வரலக்ஷ்மி விரதக் கதை !
ஜெய மங்களா சுப மங்களா
ஜெய மங்களா சுப மங்களா
1. வரலக்ஷ்மி அம்மனுட மகிமையுள்ள கீர்த்தனங்கள்
மங்களமாகவே மகிழ்ந்து பாட
சிருங்கார கணபதியெ ஜெயமாக வந்தெனக்கு
தங்காமல் சரஸ்வதி சகாயம் வேணும் (ஜெய)
2. கைலா சந்தனிலே காட்சியுடனே இருக்கும்
கருணாகடாக்ஷரென்னும் பரமேஸ்வரர்
அவருடைய பாதத்தில் ஆனந்தமாகவே
அன்புடனே பார்வதியும் அடிபணிந்தாள் (ஜெய)
3. சொல் ப்ரியே ஈஸ்வரியே சுபகீர்த்தியுள்ளவளே
கலியிலே கல்பிச்ச விர தங்கள் தன்னில்
எந்த விரதம் அதிசயம் ஏதென நியமிச்சு
எந்தனுக்கு சொல்லுவாய் இஷ்டமாக (ஜெய)
4. உமையாளே கேளு நீ. ஒரு கதை சொல்லுகிறேன்
தரணியிலே அனேக விரதங்களுண்டு
ஆனாலும் வரலக்ஷ்மி அம்மன் விரதம் அதிசயம்
அனைவரும் ஆதரித்துக் கொள்ளவேணும் (ஜெய)
5. குண்டிலம் என்றொரு மண்டிலப் பட்டணத்தில்
சாருமதி என்ற மங்கை இருக்க
சாருமதி மங்கையை சகலரும் கொண்டாடும்
சந்தோஷ விப்ரருடைய பத்னியளாம் (ஜெய)
6. அவளுடைய மகிமை யார்தான் அறியதொரு
அருந்ததி குணசாலி அம்மன் அவளே
மாமியார் மாமனார் மாதா பிதாக்களை
குரு பூஜை பண்ணுவாள் கோபமில்லை (ஜெய)
7. பர்த்தாவின் பூஜையில் பழுதொன்றும் வாராது
பாக்யவதி சொர்ப்பனத்தில் வந்து சொன்னாள்
சிராவணமாஸத்தில் பௌர்ணமிக்குள்ளாக
சுக்ரவாரந்தனிலே சுகிர்தத்துடனே (ஜெய)
8. என்னை நீ பூஜித்து இஷ்டவரம் நான் தந்து
கஷ்டமெல்லாம் போக்கி கனவிலே
சொல்லவே வரலக்ஷ்மி சோகமெல்லாம் குளிர்ந்து
மெல்லியர் கண்முன் மறைந்து கொண்டாள் (ஜெய)
9. நல்வாக்கிய மிதுவென்று நாடெல்லாம் அறியவே
சொன்னாளே சாருமதி சுபகதைகளை சகலரும்
கொண்டாடி சந்தோஷப்பட்டுகந்து
கண்டாளே கருணா கடாட்சி யம்மனை (ஜெய)
10. உண்டு பண்ணாமலே மேதினியில் உள்ளவர்கள்
கொண்டாடி பூஜிக்கவேணும் என்று
நதியில் ஸ்னானம் பண்ணி நெற்றி குங்குமமிட்டு
பக்தியுடன் ஸூப்ர வஸ்திரம் தரித்தாள் (ஜெய)
11. நித்யமா வரலக்ஷ்மி முக்தி தரும் நாயகி
சித்தத்திலே மறைஞ்சு செல்வமாக்கும்
சித்திரம் எழுதியே சிறப்பாக கிருகந்தனில்
முத்திடித்து கோலம்போட்டு முகூர்த்தம் பார்த்து (ஜெய)
12. பத்துவித மாலையும் கட்டுடனே புஷ்பமும்
கட்டின பூப்பந்தல் கல்யாணிக்கு
ரத்னகோலம் எழுதி பஞ்சவர்ண பொடி போட்டு
ரத்ன விளக்கேற்றி இருபு றமும் வைத்தாள் (ஜெய)
13. நித்யமாமங்கையர்கள் பூஜிக்கவேணுமின்னு
