செவ்வாய், 3 செப்டம்பர், 2019

நக்ஷத்திரங்கள் 27 -க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

01: அஸ்வினி / அஸ்வினீ   

02: பரனி / அபபரனி

03: கார்த்திகை / க்ருத்திகா

04: ரோகினி / ரோஹினி

05: மிருகசீர்ஷம் / ம்ருகசீர்ஷ

06: திருவாதிரை / ஆர்த்ரா

07: புனர்பூசம் / புனர்வஸு

08: பூசம் / பூஷ்ய

09: ஆயில்யம் / ஆஸ்லேஷா

10: மகம் / மக

11: பூரம் / பூர்வ பல்குனி

12: உத்திரம் / உத்திர பல்குனி

13: அஸ்தம் / ஹஸ்த

14: சித்திரை / சித்ரா

15: சுவாதி / ஸ்வாதி

16: விசாகம் / விசாகா

17: அனுஷம் / அனூராதா

18: கேட்டை / ஜ்யேஷ்டா

19: மூலம் / மூல

20: பூராடம் / பூர்வாஷாடா

21: உத்திராடம் / உத்தராஷாடா

22: திருவோணம் / ச்'ரவண

23: அவிட்டம் / ஸ்ரவிஷ்டா

24: சதயம் / ச'தபிஷக்

25: பூரட்டாதி / பூர்வ ப்ரோஷ்டபதா

26: உத்திரட்டாதி / உத்திர ப்ரோஷ்டபதா

27: ரேவதி / ரேவதீ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 25 ॐ

சரித்திர பூர்வமாக இந்தக் கோவில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாய்த் தெரிகிறது. திருச்சித்திரக் கூடம் என வைஷ்ணவர்களால் அழைக்கப்படும் இது முதலில் தீட்சிதர்களால் தான் வழிபாடு செய்யப் பட்டு வந்துள்ளது. திருமங்கை ஆழ்வாராலும், குலசேகர ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப் பட்ட இந்தக் கோயில் அவர்களால் பாடப்பட்ட திருமொழியிலும் தீட்சிதர்கள் வழிபாடு செய்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. குலசேகர ஆழ்வார் ராமபக்தியில் சிறந்தவர் ராமரைத் தொழுது வருவதே பிறவிப் பெரும் பயன் என நினைத்தவர். இந்தக் கோயில் கோவிந்தராஜப் பெருமாள் ராமர் தான் என மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்திருக்கிறார். அந்த ஸ்ரீ ராமன் தான் கோவிந்தராஜராக வந்திருப்பதாய் மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்துள்ளார். என்றாலும் சிதம்பரம் தீட்சிதர்களைப் பொறுத்தவரை நடராஜருக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துப் பெருமாளை அவரின் பரிவார தேவதைகளில் ஒருவராகவே நினைத்து ஆராதித்து வந்திருக்கிறார்கள். காஞ்சியில் உள்ள  ஏகாம்பரநாதருக்கு விஷ்ணு பரிவார தேவதை என அங்கே உள்ள ஆதிசைவ குருக்கள் வைத்து வழிபாடு செய்வதைப் போல  சிதம்பரத்திலும் நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண வந்த பரிவார தேவதைகளில் ஒருவராகவே விஷ்ணுவை வழிபாடு செய்தனர். கிட்டத் தட்ட பத்தாம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது.

கோவிலின் நிர்வாகஸ்தர்களுக்குள் சிவன் கோவிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள் விஷ்ணு கோவிலைப் புறக்கணிப்பதாயும் வழிபாடு சரிவர நடைபெறவில்லை எனவும் குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட்ட காலத்தில் அச்சுத ராயன் என்பவன் காலத்தில் விஷ்ணு கோவில் புதுப்பிக்கப் பட்டும் வைஷ்ணவர்களின் ஆதிக்கத்தில் ஒப்படைக்கப்பட்டது. அத்தோடு நில்லாமல் "வைகானச சூத்ரம்" முறையில் வழிபாடுகள் நடத்தவும் ஆணை இட்டதாய்த் தெரிகிறது. இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்களாய்த் த்வஜஸ்தம்ப மண்டபத்தின் கிழக்கே இருப்பதாயும் சொல்கிறார்கள். அதை பற்றி நான் அடுத்த முறை செல்லும் போது பார்க்க வேண்டும் என்று இருக்கிறேன். இது இவ்வாறிருக்க நாயன்மார்களில் முக்கியமான நால்வர்களின், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியவர்களில் முதல் மூவரின் பாடல்களில் சிதம்பரம் விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப் படவில்லை எனவும் மாணிக்கவாசகரின் பாடல்களிலேயே விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதாயும் சொல்கின்றனர். மாணிக்கவாசகரின் திருச்சிற்றம் பலக்கோவையில் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாயும் சொல்கின்றனர். இங்கே எனக்கு திருக்கோவையார் கிடைக்கவில்லை. கூகிளில் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் போடுகிறேன். சிதம்பர தீட்சிதர்களுக்கு எவருக்கேனும் விவரம் தெரிந்தால் அடியேனுக்கு தெரியப்படுத்தவும்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி
அஷ்டோத்தர சத நாமாவளி:

1. ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிச்வராய நம:
2. ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
3. ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
4. காஷாய தண்ட தாரிணே நம:
5. ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
6. ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
7. ஓம் கருணாஸாகராய நம:
8. ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
9. ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
10. ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
11. ஓம் தர்ம பரிபாலகாய நம:
12. ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
13. ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
14. ஓம் ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபகாய நம:
15. ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
16. ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
17. ஓம் காஞ்சி க்ஷேத்ர வாஸாய நம:
18. ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
19. ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
20. ஓம் சாதுர் வர்ண்ய நம:
21. ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
22. ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
23. ஓம் ஸர்வ பாப ஹராய நம:
24. ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
25. ஓம் பக்தார்ப்பித தன ஸ்வீகர்த்ரே நம:
26. ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
27. ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
28. ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
29. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
30. ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
31. ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
32. ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
33. ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
34. ஓம் ஸர்வக்ஞாய நம:
35. ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
36. ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
37. ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
38. ஓம் அபய ஹஸ்தாய நம:
39. ஓம் பயாபஹாய நம:
40. ஓம் யக்ஞ புருஷாய நம:
41. ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
42. ஓம் யக்ஞ ஸம்பனாய நம:
43. ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
44. ஓம் யக்ஞ பலதாய நம:
45. ஓம் யக்ஞ ப்ரியாய நம:
46. ஓம் உபமான ரஹிதாய நம:
47. ஓம் ஸ்படிக துள்ஸீருத்ராக்ஷஹார தாரிணே நம:
48. ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
49. ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய
நம:
50. ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
51. ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸுஷுப்த் யவஸ்தாதீதாய நம:
52. ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
53. ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
54. ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
55. ஓம் குருபாதுக பூஜா துரந்தராய நம:
56. ஓம் கனகாபிக்ஷிக்தாய நம:
57. ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
58. ஓம் ஸர்வஜீவ மோக்ஷதாய நம:
59. ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
60. ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
61. ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
62. ஓம் கான ரஸஞ்ஞாய நம:
63. ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
64. ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
65. ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
66. ஓம் அநேகபாஷா ஸ்ம்பாஷண கோவிதாய நம:
67. ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
68. ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
69. ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
70. ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய
71. ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
72. ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
73. ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
74. ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
75. ஓம் ச்ரவணான்ந்தகர கீர்த்தயே நம:
76. ஓம் தர்சனான்ந்தாய நம:
77. ஓம் அத்வைதான்ந்த பரிதாய நம:
78. ஓம் அவ்யாஜ கருணாமூர்த்தயே நம:
79. ஓம் சைவ்வைஷ்ணவாதி மான்யாய நம:
80. ஓம் சங்க ராசார்யாய நம:
81. ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
82. ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
83. ஓம் ராமகதா ரஸிகாய நம:
84. ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ்
ப்ரவர்த்தகாய நம:
85. ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
86. ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
87. ஓம் கேதாரேச்வர நாதாய நம:
88. ஓம் அவித்யா நாசகாய நம:
89. ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:
90. ஓம் லகுபக்திமார்க்கோபதேசகாய நம:
91. ஓம் லிங்கஸ்வரூபாய நம:
92. ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
93. ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
94. ஓம் ஜிதேந்த்ரியாய நம:
95. ஓம் சரணாகத வத்ஸலாய நம:
96. ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
97. ஓம் டம்ருகநாத விநோதாய நம:
98. ஓம் வ்ருஷபாருடாய நம:
99. ஓம் துர்மதநாசகாய நம:
100. ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
101. ஓம் மிதாஹாராய நம:
102. ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:
103. ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
104. ஓம் தாஸாநுக்ஹ க்ருதே நம:
105. ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
106. ஓம் ஸர்வலோக க்யா தசீலாய நம:
107. ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷட்பதாய நம:
108. ஓம் ஸ்ரீத்ரிபுரசுந்தரி ஸ்மேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வர
பூஜாப்ரியாய நம:

மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவாளி ஸம்பூர்ணம்.
""பிட்சை!""

