திங்கள், 28 ஏப்ரல், 2014

படித்ததில் பிடித்து ஸ்ரார்த்தம் சில விதிமகள்

ஒரு வார்த்தை

நம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு வருஷமும் அவரவர்களுக்கு சரி என்று தோன்றும் வகையில் ஸ்ரார்தத்தை விடாமல் செய்து வருகிறோம். இன்னும் சிலரோ மிகவும் உத்தமமான முறையில் ஸ்ரார்தத்தை கடைபிடித்து வருகிறார்கள். இருந்தாலும், பல காரணங்களினாலும், இன்றைய விபரீதமான சிந்தனைக் குவியலின் நடுவில் நாம் சிக்கிக் கொண்டிருப்பதினாலும், ஸ்ரார்தத்தில் பல விஷயங்கள் நம்மைவிட்டு மறைந்திருக்கலாம். மறந்தும் இருக்கலாம். அவற்றை அப்பேர்பட்டவர்களுக்கு ஞாபகபடுத்தவே, இந்த தொகுப்பு.

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு
பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா
நாம் ஒரு விஷயத்தை நங்கு புரிந்து கொள்ள வேண்டும். பரலோகம் இண்டு. பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் இடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும் பிரேத நலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர். பித்ருக்களை இத்தேசித்து செய்யும் கர்மாவே ஸ்ரார்த்தம்.நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று. நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள். மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் ச்ரார்த்தம் அவ்வாறல்ல என்று எனது தகப்பனார் ப்ருஹ்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் அடிக்கடி குறிப்பிடுவார். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ச்ரார்த்தம் செய்தே ஆக வேண்டும்.
யாருக்கெல்லாம் திருப்தி?
ஸ்ரார்த்தம் செய்வதினால்:
1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.
2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.
3. ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்.
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத
நரகத்தில் இருப்பவர்களுக்கும்.
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ள்வரும்.
இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.

பித்ருக்களின் அனுக்ரஹம்
நமது பித்ருக்கள் இருந்தார்கள். செத்து விட்டார்கள். இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால், நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள். அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ஸ்ரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவ்ருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை-மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.

பித்ரு சாபம்
நாம் கடமையிலிருந்து தவறக்கூடாது. வாத்தியாரை குறை சோல்லுவதும், சாக்குபோக்குகளை தேடி கண்டுப்பிடிப்பதும் இப்போது அதிகமாகு வருகின்றது. இதைக் கைவிட வேண்டும். யாரிடம்தான் குறையில்லை. ச்ரார்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். ச்ரார்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன். இதில் சந்தேகமே வேண்டாம். குதர்கக வாதம் கூடாது. ச்ரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது. பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்க வேண்டாம். பித்ருக்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே, நமக்கு தோஷம் ஏற்படும். பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்சவிருத்தி பாதிக்கலாம்.
மந்திரங்கள் ஸ்ரார்த்தம் செய்யும்போது மந்திரங்களை சாஸ்திரிகள் அக்ஷர சுத்தத்துடனும், ஸ்வரத்துடனும் சொல்லி வைப்பது முக்கியம். அதே மாதிரி கர்த்தா கூடியமானவரையில, அப்யாசம் இல்லாவிட்டாலும், சரியாக திருப்பி சொல்ல முயற்சி செய்வதும் மிகவும் அவசியம். சிரத்தையுடன் ஸ்ரார்த்தம் செய்வதை முக்கிய கர்மாவாக வைதீக கர்மாக்களில் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரார்த்த இறுதி கட்டத்தில் சிரார்த்த பிராஹ்மண்ர்களிடம் கர்த்தா மந்திர ரூபமாக வேண்டுவது என்னத் தெரியுமா? நாங்கள் ஒருவரையும் யாசியோம். யாசிப்பவர்களுக்கு நிறைய நாங்கள் தர வேண்டும். எங்களது ஸ்ரத்தை எங்களிடமிருந்து விலகக் கூடாது. வேதமும், குலமும் எப்போதும் அறுபடாமல் பெருகட்டும். உணவு நிறைய கிடைக்க வேண்டும். அதிதிகளும் நிறைய எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவர்களிடம் கோரி ஆசி பெறுகின்றோம்.இந்த மாதிரி அர்த்த புஷ்டியுள்ள மந்திரங்களை நாம் சரியாக உச்சரிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. நினைத்துப் பாருங்கள்.

ஸ்ரார்த்த நியமம்
இரண்டாவடி ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் ஒறந்த அதே மாஅதம், திதி கூடிய தினத்தில் செய்வதே ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தம்.ஸ்ரார்த்ததில் ஸ்ரத்தை மிகமிக முக்கியம். கர்த்தா ஸ்ரார்த்த மாதம் அலல்து ஸ்ரார்த்த பக்ஷம் முழுவதும் நிபமத்துடன் இருக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் குறைந்த பக்ஷம் முன் 3 நாளாவது நிபமத்துடன் இருக்க வேண்டும். நியமம் என்றால் அந்த நாட்களில் வெளியில் சாப்பிடவதாக இருந்தால் சகோதரர், குரு, மாமா, மாமியார் வீட்டில் அல்லது மற்ற இடங்களில் சாப்பிடக் கூடாது. வபனம் [க்ஷவரம்] அப்யங்கம் [எண்ணை தேய்த்துக் குளித்தல்] ஸ்த்ரீ ஸங்கமம் முதலியவை கூடாது.

ஸ்ரார்த்தம் செய்யும் முறை
இன்றைய நவீன ஆடம்பரமான சூழ்நிலையில் நாம் புதுப்புது வழக்கங்களுக்கும் நாகரீகம் என்ற பெயரில் புதுப்புது பழக்கங்களுக்கும், பல நேரங்களில் மற்றவர்களைப் பர்த்து பார்த்து நாமும் ஆகர்ஷணமாகி, நமக்கு தேவையா என்று கேட்காமலேயே அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம். இதன் நடுவில் ஸ்ரார்த்ததிற்கு அவகாசம் பலருக்கு இருப்பதில்லை என்றாலும் மனமிருந்தால் மார்க்கம் கிடைக்கும்.
விதிப்படி, ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். வசதியும், சிரத்தையும் உள்ளவர்கள் ஸ்ரார்தத்தில் கீழ்கண்ட அம்சங்களை குறைந்தது கடைபிடிக்க வேண்டும். வசதி இருப்பது என்பது முக்கியமல்லவா? குருடனைப்பார்த்து ராஜமுழி முழிக்க வேண்டும் என்றால் எவ்வாறு சாத்தியம். வசதி இல்லாதவர்களுக்கு எந்த தோஷமும் வராது.
சாதாரண் உத்யோகத்தில் பணிபுரியும் ஒருவர் வருஷத்தில் இரண்டு ஸ்ரார்த்தம் செய்வதாக இருந்தால், குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும். இது அப்பேர்ப்பட்டவர்க்கு ச்ரமம்தான். குறைவான வருமானத்தில் வாழ்பவர் ஸ்ரார்த்ததை சுறுக்கி செய்தால் தோஷம் ஏற்படாது. எந்த வருமானமும் சரியாக இல்லாதவர்கள் ஹிரண்யமாகவும் ஸ்ரார்த்ததை செய்யலாம். [அரிசி, வாழைக்காய், தக்ஷணை மட்டும் அளிப்பது. ஆனால் வசதி இருப்பவர்கள் ஸ்ரார்தத்தை ஏனோதானோ என்று செய்தால் தோஷம் ஏற்படும். சந்தேகமில்லை.

