செவ்வாய், 21 ஜனவரி, 2014

பலி பீடம்


கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு
தெரியாது ஒளிந்திருக்கும்.....

காமம்,
ஆசை,
குரோதம் (சினம்),
லோபம் (கடும்பற்று),
மோகம் (கற்பு நெறி பிறழ்வு),
பேராசை,
மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை),
மாச்சர்யம் (வஞ்சம்),

எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம்.

வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.

பெண்கள்
பெண்கள் செய்யும் பஞ்சாங்க நமஸ்காரத்தில் தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என ஐந்து அங்கங்களே நிலத்தில் படியக்கூடியதாக இருக்கவேண்டும்.

ஆண்கள்
அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிண்டு, மோவாய், செவிகள் இரண்டு, மார்பு, முழந்தாள்கள் இரண்டு என்பதாகும். (மோவாய் என்பது மூக்கும் வாயும் சேர்ந்தது)
அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:ராமநாதீஸ்வரர்
அம்மன்:சிவகாமசுந்தரி
நடைதிறப்பு:காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

இடம்:போரூர்

முகவரி:போரூர் சந்திப்பிற்கு அருகில் குன்றத்தூர் மின்வாரிய அலுவலகத்தைக் கடந்து இடதுபுறம் சென்றால் இத்தலத்தை அடையலாம்.திருவள்ளூர் மாவட்டம்.

தகவல்:நவகிரகங்களில், குரு தனிச்சிறப்பு மிக்கவர். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்று அழைப்பர். குரு என்கிற சொல்லுக்கே இருட்டை நீக்குபவர் என்று பொருள். அதனாலேயே ஆதி குருவான தட்சிணாமூர்த்தியே அதிபதியாக விளங்குகிறார். கல்வி, கலை, ஆராய்ச்சி, திருமணம், ஆன்மிகம், மரபு சார்ந்த விஷயங்கள், அமைதி, கௌரவப் பதவி, ஒழுக்கம் போன்ற விஷயங்களை குருபகவான்தான் அருளுகிறார். குரு ஜாதகத்தில் சரியான நிலையில் இல்லாதோர், போரூர் ராமநாதீஸ்வரர் தலத்திற்கு வந்தால், நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்வர். ராமேஸ்வரத்தில் ராமநாதரை தரிசிப்பதற்கு முன்பே, ஈசனை ராமர், ராமநாதர் எனும் திருப்பெயரிலேயே தரிசித்திருக்கிறார். அப்படி அவர் தரிசித்த தலம்தான் போரூர். ராமபிரான் இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால் இத்தலம் போரூர் என வழங்கப்படுகிறது. ராமபிரானுக்கு குருவாக போரூர் ஈசன் விளங்கியதால், இத்தலம் குரு தலமாக போற்றப்படுகிறது. குரு பகவானுக்கு உரிய பூஜைமுறைகள்யாவும் இந்த ராமநாதருக்கு செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் தலத்தைப் போலவே இத்தலத்திலும் விபூதியுடன் பச்சைக்கற்பூரம், ஏலக்காய் மணக்கும் தீர்த்தமும் பிரசாதமாகக் கிடைக்கிறது; அதோடு, பக்தர்களின் தலையில் சடாரி சார்த்தும் முறையும் உள்ளது, குறிப்பிடத்தக்கது. இத்தலம் உத்தர ராமேஸ்வரம் என போற்றப்படுகிறது. ராமேஸ்வரத்திற்கு பிரார்த்தனை செய்து அங்கு சென்று பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனையை செலுத்துகின்றனர். ஆலயத்துள் நுழைந்ததும் அம்பிகை சிவகாமசுந்தரி தனிக்கோயில் கொண்டுள்ளாள். ஆலய ஈசன் கருவறை முன் உள்ள மகாமண்டபம் நான்கு புறமும் யாளிகள் தாங்க, 20 தூண்களுடன் திகழ்கிறது. ராமபிரானின் திருவடிகளை இத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தல திருக்கல்யாண சேவையை தரிசிப்பவர்களுக்கு ஈசன் அருளால் திருமண பாக்யம் உடனே கிட்டுகிறது. பிரிந்திருந்த தம்பதியர் இத்தல ஈசனை தரிசிக்க அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். குரு பகவான் தலமாக விளங்குவதால் குரு தசை, குரு புக்தி, ஜாதகத்தில் லக்னத்தில் குரு, குரு தோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 11 வாரங்கள் இத்தல ஈசனுக்கு நெய்விளக்கேற்றி 11ம் வாரம் கடலை சுண்டல், தயிர் சாதம் நிவேதித்தால் பிரச்னைகள் ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிறது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இத்திருத்தலத்தில் சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது ராஜகோபுரம் கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது கிடைத்த கல்வெட்டு மூலம் இத்தலம் ராஜேந்திரசோழன் காலத்தில் திருப்பெருங்கோயில் என வழங்கப்பட்டதாகவும், சோழமன்னர்கள் இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்துள்ளதும் தெரியவந்தது.