பக்தியுடன் தேவியை வாருமின்னு அச்சுதன்
தேவியர்க்கு அலங்கரித்து வீதியெல்லாம்
பைங்கிளிமார் எதிர்கொண்டு பார்த்து நின்றார் (ஜெய)
14. புண்டரீ காக்ஷருடைய பூர்ணநாயகிம்மன்
தண்டின் மேலேறி சகலரும் சூழவே
மண்டலம் அதிரவே மணிமேளம் முழங்கவே
கொண்டாடி திருவீதி தன்னில் வந்தாள் (ஜெய)
15. வரலக்ஷ்மி வருகிறாள் என்று சொல்லி மங்கையர்கள்
மாணிக்க சிம்மாசனங்கள் போட்டு
கற்பூரஹாரத்தி காக்ஷியுடனே எடுத்து
கைபிடித்து கிருகந்தனிலே அழைத்து வந்தார் (ஜெய)
16. திருமஞ்சனமாடி தேன் மொழியாளுக்கு
பச்சை பசேலென்ற மஞ்சளைப் பார்த்துப்பூசி
பட்டாலே ஸரஸ்வதியை பார்த்து தலைமயிருதறி
கட்டினாள் ஒரு முடிச்சு கல்யாணிக்கு (ஜெய)
17. பீதாம்பரம் உடுத்தி பெருமை யுள்ளலக்ஷ்மிக்கு
ஆதார மாலையிட்டு அம்மன் அவளே
ஸாதூத மங்கையர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
போதுடனெ எழுந்திருக்க வேணுமின்னாள் (ஜெய)
18. பத்துவித மாலையும் கஸ்தூரி திலகத்தை காக்ஷியுடனே
இட்டு சித்தாக குங்குமம் சிறப்பாக இட்டு
விஸ்தாரமான கண்களுக்கு மை எழுதி
பக்தியுடன் சந்தனங்கள் தரித்தார் ஜெய)
19. சுட்டியோடு பட்டமும் சூரியசந்திர பிரபைகளும்
சட்டமான மூக்குத்தி சரப்பள்ளியுடன்
பொட்டு திருமாங்கல்யம் புது பவழமாலைகளும்
மட்டில்லா பூஷணங்கள் எடுத்து நிறைத்தாள் (ஜெய)
20. தண்டையோடு பொற்சிலம்பு கால்சிலம்பு பாடகம்
குண்டு மோகன மாலை கொப்புபோல
நத்து மூக்குத்தியும் நல்ல முத்து புல்லாக்கு
அம்மனுக்கு வேணுமென்று கொண்டு நிறைத்தாள் (ஜெய)
21. மல்லிகை செண்பகம் மணமுள்ள மல்லிகைமகிழம்பூ
வேர்கொழுந்து கொத்தரளி மாலைகளும் சூட மல்லிகை
சித்தாக செந்தாழை சிறுமடலை மாலை
கட்டிவைத்து மலர் சொரிந்தாள் வரலக்ஷ்மிக்கு (ஜெய)
22. கண்ணாடி கொண்டுமே காக்ஷியுள்ள மங்கையர்கள்
முன்னே நின்று காட்ட திருமுகம் தெரியவே
சொன்னபடி அலங்காரம் சுகமாக ஆச்சு
என்று சொல்லி பொன்னான வரலக்ஷ்மி புகழ்ந்து கொண்டாள் (ஜெய)
23. வெளிதனிலே நானிருந்தால் மேதியினியில் உள்ள
வர்கள் கண்பட்டால் திருஷ்டி கடுகிவருமே
கனகமயமாயிருக்கும் காந்தியுள்ள பொற்குடத்தில்
கடுகியிருத்தி வைத்து கருணை செய்யும் (ஜெய)
24. பூஜிக்கும் பெண்களெல்லாம் பக்தியுடனே மகிழ்ந்து
பொன்குடத்தில் முத்து எடுத்துபூக்கள் நிறைத்தார்
கொத்து மாஇலையுடன் தேங்காய் கொண்டாடியே
