செவ்வாய், 1 அக்டோபர், 2019

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியவை

1. கராக்ரே வஸதே லக்ஷ?மீ: கரமத்யே ஸரஸ்வதீ
கரமூலே து கௌரி ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்

2. ஸமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தன மண்டிதே
விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே

3. அஹல்யா திரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
பஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநாசனம்

4. புண்யச்லோகோ நலோ ராஜா புண்யச்லோகோ யுதிஷ்டிர:
புண்யச்லோகா ச வைதேஹீ புண்யச்லோகோ ஜனார்தன:

5. கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா: நளஸ்ய ச
ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலி நாசனம்

6. அச்வத்தாமா பலிர்வ்யாஸ : ஹனுமான் ச விபீசண:
க்ருப: பரசுராமஸ்ச்ச ஸப்தைதே சிரஜீவின:

7. ப்ரம்மா முராரி : ஸ்திரிபுராந்தகச்ச
பானுச்சசீ பூமிஸுதோ புதச்ச
குருச்ச சுக்ரச்சனிராஹுகேதவ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

8. ப்ருகுர்வஸிஷ்ட : க்ரதுரங்கிராச்ச
மனு: புலஸ்த்ய : புலஹச்ச கௌதம:
ரைப்யோ மரீசி : ச்யவனோத தக்ஷ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

9. ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச
ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌச
ஸப்தஸ்வராஸ்ஸப்த ரஸாதலானி
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

10. ஸப்தார்ணவா : ஸப்தகுலாசலாச்ச
ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த
பூராதிலோகா : புவனானி ஸப்த
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

11. ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்ததா ஸஸப:
ஸ்பர்சச்ச வாயூர்ஜ்வலிதம்ச தேஜ:
நபஸ்ஸசப்தம் மஹாதாஸஹைவ
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

12. குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மஹேச்வர:
குரு: ஸாக்ஷ?த் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

17:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

               17:ஸ்ரீ கௌட சதாசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                 (கி.பி. 367 -கி.பி.375 வரை)

ஸ்ரீ கௌட சதாசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (பாலகுரு)காஷ்மீர் நாட்டு மந்திரியான 'தேவமிச்ரன்'என்பவரிவரின் திருமகனார்.பிறந்து பேசத் தொடங்கியது முதல் அத்வைத்தைப் பற்றியே பேசினார்.இவர் பிந்த பின் ஜைன மதத்தை தழுவினார் தேவமிச்ரன்.மகனது அத்வைத நெறியை மாற்ற சாம,தான,பேத,தண்டப் பிரயோகங்களை நடத்தினார்.
இரணியகசிபுவின் முயற்ச்சிகள் பிரகலாதனிடம் பலிக்காதது போல் தேவமிச்ரரின் முயற்ச்சிகள் மகனிடம் பலிக்காமல் போயின. இருதியில் தேவமிச்ரரின் புதல்வனை சிந்து நதியில் வீசி எறிந்தார் தந்தை.நீரில் தத்தளித்துத் தடுமாரிய சிறுவனை பாடலிபுரத்து
அந்தணரான'பூரிவசு'என்பவர் காப்பாற்றினார்.'சிந்து தத்தன்'எனப் பெயர் சூட்டி,வேத சாஸ்திரங்களைக் சொல்லிக்கொடுத்தார்.அச்சமயம் காஷ்மீரத்தில் விஜய யாத்திரையாக வந்த ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் இச்சிறுவனை ஒப்படைத்தார்.இதுவும் கடவுள் சித்தமே.அவரை 'பாலகுரு'என மக்கள் அன்போடு அழைத்தார்கள்.இவர் தனது 17வது வயதில் ஸ்ரீ காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக பதவி ஏற்றார்.தினமும் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தார்.பாலிக,பௌத்த மதத்தினரோடு வாதிட்டு அவர்களை நாட்டை விட்டுப் போகுமாறு செய்தார்.காஷ்மீர் மக்கள் இவருக்கு தங்கப் பல்லக்கை பரிசளித்தனர்.அதில் அமர்ந்து இந்தியா முழுவதும் விஜய யாத்திரை புரிந்தார்.எட்டாண்டு காலமே பீடாதிபத்யம் வகித்த இந்த குருரத்தினம் தமது இருபத்தி ஐந்தாவது வயதில் கி.பி.375-ஆம் ஆண்டு,பவ வருடம் ஆனி மாதம் க்ருஷ்ண பட்சம் தசமியன்று'நாசிக்'நகருக்கு அருகிலுள்ள 'த்ரயம்பகத்தில்'   சித்தியடைந்தார்.

