வெள்ளி, 11 செப்டம்பர், 2020

8:ஸ்ரீ கைவல்யாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

8:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!
 

8:ஸ்ரீ கைவல்யாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். (கி.பி.55 - கி.பி.28)

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ கைவல்யாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர தேசத்து அந்தணகுலத்தவர்.திருப்பதியில்வாழ்ந்த"த்ரைலிங்கசிவய்யா"என்பவரின்புதல்வர்.பெற்றோர்இவருக்குஇட்டநாமதேயம்'மக்கண்ணா'இவரை'சச்சிதானந்தர்'எனவும்'கைவல்யயோகி'எனவும் கூறுவார்கள்.இவர் தம் வாரிசாக ஸ்ரீ க்ருபா சங்கரரை நியமித்தார்.இவர் கி.பி.28-ல் சர்வதாரி ஆண்டு தைமாதப் பிறப்பன்று காஞ்சி 'மண்டன மிச்ரர்'அக்ரஹாரத்திலுள்ள 'புண்யரஸா' என்னும் பகுதியில் சித்தியடைந்தார்.


ஸ்ரீ கருப்பஸ்வாமி அஷ்டோத்ர ஸதநாமாவளி

ஸ்ரீ கருப்பஸ்வாமி அஷ்டோத்ர ஸதநாமாவளி


: -


த்யாந ஸ்லோகம் : -

வந்தே காலாப்ர வர்ணம்
த்விபுஜம் அஸிகதாம்
தீப்தாகர்ண தம்ஷ்ட்ராம்
பீமம் பீமாங்கரூபம்
ப்ரணதபயஹரம்
பாதுகாரூட ந்ருத்தம்
பாலம் பாலார்க்க காந்திம்
ஸிதவஸநதரம் காளகம்
குஞ்ஜிதாங்க்ரீம் வ்யாகீர்ண
கேஸபந்திம் மதுமத முதிதம்
ஸ்யாமளம் க்ருஷ்ணபுத்ரம்.


ஓம் நீலமேகாய நம
ஓம் நீலவர்ணாய நம
ஓம் நீலபுஷ்ப ப்ரியாய நம
ஓம் நிதயே நம
ஓம் நிஸி நாதாய நம
ஓம் நிஸி பூஜிதாய நம
ஓம் நிஸி ஸஞ்ஜாரிணே நம
ஓம் நிஸி ரூபாய நம
ஓம் நிஸி ப்ரியாய நம
ஓம் நிகம ஸஞ்ஜாரிணே நம 10.

ஓம் நித்யாய நம
ஓம் நித்ய ஸூர்யாய நம
ஓம் நிராமயாய நம
ஓம் நிஸிகந்தபுஷ்ப ப்ரியாய நம
ஓம் நிடிலோர்த்வ புண்ட்ராய நம
ஓம் கோர ( தீர ) ரூபாய நம
ஓம் கோர ( தீர ) வேஷாய நம
ஓம் அகோர லோஸநாய நம
ஓம் விஸாலாய நம 20.

ஓம் குருகௌரீ கேஸாய நம
ஓம் நீலவஸ்த்ர மாலிகோஜ்வலாய நம
ஓம் ஸித்ரவஸ்த்ர ப்ரியாய நம
ஓம் கட்கஹஸ்தாய நம
ஓம் தண்டஹஸ்தாய நம
ஓம் பாத பாதுக ஸஞ்ஜாரிணே நம
ஓம் பீதாம்பரதராய நம
ஓம் பூதநாயகாய நம
ஓம் பயங்கராய நம
ஓம் பிஸாஸ நாஸாய நம 30.

ஓம் தூம்ரபத்ர ப்ரியாய நம
ஓம் பிஸாஸ மர்த்தநாய நம
ஓம் தூபகந்த ப்ரியாய நம
ஓம் கேளீ விலாஸகாய நம
ஓம் மதநோல்லா ஸகாய நம
ஓம் மன்மத வேஷாய நம
ஓம் மத்ஸ்ய ரூபிணே நம
ஓம் விநோத வேஷோஜ்வலாய நம
ஓம் வீர ஸூர பராக்ரமாய நம
ஓம் வ்ருத்தாய நம 40.

ஓம் த்வார நாதாய நம
ஓம் கோபுர வாஸிநே நம
ஓம் க்ராம நாதாய நம
ஓம் க்ராம ரக்ஷகாய நம
ஓம் க்ருணீ ரக்ஷகாய நம
ஓம் குடும்ப ரக்ஷகாய நம
ஓம் குஸல புத்ர வர ப்ரஸாதாய நம
ஓம் குல தீப ஸந்த்ரிகாய நம
ஓம் குமார கணநாதாய நம
ஓம் குமார கோபுர மண்டப நிலையாய நம 50.

ஓம் குருநாதாய நம
ஓம் குருநாத பூஜகாய நம
ஓம் குருநாத ஸேவிதாய நம
ஓம் குளான்ன ப்ரியாய நம
ஓம் குள மோதக ப்ரியாய நம
ஓம் திவ்ய புஷ்ப ப்ரியாய நம
ஓம் குளாபிஷ்ட ப்ரியாய நம
ஓம் நாகவல்லீ கமுக ப்ரியாய நம
ஓம் திவ்ய கந்த ப்ரியாய நம
ஓம் பரிமள பஸ்மாங்காய நம 60.

ஓம் பரிமள வாஸந ப்ரியாய நம
ஓம் பக்த ரக்ஷகாய நம
ஓம் பக்த பரிபாலகாய நம
ஓம் ப்ரஸண்டாய நம
ஓம் ப்ரஸண்ட பராக்ரமாய நம
ஓம் பகவகண்டாஸிணே நம
ஓம் கடிஹஸ்தாய நம
ஓம் கராள ஹஸ்தாய நம
ஓம் ப்ருகுடீ வர்ணாய நம
ஓம் வராஹ ரக்த ப்ரியாய நம 70.