சன்னியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிட்சை எடுத்து உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள். மானம், அவமானம் இவற்றைக் கடந்து எந்தவித விருப்பு, வெறுப்பும் இல்லாமல் பிட்சை எடுக்க வேண்டும். பிட்சை போட்டாலும், போடாவிட்டாலும், அது ருசித்தாலும், ருசிக்காவிட்டாலும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருவதற்காகவே பிட்சை உள்ளது. பிட்சை போடாத மனிதர்களை வெறுப்பது கூடாது. அவர்களையும் சமமாக நினைக்க வேண்டும். உண்மையான ஞானிக்கு சாப்பிடாமல் கூட இருக்க முடியும். அவர்களுக்கு பசி கிடையாது.
"ஞானிகளுக்கு நாம் உணவு அளிக்கும் பொழுது நம்முடைய பாவத்தை போடுகிறோம். ஞானிகள் தங்களுடைய புண்ணிய பலத்தை நமக்குத் தருகிறார்கள். எவ்வளவு உயர்ந்த தத்துவம் !"

ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் ஒரு வாரம் முழுவதும் பிட்சைக்குப் போகாமல் மவுன விரதமிருந்தார். சீடர்கள் தாங்கள் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ என வருந்தி பெரியவரிடம் கேட்டனர். உங்கள் யாரிடமும் எனக்குக் கோபமோ, வருத்தமோ இல்லை. ."போன முறை பிட்சைக்குச் சென்ற பொழுது ஓர் அகத்தில் இட்ட கீரை மிகவும் சுவையாக இருந்தது. மறுநாளும் அதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் விரும்ப ஆரம்பித்தது. சுவையில் நாட்டம் சென்றதும் மனதைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருக்கத் தீர்மானித்தேன்." ஆதலால்தான் பிட்சைக்குப் போகவில்லை.  இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை. நீங்கள் யாரும் வருந்த வேண்டாம்! என்றாராம். எப்பேர்ப்பட்ட மகான் ! இது ஞானிகளின் மனப்பக்குவத்திற்கு உதாரணம்.

"ஆதிசங்கரர் பிட்சை கேட்ட சமயம் ஓர் ஏழைப் பெண்மணி தனக்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை (வேறு உணவு எதுவுமே இல்லாததால்) பிட்சை இட்டதால் அவர் வீட்டில் மகாலட்சுமி பொற்காசுகளை மழையாகப் பெய்வித்தாள் என்பது வரலாறு."

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
ஷாடச கணபதி தியானம் 
(எல்லா காரியங்களிலும் ஜெயம் கிடைக்க)

ப்ரதமம் பாலவிக்நேசம் த்விதீயம் தருணம் பவேத்
த்ருதீயம் பக்திவிக்நேசம் சதுர்த்தம் வீரவிக்நகம்

பஞ்சமம் சக்திவிக்நேசம் ஷஷ்டம் த்விஜகணாதிபம்
ஸப்தமம் பிங்களம் தேவம் அஷ்டமோச்சிஷ்ட்ட நாயகம்

நவமம் விக்னராஜம் ச தசமம் க்ஷிப்ரதாயகம்
ஏகாதசந்து ஹேரம்பம் துவாதசம் லக்ஷ்மீநாயகம்

த்ரயோதசம் மகாவிக்நம் புவநேசம் சதுர்த்தசம்
பஞ்சதசந்து ந்ருத்தாக்யம் ÷ஷாடசோர்த்வ கணாதிபம்

கணேசேஷாடசம் நித்யம் யஸ்ஸ்மரேத்ஸுஸமாஹித:
ஸர்வத்ர ஜயமாப்னோதி ச்ரியம் ச்ரேயச்ச விந்ததே
அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில்

மூலவர் : வடக்குநாதர்
பழமை : எத்தனை ஆண்களுக்கு முன் என்பது தெரியவில்லை
புராண பெயர் : வடக்குநாதர்
ஊர் : திருச்சூர்
மாவட்டம் : திருச்சூர்
மாநிலம் : கேரளா

விழா : திருச்சூரில் பூரம் திருவிழா மிகவும் சிறப்பு. ஆனால், அத்திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா என்கிறார்கள். சிவராத்திரி காலங்களில் கோயிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

ஸ்தல சிறப்பு : இத்தலத்தில் உள்ள லிங்கம் முழுவதும் வேண்ணையால் ஆனது. அமர்நாத் லிங்கத்தை "பனிலிங்கம்' என அழைப்பதைப்போல் இத்தலத்து சிவனை "வேண்ணை லிங்கம்' என அழைக்கிறார்கள்.

