ஞாயிறு, 12 ஜூலை, 2020

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம்
1. லகு
2. லலிதம்
3. லக்ஷணம்
4. லட்சியம்
5. லயம்

உலகத்தின் மிகப் பழமையான மதம் இந்து மதம்.
இந்து மதம் காட்டும் வாழ்க்கைப் பாதை அறப்பாதை. ஆன்மீகப் பாதை.
மக்களை வழிமுறைப்படுத்தி வாழ்வாங்கு வாழ வைக்கும் உன்னதமான மதம்.

வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற இந்து மதத்தின் கிளைகள் மக்களின் நல்வாழ்வுக்கு நல்வழிகாட்டுகின்றன.

அந்த இந்து சனாதன தர்ம மதம் – ஆறு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சைவம், வைஷ்ணவம், சாக்தம், ஸௌரம், காணாபத்தியம், கௌமாரம்.

இதனுள் சாக்தம் என்பது, கடவுளை பெண்பால் வடிவத்தில் சக்தியாக வழிபடச்செய்வது.
அன்னைதான் உயிருக்குக் காரணியாக இருப்பது போல, அன்னை வடிவத்திலிருக்கும் தெய்வம் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக விளங்குகின்றது என்பதை உணரவைப்பது சாக்தம் எனும் பிரிவு.

அன்னையை ஆதிபராசக்தியை வழிபாடு செய்ய வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும் பல வழிகளைக் காட்டுகின்றன.

அதில் மிகவும் மேன்மையானது, அன்னையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற லலிதா ஸஹஸ்ரநாமம் ஆகும்.

1.லகு :
இந்து தர்ம சாஸ்திரங்கள் சில மந்திரங்களை ஆண்கள் மட்டும், சில மந்திரங்களை பெண்கள் மட்டும் தான் சொல்ல வேண்டும் என்ற நியதிகளை வகுக்கின்றன.
ஆனால், லலிதா ஸஹஸ்ரநாமத்தினை ஆண், பெண் - எந்த நிலையிலிருந்தாலும் சொல்லப்படலாம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன சாஸ்திரங்கள்.

(ஸ்ரீ ஹயக்ரீவரிடமிருந்து அகஸ்தியர் லலிதா ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டறிந்தார். அகஸ்தியரின் மனைவி லோபாமுத்திரை – அம்பாள் உபாஸகர்களில் மிக முதன்மையானவர். ஹாதி வித்யா என்ற ஸ்ரீ வித்யா உபாஸனையை மேற்கொண்டவர். கணவன் மனைவியாகிய அகஸ்தியரும் லோபாமுத்திரையும் தான் உலகத்திற்கு முதன் முதலில் ஸ்ரீ வித்யா உபாஸனை என்கின்ற அம்பாளின் மிக மேன்மையான மந்திரங்களைக் கேட்டறிந்தவர்கள். ஆகவே ஆண் & பெண் இருபாலாரும் மிக நிச்சயமாக இந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தைச் சொல்லி பேறு பெறலாம்.)

மிக எளிமையான வார்த்தைகள். அருமையான சொல்லாடல்கள். ஆழ்ந்த கருத்துக்கள். சிறந்த ஓசை நயம். இவையனைத்தையும் கொண்டது இந்த ஸஹஸ்ரநாமம். மிகவும் எளிமையாக இருப்பதால் லகுவான ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக அமைகின்றது.

பத்து ஸஹஸ்ரநாமங்களை சாக்த சாஸ்திரங்கள் மேலானவை என்கின்றன.

அவை, கங்கா, காயத்ரீ, ச்யாமளா, லக்ஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேஸ்வரி, ஸரஸ்வதி, பவானீ.
அவற்றிலும் மேலான மேன்மை கொண்டது லலிதா ஸஹஸ்ரநாமம்.

2. லலிதம் :
லலிதம் எனும் வார்த்தைக்கு மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது என்று அர்த்தம். இதைப் பாராயணம் செய்வதால் மனம் லகுவாக, லேசாக, கனமற்றுப் போவதாலும், கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதாலும், சந்தோஷம் பெருகும் என்பதாலேயே லலிதா என்ற பெயர் வந்தது.

லலிதா எனும் பதத்திற்கு கொஞ்சி விளையாடுவது என்றும் அர்த்தம். அம்பிகையானவள் அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கைகளையும் ஒரு சிறு குழந்தை விளையாடுவது போல மிக எளிதாகச் செய்பவள் என்ற அர்த்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இதைப் பாராயணம் செய்யும் போது, அம்பிகையை பாலையாக, வாலைக் குமரியாக, பாலா திரிபுரசுந்தரியாக மனதில் தியானித்தால் - சிறு குழந்தைகளிடம் விளையாடும் போது, அந்தக் குழந்தைகளின் வயதுடையவராகவே நாமும் மாறுவது போல - அம்பிகையின் அருளாடல்களை எளிதில் உணரமுடியும்.

3. லக்ஷணம் :

அம்பிகையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற இந்த லலிதா ஸஹஸ்ரநாமம், பதினெட்டு புராணங்களின் ஒன்றானதும், இறுதியானதும் ஆகிய பிரம்மாண்ட புராணத்தினுள்,
ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் அகஸ்தியர் இருவருக்கிடையேயான ஸம்வாதம் (உரையாடல்) எனும் ஸம்பாஷணை வடிவிலான லலிதோபாக்கியானம் எனும் பகுதியில் அடங்கியுள்ளது.

லலிதோபாக்கியானம் – மந்த்ர கண்டம், நியாஸ கண்டம், பூஜா கண்டம், புரஸ்சரண கண்டம், ஹோம கண்டம், ரஹஸ்ய கண்டம், ஸ்தோத்திர கண்டம் எனும் பல்வேறு பிரிவுகளை உடையது.

இதில் ஸ்தோத்திர கண்டத்தினுள் அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம்.

வேதங்கள் – பரமேஸ்வரனுடைய உச்வாசம், நிச்வாசம் எனும் மூச்சுக் காற்றிலிருந்து தோன்றியவை. மிகவும் புனிதமானவை.

இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பிகையின் வாக்கிலிருந்து தோன்றியவை. வைகரீ, மத்யமா, பச்யந்தி ஆகிய அம்பிகையின் வாக்கு (சொற்களுக்கு உரிய) தேவதைகளால் சொல்லப்பட்டவை. அம்பிகையின் ஆணைப் படி வாக்கு தேவதைகளால் சொல்லப்பட்டவை.
(வைகரீ முதலான வாக் வசினி தேவதைகள் எட்டு பேர். ஒவ்வொருவரும் ஒரு ஸ்வரத்திற்கு அதிபதியானவர்கள். ஸ ரி க ம ப த நி என்ற ஏழு ஸ்வரங்களுக்கு ஏழு பேரும், அதற்கும் மேலான (அனு) ஸ்வர நிலையைக் கொண்ட (மனிதனின் கேட்கும் திறனான 50 Hz – 50000 Hz எல்லைகளுக்கு அப்பாற்பட்ட) சப்தத்திற்கு ஒருவரும் என எட்டு பேரும் சொல்லியருளியது.
இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் ஒரு தனிப்பட்ட நபர் எழுதியது அல்ல. தெய்வமே அனுக்ரஹித்தது.
வாக்கு தேவதைகள் அனுக்ரஹித்ததால் இது ரஹஸ்யநாம ஸஹஸ்ரம் என்றே கொண்டாடப்படுகின்றது. ரஹஸ்யம் என்றால் உள்ளுக்குள் புதைந்திருப்பது என்றும் அர்த்தம். அள்ளக் அள்ளக் குறையாத அற்புதப் புதையல் போன்றது லலிதா ஸஹஸ்ரநாமம். வற்றாத ஜீவ நதி போன்று, ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதியதாகப் படிப்பது போன்று தோன்றச் செய்யும்.

அம்பிகையின் வாக்கிலிருந்து வந்ததால், இது வேதத்திற்கு சமமாக மதிக்கப்படுகின்றது.

வேதங்களுக்கு அர்த்தம் அந்த வேதபிதாவான பரமேஸ்வரனுக்கு மட்டுமே அறியப்பட்டது.
அதேபோல லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முழுமையான அர்த்தம் ஜகன்மாதாவாகிய அம்பிகை மட்டுமே அறிந்தது.

இதற்கான விளக்கங்களை பற்பல ஆன்றோர்களும், அறிஞர்களும் அளித்திருக்கின்றார்கள். அவர்கள் கூட இதன் முழுமையான விளக்கத்தைத் தர முடியவில்லை என்றே கூறியிருக்கின்றனர்.

உதாரணமாக, அபர்ணா என்ற ஒரு பெயர் கொண்டு அம்பிகை போற்றப்படுகின்றாள்.
அபர்ணா என்றால் கடன் இல்லாதவள் என்று அர்த்தம். பக்தர்கள் கேட்கும் கோரிக்கையை நாளை அல்லது அடுத்த நாள் அல்லது வேறொரு நாளில் வரம் தந்து, பக்தர்களின் கோரிக்கையைக் கடனாகக் கொள்ளாதவள் அதாவது பக்தர்களின் கோரிக்கையை உடனடியாக அருளுபவள் என்று பொருள்.

அபர்ணா என்றால், அம்பிகை ஒரு சமயம் பரமேஸ்வரனைத் திருமணம் செய்து கொள்ளத் தவமாய்த் தவமிருந்தாள். தவம் செய்யும் போது, ரிஷிகள் போன்றோர் காட்டில் கிடைக்கக் கூடிய கிழங்குகள் அல்லது பழங்களை உணவாகக் கொள்வது வழக்கம். ஆனால், அம்பிகை இலையைக் கூட உண்ணாமல் (அதாவது உபவாசம் இருந்து – பட்டினியாய்க் கிடந்து) ஊசி மேல் தவம் இருந்ததாக புராணங்கள் கூறும்.

அபர்ணா என்றால் விழி மூடாதவள் (பர்ணம் – விழுதல். இமையைக் கூட விழாமல் – அதாவது கண்ணிமைக்காதவள்) விழி மூடும் சமயம் பக்தன் வந்து விட்டால், வரம் கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி, பக்தர்களுக்காக இமைக்காமல் இருப்பவள் என்று அர்த்தம்.
இது போன்று பல அர்த்தங்களை ஆன்றோர்கள் அமைக்கின்றார்கள்.

ஆகையினால், இதற்கான அர்த்தங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம். (லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி மற்றும் ஸௌந்தர்ய லஹரி – இந்த மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி எழுத எண்ணம் கொண்டிருக்கின்றேன். அம்பிகையின் அருளால் விரைவில் கைகூட பிரார்த்தனை செய்கின்றேன்)

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம் :

லக்ஷணம் என்றால் குறியீடு அல்லது இலக்கணம்.
ஸஹஸ்ரநாமம் – ஸஹஸ்ர (1000) + நாமம் (பெயர்கள்).
அம்பிகையை ஆயிரம் பெயர்களால் அழகுற துதிக்கச் செய்யும் மந்திரங்கள்.

பொதுவாக, ஸஹஸ்ரம் என்ற வார்த்தைக்கு வேத பாஷ்யங்கள் – எண்ணற்றது என்று அர்த்தம் தருகின்றன. (ஸஹ்ஸ்ரசீர்ஷா புருஷ: .. ஸஹஸ்ரபாத் – யஜுர் வேதம் - புருஷ ஸூக்தம் – இங்கு ஸஹஸ்ரம் என்ற வார்த்தைக்கு எண்ணிக்கையற்றது என்றே பொருள்.)

அதேபோல் ஸஹஸ்ரநாமம் என்றால் அம்பிகை எண்ணற்ற நாமங்களை, பெயர்களைக் கொண்டவள் என்று பொருள்.
நாமாவளி என்றால் பெயர்களை வரிசையாக அமைத்தல் என்று அர்த்தம். (தீபாவளி – தீபங்களை வரிசையாக அமைத்தல்)

ஸஹஸ்ரம் என்றால் ஆயிரம் (1000) என்றும் அர்த்தம் உண்டு. ஆகவே, அம்பிகைக்குரிய ஆயிரம் பெயர்களை வரிசையாக அமைத்து வழிபடும் பிரார்த்தனைக்கு ஸஹஸ்ரநாமாவளி என்று பெயர்.

ஸஹஸ்ரநாமம் என்றால் எப்படியெல்லாம் அமையவேண்டும் என்று இலக்கண சூத்திரங்கள் (formula) அறுதியிடுகின்றன.

சலாக்ஷ்ர சூத்திரம் என்பது வடமொழி இலக்கணத்தில் மிக முக்கியமான ஒன்று.
அது, ஸஹஸ்ரநாமம் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று நியதிப்படுத்துகின்றன.
அந்த வகையில் எல்லா விதங்களிலும் பரிபூரணமாக, மிகப் பொருத்தமாக அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம்.

எளிமையாகவும் (லகு), இனிமையாகவும் (லலிதம்), இலக்கணத்தின் முழுமை பெற்ற (லக்ஷணம்) வடிவமாகவும் லலிதா ஸஹஸ்ரநாமம் அமைந்திருப்பதனால் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது.

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணங்கள் பல உண்டு. அவற்றில், சிலவற்றை மட்டும் காண்போம்.

ஸஹஸ்ரநாமம் அமைய வேண்டும் என்றால் ஆயிரம் பெயர்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அவை அந்த தெய்வத்தின் புகழைக் கூறவேண்டும். அவற்றை இலக்கணப்படி ஸ்தோத்திரமாக்க வேண்டும். அப்படி ஸ்தோத்திரமாக ஆனது, சந்தஸ் எனும் சந்தம் அல்லது செய்யுள் தன்மை மாறாமல் அமைய வேண்டும்.

உதாரணமாக,
1. ஸ்ரீ மாத்ரே நம: (அன்னை வடிவான அம்பிகையை வணங்குகின்றோம்)
2. ஸ்ரீ மஹாராக்ஞ்யை நம: (அகில உலகிற்கும் மஹாராணியை வணங்குகின்றோம்.)
3. ஸ்ரீமத் ஸிம்ஹாஸநேஸ்வர்யை நம:

மேற்கண்ட மூன்று நாமாக்களையும் ஸ்தோத்திரமாக மாற்ற முடியவேண்டும்.
அது,
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீமத் ஸிம்ஹாசனேஸ்வரீ

இப்படி ஸ்தோத்திரமாக மாற்றப்பட்டது எவ்விதத்திலும் சந்தங்களில் மாறாமல் அமைய வேண்டும்.
அதே போல மாற்றப்பட்ட ஸ்தோத்திரத்திலிருந்து நாமாவளிகாக மறுபடியும் பிரிக்க ஏதுவாக இருக்க வேண்டும்.

