JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020
ஸ்ரீ கருப்பசாமியின் வரலாறு
(வால்மீகி, தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண் ணசாமியானது என்பது, வாலமீகி ராமாயண த்தகவல். 'தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி’ எனும் கருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். வீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள்.)
சீதாதேவி வனவாசம் இருக்கையில். ஒரு முறை முனிவரின் பூஜைக்காக நீர் கொண்டு வர செல்லும் போது,
தனது மகனான லவனை தொட்டிலில் இட்டுச் செல்கிறேன் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி, செல்கிறார்.
பாதி தூரத்திலேயே குழந்தை அழுது விட்டால் முனிவரின் பூஜை கெடுமே என்று நினைத்து சீதாதேவி திரும்ப வந்து குழந்தையை தூக்கி சென்று விடுகிறார்
சிறிது நேரம் கழித்து தொட்டிலை முனிவர் பார்க்கையில் குழந்தை இருக்காததை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
உடனே அருகில் இருக்கும் தர்ப்பை புல்லை பிய்த்து தொட்டிலில் போட்டு தன் தவ வலிமை யில் ஒரு குழந்தையை உருவாக்கினார்.
பிறகு நீர் கொண்டு வருகையில் சீதையின் கையில் குழந்தை இருப்பதை கண்டு ஆச்சர் யம் அடைகிறார். பிறகு அந்த குழந்தையையும் லவனோடு சேர்ந்து குசன் என்று வளர்ந்து வருகிறது.
சில காலம் கழித்து ராமருக்கு சொந்தமான குதிரையை அடக்கி ஹனுமானை வென்று ராமரோடு போட்டியிட்டு என ஏராளமான சாகசங்கள் லவனும் குசனும் செய்தனர்.
சீதையின் வனவாசம் முடிந்த பிறகு தங்கள் குடும்பத்தில் இரட்டை குழந்தை பிறப்பதில் லையே இப்பொழுது எப்படி இரட்டை குழந்தை கள் நமது வம்சத்தில் என அனைவரும் கேட்க சீதை உண்மையை கூறினார்.
லவனை மட்டும் அனைவரும் ஏற்று கொள்ள. குசன் தன் அண்ணன் லவன் நாட்டை ஆள நான் காட்டை பாதுகாத்து ஊர் எல்லையில் வீற்றிருப்பேன் என்று கூறி மாபெரும் அக்னி வளர்த்து அதில் இறங்கி தன்னை புனிதப்படு த்தி வெளியே வருகிறார்
அக்னியில் இறங்கியதால் குசன் கருப்பு நிற மானார் எல்லையை காப்பதால் சாமி ஆனார். இதுவே கருப்பசாமி வரலாறு. இவரை கருப்ப ண்ணசாமி என்றும் அழைப்பார்கள். இவர் சபரிமலை போன்ற பல ஆலயங்களில் அருள்புரிகிறார்
வடமொழியில் ஓம் ஸ்ரீகிருஷ்ணபுத்ராய நமோ நம: என்று அர்ச்சிப்பார்கள்.
கந்த சஷ்டி கவசம் மஹிமை.
ௐ முருகா சரணம்
கந்த சஷ்டி கவசம் மஹிமை.
வரலாறு : அவர் பெயர் பால தேவராயர். தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்கா கொடும் நோய், மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர்
கடைசியாக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு சாகலாம் என முடிவெடுத்து ஆலயம் சென்றவருக்கு முருகபெருமான் காட்சிஅளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும் அது அவர் நோயினை மட்டுமல்ல உலக நோயினை எல்லாம் நீக்கும் பாடல் என்றும், யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்கள் நோயும் அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என சொல்கின்றான்
அந்த இடத்தில் இருந்து பாட தொடங்குகின்றார் பால தேவராயர், அவர் பாடி முடிக்கவும் அவரின் கொடும்நோய் அகன்றது, அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்த பாடலை தொகுத்து முடிக்கின்றார். அதுதான் கந்த சஷ்டி கவசம்
சஷ்டி என்றால் ஆறு
கவசம் என்றால் பாதுகாப்பு
நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளபட்டது
அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதை பாடுவார்களாம், ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்தது குறிப்பில் இருக்கின்றது
ஆழந்த அர்தமிக்க பாடல் அது, ஒவ்வொரு வரியாக பாருங்கள் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள ஒப்புவிக்கும் பாடல் அது
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பே
சிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி காவல்தேடும் பாடல் அது
இதில் அறிவியலும் ஒளிந்திருக்கின்றது
ஆம் ஆழ்ந்த பக்தி மனநிலையில் ஒவ்வொரு உறுப்பாக சொல்லும்பொழுது அதில் கவனத்தை வைத்தால் உடல் தானாக அதை சரி செய்கின்றது என்கின்றது அறிவியல்
உளவியல் கொடுக்கும் உடல்நலம் இது, நிரூபிக்கபட்ட ஒன்று. இதைத்தான் கந்த சஷ்டி கவசமும் சொல்கின்றது
உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து முருகனிடம் நலம்பெற சொல்லும் மருத்துவ தியான பாடல் இது
தொடரும் பாடலில் அர்த்தமில்லா சில வரிகள் வருவதாக தோன்றும், உண்மையில் அந்த வார்த்தைகள் அர்த்ததிற்கு அல்ல மாறாக சில அதிர்வுகளை கொடுப்பதற்காக
இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது.
அக்கால புலவர்கள் ஞானமிக்கவர்கள், சித்தர்கள் சொன்ன நல்ல அதிர்வு, அதாவது தெய்வீக மற்றும் நேர்மறை சிந்தனையினை கொடுக்கும் சமஸ்கிருத வார்த்தைகளுக்கு நிகரான சரியான தமிழ் வார்த்தைகளை வைத்து பாடியிருப்பார்கள்
தேவராயரும் அதை மிக சரியாக செய்து நல் அதிர்வுகளை கொடுக்கும் வார்த்தைகளை இப்பாடலில் புகுத்தியிருக்கின்றார்
ஆம் சில வார்த்தைகளை தகுந்த உச்சரிப்புடன் உச்சரிக்கும்பொழுது அது சில அதிர்வுகளை செய்கின்றது அது உடலில் நல் விளைவுகளை ஏற்படுத்துகின்றது
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் , சிலருக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுப்பார்கள், அந்த அதிர்வினை சில வார்த்தைகளை முறையாக உச்சரித்தாலே உடல் பெறும்
ஓம் எனும் வார்த்தையினை ஓங்காரமாக சில நாழிகை இழுத்து ம்ம்ம்ம்ம்ம் என்பதை அழுத்தி சில நாழிகை இழுத்தாலே சில அதிர்வுகளை உணரமுடியும் என்பார்கள்
ஆலய வழிபாட்டின் பொழுது வெண்கல மணி கொடுக்கும் அதிர்வும் அத்தகையதே
அப்படியான வார்த்தைகள் பல கந்த சஷ்டி கவசத்தில் உண்டு, இதனால்தான் முருகன் ஆலயங்களில் அதை படிக்க வேண்டும் என்றார்கள்
முருகன் ஆலயம் பொதுவாக மலைமேல் அமர்ந்திருக்கும் அல்லது அமைக்கபட்டிருக்கும் ஏன்?
