திங்கள், 2 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 24 ॐ

இந்திரன் ஒருமுறை மிகவும் கொடுமை நிறைந்த ஒரு ராட்சசனை வதம் செய்ய முடியாமல் மகா விஷ்ணுவின் உதவியை நாடினார். மகாவிஷ்ணு அவனைச் சிதம்பரம் கோயிலுக்குப் போய் அங்கே ஆனந்த தாண்டவத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நடராஜரை ஆராதனை செய்து விட்டு அவர் உதவியை நாடும் படி சொல்ல அவன் தான் தனியாகப் போகாமல் மகா விஷ்ணுவையும் கூட வரும் படி வேண்டினான். அவ்வாறே சிதம்பரம் வந்த விஷ்ணு அவனுடைய ஆராதனைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு அல்லாமல் சிவனிடமும் இந்திரனுக்கு உதவும்படிக் கேட்டுக் கொள்ள அவரும் இந்திரனின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்து அவனுக்கு அந்த ராட்சசனைக் கொல்ல சக்தி கொடுத்து அருளுகிறார். அப்போதில் இருந்தே மகா விஷ்ணு சிதம்பரத்தில் தங்கி விட்டதாய் ஒரு புராணம் சொல்லுகிறது. இதற்கு உதாரணமாகத் தற்சமயம் கீழரதவீதியில் கிழக்குச் சன்னதிக்கு எதிரில் இருக்கும் "இந்திர புவனேஸ்வரர்" என்னும் லிங்கம் இருப்பதாயும் இந்த லிங்கத்தை இந்திரன் வழிபாட்டை ஆரம்பிக்கும் போது ஸ்தாபிக்கப் பட்டதாய்ச் சொல்கிறார்கள். (அடியேன் இன்னும் அந்த லிங்கத்தை பார்க்கவில்லை!)

மற்றொரு கதை : ஒரு சமயம் மகா விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம் திடீரென அவரின் உடல் எடை அதிகம் ஆகி ஆதிசேஷன் திணற ஆரம்பித்தான். ஸ்ரீ எனப்படும் மகா லட்சுமியும், விஷ்ணுவின் வாகனம் ஆன கருடனும் இந்த எடை அதிகரிப்பை உணர்ந்தனர். மகா விஷ்ணுவின் உடலில் வியர்வையும் அதிகம் ஆனது. வியந்த அவர்கள் பகவானிடம் காரணம் கேட்க அவர் சொல்கிறார் தாருகாவனத்தில் ரிஷிகளின் கர்வத்தை அடக்கத் தான் மோகினி அவதாரம் எடுத்ததையும் சிவன் பிட்சாடனராக மாறியதையும் இருவரும் ஆடிய நடனத்தையும் தான் நினைவு கூர்ந்ததாய்ச் சொல்கிறார். உடனேயே மகா லட்சுமியும், கருடனும் தாங்களும் அந்த அற்புத நடனத்தைப் பார்க்கவேண்டும் எனச் சொல்லவே விஷ்ணு தன் பரிவாரங்களுடன் வியாக்ரபுரம் என்று  அழைக்கப்பட்ட சிதம்பரம் வந்தடைகிறார்கள். அங்கே அவர் சிவனிடம் தன் வேண்டுகோளை வைக்க சிவன் அவரை முதலில் காஞ்சி சென்று அங்கே ஏகாம்பரநாதர் கோவிலில் ஒரு லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து பூஜித்து விட்டு வரும் படி சொல்கிறார். அவ்விதமே விஷ்ணுவும் காஞ்சி சென்று ஏகாம்பரநாதர் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஸ்தாபிதம் செய்து விட்டுத் திரும்புகிறார். சிவனுடன் தன்னுடைய ஆட்டத்தை ஆடி விட்டு இங்கேயே கோயில் கொள்ளுகிறார் விஷ்ணு. விஷ்ணு இங்கே கோயில் கொண்டதின் நோக்கம் சிவனின் தாண்டவத்தை எந்நாளும் தரிசிப்பதோடு அல்லாமல் சபாநாயகன் ஆன அவனுக்குத் துணையாக இருக்கவும் காவலுக்கும் தான் என்றும் தோன்றுகிறது. எவ்வாறிருப்பினும் பல்லவர்கள் காலத்தில் இருந்து இந்த கோவிந்தராஜர் தில்லையில் கோயில் கொண்டதற்குச் சரித்திரச் சான்றுகள் இருப்பதாய்க் கூறுகின்றனர். அதுபற்றிப்பாப்போம் நாளை பார்ப்போம்.

ॐ மீண்டும்நாளை சந்திக்கலாம் ॐ

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

துர்க்கையின் சிங்கம்!

சிங்கத்தின்மீது பவனி வருபவள் துர்க்கை. பேராசையின் சின்னமும்கூட. உண்டு களித்து ஐம்புலன் இன்பநுகர்ச்சியிலேயே அமிழ்ந்து கொண்டிருப்பவர்கள் சிங்கத்தின் மிருகவெறிக்கு ஆளானவர்கள். மனிதன் தேவனாக வேண்டுமென்றால் மிருக இச்சைகளை முழுவதுமாக அடக்கி ஒடுக்க வேண்டும். துர்க்கையின் சிம்மவாகினி கோலம் இதையே உணர்த்துகிறது
அருள் மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்

மூலவர் லட்சுமி நரசிம்மர்
உற்சவர் பிரகலாத வரதன்
தாயார் : அமிர்தவல்லி
தல விருட்சம் : நெல்லி
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
ஆகமம் பூஜை : பாஞ்சராத்திரம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தெட்சிண அகோபிலம்
ஊர் : பூவரசன்குப்பம்
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு

விழா : மாத சுவாதி நட்சத்திரம், சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தி, தமிழ் வருடப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, , புரட்டாசி சனிக்கிழமை, வைகாசி விசாகம் கருட சேவை, தைமாதம் 5ம் தேதி தீர்த்தவாரி.
   