சில ஸஹஸ்ரநாமங்களில் ஸ்தோத்திரத்துனுள், சந்தங்களுக்கு, செய்யுள் தன்மைக்கு ஏற்ப அமைய வேண்டி, சில அர்த்தமற்ற சப்தங்கள் அமைந்துவிடும். அவை, நாமாவளிகாக மாற்ற வேண்டிவரும்போது, அர்த்தமற்ற சப்தங்கள் (ஸ்தோத்திரத்தில் இருப்பவை) நாமாவளிகளில் வராது.

இது போன்று எந்தவொரு அர்த்தமற்ற சப்தங்களும் இந்த ஸஹஸ்ரநாமத்தில் கிடையாது. சொற்குற்றம், பொருட்குற்றம் இவையில்லாத, அப்பழுக்கற்றதாக லலிதா ஸஹஸ்ரநாமம் திகழ்கின்றது.

ஸஹஸ்ரநாமம் அமைவதில் மிக முக்கியமான மற்றொரு நிபந்தனை உண்டு. ஸஹஸ்ரநாமத்தில் ஒரு வார்த்தை இடம்பெற்று விட்டால், மறுபடியும் அந்த வார்த்தை வேறு எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இடம்பெறும் எந்தவொரு வார்த்தையும் மறுபடியும் அதனுள் வருவதில்லை.

சில வார்த்தைகள் இருமுறை வருவது போல தோன்றக்கூடும்.
உதாரணமாக,
வரதா வாமநயனா ...
விச்வகர்பா ஸ்வர்ணகர்பா வரதா வாகதீஸ்வரி ...

மேற்கண்ட வரதா எனும் வார்த்தை, மறுபடியும் ஒரு இடத்தில் வருவதைக் காண்கின்றோம்.
அதை எப்படி அர்த்தம் கொள்வது என்பதை அறிஞர்கள் பகுத்தாய்கின்றார்கள்.

முதலில் வருவது வரதா,
பின்னால் அமைவது அவரதா எனக் கொள்ளவேண்டும்.

ஸுமுகீ நளினீ ஸுப்ரு: சோபனா ஸுரநாயிகா ...
ஸுவாஸின்யர்ச்சனப்ரீதா சோபானா சுத்தமானஸா

இங்கு சோபனா எனும் வார்த்தை இரண்டாவது வரியில் அமைவதை, ப்ரீதா (ஆ)சோபனா எனக் கொள்ளவேண்டும்.

கடபயாதி சங்க்யை :
வடமொழி இலக்கணத்திற்கு மிகப் பெரும் பங்காற்றிய வரருசி என்பவர் கடபயாதி ஸங்க்யை என்ற நியதியை வகுத்தார்.
அது, க, ட, ப, ய என்ற எழுத்துக்களுக்கும், அதைத் தொடர்ந்து வரும் எழுத்துக்களுக்கும் எண்ணிக்கை மதிப்பைக் கொடுத்தார். ஆகவே அது க ட ப ய – என்னும் எழுத்துக்களை ஆதியாக, தொடக்கமாகக் கொண்ட ஒரு கணக்கு வழி – அதுவே கடபயாதி ஸங்க்யை.

க - 1, க(kha) – 2, க(ga) – 3, க(gha) – 4, ங – 5, ச - 6,
ச(cha) – 7, ஜ – 8, ஜ(jha) – 9, ஞ - 0
ட – 1, ட(tta) – 2, ட(da) – 3, ட(dda) – 4, ண – 5, த – 6,
த(ttha) – 7, த(dha) – 8, த(ddha) – 9, ந - 0
ப – 1, ப(pha) – 2, ப(ba) – 3, ப(bha) – 4, ம – 5,
ய – 1, ர – 2, ல – 3, வ – 4, ச – 5, ஷ – 6, ஸ – 7, ஹ - 8
எந்தெந்த எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள் (பெயர்கள்) அமையவேண்டும் என்பதை கடபயாதி ஸங்க்யை அறுதியிடுகின்றது.

உதாரணமாக, அருண எனத் தொடங்கும் பெயர்கள்.

கடபயாதி ஸங்க்யை படி அருண எனும் வார்த்தைக்கு 12 எனும் மதிப்பு வருகின்றது. (கடபயாதி ஸங்க்யை – சற்றே கடினமான சூத்திரங்களைக் கொண்டது. எளிதில் புரிபடாதது. தகுந்த ஆசிரியர் கொண்டு கற்க வேண்டும்)

அருணன் என்றால் சூரியன் என்று பொருள்.
சூரியன் ஒரு வருடத்தில் 12 மாதங்களைக் கடந்து வருகின்றார்.

சூரியனுக்கு 12 பெயர்கள் உள்ளதாக ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.
(மித்ரன், ரவி, சூர்யன், பானு, ககன், பூஷன், ஹிரண்யகர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவித்ரு, அர்க்கன், பாஸ்கரன்)

அதே போல மற்றொரு பன்னிரண்டு பெயர்களையும் புராணங்கள் கூறுகின்றன. (1.தபினீ, 2.தாபினீ, 3.தூம்ரா, 4.மரீசி, 5.ஜ்வாலினி, 6.ருசி, 7.ஸுக்ஷும்னா, 8.யோகதா, 9.விச்வா, 10.போதிணீ, 11.தாரிணீ, 12. க்ஷமா)

அருண எனும் பதத்திற்கு 12 எனும் மதிப்புடையதால், லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அருண எனும் தொடங்கும் பெயர்கள் 12 தான் அமைந்திருக்கின்றன.

இதே போல பல நாமாக்களுக்கு கடபயாதி ஸங்க்யைபடி - எண்ணிக்கையின் மதிப்பும், அதனைச் சார்ந்த நாமாவளிகளின் எண்ணிக்கையும் ஒன்றாகவே அமைவது பெரும் ஆச்சர்யத்தைத் தருகின்றது.

மேலே சொன்னது போல, மற்றும் ஒரு வகையில் லலிதா ஸஹஸ்ரநாமம் பகுக்கமுடிகின்றது. அது, 3 எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள், 8 எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள் என்றும் பகுக்கப்படமுடிகின்றது.

சந்திரனை ஒப்பிடாத எந்தவொரு அழகியல் இலக்கியமும் இல்லை.
அதன்படி, சந்திரனை வர்ணித்து லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பல பெயர்கள் அமைந்துள்ளன.
அம்பிகையின் நெற்றியானது – அஷ்டமீ சந்த்ர விப்ராஜ... என்ற நாமத்தின் படி, எட்டாவது தினத்திய சந்திரனைப் போன்று அழகுற விளங்குகின்றது என்று லலிதா ஸஹஸ்ரநாமம் கூறுகின்றது.
அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை 15 கலைகள் உள்ளன. அதில் எட்டாவது நாள் சந்திரன் – அரை சந்திர (7 1/2க்கும் அதிகமாக) வடிவத்திற்கும் சற்றே கூடுதலாக – விளங்கும். அந்த அர்த்தசந்திர வடிவம் அம்பிகையின் நுதலாக, நெற்றியாக விளங்குகின்றதாம்.
அப்படி தலையின் மேல் பாகமாகிய நெற்றி அரைச் சந்திர வடிவமும், கீழ் பாகம் அம்பிகையினுடைய சுயமான ஒளி பொருந்திய வடிவத்தினால் மற்றும் ஒரு அரை சந்திரன் வடிவமாகவும் திகழ்கின்றதாம்.
அப்படியானால், முகம் – இரு அரை சந்திர வடிவங்களும் இணைந்த – பௌர்ணமி நிலவு போல் என்றும் பிரகாசிக்கின்றதாம். (ஆகையினால் தான் அபிராம பட்டருக்கு அமாவாசையிலும் பௌர்ணமியை அம்பிகைத் தோன்றச் செய்தாள்.)

எட்டு என்ற எண்ணிக்கை அம்பிகைக்கு மிகவும் உகந்தது.

அஷ்டமியில் செய்யப்படும் ஸஹஸ்ரநாம பூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது என்று இதன் பலச்ருதி விளக்குகின்றது.

வேதங்களும் அம்பிகையின் புகழை எட்டு என்ற எண்ணிக்கை கொண்டு போற்றுகின்றன. (கௌரிமிமாய ஸலிலானி ... அஷ்டாபதி ... )

அம்பாள் வீற்றிருக்கும் ஸ்ரீ நகரத்தின் முதல் வாயிலில், அஷ்ட தேவதைகள் வீற்றிருப்பதாக ஸ்ரீ வித்யா பூஜை கூறுகின்றது.

எட்டின் மடங்கில் உள்ள எண்ணிக்கையை லலிதா ஸஹஸ்ரநாமம் பெரிதும் முக்கியத்துவமாகக் கொண்டுள்ளது.

(மஹா சதுசஷ்டி கோடி யோஹினி ... 8X8 = 64 கோடி எண்ணிக்கை கொண்ட யோகினி எனும் தேவதைகளால் துதிக்கப்படுபவள்)

அம்பிகையின் நெற்றி - எட்டாவது நாளின் சந்திரனின் வடிவத்தினுடைய காந்தியைக் கொண்டுள்ளது என்றும், கீழ் முகம் மற்றும் ஒரு எட்டாவது சந்திரனுடைய ஒளியைக் கொண்டுள்ளது என்றும் புராணங்கள் கூறுகின்றன. (அதாவது 8 + 8 = 16 – பெளர்ணமி தினத்தை விட மேலான ஒரு ஒளியைக் கொண்டுள்ளவள் அம்பிகை)

16 என்னும் எண்ணிக்கையும், சாக்த உபாஸனையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஷோடச (16) அக்ஷரம் (எழுத்துக்கள்) – சோடஷாக்ஷரீ எனும் (16 எழுத்துக்களைக் கொண்ட) ஸ்ரீ வித்யா மந்திரமே அம்பிகையை வழிபட உகந்த மிக மிக மேன்மையான உபாஸனா மந்திரம் என்று சாக்த சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

அந்த 16ன் அம்சம் லலிதா ஸஹஸ்ரநாமம் முழுக்க விரவியிருப்பதைக் காணும்போது வியக்கத்தக்கதாக உள்ளது.

லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தின் ஒவ்வொரு வரியும் 16 எழுத்துக்களைக் கொண்டுள்ளன.

ஸ்ரீ மா தா ஸ்ரீ ம ஹா ரா க்ஞீ ஸ்ரீ மத் ஸிம் ஹா ச னே ச்வ ரீ –

இது லலிதா ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரத்தின் முதல் வரி.

இந்த வரியிலுள்ள எழுத்துக்களை எண்ணிவந்தால் 16 எழுத்துக்களில் அமையும். (புள்ளி வைத்த ஒற்றெழுத்துக்கள் இலக்கண விதிப்படி கணக்கில் வராது)

அது மட்டுமல்ல ஒவ்வொரு வரியுமே 16 எழுத்துக்களைக் கொண்டு தான் அமைகின்றது.
இரண்டாவது வரி,
சி தக் னி கு ண்ட ஸம் பூ தா தே வ கா ர்ய ஸ முத் ய தா – 16 எழுத்துக்கள்.

(ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தினைச் சொல்லிவந்தால் எண்ணற்ற முறை ஸ்ரீ வித்யா மந்திரத்தினை சொன்ன பலன் கிடைக்கும் என்பது உபாஸகர்களின் மேலான கருத்து)

இரண்டு வரிகள் சேர்ந்தது ஒரு ஸ்லோகம்.
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீ மத் ஸிம்ஹாசனேஸ்வரி
சிதக்னி குண்ட ஸம்பூதா தேவ கார்ய ஸமுத்யதா

இரு வரிகளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 16+16 = 32.

வடமொழியில் உள்ள எழுத்துக்கள் 51. (அ முதல் க்ஷ வரை)
இதில்,

அ எனும் எழுத்தில் தொடங்கும் அம்பிகையின் பெயர்கள் – 40
(அகாந்தா, அகுலா, அக்ஷமாலாதிதரா, அக்ரகண்யா...)

அதே போல, மற்ற எழுத்துக்களில் தொடங்கும் நாமாவளிகளைக் கீழே காணலாம்.

அ எனும் எழுத்தில் 40 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
ஆ எனும் எழுத்தில் 11
இ – 3
ஈ – 2
உ – 5
ஊ – 5
ஏ – 1
ஓ – 2
அம் – 4
க – 81
க(2) – 1
க(3) – 24
ச – 29
ச(2) – 1
ஜ – 18
ட(3) – 2
த – 46
த(3) – 37
த(4) – 14
ந – 75
ப – 81
ப(3) – 24
ப(4) – 37
ம – 112
ய – 13
ர – 38
ல – 14
வ – 79
ச – 59
ஷ – 5
ஸ – 122
ஹ – 11
க்ஷ – 9 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. (ஆக மொத்தம் ஆயிரம் நாமாவளிகள்)

வடமொழியின் 51 எழுத்துக்களில் நாமாவளிகள் ஆரம்பிக்காத எழுத்துக்கள்:
ஊ, ரு, ரூ, லு, லூ, ஐ, ஔ, அ:, க(4), ங, ஜ(4), ஞ, ட, ட(2), ட(4), ண, த(2), ப(2), ள – ஆகிய 19 எழுத்துக்களில் அம்பிகையின் பெயர்கள் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆக, 51-19 = 32 எழுத்துக்களில் மட்டுமே நாமாவளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் ஒரு ஸ்லோகத்தின் உள்ள எழுத்துக்களும் 32 எண்ணிக்கையே.

லலிதா ஸஹஸ்ரநாமம் மூன்று பகுதிகள் உடையது.
1. பூர்வ பாகம் 2. நாமார்ச்சனா பாகம் 3. பலச்ருதி பாகம்
பூர்வ பாகம் – 51 ஸ்லோகங்களும்,
நாமார்ச்சனா பாகம் – 182 1/2 ஸ்லோகங்களும்,
பலச்ருதி – 86 1/2 ஸ்லோகங்களும் கொண்டதாக அமைந்திருக்கின்றது.
ஆக, மொத்த ஸ்லோகங்கள் = 320 (32ன் பத்தின் மடங்காக அமைவதைக் காணுங்கள்)

ஆதியந்தம் :
லலிதா ஸஹஸ்ரநாமத்தின் ஆதி (முதல்) பதம் (வார்த்தை) – ஸ்ரீ மாதா
ஆயிரமாவது நாமாவளி – லலிதாம்பிகா

ஆதி அன்னையாக விளங்குபவள் லலிதா அம்பிகை என்பதையும், முதலும் முடிவுமாக உள்ளதையும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகின்றது.

4. லட்சியம் :
அம்பிகையிடம் - வேண்டுதலை மனதில் நினைந்து, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை, மனமார பிரார்த்தனை செய்து, இத்தனை முறை சொல்ல வேண்டும் என்று லட்சியம் கொண்டு, பாராயணம் செய்து வந்தால், அம்பிகை அந்த பிரார்த்தனையை மிக நிச்சயமாக நிறைவேற்றுவாள் என்பது ஸத்யபூர்வமான உண்மை.

