புதன், 27 மே, 2020

"அது யார், ஜகத்குரு?"-ஒரு பண்டிதர்

("கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன நமக்குக் கைகால் உண்டு. .என்றாலும்,பறவைகள் மாதிரி கூடுகட்டமுடியவில்லை.குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை. அதனால், குருவி, என்னுடைய குரு..." என்று சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கின-பெரியவா)

"நீங்கள் தான் ஜகத்குரு" என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள்.-பண்டிதர்கள்

சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம்.

1933ம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சி. பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிடிக்கு, ஒரு மாலைப்போதில்ஸ்ரீ  பெரியவாள் 'விசிட்'.

பெரியவாள் போனபோது, மண்டக்குளத்தூர் பிரம்மஸ்ரீ சின்னசாமி சாஸ்திரிகள், பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பைய தீட்சிதர் எழுதிய 'விதிரஸாயனம்' என்ற மீமாம்ஸாசாஸ்திரம். ஸ்ரீ தீட்சிதரின் நடையழகில் ஸ்ரீ பெரியவாள் சொக்கிப் போனார். உடன் வந்திருந்த 'ஆத்ம வித்யா பூஷணம் 'இஞ்சிக்கொல்லை  பிரும்மஸ்ரீ  ஜகதீஸ்வர  சாஸ்திரிகளிடம்சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டார். (பின்னர்தான்,அப்பைய தீட்சிதரின் எல்லாக் கிரந்தங்களையும் ஸ்ரீ பெரியவாள் படித்தார்.

காசிமன்னர்அரண்மனையில்,பெரியவாளுக்குவரவேற்பு.நகரத்தின்முக்கியப்பிரமுகர்கள்வந்திருந்தார்கள்.ஏராளமான பண்டிதர்கள்.

அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம்; இனம் புரியாத அசூயை. 'இவர் என்ன ஜகத்குரு என்று பட்டம் போட்டுக்கொள்வது?... ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !...'

பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக்கே ட்டார், "அது யார், ஜகத்குரு?"

"நான் தான் !..." என்றார், பெரியவாள்.

"ஓஹோ?..நீங்க ஜகத்துக்கே குருவோ?"

"இல்லை. ஜகதாம் குரு: ந (நான் ஜகத்துக்கெல்லாம் குரு- என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:"

(உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குருக்கள்- என்ற பொருளில், நான் ஜகத்குரு)

வடநாட்டுப் பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள்.

இவ்வளவு அருமையான, எளிமையான விளக்கத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பெரியவாள்,அந்தப்பெரியஅறையின்சுவர்களின்மேற்பகுதியில் ,புறாக்களுக்காக அமைக்கப்பட்டிரூந்த சிறு சிறு பொந்துகளில் கட்டப்பட்டிருந்த குருவிக்  கூடுகளைப் பார்த்தார்.

பண்டதர்களிடம் காட்டி, "கிமிதம்"? (இது என்ன?) என்று கேட்டார்.

"நீட:" (கூடு)

"கேன நிர்மிதம்?" (யாரால் கட்டப்பட்டது?)

"சடகே.." (குருவிகள்)

"கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன நமக்குக் கைகால் உண்டு. .என்றாலும்,பறவைகள் மாதிரி கூடுகட்டமுடியவில்லை.குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை. அதனால், குருவி, என்னுடைய குரு..." என்று சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கினார்.

இதை நேரில் கண்ட வடநாட்டுப் பண்டிதர்கள் பிரமித்துப் போய்விட்டார்கள்

. "நீங்கள் தான் ஜகத்குரு" என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள்.

பெரியவாள் காசியில் இருந்த கடைசி நாள் வரை, அவர்கள் எல்லாரும் தினமும் முகாமுக்கு வந்து நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள்
வேதத்தில் உள்ள அதி சூட்சும ரகஸ்ய ஸ்ரீ மஹாலட்சுமி அஷ்டோத்திரம்!

தீப மஹாலட்சுமி அர்ச்சனை

அர்சுத்தியான தியானந்தீம் த்ரீலோதனம்
ஹாரந்தீம் லக்ஷ்மீம் தேவி விதிந்தேம்

ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திர மந்திரங்கள் :--

ஓம் ஸ்ரீ பார்வதி சரஸ்வதி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்ணு ப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கமலே விமலேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காருண்ய நிலையேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தாரித்திர துக்க சமனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்ரீதேவி நித்ய கல்யாணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சமுத்திரா தனயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வீர லக்ஷ்மி, விஸ்வ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோக மந்த்ரீ மந்த்ர ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மஹிசாசுர சம்கர்த்தீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வைகுண்ட ஹிருதய வாசே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பக்ஷ்சேந்திர வாகனே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தான்ய ரூபே, தான்ய லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ரூபே ஸ்வர்ண லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வித்ய ரூபே வித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹரிப்ரியே வேத ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பல ரூபே பல ஹாத்திரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நிஷ் குல்லே நிர்மலே நித்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரத்ன ரூபே ரத்ன லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சீதரூபே சீதா லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேத ரூபியே நாத ரூபியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிராண ரூபே பிராண மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிராணமானந்த மகஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிரம்ம ரூபியே பிரம்ம தாத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜாத வேத சொரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆதார ஹர்ஸ நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸூஸ்மாந்த்ரா சுசிலாந்தஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ யோகானந்த பிரதாயின்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ செளந்தரியே ரூபிணி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி சித்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத் ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ துசிதே புசிதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜ ராஜார்த்திய பதயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சார சொரூபே திவ் யாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தாரித்திர திவ்ய சுத்தாக்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேத குஹே சுபே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தர்மார்த்த காம ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோட்ச சாம்ராஜ்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வகமே சர்வ ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோகினி மோக ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பஞ்ச பூதாந்திரஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நாராயண ப்யதமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காருணி கார்ய ரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆனந்த சர்ப்ப சயனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ லோகைக ஜனனீ வந்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சம்பு ரூபே சம்பு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரூபே ப்ரம்ம முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபே விஷ்ணு மாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆக்ஞ்யா சக்ராப்த்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆகார ரேக சக்ராம்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹிருதய பூஜ தீபாத்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆதார மூல நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம கிரந்தி பிரகாசாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ குண்டலினி சயனா நந்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜீவாத்மா ரூபிணி மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்தூல சூசும பிரகாஸ் சித்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஸ்வத்தா ப்ரஷ சந்துஷ்டே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காரிண்ய பூர்ணே ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மூர்த்தித்தியே சொருபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சூர்ய ப்ரகாச ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சந்திர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வஹி மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பீதாம்பர தர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய ஆபரண சோபாடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ராமண ஆராதனா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நரசிம்ஹக்ரவா சிந்தோ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வரதே மங்களே மன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பட் மாடவி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வியாசாதி திவ்ய சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜெய லக்ஷ்மி சித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜ்ய முத்ரே விஷ்ணு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வார்த்த சாதகி நித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹனுமன் பக்தி சந்துஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மகநீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரதி ரூபே ரம்ய ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காமத்மி காம ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சுதா பூர்ணே சுதா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ இந்திர வன்யே தேவ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தர்ம ராஜ சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரட்சோவர புரி லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரத்னாகர ப்ரபாகரமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மருது புர மஹானந்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ குபேர லக்ஷ்மி மாதாங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஈசான லக்ஷ்மி சர்வேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம பீடே மஹா பீடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மாயா பீடஸ்திதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சக்ர வாசினி கன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட பைரவ சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஸ்திதானந்த பூரி நாதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சித்த லட்சுமி மஹா வித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ புத்தீந்திராதி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ லோக தாரித்ர சமனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மிருத்யூ சந்தாப நாசினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பதி ப்ரியே பதி விரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சதுர் புஜே கோமாளங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பட்ச ரூபே முக்தி தாத்நீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜனா நந்த மயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பக்தி ப்ரியே பக்தி கமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமே ராமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராம நாம ப்ரிய தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கங்காப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்வ பர்த்தி விஷ்வ மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரியே க்ருஷ்ணரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கீத ரூபியே ராக மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சாவித்ரீ பூத சாவித்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காயத்ரீ ப்ரம்ம காயத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்மே சரஸ்வதி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சுகாலினி சுத்தாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர ஹமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஃஞாதரி ப்ருக்ஞானே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேதாந்த வன சாராங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நாதாந்த ரஷ புயஸ்ஸே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய சக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ந்ருத்த புரியே நிருத்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சதுர் சஷ்டி கலா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய சுந்தாகரங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ முக்திதே முக்தி தேகஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ யக்ஞ சாரார்த்த சுத்தாக்னீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட லஷ்மியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள சம்பூர்ணே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி.
நாம ரஸம்

கலியுக தர்மமான பகவன் நாமத்தை எப்போதெல்லாம் சொல்லலாம்?

நியமங்களே இல்லையாம். எப்போது வேண்டுமானாலும் சொல்லலாமாம்.
நாமம் சொல்வதற்காகத் தனியாக ஒரு நேரம் ஒதுக்க வேண்டியதில்லையாம்.
 நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்லவே முடியாதாம்.

அதெப்படி?

புரந்தரதாஸர் சொல்கிறார்.

நரஜன்ம பந்தாக நாலிகேயிருவாக
கிருஷ்ணா என பாரதே

பாரதே! என்று பாரத தேசத்தில் பிறந்த நம்மைத் தான் விளிக்கிறார். அதற்காக மீதி தேசத்திலுள்ளவர்களுக்கெல்லாம் நாமம் கிடையாதா? அவர்களுக்கும் உண்டு. கண்ணெதிரே இருப்பவரைத்தானே அழைத்துச் சொல்லமுடியும்? அதனால் நம்மைக் கூப்பிடுகிறார்.

அரிதிலும் அரிதான மனிதப் பிறவி எடுத்துவிட்டாயல்லவா? அதிலும் பேசும் சக்தி கொண்ட நாக்கு இடுக்கிறதல்லவா? ஒரு முறை க்ருஷ்ணா என்று சொல்லலாமே என்று கெஞ்சுகிறார்.

எதற்காகச் சொல்லவேண்டும்?

கிருஷ்ணா எந்தரே ஸகல கஷ்டவு பரிஹார
கிருஷ்ணா என பாரதே

உனக்குத்தான் நிறைய கஷ்டங்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கிறதே. ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ஒவ்வொரு பரிஹாரம், ஒவ்வொரு தெய்வம் என்று எதற்காக அலைகிறாய்?
உன்னால்  அலையமுடியவில்லையா? அதற்காக நீ கஷ்டப்படவும் வேண்டாமே. க்ருஷ்ணா என்று சொல்லிப்பாரேன். எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்துவிடுமே என்கிறார்.

