வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

274 சிவாலயம் அருள் மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : வசிஷ்டேஸ்வரர்
அம்மன் : உலகநாயகியம்மை
தல விருட்சம் : முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருத்தென்குடித்திட்டை, திட்டை
ஊர் : தென்குடித்திட்டை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்,தேவாரப்பதிகம்

கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம் பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினார் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே. திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 15வது தலம்.  
      
விழா : மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, குருப்பெயர்ச்சி  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார். உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார். மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும். நவக்கிரகத்தில் உள்ள வியாழன் (குரு) தனி சன்னதியில் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை- 614 206.தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91-4362 252 858, 94435 86453 
     
தகவல் : குருபகவானை வசிஷ்ட ரிஷி ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது.  
      
பெருமை : திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம், சுவாதிதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆறு ஆதார ஞானம் அருளி அதற்கு மேல் ஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்த பெருவாழ்வில் நிலை பெற வைப்பார். எனவே இத்தலத்தில் முருகன் மூல மூர்த்தியாக விளங்கி உடலால் தென்குடி ஆகவும், உயிரால் ஞானமேடு எனப்படும் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.

சூரிய பூஜை :  சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார். இதேபோல் உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார். இவ்விரு காலங்களில் சுவாமிக்கு சூரிய பூஜை நடப்பது சிறப்பாகும்.

சிறப்பு : மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும். பிரகாரத்தில் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்கள் உள்ளது.

குருதலம் : குரு ஸ்தலங்களில் முக்கியமான தலம் இது. பொதுவாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் குருபகவான், இத்தலத்தில் நின்ற நிலையில் தனி சன்னதியில் ராஜகுருவாக இருக்கிறார்.இங்கே வந்து தன்னை வேண்டுவோருக்கு உடனடியாக சென்று உதவ வேண்டும் என்பதற்காக குருபகவான் நின்ற நிலையிலேயே அருள்பாலிக்கிறார் என்கின்றனர். நின்ற நிலையிலுள்ள குருவை வழிபட்டால் மேடைப் பேச்சில் பயம் இருக்காது என்பது நம்பிக்கை. குருபெயர்ச்சியால் ஜாதக ரீதியாக பாதிக்கப்படலாம் என கருதுவோர் மட்டுமின்றி, கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பும் மாணவர்கள் இங்கு குருபகவானை வழிபடுகின்றனர்.  
      
ஸ்தல வரலாறு : திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும். ஒரு பிரளய காலத்தில் இவ்வுலகமானது நீரால் சூழப்பட்டது. "ஓம்' என்ற மந்திர ஓடத்தில் இறைவன், இறைவி இருவர் மட்டும் ஏறி வர, அது ஒரு திட்டில் வந்து நின்றது. அதுவே சீர்காழி என்னும் தோணிபுரம் ஆகும். ஆதி காலத்தில் இறைவன் விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி. மற்றொன்று தென்குடி திட்டை. சீர்காழியில் ஊழிக்காலத்தில் "ஓம்' என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் "ஹம்' என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடு எனவும் தென்குடி திட்டை எனவும், சீர்காழி வடகுடி திட்டை எனவும் வழங்கலாயிற்று. இறைவன், இறைவியுடன் விரும்பி குடியிருக்கும் திட்டுகள் குடித்திட்டை எனப்படும். வசிஷ்டா முனிவர் ஆசிரமம் அமைத்து இத்தல ஈஸ்வரனை பூஜித்தமையால் இத்தல ஈஸ்வரன் வசிஷ்டேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அம்பாள் உலகநாயகியம்மை.
பார்த்தஸாரதிப் பெருமாள் ஸ்தோத்திரம்

ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஹம்-பீத வஸ்த்ராதி பூஷம்
பஜே பக்தபோஷம் ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஷம்

பொருள் : பீதாம்பரம் மற்றும் ஆபரணங்களை அணிந்தவரும், பக்தர்களைக் காப்பவரும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியவருமான ஸ்ரீபார்த்த சாரதியை வணங்குகிறேன்.

1. ஸ்ரீகைரவிண்யாஸுதீரே-பத்ம
நேத்ரம் பவித்ரம் புராரேஸ்ஸுமித்ரம்
சந்த்ராப வக்த்ரம் ஸுதோத்ரம்-ருக்மிணீ
ஸத்யபாமா ஸமாச்லிஷ்டகாத்ரம் (ஸ்ரீ)

பொருள் : கைரவிணீ எனும் குளக்கரையில் இருப்பவர். தாமரை போன்ற கண்களை உடையவர், பக்தர்களைத் தூய்மைப்படுத்துபவர், முராரி, ஸ்ரீபரமேச்வரனின் நண்பர், சந்திரன் போல் முகம் உடையவர், ருக்மிணீ, சத்யபாமா இவர்களால் ஆலிங்கனம் செய்யப்பட்டவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

2. பீஷ்மாதி பானணக்ஷதாஸ்யம்-புக்தி
முக்தியேகலாபாய பக்தைருபாத்யம்
பக்தார்த்தி ஹாரிஸ்மிதாஸ்யம்-பார்த்த
வாத்ஸல்ப ஸம்ப்ராப்த தௌத்யாதி தாஸ்யம் (ஸ்ரீ)

பொருள் : பீஷ்மர், துரோணர் முதலிய மகான்களின் அம்புகளால் முகத்தில் வடுக்களை உடையவரும், சர்வபோகங்கள், மோஷம் ஆகியவற்றின் லாபத்திற்காகப் பக்தர்களால் உபாசிக்கத் தகுந்தவரும், பக்தர்களின் கஷ்டத்தை நீக்கும் புன்சிரிப்புடையவரும், அர்ஜுனனிடத்திலுள்ள அன்பால் தூது முதலிய வேலையைச் செய்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.

3. லோகாவனாயாத்தலீலம் பூஜி
தானேக தேவேந்த்ர லோகைக பாலம்
ஸ்ரீ தேவகீ புண்யபாலம்-ஆஹ்ரு
தானேக கோபீ ஸுவர்ணாப சேலம்

பொருள் : உலகைக் காக்க பால லீலைகள் புரிந்தவரும், இந்திரன் முதலிய பல தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீ தேவகியின் புண்ணியத்தால் குழந்தையாக வந்தவரும், கோபிகைகளின் பல தங்கப் பட்டாடைகளைக் கவர்ந்தவருமான ஸ்ரீ பார்த்த சாரதியை பூஜிக்கிறேன்.

4. பா ஹுத்வயோபேததேஹம் -பாஞ்ச
ஜந்யாக்ய சங்க ஸ்புரத்தக்ஷ பாஹும்
ஸ்ரீகாருடஸ்வீயவாஹம்-புத்ர
பௌத்ராதி ஸம்பூர்ணதி வ்யஸ்வகேஹம்  (ஸ்ரீ)

பொருள் : இரண்டு கைகளை உடைய கோலத்தில் இருப்பவரும், பாஞ்சஜன்யம் என்ற சங்கை வலது கையில் உடையவரும், கருட வாகனம் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

5. வாமேகரே சாருசக்ரம்-வார
ணேந்த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம்சப்த நக்ரம்
காருண்யஸ்ம்பூர்ண நேத்ரம்-ஸ்வீய
ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம்  (ஸ்ரீ)

பொருள் : இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணைமிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.

