திங்கள், 9 செப்டம்பர், 2019

அருள் மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்

மூலவர்:சுந்தர்ராஜப்பெருமாள்
உற்சவர்:வடிவழகிய நம்பி
தாயார்:அழகியவல்லி
தல விருட்சம் :தாழம்பூ
தீர்த்தம்:மண்டுக தீர்த்தம்
ஆகம பூஜை:பாஞ்சராத்ரம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திரு அன்பில்
ஊர்:அன்பில்
மாவட்டம் :திருச்சி
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருமழிசையாழ்வார்
      
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத் தணையரங்கம் பேர் அன்பில் - நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால் அணைப் பார் கருத்தனாவான்.திருமழிசையாழ்வார்  
     
விழா:மாசியில் தீர்த்தவாரி திருவிழா மற்றும் வைகுண்ட ஏகாதசி.           சிறப்பு:பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப்போல இங்கும் சுவாமி தாரகவிமானத்தின் கீழ் இருக்கிறார். இவ்விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பில் இருப்பது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்,திருஅன்பில்- 621702. திருச்சி மாவட்டம்;போன்:+91- 431 - 6590 672. 
    
தகவல்:108 திவ்ய தேசங்களில் இத்தலம் 4வது தலமாக கருதப்படுகிறது.பிரகாரத்தில் நரசிம்மர்,வேணுகோபாலர்,லட்சுமி நரசிம்மர்,வீர ஆஞ்சநேயர் 12 ஆழ்வார்கள் ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் கோயில் இருக்கிறது.இங்கும் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கிறார். திருச்சி,திருப்பேர்நகர்,திருஅன்பில் என அருகருகே மூன்று பள்ளிகொண்ட பெருமாள்களை தரிசனம் செய்வது விசேஷமான பலன்களைத் தரும் என்கிறார்கள்.மூலவரின் விமானம் தாரக விமானம் எனப்படுகிறது.  
     
பெருமை:சுதபா எனும் மகரிஷி ஒருவர் தன் தவ வலிமையால் நீரிலும் நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டவராக இருந்தார்.மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டிருந்த அவர் ஒருநாள் தண்ணீருக்கடியில் தவம் செய்து கொண்டிருந்தபோது அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார்.சுதபா தவத்தில் இருந்ததால் துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை.நீண்டநேரம் வெளியில் காத்திருந்ததால் கோபம் கொண்ட துர்வாசர் அவரை தண்ணீரில் வாழும் தவளையாக மாறும்படி சபித்துவிட்டார்.இதனால் சுதபா மகரிஷிக்கு மண்டுகர்(மண்டுகம் - தவளை)என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாசரின் சாபத்திற்கு ஆளான மண்டுகர் அவரிடமே தனது சாபத்திற்கு விமோசனம் கேட்டார். துர்வாசர் அவரிடம் உனக்கு கிடைத்த இந்த சாபம் முற்பிறவியில் செய்த கர்மத்தால் கிடைத்ததாகும்.தகுந்த காலத்தில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப்பெற்று சாபவி மோசனம் பெறுவாய் என்றார்.அதன்படி மண்டுக மகரிஷி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுகதீர்த்தம்)சுவாமியை எண்ணி தவம் செய்து வந்தார்.மகாவிஷ்ணு அவருக்கு சுந்தர்ராஜராக காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். சுவாமி கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி நாபியில் பிரம்மாவுடன் இருக்கிறார்.உத்தமர் கோயிலில் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற சிவன் இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்துவிட்டுச் சென்றார்.அமர்ந்த நிலையில் ஆண்டாள்: முன்மண்டபத்தில் ஆண்டாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள்.இவள் நின்ற கோலத்தில் இருக்க உற்சவர் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள்.ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரு கோலங்களையும் தரிசனம் செய்வது அபூர்வம்.திருமண தோஷம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. தேவலோக கன்னியான ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்துவிடாமல் இருப்பதற்காக இவரை வணங்கிச் சென்றுள்ளாள்.
 
