திங்கள், 7 அக்டோபர், 2013

படலம் 1: மேற்கு வாயில் பூஜாமுறை!

இந்த முதலாவது படலத்தில் மேற்கு நோக்கி இருக்கும் திருக்கோயில் லிங்கத்திலும், ஸகள வடிவத்திலும், முகலிங்கத்திலும் க்ருஹஸ்தாச்ரமத்தை உடைய சிவாச்சார்யனால் பரார்த்த பூஜா முறை செய்யத் தகுந்தது என நிரூபணம் செய்யப்படுகிறது. முதலில் மேற்கு நோக்கி இருக்கின்ற திருக்கோயில்களில் பரார்த்த பூஜை செய்வதால் அரசன், தேசம், இவைகளுக்கு பூர்ண நிறைவையும், போகம், முக்தியையும், பலன் கொடுக்கக்கூடியதாக பலன்கள் நிரூபணம் செய்யப்படுகிறது. சிவாச்சாரியனால் தினம்தோறும் காலையில் அவசியமான சவுச ஸ்னானம் முதலியவைகள் செய்த பிறகு த்விஜன் மனுவிற்கு ஏற்பட்ட அவசியம் செய்யவேண்டிய சந்தியாவந்தனம் நிரூபிக்கப்படுகின்றன. பிராம்மணர்களுக்கு விதிக்கப்பட்ட சவுச, ஸ்நான, ஹோமம், முதலிய விஷயங்களில் ஸ்ருதி, ஸ்மிருதி, முதலியவைகளில் கூறப்பட்ட அனுஷ்டானத்தை, சிவபிராம்ணனால் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என வித்யாசம் காண்பிக்கப்படுகிறது. தன்னுடைய சாஸ்திரத்தில் கூறப்பட்ட ஸந்தியாமந்திர தர்பண விதிகளுக்கு பிறகே சிவ பிராம்மணர்களால் திருக்கோயில் பூஜைக்காக திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது. பிறகு ஆன்மசுத்தி, ஸ்தானசுத்தி, த்ரவ்ய சுத்தி, மந்திர சுத்தி, லிங்க சுத்தி என்று சொல்லக்கூடிய ஐந்து சுத்திகளின் நடுவில் முதலில் ஆத்ம சுத்தியானது நிரூபணம் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் கரன்யாஸபூர்வமாய் த்வாதசாந்த ரூபமாக ஜீவான்மசேர்க்கையும், பாஞ்ச பவுதிகமான சரீர சுத்தியும், கரன்யாச, அங்கன்யாச, அஷ்டத்ரிம்சத் கலாந்நியாசத்தினால், சரீரத்தை சிவ சரீரமாக கல்பிதமான முறை அந்தர்யாக பிரகாரங்கள் என்பது முதலான விவரங்கள் கூறப்பட்டு இருக்கின்றன.

பிறகு ஸ்தான சுத்தி த்ரவ்ய சுத்தி கூறப்படுகிறது. த்ரவ்ய சுத்தி நிரூபணத்திலே ஸமயத்திற்கேற்ப பாத்யம், ஆசமனம், அர்க்யங்கள், விஷயத்தில் உத்தம மத்யம, அதம முறைகள் கூறப்பட்டு இருக்கின்றன. பிறகு மந்திர சுத்தி கூறப்படுகிறது. பிறகு சாமான்யர்க்யம் சேர்ப்பது. வழியாக பூஜைகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு லிங்க சுத்தி முறையானது விதிக்கப்படுகிறது. அந்த இடத்தில் த்வார பூஜை செய்தபிறகு தான் ஆசன கல்பனை முறையை நிரூபிக்கப்படுகிறது. பிறகு லிங்க சுத்தி முறையானது விதிக்கப்படுகிறது. அந்த இடத்தில் த்வார பூஜை செய்த பிறகு தான் பஞ்ச சுத்தி செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. பிறகு ஆசன கல்பனை முறை நிரூபிக்கப்படுகிறது. அங்கு அனந்தாசன, ஸிம்மாஸன, யோகாசன, பத்மாசன, விமலாசனங்களின் ஸ்வரூப வர்ணனம், அபிஷேகம் ஆவாஹன காலங்களில் இந்த ஆசனங்களில் தனித்தனியாக கல்பிக்கும் முறையானது காணப்படுகிறது. பிறகு பஞ்சப்பிரும்ம மந்திரம் அஷ்டத்ரிம்சத் கலான்யாசம் முதலியவைகளால் மூர்த்தி கல்பன முறையானது கூறப்படுகிறது. ஆவாஹன, ஸ்தாபன, ஸன்னிதான, ஸன்னிரோதன, அவகுண்டன, அம்ருதீகரண என்று சொல்லக்கூடிய முத்திரைகளை காண்பிக்க வேண்டிய முறை, பாத்யம், ஆசமனம், அர்க்யம், புஷ்பபதானமான முடிவை உடைய பத்து சம்ஸ்காரங்கள் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. கந்தம், புஷ்பம், தூபம், தீபம் உபசாரங்களினால் சிவனை பூஜிக்கவேண்டும் என கூறப்படுகிறது. மந்திர பூர்வமான நைவேத்யம் முக்யமான ஆபரண அர்ப்பணம் தீபாராதனை முறைகள் கூறப்படுகின்றன. கண்ணாடி, குடை, சாமரம், காண்பிப்பது செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

இரவில் தீபதான கடைசியில் நீராஜனம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. மஹா ஹவிர் நிவேதனத்திற்கு பிறகு பலி, ஹோமங்கள் செய்ய வேண்டும். ஸ்நபன காலத்தில் மந்திரம், வீணாகானம் வேதாத்யயனம், ஸ்தோத்திர பாடம் முதலியவைகள் கூறப்படுகிறது. அதற்குமேல் சகல விதமான பாட்டுக்கள், தூபம் முடிவாக அபிஷேக காலத்தில் பாடவேண்டிய முறையானது காண்பிக்கப்படுகிறது. பிறகு பாட்டோடு கூடிய நாட்டிய விதியானது விதிக்கப்படுகிறது. தமிழ்பாஷைகளோடு கூடிய பாட்டோ, ஸம்ஸ்ருத பாஷை முதலிய பதினெட்டு பாஷை பாட்டோடு கூடியதாகவோ, நாட்யம் செய்யவேண்டியது என கூறப்பட்டு இருக்கிறது. அடுத்து ருத்திர கன்னிகையின் லக்ஷணம் கூறப்படுகிறது. முடிவில் சுளுகோதக விசர்ஜனம் செய்யவேண்டும். இதன்படி பூஜா முறையின் கிரியா கலாபங்களை காண்பிக்கப்பட்டது. ஸாதகனால் ஸித்திப்பதற்காக பூஜை முறையினுடைய விதியானது கூறப்படுகிறது. பிறகு சிவாகமத்தில் கூறப்பட்ட மந்திரங்களினால் மட்டும் செய்யப்படுகின்ற பூஜை உத்தமமாகும். சிவாகமங்களில் கூறப்பட்டதும் வேதத்தில் சொல்லப்பட்டதுமான மந்திரங்களினால், செய்யப்படும் பூஜை மத்யமமாகும். வேதத்தில் சொல்லப்பட்ட மந்திரத்தினால் மட்டும் பூஜை செய்வது அதமம் என பூஜா விஷயத்தில் மூன்று தன்மைகள் கூறப்பட்டு இருக்கிறது. பிறகு சைவ மந்திரங்களினுடைய உயர்வுகள் கூறப்படுகின்றன.

பீஜ மந்திரங்களிலிருந்து உண்டானது ருத்திராத்யாயம் என கூறப்படுகிறது. ஆகையினால் ருத்திராத்யாய ஸ்தானத்திலே, பீஜ மந்திரம் சொல்லவேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது. பூஜா முறையானது, கூறப்பட்டு இருக்கிறது. முன்பு கூறப்பட்ட பூஜா முறையானது கிழக்கு, தெற்கு, வடக்கு வாயிலை உடைய கோயில்களில் லிங்கம் ஸகலம் முக லிங்க விஷயங்களில் ஒரே ஆகமத்தால் என கூறப்பட்டு மேற்கு வாசல் உள்ள கோயில்களில் விசேஷமாக செய்ய வேண்டியவைகளை கூறப்பட்டு இருக்கிறது. வாசல் படிக்கு நேராக இருக்கின்ற ஈஸ்வரனுக்கு மேல்முகம் கல்பித்து ஈஸ்வரனுடைய இடது பக்கத்திலோ, வலது பக்கத்திலோ, மனோன்மணியை ஸ்தாபித்து இரண்டுகை ஒரு முகத்தோடு கூடிய தேவியையும் அப்படியே கர்பாவரணம், வித்யேசர்கள் கணேச, லோகேச, அஸ்திர ஆவரண விஷயத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கின்றது. ஈசனின் முன்னிலையில் விருஷபம், சூலம், கொடிமரம், கோபுரங்கள் செய்ய வேண்டும், பரிவார அர்ச்சனை விசேஷமாக கூறப்பட்டு இருக்கிறது. ஈசான தேசத்தில் சண்டிகேச ஸ்தானம் உண்டா? என்றும் தெற்கில் விக்னேச ஸ்தானம் கல்பிக்க வேண்டும் என விசேஷமாக கூறப்பட்டு இருக்கிறது. முடிவில் மற்றவையாவும், கிழக்கு வாசல் பூஜையோடு சமானம் என்று கூறப்பட்டு இருக்கின்றது. இந்த பிரகாரம், முதல் படல கருத்து சுருக்கமாகும்.

1. கிருஹஸ்தர்களுக்கு நன்மை அளிப்பதான நிஷ்கள, ஸகள, ஸகள நிஷ்கள திருமேனிகளின் பரார்த்த பூஜையில் மேற்கு திவாரபூஜை இது.

2. மேலும் அந்த பூஜை அரசன் அரசாங்கத்தின் அபிவிருத்தியையும், போக மோக்ஷத்தையும் கொடுப்பதாகும். காலையில் செய்ய வேண்டிய ஸ்நானத்தை செய்துவிட்டு

3. ஸூர்யச்ச என்பது முதலான மந்திரங்களால் மூன்று சந்த்யா காலங்களிலும் தீர்த்தத்தை அருந்தி ததிக்ராவிண்ண என்பதான மந்திரங்களால் தீர்த்த பிரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும்.

4. ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: என்பது முதலான மந்திரங்களினால் மூன்று முறை அஞ்சலி ஹஸ்தமாக அர்க்யம் விட வேண்டும். பிறகு அதே மந்திரத்தால் பத்து முறை ஜபிக்க வேண்டும்.

5. வேதம் தர்ம சாஸ்திரம் முதலியவைகளில் கூறப்பட்டுள்ள அனுஷ்டானத்தை பிராம்மண தன்மை சித்திப்பதற்காக தினந்தோறும் செய்ய வேண்டும். இதை செய்யா விட்டாலும் சைவானுஷ்டானத்தை தவறாமல் செய்ய வேண்டும்.

6. அந்த அனுஷ்டானத்தில் அவச்யமான சவுசம், ஸ்நானம், ஆசமனம் இவைகளிலோ ஸந்த்யாவந்தனம் தர்ப்பணம் ஹோமங்களிலும்

7. கிருஹபலி முதலியவைகளிலும் மற்ற பிராம்மணர்களுக்கு விதிக்கப்பட்ட எந்த அனுஷ்டானம் உண்டோ அதை செய்தோ, செய்யாமலோ இருக்கலாம் சைவானுஷ் டானத்தை கட்டாயமாக செய்ய வேண்டும்.

8. தன் சாஸ்த்ரமான சைவ சாஸ்த்ர  ஸ்ந்தியா வந்தன மந்திரங்களும் தர்ப்பணமும் செய்து கால்களை அலம்பிக் கொண்டு தேவாலயத்திற்கு போக வேண்டும்.

9. நன்கு ஆசமனம் செய்து உள்ளே நுழைந்து வடக்கு முகமாக தன் ஆசனத்தில் அமர்ந்து சுத்தமான வெண்மையான விபூதியை குழைத்து அணிந்து

10. கரன்யாஸம் செய்து தேஹமத்தியில் ஸூஷும்நையில் பிரகாசிக்கிற ஹூம்காரத்தை தியானித்து அசைவின்றி பிராணாயாமம் செய்ய வேண்டும்.

11. ஹூம்பட் என்று ரேசகத்துடன் கூடியதாக ஐந்து கிரந்திகளை பிளந்து அதிலிருந்து திரும்பியதாக

12. மூர்த்தி மந்திரத்தினால் ஜீவனை கிரஹித்து ஹூம்காரத்தின் மேல் கும்பகத்துடன் கூடியதாக வாயுவை மேல் நோக்கி சென்றதாக செய்ய வேண்டும்.

13. அந்த வாயுவினாலே திவாத சாந்தத்தில் இருக்கும் சிவனுடன் கூடியதாக சேர்க்க வேண்டும். இது ஆத்ம யோஜனமாகும். பிறகு ப்ருத்வீ முதலான பஞ்ச பூதங்களை சுத்தி செய்ய வேண்டும்.

பஞ்ச பூதங்கள்: ப்ருத்வீ, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் (மண், நீர், நெருப்பு, காற்று, வெளி)

14. பஞ்ச பூதங்களை நிவ்ருத்தி முதலான கலைகளாலும் அதன் அத்வாக்களாலும் வியாபித்திருப்பதாக எண்ணி முதலில் அந்த பூதங்களை சோதிக்க வேண்டும்.

15. பஞ்ச பூதங்களை தஹிப்பதும் ஒன்றுக் கொன்று பரஸ்பரமாக சோதிப்பதை மண்டலத்துடன் கூடியதாக செய்வதும் பூதசுத்தி என கூறப்பட்டுள்ளது.

16. சோதிக்க வேண்டியது இல்லாததும் கலைகளோடு மட்டும் கூடியதான சரீரத்திற்கு திவ்ய தன்மை உண்டாவதற்கு அம்ருதாப்லாவனம் செய்யவேண்டும்.

17. அம்ருத ஸ்வரூபியாகிற குண்டலினீ சக்தியை தியானித்து அதிலிருந்து உண்டான அம்ருதத்தை சொரிதலால் நனைந்ததாக கலைகளோடு கூடிய திவ்ய சரீரத்தை நினைத்துக் கொள்ள வேண்டும்.

18. ஹ்ருதயத்தில் ஆஸனத்தை தியானித்து அந்த ஆஸனத்தில் மூர்த்தியாகிற ஆத்மாவை ஸ்தாபிக்க வேண்டும். பிறகு அம்ருதாப்லாவனம் செய்து கரன்யாஸம் செய்ய வேண்டும்.

19. சந்தன பூச்சுடன் கூடிய கைகளை அஸ்த்ர மந்திரத்தால் கையை மேலும் கீழும் சுத்தி செய்து அவைகளில் (உள்ளங்கைகளில்) பிரம்ம மந்திரங்களை நியாஸம் செய்து கரதலத்தில் நேத்ரத்தை நியாஸம் செய்ய வேண்டும்.

20. சிவனின் அங்க மந்திரமான ஹ்ருதய, சிர, சிகா கவச அஸ்திர மந்திரங்களையும் நியாஸம் செய்து அதற்கு முன்னதாக சிவாஸநாய நம: சிவ மூர்த்தயே நம: சிவாய நம: என்று நியாஸம் செய்து திரும்பவும் கையில் சிவனை நியாஸம் செய்ய வேண்டும். கவச மந்திரத்தால் அந்த கையை சுற்றுதலான அவகுண்டனத்தை செய்ய வேண்டும். இவ்வாறு ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட அந்த கையை எல்லா கார்யத்திற்கும் உபயோகிக்க வேண்டும்.

21. கரநியாஸம் கூறப்பட்டு அங்கநியாஸம் கூறப்படுகிறது. தலையில் இருந்து பாதம் வரை பிரம்ம மந்திரமான ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ ஸத்யோஜாத மந்திரங்களையும், அங்க மந்திரமான ஹ்ருதய, சிரஸ், சிகா, கவச நேத்ர அஸ்திர மந்திரங்களையும் நியாஸம் செய்ய வேண்டும்.

22. மூலமந்திரத்தையும் பிரம்ம மந்திரங்களையும் நியாஸம் செய்த பிறகு சிவனை ஹ்ருதயத்தில் ஸ்தாபித்து ஹ்ருதயாதி அங்க மந்திரங்களை அந்தந்த இடங்களில் நியாஸம் செய்து அஷ்டத்ரிம்சத் கலாநியாசம் செய்ய வேண்டும்.

23. நேத்ரங்களில் நேத்ர மந்திரத்தை தியானித்து ஹ: அஸ்த்ராய பட் என்று திக்குகளில் பாவிக்க வேண்டும். பிறகு சிவமந்திரங்களை ஸ்மரித்து மஹாமுத்ரையை செய்ய வேண்டும்.

மஹா முத்ரையில் லக்ஷணம்:

ஒன்றுக்கொன்று பின்னிய கட்டைவிரல்களை உடைய தாய் மற்ற கை விரல்களை நீட்டியதாய் உள்ளது மஹா முத்ரையாகும். இது தேவதைகளை அழைப்பதற்கும் கூடுதல் குறைவு தோஷங்களை போக்கும் கிரியைகளை நிறைவு செய்யும் இலக்கண முடையதாகும்.

24. அஷ்டத்ரிம்சத்கலாநியாஸம் செய்து பஞ்சபிரம்ம மந்திரங்களையும் நியாஸம் செய்ய வேண்டும். ருத்ர சக்தியுடன் கூடியதான அக்ஷர நியாஸத்தை செய்ய வேண்டும்.

25. அக்ஷர நியாஸத்துடன் கூடியதாகவும், கண்டர் முதலான தேவர்களுடன் கூடிய கண்ட நியாஸம் செய்ய வேண்டும். மாத்ருகாநியாஸம் மட்டுமோ செய்தாலும் செய்யலாம்.

26. இவ்வாறே சரீரத்தை சிவமயமாக்கி கொண்டு பிறகு அந்தர்யாகம் செய்ய வேண்டும். ஹ்ருதயத்தில் பூஜையையும் நாபியில் ஹோமத்தையும் இரண்டு புருவத்தின் மத்தியில் ஸமாதியையும் பாவனை செய்ய வேண்டும்.

27. இவ்வாறு ஆத்மசுத்தி கூறப்பட்டது. அதன் பிறகு ஸ்தான சுத்தி சொல்லப்படுகிறது. கையை சொடுக்கி திக்குகளில் சுற்றி அவகுண்டனம் செய்ய வேண்டும்.

28. மூன்று பாத்திரத்தை எடுத்து கொண்டு ஆஸனத்தின் மேல் வைக்க வேண்டும். அவைகளில் முறைப்படி பாத்யம், ஆசிமனம், ஆர்க்யம் இம்மூன்றையும் கல்பிக்க வேண்டும்.