தல சிறப்பு : பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள் பாலிப்பது சிறப்பு.
   
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் தேவஸ்தானம், பூவரசன்குப்பம் - 605 105. மோட்ச குளம் வழி, விழுப்புரம் மாவட்டம்,போன்:+91-413 269 8191, 94439 59995

தகவல் : கி.பி. மூன்றாம் நூற்றாண்டில், நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியதால் ஒரு தூணையே நரசிம்மராக வழிபாடு செய்து வந்துள்ளார்கள். அதன் பின் பல்லவர்கள் நரசிம்மருக்கு கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்தனர். இக்கோயிலில் தாயார், ஆண்டாள் சன்னதிகள் தனியாக அமைந்துள்ளன. இங்குள்ள அமிர்தவல்லி தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். அதனால் தான் "அமிர்தபலவல்லி' என அழைக்கப்படுகிறாள்.

பெருமை : தென் அகோபிலம்: நரசிம்மர் இரணியனை அழித்து பிரகலா தனுக்கு காட்சி கொடுத்த தலம் ஆந்திராவில் "அகோபிலம்' என் றும், முனிவர்களுக்கு காட்சி கொடுத்த தலம் பூவரசன் குப்பம் என்றும் கூறுவர். எனவே இத்தலம் "தென் அகோபிலம்' எனவும் அழைக்கப்படுகிறது.முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார். உடனே  நரசிம்மர், ""நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்' என்றார். அதற்கு லட்சுமி,"" ""கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக்கூடாது. எனவே தான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்' என்றார். அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள்.

சிறப்பம்சம் : நரசிம்மர் தன் மடியில் அமிர்தவல்லி தாயாரை  அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, வலது கரத்தால் அபயம் அளித்து, சிரித்த முகத்துடன், சீரிய சிங்கனாக, 12 திருக்கரங்களுடன் விளங்குகிறார். பொதுவாக  நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதற்கிணங்க பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது.

ஸ்தல வரலாறு : பகவான் நரசிம்மர் அகோபிலத்தில் இரண்யனை அழித்த பிறகு உக்கிரம் தணியாமல் அலைந்தார். இரணியனின் கொடுமைக்கு பயந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்து தவமிருந்த முனிவர்கள் நரசிம்மரின் தரிசனம் கிடைக்க வேண்டினர். அப்படி காட்சியளித்த தலங்கள் தமிழகத்தில் எட்டு உள்ளது. இத்தலத்தின் கிழக்கே சிங்கரி கோயில், மேற்கே அந்திலி, பரிக்கல், வடக்கே சோளிங்கர், சிங்க பெருமாள் கோயில், தெற்கே நாமக்கல், சிந்தலவாடி ஆகியன அமைந்துள்ளன. சோளிங்கரிலும் அந்திலியிலும் யோக நரசிம்மராகவும், சிங்கிரியில் உக்கிர நரசிம்மராகவும், பூவரசன் குப்பத்தில் லட்சுமி நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார் நரசிம்மர்.
பெயருடன் திரு.. திருமதி சேர்ப்பது ஏன்?

பெரியவர்களின் பெயருடன் திரு திருமதி என்றோ அல்லது ஸ்ரீ ஸ்ரீமதி என்று சேர்த்து சொல்வர். இதற்கான காரணம் தெரிந்தால் அதன் அருமை புரியும்.செல்வத்திற்கு அதிபதி திருமகளாகிய லட்சுமி.இவளை ஸ்ரீதேவி என்றும் குறிப்பிடுவர்.நாராயணரின் மார்பில் லட்சுமி நித்ய வாசம் செய்வதால் அவருக்கு  ஸ்ரீநிவாசன் என்று பெயர்.மாலவனோடு லட்சுமி இணை பிரியாமல் எப்போதும் இருக்கிறாள் என்பதால் திரு..மால் என்று  பெயர்.பெரியவர்களைக் குறிப்பிடும் போது மரியாதை கருதி மட்டும் திரு சேர்ப்பதில்லை.திருமகளின் அருளும் பொருளும் அவர்களைச் சேர  வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த அடைமொழியைச் சேர்க்கிறோம்.
எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்...!