ஓம் அஜிபலி ப்ரியாய நம
ஓம் அண்ட வாஸிநே நம
ஓம் பிண்ட ஜந ரக்ஷகாய நம
ஓம் ஸுக்ரவார துஷ்டாய நம
ஓம் இந்துபூஜ்யா நிஸி ஸந்துஷ்டாய நம
ஓம் க்ரந்தி நாஸகாய நம
ஓம் க்ரஹ ரூபிணே நம
ஓம் துஷ்ட க்ர‌ஹ ரூபிணே நம
ஓம் துஷ்ட க்ர‌ஹ பஞ்ஜநாய நம
ஓம் துர்நிரீக்ஷாய நம 80.

ஓம் துஷ்ட பயங்கராய நம
ஓம் துஸ்ஸ்வப்ந ரூபாய நம
ஓம் துஸ்ஸ்வப்ந ஸாரிணே நம
ஓம் துஸ்ஸ்வப்ந நாஸகாய நம
ஓம் விலாஸ வேஷாய நம
ஓம் விஷ்ணுமாயா ரூபிணே நம
ஓம் ருத்ரமாயா ரூபிணே நம
ஓம் நந்தி த்வார நிலையாய நம
ஓம் உக்ர வ்ருக்ஷ நிலையாய நம
ஓம் அட்டஹாஸாய நம 90.

ஓம் அஹங்காராய நம
ஓம் அதிஸௌர்யாய நம
ஓம் அநாதநாதாய நம
ஓம் அகில ரக்ஷகாய நம
ஓம் ஸ்ரீ க்ருஷ்ண வர்ணாய நம
ஓம் பாதுகாரூடாய நம
ஓம் கஸ்தூரி திலகோஜ்வலாய நம
ஓம் ம்ருகமத சந்தண லேபநாய நம
ஓம் வேணுகான ஸ்ரவண லோலாய நம
ஓம் அஸ்வாரூடாய நம 100.

ஓம் வ்யாக்ர ஸர்மாம் பரதராய நம
ஓம் ரணரங்க தீராய நம
ஓம் ஸிகண்டீ கீதஸ்ரவண ப்ரியாய நம
ஓம் ஸ்ரீம் மோஹனகாராய நம
ஓம் ஸௌம் ஸௌம்யாய நம
ஓம் ஹம் ஹம்ஸாய நம
ஓம் க்லீம் ஸாத்யாய நம
ஓம் க்ருஷ்ண புத்ராய நம 108.

- இதி ஸ்ரீ கருப்பஸ்வாமி அஷ்டோத்ர ஸதநாமாவளி ஸம்பூர்ணம்.

வியாழன், 10 செப்டம்பர், 2020

கடவுள்

கடவுள் யாரையும் கை‌

விடுவ‌தி‌ல்லை!


ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.

துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது…

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”

கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.

“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.

புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.

“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.

அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.

“இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.

மேலும் கடவுள் என்னிடம், “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய்.

மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.

“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவை தான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”

நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”

“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான்.

“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.

நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.



திரௌபதி


திரௌபதி ஏன் ஐவரை மணக்க நேர்ந்தது?

பாஞ்சாலி ஏன் ஐந்து பேரை மணக்க நேர்ந்தது என்னும் கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.  ஆனால் சில காரியங்களுக்குக் காரணமோ, அல்லது அது ஏன் நடக்கிறது என்பதோ நமக்குத் தெரியவே போவதில்லை.  

இந்த சந்தேகம் புதுசா நமக்கு மட்டும் ஏற்படவில்லை.  வியாசரின் சீடராக வியாசரோடு கூடவே இருந்து இந்நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த ஜைமினி முனிவருக்கும் ஏற்பட்டது.  மார்க்கண்டேயரை அணுகிக் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி அவர் அறிவுறுத்தப்பட அவரும் மார்க்கண்டேய முனிவரை அணுகிக் கேட்டார்.  

மார்க்கண்டேயரோ விந்திய மலையில் இருக்கும் நான்கு பறவைகளைக் கேட்கும்படி சொல்கிறார்.  அந்த நான்கு பறவைகளும் வேதம் ஓதிக் கொண்டிருந்தன.  ஒரு சாபத்தால் துரோணரின் மகன்களான அவர்கள் பறவைகள் ஆகிவிட்டதாயும் கூறினார். (இவர் மஹாபாரத துரோணர் இல்லை!)

அந்தப் பறவைகளிடம் சென்று ஜைமினி மஹாபாரதத்தில் உள்ள தன் சந்தேகங்களை ஒவ்வொன்றாய்க் கேட்டார். முதல் கேள்வியே பாஞ்சாலி ஐவரை மணந்தது குறித்துத் தான். அதற்கு அந்தப் பறவைகள்

 சொன்ன மறுமொழியாவது.  தேவேந்திரனுக்கும் தேவகுரு பிரஹஸ்பதிக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் பிரஹஸ்பதி மறைந்துவிட, தேவேந்திரன் குரு இல்லாமல் துவஷ்டாவின் மகன் விஸ்வரூபனைத் தன் குருவாய்க் கொண்டான். விஸ்வரூபனோ அசுரர்களிடம் பிரியம் உள்ளவன்.  

ஆகவே தேவர்களுக்கான அவிர் பாகத்தில் ஒரு பகுதியை அசுரர்களுக்கும் அளித்து வர, இதைத் தெரிந்து கொண்ட தேவேந்திரன் விஸ்வரூபனைக் கொன்றுவிடுகிறான். கோபம் கொண்ட துவஷ்டா தன் ஜடாமுடியிலிருந்து விருத்திராசுரனை உருவாக்குகிறான். விருத்திராசுரனிடம் நட்புப் பாராட்டி நயவஞ்சகமாய் அவனையும் தேவேந்திரன் கொல்கிறான்.