29. சந்தனம், விளாமிச்ச வேர், வெண்கடுகு, அருகம்புல், குங்குமப்பூ, தீர்த்தம் இவைகளுடன் கூடிய பாத்யமானது உத்தமம் ஆகும். குங்குமப்பூ இல்லாத பாத்யம் மத்யமமாகும்.

30. சந்தனம், விளாமிச்ச வேர் இவையுடன் கூடிய ஜலமானது அதம பாத்யமாகும். ஜாதிபத்திரி, விளாமிச்ச வேர், குங்குமபூ, பச்சகற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய் கிராம்பு

31. முரம் என்ற சிற்றேலத்துடன் கூடியது உத்தமமான ஆசமனீய ஜலமாகும். ஏலக்காய், கிராம்பு, பச்ச கற்பூரம், சிற்றேலம், ஜாதிக்காய் இவைகளுடன் கூடியது மத்யமமான ஆசமனம்.

32. ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் இவையுடன் கூடிய ஜலமும் அதமமான ஆசமனீயமாகும். தீர்த்தம், பால், தர்பை நுனி, யவை, அக்ஷதை எள் இவைகளுடன்.

33. நெல், வெண்கடுகு, இவையுடன் சேர்ந்தது உத்தமமான அர்க்ய ஜலமாகும். யவை, வெண்கடுகு, நெல், அரிசி இவையுடன் கூடியது மத்யமமான அர்க்ய ஜலமாகும். நெல் அரிசியுடன் கூடியது.

34. அதமமான அர்க்யமாக கூறி வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. வெண்கடுகு, சந்தனம், விளாமிச்ச வேர், அருகம்புல், இவைகளுடன் கூடியது பாத்யம்.

35. ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், ஜாதிக்காயுடன் கூடிய ஆசமனீய ஜலத்தையோ பூஜைக்கு அங்கமாக உபயோகிக்க வேண்டும்.

36. முன்பு கூறப்பட்டதையோ இப்பொழுது சொல்லப்பட்டதையோ கிரஹித்து மந்திரத்துடன் கூடியதாக பூஜிக்க வேண்டும். யவை, வெண்கடுகு, நெல், நுனி முறியாத அக்ஷதை இவைகளுடன் கூடியதும்.

37. நெல், அரிசி, அக்ஷதைகளுடன் கூடியதுமான ஐந்து அங்கம் அல்லது மூன்று அங்கம் அல்லது கேவலமான அர்க்யத்தையோ

38. பாத்திரத்தை ஹ்ருதய மந்திரத்தால் கற்பித்து மேலும் ஸம்ஹிதா மந்திரத்தை கூறி ஜலத்தை நிரப்பி திரவியங்களை அஸ்த்ரமந்திரத்தால் பிரோக்ஷித்து கவச மந்திரத்தால் அவ குண்டனம் செய்ய வேண்டும்.

39. ஹ்ருதய மந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்து தேனுமுத்ரையை காண்பிக்க வேண்டும். சந்தனத்தினால் திலக மிட்டுக்கொண்டு தலையில் புஷ்பம் வைத்து கொள்ளவேண்டும்.

40. இது திரவ்ய சுத்தி எனப்படும். மந்திரம் அறிந்தவன் ஓம்காரத்திலிருந்து நம: வரை மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது மந்த்ர சுத்தி எனப்படும்.

41. ஸாமாந்யார்க்கத்தை எடுத்து கொண்டு வாயிற் படியின் முன்பாக விருஷபத்தை பூஜிக்க வேண்டும். வினாயகரையும் சரஸ்வதியையும் வாசற்படியின் மேல் பூஜித்து நந்தியையும் கங்கையையும்

42. மஹாகாளரையும் யமுனையையும் முறையாக வாயிற்படியின் வலது இடது பக்கத்தில் பூஜிக்க வேண்டும். அவ்வாறே இரண்டு பக்கங்களிலும் விமலன், சுபாஹுவையும் பூஜிக்க வேண்டும்.

43. வலது காலால் உள்ளே நுழைந்து அஸ்த்திர மந்திரத்தால் திரையை பூஜிக்க வேண்டும். வாஸ்து பிரம்மாவை பூஜித்து நிர்மால்ய பூஜையை செய்ய வேண்டும்.

44. லிங்கத்திலிருந்து நிர்மால்யங்களை எடுத்து சண்டிகேசரிடம் ஸமர்பிக்க வேண்டும். அறிவாளியானவன் சிவலிங்கத்தையும் ஆவுடையாரையும் தீர்த்தத்தால் சுத்தி செய்ய வேண்டும்.

45. இது லிங்க சுத்தி எனப்படும். இவ்வாறு பஞ்ச சுத்தி கூறப்பட்டது. திவார பாலகர்களை பூஜித்த பிறகும் கூட பஞ்ச சுத்திகளை செய்யலாம்.

46. விசேஷமான சுத்தி ஆஸநம் ஸம்ஸ்காரம் இவைகளுடன் கூடியதாக செய்யும் பூஜை பரமேஸ்வரனிட மிருந்து எல்லா பலனையும் கொடுக்க கூடியதாகும்.

47. விசேஷமான சுத்திகள் முன்னதாகவே கூறப்பட்டு ஆஸனம் இப்பொழுது கூறப்படுகிறது. கணபதி, குரு ஆதாரசக்தி இவர்களையும் அனந்தன், தர்மன் முதலியோர்களையும்

48. அதர்மன் முதலானவர்களை அதச்சதனம் ஊர்த்வச்சதனம் பத்மம் கர்ணிகை இவைகளையும் வாமை முதலிய ஒன்பது சக்திகளையும் சூர்யமண்டலம் முதலிய நான்கு மண்டலங்களையும் அதிபதிகளையும் உடையதாக ஆஸன பூஜையை ஈசனுக்கு செய்ய வேண்டும்.

49. முடிவில் அந்தந்த மந்திரங்களை ஸ்மரித்து சிவாஸனம் பூஜிக்க வேண்டும். இவ்வாறு பஞ்சாஸனத்துடன் கூடியதான ஏகாஸன பூஜா முறை கூறப்பட்டது.

50. அனந்தன் ஆதார சக்தி இவையுடன் கூடியது அனந்தாஸனமாகும். தர்மன், அதர்மன், அதச்சனம் உர்த்வச்சதனம் இந்த வர்க்கங்களோடு கூடியது.

51. ஸிம்மாஸநமாகும், யோகாஸனம் சுத்த மாயாதத்வம் வரையிலாகும். எட்டு வித்யேச்வர பாவனை வரையில் பத்மாஸனம் ஆகும். சூர்ய மண்டலம் முதலிய மண்டலங்களுடன் கூடிய பத்மம் விமலாஸனமாகும்.

52. ஸ்நானம் ஆவாஹனம் இவைகளுக்கு முன்பாக தனித்தனியே ஐந்து ஆஸனங்களை பூஜித்து ஆஸனம் சங்கல்பித்து அதற்கு மேல் மூர்த்தி கல்பனம் செய்ய வேண்டும்.

53. மூர்த்தியின் மேல் ஈசானம் முதலிய பிரம்ம மந்திரத்தையும் முப்பத்தி எட்டு கலையுடன் கூடிய அஷ்ட த்ரிம்சத்கலாநியாஸம் செய்ய வேண்டும். அக்ஷர கண்ட நியாஸமாவது செய்ய வேண்டும்.

54. முப்பத்தி எட்டு கலையுடன் கூடிய பஞ்ச பிரம்மத்தை நியாஸம் செய்ய வேண்டும். வித்யாதேஹம் பூஜித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

55. ஸ்தாபனம், ஸந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம் செய்த பிறகு ஹ்ருதயாதி மந்திரத்தால் ஈசனின் அங்கத்தில் நியாஸம் செய்ய வேண்டும்.

56. அதற்கு மேல் ஒரே சிந்தனையோடு சிவனை ஆவாஹிக்க வேண்டும் தேனு முத்ரையையும் மஹாமுத்ரையையும் காண்பிக்க வேண்டும்.

57. பாத்யம், ஆசமனம், அர்க்யம், அருகம்புல், இவைகளை சமர்ப்பிக்க வேண்டும். பத்து ஸம்ஸ்காரங்கள் கூறப்பட்டன. இந்த உபசாரங்களால் சிவனை பூஜிக்க வேண்டும்.

58. வாசனை திரவ்யங்களை கலந்த சந்தனத்தை விருப்பப்படி அணிவிக்க வேண்டும். பலவிதமான புதியதான புஷ்பங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.

59. வெட்டிவேர், சந்தனம், குங்குலியம் முதலிய திரவ்யங்களால் தூபம் கூறப்பட்டு இருக்கிறது. பூஜை செய்யும் ஆசார்யன் கர்த்தாவின் விருப்பத்தை அனுசரித்து நல்லெண்ணெய் நெய் இவைகளால் ஆன தீபங்களை ஏற்ற வேண்டும்.

60. அணையா விளக்குகளை அவ்வாறே ஸமர்ப்பிக்க வேண்டும். மந்த்ர பூர்வமான ஹவிஸும், பருப்பு வகையால் ஆன அன்னத்தை ஆமந்த்ரண ஹவிஸாக சொல்லப்பட்டுள்ளது.

61. ஆபரணங்களை ஸமர்ப்பித்து திரும்பவும் தூபத்தை ஸமர்ப்பிக்க வேண்டும். அவ்விடத்தில் மங்களமான கீதங்களாலும் எல்லா வாத்யங்களாலும்

62. எல்லாவித நடனத்துடன் கூடியதாக வேண்டும் விருஷப கொடியோனான பரமேஸ்வரனை மகிழ்விக்க வேண்டும். தூபம் கொடுத்த பிறகு தீபாராதனை செய்ய வேண்டும்.

63. கட்டை விரல் மோதிர விரலுடன் கூடி வாஸனை யோடு கூடிய விபூதியால் சுற்றுதலை செய்து விபூதியை விட்டு விட்டு பிறகு விபூதியை எடுத்து பரமேஸ்வரனுக்கு திலகமிட வேண்டும்.

64. கண்ணாடியை காண்பித்து, குடை, சாமரம் இவைகளை சமர்ப்பிக்க வேண்டும் தீபங்கள் கொடுத்தபிறகு ராத்ரியில் நீராஜனம் செய்ய வேண்டும்.

65. மஹாஹவிஸ் நிவேதனத்திற்கு பிறகு பலியம் ஹோமத்தையும் செய்ய வேண்டும். ஆமந்த்ரண ஹவிஸ் நிவேதன காலத்தில் பலி அல்லது ஹோமத்தை செய்ய வேண்டும்.

66. பலிஹோமம் இரண்டு கிரியைகளையும் சேர்த்தோ, தனியாகவோ, செய்யலாம். அபிஷேகம் செய்யும் காலத்தில் மந்திரம் பாட்டு வீணை வாசிப்பதோ

67. வேதாத்யயனமோ ஸ்தோத்ர பாடங்களை படிப்பதையுமோ செய்ய வேண்டும். தூபத்தின் முடிவில் மற்ற தமிழ் முதலான பாஷைகளால் பாடுவதும் செய்ய வேண்டும்.

68. அதற்கு பிறகு தமிழ் மொழி முதலியவைகளால் பாடுதல் ஆடுதல் இவைகளுடன் பிழையில்லா ஸம்ஸ்கிருத மொழிகளாலும் பலவித ஸ்வரத்துடன் கூடியதாகவும்

69. பதினெட்டு வித பாஷைகளாலும் பாடலாம். பலவித தேசங்களிலும் உண்டான நாட்யங்களையும் செய்யலாம்.

70. விசேஷமாக உத்ஸவாதி காலங்களில் பற்பல பாடகர்களை கொண்டும் பாடச் செய்தல் வேண்டும். பலவிதமான ஸ்த்ரீகளை கொண்டும் இவ்விதமே நித்யோத்ஸவம் செய்ய வேண்டும்.

71. இளமையாகவும் அழகாகவும் உள்ள பெண்கள் கர்த்தாவின் அபிப்ராயபடி எனக்கு பணிவிடை செய்பவர்களாக கூறப்பட்டு உள்ளார்கள். ருத்ர கன்னிகைகள் என்பது அவர்களின் பெயராகும்.

72. அவர்களுடைய எண்ணிக்கை கிராமத்தில் உள்ள ஜனத்தொகையை அனுசரித்ததாக இருக்க வேண்டும். உத்ஸவத்தினுடைய முடிவில் நித்யோத்ஸவம் முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும்.

73. வாத்யம் வாசிப்பவர்களை எட்டு என்ற எண்ணிக்கை முறைப்படி ஏற்படுத்தவும் அதன் முடிவில் சுத்த நிருத்தமும் அதன் முடிவில் சுளுகோதமும் செய்ய வேண்டும்.

74. பிறகு விஸர்ஜனம் செய்து லயாங்கபூஜை செய்யவேண்டும். சாதகன் பூஜை பலன் சித்திப்பதற்கு லிங்கத் திலிருந்து பூஜையை ஸம்ஹரித்து

75. திரும்பவும் லிங்கத்தை சுத்தி செய்து சந்தனம் முதலியவைகளால் சிவனை பூஜிக்க வேண்டும். இவ்வாறு தினந்தோறும் செய்யாவிட்டாலும் முடிந்த வரையாவது செய்ய வேண்டும்.

76. உத்தமம், மத்யமம், அதமம் என்று என்னுடைய பூஜை மூன்று விதமாகும். சுத்தமான சைவ சம்பந்த மந்திரங்களால் மட்டும் செய்வது உத்தமமாகும்.

77. சிவாகமம் வேதம் இவைகளில் கூறிய மந்திரங்களால் பூஜிப்பது மத்யமமாகும். வேத மந்திரங்களால் மட்டும் பூஜிப்பது அதமமாகும். நித்யம் நைமித்திகமான பூஜையிலும் இந்த முறை கூறப்பட்டுள்ளது.

78. இந்த மூன்று உலகத்திலும் சைவ மந்திரத்திற்கு சமமான மந்திரம் கிடையாது. அதிலும் பீஜாக்ஷரத்தை உடைய மூலமந்திரமானது சிரேஷ்டம் என கூறப்படுகிறது.

79. பீஜ மந்திரங்களுக்கு உற்பத்தி ஸ்தானமாக உள்ள பிரணவம் முதலான மந்திரமும் லக்ஷம் அக்ஷரத்தை உடைய எல்லா மந்திரங்களும் ருத்ராத்யாயம் முதலியவைகளும் சிறந்ததாகும்.

80. அதற்கான பீஜ மந்திரத்தை அந்தந்த ஸ்தானத்தில் உபயோகம் செய்ய வேண்டும். எனக்கு விருப்பமாக உள்ள பீஜமந்திரத்திற்கு சமமான வேறு மந்திரம் இல்லை.

81. கிழக்கு முகம் தெற்கு முகம் வடக்கு முகமாக இருக்கின்ற ஸகள நிஷ்களமான லிங்கத்திற்கும் ஸகள பிம்பத்திற்கும் இது பொதுவான முறையாகும்.

82. ஹே பண்டிதர்களே மேற்கு திவார பூஜையில் உள்ள விசேஷத்தை கேளும். முன்பே எல்லா பூஜை முறைகளும் கூறப்பட்டு சில விசேஷம் கூறப்படுகிறது.

83. திவாரத்தை எதிர்நோக்கி உள்ள முகமாக ஊர்த்வ முகத்தை கல்பிக்க வேண்டும் லிங்கத்தின் இடப்பக்கத்திலோ வலது பக்கத்திலோ மனோன்மணியை ஸ்தாபிக்க வேண்டும்.

84. ஈசனைப் போன்று மனோன்மணியின் உருவமும் இருக்கும் மனோன்மணிக்கு ஒரே முகமும் இரண்டு கைகளும் உள்ளவளாகவோ பூஜிக்க வேண்டும். ஈசான மூர்த்தியை ஈசான திக்கிலோ தென் மேற்கிலோ பூஜிக்க வேண்டும்.

85. தத்புருஷ மூர்த்தியை கிழக்கு திசையிலோ மேற்கு திசையிலோ பூஜிக்க வேண்டும் அகோர மூர்த்தியை தெற்கிலோ வடக்கிலோ பூஜிக்க வேண்டும்.

86. வாமதேவ மூர்த்தியை வடக்கிலோ தெற்கிலோ பூஜிக்க வேண்டும். மேற்கிலோ கிழக்கிலோ ஸத்யோஜாத மூர்த்தியை ஸ்மரித்து பூஜிக்க வேண்டும்.

87. ஹ்ருதய மந்திரத்தை தென்கிழக்கிலோ வடமேற்கிலோ பூஜிக்க வேண்டும். சிரோ மந்திரத்தை வடகிழக்கிலோ தென் மேற்கிலோ சிகா மந்திரத்தை தென் மேற்கிலோ வடகிழக்கிலோ பூஜிக்க வேண்டும்.

88. கவச மந்திரத்தை வடமேற்கிலோ தென் கிழக்கிலோ பூஜிக்க வேண்டும். கிழக்கு முக பூஜை மேற்கு முக பூஜையிலும் அஸ்த்ரமந்திரத்தை நான்கு திக்கிலும் பூஜிக்க வேண்டும்.

89. வித்யேச்வர ஆவரண பூஜையை கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ சுற்றிலும் பூஜிக்க வேண்டும். கணேச ஆவரண பூஜையை வடக்கிலிருந்தோ தெற்கிலிருந்தோ ஆரம்பித்து பூஜிக்க வேண்டும்.

90. லோகேசாவரணத்தை கிழக்கிலிருந்து இருப்பதாகவும் அஸ்த்ரம் முதலியவைகளையும் அவ்வாறே (கிழக்கிலிருந்து) பூஜிக்க வேண்டும். ஸ்வாமிக்கு முன்பாக வ்ருஷபம், சூலம், த்வஜஸ்தம்ப ஸ்தானம் இவைகளும் கோபுரமும் ஏற்படுத்த வேண்டும்.

91. பரிவார தேவதையின் பூஜை கிழக்கிலிருந்து ஆரம்பித்து பூஜிக்க வேண்டும். மேற்கு திசையிலிருந்து தென் மேற்கு திசை வரையிலுமோ பரிவார தேவதார்ச்சனை செய்யலாம்.

92. சுவாமியின் இடதுபுறம் கோமுகமானது வடக்கு நோக்கியதாக அமைக்க வேண்டும். சண்டிகேஸ்வரரை ஈசான திக்கிலும் வினாயகரை நிருதி திக்கிலும் ஸ்தாபிக்க வேண்டும்.

93. மற்ற எல்லா விதமான ஸ்தானம் பூஜை விஷயங்கள் கிழக்கு திவார அர்ச்சனைக்கு சமமானதாக ஆகும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் மேற்கு வாயில் அர்ச்சனை முறையாகிய முதல் படலமாகும்.
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக  சிலர் ஸ்ரீராம ஜெயத்தை  லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். ரா என்றால் இல்லை மன் என்றால் தலைவன். இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது இதன் பொருள்.
ஆனி மாதம் யாருக்கு லாபம்?