திருவிழா:பௌர்ணமி, பிரதோஷம், குரு பெயர்ச்சி சிவராத்திரி

போக்குவரத்து:சென்னையிருந்து கிண்டி மார்கமாக 15 KM.
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்

மூலவர்:பாண்டவ தூதர்

அம்மன்:சத்யபாமா, ருக்மணி

நடைதிறப்பு:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

இடம்:காஞ்சிபுரம்

முகவரி:ருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், 28, பி, பாண்டவதூதப் பெருமாள் கோயில் தெரு, காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.

தகவல்:ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள் செல்வாக்கு சிறப்பாக இருக்கும். மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பிரார்த்தனை ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன்: கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலம். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72,000 அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு. தலபெருமை: கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப் பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளுகிறார். எனவே இங்கு அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர் களுக்கு துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார். எட்டாம் தேதி விசேஷம்: ரோகிணி தேவி, இத்தலத்து பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில் ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவிகளை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த பெருமாளை, இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வணங்க வருவதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன், சனிக்கிழமை, அஷ்டமி திதி, 8ம் தேதிகளில் இங்கு வழிபாடுசெய்வது சிறந்த பலனைத்தரும். தல வரலாறு: பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் கவுரவர்களிடம் தன் நாட்டை இழந்தார். ஆளுக்கொரு வீடு வீதம் ஐந்து வீடுகளையாவது கேட்டுவாங்க, துரியோதனனிடம் தூது சென்றார் பகவான் கிருஷ்ணர். அவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். கிருஷ்ணர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்) உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கிருஷ்ணனும் அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்கினர் சில மல்யுத்த வீரர்கள். அவர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார். பாண்டவர்களுக்காக தூது சென்ற இவரை பாண்டவதூத பெருமாள் என்பர். பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்கு பின், ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக்கதையை கேட்க வந்தார்.கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், என ரிஷியிடம் மன்னர் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார். பெருமாள், தன் தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.

திருவிழா:கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம். அருளாளப்பெருமாள் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் நடக்கிறது.

போக்குவரத்து:காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள வலது புரம் சாலையில் கடைசில் கோயில் அமைந்துள்ளது.
 
 
Photo: அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்

மூலவர்:பாண்டவ தூதர்

அம்மன்:சத்யபாமா, ருக்மணி

நடைதிறப்பு:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

இடம்:காஞ்சிபுரம்

முகவரி:ருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், 28, பி, பாண்டவதூதப் பெருமாள் கோயில் தெரு, காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.

