திங்கள், 9 செப்டம்பர், 2019

விநாயகர் அகவல்!

சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன் அரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும் மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்து துரிய மெய்ஞ்ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன!

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத்தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து

குரு வடிவாகிக் குவலம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து

தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்கிசை நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கும் ஒன்று இடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் கட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடு மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக விநாயக விரை கழல் சரணே!
கடலூர் பொல்லாப் பிள்ளையார்!

அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் (கடலூர் மாவட்டம்) சவுந்தர்யேஸ்வரர் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். ஒரு முறை தந்தை வெளியூர் சென்று விட்டதால் நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின் அவரைச் சாப்பிடும் படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலை திருப்தியாகச் சாப்பிட்டார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழன் இதை நம்பவில்லை. இருப்பினும் நம்பியின் பேச்சை ஏற்று பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பி பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே இரட்டை மணிமாலை என்று பெயர் பெற்றது. பாடல் கேட்டு மகிழ்ந்த பிள்ளையார் தன் பக்தன் கேலிப்பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் பொள்ளாப் பிள்ளையார் எனப்பட்டார். பொள்ளா என்றால் செதுக்கப்படாத என்பது பொருள் காலப்போக்கில் இது பொல்லாப்பிள்ளையார் ஆகிவிட்டது.

இருப்பிடம்: சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில் திருநாரையூர் உள்ளது.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 30 ॐ

தட்சிணா மூர்த்திக்கு அடுத்துப் பல்லிஸ்வரர் என்பவரின் சன்னதி உள்ளது. பல்லியின் சொல்லுக்குப் பலன்கள் உண்டு என்றும் பல்லி உடலின் எந்தப் பாகத்தில் விழுகிறது என்பதற்குத் தகுந்தாற் போல் பலன் உண்டு என்பதும் மக்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் கெடு பலன்கள் இந்த ஈஸ்வரரின் தரிசனத்தால் விலகும் என்றும் க்ஷேத்ரபாலகர்களில் இவரும் ஒருவர் என்றும் சொல்கின்றனர். அடுத்து வருவது வல்லப கணபதி. சுப்ரமணியர் தாரகன் வதத்துக்குப் போகும்போது இவரை வணங்கி அருள் பெற்றுச் சென்றதாய் ஐதீகம். இந்த சன்னதிக்குப் பின் வருகிறது ஒரு சிறிய கோயில். நடராஜர் கோவில் கொள்ளும் முன்பு இது தான் மூலஸ்தானமாய் இருந்தது எனச் சொல்லப்படுகிறது. லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் ஈசனை மூலநாதர் எனச் சொல்கின்றனர். பதஞ்சலியும், வியாக்ரமபாதரும் இந்த மூலநாதரைத் தான் முதலில் வழிபட்டு வந்ததாயும் பின்னர் தான் நடராஜ தரிசனம் கிடைக்கப் பெற்று ஆனந்தத் தாண்டவக் கோலத்தைத் தாங்கள் எந்நாளும் கண்டு கொண்டு இருக்க வேண்டும் என்பதால் நடராஜரை இங்கே கோயில் கொள்ள வேண்டினார்கள் என்றும் சொல்கின்றனர். மேலும் இந்த மூலநாதர் ஜைமினி ரிஷியாலும், உபமன்யுவாலும், ராஜா ஹிரண்ய வர்மனாலும் வணங்கப் பெற்றிருக்கிறது. அம்மன் பெயர் உமாம்பிகை. அம்மன் சன்னதியும் பக்கத்திலேயே உள்ளது. இந்த மூலநாதருக்கும் அம்பிகைக்கும் அந்த அந்தக் கால பூஜைகள் வழிபாடுகள் தீட்சிதர்களாலே செய்யப் படுகிறது. மூலநாதர் கோவிலைச் சுற்றிக் காணப் படுகின்ற இறை ரூபங்களில் குணேச கணபதி, காசி விஸ்வநாதர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், கல்பக விருஷம், வைதீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமியும், தெய்வநாயகியும், 63 நாயன்மார்கள், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றவர்கள் ஆவார்கள். இதை அடுத்துக் காணப்படுவது மத்யார்ஜுன க்ஷேத்ரம் என்று சொல்லப்படும் திருவிடைமருதுரின் ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமியின் லிங்கத் திருமேனியும், ப்ருகத் குஜாம்பிகையும். இந்த மத்யார்ஜுன க்ஷேத்திரத்தில் அம்பாள் சிவனைத் தன் இருதயத்தில் வைத்து "அதி தெய்வீகி" முறையில் வழிபட்டதால் இந்த லிங்கத் திருமேனியை மகாலிங்கம் எனக்குறிப்பிடுகின்றனர். அடுத்து அருணாசலேஸ்வரரும் தர்ம சாஸ்தாவுக்கும் என ஒரு தனி சன்னதியும் உள்ளது. இதை அடுத்துக் காணப்படும் கல்யாண மண்டபம் யாகாசாலையை அடுத்து நாம் கோவிலின் வெளியே வந்து கோபுரங்கள் இருக்கும் திருச்சுற்று வழியாகப் போய் சிவகங்கைக் குளத்தையும் அதன் அருகே இருக்கும் அன்னை சிவகாமியையும் தரிசனம் செய்வோமா?

