வெள்ளி, 22 மே, 2020

ஸ்ரீதேவி மாஹாத்மியம் ஓர் அறிமுகம்:
--------------------------------------------
"கலெள சண்டி வினாயகெள" அதாவது கலியுகத்தில் விரைவாக பலனை வழங்க கூடியவர்கள் சண்டி என்றழைக்கப்படும் சண்டிகா பரமேஸ்வரியும் விநாயகருமே ஆவார்கள்.

துர்கா பரமேஸ்வரியின் இன்னொரு திருநாமமே சண்டிகா பரமேஸ்வரி ஆகும். இந்த சண்டி தேவியின் பெருமையை கூறுவதே ஸ்ரீதேவீ மாஹாத்மியம். எவ்வாறு பகவத்கீதை 700 ஸ்லோகங்களுடன் மகாபாரதத்தின் நடுநாயகமாக விளங்குகிறதோ அதைப் போலவே ஸ்ரீதேவி மாஹாத்மியம் மார்கண்டேய புராணத்தில் நடுநாயகமாக விளங்குகிறது. இது மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருகிறது.

சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தஸதீ என்றும் அழைப்பார்கள். சண்டீ பாராயணத்தின் பெருமையை பற்றி பத்ம புராணம் மற்றும் ஸ்ரீதேவி பாகவதம் போன்ற நூல்களிலிருந்து அறியலாம்.

சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காப்ரதீபம் போன்ற பல உரைகள் இந்நூலிற்கு உண்டு. இவற்றில் நீலகண்டர் எழுதிய துர்க்காப்ரதீபம், நாகேச பட்டர் எழுதிய நாகேசீ மற்றும்  பாஸ்கர ராயர் எழுதிய குப்தவதீ தனிச்சிறப்பு பெற்றவைகளாகும்.

டாமர தந்த்ரம், காத்யாயனீ தந்த்ரம், க்ரோட தந்த்ரம், மேரு தந்த்ரம், மரீசி கல்பம், ருத்ரயாமளம், சிதம்பர ரஹஸ்யம் முதலிய ஆகம நூல்களிலும் பல்வேறு புராணங்களிலும் தேவீ மாஹாத்மியத்தின் பெருமை விளக்கிக் கூறப்படுகிறது.

யக்ஞங்களில் எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில் ஸப்தசதீ என்று டாமர தந்திரம் கூறுகிறது. சிதம்பர ரஹசியத்தில் ஸ்ரீ பரமேஸ்வரர் ஸ்ரீதேவி மாஹாத்மியத்தின் பெருமையை பார்வதி தேவிக்கு எடுத்துரைக்கிறார்.

"யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா " என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது. அதாவது வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என்பது அதன் பொருளாகும். இந்த தேவீ மாஹாத்மியத்தை வேத வியாஸரின் சிஷ்யரான ஜைமினி முனிவருக்கு ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி  உபதேசித்ததாக கூறுவர்.

தான் நம்பிய அமைச்சர்கள் மற்றும் உறவினர்களாலே ஏமாற்றப்பட்டு நாட்டை விட்டே துரத்தப்பட்ட சைத்ரிய வம்ஸத்தை சேர்ந்த ஸுரதன் என்ற அரசனும், தன் சொந்த மனைவி மக்களாலேயே சொத்துக்கள் அனைத்தையும் இழந்த ஸமாதி என்ற வைச்யனும் காட்டில் சந்திக்கின்றனர்.

இருவரும் கானகத்தில் அலைந்து கடைசியாக ஸுமேதஸ் என்ற முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகின்றனர். இருவரும் தாங்கள் இப்படி தங்கள் சுற்றத்தாராலே ஏமாற்றப்பட்டும் தங்கள் மனம் அவர்களின் பாலே செல்வதற்கு காரணம் யாது என வினவினர். அப்பொழுது தான் ஸுமேதஸ் நீங்கள் மாயையினால் கட்டுண்டு கிடப்பதாலே இவ்வாறு நிகழ்கிறது என்று கூறினார். மேலும் தேவர்கள் மற்றும் தேவர்களின் தலைவரான ஸ்ரீஹரியும் கூட அம்பிகையின் மாயைக்கு கட்டுப்பட்டவர்களே என்பதையும் விளக்கி கூறினார்.

ஒரு சமயம் இப்படி விஷ்ணு மாயையினால் பீடிக்கப்பட்ட மஹாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்து விட அவருடைய காதின் அழுக்கிலிருந்து மது, கைடபன் என இரு அசுரர்கள் தோன்றினர்.  பின்னர் க்லிம் என்ற ஸப்தத்தை  கடலில் ஆடும் போது கேட்டு அது தேவி பீஜம் என்பதை அறியாமலேயே அதன் வசப்பட்டு அதை விடாது ஜபித்து தேவியின் தரிசனம் கண்டு தாங்கள் விரும்பும் போதே தங்கள் மரணம் நிகழ வேண்டுமென்ற வரத்தை பெற்றனர்.

பலம் கொண்ட அந்த அசுரர்கள் பிரம்மாவை துன்புறுத்த அவர் அம்பிகையை பிரார்த்தித்து விஷ்ணுவை யோக நித்திரையிலிருந்து எழுப்புகிறார். பின்பு விஷ்ணு அவ்விரு அரக்கர்களோடு ஐயாயிரம் ஆண்டுகள் போரிட்டும் வெல்ல முடியாமல் அம்பிகையை சரணடைய , தேவீ மோகினியாக தோன்றி அவ்வசுரர்களை தன் வசம் மயக்கி விஷ்ணுவிற்கு வரமளிக்க தூண்டுகிறாள். மஹாவிஷ்ணு நீங்களிருவரும் என்னாலே மரணமடைய வேண்டும் என வரம் பெற்று அவர்களை ஸம்ஹரிக்கிறார். இதனால் தேவி மதுகைடபஹந்தரி என்று விஷேச நாமம் பெற்ற சரிதத்திலிருந்து ஒவ்வொன்றாக கூறத் தொடங்குகிறார்.

இப்படி 13 அத்தியாயங்களில் மதுகைடப வதம், மஹிஷாசுர வதம் மற்றும் சும்ப நிசும்ப வதம் ஆகியவைகளை விவரிக்கிறார். இதில் சும்ப நிசும்ப வதத்தின் போது தேவி சிவனையே தூதராக  சும்ப நிசும்பர்களிடம் அனுப்பி சிவதூதீ என்ற பெயரை பெற்ற சரிதமும் அடக்கமாகும். இவ்வாறு தேவியின் பெருமையை பலவாறு கூறி சுரதன் மற்றும் ஸமாதியை தேவியை உபாஸிக்கும் படி அறிவுறுத்துகிறார்.

அவரின் அறிவுரையை ஏற்று தேவியை உபாஸித்தன் பலனாக சுரதன் இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்று மகிழ்வுடன் ஆட்சி நடத்தி அடுத்த பிறவியில் மனுவாக பிறந்தான், வைச்யனான ஸமாதி ஞானமடைந்து மோக்ஷ ப்ராப்தம் அடைந்தான் என்று தேவீ மாஹாத்மியம் சரிதம் முடிகிறது. இதில் சுரதன் ஆற்றுக் களிமண்ணால் அம்பிகையின் பிரதிபிம்பத்தை செய்து பூஜித்து இகபர சுகங்களை அடைந்ததால் களிமண்ணால் செய்த பொம்மைகளைக் கொண்டு நவராத்திரியின் போது தேவியை ஆராதிக்கிறோம்.

