ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?

தம்முடைய நியதிப்படி, சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கவேண்டிய காலம். சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கத் தொடர்ந்தார். அனுமன் ஓர் அறையில் கதவைத் தள்ளி நுழைந்தார். அப்போது அனுமனின் வால் மட்டும் கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டது. எனினும், அந்த வாலும் சனியின் கையில் சிக்கவில்லை. கடைசியில் சனியிடம் அனுமன் கேட்டார்: பிடிப்பது எத்தனை ஆண்டுகள்? சனி, ஏழரை ஆண்டுகள் என்றார். ஏழரை ஆண்டுகளும் இங்கேயே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பேன். உன்னால் முடிந்தால் என்னைப் பிடித்துக் கொள் என்றார் அனுமன். அவரின் பக்தியை மெச்சி, வேறு வழியில்லாமல் விட்டுவிட்டார் சனீஸ்வரன். இதற்குப் பின்தான் ஆஞ்சநேயரின் வாலை வழிபடும் வழக்கம் உருவாயிற்று. 41 நாட்கள் அனுமனின் வாலில் குங்குமம் வைத்து துளசி மாலை சாத்தி வழிபட, எல்லாவித தோஷங்களும் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
Photo
Photo
 பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமை
 
 பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு. பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால், அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி விட்டால் போதும். ஒருவர், அப்படி பூஜை செய்த போது, இல்லாத பொருளுக்கெல்லாம், அதன் பெயரைச் சொல்லி, அட்சதாம் சமர்ப்பயாமி என்று
சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார். பூஜை செய்பவர், சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.

இவர்தான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதை போதும் என்று சொல்லி இருக்கிறாரே... பூஜை முடிந்ததும், தட்சினார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி, தட்சணைக்கு பதிலாக, அட்சதையை நீட்டினாராம், பூஜை செய்தவர். என்ன இது? தட்சணை எங்கே... என்றார் சாஸ்திரிகள். அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதையே போதும் என்றீர்களே... பிடியுங்கள் அட்சதையை... என்றார்.
பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். தூபத்தில் அக்னி தேவன், தீபத்தில் சிவன், விபூதியில் மகேஸ்வரன், கண்ணாடியில் சூரியன், குடையில் சந்திரன், சாமரத்தில் மகாலட்சுமி, விசிறியில் வாயுதேவன் உள்ளனர். அதனால், இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும். நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது, துர்தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டும், என்று தான் விரும்புவர். சிலர், மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து, பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர். விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர்.

இல்லத்தரசியானவள், காலையில் எழுந்து பல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு, தலையை கோதி, வாசல் பெருக்கி, கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி, நமஸ்காரம் செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு, அதற்கு பின் தான், காபி விஷயத்தை கவனிக்க வேண்டும். அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே, மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசு வைத்தால், இதையெல்லாம் செய்யலாம்.
 
அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில்

மூலவர்:அபய ஆஞ்சநேயர்
தல விருட்சம்:அத்திமரம்
தீர்த்தம்:அனுமன் தீர்த்தம்
பழமை:1000 வருடங்களுக்கு முன்
ஊர் :ராமேஸ்வரம்
மாவட்டம்:ராமநாதபுரம்
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:புரட்டாசி சனிக்கிழமை, அனுமன் ஜெயந்தி.

தல சிறப்பு:கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார், வாலறுந்த ஆஞ்சநேயர்

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு அபய ஆஞ்சநேயர் (வாலறுந்த ஆஞ்சநேயர்) திருக்கோயில், ராமேஸ்வரம் - 623 526. ராமநாதபுரம் மாவட்டம்.
போன்:+91- 4573 - 221 093, 94432 05289.

பொது தகவல்:ஆஞ்சநேயரே இங்கு பிரதானம் என்பதால், பரிவார மூர்த்திகள் இல்லை.

பிரார்த்தனை:புத்திர பாக்கியம் கிடைக்க, பயம், மனக்குழப்பம் நீங்க, பாதுகாப்பு உண்டாக இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:ஆஞ்சநேயரை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வடை, வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:இரண்டு ஆஞ்சநேயர் தரிசனம்: இக்கோயிலில் ஆஞ்சநேயர் சன்னதி, எட்டு பட்டைகளுடன் கூடிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வாலறுந்த ஆஞ்சநேயர் என இரண்டு மூர்த்திகள் அருகருகில் காட்சி தருகின்றனர். இவ்வாறு "இரட்டை ஆஞ்சநேயர்'களை இங்கு தரிசிக்கலாம். அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே ஒரு கோடி ராமரக்ஷ' மந்திர எழுத்துக்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பு. ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது. இத்தல ஆஞ்சநேயர் பக்தர்களின் பயத்தை போக்கி காத்தருள்பவர் என்பதால், "அபய ஆஞ்சநேயர்' என்றழைக்கப்படுகிறார். வெள்ளிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அன்று தேங்காய், வெல்லம், அவல் சேர்ந்த கலவையை விசேஷ நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.

சுயம்பு ஆஞ்சநேயர்: அளவில் சிறிய கோயில் இது.ஆஞ்சநேயர் உருவாக்கிய தீர்த்தம், கோயிலுக்கு பின்புறம் உள்ளது. கோயில் முகப்பில் கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவருக்கும் வால் கிடையாது. இந்த ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.கோயில் வளாகத்தில் தலவிருட்சம் அத்தி இருக்கிறது. இம்மரத்தில் இளநீரை கட்டி, ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. வேண்டுதல் நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு, வேறு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். உக்கிரமாக இருந்து சிவலிங்கத்தை தகர்க்க முயன்றவர் என்பதால் குளிர்ச்சிப்படுத்தும்விதமாக இவ்வாறு செய்கிறார்கள். புரட்டாசி கடைசி சனிக்கிழமை, அனுமன் ஜெயந்தி, ஆனி ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் இவருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.

தல வரலாறு:இலங்கை சென்று ராவணனை வென்று, சீதையை மீட்டு வந்த ராமருக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார். அவரது பூஜைக்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயர், கைலாயம் சென்றார். அவ்வேளையில் சீதாதேவி, மணலில் ஒரு லிங்கம் பிடித்து வைத்தாள். ஆஞ்சநேயர் வர தாமதமாகவே, ராமர் மணல் லிங்கத்தை பூஜை செய்து வழிபட்டார். அதன்பின்பு வந்த ஆஞ்சநேயர், நடந்த தையறிந்து கோபம் கொண்டார். வாலால் லிங்கத்தை சுற்றி மணல் லிங்கத்தை பெயர்க்க முயன்றார். ஆனால் வால் அறுந்ததே தவிர, லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், சிவஅபச்சாரம் செய்த குற்றம் நீங்க தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டார். இந்த ஆஞ்சநேயர், இத்தலத்தில் வாலறுந்த கோலத்தில் மூலவராக காட்சி தருகிறார்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார்
Photo
Photo
Photo
அருள்மிகு அஷ்டாம்ச வரதஆஞ்சநேயர் திருக்கோயில்

மூலவர்:அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்
பழமை:500 வருடங்களுக்குள்
ஊர்:கோயம்புத்தூர்
மாவட்டம்:கோயம்புத்தூர்
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:அனுமத் ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு:இக்கோயிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில். கோயம்புத்தூர் - கோயம்புத்தூர் மாவட்டம்.போன்:+91- 94433 34624

பொது தகவல்:இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவதரிக்கிறார். இந்த கலியுகத்தில் ஆஞ்சநேயர் அர்ச்சாவதாரமாக அதாவது சிலை விடிவில் அருள்பாலித்து வருகிறார்.இங்குள்ள ஆஞ்சநேயர் எட்டுவிதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.

