புதன், 2 செப்டம்பர், 2020

நாடாவாவி கிணறு

 நடவாவி கிணற்றின் அற்புதங்களும்.... அதிசயங்களும்...


.

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் கிராம்ம்....சஞ்சீவிராயர் கோயிலுக்கு சொந்தமானது......

நடவாவி கிணறு என்பது அத்தி வரதர்,,,,நீருக்குள் தியானிக்கும் இடம் போன்றது......

கிருஷ்ண  தேவராயர்
 ஆட்சி காலத்தில் ,,,,லஷ்மி குமார தாதாச்சாரியார் அவரது முயற்சியால்  1584  இல் அமைக்கப்பட்டது....

இந்த கிணற்றுக்கும்,,,பாலாற்றுக்கும் இடையே சுரங்க பாதை உள்ளது...

பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அற்புத கிணறு வடிவிலான கோயில்....

ஜோதிட ரீதியில்,,வான் மண்டலங்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது....
இதன் சிறப்பினை,,,இன்னும் சொல்ல வேண்டுமே யானால்......ஒவ்வொரு தமிழ் ஆண்டு பிறந்த்தும்,,,சித்திரை பௌர்ணமி தினத்தன்று காஞ்சி வரதர்,,,ஸ்ரீதேவி,,பூதேவி உடன் இந்த நடவாவி கிணற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும்....

இதற்கு பிறகு தான்,,காஞ்சியில் உள்ள ஆலயத்தில்,,, பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது...

என்றுமே வற்றாத கிணறு.....
முதல் 27 படிகள்......நட்சத்திரத்தை குறிக்கும்...

இரண்டாவது 9 படிகள்.....நவகிரகங்களை குறிக்கும்...

மண்டபத்தின் 12 தூண்கள்..... 12 ராசிகளை குறிக்கும்....

தூண்களில் உள்ள சுவாமிகள்,,எப்போதும் நீருக்கடியில் தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றனர்...

காஞ்சி வரதர்,,,,சித்ரா பௌர்ணமி தினத்தன்று வருகை புரிந்து காட்சி அளிக்கிறார்..... இதற்கு நடவாவி திருவிழா என்று பெயர்.....

அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த அற்புத கிணறு ,,,,இன்றும் பயன்பாட்டில் உள்ளது....

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

பத்மநாப ஸ்வாமி வந்த கதை!


அனந்த விரதம் ஸ்பெஷல்

பத்மநாப ஸ்வாமி வந்த கதை!
-------------------------------------------------
வில்வமங்கல சந்நியாசி ஒருவர், ஸ்ரீமந் நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை புரியும் நேரங்களில், பகவான் ஒரு சிறுவனாக வந்து அந்த சந்நியாசிக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்.
அவரைக் கட்டிப் பிடித்து விளையாடுவதும், பூஜை சாமான்களைக் கலைத்தபடியும்
கஷ்டங்களைக் கொடுத்தார்.

ஒரு நாள்... கண்ணனின் தொந்தரவுகளைத் தாங்க முடியாத சந்நியாசி கோபத்தில்,
''உண்ணீ (சின்னக் கண்ணா)... தொந்தரவு செய்யாதே'' என்று கூறி அவனைப்
பிடித்துக் கீழே தள்ளிவிட்டார். கோபமுற்ற கண்ணன் சுயரூபத்தில் அவர் முன்
தோன்றி, ''பக்திக்கும் துறவுக்கும் பொறுமை தேவை.

உன்னிடம் அது இருக்கிறதா என்று சோதிக்கவே இவ்வாறெல்லாம் நடந்து கொண்டேன். இனி, நீ என்னைக் காண
வேண்டுமானால், அனந்தன் காட்டுக்குத்தான் வர வேண்டும்'' என்று கூறி விட்டு
மறைந்தார்.

தனது தவறை உணர்ந்த சந்நி யாசி, அனந்தன் காடு எங்கே இருக்கிறது என்பது தெரியாமல், கவலையுடன் புறப்பட்டார்.

பல நாட்கள் அலைந்து திரிந்தும் அவரால் அந்தக் காட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள், வெயிலில் நடந்து வந்த தளர்ச்சியுடன் ஒரு மரத்தின்
நிழலில் அமர்ந்தார். அருகில் இருந்த குடிசை வீட்டில் தம்பதியிடையே ஏதோ
வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

அதன் முடிவில் கணவன், ''நீ இப்படி அடிக்கடி என்னிடம் சண்டை போட்டால் உன்னை அனந்தன் காட்டில் விட்டு விடுவேன்'' என்றான் மனைவியிடம். இதைக் கேட்ட சந்நியாசி ஆவலுடன் அந்த
வீட்டுக்குச் சென்று அவர்களை சமாதானம் செய்ததுடன், அனந்தன் காட்டைப் பற்றி
விசாரித்தார்.

அந்தக் கணவனும் காட்டைக் காட்டினான்.
கற்களும் முட்புதர்களும் அதிகம் இருந்தன. எனினும், பகவானைக் காணும் ஆவலில்
இடர்களைக் கடந்து முன்னேறினார் சந்நியாசி. கடைசியில் பகவானைக் கண்டார். தனக்கு ஏற்கெனவே காட்சி தந்த உண்ணிக் கண்ணனாக பகவான் இப்போது காட்சி
தரவில்லை!

ஓர் இலுப்ப மரத்தின் அடியில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அனந்தன் என்ற பாம்பின் மீது பரந்தாமன் பள்ளி கொண் டிருப்பதைக் கண்ட சந்நியாசி, மகிழ்வுடன் அவரை
வணங்கினார்.

தனக்குப் பசியெடுப்பதாகக் கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில்
சிறிது உப்பு சேர்த்து சமர்ப்பித்தார் சந்நியாசி. பிறகு, திருவிதாங்கூர் மன்னருக்குத் தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள அந்தணர்
களை அழைத்துக் கொண்டு அனந்தன் காட்டுக்குப் புறப்பட்டார்.

ஆனால், அங்கே ஸ்வாமி இல்லை.
எனினும், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்குக் கோயில் கட்ட ஏற்பாடு
செய்தார் திருவிதாங்கூர் மன்னர். கோயிலுக்குள், அனந்தன் பாம்பு மீது
பள்ளிகொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, 'பத்மநாப ஸ்வாமி'
எனும் திருநாமம் சூட்டப்பட்டது.

ஆரம்பத்தில் இலுப்ப மரத்தில் செய்யப்பட்ட மூல விக்கிரகம் கி.பி. 1686-ல் தீப்பிடித்தது. அதன் பின்னர், கடு சர்க்கரை யோகம் என்னும் கலவை யால் பன்னிரண்டாயிரம் சாளக்கிராமக் கற்களை இணைத்து புதிய சிலை உருவாக்கப்பட்டது.இது ஓர் அபூர்வ சிலையாகும்.

18 அடி நீளமுடையவராகக் காட்சி தரும் ஸ்ரீஅனந்த பத்ம நாப ஸ்வாமியின் திருமேனி முழுவதும் தங்கத் தகடு வேயப் பட்டிருக்கிறது. இந்தச் சிலையை திருவனந்த புரத்தில் இப்போதும் தரிசிக்கலாம்!

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

அருள் மிகு வடக்கு நாதர் திருக்கோயில்

அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில்

மூலவர் : வடக்குநாதர்                   பழமை : 3000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருச்சூர்
மாவட்டம் : திருச்சூர்
மாநிலம் : கேரளா
விழா : திருச்சூரில் பூரம் திருவிழா மிகவும் சிறப்பு. ஆனால் அத்திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா என்கிறார்கள். சிவராத்திரி காலங்களில் கோயிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.    

சிறப்பு: இத்தலத்தில் உள்ள லிங்கம் முழுவதும் வேண்ணையால் ஆனது. அமர்நாத் லிங்கத்தை "பனிலிங்கம்' என அழைப்பதைப்போல் இத்தலத்து சிவனை "வேண்ணை லிங்கம்' என அழைக்கிறார்கள்.

