வியாழன், 5 செப்டம்பர், 2019

அருள் மிகு மருந்தீசர் திருக்கோயில்

மூலவர் : மருந்தீசர் (கிருபாபுரீஸ்வரர்)
அம்மன் : ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி
தல விருட்சம் : மருதமரம்
தீர்த்தம் : சிற்றிடை தீர்த்தம். இது அம்மன் சன்னதியில் கிணறாக உள்ளது.
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருஇடையாறு, திருவிடையாறு
ஊர் : இடையாறு
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சுந்தரர், திருநாவுக்கரசர்

தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர் பாசனூர் பரமேட்டி பவித்திரபாவ நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த ஈசனூர் எய்தமான் இடையாறு இடைமருதே.  சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டு ஸ்தலங்களில் இது பதிமூன்றாவது ஸ்தலம்.

விழா : தைமாதம் ஆற்றுத் திருவிழா இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகும்.  
      
சிறப்பு : இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 224 வது தேவாரத்தலம் ஆகும்.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு மருந்தீசர் (கிருபாபுரீஸ்வரர்) திருக்கோயில், டி. இடையாறு : 607 209, திருக்கோயிலூர் தாலுகா, விழுப்புரம் மாவட்டம். போன்:+91 4146 216 045, 206 515, 94424 23919, 98847 77078 
     
தகவல் : அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களை சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

பெருமை : பலாச்சுளை பாலகணபதி சில சிவாலயங்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் சோமாஸ்கந்த அமைப்பில் முருகன் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் சிவன், பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் குழந்தைகளுக்கு பிரியமான லட்டு மற்றும் பலாச்சுளையுடனும் கீழிரு கரத்தில் அபய முத்திரையும் கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார்.
சுந்தரர் இத்தலத்திற்கு வந்து பாடியுள்ளார். முப்பத்தி ஒன்பது திருத்தலங்களை வைப்புத்தலமாக வைத்து இத்தகைய தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார். திருநாவுக்கரசரும், ராமலிங்க அடிகளாரும் இத்தலத்தை பாடியுள்ளார்கள். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.
சந்தனாச்சாரியருள் மறைஞானசம்பந்தரின் அவதாரத்தலமும் இதுவே. இடையாறில் பிறந்த இவர்  பெண்ணாடத்தில் வாழ்ந்தார். இவரை மருதமறை ஞானசம்பந்தர் என்றும், கடந்தை மறைஞான சம்பந்தர் என்றும் போற்றுவர். (கடந்தை என்பது பெண்ணாடத்தின் புராணபெயர்) "சுகம்' என்ற சொல்லுக்கு "கிளி' என்று பெயர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். இங்குள்ள சுப்பிரமணியரின் பெயர் கலியகராமப்பிள்ளையார் என்பதாகும்.

திருமணத்தடை நீக்கும் ஸ்தலம் : சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்மன் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்களுக்கு கல்யாண கோலத்தில் மாலை மாற்றும் அமைப்பு என்பர். நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது நம்பிக்கை.

ஸ்தல வரலாறு : கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணைநதியின் தென்பகுதியில் அமைந்துள்ள தலமான திருமருதந்துறை என்ற இடையாற்றில் எம்மை பூஜித்து, மருத மரத்தின் கீழ் தவமிருந்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். ஒட்டுக்கேட்ட முனிவருக்கே மானிடப்பிறவி என்றால், ஒட்டுக்கேட்கும் மானிடர்களுக்கு எத்தகைய பிறவி கிடைக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.


கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும் ... Ganesha's 32 Forms with Slokas

ஸக்தி கணபதி .. शक्ति गणाधि .. Sakthi Ganpati - 3

आलिंग्य देवीं हरितां निषण्णं परस्परस्पृष्ट कटीनिवेशम् ।
संध्यारुणं पाशसृणी वहन्तं भयापहं शक्तिगणेशमीडे ॥

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய
ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே

பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்துடன், மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவரும், திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவரும் (பக்தர்களின்) அச்சத்தைப் போக்குபவருமான ஸக்தி கணபதியை வணங்குகிறேன்.

The powerful Ganesa

AAlinghya devim harithaam nishannam parasparaslishta katou
SAndhyarunaam pasa sruneem vahantham bhayapaham Shakthi Ganapathi meede.