      
ஸ்தல வரலாறு:ஒருசமயம் பிரம்மாவுக்கு உலகில் உயிர்களை நாமே பிறக்க வைக்கிறோம். ஒவ்வொரு உயிரும் அழகுடன் இருப்பதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம்.அந்த அழகிய உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் நாம்தான் அனைவரிலும் அழகானவர் என்ற ஆணவம் உண்டானது. மேலும் அனைவரையும் படைக்கும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது.பிரம்மாவின் எண்ணத்தை அறிந்த மகாவிஷ்ணு அவரது ஆணவத்தை விட்டுவிடும்படி சொல்லிப்பார்த்தார்.பிரம்மாவோ கேட்பதாக இல்லை.எனவே அவரை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்துவிட்டார் மகாவிஷ்ணு.பூலோகம் வந்த பிரம்மா ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று சுவாமியை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வேண்டி வந்தார். இத்தலம் வந்த அவர் சுவாமியை எண்ணி தவம் இருந்தார்.அப்போது மகாவிஷ்ணு பேரழகு வாய்ந்த மனிதராக அவர் முன்பு வந்தார்.அவரைக் கண்ட பிரம்மா இவ்வளவு அழகான எவரையும் இதுவரையில் நான் பார்த்ததில்லையே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எனக்கேட்டார். அவரிடம் அன்பாக பேசிய விஷ்ணு அழகு என்பது நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இவ்விரண்டு குணங்களையும் கொண்டிருப்பவர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில்லை என உபதேசம் செய்து பள்ளிகொண்ட கோலத்தில் அவருக்கு காட்சி தந்தார் மகாவிஷ்ணு.உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மா ஆணவம் ஒழியப்பெற்றார்.பிரம்மாவின் வேண்டுதலுக்காக விஷ்ணு இத்தலத்தில் பள்ளிகொண்ட கோலத்திலேயே எழுந்தருளினார்.பிற்காலத்தில் சோழமன்னர் ஒருவர் இங்கு கோயில் கட்டினார்.பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மகாவிஷ்ணு எழுந்தருளிய தலம் என்பதால் இத்தலம் "அன்பில்' என்ற பெயரும் பெற்றது.


பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!

காமம்: பற்று உண்டானால் பாசம் மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும் ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும் ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்

ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.

1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது

பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?

முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.

இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.

மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம் புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.

ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான்  என உணர்வது ஏழாவது படி.

எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

ஒன்பதாம் படி: ராஜவித்ய ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது ஒன்பதாம் படி.

பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.

பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம்  துன்பம் விருப்பு வெறுப்பு ஏழை  பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.

பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.

பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல் உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால் நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
வடக்கே தலை வச்சா என்னாகும்?

இந்த காலத்துப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லை. வடக்கே பார்த்து தலை வைத்து படுப்பவர்களை பெரியவர்கள் கண்டித்தால் நீ பழைய பஞ்சாங்கம்! எங்கே தலை வைத்தால் உனக்கென்ன! என்று குரலில் கேலியைக் குழைத்து பேசுகிறார்கள். பிள்ளையார் மனித முகத்துடன் இருந்த காலத்தில் சிவனுடன் போர் புரிந்தாராம். போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன் வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ அவரது தலையை வெட்டி வரும்படி கூறினாராம். ஒரு யானை வடக்கே தலை வைத்து படுத்திருந்ததாம். அதன் தலையைக் கண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம். இதெல்லாம் புராணக்கதை என்று நம் பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் இந்தக் கதைக்கு அறிவியல் பின்னணியே காரணம். பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம். அதனால் வடக்கு நோக்கி படுத்தால் காந்தசக்தி மூளையைத் தாக்கும். இதனால் குழம்பிய மனநிலை உருவாகும். ஆழ்ந்த தூக்கம் உண்டாகாது. தூக்கம் கெடும்போது உடல்நலம் பாதிக்கும். உயிர் பிரிந்ததும் வடக்கு நோக்கி படுக்க வைப்பது நம் மரபு. சமண சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் உயிரை விட எண்ணினால் வடக்கிருத்தல் என்ற விரதத்தை மேற்கொள்வர். இதற்குசள்ளேகனம் என்றும் பெயருண்டு. நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தியை பழந்தமிழ் இலக்கியம் கூறுகிறது.  அறிவியல் செய்தியை படித்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள். பாமரர்கள் புரிந்து கொள்ளவே பிள்ளையார் பற்றிய புராணக்கதையை பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். புரிகிறதா!
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 31ॐ