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்... Ganesha's 32 Forms with Slokas

पक्वचूत फलकल्प मंजरीं इक्षुदण्ड तिलमोदकैस्सह ।
उद्वहन् परशुहस्त ते नमः श्रीसमृद्धियुत देव पिंगल ॥

பக்வ சூத பலகல்ப மஞ்ஜரீ மிக்ஷூ தண்ட திலமோதகைஸ்ஸஹ
உத்வஹத் பரஸூஹஸ்த தே நம: ஸ்ரீ ஸம்ருத்தியுத தேவ பிங்கல

மாம்பழம், மலர்க்கொத்து, கரும்புத் துண்டு, எள்-கொழுக்கட்டை, பரசு ஆகியவற்றைக் கரங்களில் தாங்கிய, பசும்பொன் நிறத் திருமேனியை உடைய ஸ்ரீ ஸம்ருத்தி என்ற தேவியுடன் வீற்றிருக்கும் ஸித்தி கணபதியைத் துதிக்கிறேன்.

Pakva chootha kalpa manjarim ikshu danda thila modhakai saha,
Udwahan parasu hastha they Nama sri samrudhipatha deva Pingala.

Salutations to the reddish brown coloured god armed with axe in HIS hand, who signifies plenty, Who holds ripe mango, bouquet of turmeric, sugarcane and sesame sweet.
கணபதி ஹோமம் 

கணபதி ஹோமம் புதிய தொழில்கள் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.

கணபதி ஹோமத்தின் பெருமை: மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள். 1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும். ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும். 

நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும். தேன் தங்கம் தரும். நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும். மோதகம் போரில் வெற்றி தரும். மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும். தாமரை செல்வ வளர்ச்சி தரும். வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும். அருகம்புல் குபேர சம்பத்து தரும். மோதகம் நினைத்ததைத் தரும். வில்வ இலை, நெய்யில் நனைத்த சமித் ஆகியவையும் அப்படியே. தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும். இவ்வாறு ஹோமத்திற்குரிய ஆகுதிகள் பெருமை சேர்க்க வல்லபை. பலன் தருபவை.