அம்பிகை க்ஷிப்ர ப்ரஸாதினியாக விளங்குபவள். அதாவது எளிமையான பக்தியால் கூட விரைவில் திருப்தி அடைந்து விடுபவள். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் பலச்ருதி மிக அருமையாக பல விளக்கங்களைத் தருகின்றது.

சிவ, விஷ்ணு ரூபிணியாக விளங்குவதால், அம்பிகையை, துளசி, தாமரை, வில்வம் கொண்டு ஸஹஸ்ரநாமத்தினால் அர்ச்சிப்பது ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களை அகற்றக்கூடியது.

பூக்களைக் கொண்டு அர்ச்சிக்கும் விதத்தை பாஸ்கர ராயர் அருமையாக விளக்குகின்றார்.

ஆயிரம் நாமாக்களையும் ஒரே வகை பூ கொண்டு அர்ச்சிப்பது பெரும் பேறு அளிக்கும்.
பல வகை மலர்கள் இருந்தால் தனித் தனி வகையாக அர்ச்சிப்பது மனதால் வேண்டுவதை அருளக்கூடியதாக இருக்கும்.
மலரின் மலர்ந்த தன்மை மாறாமல் அர்ச்சிக்க வேண்டும். மலர் எப்படி செடி கொடியில் மலர்கின்றதோ அந்த வகையிலேயே அர்ச்சிக்க வேண்டும்.
உதாரணமாக, செம்பருத்திப் பூ. அர்ச்சனை செய்யும் போது கையில் காம்பு கீழிருக்க, பூ மேலிருக்க அர்ச்சிக்க வேண்டும். இவ்வகை செய்வதால் வாழ்வாங்கு வாழலாம்.
பலவிதமான புஷ்பங்கள் கலந்திருந்தால், அவற்றை எடுத்து, புஷ்பாஞ்சலியாக நினைந்து (காம்பு கீழ் மேலாக இருந்தாலும் தோஷமில்லை) அர்சிப்பது கோடி கோடி புண்யத்தினை நல்கக் கூடியது.

பழங்களைக் கொண்டு நிவேதனம் செய்யும் போது, பழங்கள் எப்படி மரத்தில் பழுத்திருக்கின்றதோ அதைப் போலவே தாம்பாளத்தில் அமைத்து நிவேதனம் செய்ய வேண்டும். உதாரணம் மாம்பழம் – மாம்பழத்தின் காம்பு மேலிருக்க, பழத்தின் நுனி கீழிருக்க நிவேதனம் செய்வது அனைத்து விதமான பாபங்களையும் நீக்கக் கூடியது.
மேலும் பற்பல பலன்களை பலச்ருதி கூறுகின்றது.
ஸகல விதமான நோய்கள் நீங்கும், வம்சம் விருத்தியடையும், பல அஸ்வமேத யாகங்களைச் செய்த பலன் முதலானவற்றை அடுக்கிக்கொண்டே போகின்றது.

மிக விசேஷமாக பௌளர்ணமி அன்று இரவில், பௌர்ணமி நிலவை அம்பிகையாக மனதில் தியானித்து, ஐந்து வகையான உபசாரங்களோடு ஸஹஸ்ர நாமத்தினைக் கொண்டு அர்ச்சிப்பது மிக மேன்மையான பலனைத் தரக்கூடியது.
பௌளர்ணமி பூஜையை மந்த்ர மூர்த்தி தீக்ஷிதர் முதலான பெரியோர்களும், தவ ஞானியரும் பௌர்ணமி பூஜையை மிக விசேஷமாகச் செய்திருக்கின்றனர்.

தவக்கனல், அருட்புனல், கனகாபிஷேகம் கண்ட காஞ்சி அருள்வள்ளல் ஸ்ரீ மஹா பெரியவர் பௌர்ணமி பூஜையை மிகவும் விருப்பமுடன் செய்தவர். இப்படிச் செய்வது பெரும் ஞானம் கிடைக்க வழி செய்யும் என்றவர்.

லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது கேட்பது, பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று தந்த்ரராஜம் கூறுகின்றது.

அனைத்து விதங்களிலும் பூரணமாக அமைந்த, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வதால் அம்பிகையின் பரிபூரண அருள் கிடைத்திடும்.

5 .லயம் :
லலிதா ஸஹஸ்ரநாமத்தினுள் பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன.

உடலில் உள்ள ஆறாதாரங்களை உயிர்ப்பித்து, ஆறாதாரங்களுக்கு உரிய தெய்வங்களை பஹிர்நியாஸமாக அமைத்துக்கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை பாராயணம் செய்வது, ஸாரூபம், ஸாமீபம், ஸாயுஜ்யம், ஸாலோக்யம், கைவல்யம் எனும் ஐந்து விதமான முக்தி நிலைகளையும் தருவதோடு, அம்பிகையோடு லயமாகிவிடும் (ஐக்கியமாகிவிடும்) மேலான வழிமுறையை லலிதா ஸஹஸ்ரநாமம் காட்டுகின்றது.

இதில் உள்ள அம்சங்கள் எத்தனை எத்தனை ?
அம்பிகைக்குரிய புஷ்பங்கள், நிவேதனங்கள், அம்பிகை உறையும் ஸ்ரீ நகரத்தின் விவரணை, தேவர்களைக் காத்திட்ட பாங்கு, தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வ நிலை, சிவ, விஷ்ணு, அம்பிகை – மூவரும் ஒன்று தான் என்னும் விளக்கம், யோக சாஸ்திர நிலைகள், ஞானம் அருளும் ஞானாம்பிகையாக, வேண்டுதல் அனைத்தையும் வரமளிக்கும் காமேஸ்வரியாக, புவனம் காக்கும் புவனேஸ்வரியாக அருள்பாலிக்கும் அம்பிகையைப் போற்றிச் சொல்லுகின்றது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்.

லலிதா ஸஹஸ்ரநாமம் கொண்டு அம்பிகையை என்றும் போற்றிடுவோம் !
அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவோம்.

*

லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதியவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆனால், பாஸ்கர ராயர் எழுதிய பாஷ்யம் மிகவும் பிரபலமானது. பாஸ்கர ராயர் தனது பெயருக்கு ஏற்ப, முன்னர் கண்டது போல, பாஸ்கர எனும் சூரியனின் 12 பெயர்களைத் தலைப்புகளாகக் கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கான பாஷ்யம் அமைத்துள்ளது பெரும் பாராட்டுதலுக்கு உரியதாகின்றது.
பாஸ்கரராயரின் பாஷ்யம், அம்பாளிடம் அவருக்கு இருந்த பக்தி, அந்த பக்தியால் அவர் செய்த சாதனைகள் (மஹா சதுசஷ்டி கோடி யோகினிக்கான விளக்கம் அளித்தது, ஒரு சன்யாசியின் கர்வத்தை அடக்கியது முதலான விபரங்களையும், அவர் வாழ்வில் நடந்த அதிசயங்களையும், அவர் மகள் லீலாவதி (இவர் ஒரு பெரிய கணித இயல் பேரறிஞர், பல கணித சூத்திரங்களை எழுதியவர்) பற்றிய விபரங்கள் போன்றவற்றையும் பிறிதொரு பதிவில் காண்போம்.
அதுமட்டுமல்லாமல், சிதம்பரம் ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகை ஆலயத்தில் அமைந்திருக்கும் சுகர் ரிஷியால் நிறுவப்பட்டதும், ஆதி சங்கரரால் வழிபாடு செய்யப்பட்டதும், மந்திர மூர்த்தி தீக்ஷிதரால் பூஜிக்கப்பட்டதும் ஆகிய மிகச் சிறப்பு வாய்ந்த ஸ்ரீசக்ரம் பற்றியும், அந்த ஆலயத்தின் விதானத்தில் (மேற்கூரையின் கீழ்பரப்பில்) லலிதா ஸஹஸ்ரநாமத்தின் படி அமைந்த அருமையான வரைபடங்கள் பற்றியும் விபரமாகப் பிறகு காண்போம்.

அடுத்த பதிவு,
ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்.
லலிதா ஸஹஸ்ர நாமத்தினையும், ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தினையும் ஒருங்கே காண்போம். இரண்டிலும் உள்ள ஒற்றுமைகளையும், சிதம்பர ரஹஸ்ய தந்த்ரத்தின் மேலான பூஜை முறைகளில் ஒன்றான ஸம்மேளன முறையையும் காண்போம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
 yanthralaya@gmail.com
- www.facebook.com/deekshidhar
- Cell : 94434 79572 & 93626 09299.
"காட்டுக்குத் தீ வைத்தாகி விட்டது"

சமயத்தில் ஈடுபாடு கொண்ட பணக்காரப் பெற்றோருக்குப் பிறந்தாலும் , வாழ்க்கையின் சுகங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கடவுள் திருவடியை இப்பிறவியிலேயே அடைய வேண்டும் என்ற விருப்பமும் பிரார்த்தனையும் இளமையிலேயே என்னிடத்தில் சூடிக்கொண்டது......

சில காலம் இடையீடு இல்லாமல் எல்லாம் சரியாகவே சென்றது.....
ஆனால் எனக்குப் பதினாறு வயது இருக்கும்போது குடும்பத்தில் வறுமை வந்தது.... தந்தையும் திடீரென்று காலமானார்.....

இதுவே என் வாழ்வில் திருப்புமுனையாக ஆயிற்று...... நான் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று..... வாழ்க்கைச் சுமை தாங்க முடியாது போகவே கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று நான் சந்தேகப்பட ஆரம்பித்தேன்.....

“நான் பாவம் ஏதும் செய்யவில்லையே , யாருக்கும் தீங்கு எதுவும் இழைக்கவில்லையே..... பின் ஏன் இந்தத் துன்பம் எல்லாம் ? ” என்று வியக்க ஆரம்பித்தேன்......

7 ஆண்டுகள் மிகவும் துயரம்..... பின் என் நண்பர் ஒருவர் ‘ ரமண விஜயம் ’ என்று ஒரு நூலை என்னிடம் கொடுத்தார்..... அந்த நூலைப் படித்ததும் உடனே ரமண மஹரிஷியைக் காணத் தீர்மானித்தேன்.....

1943 – ல் ரமணாசிரமம் சென்றேன்..... தியான ஹாலில் இருக்கையில் அமர்ந்த ரமண முனிவரைக் கண்டேன்.....
அவரது அருள் என்னை விழுங்கிற்று.....
மூன்று நாட்கள் இது தொடர்ந்து நடைபெற்றது..... மகரிஷி வாயால் ஆசிர்வதிக்க வேண்டும் என்ற விருப்பம் என்னுள் எழுந்தது.....

நான்காவது நாள் மலையிலிருந்து இறங்கி வரும்போது அவரைத் தரிசித்தேன்.....
அவர் அருகில் ஒரு பணியாளர் மட்டுமே இருந்தார். என்னைப் பார்த்ததும் நின்று என்னை அருளோடு நோக்கினார்......

அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தேன் , எழுந்தேன்.....
என்னைப் பார்த்துத் தமிழில் ,
"காட்டுக்குத் தீ வைத்தாகிவிட்டது".... அது தானே எரிந்து முடியும்..... இனி கவலைப்பட வேண்டியதில்லை" என்றார்.....

இளமையில் பொருள் மீது பற்றுள்ள எண்ணங்கள் என்னிடம் எழும்.....
ஆனால் இப்போது அவை படிப்படியாக நீங்குகின்றன....
உணர்வை எண்ணங்கள் பாதிப்பதில்லை...
அவை உள்ளே படிவதும் இல்லை.....
மனம் மேலும் மேலும் லேசாகிறது.....
மிகவும் சக்தி வாய்ந்த வெற்றிடம் இன்னும் வெகுதூரத்தில் இல்லை....
ஆம் இது நிகழ்கிறது!!!!

"ருணம்" என்பதற்கு விருப்பம் ,
ஆசை என்பது பொருள்.....
"அருணம்" என்றால்
ஆசையின்மை என்பது பொருள்.....
"சலம்"என்றால் அசைவு .... 
"அசலம்" என்றால்
அசையாதது என்று பொருள்.....
ஆகவே ஆசையின்மை மனத்தை அசைவின்மைக் கொண்டு செல்லும்.... அதுவே சிவமயம் , அருணாசலம்.....  அருணாசல ரமணர் நமக்கு அருள் மழை பொழியட்டும்.....

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!!
#ஆலயதரிசனம்..

#பண்ணாரி_மாரியம்மன்.                 

அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமான பராசக்தி பல்வேறு  பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டிருக்கிறாள். அவள் பண்ணாரி காட்டில் மாரியம்மன் என்ற பெயருடன் சக்தி வாய்ந்த தெய்வமாக  விளங்குகிறாள். காட்டுக்குள்ளேயே இவளுக்கு விழா நடக்கிறது.  நவராத்திரியையொட்டி இவளை தரிசித்து வருவோம்.

#தல_வரலாறு...

பண்ணாரியில் ஓடிய தோரணப்பள்ளம் என்ற காட்டாற்றங் கரையில் மக்கள் மாடு மேய்த்து வாழ்ந்தனர். ஒரு காராம்பசு ஒன்று தன் கன்றுக்கு கூட பால் கொடுக்காமல் காட்டுக்குள் அடிக்கடி ஓடி ஒளிந்தது. மடுநிறைய பாலுடன் செல்லும் பசு, திரும்பும் போது காலியான மடுவுடன் வரும். மாடு மேய்ப்பவர் ஒருநாள் பசுவை பின்தொடர்ந்து சென்று கவனித்தார். அந்தப்பசு, ஒரு வேங்கை மரத்தடியில்உள்ள புற்றில், பாலைப் பொழிவதைப் பார்த்தார். மறுநாள் கிராம மக்களிடம்  விபரத்தைக் கூறினார். மக்கள், அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது, ஒரு அம்மன் திருவுருவம் இருப்பதை பார்த்தனர். பசு அந்த அம்மனுக்கே அபிஷேகம் செய்ததாகக் கருதினர். அப்போது, ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி, ""நான் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து வருகிறேன் (இவ்வூர் கேரளாவில் உள்ளது). பொதிமாடுகளை ஒட்டிக் கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இந்த இயற்கை சூழலில் தான் தங்க விரும்புகிறேன். என்னை "பண்ணாரி மாரியம்மன்' எனப் பெயரிட்டு வணங்கி வாருங்கள்,'' என்றார்.

அந்த அருள்வாக்கின்படி அந்த இடத்தில் புற்களைக் கொண்டு குடில் அமைத்து அம்பாளை பிரதிஷ்டை செய்தனர். காலப்போக்கில், விமானத் துடன் சிறிய கோயில் கட்டப்பட்டது. அதில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் தற்போது அம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

#தல_சிறப்பு..