திறக்கும் நேரம்: காலை 4 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில், திருச்சூர் : 680 001, கேரளா. போன்: +91- 487 - 242 6040.


தரிசிக்கும் முறை: ஸ்ரீ மூலஸ்தானம் என்ற மரம் திருக்கோவிலின் முகப்பில் உள்ளது. அதனை ஏழு முறை பிரதட்சணம் செய்து திருக்கோயில் நுழைவு வாயிலில் கால் கழுவி திருக்கோவிலில் நுழைந்தவுடன் இடது புறத்தில் உள்ள வில் குழி தீர்த்தத்தில் முகம் கழுவ வேண்டும். அதன் பின் அங்குள்ள கோசல கிருஷ்ணனை தரிசிக்கவும். வடக்கே உள்ள சிவபகவானை வேண்டவும். அதன் பின் விருஷப சுவாமி சன்னிதானத்தை அடைந்து அங்கு உறங்கி கொண்டிருக்கும் அவரை மூன்று தடவைகள் கை தட்டி தரிசிக்க வேண்டும். பின்னர் முதல் முண்டம் பிரதியையும் பின்னர் மூலவரான வடக்கு நாதரை தரிசிக்கவும். அதன் பின் முறையே கணேசன், ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி, ஸ்ரீ ராமசுவாமி (மூன்று தடவைகள்) பரசுராமர் மற்றும் சிம்ஹோதாரா (சிவனின் பூத கணம்) தரிசிக்கவும், திருக்கோயிலின் வடக்கு கோடியில் உள்ள பீடத்திலிருந்து நின்றபடியே ஈஸ்வரன் பாரமேக்காவு, அய்யப்பன், நாகராஜர், ஆகியவர்களின் திசை நோக்கி தரிசிக்கவும், திருக்கோயில் முன்வரும் வழியில் சங்கு சக்கர சங்கராச்சாரியார் சமாதியை அடைந்து வழிபடலாம். கடைசியாக சங்கரர் கோயிலை அடைந்து தரிசித்தவுடன் முன் வாசலை அடைந்து இரு கால் பாதங்களை திருக்கோயிலின் சுவர் மீது மூன்று முறை தட்டி அப்பனே வடக்கு நாதரே இக்கோயிலிலிருந்து நான் ஒன்றும் எடுத்து செல்லவில்லை. என்று கூறி வடக்கு நாதரின் அருளோடு மட்டும் திருப்பதியுடன் வெளிவர வேண்டும்.

இந்த கோயில் "பெருந்தச்சன்' என்பவரது காலத்தில் நிர்மாணம் செய்யப்பட்டது. அவரது காலத்திற்கு பின் நம்பூதிரிகள் பொறுப்பேற்று, தங்களில் ஒருவரை தலைவராக (யோகதிரிப்பாடு) நியமித்து கோயிலை நிர்வகித்து வந்தார்கள். ஆனால் கொல்லம் ஆண்டு 981 ற்கு பின் கொச்சி ராஜா சக்தன் தம்புரான் காலத்தில் இந்த நடைமுறையை மாற்றி கோவிலை பொது மக்களே நிர்வகிக்க ஏற்பாடு செய்தார்.

இவரது காலத்தில் கோவிலை சுற்றி தேக்கு மரக்காடு இருந்தது. இதை அழிப்பதற்கு ராஜா காலத்தில் முடிவெடுத்தனர். மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மரங்கள் சிவனின் ஜடாமுடியாக இருக்க வேண்டும். இதை அழிக்கக்கூடாது என்றனர்.

அந்த சமயத்தில் கோயிலில் 41 நாள் திருவிழா நடந்தது. மக்களின் எதிர்ப்பை மீறீ காடு அழிக்கப்பட்டது. அதன் பிறகு இன்று வரை அக்கோயிலில் திருவிழா நடக்கவே இல்லை. சிவனின் ஜடாமுடியான மரங்கள் அழிக்கப்பட்டதால் தான் இந்நிலை ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர்.

சுற்றுப்பிரகாரத்தில் சிவசன்னதிக்கு பின்புறம் பார்வதி தேவியின் கருவறை அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவன், பார்வதியை பரசுராமரும், தெற்குப்பகுதியில் உள்ள ராமர், சங்கரநாராயணன், கணபதியை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்ததாக தலவரலாறு கூறுகிறது. எப்போது பூஜை நடந்தாலும் இந்த 5 தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறது.

பிரார்த்தனை : இவரை "வடக்குநாதர்' என்கின்றனர். ஈரேழு பதினான்கு லோகத்தின் அதிபதி என்பதால் எது வேண்டினாலும் நடக்கிறது.

இந்த லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்ட வேண்ணை வாங்கி சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட நோய், மலட்டுத்தன்மை நீங்கும் என்பதும், ஞாபகசக்தி அதிகரிக்கிறது என்பதும் நம்பிக்கை. மூலவருக்கு இரவு 8.00 மணிக்கு நடைபெறும் திருப்புகா பூஜை தொடர்ந்து 41 நாட்கள் பார்த்தால் தாம் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை.


பெருமை: லிங்கத்தின் அமைப்பு பன்னிரெண்டு அடி உயரம், இருபத்தி ஐந்து அடி அகலம் உள்ள மிகப்பழமையான இந்த வேண்ணை எப்போதும் உருகாமல், பாறை போல் இறுகி உள்ளது. எப்போதாவது வேண்ணை வெளிப்பட்டால், உடனே உருகி காணாமல் போய்விடுகிறது. மூலவருக்கு வேண்ணையால்  அபிஷேகம் செய்து வருகின்றனர். வேண்ணை கட்டியாக உறைந்து வரும். கோடையின் வெப்பமோ, திடங்களின் ஆரத்தி வெப்பமோ, சூடோ இந்த வேண்ணை உருகி விழச்செய்யாது. பூச்சிகள் மூலவரை தாக்காது. மூலவர் மீது உள்ள வேண்ணை மனம் கிடையாது. வேண்ணை லிங்கத்திற்கு வேண்ணையால் அபிஷேகம் மற்றும் பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்த லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.

விலகிய நந்தி: இங்குள்ள நந்தி சிவனின் எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் உள்ளார். பிரதோஷ காலங்களில் சிவன் இங்கு எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கோவிலின் சிறப்பம்சம். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார். மற்றவர்கள் தொட அனுமதியில்லை. வடக்குநாதரை தரிசித்தால் காசிக்கு சென்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் உள்ள வியாசமலையில் முதன் முதலாக தரிசிக்க வரும் பக்தர்கள் ஹரி ஸ்ரீகணபதியே நமஹ என்று தனது கைகளால் கற்சிலை - வியாசமலை மீது எழுத வேண்டும். (பேனா பென்சிலால் அல்ல). அடுத்த முறை இத்தலம் வரும் போது எழுதிய அந்த பக்தர் படிப்பில் உயர்வுடன் இருப்பார் என்பது ஐதீகம். தற்போது ஏராளமான இளம் பக்தர்கள் பக்தைகள் எழுதி வருகின்றனர்.

உலகம் உய்ய அவதரித்த மகான் ஆதி சங்கரர் அவருடைய தந்தையார் சிவகுருவும், தாயார் ஆர்யாம்பாளும், இத்தலத்தில் வடக்கு நாதரை வேண்டி கொண்டதன் பலனாகத்தான் ஆதிசங்கர் அவதரித்தார்.

இத்திருக்கோயிலின் முன்புறம் உள்ள தெக்கின்காடு மைதானத்தில் நெற்றி பட்டத்துடன் அலங்கரிக்கப்பட்ட, பயிற்சியளிக்கப்பட்ட 150 யானைகள் அணிவகுப்பு பிரதி மார்ச் மாதமும் நடைபெறும். இந்தியாவின் மாபெரும் விழா ஆடிப்புரம் என்பர்.