விஷயம் ஒன்றுமில்லை மலைமேல் இருக்கும் அந்த சூழல் மன அமைதியினை கொடுக்கின்றது, நோயில் இருந்து பாதி விடுதலையினை அதுவே கொடுத்துவிடும்
மலைமேல் ஏறி செல்வதும் அங்கிருக்கும் சுத்தமான காற்றினை சுவாசிப்பதும் மாபெரும் ஆரோக்கிய வழி
குகைகளில் முருகன் ஆலயம் வைப்பதும் ஒரு அறிவியல், பொதுவாக கற்கள் சூழ்ந்த இடம் நல்ல சூழலை கொடுக்கும் நோய்கள் நெருங்கா, செங்கல் இருந்தும் மன்னர்கள் கற்களால் ஆலயம் கட்டிய தத்துவம் அதுவேதான்
முருகன் ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள்
முருகனை வேண்டினால் உடல் நலம் பெறலாம் என்பதை எல்லா ஞானிகளும் மகான்களும் முருகன் அடியார்களும் சொல்லி வைத்தார்கள்
வரலாற்றில் அது உண்மை, முருகனை தொழுதோர் பலர் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர்களே கண்முன்னே சாட்சிகள் ஏராளம்
நலம் பெற்றோர் ஏராளம், ஆசியாவினையே புரட்டி போட்ட சுனாமி திருச்செந்தூர் பக்கம் வாலை சுருட்டி இருந்தது என்பதும் கண்டது
இதைத்தான் பாடலாக சொன்னார்கள்
"முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே.."
தமிழர்கள் தங்கள் தனிபெரும் கடவுளை, அவன் கொடுத்த பாடல் வழி தேடட்டும், தமிழருக்காய் அல்ல உலக மக்களுக்காய் முறையிடட்டும்
எந்த பாடலை பாடினால் உலக மக்களெல்லாம் நோயிலிருந்து விடுபடுவார்கள் என முருகனே சொன்னாரோ அந்த பாடல் பாடபடட்டும்
ஆலயத்திலும் வீடுகளிலும் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும், தீபங்கள் எரிய, நறுமணம் கமழ அது உருக்கமான பாடபடட்டும்
அதில் தமிழினம் பாதுகாக்கபடும், மானிட இனம் கொரோனாவில் இருந்து மீண்டெழும்
உலகெல்லாம் பிரார்த்தனைகள் ஓங்கி ஒலிக்கும் நேரம் தமிழரிடம் அவர்களின் மூலகடவுள் பாடலும் ஒலிக்கட்டும், காக்கும் கந்தன் எல்லோரையும் காக்கட்டும்.
தேவி மகாத்மியம்
தேவி மகாத்மியம்
கலியுகத்தில் சண்டி தேவியும் கணேச பெருமானும் விரைவில் நன்மையை தருவார்கள் என்பது பழமொழி. துர்க்கா தேவி தான் சண்டி என்றும் சண்டிகா என்றும் அழைக்கப்படுகிறாள். துர்க்கா தேவியின் பெருமையை கூறும் நூல்களுள் தேவி மஹாத்மியம் மிக சிறந்தது. இது மார்க்கண்டேய புராணத்தில் அடங்கியது. எழுநூறு மந்திரங்கள் கொண்டது. ஆகவே இந்த நூலை சப்த சதி என்றும் கூறுவர். இந்த மந்திரங்களால் தான் சண்டி ஹோமம் செய்ய படுகிறது. தினசரி அல்லது நவராத்ரி நாட்களில் இதை பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும் உண்டாகும். குறிப்பாக துர்க்கா சப்த ஸ்லோகி சப்த சதியின் சக்திமிக்க மந்திரங்கள் ஆகும்.
சைய்த்ர வம்சத்தில் தோன்றிய சுரதன் எனும் அரசன் வினை வசத்தால் நாடிழந்து கொலாவித்வம்சி எனும் பகைவரால் துரத்தப்பட்டு காட்டை அடைந்தான். அங்கும் தன் நாடு, மனைவி, மக்கள் இவற்றை நினைத்து வருந்தினான். அங்கே வாடிய முகத்தோடு ஒரு வைசியனை கண்டு விசாரித்ததில் அவனும் தன்னை போலவே இருப்பதை உணர்ந்து இருவரும் ஒரு முனிவரை அணுகி அறிவுள்ளவராக இருப்பினும் எங்களுக்கு நாடு, மனைவி, மக்களிடம் அன்பு உண்டாக காரணம் யாது என்று கேட்டனர். அம்முனிவர் மஹா மாயையினால் நீங்கள் மயங்கிநீர்கள், அந்த மாயை தான் பந்த மோட்சத்திற்கு காரணம். மாயை ஞானிகளின் மனதையும் மயக்கும் திறமையுடையது என்றார். அரசன் மாயை பற்றி வினவினான். மாயை நித்யயானாலும் தேவர்களின் காரியத்திற்காக தோன்றும், அப்போது உற்பதியனதாக சொல்வர்.
முன்னொருகாலத்தில் விஷ்ணு யோகநித்திரையில் ஆழ்ந்திருந்த பொழுது அவருடய காது மலத்திலிருந்து மது கைடபன் என்று இரு அசுரர் தோன்றி திருமாலின் நாபிகமலத்திலுள்ள பிரம்ம தேவனை கொல்ல முற்பட்டனர். பயந்த பிரம்மன் விஷ்ணுவின் யோகமாயை ராத்ரி ஸுக்தம் என்ற ஸ்துதியால் துதித்தார். யோகமாயை விலகி விஷ்ணு சக்தி பெற்று அவ்வசுரர்களுடன் போரிட்டார். மயங்கிய அசுரர் வரம் அளிக்கிறோம் பெற்று கொள் என்றனர். "நீங்கள் என்னால் கொல்ல படவேண்டும் இதுவே என் வரம்" என்று விஷ்ணு கூற, வஞ்சிக்க பட்ட மது கைடபர்கள் எங்கும் ஜலமயமாக இருப்பதை கண்டு, "ஜலத்தால் நனையாத இடத்தில எங்களை கொள் என்றனர். விஷ்ணுவும் தனது மடியில் வைத்து அவர்களை கொன்று மதுசூதனன் என பெயர் பெற்றார். கைடபஜித் என்ற பெயர் மாலுக்கும், யோகமாயை விலக்கி அவருக்கு சக்தி உண்டாக்கினமையால் சக்திக்கு மதுகைடபஹந்த்ரி என்றும் பெயர் விளங்குகிறது.
மகிஷாசுரனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் பிரம்மனின் தலைமையில் மாலிடமும், சிவனிடமும் முறையிட அப்போது சகல தேவர்களின் சரீரங்களில் உள்ள சக்திகள் யாவும் வெளிப்பட்டு ஒன்று சேர்ந்த ஒரு தேவியின் உருவம் பெற்றது. தேவர்கள் யாவரும் தங்களது அனைத்து ஆயுதங்களையும், படைகளையும் தேவிக்கு தந்தனர். அன்னை போருக்கு ஆயத்தமானாள். மகிஷாசுரன் போர் தொடுத்தான். கோடிகணக்கான யானை, தேரில் குதிரை, காலாட்படைகளுடன் வந்து சிக்ஷுரன், சாமரன், உதக்ரன், மஹாஹநு, அசிலோமன், பாஷ்கலன், பிண்டாலன் முதலிய அசுர சேனாதிபதிகள் கத்தி, தோமரம், பிண்டிபாலம், வில், வேல் சூலம் முதலிய பல ஆயுதங்கள் கொண்டு தேவியுடன் போரிட்டு தோற்றனர். வகானமாகிய சிங்கம் கோடனுக்கோடி பேரை கொன்றது. அசுரர்கள் உடலின் உறுப்புக்களை இழந்து பல திக்குக்களில் ஒட்டமெடுத்தனர். போர்களத்தில் குருதி வெள்ளம் நிரம்பி செல்ல முடியாமல் கடல் போல் சூழ்ந்தது.
சேனைகள் நாசமடைந்தது கண்ட சிக்ஷுரன், சிங்கத்தை அடித்து அம்பிகையை வாளால் வெட்டினான். ஆனால், கத்தி தூள்த்தூள் ஆனது. யானை மீது வந்த அசுரனை பூமியில் தள்ளி சிங்கமே அவனை கொன்றது. முற்கூறிய அத்தனை சேனை தலைவர்களும் மாண்டனர். சைதன்யம் அழியவே அசுர அரசன் எருமை மாட்டின் உருவம் கொண்டு கொம்பாலும், வாலாலும், முகத்தின் அசைவிநாலும், குளம்பினாலும் தேவியின் பல கணங்களை போரிட்டு வீழ்த்தினான். தேவி பாசத்தால் அவனை கட்டிய போது சிங்க ரூபமாக, யானை ரூபமாக, மனித ரூபமாக எல்லா ரூபங்களிலும் போரிட்டு முடிவில் எருமை ரூபத்தோடு போரிட்டான். தேவி வீரபானம் அருந்தி அவன் கழுத்தில் காலை ஊன்றி, சூலத்தால் அடித்து, வாளால் வெட்டி வீழ்த்தினாள்.
தேவர்கள் தேவியை துதித்து சூலேனயாகி என்று தொடங்கிய நான்கு ஸ்லோகங்களும் கவசமும் நீயே. உலகின் படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளுக்குக் காரணமும் நீயே, உன்னை சேவிப்போருக்கு வறுமை, பிணி, துக்கம் உண்டாகாது. பக்தரிடம் தயையும், பகைவரிடம் உன் வீரமும் ஒப்ப்றன. நீயே லக்ஷ்மி, நீயே கௌரி, நீயே துர்க்கை, எங்களை எவ்வகையிலேனும் எங்கள் உடலின் எல்லா இடங்களிலும் துன்பமின்றி காக்க வேண்டும் என்று மலர்களால் அர்ச்சித்தனர். மகிழ்ந்து பிரசன்னமான தேவியிடம் எங்களுக்கு எந்த குறையும் இல்லை, ஆனாலும் உன்னை நினைத்தபோதெல்லாம் எங்களை காப்பாயாக. மேலும், இந்த ஸ்தோத்திரம் துதிப்போருக்கெல்லாம் சகல வித நன்மையும் அருள வேண்டும் என்று துதித்தனர். அவ்விதமே அருள் செய்து அந்த மகிஷாசுரமர்த்தினி மறைந்தாள்.
இது முதல் கடைசி வரை உத்தம சரிதம் எனப்படும். பின்னொருக்காலத்தில் சும்பநிசும்பர்களால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் இமயம் சென்று முன்பு தேவி வரம் கொடுத்ததை நினைத்து துதித்தனர். இந்த ஸ்துதி தேவி ஸ்துதி எனப்படும். கங்கையில் நீராட வந்த பார்வதியின் சரீரத்திலிருந்து ஒரு தேவி தோன்றினாள். கொசத்திலிருந்து தோன்ரினமையால் கௌசீகி என பெயர் பெற்றால்.கௌசீகி தோன்றிய பிறகு பார்வதி கருப்பாக ஆகி காளிகா என பெயர் பெற்றால். கௌசீகியின் அழகு ரூபத்தை கண்ட ஒற்றர் இருவர், சும்ப நிசும்பர்களிடம் சென்று அவள் அழகை வர்ணித்து சிறந்த பொருட்க்களுக்கு இடமாக இருக்கும் அரசரிடத்தில் சிறந்த பெண்மணியும் இருக்க வேண்டும் என்றனர். சபலமடைந்த அரசன் சுக்ரீவன் என்ற தூதனை தேவியிடம் அனுப்பினான். அவன் அசுர அரசனின் பெருமைகளை கூறி தேவியை வரும்படி அழைக்கிறான். அதற்க்கு தேவி " என்னை போரில் வேல்பவனையே நான் மணப்பதாக முன்பே உறுதி கொண்டேன், ஆதலில் அசுரர் என்னை போரில் வென்று கைபற்றட்டும்" என்றாள். "தேவி கர்வம் கொள்ளாதே, அசுரர் பலசாலிகள் பிறகு அவமானம் அடைவாய்" என்று தூதன் மறுமுறை கூறினான். "அறிந்தோ, அறியாமலோ நான் சபதம் பூண்டுவிட்டேன், என் உறுதி மாற்ற முடியாதது, அவர்களை சீக்கிரம் வரச்சொல்" என்றால் தேவி.