எடுத்து பிராணப்ரதிஷ்டை பண்ணினார் (ஜெய)
25. மங்கையர் கங்காஜல மெடுத்து வந்து
சிங்கார வரலக்ஷ்மி திருக்கைகளை
சம்பிரமாக பொடி பூசி சதுராகவே நிறுத்தி
அன்புடன் ராஜ உபசாரம் செய்தார் (ஜெய)
26.பேரியோடு மத்தாளம் பெரிய தொரு நாதசுரம்
தவுல் ஜால்ரா சாரஸங்கள் ஊத
அங்கவங்க தவளரஸம் அம்மனுக்கு வேணுமென்று
இன்பமாகவே பொற்குடத்தில் இருந்து கொண்டாள் (ஜெய)
27. தும்புரு நாரதர் சுப வீணை வாசிக்க
ரம்பை திலோத்தமை நாட்டியமாட
சந்ததம் பக்தர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
இந்த விரதம்போல உலகத்தில் இல்லை என்றார் (ஜெய)
28. வாத்தியாரை வரவைத்து வரிசையாய் மணை போட்டு
மகிமையுள்ள லக்ஷ்மிகதை மறவாதீர் நீர்
எந்தனுக்கு சொல்லுமென்று இஷ்டமான
மங்கையர்கள் சட்டமாக பூஜிக்க வந்திருந்தார் (ஜெய)
29. மங்கையர் சொன்னபடி மகிழ்ந்த வாத்தியார்
அன்புடனே அம்மன் சொன்ன சொப்பனத்தை
சம்பிரமமாக கல்பமாய் சகல கதை உண்டாக்கி
லக்ஷ்மிகதை சொல்லவே வந்திருந்தார் (ஜெய)
30. பூவினால் பூஜித்து பூலோக நாயகியை
அக்ஷதையால் அர்ச்சித்து ஆனந்தமாய்
பக்ஷமாய் வரலக்ஷ்மி பரதேவதை என்று
இஷ்டமான நைவெத்தியங்கள் எடுத்து நிறைந்தார் (ஜெய)
31. வடையுடனே அதிரசம் வகையான பணியாரம்
கதல ஜம்பூபலம் கனத்த தேங்காய்,
பானகம் வடைப் பருப்பு பஞ்சாமிருதம் தேனும்
இளநீரும் செங்கரும்பும் எடுத்து நிறைந்தார் (ஜெய)
32. அப்பமொடு இட்லி ஆனதொரு மோதகம்
சர்க்கரைப் பொங்கலுடன் சிறுபருப்பு பொங்கல்
கர்ச்சிக்காய் தேங்குழல் கட்டித்தயிர் சால்யான்னம்
பரிபூர்ணமாய் நிவேத்யம் செய்தாள் பாக்கிய லக்ஷ்மிக்கு (ஜெய)
33. அகில தேவர்களே நீர்வந்தது சுபமாச்சு என
சொல்லி போஜன உபசாரங்கள் செய்தார்
வந்தவர் எல்லோரும் ஆனந்தமாகவே
அந்த க்ஷணம் மேளம் அமர்த்தி கையினால் (ஜெய)
34. பந்துக்களோடே பரதேவதை சந்நிதிக்கு
வந்தாளே மங்கள ஹாரத்தி எடுக்க
பொன்னான இருபுறமும் புகழ்ந்து ஜோதிவைத்து
நன்றாக வெளுத்த திரி நனைத்துப் போட்டு (ஜெய)
35. அற்புதமான பசுவின்நெய்யை அழகு அழகாய் வார்த்து
திருவிளக்கை சேர்த்து பிடித்தார்
பொன்னான அந்த நல்ல தாம்பளம் கைபிடித்து
நன்றாகவே சிரசை வணங்கிக்கொண்டு (ஜெய)
36. கல்யாண லக்ஷ்மியைக் காண வேண்டுமென்று
சொன்னாளே மங்கள ஸ்தோத்ர கதையை
அன்னலக்ஷ்மிஅம்மன் ஆதிலக்ஷ்மி அம்மன்
பொன்னுலக்ஷ்மி அம்மன் புகழும் லக்ஷ்மி அம்மன் (ஜெய)