கல்யாண மண்டபம் யாகசாலையை அடுத்து உள்ள அர்த்த ஜாம சுந்தரரைத் தரிசனம் செய்துகொண்டு பக்கத்தில் உள்ள சங்குடன் கூடிய "பாலகணபதி"யைத் தரிசனம் செய்யலாம். இதே பிரகாரத்தில் சனீஸ்வரருக்குத் தனி சன்னதி கிழக்கே பார்த்து உள்ளது. தவிரவும் நவகிரகங்களுடனும் சனீஸ்வரர் இடம் பெற்று இருக்கிறார். இதை அடுத்து உள்ள தேவ சபையானது சித்சபைக்கு மேற்கே தென் திசையை நோக்கி உள்ளது. உற்சவ மூர்த்திகள் இங்கே வைக்கப்பட்டுள்ளதோடு தீட்சிதர்களின் தினசரி கூடும் இடமாகவும் உள்ளது. இங்கே கூடித் தான் கோவில் நடைமுறைகள் வழிபாடுகள் பற்றிய முடிவுகள் கோவில் நிர்வாகம் பற்றிய முடிவுகள் முதலியன தீட்சிதர்களால் எடுக்கப்படும். சிதம்பரம் கோவிலில் 5 பிரகாரங்கள் உள்ளன. இதில் 2வது பிரகாரத்தில் கோபுரங்கள் அமைந்துள்ளன. இந்த 2வது பிரகாரத்தைப் "பிராணமயகோசம்" எனவும் சொல்லுகிறார்கள். நம் உடலில் பிராணன் எவ்வளவு முக்கியமோ அவ்வலவு முக்கியத்துவம் கோபுரங்களுக்கும் உண்டு. கோபுர தரிசனம் பாப விமோசனம் என்பது ஆன்றோர் வாக்கு! கோவில் நடை கூடக் குறிப்பிட்ட காலம் வரை தான் திறந்து இருக்கும். இறையைத் தரிசனம் செய்யவும் குறிப்பிட்ட காலங்கள் உண்டு. ஆனால் இந்தக் கோபுரங்கள் நம்மால் இறை தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் கோவில் மூடிய பின்பு கூட இவற்றின் தரிசனத்தால் நமக்கு இறை தரிசனம் கிடைத்த மாதிரி மனம் நிம்மதி அடைகிறது. இந்தக் கோபுரங்கள் அவ்வப் பொழுது வந்த அரசர்களால் பராமரிப்பும் திருப்பணியும் செய்யப் பட்டிருக்கிறது. இதில் முக்கியமான மன்னர்கள் எனச் சரித்திரம் குறிப்பிடுபவை பல்லவர்களின் நந்திவர்மன், ஹிரண்யவர்மன் சோழ அரசர்களில் தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்த முதலாம் பராந்தகன், பாண்டியர்களில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், விஜய நகர அரசர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

தெற்குக் கோபுரம் கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்லவ அரசனால் திருப்பணி செய்யப்பட்டதாய்ச் சொல்லப்படுகிறது. இதை ஒட்டி ஒரு சுப்ரமணியர் கோவில் வடக்கே பார்த்து உள்ளது. தவிரவும் சதாசிவ மூர்த்தி என்ற சிவனின் ஒரு ரூபத்திற்கு எனத் தனி சன்னதியும் தெற்கு கோபுரத்துக்கு எதிரே உள்ளது. இதை அடுத்து நாம் காண்பது 8 அடிக்கு உயரமான மிகப் பெரிய "முக்குறுணி விநாயகர்". இவருக்குப் பெரிய படி அளவு 6 படிக்கு அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டையை ஒரே கொழுக்கட்டையாகச் செய்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கே தவிர மதுரையில் மீனாட்சி சன்னதியில் இருந்து ஸ்வாமி சன்னதிக்குப் போகும் வழியில் தெற்கு கோபுரத்தைப் பார்த்துக் கொண்டு "முக்குறுணி விநாயகர்" அமர்ந்திருப்பார். அவருக்கும் இதே மாதிரி முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை நைவேத்தியம் பிள்ளையார் சதுர்த்தி அன்று செய்யப்படும். முன் பதிவில் போட்டிருக்கும் லிங்கத் திருமேனி சிதம்பரம் மூலநாதரின் லிங்க ஸ்வரூபம் இல்லை. அது நான் புகுந்த ஊரான பரவாக்கரைக்கு அருகில் உள்ள "கருவிலி" எனப்படும் சற்குணேஸ்வரபுரத்தின் "சற்குணேஸ்வரர்" ஆவார்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
உபநிடதங்கள் என்பதன் பொருள் தெரியுமா?