எப்போது சொல்வது?

மலகித்து மைமுரி தேளுத்தலொம்மே க்ருஷ்ணா என பாரதே..

 காலையில் உறக்கத்திலிருந்து  விழிக்கிறாயல்லவா? நீ படுக்கையிலிருந்து எழக்கூட வேண்டாம். அப்போது க்ருஷ்ணா என்று சொல்லலாமே. எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டே கூட க்ருஷ்ணா என்று சொல்லலாம்.

ஸூளி தாடுத மனே, யொளகா தருவொம்மே க்ருஷ்ணா என பாரதே

வீட்டிற்குள் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு எத்தனை நடை நடக்கிறாய்? அப்போது ஒரு முறை க்ருஷ்ணா என்று சொல்லலாமே.

ஸ்நான பான ஜப தபகள மாடுதே
கிருஷ்ணா என பாரதே

குளிக்கும்போது, நீர் குடிக்கும்போது, க்ருஷ்ணா என்று சொல்லலாம். ஒரு கணம் இறைவனை நினைக்கும்போதும் உனக்கு பெரிய ஸ்லோகங்கள் தெரியவில்லை, ப்ரார்த்தனை செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. க்ருஷ்ணா என்று சொல்லலாம். அதுவே பெரிய உபாசனையாகிவிடுமே.

ஷால்யான்ன ஷட்ரச திந்து த்ருப்தவனாகி
கிருஷ்ணா என பாரதே

சாப்பிடத் துவங்குமுன் க்ருஷ்ணா என்று சொல்லிவிட்டு உண்டாயானால், உண்ணும் பொருளில் உள்ள தோஷமெல்லாம் நீங்கி அமுதமாகிவிடும்.

 இல்லையென்றால் நன்றாக விருந்து சாப்பிட்டபின், திருப்தியாக ஏப்பம் விடும்போதாவது க்ருஷ்ணா என்று சொல்லலாம்.
உண்ட சோறு உடலுக்கு நன்மை பயக்குமாறு ஜீரணமாகிவிடுமே.

கந்தவ பூசி தாம்பூலவ மெலுவாக க்ருஷ்ணா என பாரதே

கமகமவென்ற வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளும்போதும், தாம்பூலத்தை மெல்லும்போதும்கூட  க்ருஷ்ணா என்று சொல்லலாமே.

செந்துள்ள ஹாஸிகெயொளு குளிதொம்மெ க்ருஷ்ணா என பாரதே

சுகமான பட்டு மெத்தையில் ஓய்வாக  அமர்ந்திருக்கும் வேளையிலும்கூட க்ருஷ்ணா என்று சொல்லலாமே.

கந்தன்ன பிகிபிகி தப்பி முத்தாடுத
கிருஷ்ணா என பாரதே

உன் குழந்தையைக் கொஞ்சும்போதும், கன்னத்தைக் கிள்ளி முத்தமிடும்போதும்  க்ருஷ்ணா என்று கொஞ்சலாமே.

மந்தகாமினியொளு சரசவாடுத்தலொம்மே
கிருஷ்ணா என பாரதே

உன் மனைவியுடன் தனிமையில் இனிமை காணும் நேரத்திலும் அவளைக் க்ருஷ்ணா என்றே அழைக்கலாம். க்ருஷ்ணனை விடவும் ச்ருங்கார ரஸத்தில் சிறந்தவர் யார்? இல்லறம் இனிமையாக இதை விடச் சிறந்த வழி உண்டா?

பரிஹாஸ்யத மாதலாடுத லொம்மே
கிருஷ்ணா என பாரதே

யாரையாவது கேலி செய்து பேசும்போது கூட க்ருஷ்ணா என்று சொல்லி கேலி செய்யலாம். கண்ணன் மகிழ்ச்சியடைவான். இப்போதெல்லாம் கேலி செய்ய கோவிந்த நாமத்தைப் பயன்படுத்துகிறார்களே. அதைப் போல.

பரிபரி கெலசதொளு ஒந்து கெலசவெந்து
கிருஷ்ணா என பாரதே

எவ்வளவோ பேசுகிறோம். பேச்சு வாக்கில் அவ்வபோது க்ருஷ்ணா என்று ஒரு வார்த்தை என்று சொல்லக்கூடாதா?

துரித ராசிகளன்னு தரிது பிடிசுவ
கிருஷ்ணா என பாரதே

நம்மைப் பீடித்த துஷ்ட கிரஹங்களெல்லாம் விலகி அனுக்ரஹம் நம்மைப் பிடிக்க க்ருஷ்ணா என்று சொல்ல மாட்டாயா?

கருடகமன நம்ம புரந்தர விட்டலன
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

கருடனின் மேல் ஏறி விரைந்து வந்து காக்கும் விட்டல க்ருஷ்ணனின் பெயரை எப்படியாவது சொல்வதை உன் வழக்கமாக்கிக் கொள்ளமாட்டாயா என்று புரந்தரதாஸர் கெஞ்சுகிறார்.

நம்மைக் கரையேற்றுவதில், மஹான்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை?

ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
கோமாதாவும் குலமகளிரின் கண்ணாடி மோதிரமும்!

மஹாராஜா ரஞ்சித் சிங்கின் ஆட்சி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெண்மணிகளின் கையில் உள்ள மோதிரத்தில் ஒரு கண்ணாடி பளபளக்கும். அதில் அவர்களுடைய முகங்களின் மங்களகரமான பிரதிபிம்பம் பளிச்செனத் தெரியும். இதற்குப் பின்னால் ஹிந்து பாரம்பரியத்தைப் போற்றும் ஒரு அதிசயமான சுவையான உண்மைச் சம்பவம் இருப்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்!

சீக்கிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த மஹாராஜா ரஞ்சித் சிங் (தோற்றம் 13-11-1780; மறைவு:27-6-1839) பஞ்சாபை அரசாண்ட காலம்.லாகூரில் சுறுசுறுப்பாக எப்போதும் உயிர்த்துடிப்புடன் இயங்கும் ஒரு வீதியின் மூலையில் உள்ள கிணற்றிலிருந்து பஞ்சாபிய மங்கையர் நீரை எடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு நீரைக் குடித்துத் தாகத்தைத் தணிக்க பசுக்கள் உள்ளிட்ட மிருகங்களும் கூடி இருந்தன.

கொம்புகளை விடுவிக்க முடியாத பசு

அந்தப் பசுக்களில் ஒன்று அருகில் இருந்த சுவர் ஒன்றின் கீழே குனிந்து அங்கிருந்த குழியில் இருந்த தானியங்களை உண்ண முயன்றது. துரதிர்ஷ்டவசமாக அந்தக் குழியில் பசு மாட்டின் கொம்புகள் மாட்டிக் கொண்டன. அதை எடுக்க முயன்ற போது அதன் தலை இன்னும் அதிக ஆழத்தில் மாட்டிக் கொண்டது. அதன் அம்மா என்ற ஓலச் சத்தம் கேட்டுப் பெண்கள் அனைவரும் அங்கு ஓடினர். யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆடவரின் துணையை அவர்கள் நாடவே ஏராளமானோர் வந்து பசுவிற்கு உதவ முயன்றனர்.

அங்கிருந்த பலரும் சுவரை ஜாக்கிரதையாக இடித்துப் பசுவைக் காப்பாற்றி விடலாம் என்றனர். ஆனால் குழுமியிருந்தோரில் ஒருவன் மட்டும் பசுவின் கொம்புகளை வெட்டிப் பசுவை குழியிலிருந்து அகற்றி விடலாம் என்றான். அவனை அனைவரும் வெகுவாகத் திட்டினர்.இறுதியில் சுவர் ஜாக்கிரதையாக இடிக்கப்பட்டது. பசு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் கொம்புகளுடன் வெளியே மீண்டது. கூட்டத்தினர் ஆரவாரம் செய்து கோமாதாவுக்கு ஜே எனக் கூவியவாறே கலைந்தனர்.

இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அரசவை ஒற்றர்களுள் ஒருவன் நடந்த சம்பவத்தை அப்படியே மஹாராஜா ரஞ்சித் சிங்கிடம் கூறினான்.

மறுநாள் கொம்புகளை வெட்டலாம் என்று சொன்னவன் தர்பாருக்கு அழைக்கப்பட்டான்.

ராஜ விசாரணை

மஹாராஜா ரஞ்சித் சிங் அவனை கூர்மையாக நோக்கினார்.

“நீ தான் நேற்று பசுவின் கொம்புகளை வெட்டலாம் என்று கூறியவனா?”

பயந்தவாறே, அவன், “ஆமாம், மஹாராஜா!” என்றான்.

“நீ ஒரு ஹிந்துவா?”

“ஆமாம், மஹாராஜா!”

“எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒரு ஹிந்துவால் எப்படி பசுக்களின் கொம்புகளை வெட்டலாம் என்று கூற முடியும்?”

நடுநடுங்கிய அவன் கம்மிய குரலில், “தப்பு தான், மஹாராஜா” என்றான்.

“அது ஒரு இயல்பான தப்பாக எனக்குத் தெரியவில்லை.” உறுதியான குரலில் கூறிய கூரிய அறிவு படைத்த மஹாராஜா ரஞ்சித் சிங் அவனுடைய தாயாரை அரசவைக்கு உடனே அழைத்து வருமாறு பணித்தார்.

அவனுடைய வயதான தாயார் அரசவைக்கு வந்தார். அனைவரும் அந்தப் பெண்மணி என்ன கூறப் போகிறாள் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கினர்.

அந்தப் பெண்மணியிடம் ராஜா கேட்டார்:”நீ ஒரு ஹிந்துப் பெண்மணி தானா!”

“ஆமாம், மஹாராஜா” அவள் உறுதி படத் தெரிவித்தாள்.

“அப்படியானால் நிஜத்தைச் சொல். இப்படிப்பட்ட மகா மோசமான ஒரு பிள்ளையை நீ எப்படிப் பெற்றாய். கோமாதாவின் கொம்புகளை வெட்டு என்று சொல்லும் பிள்ளையை நீ பெற்ற காரணம் என்ன?”

தர்பாரே அமைதியாக அவளது பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தது.