6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யுபேதம்-ரங்க
நாதே தேவேன நித்யம் ஸமேதம்
பக்தைஸ்ஸதா ஸாதுகீதம்-ஸ்வீய
பக்தாய பார்த்தாய ஸம்ப்ரோக்த கீதம்  (ஸ்ரீ)

பொருள் : ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

7.பக்தயாக்ருதம் ஸதோத்ரரத்னம்-தீக்ஷி
தானந்தராமேண ஸர்வார்த்த ஸித்யை
நித்யம் படேத் பக்தி சாயீ-வாஸு
தேவ ப்ரஸாதோ பவேதேவ தஸ்ய  (ஸ்ரீ)

பொருள் : விரும்பியவை சித்திக்கும் பொருட்டு ஸ்ரீஅனந்த ராம தீக்ஷிதரால் பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பக்தியோடு படிப்பவருக்கு ஸ்ரீபார்த்தசாரதியின் அருள் கிடைக்கும்.
----------------------------------------------------------------------------
குரு ராகவந்திராய நமஹ  (3 தடவை)

1. பிரஹலாதன் என வியாஸர் ராயரென
நாரனெனை பாடும் திருவருளை
ராகவேந்திரா நின் திருவடி சரணம்
பணிந்து விட்டோம் இது அவன் செயலே  (குரு)

2. ஆஞ்சனேயர் துதி ஆற்றும் தவக்கோலம்
என்றும் சிரஞ்சீவி எம் குருவே
இம்மையும் இன்றி மறுமையும் இன்றி
எங்கள் வாழ்வில் வரும் திருவுருவே  (குரு)

3. மூலராமன் புகழ் போற்றும் வேந்தனை
சீலம்மேலிடும் திருமணியே
பிருந்தாவனத்தில் மருந்தாய் இருக்கும்
மன்னனே எங்கள் குரு மணியே
குரு ராகவேந்திராய சரணம்

குரு ஸ்துதி

1. ஹம்ஸ ஹம்ஸ பரமஹம்ஸ
ராம கிருஷ்ண குரவே நமஹ - ஹம்ஸ

2. ஜோதி ஜோதி பரம ஜோதி
ராம கிருஷ்ண குரவே நமஹ

3. தேவ தேவ மகாதேவ
ராம கிருஷ்ண குரவே நமஹ
ஹே ராம கிருஷ்ண குரவே நமஹ

4. ராம ராம ஹரே ராம
ராம கிருஷ்ண குரவே நமஹ
ராம ராம ஹரே ராம
ராம கிருஷ்ண குரவே நமஹ

5. கிருஷ்ண கிருஷ்ண ஹரே கிருஷ்ண
ராம கிருஷ்ண குரவே நமஹ.
----------------------------------------------------------------------------
அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ணுஹஸ்ரநாமம். இதை உபதேசித்தவர்-ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். உபதேசம் செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல. பிரம்மதேவரிவம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சமநிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க.... அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பதுதானே இதன் பொருள்? அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகஸ்தியர். அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார்.

ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகஸ்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

பூர்வபாக:

சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்!
ப்ரஸன்ன-வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபசாந்தயே

ப்ராணானாயம்ய
மமோபாத்த-ஸம்ஸ்த-துரித-க்ஷயத்வாரா ஸ்ரீலலிதா-
மஹாத்ரிபுரஸுந்தரீ-ப்ரீத்யர்த்தம் ஸ்ரீலலிதா-ஸஹஸ்ர நாம-பாராயணம் கரிஷ்யே

ஐங்கார-ஹ்ரீங்கார-ரஹஸ்ய-யுக்த-ஸ்ரீங்கார-கூடார்த்த
மஹா-விபூத்யா ஓங்கார-மர்ம-ப்ரதிபாதினீப்யாம் நமோ நம:  ஸ்ரீகுருபாதுகாப்யாம்

அகஸ்த்ய உவாச

அச்வானன மஹாபுத்தே ஸர்வ-சாஸ்த்ர-விசாரத
ககிதம் லலிதா-தேவ்யாச்-சரிதம் பரமாத்புதம்

பூர்வம் ப்ராதுர்ப்போ மாதுஸ்-தத: பட்டாபிஷேசனம்
பண்டாஸுரவதச்சைவ விஸ்தரேண த்வயோதித:

வர்ணிதம் ஸ்ரீபுரஞ்சாபி மஹாவிபவ-விஸ்தரம்
ஸ்ரீமத்பஞ்சதசாக்ஷர்யா மஹிமா வர்ணிதஸ்-ததா

÷ஷாடாந்யாஸாதயோ தேவ்யா:- கண்டே ஸமீரிதா:
அந்தர்-யாக-க்ர மச்சைவ பஹிர்-யாக-க்ரமஸ்-ததா

மஹா-யாகக்ரமச்சாபி பூஜாகண்டே ஸமீரிதா
புரச்சரண கண்டே து ஜபலக்ஷண-மீரிதம்

ஹோமகண்டே த்வயா ப்ரோக்தோ ஹோமத்ரவ்ய-விதிக்ரம :
சக்ரராஜஸ்ய வித்யாயா: ஸ்ரீதேவ்யா தேசிகாத் மனோ:

ரஹஸ்ய-கண்டே தாதாத்ம்யம் பரஸ்பர-முதீரிதம்
ஸ்தோத்ர-கண்டே பஹீவிதா: ஸ்துதய: பரிகீர்த்திதா:

மந்த்ரிணீ-தண்டினீ-தேவ்யோ : ப்ரோக்தே நாமஸஹஸ்ரகே
ந து ஸ்ரீலலிதா-தேவ்யா: ப்ரோக்தம் நாம-ஸஹஸ்ரகம்

தத்ர மே ஸம்சயோ ஜாதோ ஹயக்ரீவ தயாநிதே
கிம் வா த்வயா விஸ்ம்ருதம் தஜ்ஜ்ஞாத்வா வாஸமுபேக்ஷிதம்

மம வா யோக்யதா நாஸ்தி ச்ரோதும் நாமஸஹஸ்ரகம்
கிமர்த்தம் பவதா நோக்தம் தத்ர மே காரணம் வத

ஸுத உவாச

இதி ப்ருஷ்டோ ஹயக்ரீவோ முனினா கும்பஜன்மனா
ப்ரஹ்ருஷ்டோ வசனம் ப்ராஹ தாபஸம் கும்பஸம்பவம்

ஸ்ரீ ஹயக்ரீவ உவாச

லோபாமுத்ராபதேகஸ்த்ய ஸாவதானமனா: ச்ருணு
நாம்னாம் ஸஹஸ்ரம் யந்நோக்தம் காரணம் தத் வதாமி தே:

ரஹஸ்யமிதி மத்வாஹம் நோக்தவாம்ஸ்-தே ந சான்யதா
புனச்ச ப்ருச்சதே பக்த்யா தஸ்மாத்தத்தே வதாம் யஹம்