இந்த அம்பாள் கால்நடை வளர்ப்போரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கால் நடைகள் கொண்டு தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விருத்தியடைய அம்பாளை வணங்குகின்றனர். இங்கு அம்மனுக்கு உயிர் பலி ஏதும் இல்லாமல், சைவ படையல் மட்டுமே செய்யப்படுகிறது.  திருநீறுக்கு பதிலாக காட்டிலிருந்து வெட்டி எடுக்கப் படும் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால், திருட்டு மற்றும் தீங்கு போன்ற அபாய செயல்கள் நடக்காது என்பதும், கால் நடைகளுக்கு நோய் வராது என்பதும் நம்பிக்கை. மாறாக, மங்களகரமான செயல்கள் வீடுகளில் நடப்பதுடன், அம்மன் தங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பாள் என்கின்றனர் பக்தர்கள். ஆதரவற்ற சிறுவர்களை பராமரிப்பதற்கான கருணை இல்லம் ஒன்றும் கோயில் சார்பாக நடத்தப்படுகிறது.

#கோயில்_அமைப்பு..

தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் பண்ணாரி மாரியம்மனின் கைகளில் கத்தி, கபாலம், டமாரம், கலசம் ஆகியவை உள்ளது. சாந்த நிலையில் முகம் இருக்கிறது. பிரகாரத்தில் மாதேசுவர திருமூர்த்தி, தெப்பக்கிணறு அருகில் சருகு மாரியம்மன், வண்டி முனியப்ப சுவாமி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

#குண்டம்_திருவிழா..

இங்கு நடக்கும் குண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்தது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இந்த திருவிழா நடந்து வருகிறது. குண்டத்துக்கு தேவையான மரங்கள் குறிப்பிட்ட அளவு காடுகளில் வெட்டப்படுவது வழக்கம். இந்த சடங்கிற்கு "கரும்பு வெட்டுதல்' என்று பெயர். தற்போது பங்குனி மாதம் நடக்கும் குண்டம் திருவிழா நடக்கிறது. இந்த குண்டத்தில் பருத்தி, மிளகாய், தானியங்கள், சூரைத்தேங்காய்களை போடுகின்றனர். இந்த குண்டத்தில் பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்குவது சிறப்பு.

#கண்வியாதிக்கு_தீர்த்தம்...

காட்டு இலாகா  அதிகாரியாக பணியாற்றிய மற்றொரு ஆங்கிலேயர் , துப்பாக்கியால் பன்னாரி அம்மன் கோயில் சுவற்றில் குறிவைத்துச் சுட்டார். இதன்பிறகு அவரது கண்கள் ஒளி இழந்தன. தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒளி பெற்றார். இதனால் தற்போதும் கண்வியாதி  உள்ளவர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது கண் வியாதியை குணப்படுத்துவதாக  நம்பப்படுகிறது.திருவிழா காலத்தில் தென்படாத மிருகங்கள்: பண்ணாரி அம்மன் கோயில் சத்தியமங்கலம் காட்டில் உள்ளது. இங்கு யானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள், செந்நாய்கள், கரடிகள் உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன. கோயில் தெப்பக்கிணறு அருகில் காட்டு யானைகள் தண்ணீர் குடிக்க தொட்டிகளும் கட்டப் பட்டுள்ளன. திருவிழா காலங்களில் இந்த மிருகங்கள் பக்தர்கள் கண்களில் தென்படுவதில்லை.

#பூச்சாற்று_சிறப்பு...

பங்குனி மாதம் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூச்சாற்று நடக்கிறது. மறுநாள் அம்மன் சப்பரத்தில்  சுற்றுவட்டாரப்பகுதிக்கு வீதி உலா வருகிறாள். சோளகர் என்ற மலைவாசிகள் வாத்தியங்ளும், அருந்ததி இனத்தார் தாரை, தப்பட்டை வாத்தியங்களும் முழங்க சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பூச்சாற்று விழாவின் ஒன்பதாம் நாள் இரவில் அக்கினி கம்பம் அமைக்கப்பட்டு கம்பத்தருகில் மேளதாளத்துடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 15ம் நாள் திருவிழாவில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து அக்கினிக் கரகம் ஏந்தியும், வேல், சூலம் தாங்கியும் மேளதாளங்கள் முழங்க அம்மனை வழிபடுகின்றனர்.

#திருவிழா..

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது.

திறக்கும் நேரம்:
காலை 5.30 முதல் இரவு 9 மணி.

#இருப்பிடம்..
கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து மைசூர் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரத்தில் பண்ணாரியை அடையலாம். ஈரோட்டில் இருந்தும் இங்கு செல்லலாம்...
பானு என்றால் சூரியன் என்று அர்த்தம். சூரியனுக்கு உகந்த நாள் ஞாயிற்றுக் கிழமை. சப்தமி திதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக வரும் நாள் ‘பானு சப்தமி’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது. இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது சூரிய கிரகணம் முடிந்த பிறகு செய்யும் தர்ப்பணத்துக்கு ஒப்பானது.

இந்த தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நதி தீரத்தில் நீராடி சூரிய வழிபாடு செய்தல், தானம் செய்தல் ஆகியவை பல்வேறு நலன்களைக் கொண்டுவரும். மற்ற தினங்களில் செய்யும் தான தர்மங்களை விடவும்.
இந்த தினத்தில் செய்யும் தானத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும்.

சூரிய வழிபாடு:இந்த தினத்தில் சூரிய வழிபாடு செய்தால் பல்வேறு தோஷங்களும் கழியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்று விரதமிருந்து சூரியனை வழிபட்டால் நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுபவர்களுக்கு நல்லது நடக்கும். இந்த தினத்தில் காலையில் எழுந்து நதியில் நீராடி நித்திய பூஜை மற்றும் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல வந்துசேரும்.

கடன் தொல்லையை நீக்கும் மைத்ரேய முகூர்த்தம்

சிலரின் கை மண்ணை எடுத்தால் கூட பொன்னாக மாறிவிடும்’ என்று கூறுவார்கள். அப்படி விரைவாக முன்னேறுபவர்களை அதிர்ஷ்டம் உடையவர்கள் என்று கூறுவார்கள். ஆனால், அந்த அதிர்ஷ்டம் நம் அனைவருக்குமே இருக்கின்றது என்பது நமக்கு தெரியாது. நாம் தொடங்கும் காரியமானது எந்த நேரத்தில் ஆரம்பிக்கப்படுகிறது என்பதை வைத்து தான், அந்தச் செயலில் வெற்றி அமைகின்றது. இது சிலருக்கு புரிவதில்லை. இப்படி நாம் வாங்கும் கடனை எப்படி சுலபமாக திருப்பி தரலாம் என்ற சூட்சுமத்தை தெரியாதவர்களும் உள்ளார்கள். அவர்களுக்கான தீர்வு தான் இந்த மைத்ரேய முகூர்த்தம்.

இந்த மைத்ரேய நேரத்தில் மைய பாகத்தை நாம் உபயோகப்படுத்திக் கொண்டால் மிகவும் நன்மை தரும். விரைவில் கடல் இல்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.

வங்கிக் கடனை திருப்பித் தரவும் இந்த முகூர்த்தம் பயன்படும்.

பானு சப்தமி

பானு ஸப்தமி 12-07-2020 அன்று.
இது ஸூர்ய கிரஹணத்திற்கு சமமான நாள்.
காலை 8-30மணி முதல் 10-30 மணி வரை 1008 காயத்ரி ஜபம் ஸங்கல்பம் செய்து கொண்டு செய்யலாம்.

மேலும்,
108 முறை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வதும்,
ஆதித்யஹ்ருதயம், சூர்ய காயத்ரி, மற்றும் தீக்ஷை பெற்ற மந்திரங்கள் ஜபம் செய்வதும் அதிக அளவில் நன்மை தரும்.
****  சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது  .*****

முக்கிய தீர்ப்புகளின் சிறப்பு அம்சங்கள்…

பசு வதை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாத பிரதிவாதங்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை:
மேற்படி வழக்கில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர்களான சோலி சபர்ஜி (கட்டணம் 20 லட்சம்) ஸ்ரீ கபில்சிபில் (கட்டணம் 22 லட்சம்) ஸ்ரீ மகேஷ் சத்மாலினி (கட்டணம் 35 லட்சம்) ஆகியோர் பசு மாமிச வியாபாரிகளின் சார்பாக வாதிட்டனர். ஸ்ரீ ராஜீ பாய் அவர்கள் இப்பசு வதையை எதிர்த்து வாதிட வழக்கறிஞரை நியமிக்க தன்னிடம் பணவசதி இல்லையென திரு.ராஜூ பாய் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்ததின் பெயரில் நீதிமன்றமே உங்களுக்கு சட்ட உதவி கொடுத்தால் போதுமா எனக்கேட்க அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியே, இருப்பினும் வழக்கை தானே வாதிட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். பின்பு நீதிமன்றம் ஸ்ரீ மெஸ்கிரி என்ற வழக்கறிஞரை இந்த வழக்கில் மனுதாரரான திரு.ராஜூ பாய்க்கு சட்ட உதவி செய்திட நியமித்து வழக்கு தொடரப்பட்டது.
பசு மாமிச வியாபாரிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருவன:

1. பசுவை பாதுகாப்பதனால் எந்த உபயோகமும் இல்லை. பசு மாமிசத்தை ஏற்றுமதி செய்வதால் இந்திய நாட்டின் பொருளாதார நிலை வலுவடையும்.

2. பசுக்களுக்கு போதுமான வைக்கோல் மற்றும் புற்கள் போன்றவை போதாமல் அவை பசியில் இறப்பதை விட அவற்றை கொல்வதே நல்லது.
3. நமது நாட்டில் மனிதர்களுக்கே இடமில்லை, இதில் என்ன வசதி செய்து தர முடியும்.

4. நமது நாட்டிற்கு வெகுவான அயல் நாட்டு வருமானமானது பசு மாமிச ஏற்றுமதியிலேயே கிடைக்கும்.

5. மாமிசம் சாப்பிடுவது மதரீதியான உரிமை ஆகும்.

இவ்வாறாக பசு மாமிச வியாபாரிகளின் வாதம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் வாதிடப்பட்டது.

ராஜு பாயின் பதில் வாதம்:-

நல்ல ஆரோக்கியதுடன் இருக்கும் பசுவானது சுமார் 3 முதல் 3.5 குவிண்டால் எடை இருக்கும். அதை கொன்றால் சுமார் 70 கிலோ எடை மாமிசம் கிடைக்கும்.  இதை கிலோ ரூ.50 என ஏற்றுமதி செய்வதால் கிடைக்கக்கூடிய தொகை ரூ.3500/-. பசுவின் இரத்தத்திற்கு கிடைக்கக்கூடிய தொகைரூ. 1500/- முதல் 2000/-. மேலும் 30 முதல் 35 கிலோ அதன் எலும்புகளுக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.1000/- முதல் 1200/- ஆக மொத்தத்தில் ஒரு பசுவை வதம் செய்வதனால் ஒரு நாட்டிற்கு அல்லது வியாபாரிக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.7000/-.

ஒரு ஆரோக்கியமான பசுவானது ஒரு நாளைக்கு 10 கிலோ சாணம், 3 கிலோ கோமியம் தரக்கூடியதாகும். 1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரிக்கலாம். இதனை நாம் இயற்கை (சேந்திரியா) உரம் என்போம். ஸ்ரீ ராஜூ பாய் அவர்கள் இவ்வாறு வாதிட்டு கொண்டிருக்கும் போது நீதிபதிகள் இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்கள்.

அவர் இதை நான் நிரூபிக்க வாய்ப்பு அளிக்கும் படி கேட்டுக்கொண்டதால் நீதிமன்றம் அனுமதி அளித்ததின்பேரில் திரு.ராஜூ பாய் அவர்கள் 1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரித்து நீதிமன்றத்திற்கு அளித்தார். இதனை IRC  விஞ்ஞானிகள் பரிசீலித்து மிக உயர்ரக உரமாக அறிவித்தனர். இந்த உரமானது பூமிக்கு தேவைப்படுகின்ற மிகவும் சூச்சமமான 18 நன்மைகளை தரக்கூடியது என்றும் தெரிவித்தனர். இந்த நன்மைகளானவை பயிர் வளர்ப்புக்கு தேவையான மாங்கனீஸ், பாஸ்பேட், பொட்டாசியம், கால்சியம், அயர்ன், சல்பேட், சிலிகான் போன்றவை உள்ளதாகவும் தெரிவித்தனர். சாதாரண ரசாயன உரங்களில் சுமார் 3 ரசாயனங்கள் இருக்கும் என்றும் இதனால் சாணம் மூலம் தயாராகும் இயற்கை உரத்தில் சாதாரண ரசாயன உரத்தை விட 10 மடங்கு வலிமையுள்ள மதிப்புக்குரியதாகும் என்று திரு. ராஜூ பாய் நிரூபித்து வாதிட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

திரு. ராஜூ பாய் அவர்கள் நீதிமன்றத்திற்கு ஆட்ச்சேயபனை இல்லையெனில் தங்கள் ஊருக்கு வந்து தானும் தன் குடும்பத்தாரும் பசு சாணம் மற்றும் கோமியம் கொண்டு எவ்வாறு உயர்ந்த ரக உரத்தை தயாரிக்கிறோம் என்று பார்க்கலாம் என்றும் அழைத்தார். மேலும் அவருடைய இந்த வாதத்தில் இந்த உரத்தில் 1 கிலோ உரமானது உலக சந்தையில் குறைந்தது ரூ.6/-என்றும் நினைத்தால் ஒரு பசுவானது ஒரு நாளைக்கு ரூ.1800/-லிருந்து ரூ.2000/-வரை வருமானத்தை ஈட்டி தருமென்றும் (33 கிலோ சாணத்திலிருந்து 330 கிலோ உரம் தயாரித்து அதை ரூ.6/-க்கு மதிப்பிட்டால் (330 x 6) மேலும் மேற்படி பசுக்களுக்கு ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறை போன்றவை இல்லை என்பதால் வருடத்திற்க்கு அதாவது 365 நாட்களுமே இதனால் கிடைக்கக்கூடிய வருமானமானது 1800 X 365 = ரூ. 6,57,000/. இந்த வருமானங்கள் அனைத்தும் மாட்டு சாணத்தால் கிடைக்கக்கூடியவை.