உபநிஷத் என்றால் அருகில் அமர் என்பது பொருள். குருவின் அருகில் அமர்ந்து சீடனால் கேட்கப்பட்ட அரிய பெரிய தத்துவங்கள் அடங்கியதே உபநிடதம் எனப்பட்டது. உபநிடதங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமானவை பத்து. அவை ஈசாவாஸ்யம், கேனம், கடம், பிரச்சினம், முண்டகம், மாண்டுக்யம், தைத்தரீயம், ஐதரேயம், சாந்தோக்யம், பிரகதாரணியகம் எனப்படும். உபநிடதங்கள் இறைவனின் உண்மை வடிவைக் காண, அதாவது பிரம்மத்துடன் ஒன்றி ஐக்கியம் அடைதலாகிய வீடு பேற்றைப் பெறவேண்டும் என்னும் கருத்தைக் கொண்டவை. அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாயிருக்கிறேன்) தத்வம் அசி (நீயும் அதுவாகவே இருக்கிறாய்) என்ற இந்தப் பேருண்மையை உபநிடதங்கள் சொல்லி நிற்கின்றன. வேதங்களின் சாரமே உபநிடதங்கள் என்பர்.
__________________________________________________________________________________________________________
1. ஈசாவஸ்யம் : இதை ஈசோபநிடதம் என்பர். இது இரண்டு வழிகளைக் கற்பிக்கிறது. ஒன்று ஞானத்தின் வழி; மற்றது ஞானத்தின் வழி நின்று பற்றுகளை விட்டொழிக்கும் வழி. முதல் சுலோகம் ஈசா வாஸ்யம் எனத் தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.
__________________________________________________________________________________________________________
2. கேன வாஸ்யம் : உளநூற் பாகுபாடுகளைத் தெளிவாகச் சொல்லி அனைவருக்கும் பரம்பொருளின் நிலைமை அறியச் செய்கிறது. உருவத்தில் சிறியது, கருத்தில் பெரியது என்ற தத்துவத்தின் படியும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற உண்மையையும் விளக்குகிறது. சங்கராச்சாரியார் இதற்கு பதபாஷ்யமும் வாக்யபாஷ்யமும் செய்திருக்கிறார். முதல் ஸ்லோகம் கேன் என்று தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.
__________________________________________________________________________________________________________
3. கடோப நிடதம் : வேதாந்தத்தின் மிக உயர்ந்த கோட்பாடுகளை எடுத்து உரைக்கின்றது. மறைத் தத்துவத்தை விளக்கும் பூரணமான நூல். வாழ்க்கையின் இன்ப துன்பங்களையும் வேதத்தின் விழுமிய கருத்துகளையும் நன்குணர்ந்த ஆத்ம ஞானியான யமனை ஆசிரியனாகவும் நசிகேதனை மாணவனாகவும் கொண்டு வேதாந்தத்தின் அதீத பயனை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது.
__________________________________________________________________________________________________________
4. பிரசின உபநிடதம் : ஆறு இளஞ்சீடர்கள் பிப்பிலாதன் என்னும் நல்லாசிரியனை குருவாகக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர். அதுவே பிரசின உபநிடதம்.
__________________________________________________________________________________________________________
5. முண்டக உபநிடதம் : துறவிகளின் ஞான வாழ்க்கையைப் பற்றியும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் போதிப்பது.
__________________________________________________________________________________________________________
6. மாண்டுக்ய உபநிடதம் : உருவில் சிறியது. பன்னிரண்டு மந்திரங்கள் மட்டுமே கொண்டது.
__________________________________________________________________________________________________________
7. தைத்திரிய உபநிடதம் : சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் நூல். குரு சீடனுக்கு உபதேசிக்கும் அறிவுரைகள் கொண்ட முறையில் அமைந்தது.
__________________________________________________________________________________________________________
8. ஐதரேய உபநிடதம் : நாம் உண்ணும் உணவே பிரம்மம் என்பதையும், உயிரைக் காப்பாற்றக்கூடிய உணவுப் பொருள் பிரத்தியட்சமான தெய்வம் என்பதையும் விரிவாகச் சொல்வது. இதை வருண பகவான் தனது மகன் பிருகுவுக்கு உபதேசித்ததாம்.
__________________________________________________________________________________________________________
9. சாந்தோக்கிய உபநிடதம் : மூச்சுக் கலை எனப்படும் பிராண வித்தையைப் பற்றிக் கூறுவது. ஜாபாலசத்திய சாமர் என்பவர் வியாக்கிர பாதருடைய குமாரன் கோசுருத்திக்கு உபதேசம் செய்தது.
__________________________________________________________________________________________________________
10. பிரக தாரணியகம் உபநிடதம் : ஆறு அத்தியாயங்களைக் கொண்டது. முதல் இரண்டு அத்தியாயங்கள் மதுகாண்டம் எனவும் மத்திய இரண்டு அத்தியாயங்கள் யாக்ஞவல்கிய காண்டம் எனவும் கூறப்படும். உபதேசம், விளக்கம், உபாசனை இம்மூன்றும் ஒவ்வொரு காண்டத்திலும் இடம் பெறுகிறது.
__________________________________________________________________________________________________________
நமது ஐந்தாவது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