பிரார்த்தனை:பயம், நோய்கள் தீர, எதிரிகளை அழிக்க, மரண பயம் நீங்க, செல்வச் செழிப்புடன் திகழ, அஷ்டலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேம் செய்தும், துளசியால் அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:இத்தலத்திலுள்ள உற்சவர் ஸ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமிகளால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது.

தல வரலாறு:முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு : இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரத்தை வாரி கொடுக்கிறது. இடது கையில் கதாயுதம் இரண்டாவது சிறப்பு : மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த கதாயுதம். ஐந்து வகை ஆயுதங்களில் இது மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடியது.

மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு : மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வருகிறார். அதில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். நாம் இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு : எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது.

ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு : ஆஞ்சநேயருக்கு அவரது வால் மிகவும் சிறப்பு. ஏனெனில் இவரது வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன என்பர். அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்து விட்டால் இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும். சில கோயில்களில் இவரது முழு வாலை நாம் தரிசிக்க இயலாது. இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை. ""ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.

ஆலவாயனின் அம்சம் ஆறாவது சிறப்பு : ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் இவரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு: ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது. எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு : ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.

அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது.
 
Photo
ஞான சத்குரு ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள்

”தபோவனத்திற்கு என்னை நாடி வருபவர்களின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்ளுவேன்”.

“கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான்”.

”கலியுகத்தில் நாம சங்கீர்தத்தனமே முக்திக்கு வழி” – இது போன்று பல்வேறு அமுத மொழிகளைத் தம்மை நாடி வந்த பக்தர்களிடையே உபதேசித்து அவர்களை நல்வழிப்படுத்திய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் வரை வாழ்ந்ததாகக் கூறப்படும் இம்மகான் கபீர்தாஸ், ஷிர்டி சாயிபாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ராமலிங்க அடிகளார், சற்குரு சுவாமிகள், விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ அரவிந்தர் எனப் பல மகான்களைச் சந்தித்த பெருமைக்குரியவர்.
 

சனி, 15 பிப்ரவரி, 2014

ஸ்ரீதர ஐயாவாள்!

ஆண்டுதோறும் திருவிசநல்லூர் ஐயாவாள் இல்லக் கேணியில் இன்றும் கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம். கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் தர ஐயாவாள். இவர் தன் பதவி, சொத்துக்களைத் துறந்துவிட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்துவிட்டார். தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார். அர்த்தஜாம பூஜையும் காண்பார். சிவன்மேல் அபார பக்தி கொண்டவர். இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும். அத்தகைய ஒருநாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார்செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, காவிரியில் நீராடச்சென்றார். நீராடி இல்லம் திரும்பும்போது எதிரேவந்த வயதான ஏழை ஐயாவாளிடம், சுவாமி, ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன் என கேட்டார்.

அவர்மீது இரக்கம்கொண்ட ஐயா அவரை இல்லத்திற்கு அழைத்து வந்தபோது, சிரார்த்த சமையல் மட்டுமே தயாராக இருந்தது. பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக்கொடுத்து பசியாற்றினார். சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ணவேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள். அந்த நியதியை மீறினார் ஐயாவாள். அதனால் கோபமடைந்த அந்தணர்கள் வெளியேறி, பரிகாரம் செய்தால் தான் நாங்கள் திதி கொடுப்போம் என்றனர். ஒரேநாளில் காசியிலுள்ள கங்கையில் நீராடி விட்டுவா என்பதுதான் அவர்கள் சொன்ன பரிகாரம். ஒரேநாளில் எப்படி அவ்வளவு தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்பமுடியும்? இதை நினைத்து வருத்தத்துடன் படுத்தவர் அசதியில் உறங்க, கனவில் சிவன் காட்சி கொடுத்து, உன் இல்லக் கேணியில் நாளை கங்கையைப் பிரவேசிக்கச் செய்வேன் என உறுதியளித்து மறைந்தார்.

இக்கனவை ஐயா எல்லாரிடமும் சொன்னார். கார்த்திகை மாத அமாவாசை. ஊரே திரண்டு ஐயா வீட்டுமுன் கூடிவிட்டது. ஐயாவாள் கிணற்றடியில் நின்றபடி மனம் உருக கங்காஷ்டகம் பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்து, திருவிச நல்லூர் சாலை முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள்! அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கங்கை நீராடினார்கள். இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று, 300 ஆண்டுகளுக்குமுன் கங்கை பொங்கி வந்ததுபோல, ஐயாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலு<ம், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்!
திருமுருக கிருபானந்தவாரியார்!

சொல்லால், செயலதனால், சொற்பொழிவால், கீதத்தால்
வல்ல அணிப்பூசை மாண்பதனால் - எல்லார்க்கும்
இல்லாச் சிறப்பை இசை வாரியார் சாமி
வல்லாண்மை மேலாகு மால் - தவத்திரு சுந்தரசுவாமிகள்

1933 - ஆம் ஆண்டு. வயலூர் கோயிலின் அறங்காவலர், திருச்சியில் வசித்து வந்தார். அன்றிரவு அவரது கனவில் வயலூர் முருகன் தோன்றி, எட்டணா பெற்றுக் கொண்டாயே! அதனால், திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணி முடித்துவிடுவாயா? என்று கேட்டார். செட்டியாருக்கு எதுவும் புரியவில்லை. பயத்தால் உடல் வெலவெலத்தது. பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்தார். காலையில் வண்டியைக் கட்டிக் கொண்டு நேராக வயலூர் சென்றார். கோயிலில், அர்ச்சகர் ஜம்புநாதன் என்னும் பதினெட்டு வயது இளைஞர் இருந்தார்.

நேற்று யார் தரிசனத்துக்கு வந்து எட்டணா கொடுத்தார்? என்று கேட்டார் செட்டியார்.

காங்கேய நல்லூரிலிருந்து மல்லையதாஸ் பாகவதர் குமாரர் கிருபானந்தவாரி என்பவர் எட்டணா கொடுத்தார். வெள்ளி கவசம் சாத்தி தரிசனம் செய்து வைத்தேன். இதோ பதிவுப் புத்தகத்தில் அவருடைய விலாசம் உள்ளது என்றார் அர்ச்சகர்.

அந்த எட்டணாவை என்னிடம் கொடு என்றார் செட்டியார். மணியார்டர் கூப்பனில் ஆண்டவன் கட்டளைப்படி தாங்கள் செலுத்திய எட்டணாவை திரும்ப அனுப்பியுள்ளேன். பெற்றுக்கொள்ளுங்கள் என்று எழுதி வாரியார் முகவரிக்கு மணியார்டர் செய்து விட்டார். திருப்பணி செய்யும் பொறுப்பையே ஏற்று முடிக்கத் தக்கவரிடம் இந்த எட்டணாவை வாங்கிக்கொண்டு திருப்தி அடையலாமா? என்ற குறிப்பை வயலூர் முருகன் தெரிவித்ததாக செட்டியார் எண்ணினார்.