தகவல்:ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள் செல்வாக்கு சிறப்பாக இருக்கும். மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பிரார்த்தனை ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன்: கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலம். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72,000 அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு. தலபெருமை: கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப் பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளுகிறார். எனவே இங்கு அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர் களுக்கு துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார். எட்டாம் தேதி விசேஷம்: ரோகிணி தேவி, இத்தலத்து பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில் ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவிகளை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த பெருமாளை, இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வணங்க வருவதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன், சனிக்கிழமை, அஷ்டமி திதி, 8ம் தேதிகளில் இங்கு வழிபாடுசெய்வது சிறந்த பலனைத்தரும். தல வரலாறு: பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் கவுரவர்களிடம் தன் நாட்டை இழந்தார். ஆளுக்கொரு வீடு வீதம் ஐந்து வீடுகளையாவது கேட்டுவாங்க, துரியோதனனிடம் தூது சென்றார் பகவான் கிருஷ்ணர். அவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். கிருஷ்ணர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்) உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கிருஷ்ணனும் அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்கினர் சில மல்யுத்த வீரர்கள். அவர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார். பாண்டவர்களுக்காக தூது சென்ற இவரை பாண்டவதூத பெருமாள் என்பர். பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்கு பின், ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக்கதையை கேட்க வந்தார்.கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், என ரிஷியிடம் மன்னர் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார். பெருமாள், தன் தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.

திருவிழா:கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம். அருளாளப்பெருமாள் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் நடக்கிறது.

போக்குவரத்து:காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள வலது புரம் சாலையில் கடைசில் கோயில் அமைந்துள்ளது.

"Mountain of the Great Indra"


The name Mahendraparvata means "Mountain of the Great Indra". It is derived from the Sanskrit words महेन्द्र (Great Indra, a title of the Hindu god Indra) and पर्वत (mountain) and is a reference to the sacred hill top site commonly known as "Phnom Kulen" today where Jayavarman II was consecrated as the first king of the Khmer Empire in 802. The name is attested in inscriptions on the Angkor-area Ak Yum temple.[1]

If you’ve seen the temple complex of Angkor Wat in Cambodia, then the country’s lost city of Mahendraparvata, its majestic temples on Phnom Kulen and the stone animal carvings at the site of Srah Damrei (elephant pond) should be next on your list. About 30 miles from Siem Reap, Mahendraparvata predates Angkor Wat by about 350 years and was the birthplace of the Khmer Empire in A.D. 802. Although the city has been known about for several decades, researchers in June discovered new temples and a network of roads and dikes that had been concealed under thick mountain vegetation. ROOKSANA HOSSENALLY

Konark Sun Temple


The Konark Sun Temple is located in Konark, India overlooking the Bay of Bengal, and was enlisted as a World Heritage Site in 1984. It was constructed in the 13th century by King Narasimhadeva I and is dedicated to the Sun god. This is one of the most majestic temples of India, and was originally conceived of as a chariot of the Sun deity. The chariot is drawn by seven horses on 12 pairs of decorated wheels at its base

மஞ்சள்..


ஸ்ரீதேவியின் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்ற மங்கலகரமான பொருள்களில் மஞ்சளும் ஒன்று. மஞ்சளின் மங்கலத்தன்மையைப் பற்றி நிறைய எழுதலாம். முகத்தில் மஞ்சள் பூசுதல், மஞ்சள் துணியை அணிதல், மஞ்சள் நீரில் குளித்தல் முதலியவை மங்கலகரமான தெய்வீகத்தன்மை பொருந்திய காரியங்களாகப் பழைய நூல்கள் கருதுகின்றன.
அம்பிகையின் வழிபாட்டில் மஞ்சள் முக்கியமானது. சுமங்கலிகளின் சுமங்கலத் தன்மையின் சின்னமாகவும் மஞ்சளே திகழ்கின்றது.

திருமணம் பரியும் போது மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோத்துப் பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போடுகின்றனர். அவசரக் கோலக் கல்யாணத்தில் மஞ்சள் கயிற்றில் வெறும் மஞ்சளைக் கோத்து அணிவிப்பதும் அங்கீகரிக்கப்பட்டதொரு வழக்கமாகும். ஏழ்மையில் உழலும் சுமங்கலிகள் மஞ்சள் கயிற்றில் மஞ்சளைத் தாலியாகப் பூண்டிருப்பதைக் காணலாம்.

ஒரு பெண் திருமணமானவள் என்பதற்கு அசைக்க முடியாத சான்று பகரும் அடையாளச் சின்னங்கள் மஞ்சள் கயிறும் மஞ்சளும்.