ஹோமம் செய்யும் முறை:

அனுக்ஞை சுக்லாம்பரதரம்....சாந்தயே
ஓம் பூ .... பூர்புஸ்ஸுவரோம்

சங்கல்பம்:

சுபே சோபனே .... பரமேச்வர ப்ரீத்யர்த்தம்
நக்ஷ்த்ரே - ராசௌ ஜாதஸ்ய ஸ குடும்பஸ்ய
÷க்ஷமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய
ஐச்வர்ய அபிவ்ருத்த்யர்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்
ஸர்வாபீஷ்ட ஸித்த்யர்த்தம் மஹா கணபதி ஹோமம் கரிஷ்யே.

(தேங்காய் ஒன்றினை உடைத்து, மூங்கில் இலை போல் மெல்லியதாகக் கீறி, வெல்லச் சர்க்கரை, தேன், நெய் ஆகியவை சேர்த்து 8 கீற்றுக்களை ஹோமத்திற்கு வைத்துக் கொள்க. மீதி உள்ளது மஹாகணபதிக்கும் துர்க்கைக்கும் நிவேதனம். கொட்டாங்கச்சிகளை, மூல மந்திரம் ஜபித்துக் கொண்டு அக்னிக்குத் தெற்கிலும், வடக்கிலும் கண்கள் போல வைக்கவும். மட்டைகளை யானையின் துதிக்கை போல் அக்னியின் சுற்றுப்புறத்தில் வைக்கவும்.

எட்டுத்திரவியங்கள் : கொழுக்கட்டை, அவல், பொரி, ஸத்துமா, கரும்புத்துண்டு, தேங்காய்க் கீற்று, எள், வாழைப்பழம் ஆகியவை.

(அருகம்புல்லாலும் ஹோமம் செய்ய வேண்டும்)

1. பூர்ப்புவஸ் ஸுவரோம் என்று அக்னியைப் பிரதிஷ்டை செய்க. (அதற்கு முன், அக்னியைத் தாபிக்க வேண்டிய இடத்தில் அரிசிமாவால் ஒரு சாண் அளவு தரையில் சதுரமாக மண்டலம் செய்து இரு தர்ப்பைகளால் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் முறையே 3 கோடுகள் வரைந்து நீரைத் தொட்டு, தர்ப்பையைத் தென்மேற்கில் போட்டு மறுபடியும் ஜலத்தைத் தொடுக).

2. அருகில் கும்பத்தில் வருணனை ஆவாகித்துப் பூசை செய்க. அக்னிக்கு வடகிழக்கில் தீபம் வைத்து அதில் துர்க்கை ஆவாஹனம் 16 உபசார பூஜை செய்க.

3. பரிஷேசனம்

அதிதே அநுமன்யஸ்வ அநுமதே அநுமன்யஸ்வ
ஸரஸ்வதே அநுமன்யஸ்வ தேவ ஸவித: ப்ரஸுவ

4. அக்னியில் தியானம் செய்து, ஹோம குண்டத்தின் 8 திசைகளிலும் பூஜை செய்க. (கிழக்கிலிருந்து வரிசையாக ஒவ்வொரு திசையிலும்)

இந்த்ராய நம: அக்னயே நம: யமாய நம:
நிர்ருதயே நம: வருணாய நம: வாயவே நம:
சோமாய நம: ஈசானாய நம: அக்னயே நம: (அக்னியில்)
ஆத்மனே நம: ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:

நெய்யில் 15 சமித்தைத் தோய்த்து, அஸ்மின் ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மம் ஆதாஸ்யே என்று கூற, பிரம்மாவானவர், ஓம் ஆதத்ஸ்வ என்று சொல்லியதும், அக்னியில் சேர்க்க. பிரஜாதிபதியை மனதில் நினைத்துக் கொண்டு வடக்கு மூலையிலிருந்து தென் கிழக்காக நெய்யைத் தாரையாக விடுக. எல்லா சமித்துக்களையும் தொடுக. பின்னர் ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று கூறுக. ஸ்வாஹா இந்த்ராய இதம் ந மம (தெற்கிலிருந்து வடகிழக்காக நெய்யை ஊற்றுக). அத ஆஜ்ய பாகோ ஜுஹோதி (வடகிழக்குப் பாதியில்) அக்னயே ஸ்வாஹா, அக்யை இதம் ந மம, என்றும், தென்கிழக்குப் பாதியில் ஸோமாய ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம என்றும் நெய்யால் ஹோமம் செய்க. எல்லாத் தோஷங்களுக்கும் பிராயச்சித்தமாக, ஓம் பூர்ப்புவஸ்ஸுவ : ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று நெய் விடுக.