மெதுவாக யோசித்த பின்னர் அவள் கூறலானாள்:-“மஹாராஜா! அதற்கு என்னால் ஒரு காரணத்தை மட்டுமே யூகிக்க முடிகிறது. இவனைக் கர்ப்பமுற்ற அந்த நாளில் முதன் முதலாகக் காலையில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். அப்போது   காலணி தைக்கும் ஒருவன் செத்த மிருகத்தின் தோலை உரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அது ஒரு பசுவின் தோலாக இருந்திருக்கக்கூடும். அது காரணமாக இருக்கலாமோ, என்னவோ”

மஹாராஜா கூவினார்: ”அது தான் சரி! இப்போது எனக்குப் புரிகிறது, இவன் ஏன் அப்படிச் சொன்னான் என்று!”

சரியான தீர்வு: கண்ணாடி பதித்த மோதிரம்

சற்று யோசித்த மஹாராஜா கூடியிருந்த அனைவரின் முன்னிலையிலும் மந்திரியிடம் கூறினார்:” தற்செயலாக இந்தப் பெண்மணி வெளியில் எட்டிப் பார்த்த போது நடந்த சம்பவம் போல எனது ராஜ்யத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இன்னும் ஒன்று நடக்கவே கூடாது. கர்ப்ப ஸ்தீரிகள் நல்லனவற்றைப் பார்க்க வேண்டும். நல்லனவற்றை பிரார்த்தனையாக உச்சரிக்க வேண்டும். நல்லனவற்றையே கேட்பதுடன் பழைய பாரம்பரியத்தை மதிக்க வேண்டும். ஆகவே அவர்கள் எழுந்தவுடன் தங்கள் முகத்தையே பார்க்கும் படி கைகளில் ஒரு சிறிய கண்ணாடியை எப்போதும் அணிய வேண்டும். இது எனது ஆணை என்று இன்றே பறை சாற்றுங்கள்.”

அன்று உருவானது தான்  சிறிய கண்ணாடி பதித்த மோதிரங்கள்.  அவற்றில் அழகிய தங்கள் முகங்களை விழித்தவுடன் பஞ்சாபிய மங்கையர் பார்க்க ஆரம்பித்தனர்.

காலம் காலமாக வரும் இந்தப் பழக்கத்தினாலேயே பஞ்சாபிய மங்கையரிடன் கண்ணாடி பதித்த மோதிரம் இன்றும் காணப்படுகிறது.

கோமாதாவின் மீது பக்தி, கர்ப்ப காலத்தில் இறை சிந்தனை, காலையில் ‘கராக்ரே வஸதே லக்ஷ்மி கர மத்யே சரஸ்வதி கர மூலேது கோவிந்த: ப்ரபாதே கர தர்சனம்’ என்று ப்ராத ஸ்மரண ஸ்லோகம் சொல்லும் போது குல மங்கையர்கள் தங்கள் திரு முகங்களைப் பார்க்க உதவும் மோதிரம் ஆகிய அனைத்தையும் ஹிந்து பாரம்பரியத்தைக் காக்கும் உணர்வில் இணைக்கும் உண்மை வரலாறு தான் எவ்வளவு சுவையானது?! உலகில் கோ மாதாவை உள்ளார்ந்து அனைத்து விதத்திலும் போற்றும் நாடு பாரதம் ஒன்றே!

************

செவ்வாய், 26 மே, 2020

#குடசாத்திரி_போயிருக்கிறீர்களா?

கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகையை தரிசிக்க வருவோர் அவசியம் போய்ப் பார்க்கவேண்டிய அற்புத இடம் இது!

ஸ்ரீமூகாம்பிகைக் கோயிலை விட்டு வெளியே வந்து, தலையை உயர்த்தினால் போதும். சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குடசாத்திரி மலையைப் பார்க்கலாம். இங்குதான் ஆதிசங்கரர் ஸ்ரீமூகாம்பிகையைப் பார்த்து அழைத்து வந்தார் என்பர். அரிய மூலிகைகளும், புண்ணிய நதிகளும் கொண்ட ஸ்தலம் குடசாத்திரி மலை! இத்தனை விசேஷங்கள் இருந்தும் அநேகம் பேர் அங்கே போகாததற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

- ரிஸ்க்!

- காரும் போகாது!

- பஸ்ஸும் கிடையாது!

ஜாதகத்தில் ஆயுட்பாவமான எட்டாம் இடம் பலமாக உள்ளவர்களுக்கு மட்டும் ஜீப் கிடைக்கும் என்றார்கள். இந்த 'திகில்’ விவரங்கள் தெரிந்த உடனேயே 'பல்டி’ அடித்தேன். ''இங்கிருந்தே கும்பிட்டுக்கலாமே!'' என்றேன்.

''அப்பா! கட்டாயம் போயே ஆகணும்'' என்றான் என் மகன்.

''புரியாமல் உளறாதே! என் மாதிரி இளகின- பலவீனமான இதயம் உள்ளவர்களால் மலையெல்லாம் ஏற முடியாது. 'டிரெக்கிங்’ வேற இருக்காம்'' என்று நான் மறுபடியும் சொல்ல... ''இம்சை அரசன் மாதிரி புறமுதுகிட்டுப் பின்வாங்காதீங்கப்பா'' என்று வலுக்கட்டாயமாக இழுத்தான் மகன்.

திகில் பயணமும் திகட்டாத பேரின்பமும்..!

''இந்த மலை ஏற்றத்துக்கு உன் அம்மாவின் கால்முட்டி இடம் கொடுக்காதுடா...'' என்று நான் கரிசனமாகச் சொல்லி முடிப்பதற்குள், ''ஏங்க..! நான் அஹோபிலம் மலை மேலேயே நடந்திருக்கேன். இது என்ன ஜுஜுபி! இந்த மலையேற்றத்துக்கு நான் தயார்'' என்றாள் மனைவி.

வேறு வழி இல்லாததால் ஒரு ஜீப் பிடித்தோம், மலை மேல் ஏற! மேலே போய் திரும்புவதற்கு ரூ.2500 வாடகை என்றார் ஜீப் டிரைவர். எவ்வளவோ கெஞ்சியும் ஒரு பைசாகூட குறைக்கவே முடியாது என்று மலையாளத்தில் பிடிவாதம் பிடித்தார் டிரைவர்.

வேறு ஜீப்பும் உடனடியாகக் கிடைக்காததால், அந்த ஜீப்பிலேயே குடசாத்திரிக்குப் புறப்பட்டோம். ஸ்ரீமூகாம்பிகை கோயில் நிர்வாகத்தால் இயங்கி வரும் அன்னதானக் கூடத்தைக் கடந்து, இடது பக்கம் திரும்பினால் மலையேற்றம் ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் சாதாரண 'தார்’ சாலையில்தான் ஏறிக்கொண்டிருந்தோம். இருபுறமும், பச்சை பச்சையாக, உயரம் காண முடியாத மரங்கள் இது காட்டுப்பாதை என்பதை உணர்த்தின. அருகில் #சௌபர்ணிகா நதியும் எங்களுடனேயே வந்துகொண்டிருந்தது. நதியில் முழங்கால் அளவுதான் நீர் இருந்தது.

மலை உச்சிக்குப் போவதற்குள் இந்த நதி பற்றிக் கொஞ்சம் சொல்லிவிடலாம் என்று பார்க்கிறேன்.

சௌபர்ணிகா என்பது கருடனின் இன்னொரு பெயர். கருடனின் தாய் வினூத்தா, பந்தயம் ஒன்றில் தோற்று, அடிமையாகி, நிறையச் சிரமப்பட்டதால், மனச் சாந்தி வேண்டி இங்கே தவம் புரிந்தது கருடன். அதன் தவத்தை மெச்சிய தேவி அதற்கு தரிசனம் தர... குடசாத்திரியில் உருவான இந்த சாதாரண நதி #சௌபர்ணிகா என்னும் புண்ணிய நதியாகிவிட்டது.

திடுதிப்பென்று, எங்கள் பயணத்தில் சாலையின் முகம் மாறி, கரடு முரடாகியது. தாறுமாறாகக் குதித்துக் குதித்து ஓடியது ஜீப். உட்கார்ந்தபடியே, அகப்பட்ட கம்பிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம்.

''விட்டல் சார், இனி இந்த ரூட் பூரா இப்படித்தானா?'' என்று டிரைவரிடம் கேட்டேன். ''ம்ஹூம்!'' என்றார். ''போகப் போக இதைவிட இன்னும்கூட மோசமா இருக்கும். ஆனா, பயம் வேண்டாம்'' என்றார்.

ஆனால், நடுப் பிடரியில் 'ஜில்லிட்டது’ வியர்வை! காட்டுப் பகுதி கொஞ்சம் அடர்த்தியாய் மாற, திடீரென்று பாதையே இல்லாத மலை மீது, குத்துமதிப்பாக மையமாகப் போய்க்கொண்டிருந்தோம். ஜீப் கொஞ்சம் சாலையில் இருந்து தவறி இறங்கினாலும்... அதோ கதிதான்!

கடைசியில், ஒருவழியாக ஒரு சிறிய ஊருக்கு வந்து சேர்ந்தோம். சிலர் மலையில் இருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் துளிக்கூட பயம் என்பதே தெரியவில்லை! எங்களுக்குத்தான் இந்த திகில், பயம் எல்லாம்! எங்கள் உடம்பிலிருந்து வழிந்த வியர்வை உண்மை! கை, கால்கள் மற்றும் அடிவயிற்றில் ஏற்பட்ட நடுக்கம் உண்மை! மனசுக்குள் உண்டான வெதுக் வெதுக் உண்மை! முதல் தடவை என்பதால்தான் இப்படி பயந்தோம் என்று நாங்களே யூகித்துக்கொண்டோம்.

அந்தச் சிறிய ஊருக்கு மேல் ஜீப் போகாது என்பதால், மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். மலையின் அமைப்பு கொஞ்சம் ரம்மியமாக இருந்தது. சிறிது தொலைவுக்குப் பாதை இல்லாமல் பாறைகளும் மரங்களுமாக இருந்தது. பிறகு... மலை உச்சி! அங்கே போய்ச் சேருவதற்குள் குடசாத்திரி மலை பற்றிச் சொல்லிவிடட்டுமா?

மல்லிகை மலை என்பதுதான் குடசாத்திரியின் அர்த்தம். கடல் மட்டத்திலிருந்து 1343 மீட்டர் உயரம். வருடத்திற்கு எட்டு மாதங்கள் மழை இருக்கும். அங்கிருக்கும் காட்டுக்குள் புலி, சிறுத்தை, பாம்புகள் எட்டிப் பார்ப்பது உண்டு. 1862-ஆம் ஆண்டைய ரெக்கார்டுகளில், ஆங்கிலேயேர்கள் இம்மலையைப் பற்றித் தெளிவாகக் குறித்து வைத்திருக்கிறார்கள். ஒருமுறை, மலையில் இரும்புத் தாதுக்கள் இருப்பதால், சுரங்கம் தோண்டப் பார்த்தது அரசாங்கம். ஊரே கூடிப் போராடித் தடுத்துவிட்டார்களாம்.

சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு, மலை உச்சிக்கு வந்து சேர்ந்தோம். தூரத்தில்... நீலவானமும் கடலும் இணைந்து உடுப்பியும், மங்கணூரும் குத்துமதிப்பாய் அரபிக்கடல் அருகே எங்கள் பார்வைக்குத் தெரிந்தது.

அங்கிருந்து மேலும் 20 நிமிட பயணம். மீண்டும் ஒரு காட்டு வழிப் பாதை. அங்கே ஒரு கடைக்காரர் மோரும், தர்பூசணியும், வேர்கடலையும், விற்றுக் கொண்டிருந்தார். அங்கே ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தோம். ''இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?'' என்று, மோர்க்கடை நடத்துபவரிடம் கேட்டபோது, ''இப்படிப் போய் முதலில் குகை விநாயகரை பார்த்துவிட்டு வாருங்கள். அப்புறம் இங்கிருந்து நடந்தா பார்க்க வேண்டிய இடம் வரும்'' என்றார்.

அவர் சொன்னபடியே செய்தோம். மறுபடியும், காட்டுப் பகுதிக்குள் ஊடுருவி, மையமாய் நடந்தால்... மற்றொரு பரந்த பச்சைப்பசும் புல்வெளி. நடந்து நடந்து உடம்பில் அயர்ச்சி உருவானாலும், இதமான காற்று ஆதரவாக எங்களை வருடியது.

''பொல்யூஷன் இல்லாத நூறு சதவிகிதம் சுத்தமான காற்று'' என்றேன் நான்.

''இதுதான் தெய்விகக் காற்று'' என்றாள் மனைவி.

அங்கிருந்து இன்னொரு மலை உச்சி. 'ஏண்டா வந்தோம்’ என்று அலுத்துக்கொண்டே ஏறினால்..

ஒரு மண்டபம்!

இதை இப்படி அழைக்கக்கூடாதாம். 'சர்வஜன பீடம்’ என்றார்கள்! கோபுரம் இல்லை. கலசம் இல்லை. ஆகம விதிகள் ஏதுமில்லாமல் இருந்தாலும், அதைக் காணும்போது 'கஷ்டப்பட்டதுக்குப் பலன் இல்லாமல் இல்லை’ என்றுதான் எங்களுக்குத் தோன்றியது.

அந்த மண்டபத்தை நெருங்க நெருங்க, யாரோ உட்கார்ந்து வரவேற்பது போல இருந்தது. நெருங்கிவந்துவிட்டால்... அட! சாட்சாத் ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள்!

இது ஒன்றும் பெரிய ப்ரஹ்மாண்டமான சிலை இல்லைதான். கேதார்நாத்தில் அவரது பளிங்குச் சிலையைப் பார்த்திருக்கிறேன். கோகர்ணத்தில் கடல் பார்த்தபடி அவர் இருப்பதை தரிசித்திருக்கிறேன். ஸ்ரீசைலத்தில்கூட அவரை சிலை வடித்திருக்கிறார்கள். எவ்வித பூஜை புனஸ்காரங்கள், சிறப்பு தரிசனம், நேத்ர சேவா என்கிற அவஸ்தைகள் எல்லாம் இல்லாமல், அழகாய் அம்சமாய் இருந்தார் ஸ்ரீஆதிசங்கரர்!

இப்போது எங்களுக்கு அயர்ச்சி இல்லை. மலைகள் ஏறிய வலி மறந்தோம்! சோர்வு போயே போச்சு!

இருந்தாலும், 'இந்த மண்டபம், ஸ்ரீ ஆதிசங்கரர், இவ்வளவுதானா? இதற்கா இத்தனைப் பாடு?' என்று மனசு கேட்டது. கொஞ்சம் சத்தமாகக் கேட்டதோ என்னவோ, அங்கே இருந்த புரோகிதர் காதுகளில் இந்த கேள்வி விழுந்திருக்கும்போல! தானாக முன்வந்து, கன்னடம் கலந்த தமிழில் விளக்கினார்.

''இதே மாதிரியான பீடம் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் உள்ளது. அதை நிர்மாணித்தவர் பகவான் சங்கரர். அதற்கு வயது இரண்டாயிரம் இருக்கும். இங்கிருந்து தவமிருந்த ஆதிசங்கரருக்கு, இந்த கோலம் போட்ட இடத்தில்தான் ஸ்ரீமூகாம்பிகை தேவி தரிசனம் தந்தாள்'' என்றவர், பிளந்த கற்தரையில் போடப்பட்டிருந்த அந்தக் கோலத்தை எங்களுக்குக் காண்பித்தார். அவர் இட்டுக்கட்டி சொன்னாரோ என்னவோ, அது எங்களுக்குத் தெரியாது. ஆனால், அந்த இடத்தைத் தொட்டு வணங்கும்போது, தேவியின் பாதத்தில் விழுந்து சேவித்தது போலிருந்தது. மேலும், அவரே தொடர்ந்தார்...

''இங்கே எழுந்தருளிய தேவியை, தனது ஊரான காலடிக்குக் கூட்டிச் செல்ல நினைத்து, தாயை அழைத்தார், சங்கரர். 'சரி வருகிறேன். நீ முன்னால் போ, பின்னாடியே நான் வருவேன். எக்காரணத்தைக் கொண்டும் திரும்பி என்னைப் பார்க்கக் கூடாது’ என்று நிபந்தனையிட்டாள் தேவி. ஒப்புக்கொண்டு நடந்தார் சங்கரர். மலையை விட்டு இறங்கி, கொல்லூர் வந்தபோது, பின்னால் வந்துகொண்டிருந்த தேவியின் ஜல், ஜல் என்ற கொலுசு சத்தம் நின்றுவிட்டது. தன்னையறியாமல் சங்கரர் திரும்பிப் பார்க்க, கொல்லூரிலேயே தங்கிவிட்டாள் ஸ்ரீ மூகாம்பிகை...' என்று விளக்கம் சொன்னார் அவர்.

இந்தத் தகவல்களைச் சொன்ன புரோகிதர், ''இங்கே தேவியின் தரிசனம் கண்ட பிறகுதான் #சௌந்தர்யலஹரியை இயற்றினார் ஆதிசங்கரர்'' என்ற இன்னொரு உபரித் தகவலையும் எங்களிடம் தெரிவித்தார்.

அந்த இடத்தில் இருந்து தொடர்ந்து கொஞ்சம் ரிஸ்க் எடுத்து மலையேறினால், சௌபர்ணிகா நதி உற்பத்தியாகும் இடம் வரும் என்றார்கள். எங்களால் அதற்கு மேல் நடக்கத் தெம்பில்லை என்பதால், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழியை ஞாபகப்படுத்திக் கொண்டு, திரும்பி நடந்தோம்.

அப்போது எங்கள் மனத்தில் நிம்மதி இருந்தது. அமைதி நிரம்பியிருந்தது. கொல்லூரில் ஏற்படாத பரவசம் இங்கே உண்டாகியிருந்தது.

அனுபவித்துக்கொண்டே இறங்கினால், சட்டென்று மோர் கடை; மீண்டும் தொடர்ந்தால்... பெரிய இறக்கம்! முக்கால் மணி நேரம் மூச்சுப் பிடித்து ஏறியதை ஐந்தே நிமிடத்தில் இறங்கியது போலிருந்தது. ஜீப் நின்றிருந்த இடத்தை அடைந்தோம். மறுபடியும் ஜீப் பயணம். அதே அபாயகரமான சாலை. வயிற்றில் அமிலம் உண்டாக்கும் அதே இறக்கம். ஆனால், இப்போது பயம் எதுவும் தெரியவில்லை. காசு கொடுத்து, கஷ்டப்பட்டு நடந்து வந்தாலும், கஷ்டப்பட்டதற்கான பலன் கிடைத்த மகிழ்ச்சியை உணர முடிந்தது.

''பயணம் எப்படி இருந்தது?' - மனைவி கேட்டாள்.

''ஜென்ம சபால்யம் அடைந்தேன்!'' என்றேன்.

Copied
சிவ..சிவ" என்ற அந்த இரண்டு எழுத்து கூட போதும் பலன் உண்டு.
"சிவ..சிவ" என்ற அந்த இரண்டு எழுத்தை எங்க வேண்டும்னாலும், எந்த சூழ்நிலையிலும் சொல்லலாம்.

"யத் த்வயஷ்ரம் நாம் கிரேரிதம் ந்ருணாம் ஸ்க்ருத் ப்ரஸங்காத் அகம் ஆசுஹந்தி".

"த்வயஷ்ரம்" இரண்டு அஷரம். பிறகு, பஞ்சாக்ஷரமாக முன்னாடி ப்ரணவம், பின்னாடி நம: - இத முழுவதும் சொல்லனும் கூட இல்லை, வெறும் இரண்டெழுத்தை சொன்னா கூட போதும் "சிவ..சிவ".

எப்படி சொல்ல வேண்டும் ஸ்நானம் பண்ணி, மடி பண்ணி, மூச்சை அடக்கி...? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். "ஸ்க்ருத் ப்ரஸங்காத்" - அதாவது, ஏதோ  பேசும்போது தற்செயலாக "சிவ சிவ" என்று சொன்னாலே பலன் உண்டு. "ஸ்க்ருத்" - ஒரு தடவை, "ப்ரஸங்காத்" - அரட்டை அடிக்கும் போது. அகஸ்மாத்தா பேச்சுக்கு நடுவில் அந்த இரண்டு எழுத்து வந்தால்கூட  போதும், "சிவப்பு", "அரிசி வடாம்" என்றாலும், அதில் வரும் "சிவ" என்ற இரண்டு எழுத்து போதும்,

"அகம் ஆசு அந்தி" " அகம்" - பாபத்தை, "ஆசு" - உடனே, "ஹந்தி" -  அழித்து விடுவது. பேச்சுக்கு நடுவில் "சிவ" என்ற இரண்டு எழுத்து வந்தா கூட போதும், பாபத்தை அழித்து விடும். 

வேதத்தில் ஜீவரத்தினமாக "சிவ நாமத்தை" ரொம்பவும் ஜாக்கிரதையாக வைத்திருக்கிறது. நாலில் மத்தியாக யஜுர்வேதத்தில் (தைத்திரீய, க்ருஷ்ண), அதன் மத்தியில் நாலாவது காண்டம், அதன் மத்தியில் ஐந்தாம் ப்ரச்னம். இதன் நடுவில் "ஶ்ரீ ருத்ரம்", அதில் நடு நாயகமாக "பஞ்சாக்ஷரம்" வருகிறது. இதிலும் மையமாக "சிவ" என்ற த்வயஷ்ரம் வருகிறது. அதனால் எப்பொழுதும் "சிவ" என்ற இரண்டு எழுத்தை, அக்ஷரங்களை சொல்லி லோகமெல்லாம் சிவம் தழைக்க செய்ய வேண்டும்.