வசதி இருப்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய அம்சங்களை கீழே பார்போம்:
1. பார்வணம் [ஹோமம்].
2. தூய்மையான, ருசியான, சூடான சமையல்.
3. ப்ராம்ஹணாளுக்கு ஆசாரியனுக்கும் வஸ்த்ரம்.
4. போஜனத்திற்குப் பிறகு ப்ராம்ஹணாளுக்கு தக்ஷிணை.
5. ஆசாரியனுக்கு [பண்ணிவைக்கும் சாஸ்திரிகளுக்கு] சம்பாவனை [ அவருக்கும் எல்லா தான பொருட்களும்].
வெள்ளியில் ஏதாவது பொருளும், வெண்பட்டும் வழங்கினால் மிகவும் விசேஷம்.வழங்கும் சாமான்கள் நல்லதகவும், தரமானதாகவும் இருத்தல் முக்கியமானது. ஏனோதானோவென்று வழங்கக் கூடாது. [உதாரண்த்திற்கு வாழைக்காய் கொடுப்பதாக இருந்தாலும் அது பெரியதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்].
வசதியும், மனோபாவமும் உணவு தயாரிக்க இயலாத நிலையிலும் ஸங்கல்பம் செய்து பூர்ண உணவிற்கு தேவையானதைவிட அதிகமான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி, வஸ்த்ரம், தக்ஷிணையுடன் தரவேண்டும் என்பதுவிதி. இந்த மாதிரி செய்ய முடியாத போது, ஹிரண்ய ஸ்ரார்த்தமாகச் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள், பசுவிற்கு புல் தரலாம். ஸ்நானம் செய்து முறைப்படி தர்ப்பணம் செய்யலாம். ஸ்ரார்த்த மந்திரங்களை ஜபிக்கலாம். அன்று முழுவதும் உபவாசமிருக்க வேண்டும். வசதி உள்ளவன் இந்த மாற்று முறைகளைச் செய்தால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். வினோதமான வாதம் ஒன்று இப்போது சிலரால் சொல்லப்பட்டு வருகின்றது. நல்ல வசதி இருப்பவர்கள் கூட வஸ்திரம் வாங்குவது எங்கள் ஆத்து பழக்கமில்லை என்று கூறுவதுதான் அது. முன்னோர்கள், பாவம் ஒரு வேளை வசதி இல்லாமல் வாங்காமல் இருக்கலாம். அதை நாம் இன்று கூறி தப்பித்துக் கொள்வது அசட்டுத்தனம் அல்லவா?டிவி,ஏசி, ஸ்கூட்டர், கார், கம்ப்யூட்டர், செல்போன் போன்ற வைகளை கூடத்தான் முன்னோர்கள் உபயோகப்படுத்தவில்லை.இவர்கள் இதையெல்லாம் எங்கள் ஆத்து பழக்கமிலை என்று விட்டு வைத்தார்களா?புதுப்புது பழக்கங்களும் வாழ்க்கை முறைகளுக்கும் தேவையா என்று யோசிக்காமலேயே மற்றவர்களைப் பார்த்து நாம் அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம். ஆசார நியமங்களுக்கும் அனுஷ்டானத்திற்கும் விதண்டாவாதம் கூடாது. கூடியமான வரயில் சாஸ்த்ரங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்று காது கொடுத்துக் கேட்பது நல்லது. அப்படி கேட்போமாகில் பிறகு பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்காது.

ஸ்த்ரீகள்
இன்னொரு விஷயத்தையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. கர்த்தாவின் மனைவியின் ஒத்துழைப்பு ஸ்ரார்த்தத்தில் மிகவும் அவசியம். இது இருந்துவிட்டால் கர்மா நன்கு நடக்குமென்பதில் சந்தேகமில்லை. கர்மா சரிவர நடைபெற இத்துழைப்பதினால் அந்த ஸ்த்ரீகளுக்கும் பல சௌபாக்கியங்கள் ஏற்படுவதோடு இஹபர நன்மைகள் எண்ணற்றவை ஏற்படும். புருஷர்களிடம் ச்ரத்தைகம்மியாக இருந்தாலும், மனைவிகள் வற்புறுத்தத்தினால் ஸ்ரார்த்தம் நடைபெருவதையும் நாம் இல்லங்களில் பார்க்கின்றோம்.மொத்ததில் எல்லா வதிக கர்மாக்களும் நன்கு நடைபெற வேண்டுமென்றால். புருஷர்கள் நினைத்தால் மட்டும் போதாது. பொம்மானாட்டிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். நமது தர்மத்தில் ஸ்திரீகளின் இடம் மகத்தானது.

புத்திரர்கள் சேர்ந்து செய்யலாமா?
பங்கு பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரிக்கப்படாஅமல் தனித்தனியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித்தனி ஸ்ரார்த்தம் தேவையில்லை. தனித்தனியே வாழ்ந்து கொண்டு ஸ்ரார்த்தத் தினத்தன்று ஒன்று சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல. மூத்தவர் பண்ணினால் அவரருகில் இருந்தால் போதும் என்பது எப்போதும் சேர்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமே. [தாயார் உயிருடனிருந்தால் அவன் இருக்குமிடத்தில் பித்ருஸ்ரார்த்தம் எல்லோரும் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்பது பெரியோர்களது
வாக்கு]. தனித்தனியே ஹோமத்துடன் ஸ்ரார்த்தம் செய்வதால், பித்ருக்களுக்கு அதிக திருப்தி. பித்ருக்கள் பல இடங்ககளிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும்.ஸ்ரார்த்ததில் பலவற்றிற்கு மாற்று உண்டு. ஆனால் ச்ரத்தைக்கு மட்டும் மாற்றம் இல்லை. தெய்வ காரியங்களை முன்பே குறிப்பிட்ட மாதிரி சில நேரங்களில் தள்ளி வைத்து, பிறகு செய்ய சட்டத்தில் இடமுண்டு. ஆனால், ஸ்ரார்த்தக் காரியங்களை தள்ளி வைக்கவோ அசிரத்தையாகச் செய்ய இடமில்லை. பூரண ஈடுபாட்டுடன் அவசரமின்றி செய்ய வேண்டும். முறைப்படி செய்ய இயலாவிடில் சக்தியுள்ள மட்டும் சிரத்தையுடன் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கின்றது. எல்லாவற்றிற்கும் பிரதிநிதி உண்டு. சிரத்தைக்கு பிரதிநிதி இல்லை.