இவை வெறும் சரிதம் மட்டுமல்ல. இவை அனைத்தும் மந்திர பூர்வமானது. இந்த 700 ஸ்லோகங்களைக் கொண்டே சண்டீ மஹாயாகம் நடத்தப்படுகிறது.

முறையாக குருவிடம் நவாக்ஷரி உபதேசம் பெற்றவர்களே தேவீ மாஹாத்மியத்தை பாராயணம் செய்ய வேண்டும்.நித்திய கர்மாவை முடித்துப் பரிசுத்தமான இடத்திலமர்ந்து ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு ஸாவாதானமாக முன் பின் கூறியுள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் கைக்கொள்ள வேண்டும். ஒரே தடவையில் பதின்மூன்று அத்தியாயங்களையும் பாராயணம் செய்ய அவகாசமில்லாதபோது  மத்திம சரித்திரத்தை மட்டிலும் படிக்கலாம் அல்லது தொடர்ச்சியாக ஏழு தினங்களில் 1 ; 2-3 ; 4 ; 5-6-7-8 ; 9-10 ; 11 ; 12-13 என்ற கிரமத்தில் படிக்கலாம். ஒரு சரித்திரதில் அரை குறையாகப் படிக்கக் கூடாது என்ற நியமம் இந்த முறைக்கு இல்லை. மனப்பாடம் செய்து புஸ்தகமில்லாமல் ஜபித்தல் சிறந்தது.

இவ்வாறு குரு உபதேசம் இல்லாதவர்கள் வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து ஸப்தாஹ முறைப்படி ஏழு நாட்களில் மேற்கூறிய கணக்கில் ஸமஸ்கிருத மந்திர மூலத்தை படிக்காமல் உரையை மட்டுமே சரிதமாக (கதையை போல) படித்து தூப தீப நைவேத்யத்தோடு பூஜை செய்யலாம். அம்பிகை பக்தியை மட்டும் தான் பார்ப்பாள், ஸமஸ்கிருதம் தெரியவில்லை, நவாக்ஷரி ஆகவில்லை என்றெல்லாம் பார்க்க மாட்டாள். இவ்வாறு படித்தாலும் கை மேல் பலனுண்டு. அசாத்தியமான நம்பிக்கையே அவசியம்.

*ஸர்வ ரூபமயீ தேவீ ஸர்வம் தேவீ மயம் ஜகத்*
#படித்ததில்_பிடித்தது.....🌹🌹🌹

நல்ல விஷயம்... நன்கு புரிந்து கொள்ளவும்...

ஒரு ஸ்கூல்ல ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாளாம்.

உடம்பு சரியில்லாம நாலு நாளைக்கு ஸ்கூலுக்கே போகலையாம்”

“மறுபடி ஸ்கூலுக்குப் போகும் போது அங்க நிறைய பாடம் நடத்திட்டாங்களாம்”

“ஐயோ நிறைய நடத்திட்டாங்களேன்னு அதையெல்லாம் காப்பி பண்ணி எழுதுறதுக்கு, அவளோட பெஸ்ட் ஃபிரெண்ட் கிட்ட நோட்டு கேக்குறா.

ஆனா அவ இன்னைக்கு வீட்ல போய் நான் படிக்கனும் அப்படிண்ட்டு சடாருன்னு சொல்லிட்டாளாம்.

நோட்டு கொடுக்கலையாம்”

“அப்ப அவ நோட்ல காப்பி பண்ணலையா”
“ஆனா இன்னொரு பொண்ணு அவளே வந்து நோட்டு கொடுத்து ஹெல்ப் பண்ணினாளாம்”

“நாம பெஸ்ட் பிரெண்டா நினைச்சவ நமக்கு உதவி செய்யாம போயிட்டாளேன்னு இந்த பொண்ணுக்கு வருத்தம்.

எத்தன நாள் அவளுக்கு சாக்லேட் கொடுத்திருப்போம். எத்தன நாள் அவளுக்கு கலர் பென்சில் கொடுத்திருப்போம்.”

“இதுமாதிரி அவ செய்தத எல்லாம் நெனச்சு பாத்தாளாம். மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சாம். அழுகையா வந்துச்சாம்.ஒரே obsession னா இருந்துச்சாம்”

“obsession ன்னா”
“ஒரே எண்ணம் திரும்ப திரும்ப வந்துட்டே இருந்தா அதுதான் அப்சசெஷன். அது மாதிரி அவளுக்கு அவ தோழி நோட்டுக் குடுக்காம இருந்தது பத்தியே நினைச்சிட்டு இருந்தாளாம்.

மதியானம் லஞ்ச கூட சரியாவே சாப்பிடலையாம். வீட்டுக்கு வந்து முகத்த உம்முன்னே வெச்சிட்டு இருந்திருக்கா.

அவளால சரியா பேச முடியல, டிவி பாக்க முடியல, சிரிக்க முடியல அன்னைக்கு நைட் முழுசும் அதையே நினைச்சிட்டு சரியா தூங்க முடியல. மறுநாள் ஸ்கூல் லீவு. லீவுன்னா வழக்கமா ஜாலியா இருப்பா?
ஆனா அன்னைக்கு அவளால எதுவும் செய்ய முடியல”

“அன்னைக்கு எல்லோரும் ஒரு பார்க்குக்கு போறாங்க. அந்த பொண்ணோட அப்பா அவள ஊஞ்சல்ல உட்கார வெச்சி தள்ளி விடுறாங்க. ஒரே தள்ளு. ஊஞ்சல் மேலையும் கீழையும் வேகமா ஆடுது. இந்தப் பொண்ணுக்கு ஜாலியா இருக்கு.
ஹோய் ஹோய்ன்னு கத்துறா. ரொம்ப தள்ளாதீங்கப்பான்னு சிரிச்சிகிட்டே சத்தமா சொல்றா. அவ அப்பா கேக்கல. இன்னும் இன்னும் தள்ளி விட்டுகிட்டே இருக்காரு. அரைமணி நேரம் ஊஞ்சல்ல ஆடிட்டு இறங்கி இன்னும் நிறைய விளையாட்டு விளையாடுறா”

“அவ பிரெண்ட் மேல வருத்தமா கோபமா இருக்கிறத மறந்து போயிர்ரா. நிம்மதியாகிட்டா”

“அன்னைக்கு நைட்டு அவ தூங்கும் போது இந்த பாயிண்ட்ஸ எல்லாம் யோசிக்கிறா.

பாயிண்ட் நம்பர் 1 : எனக்கு நோட்டுக் கொடுக்காதது அவ தப்பு.அதுக்கு நா ஏன் சாப்பிடாம சிரிக்காம சந்தோஷமா இல்லாம இருக்கனும்.

பாயிண்ட் நம்பர் 2: ஒருவேளை அவளுக்கு உண்மையிலேயே அன்னைக்கு படிக்க
இருந்திருக்கும்.அதனால கொடுக்காம இருந்திருக்கலாம்.

பாயிண்ட் நம்பர் 3: என் பிரெண்ட் மேல கோபம்னா அதுக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச அப்பா அம்மாகிட்ட எல்லாம் உம்முன்னு இருந்தேன்.