சனி, 28 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 46 ॐ

பலரும் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒரு விஷயம் சிதம்பரம் கோயிலில் தமிழ்த் தேவாரத் திருவாசகங்கள் பாடப்படவில்லை என சிலர் தெரியாமல் சொல்லுகின்றார்கள் என்பதை நான் உறுதியாய்ச் சொல்லுவேன் பல வருஷங்களாய்ச் சிதம்பரம் கோயிலுக்குச் சென்று வருவதாலும் பல காலங்களிலும் கால பூஜை பார்த்திருப்பதாலும் எந்த எந்தச் சமயங்களில் திரு முறை ஓதுகின்றார்கள் என்பது நன்றாகவே தெரியும். கடைசியாய்ப் சென்ற வருஷம் கும்பாபிஷேஹத்துக்கு முதல்நாள் போன போது யாகம் நடக்க இருந்தது. அதற்கு முன்னால் ஓதுவார்கள் "திருமுறை" ஓதிய பின்னரே யாகம் ஆரம்பிக்கப்பட்டது. யாகம் நடக்கும் இடம் கருதியும் அதைப் புகைப்படம் எடுக்க முடியாது என்பதாலும் படங்கள் எடுக்க முடியவில்லை. மேலும் எங்களிடம் டிஜிட்டல் காமிராவும் கிடையாது. ஓதுவாரைத் தனியே கூப்பிட்டுப்படம் எடுத்துப் பேச வைத்து இணைப்பது என்றாலும். தீட்சிதர்களின் தனிப்பட்ட அவர்கள் வாழ்வைப் பற்றி நான் இங்கே எழுதவில்லை என்பதால் மற்றவற்றைத் தவிர்த்துக் கோயில் வழிபாட்டில் திருமுறை கட்டாயம் ஓதுகின்றார்கள் என்பதை மீண்டும் உறுதி கூறுகின்றேன். மேலும் அனைவரும் கூறும் இன்னொரு விஷயம் சிதம்பரம் கோயிலின் வைதீக முறை பூஜை பற்றி. அது என்னமோ நடுவில் வந்ததாய்ச் சிலர் கூறுகின்றனர். சைவ ஆகம முறைப்படி தான் முன்னர் இருந்ததாயும் பின்னர் வந்த தீட்சிதர்கள் அதை மாற்றி விட்டதாயும் சொல்கின்றனர். ஒருவேளை அவர்கள் சொல்வது சைவ ஆகமங்கள் கிரந்தத்தில் இருந்ததால் இருக்கலாம் என நினைக்கின்றேன். ஆனால் ஆகமமும் வேதத்தின் ஒரு பகுதியே எனவும் ஆகமத்தை ஐந்தாவது வேதம் எனச் சொல்லுவார்கள் எனவும் ஒருமுறை படிச்சேன். சில புத்தகங்கள் கிடைக்கவில்லை. முக்கியமாய் தருமபுர ஆதீனத்தில் போட்டிருக்கும் புத்தகம் கிடைக்க வேண்டும். சிலவற்றைக் கூகிளாண்டவர் மூலம் தேடி எடுத்து விட்டேன். முக்கியமாய் ஆகமத்துக்கும் வைதீக முறைக்கும் உள்ள வித்தியாசம். ஆகமத்திலும் வடமொழி உண்டு. தென்னாட்டில் தான் ஆகம முறைப் பூஜை என்பதால் அது தமிழ் மொழியில் இருந்தது எனச் சிலர் கூறுகின்றார்கள். அது பற்றியும் தகவல் திரட்டுகிறேன்.

The worship services that follow at about 9:30, and then at noon, and at 5 in the evening and at 7 pm involve a combination of rituals involving ablutions to the Crystal Lingam and the ceremonial show of lamps to Nataraja and Sivakami amidst the chanting of Vedic and Tamil hymns. The Shiva Agama system of temple rituals followed in almost all of the Saivite temples in Tamilnadu, is not followed at Chidambaram. It is a unique worship protocol said to have been prescribed by Patanjali that is followed at this temple.

www.indiantemples.com/Tamilnadu/chidchid.html

மேலே குறிப்பிட்டிருக்கும் லிங்கில் போய்ப் பார்த்தால் தமிழிலும் திரு முறைகள் சொல்லுவதும் வைதீக முறைப்படிப் பூஜை செய்யப்படுவது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறதைப் பார்க்கலாம். மற்றவை நன்கு படித்துப்பார்த்துப் புரிந்து கொண்டு உள்வாங்கிக் கொண்டு வருகிறேன். தாமதத்துக்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதிகம் யாரும் படிக்கிறதில்லை என்றாலும் படிக்கிற ஒருத்தர் இரண்டு பேருக்காவது தாமதத்துக்குக் காரணம் தெரியணும் இல்லையா? ஒருவேளை கூகிளிலேயே சிதம்பரம் பற்றிய அனைத்துத் தகவல்களும் கிடைப்பதால் யாருக்கும் அவ்வளவாய் இதில் ஆர்வம் இல்லையோ என்னமோ என்று தோன்றுகிறது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 47 ॐ

ஆகமங்களைப் பற்றித் திருமூலர் கூறியவை தொகுத்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருமூலரின் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே வேதத்தின் சிறப்பைப் பற்றி 6 பாடல்களும் அதற்குப் பின்னர் ஆகமச் சிறப்பு என்ற தலைப்பிலே 10 பாடல்களும் வருகின்றன.

1.அதில் ஆகமங்கள் மொத்தம் 28 எனவும் அவை யாவுமே சிவபெருமான் அருளிச் செய்தவை எனவும் கூறுகின்றார். ஈசனின் ஈசான முகத்தில் இருந்து இவ்வாக்கியங்கள் வந்து ஆகமமாய் நிலை பெற்றது எனவும் சொல்கின்றார்.

அதற்கான பாடல்:

//அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.//

2.இந்த ஆகமங்களை எண்ணினால் 28 என்றாலும் அவை இந்த அளவில் நில்லாமல் அளவின்றியும் உள்ளன. இவற்றைப் பற்றிக் கூறிய 66 பேர்களைத் தவிர யானும் இது பற்றிச் சிந்தித்துத் துதிக்க ஆரம்பித்தேன்.

//அண்ண் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.//

3.இறைவன் அருளால் அருளப் பட்ட இந்த ஆகமம் ஆனது வானோர்களாலும் அறியப் படாத ஒன்றாகும். இவை அனைத்தும் சொல்லப்பட்டால் பூவுலக மாந்தர்க்கு அறிய முடியாத ஒன்றாகும்.

//அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.//

4.சிவலோகத்தில் "சதாசிவ"மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலானோர்க்கு உணர்த்திய ஈசன் அவற்றைப் பூலோக மாந்தர் அறியும்படி உரைத்த போது"சீகண்ட பரமசிவன்" ஆக இருந்து உணர்த்த அதைக் கேட்ட நந்தி எம்பெருமான் மெய்யுணர்வோடு அவற்றை உணர்ந்தவராய் மெய்யுணர்வோடு விளங்கப் பெற்றார்.

//பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.//

5.இத்தனை ஆகமங்களில் சிறந்ததான ஒன்பது ஆகமங்கள் நாத தத்துவத்தில் நிலைத்த சிவத்திடம் இருந்து வந்த காலத்தில் சிவமானது விந்து தத்துவத்தில் நிலைத்த சத்தியினிடத்தில் இதை உணர்த்த சத்தியானது தன்னில் இருந்து தோன்றிய சதாசிவருக்கும் சதாசிவர் சம்பு பட்ச மகேசுவரருக்கும் அங்கிருந்து அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர் பின்னர் உருத்திரர், திருமால், பிரம்மா என அனைவருக்கும் சென்றடைந்த இந்த ஆகமங்களில் ஒன்பதை எங்கள் ஆசிரியர் ஆன நந்தி எம்பெருமான் சீகண்ட பரமசிவனிடமிருந்து பெற்றார்.

//சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.//

6. அந்த ஆகமங்கள் முறையே 1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6......7.....8.... சுப்பிரபேதம், 9. மகுடம் ஆகியவை ஆகும்.

//பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.//

7. இறை அருளால் சொல்லப்பட்ட இந்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும் அவற்றின் உட்பொருளை இப்பூவுலக மக்கள் அறியவில்லை எனில் அது அவர்களுக்குச் சரிவரப்பயன்படாது.

// அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.//

8.மக்கள் அனைத்து மெய்யுணர்வையும் உணராது புலனுணர்வே மிகப் பெற்று வாழுங்காலத்து அதைப் போக்கும் வண்ணம் சிவபெருமான் உமாதேவியார்க்கு "ஆரியம் தமிழ்" என்னும் இரு மொழிகளை உலகம் உய்யச் சொல்லித் திருவருள் செய்ய எண்ணங்கொண்டான்.

//மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.//

9.இறைவன் உயிர்களைப் பாசத் தளையினின்று விடுவிக்கின்ற முறையையும் பின் உயிர்கள் தன்னிடம் செலுத்தும் அன்பால் அவற்றைத் தன்னிலேயே நிலை நிறுத்தும் முறையையும் அவ்வாறு நிலை நிறுத்தும்போது உயிரானது பண்டைய நினைவுகளால் மோதி அலைப்புண்டு பாசத்திலே பொருந்தி நிற்பதையும் "தமிழ் மொழி வடமொழி" இவ்விரு மொழிகளுமே ஒரே மாதிரியாக உணர்த்தும். அவற்றைச் சரியானபடி உணராதவருக்குச் சிவஞானம் கை கூடுவது அரிதே யாகும்.

// அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.//

10.மொழிகள் பதினெட்டு உள்ளன அனைத்து மொழிகளுமே சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும் சிறப்பாகவும் அனைவரும் உணர அமைத்த வாயிலே. அதை உணராத கற்றோர் எத்தனை தான் கற்றிருந்தாலும் "கல்லாதவர்" என்றே உணரப் படுவார்கள்.

//பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.//

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

ஸாம வேதிகளின் புரட்டாசி மாத அமாவாஸ்யை  தர்பபணம்

28.09.2019  சனிக்கிழமை

ஆசமனம்.

அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

கேசவா + தாமோதரா

வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.

ஶூக்லாம் + ஸாந்தயே,
ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்
மோபாத்த + ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே

விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸ்திர வாஸர யுக்தாயாம் உத்திரபல்குனீ நக்ஷ்த்ர யுக்தாயாம், சுப்ர யோக, சதுஷ்பாத கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ

ப்ராசீனாவீதி

தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

........கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீணாம்

தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

…............கோத்ராணாம் வஸூருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மது, ஸமத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஶபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்

அமாவாஸ்ய புண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால்
துடைத்துக்கொள்ளவும்.
பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும். கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்

ஆவாஹந மந்த்ரம்

ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வனேபி: தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்சன: ஸர்வவீரம் நியச்சத உசந்தஸ்வா ஹவாமஹ உசந்த ஸமிதீமஹி உசன்உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்.

ஆஸன மந்த்ரம்

ஆயாந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான் வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.

ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் //

பித்ருவர்க்கம்

......கோத்ரான் ........ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

......கோத்ரான் ........ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

......கோத்ரான் ........ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் இல்லாதவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாத்ருஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாதாமஹவர்க்கம்

.....கோத்ராணாம்........ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

.....கோத்ராணாம்........ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

.....கோத்ராணாம்........ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: மாதுப்
பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஞாதாக்ஞாத, வர்க்கத்வய, பித்ரூன், ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3தடவை)

கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளத்திற்குள் அப்ரதிஷிணமாக சுற்றிவிடவும்

மந்த்ரம்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

ப்ரதக்ஷிண மந்த்ரம்

தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம: யாநிகாச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே

ப்ராசீனாவீதி

யதாஸ்தான மந்த்ரம்

ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வனேபி: தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்சன: ஸர்வவீரம் நியச்சத உசந்தஸ்வா ஹவாமஹ உசந்த ஸமிதீமஹி உசன்உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே// அஸ்மாத், கூர்ச்சாத், வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்