பூர்வ பாகம்

ப்ரூயாச்-சிஷ்யாய பக்தாய ரஹஸ்ய-மபி தேசிக:
பவதா ந ப்ரதேயம் ஸ்யா-தபக்தாய கதாசன

ந சடாய ந துஷ்டாய நாவிச்வாஸாய கர்ஹிசித்
ஸ்ரீமாத்ருபக்தியுக்தாய ஸ்ரீவித்யாராஜவேதிநே

உபாஸகாய சுத்தாய தேயம் நாமஸஹஸ்ரகம்
யாநி நாமஸஹஸ்ராணி ஸத்ய: ஸித்திப்ரதாநிவை

தந்த்ரேஷு லலிதாதேவ்யாஸ்தேஷு முக்யமிதம் முநே
ஸ்ரீவித்யைவ து மந்த்ராணாம் தத்ர காதிர்யதா பரா

புராணாம் ஸ்ரீபுரமிவ சக்தீனாம் லலிதா யதா
ஸ்ரீவித்யோபாஸகானாஞ் ச யதா தேவோ பர : சிவ:

ததா நாமஸஹஸ்ரேஷு பரமேதத் ப்ரகீர்த்திதம்
யதாஸ்ய படநாத் தேவீ ப்ரீயதே லலிதாம்பிகா

அந்யநாமஸஹஸ்ரஸ்ய பாடாந்த ப்ரீயதே ததா
ஸ்ரீமாது: ப்ரீதயே தஸ்மாதநிசம் கீர்த்தயேதிதம்

பில்வபத்ரைச்-சக்ரராஜே யோர்ச்சயேல்-லலிதாம்பிகாம்
பத்மைர்வா துலஸீ-புஷ்பை-ரேபிர்-நாம-ஸஹஸ்ரகை:

ஸத்ய: ப்ரஸாதம் குருதே தஸ்ர ஸிம்ஹாஸனேச்வரீ
சக்ராதிராஜ-மப்யர்ச்ய ஜப்த்வா பஞ்சதசாக்ஷரீம்

ஜபாந்தே கீர்த்தயேந்-நித்ய மிதம் நாம-ஸஹஸ்ரகம்
ஜப-பூஜாத்-யசக்தச்சேத் படேந்-நாம-ஸஹஸ்ரகம்

ஸாங்கார்ச்சனே ஸாங்க-ஜபே:யத்பலம் ததவாப்னு யாத்
உபாஸனே ஸ்துதீ-ரன்யா: படே-தப்யுதயோ ஹி ஸ:

இதம் நாமஸஹஸ்ரம் து கீர்த்தயேந் நித்யகர்மவத்
சக்ரராஜார்ச்சநம் தேவ்யா ஜபோ நாம்நாஞ் ச கீர்த்தநம்

பக்தஸ்ய க்ருத்யமேதாவத் அந்யதப்யுதயம் விது:
பக்தஸ்யாவச்யகமிதம் நாமஸாஹஸ்ரகீர்த்தநம்

தத்ர ஹேதும் ப்ரவக்ஷ்யாமி ச்ருனு த்வம் கும்பஸம்பவ
புரா ஸ்ரீலலிதாதேவீ பக்தானாம் ஹிதகாம்யயா

வாக்தேவீ வசினீமுக்யா: ஸமாஹூயேத: மப்ரவீத்
வாக்தேவதா வசிந்யாத்யா: ச்ருணுத்வம் வசநம் மம

பவத்யோ மத்ப்ரஸாதேந  ப்ரோல்லஸத்வாக்விபூதய:
மத்பக்தாநாம் வாக்விபூதிப்ரதாநே விநியோஜிதா:

மச்சக்ரஸ்ய ரஹஸ்யஜ்ஞா மம நாமபராயணா:
மம ஸ்தோத்ரவிதாநாய தஸ்மாதாஜ்ஞாபயாமி வ:

குருத்வ-மங்கிதம் ஸ்தோத்ரம் மம நாமஸஹஸ்ரகை:
யேந பக்தை: ஸ்துதாயா மே ஸத்ய: ப்ரீதி: பரா பவேத்

இத்யாஜ்ஞப்தாஸ் ததோதேவ்ய: ஸ்ரீதேவ்யாலலிதாம்பயா
ரஹஸ்யைர்-நாமபிர்திவ்யைச்சக்ரு: ஸ்தோத்ரமநுத்தமம்

ரஹஸ்யநாம ஸாஹஸ்ரம் இதி தத் விச்ருதம் பரம்
தத: கதாசித்ஸதஸி ஸ்தித்வா ஸிம்ஹாஸநேஷம்பிகா

ஸ்வஸேவாவஸரம் ப்ராதாத் ஸர்வேஷாம் கும்பஸம்பவ
ஸேவார்த்தமாகதாஸ் தத்ர ப்ரஹ்மாணீ ப்ரஹ்மகோடய

லக்ஷ்மீநாராயணாநாம் ச கோடய: ஸமுபாகதா:
கௌரீகோடிஸமேதானாம் ருத்ராணாமபி கோடய

மந்த்ரிணீதண்டிநீமுக்யா: ஸேவார்த்தம் யாஸ்ஸ மாகதா
சக்தயோ விவிதாகாராஸ் தாஸாம் ஸங்க்யா ந வித்யதே

திவ்யௌகா மாநவெளகாச்ச ஸித்தௌகாச்ச ஸமாகதா
தத்ர ஸ்ரீலலிதாதேவீ ஸர்வேஷாம் தர்சநம் ததௌ

தேஷுத்ருஷ்டோபவிஷ்டேஷு ஸ்வே ஸ்வே ஸ்தாநே யதாக்ரமம்
தத: ஸ்ரீலலிதாதேவீ கடாக்ஷõ÷க்ஷபசோதிதா

உத்தாய வசிநீமுக்யா பத்தாஞ்ஜலிபுடாஸ் ததா
அஸ்துவந் நாமஸாஹஸ்ரை: ஸ்வக்ருதைர் லலிதாம்பிகாம்

ச்ருத்வா ஸ்தவம் ப்ரஸந்நாபூல் லலிதா பரமேச்வரீ
தே ஸர்வே விஸ்மயம் ஜக்முர்யே தத்ர ஸதஸி ஸ்திதா

தத: ப்ரோவாச லலிதா ஸதஸ்யாந் தேவதாகணாந்
மமாஜ்ஞயைவ வாக்தேவ்யச் சக்ரு: ஸ்தோத்ரமநுத்தமம்

அங்கிதம் நாமபிர் திவ்யை: மம ப்ரீதிவிதாயகை:
தத் படத்வம் ஸதாயூயம் ஸ்தோத்ரம் மத்ப்ரீதிவ்ருத்தயே

ப்ரவர்தயத்வம் பக்தேஷு மம நாமஸஹஸ்ரகம்
இதம் நாமஸஹஸ்ரம் மே யோ பக்த: படதே ஸக்ருத்

ஸ மே ப்ரியதமோ ஜ்ஞேயஸ் தஸ்மை காமாந் ததாம்யஹம்
ஸ்ரீசக்ரே மாம் ஸமப்யர்ச்ய ஜப்த்வா பஞ்சதசாக்ஷரீம்

பச்சாந் நாமஸஹஸ்ரம் மே கீர்த்தயேந் மம துஷ்டயே
மாமர்ச்சயது வா மா வா வித்யாம் ஜபது வா ந வா