தேவேந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொள்ள, அவன் பலத்தில் பாதி, யமன், வாயு, அஸ்வினி தேவர்களைச் சென்றடைகிறது.  அசுரர்களுக்கும், தேவர்களுக்கும்மீண்டும் போர் ஆரம்பிக்க மஹாவிஷ்ணு பூமி பாரம் குறைக்கக் கிருஷ்ணனாய் அவதரித்தார்.

 அவருக்குத் துணையாக தேவேந்திரனைப் பாண்டவர்களாய்ப் பிறக்க வைத்ததாக ஐதீகம்.  தேவேந்திரனின் பெருமை யுதிஷ்டிரனாகவும், பலம் பீமனாகவும், பாதி அம்சம் அர்ஜுனனாகவும், அஸ்வினி தேவர்களின் அழகு நகுல, சகாதேவர்களாகவும் பிறப்பு எடுத்ததாகச் சொன்னது அந்தப் பறவை.  

ஆகவே பாஞ்சாலி ஐவரைத் திருமணம் செய்து கொண்டதாய்ச் சொல்லப் பட்டாலும்  அவள் திருமணம் செய்து கொண்டது ஒருவரைத் தான் என்றும் கூறியது.

இது மார்க்கண்டேய புராணத்தில் உள்ள கதை.  ஆனால் திரௌபதி முந்தைய பிறவியில் நளாயினியாக இருந்தாள் எனவும் கூறுவார்கள்.  நளனின் மகள் ஆன நளாயினி விதி வசத்தால் மௌட்கல்ய முனிவரை /(சிலர் முனிவர் பெயர் கௌசிகர் என்பார்கள்.)

மணந்து கொள்ள நேரிடுகிறது.  தொழு நோயால் பீடிக்கப்பட்ட முனிவர் அவளை மிகவும் பாடாய்ப் படுத்தி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்குகிறார்.  ஒரு சமயம் முனிவர் தனக்கு இஷ்டமான தாசி ஒருத்தரிடம் தன்னை அழைத்துச் செல்லுமாறு நளாயினியிடம் கட்டளை இட, அவளும் அவரை ஒரு கூடையில் வைத்துத் தலையில் தூக்கிச் சென்றாள்.  

அப்போது  அங்கே கழுவில் ஏற்றப்பட்டிருந்த மாண்டவ்ய ரிஷியின் மேலே கூடை இடிக்க, மாண்டவ்யர் வலி பொறுக்க முடியாமல், "காலை சூரியோதயத்துக்குள்ளாக மௌட்கல்ய ரிஷி தலை வெடித்து இறக்கட்டும்!" என சாபம் கொடுத்துவிடுகிறார்.

இதைக் கேட்ட நளாயினி தான் பத்தினி என்பது உண்மையானால் நாளை சூரியனே வரக் கூடாது என ஆணையிடுகிறாள்.  மறுநாள் சூரியனே உதிக்கவில்லை.  உலகம் இருட்டில் மூழ்குகிறது.

ஹோமம்

ஹோமங்

களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..? அப்படி எடுத்துக்கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?


முதலில் ஹோமத்தின் போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை, சாந்தி பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் அதில் உள்ளன. வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீக முறை என்று அழைக்கப்படுகிறது. இந்தவகை ஹோமங்களில் இறைவனை அக்னியில் ஆவாஹனம் செய்வதில்லை.

‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. அதாவது, எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் போஸ்ட்மேன் வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார். இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.

பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகையான ஹோமங்கள் செய்யப்படுகின்றன. ஒரு சில இடங்களில் விசேஷமாக அறுகம்புல், வெள்ளை எள், நெல் முதலானவற்றைக் கொண்டும் ஹோமங்களைச் செய்வார்கள். இந்த முறையில் பூர்ணாஹுதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பட்டுத் துணியில் கொப்பரை வைத்து மூட்டை கட்டி ஹோமத்திற்குள் இடுவது இல்லை.

அதே நேரத்தில் ஆகம ரீதியாகவும், சக்தி வழிபாடு ஆன சாக்த முறைப்படியும் செய்யப்படும் ஹோமங்களில் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்வார்கள். இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்வார்கள்.

இந்த முறையிலான யாகங்களில் இறுதியில் பட்டுத்துணியில் கொப்பரை முதலானவற்றை மூட்டை கட்டி பூர்ணாஹுதியைச் செய்வார்கள். இந்த முறையில் ஆபரணம் சமர்ப்பயாமி என்று சொல்லும்போது நம்மால் இயன்றால் தங்கம், வெள்ளி முதலான எளிதில் உருகி பஸ்மமாகும் உலோகங்களை சமர்ப்பிக்கலாம். மாறாக எளிதில் உருகாத இரும்பு, நிக்கல் முதலான உலோகங்களை இடுவது கூடாது.

பூர்ணாஹுதியின்போது மூட்டைக்குள் இரும்பும் நிக்கலும் கலந்த இந்த சில்லரை காசுகளைப் போடுவது என்பது தவறு. நாம் எந்த ஒரு பொருளை யாகத்தில் செலுத்தினாலும் அது நன்றாக எரிந்து சாம்பலாக வேண்டும். அந்த ஹோம பஸ்மத்தினையே நாம் இறைவனின் பிரசாதமாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். ஒருமுறை ஆஹுதியாகக் கொடுத்த பொருளை திரும்ப எடுத்துக் கொள்வது என்பது தவறு. ஆக, இவ்வாறு ஹோமத்திற்குள் காசு போடுவது என்பது சமீப காலத்தில் உருவான ஒரு பழக்கமே அன்றி சாஸ்திரோக்தமாக ஏற்பட்டது அல்ல.