தல யாத்திரை முடித்துக்கொண்டு காங்கேயநல்லூர் திரும்பிய வாரியாருக்கு மணியார்டர் காத்திருந்தது. அதனைப் பெற்றுக் கொண்டு கூப்பனைப் படித்தார். ஒன்றும் புரியவில்லை. பின்னர், திருச்சியில் உபன்யாசத்துக்குச் சென்ற வாரியாரை செட்டியார் சந்தித்தார். கனவில் நடந்ததைச் சொல்லி, வயலூர் ராஜகோபுரத் திருப்பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து திருச்சியில் சொற்பொழிவு ஆரம்பித்து, அதன் மூலம் பணம் வசூல் செய்து ராஜ கோபுரத் திருப்பணியை 1935ஆம் ஆண்டு தொடங்கினார்.

இந்த நிலையில் ஒரு நாள் இரவு வாரியாரின் கனவில், காங்கேயநல்லூர் முருகன் கோயில் காட்சி தெரிகிறது. அங்கு கோயிலில் முருகப் பெருமான் உலா வந்துகொண்டிருந்தார். வாரியார், அருணகிரிநாதர் சன்னதி முன்பு நின்று தொழுது நிற்கிறார். அருணகிரியாரது சிலை சற்றே சாய்ந்திருக்கிறது. அண்மையில்தானே அஷ்டபந்தனம் சாத்தி எழுந்தருளச் செய்திருந்தோம். இத்தனை விரைவில் சிலை சாய்ந்து விட்டதே என்று வருந்தினார்.

அப்போது காவியணிந்த சந்நியாசி கோலத்தில் காட்சி அளித்த ஒருவர், அன்பனே! எனக்கு மிகவும் பசி. ஏதேனும் உணவு கிடைக்குமா? என்கிறார். மாலை மூன்று மணியாகிவிட்டதே! அதனால் எதுவும் ஆயத்தமாக இல்லை என்று இவர் பதில் சொல்ல, ஏதாவது செய்து கொடு என்கிறார் சந்நியாசி. சரி சுவாமி, அரிசி நொய்யில் உப்புமா செய்து தரட்டுமா? என்று இவர் கேட்க, அப்படியே ஏதாவது கொடு என்று கூறிய வண்ணம் சந்நியாசி கோலத்தில் வந்தவர் மறைந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, சாய்ந்திருந்த அருணகிரியாரது சிலை நிமிர்ந்திருக்கக் கண்டார் வாரியார்.

உடனே, கண் விழிப்புற்றார் வாரியார். காங்கேயநல்லூரில் எழுந்தருளியிருக்கும் குருநாதருக்கு அறக்கட்டளை நிறுவ அடியேனுக்கு இட்ட கட்டளை இதுபோலும் என முடிவு செய்து தந்தைக்குக் கடிதம் எழுதினார். தினமும் ஒர் படி அரிசி சமைத்து நிவேதனம் செய்து, அதை தேசாந்திரிகளாக வரும் ஏழைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். இக்கட்டளை நிரந்தரமாக நிகழ்ந்து வர வேண்டி, அதற்கான நிலத்தையும் வாங்கினார். இன்றளவும் தினமும் ஏழைகள் உண்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

வயலூர் திருப்பணிக்கு முப்பதாயிரம் வசூலித்து கும்பாபிஷேகமும் நன்கு நடத்தினார். இந்தச் செய்தி ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்தது. ஆனால், வயலூர் என்பதற்குப் பதிலாக வடலூர் என்று அச்சிட்டுவிட்டனர். ஒரே எழுத்துதான் மாறுதல். அதுவே, இன்னொரு திருப்பணிக்கு அச்சாரமாகிவிட்டது. வயலூர் திருப்பணிக்குப் பிறகு வடலூர் சித்திவளாகத் திருப்பணிக்கு உத்தரவாகிறது என்றனர் அன்பர்கள்.

வடலூர் திருப்பணியை வாரியார் மிகவும் கஷ்டப்பட்டே செய்தார். திருப்பணி செலவுக்குப் பணமில்லாதபோது, தமது தங்க ருத்ராட்ச கண்டிகையை அடகு வைத்துப் பணம் வாங்கிச் செலவு செய்தார். இப்படி வயலூர், வடலூர், வள்ளிமலை ஆகிய தலங்களின் திருப்பணிகள் வாரியார் வாழ்வில் குறிப்பிடத்தக்கவை. இன்னும் எத்தனையோ பலநூறு கோயில்கள்.. அவர் செய்த திருப்பணி செலவுத் தொகையை கூட்டினால் பல கோடிக்கு மேல் ஆகும். கோடி ரூபாய் சேர்த்தவர் கோடீஸ்வரர் அல்லர்; கோடி ரூபாய் தர்மம் செய்தவர், திருப்பணி செய்தவரே கோடீஸ்வரர். அந்நிலையில் வாரியார் பலகோடி புண்ணியத்தைச் சேர்த்தவர்.

1933-ல் கதிர்காமக் கந்தன் கோயிலில் ஆடி வேல்விழாவில் கலந்துகொண்டு தல யாத்திரையாகத் திரும்பி வரும் வழியில் வயலூரைத் தரிசித்தார். அப்போது வயலூர் முருகன் இவரை ஆட்கொண்டு, இவரது பெருமையை உலகறியச் செய்தான்.

வேலூர் அருகிலுள்ள காங்கேய நல்லூரில் 1906-ஆம் ஆண்டு (25.8.1906) மல்லையதாஸ் பாகவதர் - கனக வல்லியம்மையாரின் புதல்வராக அவதரித்தார் கிருபானந்த வாரியார். சோதிடத்தில் வல்லவரான அவரது தந்தை அவர் பிறந்த நட்சத்திரமாகிய சுவாதிக்கு ஏற்றபடி இந்தத் திருப்பெயரைச் சூட்டினார். ஐந்து வயதில் வீரசைவ குலநெறிப்படி திருவண்ணாமலை பாணிபாத்ர மடத்தில் சிவலிங்க தாரணம் நடந்தது. தந்தையார் இவருக்கு சடாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். மதுரை திருப்புகழ்ச் சாமி ஐயா அவர்களிடம் சூட்சும சடாஷர மந்திர உபதேசம் பெற்றார். ஒருமுறை திருக்காரையூரில் வாரியாரது கனவில் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் சடாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அருளினார்.

வாரியாருக்கு மூன்று வயதில் தகப்பனாரிடம் எழுத்தறிவு தொடங்கியது. ஐந்து வயதிலே ஏடு படித்தார். எட்டு வயதில் வெண்பா பாடினார். பத்து பன்னிரண்டு வயதில் பன்னீராயிரம் பாடல்களை மனனம் செய்யும் ஆற்றலைப் பெற்றார். தகப்பனார் மிகச்சிறந்த பவுராணிகர். அவருக்குப் பின், தமது 19-வது வயதில், பாட்டுப் பாடிக்கொண்டே சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். பள்ளிக்குப் போகாமலேயே தந்தையையே ஆசானாகக் கொண்டு பலப் பல கற்றார்; நடமாடும் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தார். சங்கீதத்தைத் தந்தையாரிடம் கற்றார். இல்லறம் நல்லறமாகத் திகழ அவரது தாய்மாமன் மகள் அமிர்தலட்சுமி அம்மாளை மணந்துகொண்டார். சென்னையில் மிகுதியாக இசைச் சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டியிருந்ததால், சென்னையிலேயே குடியேறினார். அப்போது தென்மடம் வரதாசாரியாரிடம் வீணை பயின்றார். சென்னையில் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளைத் தரிசித்து ஆசி பெற்றார்.