ஆனி மாதம் எப்படி இருக்கும் (16.06.11 முதல் 16.07.11 வரை) 12 ராசிகளுக்கான பலன்களும் பரிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் (குடும்ப மகிழ்ச்சி)

லட்சியத்துடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேறும் மேஷ ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக சூரியன், புதன், சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ராசிநாதன் செவ்வாய் பலமற்று இருக்க நட்பு கிரகங்களால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும். முன்னேற்றம் தருகிற பாதை எதுவென அறிந்து நடைபோடுவீர்கள். பேச்சில் இனிமையும் சாந்தமும் அதிகரிக்கும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். பணிகள் சிறப்பதற்கான வாய்ப்பு அமைந்து தாராள பணவரவு பெறுவீர்கள்.  அரசு தொடர்புடைய செயல்பாடுகள் எளிதாக நிறைவேறும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு. உடல்நலம் சீராக இருக்கும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து குடும்ப நலம் காத்திடுவர். தொழிலதிபர்கள் உற்பத்தி, தரம் உயர்ந்து புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவர். ஆதாய பணவரவு உண்டு. பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி கூடுதல் வருமானம் பெறுவர். பிறசலுகைகளும் கிடைக்கும். குடும்பத்தேவை நிறைவேறும். வியாபாரிகள் சந்தையில் குறைந்த போட்டியை எதிர்கொள்வர். விற்பனை பெருகி உபரி வருமானம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணம், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவர். குடும்பப் பெண்கள் கணவருடன் ஒற்றுமை, உற்சாகத்துடன் நடந்து குடும்பநலத்தை சிறப்பாக்குவர். வருமானம் நன்றாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திப்பணிகளை நிறைவேற்றுவர். விற்பனை அதிகரிக்கும். நல்ல லாபத்துடன் நிலுவைப்பணமும் வசூலாகும். அரசியல்வாதிகள் கூடுதல் புகழும் எதிர்பார்த்த பதவியும் பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் உயரும். கால்நடை வளர்ப்பில் முன்னேற்றமும் தாராள பணவரவும் உண்டு. மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படித்து உயர்ந்த தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் தொழில்வளம் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். உஷார் நாள்: 11.7.11 காலை 6.11 முதல் 13.7.11 காலை 10.04 மணி வரை

வெற்றி நாள்: ஜூன் 30, ஜூலை 1, 2
நிறம்: மஞ்சள், வெள்ளை   எண்: 2, 3

ரிஷபம் (உடல்நிலை கவனம்)

தன்னைச் சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவும் ரிஷப ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகமாக செயல்படுகிறார். மற்ற கிரகங்கள் அனைத்தும் மாறுபட்ட பலன் தருகிற இடங்களில் உள்ளனர். இதனால் செயல்களில் நிதானமும், முன்யோசனையும் பின்பற்றுவது அவசியம். தகுதிக்கு மீறிய செயல்திட்டங்களையோ, செலவையோ தவிர்ப்பது நல்லது. பேச்சில் வசீகரம் இருப்பினும், இடம், பொருள் அறிந்து பேசுவது நன்மை பெற உதவும். உடல்நலம் சீராக இருக்க தகுந்த ஓய்வு, ஊட்டம் தரும் உணவுப்பழக்கம் பின்பற்றுவது நல்லது. பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். வழக்கு, விவகாரங்களில் உங்கள் நலம் விரும்புபவர்களின் உதவியால் சமரச தீர்வு பெறலாம். கணவன், மனைவி குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொண்டு ஒற்றுமை மனப்பாங்குடன் நடந்துகொள்வர். குடும்பத்தேவை ஓரளவு நிறைவேறும். வெளியூர் பயணங்களை பயன் கருதி மேற்கொள்ளலாம். தொழிலதிபர்கள் சுமாரான உற்பத்தியை பெறுவதற்கு கூட குறுக்கீடுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணியாளர்கள் உடல்நலத்தை சீராக பேணுவதால் மட்டுமே பணிகளை சிறப்பாக நிறைவேற்ற இயலும். அளவான பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் சந்தையில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வர். அளவான விற்பனையும், மிதமான லாபமும் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் கவனமுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராத தன்மை இருக்கும். இதனால் நிர்வாகத்தின் கண்டிப்பை தவிர்க்கலாம்.  சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் விற்பனை வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வர். அரசியல்வாதிகள் பிறர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பதால் நன்மை பெறலாம். விவசாயிகளுக்கு ஓரளவு மகசூலும் கால்நடை வளர்ப்பினால் தேவையான பணவரவும் கிடைக்கும். மாணவர்கள் புதிய நடைமுறையை பின்பற்றுவதால் ஞாபகத்திறன் வளர்ந்து சராசரி தேர்ச்சி விகிதம் பெறுவர்.

பரிகாரம்: பத்ரகாளியை வழிபடுவதால் சிரமம் குறைந்து நன்மை வளரும்.
உஷார் நாள்: 16.6.11 காலை 6 முதல் 18.6.11 காலை 8.17 மணி வரை மற்றும் 13.7.11 காலை 10.05 முதல் 15.7.11 மாலை 4.01 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 3, 4
நிறம்: ஆரஞ்ச், சிமென்ட்    எண்: 1, 8

மிதுனம் (பிள்ளைகளால் பெருமை)

பிறர் மனமறிந்து இதமுடன் பேசுகின்ற மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் ராசிக்கு இரண்டாம் இடத்தில் அனுகூலக் குறைவாக அமர்ந்துள்ளார். இதனால் மனதில் நம்பிக்கை குறைவு, கோபம் மிகுதல்,  அவமானப்படுதல் ஆகிய நிலைகளை எதிர் கொள்ளலாம். கவனமுடன் நடப்பதால் சிரமம் தவிர்க்கலாம். இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், ராகு செயல்படுகின்றனர். பணம் வரும் நல்வாய்ப்புக்களை பயன்படுத்துவதால் முன்னேற்றமும் உபரி வருமானமும் கிடைக்கம். திட்டமிட்ட பயணங்களை பணிகளுக்கு தகுந்தவாறு மாறுதல் செய்ய வேண்டியிருக்கும். பிறரது சொந்த விஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தம்பி, தங்கைகள் சொல்கிற ஆலோசனை புதிய திருப்பம் தரும். வீடு, வாகனத்தில் தேவையான பராமரிப்பு, பாதுகாப்பு பணி அவசியம். புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து படிப்பு, வேலைவாய்ப்பில் சிறப்பிடம் பெறுவர்.  உடல்நல ஆரோக்கியம் பேணுவதில் சில குறுக்கீடு வந்து பின்னர் நலம்பெறும். நிர்ப்பந்த பணக்கடனை சரிசெய்ய நிலுவை பணவரவுகளைப் பெற கூடுதல் முயற்சி செய்வீர்கள். எதிரியால் தொந்தரவு வராத அனுகூல நிலை வளரும். தம்பதியர் கருத்து ஒற்றுமையுடன் குடும்பத்தேவையை நிறைவேற்றுவர். மகிழ்ச்சியும் பெருமிதமும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் அதிக கண்காணிப்புடன் உற்பத்தியை உயர்த்துவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் குடும்பத்தேவையின் பொருட்டு பணிபுரிவதில் அக்கறையுடன் ஈடுபடுவர். முக்கிய செலவுகளுக்கான பணவசதி கிடைக்கும். வியாபாரிகள் சந்தைப் போட்டியை சமாளித்து சராசரி விற்பனை இலக்கை அடைவர். ஆதாய பணவரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பொறுப்பாக செயல்புரிந்து நற்பெயரும் சலுகை பயனும் அடைவர். குடும்பப் பெண்கள் திட்டமிட்டு செயல்பட்டு குடும்பத்தேவையை நிறைவேற்றுவர். கணவரின் அன்பு, சீரான பணவசதி துணைநிற்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கடும் உழைப்பின் பேரில் நல்ல லாபம் சம்பாதிப்பர். அரசியல்வாதிகள் எதிர்ப்புவளராத அளவிற்கு நடந்துகொள்வது நல்லது. விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பணவரவு திருப்திகரமாகும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிப்பதால் மட்டுமே அதிக மார்க் பெற இயலும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் பணவரவு சீராகி மங்கல நிகழ்வு ஏற்படும்.
உஷார் நாள்: 18.6.11 காலை 8.18 முதல் 20.6.11 மாலை 4.54 மணி வரை மற்றும் 15.7.11 மாலை 4.01 முதல் 16.7.11 நாள் முழுவதும்
வெற்றி நாள்: ஜூலை 5, 6
நிறம்: பச்சை, வெள்ளை   எண்: 2, 5

கடகம் (சம்பள உயர்வு)

பரந்த மனப்பான்மையுடன் செயல்படும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன் இந்த மாதம் மூலம் நட்சத்திரத்தில் கேதுவின் சாரத்தில் தனது சாரத்தை துவங்குகிறார். கேதுவின் மூன்றாம் பார்வை ராசியில் பதிகிறது. இதனால் மனதில் ஆன்மிக சிந்தனை ஊற்றெடுக்கும். தெய்வ சிறப்புகள் தொடர்பான செய்திகள் உங்களைத் தேடிவரும். செவ்வாய், கேது, சுக்கிரன் மற்றும் சனிபகவானின் அருள்பலம் சிறப்பாக உள்ளது. புதிய செயல்பாடுகளுக்கான முயற்சியெடுக்க நல்ல மாதம். முக்கிய தேவைகளுக்கான பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். தம்பி, தங்கைகள் ஆதரவாக நடந்துகொள்வர். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். புத்திரர்கள் ஆர்வமிகுதியால் கவனக்குறைவான செயல்களில் ஈடுபட நேரலாம். கவனமுடன் வழிநடத்துவதால் சிரமம் குறையும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பநலன் காத்திடுவர். சுபநிகழ்வும் ஏற்படும். நண்பர்களின் உதவியால் எதிர்காலத்திற்குரிய சில செயல்பாடுகள் நிறைவேறும். தொழிலதிபர்கள் உற்பத்தியை பெருக்கி கூடுதல் லாபம் அடைவர். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். சம்பளஉயர்வு, பதவி உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரிகள் அதிக கொள்முதல், கூடுதல் விற்பனை என்கிற இலக்குடன் செயல்படுவர். விற்பனை சிறந்து லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைக்கும். குடும்பப்பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். குடும்பத்தேவை திட்டமிட்ட வகையில் பூர்த்தியாகும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உழைப்பால் உற்பத்தி விற்பனையை உயர்த்துவர். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் கூடுதல் புகழ்பெற நல்வாய்ப்பு உருவாகும். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் வருமானம் கூடும். மாணவர்கள் நற்பெயர் பெறும் நோக்கில் படித்து தரத்தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் உடல்நலமும் தொழில் சிறப்பும் ஏற்படும்.
உஷார் நாள்: 20.6.11 மாலை 4.55 முதல் 23.6.11 அதிகாலை 3.39 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 7, 8
நிறம்: வாடாமல்லி, கருநீலம்       எண்: 4, 7

சிம்மம் (உற்பத்தி சுமார்)

நற்செயல்கள் செய்து புகழ் பெறுகின்ற சிம்ம ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் பதினொன்றாம் இடமான ஆதாய ஸ்தானத்தில் உள்ளனர். குருவின் அமர்வு அனுகூலத்துடன் உள்ளது. புதிய முயற்சிகளை துவங்கி வாழ்வில் வளம் பெறுவீர்கள். நியாயமாக பேசினாலும் கூட, உணர்ச்சி வசப்படுகிற சூழ்நிலையை தவிர்ப்பதால் நன்மை கூடும். தம்பி, தங்கைகள் பாசத்துடன் நடந்துகொள்வர். அவர்களுக்கான மங்கல நிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். வீடு, வாகன வகையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. புத்திரர்கள் ஆர்வத்துடனும் விவேகத்துடனும் செயல்படுவர். படிப்பில் வளர்ச்சி அதிகரிக்கும். பூர்வசொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். உடல் நலத்திற்கு சிறு அளவிலான சிகிச்சை உதவும். ஒவ்வாத உணவு வகை உண்ணக்கூடாது. கடன் தொந்தரவை ஓரளவு சரிசெய்வீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகள் நிறைவேற புதியவர்களின் உதவி கிடைக்கும். தொழிலதிபர்கள் கடும் முயற்சியால் மட்டுமே உற்பத்தியை தக்க வைக்க இயலும். ஓரளவு வருமானம் உண்டு. பணியாளர்களுக்கு பிரச்னை அதிகமில்லை என்றாலும், உடல்ரீதியான பாதிப்பால் சோர்வு தோன்றும். குடும்பத்தேவை ஓரளவு நிறைவேறும் அளவுக்கு வருமானம் இருக்கும். வியாபாரிகள் போட்டியை சமாளிப்பதில் குழப்பநிலையை அடைந்தாலும், விற்பனையில் சரிவு இராது. லாபம் எதிர்பார்க்கும் அளவு இருக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்ற வேண்டும். சிலருக்கு குளறுபடி காரணமாக அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது. குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு போதுமான அளவு பணவரவைப் பெறுவர். சேமிக்கும் நிலை இல்லை. சுயதொழில் நடத்தும் பெண்களுக்கு சுமாரான உற்பத்தி ஓரளவு லாபம் காண்பர். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகப்பணியால் வரவேற்பு பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே திட்டமிட்ட தேர்ச்சியை பெற இயலும்.

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.
உஷார் நாள்: 23.6.11 அதிகாலை 3.40 முதல் 25.6.11 பிற்பகல் 3.21 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 9, 10
நிறம்: ரோஸ், ஆரஞ்ச்   எண்: 3, 9

கன்னி (வரவுக்கேற்ற செலவு)

எல்லாரிடமும் பண்பு, பாசத்துடன் பழகுகிற கன்னி ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ளார். சூரியன், ராகு, சுக்கிரனும் நற்பலன் வழங்குவர். தாமதமான பணிகளை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். பேச்சில் நிதானமும் வசீகரமும் ஏற்படும். தம்பி, தங்கைகளுக்கு உரிய ஆலோசனை கூறி அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற உதவுவீர்கள். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். பூர்வ சொத்தில் வருகிற பணவரவுக்கு ஏற்ப கூடுதல் செலவும் உருவாகும். புத்திரர்கள் உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். இஷ்ட தெய்வ அருள் துணைநின்று உதவும். உடல்நலம் சீர்பெற நேரத்துக்கு சாப்பிடுதல், சீரான ஓய்வு பின்பற்றுவது நல்லது. நிர்ப்பந்தம் செய்யும் கடன்களை ஓரளவு சரிசெய்வீர்கள். கணவன், மனைவி புரிதல் தன்மையுடன் நடந்து குடும்ப வாழ்வை மகிழ்ச்சிநிறைந்ததாக்குவர். நண்பர்களால் நற்பெயர் பெற சூழ்நிலை அமைந்து உதவும். தொழிலதிபர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி, தரத்தில் முன்னேற்றம் காண்பர். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் பணவரவில் வளர்ச்சிநிலை காண்பர். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திபணி நடத்துவர். விற்பனை உயர்ந்து அதிக லாபம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் கருத்து வேறுபாடு கொள்வதை தவிர்ப்பது நல்லது. வீட்டுச்செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். சுயதொழில் நடத்தும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து அதிக பணவரவு காண்பர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் பணவரவு கூடும். அரசியல்வாதிகள் அரசின் மூலம் சலுகை கிடைக்கப்பெறுவர். மாணவர்கள் கவனமுடன் படித்து எதிர்பார்த்த தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் தாராள பணவரவு கிடைக்கும்.
உஷார் நாள்: 25.6.11 பிற்பகல் 3.22 முதல் 28.6.11 அதிகாலை 2.19 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 11, 12, 13
நிறம்: மஞ்சள், வெள்ளை    எண்: 2, 3

துலாம் (சிறப்பான விற்பனை)

கடின உழைப்பால் வளம் பெறும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், இந்த மாதம் ராசிக்கு அஷ்டம, பாக்ய ஸ்தானங்களில் பிரவேசிக்கிறார். அனுகூலம் தரும் கிரகங்களாக குரு, புதன் செயல்படுகின்றனர். தாழ்வு மனப்பான்மையை விலக்கி செயல்படுவதால் திட்டமிட்ட வளர்ச்சி கிடைக்கும். வார்த்தைகளில் கடினப்போக்கை தவிர்ப்பதால் குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்பார்த்த நற்பெயர் பெறலாம். தம்பி, தங்கைகள் சொல்லும் ஆலோசனை புதிய பாதையில் நடைபோட உதவும்.வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படும். புத்திரர்கள் பணம், பொருள் கேட்டு நிர்ப்பந்தம் செய்வர். பணவரவுக்கேற்ப இயன்ற அளவு நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவி பாசத்துடன் நடந்துகொள்வர். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும். உடல்நலம் சீராக இருக்கும். நண்பர்களுடன் சுற்றுலா சென்றுவர அனுகூலம் உண்டு. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தேவைகளை சிக்கனச்செலவில் நிறைவேற்றுவீர்கள். தொழிலதிபர்கள் கூடுதல் முயற்சியால் உற்பத்தியை உயர்த்துவர். சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி நிறைந்த சலுகைகள் பெற அனுகூலம் உண்டு. வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர் கிடைத்து விற்பனையில் வளர்ச்சி காண்பர். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் தாமதப் பணியை நிறைவேற்ற ஆர்வமுடன் செயல்படுவர். பணி இலக்கு நிறைவேறி நற்பெயர் பெற்றுத்தரும். குடும்பப் பெண்கள் பொறுப்பான செயல்களால் கணவரிடம் நன்மதிப்பு பெறுவர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நடத்த அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். லாபம் அதிகரிக்கும். அரிசயல்வாதிகள் புகழை தக்கவைத்துக் கொள்ள கூடுதல் முயற்சியுடன் பணிபுரிவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே படிப்பைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் இடர்விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
உஷார் நாள்: 28.6.11 அதிகாலை 2.20 முதல் 30.6.11 காலை 11.17 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 17,  ஜூலை 14, 15
நிறம்: பச்சை, நீலம்            எண்: 5, 8

விருச்சிகம் (சுமாரான பணவரவு)