வரலாறு: ஒரு முறை சிவனுக்கும் அர்ஜீனனுக்கும் நடந்த போரில் சிவனது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதற்காக தன்வந்திரி பகவான் வேண்ணை தடவி சிகிச்சை செய்தார். இதனால் இங்கு வேண்ணையால்  செய்யப்பட்ட லிங்கம் இருப்பது விசேஷமானது. அமர்நாத்தில் பனிலிங்கம் போல், திருச்சூரில் வேண்ணையால்  லிங்கமாக இருப்பது ஆச்சரியமான விஷயம். இதை "தென் கைலாயம்' என்கிறார்கள். பரசுராமர் பிரதிஷ்டை செய்த இத்தலம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. கேரளாவில் உள்ள மேற்கு பார்த்த சிவாலயம் இது.


பராசரர்

பராசரர்

வசிட்டர் அருந்ததி அவர்களின்
மகன் சக்திரி.

சக்திரி ஓர் ரிஷி ஆவார்

சக்திரி அடர்ந்த மலைக் காட்டில் ஒற்றையடிப் பாதை வழியாக செல்கையில் எதிரில் வந்த இச்வாகு குல மன்னன் கல்மாஷபாதன்
பாதையை மறித்து நின்றார்.

கல்மாஷபாதன் ஓர் நல்ல மாமன்னன். விசுவாமித்திரரே அவனை சீடனாக ஏற்பதாக கூறியும் அவன் தொடர்ந்து மன்னனாகவே இருந்து வந்தான். வசிஷ்டருக்கு விசுவாமித்திரர் செயல் பிடித்தமானதாக இல்லை என கூறி வாதம் செய்தார். இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியது.

விலகி போ என இருவரும் மாறி மாறி சொல்லிய வண்ணம் வாக்குவாதம் செய்தனர். குதிரையை விரட்டும் சவுக்கால் சக்திரி முனிவரை அடித்துப் பாதையை விட்டு விலகிச் செல் என அடித்தார். தன்னை ஒரு ரிஷி என்று அறிந்தும், அரக்கத்தனமாக அடித்ததால், மன்னர் கல்மாஷபாதனை நரமாமிசம் உண்ணும் அரக்கனாக மாற சாபமிட்டார் சக்திரி. அப்போது அங்கு வந்த விசுவாமித்திரர் வசிட்டர் மீதான கோபத்தை அவரது மகன் சக்திரியை அழிக்கும் விதமாக ஒரு செயல் செய்தார். ஏற்கனவே சக்திரியின் சாபம் பெற்ற கல்மாஷபாதனின் உடலில், விசுவாமித்திரர் ஒரு கிங்கரனை ஏவினார். கல்மாஷபாதன் சக்திரி முனிவரையும் அவரது தம்பியர்களையும் கொன்று குவித்து நரமாமிசம் உண்டான்.

முனிவர் சக்திரி இறந்த போது 12 வயதான அவரது மனைவி அத்ருச்யந்தீ கர்ப்பவதியாக இருந்தாள். ஓர் வனத்தினில் கற்பாரையில் வசிஷ்டர் அமர்ந்திருந்தார். அவரை தின்று பசியை போக்கி கொள்ள கல்மாஷபாதன் ஓடி வந்தான். தன் கமண்டலத்தில் இருந்த நீரை
கல்மாஷபாதன் மேல் தெளிக்க சுய உணர்வு பெற்றான் மன்னன்.

பன்னிரென்டு வருடங்கள் அரக்கனாக நரமாமிசம் தின்றவன்
மறுபடியும் மனிதனாக அரக்க குணம் இன்றி கையெடுத்து வணங்கி நின்றான். அவனை மன்னித்த வசிஷ்டர் நாடாள செல்ல பணிந்தார்.

அத்ருச்யந்தீயின் வயிற்றில் இருந்த கரு 12 ஆண்டுகள் தாயின் வயிற்றிலேயே இருந்தது. தனது மகன்கள் இறந்ததை தாக்கி கொள்ள முடியாமல் பல முறை வசிஷ்டர் உயிரை விட எத்தனித்த போது அவர் இறைவனால் காப்பாற்றப்பட்டார்.

ஓரு முறை வசிஷ்டருக்கு யாரோ மந்திரங்கள் சொல்வது காதில் விழுந்தது. மாமா! கர்ப்பவாசம் செய்யும் உங்கள் பேரன் தான் வேதமந்திரங்களை ஓதுகிறான். தாமாகவே, சகலவேதங்களையும் அவன் அறிந்து கொண்டு விட்டான் என்றாள். தனக்கு ஓர் பேரன் வருவதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர் வசிஷ்டரும் அருந்ததியும். தாயின் வயிற்றிலேயே 12 ஆண்டுகள் இருந்து அந்த வயதுள்ள சிறுவனாக பிறந்தான் அந்தக்குழந்தை. தாத்தா வசிஷ்டர் அந்தப் பிள்ளைக்கு பராசரர் என்ற பெயர் வைத்தார்.

பராசரர் என்ற சொல்லுக்கு பிறந்தவுடனேயே பகைவர்களை தன் தவவலிமையினால் சிதறிப் போகும் படி செய்பவன் என்பது பொருள்.

இந்து சமயத்தின் ஆதாரநூல்களில் ஒன்றான பராசர ஸ்ம்ருதி என்ற நூல் இவருடைய பெயரைத் தாங்குகிறது.

அவனது தாய் ஒருநாள் பராசரரிடம் உண்மையை மறைக்காமல் சொல்லி விட்டாள். அத்துடன் அவனது தந்தை சித்தப்பாக்கள் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் எடுத்துச் சொன்னாள். தன் தந்தை மற்றும் தனது சித்தப்பாவை அழித்தவர்களை பழிவாங்க முடிவு செய்து வசிஷ்டரிடம் அனுமதி கேட்க
பழி வாங்குவது ரிஷிகளின் இயல் பில்லை என மறுத்து அவரை தடுக்கிறார். பராசரர் தனது பிதா சக்தியின் மரணத்துக்குக் காரணமான பூதங்களை மன்னிக்க அவருக்கு மனம் வரவில்லை. அந்த பூதங்களைகளை அழிக்கும் பொருட்டு ராக்ஷஸ ஸத்ரம் என்னும் யாகம் செய்தார். அதில் தனது பிதாவான சக்திரியை நினைத்துக் கொண்டு முதிர்ந்த இளைய பால்ய பூதங்களைகளை அந்த யாகத்தில் எரிக்க ஆரம்பித்தார். இம்முறை வசிஷ்டர் பராசரைத் தடுக்கவில்லை.

முப்புறமும் எரிகின்ற அக்னிகளின் முன்னே நான்காவது அக்னியாக ஜொலித்தார் பராசரர். சிறந்த புத்திமானாகிய அத்ரி முனிவர் அந்த ராக்ஷச ஸத்ரத்தை நிறுத்துவதற்காக வந்தார். அவருடன் புலஸ்தியர் புலகர் க்ரது என்ற முனிவர்களும் சேர்ந்து வந்தார்கள். புலஸ்தியர் பராசரரிடம் அந்த ஸ்த்ரத்தை நிறுத்துவதற்காகப் பேசினார்.

“புத்திரனே! அறியாதவர்களும் நிரபராதிகளுமான பூதங்களைகளை அழிப்பதினால் நீ சந்தோஷப்படுகிறாயா? தபஸ்விகளான நமக்கு இது தர்மம் அல்லவே. தம்மிடத்தில் உண்டான கோபத்தினால் சக்திரி கொல்லப்பட்டார். விஸ்வாமித்திரர் ஏவிய ராக்ஷசனான கல்மாஷபாதனால் கொல்லப்பட்ட வசிஷ்ட புத்திரர்கள் தங்களைக் காத்துக்கொள்ள முடியாமல் மரணமடையவில்லை. இந்தத் தேகம் போய் வேறு தேகம் வரட்டும் என்றுதான் பிதிர்லோகம் சென்றார்கள். கல்மாஷபாதனும் சுவர்க்கம் சென்றுவிட்டான். அனைவரும் அங்கே சந்தோஷமாக இருக்கிறார்கள். நீ இந்த யாகத்தை விட்டுவிடு” என்று அறிவுரை கூறினார். அங்கு குழுமியிருந்த மற்ற முனிவர்களும் இதை ஆமோதித்தார்கள். பராசரர் அந்த ஸத்திரத்தை முடித்தார். எல்லா ராக்ஷசர்களையும் அழிக்க வளர்க்கப்பட்ட அந்த யாகத் தீயை இமயமலையின் வடபுறத்தில் உள்ள பெருங்காட்டில் கொட்டி விட்ட்டார். அந்த அக்னி இன்னமும் அவ்விடத்தில் எப்போதும் ராக்ஷசர்களையும் மரங்களையும் கற்களையும் சாப்பிட்டுக்கொண்டு பலகாலமாக காணப்படுகிறது.