மந்த்ரம்

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

மந்த்ரம்

ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர - ஸாத்குன்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததேநமம

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து

பவித்ரத்தை பிரித்துபோட்டுவிட்டு ஆசமனம் செய்யவும்

ஶுபம்
ருதுக்கள்

சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு - பானு வாஸர
திங்கள் - இந்து வாஸர
செவ்வாய் - பவும வாஸர
புதன் - சவும்ய வாஸர
வியாழன் - குரு வாஸர
வெள்ளி - ப்ருகு வாஸர
சனி - ஸ்திர வாஸர

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை

சித்திரை - மேஷ மாஸே
வைகாசி - ரிஷப மாஸே
ஆனி - மிதுன மாஸே
ஆடி - கடக மாஸே
ஆவணி - ஸிம்ம மாஸே
புரட்டாசி - கன்யா மாஸே
ஐப்பசி - துலா மாஸே
கார்த்திகை - வ்ருச்சிக மாஸே
மார்கழி - தனுர் மாஸே
தை - மகர மாஸே
மாசி - கும்ப மாஸே
பங்குனி - மீன மாஸே.
 ால் சாமி கோவில் - ஓர் அதிசயம்.

சுமார் 900 வருடங்களுக்கு முன்பு திருமங்கலத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவில் "மோதகம் " என்ற இடத்தில் இருக்கும் ஒரு குன்றின் மேல் கட்டப்பட்ட குடவரைக் கோவில்.

இன்றைக்கு மோதகம் என்றழைக்கப்பட்ட அந்த ஊர் இல்லை.

முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன மண்டபங்கள், அவற்றைத் தாங்கும் பிரமாண்ட தூண்கள், அதில் திருமாலின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் சிற்பங்கள் என அனைத்தையும் ஒரே ஒரு செங்குத்துப் பாறை போன்ற ஒரு குன்றில், குன்றைக் குடைந்து அடிவாரத்தில் அரங்கநாதருக்கு ஒரு குடவரைக் கோயிலும், குன்றின் மேல் கோபால் சாமிக்கு ஒரு கோவில் என இரு வகையானக் கோயில்களைக் அக்காலத்தில் கட்டியிருக்கிறார்கள்.

வழக்கம்போல பாறைகளை எப்படி எதை வைத்துப் பிளந்தார்கள்? எப்படி சிற்பங்களை செதுக்கினார்கள்? எப்படி கீழிருந்து மேலே கொண்டு சென்றார்கள் போன்ற. வியப்புகளையெல்லாம் தாண்டி, அதிசயிக்க வைக்கும் ஒரு விசயம் Nature ventilation by air circulation - அதாவது இயற்கையின் துணை கொண்டு அமைக்கப்பட்ட காற்றோட்டம்.

குன்றின் மேல் கோபால் சாமி சந்நிதி மிகக்குறுகியது. மிக அதிகம் புளுக்கம் கொண்ட இடம். அந்த இடத்தில் குளுகுளு காற்றோட்டத்தை அதுவும் 900 வருடங்களுக்கு முன்னர் இயற்கையான முறையில் உருவாக்கியிருப்பது "காற்றோட்ட அறிவியலின் உச்சம் "

நம் வியப்பிற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் இருப்பது அறிவியலால்கூட. விளக்க முடியாமல் இருப்பது. அந்த செங்குத்துக் குன்று இரண்டாகப் பிரிந்து, அதில் கருடன் கை கூப்பி வணங்கியது போன்ற ஒரு சிலை மாதிரியான அமைப்புத் தெரியும்.

உண்மையில் இது சிலையுமல்ல! யாரும் செதுக்கியதும் அல்ல!

கருடன் தன் முதுகில் கோபால் சாமியை வைத்துக் கொண்டு வணங்கியது போல, தானாகவே காற்றின் போக்கால் இயற்கையாக அமைந்தப் பாறை.

இதை இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட இந்தக் கோணத்தில் பார்த்தால் மட்டுமே தெரியும்.

அப்பண்ண சுவாமிகள்!

நாலு முழ வெள்ளைக் கதர் வேட்டியும், ஜிப்பாவுமே அவரின் வழக்கமான ஆடைகள். கிராம வாசிகளோடு சேர்ந்து நின்றால், அவரைத் தனியாக இனம் காண முடியாது. அந்த அளவுக்கு எளிமை. ஆனால், அவரது கண்களில் அபரிமிதமான ஈர்ப்பு சக்தி இருந்தது. அவர்தான் அப்பண்ண சுவாமிகள்.அவர் ஒருமுறை திருவண்ணாமலை சென்று சேஷாத்ரி சுவாமிகளைத் தரிசனம் செய்தார். அப்போது, போக்குவரத்து குறைந்த ஒரு பின்தங்கிய பகுதியில் நிரந்தரமாகத் தங்கிக் கொண்டு, அங்குள்ள மக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய். உன் ஆத்ம சாதனையையும் தொடர்ந்து வா! என அறிவுறுத்தினார் சேஷாதிரி சுவாமிகள். அதன்படியே, அப்பண்ண சுவாமிகள் வட குமரையை தன் நிரந்தர தங்குமிடமாகக் கொண்டார். அவ்வூரில் தம் அன்பர்களின் நிதி உதவியுடன் ஒரு பள்ளியை நிறுவினார். குடிநீர் கிணறு தோண்டினார்; மாவட்ட ஆட்சியரையும் வளர்ச்சி அலுவலரையும் அணுகி சாலை வசதிக்கு ஏற்பாடு செய்தார். கோயில்களைப் புதுப்பித்தார். இப்படிப் பல திருப்பணிகள் செய்தார். காஞ்சி மகாசுவாமிகள், ஒருமுறை கள்ளக் குறிச்சியில் இருந்து ஆத்தூருக்குப் பயணம் செய்தார்.வடசென்னிமலையில் பல்லக்கை நிறுத்தச் சொல்லி அருகிலிருந்தவரிடம், இவ்விடம் வைஷ்ணவ குலத்து அதிவர்ணாச்ரமி ஒருவர் இருக்கிறாரே! அவரை அழைத்து வாருங்கள் என்றார். அப்பண்ண சுவாமிகளை, பெரியவரிடம் அழைத்து வந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். பிறகு, காஞ்சி முனிவர் தன் கழுத்திலிருந்த துளசி மாலையை எடுத்து அப்பண்ண சுவாமிகளுக்கு அணிவித்தார். பின்னர் அருகிலிருந்தவர்களிடம், இவர் நல்ல அநுபூதிமான் என்றார்.