5. அக்னியின் மத்தியில் மகா கணபதியைத் தியானம் செய்க. அஸ்ய ஸ்ரீ மஹா கணபதி மகாமந்த்ரஸ்ய கணக ரிஷி: காயத்ரீச் சந்த : மஹாகணபதிர் தேவதா க்லாம் பீஜம் க்லீம் சக்தி: க்லூம் கீலகம் ஸ்ரீ மஹாகணபதி ப்ரஸாத ஸித்த்யர்த்தே ஹோம விநியோக: (கரநியாஸம், அங்க நியாஸம் செய்க). பூர்ப்புவஸ்ஸுவரோம் என்று திக்பந்தனம் செய்க.

6. தியானம்: பீஜாபூர கதே க்ஷú கார்முகருஜா சக்ராப்ஜ பாசோத்பல வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரத்னகலச ப்ரோத்யத் காராம் போருஹ: த் யேயோ வல்லப யா ஸபத்மகரயா ஸ்லிஷ்டோஜ்வலத் பூஷயா விஸ்வோத்பத்தி விபத்தி ஸம்ஸ்தித கரோ விக்நேச இஷ்டார்த்த:

7. பஞ்ச பூஜை:

லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் ஸமர்ப்பயாமி
ஹம் ஆகாசாத்மநே புஷ்பம் ஸமர்ப்பயாமி
யம் வாய்வாத்மநே தூபம் ஆக்ராபயாமி
ரம் அக்னியாத்மநே தீபம் தர்சயாமி
வம் அம்ருதாத்மநே அம்ருதம் மகாநைவேத்யம் நிவேதயாமி
ஸம் ஸர்வாத்மநே ஸர்வ உபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

(பின் கணபதி மூல மந்திரம் ஜபம் செய்க.)

8. நெய்யால் ஹோமம்
  
ஓம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... க்லௌம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ... .... கம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... கணபதயே ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... வரவரத ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... ஸர்வ ஜனம் மே வசம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... வசமானய ஸ்வாஹா ஸ்ரீ மகா கணபதயே இதம் ந மம

9. தேங்காய்க் கீற்றால் ஹோமம்

- நக்ஷத்ரே - ராசௌ ஜாதஸ்ய - சர்மண: ஸகுடும் பஸ்ய அனுகூலம் ப்ரயச்ச ப்ரயச்ச, ப்ரதிகூலம் நாசய நாசய, ஸம்பதோ வர்தய, வர்தய, வர்தய, ஸர்வத்ர விஜயம் ப்ரயச்ச ப்ரயச்ச,

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் .... வசமானய ஸ்வாஹா (8 முறை ஹோமம் செய்க).

10. நெய் ஹோமம்

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே ... ஸீத
ஸாதனம் ஸ்வாஹா (8 முறை சொல்லி ஹோமம்)

11. நெல் பொரியால் ஹோமம்

உத்திஷ்ட புருஷ ஹரித பிங்கல லோஹி தாக்ஷ ஸர்வாபீஷ்டம் தேஹி தேஹி தா பய தா பய ஸ்வாஹா (8 முறை ஹோமம்) அக்னிரூபாய ஸ்ரீ மஹாகணபதயே இதம் ந மம.

12. தேங்காய் மூடியால் ஹோமம்

ஜாத வேத ஸே....துரிதாய க்னி: ஸ்வாஹா (இரு முறை)

13. நெய்யில் தோய்த்த அருகம்புல்லால் ஹோமம்

மூல மந்திரத்தால் 8 முறை செய்க.