சக்திரிபுத்திரரான பராசரர் விஸ்வாமித்திரர் மீது கோபம் கொண்டு அவரை வதம் செய்வதற்காக ஒரு யாகம் வளர்த்தார். விஸ்வாமித்திரரைக் காப்பாற்றும் பொருட்டு அந்த அக்னியை சுப்ரமணியர் விழுங்கினார். தேவர்க்குக் கொடுத்தது போக மீதமான அமுதத்தை விஷ்ணு மூர்த்தி இவரிடம் கொடுத்தார். பராசரர் அதனை அசுரர்க்கு அஞ்சிப் பூமியில் புதைத்தார். வக்ராசூரன், தண்டாசூரன், வீராசூரன் என்ற மூவரும் அமுதத்தைக் கவர முயல்கையில் பராசரர் சிவமூர்த்தியை வேண்டினார். உடனே சிவபிரான் பராசக்தியிடமாக சண்டகாதினி, வீரை, சயந்தி, சயமர்த்தினி என்னும் நான்கு துர்க்கைகளைப் படைத்து அவர்கள் மூலமாக அசுரரைக் கொல்வித்தார்.

புதைத்த அமுதகுடம் அமுதநதி என்னும் நதியாகப் பெருகியது. பவானி கூடலில் உள்ள நதி இதுவாகும். பராசரர் விஷ்ணுபுராணம் எழுதினார். பராசரர் ஜோதிட சாஸ்திரத்தை உலகிற்கு அளித்தவர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். வேதத்தின் சாரத்தை நமக்களிக்கும் புராண நூலாக இது திகழ்கிறது. பராசருக்கும் சத்தியவதிக்கும் பிறந்தவரே வேதவியாசர். வேதவியாசர் மகாபாரதத்தை தந்தவர் ஆவார்.


சாளக்கிராம பூஜை

 சாளக்கிராம பூஜை

1. சாளக்கிராம பூஜை செய்பவன் சித்தம் சுத்தமாகும்.

2. சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான்.

3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம் கொலை செய்தவனின் பாபத்தையும் போக்கும்.

4. சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவது போல. பாபங்கள் கழன்று ஓடும்.

5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியேஇல்லாது அல்லது எதிர் பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு.

6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் இப்பூஜையினை செய்பவர்கள் விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள்.

8. சாளக்கிராமத்தை பக்தியுடன் நமஸ்கரித்தவன் தேவனாகிறான்...! அவன் சாதாரண மனிதன் அல்லன்...!

9. சாளக்கிராமம் பகவான் இருக்குமிடம். சர்வ பாபங்களையும  நாசம் செய்யவல்லது.

10. பாபங்கள் செய்தவர்கள் கூட சாளக்கிராம பூஜையினால் பரகதி அடைகிறார்கள். பக்தியோடு
 செய்பவர்கள் முக்தியடைகிறார்கள்.

11. அரணி கட்டையில் அக்னி உண்டாவது போல சாளக்கிராமத்தில் ஹரி இருக்கின்றார். லஷ்மி மற்றும் வைகுண்டத்தில் இருப்பதைவிட ஹரி சாளக்கிராமத்தில் மிகவும் பிரசன்னமாகவே உள்ளார்.

12. சாளக்கிராமத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும் பூதானமும் செய்த பலன்.

13. இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும், ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை செய்த பலனுக்கு ஈடாகாது.

14. பன்னிரெண்டு சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம் பூஜை செய்தபலன் ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன் கூட சாளக்கிராம பூஜையினால் முக்தி பெறுவான்.

16.தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே சாளக்கிராம பூஜையினால் முக்தியடைவான்.

17. சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்து விடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சாளக்கிராமத்தில் சூட்சுமாமயிருந்து அருள் பாலிக்கின்றனர்.

19. விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டே சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுபதம் அடைகிறான்.

20. சாளக்கிராமம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும், சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.

21. பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும். சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம் உள்ளும் புறமும் சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம் சாப்பிட்டாலே போதுமே, மீண்டும் பிறவா நிலை கிடைத்து விடும்.


சித்தர்

 30 வருடங்களுக்கும் மேலாக நீர், உணவு இன்றி வாழும் அபூர்வ சித்தர், மகாதேவன் மலை மஹானந்த சித்தர்

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் 6-12-1930-ல் பிறந்து நறுமணம் கமழும் மஞ்சள் விற்பனை செய்தவர். அவர் தனது 35-ம் வயதில் காளஹஸ்த்தி சிவபெருமானால் தமிழகத்தின் பல திருகோவில்களில் திருப்பணி செய்தார். பின்பு ஆந்திர மாநிலம் காளஹஸ்த்தி லோகுவாகுளம் பரத்வாஜீஸ்வரர் திருகோவிலில் அன்னதானம் செய்து வந்தார். 2002-ம் வருடம் 25-ம் நாள் இரவு 12மணியளவில் மஹா ஆனந்தர் முன் சிவபெருமான் தேர்ன்றி "நிவிர் பிறவிப் போற்றுத்தவர்". " நிவிர் ஆயிரம் ஆண்டுகள் வாழம் பேறு பெற்ற சித்தர்" நிவிர் மஹாதேவமலை சென்று குகையனுள் குடிகொண்டு, எம்மை வழிபட்டு பக்தர்களைக் காத்துக் கடவாயாக என்று கூறி மறைந்தார்.

மகா ஆனந்த சித்தர் இறைவனின் கட்டளைக்கிணங்க புறப்பட்டு மகா தேவமலையை அடைந்தார் இறைவன் மீண்டும் மகா ஆனந்த சித்தர் முன் தோன்றி நீவிர் இனி பல் துலக்குவதும், நீராடுவதும் சித்திரை-1அன்றே என்றும், நீவிர் எவரிடமும் தர்மம் கேட்கக்கூடாது என்றும், "சகல செல்வங்களும் இங்கு வந்து குவியும்" என்றும்,இம்மலைக்கு வருகை புரியும் பக்தர்களுக்கும் இம்மலையின் வாழும் அனைத்து ஜிவராசிகளையும் தீவினை நொடிகளிலிருந்து காக்க வேண்டும் என்றும், இனி தாங்கள் உணவு உண்ணவோ, தாகத்திற்கு நீர் அருந்தவோ கூடாது என்று கூறி இறைவன் மறைந்தார்.

சிவபெருமான் சிரசின் மீது அமர்ந்துள்ள ஐந்து தலை நாகத்தின் வடிவே சுவாமிகளின் சிரசின் மீது காணும் வடிவாகும்.இதற்கு சுவாமிகள் நாடொறும் மணம் கமழம் மலர்களையும், நறுமணம் வீசும் இலைகளையும் வைத்து பூஜிக்கின்றார்.
நெருப்பின் மீது படுத்தும் தியானம் செய்திடும் சித்தர் பிரான் இவர். உயிர் வாழ உணவு இன்றியமையாததுதான் எனினும் உண்ணாமலும் உயிர் வாழ்வதும் சாத்தியமே என வாழ்ந்து காட்டிவரும் சிதத புருஷர் மகானந்தர், பல ஆண்டுகளா எவ்வகை உணவும் உண்பதில்லை, தண்ணிரும் அருந்துவதில்லை என்பது வியக்கத்தக்கது
சித்தரும் சித்தவைத்தியமும் ..,

மானிட இனத்துக்கும் பெருமக்கள் வழங்கிய அரிய நன்கொடை சித்த மருத்துவம். நம் மகானந்த சித்தர் அவ்வரிசையில் அபூர்வ மூலிகைகளை போகர் சித்தர் திருவருளால் அறியப்பெற்று தீராத வியாதிகளை தீர்த்து வைக்கிறார். யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய முப்பெரும் சிறப்பு வாய்க்கப்பெற்றவர் நம் மகா ஆனந்த சித்தர். அரிய மூலிகை மருந்துகளால் வாய்பேச நிலையினர் குணம்பெற்றுள்ளனர்.