மஹா பெரியவா, தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி..
🙏வைணவத்தில் நவக்கிரகங்கள் உண்டா? இல்லையா?🙏

பெரும்பாலான வைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி என்று தனியாக ஒன்று இருக்காது!
சிவன் கோயில்களில் இருப்பது போல் நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது!

ஏன் என்று சிந்தித்து இருக்கீங்களா?

*தினமும் நாம் சொல்லும் வேங்கடேச சுப்ரபாதத்தில் நவக்கிரகம் பற்றி வரும்*

ஸ்லோகம் :-
சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா!!

த்வத் தாச தாச சரமாவதி
தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!!

நவக்கிரகங்கள் = ஒன்பது

சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது

திருமலையில் பெருமாளின் காலடியில் சந்திர கலை உள்ளது. சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலமாகத் திருப்பதி விளங்குகிறது!

பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது! (மதுரை கூடலழகர் ஆலயம், மற்றும் சில ஆலயங்கள் தவிர);

இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது!

அங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூசைகள் - பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு தான்!

சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூசையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்று விடும்!

வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்!

பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் - இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது! இவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்து கொண்டு இருப்பதாக ஐதீகம்!

படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) க்குக் கூட நிறைய ஆலயங்களில் தனியாகச் சன்னதி இருக்காது.

ஶ்ரீவைணவத்தில் பெருமாளின் அடியார்களுக்கும்,
அவரை பாடிய ஆழ்வார்கள், ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும்!

இதுவே அவரது அடியார்கள பெருமை! பெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே அதிக அதிகாரம் தரப்படுகிறது அதாவது மோட்சம் வழங்கும் அதிகாரம் வரை ஏன்?

அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும்,வலிமையும்
முன்னிறுத்தப்படும்.
அடியவரை முன்னிறுத்தினால் அன்பும், பக்தியும் தானே வளரும்!

அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு!
பெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது!
அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம்!

நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்!
அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு! ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை! அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் கட்டிகாக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.
அவரின் திருவுருவத்திலேயே நவ கிரஹங்களும் அடங்கி விடுகிறார்கள்!

பகவானின்
தசாவதாரத்தில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு!

சூர்யன் = இராமன்
சந்திரன் = கண்ணன்
செவ்வாய் = நரசிம்மர்
புதன்.        = கல்கி
வியாழன்.  = வாமானர்
வெள்ளி.    = பரசுராமர்
சனி =           கூர்மம்
ராகு.         = வராகம்
கேது.            = மச்சம்

அதே போல், 108 திவ்யதேசங்களில், ஒன்பது திவ்யதேசங்கள், நவக்கிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன

(திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)

சூர்யன் = திருவைகுண்டம்
சந்திரன் = திருவரகுணமங்கை
செவ்வாய் = திருக்கோளூர்
புதன் = திருப்புளிங்குடி
வியாழன் = திருக்குருகூர் (ஆழ்வார்                                      திருநகரி)
வெள்ளி = திருப்பேறை
சனி = திருக்குளந்தை
ராகு = திருத்துலைவில்லி மங்கலம்        
             (இரட்டைத் திருப்பதி)
கேது =திருத்துலைவில்லி மங்கலம்
            (இரட்டைத் திருப்பதி)

திவிஷத் பரிஷத் = தேவர்கள் கூட்டத்துக்கே
ப்ரதானா = முக்கியமாய், (அவர்களையே அடக்கும் சக்தி வாய்ந்த நவக்கிரகங்கள்)

தேவர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாய் நவக்கிரகங்கள் இருந்தாலும்,நவகிரஹங்கள்
கர்ம பலன்களைக் கொண்டு சென்று சேர்க்கும் அதிகாரிகளாக இருப்பதால் அவர்களுக்குப் யாரிடமும் பாரபட்சம் கிடையாது.

அவர்கள் தேவர்களையே அடக்கும் வல்லமை பெற்றவர்கள். அப்பேர்பட்ட நவக்கிரகங்கள்,

த்வத் தாச தாச = உன்னுடைய அடியார்க்கு அடியார்களிடம்.....

சரமாவதி தாச தாசா = அடியார்களாக இருந்து சேவை செய்கிறார்கள்.

இங்கு தான் அடியார்களின் பெருமை மின்னுகிறது!

இறைவனுக்குத் தானே அடியார்கள்?

அடியார்களுக்கே எப்படி அடியார் இருப்பார்கள்?

அதாவது பழுத்த தொண்டர்கள், இறைவனை
சகதொண்டர்களிட
"மும்" காண்பது!

அப்படிக் காண்பதால் அடியார்க்கு அடியார் ஆவது!
தொண்டர் அடிப்பொடி என்பர்!
( ஒரு ஆழ்வார் தன் பெயராகவே வைத்துக் கொண்டு உள்ளார்)

பகவத் கைங்கர்யம்என்னும் திருத் தொண்டில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் மகாபாவம்!

அதாவது ஒருவர் நம்மை விட கொஞ்சம் அதிக செல்வம் வைத்திருந்தால் அவர்மீது நமக்கு கொஞ்சமேனும் பொறாமை வரும்! அதை வெளிக் காட்டிக் கொள்வதும், காட்டாததும் அவரவர்
மனோநிலையைப் பொருத்தது!

அதுபோல் தான் ஒருவரின் கல்விச் செல்வம், பொருட் செல்வம் மட்டுமில்லை...
சாதாரண பின்னூட்டச் செல்வம் வரை இந்தப் பொறாமை வளரும் சக்தி பெற்றது!

இதை பக்தியில் கூட சிலர் வெளிகாட்டுவர்.அங்கு பொறாமை என்று இல்லாவிட்டாலும் உயர்ந்த பக்தி, தாழ்ந்த பக்தி என்றெல்லாம் தரம் பிரித்துப் பேசுவர்.

அடியார் கூட்டங்களில் அனைவரும் ஒன்றாகக் கூடி இறைவனை சேவிக்கும் போது, மற்றவர்களையும் சேர்க்க வேண்டும். நாம் மட்டும் தனியாக சேவிக்காமல் கூடியிருந்து குளிர வேண்டுமே - என்ன செய்வது?

அப்போது சக அடியார்களைப் பார்த்து நம் பக்தி சிறந்தது என்ற எண்ணம் துளிர் விட்டால்? ஏனெனில் அது மனித குணம் தானே!

அதனால் தான் அடியார்க்கு அடியார் ஆக வேண்டும் என்பது! சக அடியார்களிடமும் ஆண்டவனைக் காண்பது.
அடியார்க்கு அடியவராகி விட்டால் பொறாமை தலை தூக்காது.

அன்பு தான் தலை தூக்கும்!
அன்பு தலை தூக்கினால் தான் உள்ளத்தில் பக்தி வளரும்!
துவேஷம் தலை தூக்கினால் யுக்தி தான் வளருமே ஒழிய பக்தி வளராது!

பெருமாளைப் பார்த்து, அடியார்களாகிய நாம் பொறாமைப் படுகிறோமா?

இல்லையே!

அது போலத் தான் அடியார்களைப் பார்த்து, அடியார்க்கு அடியார்களும்!

இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இப்படி இறைவனே தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதால், தொண்டர்களுக்குத் தொண்டர்கள் ஆகின்றன நவக்கிரகங்கள்.

அதாவது.....
சரமாவதி தாஸ்யம் என்பார்கள்;

அதனால் தான் சரமாவதி தாச தாசா என்கிறது ஸ்லோகம்.

நவக்கிரகங்களும் அடியார்களின் கர்ம பலனைக் கொடுக்கும் போதும், அவர்களின் பற்றற்ற நிலையினைப் பார்த்து, "பரிவுடனே" கொடுக்கின்றன!

எப்படிக் கொடுக்கின்றன?

சரமாவதி தாச தாசா என்று கொடுக்கின்றன.

ஒரு தாசன் எப்படிப் பணிந்து பக்தியுடன் கொடுப்பானோ, அப்படிக் கொடுக்கின்றன!

அடியார்க்கு அடியாராய்,
அவை நல்ல நல்ல நல்ல,
என்று கொடுக்கின்றன!
*சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.                       அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்*.

*ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்*.
*“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்*.

*அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்*.

*“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்*.

*நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்*.

*அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார்*.

*“அது என்ன ?! ” என்று கேட்டான் அர்ஜுனன்*.

*“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர்*.

*பல ஆண்டுகள் கழிந்தன*.

*மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்*.

*“அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்*.

*அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்*.

*கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்*.

*அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்*.

*அதுவும் வெறும்  சாதாரணத் திருடர்களிடம்*

*வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர்*.

*“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர்*.

*"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது*.

*இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்*.

*அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்*.

*மேலும் , “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய்*.

*ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்*.

*அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து , காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்*.

*இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது*.

*இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”*
                   
*( பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்*.

*இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல :’ என்று அழைக்கப்படுகிறார்*.
🙏ஓம் நமோ நாராயணாய 🙏
சிதம்பரத்துல பஞ்சாட்சர யந்திரம், அன்ன ஆகர்ஷண யந்திரம்னு ரெண்டு யந்திரங்கள் உண்டு. இந்த ரெண்டையும் பிரதிஷ்டை செஞ்சு வழிபட்டவர் ஆதிசங்கரர்.

சிதம்பரம் க்ஷேத்திரத்தை, பூலோக கைலாசம்னு சொல்வாங்க.

சுமார் 250 வருஷத்துக்கு முன்னால, காஞ்சி சங்கர மடத்தோட ஆச்சார்யாளுக்கும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கும் சின்னதா சர்ச்சை உண்டாச்சு.

விபூதியை நாங்க கொடுத்து, அதை ஆச்சார்யாள் வாங்கிக்கணும்னு சொன்னாங்க,
சிதம்பரத்து தீட்சிதர்கள் ,

தீட்சிதர்களான நாங்கள், கைலாச பரம்பரையைச் சேர்ந்தவங்க. அதனால, நாங்க கொடுக்கிற விபூதியைத்தான் எல்லாரும் வாங்கிக்கணும்!” – இது அவங்களோட வாதம்.