நேர்மையுடன் நடந்து செயல்களில் வெற்றி பெறும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் ராகுவும், ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்க்கை பெற்று ஏழாமிடத்தில் உள்ளனர். சுக்கிரன், சனி நற்பலனை வழங்குவர். மனதில் குழப்பமும் நம்பிக்கை குறைவும் ஏற்படலாம். உங்களின் நலன் விரும்புபவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. பேச்சிலும் செயலிலும் மந்தகதி இருக்கும். தம்பி, தங்கைகளின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை வளர்க்கும். வீட்டில் பாதுகாப்பு நடைமுறையும், பயணங்களில் மிதவேகமும் பின்பற்றுவது நல்லது. புத்திரர்கள் செயல்திறனை வளர்த்துக் கொள்வார்கள் என்றாலும், அவர்களது நட்பு வட்டாரம் குறித்து கவனமாயிருங்கள். உடல்நலக்குறைவு ஏற்படலாம். சிறிய பிரச்னைக்கும் உடனடியாக டாக்டரை அணுகுங்கள். கணவன், மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். நியாயமாக செயல்படுவதால் பிரிவு வராத நன்னிலை தொடரும். அறிமுகம் இல்லாத பெண்களுக்கு உதவுவதால் சிரமம் வரலாம். கவனம். பணவரவு சுமாராக இருக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் சற்று பின்னடவைச் சந்திப்பர். லாபம் சுமாராகவே இருக்கும். பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்றுவதில் குளறுபடிகளை எதிர்கொள்வர். சலுகைகள் பெறுவதில் அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்தால் எதிர்விளைவே ஏற்படும். வியாபாரிகள் போட்டி அதிகரிப்பால் சஞ்சலம் கொள்வர். அளவான விற்பனை, மிதமான பணவரவு என்ற நிலை இருக்கும். பணிபுரியும் பெண்கள் உடல்நலக் குறைவினால் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். சலுகைகளைக் கேட்பதிலும், தோழிகளுடன் கொடுக்கல் வாங்கலிலும் நிதானம் நல்லது. குடும்பப் பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடு கொள்ளலாம். வீட்டுச்செலவுக்கு சற்று தட்டுப்பாடு ஏற்படலாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான லாபம் காண்பர். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் ஊக்கத்தினால் மனதில் உற்சாகம் பெறுவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், அளவான பணவரவு உண்டு. மாணவர்கள் விளையாட்டு குணத்தை தவிர்ப்பதால் மட்டுமே படிப்பில் தேர்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் கஷ்டம் விலகி வளம் பெறலாம்.
உஷார் நாள்: 30.6.11 காலை 11.18 முதல் 2.7.11 மாலை 5.49 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 18, 19, ஜூலை 15
நிறம்: சிவப்பு, வெள்ளை          எண்: 1, 6

தனுசு (சிறந்த சலுகைகள்)

இனிய வார்த்தை பேசி பிறரை மகிழ்விக்கும் தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ளார். கேது, செவ்வாய் ராசிக்கு ஆறாம் இடத்தில் அனுகூலமாக உள்ளனர். நல்லவர்களின் வழிகாட்டுதலை ஏற்று செயல்படுவீர்கள். பேச்சில் நிதானம் இருக்கட்டும். பிறருக்கு உதவுவதிலும் அளவு வேண்டும். தம்பி, தங்கைகள் முன்னேற்றம் அடைவர். வீடு, வாகன வகையில், இப்போது இருக்கிற வசதி நீடிக்கும். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பைப் பெறுவீர்கள். புத்திரர்களை ஊக்கப்படுத்துவதிலும் கண்டிப்பதிலும் மிதமான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். நிலுவைப்பணம் வசூலாகும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்துகொள்வர். அடுத்தவர் குடும்ப விவகாரம் பற்றி தம்பதியர் பேசுவதை தவிர்ப்பது அவசியம். உறவினர்களின் நன்மதிப்பு, உதவி முக்கிய தருணங்களில் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தின் தேவை ஓரளவு நிறைவேறும். எதிர்பாராத வகையில் சிலருக்கு தனபிராப்தி கிடைக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியை உயர்த்துவதில் உள்ள இடையூறை சரிசெய்வர். வளர்ச்சி பெருகி கூடுதல் ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர்கள் தமது பொறுப்பை உணர்ந்து பணியில் ஈடுபடுவர். சம்பள உயர்வு, பிற சலுகைகள் கிடைக்கும். வியாபாரிகள் அபிவிருத்திப் பணிகளைச் செய்வர். விற்பனையை அதிகப்படுத்த சற்று விலையைக் குறைத்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைத்து விடும். நிறுவனத்தின் புகழ் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் தாமதப்பணிகளை நிறைவேற்றி மனநிம்மதி பெறுவர். கொடுக்கல், வாங்கல், சீராகும். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப செலவுகளை திட்டமிடுவது அவசியம். சிலருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் அதிக கவனம் கொள்வர். சுமாரான லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பாக பணி செய்து சமூகத்தில் வரவேற்பு பெறுவர். விவசாயிகளுக்கு அளவான மகசூலும், கால்நடை வளர்ப்பில் நல்ல லாபமும் கிடைக்கும். மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படித்து கடந்த கால சரிவைச் சரிசெய்வர். தேர்ச்சி விகிதம் கூடும்.

பரிகாரம்: சூரியபகவானை வழிபடுவதால் தொழில் வளர்ச்சியும் உபரி பணவரவும் கிடைக்கும்.
உஷார் நாள்: 2.7.11 மாலை 5.50 முதல் 4.7.11 இரவு 10.12 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 20, 22
நிறம்: நீலம், வெள்ளை              எண்: 2, 8

மகரம் (எதிரிகள் ஜாக்கிரதை)

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் நன்மதிப்பு பெறும் மகர ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ள சூரியன் பதினொன்றாம் இடத்தில் உள்ள ராகு அதிக நற்பலன்களை அள்ளி வழங்குவர். பேச்சிலும் செயல்களிலும் முன்னேற்றம் இருக்கும். சமூகப்பணியை இயன்ற அளவு செய்வீர்கள். தம்பி, தங்கைகள் திறமையுடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேறுவர். வீடு, வாகன பராமரிப்பு, பாதுகாப்பில் கூடுதல் கவனம் பின்பற்ற வேண்டும். தாய்வழி உறவினர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். புத்திரர்கள் உடல்நலக்குறைவிற்கு உட்படலாம். சீரான உணவுப் பழக்கம், சிகிச்சை உடல்நலத்தை சரிசெய்யும். எதிரிகளின் கெடுசெயலை உணர்ந்து மனம் வருந்துவீர்கள். தெய்வவழிபாடு திடநம்பிக்கை வளர உதவும். கணவன், மனைவியிடையே புரிதல்திறன் குறைந்து சச்சரவு வரலாம். விட்டுக்கொடுத்து நடப்பதால் வாழ்க்கை சிறப்பு பெறும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. தொழிலதிபர்கள் உற்பத்தியை பெருக்குவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தாராள பணவரவு உண்டு. பணியாளர்கள் குறித்த காலத்தில் பணிஇலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் போட்டி குறைந்து விற்பனையில் முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள், தங்கள் செயல்திறனை பயன்படுத்தி பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த பிற சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் பிரச்னை அதிகரிக்காத வாழ்வு தொடர்ந்திடும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து கூடுதல் லாபம் காண்பர். விலை மதிப்புள்ள பொருட்களை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு குறையும். விரும்பிய பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல், அளவான பணவரவு உண்டு. மாணவர்கள் படிப்பதற்கு கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி தரதேர்ச்சியில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் எதிரித்தனம் விலகி வாழ்க்கைமுறை சிறப்பாகும்.
உஷார் நாள்: 4.7.11 இரவு 10.13 முதல் 7.7.11 அதிகாலை 1.06 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 23, 24
நிறம்: பச்சை, ஆரஞ்ச்       எண்: 5, 6

கும்பம் (குடும்ப ஒற்றுமை)

நிகழ்கால நடப்புகளுக்கு ஏற்ப செயல்படும் கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு அனுகூல பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், புதன் செயல்படுகின்றனர். மற்ற கிரகங்களின் அமர்வு எதிரான பலன்களைத் தரலாம். செயல்களில் பொறுமை அவசியம். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வதால் மன அமைதி இருக்கும். உறவினர்களின் உதவியால் புத்துணர்வு பெறுவீர்கள். சமூக நிகழ்வுகளில் ஒதுங்கி இருப்பீர்கள். அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவுவதிலும், அவர்களிடம் உதவி பெறுவதிலும் நிதானம் வேண்டும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். புத்திரர்கள் சுயதிறன் வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைவர். நல்லவர்களின் ஆசி குடும்ப நன்மைக்கு துணை நிற்கும். பூர்வசொத்தில் அளவான வருமானம் கிடைக்கும். சிறு அளவில் உடல்நலக்குறைவு ஏற்படலாம். எதிரிகளால் வருகிற குழப்பங்களை முறியடித்து வளர்ச்சி பெறுவீர்கள். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து குடும்பத்தில் சந்தோஷ நிகழ்வை உருவாக்குவர். தொழிலதிபர்கள் இடையூறுகளை சரிசெய்து சுமாரான லாபம் பெறுவர். பாக்கி பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு ஓரளவுக்கு சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளுடன் இணக்கமான போக்கு இராது. வியாபாரிகள் போட்டியை எதிர்கொண்டு விற்பனையில் திருப்திகர நிலை அடைவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் தாமத பணிகளை நிறைவேற்றி நற்பெயரும் சலுகைப்பயனும் அடைவர். குடும்பப் பெண்கள் எதிர்கால தேவைகளை கவனத்தில் கொண்டு செயல்படுவர். மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்தி விற்பனையில் புதிய இலக்கை அடைவர். லாபம் உயர்ந்து சேமிப்பு உருவாகும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளை சமாளித்து புதிய பதவி பெறுவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். கால்நடைகளால் நல்ல வருமானம் உண்டு. மாணவர்கள் நல்லமுறையில் படித்து திட்டமிட்டபடி தேர்ச்சி அடைவர். உடல்நலத்தில் கூடுதல் கவனம் நல்லது.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் தொழில்வளர்ச்சியும் எதிர்பார்த்த பணவரவும் கிடைக்கும்.
உஷார் நாள்: 7.7.11 அதிகாலை 1.07 முதல் 9.7.11 அதிகாலை 3.29 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 26, 27
நிறம்: நீலம், சிவப்பு  எண்: 8, 9

மீனம் (தேவை நிறைவேறும்)

நல்லதை மட்டுமே மனதில் நினைக்கும் மீன ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இந்தமாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக செவ்வாய், குரு, சுக்கிரன், கேது செயல்படுகின்றனர். பணவரவு அதிகம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். முறையாக பயன்படுத்தி நற்பலன் பெறுவீர்கள். பேசும் வார்த்தை மங்கலத்தன்மையுடன் இருக்கும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து பெறுவீர்கள். தம்பி, தங்கைகள் அன்பு பாராட்டுவர். வீடு, வாகனத்தில் வளர்ச்சி மாற்றம் செய்வீர்கள். பூர்வ சொத்தில் வருகிற வருமானங்களை தகுந்த கண்காணிப்புடன் பெற்றுக்கொள்வது நலம் தரும். உடல்நல ஆரோக்கியம் பேணி காத்திடுவீர்கள். எதிரிகள் தந்த தொந்தரவு குறையும். உறவினர்களின் வருகையால் குடும்பமகிழ்ச்சி அதிகரிக்கும். பணபரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தேவையை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வதால் அலைச்சல், பணச்செலவை தவிர்க்கலாம். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் உற்பத்தியை உயர்த்துவதில் கவனம் கொள்வர். புதிய ஒப்பந்தம் கிடைத்து பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணிபுரிந்து இலக்கை நிறைவேற்றுவர். சலுகைப்பயன் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரிகள் கொள்முதலை உயர்த்த கடன் பெறுகிற முயற்சியில் ஈடுபடுவர். விற்பனை சீரான முன்னேற்றம் பெறும். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணியில் நற்பெயர் பெறுவர். சலுகைப்பயன் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து மகிழ்வான வாழ்க்கை நடத்துவர். குடும்ப செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும்.  சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உழைப்பால் விற்பனை இலக்கை உயர்த்துவர். நல்ல லாபத்துடன் பாக்கிப்பணமும் வசூலாகும். பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெறுவர். பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு தாராள மகசூல் கிடைத்து உபரி பணவரவை பெற்றுத்தரும். மாணவர்கள் நம்பிக்கையுடன் படிப்பதால் தரத்தேர்ச்சி அடையலாம்.

பரிகாரம்: தன்வந்திரியை வழிபடுவதால் உடல்நலமும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும்.
உஷார் நாள்: 9.7.11 அதிகாலை 3.30 மணி முதல் 11.7.11 காலை 6.10 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 28, 29
நிறம்: இளம்சிவப்பு, சிமென்ட்    எண்: 1, 4
பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?
 
ஒரு கடிதம் எழுதினால் அனுப்புபவரின் பெயரின் முன்னால் ஸ்ரீ எனக் குறிப்பிடுகிறோம். இதன் ரகசியம் தெரியுமா? செல்வங்களுக்கெல்லாம் அதிபதி மகாலட்சுமி. ஸ்ரீ என்றால் லட்சுமி. அந்த லட்சுமி குடியிருக்கும் மார்பை பெற்றதனால் தான் பெருமாளுக்கு ஸ்ரீநிவாசன் என்று பெயர். தமிழில் ஸ்ரீ யை திரு எனக் குறிப்பிடுவர். திரு என்றாலும் திருமகளாகிய லட்சுமியையே குறிக்கும். மாலவனாகிய பெருமாளின் மார்பில் லட்சுமி <உறைவதால் தான் அவரை திருமால் என்று குறிப்பிடுகிறோம். எனவே நாம் யாருக்கு கடிதம் எழுதுகிறோமோ அவரது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்ற பொருளிலேயே நாம் ஸ்ரீ என குறிப்பிடுகிறோம். பூர்ணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், ஸ்ரீ சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை, தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, கண்ணாடி, வில்வம், நெல்லி, துளசி, கோமியம், சங்கு, தாமரை ஆகியவற்றிலும் பசு, யானை முதலிய பிராணிகளிடமும், பொறுமை மிக்கவர்கள், சுமங்கலிகள், தேவர்கள், ஞானிகள், பசுக்களை பராமரிப்போர், ஸ்திரபக்தி கொண்டவர்கள் ஆகியோரிடமும் லட்சுமி நிரந்தர வாசம் செய்கிறாள்.
மாணவர்களே... வெற்றிக்கான உங்கள் நட்சத்திர சிறப்பு பலன்கள்!

மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். பத்தாம் வகுப்பு முடித்தவர்களோ, பிளஸ் டூவில் எந்த குரூப் எடுத்து படித்தால் நல்லது என்பதைப்பற்றியும், பிளஸ் டூ முடித்தவர்களோ, எந்த காலேஜில்  என்ன கோர்ஸ் சேர்வது என்பதை பற்றியும், காலேஜ் முடித்தவர்கள் மாஸ்டர் டிகிரி பண்ணுவது பற்றியும் ஒரே குழப்பத்தில் இருப்பார்கள். இப்படிப்பட்ட குழப்பம் எல்லாம் நீங்கி இறைவன் அருளாலும் கோள்களின் துணையுடனும் மாணவர்கள் தாங்கள் வேண்டியது கிடைக்க பொதுவாக மதுரை மீனாட்சியை வழிபடுவது சிறப்பு. ஏனெனில் மதுரை மீனாட்சி நவக்கிரக நாயகியாகவும், ஞானத்தை தரக்கூடிய சுகப்பிரம்ம மகரிஷியை கிளி வடிவில் வலது கையில் ஏந்திய நிலையிலும் அருள்பாலிப்பது தான் இந்த சிறப்புக்கு காரணம்.  இருந்தாலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு நட்சத்திரம் இருக்கும். அந்தந்த நட்சத்திரத்தை சேர்ந்த மாணவர்களுக்குரிய பொதுவான குணமும், அந்த நட்சத்திரத்தை சேர்ந்த மாணவர்கள் எப்படி வழிபாடு செய்தால் விரும்பியது கிடைக்கும் என்பது பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட  தன்னம்பிக்கை, விடாமுயற்சி, இறைபக்தி இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே ஒரு மாணவர் மாபெரும் வெற்றியை அடைய முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்கவர்கள்.

கேது திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சுக்ர திசை வரை நீடிக்கும். இயல்பாகவே எதையும் எளிதாக  புரிந்துகொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. அதேசமயம் சோம்பல் தனத்தால் எதையும் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்தால் பெரும் சாதனைகள் புரியலாம்.  தனிமை விரும்பியான நீங்கள், யாரிடமாவது நட்பு கொள்ளும் முன் யோசித்து மிகவும் கவனத்துடன் பழகுவது நலம். வெளிநாட்டுக் கல்வி, கல்விக்கடன் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு முன்பாக, அருகிலுள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கிவிட்டு தொடங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும்.  மனம் ஒருநிலைப்பட்டு செய்யும் செயல்களில் தான் வெற்றி நிச்சயம். எனவே சங்கீதம், ஓவியம், விளையாட்டு என ஏதேனும் ஒரு கலையை பழகுவதோடு தினமும் உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி கொடுத்தால் உங்கள் மனம் ஒருநிலைப்படும். பிறர் பாராட்டை விரும்பும் நீங்கள், அடுத்தவரின் தவறை நாசூக்காக சுட்டிக்காட்ட வேண்டும்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபங்களை ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் உள்ள கோயில்களில் உள்ள நவகிரகசன்னதிக்கு சென்று சூரியனை வழிபடுவதும் நல்லது. அடிக்கடி  பிள்ளையார்பட்டி சென்று வருவது சிறப்பான நற்பலன் தரும். மாணவர்கள் அந்தந்த ஆண்டு முடியும் போது திருவாரூர் அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு சென்று அங்குள்ள அக்னீஸ்வரøயும் பொங்கு சனியையும் வழிபட்டால் தடங்கல்கள் நீங்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளவர்கள்.

சுக்ரதிசையில் தொடங்கிய உங்களின் மாணவப்பருவம் சூரியதிசை வரையிலும், சிலருக்கு சந்திர திசை வரையிலும் இருக்கலாம். எந்த ஒரு செயலையும் மனக்குழப்பமின்றி முழுமையான ஈடுபாட்டுடன் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும். கல்விக்கடனுக்கான முயற்சிகள், வெளிநாட்டுக்கல்விக்கான முயற்சிகளில் கவனமாக ஈடுபட வேண்டும்.
யோகா, உடற்பயிற்சிகளை கற்றால் மனதை ஒருநிலைப்படுத்தலாம்.  நல்ல நண்பர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் பழக வேண்டும். சட்டென உணர்ச்சி வசப்படும் சுபாவம் உள்ள நீங்கள் அதைப் போக்க தினமும் சில நிமிடமாவது தியானம் செய்வது நல்லது. வாகனப்பயணத்தில் வேகம் தவிர்ப்பதும் அவசியம். அஜீரணபாதிப்பு, எலும்புத்தேய்மானம், சளித்தொந்தரவுகளில் அலட்சியம் கூடாது.