பிள்ளைப்பேறு இல்லாதோர் மகா ஆனந்த சித்தரை அணுகி வேண்ட ஸ்வாமிகள் இறைவனின் அருட்சக்தியாலும் தன் தவவலியாலும் வில்வம், விபூதி, மருந்து அளித்தால் மலடு நிங்கி மகப்பேறு அடைகின்றனர்.

மகாதேவ மலை சித்தர் அமைவிடம்...
சென்னையில் இருந்து பெங்களுர் இருப்புப்பாதையில் முக்கிய ரயில் சந்திப்பு காட்பாடி. காட்பாடியிலிருந்து மேற்கே குடியாத்தம் செல்லும் நெடுஞ்சாலையில் 19 வது கிலோ மீட்டரில் மகாதேவ மலைகான வரவேற்பு வளைவு உள்ளது. குடியாத்தம் நகரிலிருந்து காட்பாடி 11 வது கி. மீ தொலைவில் மகாதேவ மலை வரவேற்பு வளைவு உள்ளது.
வேலூர் மாவட்டம் மஹா தேவர் மலை கோவில் சுற்றுலா தளம் சித்தர் ஈசன்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அஷ்டோத்தரசத நாமாவளி:

 ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அஷ்டோத்தரசத நாமாவளி:

ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வராய நம:

ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
ஓம் காஷாய தண்ட தாரிணே நம:
ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
ஓம் கருணாஸாகராய நம:
ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
ஓம் தர்ம பரிபாலகாய நம:
ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
ஓம் சிவ சக்தி ஸ்வரூபகாய நம:
ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
ஓம் காஞ்சீ க்ஷேத்ர வாஸாய நம:
ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
ஓம் சாதுர் வர்ண்ய ரக்ஷகாய நம:
ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
ஓம் ஸர்வ பாப ஹராய நம:
ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
ஓம் பக்தார்ப்பி்த தன ஸ்வீகர்த்ரே நம:
ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம
ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
ஓம் ஸர்வக்ஞாய நம:
ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
ஓம் அபய ஹஸ்தாய நம:
ஓம் பயாபஹாய நம:
ஓம் யக்ஞ புருஷாய நம:
ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
ஓம் யக்ஞ ஸம்பன்னாய நம:
ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
ஓம் யக்ஞ பலதாய நம:
ஓம் யக்ஞ ப்ரியாய நம:
ஓம் உபமான ரஹிதாய நம:
ஓம் ஸ்படிக துளஸீருத்ராக்ஷ ஹார தாரிணே நம:
ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய நம:
ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸூஷுப்தயவஸ்வாதீதாய நம:
ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
ஓம் குருபாதுகா பூஜா துரந்தராய நம:
ஓம் கனகாபிஷிக்தாய நம:
ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
ஓம் ஸர்வ ஜீவ மோக்ஷதாய நம:
ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
ஓம் கான ரஸஞ்ஞாய நம
ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
ஓம் அநேகபாஷா ஸம்பாஷண கோவிதாய நம:
ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய நம:
ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
ஓம் ச்ரவணானந்தகர கீர்த்தயே நம:
ஓம் தர்சனானந்தாய நம:
ஓம் அத்வைதானந்த பரிதாய நம:
ஓம் அவ்யாஜ கருணா மூர்த்தயே நம:
ஓம் சைவவைஷ்ணவாதி மான்யாய நம
ஓம் சங்கராசார்யாய நம:
ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
ஓம் ராமகதா ரஸிகாய நம:
ஓம் வேத vவேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ் ப்ரவர்தகாய நம:
ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
ஓம் கேதாரேஸ்வர நாதாய நம:
ஓம் அவித்யா நாசகாய நம:
ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம ஓமலகுபக்திமார்கோபதேசகாய நம:
ஓம் லிங்கஸ்வரூபாய நம:
ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
ஓம் ஜிதேந்த்ரியாய நம:
ஓம் சரணாகதவத்ஸலாய நம:
ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
ஓம் டம்ரிகநாத விநோதனாய நம:
ஓம் வ்ருஷபாரூடாய நம:
ஓம் துர்மதநாசகாய நம:
ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
ஓம் மிதாஹாராய நம:
ஓம் ம்ருத்யுவி மோசன சக்தாய நம
ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
ஓம் தாஸாநுக்ரஹ க்ருதே நம:
ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
ஓம் ஸர்வலோக க்யாதசீலாய நம:
ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷ்டபதாய நம:
ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜாப்ரியாய நம:

மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவளி ஸம்பூர்ணம்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