அப்பண்ண சுவாமிகள், திருவண்ணாமலை ரமண மகரிஷியையும், திருக்கோவிலூர் ஞானானந்தரையும் தரிசித்து ஆசி பெற்றுள்ளார். இப்படி மகான்களோடு மகானாய் வாழ்ந்த சுவாமிகள், தம் அன்பர்களின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். ஒருமுறை சுவாமிகள் ராமேஸ்வரத்தில் சோமநாதன் செட்டியார் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். சுவாமிகள் தங்கியிருந்த அறை, செட்டியார் பணம் வைக்கும் அறையாக இருந்தது. அச்சத்தின் பேரில் செட்டியார், சுவாமிகள் இரவு தங்கியிருந்த அறைக்கு வெளிப்பூட்டு போட்டுவிட்டார். விடியற்காலையில் எழுந்து குளித்து வழக்கம்போல சிவபூஜையில் ஈடுபட்டார் செட்டியார். சுவாமிகள் தங்கியிருந்த அறை பூட்டியபடியே இருக்க, பொழுது புலர்ந்தவுடன் சுவாமிகள் பல்குச்சியுடன், வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததைக் கண்ட செட்டியாருக்கு பெரும் அதிர்ச்சி. தன் தவறை உணர்ந்து சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். தண்ணீரைப் பாலாக்கியும், நீரில் விளக்கெரித்தும், காசநோயை குணமாக்கியும், நள்ளிரவில் அந்தரத்தில் நிஷ்டையில் இருந்தும் சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பல. அந்த மகான், நாளைக்கு இங்கு பலர் வருவார்கள். எதற்கும் ஆயத்தமாக இருங்கள் என்று தன் இறுதித் தருணத்தைக்கூட சூசகமாகச் சொல்லி, தமது 48-ஆம் வயதில் முக்தி அடைந்தார். அவரது அதிஷ்டானத்தில், பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் ஜயந்தி விழாவும், முக்தி அடைந்த தினமான மகாளய அமாவாசையில் ஆராதனை விழாவும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 45 ॐ

சிதம்பரம் கோவிலின் பூஜை முறைகள் தீட்சிதர்களால் வைதீக முறைப்படி செய்யப்படுகிறது. மற்றச் சிவன் கோயில்களில் சைவ ஆகம முறைப் படியான வழிபாடுகள் நடந்து வருகின்றன என்றாலும் இன்றளவும் சிதம்பரம் கோயிலின் வழிபாட்டு முறைகள் மற்றச் சிவன் கோயில்களில் இருந்து வேறுபட்டதாயும் சொல்லப் படுகிறது. கோயில்களுக்கெல்லாம் கோயில் என்று சொல்லப்படும் இந்தச் சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் "போதாயனர்" என்னும் ரிஷியின் சூத்திரங்களின் வழி முறைகளைப் பின் பற்றுவதாய்ச் சொல்லப்படுகிறது. மேலும் பூஜாவிதிகள்"பதஞ்சலி" முனிவரால் நடராஜரின் ஆக்ஞைப் படி எழுதப்பட்டதாயும் சொல்லப்படுகிறது. பூஜா பதஞ்சலம் என்னும் இந்தப் பூஜாவிதிகளே இன்றளவும் பின்பற்றப்படுவதாயும் சொல்கின்றனர். ஸ்ரீ சிதம்பரேஸ்வர நித்ய பூஜா சூத்திரம் என்னும் இந்த பதஞ்சலி பத்ததியே இன்றளவும் அனுசரிக்கப் படுகிறது. நடராஜரும் தங்களில் ஒருவர் என்னும் இவர்கள் எண்ணமும் இன்றளவும் மாற்ற முடியாமல் யாராலும் அதை உடைக்க முடியாமலும் உள்ளது. சரித்திர பூர்வமாய்ப் பார்த்தால் இந்தச் சிதம்பரம் கோயிலுக்குப் பல அரசர்கள் சக்கரவர்த்திகள் திருப்பணிகள் செய்து வந்திருக்கிறார்கள் என்றாலும் அந்நிய தேசப் படை எடுப்புக்கும் இது ஆளாகி இருக்கின்றது. முஸ்லிம்களின் படை எடுப்பின்போது மாலிக்காஃபூர் வந்து சிதம்பரம் கோயிலை ஆக்கிரமித்த போது நடந்த ஒரு விஷயம்.