காசி, கேதாரம், அமர்நாத், பத்ரிநாத், நேபாளம், கோகர்ணம், ஸ்ரீசைலம் மற்றும் பல தலங்களையும் தரிசித்து, எல்லா முக்கிய நகரங்களிலும் சொற்பொழிவாற்றிய பெருமை வாரியாருக்கு உண்டு. தமிழகத்தில் அவர் கால் படாத ஊரே இருக்காது. இதைத் தவிர, உலகின் பல நாடுகளுக்கும் சென்று அரும்பெரும் இந்து சமயப் பணிகளை ஆற்றி மேருவனைய புகழ் கொண்ட மேதகை, வாரியார்.

மெய்யன்பர்களே! ஞானமே வடிவாகிய வயலூர் மேவிய வள்ளலின் தனிப்பெருங் கருணையினாலே.. என்று சொற்பொழிவைத் தொடங்கினால் பட்டிதொட்டிகளில் வாழும் பாமரர் முதல் பட்டணத்தில் படித்தவர் வரை அனைவரும் தன்னை மறந்து அவர் பேச்சை ரசிப்பர். வாரி என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள். கிருபானந்த வாரி ஒரு நடமாடும் கடல். தமிழ்க் கடவுளாகிய முருகன் அவரது தனிக் கடவுள். அருணகிரிநாதரே அவரது மானசீக குரு, சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், சைவத் திருமுறைகள், திவ்யப் பிரபந்தம், பிள்ளைத்தமிழ் நூல்கள் என்று இப்படி எத்தனை இலக்கியங்கள் உள்ளனவோ அத்தனையும் கற்றறிந்தவர். அருணகிரிநாதரின் அருள் நூல்களான திருப்புகழ், அலங்காரம், அநுபூதி, அந்தாதி, வகுப்பு என எல்லாவற்றையும் முற்றும் பருகி எழுத்தெண்ணி, நயம் காட்டி, தங்குதடையின்றி சந்த பிரவாகத்தை கொட்டும் அதி அற்புத ஞானவாரி.

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களைப் பற்றி தமிழ் நாட்டில் அறியாதார் இல்லை. அவர் நாவில் திருப்புகழும், கையில் திருப்பணியுமாக நடமாடும் திருத்தொண்டர். நாயன்மார்கள் வரிசையில் வைத்து அவரை அறுபத்து நான்காவது நாயனாராக வழிபடும் சிவநேயச் செல்வர்களும் இருக்கிறார்கள்.

திருப்புகழ் அமிர்தம் என்ற மாத இதழை 1936-ஆம் ஆண்டு சித்திரை மாதம் தொடங்கி 37 ஆண்டுகள் நடத்தினார். பல நூறு திருப்புகழ்ப் பாடல்களுக்கு உரை விளக்கம் எழுதி வெளியிட்டார். பல ஆன்மிக இலக்கிய நூல்கள், கதைகளை, கட்டுரைகளை எழுதி சமுதாயத்தில் ஒழுக்க நெறியை வளர்த்தவர்.

காலையானால் ஜபம், தியானம், பின்பு ஸ்நானம், பூஜை, ஓய்வு ஒழிவின்றி கட்டுரைகள் வரைதல், மாலையில் சந்தியாவந்தனம், பிறகு சொற்பொழிவு செய்யும் அறநெறி வாழ்க்கை. சூரியன் உதிக்காத நாள் இல்லை; அதுபோல், மாலையானால் மாலையும் கழுத்துமாக வாரியார் சொற்பொழிவு ஆற்றாத நாளே கிடையாது.

பலகோயில் திருப்பணிகள், அறப்பணிகள், கல்விக் கூடங்கள் முதலியன அவரால் செழித்தன. காந்திஜி, ராஜாஜி போன்று இம் மூதறிஞரும் தமக்கு வரும் கடிதங்களுக்கு விடாது பதில் எழுதும் பழக்கமுடையவர். மாதம்தோறும், படிக்கும் பல குழந்தைகளுக்கு உதவித்தொகை அனுப்புவதை கடமையாகக் கொண்டிருந்தவர்.

பள்ளிக்கூடத்தை மிதியாதவர் வாரியார். ஆனால் பெரிய கல்லூரிகளும் செய்ய இயலாத அளவுக்கு அறிவு தானம் செய்தவர். காஞ்சி மாமுனிவர் அவருக்கு சரஸ்வதி கடாக்ஷமிர்தம் என்று பட்டம் வழங்கினார். மேலும் ஷட்பதநாதர், அமுதமொழி அரசு, பிரவசன சாம்ராட்... இப்படி 30-க்கும் மேற்பட்ட பட்டங்களும் பாராட்டுக்களும் பெற்ற பெருந்தகையாளர்.

லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் விரிவுரை செய்ய வாரியார் சென்றார். அப்போது உடல் நலம் குன்றியதால் தாயகம் திரும்ப வேண்டியதாயிற்று. வரும் வழியில் வான் வெளியில் முருகன் திருவடிகளில் கலந்தார். 8.11.1993 அன்று காங்கேய நல்லூர் முருகன் கோயிலுக்கு எதிரிலுள்ள சரவணப்பொய்கை அருகில், அவரது திருவுடலுக்கு சமாதி கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.

20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற திருமுருகன் திருத்தொண்டர், திருமுருக கிருபானந்த வாரியார். ஒளவையின் பாடல் ஒன்றின்படி, சபை ஏறுவதால் நூற்றில் ஒருவர்; நல்ல புலவர் ஆதலின் ஆயிரத்தில் ஒருவர்; பேச்சு வன்மையால் பதினாயிரத்தில் ஒருவர். வாரி வாரி வழங்குவதனால் கோடியில் ஒருவர்!
— with Sujatha Bhaktha.
வியாசர்

வியாசரை பரமாத்மா ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரம் என்பர். பதினெட்டு புராணங்களையும் ஐந்தாவது வேதமான மகாபாரதத்தையும் எழுதியவர். வேதத்திற்கே வியாசம் எழுதி வேதவியாசர் என்று கீர்த்தி பெற்றவர். ஸ்ரீமத் பாகவதம் என்ற அமுதத்தை அருளியவர். வேத வியாசர் பதினெட்டு புராணங்களிலும், ஒவ்வொரு தெய்வத்தை பெரிதென்று கூறுகிறார். பிரும்ம புராணத்தில் பிரும்மம் தான் பெரியது என்றும்; விஷ்ணு புராணத்தில் விஷ்ணுவைக் காட்டிலும் பெரியவர் இல்லையென்றும்; கந்தபுராணத்தில் கந்தன்தான் பெரியவன் என்றும்; தேவி பாகவதத்தில் தேவிதான் எல்லாராலும் பூஜிக்கத் தகுந்தவள் என்றும்; சிவ புராணத்தில் சிவபெருமான்தான் அனைத்திலும் உயர்ந்தவர் என்றும்- இப்படி ஒவ்வொரு புராணத்திலும் எந்தக் கடவுளை முன்வைத்து எழுதுகிறாரோ அந்தக் கடவுளை மற்ற தெய்வங்கள் பூஜித்து வணங்குவதாக எழுதுகிறார். ஆனால் பிரும்மாண்ட புராணத்தில், தெய்வங்களுக்குள் வித்தியாசம் கிடையாது; எல்லாமே ஒன்றுதான் என்று எழுதி முடித்தார்.