ஸ்ரீ சக்கரம்

 ஸ்ரீ சக்கரம்

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி



சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி

சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி

மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி

சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய

சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய

அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு

பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ

பாஹிமாம்  ஸ்ரீதேவி துப்யம் நமஹ

பாஹிமாம்  ஸ்ரீதேவி துப்யம் நமஹ

ராமதாஸர்

பண்டரீபுரம் ராமதாஸர்

ராமதாஸர் ஒரு சிறந்த ராமபக்தர். இவர் அனுமாரின் அம்சமாகவே இந்த உலகத்தில் அவதரித்தார். அவர் பிறக்கும்போது சிறியதாக ஒரு வால்கூட இருந்தது. நாள் ஆக ஆக அது தானே மறைந்துவிட்டதாம். எப்போதும் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் என்றே ஜபம் செய்து கொண்டிருப்பார். இந்த மந்திரத்தில் பதின்மூன்று எழுத்துக்கள் இருப்பதால் பதிமூன்று கோடி கணக்கு வைத்து ஜபம் செய்வார். இவர் ஒரு முறை ஜபம் செய்து விட்டால் ராமருடைய வில்லில் உள்ள மணி ஒரு தரம் அடிக்குமாம். இப்படி பலமுறை பதின்மூன்று கோடிகள் ஜபம் செய்தவர். இடையில் ஒரு கௌபீனம், கையில் ஜபமாலை, நீண்ட முடி, தாடி, கால்களில் பாதுகை இதுதான் அவருடைய உருவம். கண்கள் எப்போதும் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். சத்ரபதி சிவாஜியின் குரு இவர். ராமதாஸர் கோதாவரி நதிக்கரையில் உள்ள கஞ்சன்காட் என்ற இடத்தில் ஒரு குகையில் தங்கி ஜபத்தில் ஈடுபட்டவராக இருப்பார். பண்டரீபுரம் அருகிலுள்ள மகாக்ஷேத்திரம். ஒரு தாயாருக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் அம்மா அம்மா என்று தாயாரைச் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கும். தன்னைச் சுற்றி வரும் குழந்தையைக் காட்டிலும் தன்னை விட்டு விலகியிருக்கும் குழந்தையையே தாய் உள்ளம் அதிகமாக நினைக்கும். அதுபோல் தான் பகவானும். பாண்டுரங்கனை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருந்தாலும் பாண்டுரங்கனோ ராமதாஸர் வருகின்றாரா? எப்போது என்னைப் பார்க்க வருவார்? இவ்வளவு பக்கத்தில் இருந்துகொண்டு என்னைப் பார்க்க ஏன் வரவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார். ராமதாஸர் ஏன் பாண்டுரங்கனை பார்க்க வரவில்லை? அதற்கு ஒரு காரணம் உண்டு. சிவ பக்தர்கள் பாண்டுரங்கனை சிவனே என்கிறார்கள். பண்டரீபுரத்தில் சிவராத்திரி விமரிசையாக இருக்கும். திகம்பரராக இருப்பதால் ஜைனர்கள் எல்லாம் மஹாவீரர் என்கிறார்கள். வைஷ்ணவர்கள் எல்லாம் கையில் சங்குடன் ருக்மணியுடன் இருப்பதால் இவன் கிருஷ்ணனே என்கிறார்கள். ராமதாஸருக்கு ஒரு பிடிவாதம். ராமரைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை. ராம நாமத்தைத் தவிர வேறு நாமத்தை ஜபம் செய்வதில்லை. ராமாயணத்தைத் தவிர வேறு எதையும் பாராயணம் செய்வதில்லை. இப்படியிருக்க எந்த மூர்த்தி என்றே நிர்ணயம் ஆகாத பாண்டுரங்களை எப்படித் தரிசனம் செய்வது? அதனால் தான் போகவில்லை. ஒரு நாள் சிவாஜி, ராமதாஸரை வணங்கி விட்டு அவர்முன் கைகூப்பி பணிவுடன் நின்றார். ராமதாஸரும் வந்த விஷயத்தைக் கேட்டார். நாளை ஏகாதசி பாண்டுரங்கனுக்கு ஒரு பெரிய திருமஞ்சனம் பூஜை எல்லாம் ஏற்பாடு செய்துள்ளேன் தாங்கள் தான் அதை முன்னின்று நடத்திக் கொடுக்க வேண்டும் என சிவாஜி வேண்டினார். நீ பூஜையை நல்ல முறையில் நடத்து ஆனால் என்னால் வரஇயலாது என்று ராமதாஸர் கூறினார். அதற்கு சிவாஜி தங்களால் நாளை வரமுடியாது என்றால் வேறு ஒருநாளில் பூஜை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்றார். ராமதாஸரோ நீ எப்போது ஏற்பாடு செய்தாலும் நான் வருவதற்கில்லை திட்டமிட்டபடி நாளையே நடக்கட்டும் என்று கூறினார். சிவாஜியோ தாங்கள் ஏன் வருவதற்கில்லை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வினவினார். வேறு ஒன்றும் இல்லை. நான் ராமபிரானைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை என்ற நியமத்தில் இருப்பவன். அதனால் தான் நான் வருவதிற்கில்லை என்று கூறினேன். குருவானவர் சீடர்கள் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்காமல் ஊக்குவிக்க வேண்டும். அதனால் தான் பூஜையை உன்னை நடத்தச் சொன்னேன் என்றார். சிவாஜியோ நீங்கள் வரவில்லையென்றால் அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தி விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தான். சரி! உன் ஆசைக்காக காலையில் வந்து ஐந்து நிமிடங்கள் இருந்துவிட்டு வந்துவிடுவேன் என்று கூறி சிவாஜியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு ஜபமாலையை கையில் உருட்டிக்கொண்டு ஜபம் செய்து கொண்டே பண்டரீ வந்துவிட்டார். பண்டரீ வந்தால் அங்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சிவாஜி வருவதாகவோ திருமஞ்சனம் ஏற்பாடாகி இருப்பதாகவோ ஒரு தகவலும் இல்லை. ஜபம் செய்து கொண்டு வந்தவர் தன்னை அறியாமல் கோயிலுக்குள் வந்து விட்டார். கோயிலுக்குள் வந்து தெய்வத்தை வணங்காமல் அலட்சியம் செய்யக்கூடாது என்பதால் உள்ளே சென்று தரிசனம் செய்தார். பாண்டுரங்கனே தன்னை தரிசிக்க இப்படி ஒரு லீலை புரிந்துள்ளார் என அப்போது தான் ராமதாஸரின் மனதில் தோன்றியது. உடனே ராமதாஸர் ஹே பாண்டுரங்கா! நீ ராமனா அல்லது பாண்டுரங்கனா! ராமனாக இருந்தால் சரயு நதிக்கரையை விட்டு ஏன் இங்கு வந்தாய்? சீதாவை விட்டு விட்டு ருக்மணி தேவியுடன் இங்கு காட்சி தருகிறாய்? என புலம்பினார். அடுத்த விநாடி அங்கு பாண்டு ரங்கனைக்காணவில்லை. அந்த இடத்தில் சீதை லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதமான ராமச்சந்திர மூர்த்தி தனது விஸ்வரூபதரிசனம் காட்டி ராமனும் நானே பாண்டு ரங்கனும் நானே என்பதை உணர்த்தினார்.

வரலக்ஷ்மி விருத பூஜை

 ஸ்ரீ வரலக்ஷ்மி விருத பூஜை

சங்கல்பம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்பூஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்ன உபாசாந்தையே

ஓம் பூ: - ஸூவரோம் மமோபாக்தஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வரா (ஸ்ரீ மந் நாராயண பரீத் யர்த்தம்) கரிஷ்ய மாணஸ்ய கர்மண, அவிக்னேன பரிஸ மாப்த்யர்த்தம் ஆதௌ மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே என ஸங்கல்பம் செய்து மஞ்சள் பொடியினால் பிம்பம் செய்து விக்னேஸ்வரரை பிரதிஷ்டை செய்து வேதம் அறிந்தவர் கணானாம் த்வா என்று மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்ய வேண்டும்.

அஸ்மின் ஹரித்ராபிம்பே ஸூமுகம் விக்னேஸ்வரம் த்யாயாமி. ஆவாஹயாமி! ஆஸனம் ஸம்ர்ப்பயாமி.

அக்ஷதை போடவும்

பாதையோ பாத்யம் ஸமர்ப்பயாமி
அர்க்கியம் ஸமர்ப்பயாமி
ஆசமனீயம்  ஸமர்ப்பயாமி
(தனிப்பாத்திரத்தில் ஒவ்வொரு தடவையும் உத்தரணி தீர்த்தம் விடவும்)

ஸ்நாபயாமி (புஷ்பத்தை தீர்த்ததில் தோய்ந்து ப்ரோக்ஷிக்கவும்)
ஸ்நானாநந்தரம் ஆசமணீயம்  ஸமர்ப்பயாமி தீர்த்தம் போடவும்
வஸ்திரார்தம் அக்ஷதான்  சமர்ப்பயாமி உபவீதார்த்தம் அக்ஷதான்  ஸமர்ப்பயாமி
கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்)
கந்தஸ்யோபரி அக்ஷதான்  ஸமர்ப்பயாமி( அக்ஷதை)
புஷ்பை: பூஜயாமி (புஷ்பார்ச்சனை)

1. ஸூமுகாய நம:
2. ஏகதந்தாய நம:
3. கபிலாய நம:
4. கஜகர்ணிகாய நம:
5. லம்போதராய நம:
6. விகடாய நம:
7. விக்னராஜாய நம:
8. விநாயகாய நம:
9. தூமகேதவே நம:
10. கணாத்யக்ஷõய நம:
11. பாலசந்த்ராய நம:
12. கஜானனானய நம:
13. வக்ரதுண்டாய நம:
14. சூர்ப்பகர்ணாய நம:
15. ஹேரம்பாய நம:
16. ஸ்கந்தபூர்வஜாய நம:

நாநாவித பத்ர புஷ்பம்  ஸமர்ப்பயாமி
தூபார்த்தம் தீபார்த்தம் அக்ஷதான்  ஸமர்ப்பயாமி
கற்கண்டு வாழைப்பழம்
ஓம் பூர்புவஸ்வ: தியோயோநப்
(நிவேதன வஸ்துவைத்து ப்ரோஷித்து)

ப்ராணாயஸ்வாஹா அபாநாய ஸ்வாஹா
வ்யாநாய ஸ்வஹா, உதாநாய ஸ்வாஹா
ஸமாநாய ஸ்வாஹா ப்ரஹ்மணே ஸ்வாஹா
விக்னேஸ்வராய நம; ரஸகண்டம்
கதலீ பலம் நிவேதயாமி, நைவேத்யாநந்தரம்
ஆசமனியம் ஸமர்ப்பயாமி, பூகிபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம் கற்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிகிருஹ்யதாம் கற்பூர தாம்பூலம்
ஸம்ர்ப்பயாமி சூடம் ஏற்றி தீபாராதனை (கற்பூர)
நீராஜனம் ஸமர்ப்பயாமி மந்திர புஷ்பம் சமர்ப்பயாமி
ஸூவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி
ப்ரதக்ஷிண நமஸ்காரம் ஸமர்ப்பயாமி