ஹோமத்தில் போடப்படும் காசுகளை நம் வீட்டினிலும், அலுவலகத்திலும் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்வது அல்லது தரையினில் பள்ளம் வெட்டி அதற்குள் புதைத்து வைப்பது போன்ற செய்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே. ஒருமுறை இறைவனுக்கு ஆஹுதியாகக் கொடுத்ததை திரும்ப எடுக்கக்கூடாது என்பதால் ஹோமத்தில் இடப்பட்ட காசுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இன்னமும் ஒரு படி சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹோமத்தில் காசுகளைப் போடுவதையே தவிர்ப்பது மிக மிக நல்லது. அப்படி தெரியாமல் போட்டிருந்தாலும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இறைவனுக்கு ஆஹுதியாக அக்னியில் அளித்ததை திரும்பவும் எடுத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும் நம் செயல். ஹோமப் பிரசாதம் என்பது அதில் இருந்து நாம் இட்டுக்கொள்ளும் ரக்ஷையும், அந்த சாம்பலுமே ஆகும். ஹோமகுண்டத்தில் இருந்து எடுத்து வடிகட்டிய சாம்பலை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். அதனையே வாயிற்படியில் மஞ்சள்துணியில் கட்டியும் வைக்கலாம்.

ஸ்ரீ வேதநாயகன் சிவன் ஸ்ரீசிவனும், வேதமும்

ஸ்ரீ வேதநாயகன் சிவன்
ஸ்ரீசிவனும்,வேதமும்


==============

வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது நாதம் நாமம் நம:சிவாயவே என்பதை அனைவரும் அறிவோம்
.
"வேத:ஶிவ: ஶிவோ வேத:=சிவனே வேதம்,
வேதமே சிவம்
ஸ்ரீபரமேஸ்வரரின் மூச்சு காற்று வேதம்.ஆதலால் என்றும் நிரந்தரமானது.அழிவில்லாதது.அபௌருஷேயமானது.
அப்பேற்பட்ட வேதம்

 ஸ்ரீசிவனுக்கு எப்படியெல்லாம் சேவை செய்தது என  புராணங்கள் கூறுவதைக்காண்போம்
1.வேதப்பாதுகை
===========
ஸ்ரீசிவனின்
பாதுகை வேதம்.
ஸ்ரீசிவபெருமான் திருமணக்கோலம்கொண்டபோது தேவர்கள் வேதப்பாதுகையை சமர்பித்ததாக சிவபுராணம் கூறுகிறது.திருமணம் முடிந்தபிறகு
அந்தப்பாதுகையை திருத்துருத்தி
 (மாயவரம் அருகில் உள்ள குற்றாலம்)ஸ்தலத்தில் உத்தாலமரத்தடியில் விட்டுச்சென்றார் என்பர்.இன்றும் அத்தலத்தில் தரிசிக்கலாம்.
திருநாவுக்கரசர் தனது பாடலில்  ஓதியஞானமும் ,ஞானப்பொருளும்

ஒலி சிறந்த வேதியர் வேதமும்  வேள்வியும் ஆவன........ஐயாறன் அடித்தலமே.என்கிறார்
 
2.வேத நந்தி
=========
ஒருமுறை நான்கு வேதங்களும் வெள்ளைக்காளையாக மாறி
ஸ்ரீசிவனை வாஹனமாகி தாங்கி நின்றனர்.
(வேதமே தர்மம் ,தர்மமே வேதம். தர்மமே நந்தியின் ஸுரூபம்)

ஸ்ரீசிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது.

ஸ்ரீநந்திதேவர்
தன் மூச்சுக்காற்றால் ஸ்ரீசிவனுக்கு சாமரம் வீசுவதாக ஐதீகம்
அவ்வாறு சென்றால் சென்ற நிமிடம் வரை நம் வாழ்க்கையில் செய்த
புண்யபலன் வீணாகும் என்பர்

3. வேத மலைகள்
==========
 நான்கு வேதங்களும் நான்கு மலைகளாக திகழும் ஸ்தலம் வேதகிரி எனப்போற்றப்படும் திருக்கழுகுன்றம்
.ஒவ்வோரு யுகத்திலும் ஒவ்வொரு மலைகளில் ஸ்ரீபரமேஸ்வரன் எழுந்தருள்வதாக புராணம் கூறுகிறது.இது நான்காவதான சதுர்யுகம் கலியுகம் அதனால் அதர்வண வேதகிரியில் ஸ்ரீபரமேஸ்வரன் அமர்ந்து அருள்புரிகிறார்

4,வேதவனம்
============
நான்கு வேதங்களும் ஆரண்யமாகவும்,மனித உருவில் ஸ்ரீசிவனை
வழிபட்ட ஸ்தலம் வேதாரண்யம்.(திருமறைக்காடு.)
திறக்க முடியாமல்  ரொம்ப நாட்கள்மூடியிருந்த  கதவை  திறக்க திருநாவுக்கரசர் பதிகம் பாடி திறந்த புண்யஸ்தலம்.பிறகு திருஞானசம்பந்தர்
கதவை மூட  "சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும்.......என்றபதிகம் பாடி கதவை மூடினார்.


5.வேதமான்
==========

ஸ்ரீசிவபெருமானின் கையில் உள்ள மான் வேதத்தின் சின்னம்.எப்போதும் ஸ்ரீசிவன் நோக்கி அவரது செவிகளில் வேதம்  ஓதிக்கொண்டே இருக்கும்.