பாயிண்ட் நம்பர் 4 : ஒருத்தர் மேல உள்ள எரிச்சல கோபத்த எப்பவும் நினைக்கிறது எவ்வளவு கொடுமையா இருக்கு. வேற வேலையே செய்யமுடியலையே.

பாயிண்ட் நம்பர் 5: அவ மேல உள்ள கோபத்த எரிச்சல அஞ்சு நிமிசம் கூட மறக்கனும்னு நா ஏன் நினைக்கல.
இதோ இன்னைக்கு ஊஞ்சல்ல வேகமா ஆடும் போது அந்த பரபரப்புல அவள மறந்தேன். அப்படியே மறந்துட்டு ஜாலியா இருக்கேன். ஏன் கொஞ்சம் கூட ஒரு பிரச்சனையில இருந்து வெளிய வரணுமுன்னு நான் நினைக்கல.
இப்படி பல பாயிண்ட யோசிச்சி ஒரு முடிவுக்கு வர்றா. என்ன முடிவுக்கு வர்றா?

“யாருப்பத்தியும் நெகட்டிவ்வா நினைச்சிகிட்டே இருந்தா நிம்மதியா இருக்க முடியாது. அது நம்ம எனர்ஜிய இழுத்துரும்.
அதனால நம்ம லைஃப ஜாலியா அனுபவிக்க முடியாம போயிரும். அதானால இனிமே ரொம்ப பிரெண்ட்லியா இருக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டு
பிரிஸ்கா எந்திரிக்கிறா
பிரிஸ்கா அம்மா அப்பாவுக்கு காலை வணக்கம் சொல்றா
பிரிஸ்கா குளிச்சி யூனிஃபார்ம் போட்டுக்குறா
பிரிஸ்கா இட்லியும் வெங்காயச் சட்னியும் வெச்சி சாப்பிடுறா
பிரிஸ்கா பேக் எடுத்துட்டு
பிரிஸ்கா கிளம்பும் போது அவ முகத்துல சூரிய ஓளி அடிக்குது.
அவ முகம் இன்னும் தெளிவா அழகா அந்த சூரிய ஒளியில தெரியுது.
நமது எண்ணங்கள் நன்றாக இருந்தால்தான்
நமது செயல்கள் நன்றாக இருக்கும்.
நமது செயல்கள் நன்றாக இருந்தால்தான்
நமது வாழ்க்கை நன்றாக இருக்கும்.
*முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா ?*

*பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா?*

திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது? ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்?

அடியேன் சமீபத்தில் படித்த ஒரு நிகழவு தங்களுக்காக,

குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.

அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.

அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.

நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.

நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.

மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது.

அதன்படி,அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.

தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும் கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா, இப்போது சொல்... அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின் சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார்.

ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.

அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது.

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.

அத்தகைய நீதி பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர், போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது.

நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான்.

சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.

ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை.

அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.
#தருமதேவனுக்கு அருள்புரிந்த சந்திரசூடேஸ்வரர் கோவில்*


*தமிழ்நாட்டில் மலைமீது அமைந்த சிவாலயங்களில் இந்த சந்திரசூடேஸ்வரர் கோவிலும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் உள்ள இறைவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*
 *சிவாலயங்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது, சிவபெருமான் பல்வேறு வாகனங்களில் வலம் வந்தாலும், அவர் விரும்புவது என்னவோ ‘ரிஷபம்’ என்னும் காளை வாகனத்தைத் தான். அந்தளவுக்கு நந்தியம்பெருமான், சிவனின் நம்பிக்கைக்கும் அபிமானத்துக்கும் உரியவர் ஆவார். தன்னை நம்பும் அடியார்களுக்கு எல்லாம் அருள்பாலிக்கும் சிவபெருமானை, எருதுவாக மாறி தாங்கி சுமக்கலாமே என்ற எண்ணம், தருமதேவன், நான்முகம், திருமால் ஆகியோருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக காளை வாகனமாக மாறி, ஈசனை தாங்கிச் சுமக்கும் பேறினைப் பெற்றனர்.*

*முதலில் தருமதேவனே காளை வடிவத்திற்கு மாறி, சிவனை சுமக்கும் பேறு பெற்றார். எவரும் செய்திராத செயலை செய்ததால், தருமதேவனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் நான்முகனும், திருமாலும் கூட, காளை வடிவம் எடுத்து சிவபெருமானைச் சுமந்தனர். அதனால் தருமதேவன் மகிழ்ச்சியை இழந்தார்.*

*மீண்டும் ஒரு தன்னிகரற்ற சேவையை இறைவனுக்கு செய்ய விரும்பிய தருமதேவன், சிவனை நோக்கி தவம் இருந்தார். அந்த தவத்தின் இறுதியில் சிவபெருமானின் அருளால் குன்றாக மாறி, அவரை தாங்கும் பேறினைப் பெற்றார். அந்தக் குன்றின் பெயர் ‘எருதுமலை.’ குன்றின் மேல் குடிகொண்ட இறைவன் பெயர் சந்திரசூடேஸ்வரர். இந்தக் குன்றானது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ளது. இத்தல இறைவன் ‘செவிடநாயனார், உடையார் செவிடநாயனார், செவிடையாண்டவர்’ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.*

*இத்தலத்தில் இருக்கும் உற்சவ மூர்த்தி உமையவள் மற்றும் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்தராக காட்சி தருகிறார். இங்கு வீற்றிருக்கும் அம்மனின் திருநாமம் மரகதாம்பிகை. பச்சையம்மன், பர்வதம்மன் என்ற பெயர்களும் உள்ளன. தல விருட்சம் வில்வம், தல தீர்த்தம் மரகதசரோவம் எனப்படும் பச்சைக் குளம்.*

*தமிழ்நாட்டில் மலைமீது அமைந்த சிவாலயங்களில் இந்த சந்திரசூடேஸ்வரர் கோவிலும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் உள்ள இறைவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*

*தலவரலாறு

*இந்த ஆலயத்தைப் பற்றிய முழுமையான வரலாறு கிடைக்கப்பெறவில்லை. ஆனால் ஒரு தொண்மக் கதையின் அடிப்டையில் கூறப்படும் வரலாறு வழக்கில் உள்ளது.*

*முன்னொரு காலத்தில் தருமதேவன், சிவனை நோக்கி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடுந்தவம் புரிந்தார். தவத்தின் பயனாக தனக்கு காட்சியளித்த இறைவனிடம், தன்னை வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி தருமதேவன் வேண்டுகோள் வைத்தார். அதன்படியே தருமதேவனை, தன்னுடைய வாகனமாக, காளையாக மாற்றிக் கொண்டார். இதனால் மகிழ்ந்த தருமதேவன் இந்த இடத்தில் தன்னுடைய வடிவில் ஒரு மலையை உருவாக்கி, அதில் உமையுடன் எழுந்தருள வேண்டும் என்று சிவனைப் பணிந்தார். சிவபெருமானும், ரிஷப வடிவில் ‘விருஷபாசலம்’ என்னும் மலையை உருவாக்கி, அங்கு தங்கினார்.*