கீர்த்தயேந் நாமஸாஹஸ்ரம் இதம் மதப்ரீதயே ஸதா
மத்ப்ரீத்யா ஸகலா காமாந் லபதே நாத்ர ஸம்சய

ஸ்ரீஹயக்ரீவ உவாச;

தஸ்மாந் நாமஸஹஸ்ரம் மே கீர்த்தயத்வம் ஸதாதராத்
இதி ஸ்ரீலலிதாதேசாநீ சாஸ்தி தேவாந் ஸஹாநுகாந்

ததாஜ்ஞயா ததாரப்ப்ய ப்ரஹ்மவிஷ்ணு மஹேச்வரா
சக்தயோ மந்த்ரிணீமுக்யா இதம் நாமஸஹஸ்ரகம்

படந்தி பக்த்யா ஸததம் லலிதா பரிதுஷ்டயே
தஸ்மாதவச்யம் பக்தேந கீர்த்தநீயமிதம் முநே

ஆவச்யகத்வே ஹேதுஸ்தே மயா ப்ரோக்தோ முனீச்வர
இதானீம்-நாம-ஸாஹஸ்ரம் வக்ஷ்யாமி ச்ரத்தயா ச்ருணு

இதி ஸ்ரீ பரஹ்மாண்ட-புராணே ஸ்ரீ ஹயக்ரீவாகஸ்த்ய-ஸம்வாதே
ஸ்ரீலலிதா-ஸஹஸ்ரநாம-ஸ்தோத்ர-பூர்வபாக:
----------------------------------------------------------------------------
கமாஷீ து:க்க நிவாரண ஆஷ்டகம்

மங்கள ரூபிணி மதி அணி சூ'லினி

மன்மத பாணியலள்ளே

சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும்

ச'ங்கர ஸெந்தரியே !

கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல்

கற்பகக் காமினியே

ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி

து:க்க நிவாரணி காமாக்ஷி !! 1

கான் உருமலர் எனநக்கதிர் ஒளி காடிக்

காத்தி டவந்திடவாள்

தான் உறு தவஓளி மதி ஓளி

தாங்கியே வீசிடுவாள் !

மான் உரு வ்ழியாள் மாதவர் மொழியாள்

மாலைகள் சூடிடுவாள்

ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி

து:க்க நிவாரணி காமாஷி ! 2

சங்கரி ஸௌந்தரி சதுர்முகன் போட்ற்றிடச்

சபையினில வந்தவள்ளே

பொங்கு அரிமாவினில் பொன்னடி வைத்துப்

பொருந்திட வந்தவளே !

எம்குலம தழைத்திட எழில் வடிவுடனே

எழுந்தநல துர்க்கையளே

ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி

து:க்க நிவாரணி காமாக்ஷி ! 3

தணதண தந்தண தவில்ஓலி முழங்கிட

தண்மணி நீ வருவாய்

கணகண கங்கண கதிர் ஓளிவீசிடக்

கண்மணி நீ வருவாய் !

பணபண பம்பண பறைஓலி கூவிடப்

பண்மணி நீ வருவாய்

ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி

து:க்க நிவாரணி காமாக்ஷி ! 4

பஞ்சமி, பைரவி பர்வத புத்திரி

பஞ்சநல் பாணியள்ளே

கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக்

கொடுத்தநல் குமரியளே !

சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல்

சக்தி எனும் மாயே

ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி

து:க்க நிவாரணி காமக்ஷி 5

எண்ணியபடி நீ அருளீட வருவாய்

எம்குல தேவியளே

பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்

பல்கிட அருள்ளிடுவாய் !

கண்ணோளி அதனால் கருணையே காட்டிக்

கவலைகள் தீர்ப்பவளே

ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி

து:க்க நிவாரணி காமாஷி !! 6

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை

என்று நீ சொல்லிடுவாய்

சுடர்தரு அமுதே கருதிகள் கூறிச்

சுகமது தந்திடுவாய் !

படர்தரு இருளில் பரிதியாய் வந்து

பழவினை ஓட்டிடுவாய்

ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி

து:க்க நிவாரணி காமக்ஷி !! 7

ஜய ஜய பாலா சாமுண்டேஷ்வரி ஜய ஜய ஸ்ரீதேவி !!

ஜய ஜய துர்க்கா ஸ்ரீ பரமெஷ்வரி ஜய ஜய ஸ்ரீதேவி !!

ஜய ஜய ஜயந்தி மங்களகாளி ஜய ஜய ஸ்ரீதேவி

ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி !!  8
----------------------------------------------------------------------------
26. பாசுபத மூர்த்தி

பாரதப் போர் நடைபெற்ற சமயம் அபிமன்யூவை சயந்திரன் எனும் மன்னன் கொன்றான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன் என் மகனைக் கொன்றவனை நாளை மாலைக்குள் வீழ்த்துவேன் அல்லவெனில் உயிர் மாய்ப்பேன் என சபதம் செய்தான். அப்போது மைத்துனனும், தேரோட்டியும், தோழனுமான கண்ணன் அவனைத் தனியாக அழைத்துச் சென்று தேற்றினான். பின் அர்ச்சுனன் பசியாற கனிகளைப் பறித்து கொடுத்தான். அவனும் நான் தினமும் சிவபெருமானை பூஜிக்காமல் உண்ணமாட்டேன் என்றான். கண்ணன் இன்று என்னையே சிவனாக எண்ணி பூஜிப்பாயாக என்றான். அர்ச்சுனன்னும் அவ்வாறே பூஜித்து பசியாறினான். பின் சிறிது கண் அயர்ந்தான். அவனது கனவில் கண்ணன் வந்தான், வந்து மைத்துனா ! சிந்து மன்னனை அழிக்க நாம் கையிலை சென்று சிவனை வணங்கி சூரிய உதயத்திற்கு முன் வந்து விட வேண்டும் என்றான். இருவரும் கையிலை சென்றனர். சிவபெருமான் பார்வதியை வணங்கி தாங்கள் வந்த விவரத்தைக் கூறினர். சிவபெருமான் அருகே அர்ச்சுனன் அர்ச்சித்த மலர்கள் இருந்தன. இதனைக் கண்ட அர்ச்சுனன் மகிழ்ந்தான். பின்னர் சிவபெருமான் தடாகத்திலிருந்து எதிரியை அழிக்க வல்ல பாசுபதத்தை கொடுத்து (முஷ்டி நிலை என்பது நினைவாலும் மறவாத தன்மை) இருவரும் சிவபெருமானுக்கு நன்றி கூறி வணங்கினர்.