நெல்லைக் கையால் தேய்த்து உமி நீக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படும் அரிசியின் முனை உடைந்திருக்காது. இப்படிப்பட்ட முனைமுறியாத அரிசியில் மஞ்சள் பொடியை நீரிட்டுப் பிசைந்து சேர்த்து செய்யப்படுவதே அட்சதை எனப்படுவது. ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் தாங்கி வழங்கும் சாதனமாக அட்சதை விளங்குகிறது. பூஜையின்போது மலர்கள் இல்லாமல் போனால் மலர்களுக்குப் பதில் அட்சதையை வைத்தும் பூஜையைச் செய்வதுண்டு.

மஞ்சளைக் காப்பாக மணிக்கட்டில் அணிந்து கொள்வது சில நிகழ்ச்சிகளில் காணப்படும். இதுதான் மஞ்சள் காப்பு எனப்படும். இப்போதெல்லாம் மஞ்சள்கிழங்கைக் கட்டாமல் வெறும் மஞ்சள் நூல் அல்லது கயிறைக் கட்டுகிறார்கள்.

மங்கலகரமான நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ், புதுக்கணக்கின் ஏடு முதலியவைகளில் மஞ்சள் தடவுகிறோம். மஞ்சள் பொடியில் தண்ணீர் கலந்து பிள்ளையார் பிடித்து அர்ச்சனை செய்கிறோம். வழிபாட்டில் பயன்படுத்தப்படும் மஞ்சளால் ஆன தற்காலிகமான உருவங்களை ஹரித்ரா பிம்பம் என்பார்கள். மஞ்சளாம் பிடித்துவைத்த பிள்ளையாரும் இந்த வகைதான்.

ஸ்ரீதேவியின் அடையாளமாக வலது பக்கமாகச் சுழன்றிருக்கும் ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்து வழிபாட்டில் பயன்படுத்துவது உண்டு. மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி ஆகியோர் அணிந்திருக்கும் ஆடையை பீதாம்பரம் என்பார்கள்.

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்துக்கு சில தியான சுலோகங்கள் இருக்கின்றன. ஒரு ஜபத்துக்கு முன்னர் ஜபத்துக்குரிய தெய்வத்தை மனதில் ஆவாஹணம் செய்துகொள்ளவேண்டும். ஆவாஹணம் என்றால் மனதிற்குள்ளே எழுந்தருளப் பண்ணிக்கொள்ள வேண்டும். அந்த ஆவாஹணத்துக்கு உதவி செய்யக்கூடியது தியான சுலோகம். சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கிற உருவத்தை மனத்திரையில் உருவகப்படுத்தி ஏற்றிவைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு இது உதவும். ஸ்ரீலலிதாவுக்கு உரிய தியான சுலோகங்களில் ஒன்று இப்படி வரும்:

த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸிதவதனாம்
பத்மபத்ராயதாக்ஷீம்
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலித ஹேமபத்மாம் வராங்கீம்....

பீதவஸ்த்ரம் என்பது பீதாம்பரம்தான். பீதாம்பரம் என்பது பொன்னால் ஆன ஆடை அல்லது பொன்னிற ஆடையைக் குறிக்கும். அல்லது மஞ்சள் நிற ஆடையையும் குறிக்கும். மந்திர சாஸ்திரத்திலும் மஞ்சள் நிறையப் பயன்படுத்தப்படுகிறது
(5 photos)
இடிந்த நிலையில் காணப்படும் பழமையான சிவன் கோவில்

நீடாமங்கலம் வருவாய் வட்டத்தில் உள்ளது பழைய நீடாமங்கலம். இங்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. இக் கோவில் மாடக் கோவில் வகையை சேர்ந்ததாக கூறப்படுகிறது. முற்றிலும் கருங்கல் தூண்களால் அமைக்கப்பட்ட முன் மண்டபம் தற்போது இடியும் நிலையில் உள்ளது. 7 அடுக்கு ராஜ கோபுரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்து இருந்த இடம் தெரியாமல் காட்சியளிக்கிறது.