*தான் தங்கிய இடத்திற்கு தேவியை அழைத்துவர ஒரு திருவிளையாடலை நடத்தினார், ஈசன். ஒளிவீசும் உடும்பு வடிவம் கொண்டு கயிலை மலையின் உத்தியான வனத்தில் இருந்த பார்வதிதேவிக்கு அருகே வந்தார். அந்த அதிசய உடும்பைக் கண்ட பார்வதி, அதைப் பிடிக்க தோழிகளுடன் சென்றார். உடும்பானது, அவர்களின் கைகளில் அகப்படாமல் காடு, மலைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தேவி அந்த உடும்பின் வாலை பிடிக்க, அவரது உடல் பச்சை நிறமானது.*

*இதற்கிடையில் பார்வதியுடன் வந்த தோழிகள், அவரைப் பிரிந்து கானகம் முழுவதும் அலைந்தனர். தாகம் அவர்களை வாட்டியது. கண்ணுக்கு எந்த ஆறோ, குளமோ தென்படவில்லை. அவர்கள் பார்வதியை நினைத்து தங்கள் தாகத்தைத் தீர்க்க வேண்டினர். உடனே பார்வதி தேவி, ஒரு குளத்தை உருவாக்கினாள். அதில் தன் தோழிகளுடன் பார்வதி இறங்கி நீராடினாள். அப்போது அந்தக் குளமே பச்சை நிறமாக மாறியது.*

*பார்வதி நீராடியபோது அவள் கண்களை விட்டு மறைந்த உடும்பானது, அருகில் உள்ள மலைமீது ஏறிச்சென்றது. இதைக்கண்ட தேவி, அதைப் பின்தொடர்ந்து அந்த மலைமீது ஏறினாள். மலை உச்சியில் இருந்த செண்பக மரத்தில் உடும்பு ஏறியது. அப்போது அங்கு தவமிருந்த முத்கலன் என்ற முனிவர் உடும்பைப் பார்த்தார். அவர் சற்று தொலைவில் இருந்த இன்னொரு முனிவரான உச்சாயணனை கூவி அழைத்தார். அவர்கள் இருவரும் உடும்பை பிடிக்க முயன்றபோது அது மறைந்தது. அதனால் பார்வதி திகைத்தாள்.*

*பொன்னிற உடும்பு மறைந்ததற்கு, முனிவர்கள் இருவர்தான் காரணம் என்று நினைத்த பார்வதிதேவி, அவர்கள் மீது கோபம் கொண்டாள். உடும்பைக் கண்டு கூவியவரை ஊமையாகும்படியும், சத்தம் கேட்டு ஓடிவந்தவரை செவிடாகும்படியும், அவர்கள் இருவரும் வேடுவ குலத்தில் பிறக்கும்படியும் சாபமிட்டாள். அதைக் கேட்டு முனிவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பார்வதி தேவியிடம் தங்கள் தவறை மன்னிக்கும்படி வேண்டினர்.*

*பார்வதியும் கோபத்தில் சிவ பக்தர்களை சபித்ததை எண்ணி வருந்தினார். பின்னர் சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தாள். அப்போது ஈசன் அங்கு தோன்றி, “தருமதேவனுக்கு அளித்த வாக்கின்படி, சில காலம் தங்கி இருக்கவே நான் உடும்பு வடிவில் வந்தேன். அதோடு தேவியும் என்னோடு இங்கு தங்க வேண்டும் என்பதற்காகவே இந்த திருவிளையாடல் நடத்தினேன். நீங்கள் சாபம் பெற்றாலும், வேடுவ குலத்தில் பிறந்து வேட்டையாடிவரும் போது, உடும்பாக என்னைக் காணும்போது சாப விமோசனம் பெறுவீர்கள்” என்று முனிவர்களுக்கு அருளினார்.*

*அதன்படி வேடுவர்களாக பிறந்த அந்த இரண்டு முனிவர்களும், அதே மலை மீது உடும்பைக் கண்டு, சாபத்தில் இருந்து மீண்டனர். பின்னர் அவர்கள் ஈசனுக்காக அங்கு ஆலயத்தை எழுப்பினார்கள்.*
*திருவிளக்கு*

திருவிளக்கில்லாமல் எந்த தெய்வ வழிபாடும் கிடையாது.  இறைவனின் அருளை வெகுவிரைவாக நமக்கு அளிப்பது நாம் ஏற்றும் தீபங்களே…! 

தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி கோரிய பலன்களை தருகின்றன.  கர்ம வினைகள் நீங்காமல் நற்பலன்கள் கிடைக்காது. 

தீபங்களே கர்ம வினைகளை நீக்கக்கூடியவை.  தெய்வங்களை அமைதி படுத்தக்கூடியவை.  ஆனால் தீபங்களை ஏற்றுவதற்கு சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். 

அவற்றை பின்பற்றி ஏற்றப்படும் தீபங்கள் நாம் நினைத்த பலனை தரக்கூடியவை.

விளக்கினை செய்யும் பொருட்களும் அதன் பலன்களும்:

🕉 மண் அகல் விளக்கு பீடைகள் விலகும்.

🕉 வெள்ளி விளக்கு திருமகள் அருள் உண்டாகும்.

🕉 பஞ்ச உலோக விளக்கு தேவதை வசியம் உண்டாகும்.

🕉 வெங்கல விளக்கு ஆரோக்கியம் உண்டாகும்.

🕉 இரும்பு விளக்கு சனி தோஷம் விலக்கும்.

*விளக்கின் வகைகள்*

*1. குத்து விளக்கு*  உலோகத்தினால் செய்யப்பட்டது.

*2. அகல் விளக்கு*  மண்ணால் செய்யப்பட்டது.

*3. காமாட்சி விளக்கு* உலோகத்தினால் செய்யப்பட்டது.

*4. கிலியஞ்சட்டி விளக்கு*  மண்ணால் செய்யப்பட்ட அகண்ட விளக்கு.

*5. செடி விளக்கு* உலோகத்தால் செய்யப்பட்ட செடி போன்ற அமைப்பை உடையது.

*6. சர விளக்கு* உலோகத்தினால் அடுக்கடுக்காக செய்யப்பட்டது.
 

*திருவிளக்கின் சிறப்பு: (குத்து விளக்கு)*

தீப ஒளியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் சக்திகள் உள்ளனர்.  தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கும். 

இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் திருமாலும், நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கின்றனர்.

எனவே விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.  பூவால் குளிர்விக்கலாம். 

தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.  வாயால் ஊதி அணைக்கக்கூடாது.  அவ்வாறு அணைத்தால் சிவபெருமானையும், முப்பெரும் சக்திகளையும் அவமதிக்கும் செயலாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.

குத்து விளக்கின் மூன்று பாகங்களும் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும்.  தற்போது கடைகளில் கிடைக்கும் குத்து விளக்கினை மேற்கண்ட மூன்று பாகங்களை தனித்தனியாக கழற்ற முடியும். 

ஒரு சிலர் அடிப்பாகத்தில் அழுக்கினை சேர விடுகின்றனர்.  இது பிரம்மாவை அவமதிக்கும் செயலாகும்.

உயரம் அதிகமாக உள்ளதாக  நினைத்து தண்டினை கழற்றி வைத்து விட்டு மேல் மட்டும் அடிப்பாகம் இவற்றை மட்டும் பயன்படுத்துகின்றனர்.  இதுவும் தவறாகும்.  இது திருமாலை அவமதிப்பதாகும்.