திறக்கும் நேரம் : காலை 4 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு வடக்கு நாதர் திருக்கோயில், திருச்சூர்-680 001, கேரளா. போன் : +91- 487-242 6040.

தகவல் தரிசிக்கும் முறை : ஸ்ரீ மூலஸ்தானம் என்ற மரம் திருக்கோயிலின் முகப்பில் உள்ளது. அதனை ஏழு முறை பிரதட்சணம் செய்து திருக்கோயில் நுழைவு வாயிலில் கால் அலம்பி திருக்கோயிலில் நுழைந்தவுடன் இடது புறத்தில் உள்ள வில்குழி தீர்த்தத்தில் முகம் அலம்ப வேண்டும். அதன் பின் அங்குள்ள கோசல கிருஷ்ணனை தரிசிக்கவும். வடக்கே உள்ள சிவபகவானை வேண்டவும். அதன் பின் விருஷப சுவாமி சன்னிதானத்தை அடைந்து அங்கு உறங்கி கொண்டிருக்கும் அவரை மூன்று முறை கை தட்டி தரிசிக்க வேண்டும். பின்னர் முதல் முண்டம் பிரதியையும் பின்னர் மூலவரான வடக்கு நாதரை தரிசிக்கவும். அதன் பின் முறையே கணேசன், ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி, ஸ்ரீ ராமசுவாமி (மூன்று தடவைகள்) பரசுராமர் மற்றும் சிம்ஹோதாரா (சிவனின் பூத கணம்) தரிசிக்கவும், திருக்கோயிலின் வடக்கு கோடியில் உள்ள பீடத்திலிருந்து நின்றபடியே ஈஸ்வரன் பாரமேக்காவு, அய்யப்பன், நாகராஜர், ஆகியவர்களின் திசை நோக்கி தரிசிக்கவும், திருக்கோயில் முன்வரும் வழியில் சங்கு சக்கர சங்கராச்சாரியார் சமாதியை அடைந்து வழிபடலாம். கடைசியாக சங்கரர் கோயிலை அடைந்து தரிசித்தவுடன் முன் வாசலை அடைந்து இரு கால் பாதங்களை திருக்கோயிலின் சுவர் மீது மூன்று முறை தட்டி அப்பனே வடக்கு நாதரே இக்கோயிலிலிருந்து நான் ஒன்றும் எடுத்து செல்லவில்லை. என்று கூறி வடக்கு நாதரின் அருளோடு மட்டும் திருப்பதியுடன் வெளிவர வேண்டும்.

இந்த கோயில் "பெருந்தச்சன்' என்பவரது காலத்தில் நிர்மாணம் செய்யப்பட்டது. அவரது காலத்திற்கு பின் நம்பூதிரிகள் பொறுப்பேற்று, தங்களில் ஒருவரை தலைவராக (யோகதிரிப்பாடு) நியமித்து கோயிலை நிர்வகித்து வந்தார்கள். ஆனால் கொல்லம் ஆண்டு 981 ற்கு பின் கொச்சி ராஜா சக்தன் தம்புரான் காலத்தில் இந்த நடைமுறையை மாற்றி கோயிலை பொதுமக்களே நிர்வகிக்க ஏற்பாடு செய்தார். இவரது காலத்தில் கோயிலை சுற்றி தேக்கு மரக்காடு இருந்தது. இதை அழிப்பதற்கு ராஜா காலத்தில் முடிவெடுத்தனர். மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மரங்கள் சிவனின் ஜடாமுடியாக இருக்க வேண்டும். இதை அழிக்கக்கூடாது என்றனர்.

அந்த சமயத்தில் கோயிலில் 41 நாள் திருவிழா நடந்தது. மக்களின் எதிர்ப்பை மீறீ காடு அழிக்கப்பட்டது. அதன் பிறகு இன்று வரை அக்கோயிலில் திருவிழா நடக்கவே இல்லை. சிவனின் ஜடாமுடியான மரங்கள் அழிக்கப்பட்டதால் தான் இந்நிலை ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் சிவசன்னதிக்கு பின்புறம் பார்வதி தேவியின் கருவறை அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவன், பார்வதியை பரசுராமரும், தெற்குப்பகுதியில் உள்ள ராமர், சங்கரநாராயணன், கணபதியை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எப்போது பூஜை நடந்தாலும் இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறது.