திரு. ராஜூ பாய் அவர்கள் அளித்த இந்த கணக்கின் படி சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் மாட்டு தொழுவத்தில் லக்ஷ்மி வாசம் செய்வதாக கூறினார்கள் என்று சொன்னால் மேற்படி ஆதாயத்தை வைத்து தான்.  ஆனால் இதனை தொடர்ந்து கேலி செய்பவர்கள் பெரிய படிப்புகளை படித்தவர்களும், பல ஆண்டுகளாக பசு தொழுவத்தில் லக்ஷ்மி வசிப்பதாக கூறுவதை முட்டாள் தனம் என்றும் நாகரீகமற்ற பேச்சு என்றும் கூறி கொண்டு இருந்தவர்களும் இதை கண்டு ஆச்சர்யப்பட்டனர்.

பசு கோமியத்தின் மீது திரு. ராஜூ பாய் செய்த வாதம்:-

ஒரு பசுவானது ஒரு நாளைக்கு 2 முதல் 2.25 லிட்டர் கோமியம் வழங்கும் என்றும் இவை பலவிதமான நோய்களான வாதம், மதுமோகம், மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் என சுமார் 48 நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது என உறுதியாகி இதன் மூலம் பல ஆயுர்வேத மருந்துகள் தயார் செய்யபடுகிறது.

ஒரு லிட்டர் பசு கோமியமானது இந்திய சந்தையில் ரூ.500/-ஆகும். உலக சந்தையில் இதன் மதிப்பு மேலும் அதிகமாகும். இது அமெரிக்க நாட்டில் பாட்டேர்ன் (pattern) செய்யப்பட்டுள்ளது. பசு கோமியத்திற்கு 3 பாட்டேர்ன்கள் உள்ளது. அமெரிக்கா இந்தியாவிலிருந்து பசு கோமியத்தை இறக்குமதி செய்து கொண்டு அவர்கள் நாட்டில் கேன்சர் மற்றும் பல நோய்களுக்கு மருந்து தயாரித்து வருகிறது.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் கோமியத்தின் தற்போதைய விலையானது ரூ.1200 முதல் ரூ.1300/-வரையாகும். இந்த கணக்கின் படி இந்த கோமியத்தின் ஒரு நாள் வருமானமானது ரூ.3000/- அப்படியானால் ஒரு ஆண்டுக்கு சுமார் (3000x365) = ரூ.10,95,000/- எனவே ஒரு பசு தனது ஆயுள் காலத்தில் தனது கோமியத்தின் மூலம் தரக்கூடிய வருமானமானது (3000*365*20) = ரூ.2,19,00,000/-. இந்த பசு கோமியத்தின் மூலமாக மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை நாம் சமையலறை, வாகனங்கள், கார்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 இந்த வாதத்தை நீதிபதிகளின் அமர்வில் ஒரு நீதிபதி நம்பமறுத்தார். உடனே திரு. ராஜூ பாய் அவர்கள் நீங்கள் அனுமதித்தால் உங்கள் காருக்கு நான் மீத்தேன் வாயுவை நிரப்புகிறேன். பின்பு அதை நீங்கள் சோதித்து கொள்ளலாம் என்று கூறினார். அதற்கு நீதிபதி ஒப்புக் கொண்டு தனது காருக்கு 3 மாதங்கள் மீத்தேன் வாயுவை செலுத்தி நடத்தினார். அப்போது 1 கிலோ மீட்டருக்கு ரூ. 50/- காசு முதல் ரூ.60/-காசு வரை செலவானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதற்கு முன் இவர் ரூ.400/-டீசலுக்கு செலவு செய்தார். மேலும் டீசல் போல இதில் புகையோ , இரைச்சலோ, சுற்றுப்புற சூழல் பாதிப்போ, இதில் இல்லை. எனவே நீதிபதி முழு திருப்தியடைந்து ராஜூ பாய் அவர்களின் வாதத்தை ஒப்புக்கொண்டார்.

ஒரு நாளைக்கு 10 கிலோ பசு சாணத்தால் எவ்வளவு மீத்தேன் தயாரிக்க முடியுமென்றும் அது 20 வருடத்திற்கு இந்த நாட்டிற்கு எவ்வளவு வருமானத்தை தருமென்றும் கணக்கிட்டு சமர்ப்பித்தார். இதன்படி நம் நாட்டிலுள்ள 17 கோடி பசுகளால் சுமார் 1,32,000/-கோடி பணம் ஈட்ட முடியும் என்று நிரூபித்தார். நமது பயணம் முழுவதும் மீத்தேன் வாயுவையே ஆதாரப்பட்டிருந்தால் நாம் அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல், டீசல் வாயுவை இறக்குமதி செய்ய தேவையில்லை.

இதேபோல் வெளிநாட்டிற்கு நமது செல்வத்தை செலவு செய்ய தேவையில்லை. உலக அளவில் நம் ரூபாயின் மதிப்பு கூடும், இது பசுவின் மூலமே சாத்தியமாகும். இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்து திரு. ராஜூ பாய் சமர்ப்பித்த கணக்கில் அனைத்தையும் துல்லியமாக பரிசீலித்து அவரின் வாதத்தில் உள்ள உண்மையை அறிந்து கொண்டு பசு பாதுகாப்பின் மூலமாக நம் இந்திய நாட்டிற்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி கிடைக்குமென்று உறுதிசெய்தது.

இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்மானித்தவுடன் பசு வதை செய்பவர்கள் சார்பாக பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மதரீதியான உரிமை என்று வாதிட்டனர். இதற்கு பதிலளித்த திரு. ராஜூபாய் அவர்கள் அப்படியானால் எத்தனை இஸ்லாம் மன்னர்கள் இந்த மதரீதியான உரிமையை பயன் படுத்த சொன்னார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவ்வாறு சொல்லக்கூடிய இஸ்லாம் நூல்கள் எவை என்பதை கூறும்படி கேள்வி எழுப்பி இந்த கேள்விகளை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென்றும் கேட்டு கொண்டார்.

 அப்பொழுது உச்சநீதிமன்றம் இந்த அம்சங்களை பரிசீலிப்பதற்காக ஒரு விசாரணை குழுவை நியமித்தனர். இந்த கமிட்டியானது அனைத்து அம்சங்களையும் மிகவும் துல்லியமாக பரிசீலித்து இஸ்லாம் மன்னர்கள் மற்றும் நாட்டை ஆண்ட இஸ்லாமியர்கள், இஸ்லாம் மத நூல்கள், பசு மாமிசத்தை சாப்பிடுவது பற்றி என்ன கூறுகிறது என்பது பற்றியும் இப்படி ஒரு உரிமை உள்ளதா, இல்லையா என்பதை பற்றியும் கண்டு பிடிக்கவும் இந்த கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த கமிட்டி வரலாற்று ரீதியான ஆவணங்களையும் மத நூல்களையும் பரிசீலித்து கொடுத்த முடிவுரையாவது:
நாட்டை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் யாரும் பசு வதையை ஆதரிக்க வில்லை என்றும்,  ஒரு சில இஸ்லாமிய மன்னர்கள் பசு வதைக்கு எதிராக சட்டங்களை இயற்றினார்கள் என்றும் அவர்களில் முதன்மையானவர் பாபர் என்றும் அவர் தன்னுடைய பாபர் நாமாவில் பசு வதை தவறு என்றும் அத்தகைய குற்றத்தை இந்த நாட்டில் தான் இறந்த பிறகும் நடக்கக்கூடாது என்றும், தான் ஏற்படுத்திய பசு வதை தடுப்பு சட்டம் நடைபெறவேண்டும் என்றும் எழுதி  வைத்து, அவருடைய சந்ததி அனைவரும் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும் கூறி  உள்ளார் மற்றும் மன்னர் ஹூமாயூனும் அதே சட்டத்தை நிலைநாட்டினார்கள்.

அதன் பிறகு வந்த ஹிந்து சம்பிரதாயங்களை கொடூரமான முறையில் அடக்கி உடைக்கி அனைத்து விட்ட ஹாவ்ரங்க சீப் அவர்கள் கூட பசு வதையை எதிர்த்து அவரது முன்னோர்கள் ஏற்படுத்திய சட்டத்தை வழி நடத்தினார்.

அதே போல் தென்னிந்தியாவை ஆண்ட திப்பு சுல்தான் அவர்களின் தந்தை ஹைதரலி அவர்கள் பசுவதை செய்வோரை கண்டால் அவர்கள் தலையை துண்டிக்கும் படி கூறியதுடன் அத்தகைய செயலில் ஈடுபட்ட பலரை இந்த தண்டனையின் மூலம் பலியிட்டார். இதன் பின்பு அவரது மகன் திப்பு சுல்தான் மன்னரான பின்பு இந்த குற்றத்தின் தண்டனையான தலை துண்டிப்பை மாற்றி கைகளை துண்டிக்கும் படி இயற்றினார்.

 இவ்வாறு வரலாற்று ஆவணங்களை பரிசீலித்து விசாரணை கமிட்டி அளித்த அறிக்கை திரு. ராஜூ பாய் அவர்கள் வாதத்திற்க்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. அவர் தனது வாதத்தில் பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மத உரிமை என பசு வதைக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிடுபவர்கள் கூறுவது உண்மையென்றால் இஸ்லாம் மன்னர்களான  இந்த நாட்டை ஆண்ட பாபர், ஹோமையுன், மற்றும் ஹவுரங்கசீப் அவர்கள் கூட பசு வதை தடுப்புச் சட்டங்களை ஏன் அமல்படுத்தினர் என்று கேள்வியெழுப்பினார்.

 இதனை தொடர்ந்து திரு. ராஜூ பாய் அவர்கள் தனது இறுதி வாதத்தை முன் வைத்து உச்சநீதிமன்றம் அனுமதியோடு புனிதகுரான், ஹதீத், மற்ற இஸ்லாமிய நூல்கள், அனைத்தும் பசு வதை பற்றி என்ன கூறியுள்ளன என்று பரிசீலிக்க வேண்டுமென கூறினார். எந்த இஸ்லாமிய நூல்களும் பசு வதையை ஆதரிக்கவில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் ஹத்திதுகள் பசுக்களை காப்பாற்றினால் அவை உங்களை காப்பாற்றும் என்றும் கூறியுள்ளனர், என தெளிவு படுத்தினர்.

 மஹத் அவர்கள் பசு என்பது ஒரு பரிதாபத்துக்குரிய பிராணி என்றும் அதன்மீது அனைவரும் பரிதாப உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் வாதிட்டார். திரு.முஹம்மத் அவர்களுடைய புனித வசனங்கள் பசுவை வதை செய்தவர்களுக்கு நரகத்தில் கூட இடமில்லை என்று கூறியுள்ளார். இவற்றையெல்லாம் குறிப்பிட்ட திரு. ராஜூ பாய் அவர்கள் தனது வாதத்தை முடிக்கும் நோக்கில் புனித குரானும், மொஹமத் வசனங்களும், ஹத்தித்குறிப்புகளும், பசு வதையை எதிர்க்கும் போது, பசு வதை எவ்வாறு இஸ்லாம் மத உரிமையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இங்கு பசு வதையை ஆதரித்து அது இஸ்லாம் மத உரிமை என்று வாதிடுபவர்கள் தான் குறிப்பிட்ட புனித நூல்கள் எதிலும் அவ்வாறு இல்லாத நிலையில் இவர்கள் எவ்வாறு கூறமுடியும் என்றும், இவர்கள் கூறுவதற்கு ஆதரவாக மெக்கா, மற்றும் மதீனாக்களில் வேறு ஏதேனும் நூல்களில் அவ்வாறு பசு வதை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளதா என்று காட்டும் படி கேட்டார். அவ்வாறு எந்த நூலிலும் இல்லையென்றும், இஸ்லாம் மத பெரியவர்களுக்கு ஏன் தெரியவில்லையென்றும் எனக்கு புரியவில்லையென்றும், வாதத்தை முடித்துக் கொண்டார்.

பசு வதைக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற அமர்வு நீங்கள் வெறும் வாதங்கள் செய்தால் போதாது உங்கள் இஸ்லாம் மத நூல்களில் ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்று கூறும்படி கேட்க அவர்களால் எந்த நூல் குறிப்புகளையும் தர இயலவில்லை. உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வு எந்த வழக்கின் மீது 26-10-2005-ல் தீர்ப்பினை வெளியிட்டது.
இந்த தீர்ப்பானது உச்சநீதிமன்றம் வெப்சைட்டில் காணலாம். இந்த 66 பக்கங்கள் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாக கூறப்படுகிறது.

மொழி பெயர்ப்பு
வினோபா
கந்த சஷ்டி கவசம் பற்றி அறியா பதர் ஒருவர், கொஞ்சமும் சிந்தனையோ தெளிவோ இல்லா ஒருவன், வெள்ளையாய் இருப்பதெல்லாம் கள் என நினைக்கும் மடையன் ஒருவன் என்னவோ சொல்லிவிட்டான் என ஏக சர்ச்சைகள்

இந்துக்களில் யாரும் அதுபற்றி விளக்கம் அளிக்காததாலும், வெறும் ஆத்திர வார்த்தை மட்டும் பேசிகொண்டிருப்பதாலும் நாம் சில வரிகளை சொல்ல வேண்டியது அவசியமாயிற்று

நாம் அந்த அற்பனுக்கு சவால்விடவில்லை மாறாக தமிழரின் கடவுளான முருகனே அருளிய அந்த உடலின் நோயகற்றும் கந்த சஷ்டி கவசம் பற்றியும் அதன் வரலாறு பற்றியும், நம்பிக்கையோடு சொல்வோருக்கு அது கொடுக்கும் பலன் பற்றியும் சொல்கின்றோம்

கந்த சஷ்டி கவசம் எப்படி உருவாயிற்று?

அவர் பெயர் பால தேவராயர், தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்கா கொடும் நோய், மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர்

கடைசியாக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு சாகலாம் என முடிவெடுத்து ஆலயம் சென்றவருக்கு முருகபெருமான் காட்சிஅளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும் அது அவர் நோயினை மட்டுமல்ல உலக நோயினை எல்லாம் நீக்கும் பாடல் என்றும், யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்கள் நோயும் அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என சொல்கின்றான்

ஆம் அந்த கோவிலில் அந்நேரம் பாலதேவராயர் மட்டுமல்ல, இன்னும் ஏக்பட்ட நோயாளிகள் இருந்தனர்

தேவராயருக்கு வயிற்றில் வலி, மற்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய்

தலையில் கட்டி, கன்னத்தில் புற்று, கழுத்தில் கழலை, நெஞ்சு கூடும் ஒரு எலும்புருக்கி நோய், வயிற்றுவலி, மூலம், தொடையில் புண் , கணுக்கால் வலி, என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய்

இது போல பேய் , பில்லி சூன்யம் என பாதிக்கபட்டு வந்திருக்கும் கூட்டம் ஒன்று, சித்தபிரம்மை பிடித்த கூட்டம் ஒன்று

வறுமை கூடிய கூட்டமொன்று, இன்னும் நோய் பிணி வறுமையில் வாடி நிற்கும் பெரும் கூட்டமொன்ன்று

அந்த மொத்த மக்களின் குரலாக முருகனிடம் எல்லா பிணிகளுக்கும், நோய்க்கும் பேய்க்குமாக அந்த மனிதன் முருகன் சொன்னபடி பொதுநலத்தோடு பாடினான் அந்த மனிதன், அவனுக்கு வந்தது வயிற்றுவலி ஆனால் அவன் எல்லாருக்கும் பாடினான், எல்லோரும் பிணிதீர பாடினான்.