பிரம்மா மற்றும் திருமால் இருவரும் மிகப்பெரிய சிவபக்தர்கள் ஆவர்.  அவர்களை அவமதிப்பது சிவபெருமானையே அவமதிப்பதாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

*தீபங்கள் ஏற்றும் இடங்கள்*

வீட்டின் பூசையறை,  நடு முற்றம், சமயலறை, துளசி மாடம், பாம்பு புற்று, நீர் நிலைகளின் கரைகள், ஆலயம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம்.

மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

*தீபங்கள் 16 வகைப்படும். அவை…*

1. தூபம்

2. தீபம்

3. அலங்கார தீபம்

4. நாகதீபம்

5. விருஷ தீபம்

6. புருஷா மிருக தீபம்

7. சூலதீபம்

8. கமடதி (ஆமை) தீபம்

9. கஜ (யானை) தீபம்

10. வியக்ர (புலி) தீபம்

11. சிம்ஹ தீபம்

12. துவஜ (பொடி) தீபம்

13. மயூர (மயில்)தீபம்

14. பூரண கும்ப (5 தட்டு) தீபம்

15. நட்சத்திர தீபம்

16. மேரு தீபம்

*விளக்கேற்றும் காலம்*

வேளை நேரம்

காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை (பிரம்ம முகூர்த்தம்)

மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை (தினப்பிரதோஷம்)

மேற்கண்ட காலங்களில் விளக்கேற்றுவது மிகுந்த புண்ணியத்தை தரும்.  நமது கர்ம வினைகள் நீங்கும். 

தெய்வத்தின் அருள் எளிதில் கிட்டும்.  நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கும். 

தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்கு ஒப்பாகும்.  தீபத்தில் உள்ள எண்ணெய் தெய்வத்திற்கு அவிர் பாகமாக போய் சேரும். 

ஒருவரது இல்லத்தில் கண்டிப்பாக மேற்கண்ட இரண்டு வேளையும் விளக்கேற்ற வேண்டும்.  குளித்த பின்பே நாம் விளக்கேற்ற வேண்டும். 

குளிக்காமல் ஏற்றப்படும் விளக்கிற்கு பலன் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

*விளக்கின் முகங்களும் அவற்றின் பலன்களும்: (குத்து விளக்கு)*

🕉  *ஒரு முகம்*

நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.  துன்பங்கள் நீங்கும்.  நன்மதிப்பு உண்டாகும்.

🕉  *இரண்டு முகம்*

கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.

🕉  *மூன்று முகம்*

புத்திர தோஷம் நீங்கி மக்கட் பேறு உண்டாகும்.

🕉  *நான்கு முகம்*

அனைத்து பீடைகளும் நீங்கும்.  அனைத்து செல்வங்களும் கிட்டும்.

🕉  *ஐந்து முகம்*

எல்லா நன்மைகளும் கிட்டும். அட்ட ஐச்வரியங்களும் உண்டாகும்.  குடும்ப ஒற்றுமை உண்டாகும்.  திருமணத்தடை நீங்கும்.  புண்ணியம் பெருகும்.

*விளக்கின் தீபம் நோக்கும் திசையும் அதன் பலனும்: (திசைக்காட்டியை கருத்தில் கொண்டது)*

🕉  *கிழக்கு*

இந்திரனைப் போல் வாழ்வு உண்டாகும்.  அனைத்து துன்பங்களும் நீங்கும்.  குடும்பம் செழிப்புறும்.  பீடைகள் நீங்கும்.

🕉  *மேற்கு*

கடன் தொல்லை நீங்கும்.  சனி தோஷம், கிரக தோஷம் முதலான அனைத்து வகை தோஷங்களும் நீங்கும்.  சகோதரர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.  பங்காளிப்பகை நீங்கும்.

🕉  *வடக்கு*

திருமணத்தடை நீங்கும்.  சர்வ மங்கலமும் உண்டாகும்.  பெரும் செல்வம் வந்து சேரும். கல்வித்தடை நீங்கும்.  சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

🕉  *தெற்கு*

மரணபயம் உண்டாகும்.  துன்பங்கள் வந்து சேரும்.  பாவம் வந்து சேரும்.  கடன் உண்டாகும்.

*விளக்கில் பயன்படுத்தும் எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்:*

*1. நெய்*  கடன் தீரும்  வருமானம் அதிகரிக்கும்,  நினைத்தது நடக்கும்.  கிரகதோஷம் நீக்கும். செல்வம், சுகம் தரும்.

*2. நல்லெண்ணெய்* நோய்கள் நீங்கும்.  ஆரோக்கியம் அதிகரிக்கும்.  நவகிரகங்களின் அருள் உண்டாகும்.  தாம்பத்ய உறவு சிறக்கும்.  அனைத்து பீடைகளும் விலகும்.

*3. தேங்காய் எண்ணெய்*  அனைவரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும்.  துணிவு உண்டாகும். மனத்தெளிவு உண்டாகும்.

*4. விளக்கெண்ணெய்* புகழ் உண்டாகும். குலதெய்வ அருள் உண்டாகும்.  தேவதை வசியம் உண்டாக்கும்.  அனைத்து செல்வங்களும் உண்டாகும்.

*5. வேப்ப எண்ணெய்* கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.  மற்றவர்களின் உதவி கிடைக்கும். இல்லற இன்பம் அதிகரிக்கும்.

*6. இலுப்பை* எண்ணெய் காரிய சித்தி உண்டாகும்.

*7. வேப்ப எண்ணெய் + இலுப்பை* எண்ணெய் சகல ஐச்வர்யங்களும் உண்டாகும்.

*8. நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை* எண்ணெய் செல்வம் சேரும்.  குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றது.

*9. விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய்* எண்ணெய்
பராசக்தி அருள் உண்டாக்கும்.  மந்திர சித்தி தரும்.  கிரகதோஷம் நீக்கும்.

*குறிப்பு:*

கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. 

மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை. 

*தெய்வங்களும் அவற்றிற்குரிய எண்ணெய்களும்:*

🕉  விநாயகர் - தேங்காய் எண்ணெய்

🕉  திருமகள், முருகன்  - நெய்

🕉  குலதெய்வம் வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + நெய்

🕉  பைரவர் நல்லெண்ணெய்

🕉  சக்தியின் வடிவங்கள் விளக்கெண்ணெய் + வேம்பெண்ணெய் + தேங்காய்  எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + பசுநெய்

🕉  ருத்ர தெய்வங்கள் இலுப்பை எண்ணெய்

🕉  எல்லா தெய்வங்கள் நல்லெண்ணெய்

🕉  நாராயணன் நல்லெண்ணெய்

*விளக்கின் திரிகளும் அவற்றின் பலன்களும்*

🕉  இலவம் பஞ்சுத்திரி சுகம் தரும்.

🕉  தாமரைத்தண்டு திரி முன்வினை நீக்கும்.  செல்வம் சேரும்.  திருமகள் அருள் உண்டாகும்.

🕉  வாழைத்தண்டு திரி மக்கட்பேறு உண்டாகும்.  மன அமைதி உண்டாகும்.  குடும்ப அமைதி உண்டாகும்.  தெய்வ சாபம் மற்றும் முன்னோர் பாவம் நீங்கும்.  குழந்தைப்பேறு உண்டாகும்.