ஈரேழு பதினான்கு லோகத்தின் அதிபதி என்பதால் வடக்குநாதரிடம் எது வேண்டினாலும் நடக்கிறது. இந்த லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்ட வேண்ணை வாங்கி சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட நோய், மலட்டுத்தன்மை நீங்கும் என்பதும், ஞாபகசக்தி அதிகரிக்கிறது. மூலவருக்கு இரவு 8.00 மணிக்கு நடைபெறும் திருப்புகா பூஜை தொடர்ந்து 41 நாட்கள் பார்த்தால் தாம் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை.

ஸ்தல பெருமை : லிங்கத்தின் அமைப்பு: 12 அடி உயரம், 25 அடி அகலம் உள்ள மிகப்பழமையான இந்த வேண்ணை எப்போதும் உருகாமல், பாறை போல் இறுகி உள்ளது. எப்போதாவது வேண்ணை வெளிப்பட்டால், உடனே உருகி காணாமல் போய்விடுகிறது. மூலவருக்கு வேண்ணையால்  அபிஷேகம் செய்து வருகின்றனர். வேண்ணை கட்டியாக உறைந்து வரும். கோடையின் வெப்பமோ, திடங்களின் ஆரத்தி வெப்பமோ, சூடோ இந்த வேண்ணை உருகி விழச்செய்யாது. பூச்சிகள் மூலவரை தாக்காது. மூலவர் மீது உள்ள வேண்ணை மனம் கிடையாது. வேண்ணை லிங்கத்திற்கு வேண்ணையால் அபிஷேகம் மற்றும் பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்த லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.

விலகிய நந்தி : இங்குள்ள நந்தி சிவனின் எதிர் புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் உள்ளார். பிரதோஷ காலங்களில் சிவன் இங்கு எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கோயிலின் சிறப்பம்சம். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார். மற்றவர்கள் தொட அனுமதியில்லை வடக்குநாதரை தரிசித்தால் காசிக்கு சென்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம். இத்தலத்தில் உள்ள வியாசமலையில் முதன் முதலாக தரிசிக்க வரும் பக்தர்கள் ஹரி ஸ்ரீகணபதியே நமஹ என்று தனது கைகளால் கற்சிலை வியாசமலை மீது எழுத வேண்டும். (பேனா பென்சிலால் அல்ல). அடுத்த முறை இத்தலம் வரும் போது எழுதிய அந்த பக்தர் படிப்பில் உயர்வுடன் இருப்பார் என்பது ஐதீகம். தற்போது ஏராளமான இளம் பக்தர்கள் பக்தைகள் எழுதி வருகின்றனர். உலகம் உய்ய அவதரித்த மஹான் ஆதி சங்கரர் அவருடைய தந்தையார் சிவகுருவும், தாயார் ஆர்யாம்பாளும், இத்தலத்தில் வடக்கு நாதரை வேண்டி கொண்டதன் பலனாகத்தான் ஆதிசங்கர் அவதரித்தார்.
இத்திருக்கோயிலின் முன்புறம் உள்ள தெக்கின்காடு மைதானத்தில் நெற்றி பட்டத்துடன் அலங்கரிக்கப்பட்ட, பயிற்சியளிக்கப்பட்ட 150 யானைகள் அணிவகுப்பு பிரதி மார்ச் மாதமும் நடைபெறும். இந்தியாவின் மாபெரும் விழா ஆடிப்பூரம் என்பர்.

ஸ்தல வரலாறு : ஒருமுறை சிவனுக்கும் அர்ஜீனனுக்கும் நடந்த போரில் சிவனது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதற்காக தன் வந்திரி பகவான் வேண்ணை தடவி சிகிச்சை செய்தார். இதனால் இங்கு வேண்ணையால்  செய்யப்பட்ட லிங்கம் இருப்பது விசேஷமானது. அமர்நாத்தில் பனிலிங்கம் போல், திருச்சூரில் வேண்ணையால்  லிங்கமாக இருப்பது ஆச்சரியமான விஷயம். இதை "தென் கைலாயம்' என்கிறார்கள். பரசுராமர் பிரதிஷ்டை செய்த இத்தலம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. கேரளாவில் உள்ள மேற்கு பார்த்த சிவாலயம் இது.