(பிரார்த்தனை)

வக்ரதுண்ட மஹகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குருமேதேவ
ஸர்வ கார்யேஷூ ஸர்வதா

ஸ்ரீ வரலட்சுமி பூஜா சங்கல்பம்

(அக்ஷதையை கையில் எடுத்துக்கொண்டு)

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வவிக்ன உபசாந்தயே
ஓம்பூ ஸூவரோம்

மமோபாக்த ஸமஸ்த துரிதக்ஷயத்
வாரா ஸ்ரீ பரமேஸ்வர (ஸ்ரீமந்நாராயண ப்ரித்யர்த்தம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்யபரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேதவராஹகல்பே வைவஸ்வ தமன்வந்தரே அஷ்டாவிம் சகிதமே கலியுகே பிரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதக் கண்டே மேரோ, தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ காரிகே ப்ரபவா தீ ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே - நாம
ஸம்வத்ஸ்ரே தக்ஷிணாயனே வர்ஷருதௌச்ராவண மாஸே
சுக்லபக்ஷே சதுர்தச்யாம் சுபதிதௌப்ருகுவாஸர யுக்தாயாம்
நக்ஷத்ரயுக்தாயாம் ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்
அஸ்யாம் சதுர்தச்யாம் சுபதிதௌ அஸ்மாகம் ஸஹகுடும்பானாம்
க்ஷேமஸ் தைர்யவீர்ய விஜய ஆயுராரோக்கி ஐச்வர்ய
அபிவிருத்யர்த்தம் தர்மார்த்த காமமோக்ஷசதுர்விதபல
புருஷார்த்த சித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம்
சந்தான ஸெளபாக்யசுபபல அவாப்த்யர்த்தம் தீர்க்கஸெள
மங்கல்யமவாப்த்யர்த்தம் வரலக்ஷ்மி ப்ரசாத சித்யர்த்தம் கல்யோக்த ப்ரரேண த்யான ஆவாஹனாதி

ஷாடசோப சாரை: வரலெக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே
(வடக்கு திக்கில் அக்ஷதையை போட்டு கையலம்பி)

(விநாயகரை யதாஸ்தானம் செய்து)
(மணி) ஆகமார்த்தம்னு தேவானாம்கமனார்த்தம் துரக்ஷ ஸாம்
குருகண்டாரவம் தத்ரதேவதாஹ்வான லாஞ்சனம்

கலசபூஜை: (தீர்த்த பாத்திரத்தின் நாலு புறமும் சந்தனம் இட்டு ஒரு புஷ்பத்தைப் போட்டு கையால் மூடிக்கொண்டு ஜபிக்க வேண்டும்.)

கலசஸ்யமுகே விஷ்ணு: கண்டேருத்ர: ஸமாச்ரித: முலேதத்ரஸ்திதோப்ருஹ்மாமத்யேமா த்ருகணாஸ்திதா
குöக்ஷளது ஸாகராஸவர்வே ஸப்தத்வீபாவஸூந்தரா
ரிக்வேத: அப்யஸூர்வேத: ஸாமவேதாப்யதர்வண,
அங்கைச்ச ஸஹிதாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா:
கங்கேச யமுனேசைவ கோதாவரிஸரஸ்வதி நர்மதே
ஸிந்து காவேரி ஜலேஸ் மின் ஸன்னிதிம் குரு
(என்று தீர்த்தத்தை ப்ரோக்ஷிக்கவும்)

பூஜாத்ரவ்யங்களுக்கும் பூஜை செய்கின்றவரும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.

வரலக்ஷ்மி மஹாதேவீ ஸர்வாபரண பூஷிதா
கலசேஸ்மித் வஸேதஸ்மிந் கேஹே ஸெளபாக்ய காரணீ (தியானம்)

1. வந்தே பத்மகராம் ப்ரஸந்நவதநாம்
ஸெளபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யாம்
அபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம ஹரிஹர ப்ருஹ்மாதிபிஸ்
ஸேவிதாம் பார்ச்வே பங்கஜ சங்க பத்ம நிதிபிர்
யுக்தாம் ஸதாசக்திபி:
ஸரஸிஜநயநே ஸரோஜ ஹஸ்தே
தவலதமாம்சுகந்த மால்ய சோபே பகவதி
ஹரிவல்லபே மனோக்ஞேத்ரிபுவன பூதிகரிப்ரஸூத மஹ்யம்

2. பத்மாஸனே பத்மசுரே ஸர்வ லோகைக பூஜிதே
நாராயணப்ரியே தேவி ஸூப்ரீதா பவஸர்வதா
க்ஷீரோதார்ணவ ஸம் பூதே கமலே கமலாலயே
ஸஸ்திதாபவகேஹே ஸராஸூர நமஸ்க்ருதே
(அஸ்மின் கலசே பிம்பே - வர லெக்ஷ்மீம் தியாயாமி)

பாலபானுப்ரதீகாசே பூர்ண சந்தர நிபானனே
ஸூத்ரே அஸ்மின் ஸூஸ்திதா பூத்வா ப்ரயச்ச
பஹூலான்வரான் (என்று சொல்லி நோம்பு சரட்டை வைக்கவும்.)

ஸர்வமங்கள மாங்கள்யே விஷ்ணு வக்ஷஸ்தாலாலயே ஆவாஹ்யாமி தேவித்வாம் அபீஷ்ட பலதாபவ
(அஸ்மின் கும்பேவரலக்ஷ்மீம் ஆவாஹயாமி அக்ஷதை போடவும்
அநேகரத் நகசிதம் முக்தாஹாரைர் விபூஷிதம்
ஸூவர்ண ஸிம்மாஸனம் சாரு ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ஆஸனம் ஸமர்ப்பயாமி

கங்காதிஸரிதுத்பூதம் கந்தபுஷ்ப ஸமந்விதம்
பாத்யம் ததாம்யஹம் தேவீ ப்ரஸீத பரமேஸ்வரி
பாத்யம் ஸமர்ப்பயாமி.... தீர்த்தம் விடவும்

கங்காதி ஸமாநீதம் ஸூவர்ண கலசே ஸ்திதம்
க்ரஹாணார்க்யம்மயாதத்தம் புத்ரபெள்த்ரபலப்ரதே

அர்க்யம் ஸமர்ப்பயாமி - உத்தரணி தீர்த்தம் விடவும்
வைஷ்ணவீ விஷ்ணு ஸம்யுக்தா அஸங்க்யாயுததாரணீ
ஆசமயதாம் தேவபூஜ்யே வரதே அஸூரமர்த்தினி

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி தீர்த்தம் விடவும்

ததிக்ஷீர ஸமாயுக்தம் மத்வாஜ்யேன ஸமன்விதம்
மதுபாக்கம் மாயாதத்தம் ஸ்வீ குருஷ்வ மஹேஸ்வரி

மதுவர்க்கம் ஸமர்ப்பயாமி - தேன் பால்

பயக்ஷீர க்ருதைர்மிச்ரம் சர்கராமது ஸம்யுக்தம்
பஞ்சாமிர்த ஸ்னானமிதம் க்ருஹாண பரமேஸ்வரி

பஞ்சாமிர்த ஸ்னானம் ஸமர்ப்பயாமி

ரத்ன கும்பஸமாதீதம் ஸர்வதீர்த்தாஸ்ருதம் ஜலம்
ஸ்னானார்த்தம் ப்ரயச்சாமி ஸ்ருஹாண ஹரிவல்லபே

சுத்தோதக ஸ்னானம் ஸமர்ப்பயாமி

மாங்கல்ய மணி ஸம்யுக்தம் முக்தாஜால சமன்விதம் தத்தம் மங்கள ஸூத்ரந்தே கிருஹாண ஹரிவல்லவே