இதோ: ஹிந்து சமுதாயத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தில்லை வாழ் அந்தணர்கள் ஆற்றியுள்ள சேவை அளப்பரிய ஒன்றாகும். மாலிக் காஃபூரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் போது தமது உயிரினை தியாகம் செய்து தமிழகத்தின் ஆன்மிக கலைப் பொக்கிஷங்களான தெய்வத் திருவுருவச்சிலைகளை காத்தவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள். அமீர் குஸ்ரு தாரிக்-இ-அலை எனும் நூலில் பின்வருமாறு தில்லை வாழ் அந்தணர் அனுபவித்த கொடுமைகளை கூறுகிறான். மாலிக் மிகுந்த கவனத்துடன் அஸ்திவாரங்களை பெயர்த்தெடுத்தான். பிராம்மணர்கள் விக்கிர ஆராதனையாளர்கள் தலைகள் அவர்கள் கழுத்துக்களிலிருந்து நடனமாடியபடி தரையில் அவர்கள் கால்களில் விழுந்தது. இரத்தம் ஆறாக ஓடிற்று. என்ற போதிலும் அந்தணப்பெருமக்கள் தம் தலைகளை கொடுத்த போதிலும் தர்மத்தை விடவில்லை. தெய்வத் திருவுருவச்சிலைகளை காப்பாற்றினர். இன்று உலகெங்கிலும் நடராஜ தாண்டவ சிற்பம் அடைந்துள்ள மேன்மையான வணக்கத்திற்கு தெய்வத்திருவருளும் உங்கள் முன்னோர்களின் தியாகங்களுமே காரணம். அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இந்தக் கட்டுரை தீட்சிதர்களின் நடராஜ பக்தியை வெளிக்காட்டுகிறது. இது தவிரத் திப்பு சுல்தான் வந்த போது நடராஜத் திருமேனியை தீட்சிதர்கள் எடுத்துக் கொண்டு போய்த் திருச்சூரில் மறைத்து வைத்திருந்ததாயும் ஆலப்புழையில் மறைத்து வைத்திருந்ததாயும் செவிவழிச் செய்திகளும் கூறுகின்றன. 1781-ல் நடைபெற்ற இரண்டாவது மைசூர் யுத்தத்தில் "கூட்" என்னும் தளபதி சிதம்பரம் கோயிலைத் தாக்கியதாகவும் பின்னர் துரத்தி அடிக்கப் பட்டதாயும் கர்நாடக நவாபுகளைப் பற்றிய சரித்திரக் குறிப்புக்களில் காணக் கிடைக்கிறது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடம் மேலக் கோபுரம் என்றும் அதன் அடையாளங்கள் இன்னும் அந்தக் கோபுரத்தின் மாடங்களில் காண முடிகிறது எனவும் சொல்கின்றனர். இந்தச் சமயத்தில் தீட்சிதர்கள் நடராஜத் திருமேனியை எடுத்துக் கொண்டு திருவாரூர் போய் அங்கே சபாபதி மண்டபத்தில் மறைத்து வைத்திருந்ததாயும் தஞ்சையை அப்போது ஆண்டு வந்த மராட்டிய அரச வம்சத்தினர் இதற்கு உதவியதாயும் கூறப் படுகிறது. இதற்குச் சான்றாக ஆயிரக்கால் மண்டபத்தில் க்ரந்த எழுத்துக்களால் அமைந்த ஒரு ஸ்லோகத்தில் இந்த விஷயம் சொல்லப் பட்டு நடராஜர் சக வருஷம் 1695 கலியுகாதி 4874 அதாவது கி.பி. 1773-ம் வருஷம் திருவாரூரில் இருந்து "சித்சபை" வந்தடைந்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது.

இதைப் பற்றி வரும் நாட்களில் விரிவாய்க் காண்போம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
மயிலாடுதுறை மாவட்டத்தில்  கோழிகுத்தி என்ற கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ வானமுட்டி பெருமாள் கோவிலில் இந்த மாதம் முப்பதாம் தேதி சனிக்கிழமை விஜயதசமி அன்று காலை பன்னிரெண்டு மணியளவில் அக்னியால் அம்பு எரியும் திருவிழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்படவுள்ளது. இந்த அம்பு எரியும் விழாவில் கலந்து கொண்டு தரிசித்தால் நாம் செய்த பாபங்கள் போகும். எரியும் அம்பு மூலம் நமது பாபங்கள் விலகும். நம்மிடம் உள்ள கஷ்டங்கள் எல்லாம் விலக்கி நல் வழி படுத்துவார் வானமுட்டி பெருமாள். தீராத வியாதிகள் எல்லாம் நீங்கப்பெறலாம்.
இந்த விழாவானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆகையால் இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி நாம் செய்த பாபங்களை போக்கிக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அனைவரும் வருக வானமுட்டி பெருமாளின் அருளை பெருக. இக்கோவில் சுமார் 800 வருடங்கள் பழமையானது. மூலவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் ஸ்வாமிக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்வாமிக்கு அதி விஷேசமான தைலம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 800 வருடங்களாக  ஈரமாகவே இருக்கின்றார். வேருடன் கூடிய மூலவர் அதனால் ஸ்வாமி வளர்ந்து கொண்டே இருப்பது மிகவும் அரிதான ஒன்று. அதனால் தான் என்னவோ இவருக்கு வானமுட்டி பெருமாள் என்ற திருநாமமோ என்று என்று கிறேன்.
முழுவதையும் படியுங்கள் நண்பர்களே!!!