I salute the Ganapathi with Shakthi, who is seen embracing HIS wife ,
Who holds a green lemon, who and HIS wife seated on HIS knee embrace each other, Who is of the orange colour of the dusk, who holds the tusk and goad and shows sign of protection.
வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்! நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜை சிறப்பாக செய்து விடுவோம். அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி கலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம். ஆனால், ருது என்ன வென்று சரியாகத் தெரிந்து இருக்காது. பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும். அவற்றின் நிவேதனப் பெயர்கள் தெரிந்து இருக்காது. இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.

1. கதலீபலம் – வாழைப்பழம்
2. பீஜாபூரபலம் – கொய்யாப்பழம்
3. வேத்ர பலம் – பெரப்பம் பழம்
4. பதரி பலம் – எலந்தைப் பழம்
5. கர்ஜுர பலம் – பேரிச்சம் பழம்
6. ஜம்பூ பலம் – நாவல் பழம்
7. கபித்த பலம் – விளாம் பழம்
8. த்ராஷா பலம் – திராக்ஷா பழம்
9. ஆம்ரபலா பழம் – மாம்பழம்
10. மாதுஸங்கபழம் – மாதுளம் பழம்
11. நாரங்கபலம் – நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
12. பனஸ பலம் – பலாப் பழம்
13. உர்வாருகம் – வெள்ளரிக்காய்
14. ஜம்பீர பலம் – எலுமிச்சம் பழம்
15. இக்ஷாகண்டம் – கரும்பு
16. சணகம் – கடலை
17. ப்ருதுகம் – அவல்
18. ஸர்க்கரா – சர்க்கரை
19. ததி – தயிர்
20. குடோபஹாரம் – வெல்லம்
21. காஷ்மீர பலம் – ஆப்பிள்
22. அமிருதம் – தீர்த்தம்
23. நாரிகேளம் – தேங்காய்
24. ஸால்யன்னம் – சம்பா அன்னம்
25. குளா பூபம் – அதிரசம், அப்பம்
26. தத்யன்னம் – தயிர் சாதம்
27. திந்திரியன்னம் – புளியோதரை
28. ஸர்கரான்னம் – சர்க்கரை பொங்கல்
29. மாஷா பூபம் – வடை
30. ரஸகண்டம் – கற்கண்டு
31. மோதகம் – கொழுக்கட்டை
32. திலான்னம் – எள்ளு சாதம்
33. ஆஜ்யோபகாரம் – நெய்
34. லட்டூகம் – லட்டு
35. சித்ரான்னம் – பலவகை கலந்த சாதம்
36. நாரிகேளகண்டத்வயம் – இரண்டாக உடைத்த தேங்காய்
37. க்ருதகுள பாயஸம் – வெல்லம் போட்ட பாயஸம்
38. கோக்ஷீரம் – பசும் பால்

ருதுக்கள்
சித்திரை, வைகாசி – வஸந்த ருது
ஆனி, ஆடி – க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி – வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை – சரத் ருது
மார்கழி, தை – ஹேமந்த ருது
மாசி, பங்குனி – சிசிர ருது
கிழமைகளைச் சொல்லும் முறை
ஞாயிறு – பானு வாஸர
திங்கள் – இந்து வாஸர
செவ்வாய் – பவும வாஸர
புதன் – சவும்ய வாஸர
வியாழன் – குரு வாஸர
வெள்ளி – ப்ருகு வாஸர
சனி – ஸ்திர வாஸர
பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை
சித்திரை – மேஷ மாஸே
வைகாசி – ரிஷப மாஸே
ஆனி – மிதுன மாஸே
ஆடி – கடக மாஸே
ஆவணி – ஸிம்ம மாஸே
புரட்டாசி – கன்யா மாஸே
ஐப்பசி – துலா மாஸே
கார்த்திகை – வ்ருச்சிக மாஸே
மார்கழி – தனுர் மாஸே
தை – மகர மாஸே
மாசி – கும்ப மாஸே
பங்குனி – மீன மாஸே.

புதன், 4 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 26 ॐ

அச்சுத ராயன் ஏற்படுத்திய "வைகானச"வழிபாட்டு முறை பற்றி நன்கு விரிவாகவே பார்த்தோம். இதில் முக்கியமான விஷயம் விட்டுப் போய் விட்டது. அதாவது நந்தி வர்ம பல்லவனால் புதுப்பிக்கப்பட்டுக் கட்டுவிக்கப்பட்ட விஷ்ணுவின் கோவில் அவனுக்குப் பின் மூன்று அல்லது நான்காம்  நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த சோழகுல அரசன் இரண்டாம் குலோத்துங்கனால் நீக்கப்பட்டு விஷ்ணு அவரின் இருப்பிடம் ஆன கடலுக்கு அனுப்பப்பட்டதாய்ச் சொல்கிறார்கள். இப்படியே பலவருடங்கள் இந்தக் கோவிலில் விஷ்ணு தன் இருப்பிடத்தில் இல்லாமலே இருந்திருக்கிறது. குலோத்துங்கனுக்குப் பின்னர் வந்த பிற்காலப் பாண்டியர் காலத்தில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய அரசனின் காலத்திலும் கிட்டத் தட்ட பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலும் விஷ்ணு கோவில் முக்கியத்துவம் பெறவில்லை எனத் தெரிகிறது. அரசர்களின் மான்யங்கள் அனைத்தும் நடராஜருக்கே அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. சிவ-விஷ்ணு பேதம் பார்க்காத பாண்டியர் காலத்தில் மட்டுமில்லாமல் பின்னர் வந்த கிருஷ்ணதேவராயரும் நடராஜருக்கே மானியங்கள் அளித்து வந்திருக்கிறார். அச்சுதராயர் காலத்திலேதான் கடலில் இருந்த விஷ்ணுவைக் கண்டு பிடித்து மறுபடியும் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அவ்வாறு பிரதிஷ்டை செய்யும்போது தற்சமயம் இருக்கும் கோலத்தில் விஷ்ணுவின் சிரம் தெற்கேயும் பாதங்கள் வடக்கேயும் வைத்துப் பிரதிஷ்டை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷ்ணு சந்நிதிக்கு எதிரே ஒரு குறிப்பிட்ட இடம் உள்ளது. அது தான் கமலமத்யம் என்று கூறுகிறார்கள். இந்த இடத்தில் நின்று கொண்டு பார்த்தால் ஒரே சமயத்தில் நடராஜர் தரிசனமும், மகாவிஷ்ணுவின் தரிசனமும் கிடைக்கும். இவ்வாறு தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாய்க் குறிப்பிடுகின்றனர். இதை சிவ வழிபாட்டின் மூன்று முக்கியமான பகுதிகளாய்க் குறிப்பிடுகின்றனர்.

அவை யாவன : அத்யாத்மிகி இம்முறையான வழிபாட்டில் நாம் கடவுளை நம் உள்ளமாகிய தாமரையில் வைத்து வணங்குகிறோம். நம் உள்ளமே ஆகாயம் அங்கே வழிபடும் ஒளிச்சுடரே இறைவன் என்று அறிகிறோம்.

அதிதெய்வீகி : இம்முறையில் ஒருவன் நாராயணனே அனைத்தும் என்று அறிந்து நாராயணனை வழிபடும் அதே நேரத்தில் அந்த நாராயணன் தன் இருதயத்தில் வைத்துப் பூஜிக்கும் சிவனும் வழிபாட்டுக்கு உரியவர் என்று உணர்கிறான். இம்முறையில் அவன் அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவர் வாயிலே மண்ணு என்ற பழமொழியின் உண்மையையும் உணரத் தொடங்குகிறான்.

அதிபெளதீகி : இம்முறையில் இந்தப் பிரபஞ்சமே அந்த நடராஜரின் ஆளுமைக்கு மட்டுமில்லால் அவனால் ஆட்டுவிக்கவும் படுகிறது என்றும் சகலமும் அவனே அவனின்றி ஓர் அணுவும் அசையாது! இந்த ஆகாயமும் சரி சூரிய சந்திரர்களும் சரி நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து மலைகள் மேடுகள், நதிகள், காட்டாறுகள், வெள்ளங்கள், எரிமலைகள், வெயில், வறட்சி, சுபிட்சம், அனைத்துக்கும் காரணன் அவனே என்று புரிந்து கொள்கிறார்கள். இந்த விஷயம் பெரும் ஞானிகள் மட்டுமே அறிய முயற்சித்த ஒன்று. நம் போன்ற சாமானியர்களுக்கும் புரிய வேண்டுமென்று சற்று எளிமையாகவே கொடுக்கிறேன்.

மேற்சொன்ன மூன்று முறைகளையும் பின்பற்றித் தான் சித்சபையில் "சகலஸ்வரூபராக நடராஜரும்" "நிஷ்கலஸ்வரூபமாக சிதம்பர ரகசியமும்" "சகல நிஷ்கலஸ்வரூபமாக ஸ்படிக லிங்கமும்" வழிபாடு செய்யப் படுகின்றன.

இந்தக் கமலமத்யமத்துக்குச் சற்றுத்தள்ளி மண்டபத்தின் நடுவில் துவஜஸ்தம்பம் உள்ளது. பக்கத்திலேயே பலிபீடமும் உள்ளது. இந்த துவஜஸ்தம்பத்தில் தான் ஆனித் திருமஞ்சனம் மார்கழித் திருவாதிரை பிரம்மோற்சவம் போன்ற திருவிழா சமயங்களில் கொடி ஏற்றுவார்கள். இனி அடுத்து நிருத்த சபைக்குப் போகலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:

1. முல்லை இலை பலன்: அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.

6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.

7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.

9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.

12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.

13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.

14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்
.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்

19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்
திதிகள் மொத்தம் : 15

1: பிரதமை                        09: நவமி

2: துவிதியை                    10: தசமி

3: திருதியை                     11: ஏகாதசி

4: சதுர்த்தி                         12: துவாதசி

5: பஞ்சமி                           13: திரயோதசி

6: சஷ்டி                               14: சதுர்த்தசி

7: சப்தமி                             15: பௌர்நமி
                                                  அல்லது
8: அஷ்டமி                            அமாவாசை
___________________________________________________________________________________________________________
தமிழ் வார நாட்கள் ஏழுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் நாட்கள்                               ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1: ஞாயிற்றுக்கிழமை                        பானுவாஸரம்

2: திங்கட்க்கிழமை                            இந்துவாஸரம்

3: செவ்வாய்க்கிழமை                      பௌமவாஸரம்

4: புதன்கிழமை                                  ஸௌம்யவாஸரம்

5: வியாழக்கிழமை                            குருவாஸரம்

6: வெள்ளிக்கிழமை                         பிருகுவாஸரம்

7: சனிக்கிழமை                                ஸ்திரவாஸரம்
___________________________________________________________
கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும் ..... Ganesha's 32 Forms with Slokas

கணபதி - 01

1. பால கணபதி .. बालगणाधि .. Bala Ganapati

करस्थ कदली चूत पनसेक्षुक मोदकम् ।
बालसूर्यप्रभं देवं वन्दे बालगणाधिपम् ॥

கரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம்
பால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்

தனது துதிக்கையோடு சேர்ந்த ஐந்து கரங்களில், முறையே, மா, வாழை, கரும்பு, பலா, மோதகம் ஆகியவற்றைத் தாங்கியவரும், இளஞ்சூர்ய நிறத் திருமேனியை உடையவருமான, பால கணபதியை வந்தனம் செய்கிறேன்.

Child form of Ganesa

Karastha kadali chootha , panasekshuka modhakam,
Bala soorya prabhakaram, vandeham bala ganapathim,

I salute the boy like Ganapathi who shines like a young Sun, Holding in HIS hands Banana fruit, mango fruit, jack fruit, sugarcane and Modhaka.

கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்... Ganesha's 32 Forms with Slokas

2. பக்த கணபதி .. भक्त गणाधि .. Baktha Ganapati

नालिकेराम्र कदली गुडपायस धारिणम् ।
शरच्चंद्राभ वपुषं भजे भक्तगणाधिपम् ॥

நாளிகேராம்ர கதலீ குளபாயஸ தாரிணம்
ஸரச்சந்த்ராப வபுஷம் பஜே பக்த கணாதிபம்

தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், வெல்லத்தாலான பாயஸம் நிறைந்த கலசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், குளிர் காலத்தில் மிக வெண்மையாக ஒளிரும் நிலவை விஞ்சும் வெண்ணிறத் திருமேனியை உடையவருமான பக்த கணபதியைத் துதிக்கிறேன்.

(Devotee form of Ganesa)

Nalikeramra kadali gula payasa dharinam,
SArthchandra bhava pusham , bhaje bhaktha ganapathim.

I salute the devotee Ganapathi, who shines like the autumn moon, Holding in HIS hands coconut, mango, banana and a pot of Jaggery Payasam.

கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்... Ganesha's 32 Forms with Slokas

2. பக்த கணபதி .. भक्त गणाधि .. Baktha Ganapati

नालिकेराम्र कदली गुडपायस धारिणम् ।
शरच्चंद्राभ वपुषं भजे भक्तगणाधिपम् ॥

நாளிகேராம்ர கதலீ குளபாயஸ தாரிணம்
ஸரச்சந்த்ராப வபுஷம் பஜே பக்த கணாதிபம்

தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், வெல்லத்தாலான பாயஸம் நிறைந்த கலசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், குளிர் காலத்தில் மிக வெண்மையாக ஒளிரும் நிலவை விஞ்சும் வெண்ணிறத் திருமேனியை உடையவருமான பக்த கணபதியைத் துதிக்கிறேன்.

(Devotee form of Ganesa)

Nalikeramra kadali gula payasa dharinam,
SArthchandra bhava pusham , bhaje bhaktha ganapathim.

I salute the devotee Ganapathi, who shines like the autumn moon, Holding in HIS hands coconut, mango, banana and a pot of Jaggery Payasam.

________________________________________________
ஹனுமதஷ்டகம்

நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக வேண்டுமானாலும் ஆஞ்சனேயரை வழிபட்டால் போதும். காரிய ஜெயம் உண்டாகும். அன்பர்களின் க்ஷேமத்தைக் கருதி இந்த ஸ்தோத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.

வைஸாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
பூர்வ பாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய ச
தாநா மாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே
ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராயச
உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே
திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தாரய ச
தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பக்தரக்ஷண ஸீலாய ஜாநகீ சோக ஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே
பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே

இது வேத வியாசர் அருளிச் செய்த மஹா மந்திரங்கள்.
கல்லணை ஆஞ்சநேயர்! கதையல்ல நிஜம்!!

தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம். ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும். சங்க காலச் சோழ மன்னர் கரிகால் பெருவளத்தான் காவேரி கொள்ளிடம் நீர் போக்கைச் சரி செய்து நீர் பாசனத்தைச் சீரமைக்க காவேரியின் மீது ஓர் அணை கட்டினார். இந்த அணை நவீன தொழில் நுட்பத்திற்குச் சவாலாக அமைந்துள்ளது. இதன் கட்டுமானத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இதை கிராண்ட் அனிக்கட் என்று பாராட்டினர். இக்கட்டுமானம் களிமண்ணில் புதைந்த மிகப் பெரிய பாறாங்கற்களால் ஆனது இதன் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி மற்றும் ஆழம் 15 லிருந்து 18 அடிவரை கொண்டது. இது நதி நீர் வெளியேறும் பகுதியில் பாம்பு போல் வளைந்த நிலையில் கட்டப்பட்டது. தற்போதுள்ள பெரிய கல்லணை 1806 இல் ஆங்கிலேய பொறியாளர்களால் நிர்மாணிக்கப்பட்டது. பல வருடங்களாக நடந்த மிகப் பெரிய முயற்சியின் காரணமாக அடித்தளம் அமைத்து அணையின் பாதைகள் உயர்த்தப்பட்டு சாலைவசதி ஏற்படுத்தித் தந்தனர். இப்பணி முடிவுறும் தறுவாயில் ஏற்பட்ட சில விநோதமான நிகழ்வுகள் அங்கிருந்த பொறியாளர்களுக்கும் மற்றும் பெருமளவில் கூடியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் வியப்பைத் தந்தன. ஒரு நாள் காலையில் பணி ஆய்வுக்காக வந்த கீழ் நிலை அதிகாரி ஒருவர் அணையின் 19வது மதகு உடைந்திருந்ததைக் கண்டார். இந்த விபத்து கட்டுமானத்தில் பயன்படுத்திய பொருள்களின் தரக்குறைவு காரணமாக ஏற்பட்டது என யூகித்தனர். எனவே அதே கட்டுமானம் மீண்டும் ஒரு மாத காலத்தில் மிகுந்த கவனத்துடன் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே சோதனையாக அந்த வளைவான மதகுப் பகுதி மீண்டும் உடைந்து விழுந்து கல்லும் மண்ணுமாகக் காட்சியளித்தது. இதனால் வாயடைத்து நின்ற பொறியாளர்களும் கட்டுமானப் பணியாளர்களும் மீண்டும் ஏற்பட்ட அழிவைக் குறித்து விளக்கம் எதுவும் அளிக்க முடியாமல் திணறினர்.