ஆனால் "சங்கர மடத்தோட ஆச்சார்யாள், ஜகத்குரு , எதையும் கை நீட்டி வாங்கிக்கற சம்பிரதாயம் கிடையாது!" – இது சங்கர மடத்தோட கருத்து.

சிதம்பரம் தீட்சிதர்கள் இதுல பிடிவாதமா இருக்கவே, காஞ்சி மடத்தோட ஆச்சார்யாள் யாரும் சிதம்பரம் கோயிலுக்குப் போறதில்லை. வெளியே இருந்தபடியே தரிசனம் பண்ணிட்டு, அப்படியே அடுத்தடுத்த ஊர்களுக்குப் போயிடுவாங்க. இப்படித்தான் பல வருஷமா நடந்துகொண்டிருந்தது

அப்புறம்… 1933-ஆம் வருஷம், தீட்சிதர்களுக்கு என்ன தோணித்தோ… ‘சுவாமிகள் எங்க கோயிலுக்கு வரணும்’னு ஆசைப்பட்டாங்க. ஊர் ஜனங்களும், ‘பெரியவாளை எப்படியாவது கோயிலுக்கு வரவழைச்சுடணும்’னு ஏங்கினாங்க.

தீட்சிதர்களோட வேண்டுகோள், பெரியவாகிட்ட வந்துது. பெரியவாளுக்கும், பழைய கசப்பான சம்பவத்தையெல்லாம் எல்லாரும் மறந்து, சுமுகமான உறவோட இருக்கணும்னு விருப்பம்.

அதனால, சிதம்பரம் கோயிலுக்கு வர்றதுக்கு சம்மதம் தெரிவிச்சார். கோபதாபங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் காஞ்சி மகான்; கருணைத் தெய்வம்!

அதன்படி, சிதம்பரத்துக்கு வந்துசேர்ந்தார் பெரியவா. விடியற்காலைல… யார்கிட்டயும் எதுவும் சொல்லாம, நேரா விறுவிறுன்னு கோயிலுக்குப் போயிட்டார்.

அங்கே… சிவகங்கை தீர்த்தக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, நித்திய அனுஷ்டானத்தையும் முடிச்சிண்டு, நேரா நடராஜர் சந்நிதிக்குப் போய் நின்னுட்டார்.

அப்பத்தான் உஷத் கால பூஜைக்குத் தயாராகிட்டிருந்தாங்க தீட்சிதர்கள். சுவாமிகளைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டுது அவர்களுக்கு! சாட்சாத் பரமேஸ்வரனே தரிசனம் தர்றதுபோல எண்ணிப் பரவசமானாங்க. பெரியவாளை இத்தனை நெருக்கத்துல பார்த்த சந்தோஷத்துல, தங்களையே மறந்துபோய் சிலையா நின்னுட்டாங்க.

அப்புறம், ஒருவழியா நிதானத்துக்கு வந்தவங்க, பூர்ண கும்ப மரியாதையெல்லாம் செஞ்சு, எந்தக் குறையும் இல்லாம பெரியவாளை நமஸ்காரம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டாங்க.

அதேநேரம்… சிதம்பரம் கோயிலுக்குள் காஞ்சிப் பெரியவா வந்திருக்கிற தகவலைக் கேள்விப்பட்டு, ஊர் ஜனங்க மொத்தமும் திபுதிபுன்னு கோயி லுக்குள்ளே வந்துட்டாங்க. எல்லாரும் பெரியவாளை தரிசனம் பண்ணி, சிலிர்ப்பும் தவிப்புமா நிக்கறாங்க. ‘இந்தச் சம்பவம் நடக்காதா? காஞ்சி மகானை கண்ணாரப் பார்க்கற பாக்கியம் பெற்றார்கள்.

சரி… சிதம்பரத்துக்கு வந்தாச்சு; எல்லாரையும் பார்த்தாச்சுங்கறதோட பெரியவா கிளம்பிடலை. அடுத்த நாள் துவங்கி, பதினைஞ்சு நாளைக்கு, ஆயிரங்கால் மண்டபத்துல தங்கி, உபந்யாசம் பண்ணினார் பெரியவா. சிதம்பரத்து தீட்சிதர்களுக்கும் ஊர் மக்களுக்கும் பரம சந்தோஷம்!

காஞ்சி மகான்,  வேற யாரும் செய்யாத, சுவாமிகள் மட்டுமே செஞ்ச காரியம் இது. ‘இருநூத்தம்பது வருஷத்துல… பீடத்துல இருந்தவா யாருமே சிதம்பரம் கோயிலுக்குப் போனதில்லை. நாம மட்டும் போய், எதுனா பிரச்னையை உண்டாக்கணுமா?’ன்னெல்லாம் அவர் யோசிக்கலை. ‘செயற்கரிய செய்வோர் பெரியோர்’னு சொல்வாங்களே… அப்படித்தான் அமைஞ்சுது இந்தச் சம்பவம்!

சிதம்பரம் கோயில்ல, நடராஜ பெருமானை தரிசனம் பண்ணினப்ப, பெரியவா சங்கல்பம் ஒண்ணு செஞ்சுண்டார். அதாவது,

நடராஜர் பாதத்திற்கு ,
"தூக்கிய திருவடி’ என்பார்கள்
அந்தக் குஞ்சிதபாதத்துக்கு நவரத்தினக் கவசம் ஒண்ணு சார்த்தணும்னு பிரார்த்தனை பண்ணிண்டார்.

அதுக்கப்புறம், சுமார் 20 வருஷம் கழிச்சு, நவரத்தினத்தாலான கவசத்தை, குஞ்சிதபாதத்துக்குச் சார்த்தி, தன் ஆசையை, பிரார்த்தனையை பூர்த்தி செஞ்சுண்டார் பெரியவா.

அன்று திருவாதிரை!

தீட்சிதர்களுக்கெல்லாம் மனம் கொள்ளாத பூரிப்பு; முகம் முழுக்க அப்படியரு சந்தோஷம். ஆடல்வல்லான் நடராஜபெருமானை, நவரத்தின கவசம் சாத்தின அலங்காரத்துல பார்த்துட்டு, சிதம்பரத்து மொத்த மக்களும், மெய்ம்மறந்து நின்றார்கள்

ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா :
ஓர் இரவு உணவின் போது பகவான், "நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கா?" என்று கேட்டார்.

கிச்சனில் தேடிப் பார்த்துவிட்டு 'இல்லை' என்று கூறினார்கள்.

சின்னசுவாமி கடிந்து கொண்டார்.

மறுநாள் ஆஸ்ரம ஆபிஸில் இருந்து ஜி.எல்.நரசிம்மராம்,ஆஸ்ரமத்தில் இருந்து அனுப்ப இருக்கும் அன்றைய தினக் கடிதங்களைப் பகவான் பார்வைக்கு வழக்கம் போல் கொண்டு வந்தார்.

அதில் ஒரு கடிதம் சர்வாதிகாரியால் மதுரை அன்பர் ஒருவருக்கு ஒரு கூடை நார்த்தங்காய் வாங்கி அனுப்பும்படி வேண்டியிருந்தது.

அதைப் படித்தவுடன் பகவான் முகத்தில் கடுமையேறியது.

"இவாளுக்கெல்லாம் நார்த்தங்காயிலே தான் மோக்ஷமிருக்கு போலே! இல்லைன்னா அதை ஏன் வேண்டனும்... இவ்வளவு பிரயாசைப்படணும்.

நமக்கு அது பிராப்தம்னா அதா தேடி வராதோ!

நல்லது.உங்க இஷ்டம் போலே பண்ணிக்கோங்க" என்றவாறு கடிதத்தைத் தூக்கி வீசினார்.

கடிதங்களைக் கொண்டு வந்தவர் பதில் கூறாமல் வெளியேறவும், ஒரு ரயில்வே காண்டிராக்டர் சீல் வைக்கப்பட்ட இரு கூடைகளுடன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அது ரயில்வேயில் ஆர்.ஆர்.இல்லாமல் ஆசிரமத்திற்கு வந்த பார்சலாகும்.

அதைப் பார்த்தவுடன் பகவான் முகம் மாறியது.

நகைச்சுவையாக, "பாரும் ஓய்! அது நார்த்தங்காயா இருக்கப் போறது! பிரிச்சுப் பாரும்"என்றார்.

அந்த கூடை பிரிக்கப்பட்டது.அது நார்த்தங்காய் தான்.

அது ஊறுகாய் போட கிச்சனுக்கு அனுப்பப்பட்டது.

சில நிமிடங்கள் சென்றவுடன் பகவான், "ஒரு கூடை தான் நார்த்தங்காயா இருக்கப்போறது, மத்தது ஆரஞ்சா இருக்கும். பார்க்கச் சொல்லு!" என்றார்.

பகவான் கூறியது போலவே மற்றொரு கூடையிலே ஆரஞ்சு இருந்தது.

அது அனைவருக்கும் பகிரப்பட்டது.
 தசாவதாரம் ஒன்பது கிருஷ்ண அவதாரம்.
**********************************************************************

நேற்றைய  தொடர்ச்சி பாகம் மூன்று....

பசுக்கன்றுகளின் பாதத்தில் ஒட்டியிருந்த தூசை குழந்தையின் உடல் மீது தூவினார்கள். இதன் பிறகு கிருஷ்ணரை நாராயணின் 22 திருநாமங்கள் சொல்லி பாதுகாப்பு தருமாறு வேண்டினார்கள். நாராயணின் 22 நாமங்க ளை சொல்வோர் அருகில் எந்த கெட்ட சக்திகளும் நெருங்குவ தில்லை என நம்பிய கோகுல மக்கள், மணி மான், யக்ஞர், அச்யுதா, ஹயக்ரீவர், கேசவா, விஷ்ணு, உருக்ரமா, ஈஸ்வரா, சக்ரதாரி, கதாதரா, மதுசூதனா, குபேந்திரா, தாரக்ஷயா, ஹலாதரா, ஹ்ருஷிகேசா, நாராயணா, ப்ருஷ்ணிஹர்பா, யோகேஸ்வரா, புருஷோத்த மா, கோவிந்தா, மாதவா, வைகுண்டாதிபதி, என்ற நாமங்களால் அவரைப் பூஜித்தனர். இந்த நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பூதனா கொடுமைக்காரியாக இருந்தாலும் கூட, குழந்தைகளை கொன்றவள் என்றாலும் கூட, கடைசி நேரத்தில் கிருஷ்ணருக்கு பாலூ ட்டிய காரணத்தால் அவள் வைகுண்டத்தை அடைந்தாள். அவளுக்கும் முக்தியும் கிடைத்த து. அவளது உடலை கோகுலவாசிகள் எரித்த போது, அதிலிருந்து நறுமணம் கிளம்பியது.