மிக பழமைவாய்ந்த பெருமையுடையதும்; காவிரி வடகரை வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும்; பிதுர் தோஷம், ஹத்திதோஷம், சனி தோஷம் போன்ற தோஷங்களுக்கு நிவர்த்தி தலமாகவும் விளங்குகின்ற தலம் கோழிகுத்தி ஸ்ரீ வானமுட்டி பெருமாள் கோவில்.

மூலவர் திருநாமம் : ஸ்ரீவானமுட்டி பெருமாள், பக்தப்ரியன், வரதராஜன்.

இறைவி : ஸ்ரீதயாலட்சுமி {மூலவரின் திருமார்பிலே உள்ள தாயார்}, பூமாதேவி {சிலாரூபம்}

விமானம் : சத்திரவிமானம் (குடை போன்ற அமைப்பு).

தீர்த்தம் : விஸ்வபுஷ்கரணி, பிப்பிலமகரிஷி தீர்த்தம்.

ஸ்தல வரலாறு : குடகுமலைச்சாரலில் வாழ்ந்த நிர்மலன் என்ற அரசன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டான். ஒருமுறை அவன் காட்டு வழியாக வந்து கொண்டிருந்த போது நாரத மாமுனிவர் மிக இனிமையாகப் வீணை இசைத்துக்கொண்டிருந்த தெய்வீகமான ஒலியை செவியுற்று வணங்கி அடிபணிந்து நின்றான். முனிவர் உபதேசித்த மந்திரத்தை உருகி ஜெபிக்க தொடங்கினான். அப்போது அசரீரி ஒலித்தது. நான் பெருமாளின் குரலாய் ஒலிக்கிறேன். உனக்கு ஒரு கடுமையான தோஷம் உள்ளது. இந்த தோஷம் நீங்க காவிரிக்கரை வழியாக உன் யாத்திரையை தொடங்கு. மூவலூரில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் {சிவன்} உனக்கு வழிகாட்டியாக வருவார். வழியில் உள்ள திருத்தலங்களில் எல்லாம் நீராடு. எங்கு உன்மேனி பொன் வண்ணமாக மாறுகிறதோ அங்கேயே தங்கிவிடு என்றது.

அதன்படி மன்னன் காவிரிக்கரை வழியாக தன் பயணத்தை துவக்கினான்.
ஓரிடத்தில் அவனது மேனி பொன்நிறமாக மாறியது. மகிழ்ச்சியடைந்த மன்னன் பெருமாளுக்கு நன்றி கூறி மனமுருகி வழிபட்டான். அந்த இடத்தில் தோன்றிய பெரிய அத்தி மரத்தில் நாராயணன், சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் மன்னனுக்கு காட்சி கொடுத்தார். மன்னனின் பாவங்கள் இங்கு உடனடியாக நீங்கியதால் இத்தலம் கோடிஹத்தி என அழைக்கப்பட்டது.
கோடிஹத்தி என்றால் சகல பாவமும்நீங்குமிடம் என்று பொருள்.
இதுவே காலப்போக்கில் மருவி கோழிகுத்தி ஆனது. இதன் பின் மன்னன் பெருமாள்  பக்தனாகி தவமிருந்து ரிஷியாகவே மாறி விட்டான். பிப்பல மகரிஷி என மன்னனை மக்கள் அழைத்தனர்.

பிப்பலர் காவிரிக்கரையில் தவம் புரிய ஆரம்பித்தார். அவர் தவம் செய்த இடத்தில் தற்போது ஒரு மண்டபம் உள்ளது. இதன் அருகில் ஓடும் காவிரி தீர்த்தத்தை பிப்பல மகரிஷி தீர்த்தம் என அழைக்கிறார்கள்.
பிப்பிலர் தவம் செய்த சிறுமண்டபம் தீர்த்தக்கரையோரத்தில் இன்றும் உள்ளது.
பெருமாள் வானமுட்டி பெருமாள் என்று அனைவராலும் பயபக்தியுடன் வணங்கப்படுகிறார்.

பிப்பிலர் அருளிய சனி ஸ்தோத்திரம்

ஓம் கோணஸ்த பிங்கலே பப்ரு
கிருஷ்ணோ ரௌத்ராந்த கோயம்
சௌரீ- சனைச்ரே மந்த பிப்பலா தேன ஸமஸ்ஸதுத்
ஏதானி தச நாமானி பிராத ருத்தாய ய: படேத்
சனைச்சர கிருதா பீடநகதாசித் பவிஷ்யதி.

கோழிகுத்தி வானமுட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட
சரபோஜி மகராஜா தனது யுத்ததோஷம்  நீக்க  வேண்டிக்கொண்டார். பிப்பிலர்க்கு அருளியது போல் {வானளாவிய காட்சி}
சரபோஜி மகாராஜாவுக்கும் இந்த அத்திமரத்தில் காட்சி தந்தருளினார்.
ஆஹா! கனவிலும் நினைவிலும் காணக்கிடைக்காத காட்சியென்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மன்னர் தன்னைப் போல அனைவரும் பலனடைய வேண்டும் என்று எண்ணினார்.

சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் கொண்டு சதுர்புஜனாய் தனக்கு பெருமாள் காட்சி தந்த அற்புத திருக்கோலத்தை ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சிலைவடித்து ஆலயம் எழுப்பி பூஜை செய்தார். விஸ்வரூப பெருமாள் என்பதால்
வானமுட்டி பெருமாள் என்ற திருநாமம் கொண்டார். மகேந்திரவர்மன் போன்ற பிற மன்னர்களும் திருப்பணி செய்துள்ளார்கள் என்பதற்கு 7ஆம் நூற்றாண்டு, 10ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் உள்ளன.
அந்தக் கல்வெட்டில் பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. மூன்று நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டு வைணவ ஆகம விதிப்படி  சுற்றுப்பெருமதில்களுடன் ஆலயம் அமைத்து முறைப்படி காலபூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ராஜகோபுரத்தின்கீழ் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயனின் அருட்காட்சியை வணங்கி விட்டு பலிபீடம் கொடிமரத்தைக் கடந்து ஸ்ரீவிநாயகப் பெருமானை தரிசிக்கலாம். கருடாழ்வாரிடம் உத்தரவு பெற்று உள்மண்டபத்தில் நுழைந்து ஆலயக் கருவறை விமானத்தின் கீழ் 14 அடி உயரத்தில் மார்பில் ஸ்ரீ தயாலக்ஷ்மியுடன் விளங்கும் வானமுட்டி பெருமாளின் தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம் பெறலாம்.

மூலிகை வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. இன்று வரை காயாமல் வேர்களும் நிறம் மாறாமல் ஈரத்தன்மையுடன் வேரே திருவடியை தாங்கி நிற்கும் அதிசய தோற்றத்துடன் அருகில் பூமாதேவி சிலாரூபத்துடன் ஸ்ரீவானமுட்டி பெருமாளின் வடிவழகை மெய்ம்மறந்து மெய்யுணர்வோடு வணங்கலாம்.

பெருமாள் மார்பில் மகாலட்சுமி
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாளையும் தரிசிக்கலாம். தாயாருக்கு தனிச்சந்நிதி கிடையாது.
உள்மண்டபத்தில் மூலவருக்கு வலப்புறம் சக்கரத்தாழ்வாரும் இடப்புறம் யோக நரசிம்மரும் கிழக்கு நோக்கியவாறும்
நர்த்தன கிருஷ்ணர் தெற்கு நோக்கியவாறும் அருள் புரிகின்றனர்.
மூலவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. சாம்பிராணி, தைலக்காப்பு மட்டுமே.

பெருமாள் வளர்ந்து கொண்டே செல்வதால் அவர் மேலும் வளராமல் இருக்க தானியம் அளக்கும் மரக்காலை கிரீடம் போன்று திருமுடியில் சாற்றியுள்ளனர். அபிஷேகம் செய்ய விரும்புபவர்கள் யோக நரசிம்மருக்கும் வருண மூலையில் உள்ள வரதராஜப் பெருமாளுக்கும் செய்து பலனடையலாம்.

வெளிப்பிராகாரத்தின் வடதிசையில் தெற்கு நோக்கிய வண்ணம் விஷ்வக்சேனர், ராமானுஜர், பிப்பிலமகரிஷி இம்மூவரும் அருள்புரிகின்றனர். பிப்பில மகரிஷி அருளிய சனி ஸ்தோத்திரம் பெருமாள்
தியான ஸ்லோகம் ஆலய வழிபாட்டு நேரங்களில் ஓதப்படுகின்றன.
ஈசான்ய திக்கில் மேற்கு நோக்கி தனிச்சந்நிதி கொண்டு ஏழு ஸ்வரங்களையும் தன்னில் கொண்டவராக சப்தஸ்வர ஸ்வரூப ஆஞ்சனேயர் அருள்புரிகிறார்.

சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஞ்சனேயரை வழிபட்டு இன்னல்கள் நீங்கப்பெறுகிறார்கள். சங்கீதம், நாட்டியம் போன்ற கலைத்துறைகளில் வளம் பெற தரிசித்து பயனடையலாம். அனுமன்  சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை எழுகின்றது. ஆஞ்சநேயரின் வாலில் கட்டப்பட்டுள்ள மணியை தலை மீது தூக்கி வைத்துள்ளதும் சிறப்பு.

திருப்பதி சீனிவாசப் பெருமாளையும்,
சோளிங்கர் யோக நரசிம்மரையும்,
காஞ்சிபுரம் அத்திவரதராஜப் பெருமாளையும் ஒன்றாக தரிசித்த பலன் கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாளை தரிசித்தால் கிடைக்கும் என்று ஸ்தலபுராணம் சொல்கிறது. மகத்துவம் வாய்ந்த மார்கழி மாதத்தில் இங்கு வழிபாடுகள் செய்தால் பன்மடங்கு பலனைப் பெறலாம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா சனிக்கிழமை வருவதால் வெகுசிறப்பாக இருக்கும். சிந்தையில் மாலவனை நிலை நிறுத்தி வழிபடுவதும் வீதி தோறும் இறைவன் திருநாமத்தைப் போற்றிப்பாடுவதும் ஆடுவதும் வைணவமரபு. பக்தர்கள் கூடும் கூட்டத்தில் இறைவனும் இணைந்து உடனிருப்பான் என்று நம்மாழ்வார் தமது பாசுரத்தில் கூறுகிறார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ வளப்படுத்தும் வானமுட்டி பெருமாளை வழிபடுவோம்.

ஆலயத் தொடர்புக்கு: எம்.எஸ். வரதராஜ பட்டாச்சார்யார், செல்: 97872 13226.

அமைவிடம் : மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையிலுள்ள மூவலூருக்கு வடக்கே, சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கோழிகுத்தி. மயிலாடுதுறையிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் சோழம் பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கி அரை கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு கோழிகுத்தி செல்லலாம். மினி பஸ்ஸில் ஆலய வாசலுக்கே செல்லலாம். காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் கோவில்  திறந்திருக்கும்.