14. 8 திரவியத்தால் ஹோமம்

ஓம் நமோ வ்ராதபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏக தந்தாய விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீ வரத மூர்த்தயே நமோ நம: ஸ்வாஹா (8முறை) ஸ்ரீ மஹாகணபதய இதம் ந மம

15. கணேச காயத்ரீ ஜபம் - 10 முறை.

16. கணேச மாலாமந்திரம் சொல்லி ஹோமம்.

17. கணபதி அதர்வசீர்ஷம் சொல்லி ஹோமம்.

18. உத்தராங்கம்

பூ : ஸ்வாஹா அக்யை இதம்
புவ : ஸ்வாஹா வாயவ இதம்
ஸுவ : ஸ்வாஹா ஸுர்யாய இதம்

அஸ்மிந் ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயச்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயச் சித்தார்த்தம் ஹோஷ்யாமி ஓம் பூர்புவஸ்ஸுவ : ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ஸ்ரீ விஷ்ணவே  ஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மன இதம் நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ருத்ராய பசுபதயே இதம் (நீரால் கைகளை நனைக்க)

19. பூர்ணாஹுதி

அஸ்மின் ஹோமகர்மணி பூர்ணாஹுதிம் கரிஷ்யே

பூர்ணாஹுதி தேவதாப் யோ நம: ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

மூலமந்திரம் + வெளஷட்

பூர்ணாஹுதிம் உத்தமாம் ஜுஹோதி ஸர்வம் வை பூர்ணாஹுதி : ஸர்வம் ஏவாப்நோதி அதோ இயம் வை பூர்ணாஹுதி : அஸ்யாமேவ ப்ரதி திஷ்டதி

பூர்ணமத : பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே.... அவசிஷ்யதே

ப்ரஹ்மார்ப்பணம் ..... ஸமாதி நா

பிராணாயாமம் செய்க.

20. பரிஷேசனம்

அதிதே அன்வமங்ஸ்தா : அநுமதே அன்வமங்கஸ் தா : ஸரஸ்வதே அன்வ மங்ஸ்தா :
தே ஸவித : ப்ராஸாவீ :
வருணாய நம : ஸகலாராதனை : ஸ்வர்ச்சிதம்

21. பிரம்ம உத்வாஸனம்

ப்ரஹ்மன் வரம் தே த தா மி ப்ரஹ்மணே நம:
ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்
(நான்கு பக்கங்களிலும் உள்ள தர்ப்பைகளை அக்னியில் சேர்க்க).

22. உபஸ்தானம்

ஸ்வாஹா அக்னேர் உபஸ்தானம் கரிஷ்யே அக்னயே நம:
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹுதாசன
யத் து தம் து மயா தேவ பரிபூர்ணம் தத ஸ்து தே
ப்ராயஸ்சித்தானி அசேஷானி தப : கர்ம ஆத்மகானி வை
யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாணுஸ்மரணம் பரம் (நமஸ்காரம் செய்க)
அக்னிம் ஆத்மனி உத் வாஸயாமி (இதயத்தில் அஞ்சலி செய்க)

23. øக்ஷ

ப்ருஹத் ஸாம க்ஷத்ரப் ருத் வ்ருத் த வ்ருஷ்ணியம்: த்ரிஷ்டு பௌஜ: ஸுபி தம் உக்ர வீரம் இந்த்ர ஸ்தோமேன பஞ்சதஸேன மத்யம் இதம் வாதேன ஸகரேண ரக்ஷ

24. ஸமர்ப்பணம்

குஹ்யாதி குஹ்ய கோப்தா த்வம் க்ருஹாணா ஸ்மத் க்ருதம் ஹவம்
ஸித்தி : பவது மே தே வ த்வத்ப்ரஸதான் மயி ஸ்திரா
ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணம் அஸ்து.