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45 வரை இஷ்டதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் பள்ளி கொண்ட பெருமாளை தரிசனம் செய்து விட்டு ஆரம்பிக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது ஸ்ரீரங்கம் சென்று வருவது சிறந்த பலனைத் தரும். மாணவப் பருவம் முடியும் போது, திருநள்ளாறு சென்று சனிபகவானையும், தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டால் பணிகள் அனைத்தும் செழிப்பாக அமையும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதையும் திட்டமிட்டு திறமையாக செயல்படக்கூடியவர்கள்.

சூரியதிசையில் ஆரம்பித்த உங்களின் மாணவப்பருவம், செவ்வாய் திசை அல்லது ராகு திசை வரையிலும் இருக்கும். எதையும் யோசித்து, திட்டமிட்டு செயல்படக்கூடிய நீங்கள் பிடிவாதத்தையும், வீண் கோபத்தையும் தவிர்க்க வேண்டும்.பெற்றோர் மற்றும் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்க வேண்டும். யாரிடமாவது நட்பு கொள்ளும் முன் யோசித்து மிகவும் கவனத்துடன் பழகுவது நலம்.

அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எளிதாகக் கைகூடும். வங்கிக்கடன்கள், உயர்கல்வி முயற்சிகளை பெற்றோர், பெரியோர் ஆலோசனைப்படி, செய்யுங்கள். சட்டென உணர்ச்சி வசப்படுவதும், வீண்பிடிவாதமும் உங்கள் உடன்பிறந்தவை என்றாலும், விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. ஏதாவது ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பதால் உங்கள் மனம் தானாகவே அமைதியாகும். காது, மூக்கு, தொண்டை, ஒற்றைத் தலைவலி பாதிப்புகளை உடனுக்குடன் கவனித்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு புதனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்டதெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சியையும் தொடங்கும் முன் ராகவேந்திரரை தரிசனம் செய்து தொடங்குங்கள்.  அடிக்கடி புதுச்சேரி அருகிலுள்ள பஞ்சவடி சென்று பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பான பலன் தரும். மாணவப் பருவம் முடிவடைந்ததும், குச்சனூர் சென்று சனிபகவானை தரிசித்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் அமைதியான செயல்களால் ஆனந்தம் அடைவீர்கள்.

சந்திர திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகு திசை வரை தொடரும். எதிலும் பரபரப்பில்லாமல், பதட்டப்படாமல் நிதானமாக செயல்படக்கூடிய ஆற்றல் உடையவர்கள்.வீண் புகழ்ச்சிக்கு மயங்காமல் தன்னம்பிக்கையுடன் எதையும் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நண்பர்களிடம் உங்கள் சொந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்போது மனக்குழப்பமின்றி இறைவனை வழிபட்டு விட்டு பின்னர் அதில் முயற்சி எடுக்க வேண்டும். ஆடம்பரம், கேளிக்கையில் உங்களுக்கு நாட்டம் இருந்தாலும் அதை தவிர்ப்பது நல்லது. நரம்பு உபாதைகள், சுவாசக் கோளாறுகளில் அலட்சியம் செய்யக்கூடாது.

ஒவ்வொரு திங்களும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். அருகில் உள்ள நவகிரக சன்னதிக்கு சென்று சந்திரனை வழிபடுங்கள். புதிய முயற்சிகளின் போது, ராகவேந்திரரை வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி திருவண்ணாமலை சென்று அருணாச்சலேஸ்வரரை தரிசியுங்கள். பள்ளிப்பருவம் முடிந்ததும், திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து விட்டு வந்தால் மனம் போல் வாழ்வு அமையும்.

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் விடாமுயற்சியும் துணிவும் மிக்கவர்கள்.

செவ்வாய் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகுதிசை வரை இருக்கும். எந்த செயலையும் துணிவுடன் செய்யக்கூடிய நீங்கள், பணிவுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். எதையும் நிதானமாக யோசித்து தீர்மானியுங்கள். அமைதியாக பேசுங்கள். தியானம், யோக பழகினால், மனதில் ஏற்படும் வீண் குழப்பங்கள் மறையும். உங்களது சிந்திக்கும் திறன் அதிகரிக்க உடலிலிருந்து நிறைய வியர்வை வெளியேறும் வகையில் உடற்பயிற்சி செய்யுங்கள். நேரடி முயற்சிகளால் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு கைகூடும்.

பழக்கத்திற்காக எதையும் செய்யாமல், பெற்றோர், ஆசிரியர் ஆலோசனைப்படி  செய்யுங்கள். வெளிநாட்டில் கல்வி பயில விடா முயற்சி செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வங்கிக்கடன் பெற நேர்வழியே நல்லது. விரைவில் தூங்கி  அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. தேவையற்ற நட்பு வேண்டவே வேண்டாம். அலர்ஜி மற்றும் காயம் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம்.

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள். புதிதாக எந்த செயல் தொடங்கினாலும் நவக்கிரகத்தில் உள்ள ராகுவை வழிபட்டு தொடங்குங்கள். அடிக்கடி நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள  வைத்தீஸ்வரன் கோயில் சென்று வழிபாடு நடத்துங்கள். பள்ளி வாழ்க்கை முடிந்ததும், திருச்செந்தூர் சென்று உரிய முறைப்படி முருகனை வழிபாடு செய்தால் தகுந்த வேலை கிடைத்து வாழ்வு நலமாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள், எளிதில்  எதையும் புரிந்துகொள்ளும் திறமை உடையவர்கள்.

ராகு திசையில் பிறந்த உங்களின் பள்ளிப்பருவம், குரு திசை வரை தொடரும். படித்ததை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதும், அதை சரியான நேரத்தில் உபயோகப்படுத்துவதும் உங்களது தனி சிறப்பு. இந்த திறமையால் பிறருக்கு பாதிப்பு வராமல் நடந்தால் மதிப்பு உயரும். வீண்பிடிவாதம், அநாவசிய கோபத்தை தவிர்த்தால் வெற்றி எப்போதும் உங்கள் பக்கத்தில் இருக்கும். கோபப்படாமல், விட்டுக்கொடுக்கும் தன்மையை வளர்த்தால் சிறந்த நன்மை கிடைக்கும். உங்களது விருப்பம் போல் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

நண்பர்களிடத்தில் உங்களுக்கு நல்லபெயர் இருந்தாலும், போலியான நட்பை தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட நோய், தொற்று நோய் ஆகியவற்றால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படலாம். இரவை தவிர்த்து அதிகாலையில் படிப்பது நல்லது.

ஒவ்வொரு செவ்வாயும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்திற்கு 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். அத்துடன் செவ்வாய் மாலை ராகு காலத்தில் நவக்கிரகத்தில் உள்ள ராகுவை வழிபடுங்கள். ஏதேனும் புதிதாக செய்
யும் முன் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி தஞ்சாவூர் கதிராமங்கலம் வனதுர்க்கையை வழிபாடு செய்யுங்கள். பள்ளி வாழ்க்கை முடிந்ததும், மாணவப் பருவம் நிறைவடைந்ததும், திருவாரூர் அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு சென்று அங்குள்ள அக்னீஸ்வரøயும் பொங்கு சனியையும் வழிபட்டால் வாழ்வு நலம் பெறும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையும் தளராத முயற்சிகளும் உள்ளவர்கள்.

குருதிசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சனிதிசை வரை தொடரும். எதையும் உடனே புரிந்து கொள்ளும் ஆற்றல் உடைய நீங்கள், பலரால் பாராட்டப்பட்டாலும் அதனால் கர்வம் அடையாதவர்கள்.  எதையும் உடனே செய்யாமல் மிகவும் தாமதமாக செய்வதை தவிர்ப்பது நல்லது. எந்த செயலையும் சிறப்பாக செய்யும் நீங்கள், எதையும் திட்டமிட்டு சரியாக செய்தால் உடனடி பலன் கிடைக்கும். நண்பர்களிடத்தில் மிகவும் கவனமாக பழகவும்.

சிந்தித்து செயல்படக்கூடிய நீங்கள் குறுகிய வட்டத்திற்குள் இருக்க கூடாது. இது உங்கள் வெற்றிக்குத் தடையாக இருக்கும். சிறிது காலத்திற்கு புதிதாகப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதையும், கிணற்றுத் தவளையாக இருப்பதையும் தவிர்க்கவும். வெளிநாட்டில் பயிலும் வாய்ப்பு வந்தால் ஏற்பது நல்லது. உடலில் ஏற்படும் வியாதிகளுக்கு உடனடி சிகிச்சை எடுத்து கொள்ளவும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கவும்.

ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபட்டால் காரியத் தடங்கல்கள் நீங்கும். ஏதேனும் புதிய செயல்களில் ஈடுபடும் முன் அருகிலுள்ள மகானின் பிருந்தாவனம் செல்லவும். அடிக்கடி மந்திராலயம் சென்று ராகவேந்திரரை தரிசிக்கவும். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், வாழ்க்கை வளமையாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி பெறக் கூடியவர்கள்.

சனி திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், புதன் திசை வரை தொடரும். செய்யும் செயல்களை திட்டமிட்டு செய்வதும், சரியான நேரத்தில் செய்வதும் உங்களின் பழக்கம். இருந்தாலும், நீங்கள் எடுத்த முடிவே சரியானது என்று கூறும் குணத்தை விடவும்.  எந்த செயலையும் பெற்றவர்கள், பெரியவர்கள் ஆலோசனையுடன்முழுமையாகவும் சரியாகவும் செய்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளை பெற்றோர் பிறருடன் ஒப்பிடாமலும், அன்புடன் வளர்த்தாலும், இவர்கள் மாணவப் பருவத்தில்  சாதனைகள் பல புரிவார்கள். எங்கும் எதிலும் நாமே முதலாவதாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு இருக்கும். நண்டர்கள் வட்டாரத்தில் கூட உங்களுக்கு தான் முன்னுரிமை தர வேண்டும் என நினைப்பீர்கள். அனைவரிடமும் சமமாகவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் கொண்டால், நண்பர்கள் மத்தியில் உங்களுக்க சிறந்த வரவேற்பு இருக்கும். எதற்கும் சலிக்காமல் முயற்சி மேற்கொண்டால் வெளிநாடுகளில் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  எலும்பு, பல் சம்பந்தப்பட்ட நோய், காது, மூக்கு, தொண்டையில் சிரமம் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை எடுக்கவும்.

ஒவ்வொரு செவ்வாயும், காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். எந்தவொரு புதிய செயல் தொடங்குமுன் அருகிலுள்ள துர்க்கையை வழிபாடு செய்து விட்டு தொடங்கவும். அடிக்கடி அறுபடை வீடு முருகன் கோயில்களில் ஏதேனும் ஒன்றை தரிசிக்கவும்.  செயல் கெள். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன், பக்கத்திலுள்ள துர்க்கை கோயிலுக்குப் போய் வாருங்கள். வருடத்திற்கு ஒருமுறை அறுபடை வீடுகளுள் ஏதாவது ஒரு தலத்திற்குச் சென்று வணங்குங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், பட்டீஸ்வரம் துர்க்கைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், வாழ்க்கை வளமையாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள், எதையும் நிதானமாக செய்து பெருமை பெறுவீர்கள்.

புதன் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், கேதுதிசை வரை தொடரும். சில மாணவர்களுக்கு சுக்ர திசையிலும் இது தொடரலாம். பொதுவாகவே உங்களுக்கு அறிவாற்றல்  அதிகம் இருக்கும் உங்களுக்கு. ஆனால்  தேவையில்லாத புகழுக்கு நீங்கள் மயங்குவதால், அகந்தை உண்டாகி உங்களது வெற்றிக்குத் தடையாக மாறும். எப்போதும் அகந்தையும் தற்பெருமையும் நீக்கினால் எளிதில் வெற்றி கிடைக்கும். வெளிநாடுகளில் சென்று படிக்க விருப்பம் உள்ள நீங்கள் சரியான நபர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் படி நடந்தால் வெற்றி நிச்சயம்.
கல்வி நிறுவனங்களுடன் வெளியூர் சுற்றுலா செல்லும் போது நீர்நிலைகளில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. விஷ பூச்சிகளால் ஆபத்து ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள். சரியான நேரங்களில் படிப்பதும், படித்ததை அடிக்கடி எழுதிப்பார்ப்பதன் மூலமும் அதிக மதிப்பெண் பெறலாம். கழுத்து எலும்புத் தேய்மானம், முதுகுத்தண்டுவடம் வலி,  கீழே விழுந்து அடிபடுதல் போன்ற பிரச்னை ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெறவும்.

ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. எந்த ஒரு புதிய செயலை தொடங்கும் முன் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். அடிக்கடி ஆலங்குடி தட்சிணாமூர்த்தியையும், ஆபத்சகாயேஸ்வரரையும் வழிபாடு செய்யுங்கள். குருபகவானையும் கும்பிட்டு வாருங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், திருப்பதி பெருமாள், பத்மாவதி தாயாரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதையும் சட்டெனப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்.

கேது திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சுக்ர திசை வரை நீடிக்கும். ஒரு சில மாணவர்களுக்கு சூரிய திசையிலும் தொடரலாம். உங்களுக்கு எதையும் சீராகவும் சிறப்பாகவும்  செய்திடும் திறமை உண்டு. சோம்பல் படாமல் எடுத்த காரியத்தை முடித்தால் மாபெரும் சாதனைகள் புரியலாம். மிக எளிதாக புகழுக்கு மயங்கிவிடுவீர்கள். நட்புக்காக எதையும் செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்களிடம் கவனம் தேவை. வெளிநாடு சென்று படிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எளிதில் நிறைவேறும். எந்த செயலை தொடங்கும் முன் ஆஞ்சநேயரை வழிபட்டு தொடங்குவது சிறப்பு.

ஞாபக சக்தி அதிகரிக்க சிறுவயதிலிருந்து தியானம், யோகா போன்ற  பயிற்சிகளில் ஈடுபடுங்கள். தினமும் இறைவனை வழிபாடு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். வயிறு, ஜீரண உபாதைகளும் தொண்டை பிரச்னைகளும் உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். இதற்கு உடனடி சிகிச்சை அவசியம்.

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது. மகான் ராகவேந்திரரை வழிபாடு செய்யுங்கள்.அடிக்கடி பிள்ளையார்பட்டி பிள்ளையாரை வழிபாடு செய்து வாருங்கள். சென்று வருவது சிறப்பான நற்பலன் தரும்.
பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், திருப்பதி பெருமாள், குறிப்பாக பத்மாவதி தாயாரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும். அத்துடன் எப்போதும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வந்தால் வாழ்வு சிறக்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதிலும் ஆர்வமும், அயராத உழைப்பும் உள்ளவர்கள்.

உங்களின் மாணவப்பருவம், சுக்ரதிசையில் தொடங்கி, சூரியதிசை வரை இருக்கும். சில மாணவர்களுக்க இது சந்திர திசை வரை தொடரலாம். யார் என்ன கூறினாலும் அதை முழுமையாக கேட்டு செய்யாமல் ஆராய்ந்து நிதானமாக செயல்பட்டால் மனக்குழப்பம் நீங்கி வெற்றி கிடைக்கும். சரியான நண்பர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக ஏற்கவும். இதற்கான கடனுதவியை நேரடியாக கையாளவும். நல்ல குணம் உடைய நீங்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்படாமலும், யோசித்து பேசுவதன் மூலமும்  சிறந்த வாய்ப்புகளை பெறலாம். இதற்காக தினமும் யோகா, தியானம் பயிற்சி செய்யுங்கள். அதிக வேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்.  எலும்புதேய்மானம், முதுகுவலி, மூட்டுவலி ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெறவும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6.15 முதல் 6.45 வரை இஷ்டதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயலை தொடங்கும் முன் உங்கள் அருகிலுள்ள கோயிலில் அருள்பாலிக்கும் பள்ளி கொண்ட பெருமானை தரிசியுங்கள். அடிக்கடி ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபடுவது சிறப்பு. பள்ளி வாழ்க்கை முடிந்ததும், மாணவப் பருவம் நிறைவடைந்ததும், திருவாரூர் அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும் பொங்கு சனியையும் வழிபட்டால் வாழ்வு நலம் பெறும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள்,முயற்சிகளால் எதையும் சாதிப்பவர்கள்.

உங்களின் மாணவப்பருவம், சூரியதிசை முதல், செவ்வாய் திசை வரை இருக்கும். தேவையில்லாத கோபத்தையும், வீண் பிடிவாதத்தையும் தவிர்த்து, எதையும் நிதானமாக, திட்டமிட்டு செய்தால் பலப்பல சாதனைகள் புரியலாம். பெரியவர்கள் கூறுவதை கேட்டு நடக்கவும். போலியாகப்புழும் நண்பர்களிடம் மயங்காமல், கவனமாகப் பழகவும்.

மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக ஏற்கவும். இதற்கான கடனுதவியை நேரடியாக கையாளவும். உணர்ச்சிவசப்படாமலும், யோசித்து பேசுவதன் மூலமும்  சிறந்த வாய்ப்புகளை பெறலாம். மன அமைதி பெற  ஏதாவது ஓர் இசைக் கருவியை வாசிக்கப் பழகுங்கள்.  ஒற்றைத் தலைவலி, நரம்பு, அலர்ஜி பாதிப்புகள் நீங்க உடனடி மருத்துவம் தேவை.

ஒவ்வொரு ஞாயிறும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயலை தொடங்கும் முன் நரசிம்மரை வழிபாடு செய்வது நல்லது. அடிக்கடி பரிக்கல் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் சிறந்த பலனை அடையலாம். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், ராமேஸ்வரம் ராமநாதரை வழிபட்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதையும் திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டு வெற்றி பெறக்கூடியவர்கள்.

சந்திர திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம். ராகு திசை வரை தொடரும். பல விஷயங்களில் எதையும் தீர்மானமான முடிவு எடுக்க முடியாமல் திணறும் நீங்கள், உணர்ச்சி வசப்படாமல்   நிதானமாகவும் யோசித்தும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மனத்தளர்ச்சி இல்லாமலும் நம்பிக்கையோடும் படிப்படியாக முயற்சிகளைத் தொடர்வது நல்லது.நண்பர்களிடம் ரகசியம் வேண்டாம்.

வெளி நாடு சென்று படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்  இறைவனை வழிபட்டும், பெற்றோர் ஆலோசனை கேட்டும் செயல்பட்டால், முன்னேற்றம் அடையலாம். கல்விக்கான கடன் தொகையைக் கையாளும்போது  மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஆடம்பரம், கேளிக்கைகளில் நாட்டம் உள்ள நீங்கள், படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் கேளிக்கை, ஆடம்பரப் பொழுதுபோக்குகளில் ஈடுபடாமல் இருந்தால் எதிர்காலம் சிறக்கும். கழிவுப்பாதை உபாதைகள், வயிற்றுக் கோளாறு ஏற்பட்டால் உடனடி மருத்துவம் அவசியம். வாகனங்களில் கவனமாக செல்லவும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். புதிதாக ஏதேனும் செயல் தொடங்கினால் பெருமாள் வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி திருப்பதி சென்று தரிசியுங்கள்.  பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், வாழ்க்கை வளமையாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த  மாணவர்களாகிய நீங்கள், மன உறுதியும், ஞாபகசக்தியும் உள்ளவர்கள்.