சிவபெருமானும் பாரதப் போரில் வெற்றி உண்டாக வாழ்த்தினார். உடன் இருவரும் சிவபெருமானை வலம் வந்து தங்கள் நினைவுலகம் வந்து சேர்ந்தனர். அர்ச்சுனன் இவ்வாறு கனவு கண்டு உடன் கண் விழித்துப் பார்க்கையில் தன்னுடைய அம்பறாத்தாணியில் புது வகையான அம்பு அதாவது பாசுபதம் இருப்பதைக் கண்ட அர்ச்சுனன் மீண்டுமொரு முறை சிவபெருமானையும், கண்ணனையும் வணங்கினான். அர்ச்சுனனும் அன்றே சிவபெருமான் கொடுத்த பாசுபதத்தினால் சயந்திரனைக் கொன்று சபதத்தை நிறைவேற்றினான். கண்ணனும், அர்ச்சுனனும் வேண்டிய வண்ணம் பாசுபதத்தை அருளிய நிலையிலுள்ள மூர்த்தமே பாசுபத மூர்த்தி யாகும். குடவாசல் அருகே உள்ளது கொள்ளம்புதூர். இங்குள்ள இறைவன் பெயர் வில்வவனநாதர், இறைவி பெயர் சௌந்தர நாயகி என்பதாகும். இத்தல இறைவனை நாள்தோறும் வணங்கினால் பிறவிப் பெருங்கடல் நிந்தி இறைவனை அடையலாம்.சிவப்பு நிற மலர் அர்ச்சனையும், மஞ்சளன்ன நைவேத்தியமும், வியாழன், செவ்வாய் கிழமைகளில் கொடுக்க எதிரி நீங்குவர், கடன் தொல்லைத் தீரும். மேலும் இங்குள்ள இறைவனை கும்பநீரால் அபிஷேகம் செய்ய பிறவிப் பயன் எய்துவர்.
----------------------------------------------------------------------------------------------------------------
274 சிவாலயங்களில் இது 18 வது ஸ்தலம் : அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்

மூலவர் : முல்லைவனநாதர்
அம்மன் : கருகாத்தநாயகி
தல விருட்சம் : முல்லை
தீர்த்தம் : பால்குளம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கருகாவூர், திருக்களாவூர்
ஊர் : திருக்கருகாவூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்,தேவாரப்பதிகம்

மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர் காய் சினத்த விடையார் கருகாவூரெம் ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே.-திருஞானசம்பந்தர்.

விழா : வைகாசி வைகாசி விசாகம் 10 நாட்கள்  பிரம்மோற்சவம் கொடி ஏற்றி தீர்த்தவாரி திருவிழா புரட்டாசி நவராத்திரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை 10 நாட்கள் திருவிழா ஆடிபூரம் பிரகாரம் வருவார் 10 ம் நாள் காவேரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். இவை தவிர நடராஜருக்கு ஆறு அபிசேகங்கள், நிறைபணி அன்னாபிசேகம், கந்தர் சஷ்டி, கார்த்திகை சோமவார நாட்கள் அனைத்து கார்த்திகை ஞாயிறுகளில் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம் மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.  
      
சிறப்பு : திருமணம்கூடிவர படிக்கு நெய் மொழுகுதல் திருமணம் கூடிவராத கன்னியர்களுக்கும் பல ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்கள் கோயிலுக்கு வந்து அம்பாள் சந்நிதியில் சிறிது நெய்யால் மொழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கின்றன. தங்கள் பிரார்த்தனை பலித்தவுடன் பக்தர்கள் தொட்டில் கட்டி துலாபாரம் செய்கின்றனர். குழந்தை பாக்கியம் பெற வைக்கும் நெய் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாதவர்களுக்கு அம்பாளின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும் நெய்யை தம்பதியினர் 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர வேண்டும். கணவனால் முடியாவிட்டாலும் மனைவி தினமும் இரவு சாப்பிட வேண்டும். நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் இதர பழக்கவழக்கங்களில் பத்தியங்களோ கட்டுப்பாடுகளோ இல்லை. இவ்வாறு செய்து வந்தால் விரைவில் கருத்தரிக்கும். சுகப்பிரசவம் அடைய வைக்கும்.

விளக்கெண்ணெய் : கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது. இது விசேசமானதாகும். இந்த விளக்கெண்ணெயை பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால் எவ்விதமான கோளாறுகளோ, பேறுகால ஆபத்துகளோ பின்விளைவுகளோ இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பமடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதரண வலி தோன்றினால் அப்போது மந்திரித்த விளக்கெண்ணெயை வயிற்றில் தடவினால் நின்று நிவாரணம் கிடைக்கும். இக்கோயிலின் அமைப்பே சோமாஸ்கந்த அமைப்பாகும். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதே. இக்கோயிலில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி : அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர் : 614 302. தஞ்சாவூர் மாவட்டம்.போன் : +91- 4374 -273 502, 273 423, 97891 60819 

கி.பி. ஏழாம் நூற்றாண்டு கோயில் இது.

பிரார்த்தனை : மகப்பேறு : திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்தும் குழந்தை வரம் இல்லாதவர்கள் இத்தலத்தில் வந்து வழிபடுவதற்கும், கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக செய்யும் பிரார்த்தனைக்கும் புகழ்பெற்றது இத்தலம். மேலும் மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள், கர்ப்பப்பை சம்பந்தமான நோயுள்ள பெண்கள், திருமணம் தடைபடும் பெண்கள் ஆகியோரும் இத்தலத்திற்கு பெருமளவில் வந்து வழிபட்டு தங்கள் பிரச்சினைகள் நீங்க பெறுகின்றனர். தீராத நோய் உடையவர்கள், குறிப்பாக சரும நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு புனுகுச் சட்டம் சாத்தி தம் நோய் நீங்கப் பெற்று வருகிறார்கள். இது இன்றளவும் நடைபெற்று வரும் கண்கூடான உண்மையாகும். இத்தலத்து முல்லைவனநாதனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.


திருமணமாக குழந்தை உண்டாக கீழ்கண்ட ஸ்லோகத்தை தினமும் கர்ப்பரட்சாம்பிகை படத்தின் முன்பு சொல்ல வேண்டும்.

ஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திர பிரிய பாமினி
விவாஹ பாக்கியம் ஆரோக்கியம்
புத்ர லாபம் சதேஹிமே
பதிம் தேஹி ஸுதம் தேஹி
சௌபாக்கியம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்ப்பரக்ஷகே
காத்யாயினி மஹாமாயே
மஹா யோகின்ய தீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவம்
பதிம் மேகுருதே நம:

சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை ஸ்லோகம் : 

ஹே சங்கர  ஸ்மரஹர ப்ரமதாதி நாதரி மன்னாத ஸாம்ப சசிசூட
அரதிரிசூலின் சம்போ சுகப்பிரசவ கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே:
சுகப்பிரசவம் ஆக இதை 108 முறை ஜெபிக்க வேண்டும்:

ஹிமவத் யுத்தரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷினி
தஸ்யா ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணீபவேது.