அனைத்தையும் எழுதி முடித்த வியாசர் இறுதியில் பூதவுடலை உகுத்து விண்ணுலகம் செல்ல விரும்பினார். காசிக்குச்சென்று கங்கையில் முழங்கால் அளவு நீரில் நின்று அபராதக்ஷ மாயாசனம் (தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோருதல்) செய்து விட்டு, நாராயணனைக் காட்டிலும் வேறு பெரிய தெய்வத்தை நான் அறியவில்லை என்று கூறினார். அந்த நேரத்தில் நந்திகேஸ்வரர் கங்கையில் நீராட வந்திருந்தார். சரீரம் விடப்பட வேண்டிய நேரத்தில் வியாசர் சொன்னது நந்தி பகவானுக்குக் கேட்க, வியாசனே, ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு தெய்வத்தைப் பெரிதாகக் கூறினாய். முடிவில் பிரும்மாண்ட புராணத்தில் எல்லாமே ஒன்றுதான் என்று தெரிவித்தாய். தற்சமயம் நாராயணனே பெரியவர் என்று சொல்லிக் குழப்புகிறாய். சிவ ÷க்ஷத்திரத்தில், சிவ பக்தனான நான் அருகில் நின்று கொண்டிருக்கும் போதே சொன்னதை மாற்றிச் சொல்கிறாய். எனவே அபராதக்ஷ மாயாசனம் செய்வதற்காக தூக்கப்பட்ட உனது கைகளும், நீரில் அழுந்திய கால்களும் துண்டிக்கப்படட்டும் என்று நந்திகேஸ்வரர் சாபம் கொடுத்தார்.

இதைக் கேட்டு சிரித்த வியாசர், நந்தி பகவானே, நான் சரீரத்தை விடும் நேரம் நெருங்கிவிட்டது. காசியில் இறந்தால் முக்தி. எனவே நான் நேராக முக்தி அடைந்துவிடுவேன். உமது சாபம் பலிக்காது என்று கூறினார். அதற்கு நந்தி வியாசனே, நீ மீண்டும் ஒரு பிறவி எடுக்கப்போகிறாய், அப்போது நான் கொடுத்த சாபம் பலிக்கும் என்றார். நந்தியே, காசியில் இறந்தால் மறுபிறவியில்லை என்பதை நீ அறியவில்லையா? என்று கேட்டார் வியாசர். வியாசனே, காசியில் இயற்கையாக இறப்பவருக்குதான் முக்தி. தானாக உயிரை விடுபவருக்கு முக்தி கிட்டாது என்றார் நந்தி. வியாசர் சற்று அதிர்ச்சியடைந்து, நந்தியின் கால்களில் விழுந்து, என்னை மன்னித்து சாபவிமோசனம் தர வேண்டும் என்று வேண்டினார். சிவ பக்தனான நந்தி கொடுத்த சாபம் பலித்தே தீரும். உனது கை, கால்கள் துண்டிக்கப்பட்டு நீ துன்பப்படும் வேளையில், அந்த பரமேஸ்வரனே உனக்கு தரிசனம் தந்து, இழந்த கை, கால்களை மீண்டும் அருளுவார் என்று அருளினார் நந்தி.

வியாசரும் மனம் தெளிந்து, கங்கையில் தனது சரீரத்தை விட்டுவிட்டு சொர்க்கம் சென்றார். அங்கே தேவேந்திரனும், மற்ற தேவர்களும் பூரண கும்பத்துடன் வியாசரை வரவேற்றார்கள் . பதினெட்டு புராணங்களை இயற்றி, பல தத்துவங்களை போதித்த என்னையன்றி இப்படிப்பட்ட வரவேற்பு வேறு யாருக்குக் கிட்டும்? என்னைப் போன்ற புராண கர்த்தா எவருமே இல்லை என்ற ஆணவத்தோடு சென்றார் வியாசர். தேவேந்திரன் ஒரு ஆசனத்தைக் காட்டி அமரச் சொன்னான். அந்த ஆசனத்தைக் கண்டதும் வியாசர் அதிர்ச்சியடைந்தார். காரணம், முள்ளால் நிரப்பப்பட்ட ஒரு ஆசனம் அது. வியாசர் கோபமுற்று, தேவேந்திரா, என்ன இது? நான் எழுதிய புராணங்களைப் படித்தவர்கள், கேட்டவர்கள், அனுபவித்தவர்கள் எல்லாருமே உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் எழுதிய எனக்கு இப்படி ஒரு ஆசனமா? என்றார்.

அந்த சமயம் பரம்பொருளான நாராயணர் அங்கே தோன்றினார். வியாசா, நீ சொன்னது எல்லாம் உண்மையே! நான் எழுதிய புராணங்களைப் படித்தவர்கள், கேட்டவர்கள், அனுபவித்தவர்கள் எல்லாரும் உயர்ந்த இடத்தைப் பெறட்டும் என்று எழுதியிருந்தாய். அவர்கள் உனது புராணங்களைப் படித்து, கேட்டு, அனுபவித்து பக்திப்பரவசம் கொண்டனர். ஆனால் நீ எழுதினாயே தவிர அதை அனுபவிக்கவில்லை. நான்தான் எழுதினேன் என்ற அகங்காரமும் கொண்டாய். அதனால் நீ இன்னொரு பிறவி எடுத்து அனுபவித்துவிட்டு வா. உனக்கு உயர்ந்த பதவி கிட்டும். நந்தியின் சாபமும் நிறைவேற வேண்டும் என்று கூறி மறைந்தார். அதன்படியே, தினமும் அக்னி ஹோத்ரம் செய்யும் நாராயண சாஸ்திரி என்ற அந்தணருக்கும், கமலா என்ற அம்மைக்கும் பூரி ஜெகன்னாதரின் அருளால், ஒடிஸ்ஸா மாநிலத்தில் அவதரித்தார் வியாசர். சிறு வயதிலேயே தெய்வ பக்தி நிரம்பியவராகவும் ஆசாரசீலராகவும் இருந்தார். தெய்வாம்சம் பொருந்திய குழந்தையாக இருந்ததால் ஜெயதேவர் என்ற நாமம் சூட்டினார்கள். தக்க வயது வந்தவுடன், கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்த பத்மாவதி என்ற பெண்ணை அவருக்கு மணம் முடித்தனர். எப்போதும் ஸ்ரீகிருஷ்ணனைப் பாடிக்கொண்டும் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டும் தம்பதிகள் இறையின்பத்திலேயே இருந்தனர். ஜெயதேவர் எல்லா தெய்வங்கள்மீதும் பேதமில்லாமல் பாடல்கள் இயற்றினார். ருத்ர கிரந்தம் என்ற நூலை எழுதினார். ராகவகிரந்தம் என்ற நூலையும் இயற்றினார். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீகிருஷ்ணனிடம் எல்லையில்லாத பிரேமை கொண்டு, 18 புராணங்களையும் இணைத்து கீதகோவிந்தம் என்ற மகாகாவியத்தை எழுதினார்.