ராஜகோபுரம் நுழைவு வாயிலில் 5 மீட்டர் தூரத்தில் பலி பீடம் மட்டும் உள்ளது. கொடி மரம் அண்மையில் பழுதடைந்து விழுந்து தற்போது இல்லாத நிலையில் காட்சி தருகிறது. சுமார் 25 அடி உயரத்தில் செங்கல் சுண்ணாம்பால் கட்டப்பட்ட மதில் சுவர் இடிந்து உள்ளது. இடியாமல் உள்ள மதில் சுவர் நேற்று கட்டியது போல் காட்சி தருகிறது. அடி பீடம் கருங்கல்லாலும் மேல் மண்டபம் செங்கல்லால் கட்டப்பட்ட மூலவர் கோபுரம் இட மேல் மண்டபம் இடிந்த நிலையில் செடி, கொடிகள் முளைத்து உள்ளது.

இந்த இடத்திலே மூலவரான சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். எல்லா சிவாலயங்களிலும் மூலவர் கோபுரத்திற்கு வெளியே தான் தனி சன்னதி கொண்டு அம்பாள் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் கருவறை அருகிலேயே அம்பாள் மீனாட்சி அம்மையார் திருப்பெயருடன் அழகிய திருமேணியாய் நின்ற கோலத் தில் காட்சி தருகிறாள். இக்கோவில் சிதிலமடைந் துள்ளது. பத்ரகாளியம்மன், சுப்பிரமணியர், வள்ளி, தெய் வானை, தெட்சிணா மூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகன் முழுவதுமாக சிதிலமடைந்துள்ளதால் கோவிலுக்குள் ஒரே இடத்தில் இம் மூர்த்திகள் பக்தர்கள் வழி பட வைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் 23 ஐம்பொன் சிலைகள் இருந்ததாகவும், தற்சமயம் கிடைத்த 13 விலை மதிப்பற்ற சிற்ப கலை நுட்பத்துடன் வடிவமைக்க ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருவாரூரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 6 கால பூஜை, வைகாசி விசாகம், திருவாதிரை, மகா சிவராத்திரி போன்றவைகள் சிறப்பாக நடைபெற்ற இக் கோவிலில் கிராமத்தின் நிர்வாகத்தில் ஒரு கால பூஜை கோவிலாக உள்ளது. கிழக்கு நோக்கி சன்னதி கொண்ட இக்கோவிலில் திருப்பணி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க் கிறார்கள்.

கும்பகோணம் அருகே பழமையான கோயிலில் அரிய குபேரன் சிலை

கும்பகோணம்:தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த துக்காச்சியில் சிதிலமடைந்து காணப்பட்ட ஆபத் சகாயேஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள், அரசின் நிதி உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோயில் 12ம் நூற்றாண்டில் விக்கிரம சோழனால், திருப்பணி செய்யப்பட்ட தலம். இங்கு குபேரனின் கருங்கல் திருமேனி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் நந்திகேஸ்வரர், பலி பீடம், வலதுபுறம் கிழக்கு நோக்கியவாறு இரண்டரை அடி உயரத்தில் சிவகணம் போன்ற தோற்றத்தில் குபேரன் சிலை உள்ளது.

சிலையை இதுவரை குண்டோதரன், பூதகணம், துவாரபாலகர் என்றே அழைத்தனர். ஆனால் தமிழகத்தில் உள்ள சில திருத்தலங்களில் மட்டுமே காணக்கூடிய அரிதான குபேரனின் சிலை என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 
 
 
 

அருள்மிகு கரிவரத பெருமாள் திருக்கோயில்

மூலவர்:கரிவரத பெருமாள்
அம்மன்/தாயார்:பெருந்தேவி தாயார்
பழமை:1000 வருடங்களுக்கு முன்
ஊர்:வீரபாண்டி
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு

தல சிறப்பு:பெருமாளை வணங்கிய நிலையில் இங்குள்ள ஆஞ்சநேயர் பவ்யமாக காட்சியளிப்பது தலத்தின் சிறப்பு.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு கரிவரத பெருமாள் திருக்கோயில் வீரபாண்டி, விழுப்புரம்.

பிரார்த்தனை:பிராத்தனைகள் நிறைவேற இங்குள்ள பெருமாளையும், தாயாரையும் வணங்கிச் செல்கின்றனர்.