ஸ்ரார்த்தத்தன்று சமாராதனை?
ஸ்ரார்த்த திதி அன்று நாங்கள் வருஷா வருஷம் அன்னதானத்திற்கு [அல்லது ஏதவது பாடசாலைக்கு] ஏற்பாடு செய்து மொத்தமாகப் பணம் கட்டிவிட்டோம். அதனால் ஸ்ரார்த்தம் செய்வதில்லை என்று கூறுபவர்களும் நமது கண்ணில் படத்தான் செய்கிறார்கள். இது சுத்த அபத்தம். அன்னதானம் செய்த பலன் வேண்டுமானால் தனியாகக் கிடைக்கலாம். [ஸ்ரார்த்தத்தன்று பித்ருக்களை வரித்து அல்லாமல் மற்றவர்களுக்குப் போஜனம் செய்விக்கலாமா என்பதே ஒரு கேள்விக்குறி ?] எது எப்படி இருந்தாலும், ஸ்ரார்த்தத்திற்குப் பிரதிநிதியாக அன்னதானம் ஆகாது. ஸ்ரார்த்தம் ஸ்ரார்த்தம் தான். பிரச்சனை ஏதும் இல்லாதவர்களும் வசதி உள்ளவர்களும் முறையாக ஸ்ரார்த்தத்தை அனுஷ்டித்துத்தான் ஆக வேண்டும்.

சில குறிப்புகள்
* ஸ்ரார்த்தம் நடக்கும் போதும், சமையல் செய்யும் போதும், யாரும் [ சாப்பிட வரும் பிராம்ஹணாள் உட்பட] அதிகப் பேச்சுக்களோ, வம்பு, அரசியல் போன்ற விவாதங்களில் ஈடுபடுவதோ கூடாது. சங்கீதம், பக்தி கேசட்டுகளைக் கூட ஓட விடக்கூடாது. இவற்றையெல்லாம் கேட்டால் பித்ருக்கள் திரும்பி போய்விடுவார்களாம்.

* வீட்டில் சமையல் செய்து ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். கர்த்தாவின் தர்மபத்தினி சமையல் செய்து உத்தமம். ஸ்ரார்த்த முதல் நாள் எந்த பட்க்ஷண்மும் தயார் செய்து வைத்து, ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

* சிலர் சமாராதனை சாப்பாடாக, தேங்காய் முதலியவைகளை சேர்த்து செய்வார்கள். இதுவும் சரிதான். ஏனெனில் சாப்பிடுபவர்கள் திருப்தியாக சாப்பிட இதில் வாய்ப்பு அதிகம். திருப்தியாக ப்ராம்ஹணர்க்ள சாப்பிட வேண்டுமென்பது மிக முக்கியம் அல்லவா? எங்காத்து வழக்கம் என்று முரண் பிடிக்காமல் சமையல் ருசியாக சமாராதனை ரூபத்தில் சமைத்தால் தவறில்லை. அதற்காக ஸ்ரார்த்ததில் விலக்கப்படவேண்டிய காய்கறிகளையும், பொருட்களையும் விலக்காமல் இருக்கக் கூடாது. மொத்தத்தில் சமையல் நங்கு சாப்பிடும்படியாகவும் இருக்க வேண்டும். அவரவர்கள் இல்லத்து பெரியோர்களின் ஒப்புதலோடு சமாராதனை சாப்பாடு ஏற்புபுடையதே என்பது அடியேனுடைய கருத்து.

* சமைக்கும் மற்றும் பரிமாறும் ஸ்த்ரீகள் மிகவும் மடியாகவும், மடிசார் புடவையுடன் தான் இருக்க வேண்டும். தூய்மையிலாத பந்துக்கள் ஸ்ராத்த இடத்தில் இருக்கக் கூடாது.

* சமையல் செய்து எல்லாம் ஆறி அலர்ந்து போயிருக்கக் கூடாது. சுடச்சுட ருசியாக சாப்பிடும்படி பரிமாறுவது அவசியம். தான் சந்தோஷமிக்கவனாக, ஸ்ரார்த்த ப்ராஹ்மணாளை சநோஷப்படுத்தயவாறே மெதுமெதுவாக அவர்கள் சாப்பிடுமாறு பரிமாறுவது முக்கியம். பதார்த்தங்களை அவர்கள் சமீபம்
கொண்டு சென்று இந்த அத்ருஸம் ருசியாக செய்யப்பட்டுள்ளது…..இந்த வடை சூடாக உள்ளது…..இன்னுமொன்று போட்டுக்கோங்கோ ….என்று பவ்யமாகக் கேட்டு திருப்தியாக சாப்பிடும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். [அதற்காக அவர்கள் வேண்டாம் என்ற சைகை காட்டியபோதும், அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களை ச்ரமப்படுத்தக் கூடாது].

* சமையலில் கோதுமை, உளுந்து, பயறு, எண்ணையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், இவைகளை கட்டாயம் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்க்க வேண்டும்.

* கர்த்தா, சகோதரர்கள், பெண், புத்திர பௌத்திரர்கள், தௌஹித்திரர்கள், ஸபிண்ட ஞாதிகள், பித்ரு சேஷம் சாப்பிடலாம். ஒருவன் தனது மாமனார், மாமா இவர்களுடைய பித்ரு சேஷம் சாப்பிடலாம்.

* ஸந்தியாவந்தனம் தொடர்ந்து செய்யாதவர்கள் ஸ்ரார்த்த நாள் அன்றாவது த்ரிகால ஸந்தியாவந்தனம் செய்துதான் ஆக வேண்டும்.

* சமையல் ருசியாக உள்ளதா என்று கர்த்தா சாப்பிடும் ப்ராஹ்மணர்களை வாய் தவறியும் கேட்கக் கூடாது.

* கருப்பு எள் சாதத்தில் மிகவும் அவசியமான ஒன்று ராக்ஷஸர்களை விரட்டி பித்ருக்களுக்கு திருப்திதரக் கூடியது [ எள்ளை ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து எடிக்கக் கூடாது].

* பழத்தைத் தவிர பற்றதை வெறும் கையால் பரிமாறக் கூடாது. உப்பை தனியாக பரிமாறக் கூடாது. ஸ்ராத்ததன்று காலையில் ஸ்ரார்த்தம் முடியும் வரயில் எதுவும் சாப்பிடக் கூடாது.

* அன்று மத்தியானம் போஜனமானபின் இரவில் சாப்பிடும் பழக்கம் தவறு. மிக அவசியமெனில், திரவாக சிறிது இரவு உட்கொள்ளலாம். உடல் நலம் குன்றியவர்களுக்கும் இது பொருந்தும்.

* மாத்யாஹ்னிகம் செய்து பிறகு, ஸ்ரார்த்த கர்மா ஆரம்பிக்கலாம். க்ருஸரம் கொடிப்பதாக இருந்தால், சிராத்தாங்க ஸ்நானத்தை [2-வது ஸ்நானம்] பிறகு தான் செய்ய வேண்டும். அன்று காலை நனைத்து உலர்த்திய மடி வஸ்த்ரத்தைதான் உடுத்த வேண்டும். ஸ்ரார்த்ததில் மடி மிக முக்கியம்.