ஜெயதேவரின் மகிமைகளை அறிந்த பகவன்தாஸ் என்ற மன்னர், சில நாட்கள் ஜெயதேவரை தன் அரண்மனையில் வைத்து உபசரித்து, அவரக்கு ஆடை, ஆபரணங்கள், பொன், பொருள், எல்லாம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். ஜெயதேவர் ஒரு கானகத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, நான்கு திருடர்கள் அவரை சுற்றி வளைத்தனர். ஜெயதேவரின் கை, கால்களை வெட்டி ஒரு கிணற்றில் தள்ளிவிட்டு, அவர்வசமிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த சமயம் காட்டில் வேட்டையாட வந்த மன்னன் (கிரவுஞ்சன்) ஜெயதேவர் கிணற்றில் இருப்பதைக் கண்டு, மெள்ள அவரை மேலே தூக்கி முதலுதவிகள் செய்து, பின்னர் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று பராமரித்து வந்தான். ஜெயதேவரின் இனிய குரலையும், அவரது பக்தியையும் கண்ட கிரவுஞ்ச மன்னன் சுவாமிகளிடம் அன்பைப் பொழிந்தான். அஷ்டபதி பாடுவதும், பாகவத பிரவசனமும் சுவாமிகள் மூலம் கிடைத்தன. ஜெயதேவர் ஒரு பாகவதமேளா நடத்த வேண்டுமென்று மன்னரிடம் கேட்டார். அதன்படி மன்னன் நகரிலுள்ள பாகவதர்கள் அனைவரையும் அழைத்து சிறப்பாக பாகவத மேளா நடத்தினான். அந்த பாகவத மேளாவுக்கு, முன்பு ஜெயதேவரை கிணற்றில் தள்ளிய கள்வர்கள் நால்வரும் பாகவதர்கள்போல வேடம் பூண்டு வந்திருந்தார்கள். அரண்மனையில் சுவாமிகளைக் கண்டவுடன் இவன் திருடன், திருடன் என்றனர்.

கள்வர்கள் சுவாமிகளைப் பற்றி அபாண்டமான பதிலைச் சொன்னதும் பூமி வெடிக்க, அந்த நால்வரும் அந்த பள்ளத்தில் விழுந்தனர். இதைக் கண்ட ஜெயதேவர் கள்வராக இருந்தாலும் பாகவதர்களாக சில நாட்கள் இருந்தார்களே என்றெண்ணி, பாகவத அபசாரம் என்று சுவாமிகளும் அந்தப் பள்ளத்தில் விழுந்தார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கிரவுஞ்ச மன்னனும், தான் குருவாக நினைத்து வழிபட்ட சுவாமிகளே விழுந்துவிட்டாரே என்று தானும் பள்ளத்தில் குதித்தான். அப்பொழுது அகிலாண்டேஸ்வரனான பரமேஸ்வரன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சுவாமிகளையும், மன்னனையும் காப்பாற்றியருளினார். வியாசரே ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்தம் என்ற மகா காவியத்தை எழுதி கிருஷ்ணன் அருளைப் பெற்றார். இது தேவரகசியம் என்றும்; ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நாபாஜி சித்தருக்கு இந்த வரலாற்றைக் கூறினார் என்றும் சொல்லப்படுகிறது. யாராக இருந்தாலும் தான் என்ற அகங்காரம் இருந்தால் அதற்கான தீவினையை அனுபவித்தே தீரவேண்டும் என்பதே நியதி. பெரிய மகான்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரணமான மானிடர்கள் எப்படி இருக்கவேண்டும். எத்தனை இருந்தாலும் அகம்பாவம் நம்மை அண்டவே கூடாது!
தணிகைமணி செங்கல்வராயர்

எவ்வேலை யான் செய்ய எத்தனங்கள் செய்திடினும்
அவ்வேலை நன்றாய் அமையவே-செவ்வேலைச்
சித்தத்தினில் இருத்திச் செவ்வேள் பதமலரை
நித்தம் துதிப்பேன் நினைத்து

தமிழ்த் தாத்தா என்று போற்றப்பெறும் மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர்(1942 ஆம் ஆண்டில்) நோயுற்று இருந்தபோது, அவரது இல்லத்துக்குச் சென்றார் 60 வயதுடைய ஒரு தமிழ்ப் பேரறிஞர். இவரைக் கண்டதும் ஐயரவர்கள் மகிழ்ச்சியோடு திருப்புகழ் ஆராய்ச்சி செய்த கையாயிற்றே என்று இவருடைய இரு கைகளையும் தம் கண்ணில் ஒத்திக் கொண்டாராம். உடனே இவர், ஐயரவர்களின் அடிகளைப் பற்றி சங்கத் தமிழ் நூல் ஏடுகளைத் தேடிச் சென்ற கால்களாயிற்றே! என்று கூறி வணங்கினாராம். என்ன அற்புதமான சந்திப்பு. பாருங்கள்!

பழநியில் 1943 ஆம் ஆண்டில், திருப்புகழ் மகாநாடு சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் அந்தத் தமிழ்ப் பேரறிஞருக்கு சூரியனார்கோயில் ஆதீனத் தலைவர் தவத்திரு மீனாட்சி சுந்தரதேசிகர் தணிகைமணி எனும் பட்டத்தை அளித்துப் பாராட்டினார். அத்தகைய பேறும் புகழும் பெற்றவர் டாக்டர் வ.சு. செங்கல்வராயப் பிள்ளை எனும் பேரறிஞர் இவர் திருத்தணிகேசன் திருவருளால் திருப்புகழைத் தேடி உலகுக்கு ஈந்த உத்தமரான வடக்குப்பட்டு த.சுப்ரமணிய பிள்ளை. தாயாரம்மாள் தம்பதிக்கு 1883-ல் மகனாகப் பிறந்தார். தமது தொடக்கக் கல்வியை நாமக்கல் மற்றும் கும்பகோணத்தில் கற்று, உயர்நிலைக் கல்வியைப் பல ஊர்களிலும் கற்க வேண்டியிருந்தது. திருவாரூரில் தமது வீட்டுக்கு அருகிலுள்ள குமரன் கோயிலுக்குத் தினமும் சென்று, ஆரூர் தேவாரப் பாக்களை ஓதி வழிபட்டு வருவார். தமது 16-வது வயதில் வெண்பா, கட்டளைக் கலித்துறை போன்ற பாவகைகளின் இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். அப்படிப்பட்ட நிலையில், அவர் எழுதிய முதல் பாடல்

கண்ணனும் வேதனும் போற்று முருகா கவின்மணியே
விண்ணவர் கோன்தன் பதம்பெறச் செய்த செவ்வேலவனே
பெண்ணொரு பாகன் அளித்த குமரா பெருநிதியே
தண்ணருளே பொழிதேவே தணிகை தயாநிதியே