37. தான்யலக்ஷ்மி அம்மன் தனலக்ஷ்மி அம்மன்
சந்தான லக்ஷ்மி சகல லக்ஷ்மி
அஷ்டலக்ஷ்மி அம்மன் எல்லோரும் வந்திருந்து
கஷ்டமெல்லாம் தீர்த்து கண்டவுடனே (ஜெய)
38. பரிமள மணக்கவே பாவையர்கள் பல்லாக்கு
எடுத்து சிம்மாசனத்தில் இளைப்பாறி பின்
வெள்ளெலையும்வெடக்காயும்வெளுத்ததொரு சுண்ணாம்பும்
பல்லையொத்த பச்சக் கற்பூரம் வைத்து (ஜெய)
39. அள்ளி வெண்ணை திருடி ஆனந்தமாய் புசிக்கும்
கள்ள கிருஷ்ணன் தேவியார்க்கு கட்டி கொடுத்தாள்
மடிப்பு டனே வெற்றிலையும் மணக்க நல்ல களிப்பாக்கு
எடுத்து வெள்ளித்தட்டில் வைத்தாள் இன்பமாக (ஜெய)
40. படித்த வேதம் சொல்லும் பக்தியுள்ள ஜனங்களுக்கு
கொடுத்தாளே தாம்பூலம் வகையுடனெ
முதலாக வாத்தியாருக்கு பலகாரம் தக்ஷிணை
வரிசையாய் தாம்பூலம் வைத்துக்கொடுத்தாள் (ஜெய)
41. மட்டில்லா சந்தோஷம் மானிடருக்கு உண்டாக்க
அஷ்ட லக்ஷ்மியுடனே கிருகத்திலிருப்பாளென்று
முத்யால ஹாரத்தி வஜ்ராள ஹாரத்தி
பவழஹாரத்தி பரதேவதைக்கு (ஜெய)
42. மாணிக்க ஹாரத்தி வரலக்ஷ்மி அம்மனுக்கு வரிசையாய்
பூமிதனில் இறக்கிகொண்டு இருக்கவே
வரலக்ஷ்மி இஷ்டமாய் கிருகந்தனில்
பரிபூர்ணமாகவே இருந்து கொண்டாள் (ஜெய)
43. பட்டணத்தோட பாவையர்கள் வந்திருக்க
குணமான ஜனங்களெல்லாம் கூடித்தெருவில்
எஜமானர் முகம்பார்ப்பார் இஷ்டமாக ஸ்தோத்தரிப்பார்
உம்மைப்போல் குணமுடையவர் உலகத்திலில்லை (ஜெய)
44. சாருமதி அம்மனுக்கும் சகல குணசீலர்க்கும்
ஜய ஜய என்று சொல்லி ஜனங்களெல்லாம் சந்தோஷிக்க
வந்தவர்கள் எல்லோரும் மாளிகைக்குபோன பின்
அண்டையில் இருந்து வந்து ஜனங்கள் (ஜெய)
45. சட்டமாய் பலகாரம் தாம்பூலம்தான் தரிச்சு
லக்ஷ்மியின் சந்நிதியில் இளைப்பாறினர்
குன்றெடுத்து காத்தவருக்கும் கோபாலகிருஷ்ணனுக்கு
கோபியரை மயங்கவைத்த கோவிந்தருக்கும் (ஜெய)
46. ஈரேழு விஷ்ணுவிற்கும் எடுத்தப்பட்டம் தரிச்சவருக்கும்
எங்கள் குருநாதருக்கும் ஸ்ரீ பாலா தேவிக்கும்
கலியாண ராமருக்கும் கண்ணனான கிருஷ்ணருக்கும்
ஜெய மங்களா சுப மங்களா !
ஜெய மங்களா சுப மங்களா !
இந்தப் பாடலைத் தவறாமல் நோன்பு மறுநாள் சனிக்கிழமை சாயங்காலம், அம்மனை வழியனுப்பும்போது பாடப்படும் பாடலிது. வரலக்ஷ்மி விரதக் கதை முழுவதும் இந்தப் பாடலில் இருப்பதால், கதை படித்த பலனும் கிட்டும்.
ஓம் மகாலக்ஷ்ம்யை நமஹ !