கிருஷ்ண அவதாரம்  நாட்கள் கடந்தன. கிருஷ்ணருக்கு ஒரு வயதா னது. இந்த நிகழ்வை யசோதா மிக சிறப்பாகக் கொண்டாடினாள். வாத்தியங்கள் முழங்கின. ஆயர்குல மக்கள் ஒருவர் விடாமல் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பிராமணர்கள் வேத பாராயணம் செய்தனர். யசோதா மகனை அன்போடு நீராட்டினாள். வேத மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்த போது, கிருஷ்ணர் அப்படியே கண்ணயர்ந்தார். யசோதை குழந்தையை மடியில் வைத்திருந் தாள். குழந்தை உறங்கி விட்டதால், ஒருபட்டு மெத்தையை தரையில் விரித்து ஒரு வண்டியி ன் கீழே நிழலில் குழந்தையை படுக்க வைத்தாள். பின்னர், மற்ற வேலைகளைக் கவனிக்க வீட்டுக்குள் போய்விட்டாள். சற்று நேரத்தில் கிருஷ்ணர் விழித்து விட்டார். சாதாரண குழந்தைக்குரிய இயல்புடன் அழ ஆரம்பித்தார். கால்களை உதைத்தார். அவை பார்ப்பதற்கு பிஞ்சுக்கால்கள், ஆனால், அதன் சக்தி தாளாமல், அருகில் இருந்த வண்டியே நொறுங்கி விட்டது. சப்தம் கேட்டு வெளியே வந்த யசோதையும் மற்ற ஆயர்குல பெண்களும் இது என்ன விந்தை என்று மூக்கின் மீது விரலை வைத்தனர்.

யசோதைக்கு பயம் வந்துவிட்டது. வேதம் ஓத வந்த அந்தணர்களிடம், ஐயன்மீர்,  இந்தக் குழந்தை பிறந்தது முதல் இப்படித்தான் அற்புதமான செயல்களைச் செய்கிறான். ஓர் அரக்கியையே கொன்றான். இப்போது, உங்கள் கண்முன்னால் வண்டியை நொறுக்கி விட்டான். எனவே குழந்தையின் மீது எதுவும் அண்டாமல் மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்ய வேண்டும் என வேண்டினாள். அவ்வாறே வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓதினர். அவர்களு க்கு நிறைய பரிசுகளை அள்ளிக் கொடுத்தார் நந்தகோபர். பூதனாவை கிருஷ்ணர் கொன்று விட்டார் என்பதையறிந்து கம்சன், த்ருணாவ ர்த்தன் என்ற கொடிய அரக்கனை அனுப்பினா ன். இவன் பறக்கும் வல்லமையுள்ளவன். இவன் வேகமாக மூச்சுவிட்டால் சூறாவளியாக மாறிவிடும். அந்த கொடுமைக்காரன் கோகுல த்துக்குள் புகுந்தானோ இல்லையோ, கோகுல த்தில் பெரும் புயல் வீசியது. எங்கும் புழுதி மண்டலம். ஒருவருக்கொருவர் முகத்தையே பார்க்க முடிய வில்லை. இதைப் பயன்படுத்தி, கிருஷ்ணரை தூக்கிக் கொண்டு உயரே பற ந்து விட்டான் அசுரன். யசோதை கிருஷ்ணரை காணாமல் அழுதாள். ஐயோ,  என் மகன் புழுதி புயலில் சிக்கிக் கொண்டானோ,  அவன் எங்கே?..  என அரற்றினாள். த்ருணாவர்த்தன் உயரே சென்று குழந்தையை தூக்கி வீச எத்தனித்தான். குழந்தை அவனை விட்டால் தானே, குழந்தையின் கைகள் விஸ்தாரமாக விரிந்தன. வர்த்தனின் கழுத்து அதன் பிடியில் சிக்கியது. அப்படியே கழுத்தை இறுக்கிய குழந்தை அவனை வதம் செய்தது. அவன் கீழே விழுந்தான். புயல் அடங்கியது. கீழே விழுந்து கிடந்த அசுரனை கோகுலவாசி கள் பார்த்தனர்.

கிருஷ்ணர் அவன் உடல் மீது விளையாடிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இது தெய்வ குழந்தையாக இருக்குமோ என எண்ணினர். இதை நிரூபிக் கும் வகையில், அடுத்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் மணலை அள்ளி தின்று கொண்டிருந்தார். யசோதை அவரைக் கண்டித்தாள். கண்ணா என்னிடம் நீ ஓடோடி வந்தால், நான் பால் தரு வேனே, ஏன் மண்ணைத் தின்கிறாய் ? என்று செல்லமாய் கண்டித்தாள். அன்று கிருஷ்ணர் அவளது கண்களுக்கு பூரண லட்சணமாய் தெரிந்தார். அதுகண்டு பூரித்த அவளது மார்பு களில் பால் நிறைந்தது. அதை அன்போடு ஊட்ட முயன்றாள். கிருஷ்ணர் வாய் திறக்க மறுத்தார். அவரது வாயை கட்டயாப்படுத்தி திறந்தாளோ இல்லையோ, வாய்க்குள் அண்ட சராசரமும் சுழன்று கொண்டிருந்தது. நந்தகோபரிடம், இந்த அதிசய நிகழ்ச்சியை எடுத்துச் சொன் னாள் யசோதை. நந்தருக்கும் குழந்தையைப் பற்றிய கவலை அதிகரித்தது. குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்தால் என்ன என்று தோன் றியது. ஜாதகம் கணிப்பதில் மிகச்சிறந்த ஞானியாக திகழ்ந்தவர் கர்கமுனிவர். அவரை வரவழைத்து உபசரித்து பின்பு நந்தகோபர், கிருஷ்ணரின் ஜாதகத்தை மட்டு மின்றி, ரோ கிணியின் மகனான பலராமனின் ஜாதகத்தை யும் கொடுத்தார். ஜாதகத்தைப் பார்த்த முனிவர் அதிர்ந்தே போய்விட்டார். நந்தகோபரும், யசோதையும் இதுவரை கிருஷ்ணன் தங்கள் பிள்ளை தான் என எண்ணி கொண்டிருந்தனர். தனக்கொரு பெண் குழந்தை பிறந்ததும், அது கூடையில் சுமக்கப்பட்டு கம்சனின் மாளிகைக்கு சென்ற தும், சிறையில் பிறந்த கிருஷ்ணன் தன்னரு கே படுக்க வைக்கப்பட்டதையும் யசோதையும் அறியமாட்டாள்.

தான் பெற்ற மகன் என்றே அவள் எண்ணியி ருந்தாள். ஆனால், கிருஷ்ணர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்பதை உணர்ந்து விட்டார் கர்கமுனிவர் பலராமனும் தேவகியின் வயிற்றில் கருவாகி,ரோகிணியின் கர்ப்பத்தி ற்கு மாற்றப்பட்டவன் என்பது தெரிந்தது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு தந்தை வாசுதேவர் என்பதை புரிந்து கொண்டு விட்டார் கர்கமுனிவர். இதை நந்தகோபரிடம் தெரிவித்தும் விட்டார். நந்தகோபரே, இக்குழந்தை சாதாரண பிறவி யல்ல. அந்த விஷ்ணுவின் அம்சம். ஒரு பிறவி யில் சிவப்பாக இன்னொரு பிறவியில் மஞ்ச ளாகவும், இப்போது கருப்பாகவும் பிறந்திருக் கிறார். மனிதர்களுக்குள் நிறபேதம் இருக்கக் கூடாது. என்பது அவரது எண்ணமாக இருக்க லாம். ஆனால், அவர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்று ஜாதகம் சொல்கிறது. உம் மனைவி யசோதைக்கு ஒரு பெண் குழந்தை தான் பிறந்திருக்கிறது. அவள் துர்க்கை என்னும் தெய்வமாக மாறிவிட்டாள். பெற்ற பிள்ளையே தன்னுடையது இல்லை என்பதும், தனக்கு பிறந்த குழந்தை தெய்வமாகி விட்டது என்பதையும் அறிந்தபிறகும் எந்த சலனத்தை யும் அவர் காட்டவில்லை. மாறாக விஷ்ணுவே, தன் மகனாய் வளர்வதில் மிகுந்த மகிழ்ச்சியைத் தான் அடைந்தார். பலராமரும், கிருஷ்ணரும் இப்போது தங்கள் பால்ய லீலைகளைத் துவங்கி விட்டார்கள். கோபியரின் வீடுகளுக்குள் நுழைவார்கள். பசுக்கள் பால் பொங்கும் மடுவுடன் காட்சி தருவதை பார்த்து மகிழ்வார்கள. கன்றுகளை யாருக்கும் தெரியாமல் அவிழ்த்து விடுவார் கள். அவை மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று தாயில் மடியில் சுரந்து நிறைந்திருக்கும் பாலைக் குடிக்கும். அதுகண்டு கைகொட்டி ஆனந்தமடைவார்கள்.

பின்பு, கோபியரின் வீட்டுக்குள் புகுந்து வெண்ணெயைத் திருடுவார்கள். அதை குரங்குகளுக்கு கொடுப்பார்கள்.கோபியர்கள் அவர்களின் புத்திசாலித்தனத்தை ரசிப்பார்கள்  அதே நேரம், திருடுவது தவறு என கண்டிப்பார்கள். யசோதையிடம் ஒருத்தி சென்றாள். அம்மா யசோதா, உன்மகன் என் வீட்டில் வெண்ணெய் திருட வருகிறான் என்று பானையை இருளில் ஒளித்து வைத்தேன். அவன் என்னடா வென்றால், தன் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளின் ஒளியிலேயே அந்தப் பானையை கண்டுபிடித்து விடுகிறான். பானை காலியாகி விட்டது, என்றாள். சரி... சரி... அவன் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை இனி கழற்றி விடுகிறேன், என்றவள் கிருஷ்ணரைக் கண்டிப்பதற்காக கையை ஓங்கினாள். பால் வழியும் முகத்துடன் அந்த சிங்காரக்கண்ணன், அவளை ஒரு அன்பு பார்வை பார்க்கவே, கை தானகவே கீழே வந்து விட்டது. வசுக்களில் ஒருவரான துரோணர் (இவர் மகாபாரத துரோணர் அல்ல) என்பவர் தரா என்ற தன் மனைவியுடன் வசித்தார். அவர் களிடம் பிரம்மா, நீங்கள் இருவரும் உலகத்தை விருத்தி செய்யனும் என உத்தரவிட்டார்.