செவ்வாய் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகுதிசை வரை இருக்கும். தலைக்கனம் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எதையும் யோசித்து நிதானமாக செயல்படவும். சட்டென்று பேசுவதை தவிர்க்கவும். மனக்குழப்பம் நீங்க தியானம் யோகா பழகுவது நல்லது. உடலிலிருந்து அதிக வியர்வை வெளியேறும் வகையில் சிறு வயது முதல் உடல்பயிற்சி செய்தால் சிந்திக்கும் திறன் அதிகரித்து, ஞாபக சக்தி வளரும்.

மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக ஏற்கவும். இதற்கான கடனுதவியை நேரடியாக கையாளவும். இரவில் கண்விழித்து படிக்காமல், அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. தற்பெருமை பேசும் நண்பர்களை தவிர்க்கவும். அலர்ஜி,  காய்ச்சல் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெறவும்.
ஒவ்வொரு புதனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடுசெய்யுங்கள். எந்த ஒரு புதிய செயல் தொடங்கினாலும், சிவனை வழிபடுவது நல்லது. அடிக்கடி ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை வழிபாடு செய்யுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், திருப்பதி பெருமாள், பத்மாவதி தாயாரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் சட்டெனப் புரிந்துகொள்ளும் சமயோஜித புத்தி உள்ளவர்கள்.

ராகு திசையில் பிறந்த உங்களின் பள்ளிப்பருவம், குரு திசை வரை தொடரும். அதிக ஞாபக சக்தி உங்களுக்கு இருப்பதால், படிப்பதை விரைவில் ஞாபத்தில் வைத்து, அதை தேவைப்படும் நேரத்தில் உபயோகப்படுத்துவீர்கள். இந்த திறமையால் பிறர் மனம் புண்படும்படியாகாத படி நடந்து கொள்ளுங்கள். இதனால் உங்களை சுற்றியிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எந்த செயல் செய்தாலும் உடனே வெற்றி நிச்சயம் என இருந்தாலும், எந்த செயலை செய்தாலும், நிதானமாகவும், கோபப்படாமலும் செய்தால் சிறப்பான நன்மை கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு அவசியம் கிடைக்கும்.

நண்பர்களிடத்தில நல்லபெயர் உங்களுக்கு இருந்தாலும், தேவையில்லாத நட்பை விலக்குவது நல்லது. நண்பர்களுக்காக தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். அதனால் சிக்கல் உண்டாகும். சுகாதாரமற்ற உணவுப்பொருள்களை சாப்பிடுவதால் தொற்று நோய் மற்றும் வயிற்று தொந்தரவுகள் ஏற்படும். இதற்கு உடனடி சிகிச்சை எடுக்கவும். இரவில் கண்விழிப்பதை தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.

ஒவ்வொரு திங்களும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயல்களை தொடங்கும் முன் அருகிலுள்ள துர்க்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி விழுப்புரம் அருகிலுள்ள பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள்.  புதிய முயற்சிகளுக்கு முன் பக்கத்து கோயிலில் துர்க்கையை தரிசியுங்கள். மூன்று வருடத்திற்கு ஒருமுறை பூவரசன் குப்பம் சென்று நரசிம்மரை வழிபடுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும்,ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த  மாணவர்களாகிய நீங்கள் அமைதியும் ஆர்வத்துடன் கற்கும் குணமும் உள்ளவர்கள்.

குருதிசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சனிதிசை வரை தொடரும். யார் எதற்காக பாராட்டினாலும் அதனால் சிறிதும் கர்வம் உங்களுக்கு ஏற்படாது. உங்கள் மீது உங்களுக்கு உள்ள அளவு கடந்த நம்பிக்கையில் நீங்கள் செய்யக்கூடிய செயல்களை கடைசி நேரம் வரை தள்ளிப்போட்டு விட்டு, பின் அவசரமாக செய்வதை தவிர்க்கவும். சோம்பல் படாமல் ஒரு காரியத்தை திட்டமிட்டபடி முடித்தால் வெற்றிகள் உறுதியாகும்.

நண்பர்களிடத்தில் எந்த ரகசியமும் கூற வேண்டாம். அனைவரிடமும் நன்றாக பழகுங்கள். உங்களது குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வந்தால்தான் எதிலும் வெற்றி பெற முடியும். வீட்டிற்குள்ளேயே இருப்பதை விட்டு, நிறைய புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மறுக்காதீர்கள். அலர்ஜி, மூச்சுப்பிரச்சனை, பல்சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டால், உடனே சிகிச்சை எடுக்கவும். நேரம் மாறி மாறி படிக்காமல் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் படிப்பது நல்லது.

ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஏதேனும் ஒரு செயலை செய்ய தொடங்கும் முன் அருகிலுள்ள மகானின் பிருந்தாவனத்திற்கு சென்று வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வழிபாடு செய்யுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும்,திருச்செந்தூர் சென்று சுப்பிரமணியரை  வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் கவனமாகவும் முழுமையாக முயற்சித்தும் வெற்றிகளைப் பெறக் கூடியவர்கள்.

சனி திசையில் பிறந்த உங்களின் மாணவப்பருவம் புதன்திசை வரை தொடரும். படிப்பது உட்பட எந்த செயல் செய்தாலும் அதை திட்டமிட்டும், குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பதும் உங்களுக்குரிய விசேஷ குணம். நான் செய்தது சரி என்ற வறட்டு பிடிவாத குணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, உற்றார், உறவினர், பெற்றோர்களை மதித்து அவர்களின் ஆலோசனைப்படியும் செய்வது மிகவும் முக்கியம்.

பெற்றோர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளை அன்பு காட்டியும், பிறருடன் ஒப்பிட்டு பேசாமலும் வளர்த்தால் இளமையிலேயே மாபெரும் சாதனைகள் பல புரிவார்கள். இவர்களுக்கென நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்காது. எதிலும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். வயதிலும் அறிவிலும், உங்களை விட கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால், காரியங்களை எளிதில் வெல்லலாம். மன அமைதிக்கு ஏதேனும் ஒரு கலையை கற்பது சிறப்பு. பெற்றோரை தவிர பிறர் உதவியின்றி நேரடியாக கவனம் செலுத்தினால் வெளிநாட்டு கல்வி வாய்ப்பு உங்களுக்க கிடைக்கும். இ.என்.டி மருத்துவரை நாடி உடலை பரிசோதிக்கவும்.

ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.எந்த ஒரு செயலைத் தொடங்கும்முன், அருகிலுள்ள சிவன் கோயிலை தரிசிப்பது நல்லது. <<லுக்குப் போய் வாருங்கள். அடிக்கடி திருவாரூர் அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு சென்று அங்குள்ள அக்னீஸ்வரøயும் பொங்கு சனியையும்  வணங்குங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும்,நாமக்கல் ஆஞ்சநேயரை  வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் முயற்சிகளால் தடைகளை முறியடித்து முன்னேற்றம் காணக் கூடியவர்கள்.

புதன் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், கேதுதிசை வரை தொடரும். சிலருக்கு சுக்ர திசையிலும் தொடரலாம்.  எதையும் கூர்ந்து கவனிப்பதும், உடனே புரிந்துகொள்வதும் உங்கள் குணம். ஆனால் வீண் புகழ்ச்சிக்கு மயங்குவதால், அறிவே சிலசமயங்களில் அகந்தையாக மாறி வெற்றிக்குத் தடையை உண்டாக்கி விடும். தற்பெருமையும் அகங்காரமும்  தவிர்ப்பது முக்கியம். அயல்நாட்டுக் கல்வி முயற்சிகளில் ஈடுபடும் போது, நம்பிக்கையான நபர்களிடமும், பெற்றோரிடமும்  ஆலோசனை கேட்டு அதன் படி நடக்கவும்.

வெளியூர் பயணங்களில் விருப்பமுள்ள நீங்கள், சுற்றுலா செல்லு<ம் இடங்களில் உயரமான இடங்களில் கவனத்துடன்  இருப்பது அவசியம். எப்போதும்  குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதும்,  ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பார்ப்பதும் நலவழக்கமாக்கிக் கொள்வது நல்லது. முதுகு வலி, கழுத்து வலி,அடிபடுதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டால் உடன்சிகிச்சை அவசியம்.

ஒவ்வொரு புதனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புது செயலைத்தொடங்கும் முன் பெருமாளை வழிபடுங்கள். அடிக்கடி நவக்கிரகத்தில் புதன் தலமான திருவெண்காடு திருத்தலம் சென்று சுவேதாரண்யேஸ்வரரையும், புதனையும் வணங்குங்கள்.
பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும்,ஸ்ரீரங்கம் பள்ளிகொண்ட பெருமானை   வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் இயல்பாகவே எதையும் சட்டெனப்புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்.

கேது திசையில் பிறந்த உங்களின் மாணவப்பருவம், சுக்ர திசை வரை நீடிக்கும். எதையும் புத்திசாலி தனத்துடன் செய்யும் நீங்கள், எதிலும் எங்கும் அவசரம், அலட்சியம் காட்டினால் அது உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும். பெரும் சாதனை புரிய முழு கவனம் தேவை. நண்பர்களிடம் மிகவும் கவனத்துடன் பழக வேண்டும். வெளிநாடு சென்று படிக்க கல்விக்கடன் தொடர்பான உங்களின் முயற்சிகள் நிச்சயம் ஈடேறும்.

எந்த ஒரு செயலைத்தொடங்கும் முன் பக்கத்துக் கோயிலில் உள்ள துர்க்கையை வழிபடுவது நல்லது. .உங்களை புகழும் போதும், திட்டும் போதும் அதற்காக உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக செயல்படுவது நல்லது. மனப்பயிற்சி பெற தினமும்  உடற்பயிற்சி செய்வது நல்லது.  ஒற்றைத்தலைவலி, நரம்பு உபாதை, ரத்தசோகை ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம்

ஒவ்வொரு செவ்வாயும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபங்களை ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.  எந்த ஒரு செயலை தொடங்கும் முன்  துர்க்கையை வழிபடுவது சிறப்பு. அடிக்கடி பட்டீஸ்வரம் சென்று துர்க்கையையும், தேனுபுரீஸ்வரரையும் வழிபடுவது சிறப்பு. தரிசித்து பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும்,காளகஸ்தி காளத்திநாதரையும், ஞானப்ரசூனாம்பிகையையும்  வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.                                                         

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த  மாணவர்களாகிய நீங்கள் விடா முயற்சியால் வெற்றியை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள்.

உங்களின் மாணவப்பருவம், சுக்ரதிசையில் தொடங்கி, சூரியதிசை வரை இருக்கும். ஆனாலும் சிலருக்கு சந்திர திசை வரையிலும் இருக்க வாய்ப்புண்டு.
நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சட்டெனத் தீர்மானிப்பதைத் தவிர்த்து, எதிலும் முழுமையான ஈடுபாட்டுடன் திட்டமிட்டு செயல்பட்டால் பல  சாதனைகள் படைக்கலாம். நீங்கள் யாரிடமும் பகையில்லாமல் நட்பு பாராட்டுவீர்கள். ஆனால் அந்த நட்பு உங்களை ஏமாற்றும். எனவே  சரியான நட்பை தேர்ந்தெடுப்பது நல்லது.

வெளிநாடு சென்று உயர்கல்வி பயில வாய்ப்பு வரும்போது, பெற்றோர் பெரியோர் ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது. கல்விக் கடனுக்கான முயற்சிகளை நம்பிக்கையானவர்களிடம் கேட்டு  செய்வது பயன் தரும். புத்திசாலியான நீங்கள்,  உ<ணர்ச்சி வசப்படுவதாலும், அவசரப்பட்டு செயல்படுவதாலும் மிக அருமையான வாய்ப்புகளை இழக்க வாய்ப்புண்டு. இதனை நீக்க  தினமும் சில நிமிடமாவது தியானம் செய்யுங்கள். வயிற்றில் பூச்சிகளால் தொல்லை, கழிவுப்பாதை உபாதை, தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை எடுக்கவும்.

ஒவ்வொரு புதனும் காலை 6.15 முதல் 6.45 மணிக்குள் இஷ்ட தெய்வத்திற்கு முன் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயலை செய்யும் முன் பள்ளி கொண்ட பெருமானை வழிபடுவது சிறப்பு. அடிக்கடி திருவனந்தபுரம் சென்று அனந்த பத்மனாபனை வழிபடுவது சிறப்பு. பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், திருப்பதியில் தங்கி வெங்கடாஜலபதியை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த  மாணவர்களாகிய நீங்கள் அமைதியாகவும் திட்டமிட்டும் செயல்படக் கூடியவர்கள்.

உங்கள் மாணவப்பருவம், சூரியதிசை முதல், செவ்வாய் திசை வரை இருக்கும். ஆனாலும் ஒரு சிலருக்கு ராகு திசையிலும் படிப்பு தொடரலாம். எந்த செயல் செய்தாலும் சரியான நேரத்திலும், கவனத்துடனும் செய்யக்கூடிய நீங்கள் வீண் கோபத்தையும், பிடிவாதத்தையும் தவிர்த்தால் சிறந்த பலன்களைப் பெறலாம். பெற்றோர், ஆசிரியர் கூறியபடி நடந்து கொள்வது நல்லது. நண்பர்களால் ஏமாந்து போகும் பாதிப்பு இந்த நட்சத்திரக்காரர்களுக்கே உரியது. எனவே நண்பர்களிடம் கவனமாக பழகவும்.

உங்களுக்கு வெளிநாடுகளில் சென்று கல்வி கற்கும் வாய்ப்பு எளிதாகக் கிடைக்கும் என்றாலும் தெரியாத நபர்களிடம் மிகவும் கவனமாக செயல்பட்டால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம். பெற்றோர் உதவியுடன் வங்கிக்கடன் முயற்சிகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அடிக்கடி கோபப்படுவதும், அவசரப்பட்டு முடிவெடுப்பதும் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மனதைக் கட்டுப்படுத்துவது நல்லது. மனதைக் கட்டுப்படுத்த ஏதாவது விளையாட்டில் ஈடுபடுங்கள். கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம்.

ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயல் தொடங்கினாலும் அருகிலுள்ள அம்மனை வழிபடுங்கள். அடிக்கடி திருவானைக் காவல் சென்று அகிலாண்டேஸ்வரியையும், ஜம்புகேஸ்வரரையும் வழிபடுவது சிறப்பான பலன் தரும். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியை வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றிபெறக் கூடியவர்கள்.

சந்திர திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகு திசை வரை தொடரும்.  முழு முயற்சியுடன் படிக்கும்  நீங்கள், தன்னம்பிக்கை இருந்தாலும் சரியாக திட்டமிட்டு செயல்படுவது மிகவும் முக்கியம் என்பதை தெரிந்து கொண்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உங்கள் மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கையால் எந்த செயலையும் கடைசி நேரத்தில் அவசர அவசரமாகச் செயல்படுவீர்கள். இதை தவிர்த்து படிப்படியாக முயற்சிகளைத் தொடர்ந்து, சரியான நேரத்தில் அதை செய்து முடிப்பது நல்லது.

அயல் நாடுகளில் சென்று படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது பெற்றோர் அறிவுரைப்படி செயல்பட்டால் நல்லது.  கல்விக்கடன் தொகையைப் பெற சரியான நபர்களுடன் சேர்ந்து முயற்சி செய்யவும். படிக்கும்போது நண்பர்களுடன் சேரமால் தனியாகப்படித்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம்.  மனஅழுத்தம், எலும்புத் தேய்மானம், நரம்புக் கோளாறு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெறவும்.

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயலை செய்யும் முன்பு ஆஞ்சநேயரை வழிபடுங்கள். அடிக்கடி சங்கரன் கோவில் சென்று கோமதி அம்மனையும், சங்கர நாராயணரையும் வழிபடுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை நிறைவு பெற்றதும், ஸ்ரீரங்கம் பள்ளி கொண்ட பெருமாளை  வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் ஞாபகசக்தியும் கற்பூர புத்தியும் உள்ளவர்கள்.

செவ்வாய் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகுதிசை வரை இருக்கும். எதையும் துணிந்து செய்யக்கூடிய நீங்கள், உங்கள் செயலை பணிவுடன் செய்தால் வெற்றி நிச்சயம். உங்களது மனக்குழப்பம் நீங்க தியானம் யோகா பழகுவது நல்லது. சிறுவயது முதல் உடற்பயிற்சிகளைச் செய்வதும், ஏதாவது ஒரு கலையைக் கற்பதும் உங்களது சிந்தனைத் திறனை அதிகப்படுத்தும். இதனால் மனம் தெளிந்து பாடங்கள் விரைவில் பதியும்.

நண்பர்களுக்காக எதையும் செய்யாமல், உங்களது பெற்றோர், ஆசிரியர் சொல்படி நடப்பது சிறப்பு. நீங்கள் முயற்சி செய்தால் வெளிநாடு சென்றுப் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இரவில் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. தேவையில்லாத நண்பர்களைத் தவிர்ப்பது நல்லது. தோல் சம்பந்தப்பட்ட நோயான தேமல், ரத்தத் தொற்றுநோய், வயிற்று வலி இவைகளுக்கு உடனடி சிகிச்சை பெறவும்.

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சியை ஆரம்பிக்கும் முன் லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். அடிக்கடி திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை வழிபட்டு வாருங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை நிறைவு பெற்றதும், அகோபிலம் சென்று நரசிம்மரை வணங்கினால் உரிய பணி கிடைத்து வாழ்க்கை உ<ன்னதமாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் சட்டென எதையும் புரிந்துகொள்ளும் ஆற்றல்மிக்கவர்கள்.

ராகு திசையில் பிறந்த உங்களின் பள்ளிப்பருவம், குரு திசை வரை தொடரும். ஞாபக சக்தி உடைய நீங்கள் படித்ததை சரியான சமயத்தில் உபயோகப்படுத்துவது உங்களின் தனி குணம். இதனால் தலைக்கணமும், அலட்சியமும் ஏற்படாமல் செயல்பட்டால் மற்றவர்களது உதவி கிடைப்பதோடு மதிப்பும் உயரும். வீண் பிடிவாதம், தேவையற்ற கோபத்தைத் தவிர்த்து விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறலாம்.