* அபிச்ரவணம் சொல்பவர் கிடைகாவிட்டால், தானே இதிகாச புராணங்கள் படனமோ, ஸ்லோகங்களையோ, சூக்தாதிகளையோ, ப்ராம்ஹணாள் சாப்பிடும்போது சொல்லலாம்.

* ஸ்ரார்த்த நாளன்று கோபமும், அவசரமும் கூடாது. மணி ஓசை, கோலம் முதலுயவை கூடாது.

* ஸ்ரார்த்தம் ஆரம்பித்து, தான் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரயில் கர்த்தா, அப்ராம்ஹணர்களுடன் பேசுவதையோ, பார்ப்பதையோ தவிர்க்கவும்.

* இரும்புப் பாத்திரத்தை ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

* கடி சூத்ரம், மிக உசத்தியானது. மகிமை வாய்ந்தது. அதை நாம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். குறைந்தது ஸ்ரார்த்த கர்மா அன்றாவது கட்டிக் கொள்வது அவசியம். அவ்வாறே பஞ்சகச்சமும்.

* தினசரி செய்யும் ஆத்து பூஜையை ஸ்ரார்த்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும்.

* ஸ்ரார்த்தத்தை நம் விருப்பத்திற்குத் தள்ளிப் போடக் கூடாது. ஒரு வேளை தீட்டு, ஞாபக மறதி போன்ற காரணங்களினால் உரிய தேதியில் செய்ய முடியாமல் போய்விட்டால், அன்று உபவாசமிருந்து மறுநாள் ஸ்ரார்த்தம் செய்யலாம்.

* கர்த்தா ஸ்ரார்த்தத்தையே மறந்துவிட்டு இருந்தால், அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அடுத்து வரக்கூடிய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி, ஏகாதசி, அம்மாவாசை, இதில் ஏதாவது ஒரு திதியில் செய்ய
வேண்டும். ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.

* ஒருவேளை ஸ்ரார்த்தம் செய்பவருக்கு உடல் நலம் குன்றியோ, அல்லது தள்ளாமையோ வந்தால், பிறரை விட்டு [ மகனாக இருந்தாலும் தோஷமில்லை] ஹோமம் செய்து ஸ்ரார்த்தத்தை நடத்தலாம்.கயா ஸ்ரார்த்தமும், ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தமும்
சமீப காலமாக ஒரு கருத்து ஆங்காங்கு நிலவி வருகிறது. கயாவில் ஒரு தடவை ஸ்ரார்த்தம் செய்து விட்டால் வருஷா வருஷம் இனி ஸ்ரார்த்தம் செய்யத் தேவையில்லை என்பதே அது. இது சுத்த அபத்தம்.

சாஸ்த்திர விரோதமானது.
ஒரு சிறு உதாரணத்தின் மூலமாக இதை புரிந்து கொள்ள முரற்சி செய்வோம். ஒரு நாள் பிரமாதமான மிக ருசியான உயர்ந்தவிலையில் பலவகைகளுடன் மிகவும் காஸ்ட்லியான விருந்து [பெரிய நக்ஷத்ரஓட்டலாகவும் அது இருக்கலாம்] சாப்பிட்டு விட்டால், மறுநாள் நாம் சாப்பிடாமல் இருந்து விடுகிறோமா? கயா ஸ்ரார்த்தம் மிக உன்னதமானது. ஜன்மாவில் ஒரு தடவையாவது கயா ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கும் வருஷாவருஷம் செய்யும் ப்ரத்யாப்திக ஸ்ரார்த்ததிற்கும் சம்பந்தம் கிடையாது. இது வேறு. அது வேறு.

ஔபாஸன அக்னி
ஔபாஸனம் நமக்கு நித்ய கர்மாவாகும். ஆனால் இக்காலத்தில் நாம் செய்வதில்லை. ஸ்ரார்த்தத்தன்று ஔபாஸனம் செய்கின்றோம். ஹிரண்யமாக ஸ்ரார்த்தம் செய்யும்போதும் அல்லது பெரியவரோடு மற்ற தம்பிகள் சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக செய்யும்போது, ஔபாஸனம் நம்மை விட்டு அறவே விலகிவிட வய்ப்பிருக்கின்றது. கிருஹஸ்தனுக்கு அடையாளமான ஔபாஸனம் விலகி விடாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? ஸ்ரார்தம் பார்வணமாகத்தான் [ஹோமத்துடன்] செய்ய வேண்டும். [பிரம்மச்சாரி கர்த்தாவாக இருந்தால் ஔபாஸனத்திற்கு படிலாக ஸமிதாதானம் சொல்லப்பட்டுள்ளது].

நம்பிக்கை
அவரவர்கள் அவரவர் சூத்திரப்படி ஸ்ரார்த்தம் செய்வதுதான் முறை]. ஒரு வேளை குறிப்பிட்ட சூத்திரம் பண்ணிவைக்க ஆசாரியன் கிடைக்காத பட்சத்தில் எந்த சூத்திர வாத்தியார் கிடைப்பாரோ அந்த சூத்தியப் படியாவது ஸ்ரார்த்தம் செய்யலாம். கர்மாவை விடக்கூடாது. அதே மாதிரி சாஸ்திரிகளை குறை சொல்லவும் தேவையில்லை. அவரவர்கள் கர்மா அவரவர்களுடையது. நமது ச்ரத்தையும், பார்வையும் தான் முக்கியம். அதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வெண்டும்.

சம்பாவனை
ஸ்ரார்த்ததில் இப்பொழுதெல்லாம் இன்னொரு விஷயமும் பிரச்சனையாகி வருகின்றதை நாம் சில இடங்களில் பார்க்கின்றோம். அது சம்பாவனை விஷயத்தில். எங்கள் அப்பா அப்போதெல்லாம் இவ்வளவுதான் கொடுப்பார் என்ற ஆர்க்யுமெண்ட். சிறிது யோசித்தாலும் நமக்கே புடியும். இது எவ்வளவு அபத்தமென்று. சிலர் குறிப்பிடுகின்ற அந்த காலத்தின் ஒரு ரூபாய் என்பது இன்று கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சமமல்லவா? அதனால் இப்படியெல்லாம் வாதிடாமல் தன்னால் முடிந்ததை திருப்தியாக சம்மாவனை அளிப்பது உசிதம். சாஸ்திரிகளை தேவதாஸ்வரூபமாக நினைப்பதுதான் நமது பாரம்பரியம்.

சாப்பிடும் ப்ராம்ஹணாள்
எக்காரணம் கொண்டும் வரிக்கப்பட்ட பிராம்ஹணாளை அவமானப்படுத்தும் எண்ணமே நமக்கு
வரக்கூடாது. நாம் எல்லோருமே ப்ராம்மணார்த்தம் சாப்பிட வேண்டிய குலத்தில் பிறந்தவர்கள்தானே!
நம் முன்னோர்களும் ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருநவர்கள்தானே! ஆனால் இன்று நஸ்ம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடத் தயார்? நம்மால் முடியாதல்லவா? அப்படி இருக்கும்போது மற்றவர்களை குறைகூறுவதில் நமக்கு என்ன யோக்யதை இருக்கு? ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களும் ஒரு வகையில் பொது சேவை செய்பவர்கள்தான். அவர்கள் இல்லாவிடில் கர்மா எப்படி நடக்கும் நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.