மனதில் எழும் எண்ணங்களை வடிகட்டி நல்லதை திரும்பத் திரும்ப எண்ணுவதும் தேவையற்ற தீய எண்ணத்தை விட்டுவிடவும் தீர்மானிப்பதே எண்ணம் ஆராய்தலாகும்.மனிதன் உணர்ச்சி வசப்பட்டவனாக இருப்பது கூடாது. அந்நிலையில் நம் தவறை திருத்திக் கொள்ள முடியாது. அறிவு நிலையில் மனதை வைத்துக் கொள்ள பழக வேண்டும்.வாழ்வில் திடீரென எந்த புதிய மாற்றத்தையோ சாதனையோ செய்து விட முடியாது. படிப்படியாகத் திட்டமிட்டால் நல்ல மாற்றங்களை வரவழைத்துக் கொள்ள முடியும்.நற்பண்பு என்பது நல்ல சிந்தனையோடு ஒன்றிய செயல் நற்செயலோடு ஒன்றிய சிந்தனையாக வாழ்வதே.மனத்தூய்மை ஒழுங்கான உணவு அளவான உழைப்பு முறையான ஓய்வு இவற்றுடன் கூடிய வாழ்க்கை நோயற்ற வாழ்விற்கு துணை புரியும் காரணிகள்.வாழ்வின் நோக்கம் அதற்குரிய வாழ்க்கை முறை இரண்டையும் அறிந்தவனே இன்பமாக வாழ முடியும்.தெளிந்த திறனும் ஆற்றலும் படைத்த நல்ல எண்ணத்திற்கு இயற்கையே கட்டுப்பட்டு ஒத்துழைக்கிறது. மனதை அடக்க நினைத்தால் அலையத் தொடங்கும். அறிய நினைத்தால் அடங்கி விடும். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனதில் தான் இருக்கிறது. மனதை உயர்த்திக் கொண்டால் மாண்பு மிக்க இன்ப வாழ்வு பெற்று மகிழலாம்.நல்ல எண்ணத்தை விருப்பத்துடன் மனதில் இயங்க விடுவதோடு கவனத்துடன் தவறான எண்ணங்களை தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது.உலகிலுள்ள அனைவருக்கும் நன்மை தருவனவற்றை மட்டுமே மனதால் எண்ணவும் வாயால் சொல்லவும், செயலால் செய்யவும் வேண்டும். எண்ணத்தில் உறுதி, ஒழுங்கு, நலம் அமைந்து விட்டால் எல்லாருக்கும் அனைத்தும் எண்ணிய வகையில் ஈடேறும். உண்மையில் மனிதனுக்கு எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.உண்ணும் உணவு உடம்பெங்கும் பரவி ஆற்றலை உண்டாக்குகிறது. ஆனால், எண்ணும் எண்ணமோ உலகெங்கும் பாயும் சக்தி படைத்தது. திறமையையும் வல்லமையையும் பெருக்கிக் கொள்ள இடைவிடாமல் முயற்சிக்க வேண்டும்.எந்த ஒரு சூழ்நிலையிலும் கோபம் மனதில் வராவிட்டால் அந்த மனிதன் ஞானம் அடைந்து விட்டதாகவே பொருள்.கடவுளாக நான் இருக்கிறேன் என்ற உயர்ந்த நிலையை ஒருவன் உணர்ந்து விட்டால் அவனிடத்தில் சிறிய நான் என்னும் அகந்தை அற்று விட்டதாக அர்த்தம்.வாழ்வில் சிறக்க வேண்டும் என்றால் எப்போதும் எல்லோரையும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தக் கற்றுக் கொள்ளுங்கள்.பிறரை வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய அமைதி நிலைக்கு ஆட்படுகிறது. அதனால் மனதில் வலிமையும் தெளிவும் உண்டாகிறது.ஒரு சிறு செடியைப் பார்த்துக் கூட வாழ்க வளமுடன் என்று வாழ்த்தினால் அதன் பலவீனம் நீங்கி நன்றாக வளரத் தொடங்கும்.
கல்லணை ஆஞ்சநேயர்!

தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம். ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும். சங்க காலச் சோழ மன்னர் கரிகால் பெருவளத்தான் காவேரி- கொள்ளிடம் நீர் போக்கைச் சரி செய்து நீர் பாசனத்தைச் சீரமைக்க காவேரியின் மீது ஓர் அணை கட்டினார். இந்த அணை நவீன தொழில் நுட்பத்திற்குச் சவாலாக அமைந்துள்ளது. இதன் கட்டுமானத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இதை கிராண்ட் அனிக்கட் என்று பாராட்டினர். இக்கட்டுமானம் களிமண்ணில் புதைந்த மிகப் பெரிய பாறாங்கற்களால் ஆனது இதன் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி மற்றும் ஆழம் 15-லிருந்து 18 அடிவரை கொண்டது. இது நதி நீர் வெளியேறும் பகுதியில் பாம்பு போல் வளைந்த நிலையில் கட்டப்பட்டது.

தற்போதுள்ள பெரிய கல்லணை 1806- இல் ஆங்கிலேய பொறியாளர்களால் நிர்மாணிக்கப்பட்டது. பல வருடங்களாக நடந்த மிகப் பெரிய முயற்சியின் காரணமாக அடித்தளம் அமைத்து அணையின் பாதைகள் உயர்த்தப்பட்டு சாலைவசதி ஏற்படுத்தித் தந்தனர். இப்பணி முடிவுறும் தறுவாயில் ஏற்பட்ட சில விநோதமான நிகழ்வுகள் அங்கிருந்த பொறியாளர்களுக்கும் மற்றும் பெருமளவில் கூடியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் வியப்பைத் தந்தன. ஒரு நாள் காலையில் பணி ஆய்வுக்காக வந்த கீழ் நிலை அதிகாரி ஒருவர், அணையின் 19-வது மதகு உடைந்திருந்ததைக் கண்டார். இந்த விபத்து கட்டுமானத்தில் பயன்படுத்திய பொருள்களின் தரக்குறைவு காரணமாக ஏற்பட்டது என யூகித்தனர். எனவே அதே கட்டுமானம் மீண்டும் ஒரு மாத காலத்தில் மிகுந்த கவனத்துடன் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே சோதனையாக அந்த வளைவான மதகுப் பகுதி மீண்டும் உடைந்து விழுந்து கல்லும் மண்ணுமாகக் காட்சியளித்தது. இதனால் வாயடைத்து நின்ற பொறியாளர்களும் கட்டுமானப் பணியாளர்களும் மீண்டும் ஏற்பட்ட அழிவைக் குறித்து விளக்கம் எதுவும் அளிக்க முடியாமல் திணறினர்.