தமிழ் மறைகள் "வேதம் நான்மறியே எனப்போற்றுகிறது"
ஸ்ரீகங்காளர்,ஸ்ரீபிக்ஷாடனர்,ஸ்ரீசந்த்ரசேகர், என சிவனின் பலவிசேஷ ரூபங்களில்  இந்த   மான் உள்ளது


6. வேதக்குதிரை
=============
திரிபுர சம்ஹாரத்தின் போது   சிவபெருமான் பூமியைத் தேராக்கி நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி  பிரம்மாவை சாரதியாக்கி     சூரிய சந்திரர்களை     சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். நிகழ்ந்த ஸ்தலம்=திருவதிகை வீரட்டானம்

7.வேத மரங்கள்
( ஸ்தலவிருக்ஷம்)
======================
வேதாரண்யத்தில் ஒவ்வொரு யுகத்திற்கு ஒவ்வொரு வேதம் ஸ்ரீசிவன்  கோயிலுள்ள ஸ்தல விருக்ஷமாகிறது.
காஞ்சியில்  மாமரம் வேதஸ்ஸுரூபம்.
திருக்குற்றாலத்தில் பலாமரம் வேதஸ்ஸுரூபம். என ஸ்தலபுராணங்கள் கூறுகின்றன.


8.வேதச்சிலம்பு
============
காஞ்சியில் உள்ள சிவாலயங்களில் ஒன்று மறை நூபுரம் ஆகும்.
இத்தலத்தில் யுக முடிவில் வேதம் வழிப்பட்டு  காற்சிலம்பாயின.
ப்ரஹ்மாவுக்கு ஸ்ரீபரமேஸ்வரன் தூக்கிய திருவடியை அசைத்து
 சிலம்பொலி மூலம் வேதத்தை உபதேசித்த ஸ்தலம்

9.வேதவீணை
=========
ஸ்ரீசிவனின் கையிலுள்ள வீணை வேதவீணை.அவர் வேதவீணைதரித்து ஸ்ரீவீணாதர தக்ஷிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். இந்த வீணையைப் தக்கயாகப் பரணி (தக்ஷயாகம்) போற்றப்பட்டுள்ளது

திருச்சிற்றம்பலம்

ஓம் ஸ்ரீ மஹாசாஸ்தா தாஸன்
பா. சிவகணேசன்
ஓம் ஸ்ரீ மஹாசாஸ்த்ரு பரபிர்ம்ம ஸ்தானம் திருகாடந்தேத்தி

ஐந்து

 #எல்லாம்_ஐந்து_தான்
#சிவபெருமானுக்கு

1.பஞ்ச பூதங்கள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

2. பஞ்சாட்சரம் ஐந்து

நமசிவாய - தூல பஞ்சாட்சரம்
சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம்
சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம்
சிவசிவ     - காரண பஞ்சாட்சரம்
சி                  - மகா காரண பஞ்சாட்சரம்

3.சிவமூர்த்தங்கள்

1.பைரவர்                      -வக்கிர மூர்த்தி
2.தட்சிணாமூர்த்தி   -சாந்த மூர்த்தி
3.பிச்சாடனர்               -வசீகர மூர்த்தி
4.நடராசர்                     -ஆனந்த மூர்த்தி
5.சோமாஸ்கந்தர்    - கருணா மூர்த்தி  

4.பஞ்சலிங்க சேத்திரங்கள்

1.முக்திலிங்கம் -கேதாரம்
2.வரலிங்கம்       -நேபாளம்
3.போகலிங்கம்  -சிருங்கேரி
4.ஏகலிங்கம்        -காஞ்சி
5.மோட்சலிங்கம் -சிதம்பரம்

5.பஞ்சவனதலங்கள்

1.முல்லை வனம்   -திருக்கருகாவூர்
2.பாதிரி வனம்         -அவளிவணல்லூர்
3.வன்னிவனம்        -அரதைபெரும்பாழி
4.பூளை வனம்         -திருஇரும்பூளை
5.வில்வ வனம்       -திருக்கொள்ளம்புதூர்

6.பஞ்ச ஆரண்ய தலங்கள்

1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம்
2.மூங்கில் காடு     -திருப்பாசூர்
3.ஈக்காடு                  -திருவேப்பூர்
4.ஆலங்காடு          -திருவாலங்காடு
5.தர்ப்பைக்காடு    -திருவிற்குடி

7.பஞ்ச சபைகள்

1.திருவாலங்காடு -இரத்தின சபை
2.சிதம்பரம்               -பொன் சபை
3.மதுரை                    -வெள்ளி சபை
4.திருநெல்வேலி   -தாமிர சபை
5.திருக்குற்றாலம் -சித்திர சபை

8.ஐந்து முகங்கள்

1.ஈசானம் - மேல் நோக்கி
2.தத்புருடம் -கிழக்கு
3.அகோரம் -தெற்கு
4.வாம தேவம் -வடக்கு
5.சத்யோசாதம் -மேற்கு

9.ஐந்தொழில்கள்  

1.படைத்தல்
2.காத்தல்
3.அழித்தல்
4.மறைத்தல்
5.அருளல்

10.ஐந்து தாண்டவங்கள்

1.காளிகா தாண்டவம்
2.சந்தியா தாண்டவம்
3.திரிபுரத் தாண்டவம்
4.ஊர்த்துவ தாண்டவம்
5.ஆனந்த தாண்டவம்  

11.பஞ்சபூத தலங்கள்  

1.நிலம்        -திருவாரூர்
2.நீர்               -திருவானைக்கா
3.நெருப்பு   -திருவண்ணாமலை  
4.காற்று      -திருக்காளத்தி   
5.ஆகாயம் -தில்லை

12.இறைவனும் பஞ்சபூதமும்

1.நிலம்        - 5 வகை பண்புகளையுடையது
  (மணம் ,சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
2.நீர்               - 4 வகை பண்புகளையுடையது
            (சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
3.நெருப்பு   - 3 வகை பண்புகளையுடையது
            (ஒளி ,ஊறு ,ஓசை )
4.காற்று      - 2 வகை பண்புகளையுடையது
             (ஊறு ,ஓசை )
5.ஆகாயம் - 1 வகை பண்புகளையுடையது
              (ஓசை )

13.ஆன் ஐந்து

பால் ,தயிர் ,நெய் ,கோமியம் ,கோசலம்

14.ஐங்கலைகள்

1.நிவர்த்தி கலை
2.பிரதிட்டை கலை
3.வித்தை கலை
4.சாந்தி கலை
5.சாந்தி அதீத கலை

15.பஞ்ச வில்வம்  

1.நொச்சி
2.விளா
3.வில்வம்
4.கிளுவை
5.மாவிலங்கம்

16. ஐந்து நிறங்கள்

1.ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம்
2.தத்புருடம் -கிழக்கு           - பொன் நிறம்
3.அகோரம் -தெற்கு              - கருமை நிறம்
4.வாம தேவம் -வடக்கு      - சிவப்பு நிறம்
5.சத்யோசாதம் -மேற்கு    - வெண்மை நிறம்

17.பஞ்ச புராணம்
1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5.பெரியபுராணம்

18.இறைவன் விரும்ப நாம் செய்யும்  ஐந்து

1.திருநீறு பூசுதல்
2.உருத்ராட்சம் அணிதல்
3.பஞ்சாட்சரம் ஜெபித்தல்
4.வில்வ அர்ச்சனை புரிதல்
5.திருமுறை ஓதுதல்

19.பஞ்சோபசாரம்
1.சந்தனமிடல்
2.மலர் தூவி அர்ச்சித்தல்
3.தூபமிடல்
4.தீபமிடல்
5.அமுதூட்டல்  
    
#திருச்சிற்றம்பலம்


காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டியவை

 காலையில் எழுந்தவுடன்  சொல்ல வேண்டியவை




ஐந்துகரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !
 
கராக்ரே வஸதே லக்ஷ்மீ : கரமத்யே ஸரஸ்வதீ |
கரமூலே து கௌரீ ஸ்யாத் ப்ரபாதே கர தர்சனம் ||

ஸமுத்ர வஸனே தேவி பர்வதஸ்தன மண்டிதே |
விஷ்ணுபத்னீ நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வ மே  ||

அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா |
பஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதக நாசனம் ||

காயத்ரீம் துளசீம் கங்காம் காமதேனும் அருந்ததீம்
பஞ்சமாத்ரூ ஸமரேந்நித்யம் மஹாபாதக நாசனம்

புண்யஸ்லோகோ நளோ ராஜா
                     புண்யஸ்லோகோ யுதிஷ்டிர:  |
புண்யஸ்லோகா ச  வைதேஹீ
                      புண்யஸ்லோகோ ஜனார்தன:  ||

கார்க்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்ய ச |
ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே கீர்த்தனம் கலிநாசனம் ||

அஸ்வத்தாமா பலிர்வ்யாஸ: ஹனுமான் ச                   
விபீஷண :  |
க்ருப: பரசுராமஸ்ச ஸப்தைதே ஸிரஞ்சீவின : ||

ப்ரும்மா முராரீ த்ரிபுராந்தகஸ் ச
 பானுச்சசீ பூமி ஸுதோ புதஸ் ச
குரு ஸுக்ர சனீப்யஸ் ச ராகு கேதவஸ் ச
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ப்ருகுர்வஸிஷ்ட:  க்ரதுராங்கிராச்ச
மனு :  புலஸ்த்ய: புலஹச்ச கௌதம: |
ரைப்யோ மரீசி: ச்யவனோத தக்ஷ :
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச
           ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌ ச |
ஸப்தஸ்வராஸப்த ரஸாதலானி
           குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ஸப்தார்ணவா ஸப்தகுலாசலாச்ச
         ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த
பூராதி லோகா:  புவனானி ஸப்த
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்த்தா$$ப :
               ஸ்பர்சச்ச  வாயூர்ஜ்வலிதம் ச தேஜ:  |
நபஸ் ஸ சப்தம் மஹதாஸஹைவ
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்  ||

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு:
    குருர் தேவோ மஹேஷ்வர:  |
குருர் சாக்ஷாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம :  ||

து: ஸ்வப்ன து: ஸகுன துர்கதிர் தௌர்மனஸ்ய
துர்பிக்ஷ துர்வ்யஸன து : ஸஹதுர்யஸாம்ஸி
உத்பாத தாப விஷபீதீம் அஸத்க்ருஹார்த்தீம்
வ்யாதீம்ஸ்ச  நாசயது மே ஜகதாம் அதீஷ : ||

****************************************************

சனீஸ்வரன்

 *சனீஸ்வர் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்*

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்தர் சொன்ன பரிகாரமுறை இது.

நீங்கள் எத்தனை கோடி ,
கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,

நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.

தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால் , உங்களுக்கு அந்த சனிபகவான் முழு அருள் கடாட்சம் வழங்கி உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி.

அப்படிப்பட்ட ஒரு தேவரகசியம் போன்ற தகவலை , நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்
மட்டற்றமகிழ்ச்சி…….

தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.

உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.

இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படைத்தாலும், ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா.. இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….
தெரியவில்லை!..

ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..

செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான்.

உங்கள் முன்னோர்களுக்கே  நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும்
என்று நினைக்கும் சுமங்கலி பெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.
தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,
தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்த காணுப் பிடி பூஜையை செய்கிறார்கள்.

திறந்தவெளியில் தரையைத்
தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள்.

அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து,
ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி
அளவு எடுத்து வைத்து,

காக்கைகளை “கா…கா…’
என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.
அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.
அப்படிச் சுவைக்கும் போது அந்தக் காக்கைகள்,

 “கா…கா…’என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்த க்காக்கைகள் உணவினை சாப்பிட்டுச் சென்றதும்,

அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.

இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாவும்
கருதுகிறார்கள்.

காக்கை சனிபகவானின் வாகனம்.
காக்கைக்கு உணவு அளிப்பது
சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.

காக்கைகளில் நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சிலவகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு
எந்தப் பறவைகளிடமும் காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.

அதனால் காக்கைக்கு உணவு
அளித்தால் எமன் மகிழ்வாராம்.

எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.
தந்திரமான குணம் கொண்ட காகம்.

காலையில் நாம் எழுவதற்கு முன்,
காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்தகாரியம் வெற்றிபெறும்.
நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக்கரைந்தால் நல்ல பலன் உண்டு.

வீடுதேடி காகங்கள் வந்து கரைந்தால்
அதற்கு உடனே உணவிடவேண்டும்.

எனவே, காக்கை வழிபாடு செய்வதால்
சனிபகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மன மகிழ்வுடன் வாழலாம்.


நாராயணபட்டத்திரி

நாராயணபட்டத்திரி


வரலாறு :

நமது இந்து மதத்தில் நிறைய தெய்வீக நூல்கள் உள்ளன. அதில் ஒரு புகழ்பெற்ற நூல் தான் நாராயணீயம். இதை எழுதியவர் மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி ஆவார்.

இவர் கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் கிருஷ்ணனின் மேல் பற்றற்ற பக்தியை கொண்ட மஹான் ஆவர்.

வேத வியாசா பாடியுள்ள ஷீமத் பாகவத பூர்ண காவியத்தை அதே கவிநயத்துடன் சுருக்கப் புனைந்தவர் தான் பட்டத்திரி. இது தான் நாராயணீயம் என்றும் பெயர் பெற்றது. இவர் நிறைய தெய்வீக நூல்கள் இயற்றி இருந்தும் நாராயணீயம் தான் இவருக்கு புகழைத் தேடி தந்தது.

*நாராயணீயம் நூலமைப்பு :*

ஸ்ரீமத் பாகவத பூர்ணம் வடமொழியில் தொன்று தொட்டு பழக்கத்திலிருந்தது. இது 18000 ஸ்லோகங்களை கொண்டிருக்கும். இதையே பட்டத்திரி 1036 ஸ்லோகங்களுடன் 100 பிரிவுகளில் அழகிய கவிநயத்துடன் சுருக்கப் புனைந்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதன் கருத்துக்கள் தவறாமல் பொருள் மாறாமல் எழுத்துக்கள் பிறலாமல் அப்படியே பக்திமயம் சொட்ட சொட்ட, காவிய நயம் மிளர வாசிப்பவர்களை திரும்ப திரும்ப வாசிக்கத் தூண்டும் அளவிற்கு ஒரு அற்புதமான படைப்பாகும்.

இந்த தெய்வீக நூல் கவிநயமான வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து சமஸ்கிருத மொழியில் வழங்கியுள்ளார். இதை படிக்கும் போது ஸ்ரீமத் கிருஷ்ண பரமாத்மா உங்கள் முன்னால் இருப்பதை போன்று தோன்றும்.

சரி வாங்க இன்னைக்கு இந்த நாராயணீயம் பற்றி தெரிந்து கொள்ளவோம். உங்களுக்கு சமஸ்கிருத மொழி புரியவில்லை என்றால் அதன் மொழிபெயர்ப்பு உள்ளது அதன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

*நாராயணீயம் தோன்றிய கதை :*

இந்த நாராயணீயம் குருவாயூரில் கோயில் கொண்டிருக்கும் குருவாயூரப்பனுக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டது. கடவுள் கிருஷ்ணனுக்காக ஒரு கோயில் குருவாயூரில் உள்ளது. எனவே இந்த கிருஷ்ணன் குருவாயூரப்பன் என்று அழைக்கப்படுகிறார். எனவே இங்கு எழுந்தருளியுள்ள கிருஷ்ணனை குருவாயூர் தலைமை அல்லது தந்தை என்று அழைக்கின்றனர்.

இந்த நூல் நோய்களை தீர்க்கும் புகழ் பெற்றது. இதை படித்தால் எல்லாம் கிடைக்கும் இருப்பினும் ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கும். இறக்கும் தருவாயில் இருக்கும் நோய்களை கூட தீர்க்கும் ஆற்றல் கொண்டது.

மேல்பத்தூர் பட்டத்திரி ஒரு ஆசிரியரும் ஆவார்.
இவர் அச்சுத பிஷா ரோதி என்றும் அழைக்கப்பட்டார். பட்டத்திரி பக்திப் பாதையில் இருக்கும் போதே அவர் பக்கவாத நோயால் அவதிப்பட்டார். தன்னை அந்த நோயிலிருந்து காப்பாற்ற வேண்டி குருவாயூரப்பனிடம் வேண்டினார். இதற்காக அவர் எழுதத் தொடங்கிய நூல் தான் நாராயணீயம்.

*நோய் தீர்ந்த கதை :*

இதை எப்படி தொடங்குவது என்ற தயக்கம் எழ அவர் பெரும் கவிஞர் எழுதச்சனுக்கு கடிதம் எழுதினார். தனக்கு அதில் தக்க யோசனை தருமாறு கேட்டுக் கொண்டார். அவரும் "மீன் தொட்டு உண்" என்று எழுதி அனுப்பி இருந்தார்.