திருவாரூர் தியாகராசமாலை என்ற நூலைப் போல தணிகைநாயகர்மாலை எனும் பாமாலையை அப்போது பாடிப் பரவினார் செங்கல்வராயர். தத்துவத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு பி.ஏ படித்தபோது, பல்கலைக்கழகத் தேர்வில் தமிழில் முதல் வகுப்பில் முதலாவதாகத் தேறி தங்கப் பதக்கமும் மன்னர் சேதுபதி பதக்கமும் பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் முதலாவதாகத் தேறி எம்.ஏ தமிழ்ப் பாடத்தைப் படித்தபோது, ராமநாதபுரம் ராணியின் புலமை உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) இவருக்குக் கிடைத்தது. எம்.ஏ வகுப்பில் இவரது ஆசிரியராக இருந்தவர்கள் பரிதிமாற் கலைஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார். கோபாலாச்சாரியார். மறைமலை அடிகளார் முதலான பேரறிஞர்கள் ஆவர். கல்லூரியில் படிக்கும்போது பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற செங்கல்வராயர் தமது 22-வது வயதில் பத்திரப்பதிவுத் துறையில் வேலைக்கு அமர்ந்தார். தினமும் காலையில் திருப்புகழில் சில பாடல்களையும், இரவில் தலபுராணப் பாடல்களையும் படிப்பதை வழக்கமாகக் கொண்டு தமது தமிழறிவை வளர்த்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில முதல் தேதியன்று தணிகைவேலனைச் சென்று தரிசிப்பது இவரது வழக்கம். ஆலயத்துக்குச் செல்லும்போது தேங்காய் முதலான அர்ச்சனைக்கு எடுத்துச் செல்ல வேண்டியவற்றை மறவாதிருக்க, குக தேவா பூபா காவே என்ற அடியை நினைவுபடுத்திக் கொள்வாராம். இதில் கு-குங்குமம், க-கற்பூரம், தே-தேங்காய், வா-வாழைப்பழம், பூ-மலர், பா-பாக்கு; கா-தட்சணைக் காசு, வே-வெற்றிலை என்பதைக் குறிக்கும்.

அருணகிரிநாதர் அருளிய கந்தரநுபூதி, கந்தரலங்காரம் முதலியவற்றின் ஆராய்ச்சிகளை எழுதி விவேக போதினியில் வெளியிட்டார். தமது 38-வது வயதில் காமாலை நோயால் வருந்தியபோது இறைவனைத் தியானித்து, தணிகை நவரத்னமாலை எனும் பனுவலைப் பாடி, நோய் நீங்கப்பெற்றார். மாநில தலைமைப் பதிவாளரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றி இரவு-பகல் பாராமல் உழைத்த இவருக்கு 1935 ஆம் ஆண்டில் ராவ்பகதூர் என்ற அரசாங்கப் பட்டம் கிடைத்தது.

அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், சைவ சமய நூல்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற தீவிரமான எண்ணத்துடன் உழைத்தார். தமது 72-வது வயதில் அருணகிரியார் திருப்புகழ்ப் பாடல்கள் அனைத்துக்கும் அற்புதமாக எழுதினார். கந்தரலங்காரம், கந்தரந்தாதி, சுந்தரநுபூதி, திருவகுப்புகள், வேல் மயில் சேவல் விருத்தங்கள் என அனைத்து நூல்களிலும் உரை எழுதி அவற்றை ஆராய்ச்சியுடன் வெளியிட்டது இவர் வாழ்வில் செய்த மிகப் பெரிய சாதனை சைவத் திருமுறை பன்னிரண்டினைப் போல முருகவேள் பன்னிரு திருமுறை என வகுத்து முறைப்படுத்தியது. இவர் உள்ளத்தில் தோன்றியதாகும். தேனூர் வரகவி சொக்கலிங்கம் பிள்ளையவர்களைக் கொண்டு பன்னிரண்டாம் திருமுறையாக சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றச் செய்தார். முருகவேள் பன்னிரு திருமுறை

சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றச் செய்தார். முருகவேள் பன்னிரு திருமுறை எனப் பெயரிட்டு தம் நண்பர் கல்யாண சுந்தரம் ஐயர் என்பவரைப் பதிப்பாளராகக் கொண்டு அதை வெளியிட்டுச் சாதனைபுரிந்தார். இவர் எழுதியுள்ள அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற ஒப்பற்ற ஆய்வு நூல், அனைவரும் படித்து இன்புற வேண்டிய அருமையான நூல்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரது தேவாரப் பாடல்கள், மணிவாசகரது திருவாசகம், திருக்கோவையார் மற்றும் திருவிசைப்பா ஆகியவற்றை ஆய்வுசெய்து ஒளிநெறி என்ற பெயரில் சொல் தொகுதி விளக்கப்பட்டியல் எழுதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பணியை, இவர் தமது வயதான முதுமைக் காலத்தில் ஒரு தனி மனிதராகவே செய்து சாதித்தது வரலாற்றில் பதிவுசெய்ய வேண்டிய ஒன்று.

இப்படிப் புகழ்பெற்ற தணிகைமணி செங்கல்வராயருக்கு, அவரது 87-வது வயதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (1969 ஆம் ஆண்டு)டி,லிட் என்னும் டாக்டர் பட்டமளித்துப் பாராட்டி கவுரவித்தது. செங்கல்வராயரின் ஆராய்ச்சி நூல்களும் இன்னும் பல நூல்களும் (எழுதிய நூல்கள் 25, ஆராய்ச்சிக் கட்டுரைகள் 15) இன்றளவும் ஆராய்ச்சியாளர்களுக்கும், சைவ நெறியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படுகின்றன. வாழ்வு எவ்வாறு அமைந்தாலும், அதனைத் தம் முயற்சியால் சிறப்பாக மாற்றிக்கொண்ட பெருமை இவரைச் சாரும். பாராட்டையும் புகழையும் இவர் தேடிச் சென்றதே இல்லை. இவரைப் பாராட்ட பலர் அழைத்தபோதெல்லாம் நான் என்ன செய்துவிட்டேன்! எனக்கெதற்குப் பாராட்டு? என வினவி வேண்டேன் புகழ் என்ற திருவாசகத்திலுள்ள வரியினைக் கோடிட்டுக் காண்பித்துத் தடுத்துவிட்டாராம்.

காலத்தின் ஒரு துளியையும் விரயம் செய்யாது, அதன் அருமை தெரிந்து உழைத்தவர் செங்கல்வராயர் கூனிக்குறுகி பிறர் உதவியோடு வாழவேண்டிய நிலையில் ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பா ஆய்வை இவர் முடித்தது வியப்புக்குரிய செயல். தம் மனைவியின் பெயரை சிவா என்று மாற்றி அதன் மூலம் சிவநாமத்தை உச்சரிக்கும் பேற்றைப் பெற வழி செய்துகொண்டவர் இவர் யாருடனும் அன்பாகவும் நகைச்சுவையுடனும் பேசி அகம் மகிழ்வார். மிகவும் இசைஞானம் உடைய இவர், தம்மைத் தேடி வந்த அடியார்களை திருப்புகழ், தேவாரப்பாக்களை இசையுடன் பாடச்சொல்லிக் கேட்டு மனமகிழ்ந்தார். திருப்புகழ், தேவாரப் பாக்களின் முதலடி சொன்னால் போதும்; உடனே அது எங்கு, எப்பொருளில் வருகிறது என்பதைக் கூறும் திறமை பெற்றவர் செங்கல்வராயர்.