              5:ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள்
                                     (கி.மு.268-205)

சோழ நாட்டிலுள்ள மங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் அவதரித்தார். திராவிட அந்தண குலத்தவரான நாகேசன் என்பவரின் புதல்வர். ஞானோத்தமன் என்பது இவறது இயற்பெயர். தர்க்க சாஸ்திரத்தில் நிபுணர் ஸ்ரீகாமகோடி பீடத்தின் 2வது ஆச்சார்யரான ஸ்ரீசுரேஸ்வரர் இயற்றிய 'நைஷ்கர்ம்ய சித்தி'என்ற நூலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். அதன் பெயர் சந்திரிகை. அந்நூலில் இவர் ஸ்ரீசுரேஸ்வரரையும் அடுத்து வந்த குருவையும் போற்றியிருக்கிறார். இவர் மன்மத ஆண்டு, மார்கழி மாதம், சுக்லபக்ஷ பஞ்சமியில் (கி.மு.205)காஞ்சியில் சித்தியடைந்தார்.
சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்!

விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் வைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே!

பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!

ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனை கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே!

என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே!

தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்க  வனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே!

எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.

உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட
மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத்
தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.

உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். எங்களுக்கு இம்மையில் சகல செல்வத்தையும், மறுமையில் முக்தியையும் தந்தருள்வாயாக.


_______________________________________________________________________________________
விநாயகர் அகவல்!

சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன் அரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும் மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்து துரிய மெய்ஞ்ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன!

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத்தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து

குரு வடிவாகிக் குவலம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து

தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்கிசை நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கும் ஒன்று இடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் கட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடு மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக விநாயக விரை கழல் சரணே!
கடலூர் பொல்லாப் பிள்ளையார்!

அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் (கடலூர் மாவட்டம்) சவுந்தர்யேஸ்வரர் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். ஒரு முறை தந்தை வெளியூர் சென்று விட்டதால் நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின் அவரைச் சாப்பிடும் படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலை திருப்தியாகச் சாப்பிட்டார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழன் இதை நம்பவில்லை. இருப்பினும் நம்பியின் பேச்சை ஏற்று பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பி பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே இரட்டை மணிமாலை என்று பெயர் பெற்றது. பாடல் கேட்டு மகிழ்ந்த பிள்ளையார் தன் பக்தன் கேலிப்பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் பொள்ளாப் பிள்ளையார் எனப்பட்டார். பொள்ளா என்றால் செதுக்கப்படாத என்பது பொருள் காலப்போக்கில் இது பொல்லாப்பிள்ளையார் ஆகிவிட்டது.

இருப்பிடம்: சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில் திருநாரையூர் உள்ளது.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 30 ॐ