முகத்திற்கு நேராகப் புகழும் நண்பர்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் தேவையில்லாமல் கொடுக்கும் வாக்குறுதிகளை தவிர்த்தால் எதிலும் சிக்காமல் தப்பிக்கலாம். வெளிநாடு சென்று படிக்க விருப்பமுடைய மாணவர்களுக்கு அதற்கான கல்விக்கடன் மனம்போல் கிடைக்கும். வயிறு, மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், முதுகு எலும்பு பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம்.

ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சியை ஆரம்பிக்கும் முன் துர்க்கையை வழிபடுங்கள். அடிக்கடி திருநாகேஸ்வரம் நாகநாதரையும், ராகு பகவானையும் வழிபடுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை நிறைவு பெற்றதும், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர், தையல்நாயகியுடன், அங்காரகனையும் வழிபட்டால் உங்கள் வாழ்வு செழிப்பாகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் இயல்பாகவே எதையும் சட்டெனப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள்.

குருதிசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சனிதிசை வரை தொடரும். இயற்கையிலேயே ஞாபக சக்தியும், புத்திசாலித்தனமும் <உடைய நீங்கள், பலரால் பாராட்டப்படுவீர்கள். உங்களுக்கே உரித்தான சோம்பேறித் தனத்தால் உ<ங்களது பணிகளை ஒத்திப்போட்டு கடைசி நேரத்தில் அதை அவசரமாக செய்வதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் சீராகவும் சிறப்பாகவும், திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்படுத்தினால் உங்கள் வெற்றிகள் உறுதியாகும்.

வெளிநாடு சென்று பயில வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவும். அறிமுகமில்லாதவர்களின் உதவியை நாடாமல் பெற்றோர், உறவினர்களின் ஆலோசனையின் பேரில் கல்விக்கடனுக்காக முயற்சி செய்யவும்.  எப்போதும் கிணற்றுத் தவளையாக இருக்காமல் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. நண்பர்களுடன் கவனமாகப் பழகவும். வயிறு மற்றும் சளித் தொந்தரவு, அலர்ஜியால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம். இரவில் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சியில் ஈடுபடும் முன் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வாருங்கள். அடிக்கடி சங்கரன் கோயில் சென்று ராகவேந்திரரை தரிசியுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை நிறைவு பெற்றதும், திருச்செந்தூர் சென்று சுப்ரமணியசுவாமியை வழிபடுட்டால் உங்கள் வாழ்க்கை பசுமையாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறக் கூடியவர்கள்.

சனிதிசையில் பிறந்த உங்களின் மாணவப்பருவம், புதன்திசை வரை தொடரும். எந்த ஒரு செயலையும்  திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் குணமுடைய நீங்கள், எதிலும் உங்கள் முடிவே சரியானது என்ற வீண் பிடிவாதத்தை தவிர்க்கவும். உங்களை பிறர் பாராட்ட வேண்டும் என விரும்பும் நீங்கள், முதலில் அடுத்தவரை பாராட்ட பழக வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளை பெற்றோர் அடுத்தவர்களுடன்  ஒப்பிட்டுக் குறைசொல்லாலும், அன்பு செலுத்தியும்  வளர்த்து வந்தால்  மாணவப் பருவத்தில் இவர்கள் பல சாதனைகளை புரிவார்கள்.

எங்கும், எதிலும் முதல் நபராக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடைய நீங்கள், நண்பர்களிடத்தில் சற்று விலகியே இருங்கள். வெளி நாடு சென்று படிப்பதற்கான வாய்ப்பை விடா முயற்சியுடன் செய்தால் எளிதில் கிடைக்கும். வயிறு, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். எந்த ஒரு புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன், அருகிலுள்ள அம்மன் கோயிலில் வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி மந்திராலயம் சென்று ராகவேந்திரரையோ, ஷீரடி சென்று சாயிபாபாவையோ வணங்குங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை நிறைவு பெற்றதும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தூய மனதோடு பிரார்த்தனை செய்தால் உங்கள் வாழ்வு சிறப்பாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் பொறுமையாகச் செயல்பட்டு பெருமை பெறக் கூடியவர்கள்.

புதன் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், கேதுதிசை வரை தொடரும். சிலருக்கு சுக்ர திசையிலும் தொடரலாம். இயற்கையாகவே புத்திசாலியான நீங்கள் தேவையற்ற புகழுக்கு மயங்கினால் அதுவே அகங்காரமாக மாறிவிடும். எனவே இதை தவிர்த்தால் வெற்றி வாய்ப்பு எளிதில் கிடைக்கும். வெளிநாடு சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்கள் தேவையற்ற நபர்களைத் தவிர்த்து பெற்றோர் மற்றும் நம்பிக்கையான உறவினர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது. கல்விக்கடனை கல்வி பயில மட்டுமே உபயோகப்படுத்தவும்.

இரவுநேர பயணங்களின்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். விஷ பூச்சிகளால் தொந்தரவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்.
இரவில் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பதும், பெற்றோர் ஆலோசனைப்படி நடப்பதும் நல்லது. பரம்பரையாக ஏற்படக்கூடிய நோய் உங்களுக்கும் வராமல் முன்னெச்சரிக்கையாக சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சிகளுக்கு முன் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். அடிக்கடி திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை நிறைவு பெற்றதும், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபனை தரிசித்தால் உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.
நாய் என்று திட்டினால் சந்தோஷப்படுங்கள்!

ஒருவரை ஒருவர் கோபத்தில் திட்டும் போது, நாயே! என்று கூறுவர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதாகும்.ஏனென்றால் நாய் என்பதை கேவலமாக கருதுவர். ஆனால் நாயானது பைரவரின் அம்சமாகும். கிருஷ்ண பரமாத்மா கீதையில் நாயைப் பற்றி பெருமையாக கூறி உள்ளார். தர்மபுத்திரர் சொர்க்கத்துக்குப் போகும்போது தம்முடைய அன்புக்கு உரிய நாயையும் உடன் அழைத்துச் சென்றார் என புராணம் கூறுகிறது.  நாய், வரலாற்றுப் பெருமை கொண்டது. வேதத்தில் நாய் பற்றிய கதை கூறப்பட்டுள்ளது. ரிக் வேதம், நான்கு கண்கள் கொண்ட நாய் காலதேவனுக்குத் துணை வருவதாகக் கூறுகிறது. அத்துடன் நாயை நான்கு வேதத்திற்கு இணையாக கூறுவர். இதற்கு ஒரு புராணக்கதை உண்டு.

ஒரு முறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடி விட்டு தனது சீடர்களுடன், நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒரு சண்டாளன் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனது மனைவி தலையில் மண்கலயங்களுடன் வந்து கொண்டிருந்தாள். பக்கத்தில் அவர்களது குழந்தைகள் ஆடிப்பாடி கொண்டிருந்தனர். சண்டாளன் தனது கையில் நான்கு நாய்களை பிடித்து கொண்டிருந்தான். இவர்களைப்பார்த்ததும் ஆதிசங்கரருக்கு அருவருப்பு ஏற்பட்டது. உடனே அவர், ஏ சண்டாளா! சீ தூரப்போ, என கோபத்துடன் கத்தினார். இதைக்கேட்ட சண்டாளன், மிக அமைதியுடன், ஐயா! நீங்கள் சீ தூரப்போ என்று கூறியது, என் உடலையா? அல்லது எனக்குள் இருக்கும் ஆத்மாவையா? என்றான். இதைக்கேட்டு அதிர்ந்து போன ஆதிசங்கரர், இவ்வளவு ஞானத்துடன் பேசும் நபர் யார்? என தன் ஞானதிருஷ்டியில் பார்த்தார். உடனே நெடுஞ்சாங்கிடையாக சண்டாளனின் காலில் விழுந்து வணங்கினார். சண்டாளனாக வந்தது வேறு யாருமில்லை. சாட்சாத் பரமேஸ்வரன் தான். மனைவியாக பார்வதியும், ஆடிப்பாடிய குழந்தைகளாக விநாயகரும் முருகனும், நான்கு நாய்களாக நான்கு வேதங்களும் தான் சிவனின் கூட வந்தவர்கள். ஆதிசங்கரருக்குள் இருந்த சிறு ஆணவத்தை அடக்கி அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே சிவன் இந்த வேடத்தில் வந்தார். இந்தக்கதையிலிருந்து நாய் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.

கிரேக்கர்களின் பழைய கதைகளிலும் இரு நாய்களைப் பற்றி கதைகள் வருகின்றன. மரண தேவதையின் சன்னிதானத்துக்குத் துவாரபாலகர்களாக நாய்கள் பணிபுரிகின்றனவாம். வேத காலக் கதையும் பித்ரு லோகத்துக்கு துவார பாலகர்கள் நாய்கள்தான் என்று கூறுகிறது. அவை வைவஸ்த சியாமம், ஸபலம் என்று பெயர் கொண்டவை. பாரசீகர்களின் தர்ம சாஸ்திரங்களில், பித்ரு லோகத்தையும் தேவ லோகத்தையும் இணைக்கும் சின்வத் என்னும் பாலம் ஒன்று இருப்பதாகவும், இறந்த பின் மனித ஆன்மாவை ஒரு நாயே இந்தப் பாலத்தின் வழியாக அழைத்துச் செல்லும் மார்க்க பந்து என்று எழுதி வைத்திருக்கிறார்கள். கிரேக்கர்களின் புராணக் கதை ஒன்றில், மூன்று தலைகள் கொண்ட கர்பேராஸ் என்னும் நாய்தான் காலதேவனுக்கு மெய்க் காவலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வானுலகில் வாழும் நாய்க்கு திவ்யகதஸ்என்று பெயர் சூட்டியிருக்கிறது வேதம். கேனிஸ் என்னும் விண்மீன்களின் கூட்டத்தைத்தான் வேதம் சு நா ஸிர என்று குறிப்பிடுவதாக மாக்ஸ் முல்லர் தீர்மானிக்கிறார். ஸம்வத்ஸம் (ஓர் ஆண்டு) முடிந்ததும், பருவகால தேவதைகளை நாய்கள் எழுப்புவதாக ரிக்வேதம் முதல் மண்டலத்தில் ஒரு செய்தி உள்ளது. பழகிய நல்ல இனத்து நாயைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் குறிப்பு வருகிறது. பரதன் மாமன் வீட்டுக்குப் போகும்போது பயிற்சி பெற்ற வேட்டை நாய்களையும் அழைத்துச் சென்றானாம். மனிதன் மீது அன்பு கொண்ட பிராணி நாயைப்போல் வேறில்லை. அதனால்தான் அது மொழி பேதமோ, தேசம், இனம், நிலை பேதமோ இன்றி, அனைத்தையும் கடந்து எவருடனும் ஒட்டுறவாக வாழ முடிகிறது. எனவே உங்களை யாராவது நாய் என்று திட்டினால் பெருமைப்படுங்கள், சந்தோஷப்படுங்கள், அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்துங்கள். திட்டியவர் மீது கோபப்படாதீர்கள்.
கண்களுக்குப் புலப்படாத சித்தர்கள்!

இன்றும் சித்தர்கள் உலகில் இருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் மனிதர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை என்கிறார்கள். ஒரு ஞானி இதற்கொரு கதை சொல்கிறார். ஒரு துறவி தம்முடைய சில சீடர்களுடன் ஒரு நகரத்திற்கு வந்திருந்தார். அந்தத் துறவிக்கு ஒரு சக்தி இருந்தது. தம் உடலிலிருந்து ஒரு துளி ரத்தம் எடுத்து, அதன்மூலம் குழந்தைகளின் நோய்களை உடனுக்குடன் குணப்படுத்தும் ஆற்றல் அது. இந்த செய்தி மெல்ல மெல்ல நகரம் முழுவதும் பரவிவிட்டது. தமக்கு தேவியின் அருள் கிட்டியிருப்பதாகவும் அந்த சித்தியின் மூலம் தான் தம்முடைய ரத்தத்தில் மருந்துக்குணம் இருப்பதாகவும் துறவி தெரிவித்தார். அன்று முதல், துறவியின் இருப்பிடத்தில் பொன், வெள்ளிக்காசுகளும் பழங்களும் மலர்களும் பூஜைக்கான பொருள்களும் வந்து குவியலாயின. ஏகப்பட்ட பெற்றோர்கள், நோய்வாய்ப்பட்ட தமது குழந்தைகளுடன் துறவியின் ஆசிரமத்தை முற்றுகையிடலானார்கள். நோயால் வருந்திய சின்னஞ்சிறு குழந்தைகளின் திரளான கூட்டத்தைக் கண்ட துறவியின் மனதில் கருணை பொங்கித் ததும்பியது.

மறுகணமே துறவி தம் ஆள்காட்டி விரலொன்றைத் திரிசூலத்தில் அழுத்தினார். குபுகுபுவென்று ரத்தம் வெளிப்பட்டது. ரத்தத் துளிகளின் மகிமையால் குழந்தைகளின் நிலைமையில் அப்போதே முன்னேற்றம் ஏற்பட்டது. பெற்றோர்களின் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கியது.  ஒரு விரலில் ரத்தம் வருவது நின்றதும், துறவி தமது இன்னொரு விரலைத் திரிசூலத்தின் மேல் வைத்தார். குணமடைந்த நோயாளிகளின் கூட்டம் அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்தது. ஆனால், நோயாளிகளின் வரிசை வளர்ந்து கொண்டே போயிற்று. துறவியின் பத்து விரல்களிலிருந்தும் ரத்தம் வெளியேறி முடிந்தாயிற்று. அதற்கு மேல் ரத்தம் நின்று விட்டது. ஆயினும், நோயாளிகளின் வருகைக்கு ஒரு முடிவு இருப்பதாகவே தெரியவில்லை. அக்கம் பக்கத்து ஊரின் மக்களும் அங்கே வரத் தொடங்கி விட்டார்கள். கதையை விவரிப்பானேன்? காரணம், கடைசி கட்டம் முழுக் கதையையும் விளக்கி விடுகிறது. அகதிகள் சிலர் இந்த விவரம் தங்களுக்கு எட்டியதும் அந்தத் துறவியின் குடிசைக்கு விரைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி - ஐயகோ!

கால்கள் ஒரு மரக்கிளையில் கட்டப்பட்டு துறவி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார். திரிசூலத்தால் குத்தப்பட்டு உடல் முழுவதும் சல்லடைக் கண்களாகி வெளுத்துப் போய் விட்டிருக்கிறது. துறவியின் அருகில், கையில் ஒரு நோயாளிக் குழந்தையுடன் நின்ற ஒரு தம்பதியர் சுவாமி! ஒரு துளி ரத்தம் மட்டும் எங்களுக்குத் தாருங்கள். எங்களுடைய ஒரே குழந்தை இது. தங்கள் சாந்நித்தியத்திலிருந்து நம்பிக்கை இழந்து திரும்ப வேண்டிய அளவுக்கு எங்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துர்பாக்கியம்? என்று மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மனிதர்கள், அந்த நகரத்தின் அந்நாளைய மனிதர்களிலிருந்து வேறுபட்டுவிட்டனரா? இல்லை! என்பதுதான், மனிதனின் இயற்கை குணங்களை ஆராய்ந்தறிந்த உளவியல் அறிஞர்களின் கூற்று! இந்த சம்பவத்துக்குப் பிறகு இறைவனும் இறைவியும் கொஞ்சம் உஷாராகி விட்டனர். இந்தத் துறவியைப் போன்ற வரம் பெற்ற சித்தர்கள் இன்றுகூட இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் இப்படி வெளிப்படையாக மனிதர்களிடையே செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மாமனை மடியில் அமர்த்திய மருமகன்!

மகாவிஷ்ணு விநாயகருக்கு மாமன் முறை ஆவார். கேரள மாநிலம் கோட்டயம் மள்ளியூர் மகா கணபதி கோயிலில் மாமனான மகாவிஷ்ணுவை மருமகனான விநாயகர் தன் மடியில் அமர்த்திய கோலத்தில் அருள்பாலிக்கிறார். முழுமுதற் கடவுளான விநாயகர் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

பக்தர்களின் தரிசனத்திற்காக விநாயகர் பல்வேறு வடிவங்களில் அருள்பாலிக்கும் அற்புத தலங்கள் ...

நிறம் மாறும் விநாயகர்

கன்னியாகுமரி மாவட்டம், கேரள புரத்தில் உள்ள மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர் நிறம் மாறி காட்சியளிக்கிறார். இவருக்கென தனி சன்னதியோ, மேற்கூரையோ இல்லாததால் இவர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தபடியும் இருக்கிறார், சந்திரகாந்த கல்லால் செய்யப்பட்ட இந்த விநாயகர் தட்சிணாயன காலத்தில் (ஆடி-மார்கழி) வெண்ணிறமாகவும், உத்தராயண (தை-ஆனி) காலத்தில் கருப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார். இவருக்கு, நிறம் மாறும் விநாயகர் என்று பெயர்.

அம்மானை சாந்தப்படுத்திய பிள்ளையார்

குழந்தைகள் கோபித்துக் கொண்டிருந்தால் அம்மா, கண்ணே! மணியே என கொஞ்சி, முத்தமிட்டு, சாந்தப்படுவாள். ஆனால், பெற்றவள் கோபமாக இருக்கும் போது, எந்தப் பிள்ளையாவது சமாதானம் சொல்லுமா! நம் பிள்ளையார் சொன்னாரே! திருவனைக்காவல் என்ற சிறுநகரம் திருச்சி அருகில் இருக்கிறது. இங்கேயுள்ள ஜலசிவன் கோயிலில், அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கே மரியாதை அதிகம். இவள் கலியுகத்தின் துவக்கத்தில் மக்கள் போகும் போக்கைப் பார்த்து கடும் உக்கிரமாக இருந்தாள். மக்களை அழிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சிவனின் அம்சமாகக் கருதப்பட்ட ஆதிசங்கரர். இத்தலத்துக்கு வந்தார். அவர் சிவாம்சம் பொருந்தியவர் என்பதால், அம்பாளின்  உக்கிரத்துக்கெல்லாம் பயப்படவில்லை. அப்படியே சுட்டெரித்தால் தான் என்ன! அவள் பாதாரவிந்தம் தானே கிடைக்கும் எனக்கருதினாரோ என்னவோ! எவ்வித அச்சமும் இல்லாமல் கோயிலுக்குள் சென்றார்.

ஒரு விநாயகர் சிலையை அம்பாள் எதிரே பிரதிஷ்டை செய்தார். பிள்ளையை அம்பாள் பார்த்தாளோ இல்லையோ, கோபம் போய்விட்டது. இந்தக் கோபத்தை வடித்தெடுத்து தாடங்கம் எனப்படும் ஒரு ஜோடி தோடுகளில் அடைத்து, அதை அம்பாளுக்கு அணிவித்து விட்டார். இப்படி, அன்னையை சாந்தப்படுத்திய அந்தப் பிள்ளையார், அம்பாளுக்கு செல்லப்பிள்ளை இல்லையா? அதனால், செல்லப்பிள்ளையார் என்றே மக்கள் அவருக்கு பெயர் சூட்டிவிட்டனர். அவர் மட்டும் நமக்கு அருள்பாலிக்காமல் இருந்திருந்தால், இவ்வுலகம் கலியுகத்தின் துவக்கத்திலேயே அம்பாளின் சீற்றத்துக்கு ஆளாகி அழிந்திருக்கும்.