சும்பாசுரனால் ஏவப்பட்ட தூம்ரலோசனன் தேவியை வரும்படி அழைக்கிறான். " நீ பலவான் பலவானால் அனுப்பப்பட்டவன், சேனையுடன் வந்துள்ளாய், பலாத்காரமாய் என்னை இழுத்து செல்லலாம் " என்றாள். அசுரன் ஆவேசத்துடன் ஓடி வரும் பொழுது ஹூங்காரத்தால் அவனை மடிய செய்தாள். சேனை யாவும் வாகனமாகிய சிங்கத்தால் அழிந்தது. அசுர மன்னன் சண்டன் முண்டன் என்ற இரு அசுரர்களை மறுபடியும் தேவியிடம் அனுப்பினான்.
வந்த சண்ட முண்டர்களை கண்டு கோபித்த கௌசீகியின் நெற்றியிலிருந்து காளி தோன்றினாள். கையில் கத்தி குழிந்த கண்கள் புலித்தோல் ஆடை அகன்ற வாய் நாக்கை நீட்டி அடிக்கடி தொங்கவிடுகிறாள், பயங்கரமான சப்தம், இப்படிய தோற்றத்துடன் காளி பல ஆயுதங்கள் கொண்டு அசுர படையெல்லாம் அழித்து சண்ட முண்டர்களையும் கொன்று, சண்டனுடைய தலையையும், முண்டனுடைய முண்டத்தையும் அம்பிகை முன் காணிக்கையாக்கி வணங்கினால், "கௌசீகி சண்ட முண்டர்களை கொன்றமையால் நீ சாமுண்டா என்ற பெயருடன் விளங்குவாயாக" என்று அருளினாள்
பின் கூட்டமாக சகல அசுர அரசர்களும் ரக்தபீஜன் என்ற அசுரனை துணையாக கொண்டு வருகின்றனர். ரக்தபீஜன் உடலிலிருந்து ரத்தம் பூமியில் விழுமாயின் அவனை ஒத்த பலமுடைய அசுரர்கள் ஒரு சொட்டிற்கு ஒருவர் வீதம் உண்டாவர் என்பது அவன் பெற்ற வரம். தேவி சிவனை அசுரரிடம் தூது அனுப்பினால். "அசுரர் பாதாளம் செல்லட்டும், இந்திரன் த்ரிலோகத்தை ஆளட்டும், இல்லாவிட்டால் போரில் என்னை சூழ்ந்துள்ள நரிகள் உங்களை தின்று திருப்தி அடையும்" என்ற தேவியின் வாக்கை கேட்ட பிறகும் அசுரர் போரிட்டனர். சக்திகளால் அடிபட்ட அசுரனின் ரத்தத்திலிருந்து பல அசுரர் தோன்ற உலகம் நிறைந்து விட்டது. தேவர் பயந்தனர். அம்பிகை சாமுண்டா தேவியை அழைத்து, "நான் அவனை அடிக்கிறேன், பெருகுகின்ர ரத்தத்தை நீ கீழே விழாதபடி பருகு, அதனால் அவன் ரத்தமின்றி இறப்பான்" என்றாள். சாமுண்டா தேவி அப்படியே செய்யவும் அவன் இறந்தான். தேவர் மகிழ்ந்தனர். சிவனை தூதாக அனுப்பிய அம்பிகைக்கு சிவா தூதி என பெயர் உண்டாயிற்று.
தேவிக்கும் சும்ப நிசும்பர்களுக்கும் கடும் போர் நடந்தது. தேவி நிசும்பனுடைய ஹ்ருதயத்தில் குத்தின பொழுது அங்கிருந்து அசுரன் ஒருவன் தோன்றினான். அவன் தோன்றும் போதே தேவியின் கத்திக்கு இறயனான். மகேஸ்வரி, வாராகி முதலிய சக்திகளும் பல அசுரர்களை வீழ்த்தினர்.
தம்பி இறந்தது கண்ட சும்பன் பிறருடைய பலம் கொண்டு சண்டை இட்டு வீண் கர்வம் கொள்ளாதே என்று கூறினான். அதற்க்கு தேவி பதில் சொன்னாள் "உலகில் நான் ஒருவளே இவர்கள்லெல்லாம். என் விபூதியே என்னுள் இவர்களை அடக்கிகொள்கிறேன்" என்று கூறி தன்னுடலுள் யாவரையும் அடக்கி கொண்டாள். சும்பனும் தேவியும் பூமியிலும் வானத்திலும் மாறி மாறி சண்டை இட்டனர். இறுதியில் தேவி சூலத்தால் குத்தி வீழ்த்தினாள். இதுவரை இருந்த பல அபசகுனங்கள் விலகின. காற்று இனிமையாக வீசியது, கதிரவன் ஒளிவிட்டான்.
இவ்வத்தியாயம் நாராயணி ஸ்துதி எனப்படும். சரணடைந்தவர்களை காப்பவள் நீயே, உலகிற்கு ஆதாரமாய் இருப்பவளே, சுவர்க்க மோட்சங்களையும் அளிப்பவளே, பஞ்சக்ருதியும் புரிபவளே. மகேஸ்வரி, வைஷ்ணவி, வாரகி, நாரஸிம்ஹி, ஐந்த்ரி, சிவதூதி, கௌமாரி, சாமுண்டா, பிராம்மணி முதலிய ரூபங்களுடன் அசுரரிடம் போரிட்டு உலகை காத்தவளே திருடன் முதலியவர்களிடம் இருந்தும் எங்களை காப்பவளே, உனக்கு வணக்கம் என்று துதித்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இறங்கி மூவுலகிற்கும் சகல வித நன்மையும் அளிப்பதாக தேவியே கூறினாள். நந்தா விந்த்யசலவாசிணி, பீமா பிரைமரி துர்கா, ரக்ததந்திகா சதாக்ஷி முதலிய பல அவதாரங்கள் எடுத்து தேவ சத்ருக்களை அழிப்பேன், அனைத்துயிரையும் காப்பேன் என்கிறாள்.