தட்சிணா மூர்த்திக்கு அடுத்துப் பல்லிஸ்வரர் என்பவரின் சன்னதி உள்ளது. பல்லியின் சொல்லுக்குப் பலன்கள் உண்டு என்றும் பல்லி உடலின் எந்தப் பாகத்தில் விழுகிறது என்பதற்குத் தகுந்தாற் போல் பலன் உண்டு என்பதும் மக்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் கெடு பலன்கள் இந்த ஈஸ்வரரின் தரிசனத்தால் விலகும் என்றும் க்ஷேத்ரபாலகர்களில் இவரும் ஒருவர் என்றும் சொல்கின்றனர். அடுத்து வருவது வல்லப கணபதி. சுப்ரமணியர் தாரகன் வதத்துக்குப் போகும்போது இவரை வணங்கி அருள் பெற்றுச் சென்றதாய் ஐதீகம். இந்த சன்னதிக்குப் பின் வருகிறது ஒரு சிறிய கோயில். நடராஜர் கோவில் கொள்ளும் முன்பு இது தான் மூலஸ்தானமாய் இருந்தது எனச் சொல்லப்படுகிறது. லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் ஈசனை மூலநாதர் எனச் சொல்கின்றனர். பதஞ்சலியும், வியாக்ரமபாதரும் இந்த மூலநாதரைத் தான் முதலில் வழிபட்டு வந்ததாயும் பின்னர் தான் நடராஜ தரிசனம் கிடைக்கப் பெற்று ஆனந்தத் தாண்டவக் கோலத்தைத் தாங்கள் எந்நாளும் கண்டு கொண்டு இருக்க வேண்டும் என்பதால் நடராஜரை இங்கே கோயில் கொள்ள வேண்டினார்கள் என்றும் சொல்கின்றனர். மேலும் இந்த மூலநாதர் ஜைமினி ரிஷியாலும், உபமன்யுவாலும், ராஜா ஹிரண்ய வர்மனாலும் வணங்கப் பெற்றிருக்கிறது. அம்மன் பெயர் உமாம்பிகை. அம்மன் சன்னதியும் பக்கத்திலேயே உள்ளது. இந்த மூலநாதருக்கும் அம்பிகைக்கும் அந்த அந்தக் கால பூஜைகள் வழிபாடுகள் தீட்சிதர்களாலே செய்யப் படுகிறது. மூலநாதர் கோவிலைச் சுற்றிக் காணப் படுகின்ற இறை ரூபங்களில் குணேச கணபதி, காசி விஸ்வநாதர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், கல்பக விருஷம், வைதீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமியும், தெய்வநாயகியும், 63 நாயன்மார்கள், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றவர்கள் ஆவார்கள். இதை அடுத்துக் காணப்படுவது மத்யார்ஜுன க்ஷேத்ரம் என்று சொல்லப்படும் திருவிடைமருதுரின் ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமியின் லிங்கத் திருமேனியும், ப்ருகத் குஜாம்பிகையும். இந்த மத்யார்ஜுன க்ஷேத்திரத்தில் அம்பாள் சிவனைத் தன் இருதயத்தில் வைத்து "அதி தெய்வீகி" முறையில் வழிபட்டதால் இந்த லிங்கத் திருமேனியை மகாலிங்கம் எனக்குறிப்பிடுகின்றனர். அடுத்து அருணாசலேஸ்வரரும் தர்ம சாஸ்தாவுக்கும் என ஒரு தனி சன்னதியும் உள்ளது. இதை அடுத்துக் காணப்படும் கல்யாண மண்டபம் யாகாசாலையை அடுத்து நாம் கோவிலின் வெளியே வந்து கோபுரங்கள் இருக்கும் திருச்சுற்று வழியாகப் போய் சிவகங்கைக் குளத்தையும் அதன் அருகே இருக்கும் அன்னை சிவகாமியையும் தரிசனம் செய்வோமா?

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்... Ganesha's 32 Forms with Slokas

पक्वचूत फलकल्प मंजरीं इक्षुदण्ड तिलमोदकैस्सह ।
उद्वहन् परशुहस्त ते नमः श्रीसमृद्धियुत देव पिंगल ॥

பக்வ சூத பலகல்ப மஞ்ஜரீ மிக்ஷூ தண்ட திலமோதகைஸ்ஸஹ
உத்வஹத் பரஸூஹஸ்த தே நம: ஸ்ரீ ஸம்ருத்தியுத தேவ பிங்கல

மாம்பழம், மலர்க்கொத்து, கரும்புத் துண்டு, எள்-கொழுக்கட்டை, பரசு ஆகியவற்றைக் கரங்களில் தாங்கிய, பசும்பொன் நிறத் திருமேனியை உடைய ஸ்ரீ ஸம்ருத்தி என்ற தேவியுடன் வீற்றிருக்கும் ஸித்தி கணபதியைத் துதிக்கிறேன்.

Pakva chootha kalpa manjarim ikshu danda thila modhakai saha,
Udwahan parasu hastha they Nama sri samrudhipatha deva Pingala.

Salutations to the reddish brown coloured god armed with axe in HIS hand, who signifies plenty, Who holds ripe mango, bouquet of turmeric, sugarcane and sesame sweet.