வைதீகம்
வைதீகத்தில் நம்பிக்கை வளர வேண்டும். அதற்கு வைதீகாளிடம் நம்பிக்கையும், மரியாதையும் வைப்பதுதான் ஒரே வழி. வைதீக தர்மத்தை அனுஷ்டிப்பது நமது கடமையாக் இருப்பதால் மிக
முக்கியமான மந்திரங்களையாவது. நாம் ஒவ்வொருவரும் அத்யயனம் செய்ய வேண்டும்.
கேசட்டுகளை நம்பக் கூடாது. ஏனெனில் அது நம்மைத் திருத்தாது. மேலும் கேசட்டுக்களைக் கேட்கும்போது, நம்மை அறியாமலே நமக்கு ஒரு திருப்தி மாயை ஏற்பைடு விடுகின்றது. நாம் வாயை திறந்து சொன்னால்தான் பலன் கிடைக்கும். ஒரு நாளும் ஸந்தியாவந்தனம் செய்யாமல் இருக்க வேண்டாம். குறிப்பாக ஸந்தியாவந்தனத்தில் வரும் ப்ராணாயாமம், சூரிய த்யானம், தர்ப்பணம், காயத்ரி ஜபம் போன்றவைகளை கவனமாக செய்யப் பழகுவது நல்லது.
கூடியமானவரை ஆசார நியமங்களை நாம் கடைபிடித்தால் நமக்கு ச்ரேயஸ் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்ரார்த்தம்.

பெரியவா, இந்த காலத்திலேயும் இந்த திதி, ஸ்ரார்த்தம் இதெல்லாம் சரியா வருமா? – என்றார் அன்பர்.

ஒன் புள்ளே வெளியூர்ல ஹாஸ்டல் ல தங்கி படிக்கிறானே, அவனுக்கு மாசாமாசம் அரிசி, மளிகை எல்லாம் நீ கொண்டுபோய் கொடுத்துட்டு வரியோ? என்றது ‘அது’.இல்லே பெரியவா.

அப்போ, நேரா போய், பணத்தை கொடுத்துட்டு வந்திடுவியோ?

இல்லே பெரியவா, இப்போ மணி ஆர்டர் ன்னு ஒன்னு வந்திருக்கே அதிலே அனுப்பிச்சிடுவேன்.

ஓ, அப்டியா, அப்டினா என்ன?

அதுக்கு போஸ்ட் ஆபிஸ் ல ஒரு பாரம் கொஞ்சம் காசு கொடுத்து வாங்கி, விவரங்கள் எல்லாம் பூர்த்தி பண்ணி, கொஞ்சம் கமிஷனோட கொடுத்தா, எம் புள்ளை படிக்கிற ஹாஸ்டல் ல அவாளே கொண்டு கொடுத்திடுவா.

ஒ, அப்டி எல்லாம் வந்துடுத்தா என்ன? எப்படி? நீ கொடுக்கற அதே ரூபா நோட்டை அவா அங்கே கொண்டு கொடுப்பாளா என்ன?

இதெல்லாம் இன்னும் தெரியாமல் இருக்காளே பெரியவா என்று நினைத்து தொடர்ந்தார் அவ்வன்பர்.

இல்லே பெரியவா, நாம்ப என்ன இங்கே கொடுக்கறமோ, அதே மதிப்புக்கு பணம் அங்கே கொடுப்பா.

சில சமயம் 100 ரூபாயா 5 கொடுப்பேன், சில சமயம் 50 ரூபாயா 10 கொடுப்பேன். அங்கே 500 ரூபா கொடுத்திடுவா.

அப்டியா? ஏண்டா? ஒரு போஸ்ட் ஆபிஸ்ல, முகம் தெரியாத ஒத்தர் கிட்ட நம்பிக்கை வெச்சு ஒரு பாரம் பூர்த்தி பண்ணி நீ கொடுக்கற பணம், தூர தேசத்திலே இருக்கற ஒன் புள்ளை கிட்ட போறதே,

அதே மாதிரி, விச்வே தேவன் உள்பட்ட அதிகாரிகள் வழியா நம் ரிஷிகள் வகுத்து கொடுத்த மந்திரங்கள் மூலமா நாம்ப ஸ்ரத்தையா கொடுக்கற இந்த வஸ்துக்களும் ஏன் பித்ரு லோகத்திலே இருக்கற உன் பித்ருக்களுக்கு போக கூடாது?

நிச்சயமா போகும்டா, ஸ்ரத்தையா பண்றது தான் ஸ்ரார்த்தம்.

நம்பிக்கை, நம்பிக்கை தாண்டா பிரதானம்.

ஒங்க பித்ருக்கள் ஆசிர்வாதம், க்ஷேமமா இருப்பே நீ என்று விடை கொடுத்தது அந்த புனிதம்.
 
1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்............
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)
இது மனஸை நெகிழவைக்கும் பேரருள் மஹா பெரியவா...

பெரியவா சாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட, இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ ஆறுதலோ சொல்லுவது வழக்கம். ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார். எனவே சிப்பந்திகள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது…….

“நான் பெரியவாளை தர்சனம் பண்ணனும்” குரல் கேட்டு யாரென்று பார்த்தால், ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.

“இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது……..சாப்டுட்டு ஒரு பக்கமா இங்கியே படுத்துக்கோ…. விடிர் கார்தல தர்சனம் பண்ணு” பாரிஷதர் சொன்னார். இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன் வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாது. சிறுவன் விடுவதாயில்லை.

“எனக்கு இப்போ பசிக்கலை…பெரியவாளை மட்டும் எப்பிடியாவது தர்சனம் பண்ணனும் அண்ணா…” என்று சொல்லிவிட்டு, மிகவும் களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். மறுநாள் காலை பெரியவா சிறுவனை தன்னிடம் அழைத்தார்.

“ஏம்பா….எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு? எங்கேயிருக்கா?……..” ஸ்ரீ மாதாவின் குரலை அந்த கன்று இனம் கண்டுகொண்டது. கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன் சொன்னான்……….

“பெரியவா…..நான் மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல படிச்சிண்டிருக்கேன்..எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும் வெளியூர்ல இருந்தா. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார். அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா…பாவம்! அப்புறம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல சமையல் வேலை பண்ணிண்டு இருந்தா…..[சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்]
…….திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா……..” இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.

“……அப்பா அம்மா ரெண்டுபேரையுமே என்னால கடைசி வரைக்கும் பாக்க முடியலை பெரியவா. அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது. நேக்கு இன்னும் பூணூல் போடலை..ங்கறதால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா…எனக்கு ரொம்ப அழுகையா வருது பெரியவா…..இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, “ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ!” ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்……பெரியவா. நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என் அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணனும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு நேக்கும் ரொம்ப ஆசையாத்தான் இருக்கும் பெரியவா. ஆனா, நானே சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனே! அதான்…..ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்…..” அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான். அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே வரவழைத்திருக்கிறார்!