கண்ட ஸூத்ரம் ஸமர்ப்பயாமி

ரத்ன தாடங்க கேயூர ஹாரகங்கண மண்டிதே பூஷணம்க்ருஹ்யதாம்தேவிநம ஸ்தேவிஷ்ணுவல்லபே

ஆபரணானி ஸமர்ப்பயாமி

சந்தனா கரு கஸ்தூரி கோரோசனாதி ஸூமிச்ரிதம் லேபனார்த்தம் மஹாதேவி தாஸ்யாமி ஹரிவல்லபே

கந்தம் ஸமர்ப்பயாமி - சந்தனம் இடவும்

ஹரித்ரா குங்குமஞ்சைவ ஸிந்தூரம் கஜ்வலான்விதம் ஸெளபாக்ய த்ரவ்யஸம்யுக்தம்க்ருஹாண பரமேஸ்வரி

ஸெளபாக்ய திரவியம் ஸமர்ப்பயாமி

சாலீயான் சந்திரவர்ணாம்ச ஸ்னிக்த மௌக்திக ஸன்னிபான் அக்ஷதான் பிரதிகிருண்ணீஷ்வ பக்தானாம் இஷ்டதாயினி

அக்ஷதான் ஸமர்ப்பயாமி

மந்தார பாரிஜாதாப்ஜ கேதக்யுத்பட பாடலை, மருமல்லிக ஜாத்யா திபுஷ்பைத்வாம் பூஜயா ம்யஹம்
வரலக்ஷ்மியை நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி

அங்க பூஜை

1. வரலக்ஷ்மியை நம: (பாதௌ) பூஜயாமி
2. மஹாலக்ஷ்மியை நம: (குல்பௌ) பூஜயாமி
3. இந்திராயை நம: ஜங்கே பூஜயாமி
4. சண்டிகாயை நம: ஜானுனீ பூஜயாமி
5. க்ஷீராப்தி தனயாயை நம: (ஊரும்) பூஜயாமி
6. பீதாம்பரதாரிண்யை நம: (கடிதம்) பூஜயாமி
7. ஸோமஸோதர்யை நம: (குஹ்யம்) பூஜயாமி
8. லோகமாத்ரே நம: (ஜகனம்) பூஜயாமி
9. விஷ்ணுப்ரியாயை நம: (நாபிம்ஃ) பூஜயாமி
10. ஜகத்குக்ஷ்யை நம: (உதரம்) பூஜயாமி
11. விஸ்வரூபிண்யை நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
12. ஜகத்தாத்ர்யை நம: (ஹ்ருதயம்) பூஜயாமி
13. ஸூஸ்தந்யை நம: (ஸ்தநௌ) பூஜயாமி
14. கஜகாமின்யை நம: (பார்ச்வெள) பூஜயாமி
15. கம்பு கண்ட்யை நம: (கண்டம்) பூஜயாமி
16. லோகஸூந்தர்யை நம: (ஸ்கந்தௌ) பூஜயாமி
17. பத்மஹஸ்தாயை நம: (ஹஸ்தான்)  பூஜயாமி
18. பத்மநாப ப்ரியை நம: (பாஹூன்) பூஜயாமி
19. சந்திரவதனாயை நம: (முகம்) பூஜயாமி
20. உத்பலாக்ஷ்யை நம: (நேத்ரே) பூஜயாமி
21. சம்பக நாஸிகாயை நம: (நாஸிகாம்) பூஜயாமி
22. ஹரிப்ரியாயை நம: (ச்ரோத்ரே) பூஜயாமி
23. பிம்போக்ஷ்ட்யை நம: (ஒஷ்டௌ) பூஜயாமி
24. ச்ரியை நம: (அதரம்) பூஜயாமி
25. சஞ்சலாயை நம: (ஜீஹவாம்) பூஜயாமி
26. ஸூகபோலாயை நம: (கண்டஸ்தலம்) பூஜயாமி
27. அக்ஷ்டமீசந்திர பாலையை நம: (பாலம்) பூஜயாமி
28. மந்தஸ்மிதாயை நம: (சுமுகம்) பூஜயாமி
29. நீலகுந்தளாயை நம: (அளகான்) பூஜயாமி
30. கமலவாஸின்யை நம: (பிடரம்) பூஜயாமி
31. பத்மாஸனாயை நம: சிரம் பூஜயாமி
32. ஸர்வைச்வர்யை நம: (சர்வாண்யங்கானி) பூஜயாமி.

அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்

திவ்ய தேசங்கள் அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்
 
மூலவர் : நீலமேகப்பெருமாள்
உற்சவர் : சவுரிராஜப்பெருமாள்
தாயார் : கண்ணபுரநாயகி
தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி
ஆகமம்  : வைகானஸம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கிருஷ்ணபுரம்
ஊர் : திருக்கண்ணபுரம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
 
பா

டியவர்கள் : நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார்           

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.நம்மாழ்வார்
 
விழா : வைகாசியில் 15 நாள், மாசியில் 15 நாள் பிரம்மோற்ஸவம்.   
       
ஸ்தல சிறப்பு : இத்தலத்தில் உள்ள உற்சவர் "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும் போது மட்டுமே திரு முடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும்"அழகு' என்றும் பொருள்கள் உண்டு.   
       
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  முகவரி : அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம் - 609 704. நாகப்பட்டினம் மாவட்டம்.  போன்: +91- 4366 - 270 557, 270 718, 99426 - 56580.
      
ஸ்தல பெருமை : சவுரிராஜப் பெருமாள் ஒருசமயம் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாத்திய மாலையை தன் காதலிக்கு சூடிவிட்டார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்து விடவே அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு போட்டு விட்டார். அதில் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக்கண்ட மன்னர் மாலையில் முடி எப்படி வந்தது? என கேட்டார். அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது என பொய் சொல்லிவிட்டார். மன்னனுக்கு சந்தேகம் வரவே, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். சுவாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்துவிட்டுச் சென்றார் மன்னர். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார்.மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயரும் பெற்றார். இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும், "அழகு' என்றும் பொருள்கள் உண்டு.

சுவாமி சிறப்பு : இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார்.அமாவாசைதோறும் உச்சிகால பூஜையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இத்தலத்தை நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.

கர்வம் அழிந்த கருடன் : தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி அவர் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது சுவாமியை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். மாசி பவுர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது பக்தர்கள் சுவாமியை "மாப்பிள்ளை!' என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனர்.

முனையதரையன் பொங்கல் : முன்னொரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். தினசரி பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக பணத்தை எல்லாம் செலவழித்ததால் வறுமையில் வாடிய அவர் மன்னனுக்கும் வரி கட்டவில்லை. எனவே, மன்னன் அவரை சிறைப்பிடித்துச் சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் மனைவி. அவர் பெருமாளுக்கு மானசீகமாக (மனதில் நினைத்து) நைவேத்யம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டியிருந்ததைக் கண்டார். இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்படவே அவர்கள் முனையதரையன் படைத்த பொங்கலை சுவாமி உண்டதை அறிந்து கொண்டனர். அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை "முனையதரையன் பொங்கல்' என்றே சொல்கின்றனர்.

இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கிறார்கள். தோஷத்தால் பாதிக்கப்பட்ட இந்திரன் இங்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இத்தலம் பூலோக வைகுண்டம் என கருதப்படுவதால் இங்கு சொர்க்கவாசல் இல்லை. திவ்யதேசங்களில் கீழை வீடாக இருக்கும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.

திருநெற்றியில் தழும்பு : உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம். முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி, "பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ' என்று கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது. "தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்' என்ற பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார். (சந்தேகம்)
 
"ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம். இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.

இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது.

உற்சவ பெருமாளுக்கு சவுரி முடி வளர்ந்ததால் சவுரி ராஜ பெருமாள் என்று பெயர்.

சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது.
 
திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார்.

குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ (ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே.

நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.

கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்.

திருப்புற்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை (பால் பாயாசம்) அதுபோல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம். 108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு திருமாலிருஞ் சோலை (அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் ஆகும்.
 
தல வரலாறு : முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர். மகாவிஷ்ணுவிடம் "அஷ்டாட்சர மந்திரம்' கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர். முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின் மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.