திங்கள், 2 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 24 ॐ

இந்திரன் ஒருமுறை மிகவும் கொடுமை நிறைந்த ஒரு ராட்சசனை வதம் செய்ய முடியாமல் மகா விஷ்ணுவின் உதவியை நாடினார். மகாவிஷ்ணு அவனைச் சிதம்பரம் கோயிலுக்குப் போய் அங்கே ஆனந்த தாண்டவத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நடராஜரை ஆராதனை செய்து விட்டு அவர் உதவியை நாடும் படி சொல்ல அவன் தான் தனியாகப் போகாமல் மகா விஷ்ணுவையும் கூட வரும் படி வேண்டினான். அவ்வாறே சிதம்பரம் வந்த விஷ்ணு அவனுடைய ஆராதனைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு அல்லாமல் சிவனிடமும் இந்திரனுக்கு உதவும்படிக் கேட்டுக் கொள்ள அவரும் இந்திரனின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்து அவனுக்கு அந்த ராட்சசனைக் கொல்ல சக்தி கொடுத்து அருளுகிறார். அப்போதில் இருந்தே மகா விஷ்ணு சிதம்பரத்தில் தங்கி விட்டதாய் ஒரு புராணம் சொல்லுகிறது. இதற்கு உதாரணமாகத் தற்சமயம் கீழரதவீதியில் கிழக்குச் சன்னதிக்கு எதிரில் இருக்கும் "இந்திர புவனேஸ்வரர்" என்னும் லிங்கம் இருப்பதாயும் இந்த லிங்கத்தை இந்திரன் வழிபாட்டை ஆரம்பிக்கும் போது ஸ்தாபிக்கப் பட்டதாய்ச் சொல்கிறார்கள். (அடியேன் இன்னும் அந்த லிங்கத்தை பார்க்கவில்லை!)

மற்றொரு கதை : ஒரு சமயம் மகா விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம் திடீரென அவரின் உடல் எடை அதிகம் ஆகி ஆதிசேஷன் திணற ஆரம்பித்தான். ஸ்ரீ எனப்படும் மகா லட்சுமியும், விஷ்ணுவின் வாகனம் ஆன கருடனும் இந்த எடை அதிகரிப்பை உணர்ந்தனர். மகா விஷ்ணுவின் உடலில் வியர்வையும் அதிகம் ஆனது. வியந்த அவர்கள் பகவானிடம் காரணம் கேட்க அவர் சொல்கிறார் தாருகாவனத்தில் ரிஷிகளின் கர்வத்தை அடக்கத் தான் மோகினி அவதாரம் எடுத்ததையும் சிவன் பிட்சாடனராக மாறியதையும் இருவரும் ஆடிய நடனத்தையும் தான் நினைவு கூர்ந்ததாய்ச் சொல்கிறார். உடனேயே மகா லட்சுமியும், கருடனும் தாங்களும் அந்த அற்புத நடனத்தைப் பார்க்கவேண்டும் எனச் சொல்லவே விஷ்ணு தன் பரிவாரங்களுடன் வியாக்ரபுரம் என்று  அழைக்கப்பட்ட சிதம்பரம் வந்தடைகிறார்கள். அங்கே அவர் சிவனிடம் தன் வேண்டுகோளை வைக்க சிவன் அவரை முதலில் காஞ்சி சென்று அங்கே ஏகாம்பரநாதர் கோவிலில் ஒரு லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து பூஜித்து விட்டு வரும் படி சொல்கிறார். அவ்விதமே விஷ்ணுவும் காஞ்சி சென்று ஏகாம்பரநாதர் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஸ்தாபிதம் செய்து விட்டுத் திரும்புகிறார். சிவனுடன் தன்னுடைய ஆட்டத்தை ஆடி விட்டு இங்கேயே கோயில் கொள்ளுகிறார் விஷ்ணு. விஷ்ணு இங்கே கோயில் கொண்டதின் நோக்கம் சிவனின் தாண்டவத்தை எந்நாளும் தரிசிப்பதோடு அல்லாமல் சபாநாயகன் ஆன அவனுக்குத் துணையாக இருக்கவும் காவலுக்கும் தான் என்றும் தோன்றுகிறது. எவ்வாறிருப்பினும் பல்லவர்கள் காலத்தில் இருந்து இந்த கோவிந்தராஜர் தில்லையில் கோயில் கொண்டதற்குச் சரித்திரச் சான்றுகள் இருப்பதாய்க் கூறுகின்றனர். அதுபற்றிப்பாப்போம் நாளை பார்ப்போம்.

ॐ மீண்டும்நாளை சந்திக்கலாம் ॐ

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

துர்க்கையின் சிங்கம்!