இரண்டாவது முறையும் உடைந்து விழுந்த நிகழ்வுக்குப் பிறகு அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்த கீழ்நிலை அதிகாரி முதன் முறையாக மதகு உடைந்து விழுந்த அன்று இரவு தனக்கு ஏற்பட்ட கனவு பற்றிய விபரத்தை வெளிப்படுத்தினார் அன்றிரவு என் கனவில் ஆஞ்சநேய ஸ்வாமி தோன்றி நான் நதியின் அடியில் மணற்படுகையில் உள்ளேன். என்னை வெளிக்கொணர்ந்து அங்கேயே எனக்குக் கோயில் அமைக்காவிடில் இடிந்து விழுவது தொடரும் இதை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார். ஆங்கிலத் தலைமைப் பொறியாளர் இதை நம்பவில்லை. அன்றிரவே மிகவும் ஆச்சரியமான விதமாக அந்தத் தலைமைப் பொறியாளருக்குத் தொடர்ந்து பயமுறுத்தும் கனவுகளாகவே வந்தன. அவரது கனவில் குரங்குகள் அவரை நெருங்கி நகங்களால் பிறாண்டி காது செவிடாகும்படிச் சத்தம் போட்டுத் துன்புறுத்தின. இரவு முழுவதும் ஏற்பட்ட பயங்கரமான கனவுகளால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பொறியாளர் மறுநாள் காலையில் தன் நண்பர்கள் குழுவை அழைத்துத் தனது  கனவுகளைப் பற்றி விளக்கினார்.

அந்த ஆங்கிலேய நண்பர்களும் இந்தக் கனவுகள் பற்றிய தம் அவநம்பிக்கையைத் தெரிவித்ததோடு அவர் அந்தக் கீழ்நிலை அதிகாரி கூறிய நம்பமுடியாத கனவுகளை அடிமனத்தளவில் நம்பியதன் விளைவாகவே இது போன்று ஏற்பட்டுள்ளது என்றும் கூறினர். நண்பர்களின் வாக்கு அவருக்கு அப்போதைக்குத் தேவைப்பட்ட ஒரு சமாதானத்தைத் தந்தாலும் அந்த அமைதியும் அல்பாயுசாகவே அமைந்தது. அன்றிரவே ஆஞ்சநேயர் பொறியாளர் கனவில் தோன்றி எனக்குக் கோயில் எழுப்பாமல் நீ இந்த அணையைக் கட்டியுள்ளாய். நானே இந்த அணையைக் காப்பவன். அதனால் அந்தக் கட்டுமானத்தை இடித்துச் சுக்குநூறாக்கினேன். மீண்டும் நீ அணையைக் கட்டினாய் அதுவும் நான் இருக்குமிடத்திற்கு மேலாகவே அமைந்துள்ளது. இதுவும் நிற்காது. நான் இருக்கும் இந்த இடத்தில் ஒரு வளைவை ஏற்படுத்தி என்னைக் காணும் இடத்தில் ஒரு கோவில் அமைத்தால் நீ வெற்றி பெறுவாய் என்றார். மறுநாள் பொறியாளர் அங்கிருந்த இடிபாடுகளை அகற்றி அதே இடத்தில் நதிப்படுக்கையைத் தோண்ட உத்தரவிட்டார். அங்கே அந்தப் பத்தொன்பதாவது மதகு அமைந்திருந்த இடத்தில் ஆஞ்சநேய ஸ்வாமியின் கற்சிற்பம் காணப்பட்டது.

அந்த ஆங்கிலேயப் பொறியாளர் தீர்மானமாக அங்கு ஒரு கோயிலைக் கட்ட உத்தரவிட்டார். பெரிய அளவில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது. அணைக்கட்டும் கனவில் அவருக்குச் சொல்லப்பட்ட விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தக் கோவில் இன்றும் சென்று தரிசிக்கும் வகையிலுள்ளது பாலத்திலிருந்து இரண்டு அடுக்குப் படிகளைக் கடந்து கீழிறங்கிச் சென்றால் அந்தக் கோயிலை அடையலாம். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகள் இன்றும் இந்தக் கோவிலின் நித்திய பூஜைக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு வருகின்றன. இதன் ஆதாரங்களை இன்றும் தஞ்சை மாவட்டத்தின் பொதுப்பணித் துறையின் பழைய ஆவணங்களிலிருந்து பெறலாம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெளிவந்த தஞ்சாவூர் மாவட்ட கெஸட் (அரசு இதழ்) என்ற அரசு ஆவணத்திலும் காணலாம்.
ஸ்ரீகாமாக்ஷி துனண
                                   பல்லவி
காணக்கண் கோடி வேண்டும் காஞ்சி குருநாதரின்
தினசரி பூஜையைக் காணக் கண் கோடி வேண்டும்.
                                     