தேவி மகாத்மியமாகிய இந்த என் சரிதத்தை படிப்போருக்கு எல்லா வித துன்பங்களையும் பேக்குவேன், பரம புருஷார்த்தங்களையும் அளிப்பேன். அறிந்தோ அறியாமலோ செய்யப்படும் பூஜை, ஹோமம், ஜபம், பாரணங்களால் மிகவும் மகிழ்வேன். தேவி மஹாத்மியம் படிக்குமிடத்தில் நான் எப்போதும் நடமாடுவேன். வம்சம் அபிவ்ருத்தி அடையும். என்னை நோக்கி எனக்காக தூப தீபமிட்டு நைவேத்யம், அபிஷேகம் பல வித தானங்கள் எல்லாம் செய்து வருட கணக்காக செய்கின்று பூஜையினால் எனக்குஏற்படும் மகிழ்ச்சியை, ப்ரீத்தியை தேவி மகாத்மியத்தை ஒரு தரம் மிகுந்த பக்தியுடன் படித்தால் அல்லது படிக்க கேட்டாலே யான் அதைவிட சந்தோஷித்து மகிழ்வேன். தேவி ஸ்துதி, பிரம ஸ்துதி, பிர்மரிஷி ஸ்துதி இவைகளை ஜபிபதால் நல்ல புத்தி உண்டாகும். என்னை நினைத்தமாத்திரத்தில் எல்லா விதத்திலும் எல்லா வித ஆபத்திலிருந்தும் காப்பேன் என கூறி மறைந்தாள். தேவர்கள் சுவர்க்க லோகம் சென்றனர். இந்த தேவி தான் உங்களுக்கு மயக்கத்தை உண்டாக்கி நாடு, மனைவி, மக்களிடம் அன்பு கொள்ள செய்தவள். அவளை வணங்கி பூஜித்து நற்கதியை அடையுங்கள் என்று முனிவர் கூறி முடித்தார்
முகவுரை
மகாபாரதத்தின் நடுநாயகமாக எழுநூறு சுலோகங்களடங்கிய பகவத்கீதை அமைந்திருப்பது போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திரவடிவான தேவீ மஹாத்மியம் அமைந்திருக்கிறது. இது சண்டிகா தேவியின் பெருமையைக் கூறுவதால் சண்டீ என்றும், எழுநூறு மந்திரங்களடங்கியதால் ஸப்தசதீ என்றும் கூறப்படும். ஆஸ்திகர்களால் இது இமயம் முதல் கன்யாகுமரி வரை பாரததேசம் முழுதும் பாராயணத்திற்கும் ஜபத்திற்கும் ஹோமத்திற்கும் உலக ஷேமத்திற்காகவும் அரிஷ்ட நிவிருத்திக்காகவும் தொன்றுதொட்டுப் பெரிதும் கையாளப்பட்டு வருகிறது.
இதற்கு உரைகள் பல உள. இவற்றுள் சில சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காப்ரதீபம் என்பனவாம். காத்யாயனீதந்த்ரம், கடகதந்த்ரம், க்ரோடதந்த்ரம், மேருதந்த்ரம், மரீசிகல்பம், ருத்ரயாமளம், சிதம்பர ரஹஸ்யம் முதலிய ஆகம நூல்களிலும் பல்வேறு புராணங்களிலும் தேவீ மஹாத்மியத்தின் பெருமை விளக்கிக் கூறப்படுகிறது.
பூர்வ பாகத்தில் கவசம், அர்க்கலம், கீலகம், ராத்ரி ஸூக்தம், நவாக்ஷரீ விவேசனம் ஆகியனவும் நடுவில் முன்று சரித்திர வடிவில் தேவீ மஹாத்மியமும், கடைசியில் தேவீ ஸூக்தம், ரஹஸ்யத்ரயம் ஆகியனவும், அநுபந்தமாக துர்க்கா ஸப்த ச்லோகீ, துர்க்கா ஸூக்தம், இந்த்ராக்ஷீ ஸ்தோத்ரம், துர்க்கா ஆபதுத்தாராஷ்டகம், தேவ்யபராக்ஷமாபன ஸ்தோத்ரம் முதலியவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பிரம்ம வித்தையும் ஸ்ரீ வித்தையும் ஒன்றே என்பதைக் கருத்தில் கொண்டு தேவீ மஹாத்மியத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். பிரம்ம வித்தையான வேதாந்தம் கூறும் உண்மைகளை அனுபவத்திற்குக் கொண்டுவர வழிகாட்டுவது ஸ்ரீ வித்தை. மந்திரமும் தந்திரமும் ஸ்ரீ வித்தையில் அடக்கம். ததா தாம் தார - மித்யாஹூ - ரோமத்மேதி பஹுச்ருதா : தாமவே சக்திம் ப்ருவதே ஹ்ரீ - மாத்மேதி சாபரே ஒரே பரம்பொருள் தான் ஓம் என்ற பிரம்மவித்யா மந்திரத்தாலும் ஹ்ரீம் என்ற ஸ்ரீ வித்யா மந்திரத்தாலும் கூறப்படுகிறது. பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிக்க முடியாதாதலால் ஒங்காரமும் உபயாத்மகம். ஹ்ரீங்காரமும் உபயாத்மகம். ஹ்ரீம் என்பது மாயா பீஜம் அல்லது புவனேசுவரீ பீஜம் எனப்படும். விதையிலிருந்து முளை, கிளை, அரும்பு, மலர், காய், கனி முதலியன தோன்றுமாப் போல் புவனேசுவரீ பீஜத்திலிருந்து மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ தோன்றுகின்றனர். அவர்களுடைய ஸமஷ்டி மந்திர வடிவங்களில் முக்கியமானவை இரண்டு - நவாக்ஷரீ மந்திரதீøக்ஷ பெற்றவர் நவார்ண ஜபத்திற்கு அங்கமாக ஸப்தசதீ பாராயணத்தையும், ஸப்தசதீ மந்திரதை முக்கியமாய்க் கொண்டவர் அதற்கங்மாக நவாக்ஷரீ ஜபத்தையும் அனுஷ்டிப்பது காணப்படுகிறது.
சிதம்பர ரஹஸ்யத்தில் பரமேசுவரர் பார்வதிக்குக் கூறியது: தேவியே! ஸப்தசதீயின் மகிமையைக் கூறுகிறேன், கேள். அதைப் படிப்பவர் ஏழ்மையினின்று விடுபடுவர், சின்மயமான திரிபுரா மூன்று வடிவு கொண்டாள். அசுரர்களை போக்கித் தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டுப் பரதேவதை காளியுருக் கொண்டாள். அவளே காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும் ஸரஸ்வதியாகவும் தோன்றினாள். அவள் வரலாறு பதின்மூன்று அத்தியாயங்களில் எழுநூறு மந்திரங் களில் மார்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுளது, அதைப் படிப்பவர் எல்லா உபத்திரவங்களினின்றும் விடுபட்டு ஸகல சௌக்கியங்களையும் அடைவர்.