சிங்கத்தின்மீது பவனி வருபவள் துர்க்கை. பேராசையின் சின்னமும்கூட. உண்டு களித்து ஐம்புலன் இன்பநுகர்ச்சியிலேயே அமிழ்ந்து கொண்டிருப்பவர்கள் சிங்கத்தின் மிருகவெறிக்கு ஆளானவர்கள். மனிதன் தேவனாக வேண்டுமென்றால் மிருக இச்சைகளை முழுவதுமாக அடக்கி ஒடுக்க வேண்டும். துர்க்கையின் சிம்மவாகினி கோலம் இதையே உணர்த்துகிறது
அருள் மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்

மூலவர் லட்சுமி நரசிம்மர்
உற்சவர் பிரகலாத வரதன்
தாயார் : அமிர்தவல்லி
தல விருட்சம் : நெல்லி
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
ஆகமம் பூஜை : பாஞ்சராத்திரம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தெட்சிண அகோபிலம்
ஊர் : பூவரசன்குப்பம்
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு

விழா : மாத சுவாதி நட்சத்திரம், சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தி, தமிழ் வருடப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, , புரட்டாசி சனிக்கிழமை, வைகாசி விசாகம் கருட சேவை, தைமாதம் 5ம் தேதி தீர்த்தவாரி.
   
தல சிறப்பு : பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள் பாலிப்பது சிறப்பு.
   
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் தேவஸ்தானம், பூவரசன்குப்பம் - 605 105. மோட்ச குளம் வழி, விழுப்புரம் மாவட்டம்,போன்:+91-413 269 8191, 94439 59995

தகவல் : கி.பி. மூன்றாம் நூற்றாண்டில், நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியதால் ஒரு தூணையே நரசிம்மராக வழிபாடு செய்து வந்துள்ளார்கள். அதன் பின் பல்லவர்கள் நரசிம்மருக்கு கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்தனர். இக்கோயிலில் தாயார், ஆண்டாள் சன்னதிகள் தனியாக அமைந்துள்ளன. இங்குள்ள அமிர்தவல்லி தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். அதனால் தான் "அமிர்தபலவல்லி' என அழைக்கப்படுகிறாள்.

பெருமை : தென் அகோபிலம்: நரசிம்மர் இரணியனை அழித்து பிரகலா தனுக்கு காட்சி கொடுத்த தலம் ஆந்திராவில் "அகோபிலம்' என் றும், முனிவர்களுக்கு காட்சி கொடுத்த தலம் பூவரசன் குப்பம் என்றும் கூறுவர். எனவே இத்தலம் "தென் அகோபிலம்' எனவும் அழைக்கப்படுகிறது.முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார். உடனே  நரசிம்மர், ""நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்' என்றார். அதற்கு லட்சுமி,"" ""கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக்கூடாது. எனவே தான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்' என்றார். அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள்.

சிறப்பம்சம் : நரசிம்மர் தன் மடியில் அமிர்தவல்லி தாயாரை  அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, வலது கரத்தால் அபயம் அளித்து, சிரித்த முகத்துடன், சீரிய சிங்கனாக, 12 திருக்கரங்களுடன் விளங்குகிறார். பொதுவாக  நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதற்கிணங்க பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது.

ஸ்தல வரலாறு : பகவான் நரசிம்மர் அகோபிலத்தில் இரண்யனை அழித்த பிறகு உக்கிரம் தணியாமல் அலைந்தார். இரணியனின் கொடுமைக்கு பயந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்து தவமிருந்த முனிவர்கள் நரசிம்மரின் தரிசனம் கிடைக்க வேண்டினர். அப்படி காட்சியளித்த தலங்கள் தமிழகத்தில் எட்டு உள்ளது. இத்தலத்தின் கிழக்கே சிங்கரி கோயில், மேற்கே அந்திலி, பரிக்கல், வடக்கே சோளிங்கர், சிங்க பெருமாள் கோயில், தெற்கே நாமக்கல், சிந்தலவாடி ஆகியன அமைந்துள்ளன. சோளிங்கரிலும் அந்திலியிலும் யோக நரசிம்மராகவும், சிங்கிரியில் உக்கிர நரசிம்மராகவும், பூவரசன் குப்பத்தில் லட்சுமி நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார் நரசிம்மர்.
பெயருடன் திரு.. திருமதி சேர்ப்பது ஏன்?