                                 சரணம்

வெள்ளியினால் பூஜை மண்டபம் அமைத்து         ( 1)
சுவர்ணத்தினால் அதில் ஊஞ்சலைக்கட்டி
சந்தண மேருவில் சக்தியை அழைத்து
சந்திர மௌளி ஸ்வாமியை பக்கத்தில் வைப்பதை
                                                        (காணக்கண் கோடி)

வேதத்தின் ஒலியுடன் வேதியர் கூட்டம்               (2)
பாதத்தை நாடி வந்து பக்தர்கள் கூட்டம்
சில முள்ள தெய்வம் சிவக்கோலம் கொண்டு
பால் அபிஷேகத்தை பாங்குடன் செய்வதைக்
                                                        (காணக்கண் கோடி)

மாணிக்க வைரம் மரகத மிழைத்து புடம் போட்ட (3)
பொன்னால் பூஷணங்கள் பூட்ட
மஞ்சள் குங்குமம் மணமுள்ள மலர்கள்
அட்க்ஷதை கொண்டு அர்ச்சிக்கும் அழகை
                                                        (காணக்கண் கோடி)

வில்வத்தால் அர்ச்சனை வேதத்தின் பின்னனி     (4)
குவலயம் காத்திட குங்கும அர்ச்சனை
சக்கரைப் பொங்களும் பலவித அண்ணமும்
வித வித மாகவே அன்னைக்கு அளிப்பதை
                                                        (காணக்கண் கோடி)

தீங்கையெல்லாம் களைய தீபத்தின் அடுக்குகள்  (5)
கர்ப்பூர ஹாரத்தி மங்கள தீபங்கள்
ஓம் ஓம் ஓம் என மணிகள் ஒலித்திட
சங்கத்தின் நாதமே பூம் பூம் என்பதைக்
                                                        (காணக்கண் கோடி)

தாமரைக் கையால் தங்கக் குடை பிடித்து              (6)
சாமரம் விசிட சாம காணம் ஒலித்திட
மாணிக்க வீணையை மாதேவர் வாசித்து
மாதாவின் மடியினில் பணிவுடன் வைப்பதைக்
                                                        (காணக்கண் கோடி)

பிரதட்சணம் செய்து பூஜையை முடித்து                (7)
தியானத்தில் ஆழ்ந்து தன்மயமாகி
"தன்னலம்"மறந்து பிறர் நலம் வேண்டி
தெய்வத்தை தெய்வமே வணங்கிடும் கோலத்தைக்
                                                        (காணக்கண் கோடி)

                               பெரியவா சரணம்
ஹர ஹர சங்கர                                  ஜய ஜய சங்கர
  காஞ்சி சங்கர                                    காமகோடி சங்கர
அர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்
 
சிவாய நம: ||

சாம்பேயகௌரார்தசரீரகாயை கர்பூரகௌரார்தசரீரகாய |
தம்மில்லகாயை ச ஜடாதராய நம: சிவயை ச நம: சிவாய ||1||

கஸ்தூரிகாகுங்குமசர்சிதாயை சிதாரஜ:புஞ்ஜவிசர்சிதாய |
க்ரூதஸ்மராயை விக்ரூதஸ்மராய நம: சிவாயை ச நம: சிவாய ||2||

சலத்க்வணத்கங்கணநூபுராயை பாதாப்ஜராஜத்பணிநூபுராய |
ஹேமாங்கதாயை புஜகாங்காதாய நம: சிவாயை ச நம: சிவாய ||3||

விசாலநீலோத்பலலோசநாயை விகாஸிபங்கேருஹலோசனாய |
ஸமேக்ஷணாயை விஷமேக்ஷணாய  நம: சிவாயை ச நம: சிவாய ||4||

மந்தாரமாலாகலிதாலகாயை கபாலமாலாங்கிதகந்தராய |
திவ்யாம்பராயை ச திகம்பராய நம: சிவாயை ச நம: சிவாய |5||

அம்போதரச்யாமளகுந்தளாயை தடித்ப்ரபாதாம்ரஜடாதராய |
நிரீச்வராயை நிகிலேச்வராய நம: சிவாயை ச நம: சிவாய ||6||

ப்ரபஞ்சஸ்ருஷ்ட்ர்யுன்முகலாஸ்யகாயை ஸமஸ்தஸம்ஹாரகதாண்டவாய |
ஜகஜ்ஜனன்யை ஜகதேகபித்ரே நம: சிவாயை ச நம: சிவாய ||7||

ப்ரதீப்தரத்னோஜ்ஜ்வலகுண்டலாயை ஸ்புரன்மஹாபந்நகபூஷணாய |
சிவான்விதாயை ச சிவான்விதாய நம: சிவாயை ச நம: சிவாய ||8||

ஏதத்படேதஷ்டகமிஷ்டதம் யோ பக்த்யா ஸ மான்யோ புவி தீர்கஜீவீ |
ப்ராப்னோதி ஸௌபாக்யமனந்தகாலம் பூயாத்ஸதா தஸ்ய ஸமஸ்தஸித்தி: ||9||

இதி ஸ்ரீமத்பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யஸ்ரீகோவிந் தபகவத் பூஜ்ய பாதசிஷ்ய ஸ்ரீமச்சங்கரபகவத்ப்ரணீதம் அர்தநாரீநடேச்வரஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||10||
ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ திரிபுரசுந்தரி ஸான்னித்ய ஸ்தவம்

श्रीत्रिपुरसुन्दरीसान्निद्ध्यस्तवम्

कल्पभानुसमानभासुरधाम लोचनगोचरं
किं किमित्यतिविस्मिते मयि पश्यतीह समागताम्।
कालकुन्तलभरनिर्जितनीलमेघकुलां पुर-
श्चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥१॥

एकदन्तषडाननादिभिरावृतां जगदीश्वरीं
एनसां परिपन्थिनीमहमेकभक्तिमदर्चिताम्।
एकहीनशतेषु जन्मसु सञ्चितात्सुकृतादिमां
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥२॥

ईदृशीति च वेदकुन्तलवाग्भिरप्यनिरूपितं
ईशपंकजनाभयष्टिकृतातिवन्द्यपदाम्बुजम्।
ईक्षणान्तनिरीक्षणेन मदिष्टदं पुरतोऽधुना
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥३॥