🕉  வெள்ளெருக்கு திரி செய்வினை நீங்கும்.  ஆயுள் நீடிக்கும்.  குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாகும்.

🕉  பருத்தி பஞ்சுத்திரி தெய்வ குற்றம், பிதுர் சாபம் போக்கும்.  வம்சம் விருத்தியாகும்.

🕉  வெள்ளைத்துணி திரி அனைத்து நலங்களும் உண்டாகும்.

🕉  சிவப்பு துணி திரி திருமணத்தடை நீக்கும்.  மக்கட் பேறு உண்டாகும்.

🕉  மஞ்சள் துணி திரி எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.  அம்பிகையின் அருள் உண்டாகும்.  வியாதிகள் நீங்கும்.  செய்வினை நீங்கும்.  எதிரிகள் பயம் நீங்கும்.  தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும்.  மங்களம் உண்டாகும்.

🕉  பட்டுத்துணி திரி எல்லா சுபங்களும் உண்டாகும்.

*விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்*

🕉  ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.

🕉  திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.

🕉  வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.

🕉  சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.

செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும்.

உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன.

என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம்.

நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

*முன்பிறவி பாவம் நீக்கும் தீபம்:*

வேதாரண்யம் கோயிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது.

அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு.

நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகிவிடும்.

அதனால், திருக்கார்த்திகையன்று கோயில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பலவிதங்களிலும் விளக்கேற்றிவைப்பர். கோயில் முன்னர் சொக்கப்பனை கொளுத்துவர்.

*பொதுவான விதிமுறைகள்*

விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும்.  குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.  இது கணவன் – மனைவி ஒற்றுமை உண்டாக்கும்.

ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.

*விளக்கேற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்*

கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!

*பொருள்* : புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.

‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’

*விளக்கேற்றிய பின்பு பின்வரும் தேவாரப்பாடலை பாடவும்*

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

அகர தீபமோ குகநாதம்
உகர தீபமோ கணநாதம்
மகர தீபமோ பூதநாதம்
மகா தீபமோ சிவநாதம்

*தென்னாடுடைய சிவனே போற்றி…!*
*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!*

வியாழன், 21 மே, 2020

🕭🕭🙇‍♂️நமஸ்காரம்🙇‍♂️🕭🕭

ப்ராஹ்மண⛥🚩 தர்மத்தை காப்பற்றவேண்டியது நம் கடமை.☝

1.உங்களை யாரும் குடுமி வெச்சுண்டு, கச்சம் கட்டிண்டு ஆபீஸ் போகச்சொல்லலை- லீவு நாட்களில் கச்சத்துடன் ஸந்த்யாவந்தனம், பூஜை செய்யுங்கோன்னு தான் சொல்றோம், (ப்ராத்திக்கிறோம்)☝

2.உங்களை யாரும் இங்கிலீஷ் படிப்பு படிக்காமல் பாடசாலையில் சேருங்கோன்னு சொல்லலை-
ருத்ரம்,சமகம், புருஷஸூக்தமாவது கத்துங்குங்கோ ன்னு தான் சொல்றோம்,☝

3.உங்கள் பெண் குழந்தைகளை தலையை வாரி, பின்னி விட்டு, குஞ்சலம் கட்டி, தாவணியில் தான் வெளியில் அனுப்பனும் னு சொல்லவரலை- மிடி, டீஷர்ட், ஜீன்ஸ், தலைவிரிக்கோலம் வேண்டாமே என்று தான் சொல்றோம்,☝

4.உங்களை யாரும் நித்யம் மடிசார் கட்டிண்டு தான் வலம் வரனும் னு சொல்லல- நாள், கிழமை என்றால் 9கஜத்தில் இருக்கலாமே என்று தான் சொல்றோம்,☝

5.உங்களை யாரும் கணவனை இழந்து விட்டதால் மொட்டை அடிச்சு வெள்ளை புடவையில் தான்  உலா வரவேண்டும் என்று சொல்லலை- நித்தமும் பகவத் தர்ஸனம், பஞ்சாக்ஷர ஜபம், பஜனை, பாராயணம் என்று நீங்கள் இருந்தேள் னா நீங்கள் தான் "ஸபரி" பாட்டி. ஸ்ரீராமபிரான் உங்களை தேடி வருவார்,
நாங்களெல்லாம் எம்மாத்திரம்....👆

"மந்த்ரம்" த்ரிகால ஸத்யம்.
எந்த காலத்திலும் எந்த யுகத்திலும் அதுக்கு சக்தி உண்டு, அதன் வாயிலாக "இறைவனை அறியவும்", இந்த "உலகத்திற்கு  க்ஷேமத்தை கொடுக்கவும்" தான்
நமக்கு இந்த "ப்ராஹ்மண ஜன்மா".

இதன் value நமக்கு தெரியவில்லை.
போன ஜன்மாவில் நாம் ஒவ்வொருவரும் பகவானிடம் கெஞ்சி, கூத்தாடி இந்த "ஜன்மா" வை அடைந்திருக்கிறோம்.
இதுவே நம் பிறப்பின் ரஹஸ்யம்.

இது தெரியாமல் நான் இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் என் பிள்ளைகளை வளர்ப்பேன் என்றால் நாளை நம் குழந்தைகள் நாம் சொல்பவர்களை, நாம் சொல்லும் விதம் கல்யாணம் செய்யமாட்டார்கள்

அவர்கள் இஷ்டத்துக்கு கல்யாணம், அப்புறம் டைவர்ஸ், மறுபடி கல்யாணம், மறுபடி பிரிதல், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம்??

நாம் ஏதாவது கொஞ்சம் அனுஷ்டித்தால் நம் குழந்தைகளும் அதை கேட்பார்கள்,
அனுஷ்டிப்பார்கள்...

இதெல்லாம் புரியாமல் சாஸ்த்ர கோட்பாடுகள் ஆண்கள் எழுதியது,
அது பெண்களை கொடுமை படுத்துகிறது என்றால் நாஸ்தீகவாதிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாஸம்?
நாமே இப்படி பேசலாமா?☝

கடைசியாக☛ "சாஸ்த்ராய ச ஸுகாய ச"
வேதசாஸ்த்ரங்களை🕉 கடைபிடிப்பதால் ☝ நமக்கும் நம் தேசத்துக்கும் நன்மையே தவிர  ஒருகாலும் தீங்கு ஏற்படாது..☝
 இதை படித்துவிட்டு ஏதாவது ஒரு பத்து பேராவது, இந்த ப்ராம்ண தர்மத்தை கடைபிடித்தால் , இதை எழுதியவர்க்கு  திருப்தியாக இருக்கும். இதை எழுதியவர் மாந்தை ப்ரும்மஸ்ரீ லக்ஷிமிநாராயண பாகவதர்.
அரசவனங்காடு சுந்தரேசய்யர் கல்யாணம் .
*குருவின் அவசியமும் மகிமையும் :*

துறவி ஒருவர் குடில் ஒன்று அமைத்து, பல சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். சாஸ்திரங்களை நன்றாக கற்றிருந்த அந்த குருவால் வாழ்க்கைத் தத்துவங்களை புரிந்து கொண்ட சீடர்கள் ஆன்மிகப் பாதையில் சென்றனர்.