நேர்த்திக்கடன்:இங்குள்ள பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:ஒவ்வொரு வருடமும் இவ்வூரில் சிவ பார்வதி வீதியுலா நடந்து ஒரு வாரம் கழித்து கரியவரதர் கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மூலவர் கரிவரத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். பெருமாளை வணங்கிய நிலையில் அனுமனும், கண்களில் கருணை பொங்கும் முகத்துடன் எழுந்தருளியிருக்கும் பெருந்தேவித் தாயாரையும் தரிசிக்கலாம்.

தல வரலாறு:ஒருமுறை, இரண்டாம் கோப்பெருஞ் சிங்கன் எனும் பல்லவ மன்னன், வீரபாண்டியநல்லூர் கிராமத்துக்கு வந்தான். அந்த ஊரின் சிவாலயத்துக்குச் சென்று, தேவியின் கருணைப் பார்வையில் மெய் மறந்தவனாக நின்றான். மூலவர் அதுல்ய நாதேஸ்வரரின் முன்னே பவ்யமாக நின்றான். கண்கள் மூடிப் பிரார்த்தித்தான். என் சிவனே! இந்த ஊர் சிறப்புறத் திகழ வேண்டும். தாகம் தணிக்கத் தண்ணீரும் சாப்பிட தானியங்களும் குறையறக் கிடைக்கும் வகையில், பூமி செழிக்க வேண்டும். பசி-பட்டினியின்றி, அனைவரும் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ வேண்டும். இந்தக் தேசத்தை ஆள்பவனுக்கு, மக்களின் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தவிர வேறென்ன வேண்டும் இறைவா! என்று பிரார்த்தித்தான். அன்றிரவு, மன்னனின் கனவில் வந்த இறைவன், இன்று வழிபட்ட ஆலயத்துக்கு அருகிலேயே இன்னொரு கோயிலை எழுப்புவாயாக! எனச் சொல்லி மறைய... சிலிர்த்துப் போனான் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்.

விடிந்ததும் ஊர்ப்பெரியவர்களிடம் விவரம் சொல்ல, ஊர்மக்கள் திரண்டு, மன்னனை வாழ்த்தினார்கள்; கோஷமிட்டார்கள். ஹரியும் சிவனும் ஒன்று என்று உணர்ந்து வழிபடுகிறவர்கள் நாங்கள். எங்கள் ஊரின் மையத்தில், அழகிய ஆலயமாக, பிரமாண்டமான கோயிலாக ஸ்ரீ அதுல்யநாதேஸ்வரர் கோயில் உள்ளது. இதற்கு அருகில், திருமாலுக்குக் கோயில் அமையுங்கள். ஏனென்றால், உலகையே ஆளுகிற எங்கள் பெருமாள், உலகளந்த பெருமாளாகக் காட்சி தரும் திருக்கோயிலூரைத் தரிசிக்க, பல மைல் தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டால், இக்கரை வரைக்கும் சென்று, பெருக்கெடுத்து ஓடுகிற தண்ணீரைக் கண்டு நடுங்கியபடி, அக்கரையில் தெரிகிற கோயில் கோபுரத்தை மட்டும் தரிசித்துவிட்டு, ஊர் திரும்பியிருக்கிறோம். ஆகவே எங்கள் ஊரில், பெருமாளுக்குக் கோயில் கட்டிக் கொடுங்கள் மன்னா! என்றனர். அதன்படி, ஊர்மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, வீரபாண்டியநல்லூர் எனும் அந்தக் கிராமத்தில், அற்புதமான வைணவக் கோயிலைக் கட்டிக் கொடுத்தான் இரண்டாம் கோப்பெருஞ்சிங்க மன்னன். இந்தத் தலத்து இறைவனின் திருநாமம்-ஸ்ரீ கரியசேவக விண்ணகர் எம்பெருமான். தாயாரின் திருநாமம்-ஸ்ரீபெருந்தேவி தாயார். சிவாலயமும் வைணவக் கோயிலும் அருகருகில் இருக்க.... அந்த ஊர், மிகச் செழுமையான கிராமமாக வளர்ந்தது.

அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளை வணங்கிய நிலையில் இங்குள்ள ஆஞ்சநேயர் பவ்யமாக காட்சியளிப்பது தலத்தின் சிறப்பு.

கோபுரம் இட மேல் மண்டபம் இடிந்த நிலையில் செடி, கொடிகள் முளைத்து உள்ளது.வருந்த தக்க விஷயம்.
(6 photos)
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

மூலவர்:வரதராஜப்பெருமாள்
அம்மன்/தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
பழமை:500 வருடங்களுக்கு முன்
ஊர்:கச்சிராப்பாளையம்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:வைகாசி பிரமோற்சவம், சித்திரை மாதம் சுவாதியில் நடைபெறும் தேர்த்திருவிழா

தல சிறப்பு:பொதுவாக பல கோயில்களில் பெருமாளின் வலதுகரம் மேலுயர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல் இருக்கும். ஆனால், இங்கு பெருமாள் மாறுபட்டு, தனது வலது திருக்கரத்தை பூமியை நோக்கி நீட்டிய வண்ணம், திருப்பதியைப் போல் அருள்பாலிப்பது தனி சிறப்பு.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் கச்சிராயப்பாளையம் விழுப்புரம் மாவட்டம்.

பொது தகவல்:இக்கோயிலை சுற்றி திசைக்கு ஒன்றாக விநாயகர் கோயில், மருதையான் கோயில், நாகபுரத்து மாரியம்மன், சப்தகன்னிமார், பெரிய நாயகி அம்மன், அங்காளம்மன், பாலமுருகன், சங்கிலி சாமியார், தியாகப்பாடி அம்மன், கங்கையம்மன் கோயில்கள் உள்ளன.

நேர்த்திக்கடன்:பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள பெருமாளை வழிபடுகின்றனர்.பெருமாளுக்கும், தாயார்களுக்கும் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:இம்மலையில் யானைக்குகை என்னும் ஒரு சுரங்கக் குன்றும் உள்ளது. யானை ஒன்றைப் பின்னாலிருந்து பார்ப்பது போன்ற அமைப்பில் உள்ளது. இச்சுரங்கத்தின் தலைப்பகுதி சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. காரணம் கச்சிராய மன்னனின் எல்லையில் நுழையும் இடம் தலைவாசல் என்று அழைக்கப்படுவதால், இந்த சுரங்கப்பாதையும் அதுவரை நீண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலிற்கு ராஜகோபுரம் இல்லை. முன்பகுதியில் கருட ஸ்தம்பம் மிக உயரமாக உருளை வடிவ தூணாக நிற்கிறது.

தல வரலாறு:கி.பி. 15ம் நூற்றாண்டில் கச்சியராயன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்த பகுதி, அவன் பெயராலேயே கச்சிராய பாளையம் என்று அழைக்கப்பெற்று, தற்போது கச்சிராப்பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் மையப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள அழகிய மலைக்குன்றின் மேல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தென்பகுதியை ஒட்டி கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கோமுகி என்கிற புண்ணிய நதி ஓடுவது சிறப்பானது. அருள்ஞான சித்தரும், தில்லை அருள் ஜோதிலிங்க சுவாமிகளும் வாழ்ந்து அருளாசி புரிந்த ஞானமலைக் குன்று இதுவாகும். வள்ளலார் வாழ்ந்த புண்ணிய பூமியான வடலூரில் உள்ள சத்திய ஞானசபையில் ஆசிரமம் அமைத்து சமாதி நிலையை அடைந்தார் ஜோதிலிங்க சுவாமிகள் இப்போதும் அங்கே கச்சிராயப்பாளையம் சுவாமிகள் என்றே அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஆய்வு செய்தவர்கள் முற்காலத்தில் இப்பகுதியில் அரசாட்சி செய்த முஷ்குந்த சக்கரவர்த்தியால் இக்கோயில் கட்டப்பட்டு பின்னர் நாயக்க மன்னர்களாலும் அதன்பிறகு கச்சிராய மன்னனாலும் புனரமைக்கப்பட்டு, நித்திய கால பூஜைக்கு பல ஏக்கர் நிலங்களும், வெகுமதிப்புள்ள பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வெட்டுச் சான்றுகள் மூலம் கூறுகின்றனர்.

அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக பல கோயில்களில் பெருமாளின் வலதுகரம் மேலுயர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல் இருக்கும். ஆனால், இங்கு பெருமாள் மாறுபட்டு, தனது வலது திருக்கரத்தை பூமியை நோக்கி நீட்டிய வண்ணம், திருப்பதியைப்போல் அருள்பாலிப்பது தனி சிறப்பு.
அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:அபிமுகேஸ்வரர்
அம்மன்/தாயார்:அமிர்தவள்ளி
தல விருட்சம்:நெல்லிமரம்
தீர்த்தம்:மகாமக குளம்
பழமை:500 வருடங்களுக்கு முன்
ஊர்:கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் விழா நடக்கும். தினமும் சுவாமியும் அம்பாளும் எழுந்தருள்வர்.

தல சிறப்பு:இந்த கோயிலில்தான் மிக உயரமான பைரவர் சிலைஉள்ளது. நவக்கிரக சன்னதியில் இதுமிகவும் வித்தியாசமானது. எட்டு கிரகங்கள் ஒரே உயரத்தில் இருக்க சனி கிரகம் மட்டும் உயரம் கூடுதாக இருக்கிறது.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்.போன்:+91 435-2420187

பொது தகவல்:இது ஒரு நோய் தீர்க்கும் தலம் ஏனெனில் இங்கு நெல்லி மரமே தல விருட்சம் நெல்லிக்காய்க்கு பல நோய்களை நீக்கும் சக்தி உண்டு. இக்கோயிலில் நெல்லிக்காய் படைத்து தானம் செய்தாலே நோயற்ற வாழ்வு வாழலாம்.

தலபெருமை:கும்பகோணம் மகாமகத்தின் போது குளக்கரையில் காட்சி தரும் 12 தெய்வங்களுள் ஒருவர் அபிமுகேஸ்வரர். இவர் தேங்காயாக இருந்தது லிங்கமாக மாறியவர்.

சிறப்பம்சம்: இந்த கோயிலில் பைரவர் சிலை முக்கியமானது மகா மக கோயில்கள் பனிரெண்டிலும் உள்ள பைரவர்களைவிட இவர் உயரமானவர்கள். யோக தெட்சிணாமூர்த்தி ஒரு கால் மடித்த நிலையில் அமர்ந்துள்ளார்.. சனி தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் வழிபடுவதன் மூலம் பிற தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை சனிக்கிழமைகளில் இவருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றுவதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். அம்பாள் அமிர்தவள்ளி நினைத்த காரியத்தை நடத்தித் தரக் கூடியவள். அபிமுகேஸ்வரர் சன்னதியின் முன்பு உள்ள துவாரபாலகர்கள் நடராஜரைப் போல நடனமிடும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.

தல வரலாறு:முன்னோரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார் , சிவபெருமான் அவரிடம் நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத் தோடு சேர்ந்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய் அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயைவை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில்நூல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய், அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன், என்றார்.

இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது கும்பம் மிதந்தது. கும்பத்திலிருந்த அந்த தேங்காய் சிதறி விழுந்தது. அந்த தேங்காய் லிங்கமாக மாறியது. இவரே அபிமுகேஸ்வரர் ஆவார். அபிமுகம் என்றால் நேர்கொண்ட பார்வை என பொருள். கும்பகோணம் மகாமக குளத்தைப் பார்க்கும் வகையில் இவரது கோயில் குளக்கரையிலேயே அமைந்துள்ளது.

சிறப்பம்சம்:இந்த கோயிலில்தான் மிக உயரமான பைரவர் சிலைஉள்ளது. நவக்கிரக சன்னதியில் இதுமிகவும் வித்தியாசமானது. எட்டு கிரகங்கள் ஒரே உயரத்தில் இருக்க சனி கிரகம் மட்டும் உயரம் கூடுதாக இருக்கிறது.