लक्षणोज्ज्वलहारशोभिपयोधरद्वयकैतव-
लीलयैव दयारसस्रवदुज्ज्वलत्कलशान्विताम्।
लाक्षयाङ्कितपादपातिमिलिन्दसन्ततिमग्रत-
श्चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥४॥

ह्रीमिति प्रतिवासरं जपसुस्थिरोऽहमुदारया
योगिमार्गनिरूढयैक्यसुभावनं गतया धिया।
वत्स हर्षमवाप्तवत्यहमित्युदारगिरं पुर-
श्चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥५॥

हंसवृन्दमलक्तकारुणपादपंकजनूपुर-
क्वाणमोहितमनुधावितं मृदुशृण्वतीम्।
हंसमन्त्रमहार्थतत्त्वमयीं पुरो भाग्यत-
श्चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥६॥

संगतं जलमभ्रवृन्दसमुद्भवं धारणीधर-
धारया वहनञ्जसा भ्रममाप्य सैकतनिर्गतम्।
एवमादि महेन्द्रजालसुकोविदां पुरतोऽधुना
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥७॥

कम्बुसुन्दरकन्धरां कचभारनिर्जितवारिदां
कण्ठदेशलसत्सुमङ्गल हेमसूत्रविराजिताम्।
कादिमन्त्रमुपासतां सकलेष्टदां मम सन्निधौ
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥८॥

हस्तपद्मलसत्त्रिकाण्डसमुद्रिकां तामद्रिजां
हस्तिकृत्तिपरीतकार्मुकवल्लरीसमचिल्लिकाम् ।
हर्यजस्तुतवैभवां भवकामिनीं मम भाग्यद-
श्चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥९॥

लक्षणोल्लसदङ्गकान्तिझरीनिराकृतविद्युतां
लास्यलोलसुवर्णकुण्डलमण्डितां जगदम्बिकाम्।
लीलयाखिलसृष्टिपालनकर्षणादि वितन्वतीं
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥१०॥

ह्रीमिति त्रिपुरामनु स्थिरचेतसा बहुधादर्चितां
हादिमन्त्रमहाम्बुजातविराजमानसुहंसिकाम्।
हेमकुम्भघनस्तनां चललोलमौक्तिकभूषणां
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये ॥११॥

सर्वलोकनमस्कृतां जितशर्वरीरमणाननां
सर्वदेवमनप्रियां नवयौवनोन्मदगर्विताम्।
सर्वमङ्गलविग्रहां मम पूर्वजन्मतपोबलां
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये॥१२॥

कन्दमूलफलाशिभिर्बाह्ययोगिभिश्च गवेषितां
कुन्दकुड्मलदन्तपङ्क्तिविराजितामपराजिताम्।
कन्दमागमविरूढां सुरसुन्दरीभिरिहागताम्
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये॥१३॥

लत्रयाङ्कितमन्त्रराट्समलंकृताम् जगदम्बिकां
लोल नील सुकुन्तलावलि निर्जितालिकदम्बकाम् ।
लोभमोहविदारिणीं करुणामयीमरुणां शिवां
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये॥१४॥

ह्रीं प्रज्ञाख्य महामनोरधिदेवतां भुवनेश्वरीं
हृत्सरोजनिवासिनीं हरवल्लभां बहुरूपिणीम्।
हारनूपुरकुण्डलादिभिरन्वितां पुरतोऽधुना
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये॥१५॥

श्रींसुपञ्चदशाक्षरीमपि षोडशाक्षररूपिणीं
श्रीसुधार्णवमध्यशोभितसरोजकाननचारिणीम्
श्रीगुहस्तुतवैभवां परदेवतां मम सन्निधौ
चक्रराजनिवासिनीं त्रिपुरेश्वरीमवलोकये॥१६॥
॥ नवग्रहस्तोत्र ॥ ..... ॥ நவக்³ரஹஸ்தோத்ர ॥

आदित्याय च सोमाय मङ्गलाय बुधाय च । गुरु शुक्र शनिभ्यश्च राहवे केतवे नमः ॥

“ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ "

ஓம் நவகிரக பரபிரம்மனே நமஹ:

சூரியனை சந்திரனை செவ்வாயை புதனை குருவை சுக்கிரனை சனியை ராகுவை கேதுவை – கால ரூபிகளான நவக்ரக தேவதைகள் எல்லோரையும் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

॥ नवग्रहस्तोत्र ॥ ..... ॥ நவக்³ரஹஸ்தோத்ர ॥

सूर्य .. Sun

जपाकुसुमसङ्काशं काश्यपेयं महद्युतिम् ।
तमोऽरिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम् ॥ १॥
ஜபாகுஸுமஸங்காஶம் காஶ்யபேயம் மஹத்³யுதிம் ।
தமோऽரிம் ஸர்வபாபக்⁴னம் ப்ரணதோऽஸ்மி தி³வாகரம் ॥ 1॥
I pray to the Sun, the day-maker, destroyer of all sins, the enemy of darkness, of great brilliance, the descendent of KAshyapa, the one who shines like the japA flower.

चन्द्रं .. Moon
दधिशङ्खतुषाराभं क्षीरोदार्णवसम्भवम् ।
नमामि शशिनं सोमं शम्भोर्मुकुटभूषणम् ॥ २॥
த³தி⁴ஶங்க²துஷாராப⁴ம் க்ஷீரோதா³ர்ணவஸம்ப⁴வம் ।
நமாமி ஶஶினம் ஸோமம் ஶம்போ⁴ர்முகுடபூ⁴ஷணம் ॥ 2॥
I pray to the Moon who shines coolly like curds or a white shell, who arose from the ocean of milk, who has a hare on him, Soma, who is the ornament of Shiva's hair.

कुज .. Mars

धरणीगर्भसम्भूतं विद्युत्कान्तिसमप्रभम् ।
कुमारं शक्तिहस्तं च मङ्गलं प्रणमाम्यहम् ॥ ३॥
த⁴ரணீக³ர்ப⁴ஸம்பூ⁴தம் வித்³யுத்காந்திஸமப்ரப⁴ம் ।
குமாரம் ஶக்திஹஸ்தம் ச மங்க³லம் ப்ரணமாம்யஹம் ॥ 3॥
I pray to Mars, born of Earth, who shines with the same brilliance as lightning, the young man who carries a spear.

बुध .. Mercury

प्रियङ्गुकलिकाश्यामं रूपेणाप्रतिमं बुधम् ।
सौम्यं सौम्यगुणोपेतं तं बुधं प्रणमाम्यहम् ॥ ४॥
ப்ரியங்கு³கலிகாஶ்யாமம் ரூபேணாப்ரதிமம் பு³த⁴ம் ।
ஸௌம்யம் ஸௌம்யகு³ணோபேதம் தம் பு³த⁴ம் ப்ரணமாம்யஹம் ॥ 4॥
I pray to Mercury, dark like the bud of millet, of unequalled beauty, gentle and agreeable.

गुरु .. Jupiter

देवानां च ऋषीणां च गुरुं काञ्चनसंनिभम् ।
बुद्धिभूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिम् ॥ ५॥
தே³வாநாம் ச ருʼஷீணாம் ச கு³ரும் காஞ்சனஸம்னிப⁴ம் ।
பு³த்³தி⁴பூ⁴தம் த்ரிலோகேஶம் தம் நமாமி ப்³ருʼஹஸ்பதிம் ॥ 5॥
I pray to Jupiter, the teacher of gods and rishis, intellect incarnate, lord of the three worlds.

शुक्र .. Venus

हिमकुन्दमृणालाभं दैत्यानां परमं गुरुम् ।
सर्वशास्त्रप्रवक्तारं भार्गवं प्रणमाम्यहम् ॥ ६॥
ஹிமகுந்த³ம்ருʼணாலாப⁴ம் தை³த்யாநாம் பரமம் கு³ரும் ।
ஸர்வஶாஸ்த்ரப்ரவக்தாரம் பா⁴ர்க³வம் ப்ரணமாம்யஹம் ॥ 6॥
I pray to Venus, the utimate preceptor of demons, promulgator of all learning, he who shines like the fiber of snow-white jasmine.

शनि .. Saturn

नीलाञ्जनसमाभासं रविपुत्रं यमाग्रजम् ।
छायामार्तण्डसम्भूतं तं नमामि शनैश्चरम् ॥ ७॥
நீலாஞ்ஜனஸமாபா⁴ஸம் ரவிபுத்ரம் யமாக்³ரஜம் ।
சா²யாமார்தண்ட³ஸம்பூ⁴தம் தம் நமாமி ஶனைஶ்சரம் ॥ 7॥
I pray to Saturn, the slow moving, born of Shade and Sun, the elder brother of Yama, the offspring of Sun, he who has the appearance of black collyrium.

राहु .. Rahu

अर्धकायं महावीर्यं चन्द्रादित्यविमर्दनम् ।
सिंहिकागर्भसम्भूतं तं राहुं प्रणमाम्यहम् ॥ ८॥
அர்த⁴காயம் மஹாவீர்யம் சந்த்³ராதி³த்யவிமர்த³னம் ।
ஸிம்ஹிகாக³ர்ப⁴ஸம்பூ⁴தம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் ॥ 8॥
I pray to Rahu, having half a body, of great bravery, the eclipser of the Moon and the Sun, born of SimhikA.

केतु .. Ketu

पलाशपुष्पसङ्काशं तारकाग्रहमस्तकम् ।
रौद्रं रौद्रात्मकं घोरं तं केतुं प्रणमाम्यहम् ॥ ९॥
பலாஶபுஷ்பஸங்காஶம் தாரகாக்³ரஹமஸ்தகம் ।
ரௌத்³ரம் ரௌத்³ராத்மகம் கோ⁴ரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் ॥ 9॥
I pray to Ketu, who has the appearance of PalAsha flower, the head of stars and planets, fierce and terrifying.

इति व्यासमुखोद्गीतं यः पठेत्सुसमाहितः ।
दिवा वा यदि वा रात्रौ विघ्नशान्तिर्भविष्यति ॥ १०॥
இதி வ்யாஸமுகோ²த்³கீ³தம் ய: படே²த்ஸுஸமாஹித: ।
தி³வா வா யதி³ வா ராத்ரௌ விக்⁴னஶாந்திர்ப⁴விஷ்யதி ॥ 10॥
Those who read the song sung by VyAsa, will be joyous, sovereign and powerful, and will succeed in appeasing obstacles, occurring by day or by night.

नरनारीनृपाणां च भवेद्दुःस्वप्ननाशनम् ।
ऐश्वर्यमतुलं तेषामारोग्यं पुष्टिवर्धनम् ॥
நரனாரீன்ருʼபாணாம் ச ப⁴வேத்³து:³ஸ்வப்னனாஶனம் ।
ஐஶ்வர்யமதுலம் தேஷாமாரோக்³யம் புஷ்டிவர்த⁴னம் ॥
Bad dreams of men, women and kings alike will be destroyed and they will be endowed with unparalleled riches, good health and enhancing nourishment.

