ஆற்றல் இருந்தால் மட்டும் போதுமா?
எல்லாருக்கும், ஒரு சக்தியை, கொடுத்திருக்கிறான் இறைவன். எந்த ஓர் ஆற்றலும் இல்லாமல், யாரையும், அவன் படைக்கவில்லை. நம்மிடம் உள்ள சக்தியை, நாம் உணர வேண்டும். உணர்ந்த பின், அந்த சக்தியை நல்ல வழியில் உபயோகப்படுத்த வேண்டும். அதைவிட்டு, சுயநலமாக, நான் மட்டும் வாழ வேண்டும், மற்றவர்கள் முன்னேறக் கூடாது... என்று செயல்பட்டால், பெரும் தீங்கு விளையும் என்பதற்கு, இறைவனுடன், சலந்தரன் மோதிய கதையே உதாரணம். சலந்தரன் என்பவன், மிகுந்த சக்தி வாய்ந்தவன். அவனை எதிர்த்து நிற்க யாருமில்லை. அதற்காக, அவன் அமைதியாக இருந்துவிட வில்லை. யாருடனாவது மோதிக் கொண்டும், அவர்களை கொன்று விட வேண்டும் என்ற வெறி கொண்டவனாக இருந்தான். ஒருமுறை, சக்தியற்ற தேவர்கள், என் பேரைக்கேட்டாலே, ஓடி ஒளிகின்றனர். அதனால் தேவேந்திரனுடன் நேருக்கு நேராக மோதப் போகிறேன்... என்று, சொல்லி, தேவலோகத்தை நோக்கிப் படை எடுத்துச் சென்றான் சலந்தரன்.
சலந்தரன் வரும் தகவலறிந்து, தேவேந்திரன், கைலாய மலைக்கு சென்று மறைந்து கொண்டான். அதனால், கோபம் அதிகமான சலந்தரன், கைலாச மலைக்கு ஓடினால், விட்டு விடுவேனா... இந்திரனுக்கு ஆதரவு கொடுத்தால், அந்த சிவனையும் ஒரு கை பார்ப்பேன்... என்று, ஆணவத்தால் கூவினான். அப்போது, சிவபெருமான் ஒரு முதிய துறவி வடிவத்தில் வந்து, அப்பா, சலந்தரா... சிவபெருமானுடன், அப்புறம் சண்டை போடலாம். அதற்கு முன், நான் தரையில் போடும், இந்த வட்டத்தை எடுத்துத், தலையில் வைத்துக் கொள் பார்க்கலாம்... என்று சொல்லி, தன் காலால், தரையில் ஒரு வட்டம் வரைந்தார். சலந்தரனோ, கிழவரே, உமக்கு என் பலம் தெரியாது. இப்போது பாருங்கள்... என்று சொல்லி, தரையில் போடப்பட்டிருந்த வட்டத்தை, அப்படியே பெயர்த்து எடுத்து, தலையில் வைத்துக் கொண்டான். அது, சக்கராயுதமாக மாறி, சலந்தரனின் உடலை பிளந்து, அவனைக் கொன்றது. பின், அது சிவபெருமானின் திருக்கரத்தை அடைந்தது. இந்திரன் முதலான தேவர்கள் துயரம் நீங்கினர். படிப்போ, பதவியோ, அறிவோ, ஆற்றலோ எதுவாக இருந்தாலும், அதைக் கொண்டு, அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு, ஆணவம் கொண்டால், அது, மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கி விடும்.