அவர்கள் எல்லோரையும் கவனிக்கும் அந்த நல்லவரான பாலதேவராயர், எல்லா பக்தரையும் முருகன் எக்காலமும் காக்கும்படி பாடினான்

அழுகையும் , கதறலும் மிக்க அந்த கூட்டத்தின் சார்பாக பாட வந்தார் தேவராயன்.

அந்த சன்முகன் சந்நிதியில் இருந்து பாட தொடங்குகின்றார் பால தேவராயர், அவர் பாடி முடிக்கவும் அவரின் கொடும்நோய் அகன்றது, அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்த பாடலை தொகுத்து முடிக்கின்றார். அதுதான் கந்த சஷ்டி கவசம்

சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு

நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளபட்டது

அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதை பாடுவார்களாம், ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்தது குறிப்பில் இருக்கின்றது

ஆழந்த அர்தமிக்க பாடல் அது, ஒவ்வொரு வரியாக பாருங்கள் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள ஒப்புவிக்கும் பாடல் அது

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பே
சிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி காவல்தேடும் பாடல் அது

இதில் அறிவியலும் ஒளிந்திருக்கின்றது

ஆம் ஆழ்ந்த பக்தி மனநிலையில் ஒவ்வொரு உறுப்பாக சொல்லும்பொழுது அதில் கவனத்தை வைத்தால் உடல் தானாக அதை சரி செய்கின்றது என்கின்றது அறிவியல்

உளவியல் கொடுக்கும் உடல்நலம் இது, நிரூபிக்கபட்ட ஒன்று. இதைத்தான் கந்த சஷ்டி கவசமும் சொல்கின்றது

உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து முருகனிடம் நலம்பெற சொல்லும் மருத்துவ தியான பாடல் இது

தொடரும் பாடலில் அர்த்தமில்லா சில வரிகள் வருவதாக தோன்றும், உண்மையில் அந்த வார்த்தைகள் அர்த்ததிற்கு அல்ல மாறாக சில அதிர்வுகளை கொடுப்பதற்காக‌

இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது.

அக்கால புலவர்கள் ஞானமிக்கவர்கள், சித்தர்கள் சொன்ன நல்ல அதிர்வு, அதாவது தெய்வீக மற்றும் நேர்மறை சிந்தனையினை கொடுக்கும் சமஸ்கிருத வார்த்தைகளுக்கு நிகரான‌ சரியான தமிழ் வார்த்தைகளை வைத்து பாடியிருப்பார்கள்

தேவராயரும் அதை மிக சரியாக செய்து நல் அதிர்வுகளை கொடுக்கும் வார்த்தைகளை இப்பாடலில் புகுத்தியிருக்கின்றார்

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் , சிலருக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுப்பார்கள், அந்த அதிர்வினை சில வார்த்தைகளை முறையாக உச்சரித்தாலே உடல் பெறும்

ஓம் எனும் வார்த்தையினை ஓங்காரமாக சில நாழிகை இழுத்து ம்ம்ம்ம்ம்ம் என்பதை அழுத்தி சில நாழிகை இழுத்தாலே சில அதிர்வுகளை உணரமுடியும் என்பார்கள்

ஆலய வழிபாட்டின் பொழுது வெண்கல மணி கொடுக்கும் அதிர்வும் அத்தகையதே

அப்படியான வார்த்தைகள் பல கந்த சஷ்டி கவசத்தில் உண்டு, இதனால்தான் முருகன் ஆலயங்களில் அதை படிக்க வேண்டும் என்றார்கள்

குகைகளில் முருகன் ஆலயம் வைப்பதும் ஒரு அறிவியல், பொதுவாக கற்கள் சூழ்ந்த இடம் நல்ல சூழலை கொடுக்கும் நோய்கள் நெருங்கா, செங்கல் இருந்தும் மன்னர்கள் கற்களால் ஆலயம் கட்டிய தத்துவம் அதுவேதான்

முருகன் ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள்

முருகனை வேண்டினால் உடல் நலம் பெறலாம் என்பதை எல்லா ஞானிகளும் மகான்களும் முருகன் அடியார்களும் சொல்லி வைத்தார்கள்

வரலாற்றில் அது உண்மை, முருகனை தொழுதோர் பலர் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர்களே கண்முன்னே சாட்சிகள் ஏராளம்

நலம் பெற்றோர் ஏராளம், ஆசியாவினையே புரட்டி போட்ட சுனாமி திருச்செந்தூர் பக்கம் வாலை சுருட்டி இருந்தது என்பதும் கண்டது

இதைத்தான் பாடலாக சொன்னார்கள்

"முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே.."

இனி மனிதர் தங்களை தாங்களே காத்துகொள்ள வேண்டும் எனும் சூழல் வந்துவிட்ட நேரம், தெய்வ அனுக்கிரகம் ஒன்றே வழி. மருத்துவத்தால் கைவிடபட்ட நோயாளிகள் ஏராளம்

கொரானாவுக்கு கூட மருந்தில்லா காலமது, அவனவன் ஓடி ஓளியவேண்டியிருக்கின்றது, இந்நிலையில் அன்றே முருகபெருமான் சொன்ன பாடலை பழிப்பது சரியல்ல‌

அந்த நபர் சொன்ன விமர்சனத்தை நாமும் கேட்டோம், கன்னத்துக்கு எதற்கு வேல் என்கின்றான் மடையன்

கன்னபுற்று என்றால் என்ன அவனுக்கு தெரியுமா? அவன் குடும்பத்தில் யாராவது அப்படி அவன் அழுது அவர் பார்த்ததுண்டா?

கழுத்து கழலை நோய் தெரியுமா? கழுத்தில் வரும் ஏக சிக்கல் தெரியுமா? முழு மருந்தில்லா நோய்கள் அவை

இன்னும் கொஞ்சமும் தமிழ் அறிவே இல்லாமல், சேரிளம் முலைமார் என்பதற்ற்கு பெண்ணின் மார்பு என கொச்சைபடுத்துகின்றான் மடையன்

முலை என்றால் தொடக்கம் என பொருள, சேர் இளம் முலை என்றால் நெஞ்சுகூடு என பொருள், அது உயிர்நாடி, அதைத்தான் காக்க சொல்கின்றான் பாலதேவராயன் இது எப்படி தவறாகும்

நாணாங்கயிறு என்றால் இடுப்பில் கட்டும் கயிறு, உடலின் அமைப்பு அறிந்து குடலின் தன்மை அறிந்து அப்படி ஒரு கயிறை கட்டுதல் தமிழர் மரபு

அது குடலிரக்கம் எனும் கொடும் நோயினை காக்கும், உடலில் தொப்பை ஏறும் பொழுது அலாரம் அடிக்கும், அந்த கயிற்றின் இறுக்கம் வயிற்றுக்கு பல நன்மைகளை கொடுத்ததால் அவசியம் என்றார்கள்

குழந்தைக்கு வெள்ளியிலும் தங்கத்திலும் கொடி போடுதல் அந்த மருத்துவமே

பருவ பெண்கணை பாவடை அணிய சொன்ன தத்துவம் அதுவே அடிவயிற்றில் கொடுக்கபடும் மெல்ல்லிய இறுக்கம் கர்ப்பபைக்கும் குடலுக்கும் நல்லது

அக்கயிறு இருந்த காலமெல்லாம் குடலிரக்கம் இல்லை, குடல் நோய் இல்லை, சிசேரியன் போன்ற இம்சைகள் இல்லை

இடுப்பு கயிறு என்பது மிகபெரும் பாதுகாப்பு, அதைத்தான் பாலதேவராயன் குறிப்பிட்டு சொன்னார்

இன்னும் ஆண்குறி காக்க சொல்வது தவறாம்

சரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் வந்த மூல பிரதியான யூத தோரா சொல்வதென்ன, பைபிளின் பழைய ஏற்பாடு சொல்வதென்ன?

விருத்தசேதனம் எனும் நுனிதோல் வெட்டுதல், ஏன்? அப்படி வெட்டினால் உடலறவில் மிக பெரும் விருப்பம் வந்து வம்சம் வளருமாம்

ஏன் கடவுள் நினைத்தால் செய்யமுடியாதா? ஏன் ஆண்குறியில் வந்து அவர் வந்து தோலை வெட்ட சொல்கின்றார்?

ஆம் அதில் ஏதோ விஷயம் இருக்கலாம், நாம் அவர்களை பழிக்கவில்லை மாறாக பைபிளில் ஆண்குறி பற்றி சொன்னால் தவறு சஷ்டி கவசம் சொன்னால் தவறு என்பது எப்படி சரி?

பைபிளில் இன்னொரு காட்சிவரும், யூதர்களை வதைத்த பெலிஸ்தியருக்கு கடவுள் மூலநோய் வரவைப்பார்

நோய்களில் கொடியதான மூலநோயின் கொடுமையினை தாங்கமுடியா பிலிஸ்தியர் மூலகட்டி வடிவில் தங்கநகை செய்து கடவுளுக்கு படைத்து மன்னிப்பு கேட்க அந்நோய் நீங்கும் , யூதரும் விடுதலையாவர்

யாராவது ஏன் யூத கடவுள் சூத்துக்குள் நுழைந்தது என கேட்டார்களா?

குருடனை குணமாகு என சொன்னால் ஆகமாட்டானா? இயேசு ஏன் அவன் கண்ணில் மணலை இட்டு துப்பி அவனை குணபடுத்தினார்? அவனை அவமதித்தாரா?

அப்படியா பொருள் கொள்வது? சொன்னால் தாங்குமா?

ஆம், நாகரீகமுள்ள இந்துக்கள் இப்படி
கேட்கமாட்டார்கள்.

உடலின் ஒவ்வொரு பாகமும் முக்கியம், அதன் அருமை நோய் வந்தால்தான் தெரியும்

பல்வலி கூட ஒரு மனிதனை முடக்கும், காதுவலி கண்வலி எல்லாம் முடக்கும் விஷயம், அதுவும் ஒருதலை வலி எல்லாம் மருந்தே இல்லா ரகம்

இவை எல்லாம் அனுபவத்தால் அன்றி தெரியாது.

ஒவ்வொரு நோயின் கடினம் அறிந்து, வலி அறிந்து, ஒவ்வொரு உறுப்பின் முக்கியத்துவம் அறிந்து மிக நுணுக்கமாக பாடபட்டது சஷ்டி கவசம்

அது ஆபாசம் என்றால் பைபிளின் கதைகளும் விருத்த சேதனமும் மகா மகா ஆபாசமே

நாம் சபையில் அருவெருப்பாக பேசவிரும்பவில்லை, எம் நோக்கம் அதுவல்ல, சாக்கடை பன்றி ஒன்று உறுமியதற்கு கோவில் மணி ஒலித்தது போல் பதில் சொல்லிவிட்டோம் அவ்வளவுதான்

செல்வத்தில் மிக சிறந்தது உடல் நலம், அந்த உடல்நலத்தையும் மன நலத்தையும் தமிழரின் தனிபெரும் கடவுளும் முதன் முதலில் மானிடரை தேடிவந்தவருமான முருகனிடம் மன்றாடி கேட்பதே கந்த சஷ்டி கவசம்

அதில் ஆபாசம் ஏதுமில்லை, அது ஆபாசமென்றால் மருத்துவர் முன் உடையின்றி கிடப்பதும் ஆபாசமாகும், அது எங்கணம் சரியாகும்?

அந்த மடையன் இன்னும் பல இந்து பாடல்களை, அருமருந்தும் ஆழ்ந்த மருத்தும் கொண்ட விஷயங்களை ஆபாசமாக விமர்சிப்பானாம்

அப்படி அந்த கொடுமதியாளன் தன் சீழ்பிடித்த சிந்தையில் சொன்னால் கலங்காதீர்கள்

நாம் பார்வைக்கு கொண்டுவாருங்கள், நாம் நம்மால் முடிந்த விளக்கத்தை ஞான மறைபொருளை விளக்கி சொல்கின்றோம், அந்த முருகன் நமக்கு வழிகாட்டுவான்

நம் தனிபெரும் கடவுளையும் தத்துவத்தையும் காக்கும் பொறுப்பு நமக்கு எக்காலமும் உண்டு, நாம் அதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கின்றோம்

அசுரனையே அடக்கி தன் கொடியாக சேவலாக மாற்றி தன் காலடியில் வைத்த முருகன் இவர்களுக்கும் அறிவும் தெளிவும் தர மன்றாடுவோம்

ஆதலால் அன்பர்களே, அவன் எவ்வளவு குரைத்தாலும் நமக்கு பதில்கொடுக்குமளவு ஏகபட்ட விஷயம் இங்கு உண்டு, கவலை வேண்டாம்

ஆனால் இன்னும் அவன் மோசமாக சொல்லிகொண்டிருந்தால் யூத தோராவின் சாயலான குரானும், பைபிளிலும் இன்னும் ஏகபட்ட கதைகள் உண்டு

நாம் அதை எல்லாம் மத நம்பிக்கை என ஏற்கின்றோம், ஆபிரகாமும் யோபுவும் தாவீதும் அவர்கள் நம்பிக்கை என்றால் கண்ணப்ப நாயனாரும், சுந்தரரும், ராஜராஜ சோழனும் நம் நம்பிக்கை

அவர்கள் நம்பிக்கையினை நாம் தொடாதபொழுது நம் நம்பிக்கை பக்கம் அவர்கள் வராமல் இருப்பதுதான் சரி

வந்தால் நமக்கென்ன? தெளிந்த நீரோடையான இந்துமதம் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கின்றது, அதை எடுத்து கொடுப்பதே நம் பணி

நாம் அர்த்தம் சொல்லிவிட்டோம் அல்லவா? வாருங்கள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடுவோம்

"விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்" எனும் சஷ்டி கவச வரிகள் இவனுக்கே எழுதபட்டது, அதை அழுத்தி சொல்லி படியுங்கள்

ஆலயத்திலும் வீடுகளிலும் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும், தீபங்கள் எரிய, நறுமணம் கமழ அது உருக்கமான பாடபடட்டும்

நிச்சயம் முருகன் தமிழகத்தை காப்பார், சுனாமி நேரம் திருசெந்தூர் ஆலய மக்களை ஒரு சொட்டு கடல்நீரும் தாக்காமல் காத்த முருகன், நிச்சயம் தன்னை அழைக்கும் ஒவ்வொருவரையும் காப்பார், அந்த கயவன் மனம் திருந்துவான்

பொல்லா இடும்பனையும் அடங்கா சூரபத்மனையுமே வதைத்த முருகனுக்கு இப்பதர் எம்மாத்திரம்?