பத்து கரங்களுடன் விநாயகரின் அரிய தரிசனம்

ஐந்து கரத்தனை, யானை முகத்தனை எனப் போற்றப்படும் விநாயகர், நம்நாட்டில் சில குறிப்பிட்டத் திருத்தலங்களில் மட்டுமே, பத்து கரங்களுடன் அருளாட்சிப் புரிகிறார். இந்தத் தசபுஜ கணபதி தோற்றம் காணக் கிடைத்தற்கரியது. அப்படிப்பட்ட மூன்று தலங்களைத் தரிசிப்போமே... அவற்றில் இரண்டு, கணேச சதுர்த்தி விழாவுக்குப் பெயர் போன மகாராஷ்டிரா மாநிலத்திலும், மற்றொன்று, கர்நாடகாவிலும் அமைந்துள்ளது.

யானையும், சிங்கமும் நட்பு பாராட்டும் ÷க்ஷத்ரம்!

அரபிக் கடலோரம், மங்களூரு - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பியிலிருந்து வடக்கே 22 கி.மீ. தொலைவிலும், மங்களூரிலிருந்து ஏறக்குறைய 80 கி.மீ, தொலைவிலும் உள்ளது சாளக்ராமம் எனும் சிற்றூர். இங்கு சங்கு, சக்கரம் என்ற இரு புண்ணியத் தீர்த்தக் கட்டங்களுக்கு இடையே ரம்மியமான சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ குரு நரசிம்மர் ஆலயத்தில் கம்பீரமாகத் தசபுஜ கணபதி எழுந்தருளியுள்ளார். கி.பி நான்காம் நூற்றாண்டில் மௌரியக் குலத் தோன்றல் ராஜா லோகாதித்யன், தன் ராஜகுரு பட்டாச்சார்யாவுக்கு நிவேதனமாக அளித்த பதினான்கு கிராமங்கள் அடங்கிய இந்தச் சாளக்ராம ÷க்ஷத்திரத்துக்குக் கூட தேசத்துப் பிராமணர்கள், ஸ்ரீ நரசிங்கப் பெருமாளையே தங்களுக்குக் குருவாகவும், குல தெய்வமாகவும் போற்றி வணங்குகிறார்கள். அதனால் இவ்விடத்துக்கு ஸ்ரீகுரு நரசிம்ம ÷க்ஷத்திரம் என்றே பெயர். ராஜகுரு ஒரு தீவிர கணபதி உபாசகர். ஒருநாள் அவரது கனவில் ஸ்ரீ நரசிம்மர், தசபுஜ கஜானனாக வல்லபை தேவியுடன் காட்சியருளி, ஆலயம் எழுப்ப உத்தரவானதால், கணேச யந்திரத்தின் மீது ஸ்ரீ நரசிம்மரை ஸ்தாபனம் செய்வித்தார். வைணவக் கோயிலில் சைவ சம்பிரதாயமே எல்லா விஷயங்களிலும் அனுஷ்டிக்கப்படுகிறது என்பது அதிசயம் தான்!

இங்கு தசபுஜ விநாயகருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆலய நிகழ்ச்சிகளில், மகா கணபதி நரசிம்மப் ப்ரீத்யர்த்தம் என்றே சங்கல்பம் செய்விக்கப்படுகிறது. விநாயக சதுர்த்தியின் போது வெள்ளி ரதத்தில் விநாயகர் வீதி உலா வருவது காணக் கண் கொள்ளா காட்சியாகும். இப்பிரதேசத்தில், யானைகளும், சிங்கங்களும் விரோதம் பாராட்டாமல் நட்புடன் பழகியதைக் கண்டு பரவசப்பட்ட ராஜகுரு, இவ்விடத்தை நிர்வைர ஸ்தலம் (பகைமை பாராட்டாத பிரதேசம்) என்று குறிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தாராம்! இதை உறுதி செய்யும் விதத்தில் ஆலயத்தில் ஆனை முகத்தான் தசபுஜ கஜானனனாகவும், சிங்கம், ஸ்ரீநரசிம்ம வடிவிலும் காட்சியளிக்கின்றனர்.

கிணற்றிலிருந்து வந்த கணபதி!

மகாராஷ்டிர மாநிலத்தின் புண்ணிய பூமியாகப் போற்றப்படும் புனே நகரத்தின் மையப் பகுதியில் முத்தா நதிக்கரையோரம் நெளிந்தோடும் கர்வே சாலையில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது தசபுஜ கணபதி ஆலயம். இதற்கு சிந்தாமணித் தீர்த்தம் என்றும் பெயருண்டு. மராட்டியப் பேஷ்வாக்களின் சர்தாராகப் பணியாற்றிய சர்தார் ஹரிவந்த் பட்கேயின் வம்சாவளியினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு சமயம், இங்குள்ள பிரபல சக்தித் தலமான பார்வதிக் குன்றுக்கருகில் ஒரு வீட்டில் கிணறு வெட்டும்போது அங்கு இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. சங்கடஹர சதுர்த்தி, கணேச சதுர்த்தி விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

மகாராஷ்டிராவின் ரத்னகிரி ஜில்லாவிலுள்ள சிப்லூன் டவுனுக்கருகில், ஹேத்வி எனுமிடத்தில் மலைமீது உள்ளது புராதனமான லக்ஷ்மி-கணேசர் எனும் தசபுஜ கணேசர் ஆலயம். மராட்டியப் பேஷ்வாக்களால் பராமரிக்கப்பட்டுள்ளது. அபூர்வமான, காஷ்மீரத்தில் மட்டுமே காணப்படும் வெண்ணிறப் பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளார் கணேச மூர்த்தி. இரண்டு அடி உயரப் பீடத்தில், மூன்று அடி உயர வடிவில், பத்துக் கரங்களில் வெவ்வேறு ஆயுதங்களுடன், இடக்காலை மடித்து, அதன் மீது லக்ஷ்மி தேவியை இருத்திக் கொண்டு, வலக் காலைக் குந்திய நிலையில் வைத்தவாறு, மோதகத்தை இடப்புறம் நீட்டிய துதிக்கையில் வைத்துக் கொண்டு அருள்பாலிக்கிறார். தரிசிப்போரின் கண்ணையும், கருத்தையும் ஒருங்கே கவர்ந்து விடும் தோற்றம்! விநாயக சதுர்த்தி அன்று, வெண்ணிற தசபுஜ விநாயகர் தேரில் பவனி வரும் போது கூட்டம் அலைமோதும். அந்த மலைப் பிரதேசம் முழுவதும், கணபதி பப்பா மோரியா! என்ற வாழ்த்தொலி எதிரொலிக்கும்.
காசியில் சூரிய பகவானை வழிபட்டவர்கள்!

காசி என்று போற்றப்படும் வாரணாசி திருத்தலத்தில் சிவன், அம்மன், விநாயகருக்கு நிறைய கோயில்கள் இருப்பது போலவே சூரிய பகவானுக்கும் கோயில்கள் உள்ளன. பகீரதன், தன் மூதாதையர் புனிதமடைவதற்காக கடுமையாகத் தவம் புரிந்து, பூலோகத்திற்கு கங்கை நதியை வரவழைத்தான். அந்த வேளையில் சூரிய பகவான் பூமிக்கு வந்து காசி விஸ்வநாதரை வழிபட்டுக் கொண்டிருந்தான். கங்கை நதி காசிக்குள் பிரவேசித்ததை அறிந்த சூரிய பகவான், கங்கையையும் வழிபட்டுப் பேறுகள் பெற்றான். அதன் நினைவாக காசி திருத்தலத்தில் லலிதாகாட் படித்துறை அருகில் ஒரு சூரியன் ஆலயம் உள்ளது. இங்குள்ள சூரிய பகவானை கங்காதித்யர் என்று போற்றுவர். காஷ்யப மகரிஷியின் மனைவியான வினதைக்கு மூன்று முட்டைகள் பிறந்தன. முதல் முட்டையிலிருந்து ஆந்தை வெளிப்பட்டது. இரண்டாவது முட்டையிலிருந்து அருணன் வெளிப்பட்டான். இவன் முட்டையிலிருந்து வெளிவரும்போதே ஊனமாகப் பிறந்தான்.

மூன்றாவது முட்டையிலிருந்து கருடன் தோன்றினான். இம்மூவரில் ஆந்தையும் அருணனும் காசித் திருத்தலத்திற்கு வந்து அங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை வழிபட்டார்கள். அவர்களுக்கு அருள்புரிய திருவுளம் கொண்ட சூரிய பகவான் அருணனை தனது தேரோட்டியாகப் பதவி கொடுத்து வைத்துக்கொண்டார். ஆந்தை மகாலட்சுமியின் வாகனமாக மாறும் பாக்கியத்தை அளித்தார். அருணனை தேரோட்டியாக ஏற்றுக் கொண்ட சூரிய பகவானை அருணாதித்யர் என்று போற்றுவர். இந்தச் சூரிய பகவான் ஸ்ரீ திரிலோசனர் ஆலயத்தில் அருள்புரிகிறார். பகவான் கிருஷ்ணரின் மகன் சாம்பன் தன் தந்தையால் சாபம் பெறும் நிலைக்கு ஆளானான். அதன் விளைவால், சாம்பன் தொழுநோயால் பாதிகப்பட்டான். மகன் படும் துன்பத்தைக் கண்ட கிருஷ்ணர், சாம்பனுக்கு சாபவிமோசனம் பெறும் வழியைக் கூறினார். அதன்படி காசிக்கு வந்த சாம்பன் அங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். சாம்பன் வழிபட்ட சூரியன் சாம்பாதித்யர் என்று அழைக்கப்படுகிறார். சாம்பன் சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபட்டு புனிதம் அடைந்த நாள் தைப் பொங்கல் என்று புராணம் கூறும்.

காஷ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் பிறந்த மூன்று பிள்ளைகளில் கருடனும் ஒருவர். இந்த கருடன், அளப்பரிய சக்தியைப் பெறுவதற்காக தன் தாய் வினதையுடன் சூரிய பகவானை வழிபட்டு பலம் பெற்றார். அதன் விளைவாக மகாவிஷ்ணுவின் வாகனமாகவும் திகழ்கிறார் என்பது புராணம். தாயும் மகனும் வழிபட்ட சூரிய பகவானை சு÷ஷால்கா ஆதித்யர் என்று போற்றுவர். காசியில் புகழ்பெற்ற ஸ்ரீதிரிலோசனர் மற்றும் ஸ்ரீகாமேஸ்வரர் ஆலயப் பிராகாரத்தில் இந்தச் சூரிய பகவான் எழுந்தருளியுள்ளார். தொழுநோயால் பாதிக்கப்பட்டு துன்பப்பட்ட விமலன் என்பவன், ஒரு முனிவரைச் சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்றான். அவன் நிலையை அறிந்த முனிவர், நீ காசியில் சிவலிங்கம் நிறுவி சூரிய பகவானை வழிபட்டால் உன் துன்பம் என்று ஆலோசனை சொன்னார். முனிவர் சொன்னதுபோல் காசிக்கு வந்த விமலன், சிவலிங்கத்தை நிறுவி, சூரிய பகவானை வழிபட்டான். அதில் மகிழ்ந்த சூரிய பகவான், இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுபோய் வராது என்று அருளினார். இந்தக் கோயில் காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜங்கம்பாடியில் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை விமலாதித்யர் என்று கூறுவர்.

சூரிய பகவானின் மகன்களில் ஒருவர் எமதர்மராஜன், இவர் தனக்கு அதிக சக்தி வேண்டும் என்று தன் தந்தை சூரிய பகவானுக்கு ஆலயம் நிர்மாணித்து, தவமியற்றி வரங்கள் பெற்றதாகப் புராணம் கூறும். எமன் நிறுவிய சூரிய பகவானை எமாதித்யர் என்பர். இக் கோயில் காசியில் சங்கடாகாட் என்னுமிடத்தில் உள்ளது. பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது, அவர்களின் பத்தினியான திரௌபதி, சூரிய பகவானைத் தியானித்து அட்சய பாத்திரம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. திரௌபதி வழிபட்ட சூரிய பகவான் கோயில் விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் அட்சய பீடத்தில் உள்ளது. இங்கு அருள்புரியும் சூரிய பகவானை திரௌபதி ஆதித்யர் என்பர். நான்கு வேதங்களிலும் புலமை பெற்றிருந்த விருத்தன் என்பவன் தன் இளமை மாறி முதுமைத் தோற்றத்தில் காட்சி தந்தான். அவன் காசியில் சூரிய பகவானை கடுமையாகத் தியானித்து மீண்டும் தன் இளமையைப் பெற்றான். விருத்தன் வழிபட்டுப் பேறு பெற்றதால் சூரிய பகவான் விருத்தாதித்யர் என்று போற்றப்படுகிறார். இந்தக் கோயில் காசியில் மீர்காட் என்னுமிடத்தில் உள்ளது. சூரிய பகவானை தினமும் வழிபட்டால் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்; கண்பார்வை நன்கு தெரியும்; சரும நோய்கள் வராது; மன சஞ்சலங்கள் நீங்கும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. மனசஞ்சலங்களையும் மற்ற துன்பங்களையும் தீர்த்து வைப்பதால் சூரிய பகவானை லோலார்க்கர் என்று போற்றுவர். இந்த சூரிய பகவான் கோயில் அதிசங்கமத்தில் புகழ்பெற்ற லோலார்க்க குண்டம் அருகில் உள்ளது.

காசி திருத்தலத்தின் வடக்கே அலேம்புரா என்னும் இடத்தில் உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரிய தீர்த்தக்குளம் உள்ளது. இதை வக்ரியா குண்டம் என்றும் கூறுவர். அங்கு ஒரு ஆடும் ஒரு பெண்ணும் கடுமையாகத் தவமிருந்து சூரிய பகவானின் அருளைப் பெற்றனர். இங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை உத்திர அர்க்கர் என்பர். சூரிய பகவானை காசியில் வழிபட்டுப் பேறுபெற்றவர்கள் மேலும் பலர் உண்டு. இருந்தாலும் சூரிய பகவானே தான் மேலும் பலம் பெறுவதற்காக காசி திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பதாக காசி காண்டம் கூறுகிறது. அந்த வகையில் ஸ்ரீமன் நாராயணனான கேசவனின் அருளால் சிவலிங்கம் அமைத்து சிவபெருமானை வழிபட்டார். சூரியன் வழிபட்ட இந்த ஆலயம் வருணா சங்கமத்தில் உள்ளது. சேவகன் அருளால் லிங்கம் அமைத்து வழிபட்டதால் இங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை கேசவாதித்யர் என்பர். முன்னொரு காலத்தில் சூரிய பகவான் காசி திருத்தலத்தில் ஈசனையும் உமையையும் ஸ்ரீ மங்கள கௌரி - ஸ்ரீ கபஸ்தீஸ்வரர் என்ற திருப்பெயருடன் பிரதிஷ்டை செய்து சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் கடுமையாகத் தவம் புரிந்தார். சூரியனின் தவத்தினைப் போற்றிய சிவபெருமான் சூரியனுக்கு மயூகன் என்று பெயர் சூட்டி, சூரியன் கேட்ட வரத்தை அருளினார்.

ஈசனிடம் அருள் பெற்ற இந்த சூரியன், மயூகாதித்யர் என்று போற்றப்பட்டார். இந்த ஆலயம் கங்கைக் கரையோரம் உள்ள பஞ்சகங்காகாட் அருகில் உள்ளது. காசிக்கு புனிதப்பயணம் செல்பவர்கள், அங்குள்ள சூரிய பகவான் கோயில்கள் அனைத்தையும் தரிசிப்பது என்பது சிரமம். முடிந்தவரை ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகே உள்ள சூரிய கோயில்களைத் தரிசித்துப் பலன் பெறலாம். காசிக்குச் செல்ல வாய்ப்பு கிட்டாதவர்கள், தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். இத்தலத்தில் சூரிய பகவான், தன் இரு மனைவியருடன் நின்ற கோலத்தில் மேற்கு திசை நோக்கி அருள்புரிகிறார். அவர் எதிரில் குருபகவான் காட்சி தருகிறார். குரு பார்க்க கோடி நன்மை என்ற முதுமொழிக்கு ஏற்ப, சூரிய பகவானை வழிபட்டு அனைத்து தோஷங்களும் நீங்கி கோடி கோடியான நற்பலன்களைப் பெறலாம். மேலும் தஞ்சை திருவையாறு திருத்தலத்தில் உள்ள திருக் கண்டியூர் கோயிலில் எழுந்தருளியுள்ள கல்ப சூரியனை வழிபட்டாலும் கோள்களால் ஏற்படும் தீமைகள் மறைந்து வாழ்வில் பிரகாசம் ஏற்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. தவிர, சிவாலயங்களில் சூரியன் விக்கிரகத்தை நவகிரகத் தொகுப்பில் காண்கிறோம். அவரை ஞாயிற்றுக் கிழமைகளில் அர்ச்சித்து வழிபட்டாலும் நல்ல பலன்கள் கிட்டும் என்பர்.
சித்ரகுப்தனின் அருள்பெற வேண்டுமா?

உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர் ஆவார். என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். தேவ ஸ்வரூபர். பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன! சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.

உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்! பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! சித்ரகுப்தருக்கு பட்டுப் பீதாம்பரத் தலைப்பாகை வந்து சேர்ந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உண்டு! ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை? இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.

தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். பரந்தாமன் மனமிரங்காமல் இருப்பாரா? சித்ரகுப்தர் முன் தோன்றினான் கேசவன்! சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது. தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.
கல்வியில் சிறந்து விளங்க செல்ல வேண்டிய கோயில்!

தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் திருவாரூர் அருகில் உள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள மதுரபாஷினிக்கு வழிபாடு செய்கின்றனர். சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படையான இவள், மனிதனுக்கு தேவையான 34 சவுபாக்கியங்களையும் தரும் ÷க்ஷõடாட்சர தேவியாக, ராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக அருளுகிறாள். இதனால் இத்தலம் வித்யாபீடமாகக் கருதப்படுகிறது. அகத்தியர் இவளை, ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார். கல்வி மேல்படிக்க செல்லும் மாணவர்கள் இந்த அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்து, அதனை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகி அறிவாற்றல் வளரும். அதேபோல் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் மதுரபாஷினிக்கு தேன் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை செய்து, அந்த தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறையும் இங்கு உள்ளது.இதனால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. வாய் பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் விரைவில் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நிச்சயம்.

இருப்பிடம்: திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. போன்:  98947 81778, 99428 81778.