்தில் இருந்த மாலை வாடத் தொடங்கியது. கணவனில் பாதி மணைவி. தன்னையும் வாதில் வென்றாலே பூரண வெற்றி என்று ஸரசவாணி தர்க்கம் செய்தாள். அவளையும் தர்க்க சாஸ்திர நெறிப்படி வென்றார் ஆதிசங்கரர். நிபந்தனைப்படி மிச்ரர் சந்நியாச ஆச்ரமத்தை ஏற்றார். ஸ்ரீசுரேஸ்வரர் என்ற தீட்சா நாமத்தை அவருக்கு அளித்தார் சங்கரர். ஆதிசங்கரர் சித்தியடைந்த பின் ஸ்ரீ சுரேஸ்வரர் அனைத்து பீடங்களுக்கும் மேலாளராயிருந்து நிர்வகித்தார். இவர் பல அத்வைத்த நூல்களை எழுதினார். காஞ்சியில் ஒரு பெரும் அக்ரஹாரத்தை அமைத்தார். ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயத்துக்கருகிலுள்ள இந்த அக்ரஹாரம் மண்டனமிச்ரர் அக்ரஹாரம் என வழங்கப்படுகிறது. சுரேஸ்வரர் கி.மு.407ல் சுக்லபட்ச துவாதசியன்று சித்தியடைந்தார். இன்றும் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தில் சரேஸ்வருக்கு தனி சன்னதியும் திருவுருவமும் உள்ளது. இவருக்கு அடுத்து வந்த ஆச்சார்யர்கள் அனைவருக்கும் அவர்களுடைய நாமத்தில் சரஸ்வதி பட்டம் சூட்டப்பட்டது.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர