நரசிம்மர் தோன்றுதல்
சுரேஷ்வாச்சாரியாரும், மற்ற சீடர்களும் பின் தொடர, ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் வந்து மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்தார். அங்கு ஒரு நாள் ஒரு காபாலிகன் வந்தான். சங்கரர் துர்மதங்களைக் கண்டித்து அத்வைதத்தை நிலைநாட்டி, வருவதைப் பார்த்து , தன் மதமும் போய்விடுமோ என்று பயந்து, எப்படியாவது அவரை ஒழித்துவிடவேண்டும் என்று நினைத்தான். அவன் சங்கரரிடம், நான் பல ஆண்டுகளாக இவ்வுடலுடன் கைலாயம் செல்ல எண்ணி பரமசிவனைக் குறித்து தவம் செய்து வருகிறேன். அவர் என் முன் தோன்றி, எல்லாம் அறிந்த ஒருவன் ஞானி அல்லது சக்கரவர்த்தி இவர்களில் ஒருவருடைய தலையை எடுத்து அக்னியில் போட்டு ஹோமம் செய்தால் உன் எண்ணம் ஈடேறும் என்று அருளினார். ஆனால் இக்காலத்தில் சக்ரவர்த்தி தலை கிடைப்பதரிது. தாங்கள் ஒரு ஞானி. எல்லாமறிந்தவர். உங்கள் தலையை நான் வெட்டினால் உங்களுக்கு துக்கமேற்படாது. எனக்கும் காரியம் கைகூடும் என்று வேண்டினான். அவன் சொன்னதை புரிந்து கொண்ட சங்கரர், சிரித்துக் கொண்டே, தன் தலையை பலியாகக் கொடுக்க தமக்கு ஆட்சேபணை இல்லையென்று சொன்னார். தம் சீடர்களுக்குத் தெரியாமல் பைரவர் கோயிலுக்குத் தாம் வருவதாக கூறி, நள்ளிரவில் கோயில் இருந்த குகைக்குப் புறப்பட்டார். தன் குருவுக்கு ஏதோ ஆபத்து என்று பத்மபாதர் உணர்ந்தார். ஆகவே குருவைக் காப்பாற்றும்படி பகவான் நரசிம்மரை மனமுருக வேண்டிக் கொண்டார். நரசிம்ம மந்திரத்தில் சித்தி பெற்றிருந்த பத்மபாதர் தானே நரசிம்மமாகி சங்கரர் இருக்குமிடத்திற்கு குதித்து ஓடிவந்து காபாலிகன் மேல் பாய்ந்து அவன் மார்பை பிளந்து அவனைக் கொன்றார். நரசிம்மன் செய்த அட்டகாசத்தால் தியானம் கலைந்த சங்கரர் கண்ணைத்திறந்து பார்த்து நடந்ததை அறிந்து கொண்டார். இதன்பின் சங்கரர் கோகர்ணம், ஹரிபுரம் முதலிய இடங்களில் யாத்திரை செய்து பின், கொல்லூர் மூகாம்பிகை தலத்திற்கு வந்தார். அங்கு தமது ஒரே புதல்வன் இறந்து போய் அச்சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு வருந்தும் தம்பதிகளைக் கண்டு சங்கரர் மனம் உருகி, கடவுளை பிரார்த்திக்க இறந்த புதல்வன் உயிர்பெற்று எழுந்தான். அதன்பின் சங்கரர் மூகாம்பிகையின் ஆலயத்துள் சென்று அம்பிகையைத் துதித்து, தன் சிஷ்யர்களுடன் சில தினங்கள் இங்கு தங்கி இருந்தார். சங்கரர் கொல்லூரில் தங்கியிருந்த போது, அவருக்கு கடுமையான காய்சச்சல் ஏ ற்பட்டது. அவருடைய காய்ச்சலை குணப்படுத்த, மூகாம்பிகையே கசாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்து குணப்படுத்தியதாகவும், அதன் அடிப்படையில் இன்றும் கூட மூகாம்பிகைக்கு இரவு நைவேத்தியத்தியன் போது கசாயம் வைக்கப்படுவதாக கூறுவர்.
சங்கரரின் மற்றொரு சீடர் ஹஸ்தாமலகர்: சங்கரர் கர்நாடகாவில் பல புண்ணிய தலங்களுக்கு சென்றார். அப்போது ஸ்ரீவாடியில் கடவுள் பக்தியுள்ள ஒரு அந்தணர் தனது ஊமை மகனை அழைத்துக் கொண்டு சங்கரரிடம் வந்தார். அவரை நமஸ்கரித்து, ஐயா! என் மகன் ஊமையாக மட்டுமல்லாமல் மூளை வளர்ச்சியின்றி காணப்படுகிறான். தாங்கள் தான் அவனை குணப்படுத்த வேண்டும் என்று சொன்னார். சங்கரர் சிறுவனைப் பார்த்து, நீ யார்! ஏன் இப்படி ஜடம் போல் இருக்கிறாய் என்று கேட்டார். அதுவரை ஊமையாக இருந்த சிறுவன் பேச ஆரம்பித்தான். நான் ஜடமில்லை, சித்ஸ்வரூபி என்று பதிலளித்து 12 ஸ்லோகங்களால் ஆத்ம தத்துவத்தை விளக்கினார். இதுவே ஹஸ்தாமலகீயம் என்று சொல்லப்படுவது. சங்கரர் இதற்கு உரை இயற்றியுள்ளார். சங்கரர் அச்சிறுவனை ஆசிர்வதித்து, அவனுக்கு ஹஸ்தமாலகா (உள்ளங்கை நெல்லிக்கனி) என பெயரிட்டு தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.
ஹஸ்தாமலகருக்கு எப்படி பிறவியிலேயே, பாடம் கற்காமலே ஞானம் வந்தது என்று சீடர்கள் வினவ, சங்கரர் கூறினார். யமுனா நதிக்கரையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு மாது தனது இரண்டு வயது பாலனை அவரிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு நதியில் ஸ்நானம் செய்யச் சென்றாள். தற்செயலாக குழந்தை நதியில் விழுந்து இறக்க மக்கள், அந்தக் குழந்தையின் சடலத்தை அந்த முனிவர் முன் இட்டு புலம்பினார்கள். கருணை மிகுந்த முனிவர் நடந்ததை அறிந்து, தன் யோகசக்தியால் குழந்தையின் உடலில் புகுந்தார். அவரே ஹஸ்தாமலகர் என்று சங்கரர் உரைத்தார்.
சிருங்கேரி சாரதா: சங்கரர் கர்நாடகா துங்கபத்திரை நதிக்கரையில் இருந்த சிருங்கேரிக்கு வந்து சேர்ந்தார். தசரதர் புத்ரபாக்யம் வேண்டி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தை நடத்தி வைத்த ரிஷ்யசிருங்க மாமுனிவரின் ஆசிரமம் இங்கு இருந்தது. இங்கு நிறைமாத கர்ப்பிணியான ஒரு தவளை வெயிலில் உஷ்ணம் தாங்காமல் தவிக்கும்போது ஒரு நாகப்பாம்பு படமெடுத்து தன் தலையால் குடைபிடித்து அத்தவளையைக் காப்பாற்றிய அற்புத காட்சியை சங்கரர் கண்டார். இயல்பாகவே, விரோதிகளான இவை இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்ட சங்கரர் இந்த இடம் மிகவும் சக்திவாய்ந்த இடம் என கருதினார். முன்பு உபயபாரதியை வனதுர்கா மந்திரத்தால் கட்டுப்படுத்தி தான் விரும்பும் இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று செய்த வேண்டுகோள் நினைவுக்கு வர, அதன்படியே அவளுக்கு ஓர் ஆலயத்தை ஏற்படுத்தி பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார்.
இன்னுமொரு சீடர் தோடகாச்சாரியார்: சிருங்கேரியில் சங்கரர் தங்கியிருக்கும் இடத்திற்கு அநேக சீடர்கள் வந்தார்கள். அவர்களில் கிரி என்ற சீடரும் ஒருவர். இவர் சற்று மந்த புத்தி உடையவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் குரு சங்கரர் மீது மிக்க பக்தி கொண்டிருந்தார். எப்போதும் குரு சேவையிலேயே ஈடுபட்டிருப்பார். பாடங்களை கிரஹிக்கத் திறமையற்றவர். இதனால் மற்ற சீடர்கள் அவரை அலட்சியப்படுத்தினர். ஒருநாள் வகுப்பு ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆனால் கிரி வரவில்லை. அவர் குருவின் துணிகளைத் துவைப்பதற்காக துங்கபத்திரா நதிக்குச் சென்றிருந்தார். கிரி வந்தவுடன் பாடம் ஆரம்பிக்கலாம் என்று சங்கரர் கூறினார். கிரியோ மந்தமாக இருக்கிறார். அவருக்காக நாம் காத்திருப்பானேன்! என்று மற்ற சீடர்கள் கூறினர். தம் சீடர்களுக்கு பாடம் கற்பிக்க விரும்பிய சங்கரர், மனதினாலேயே தியானம் செய்து கிரிக்கு எல்லா வித்யைகளும் தோன்றட்டும் என்று அருள்புரிந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் கிரி உள்ளே நுழைந்தார். தம் குருவைப் பாராட்டி தோடகா என்னும் பண்ணில் எட்டு ஸ்லோகங்கள் கொண்ட ஒரு பாட்டைப் பாடிக்கொண்டு வந்தார். இந்த துதியே தோடகாஷ்டகம் ஆனது. இதனாலேயே கிரி, தோடகாச்சாரியார் என்று அழைக்கப்பட்டார். அன்றிலிருந்து மற்ற சீடர்கள் தோடகாச்சாரியார் மீது மிக்க மதிப்பு வைக்க ஆரம்பித்தனர்.
குருவின் உத்தரவுப்படி எல்லா சீடர்களும் பல நூல்களை இயற்றினார்கள். சங்கரர் அருளியுள்ள தைத்திரீய உபநிஷத் உரைக்கும், பிருஹதாரண்யக உபநிஷத் உரைக்கும், சுரேஸ்வரர் மறு விளக்க உரை இயற்றியுள்ளார். இது தவிர நைஷ்கர்ம்ய ஸித்தி என்ற தனி நூலும் செய்திருக்கிறார். அதுபோல சங்கரரது தட்சிணாமூர்த்தி அஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்திற்கு மானஸோல்லாசம் என்ற பெயரில் ஒரு உரை இவரால் செய்யப்பட்டது. பஞ்சபாதிகா என்ற பெயரில் பிரம்மசூத்திரங்களுக்கு பொருள் கூறும் ஒரு விரிவான நூலையும், சங்கரருடைய பிரபஞ்சஸாரம் என்ற மந்திர சாஸ்திர நூலுக்கு ஒரு உரையும் பத்மபாதரால் செய்யப்பட்டது. தோடகாச்சாரியார் சங்கரர் பெயரில் தோடகாஷ்டகம் என்ற துதியையும், ச்ருதி ஸாரஸமுத்தரணம் என்ற நூலையும் இயற்றியிருக்கிறார். ஹஸ்தாமலகருடைய ஸ்லோகங்கள் ஹஸ்தாமலகீயம் எனப்படும். இவ்வாறு சங்கரர் சீடர்களுடன் 12 ஆண்டுகள் சிருங்கேரியில் தங்கியிருந்தார்.
தாய் ஆர்யாம்பாளின் பிரிவு
சிருங்கேரியில் இருக்கும் போது, திடீரென்று ஒருநாள் சங்கரருக்கு தம் தாயின் உடல்நிலை சரியில்லை என்பதையும், அவளுடைய இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் யோகசக்தியால் உணர்ந்தார். தம் சீடர்களிடம் தாயின் நிலையைக் கூறிவிட்டு, ஆகாயமார்கமாக காலடி வந்தடைந்தார். தாயாரைத் தேற்றினார். மகனைக் கண்டதில் தாயாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தாயாரைப் பார்த்து சங்கரர் மிக்க அன்புடன், அம்மா! கவலைப்படாதே. உனக்கு என்ன ஆசை என்று கூறு என்றார். தன்னை சிவலோகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று தாயார் கேட்க, சங்கரரும் உடனே சிவபுஜங்கம் என்ற ஸ்தோத்திரத்தால் பரமசிவனைத் துதித்தார். சிவகணங்கள் உடனே அங்கு தோன்றினர். அவர்கள் சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தி இருந்தனர். இவைகளினால் பயந்த தன் தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க மகாவிஷ்ணுவை வேண்டி ஒரு பாடல் பாடினார். மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைத்தது. உடனே விஷ்ணு தூதர்கள் தாயாரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கினார் சங்கரர். உறவினர்களும், ஊர்க்காரர்களும் சன்னியாசியான சங்கரர் நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளில் ஈடுபடக்கூடாது என்றனர். சங்கரர் மனம் தளரவில்லை. தான் தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தைப் பற்றிக் கூறினார். அதை அவர்கள் கேட்பதாக இல்லை. உடனே சங்கரர் உலக சம்பிரதாயத்தையும் மீறாமல், அதே சமயத்தில் தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில், தன் வீட்டுக்கருகில் கட்டைகளை அடுக்கி தன் யோகசக்தியால் வலது கையிலிருந்து அக்னியை உண்டு பண்ணி அதனால் தாயாரின் தகனக்கிரியைகளை செய்து முடித்தார்.
பத்மபாதரது தீர்த்தயாத்திரை: ஒரு நாள் பத்மபாதர் குருவிடம், தீர்த்தயாத்திரை செல்ல அனுமதி கேட்டார். சங்கரர் யாத்திரையின் சிரமங்களைக் கூறி யாத்திரையினால் சன்னியாசியின் நெறிமுறைகளைக் கடைபிடிப்பது இயலாது என்றும் உபதேசித்தார். பத்மபாதர் நிர்பந்தம் செய்யவே சங்கரர் அனுமதி கொடுத்தார். குருவினிடம் அனுமதி பெற்று பத்மபாதரும் தீர்த்தயாத்திரைக்கு புறப்பட்டார். சிருங்கேரியிலிருந்து கிளம்பிய பத்மபாதர் காளஹஸ்தி, காஞ்சி முதலிய தலங்களில் தரிசனம் செய்து கொண்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். அங்கு அவருடைய தாய்மாமன் வீட்டில் தங்கினார். அந்த தாய்மாமன் பிரபாகர் என்பவருடைய கொள்கைகளைப் பின்பற்றுபவர். அதைக் கண்டித்து சங்கரரால் எழுதப்பட்ட நூலுக்கு பத்மபாதர் அழகான உரை எழுதியிருந்ததைக் கண்டு தாய்மாமன் வருந்தினார். ஆனால் அதை தாய்மாமன் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு முறை பத்மபாதர், தன் மாமனிடம் தான் ராமேஸ்வரம் போய்வர உத்தேசித்திருப்பதாகவும், அதுவரை தன்னால் இயற்றப்பட்ட நூலைப் பாதுகாக்கும்படியும் சொல்லிவிட்டு புறப்பட்டார். தன் கொள்கைக்கு விரோதமாக இருந்த நூலை ஒழிக்க எண்ணிய மாமன், அவர் வீட்டிற்கே தீ வைத்து எறித்து விட்டார். ராமேஸ்வர யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய பத்மபாதர் தனது நூலைத் தரும்படி மாமனிடம் கேட்டார். தற்செயலாக வீட்டில் நெருப்புப் பிடித்து எரிந்ததில் அந்த நூலும் போய்விட்டது என்று மிகவும் வருத்தப்பட்டவற்போல் கூறினார். இதைக் கேட்டு முதலில் வருத்தமுற்றாலும் மறுபடியும் அந்த நூலை எழுதப்போவதாக பத்மபாதர் கூறினார். இதைக்கேட்டு பயந்த மாமன், பத்மபாதர் மறுபடியும் எழுதாமலிருப்பதற்காக உணவில் விஷத்தை சேர்த்துக் கொடுத்துவிட்டார். புத்திக் கலக்கம் அடைந்த பத்மபாதருக்கு மறுபடியும் எழுதமுடியாமல் போய்விட்டது. இதனால் மிகவும் வருந்தினார்.
சங்கரர் தாயாரின் இறுதி சடங்குக்காக கேரளத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார் பத்மபாதர் . எல்லா விவரங்களையும் குருவிடம் தெரிவித்து, புத்தகம் எரிந்து போனதையும் மறுபடியும் எழுதமுடியாமல் புத்தி கலங்கியிருப்பதையும் கூறி கதறினார். இதைக் கேட்ட சங்கரர், கர்மாவின் போக்கு விசித்திரமாய் இருக்கிறது. ஆனாலும் புத்தகம் எழுதியவுடன் நீ என்னிடம் வாசித்து காட்டிய பகுதி மாத்திரம் என் ஞாபகத்தில் இருக்கிறது. அதைச் சொல்கிறேன் எழுதிக்கொள் என்று கூறி சமாதானப்படுத்தினார். இவ்வாறு சங்கரர் கூறி பத்மபாதர் எழுதி வெளிவந்தது தான் பஞ்சபாதிகை என்ற நூல்.
திக் விஜயம்
காலடியை விட்டு கிளம்பிய சங்கரர் சிருங்கேரியை அடைந்தார். பின் தன் சீடர்கள் புடைசூழ திக்விஜயம் செய்ய ஆரம்பித்தார். முதலில் ராமேஸ்வரம் சென்றார். ராமநாதரைப் பூஜித்துப் பின் பாண்டிய சோழ நாட்டு வழியாக காஞ்சிபுரம் வந்தடைந்தார். அங்கு பழக்கத்திலிருந்த தந்திர வழிமுறைகளை மாற்ற விரும்பி, சாக்தர்களை வென்றார். காமாட்சி அம்மனுக்கு ஒரு ஆலயத்தை நிறுவச் செய்து அங்கு ஸ்ரீசக்கரத்தை ஸ்தாபித்து, அம்பாளின் உக்ர கலையை சாந்த கலையாக மாற்றினார். அங்கு நடந்து கொண்டிருந்த தாந்திரீக பூஜை முறையை மாற்றி வைதீக பூஜை நடந்துவரும்படி ஏற்பாடு செய்தார். காஞ்சியில் ஒரு மாதகாலம் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார். கர்நாடகம் சென்று அங்கு காபாலிகர்களையும், பாஷாண்டர்களையும் வாதில் வென்று, கோகர்ணம் சென்று சமுத்திர ஸ்நானம் செய்து பரமேஸ்வரனை பூஜித்தார். அங்கிருந்த சைவ ஆச்சாரியாரான நீலகண்டரை வென்று அத்வைதத்தை ஏற்கச் செய்து யாத்திரா மார்க்கமாக சௌராஷ்டிரம் வழியாக துவாரகையை வந்தடைந்தார். அங்கிருந்த வைஷ்ணவர்களை திருத்திவிட்டு உஜ்ஜைனி சென்றார். அங்கு பட்டபாஸ்கரர் என்பவரை வாதில் வென்று, ஜைனர்களால் எதிர்க்கப்பட்டார். ஆனால் அவர்களுடைய வாதங்கள் சங்கரர் முன் எடுபடவில்லை. இதுபோல் நவகுப்தர் என்ற சாக்கரும், சங்கரரிடம் தோற்றார். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் சங்கரர் மேல் பகந்தரம் என்ற வியாதி உண்டாகும்படி செய்தார். இந்நிலையில் தோடகர் சங்கரருக்கு நல்ல பணிவிடை செய்தார். பத்மபாதரின் மந்திர சக்தியால் அந்த நோய் சங்கரரை விட்டு நீங்கி நவகுப்தரை தாக்கிற்று.
பிறகு தனது யாத்திரையைத் தொடர்ந்து இமயமலையை அடைந்தார். அங்கு தனது குருவின் குருவான கௌடபாதரை தரிசித்து அவரிடம் தான் செய்துவரும் அத்வைத மதம் பிரசாரத்தைத் தெரிவித்தார். அதைக் கேட்டு சந்தோஷமடைந்த கௌடபாதர், நான் எழுதிய மாண்டூக்ய உபநிஷத் உரைக்கு நீ ஒரு விளக்கம் எழுதியிருப்பதாக உனது குருவும், எனது சீடருமாகிய கோவிந்தபகவத்பாதர் மூலம் கேள்விப்பட்டேன். அதற்காக உன்னை அனுக்ரஹிப்பதற்காகவே இங்கு வந்தேன் என்று சொல்லி சங்கரரை ஆசிர்வதித்துவிட்டு மறைந்தார்.
சர்வக்ஞபீடம் அமர்தல்: சங்கரர் இமயமலையில் கங்கை கரையில் தன் சீடர்களுடன் தங்கிவந்தார். அப்போது காஷ்மீரத்தில் அன்னை சாரதா தேவியின் ஆலயம் உள்ளது. அங்கு ஒரு சர்வக்ஞபீடம் இருக்கிறது. இதில் எல்லாம் அறிந்த சர்வக்ஞன் மட்டுமே அமர முடியும். அதன் நான்கு பக்கங்களிலும் நான்கு வாசல்கள் உண்டு. வடக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளிலிருந்து அறிஞர்கள் வந்த அந்தந்த கதவுகள் திறந்தபடி உள்ளன. ஆனால் தெற்குப் பக்கத்திலிருந்து ஒருவரும் வராததால் தெற்குவாசல் மட்டும் மூடப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டார். உடனே சங்கரர் தென்திசை கதவு வழியாக அக்கோயிலுக்குள் நுழைய வேண்டுமென்று, அக்கோயிலை நோக்கிச் சென்றார். அவர் தெற்கு வாயிலை அடைந்தார். அங்கு பல மதங்களைச் சேர்ந்த அறிஞர்களை தம்முடைய வாதத்திறமையால் வென்றார். தென்திசைக் கதவு திறக்கப்பட்டது. சங்கரர் பத்மபாதருடன் உள்ளே நுழைந்தார். சங்கரர் அங்கிருந்த சிம்மாசனத்தில் உட்காரப் போனார். அப்பொழுது சரஸ்வதி தேவியின் குரல் கேட்டது. இந்த சிம்மாசனத்தில் உட்கார சர்வஞ்ஞராக இருந்தால் மட்டும் போதாது, சர்வசுத்தி உடையவராகவும் இருக்க வேண்டும் என்றாள் சரஸ்வதி. அதற்கு சங்கரர், பிறந்ததிலிருந்து நான் ஒரு பாவத்தையும் அறியேன். நான் சர்வசுத்தன் என்றார். இதைக் கேட்டு சரஸ்வதி மகிழ, சங்கரர் சர்வஞ்ஞ பீடத்தில் ஏறி அமர்ந்தார். அதிலிருந்து அவர் ஜகத்குரு என அழைக்கப்பட்டார்.
சங்கரர் நிறுவிய மடங்கள்: அத்வைத தத்துவத்தைப் பிரசாரம் செய்வதற்காக சங்கரர் இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்கள் நிறுவினார். அவருடைய நான்கு முக்கிய சீடர்களே இந்த நான்கு மடங்களின் முதல் பீடாதிபதி ஆனார்கள். கிழக்கே பூரி ஜெகந்நாத்தில் ரிக்வேத ப்ரதானமாக கோவர்த்தன மடத்தை நிறுவி அதன் பீடாதிபதியாக பத்மபாதரை நியமித்தார். தெற்கே சிருங்கேரியில் யஜுர் வேத ப்ரதானமாக சாரதா மடத்தை நிறுவி சுரேஷ்வராச்சாரியாரை பீடாதிபதியாக்கினார். மேற்கே துவாரகையில் சாமவேத ப்ரதானமாக ஒரு மடத்தை நிறுவி ஹஸ்தமாலாகாவை பீடாதிபதியாக நியமித்தார். வடக்கே பத்ரியில் அதர்வண வேத ப்ரதானமாக ஜோதிர் மடத்தை நிறுவி தோடகாச்சாரியாரை பீடாதிபதியாக நியமித்தார். கயிலாயத்தில் இருந்து தான் கொண்டு வந்திருந்த சந்திரமவுலீஸ்வர ஸ்படிக லிங்கத்தையும், ரத்னகர்ப கணபதி விக்ரகத்தையும் சுரேச்வரரிடம் கொடுத்து பூஜித்து வரும்படியும், துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகளுக்கும் மேலான சாரதாபரமேஸ்வரியை ஆராதித்து வரும்படியும் ஏற்பாடு செய்தார். சுரேச்வரரைத் தொடர்ந்து இந்தப் பணியை சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த மடாதிபதிகள் பூஜித்து வருகின்றனர். சங்கரரால் ஏற்றிவைக்கப்பட்ட ஜோதி சிருங்கேரியில் இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
சங்கரரின் கயிலைப் பயணம்
சங்கரர் சில சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு பத்ரி சென்றார். அங்கு சிலகாலம் தங்கியிருந்து அத்வைத தத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார். சிலகாலம் பத்ரியில் வசித்துவிட்டு கேதாரம் அடைந்தார். அங்குள்ள கடும் குளிரை அவரது சீடர்களால் தாங்கமுடியவில்லை. மிகவும் சிரமப்பட்டனர். சங்கரர் சிவபெருமானைப் பிரார்த்தனை செய்ததால், அங்கு ஒரு வெந்நீர் ஊற்று தோன்றியது. இன்றும் அந்த ஊற்றை நாம் காணலாம். சிவபெருமானின் அவதாரமாகிய சங்கரர் தமது 32வது(கி.பி.788-820) வயதை அடைந்தார். தமது அவதார நோக்கம் பூர்த்தியாகிவிட்டதையும், தமது ஆயுள் முடிந்துவிட்டதையும் உணர்ந்து சங்கரர் தனது உடலை தியாகம் செய்ய எண்ணினார். அப்போது தேவர்கள் பூமாரி பொழிந்து சிவபெருமானின் பெருமைகளைப் பாடினார்கள். சிவனது வாகனமாகிய காளையும் வந்தது. சங்கரர் காளையில் அமர்ந்து கைலாயம் சென்றார். இமயமலையில் சுமார் 11, 750 அடி உயரத்தில் கேதாரநாத்தில் ஆதிசங்கரர் பூவுலகில் இருந்து மறைந்த இடத்தில் ஸ்ரீசங்கராச்சாரியகைவல்யதாமா என்ற பெயரில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
அத்துவைதத் தத்துவங்கள்: வேதங்களை நன்கு ஓதியவர், பாவமற்றவர், ஆசையற்றவர், பிரம்மத்தை அறிந்தவர் இவர் தான் உண்மையான ஆசாரியன். இத்தகைய ஆசாரியனைப் பக்தியுடன் வணங்கி, அவருக்குத் தொடர்ந்து தொண்டு செய்து கொண்டு வந்தால், சீடன் ஆத்ம ஞானத்தை அடைவான். கண்ணாடி போன்று மனது சுத்தமானால், அதில் ஞானம் பிரகாசிக்கும். ஆகையால் சித்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்.
நல்ல அறிவொளி பெற்ற யோகி ஞானக்கண் கொண்டு, புவனம் அனைத்தையும் தன்னுள்ளே பார்க்கிறான். எதையும் ஆத்மாவாகக் காண்கிறான். அமைதியான மனநிலையிலிருந்து அறிவு பிறக்கிறது. அறிவின் காரணமாக இந்திரிய போகங்களிலிருந்து விடுதலை பெறுகிறோம். இதன் காரணமாக ஆத்மஞானம் உண்டாகிறது. இதன் காரணமாக சாந்தி பிறக்கிறது. நாமும் பிரம்மமும் வேறில்லை என்கிற சரியான ஞானத்தின் காரணமாக நாம் ஜனன, மரண பிடியிலிருந்து விடுபடுகிறோம். சத், சித், ஆனந்தமாக உள்ள ஆத்மாவை, தொடர்ந்து சாதகத்தின் மூலமாகத்தான் அடைய முடியும். ஆகவே ஞானம் வேண்டுவோர் பிரம்மத்தையோ, ஆத்மாவையோ நீண்ட நேரம் தியானம் செய்ய வேண்டும்.
எப்படி ஒரு விளக்கு ஒரு ஜாடிக்கோ, சட்டிக்கோ பிரகாசம் கொடுக்கிறதோ, அதே போன்று ஆத்மா ஒன்றுதான் நம் மனது, இந்திரியங்கள் முதலியவற்றுக்கு பிரகாசம் கொடுக்கிறது. ஒரு எரியும் விளக்கைப் பார்க்க இன்னொரு விளக்கு தேவையில்லை. அதே போன்று, ஆத்மாவே சுயம் பிரகாசமானதால் அது தெரிய இன்னொரு பிரகாசம் தேவையில்லை. சங்கரர் சொல்கிறார், எத்தனையோ சாத்திரங்களில் சொல்லப்படும் உண்மையை நான் அரை சுலோகத்தில் சொல்லி உங்களுக்கு விளக்க வைக்கிறேன் என்று. அந்த ஸ்லோகம் என்ன தெரியுமா! பிரம்மம் தான் சத்தியம். ஜகத் மித்யை. ஜீவன் பிரம்மத்தைத் தவிர வேறில்லை.
--------------------------------------------