பெரியவர்களின் பெயருடன் திரு திருமதி என்றோ அல்லது ஸ்ரீ ஸ்ரீமதி என்று சேர்த்து சொல்வர். இதற்கான காரணம் தெரிந்தால் அதன் அருமை புரியும்.செல்வத்திற்கு அதிபதி திருமகளாகிய லட்சுமி.இவளை ஸ்ரீதேவி என்றும் குறிப்பிடுவர்.நாராயணரின் மார்பில் லட்சுமி நித்ய வாசம் செய்வதால் அவருக்கு  ஸ்ரீநிவாசன் என்று பெயர்.மாலவனோடு லட்சுமி இணை பிரியாமல் எப்போதும் இருக்கிறாள் என்பதால் திரு..மால் என்று  பெயர்.பெரியவர்களைக் குறிப்பிடும் போது மரியாதை கருதி மட்டும் திரு சேர்ப்பதில்லை.திருமகளின் அருளும் பொருளும் அவர்களைச் சேர  வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த அடைமொழியைச் சேர்க்கிறோம்.
எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்...!

மனதில் எழும் எண்ணங்களை வடிகட்டி நல்லதை திரும்பத் திரும்ப எண்ணுவதும் தேவையற்ற தீய எண்ணத்தை விட்டுவிடவும் தீர்மானிப்பதே எண்ணம் ஆராய்தலாகும்.மனிதன் உணர்ச்சி வசப்பட்டவனாக இருப்பது கூடாது. அந்நிலையில் நம் தவறை திருத்திக் கொள்ள முடியாது. அறிவு நிலையில் மனதை வைத்துக் கொள்ள பழக வேண்டும்.வாழ்வில் திடீரென எந்த புதிய மாற்றத்தையோ சாதனையோ செய்து விட முடியாது. படிப்படியாகத் திட்டமிட்டால் நல்ல மாற்றங்களை வரவழைத்துக் கொள்ள முடியும்.நற்பண்பு என்பது நல்ல சிந்தனையோடு ஒன்றிய செயல் நற்செயலோடு ஒன்றிய சிந்தனையாக வாழ்வதே.மனத்தூய்மை ஒழுங்கான உணவு அளவான உழைப்பு முறையான ஓய்வு இவற்றுடன் கூடிய வாழ்க்கை நோயற்ற வாழ்விற்கு துணை புரியும் காரணிகள்.வாழ்வின் நோக்கம் அதற்குரிய வாழ்க்கை முறை இரண்டையும் அறிந்தவனே இன்பமாக வாழ முடியும்.தெளிந்த திறனும் ஆற்றலும் படைத்த நல்ல எண்ணத்திற்கு இயற்கையே கட்டுப்பட்டு ஒத்துழைக்கிறது. மனதை அடக்க நினைத்தால் அலையத் தொடங்கும். அறிய நினைத்தால் அடங்கி விடும். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனதில் தான் இருக்கிறது. மனதை உயர்த்திக் கொண்டால் மாண்பு மிக்க இன்ப வாழ்வு பெற்று மகிழலாம்.நல்ல எண்ணத்தை விருப்பத்துடன் மனதில் இயங்க விடுவதோடு கவனத்துடன் தவறான எண்ணங்களை தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது.உலகிலுள்ள அனைவருக்கும் நன்மை தருவனவற்றை மட்டுமே மனதால் எண்ணவும் வாயால் சொல்லவும், செயலால் செய்யவும் வேண்டும். எண்ணத்தில் உறுதி, ஒழுங்கு, நலம் அமைந்து விட்டால் எல்லாருக்கும் அனைத்தும் எண்ணிய வகையில் ஈடேறும். உண்மையில் மனிதனுக்கு எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.உண்ணும் உணவு உடம்பெங்கும் பரவி ஆற்றலை உண்டாக்குகிறது. ஆனால், எண்ணும் எண்ணமோ உலகெங்கும் பாயும் சக்தி படைத்தது. திறமையையும் வல்லமையையும் பெருக்கிக் கொள்ள இடைவிடாமல் முயற்சிக்க வேண்டும்.எந்த ஒரு சூழ்நிலையிலும் கோபம் மனதில் வராவிட்டால் அந்த மனிதன் ஞானம் அடைந்து விட்டதாகவே பொருள்.கடவுளாக நான் இருக்கிறேன் என்ற உயர்ந்த நிலையை ஒருவன் உணர்ந்து விட்டால் அவனிடத்தில் சிறிய நான் என்னும் அகந்தை அற்று விட்டதாக அர்த்தம்.வாழ்வில் சிறக்க வேண்டும் என்றால் எப்போதும் எல்லோரையும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தக் கற்றுக் கொள்ளுங்கள்.பிறரை வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய அமைதி நிலைக்கு ஆட்படுகிறது. அதனால் மனதில் வலிமையும் தெளிவும் உண்டாகிறது.ஒரு சிறு செடியைப் பார்த்துக் கூட வாழ்க வளமுடன் என்று வாழ்த்தினால் அதன் பலவீனம் நீங்கி நன்றாக வளரத் தொடங்கும்.