“சரி. கொழந்தே! நீ கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?”

“சரி” என்று சந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை. நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள். அவர்கள் கிளம்பும்போது, எதேச்சையாக அந்த பையன் அந்தப் பக்கம் வர, பெரியவா அவனிடம் ” சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவா போய்ட்டாளான்னு பாரு! போகலைனா, நான் கூப்டேன்னு சொல்லு”……….அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?

அவர்கள் கிளம்பவில்லை. ஒவ்வொருவராக பெரியவா முன்னால் வர வர, “நீ இல்லை, நீ இல்லை” என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். கடைசியாக வந்தவரைப் பார்த்ததும் பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு. “ம்ம்ம்ம்..இவரைத்தான் கூப்ட்டேன். இந்தாடா! கொழந்தே! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு” என்று சொன்னார். பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாசம்!

“பெரியவா……..என்னோட அக்கா பம்பாய்ல இருக்கா.அவாத்துலதான் இந்த பையனோட அம்மா சமையல் வேலை பாத்துண்டு இருந்தா. அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா…….” என்று மனஸார ஒப்புக்கொண்டார்.

“ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு. இந்த கொழந்தை பெத்தவாளை பறிகுடுத்துட்டு தவிக்கறான்…..இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போய், அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு! மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை. அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவன் கையால பண்ண வை. ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு நீதான் எல்லாம் பண்ணனும். என்ன செய்வியா?”

அதிகாரிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! பிரமிப்போ அதை விட பன்மடங்கு ! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.

அக்ஷணமே பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் சொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார். பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கிறது.
 
 
பெரியவா தன்னைப்பற்றி நகைச்சுவையா சொன்னதும்,ரா கணபதியின் சாதுர்யமான பதிலும்….

மஹா பெரியவா

ஒரு நாள் ரா. கணபதி [தெய்வத்தின் குரல் என்ற நூலில் பெரியவா
சொன்ன விஷயங்களைத் தொகுத்து அளித்தவர்} என்பவரிடம்,

“என்னை ஏன் எல்லாரும்” பெரியாவா”ன்னு சொல்றா?
எனக்கு ப் பெரிய வாயா இருக்கு?
இல்லைனா, வரவாகிட்டே ஓயாமல் பேசறேனே…அதனால்
ஓட்டைவாய் என்று இப்படிப் பேர் வெச்சுட்டாளா?”

என்று கேட்டாராம்.

அதற்கு கணபதி,
“ஆமாம்…இருப்பதிலேயே மகாவாக்கியத்தை உபதேசிக்கும் வாய்
பெரியவாளுக்கு இல்லையா…அதனால் “பெரிய வாய்”என்றார்.

“சிலர் ‘பெரியவாள்’னு சொல்றாளே! அதுக்கு அர்த்தம் என்ன?
வாள் போல அறுக்கிறேன்,ஃபோர் அடிக்கிறேன் என்பதா?”
என்று கேட்டாராம்.

“ஆமாம் நீங்க பெரியவாள்தான். இந்த வாள்,தங்களிடம் வரும்
பக்தர்களின் காமம்,குரோதம்,கோபம்,மோகம்,மதம்,மாச்சரியம்
என்ற எல்லாக் குற்றங்களையும்,’அறுத்துத் தள்ளுகிறதே.
அதான் “பெரிய வாள்” என்கிறார்கள்!” என்றார் கணபதி.
 
 
ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள்.  
 
அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”

“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.

“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!

பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.

“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”

“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”

என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!

“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.

“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”

“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?

பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.

பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….

“என்னது இது?”

“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”

“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”

“குடுத்துட்டோம். பெரியவா”

“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.“குடுத்தாச்சு. பெரியவா……”

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”ருத்ர முகம்!

“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.

ஆம். தவறுதானே?

“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.

“நீ எங்கே குடியிருக்கே?”

“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”

“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”

“அங்க சுப்புராமன் இருக்கார்……”

பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!

“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”இல்லை……….”

“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு” “ஆமா பெரியவா நல்ல நாள்தான்”

“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ” பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.

பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.

இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.

தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.
 
சமணர்களின் கொடுமையும், திருநாவுக்கரசரின் பெருமையும்:-
*
திருநாவுக்கரசர், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு சைவ சமயம் சார்ந்ததைக் கேள்வியுற்ற சமணர்கள், மன்னனும் இந்நிகழ்வால் சைவ சமயத்துக்கு மாறக் கூடும் என அஞ்சினர். மன்னனிடம் அப்பர் அடிகளைப் பற்றி தவறாகத் திரித்து உரைத்து, அடிகளைத் தண்டிக்கும் பொருட்டு அழைத்து வரச் செய்தனர். அன்பே வடிவான அடிகளும் அவர்களுக்கு இரங்கி, உடன் சென்றருளினார்.
*
பெருந்தீ கொழுந்து விட்டு எரியும் அறையுள் அப்பர் அடிகளை அடைத்து, 7 நாட்கள் வெளியில் நின்று காவல் புரிந்தனர். திருநாவுக்கரசர், இறைவனின் திருவுருவை மனதில் இருத்தி, 'மாசில் வீணையும் மாலை மதியமும்' என்னும் தேவாரம் பாடி அருளி, இனிது வீற்றிருந்தார். 7 நாட்களுக்குப் பின்னும் பொலிவுடன் அடிகள் வீற்றிருப்பதைக் கண்ணுற்ற சமணர்கள் பெரிதும் கலக்கமுற்றனர்.
*
பின்னர் அப்பர் அடிகளை, விடம் கலந்த நீரைப் பருகச் செய்தனர். விடம் உண்ட நீலகண்டனின் அடியவருக்கு, விடமும் அமிர்தமாக மாற முன்னிலும் பொலிவுடன் விளங்கினார் அடிகள். அறிவிழந்த மன்னனும் பொல்லாச் சமணர் சொல் கேட்டு, அடிகளை மண்ணில் திருக்கழுத்து வரை புதைத்து, அடிகளின் தலையை இடரும் பொருட்டு, பட்டத்து யானையை அழைத்து வர ஆணையிட்டான்.
*
அடிகள் 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை' என்னும் தேவாரம் பாடி அருள, யானை அடிகளை வலம் வந்து வணங்கிச் சென்றது. வஞ்சகர்கள் அத்துடன் நில்லாது இறுதி முயற்சியாக, அடிகளைக் கல்லுடன் பிணைத்துக் கட்டி ஆற்றில் மூழ்கச் செய்து, மகிழ்வுடன் சென்றனர். அப்பர் அடிகள் 'சொற்றுணை வேதியன்' என்னும் தேவாரம் பாடி அருள, கற்பாறை தோனியாக மாறி மிதந்து, அடிகளைக் கரை சேர்த்தது.
*
உண்மை நெறியுணர்ந்த பல்லவ மன்னன் அடிகளை வணங்கி, மன்னிப்பு வேண்டி நின்றான். கருணையே உருவான அப்பரடிகளும் அரசனின் பிழை பொறுத்து, ஆசிர்வதித்து அருளினார். சைவ சமயம் சார்ந்த பல்லவ மன்னன், அனைத்து சமணப் பள்ளிகளையும் இடித்து, குணபரவீச்சுரம் என்னும் சிவாலயம் புதுக்கினான்.
*
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடி அருளிய சிறப்புப் பொருந்திய இத்தேவாரப் பதிகங்களை அனுதினமும் பாராயணம் செய்வதால், பெரும் துன்பங்களில் இருந்தும் எளிதில் விடுபெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.