திருப்புகழில் ஆய்ந்து தோய்ந்திருந்த இவருடைய மனம் எந்நேரமும் எளிதாகப் பாடல் இயற்றிக்கொண்டே இருக்குமாம். தணிகை முருகன் மீது இவர் இயற்றியுள்ள நூல்கள் 16. இவரது தேவார ஆராய்ச்சி நூல்களைக் காணுகையில் இத்தகைய நூல்கள் எழுதுவதற்கு உரிய இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள், சமய நூல்கள் புராணங்கள் ஆகியவற்றில் இவருக்கு இருந்த ஆழ்ந்த, தெளிந்த நினைவாற்றலை நாம் உணர முடிகிறது. ஒன்பது திருமுறைகளுக்கும் தாம் ஒருவராகவே ஆராய்ச்சி செய்து எழுதி முடித்துள்ளதை நினைக்கும்போது, இவரது அயரா உழைப்பையும் மனோ திடத்தையும் எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை, அல்லவா?

காலம் தாழ்ந்து எதையும் செய்ய செங்கல்வராயருக்குப் பிடிக்காது. சிறிய விஷயமே என்றாலும், தாம் கொடுத்த வாக்கை மீறக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தார். 1971 ஆம் ஆண்டு தமது 88-வது வயதில் தணிகை முருகன் திருவடிகளில் கலந்தார்.

கந்தனது சந்நிதியில் அந்தாதி கழறுகையில்
சிந்தனையில் வரமறந்த சீர்கவியைக் கூறுநன்போல
வந்தவனைத் தொடமுயன்ற (வ.சு) செங்கல்வராயரது
செந்தகைய சிந்தையவர் செவ்வேள் பொற்பதம் போற்றி
 
 
Kanipakam is a small village on the bank of Bahuda River.

"Kani" means wetland and "Pakam" means flow of water into wetland. According to the legend of the temple there were three brothers and each one had a handicap. Viz., Dumb, Deaf and Blind. They were earning out their livelihood by cultivating a small piece of land.

In olden days water was drawn from the well by way of 'Piccota System'. As one of them used to irrigate the field through the channels, the other two used to ply on the Piccota. On one such operation they found that the water in the well got dried up and they could no longer continue their job. One of them got into the well and started digging it up. He was taken aback to see the iron implement hitting a stone like formation.

Later, he was shocked to see blood oozing out from it. Within in a few seconds the entire water in the well, turned blood red in colour. Thus, startled by this divine sight, all the three became normal getting rid of their deformities. As soon as the villagers came to know about this miracle, they thronged to the well and tried to deepen the well further. But their attempt proved futile because the 'swayambhu' idol (the self-manifested) of Lord Vinayaka emerged from the swirling waters.

Ultimately they offered many number of coconuts with all prayers- modesty kneeling before the new idol afford “MAGALHARATHI” etc. They declared the ideal of “SWAYAMBHU” and tendered number of coconuts. The coconuts water flowed into the channel to a distance of more than one and a quarter acres. The indication of this led to the modification in the usage of the Tamil word “KANIPARAKAM” and later pronounced as KANIPAKAM. Even today the idol is in the original well and the springs of the well are perennial and the eternal. During the rainy season, the holy water from the well overflows even today.

Another striking and strange feature of the idol is that it is still growing in size. At present, we can see the knees and the abdomen of the idol. Smt. Lakshmamma, an ardent devotee had offered a 'Kavacham' (Armour) to the Lord, fifty years ago but today it is out of size and doesn't fit the idol. The holy water from the well is offered to the devotees as theertham.

The legend behind Bahuda River Long ago there lived two brothers Sankha and Likhita. They were on a pilgrimage to Kanipakam. As the journey was tiring, the younger brother Likhita felt hungry. Disregarding the advice of the elder brother he plucked a mango from the mango grove. Sankha felt bad and reported this to the ruler of that area and pleaded for punishment for the sin committed during the pilgrimage. Thus Likhita was punished severely being deprived of both arms.

Later they took bath in the river near Kanipakam temple. Lo Behold! The chopped arms were restored to Likhita as soon as he had a dip in the sacred waters of the river. These incidents lead the ruler to rename the river as 'Bahuda' (Bahu means human arm). Thus the river beside Kanipakam temple is now known as 'Bahuda River'.

Sri Varasiddhi Vinayaka as up-holder of 'Truth'
The swayambhu idol of Kanipakam is the up-holder of truth. Day to day disputes between people is resolved by taking a 'special oath'. The people in the dispute take a holy dip in the temple tank and swear before the lord. It is taken as gospel truth.

There are instances when the person who committed that sin voluntarily agrees as soon as he had the dip and much before entering the temple itself. It seems the Lord lawns invisibly on the sinner and makes him repent & feel guilty for his sinful deeds.

Thus the glory of Sri Varasiddhi Vinayaka spread far and wide and the honorable courts uphold the 'special oath' in their judicial pronouncements.
 
பூணுல் ஏன் மூன்று பிரியாக இருக்கிறது ?

இடது தோளில் அணியவேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. எப்பொதும் பூணுல் இடது தோளின் இருக்க வேண்டும். இடது தோளின் பூணுல் இருக்கும்போது அதற்கு உபவீதி என்று சிறப்புப் பெயர். உபவீதியாக எப்பொதும் இருக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் (ஸதோப வீதினா பாவ்யம்) சொல்கிறது. தேவர்களுக்கு பணிவிடை செய்யும் வேளையில் பூணுல் இடது தோளில் இருக்க வேண்டும். அதாவது உபவீதியாக இருக்க வேண்டும. நம் முன்னோர்களை ஆராதிக்கும்போது பூணுல் வலது தோளில் இருக்க வேண்டும். ரிஷிகளை வழிபடும் வேளையில் இரு தோளிலுமாக தொங்க வேண்டும். அதாவது மாலை போல அணிய வேண்டும். முத்தொழிலின் வெளிப்பாடு முப்பிரி. மூன்று ஆச்ரமங்களுக்கும் அது தேவை. காலம் மூன்று. முர்த்திகள் மூன்று. வேதம் மூன்று. பூணுலின் பிரிவுகளும் மூன்று. மூன்று எண்ணிக்கை முற்று பெற்றதாக கூறும். ஏலத்தில் மூன்று முறை அழைப்பார்கள். நீதி மன்றத்திலும் மூன்று முறை அழைப்பார்கள். அது முற்று பெற்றதாக கருதுகிறோம். பூணுல் பரமாத்மா வடிவம் (யஞஜாக்ய பரமாத்மாய). பரமாத்மா மூன்று கால்களோடு எழும்பினார் (த்ரீபாத் ஊர்தவ) மூன்று அடி அளந்தவர். அப்போது முற்றுப் பெற்றது. தேவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் இம்மூவருக்கும் தினமும் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு ஆதாரமான பூணுலும் மூன்று பிரியாக இருப்பது பொருந்தும். அவன் ஆராதிக்கும் காயத்ரீ மூன்றடிகளோடு விளங்குபவள். அவளை மூன்று வேளையும் வழிபட வேண்டும். அதற்கு காரணமாக பூணுலும் மூன்று பிரியாக வந்தது சிறப்பு