இரண்டாவது முறையும் உடைந்து விழுந்த நிகழ்வுக்குப் பிறகு அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்த கீழ்நிலை அதிகாரி முதன் முறையாக மதகு உடைந்து விழுந்த அன்று இரவு தனக்கு ஏற்பட்ட கனவு பற்றிய விபரத்தை வெளிப்படுத்தினார் அன்றிரவு என் கனவில் ஆஞ்சநேய ஸ்வாமி தோன்றி நான் நதியின் அடியில் மணற்படுகையில் உள்ளேன். என்னை வெளிக்கொணர்ந்து அங்கேயே எனக்குக் கோயில் அமைக்காவிடில் இடிந்து விழுவது தொடரும் இதை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார். ஆங்கிலத் தலைமைப் பொறியாளர் இதை நம்பவில்லை. அன்றிரவே மிகவும் ஆச்சரியமான விதமாக அந்தத் தலைமைப் பொறியாளருக்குத் தொடர்ந்து பயமுறுத்தும் கனவுகளாகவே வந்தன. அவரது கனவில் குரங்குகள் அவரை நெருங்கி நகங்களால் பிறாண்டி காது செவிடாகும் படிச் சத்தம் போட்டுத் துன்புறுத்தின. இரவு முழுவதும் ஏற்பட்ட பயங்கரமான கனவுகளால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பொறியாளர் மறுநாள் காலையில் தன் நண்பர்கள் குழுவை அழைத்துத் தனது  கனவுகளைப் பற்றி விளக்கினார். அந்த ஆங்கிலேய நண்பர்களும் இந்தக் கனவுகள் பற்றிய தம் அவ நம்பிக்கையைத் தெரிவித்ததோடு அவர் அந்தக் கீழ்நிலை அதிகாரி கூறிய நம்பமுடியாத கனவுகளை அடிமனத்தளவில் நம்பியதன் விளைவாகவே இது போன்று ஏற்பட்டுள்ளது என்றும் கூறினர். நண்பர்களின் வாக்கு அவருக்கு அப்போதைக்குத் தேவைப்பட்ட ஒரு சமாதானத்தைத் தந்தாலும் அந்த அமைதியும் அல்பாயுசாகவே அமைந்தது. அன்றிரவே ஆஞ்சநேயர் பொறியாளர் கனவில் தோன்றி எனக்குக் கோயில் எழுப்பாமல் நீ இந்த அணையைக் கட்டியுள்ளாய். நானே இந்த அணையைக் காப்பவன். அதனால் அந்தக் கட்டுமானத்தை இடித்துச் சுக்குநூறாக்கினேன். மீண்டும் நீ அணையைக் கட்டினாய் அதுவும் நான் இருக்குமிடத்திற்கு மேலாகவே அமைந்துள்ளது. இதுவும் நிற்காது. நான் இருக்கும் இந்த இடத்தில் ஒரு வளைவை ஏற்படுத்தி என்னைக் காணும் இடத்தில் ஒரு கோவில் அமைத்தால் நீ வெற்றி பெறுவாய் என்றார். மறுநாள் பொறியாளர் அங்கிருந்த இடிபாடுகளை அகற்றி அதே இடத்தில் நதிப்படுக்கையைத் தோண்ட உத்தரவிட்டார். அங்கே அந்தப் பத்தொன்பதாவது மதகு அமைந்திருந்த இடத்தில் ஆஞ்சநேய ஸ்வாமியின் கற்சிற்பம் காணப்பட்டது. அந்த ஆங்கிலேயப் பொறியாளர் தீர்மானமாக அங்கு ஒரு கோயிலைக் கட்ட உத்தரவிட்டார். பெரிய அளவில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது. அணைக்கட்டும் கனவில் அவருக்குச் சொல்லப்பட்ட விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தக் கோவில் இன்றும் சென்று தரிசிக்கும் வகையிலுள்ளது பாலத்திலிருந்து இரண்டு அடுக்குப் படிகளைக் கடந்து கீழிறங்கிச் சென்றால் அந்தக் கோயிலை அடையலாம். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகள் இன்றும் இந்தக் கோவிலின் நித்திய பூஜைக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு வருகின்றன. இதன் ஆதாரங்களை இன்றும் தஞ்சை மாவட்டத்தின் பொதுப்பணித் துறையின் பழைய ஆவணங்களிலிருந்து பெறலாம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெளிவந்த தஞ்சாவூர் மாவட்ட கெஸட் (அரசு இதழ்) என்ற அரசு ஆவணத்திலும் காணலாம்.