இறைவனால் பட்டம் சூட்டப் பெற்ற திருநாவுக்கரசர் (இன்று சித்திரை சதயம் (25/4/2014). அப்பர் சுவாமிகள் திருப்புகலூரில் முக்தி அடைந்த நன்னாள்):
*
திருநாவுக்கரசரின் அவதாரத் தலம் 'திருவாய்மூர்'.
இயற்பெயர் 'மருள் நீக்கியார்'. இவரின் தமக்கையான 'திலகவதியார்', சீரிய சிவத்தொண்டு புரிந்து வரும் இயல்பினர். மருள் நீக்கியார், இளமைக் காலத்தில் இறைவன் அருளாமையினால், தமக்கையாரையும் பிரிந்து, உய்யும் வழி அறியாது, சமண மதம் சேர்ந்து சமணர்களுள் பெரும் மதிப்பைப் பெற்றார்.
*
திலகவதியார் 'திருவதிகை' தலம் சென்று உழவாரப் பணி புரிந்து வந்தார். அனுதினமும் திருவதிகைப் பெருமானிடம், மருள் நீக்கியாரை புறச்சமயம் விட்டு நீக்கி அருளுமாறு வேண்டுவார். சிவபெருமான் திலகவதியார் கனவில் தோன்றி 'உன் சகோதரன் எம்மை அடைய முன்னமே தவம் செய்தவன். யாம் சூலை நோய் தந்து அவனை ஆட்கொள்வோம்' என்று அருளிச் செய்தார்.
*
சமணப் பள்ளியில் மருள்நீக்கியார், காரணம் இன்றிச் சூலைநோய் தாக்கிய தன்மையால் அலறிச் செய்வது அறியாது வீழ்ந்தார். மெய்நெறி உணரா சமணர்களின் அனைத்து மருத்துவ முறைகளும் பயனற்றுப் போயின. துடித்துப் பதறிய மருள் நீக்கியார் சமணக் கோலம் துறந்து, திருவதிகைத் தலத்துக்கு விரைந்து, திலகவதியாரின் பாதங்களில் பணிந்து பிணி போக்கி அருளுமாறு அழுதுத் தொழுதார்.
*
திலகவதியார், சகோதரர் உய்யும் பொருட்டு திருநீற்றை உடலெங்கும் பூசி, அவரைத் திருக்கோயிலினுள் அழைத்துச் சென்றார். திருவருள் தூண்ட மருள் நீக்கியார் 'கூற்றாயினவாறு' என்று தொடங்கும் 10 பாடல்கள் கொண்ட தேவாரம் பாடி அருளினார். சூலைநோயின் வலியை விளக்கி, அதை போக்கி அருளுமாறு மன்னிப்பு வேண்டும் ஒவ்வொரு பாடலும், கல்லையும் உருக்கும் தன்மை கொண்டவை.
*
இறைவன் மிக மகிழ்ந்து அடியவரின் சூலை நோயைப் போக்கி, 'இனியக் கவி பாடிய உன் நாவன்மையால் இன்று முதல் நாவுக்கரசர் என்று அழைக்கப் படுவாய்' என்று அசரீரியாய்த் திருவாய் மலர்ந்து அருளினார். இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தொண்டனாகவும் பாவித்து வழிபாடு செய்யும் 'தாச மார்கத்தின்' வழி நின்றவர் திருநாவுக்கரசர்.
*
தலங்கள் தோறும் சென்று தேனினும் இனிய தேவாரம் பாடியருளி, உழவாரத் தொண்டும் புரிந்துத் தொண்டின் இலக்கணமாகத் திகழ்ந்தார்.


பத்ராசலம் ஸ்ரீசீதாராமர் திருக்கோயிலும் பக்த ராமதாசரும் (கிளியை கூண்டில் அடைத்ததால் 12 வருட சிறை தண்டனை):

பத்ராசலம் என்னும் பிரசித்தி பெற்ற தலம் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. தென் அயோத்தி என்று அழைக்கப் பெறும் சிறப்புப் பொருந்தியது. தலத்தின் மூலவரான ஸ்ரீராமசந்திர மூர்த்தி அன்னை சீதையை மடியில் அமர்த்திய நிலையில், இலக்குவனும் உடன் இருக்க, அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீராமதாசர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருளாளர். 'கோல்கொண்டா' பகுதியின் மன்னன் 'தானேஷாவிடம்' பணிபுரிந்து வந்தார். மன்னனின் ஆணையால் பத்ராசலப் பகுதியின் தாசில்தாராக பொறுப்பேற்றார். அங்கு சிறிய ஆலயத்தில் ஸ்ரீசீதாராமர் எழுந்தருளி இருப்பதைக் கண்ணுற்று வருந்தினார். பெருமானுக்கு பெரியதொரு ஆலயம் புதுக்க சங்கல்பம் பூண்டார்.

தன் செல்வமனைத்தும் திருப்பணிக்கு அர்ப்பணித்தும், நிதி போதாத நிலை உருவாக, அத்தல மக்கள் உதவ முன்வந்தனர். தங்கள் வரிப் பணத்திலிருந்து வேண்டிய நிதியை தற்சமயம் எடுத்துக் கொள்ளுமாறும், அவ்வருட விளைச்சலுக்குப் பின் தங்கள் பங்கை கொடுத்து விடுவதாகவும் வாக்களிக்க, திருப்பணியும் இனிதே நடந்தேறியது.