பட்டத்திரியோ சைவம் சாப்பிடுபவர் ஆனால் இந்த பொருளின் ஆழப் பொதிந்து இருக்கும் கருத்தை உணர்ந்த பட்டத்திரி கிருஷ்ணனின் மச்சவதாரத்தை முதன்மையாகக் கொண்டு நாராயணீயம் எழுதத் துவங்கினார்.

100 நாட்களுக்கு ஒரு சதகம் (10 மற்றும் மேற்பட்ட ஸ்லோகங்களை கொண்டிருக்கும்) என்ற கணக்கில் 1036 ஸ்லோகங்களை எழுதினார். ஒவ்வொரு சதகமும் முடியும் போது தான் கொண்டிருக்கும் பக்கவாதம் நோயிலிருந்து தம்மை காத்து அருளும் படி வேண்டினார். 100 நாட்கள் முடியும் போது அவரது நோயும் குணமானது.
இப்படி தான் நாராயணீயம் தீவிர நோய்களை தீர்க்கும் ஒரு தெய்வீக நூல் ஆனது. இதை இந்துக்கள் தங்கள் வீடுகளில் நாள்தோறும் படித்து பயன்பெறுகின்றனர்
இங்கே அதன் ஒவ்வொரு பகுதிகளும் அதை படித்தால் என்ன பயன்கள் நமக்கு கிடைக்கும் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

*தசகம் பயன்கள் :*

2-சொர்க்கத்தில் மரியாதை கிடைக்கும்
12-நல்ல நிலைமை கிடைக்கும்
13- நீண்ட ஆயுள், புகழ் மற்றும் செல்வம் கிடைக்கும்
15-கிருஷ்ணின் தாமரை அல்லது அவர் பாதத்தை சென்றடைவீர்கள்
16-நீண்ட ஆயுள் கிடைக்கும் மற்றும் செய்த பாவங்கள் அழியும்
17-அபாயம் வராது
18-வெற்றி மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
19-பற்றற்ற வாழ்க்கை கிடைக்கும்
22-கெட்ட செயல்களை செய்யாமல் மனசு இருத்தல்
23-பயம் போகும், பாவங்கள் அழியும்
24-பற்றற்ற வாழ்க்கை கிடைக்கும்
25-பயத்தினை வராமல் தடுத்தல்
26-பாவம் அழியும் மற்றும் மனசு பயம் வருவதை முன்கூட்டியே அறிதல்
27, 28-எல்லா தொழில்களிலும் வெற்றி கிடைத்தல்
30,31-பாவங்கள் அழிதல் மற்றும் இரட்சிக்கப்படுதல்
32-எல்லா எண்ணங்களும் ஈடேறும் மற்றும் பக்தி அதிகரித்தல்
33-பக்தி அதிகரித்தல் மற்றும் நினைத்தது நடக்கும்
40- பக்தி வாய்ப்படுதல்
51-நினைத்தது எல்லாம் கிடைக்கும்
52- எல்லாம் நடக்கும்
60-(1-3வரிகள்) - விரைவில் திருமணம் நடக்கும்
69-பக்தி கிடைக்கும்
80-பாவங்கள் மன்னிக்கப்படும் மற்றும் உங்களை பற்றிய வதந்திகள் மறையும்
82-தொழில்களில் வெற்றி அடையலாம்
83- எல்லா பாவங்களும் துடைக்கப்படும்
85-வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் காணாமல் போகும்.
87-செல்வம் மற்றும் பற்றற்ற வாழ்க்கை கிடைக்கும்
88-எல்லா பிரச்சினையும் சரியாகும்
89-(வரிகள் 7-10)-பிரச்சினைகள் வராது தடுக்கப்படும் மற்றும் இரட்சிக்கப்படுவர்
97-பற்றற்ற வாழ்க்கை கிடைக்கும்
100-நீண்ட ஆயுள், சந்தோஷம், நோய் குணமாகும் மற்றும் ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கும்
இந்த அற்புதமான கிருஷ்ணனின் பொன் காவியமான நாராயணீயம் தினமும் படித்து நாமும் பயன் பெறுவோம்.

ஸ்ரீ திரிபுர ரஹஸ்யம்


 ஸ்ரீ திரிபுர ரஹஸ்யம் எனும் ஓர் அரிய நூலில் காணப்படும் ஒரு மஹோன்னத பொக்கிஷம் இந்த “ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்”.  

இதனை காமேஷ்வரனான சிவனே காமேஷ்வரியான தேவிக்கு அருளியதாக ஸ்ரீ பரசுராமருக்கு, ஸ்ரீ தத்தாத்ரேயர் உபதேஸிக்கிறார். இதிலுள்ள நாமாவளிகள் அனைத்தும் “ஸ்ரீ ஸௌபாக்ய வித்யா” மந்திரத்தை முன் வைத்து அமைக்கப்பட்டது.

“ஸ்ரீ வித்யா” என்ற அம்பிகையின் ஆராதனையை உபாஸிப்பவர்களுக்கு, பஞ்ச தஸாக்ஷரியிம் அதிலிருந்து பெறப்பட்ட ஸ்ரீ லலிதா த்ரிசதியும் இன்றியமையாதவை.  ஸ்ரீ வித்யா பூஜாவிதிகளை கடைப்பிடிக்க மிகக்கடுமையான நியம, நிஷ்டைகள் மிக அவசியம்.

ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தை கடைப்பிடித்து, உய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் எளிதில் கிட்டாது.  அம்பிகையே விரும்பினால் தான், இம்மார்கம் வயப்படும் என்பது சான்றோர் வாக்கு.

அப்படிப்பட்ட அம்பிகையை எல்லோரும் வணங்கி, உய்யவே ஐயன் நந்தி வாஹனன், ஸ்ரீ தத்தர் – ஸ்ரீ பரசுராமர் மூலமாக உலகிற்கு இதை உறைத்தார் என்பது சான்றோர் கருத்து.