பெருமை : சுவாமி சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார் என்பது சிறப்பு. லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும். எனவே சுவாமியின் திருமேனியில் சுவாமிக்கு நேரடியாக அபிசேகம் செய்வது இல்லை. சுவாமியின் திருமேனியில் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. முல்லைக்காடாக இருந்த இந்த இடத்தில் சிவலிங்கத்திருமேனியை முல்லைக் கொடிகள் தழுவிப்படர்ந்திருந்தன. குழைவான இத்திருமேனியில் இன்றும் முல்லைக் கொடி படர்ந்து இருந்த வடுவை காணலாம். இத்திருத்தலம் மிகப்பழைய காலந்தொட்டு கருவுற்ற மகளிருக்கு, மிகச்சிறந்ததோர் ஆரோகியஸ்தலமாக இருந்து வந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூர்த்தியும் அம்பாளும் மகளிரின் கருச்சிதையா வண்ணம் காத்து அவர்கள் எளிதில் மகப்பேறு எய்தி திருவருள் பாலித்த வண்ணம் உள்ளனர். சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே இத்தலத்தில் சுயம்பு மூர்த்திகள். இதில் சுவாமி மட்டும் மண்ணால் ஆனது. மற்ற இரண்டும் சிலா அம்சங்கள். சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் சுப்ரமணியர் (சோமாஸ்கந்தர்) உள்ளார். இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். நவகிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியே இருக்கும். சூரியனுக்கு எதிரில் குரு. எல்லாமே அனுகிரக மூர்த்தி. வக்கிர மூர்த்திகள் கிடையாது. அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.

ஸ்தல வரலாறு : ஒரு காலத்தில் இந்த இடம் முல்லை காடாக இருந்தது. நித்துருவர் வேதிகை என்ற தம்பதியர் தங்களுக்கு குழந்தை இல்லாத குறையினால் முல்லைவனத்து நாதனையும் இறைவியையும் வணங்கி குழந்தை பேறு தரும்படி வழிபட்டனர். இதனையடுத்து வேதிகை கருவுற்றாள். வேதிகை கருவுற்றிருந்த போது கணவர் வெளியில் சென்றிருந்த சமயம் கர்ப்ப அவஸ்தை பட்டார். அச்சமயம் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிச்சை கேட்டார். மயக்கமடைந்து இருந்ததால் வேதிகையால் முனிவருக்கு பிச்சையிட முடியவில்லை. அது அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு கலைந்தது. வேதிகை அம்பாளிடம் பிரார்த்தனை செய்து முறையிட அம்பாள் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக் காப்பாற்றி குழந்தையாக கொடுத்தாள். இறைவியின் அருள் மகிமையைக் கண்டுணர்ந்த வேதிகை இத்தலத்தில் கர்ப்ப ரட்சாம்பிகையாகவே எழுந்தருளி உலகில் கருத்தருத்தவர்களையும் கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்திக்க அம்பாள் அவ்வாறே அருள் பாலித்தாள் என்று தலவரலாறு கூறுகிறது.
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்.

வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீமாந் நாரயணோ விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது
ஸ்கந்தச்ச பகவான் தேவ: ஸோமஸ்ச்சேந்த்ரோ ப்ருஹஸ்பதி:
ஸப்தர்ஷயோ நாரத்ச்ச அஸ்மான் ரக்ஷந்து ஸர்வத:

சூரிய ஒளியின் வேகம் சொல்லும் ரிக் வேதம்!

ஜய, அஜவ, விஜய, ஜிதபர்ணா, ஜிதக்ரமா, மனோஜபா, ஜிதக்ரோதா என்ற ஏழு குதிரைகள் மீது பவனி வருவான் சூரியன் என்று நமது புராண இதிகாசங்கள் கூறியதை நவீன அறிவியல் கூற்றான சூரிய ஒளி கொண்டிருக்கும் 7 வண்ணங்களான விப்ஜியார்- டன் ஒப்பிட்டும், சனியை மந்தன் என்று கூறியதை சூரியனைச் சுற்றும் கிரகங்களிலேயே அதிக காலமான 30 வருடங்களை சனி எடுத்துக் கொள்வதை ஒப்பிட்டும் அனைவரும் மகிழ்ந்து வந்துள்ளோம்.

ரிக் வேதம் கூறும் ஒளியின் வேகம்: சூரிய ஒளியின் வேகம் வினாடிக்கு ஒரு லட்சத்தி என்பத்தாறாயிரம் மைல்கள் என்பதை நவீன அறிவியல் சென்ற நூற்றாண்டில் தான் உறுதிப்படுத்தியது. ஆனால் இந்த வேகத்தை உலகின் ஆதிநூலான ரிக் வேத துதிப்பாடலில் (1:50) அப்படியே காண்கிறோம். தரணிர் விஷ்வதர்ஷோ ஜ்யோதிஷ்க்ரதசி சூர்ய விஷ்வமா பாசிரோசணம்-

இந்த மந்திரத்தின் பொருள்: வேகமாகவும் அழகாகவும் இருக்கும் ஓ சூரியனே, ஒளியை உருவாக்குபவனே, அனைத்துலகையும் பிரகாசிக்க வைப்பவனே என்பதாகும். இதற்கு புக்கர் ஸ்தாபித்த விஜயநகர சாம்ராஜ்யத்தில் அமைச்சராக இருந்த வேத விற்பன்னரான சாயனர் உரை எழுதுகையில்,  சதா ச ஸ்மர்யதே யஞ்னானாம் ஸஹஸ்ரே த்வே த்வே சதே த்வே ச யோஜனே ஏகேன நிமிஷார்தேன க்ரமமான் என்று எழுதியுள்ளார். இதன் பொருள்: சூரியன் அரை நிமிஷ நேரத்தில் 2202 யோஜனை தூரம் செல்கிறான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். நிமிஷம் என்பது இமைக்கும் பொழுது ஆகும். அதில் பாதி நேரத்தில் 2202 யோஜனை தூரத்தை ஒளி கடக்கிறது! சாந்தி பர்வத்தில் நிமிஷம் முதற்கொண்டு பல்வேறு கால அளவுகளைப் பற்றிய விளக்கம் வருகிறது. இதன்படி கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு நிமிஷம் என்பது இன்றைய கால அளவீட்டின்படி 0.2112 வினாடிகள் ஆகும். அரை நிமிஷம் என்பது 0.1056 வினாடிகள் ஆகும்.

இனி யோஜனை என்ற தூரத்தைக் குறிக்கும் அளவு பற்றி விஷ்ணு புராணம் ஆறாவது அத்தியாயத்தில் தெளிவாக விளக்கம் தரப்படுகிறது. பரமாணுவிலிருந்து அளவுகள் ஆரம்பித்து யோஜனையில் முடிகிறது இந்த விளக்கம். இதன்படி ஒரு யோஜனை என்பது இன்றைய தூரத்தை அளக்கும் அளவீட்டின் படி 9.09 மைல்கள் ஆகும். இதை வைத்து இப்போது ஒளியின் வேகத்தைக் கணக்கிடலாம்-0.1056 வினாடியில் சூரிய ஒளி 9.09 மைல்கள் பயணப்படுகிறது. அப்படியானால் ஒரு வினாடியில் 1,89,547 மைல்கள் பயணப்படுகிறது என்று ஆகிறது! இதை விஞ்ஞானிகள் கூறும் 1,86,000 மைல்கள் என்பதுடன் ஒப்பிட்டால் வரும் சிறிது வேறுபாடானது நாம் வேத கால அளவுகளைச் சற்று மாற்றிக் கணக்கிடுவதனாலேயே. (இந்த அளவின்படி ஒரு அங்குலம் என்பது முக்கால் அங்குலமாகக் கணக்கிடப்படுகிறது)