அந்த துறவியிடம், ஒரு சீடனுக்கு பிடிப்பு இல்லாமல் போனது. ‘சாஸ்திரங்களைப் படித்து, அதில் இருப்பதைத்தானே குரு நமக்கு கற்றுத்தருகிறார். சாஸ்திரங்களைப் படித்து நாமே அதைக் கற்றுக்கொள்ளலாமே.. இடையில் குரு எதற்கு?’ என்ற எண்ணம் அந்த சீடனுக்குத் தோன்றியது.

அவனது எண்ணத்தை மறுநாளே செயல்படுத்தினான். குருகுலத்தை விட்டு வெளியேறினான். தனியாக குடில் அமைத்து, சாஸ்திர நூல்களைப் படிக்கத் தொடங்கினான். பசிக்கும்போது, துறவி களைப் போலவே கிராமத்திற்குள் சென்று யாசகம் பெற்று உணவு உண்பான்.

ஒரு நாள் சீடன் சாஸ்திர நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான். அந்த நூலில், ‘எச்சில் பரிசுத்தம். வாந்தி பண்ணினது பரிசுத்தம், இறந்தவன் போர்வை பரிசுத்தம்’ என்ற வாசகங்கள் இருந்தது. அதை அப்படியே மனதில் பதிய வைத்துக்கொண்டான்.

ஒரு நாள் அவன் யாசகம் பெறுவதற்காக கிராமத்திற்குள் சென்றான். அப்போது அங்கு ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு உணவு விருந்து அளிக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட அனைவரும், எச்சில் இலைகளை கொண்டு போய் குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டுப் போனார்கள்.

இதைக் கண்ட சீடன் கோபமுற்றான். ‘சாஸ்திரம் தெரியாத முட்டாள்கள்’ என்று மனதுக்குள் திட்டியபடியே ஓடோடிச் சென்று, குப்பையில் கிடந்த எச்சில் இலைகளை கையில் எடுக்க முற்பட்டான்.

அப்போது அவனை ஒரு பெரியவர் தடுத்து நிறுத்தினார். ‘ஏனப்பா! பார்ப்பதற்கு ஒரு தபஸ்வி போல் இருக்கிறாய். நீ போய் எச்சில் இலைகளை எடுக்க முயற்சிக்கிறாயே.. ஏன்?’ என்று விசாரித்தார்.

‘உங்களுக்கு சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று தெரியாது. அதனால்தான் என்னைத் தடுக்கிறீர்கள். எச்சில் பரிசுத்தம் என்று சாஸ்திரம் சொல்கிறது தெரியுமா?’ என்று தனக்கு எல்லாம் தெரிந்தது போல் கூறினான் சீடன்.

முதியவர் குழம்பிப் போனார். அதன் பிறகு, அவனிடம் முழுமையாக விசாரித்தார். அப்போது சாஸ்திரத்தில் தான் படித்த வார்த்தைகளை அவன் தெரிவித்தான்.

இப்போது அந்த முதியவருக்கு புரிந்து விட்டது.. ‘இவன் ஒரு அரைகுறை’ என்று.

சீடன் படித்த வாக்கியங்களுக்கான முழு அர்த்தத்தையும் அவனுக்கு எடுத்துச் சொன்னார். ‘எச்சில் பரிசுத்தம் என்பது நீ நினைப்பது போன்று இல்லை. கன்று வாய் வைத்து பால் குடித்த பிறகே, பசுவின் மடியில் பால் கறப்பார்கள். ஆனாலும் கூட அந்தப் பால் பரிசுத்தமானது. அதைத்தான் இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். அதனால்தான் எச்சில் பரிசுத்தம் என்று சொல்லியிருக் கிறார்கள்’ என்று விளக்கினார்.

சீடனின் மனதில் பெரிய குழப்பம். ‘அப்படியானால், வாந்தி பண்ணினது பரிசுத்தம், இறந்தவன் போர்வை பரிசுத்தம் என்பதற்கு என்ன பொருள்?’ என்று வினவினான்.

முதியவர் புன்னகைத்துக் கொண்டே அவனுக்கு பதிலளித்தார். ‘தேனீக்களின் வாயில் இருந்து சுரக்கும் தேனைத்தான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். கடவுளுக்கு தேனைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். அதனால்தான் அப்படி கூறப்பட்டிருக்கிறது.

பட்டுப்பூச்சிகள் இறந்ததும் அதிலிருந்து பட்டு நூலைப் பிரித்தெடுத்து ஆடை தயாரிப்பார்கள். அந்தப் பட்டாடைகளையும் பரிசுத்தமாகக் கருதி, இறைவனுக்குச் சாத்தி வழிபடுவோம். அதையே இறந்தவன் போர்வை பரிசுத்தம் எனச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று விளக்கம் கொடுத்தார்.

சீடனுக்கு சாஸ்திரத்தில் கூறியிருந்ததன் அர்த்தம் இப்போதுதான் முழுமையாக புரிந்தது.

எதையும் மேலோட்டமாகப் பார்த்து படிப்பது என்பது வாழ்க்கைக்கு உதவாது. அதன் நுட்பத்தை ஆழமாக அறிய, ஒவ்வொருவருக்கும் குரு என்பவர் அவசியம் தேவை.

இப்படியாக குருவின் அவசியத்தையும்  குருவின் மஹிமையையும் இந்த கதை உணர்த்துகிறது.

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா......

லோகா  சமஸ்தா  சுகிநோ
பவந்து . .....
"சிவபெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்"
யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிஅற்புத நிகழ்வு இது. 1879ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது. ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது. மேலும் கர்னிலிடமிருந்து எந்தக் கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை. கர்னலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார். ஒரு நாள் குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது. அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க., உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களைக் கண்டார். துயருற்ற முகத்தைக் கண்ட வேதியர்கள் காரணத்தைக் கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கர்னலின் மனைவிக்கு *"ஓம் நமசிவாய"* எனும் லாகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தைத் தொடர்ந்து 11 நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர்.
கர்னலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தைப் புதுப்பித்துத் தருவதாக வேண்டிக் கொண்டு வீடு திரும்புகிறார். லகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கி சரியாகப் பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர், கர்னலிடமிருந்து செய்தியைக் கொண்டு வருகிறார். அதில் எழுதி இருந்தது   "போர்க்களத்தில் இருந்து தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்துப் புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர். நாங்கள் தப்பிச்செல்ல இயலாதவாறு சிக்கிக் கொண்டோம். நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியைக் கண்டேன். அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் கொண்டிருந்தார். மேலும்., அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும்., அணிந்திருந்த புலித்தோல் ஆடையும்., அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தைக் கையாண்ட விதமும் மகத்தான விதமாக இருந்தது. இந்த சிறந்த மனிதனைக் கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர். அந்தத் துறவியின் கருணையினால் தோல்வியைத் தழுவ வேண்டிய தருணம் நேரெதிராக மாறி வெற்றியைப் பெற்றோம். இவைகள் எல்லாம் சாத்தியமானதன் காரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனை உடைய கூறிய ஆயுதமே. அந்த உன்னதத் துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க., காக்க வந்ததாகவும் கூறினார்.

இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கர்னலின் மனைவியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்தன., அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார். சில வாரங்களுக்குப் பின் கர்னல் மார்ட்டின் திரும்பிய பின் அவர் நடந்தவற்றை விவரித்தார். கர்னல் மற்றும் அவர் மனைவியும் அது முதல் சிவ பக்தர்களாக விளங்கினர். 1883 ஆம் ஆண்டு கர்னல் மற்றும் அவர் மனைவி 15,000 ரூபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்து பிரிட்டிஷாரால் புதிப்பிக்கப்பட்ட ஆலயமாகும்.  இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது.



The British Couple Got this Temple Renovated as a Tribute to Lord Shiva for Saving the Life of the Husband who had Gone to Fight Against the Afghans on North-West Frontier which Falls in Today’s Pakistan.

The Story Goes back to 1879 of British India where Lieutenant Colonel C. Martin was Posted in Agar Malwa area of Central India. The British Indian army was Fighting an Intense battle Against the Afghans Refused to Bow Down Despite Many Attempts. Lt. Col. Martin was also Sent on the Frontier in 1879.

Though Gone on the Frontier., Lt. Col. Martin Kept Sending Letters to His Worried Wife About His Well Being. A Few Months Passed., Though Martin’s Wife was Worried for Him., but Letters Kept Informed that Her Husband is Still Alive.

But Soon., Martin Stopped Sending Letters.
The Battle Got Further Intense. The Menacing Afghans were Giving the British a Rough Time and Rest was Taken Care of By the Rough Terrain that Afghanistan is. The Frequency of Letter Decreased and Soon There were No Letters Coming from Martin’s side. His Wife Got Worried About Her Husband.

The Worried Wife had Nowhere to Go. Failing to Communicate with Her Husband Through Letters hadn’t Only Made Her Worried., but it was Also Affecting Her Health. One Day., while Riding Her Horse., She Passed By Baijnath Mahadev temple. The Sound of Conch and Mantras Attracted Jer and She Went Inside the Temple.

The British Woman Went Inside and Told Brahmans Her Problem. They told Her that Lord Shiva Listens to the Prayers of Devotees and Takes Them Out of Difficult Situations in No Time. They Advised Her to Perform the “Laghurudri Anushtthan” of the Mantra: *“Aum Namah Shivaya”* for 11 Days.
The Legend has it that She Prayed to Lord Shiva that if Her Husband Reaches Home Safely., then She would Get the Temple Renovated.

Soon Her Prayers were Answered
On 11th Day of the Anushtthan., She Received a Letter from Her Husband Informing Her that He is Fine and the British Won the War. But the letter also Narrated Another Story.

The Legend Says that Her Husband in a Letter also Narrated Another Story of How He was Saved Ny a Yogi. Lt. Col. Wrote in His Letter that How Afghans had Entrapped Him and His Men and It was Death for Certain. When a Yall Yogi Wearing Tiger Skin and Trident in His Hand Came and Disrupted the Hold the Afghans had on the British. His Attack Forced Afghans to Retreat and the Certain Defeat Turned into a Victory. Lt Col Martin Also Wrote that the Yogi Told Him that He had to Come to Rescue Him because He was Moved by the Devotion and Prayers of His Wife. The Slab Inside the Temple Explains the Whole Story of the Rescue that Lt. Col. had Narrated in the Letter. Tears of Joy were Falling Down to the Eyes of Lady Martin while Reading the Letter. Her Heart was Overwhelmed with Joy and Reverence. She Fell Beneath the Stone Symbol (Lingam) of Lord Shiva and Burst into Tears.

The Vouple Donated Rs.15,000 for Temple Renovation Before Leaving for England

Soon Lt. Martin Returned and the Couple Narrated Each Other’s Story. Later They Both became Devotees of Lord Shiva and in 1883 donated Rs 15,000 Get the Whole Temple Renovated.
Soon the Couple Went Back to England with a Promise that They would Worship Lord Shiva Back in Their House in England.

The Website of Municipal Body of Agar Malwa also Attests to the Authenticity of the Story.
மாத்ருகா பஞ்சகம்

1.ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று செல்ல? அந்த தாய்க்கு நமஸ்காரம்!

2.குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I

குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II
ஹே தாயே! c ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!

3.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

தாயே! மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. c மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது. தாயே! உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!

4.முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

என் முத்தல்லவா c ! என் கண் அல்லவா c ! c என் ராஜா, என் குழந்தை c சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !

5.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே –
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II
அன்று ப்ரஸவ காலத்தில் ‘அம்மா’ அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.

மாத்ருகா பஞ்சகம் முற்றிற்று.
24 ஏகாதசி விரதமும் அதன் பலன்களும், ஓர் கண்ணோட்டம் :-

காமதா ஏகாதசி

விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்.

பாப மோசனிகா ஏகாதசி

நாம் செய்த பாவங்கள் தொலையும் நல்ல பேற்றினை ஏற்படுத்தும். த்ரோஹிகள் விலகுவர்.

 மோஹினி ஏகாதசி

உடல் சோர்வு நீக்கும். பாவம் நீங்கி புண்யம் பெருகும். அறியாமை நீங்கி நல்ல புத்தி உண்டாகும்

 வருதினி ஏகாதசி

உடல் ஆரோக்யம் தரும். சௌபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.

நிர்ஜல ஏகாதசி

வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன் வாயு அம்சம்.

அபரா ஏகாதசி

கேதார்நாத், பத்ரிநாத் யாத்ரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பணம் செய்த பலனும், ப்ராயாகையில் புண்ய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.

விஷ்ணு சயன ஏகாதசி/ தயினி ஏகாதசி

முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்கும். ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

யோகினி ஏகாதசி

விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.

புத்ரத ஏகாதசி

குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.

காமிகா ஏகாதசி

தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய ஸ்வர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும்.

பரிவர்தன ஏகாதசி / பத்மநாப ஏகாதசி

இந்த்ரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.

அஜ ஏகாதசி

குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது.

பாபாங்குச ஏகாதசி

வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்ரை சென்ற புண்யம் கிடைக்கும்.

இந்திரா ஏகாதசி

மூதாதயருக்கு ஸ்ரார்த்தம் செய்தால் அவர்கள் இந்த்ர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள்.

ப்ரபோதின ஏகாதசி/கைசிக ஏகாதசி

அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

ரமா ஏகாதசி

இருபத்தியோரு தானம் செய்த புண்யம் தரவல்லது.

வைகுண்ட ஏகாதசி

உண்ணாமல் அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி வ்ரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.

உத்பத்தி ஏகாதசி

பகையை வெல்ல உதவும்.

பீஷ்ம, புத்ர ஏகாதசி

புத்ரபாக்யம் தரும்.

சபலா ஏகாதசி

ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

ஜெய ஏகாதசி

அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோக்ஷம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் வ்ரக்தி நம்மை விட்டு நீங்கும்.

ஷட்திலா ஏகாதசி

கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கு, பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

ஆமலக்கி ஏகாதசி

நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் கோதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.

விஜய ஏகாதசி

வெளிநாட்டில் உள்ள சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.

🕉️ௐ நமோ நாராயணாய
*அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசாதீர்...*

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.

ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார்.

மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.
தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.

ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.
‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.
அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.

பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.

ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.

தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்.

உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன ?

- *படித்து மறக்காதிருக்க வேண்டிய கதை!*