அப்போது அவர்கள், தந்தையே, நீங்கள் கூறும்  உத்தரவின்படி நடக்கிறோம். எங்களுக்கு நீங்கள் ஒரு வரம் தரவேண்டும். மகா விஷ்ணு வை நாங்கள் நேசிப்பது தங்களுக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார் ? என்னென்ன சேஷ்டைகள் செய்வார் என்பதை நாங்கள் கண்குளிரக் காண வேணடும். பிற்காலத்தில், அவரது இந்த சேஷ்டைகளையெல்லாம் படிப்போரும், கேட்போரும் பாவ விமோசனம் பெற வேண்டும், என்றார். அந்தப் பிறவியில் அப்படி நடக்காதென்றும், மகாவிஷ்ணு பூலோகத்தில் நடக்கும் அநியா ங்களை தடுத்து நிறுத்த, மானிட ரூபத்தில் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் போது, அந்தப் பாக்கியம் உங்களுக்கு கிடைக்குமென்றும் சொன்னார் பிரம்மா. அதன்படி இப்பிறவியில் அந்த தம்பதியர் நந்தகோபர் - யசோதையாக கோகுலத்தில் அவதரிக்க, அவர்களிடத்தில் கிருஷ்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்து பால்ய பருவத்தை கழிக்க வந்திருக்கிறார். யசோதையின் வீட்டில் பல வேலைக்காரிகள் உண்டு. அதில் வீட்டு வேலை செய்பவளுக்கு, அன்று கடுமையான வேலை இருந்தது. எனவே, வெண்ணெய் கடையும் பொறுப்பை யசோதை எடுத்துக் கொண்டாள். அவள் மன மெல்லாம் கிருஷ்ணன் நிறைந்திருந்தான். கிருஷ்ணன் செய்யும் சேஷ்டைகளை பாடிய படியே அவனது நினைவில் மூழ்கிப்போனாள்.

அப்போது, அவளையறியாமல் அவளது மார் பில் பால் சுரந்தது. அந்நேரத்தில் கிருஷ்ணர் வந்தார். தாயிடம், வெண்ணெய் கடைவதை நிறுத்தி விட்டு, தனக்கு பாலூட்ட வேண்டுமெ ன்ற தன் ஆசையை குறிப்பால் தெரிவித்தார். இதை உணர்ந்த யசோதையும் கிருஷ்ணருக்கு பால் புகட்டினார். அந்த நேரத்தில் அவள் அடுப்பில் வைத்திருந்த பால் கொதித்து வழிய ஆரம்பிக்கவே, குழந்தையை ஒதுக்கி விட்டு அடுப்பை நோக்கி ஓடினாள் யசோதா. எனவே, கிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. அவரது முகம் கோவைப் பழமாகச் சிவந்து விட்டது. ஒரு கல்லை எடுத் தார். எறிந்தார்; அம்மா விட்டுச் சென்றிருந்த வெண்ணெய் தாழி உடைந்தது. சிந்திய வெண்ணெய் ஒரு கை நிறைய அள்ளிக் கொண்டார். ஒரு தனியிடத்திற்கு போனார். தலைகுப்புற கவிழ்த்தப்பட்டிருந்த ஒரு உரலில் அமர்ந்து வெண்ணெய்த் தின்ன ஆரம்பித்து விட்டார். பசி பொறுக்க மாட்டார் போலும் நம் சின்னக் கண்ணன். பகிர்ந்துண்ணும் குணம் அவரை விடுமா. அங்கே வந்த குரங்குகளுக்கும் கொடு த்தார். யசோதா பால் பானையை இறக்கி வைத்து விட்டு திரும்பினான். பானை உடைந் திருந்தது. கிருஷ்ணன் தான் இதைச் செய்திருப்பான் என்பதை அவள் அறிவாள்! அந்தப் பொல்லாதவனைத் தேடினாள். தூரத் தில் உரல் மீது அமர்ந்திருந்தான். அவனைப் பிடிக்க ஓடினாள். அவன் அவளுக்கு போக்கு காட்டிவிட்டு ஆங்காங்கே மறைந்து கொண்டான். அவள் மீது கொண்ட அன்பு காரணமாக அவனே அவளது பிடியில் சிக்கிக் கொண்டான்.

மாயனே, வசமாக சிக்கினாயா?,

வெண்ணெயை எவ்வளவு சிரமப்பட்டு கடைந்தேன். நீயோ, அதை எவ்வளவு எளிதாக உடைத்து விட்டாய். உன்னைக் கட்டிப்போட்டால் தான் சரி வருவா ய் போலும்,  என்றவள் கயிறை எடுத்தாள். அவனை இழுத்து வந்து கட்டிப் போட முயற்சி த்தாள். கயிறு போதவில்லை. இன்னும் சில கயிறுகளை எடுத்து வந்து சேர்த்து கட்டினாள். என்ன அதிசயம், எப்படி கட்டினாலும் கயிறின் நீளம் கூடவே இல்லை. அவள் சோர்ந்து விட்டாள். இப்போதும் கிருஷ்ணர் அவள் மீது கிருபை வைத்தார். அவளது அன்புக்கு கட்டுப் பட்டார். கயிறு நீளமானது. யசோதைக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும், அந்தக் குறும்புக் காரரை கட்டிப்போட்டாள். வேலையைப் பார்க்க போய் விட்டாள். அங்கே இரண்டு அர்ஜுன மரங்கள் இருந்தன. கண்ணனை வணங்கி அவை பேச ஆரம்பித்தன. பரந்தாமா, நாங்கள் நிதிகளுக்கு அதிபதியான குபேரனின் மக்களான நளகூவரன், மணிக்ரீவன். எங்களை நாரத மகரிஷி சபித்து விட்டார். எங்களின் இந்த ரூபத்தைக் மாற்றி சுயரூபம் தர வேண்டும், என வேண்டிக்கொண் டன அந்த மரங்கள். உலகத்து செல்வம் அனை த்தையும் குவித்து வைத்திருக்கும் குபேரனின் பிள்ளைகள் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்ச மல்ல .

பணமுள்ளவனிடம் மூன்று பழக்கங்கள் பிரதா னமாக இருக்கும். மது, மாது, சூது ஆகியவை யே அவை. இதில், முதல் இரண்டிலும் ஊறிக் கிடந்தார்கள் கூவர க்ரீவர்கள். ஒருமுறை, பல பெண்களுடன் ஒரு குளத்தில் ஜலக்ரீடையில் ஆழ்ந்திருந்தனர். அந்தப் பெண்களும் ஆடை கலைந்து போதையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த நாரதரை மதிக்கவில்லை. இதை கண்ட நாரதர்,  இருவரையும் அர்ஜுன மரமாகு ம் படி சபித்து விட்டார். மேலும் இருவரும் தேவர்கள் என்பதால், அவர் களுக்கு விஷ்ணுவின் தரிசனம் மூலம் விமோ சனம் கிடைக்க வேண்டும் என்பதே நாரதரின் விருப்பம். அவர்களை மரமாக மாறும்படி சபித்துவிட்டார். பகவான் நாராயணன், கிருஷ் ணாவதாரம் எடுத்து பூமிக்கு வரும்போது தான், உங்களுக்கு சுயரூபம் கிடைக்கும் என சொல்லி விட்டார். கிருஷ்ணர் உரலை இழுத்துக் கொண்டு நெரு ங்கி நின்ற மரங்களுக்கிடையே சென்றார். அவரது ஸ்பரிசம் பட்டதோ இல்லையோ, அந்த தேவர்கள் உயிர் பெற்று பகவானை வணங்கி, இனி தவறு செய்வதில்லை என உறுதியளி த்து விடை பெற்றனர். பின்னர் உயிரற்ற அந்த மரங்களை இழுத்துச் சாய்த்தார் கிருஷ்ணர். மரங்கள் சாயும் சப்தம் கேட்டு நந்தகோபரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். குழந்தை காயமின்றி தப்பியதைப் பார்த்து ஆனந்தம் கொண்டனர். இந்த அதிசயம் நிகழ்வுகளும், கிருஷ்ணர் அதில் இருந்து தப்பித்து வருவதும் நந்தகோபரின் சகோதர ரான உபநந்தருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி யது. அவர் கோபாலர்களின் சபைக்கூட்டத்தை கூட்டினார்.

கோபாலர்களே ! கிருஷ்ணன் அரக்கர்களிட மிருந்து பலமுறை தப்பிவிட்டான். ஆனால், எப்போதுமே இப்படி தப்பமுடியும் என சொல்ல முடியாது. நம் குழந்தைகளுக்கு பலமுறை ஆபத்து வந்து விட்டது. இனியும், நாம் கோகுல த்தில் வசிப்பது உசிதமல்ல. மனிதர்களுக்கு இறைவன் அவ்வப்போது சில எச்சரிக்கைக ளைத் தருவான்.  அதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப நம் செயல்களை மாற்றி கொள்ள வேண்டும். எனவே, நாம் யமுனை நதிக்கரை யிலுள்ள விருந்தாவனத்திற்கு சென்று விடுவோம். அங்கு கோவர்த்தனம் என்ற மலை இருக்கிறது. அந்த மலையில் நம் பசுக்களுக்கு தேவையான புல் செழித்துக் கிடக்கிறது. புறப்படுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்றார். உபநந்தரின் கருத்தை மக்கள் ஏற்ற னர்.அவர்கள் விருந்தாவனத்தை அடைந்தனர். குழந்தைகள் கிருஷ்ணருக்கும், பலராமருக்கு ம் மாடுகளை மேய்க்கும் பயிற்சி அளிக்கப்பட் டது. கோபாலர் இல்லப் பிள்ளைகளுக்கு மாடு மேய்க்க கற்றுக் கொடுப்பது தான் தலையாய பணி. தொழிலில் எதுவுமே கேவலமல்ல. கோபாலர்கள் வசித்த கோகுலம், விருந்தாவன ம் போல் செழிப்பான பகுதியை பூமி இதுவரை பார்த்ததில்லை. கன்றுகளுக்கு போக எஞ்சிய பாலும், நெய்யும், வெண்ணெயுமே அவர்களி ன் வாழக்கைத் தரத்தை உயர்வாக வைத்திரு ந்தது. மாடு மேய்க்கும்  சிறுவர்களுக்கு கல்வியறிவு இல்லை. ஆனால், என்ன ஆச்சரியம். ஒவ்வொ ருவர் வீட்டிலும் செல்வம் கொட்டிக் கிடந்தது. சிறுவர்களெல்லாம், ஏராளமான நகைகளை அணிந்திருப்பார்கள். அவற்றை அணிந்தபடி தான் மேய்ச்சல் நிலங்களுக்கும் செல்வார்கள். கிருஷ்ணரும், பலராமரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு கோவர்த்தன மலைக்குச் செல்வார்கள்.



பகுதி நான்கு நாளை தொடர்வோம்...