ग्रहनक्षत्रजाः पीडास्तस्कराग्निसमुद्भवाः ।
ताः सर्वाः प्रशमं यान्ति व्यासो ब्रूते न संशयः ॥
க்³ரஹனக்ஷத்ரஜா: பீடா³ஸ்தஸ்கராக்³னிஸமுத்³ப⁴வா: ।
தா: ஸர்வா: ப்ரஶமம் யாந்தி வ்யாஸோ ப்³ரூதே ந ஸம்ஶய: ॥
All the pain, devastation caused by fire, planets and stars will be of the past, so spoke VyAsa, emphatically.

॥ इति श्रीव्यासविरचितं नवग्रहस्तोत्रं सम्पूर्णम् ॥
॥ இதி ஶ்ரீவ்யாஸவிரசிதம் நவக்³ரஹஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 23 ॐ

கனகசபைக்குக் கீழே பக்தர்கள் தரிசனம் செய்யும் இடத்தில் இருந்து சற்று மேலே கனகசபைக்குச் சமாக ஒரு பெரிய மண்டபம் ஊள்ளது. அதில் சற்றுப் படி ஏறிப் போய் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு பார்த்தோமானால் ஒரே நேரத்தில் நடராஜர் தரிசனமும் கோவிந்த ராஜர் தரிசனமும் கிடைக்கும். இந்தக் கோவிந்தராஜரும் உள் பிரகாரத்திலேயே தான் கிழக்குப் பார்த்துக் கோயில் கொண்டிருக்கிறார். இதை விஷ்ணு பக்தர்கள் "திருச்சித்திரக் கூடம்" என்று அன்புடன் அழைக்கிறார்கள். மூலஸ்தானத்தில் யோகநித்திரையில் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் பிரம்மாவும் நாபிக்கமலத்தில் இருந்து எழுந்த நிலையில் காணப்படுகிறார். எல்லையற்ற அந்தப் பரம் பொருளின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டுகளிக்கத் தான் அவரும் இங்கே கோயில் கொண்டிருப்பதாய் ஐதீகம். வேறு எந்தச் சிவன் கோயில்களிலும் காணக்கிடைக்காத இந்தக் காட்சி இங்கே மட்டும் தான் கிடைக்கும். இதை முன் வைத்தே தற்காலத்தில் பலகோயில்கள் சிவவிஷ்ணு கோயிலாகக் கட்டப் படுகிறது. முதலில் தீட்சிதர்கள் தான் வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள். காலப் போக்கில் மாறி இருக்கிறது. அது பின்னால் பார்ப்போம். மூலஸ்தான விமானம் சாத்வீக விமானம் என்று அழைக்கப்படுகிறது. பலி பீடம், த்வஜஸ்தம்பம் போன்றவை தனியாக உள்ளன. தாயாருக்குத் தனி சன்னதி உள்ளது. தாயாரின் திருநாமம் புண்டரீகவல்லித் தாயார். உற்சவர் பார்த்தசாரதி என அழைக்கப் படுகிறார். இந்தக் கோயிலின் உள்பிரகாரத்தில் நரசிம்ம மூர்த்தி, வேணுகோபாலர், விஸ்வக்சேனர், பதஞ்சலி, கண்வர், ஆஞ்சனேய மூர்த்தி தனி சன்னதிகள் காணப் படுகிறது. "சேஷ சயனம்" "ராம பாதம்" காணப் படுகிறது. சிவகங்கைத் தீர்த்தம் விஷ்ணு பக்தர்களால் "புண்டரீக சரஸ்" என அழைக்கப் படுகிறது. முதன் முதல் வியாக்ரமபாதரும், பதஞ்சலியும் நடராஜ தரிசனமும் ஆனந்தத் தாண்டவமும் காணச் சிதம்பரம் வந்த போதில் இருந்தே கோவிந்தராஜரும் கோயில் கொண்டதாகவும் அவரை முதன் முதல் கண்வ மகரிஷி வழிபாடு செய்து வந்ததாகவும் பிரத்யட்ச தெய்வமாக இந்தக் கோவிந்தராஜர் அவருக்குக் காட்சி கொடுத்ததாகவும் கூறுகின்றனர். பொதுவாக எல்லா விஷ்ணு கோவில்களிலும் காணப்படுவது போல் இங்கேயும் பிரசாதமாகத் துளசி தீர்த்தம், சடாரி சாதிக்கப்படுகிறது. இறைவனின் பாதங்கள் பதிப்பிக்கப்பட்ட அந்தச் சடாரியைத் தன் தலையில் வைத்துக் கொள்வதின் மூலம் இறைவனே தங்களை நேரில் வந்து ஆசீர்வதித்ததாக இன்புறுகின்றனர். ஸ்ரீராமனின் பாதுகையைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு சென்ற இளவல் பரதாழ்வார் ஆழ்வார்களில் முதல்வன்? அவன் அவ்வாறு செய்து தன் பக்தியை வெளிக்காட்டிக் கொண்டதில் இருந்து இவ்வழக்கம் ஆரம்பித்ததோ என்னமோ! இதை ஸ்ரீராமன் பாதுகை என்றே சொல்கிறார்கள். சிவனும், விஷ்ணுவும் வேறு வேறு இல்லை ஹரியும், சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு என்பதை நிரூபிப்பதற்காகவும் பக்தர்களுக்கிடையே உள்ள இந்த வேறுபாடுகளைக்களையவுமே இவ்வாறு கோயில் கொள்ள இறை அருள் பொங்கியதோ என்று தோற்றும் வண்ணம் இந்தக் கோயிலிலே கோவிந்தராஜனும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