இந்த அற்பர்களுக்கும் நல்ல பதிலை அவரே கொடுப்பார். அவன் புத்தி தெளிவான். நம்பிக்கையோடு கந்த சஷ்டி கவசத்தை முன்னெடுப்போம், நிச்சயம் நல்லது நடக்கும்

"சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சன்முகா சரணம்"

சனி, 11 ஜூலை, 2020

*மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.*

ஊர் உலகத்திற்குத் தெரியாமல் தாம் மறைத்த பல அநியாயங்களால் நிம்மதி இழந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்பதற்காகப் பிராயச்சித்தம் என்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்களோ என்று தோன்றுகிறது. நன்றி செலுத்துவதற்காகக் கூட இப்படிப்பட்ட அறியாமையுடன் உடலை வருத்தும் செயல்களைச் செய்யக்கூடாது. சட்டத்தினால் எதையும் முற்றிலுமாக சரிசெய்ய இயலாது. தெய்வமும் இப்படிப்பட்ட பிரார்த்தனைகளை நிச்சயம் ஏற்காது.

மிருக நிலையிலிருந்து மனிதத்தன்மைக்கு உயர்ந்து, பிறகு மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு முயன்று நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரே வழி இந்த பகவத்கீதை போன்ற உன்னத நூல்களைத் திரும்பத் திரும்பப் படித்து, அவற்றில் கூறிய நற்குணங்களைத் தமதாக்கிக்கொள்வதுதான். மனமும், குணமும் தெய்வீகமாக மாற வேண்டும். மாறினால் சுய தண்டனைகள் தேவையில்லை.
இவ்வாறு மூன்று வகைக் குணங்களைக் கொண்ட மனிதர்கள் வழிபடுகின்ற விதங்களை விளக்கி, அவர்களை இனம் காணும் விதத்தை அர்ச்சுனனுக்கு விளக்கிய மாதவன் மேலும் இதே மூன்று வகைக் குண அடிப்படையில் மனிதர்கள் எந்தெந்த விஷயங்களில் தங்கள் சிரத்தையை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் நுட்பமாக விளக்குகின்றார்.

நமக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த விளக்கத்தைக் கண்ணன் வாய் அமுதமாகவே அறிந்து, நம்மை நாமே, நாம் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என ஆராய்ந்து தெரிந்துகொள்ளவும், நமது தன்மையை மேம்படுத்திக்கொள்ளவும் முயற்சி செய்வோம்.
‘வழிபடும் விதம் மட்டுமின்றி உணவு, யாகம், தவம், தானம் இவை அனைத்திலும் கூட மக்கள் சத்வ, ரஜோ, தாமச குண அடிப்படையில் வேறுபடுகின்றனர். ஒருவர் உண்ணும் உணவு இயற்கையின் முக்குணங்களுக்கு ஏற்ப மூன்று விதமானது”.

‘ஆயுள், சாத்வீகக் குணங்கள், உடல் வலிமை, ஆரோக்கியம், சுகம், மகிழ்ச்சி இவற்றை வளர்ப்பவையும், சாப்பிட்டவுடன் திருப்தியளிப்பவையும், இதயத்திற்கு வலிமை அளிப்பவையும், சுவையானவையும், ரசமுள்ளவையாகவும் அமைகின்ற உணவு வகைகள் சாத்வீகமான மனிதர் விரும்புவையாகும்.”

‘கசப்பும், புளிப்பும், உப்பும் அதிகமாக உள்ளவையும், மிகவும் சூடாக இருப்பவையும், மிகக் காரமுடையவையும், எரிச்சல் தருபவையுமான உணவு வகைகள் ரஜோ குண மனிதர்கள் விரும்புகின்றவை. இத்தகைய உணவுகள் துன்பத்தையும், சோகத்தையும், நோயையும் ஏற்படுத்துபவை.”
‘அரைகுறையாக வெந்தது, சுவையில்லாதது, நாற்றம் வீசக்கூடியது, பழையது, ஊசிப்போனது, தூய்மையற்ற அசைவ உணவு வகைகள் ஆகியவை தமோ குணத்தில் உள்ள மக்களால் விரும்பப்படுகிறது.”

அடடா! ஒரு தாய் போன்று எவ்வளவு தயையுடன் நாம் சாப்பிடும் உணவு வகைகளைக்கூடத் தரம் பிரித்து, அவை எவ்வாறு நம்மில் குண வேறுபாடுகளை உண்டாக்குகின்றன என்பதையும் கண்ணபெருமான் கூறியிருக்கின்றார் பாருங்கள்! இனியென்;ன? ஆன்மீகச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதுதான். சொல்லப்போனால், ஒன்றுமே பயப்பட வேண்டாம். தினமும் சமைக்கும்போது உடலையும், மனதையும் துhயதாக்கி ஒருமித்த இறை சிந்தனையோடு, பக்திப்பாடல்களையோ, நாமாவளிகளையோ சொல்லிக்கொண்டு முறையாகவும், சரியாகவும் சுத்தமான சைவ உணவைத் தயார் செய்ய வேண்டும். சமைத்ததை முதலில் இறைவனுக்குப் படைத்து, நைவேத்தியம் செய்து பிறகு அந்த உணவை இறைப் பிரசாதமாக நினைத்து வணங்கி உண்ண வேண்டும். அதோடுமட்டுமின்றி இந்த உலகத்திலுள்ள எல்லோரும் நன்றாய் இருக்க வேண்டும் என்று வாழ்த்திவிட்டு உண்ண வேண்டும். அந்த நேரத்தில் தம்மோடு இருப்பவர்களுக்கும், தம் வீட்டிற்கு வருபவர்களுக்கும் அந்தப் பிரசாதத்தை வழங்கி உண்ணப் பழக வேண்டும்.
இன்றும் பல வீடுகளில் ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டோ, பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டோ சமைக்கின்ற பெண்களும், உண்ணப்போகின்ற உணவைக் கும்பிட்டுவிட்டு சாப்பிடுகின்றவர்களையும் பறவைகளுக்கு உணவளித்துவிட்டுப் பின்னர் உணவருந்துகின்றவர்களையும் கவனித்தால் தெரிய வரும். இறையுணர்வில் ஒன்றிச் செயல்படுகின்றபோது மூவகை குணங்கள்      தலைதூக்காது. எனவே தான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனிடம், *யோகத்தால் என்னுடன் இணைந்து விடு* அர்ச்சுனா!” என்கிறார் கனிவுடன்.

அடுத்தபடியாக அவர் யாகங்களைப் பற்றிய மூவகைக் குண இயல்புகளைப் பற்றி விளக்குகின்றார். ‘பொதுவாக யாகங்கள் உலகப் பொது நன்மைக்காகவே செய்யப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் அடிக்கடி யாகங்கள் செய்ய முடியாது. ஒரு வேள்வியைச் செய்யவேண்டுமானால் சரியாகத் திட்டமிட்டு, முறையான ஏற்பாடுகளுடன், தேவையான பொருள்களை அதிக அளவில் சேகரித்து, வேதங்களில் சொல்லிய முறைப்படி, ஆச்சார்யரின் துணை கொண்டு செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்கள் உயர்ந்த தர்மநெறியைக் கடைப்பிடிப்பவர்களாக, தவசீலர்களாக இருக்க வேண்டும்”.

‘பிரபஞ்சத்தின் தன்னலம் கருதாத, முறையான இயக்கத்திற்கு அதிகாரிகளாக விளங்குகின்ற தேவர்களுக்கும், தெய்வங்களுக்கும், அவர்களின் பெருங் கருணைக்கு நன்றி தெரிவிக்கும் விதத்திலும், இயற்கை இவ்வாறே எங்களுக்குத் தொடர்ந்து உதவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்வதற்குமே யாகங்கள் செய்யப்படுகின்றன”.

இவ்வகையில் இல்லாமல் சுயநலத்துடன் தனிப்பட்ட ஒருவரின் பட்டம், பதவி, ஆசைகளுக்கும், ஆயுள், ஆரோக்கிய, ஐஸ்வரியத்திற்கும், சுய முன்னேற்றத்திற்கும் என்று செய்யப்படுகின்ற யாகங்கள் உயர்ந்தவை அல்ல. உலக நன்மைக்காக உள்ளன்போடு ஒரு யாகத்தைச் செய்தாலே அதில் நமக்கு வேண்டியவையெல்லாம் தானாகவே வந்து சேரும். எனவே தான் குடும்ப நன்மைக்காக என்று செய்யப்படுகின்ற ஹோமங்களில் கூட, இந்த எனது பிரார்த்தனையால் உலகம் நன்மை அடையட்டும் என்னும் மந்திரம் சொல்லப்படுகின்றது.
இவையெல்லாவற்றையும் விட ஆன்மீக சாதகர்கள் குருவின் துணை கொண்டு செய்கின்ற ஞானவேள்விதான் அனைத்து வேள்விகளிலும் சிறந்தது. இந்த யாகத்தில் பொருட் செலவில்லை. சுயநலமில்லை. ஆணவம், செருக்கு எதுவுமில்லை. அலைச்சல் இல்லை. அங்கு குரு என்றோ, சிஷ்யன் என்றோ வேறுபாடு இல்லை. குரு வடிவாக அங்குப் பிரம்மமே அமர்ந்து, சீடனாக வீற்றிருக்கும் பிரம்மத்திற்கு சொல்கின்ற உபதேச யக்ஞம் அல்லது ஞானவேள்வி இது. அங்கு சொல்வதும் பிரம்மம். கேட்பதும் பிரம்மம். எல்லாமாய் இருக்கின்ற பிரம்மம், தன்னை அறியாத, வரையறைகளுக்கு உட்பட்ட பிரம்மத்திற்குச் சொல்லிச் செய்வது இது.

ஆத்ம உணர்வே இங்கு அக்னி. உபதேசமே இதில் ஊற்றப்படும் நெய்; அறியாமை என்னும் சமித்துக்களும், ஆசைகள் என்னும் திரவியங்களும் இந்த ஆத்ம அக்னியில் போடப்படுகின்றன. இப்படிச் செய்வதன் மூலம் இதயத்தை மூடியிருக்கின்ற அஞ்ஞான இருள் விலகுகின்றது. ஆத்ம ஒளி பிரகாசிக்கிறது. ஒருவன் பெறுகின்ற ஞானத்தால் உலகமே ஒளி பெற்று நன்மை அடைகின்றது. ஏன் தெரியுமா? ஞானம் பெற்றவனால் யாருக்குமே தீங்கு செய்ய முடியாது. எனவே இந்த ஞானவேள்வியே உத்தமமான வேள்வியாகும். இப்படிப்பட்ட இந்த வேள்வியைச் செய்வதனாலேயே ஒருவன், இரு பிறப்பாளன் என்னும் உயரிய நிலையை இப்பிறவியிலேயே எய்துகின்றான். பல உபநிடதங்களில் சாந்தி பாடமாகச் சொல்லப்பட்டிருக்கின்ற ‘ஓம் ஸஹனா வவது ஸஹனௌ புனக்து” என்று தொடங்கும் மந்திரம் இந்தப் பொருளில் அமைந்திருக்கும் ஓர் அருமையான மந்திரமாகும்.

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. தொகுப்பு: டாக்டர். பி. உமேஷ் சந்தர் பால்]
ஸ்ரீ ரமணர்

‘நான்’ என்ற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால் , அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும்.

எவ்வளவுக்கு எவ்வளவு பணிந்து நடக்கிறோமொ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு.

பகவானுக்கு ருசி முக்கியமில்லை. அடியார்களது பக்திதான் முக்கியம்.

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.

பரம்பொருளைத தொடர்ந்து விடாமல் பற்றி நிற்பதே சமாதி எனப்படும்.

புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள். புதிய வாசனைகளைத் தேடிக் கொள்ளாதீர்கள். அதுவே நீங்கள் செய்திருக்கக்கூடிய தவற்றிலிருந்து மீளுவதற்க்கு உரிய பிரயச்சித்தம் ஆகும்.

பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் எல்லைகள். இந்த இரண்டையும் கடந்து நிற்பதே ஆன்மா அதை உணர்ந்தால் இந்த இரண்டுமே பொருள்ளற்றதாக ஆகிவிடும். தன்னை உணர்ந்த மனிதன் – இந்த நிலைகளைக் கடந்துவிடுகிறான. இறப்பு அவனைப் பாதிப்பதில்லை.

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தேடிக்கொள்ளும் நற்பலன்கள் அதிகமாக இருந்தால், அதை ஒட்டி அவனக்கு மரணத்துக்குப் பின் இனிய அனுபவம் ஏற்படுகிறது. கெட்ட பலன்களே அதிகமாக இருந்தால் துன்பம் நிறைந்த அனுபவம் உண்டாகிறது.

நூல்களில் மூன்றுவித தீஷைகள் கூறப்பட்டுள்ளன. ‘ஹஸ்த தீக்ஷை’ என்பது சீடனின் சிரசைத் தொட்டு அருள் புரிதல், ‘சக்ஷதீக்ஷை’ என்பது அருட்பார்வையால் தீக்ஷை அளிப்பது. ‘மானசீக தீக்ஷை என்பது மனதினால் அருள் புரிதல், இவற்றில் மானசீக தீக்ஷையே அனைத்திலும் சிறந்தது”

முயற்சி செய்து மனத்தை எண்ணங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அந்த நிலையில் தொடர்ந்து நாம் இருப்போமேயானால் அதுவே நமது சாதனைக்ளுக்கு வழிவகுக்கும்

நம்மால் எதிலும் தனித்து செய்ல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது வலிமை அற்ற மனம் தான்.

தவறான செயல்களைச் செய்துவிட்டு, அகந்தையின் காரணமாக அதை மறைத்தல் கூடாது. எனவே குற்றங்களைச் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல ஒழுக்கத்துடன் வாழ்ப பழுகுதலே சிறப்பு.

அறிவின் சொரூபமே சச்சிதானந்தம்.

மனம் அடங்கிய ஜகம் மறையும்

மனம் என்பதோ ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய் மனம் என்று ஒரு பொருள் இல்லை. ஆகையினா நினைவே மனிதன் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகம் என்பது அன்னியமாயில்லை.

மனதின் சொரூபத்தை விசாரித்துக் கொண்டே போனால் மனம் தானாய் முடியம்.

நான், நான் என்று எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட அவ்விடத்தில் கொண்டு போய்விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுகள் எல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பிறகே ஏனைய மற்ற நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை படர்க்கைகளை தோன்றிகின்றன. தன்மையின்றி மன்னிலைப் படர்க்கைகள் இரா!