இந்த சாயனரின் உரை 1890- ஆம் ஆண்டிலேயே மாக்ஸ்முல்லரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. சாயனரின் கி.பி. 1395- ஆம் ஆண்டில் எழுதப்பட்ட எழுத்துப் பிரதி இன்றும் இருக்கிறது. இவற்றைச் சுட்டிக் காட்டும் வேத அறிஞர் சுபாஷ் கக், இந்தக் காரணங்களால், இதை ஃப்ராடு என்று சொல்ல வழியே இல்லை என்று நிரூபிக்கிறார். வேதங்களின் முழு அர்த்தமும் தெரிய வரும்போது பொன்னான உலகம் பிறக்கும் என்று மஹரிஷி அரவிந்தர் அருளியுள்ளதை இங்கு நாம் நினைவு கூறலாம். வேத விஞ்ஞானத்தைத் துல்லியமாக அறியும் பணியில் ஏராளமான அறிஞர்கள் இன்று ஈடுபட்டு ஆய்வு முடிவுகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகின்றனர். இதைப் படித்து விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் பிரம்மிக்கின்றனர்.
சிதம்பர ரகசியம் தொடர் பகுதி : 7

பதஞ்சலியும், வியாக்ரமபாதரும் செய்த இடைவிடாத தவத்தினால் மனம் மகிழ்ந்தார் ஈசன். ஈசனுக்கு அவர்களுக்கு அருளப் பிரசன்னம் ஆனபோது அவர்கள் இறைவனின் ஆனந்தக் கூத்தைப் பார்த்து அனுபவிக்க வேண்டும் என இறைஞ்சவே அந்த ஆதிசிவனும் மனம் இரங்கினார். ஆடத் தயார் ஆனார். ஆனால் இந்தக் காட்டிலா ஆடுவது? ஆட ஒரு மண்டபம் வேண்டுமே? குறைந்த பட்சமாய் ஒரு மேடையாவது இருக்கணுமே? என்ன செய்வது என யோசித்தார்.அங்கே கோயில் கொண்டிருக்கும் காளியின் நினைவு வந்தது. அவள் வேலை என்னமோ முடிந்து விட்டது. ஆனாலும் இங்கே கோயில் கொண்டு மற்றவர்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் கோபம் தீரவில்லையோ. என்ன செய்யலாம். ஆடவேண்டுமாமே முனிவர்களுக்கு! ம்ம்ம்ம்ம் இதோ ஒரு வழி! நிருத்த சபை இல்லாமல் என்னால் ஆட முடியாதே என முனிவர்களிடம் சொல்லும் அந்த மூலப் பரம் பொருளின் முகத்தில் கள்ளப்புன்னகை. முனிவர்கள் இருவரும் தில்லை வனத்தில் வந்து அங்கே கோயில் கொண்டிருக்கும் காளியின் இடத்தில் ஆடுமாறு வேண்ட இறைவனும் வருகிறார். அப்போது ஒரு ஹூங்காரம். ஹூம் என்று கேட்கிறது. யாரது? என்கிறார் இறைவன். அன்னை மகாகாளி தன் வேலைகள் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்த களைப்பில் அங்கே குடி கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள் போலும். அவள் தன்னிலை மறந்து தான் யார் என்பதை மறந்து ஈசனைத் தடுத்தாள். யாரது அங்கே இது என்னுடைய இடம். உள்ளே நுழையாதே! என்கிறாள்.

சொல்வது யாரை என்று அவளுக்குத் தெரியாதா என்ன? கேட்டவருக்குத் தெரியாதா என்ன? அவர் நோக்கமே தனியாய் காளி உருவில் இருக்கும் அன்னையை மாற்றித் தன்னுடன் கோவில் கொள்ளச் செய்ய வேண்டும் என்பது தானே. பிரிவாற்றாமை தாங்கவில்லை போல் இருக்கிறது. ஒரு உடலில் குடி இருந்தவர்கள் தனித்தனியாய்ப் பிரிந்ததும் உலக நன்மைக்கே. இப்போது ஆடப் போவதும் உலக நன்மைக்கே. ஆனால் அதையே ஒரு நாட்டிய நாடகமாக்கிக் காட்டுகிறார்கள் இருவரும். ஏன் அதுவும் நமக்குப் பாடம் புகட்டத் தான். காளி தடுத்ததும் இறைவன் என்ன செய்வது என்பது புரியாது போல் நடிக்க காளி கேட்கிறாள் ஏன் வந்தீர் இங்கே? என புன்முறுவல் பூத்த ஐயன சொல்கிறார் ஆடவும் ஆட்டு விக்கவும் தான். ஆவ்வளவு தான். என்னைப் போல் கோபக் காரியான அந்தக் காளிக்குக் கேட்கவா வேண்டும்? கோபத்தில் குதிக்கிறாள். என்ன ஆட்டுவிப்பீரா நீர்? எங்கே என்னை ஆட்டுவியும் பார்க்கலாம். அல்லது என்னுடன் இணைந்து ஆடவாவது முடியுமா உம்மால்? இறைவனுக்கு வேண்டியதும் இது தானே. அதற்கு என்ன? இருவரும் இணைந்து ஆடலாம். போட்டி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். என்று சிரிக்கவேக் காளி கூத்தாடுகிறாள். என்னுடன் போட்டியா? எங்கே பார்க்கலாம். அவ்வளவு தான்.
ரிஷி முனிவர்கள் பார்த்திருக்கப் போட்டி ஆரம்பிக்கிறது. நடுவர்கள் அந்த முனிவர்களும், தேவர்களும் தான். இருவரும் ஆட வேண்டியது. யார் ஆடுவதை யாரால் திருப்பி ஆட முடியவில்லையோ அவர்கள் தோற்றதாய் வச்சுக்க வேண்டியது. இதான் பந்தயம். அந்த உலகையே ஆட்டுவிக்கும் இருவரும் ஆடுகிறார்கள். நடந்தது என்ன?

"வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியிலிரத்தக் களியொடு பூதம் பாடப்- பாட்டின
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடடக்-களித்
தாடுங்காளீ! சாமுண்டீகங்காளீ!
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை!"

மூலப் பரம்பொருளின் நாட்டம் அந்த
மூன்று புவியும் தன் ஆட்டம்
காலப் பெருங்கள்த்தின் மீதே-எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்.

இரண்டு பேரும் ஆடுகிறார்கள். ஆடட்டும். நாளைக்குப் பார்ப்போம் ஆட்டத்தின் முடிவை. இப்போது ஒரு விஷயம். ஆதியில் தில்லையில் இந்த முனிவர்கள் பூஜித்த மூலநாத லிங்கத் திருமேனிக்கான கோயிலும் காளி குடி கொண்டிருந்த கோயிலும் தான் நடராஜர் வரும் முன் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இந்தக் காளி இருந்த இடம் தான் தற்சமயம் "நிருத்த சபை" என அழைக்கப் படுகிறது. ஒரு காலத்தில் காளிக்குச் சொந்தமாய் இருந்த இந்த இடம் தற்சமயம் கோவிலினுள் உள்ளது.