மன்னன் செய்தி அறிந்து வெகுண்டு, ஸ்ரீராமதாசரை கைது செய்து, சித்திரவதை செய்ய ஆணையிட்டான். சிறையில் அனுதினமும் கீர்த்தனைகள் புனைந்து, பெருமானிடம் தன்னைக் காத்தருளுமாறு கண்ணீர் மல்க முறையிடுவார் ஸ்ரீராமதாசர். 12 ஆண்டுகள் இதே முறையில் கழிய, ஸ்ரீராமர் இலக்குவனுடன் இரு வீரர்களின் உருக் கொண்டு அரண்மனையில் தோன்றி அருளினார்.
*
மன்னனிடம், ஸ்ரீராமதாசர் எடுத்த செல்வத்தை வட்டியுடன் செலுத்தி, ரசீதும் பெற்று மறைந்தார். இன்றும் பெருமான் செலுத்திய பொன் நாணயங்களை திருக்கோயிலில் தரிசிக்கலாம். பின்னர் ஸ்ரீராமர் சிறையில் ராமதாசருக்கு காட்சி அளித்து, ரசீதையும் சேர்ப்பித்தார். ராமதாசர் விழி நீர் மல்க, பன்முறை பெருமானைப் பணிந்து போற்றினார்.
*
'12 வருடங்களாக மனமுருக அழைத்தும், தன்னைக் காத்தருள வராததன் காரணம் யாது?' என பணிவுடன் வினவினார். 'முற்பிறவியில் ஒரு கிளியை கூண்டில் பல காலம் அடைத்து வைத்த பாவத்தால், இப்பிறவியில் ஸ்ரீராமதாசர் 12 வருடங்கள் சிறையில் துன்புறும் நிலை எய்தியது' என்று விளக்கியருளினார் ஸ்ரீராமர். ராமதாசர் சிறையிருந்த கோல்கொண்டா கோட்டையை இன்றும் தரிசிக்கலாம்.
*
இந்நிகழ்வில் இருந்து ராம பக்தியை மட்டும் அல்லாது, அகிம்சையையும் பாடமாகக் கற்போம். பரம பக்தரான ஸ்ரீராமதாசரையும் கர்மவினை விடவில்லை. உயிரினங்களை அடைத்து வைப்பது கொடிய பாவம். எனில், உயிரினங்களை வதைத்து உட்கொள்வது எவ்வளவு பாவம் என்று உணர்தல் மிகவும் அவசியம். இறைவன், பக்தியோடு அகிம்சையையும் நிச்சயம் எதிர்பார்க்கிறான் (ஸ்ரீராமஜெயம்).
 
 


படித்ததில் படித்து

ஒரு நாள் ஏகாந்தமாகவும் விஸ்ராந்தியாகவும் இருக்கும் பொழுது என்னுடன் பேசியது:


ஸ்ரீ பெரியவா:ஏண்டா, பெரியவான்னா என்ன?

நான்:(பதில் சொல்ல முடியாமல் முழித்தேன்)
ஸ்ரீ பெரியவா: தெரியலயா………
பெ ரி ய வா …..ன்னா என்ன?
நான்: (உண்மையாகவே ஒன்றும் புரியாமல் இருந்தேன்)
பெரியவா :ரி ………..ரி-ன்னா ரிக் வேதம்
ய …………ய -ன்னா யஜுர் வேதம்
இப்ப வார்த்த முடியப் போறது ங்கற மாதிரி கடைசி வேதத்தின்……அதாவது
அதர்வ வேதத்தின் கடைசி எழுத்தான ‘வ’. இதை சேக்கறதுக்கு முன்னாடி சாம வேதத்துக்கு உயிர் நாடி கானம். அ…..அ…..அ… ன்னு நிறைய வரும். அது சேந்துண்டு இருக்கு.
அதாவது
ரி …….ய…….அ………வ.
இப்ப அ+வ = வா…….
இப்ப ரி ……ய…… வா சரியாய்டுத்தா..?ஏதோ என்னால முடிஞ்சது பெரியவாளோட வேத சம்பந்தப்படுத்திட்டேன்னு
பாக்கிறயா..?ஒரே ஒரு எழுத்து மிச்சமிருக்கே! ‘பெ’ அத என்ன பண்றது?..(ஸ்ரீ பெரியவா என்னை நிமிர்ந்து பார்த்து என் பதிலை எதிர் பார்ப்பது போல் இருந்தது. நான் ஒன்றும் புரியாமலும், தெரியாததாலும் பதில் சொல்லாமல் இருந்தேன்)
ஸ்ரீ பெரியவா: என்ன முழிக்கறே? ஒண்ணும் புரியாம, தெரியாம இருக்கறதுக்கு என்ன பெயர் தெரியுமா?
அஞ்ஞானம்னு சொல்லுவா. அந்த அஞ்ஞானமா இருக்கறவாள பாத்து பேந்த்த பேந்த்த முழிக்கறத ‘பெ’ ன்னு முழிக்கறதா சொல்லலாம் இல்லையா? அப்போ ‘பெ’ ங்கறது அஞ்ஞான வார்த்தையாயிடறது.

இப்ப எல்லாதையும் சேத்தாக்க, அஞ்ஞானத்தோட இருக்கறவாளை வேதத்தோட சம்பந்தப்படுத்தறது தான் இந்த வார்த்தைன்னு தெரியறதா?.

அஞ்ஞானிகளை யார் ரிக், யஜுர், சாம அதர்வ வேத மார்க்கத்திலே மாத்தறாளோ அவாதான் “பெரியவா“
(எனக்கு இப்போதுதான் புரிந்தது அஞ்ஞானியான என்னை வேத மார்க்கத்தைக் காட்டியவராக இவர் இருப்பதினால்தான் நாம், ஏன், எல்லோருமே “பெரியவா” என்று கூப்பிடுகிறோம்னு.
 
 
பகவான் ஸர்வவ்யாபி

பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது திரு நடராஜசாஸ்த்ரிகள் குடும்பம். அவர் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில்முகாம். பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்துரொம்ப அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச்சொல்லி, பெரியவாளை தர்சனம் பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார். ஆனால்,இவர் போய் சேருவதற்குள்
தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார்.நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்! மாலையோடுவீடு திரும்பினார். அவருடைய மனைவி”எல்லாமே பெரியவாதானே? இந்த மாலையைஅம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும்வேறவேறயா என்ன?” என்றாள்.

“இல்லே, இல்லே, அம்பாளும் பெரியவாளும் வேறவேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்! ஆமா. இதுஅவருக்கு மட்டுந்தான்!” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு, அதைபூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.

மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும்,பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம்வந்து, நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில்
தர்சனம் பண்ண வருவதாக தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும்ஒரே பரபரப்பு!
“பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம் பண்ணிக்கோங்கோ!”மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில்சொல்லிக் கொண்டேபோனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள்நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசரஅவசரமாக பூர்ணகும்பம், குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்!பெரியவாளுடைய வேகம் அப்படி இருக்கும்! குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோசாதாரணமாக நடப்பது போல் இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால்பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்தவேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்!

பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு,சற்றும் எதிர்பாராமல், “டக்”கென்று சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாகபூஜை ரூமுக்குள் போய், முன்தினம்
“பெரியவாளுக்குத்தான்!” என்று முத்ரை குத்தப்பட்டு,ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையைஅப்படி லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவதுபோல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன் தலையில் சூடிக்கொண்டார்!சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரைதாரையாக நீர் வழிய, விக்கித்து நின்றனர்!ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்! இப்படி ஒருபரமகருணையா? என்று சொல்லமுடியாத ஆனந்தம்!திக்கு முக்காடினார்கள்.

எல்லாரும்நமஸ்கரித்ததும்,விடுவிடென்றுவாசல்பக்கம்நடந்தார். சற்று நின்று திரும்பி,“எங்கே வெள்ளிக்கிண்ணம்?” என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார்.அவ்வளவுதான்! ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்!நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம்குடுக்கணும் என்று சொல்லி, ஒருபுது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார். இதோ!
அவர்கள் நேற்று பேசியதைஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல்அல்லவா’வெள்ளிக்கிண்ணம்எங்கே?’ என்று கேட்கிறார்! ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.

பகவான் ஸர்வவ்யாபி! என்பதைஅன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்!