கிரதுக்களில் எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில் ஸப்தசதீ என்று டாமரதந்திரம் கூறுகிறது. (யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா) வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது. இதை பாராயணம் செய்ய நித்திய கர்மாவை முடித்துப் பரிசுத்தமான இடத்திலமர்ந்து ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு ஸாவாதானமாக முன் பின் கூறியுள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் கைக்கொள்ள வேண்டும். ஒரே தடவையில் பதின்மூன்று அத்தியாயங்களையும் பாராயணம் செய்ய அவகாசமில்லாதபோது மத்திம சரித்திரத்தை மட்டிலும் படிக்கலாம் அல்லது தொடர்ச்சியாக ஏழு தினங்களில் 1 ; 2-3 ; 4 ; 5-6-7-8 ; 9-10 ; 11 ; 12-13 என்ற கிரமத்தில் படிக்கலாம். ஒரு சரித்திரதில் அரை குறையாகப் படிக்கக் கூடாது என்ற நியமம் இந்த முறைக்கு இல்லை. மனப்பாடம் செய்து புஸ்தகமில்லாமல் ஜபித்தல் சிறந்தது. ஜ்ஞானினாமபி சேதாம்ஸி, துர்க்கே ஸ்ம்ருதா, ஸர்வாபாதா - ப்ரசமனம் போன்ற மந்திரங்களைத் தனியாக ஜபம் செய்தால் அந்தந்த மந்திரத்திற் கனுகுணமான முர்த்தியை அந்தந்தச் சரித்திரத்தில் கூறியபடி, நியாஸமும் தியானமும் செய்து அதற்கியைந்தபடி. விச்வேச்வரீம் ஜகத் - தாத்ரீம், சக்ராதய: ஸூரகணா: அல்லது நமோ தேவ்யை மஹா தேவ்யை என்ற ஸ்துதியைச் செய்யவேண்டும். ஸகாம பக்தன் இதனால் மனதில் கருதியதை யடைவான். நிஷ்காம பக்தன் மோக்ஷத்தை யடைவான். ஸூரத மகாராஜனுக்கு மேதாமஹரிஷி கூறியதாவது : பரமேசுவரியைச் சரணடைவாய், அவளை ஆராதித்தால் அவள் இகலோக இன்பங்களையும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பாள். அரசன் தன் அரசாட்சியை மீண்டும் பெற்று இன்ப வாழ்வெய்தி எதிர்காலத்தில் மனுவாக விளங்கப்போகிறான் என்றும் ஸமாதி என்ற வைசியன் ஞானம் பெற்று மோக்ஷமடைந்தான் என்றும் கூறி தேவீ மஹாத்மிய வரலாறு முடிவடைகின்றது.
துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதி - மசேஷஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதி - மதீவ சுபாம் ததாஸி
தாரித்ரிய - து:க்க - பயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபார - கரணாய ஸதார்த்ர – சித்தா
ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய்.
சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய். வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? ( வேறு ஒருவருமில்லை)
ஆத்ம ஸமர்ப்பணம்
ஓம்
ஸ்வருப - நிருபண - ஹேதவே
ஸ்ரீ குரவே நம:
ஆத்ம ஸமர்ப்பணம்
ஓம்
ஸ்வருப விளக்கத்திற்குக் காரணமாகிய
ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம்.
ஸர்வமங்கல - மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த - ஸாதிகே
சரண்யே த்ர்யம்பகே கௌரி
நாராயணி நமோஸ்து தே - தேவீ மஹாத்மியம்11.10
எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும் எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும் மூன்று கண்களை உடையவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்
அநாயாஸேந மரணம்
விநா தைந்யேந ஜீவநம்
தேஹிமே க்ருபயா ஸ்ம்போ
த்வயி பக்திமசஞ்சலாம் !!
(மஹா ப்ரபோ, உன்னிடத்தில் சதா சர்வகாலமும் நான் பக்தியுடன் இருக்க வேண்டும்; பக்தி குறையகூடாது; பிறரை அண்டி பிழைக்காமல் எனது ஜீவனம் நடைபெற வேண்டும்; இறுதியில் எனது மரணம் அநாயாஸமாக சம்பவிக்க அருள் புறிய வேண்டும்.
நிம்மதியாக வாழ
ௐ நமசிவாய நிம்மதியாக வாழ
சிவவழிபாடு உங்கள் நட்சத்திரப் பாடல்களுடன் கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.
நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி, சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
அசுவினி:
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.
பரணி:
கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே.
கார்த்திகை/கிருத்திகை:
செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே.
ரோகிணி:
எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.
மிருக சீரிடம்:
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
திருவாதிரை/ஆதிரை:
கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே.
புனர்பூசம்:
மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே.
பூசம்:
பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே.
ஆயில்யம்:
கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய
வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோன் என்று வாழ்த்துவனே
மகம்:
பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே.
பூரம்:
நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே.
உத்திரம்:
போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே.
அஸ்தம்:
வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே.
சித்திரை:
நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே.
சுவாதி:
காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்.
விசாகம்:
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.
அனுஷம்:
மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.
கேட்டை:
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.
மூலம்:
கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.
பூராடம்:
நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.
உத்திராடம்:
குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
திருவோணம்/ஓணம்:
வேதம் ஓதி வெண்நூல் பூண்ட
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே.
அவிட்டம் :
எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே.
சதயம் :
கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.
பூரட்டாதி:
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.
உத்திரட்டாதி:
நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே.
ரேவதி:
நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே.
ஒன்பதின் தத்துவம்
ஒன்பதின் தத்துவம் என்ன என்பதைத்
தெரிந்து கொள்ளுங்கள்....
பெண்களின் கர்ப்பம் பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில் தான்!
ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வட மொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.