மனம் எப்படி அடங்கும் என்றால் ‘நான்’ யார் என்னும் விசாரனையினாலேயே, நான் யார் என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் ஒழித்து முடிவில் தானும் அழியும். பிறகு சொரூப தரிசனம் உண்டாம்.

எத்தனை எண்ணங்களை எழுப்பினால் என்ன, ஜாக்கிறதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே இது யாருக்குண்டாயிற்று என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும்.

நினைவே மனிதன் சொரூபம். நான் என்னும் நினைவே மனத்தின் முதல் நினைவு. அதுவே அகங்காரம்.

மனம் அளவிறந்த நினைவுகளால் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுகள் அடங்க, ஏகாக்கிரகத் தன்மையடைந்து அதனால் பலத்தை அடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும்.

தொன்று தொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கிச் சொரூப மாத்திரமாய் இருக்கமுடியமா, முடியாதா என்கிற சந்தேக நினைவக்கு இடம் கொடாமல் சொரூப தியானத்தை விடாப்பிடியாகப் பிடிக்க வேண்டும். தான் பாபி என்னும் எண்ணத்தையும் அறவே ஒழித்து சொரூப தியானத்தில் ஊக்கமுள்ளவனாயிருந்தால் அவன் நிச்சயம் கடைத்ததேறுவான்.

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டுவிதம், மனம் சுபவாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வயத்தாய் நிற்கும்போது கெட்ட மனமென்னும் சொல்லப்படும்.

உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் – மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளுவு கெட்டவர்களாய் இருந்தாலம் அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது.

எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம்.

நான் என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மௌனம் எனப்படும். சொரூபமே ஜகம், சொரூபமே நான், சொரூபமே ஈசுவரன், எல்லாம் சிவஸ்வரூபமே.

என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி முத்தை அடையலாம்.

எவன் தன்னையே கடவுளாகிய – சொரூபத்தினடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்.

குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார். எனினும் ஒவ்வொருவருக்ககும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது கரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தியடையவேண்டும்.

முக்தியில் விருப்பமுள்ளவனுக்குத் த்த்துவங்களின் விசாரணை அவசியமே இல்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தப்போல எண்ணிக் கொள்ள வேண்டும்.

கனவில் மனம் வேறொரு தேகத்தை எடுத்துக்கொள்கிறது. ஜாக்ரம், சொப்பனமிரண்டிலும் நினைவுகளும் நாம ரூபங்ககளும் ஏக காலத்தில் நிகழ்கின்றன.

எல்லா நூல்களிலும் முக்தியடைவதற்கு மனத்தை அடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ள படியால் மனோ நிக்ரகமே நூல்களின் முடிவான கருத்து என்றறிந்து கொண்ட பின்பி நூலகளை அளவின்றிப் படிப்பதால் பயனில்லை.

மனம் வெளிவரும்போது துக்கத்தை அனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும்போதெல்லாம் அது தன்னுடைய யாதஸதனத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது.

நிராசையே ஞானம், நிராசை வேறு ஞானம் வேறன்று.

உண்மையில் இரண்டும் ஒன்றே. நிராசை என்பது ஒரு பொருளிலும் மனம் செல்லாமலிருப்பது.

சும்மா இருப்பதற்குத்தான் ஞானதிருஷ்டி என்று பெயர். சும்மாயிருப்பதாவது மனத்தை ஆத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்வதே அன்றி பிறர் கருத்தறிதல், முக்கால முணர்தல், தூர தேசத்தில் நடப்பனவறிதல் ஆகிய இவை ஞான திருஷ்டியாக மாட்டா.

பந்தத்திலிருக்கும் தான் யாரென்று விசாரித்துத் தன் யதார்த்த சொரூபத்தை தெரிந்து கொள்வதே முக்தி.

உலகத்தில் நாம் எதையும் ஒரு பெயரை வதைத்தோ உருவத்தை கொடுத்தோதான் நினைவில் வைத்துக் கொள்கிறோம். கடவுளை நினைத்துத் தியானம் செய்வதற்கும் இப்படி ஒரு வழி முறை தேவைப்படுகிறது.

வெளியே பார்த்ததும், பேசியும் பழகியும், உணர்ந்தே பழக்கப்பட்ட மனத்தை உள்முகமாகத் திருப்புவது என்பது சாதாரண காரியமல்ல.

அப்படிச் செய்வதற்கு இப்படி ஒரு படிக்கட்டு அவசியமாகிறது.

எல்லா உணவுகளுக்குமே ஒவ்வொரு வகையான பாதிப்பு உண்டு. சில உணவு வகைகள் அமைதியைத் தருகின்றன. வேறு வகை உணவுகள் மந்த நிலையையம், தூக்கத்தையும் உண்டு பண்ணுகின்றன. உணர்ச்சியைத் தூண்டும் மாமிச வகையைச் சார்ந்த ராஜஸ உணவையும், மந்தநிலையையும், சோம்பலையும் தூண்டும் தாமஸ உணவையும், நாம் தவிர்க்க வேண்டும். அமைதியைத் தரும் சாத்வீக உணவே தியானத்துக்கு ஏற்றது.

பிராணயாம்ப் பயிற்சி முடிந்ததும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் யோகிகள் படிப்படியாக, இப்படி ஒரு பயிற்சி இல்லாமலே நிரந்தரமாக அமைதியுடன் இருக்கும் நிலையை அடைய விரும்புவார்கள். அதைத்தான் சகஜ சமாதி என்று குறிப்பிடுகிறோம்.

மூச்சு என்பது குதிரையைப் போன்றது. மனம் என்பது அதன் மீது சவாரி செய்து குதிரையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சவாரி செய்பவனும் கட்டுப்படுகிறான். இதுவே பிராணயாம்ம். மூச்சின் இலக்கத்தைக் கவனித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் மனத்தில் ஓடும் நினைவுகளும் கட்டுபடுகின்றன.

மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே இருப்பது தானேயன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று.

விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொருவழி.

நகர்ந்து செல்லும்ம வண்டியில், உறங்கிக் கொண்டு பயணம் செய்யும் பிரயாணிக்கு சலனமோ, அசைவுகளோ எதுவும் தெரியாது. ஏனெனில் அவனது மனம் அறியாமை இருளில் ஒடுங்கிக் கிடக்கிறது.

ந்தியின் கரையைச் சேர முயலும் மனிதன் அந்த நீரின் அலையோட்டங்களால் கரைசேர முயலுவது தடைப்படுவதைப் போல, சம்சாரம் என்னும் ந்தியிலிருந்து ஆத்மஞானம் என்னும் கரையைச் சேர விரும்புபர்கள் உலக இன்பங்களால் தடைபட்டு அதை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

பிறருடைய குற்றங்களைப் பாராமல், குணங்களை மட்டுமே எண்ணிப் பார்க்கும் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இனிமையாகவே அமையும்.

கல்லைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் மூழ்கி முத்தை எடுத்து மகிழ்வதைப்போல, வைராக்கியத்தைக் கொண்டு இதயக்கடலுள் மூழ்கி ஆத்மா என்னும் முத்தை அடைதல் வேண்டும்.

பிறருக்கு நன்மை செய்வதில் ஒருவர் ஈடுபட்டாலே போதும். அவர்களின் இதயத்தில் நன்மை வளரும். நன்மை, அன்பு, கடவுள் ஆகிய எல்லாம் ஒன்றே.

துறவு என்பது அனுபவிக்கப்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எப்போதும் அது இருந்துகொண்டே இருப்பதுதான். வந்து போவதாகத் தோன்றுவது மனத்தின் இயல்புதான்.

விதி என்பதென்ன? இறைவனைச் சரண்டையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்?

ஞானி உலகத்தைக் காண்கிறான். அஞ்ஞானி தான் உலகத்தை வெறுக்கிறான்.

காகம் தன் கண்ணின் மூலம் இரண்டு பக்கங்களிலும் பார்வையைச் செலுத்தும். யானைக்கு அதன் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், இருவிதங்களில் பயன்படுகிறது. பாம்பு தன் கண்களின் மூலம் பார்க்கவும் செய்கிறது. ஒலிகளின் மூலம் கேட்கவும் செய்கிறது. இதைப் போல ஞானி என்பவனுக்கு உறக்கம், விழிப்பு, உறக்கத்தில் விழிப்பு நிலை, விழிப்பில் உறக்க நிலை ஆகிய அனைத்தும் ஒன்றுதான்.

ஒருவன் தன்னைப்பற்றி முதலில் அறிந்துகொள்ள வேண்டும், தன்னைப்பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால், உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயலாகும். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால் அது, அடிக்கல் நடாமலே சுவர் எழுப்பியதைப் போன்ற செயலாகத்தான் இருக்கும்.

இந்த அருளை பரிபூரண சரணாகதி மூலம் அடையலாம். சரணாகதி சொல்லளவிலேயே நிபந்தனையுடன் கூடியதாகவோ இருக்கக்கூடாது. வழிபாடு என்பது வெறும் சொற்களால் ஆனது அல்ல. அது இதயத்திலிருந்து புறப்பட்டு இதயத்திற்குள்ளே கலந்து விடவேண்டும். இதற்குத்தான் வழிபாடு என்று பெயர். இது தான் அருள்.

எண்ணங்களே மனம்; அந்த எண்ணமயமானதே உலகம். அனைத்தின் மையம் இதயம்.

ராமா என்ற சொல்லில் ரா என்ற எழுத்து ஆன்ம ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. மா என்ற எழுத்து நான் என்ற ஆணவத்தைக் குறிக்கிறது. ஒருவர் ராமா என்று இடைவிடாது ஜபித்துக் கொண்டேயிருந்தால் மா என்ற எழுத்து ரா என்ற எழுத்தில் ஐக்யமாகி மறைந்து விடுகிறது. ரா என்ற ஸவரூபமே எஞ்சி நிற்கிறது. இந்நிலை ஏற்படும்போது தியானம் செய்யும் முயற்சியும் ஓய்ந்துபோய் தமுத உண்மை நிலையாம் நிரந்தர தியானம் நிலைத்து விடுகிறது.

ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை. உள்மனதில் யார் அமைதியை எற்படுத்துகிறார்களோ அவரையே உன் குருவாக்கிக் கொள்.

உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது. வீட்டைத் துறப்பதும் சந்நியாசமல்ல. உண்மையில் மனத்திலுள்ள பாசத்தையும் பந்தத்தையும் ஆசையையும் துறப்பதே சந்நியாசமாகும். உலக வாழ்வைத் துறப்பவன் தன் அன்பின் பெருக்கால், உலகையே மூழ்கடிக்கிறான். துறவென்பது உறவைச் சுருக்கிக் கொள்வதல்ல. உலகளவு பரந்து விரிந்தாய் ஆக்கிக் கொளவதே துறவின் லட்சணம்.

உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டும் போதும். அதைதான் பணிவு என்றும் நமஸ்காரம் என்றும் சொல்கிறோம். தூய்மையில்லாத உள்ளத்துடன் நமஸ்கரித்தால் அதை ஓர் ஏமாற்றுச்செயல் என்றே சொல்ல வேண்டும். அது ஒரு அபசாரமும் கூட.

ஆனந்தம் அமையியில்தான் பிறக்கிறது. குழப்பமில்லாத மனதில் அமைதி நிலைபெற்று இருக்கும். குழப்பம், கலக்கம் ஆகியவற்றிற்கு மனதில் எழும் எண்ணங்களே காரணம்.

அருளின் உயர்ந்த வடிவம் மொனம். அதுவே மிக உயர்ந்த உபதேசம்.

மௌன விரதம் என்பது ஒரு விரதமே. அது தியானத்திற்கு ஓரளவு உதவும். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்வதில் என்ன பயன்?
சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை கடவுள் நம்மைப் பற்றிய எல்லா செயல்களுக்கும் பொறுப்பேற்கிறார் என்ற நம்பிக்கை அவசியம். இது முழுமையாக நம்மைக் கடவுளிடம் அர்ப்பணித்து விடுவதில் இருக்கிறது.

நீங்கள் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். ஆனால் அதனோடு திருப்தி அடைந்துவிடக்கூடாது. ‘துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவித்தது யார் என்று உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம் ஆகிய இரண்டையும் கடக்கும் வரை சாதனையைத் தொடருங்கள் இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நிற்கும்.

கலங்கிய மனதால், காமத்தினால் செய்யப்படுவதெல்லாம் தீய கரும்ம். சாந்தமான தூய மனதுடன் அனைத்தும் நற்கருமம்.

மரணத்திற்கு பிறகு என்ன என்பதற்கு விடை தேட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்வோம். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.

நீ விரும்புவதை எல்லாம் பகவான் உனக்கு தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.

உலகம் மெய் என்ற அபிப்பாரய்த்தை விட்டொழிக்காவிட்டால், மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.

”என்னுடைய மதம் இப்படி” என்று ஒரு மத்த்தின் மீது அபிமானமும் பிற மதங்களின் மீது துவேஷம்ம் கொள்ளச்செய்வது, அகந்தை தான், இதை விட்டொழிக்க வேண்டும்.

பலன் கருதா பக்தி என்பது சாத்யமே. அதற்கு உதாரணமாக பிரஹலாதனுடைய பக்தியையும், நாரதமுனிவரின் பக்தியையும் கூறலாம்.

சராணாகதி என்று பேசுவதெல்லாம் வெல்லத்தில் செய்த பிள்ளையாரைக் கிள்ளி சிறிது வெல்லத்தை எடுத்து, அந்த வெல்லப் பிள்ளையாருக்கே நைவேத்யம் செய்வது போலாகும்.

மூன்றாவது காஷாயம். இது முற்பிறவிகளில் அனுபவித்த புலன் நுகர்ச்சிகள் பற்றிய எண்ணங்களும் ஆசைகளும் ஆகும்.

புத்தி பூர்வமாக அறிந்திருப்பது அதிஞானம். அதாவது உறுதிப் படாத ஞானம் ஆகும். காலம் வரும் போது நீ திட ஞானத்தில் – அதாவது உறுதியற்ற ஞானத்தின் நிலை பெறுவாய். இதுதான் முடிவான உண்மை. தன்னை உணர்ந்திருப்பதே ஞானம் ஆகும்.

கடல் பொங்கினால் அற்ப ஜந்து தலையெடுக்க முடியாது. அதுபோல ஞான வெள்ளம் அற்பமான அகந்தை தோன்றாது.

நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ சாட்சியாக இரு. நான் என்று கூறிக்கொண்டு எதிலும் முன் நிற்காதே.

உலகம் மெய் என்ற அபிப்ராயத்தை விட்டொழிக்காவிட்டால் மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.