நாளை சந்திக்கலாம்
சிதம்பர ரகசியம் பகுதி : 6

சிதம்பரம் முதலில் தில்லை வனங்கள் சூழ்ந்த காடாய் இருந்தது. பல காலத்துக்கு முன்னர் வேத காலத்திலேயே அதற்கும் முன்னே எப்போது என்று சொல்ல முடியாத தொன்மையான காலத்திலே அது தில்லைக்காடாக இருந்தது. தில்லை என்ற இந்தப் பெயர் மிகப் பழமையான ஒன்று எனப் புராணங்களின் வாயிலாகத் தெரிய வருகிறது. சரித்திர ஆராய்ச்சியாளர்களின் முடிவின் படியும் இது தில்லை வனங்கள் சூழ்ந்து இருப்பதால் தில்லை எனப் பெயர் பெற்றதாய்ச் சொல்கிறார்கள். இதற்கு நான் இன்னும் ஆதாரங்களைப் பார்க்கவில்லை. நேரம் இல்லை. ஆனால் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்வதன் படி முற்காலத்தில் உருவ வழிபாடு இல்லை எனவும் பின்னால் சாதாரண மக்களுக்கு இறை நம்பிக்கை ஊட்டும் பொருட்டு உருவ வழிபாடு ஏற்பட்ட காலத்தில் மரங்கள் சூழ்ந்த வனங்களில் ஏதாவது ஒரு மரத்தின் கீழ் தங்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் உருவத்தை அமைத்து வழிபட்டனர் என்றும் பின்னால் அந்தக்குறிப்பிட்ட மரமே அந்த ஊரின் ஸ்தல விரு்ஷமாக மாறியது என்றும் சொல்கிறார்கள். அப்படி ஏற்பட்டது தான் காஞ்சியில் மாமரம், நாகப்பழ மரம் திருவானைக்காவல், கடம்ப மரம் மதுரை, தில்லை மரம் சிதம்பரம் என்று ஏற்பட்டதாய்ச் சொல்கிறார்கள்.

மக்களின் நம்பிக்கையின் படியும் புராணங்களின் வாயிலாகவும் தில்லையில் உள்ள நடராஜர் கோயில் கடவுள் தனக்காக ஏற்படுத்திக் கொண்டது என்கிறார்கள். தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மா வால் ஏற்படுத்தப் பட்ட இந்தக் கோயிலில் உள்ள சிதம்பர ரகசியம் என்பதன் உள் அர்த்தததைத் தெரிந்து கொண்டதும் கட்டப் பட்டது என்பார்கள். இதை விஸ்வகர்மா பதஞ்சலி முனிவரிடம் இருந்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்பக் கட்டியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்தக் கோயிலில் நடராஜர் வருமுன்னேயே வியாக்ரம பாதர் ஆசிரமமும் பதஞ்சலி முனிவரின் ஆசிரமமும் இருந்து வந்ததாயும் அவர்கள் சிவனைக் குறித்துத் தவம் செய்து வந்தார்கள் என்றும் தெரிய வருகிறது. இதில் வியாக்ரமபாதரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. சிவனுக்குப் பூஜை செய்யப் பூக்கள் பறிக்கவும் மற்ற வேலைகளுக்கு உதவியாக இருக்கவும் அவர் புலிக்கையும் காலும் வேண்டிப் பெற்றுக் கொண்டதாய்ச் சொல்வார்கள். பதஞ்சலியோ என்றால் ஆதிசேஷனின் அவதாரம் ஆவார். முன் பதிவில் பார்த்தோம்.

பதஞ்சலி முனிவரும் வ்யாக்ரமபாதரும் இங்கே தவம் செய்யும் காலத்தில் சிவனின் ஆனந்த தாண்டவத்தின் காட்சியைக் காண விரும்பினார்கள். எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளும் அவர்களுக்குத் தன் ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருளினார். அப்போது அவர் தன்னுடன் காசி நகரில் இருந்து 3,000/- வேத விற்பன்னர்களை வரவழைத்தார். இந்த வேத விற்பன்னர்கள் தான் சிதம்பரம் தீட்சிதர்கள். இதைப் பின்னால் பார்ப்போம். முதன் முதல் இந்தக் கோவில் இருந்த இடத்தில் தில்லை வனங்கள் சூழ்ந்திருந்த இடத்தில் காளி தான் கோயில் கொண்டு இருந்திருக்கிறாள். பதஞ்சலி முனிவரும் வ்யாக்ரமபாதரும் மற்ற ரி்ஷி முனிவர்களும் முதலில் தானாக உருவான ஒரு சிவலிங்கத்தைத் தான் வணங்கி வழிபட்டு இருக்கிறார்கள். இவர்கள் ஆனந்தத் தாண்டவத்தைக் காணுவதற்கு முன்னால் நடந்தது இது. இவர்கள் ஆனந்தத் தாண்டவத்தைக் காண வேண்டித் தவம் செய்து இறைவன் காட்சி கொடுத்து தாண்டவம் ஆடத் தயாராக இருக்கும் வேளையில் அன்னையவள் அங்கே வந்து வழி மறித்தாள். வியாக்ரபாதர் என்பது தவறு எனவும் வ்யாக்ரமபாதர் தான் சரி எனவும் திரு ஆகிரா கூறியதன் பேரில் வ்யாக்ரமபாதர் என்றே குறிப்பிட்டு உள்ளேன். நாளை போட்டி நடனம். காண வாருங்கள். யார் ஜெயிக்கப் போறாங்க என்பது எல்லாருக்கும் தெரியும் என்றாலும் அனைவரையும் வருக வருக என அழைக்கிறேன்.

மீண்டும் நாளை சந்திக்கலாம்

புதன், 14 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் பகுதி - 5 பதஞ்சலி முனிவர் வரலாறு

இப்போ பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதி சேஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல்  கைகளைக் கூப்பிய வண்ணம்  விழுந்ததால் இவர் பெயர் பதஞ்சலி என்று ஆனதாய் ஒரு கூறுகிறது. மேலும் சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே ஆடுவதைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும் அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார். மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும் அனுசூயைக்கும் பிறந்ததாயும் இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று. இவருடைய சம காலத்தினரான புஷ்ய் மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும் பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் "திருமந்திரம்" என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான். காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால் பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும் அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண் குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசஷ்டரின் மனைவி. கோவையில் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் திருமூர்த்தி மலக்குன்றுகள் இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும் முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் தென் கைலாயம் என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார். பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும் ஒருவர்.

தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்

"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!"

சித்தர்களில் ஒருவரான போகர் 7000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால் : தன்க்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். யோகவழியைக் குறித்துச் சொல்வதால் அதிகம் விளக்கம் கொடுப்பதை விட அனுபவ ரீதியாகவே புரிந்து கொள்ள வேண்டும். அது என்னுடைய தாத்தா!
மேலே ஏறிப்பார்! ஆனால் என்னைப் பிறப்பித்தவர்
காலங்கி நாதர்! பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது பார் இதுவே சரியான வழி!
அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள்.அப்பா நீ தேடினாயே இது தான் அது! என்று. குண்டலினி யோகம் படிக்கிறவர்களுக்கும் அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும் பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார். காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடத்ததும் பிறந்தது போகர் 7000. அதில் பதஞ்சலி பற்றியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன.

நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பா்ஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பாம்பின் உடலும் மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர். மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வந்தது தான் அவருடைய எழுத்துக்கள் என்றும் அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள்.

நாளை சந்திப்போம்.