நவ சக்திகள்:
1.வாமை
2.ஜேஷ்டை
3.ரவுத்ரி
4.காளி
5.கலவிகரணி
6.பலவிகரணி
7.பலப்பிரமதனி
8.சர்வபூததமனி
9.மனோன்மணி
நவ தீர்த்தங்கள்:
1.கங்கை
2.யமுனை
3.சரஸ்வதி
4.கோதாவரி
5.சரயு
6.நர்மதை,
7.காவிரி
8.பாலாறு
9.குமரி
நவ வீரர்கள்:
1.வீரவாகுதேவர்
2.வீரகேசரி
3.வீரமகேந்திரன்
4.வீரமகேசன்
5.வீரபுரந்திரன்
6.வீரராக்ஷசன்
7.வீரமார்த்தாண்டன்
8.வீரராந்தகன்
9.வீரதீரன்
நவ அபிஷேகங்கள்:
1.மஞ்சள்
2.பஞ்சாமிர்தம்
3.பால்
4.நெய்
5.தேன்
6.தயிர்
7.சர்க்கரை
8.சந்தனம்
9.விபூதி
நவ ரசம்:
1.இன்பம்
2.நகை
3.கருணை
4.கோபம்
5.வீரம்
6.பயம்
7.அருவருப்பு
8.அற்புதம்
9சாந்தம்
நவக்கிரகங்கள்:
1.சூரியன்
2.சந்திரன்
3.செவ்வாய்
4.புதன்
5.குரு
6.சுக்கிரன்
7.சனி
8.ராகு
9.கேது
நவமணிகள்:-நவரத்தினங்கள்:
1.கோமேதகம்
2.நீலம்
3.வைரம்
4.பவளம்
5.புஸ்பராகம்
6.மரகதம்
7.மாணிக்கம்
8.முத்து
9.வைடூரியம்
நவ திரவியங்கள்:
1.பிருதிவி
2.அப்பு
3.தேயு
4.வாயு
5.ஆகாயம்
6.காலம்
7.திக்கு
8.ஆன்மா
9.மனம்
நவலோகம் (தாது):
1.பொன்
2.வெள்ளி
3.செம்பு
4.பித்தளை
5.ஈயம்
6.வெண்கலம்
7.இரும்பு
8.தரா
9.துத்தநாகம்
நவ தானியங்கள்:
1.நெல்
2.கோதுமை
3.பாசிப்பயறு
4.துவரை
5.மொச்சை
6.எள்
7.கொள்ளு
8.உளுந்து
9.வேர்க்கடலை
சிவ விரதங்கள் ஒன்பது:
1.சோமவார விரதம்
2.திருவாதிரை விரதம்
3.உமாகேச்வர விரதம்
4.சிவராத்ரி விரதம்
5.பிரதோஷ விரதம்
6.கேதார விரதம்
7.ரிஷப விரதம்
8.கல்யாணசுந்தர விரதம்
9.சூல விரதம்
நவசந்தி தாளங்கள்:
1.அரிதாளம்
2.அருமதாளம்
3.சமதாளம்
4.சயதாளம்
5.சித்திரதாளம்
6.துருவதாளம்
7.நிவர்த்திதாளம்
8.படிமதாளம்
9.விடதாளம்
அடியார்களின் பண்புகள்:
1.எதிர் கொள்ளல்
2.பணிதல்
3.ஆசனம் (இருக்கை) தருதல்
4.கால் கழுவுதல்
5.அருச்சித்தல்
6.தூபம் இடல்
7.தீபம் சாட்டல்
8.புகழ்தல்
9.அமுது அளித்தல்
விக்ரமார்க்கனின் சபையிலிருந்த ஒன்பது புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்
1.நவரத்னங்கள் {முனிவர்கள்} தன்வந்த்ரி
2.க்ஷணபகர்
3.அமரஸிம்ஹர்
4.சங்கு
5.வேதாலபட்டர்
6.கடகர்ப்பரர்
7.காளிதாசர்
8.வராகமிஹிரர்
9.வரருசி
அடியார்களின் நவகுணங்கள்:
1.அன்பு
2.இனிமை
3.உண்மை
4.நன்மை
5.மென்மை
6.சிந்தனை
7.காலம்
8.சபை
9.மவுனம்
நவ நிதிகள்:
1.சங்கம்
2.பதுமம்
3.மகாபதுமம்
4.மகரம்
5.கச்சபம்
6.முகுந்தம்
7.குந்தம்
8.நீலம்
9.வரம்
நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1.சதுரம்
2.யோனி
3.அர்த்த சந்திரன்
4.திரிகோணம்
5.விருத்தம் {வட்டம்}
6.அறுகோணம்
7.பத்மம்,
8.எண்கோணம்
9.முக்கோணம்
பிரதான விருத்தம்.
1.நவவித பக்தி
2.சிரவணம்
3.கீர்த்தனம்
4.ஸ்மரணம்
5.பாத சேவனம்அர்ச்சனம்
6.வந்தனம்
7.தாஸ்யம்
8.சக்கியம்
9.ஆத்ம நிவேதனம்
நவ பிரம்மாக்கள் :
1.குமார பிரம்மன்
2.அர்க்க பிரம்மன்
3.வீர பிரம்மன்
4.பால பிரம்மன்
5.சுவர்க்க பிரம்மன்
6.கருட பிரம்மன்
7.விஸ்வ பிரம்மன்
8.பத்ம பிரம்மன்
9.தராக பிரம்மன்
நவக்கிரக தலங்கள் -
1.சூரியனார் கோயிவில்
2.திங்களூர்
3.வைத்தீஸ்வரன் கோவில்,
4.திருவெண்காடு
5.ஆலங்குடி
6.கஞ்சனூர்
7.திருநள்ளாறு
8.திருநாகேஸ்வரம்
9.கீழ்ப்பெரும்பள்ளம்
நவபாஷாணம் -
1.வீரம்
2.பூரம்
3.ரசம்
4.ஜாதிலிங்கம்
5.கண்டகம்
6.கவுரி பாஷாணம்
7.வெள்ளை பாஷாணம்
8.ம்ருதர்சிங்
9.சிலாஷத்
நவதுர்க்கா -
1.ஸித்திதத்ரி
2கஷ்முந்தா
3.பிரம்மாச்சாரினி
4.ஷைலபுத்ரி
5மகா கவுரி
6.சந்திரகாந்தா
7.ஸ்கந்தமாதா
8.மகிஷாசுரமர்த்தினி
9.காளராத்ரி
நவ சக்கரங்கள் -
1.த்ரைலோக்ய மோகன சக்கரம்
2.சர்வசாபுரக சக்கரம்
3.சர்வ சம்மோகன சக்கரம்
4.சர்வ சவுபாக்ய சக்கரம்
5.சர்வார்த்த சாதக சக்கரம்
6.சர்வ ரக்ஷாகர சக்கரம்
7.சர்வ ரோஹ ஹர சக்கரம்
8.சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்
9.சர்வனந்தமைய சக்கரம்
நவநாதர்கள் -
1.ஆதிநாதர்
2.உதய நாதர்
3.சத்ய நாதர்
4.சந்தோஷ நாதர்
5.ஆச்சாள் அசாம்பயநாதர்
6.கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்
7.சித்த சொவ்றங்கி
8.நாதர், மச்சேந்திர நாதர்
9.குரு கோரக்க நாதர்
உடலின் நவ துவாரங்கள் : இரண்டு கண்கள், இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள்
உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1.தோல்
2.ரத்தம்
3.மாமிசம்
4.மேதஸ்
5.எலும்பு
6.மஜ்ஜை
7.சுக்கிலம்
8.தேஜஸ்
9.ரோமம்
பதினெட்டு புராணங்கள், பதினெட்டு படிகள் என அனைத்தும்
ஒன்பதின் மூலமாக தான் உள்ளன.
காயத்ரி மந்திரத்தை நூத்தி எட்டு முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டது தான்!
பீஷ்மாச்சாரியர்
பீஷ்மாச்சாரியர்
இஷ்வாகுவின் மகன், மகாபிஷக் ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் நடத்தியவர். ஒரு முறை பிரம்மனின் சபையில் மகாபிஷக் மற்றும் பல ரிஷிகளும், தேவர்களும் இருந்தனர். அங்கே மகாபிஷக்கும் இருந்தார். கங்காதேவியும் அங்கே இருந்தாள். திடீரென வீசிய காற்றால் கங்காதேவியின் மேலாடை விலகிப் பறந்தது. மகாபிஷக் கங்காதேவியின் அழகில் மதிமயங்கி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். கங்காதேவியும் மகாபிஷக்கின் அழகில் மயங்கினாள். பிரம்ம சபையில் காம உணர்வுகளுக்கு இடமில்லை. காமவயப்பட்ட மகாபிஷக் கங்காதேவி ஆகிய இருவர் மீதும் பிரம்மா கோபம் கொண்டார். “அற்ப ஆயுள்கொண்ட மனிதர்களைப் போல காமவயப்பட்டீர்கள். எனவே நீங்கள் இருவரும் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறப்பீர்கள். பின்பு கணவன் மனைவியாக இணைந்து சுக துக்கங்களில் உழல்வீர்களாக. பூவுலகில் கங்காதேவி மகாபிஷக்கிற்கு விருப்பம் இல்லாததைச் செயல்களைச் செய்வாள்’” என்று சபித்தார். முற்பிறவியில் பிரம்மலோகத்தில் பிரம்மாவிடம் பெற்ற சாபத்தின் விளைவாக மகாபிஷக் பூவுலகில் சந்தனுவாகவும், கங்காதேவி மானுடப் பெண்ணாகவும் குரு தேசத்தில் பிறப்பெடுத்தனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. கங்காதேவி ஒவ்வொன்றாக அக்குழந்தைகளைக் கங்கை நீரில் மூழ்கடித்தாள். இதன் மூலம் ஏழு அஷ்ட வசுக்கள் சாபவிமோசனம் பெற்றனர். சந்தனு எதுவும் கேட்கக் கூடாது என்பது கங்காதேவி விதித்த நிபந்தனை. எட்டாவது அஷ்ட வசுவான பிரபாசன் குழந்தையாகப் பிறப்பெடுத்தான். அந்த எட்டாவது குழந்தையையும் இவள் மூழ்கடிக்க முயற்சிக்கையில் சந்தனு தடுத்துக் கேள்வி கேட்டான். அதனால் அக்குழந்தை உயிர் தப்பியது. இக்குழந்தைக்குத் தேவவிரதன் என்று பெயர் சூட்டினர்.
அதன் பின் ஒரு நாள் சந்தனு ராஜா ஒரு மீனவப் பெண் மீது மோகம் கொள்கிறார். அவளை மணக்க சம்மதம் கேட்கும்போது, அவளின் தந்தை மறுக்கிறார். தனது மகளுக்கு பிறக்கும் குழந்தைக்கு. அரசாளும் உரிமை வேண்டும் என நிபந்தனைவிதிக்கிறார். ஆனால் சந்தனுவால் அப்பெண்ணை மறக்க முடியவில்லை மோகத்தின் வயப்பட்டு உடல் மெலிகிறான். தேவவிரதனுக்கு செய்தி தெரிகிறது. உடனே அவர் தன் தந்தைக்காக மீனவனிடம் சென்று, "உன் மகளின் வயிற்று குழந்தைக்குத்தான் அடுத்த ராஜா பட்டம் "என்று சத்தியம் செய்கிறார். அந்த மீனவனோ,"சரி நீங்கள் விட்டு கொடுக்கின்றீர்கள் ,ஆனால் உங்களுக்கு திருமணம் ஆகி,உங்கள் குழந்தைகள் வந்த பின்,அவர்கள் பதவிக்கு போட்டி போடுவார்கள் அல்லவா "என்று பேராசையுடன் சொல்லுகிறான்.பீஷ்மர் அவ்வளவுதானே "நான் திருமணம் செய்தால் தானே குழந்தை பிறக்கும் ?நான் திருமணம் செய்ய மாட்டேன் என்று சபதம் செய்கிறார், மேலும் ,"இந்த பெண் வயிற்று குழந்தைகளின் அரசுக்கு நான் காவலாக இருப்பேன் "" என்று வாக்குறுதி தருகிறார் . அந்த சமயத்தில் வானத்தில் இருந்து ''பீஷ்ம பீஷ்ம "என்று இவரை வாழ்த்தி அசரீரி ஒலிக்கிறது. பீஷ்ம என்றால் செயற்கரிய செயலை செய்தவர் என்று பொருள். அன்று முதல் அவர், பீஷ்மர் என அழைக்கப்பட்டார். அப்போது மனம் மகிழ்ந்த சந்தனு? "பீஷ்மா,யாரும் செய்ய முடியாத தியாகத்தை செய்து விட்டாய், மகனே, நான் உனக்கு நீ விரும்பும் போதுதான் மரணம் உனக்கு நேரும் என்ற வரம் அளிக்கிறார்.
சகுனியின் சூழ்ச்சியாலும், துரியோதனின் பிடிவாதத்தாலும், குருக்ஷேத்திரப் போர் மூண்டது. போரில், சிகண்டி தன் எதிரில் போர் புரிய வந்தபோது, பெண்ணிற்கு எதிராக போர் புரிய மாட்டேன் என பீஷ்மர், ஆயுதங்களை கைவிட்டு நிற்கையில், அர்ச்சுனன் தனது அம்புகளால் பீஷ்மரை வீழ்த்தினான். பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.
அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற தர்ம புத்திரர் விரும்பினார். தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிதாமகரிடம் சென்றார் . பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "பிதாமகரே!தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க, திரௌபதி மட்டும் பலமாக வாய்விட்டுச் சிரித்தாள். அதில் கேலியின் தன்மையை உணர்ந்த தர்மர், " தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்?இது தகாத செயல்" என்று கேட்டார்.
"அன்று துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது, ஸ்ரீ கிருஷ்ணன் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? அன்று, இதே பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர, துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது?" என்று சொல்ல, பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியானார்கள்.
பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார்.
"திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது. அவளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும், உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும். துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான். ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல, சுயநலத்துக்காக. "ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன்" .
ஆனால் இப்போது அர்ச்சுனன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன. இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது.எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன்." என்று சொல்லி, பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார். தன் தந்தையிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல் இருந்தார்.பீஷ்மர் கடவுளின் ஆயிரம் நாமங்களை (விஷ்ணு சஹஸ்வர நாமம்) ஜபிக்கத் தொடங்கினார்,அவர் அவற்றைச் சொல்லச் சொல்ல சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்தது.
போர் முடிந்த பௌர்ணமியிலிருந்து எட்டாம் நாள் பீஷ்மர் உயிர் துறந்தார்.